TerrorisminFocus

Wednesday, July 12, 2006

பார்ப்பனிய எதிர்ப்பும், பலவித தத்துவ மயக்கங்களும்

பாலச்சந்தர் கணேசனின் பின்னூட்டத்தை பாடித்த பிறகு குழலியின் மீதான விமர்சனத்தை திரும்பப்பெறுவது என்று முடிவு செய்து விட்டேன்.

அதற்க்கு இரண்டு காரணங்கள்:
1) விடாது கறுப்பின் பார்ப்பன/பார்ப்பினிய எதிர்ப்பு என்ற விசயம் பூடகமாக உள்ளதால் குழலி அதை வேறு விதமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவரது கண்டனமும் அந்த அளவில்தான் உள்ளது.

2) குழலி மேல்சாதி வெறி எதிர்ப்பில் நல்ல பல கட்டுரைகள் எழுதியுள்ளார் எனவே அவரது இந்த கண்டனத்தை சந்தேகப்படுவது தவறு.

இந்தக் காரணங்களை முன்னிட்டு குழலியின் மீதான விமர்சனங்களை திரும்பப்பெறும் அதே நேரத்தில் அவரிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.
பாலசந்தர் கணேசனுக்கு நன்றி!

ஆனால் உஷாவின் மீதான விமர்சனம் தொடர்கிறது. அவரது அந்த பதிவு ஒரு தலைப்பட்சமானது என்ற அடிப்படையில்.
*******************
சமீபத்தில் குழலி மற்றும் உஷா என்ற இரு வலைப்பதிவர்கள் விடாது கருப்பு என்ற ஒரு பதிவரின் கட்டுரை ஒன்றை அடிப்படையாக வைத்து தமிழ்மண நிர்வாக வழிமுறைகளில் மாற்றம் கோர/கட்டுபாடுகளை அதிகப்படுத்த விழையும் பதிவுகளை இட்டிருந்தார்கள்.
அவர்களுக்கான எதிர்வினை

//இந்து vs முஸ்லிம்
இந்து vs கிருத்துவர்
ஆரியர் vs திராவிடர்
திராவிட எதிர்ப்பாளர் vs திராவிடர்
ஆத்திகர் vs நாத்திகர்
இந்துத்வியாதிகள் vs முஸ்லிம்,கிருத்துவர்,திராவிடர்,கம்யூனிஸ்டுகள்//

மேலே உள்ள முரன்பாடுகளை உஷாவின் அந்த குறிப்பிட்ட பதிவில் ஒரு அன்பர் பின்னூட்டியிருந்தார்.

வலைப்பூ உலகில் மேலே குறிப்பிட்ட முரன்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

பார்ப்பனர் என்று சாதிரீதியான அடையாளத்தை சுமக்க விரும்புபவருக்குத்தான் விடாது கறுப்பின் விமர்சனங்கள் உறுத்த வேண்டும். அதாவது பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வரலாறு, பண்பாடு இவற்றின் அவமானத்தின் அடையாளம்தான் பார்ப்பனியம், அப்படிப்பட்ட சாதி அடையாளத்தை விட்டொழிக்காதவரின் மன உணர்வுகளுக்கு ஏன் மரியாதை கொடுக்கிறீர்கள்?

இதே நேரத்தில் நியாயமாக மரியாதை கொடுக்க வேண்டிய மன உணர்வுகளுக்கு நீங்கள் இது போல் வெகுண்டு எழுந்து தங்களது தார்மீக ஆவேசத்தை என்றைக்காவது வெளிப்படுத்தியிருக்கிறீர்களா?

முஸ்லீம்கள் மீது இந்த வலைப்பூ உலகில் வளைத்து வளைத்து இன்றுவரை அவதூறு கிளப்பினார்களே அப்போழுது என்ன பூ பறிக்க போயிருந்தீர்களா? அல்லது தங்களது மனமும் இந்து/பார்ப்பன மன உணர்வின் குண்டு சட்டிக்குள்தான் ஓடுகிறதா?

ஒரு வன்னியரை, ஒரு தேவரை, ஒரு கவுண்டனை, ஒரு செட்டியாரை விமர்சனம் செய்து எழுதினால் எதிர் வினைகள் வருமா?

பார்ப்பன் சாதியின் பண்பாட்டு அடக்குமுறைகள் உண்மையில்லையா? அல்லது அந்த உண்மைகளை சொன்னால் எதிர்வினை வருவது உண்மையில்லையா? அல்லது பெரும்பான்மை மக்களிடம் எந்த வகையிலும் ஐய்க்கியம் ஆகமலேயே இந்து மத பிரச்சனைகளுக்கு மட்டும் நயவஞ்சகமாக அந்த் மக்களின் பெயரில் அவதூறு கிளப்புவது உண்மையில்லையா?

தமிழ்மணம் மீதான பார்ப்பனியம் என்ற அடிப்படையிலான விமர்சனங்களை ஒரு பக்குவப்பட்ட குழுவாக தமிழ்மணம் எதிர்கொள்ளுவார்கள் என்றுதான் நான் கருதுகிறேன். அந்த குழுவுக்கு சாதி சார்பு இல்லையெனில் சாதியின் அழிவு அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விசயம் எனில். அந்த சாதி அழிவில் பார்ப்பன சாதியும்(கருத்து/தத்துவம்) இருக்கும்.

அப்படிப் பட்ட சூழலில் விடாது கருப்பின் விமர்சனங்கள், நாமெல்லோரும் அழிய விரும்பும் அந்த சாதியை, தாங்கும் மனிதர்களுக்கு மட்டுமே வருத்தும் கொடுக்க வேண்டும்.

விடாது கருப்பின் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு.

விடாது கருப்பு தமிழ்மணத்தையே நேரடியாக இவ்வாறு பார்ப்பன சாதியுடன் அடையாளப்படுத்தி விமர்சனம் செய்திருந்தால் உண்மையென்ன என்பதைப் பொறுத்து அம்பலப்பட்டு அசிங்கப்படப் போவது யார்?

ஒன்று தமிழ்மணம் அல்லது விடாது கருப்பு... சரிதானே..

உஷாவின் பதிவுகளை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பதிவின் நோக்கம் ஒரு தலை பட்சமானது. வலைப்பூ ஜனநாயகத்துக்கு ஆப்பு வைக்க விழையும் ஒரு நேர்மையற்ற முயற்சி.

தகுதியில்லாத எதுவும் மக்கள் சபையில் தனிமைப்பட்டுப் போகும். அதுவும் இந்திய சமூகத்தின் சலுகைப் பெற்ற வர்க்கமாகிய ஒரளவு அறிவு வளர்ச்சி கொண்டவர்களின் வலைப்பூ உலகில் தரமில்லாத நேர்மையில்லாத தகுதியில்லாத விசயங்கள் தனிமைப்பட்டுப் போகும் என்பதை நம்புங்கள். எழுதும் நீங்கள் மட்டும் அறிவு ஜீவிகள் அல்ல.

இது விடாது கருப்பு, அசுரன், குழலி, உஷா என அனைவருக்கும் பொருந்தும்.

அப்படி ஆட்டம் போடும் ஆத்மாக்களை போதுமான அளவு அம்பலபடுத்தி எழுதினாலே போதும் அல்லது கண்டு கொள்ளாமல் விட்டால் போதும் அவர்களின் ஆட்டம் குறைந்து விடும் பிறகு அவர்களின் தனிமையே தகுந்த தண்டனை கொடுக்கும்.

அய்யா!....வலைப்பூ உலகில் வலம் வருபவர்கள் முட்டாள்களில்லை. குறைந்த பட்சம்(முழுமையாக இல்லாவிட்டாலும்) நல்ல விசயங்களை அவர்களால் தரம்பிரித்து பார்க்க முடியும் என்பதில் சிறிது நம்பிக்கை வையுங்கள்.
********************

குழலி,

சாதி வேண்டாம் என்று சொல்லுபவர்கள்(நீங்கள் சாதியின் அழிவில் விருப்பம் கொண்டவர் என்று assume செய்து கொள்கிறேன்) குறிப்பிட்ட சாதியை கேவலமாக திட்டுவதை கண்டிப்பது ஏன்?

இதை வைத்து உடனே தாழ்த்தப்பட்ட சாதியை திட்டுவதை நீங்கள் கண்டிக்க மாட்டீர்களோ என்று திரிபுவாதிகள் கேள்வி கேட்க்கக் கூடும். அய்யா தாழ்த்தப்பட்டவன் தனது சாதியை பெருமையாக பறைசாற்றுவதில்லை. ஒரு சாதியின் மீதான விமர்சனம் எந்த நோக்கத்தில் வருகிறது என்பதுதான் அந்த விமர்சனத்தை மதிப்பிட தேவைப்படும் விசயம்.

கருப்புவின் பண்படாத விமர்சனங்கள் பார்ப்பன சாதிப் பெருமையை target செய்துதான் வருகின்றன.

அது அந்த சாதியை தாங்குபவர்கள் கவலை. அப்படிப்பட்டவர்களின் கவலைக்கு மரியாதை கொடுத்து குழலியின் பதிவின் முதல் வரிகளில் கண்டனம் வேறு..அய்யோ.. அய்யோ...

விடாது கருப்பே தனது பதிவில் சாதி கடந்து பிறப்பால் பார்ப்பனர்களான ஆனால் அவரது பார்வையில் சக மனிதர்களானவர்களனவர்களைப் பற்றி நல்ல விதமாக கூறியுள்ளார்.
ஆக அவரது target சாதி வெறியர்கள்தானேயொழிய பிறப்பால் பார்ப்பனர் என்று சாதி சான்றிதழில் பதியப் பெற்றவர்கள் அல்ல என்று தெரிகிறது.

விடாது கருப்பின் உள்மன புரிதலை என்னால் துள்ளியமாக சொல்ல முடியாது. ஆனால் அவரின் எழுத்துக்களில் இருந்து புரிய வரும் விசயம் இதுதான்.

குழலி மற்றும் உஷா அவர்கள் தங்களது கண்டனத்தை திருப்பப் பெற வேண்டும் அல்லது அவர்களை மேல் சாதி வெறியர்கள் என்றுதான் அடையாளம் காண வேண்டியிருக்கும். அப்படி ஒரு துரதிருஷ்டமான சூழல் ஏற்ப்படும் எனில் நான் மிகவும் வருத்தமுறுகிறேன்.

நன்றி,
அசுரன்.

40 பின்னூட்டங்கள்:

said...

வழிமொழிகிறேன்!!! :-))

said...

அபத்தம்.

ஒரு சாதியின் வரலாற்றில் அவர்கள் நடத்தை கெட்டவர்கள் என்று சொல்லுவார்களாம், அதை கேட்டால் இவர்களுக்கு மூக்கில் வெடிக்கிறது.

சாதீயத்தை வெறுக்கிறேன் என்று சொல்லுங்கள். அந்த சாதியினர் நடத்தை கெட்டவர்களாக இருந்தார்கள் என்று சொன்னால் அது முறையா?

இதுக்கு ஒரு நீட்டி முழக்கி ஒரு வக்காலத்து வேறு! பண்பாடற்ற இவர்களின் எழுத்துக்கு ஒரு ஜால்ரா வேறு!

உயர்ந்த பண்பாடுள்ள தமிழனுக்கே இவர்கள் அவமான சின்னம். இம்மாதிரி ஜந்துக்களால் இவர்கள் பேசும் கருத்தும் அடிபட்டு போய் விடுகிறது.

said...

அய்யா,

ஐயாராமன் அவர்களே தாங்கள் உய்ர்வாக கருதும் வேதங்கள், இதிகாசங்கள், சங்கீதம் யாரை அவமானப்படுத்துகிறது?

அந்த அவமானச் சின்னங்களை உயர்வாக கருதும் கூட்டம் இருக்கும் வரை அவர்களது உயர்வு மனப்பானமையை அடிக்கும் இந்தக் கூட்டமும் தவிர்க்க முடியாதது.

உலகில் எந்த ஒரு விசயமும் தனித்து இல்லை. குறைந்தபட்சம் இரண்டாகத்தான் உள்ளது.

வினை எதிர் வினை.

விடாது கறுப்பின் வினை அல்லது எதிர்வினையின் மறுபக்கத்தில் முட்டுக் கொடுப்பது யார்?

பார்ப்ப்னினியம்தான்.


நன்றி,
அசுரன்

said...

//அப்படி ஆட்டம் போடும் ஆத்மாக்களை போதுமான அளவு அம்பலபடுத்தி எழுதினாலே போதும் அல்லது கண்டு கொள்ளாமல் விட்டால் போதும் அவர்களின் ஆட்டம் குறைந்து விடும் பிறகு அவர்களின் தனிமையே தகுந்த தண்டனை கொடுக்கும். //

சத்தியமான வார்த்தைகள் அசுரன்.

said...

அய்யா ஐயராமன் அவர்களே,

தங்களுக்கு சாதிப் பற்று/சார்பு இல்லையெனில்(அப்படிக் கிடையாது என்பதுதான் உண்மை) ஏன் தங்களுக்கு வலிக்கிறது.

*********

வாய்சொல்வீரரே,

வலைப்பூவில் அவ்வாறான விவாதங்கள் பரவலாகநடந்து நான் பார்க்கவில்லை.

எடுத்துக்காட்டுக்கு சமீபத்தில் வன்னிய சாதி வெறியை அம்பலப்படுத்தி தமிழரங்கம் கட்டுரை விட்டது அதில் யாரும் எதிர்த்து பின்னூட்டமிட்டதாக தெரியவில்லை.
http://tamilarangam.blogspot.com/2006/06/blog-post_21.html

ஆனால அதே தளத்தில் பார்ப்பினிய எதிர்ப்பு பல பரிமானங்களை எடுத்துள்ளது.

அப்படிப்பட்ட பார்ப்பனர் தவிர்த்த மேல்சாதி வெறியர்களின் எதிர்ப்பும் ஆதரவின்றி அம்பலப்பட்டுத்தான் போகிறது.

ஏன் விடாது கறுப்பின் இந்த விமர்சனம் சாதி வெறியர்கள் அனைவருக்கும் பொருத்தமானதுதான்.


உங்களுக்கும் அந்த வினை எதிர் வினை விசயத்தை நியாபகப் படுத்துகிறேன்.

நன்றி,
அசுரன்

said...

சார்,

என்ன திசைதிருப்பல்....

///உயர்வு மனப்பானமையை அடிக்கும் ....//

மனப்பான்மையை எங்கே சார் அடிக்கிறீர்கள். அவன் நடத்தை கெட்டவன். அவன் பெண்கள் கெட்டவர்கள் என்று சொல்வதற்கும் ஆதிக்க மனப்பான்மைக்கும் என்ன வித்தியாசம் தெரியவில்லையா?

இம்மாதிரி தரக்குறைவான எண்ணங்களை தாங்கள் மனதில் கொண்டுள்ளீர்களா? நேர்மை இருந்தால் நேரிடையாக பதில் சொல்லுங்கள். அந்த ஆள் பார்ப்பானை பற்றி எழுதிய கருத்தில் தங்களுக்கு உடன்பாடு உண்டா. பார்ப்பனர்கள் நடத்தை கெட்ட வரலாற்றை உடையவர்கள் என்று நீங்கள் சொல்கிறீர்களா? வாய்மை இருந்தால் ஆம் இல்லை என்று பதில் சொல்லவும்.

வேறு தங்களிடம் எனக்கு அறிய வேண்டியது ஒன்றும் இல்லை.

நன்றி

said...

மதிப்பிற்குரிய போனபர்ட் ஐயா,

///
அய்யா ஐயராமன் அவர்களே,

தங்களுக்கு சாதிப் பற்று/சார்பு இல்லையெனில்(அப்படிக் கிடையாது என்பதுதான் உண்மை) ஏன் தங்களுக்கு வலிக்கிறது.
///

மறுபடியும் தங்களின் விதண்டாவாதம் இது.

நான் என் சாதியை பற்றவில்லை என்று உஷா அவர்கள் இதை தெளிவாக சொன்னார்கள். ஆனால், உன் ஆதாரம் கலங்கமானது என்று சொன்னால் அது கண்டிக்கவேண்டியது. அதற்கு இப்போதைக்கு சாதியை நான் தோள் மேல் போட்டுக்கொண்டு போக அவசியமில்லை.

உதாரணத்துக்கு, நான் திருநெல்வேலி காரன். இப்போ திருநெல்வேலியை விட்டு சென்னையில் இருக்கிறேன். ஆனால், நீங்கள் வந்து திருநெல்வேலியில் இருந்தவர்கள் எல்லாம் எப்போதும் திருடிதான் பிழப்பை நடத்தினார்கள் என்று சொன்னால் நான் கேட்க மாட்டேனா? நீ திருநெல்வேலியில் இல்லையே ஏன் கேட்கிறாய் என்பீரா.

தங்களின் வெறுப்பு தங்களின் மனதை கருப்பாக்குகிறது. அதில் நியாயம், பண்பு, நேர்மை எல்லாம் மறைந்து விடுகிறது.

மறந்தும் தரம் தாழாத தமிழனுக்கு இவர்கள் வெட்க கேடு.

நன்றி

said...

வன்னியர்களை மரம் வெட்டி என்று வருணித்த ஜயராமன் என்ற பார்ப்பன ஜந்துக்கும் ஜாதி துவேஷம் பற்றி பேச அருகதை இல்லை. ஏதாவது ஒரு கொயிலில் சென்று மணியாட்டலாம்.

பாப்பாத்திகள் நடத்தைக் கெட்டவர்கள் என்பதை கேட்ட போது கொந்தளித்த மனதிற்கு வன்னியர்களை மரம்வெட்டி என்று வருணிக்கும் போது பார்ப்பான் மூளைக்கு எட்டவில்லையோ?

said...

ஐயராமன்,

பார்ப்பனன் என்ற அடையாளத்தைத்தான் விடாது கறுப்பு விமர்சனம் செய்திருக்கிறார் என்று கருத பின்வரும் பகுதி இடமளிக்கிறது.
//தமிழ் சேவை ஆற்றிய ஒரு சில நல்ல பார்ப்பனர்களை தங்கள் குலத்தில் பிறந்தவர்கள் என்று கூறி ஒரு மாயப் புகழடைய முற்படுவது!//

பார்ப்பனன் என்ற அடையாளத்தைப் பற்றி அவர் சொன்ன கருத்தில் உள்ள கோபத்தில் எனக்கு முழு உடன்பாடு உள்ளது.

ஆனால் தனது கோபத்தை வெளிப்படுத்த அவர் கையாண்ட முறையில் எனக்கு விமர்சனம் உண்டு.

அப்படி தங்களது சாதிப் பளு வலிக்கிறது என்றால் இறக்கி வையுங்கள்.

இந்த பதிவின் நோக்கம் அந்த பிரச்சனையை சாக்காக வைத்து வலைப்பூ சனநாயகத்துக்கு, பார்ப்பன எதிர்ப்பு போன்று விசயங்களூக்கு மொத்தமாக பரசியடித்து முத்திரை குத்தும் முயற்சியை முறியடிப்பதுதான்.

மாறாக விடாது கறுப்பின் இன்ன பிற இத்யாதி தவறுகளுக்கு முட்டு கொடுப்பது அல்ல. ஏனென்றால் குழலி, உஷா பதிவுகள் விடாது கறுப்பின் இன்ன பிற தவறுகளை விமர்சித்து வந்திருந்தால் எனது நிலைப்பாடு அந்த சூழ்நிலையில்ல் வேறாக இருக்கும்.

நன்றி,
அசுரன்

said...

மரம் வெட்டியான்,

வன்னியர்களை மரம் வெட்டி என்று எந்த பின்புலத்தில் அவர் விமர்சித்தார் என்பது தெரியவில்லை. ஐயராமனின் அந்த விமர்சனம் சாதி வெறியை எதிர்த்து எனில் நான ஐயராமனின் பக்கம்.

வன்னிய சாதி வெறியர்களின் ஆட்டத்தைப் பற்றித்தான் எனது முந்தைய பின்னூட்டம் உள்ளது.

நன்றி,
அசுரன்

said...

மரம் வெட்டியான்,

வன்னியர்களை மரம் வெட்டி என்று எந்த பின்புலத்தில் அவர் விமர்சித்தார் என்பது தெரியவில்லை. ஐயராமனின் அந்த விமர்சனம் சாதி வெறியை எதிர்த்து எனில் நான ஐயராமனின் பக்கம்.

வன்னிய சாதி வெறியர்களின் ஆட்டத்தைப் பற்றித்தான் எனது முந்தைய பின்னூட்டம் உள்ளது.

நன்றி,
அசுரன்

said...

ஐயராமன்,

எனது வாதத்தை பற்றிய தங்களது கருத்துக்களை வைக்காமல். வாதத்தின் தவறுகளை/முரன்பாடுகளை வைத்து வாதடவும்.

தங்களது சாதிப் பற்றுக்கு இரண்டு சான்றுகள்
1) பார்ப்பனர்கள் ஏழ்மையில் வாடுவதாக கட்டுரை எழுதியது.
2) கிறிஸ்துவ சபைகளில் கஸ்டப்படும் மக்கள் பற்றி நீலிக் கண்ணீர் வடித்தது.

பெரும்பான்மை மக்கள் கஸ்டப்படுவதை பற்றி நேர்மையான ஐயராமன் ஒரு பின்னூட்டம் கூட எங்குமே இட்டதில்லை.(எனது பதிவில் அவர் பின்னூட்டம் இட்டதெல்லாம் பார்ப்பினிய எதிர்ப்பி கட்டுரைகளுக்கு மட்டும்தான்)

அப்படியே ஒன்றும் தெரியாத பாப்பா போல இருந்த ஊரைக் கெடுக்க வேண்டாம்.

நன்றி,
அசுரன்

said...

மரம் வெட்டியான் என்ற பெயரில் வந்த தரமற்றவர் சொன்னது பொய்.

நான் எந்த ஒரு சாதியினருமே மரம் வெட்டிகள் என்று எங்குமே சொன்னதில்லை. வன்னியர்கள் என்ற சாதி பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்துகொள்ளவும் ஆர்வமில்லை.

அன்புமணி ராமதாஸ் அவர்களை பற்றி ஒரு முறை எழுதும் போது 'மரங்களின் காவலர்' என்று இடக்காக எழுதினேன். ஒருவேளை அதை இந்த தரமற்றவர் இவ்வாறு திரிக்கிறாரோ என்னவோ?

என் பின்னூட்டத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

நீரளவே தாமரை போல இவர்கள் மனதளவே தரம். இவர்களுக்கு என்ன பேசுவது

வாய்ப்பளித்த அசுரன் அவர்களுக்கு நன்றி

said...

திரு ஐயராமன்,

திருநெல்வேலி என்பது ஒரு தத்துவம் அல்ல. குறிப்பாக மக்களை இழிவுபடுத்தும் தத்துவம் அல்ல.
ஆனால் இந்து(அதாவது பார்ப்பினியம்) திருடன் என்று சொன்னால் தவறில்லை.
அதை நான வழிமொழிவேன்.

அய்யா திரிபுவாதிகளே பிராக்கேட்டில் உள்ள பார்ப்பினியம் என்பதை அழுத்தம் கொடுத்து படிக்கவும். இந்து என்பதன் பொதுவான புரிதலில் இருந்து கொண்டு என்னை தாக்க வேண்டாம்

நன்றி,
அசுரன்

said...

ஐயராமன்,
வன்னியர் குறித்த தங்களது கருத்தாக மரம் வெட்டியான் பெயரில் போடப்பட்ட கருத்துக்கு நான் பின்வரும் பதிலை கொடுத்தேன்:

//மரம் வெட்டியான்,

வன்னியர்களை மரம் வெட்டி என்று எந்த பின்புலத்தில் அவர் விமர்சித்தார் என்பது தெரியவில்லை. ஐயராமனின் அந்த விமர்சனம் சாதி வெறியை எதிர்த்து எனில் நான ஐயராமனின் பக்கம்.

வன்னிய சாதி வெறியர்களின் ஆட்டத்தைப் பற்றித்தான் எனது முந்தைய பின்னூட்டம் உள்ளது.//

said...

அசுரன் ஐயா,

காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்.

நான் பார்ப்பனர்களை பற்றி எழுதினால் (அது நான் எழுதினதே அல்ல. ஒரு ஆங்கில கட்டுரையின் திறனாய்வு... அது இருக்கட்டும்...) சாதிப்பற்றாம்.

சரி. வேண்டாம் ஐயா. தலித்துக்களை பற்றி எழுதினேன். நான் தலித்துக்களை பற்றி எழுதினால் 'நீலிக்கண்ணீராம்'. ஏன் அது தலித் பற்றாகவில்லை. ஏன் நான் பார்ப்பனர்களை பற்றி எழுதியது நீலிக்கண்ணீர் ஆகவில்லை.

அப்புறம் நான் எவர்களை பற்றி எழுதினால் சாதி பற்று அற்றவனாவேன், ஐயா?

said...

அசுரன் சார்,

மறுபடியும் குழப்புகிறீர்கள். இல்லை குழம்பியிருக்கிறீர்கள்.

///ஆனால் இந்து(அதாவது பார்ப்பினியம்) திருடன் என்று சொன்னால் தவறில்லை.///

பார்ப்பனீயத்தை பற்றியோ த்த்துவத்தை பற்றியோ அவர் சொல்லவில்லை. பார்ப்பனர்கள் என்ற மக்களை பற்றி சொன்னார். திருடன் என்று சொன்னால் கூட தப்பில்லை. அவர்களை நடத்தை கெட்டவர்கள் என்று சொன்னார்.

இதன் வித்தியாசத்தை தாங்கள் என்ன முயற்சித்தாலும் முழுங்க முடியாது.

நீங்களும் அதை வழி மொழிந்து தங்கள் இலக்கணத்தை தெரியப்படுத்தியுள்ளீர்கள்.

said...

ஐயராமன்,

தலித்துகளை ஆகக் கேடாக இழிவுபடுத்தும் அதே நேரத்தில் அதே தலித்து/பழங்குடியினரை கடவுள் வழிபாடு போன்ற சில விசயங்களில் அவர்கள் மீது புகுத்தப்பட்ட (அடக்குமுறை என்பதை பற்றிய புரிதலே இல்லாத அந்த மக்களை) பொது அம்சங்க்ளில் கீழ் ஒருங்கிணைத்து தனது விருப்பத்தை நிறைவேற்றும் இந்துத்துவத்தை அல்லவா நீங்கள் முதன்மையாக விமர்சித்து எழுதியிருக்க வேண்டும்.

விம்ர்சித்து நீங்கள் எழுதுவதை விடுங்கள் அப்படி விமர்சித்து எழுதுவதை ஆதரித்தாவது பேசியிருக்கிறீர்களா?

கிறுத்தவம் மட்டுமல்ல வேறு எந்த 'துவமும் பொருளாதாரத்தில்/உற்பத்தி உறவில் புறையோடியுள்ள பார்ப்பினியத்தை/சாதி வேறியை முறியடிக்கும் மாற்று மருந்தைக் கொண்டிருக்கவில்லையெனறால் அடிபட்டுப் போகும்.

இதையெல்லாம் தங்களது புனித பிம்ப மனது ஏற்றுக்கொள்ளாது.

நன்றி,
அசுரன்

said...

ஐயராமன் அய்யா,

அதனால்தான் பண்பாடாத என்ற விமர்சனத்தை விடாது கறுப்பின் மீது வைத்தேன்.

அதனால்தான் அவரது 'பிறப்பால் பார்ப்பனர்களானவர்கள் பற்றிய' மற்றைய கருத்தை முன்வைத்தேன்.

அதனால்தான் அவரது அணுகுமுறையில் மாற்றுக் கருத்து உள்ளது என்று விமர்சனம் வைத்தேன்.

இதில் முழுங்குவதற்க்கு ஒன்றும் இல்லை.

பார்ப்பனன்/பார்ப்பினியம் வார்த்தை பிரிவுகளை அவர்(விடாது கறுப்பு) வேறுபடுத்தி பார்ப்பதில் என்ன பிரச்சனை என்று அவரிடம்தான் கேட்க வேண்டும்.

ஆனால் அவரது பதிவுகளில் இடப்படும் அவதூறுகளுக்கு இந்த பிரிவினைப் படிதான் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தி நான் அளித்துள்ள பீன்னூட்டங்களை அவர் ஆதரித்துள்ளார் எனும் போது அவரும் பிறப்பால பார்ப்பனனை எதிர்க்கவில்லை என்றுதான் முடிவுக்க வரவேண்டியுள்ளது.

அந்த அடிப்படையில்தான் விடாது கறுப்புவின் கருத்துக்கு எதிரான பதிவுகளை எதிர்த்த எனது இந்த பதிவும்.

நன்றி
அசுரன்

said...

அசுரன் ஐயா,

///விருப்பத்தை நிறைவேற்றும் இந்துத்துவத்தை அல்லவா நீங்கள் முதன்மையாக விமர்சித்து எழுதியிருக்க வேண்டும். ///

ஒன்றை எழுதி விட்டு ஞானஸ்னானம் பெற்றுதான் மற்றொன்றை நான் எழுத வேண்டும். இல்லாவிட்டால் நான் சாதி வெறியனா?

என்னய்யா பூச்சுத்தல் இது?

இது யார் வைத்த இலக்கணம்.

இந்துத்துவா வாதிகளை கேட்டால் அவர்கள் இதையே தங்களிடம் திருப்பி கேட்க எத்தனை நேரம் ஆகும். தலித்துகளை ஒடுக்கும் கிருத்துவர்களை பற்றி நீங்கள் ஏன் முதலில் எழுதவில்லை என்று? இது சரிப்பட்டு வருமா?

தமிழ்மணத்தில் என்க்கு தோன்றியதை எழுதுகிறேன். எத்தனையோ ஆன்மீக பதிவுகள் எழுதினேன். இலக்கியம் எழுதினேன். போலியாரை பற்றி எழுதினேன். எனக்கு தோன்றியதை எழுதுகிறேன்.

சாதி சாதி என்று வெறி பிடித்து எல்லாரையும் இந்தாள் இப்படி அந்தாள் அப்படி என்று பிராண்ட் செய்யும் ஆட்கள்தான் உண்மையான சாதி வெறியர்கள்.

நான் எழுதுவதை பாருங்கள். அதில் இந்தாள் இதைப்பற்றி ஏன் சொல்லவில்லை. அதனால், அவன் இதுதான் என்றெல்லாம் தங்களின் மன பிம்பத்தை யார் மீதும் திணித்து தங்கள் மன குறைகளை வெளிப்படுத்தாதீர்கள்.

சும்மா ஏதாவது குற்றம் சொல்லவேண்டுமே என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.

இரவாகிவிட்டது. விடை பெறுகிறேன்.

இழிபிறவியின் பதிவால் நாம் இருவரும் சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம்.

தலித்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்கு பரிகாரமே கிடையாது. அதில் பார்ப்பனர்களுக்கு பங்கு இருந்தது. அதற்கு அவர்கள் பொறுப்பு. ஆனால், சாதி வெறி தலை விரித்து ஆடுவது இன்று எல்லாரிடமும்தான். தலித்துகளுக்கு இன்றைய எதிரி பார்ப்பனர்கள் இல்லை.

நன்றி

said...

-தான் ஜாதி வெறியர்களை மட்டும் தாக்குவதாக விடாது கருப்பு வெளிப்படையாக கூறவில்லை. பொதுப்படையாகத்தான் கூறுகிறார். எனவே குழலி, உஷா போன்றவர்கள் அதற்கு எதிர்ப்பு கூறியது புரிந்து கொள்ளகூடியதே.

அப்படி ஆட்டம் போடும் ஆத்மாக்களை போதுமான அளவு அம்பலபடுத்தி எழுதினாலே போதும் அல்லது கண்டு கொள்ளாமல் விட்டால் போதும் அவர்களின் ஆட்டம் குறைந்து விடும் பிறகு அவர்களின் தனிமையே தகுந்த தண்டனை கொடுக்கும்

இது ஒத்துக் கொள்ள கூடியதாகவே உள்ளது.

said...

ஐயராமன் அவர்களே தலித்துகளின் இன்றைய எதிரி பார்ப்பனன் என்று சாதி சான்றிதழில் அடையாளப்படுத்தப்படுபவன் இல்லை. ஆனால் பிறப்பால் எந்த சாதியாக இருந்தாலும் பார்ப்பன பண்பாட்டை சுவிகரித்தவர்கள்தான் எதிரிகள்.

இந்துத்துவ கோஸ்டிகள் தலித்துகளுக்கு ஆகக்கேடான இழிவை உருவாக்கிவிட்டு அதே நேரத்தில் மாற்று மதத்தை விமர்சித்து ஆள் சேர்க்கும் வேலையில் இறங்கியிருந்த நேரத்தில் அதற்க்கு எதிராக நாங்கள் விவாதம் செய்து கொண்டிருந்த நேரத்தில், இடஓதுக்கீடு பிரச்சனை நடந்து கொண்டிருந்த நேரத்தில், தாங்கள் பார்ப்பன சாதி கஸ்டப்படுகிறான், கிறிஸ்துவத்தில் தலித் கஸ்டப்படுகிறான் என்ற எழுதியதை எப்படி பார்க்கலாம் என்று நினைக்கிறேர்கள்?

இன்றும் உழைக்கும் மக்களின் பண்பாட்டை செரித்து உருவானதுதான் தாங்கள் பெருமையாக கருதும அத்தனை இந்து தத்துவ அடையாளங்களும் என்று உங்கள் வாயிலிருந்து வரவேயில்லையே?

நன்றி
அசுரன்

said...

பாலசந்தர் கணேசன்,

குழலி விசயத்தில் நீங்கள் சொன்னது சரிதான். எனது பதிவை மாற்றி எழுதியுள்ளேன்.

தங்களது விமர்சனங்களை, கருத்துக்களை கூறிச் செல்லவும்

நன்றி,
அசுரன்

said...

நான் சொல்ல நினைத்தவற்றை இங்கே பலரும் அருமையாக சொன்னீர்கள். எனது கண்டனம் எல்லா பார்ப்பனர்களுக்கும் இல்லை. குறிப்பிட்ட வெறிபிடித்த பார்ப்பனர்களுக்கு மட்டுமே. புரிந்து கொண்டால் சரி.

//இழிபிறவியின் பதிவால் நாம் இருவரும் சண்டை போட்டுக்கொள்ள வேண்டாம்.//

ஜெயராமன்,

யார் இழிபிறவி? இது என் ஜாதி, இந்த குலத்தில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன் என்றெல்லாம் எழுதிய கேவலமான பார்ப்பனர்கள் நீங்கள்தான் இழிசாதி. திராவிடர்களை அடிமைகள்போல நடத்தி தீண்டாமையை இந்த திராவிட மண்ணில் விதைத்த ஒண்ட வந்த பிடாறிகள்தான் இழிசாதி. ஏழை திராவிடர்களுக்கு இடஒதுக்கீடு எனும்போது கும்பலாய் வந்து குலைக்கும் பார்ப்பனர்கள்தான் இழிசாதி!!!

said...

நல்ல நியாயம்.

மாட்டுலோன் தரும் திராவிடகுடிதாங்கி என்று சொல்லலாம் - ஆனால் தினமலம்தாங்கி என்று சொல்லக்கூடாது.

மரம்வெட்டி என்று சொல்லலாம் - ஆனால் மணியாட்டி என்று சொல்லக்கூடாது.

மலமண்டை என்று சொல்லலாம் - ஆனால் பூணூல் என்று சொல்லக்கூடாது.

மேலும்
- பெரியாரை இழிவுபடுத்தி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.
- திராவிட பெத்தடின் என்று வசை பொழியலாம்.
- கருணாநிதியை கயவன்/கிழவன் என்று அர்சிக்கலாம்.
- இடஒதுக்கீடு விஷயத்தில் எப்படி வேண்டுமானாலும் புலம்பலாம்.
- முஸ்லிம்களை அரக்கன் என சொல்லாம்.
-கிருத்துவர்களை கீழ்த்தரமாக எழுதலாம்.
- தமிழ்மண நிர்வாகிகளை அங்கதம் என்று சொல்லி கிழிக்கலாம்.

ஆனால் பாப்பானை பற்றி எதுவும் சொல்லக்கூடாது.

வாழ்க நடுநிலைமை.

said...

போலி கேவலமாக எழுதுகிறான் என ஒப்பாரி வைக்கலாம். இப்படி பேசுவோர் கருப்புவின் பதிவில் "பாயர பாப்பான்" என்று சொல்லும் ஒருவரின் "கருத்துக்களை" படியுங்கள். அப்போதாவது பித்தம் தெளிகின்றதா என்று பார்ப்போம்.

பார்பனரில் நல்லவரே இல்லையா என்று கேள்வி எழுப்பலாம். நிச்சயம் உள்ளனர். ஆனால் இங்கு எழுதும் பலருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இப்படி எழுதவைக்கின்றன என்று உறுதியாக கூற முடியும். லக்கி அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை சொன்னதும் அப்படி ஒரு பள்ளி இருந்ததா என்று கேள்வி கேட்டு அந்த சம்பவத்தையே கேள்விக்குறியாக்கினர்.

ஒரு சம்பவத்தை வைத்து இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லலாமா என்பவர்க்கு என் பதில். தர்ப்பை சாஸ்திரப்படி எல்லா அரேபியரும் கெட்டவரே என்று சொன்னீர்களே அது போலத்தான் இதுவும்.

said...

ஹிஹி மாட்டு லோன் குடுப்பதை நான் பெருமையாக நினைக்கிறென் என்பதை மீண்டும் தெரிவித்துகொள்கிறேன்..

இங்கு கண்ணியில் உடட்கார்ந்து பெயர் தெரியாத பெரியசாமிகளுடன் கெட்ட பெயர் வாங்குவதைவிட பாட்டாளி மக்களுக்கு மாட்டு லொன் கொடுப்பது நல்லது.

:))

said...

மும்பாய் குண்டுவெடிப்பை பற்றி கோவி.கண்ணன் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில் மாற்று மதத்தினரை பற்றி பேசியதன் விளைவாக வந்திருக்கும் "கருத்துக்களை" பாருங்கள்.

ஒருவர் பிராமனரையும் இப்படி சொல்கின்றனரே நீ கண்டிப்பாயா, திராவிட தலைவர் எங்கே என்கிறார்.

"பாயும் பாப்பான்" அடப்பாவிங்களா என்று அர்ச்சனை செய்கிறார், உன் வீட்டில் எவனும் செத்தா இப்படி பேசுவாயா என்று கூவுகிறார்.

சந்திலும் சிந்து பாடுவது என்பது இதுதானோ?

said...

பார்ப்பனர்களின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை எதிர்ப்புகள் தொடரும்.

said...

ராபின் ஹூட்,

//பார்ப்பனர்களின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும்வரை எதிர்ப்புகள் தொடரும்.//

இது தவறான கருத்து.

"பார்ப்பனீயம்" இருக்கும்வரை எதிர்ப்புகள் தொடரும் என்பதே சரியாகும்.

இது முடிவில்லாக்கதை. வஜ்ராவின் பாஷையில் சொல்வதானால் இது ஒரு அழிவே இல்லா அரக்கன்

said...

முத்து தமிழினி கேட்டுக் கொண்டதற்க்கு இணங்க அவரது பின்னூட்டம் திருத்தப்பட்டு வெளியிடப்படுகிறது:


****************
முத்து(தமிழினி) said...

http://muthuvintamil.blogspot.com/2006/05/blog-post_20.html

நான் யாரையும் தினமலம்தாங்கி என்று கூறியதில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்

மேலும் ஒரு சாதியில் பிறந்தார்கள் என்பதற்காக நான் யாரையும் எதிர்ப்பதில்லை.அவர்கள் கொள்கைகள் கருத்துக்கள் ஆகியவை வைத்தே என் எதிர்வினை இருக்கும்.

போனபர்ட் அவர்கள் பதிவு என்பதால் நான் பதிலளிக்கிறென்நன்றி.பொனபர்ட
்.நல்ல பதிவு.

இன்னும் நீங்கள் இங்கு நிறைய தெரிந்து கொள்வீர்கள்.
July 13, 2006 7:12 AM

*************

said...

:))))

said...

அசுரரே

அவ்வப்போது மிகச் சரியாக raw nerve-ஐத் தொட்டு பார்ப்பனியத்தைத் துள்ளச் செய்கிறீர்கள்..

பார்ப்பனர்கள் மலம் அள்ளுகிறார்களே என்று கண்ணீர் விட்டால் என்ன பொருள்? செய்யக்கூடாத காரியத்தை அவர்கள் செய்யத் தள்ளப் பட்டுவிட்டார்கள் என்கிற எண்ணம் தானே தெரிகிறது. பார்ப்பனர்கள் மலம் அள்ளினால் மட்டுமே அது கேவலமான தொழிலாகவும், மற்றவர்கள் அள்ளினால் ஏதோ அவர்கள் அதைச் செய்யப் பிறந்தவர்கள் என்கிற "உயர்ந்த" என்ணம் தானே அது?

//இதே நேரத்தில் நியாயமாக மரியாதை கொடுக்க வேண்டிய மன உணர்வுகளுக்கு நீங்கள் இது போல் வெகுண்டு எழுந்து தங்களது தார்மீக ஆவேசத்தை என்றைக்காவது வெளிப்படுத்தியிருக்கிறீர்களா?
//

இதுக்கெல்லாம் பதில் வராது. இருப்பினும் உங்கள் போர்ப்பறை முழங்கட்டும்.

வாழ்த்துக்கள்!

said...

கொஞ்சம் பொறுமையாக பின்னூட்டமிட முடிவு செய்துள்ளேன்.... ஓரிரு வரிகளில் இதை விளக்க இயலாது...

நன்றி

said...

வாருங்கள் குழலி,

உங்கள் மீது நான் வைத்த விமர்சனங்களை திரும்பப் பெற்றுக் கொண்டேன். இதை பதிவிலும் சேர்த்திருக்கிறேன்.

உங்களுடைய பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தங்களைப் பற்றி(வலைப்பூ உலகில் யாரையுமே) அதிகம் அறிமுகம் கிடையாது என்பதால், தவறுதலான புரிதலுக்காட்பட்டேன்.

தங்களது மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

மற்றபடி உங்கள் வருகையை விமர்சனத்தை என்றும் வரவேற்கிறேன்.

நன்றி,
அசுரன்

said...

கருத்துகளம் என்பது போர்களமல்ல எதிராளிக்கு வலிக்க வேண்டுமென்பதற்கோ எதிராளி சாக வேண்டுமென்பதற்கோ, உமது வெற்றி எதிராளிக்கு வலிப்பதில் இல்லை, உமது வெற்றி

எதிராளி உன் கருத்தை ஏற்பதில் தான் உள்ளது, உன் பக்க நியாயங்களை எதிராளியை யோசிக்க வைப்பதில் தான் உள்ளது என்பதில் நான் உறுதியாக உள்ளேன் (எல்லாவற்றையும்

போல இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு)

பண்பற்ற, கேவலமான கெட்ட வார்த்தைகள் கண்டிப்பாக எந்த நியாயத்தையும் யாருக்கும் எடுத்து செல்லாது, அவைகள் காயத்தை மட்டுமே உண்டாக்கும், வலியை மட்டுமே

உண்டாக்கும், அது அந்த வார்த்தையை பிரயோகித்தவரின் தோல்விதான், நிச்சயமாக எனக்கு அதில் உடன்பாடில்லை அதனால் தான் எனது கண்டனத்தை விடாது கறுப்புவிற்கு

தெரிவித்தேன்.

இது ஒரு விதமான விளையாட்டு, இங்கே விளையாட்டின் விதிகள் வினோதமானது, நேரடியாக இந்த அனானி/ அந்த பெயரில் எழுதுபவர் நீங்களா என்று கேட்பதுமா பெரும் பாவம்,

ஆனால் அதையே நேரடியாக சொல்லாமல் சுச்சு என்ற பெயரில் உள்ள பின்னூட்டத்தை படித்தால் உங்கள் ஞாபகம் வருகிறதே என்றும் உங்களை பார்த்தால் அவரை பார்க்க

வேண்டாம், அவரை பார்த்தால் உங்களை பார்க்க வேண்டாம் என நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அதையே கேட்கலாம் இது ஆட்ட விதிகளுக்குட்பட்டது, நேரடியாக கேட்பது

ஆட்டவிதிகளுக்கு முரணானது.

நக்கல் நையாண்டி எனவும் பெயரை குறிப்பிடாமல் லேசாக எழுத்துகளை மாற்றி எழுதலாம் அதெல்லாம் அங்கத்தில் வந்துவிடும், அதையே நேரடியாக பெயர் கூறி எழுதினால்

ஆட்டவிதிகளுக்கு முரண், இது மாதிரியான ஒரு வினோதமான விதிமுறைகள் உள்ள ஆட்டகளம் இது. ஏனெனில் முதலில் ஆட ஆரம்பித்தவர்கள் உருவாக்கிய விதிகள் இவை.

பண்பற்ற வார்த்தை பிரயோகங்கள் பிரயோகிப்பவருக்கு மட்டுமல்லாமல் யார் மேல் அது பிரயோகிக்கப்பட்டதோ அவர்களை நியாயமான காரணங்களால் எதிர்ப்பவர்களுக்கும் சேர்த்தே

அளவற்ற சேதத்தை உருவாக்குகின்றது, அது மட்டுமல்லாமல் எதிரில் வார்த்தைகளால் தாக்கப்படுபவர்களுக்கு இது மாபெரும் வெற்றியாகவும் அமைகிறது, இதனை தொடர்ந்து

நடைபெறும் விடயம் தான் மிக முக்கியமானது, இந்த பண்பற்ற வார்த்தைகளை யாருக்கு எதிராக பயன்படுத்துகின்றார்களோ அவர்கள் புனிதர்கள் ஆகின்றனர், மேலும் அவர்கள் அப்படி

திட்டு வாங்கியதாலேயே பரிதாபத்திற்குறியவர்களாகவும் அவர்களது கருத்துகளை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள் போலவுமான சித்தரிப்பும் விழுகின்றது.


இங்கே நிதானம் மிக முக்கியம், அதுவும் வெகுசன ஊடகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களை (உதாரணம் சாதிக்கட்சிகள் மோசமானவை, சாதியில்லை என்கிறீர் ஆனால் சாதி

ரீதியானா இடஒதுக்கீடு தேவை, அரசியல்வாதிகளே சாதிக்கு காரணம், சாதிபற்றி பொதுவில் பேசுவதே பாவம், திராவிடம், etc...) உடைக்க முயலும் போது அது அத்தனை சுலபமானது

அல்ல, ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பொது மதிப்பீட்டிற்கு எதிரான நிலை எடுத்த் பேசும்போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை, ஏனெனில் ஏற்கனவே

பொதுமதிப்பீட்டில் தவறாக எடுத்துவைக்கப்பட்டுள்ள விடயத்தை பேசும்போது அது சென்று செல்ல வேண்டிய ஆட்கள்(targetted audience) யாரெனில் அது நடுநிலையாட்கள்

இவர்களுக்கு மாற்று கருத்துகள் வெகுசன ஊடகங்களினால் எடுத்து வைக்கப்பட்டதில்லை, அப்படி செல்லும்போது விழும் வார்த்தை பிழறல்களினால் சொல்ல வந்தது targetted audineceஐ

சென்று சேராமலே போய் விடும், targetted audience கண்டிப்பாக நடுநிலை போர்வையில் உள்ளவர்கள் அல்ல.

திட்டு வாங்கியவர்கள் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் சாக்கில்(கண்டனம் தெரிவிப்பது நிச்சயம் தவறில்லை) போகிற போக்கில் மற்றவர்களையும் சேர்த்தே கத்தியால் சொருகி விட்டு

செல்வார்கள், அவர்களுக்கான தேவையும் அது தான், ஏனெனில் பண்பற்ற வார்த்தைகளில் திட்டுபவர்கள் அதற்கான விலையை தருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, அதன்

பிறகு அவர்களின் ஆக்கங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் மதிப்பும் எத்தனை குறைவாக இருக்கும் என்பதும் தெரிந்ததே, ஆனாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் தான் போகிற

போக்கில் மற்றவர்களை சொருக முடியும், நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சிலரின் மீது, சில குழுவின் மீது, சில பிம்பங்களை உருவாக்க முடியும், இதன் மூலம் மாற்று கருத்துகளை

எடுத்து செல்பவர்களை பொது நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கமுடியும், பொதுவாக ஒரு சாதியை கெட்ட வார்த்தைகள் திட்டினால் ஆட்டவிதிகளுக்கு முரண் என கண்டிக்கும்

நம்மால் இப்படியெல்லாம் பண்பற்ற வார்த்தைகள் பேசுவதற்கு காரணமே திரா'விட'ம் என்று பொதுவாக பேசுவதை கண்டிக்க இயலாது ஏனெனில் அது ஆட்டவிதிகளுக்குட்பட்டது,

அங்கேயும் பொதுமை படுத்தல், இங்கேயும் பொதுமை படுத்தல் தான், ஒரே வேறு பாடு அங்கே பண்பற்ற வார்த்தை, இங்கே நாகரீக நஞ்சில் தோய்த்த வார்த்தைகள்.


இந்த சூழ்நிலையில் ஒரு சிலர் மாற்று கருத்துகளை முன்னெடுத்து செல்லும் போது மிக கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் ஒவ்வொன்றும் திரிக்கப்படும், அய்யோ என

ஓலமிடப்படும் முத்து தமிழினி வார்த்தைகளில் சொல்வதென்றால் கீழே விழுந்து கை கால்களை உதைத்துக்கொண்டு அழுவார்கள், அதை சட்டென்று பார்க்கும் போது என்னமோ அவர்கள்

பாதிக்கப்பட்டது போன்றதாகவுமான ஒரு படக்காட்சி உருவாக்க முயலுவார்கள், ஆனால் அந்த நேரத்தில் தேவை பொறுமை, கொஞ்சம் பொறுமையாக இருக்கும் பட்சத்தில் கடுமையான

எதிர்வினை ஆற்றாமல் இருந்தால் அவர்களின் நடுநிலைமை பல்லிளிக்கும் ஆனால் அதற்கு சற்று காலம் பிடிக்கும் மேலும் இப்படியான முன்னெடுப்பாளர்களின் ஒரு ஒரு வார்த்தையும்

ஆராயப்படும், ஆதலால் மிக கவனமாக இருத்தல் வேண்டும், ஏனெனில் பலரும் காத்திருப்பது இந்த முன்னெடுப்பாளர்களை போட்டு தள்ள, இதில் மிகவும் சிக்கலானதே நடுநிலை

போர்வையில் இருப்பவர்களால் தான் ஆணாதிக்க சமுதாயத்தில் ஆணாதிக்கத்திலிருந்து தம்மை முற்றிலும் விடுவித்துக்கொள்ள முயல்பவர்கள் ஆனாலும் ஏதோ ஒரு இடத்தில்

எத்தேச்சையாக வந்து விழும் "மீசை வைச்ச ஆம்பிளை யாரும் எதிர்க்கவில்லை" என்ற வார்த்தையை நடுநிலையாளர் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள கூட அவகாசம் அளிக்கப்படாமல்

அதை ஆணாதிக்க வெறியாக சித்தரித்து அதை தொடர்ந்து பல திரிப்புகள் புனைவுகள் செய்து கை கால் உதைத்து கொண்டு ஆர்பாட்டம் செய்யும் போது கண்டிப்பாக அது அந்த

வார்த்தைகளுக்கு அல்ல வேறு முன்னெடுப்புகளுக்கு போட முனையும் தடை என்பது புலனாகும் ஆனால் அது எல்லோருக்கும் புலப்பட நேரமெடுக்கும் அது வரை

ஆட்டவிதிகளுக்குட்பட்டு பொறுமை காக்க வேண்டும், இதில் மாபெரும் வேடிக்கையென்னவென்றால் சிலரின் மடியிலிருந்த பூனைக்குட்டிகள் வெளியே வந்து அவர்களின் நடுநிலை

பல்லிளிப்பது தான், மடியில் உள்ள பூனைக்குட்டி நிச்சயம் ஒரு நாள் வெளிவரும் அது வரை இந்த ஆட்டத்தில் பொறுமைதான் ஒரே விதி ஏற்கனவே சிலரின் மடியிலிருந்த

பூனைக்குட்டிகள் வெளியில் குதித்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் இப்போது இல்லை, இனி எங்கிருந்தாவது பூனைக்குட்டி குதித்தாலும் பெரிய அதிர்ச்சியெல்லாம்

இருக்காது, ஒரு சிறிய வியப்பு மட்டுமே தோன்றும்.

உலகக்கால்பந்து கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் முக்கிய வீரர் ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் ஜிடேன் திடீரென எதிரணியினரை முட்டி மோதினார், விளைவு சிவப்பட்டை

வாங்கி வெளியேறினார், முட்டுவதற்கு காரணம் ஜிடேனை இழிவுபடுத்தும் வார்த்தைகள் பேசியது, ஜிடேன் முட்ட வேண்டுமென்று பேசியது தான் அது ஆனாலும் கால்ப்பந்து விதிகளின்

படி முட்டியது மட்டுமே விதிகளுக்கு முரணானது ஜிடேனை கோப மூட்டி முட்டு வாங்கியதால் வென்றது யார்? இதற்காகத்தானே ஜிடேனை கோபமூட்டியது, முட்டுவதற்கு காரணங்கள்

இருந்தாலும் முட்டியதால் ஜிடேனுக்கா வெற்றி? இல்லையே, அய்யோக்கியத்தனம் செய்து முட்டு வாங்கியவர்கள் வெற்றிகளிப்பில், அதே ஜிடேன் விதிகளின் படி அமைதியாக

இருந்திருந்தால் வெற்றி பறிபோயிருக்காதே, இது தான் நேர்மையான ஆட்டத்தையும் தாண்டிய மொள்ளமாறித்தனம்.

உறுதிப்படாத ஒரு விடயத்தை வாதத்தில் வைப்பதையும் பெரும்பாலும் தவிர்ப்பேன், அப்படி ஒரு தகவலை வைக்கும் போது உதாரணமாக ஒருவரை பார்த்து நீங்கள் தான் இந்த பெயரில்

பின்னூட்டமிடுகிறீர் என்று நான் கருதுகிறேன் என சந்தேகப்பட்டால் கூட போதும் மற்ற அனைத்து விவாதங்களும், கருத்துகளும், தவறுகளும் மறைக்கப்பட்டு இது மிகப்பெரிதாக

பேசப்படும், எல்லா படங்களும் காட்சிகளும் அரங்கேறும், பிறகு மற்றவை எல்லாம் மறைக்கப்பட்டு இது மட்டுமே நிற்கும், ஆனாலும் பொதுமையில் இதை

கவனித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த போலித்தனம் பல நேரங்களில் புரிவதில்லை, இந்த விடயத்தில் என் குரு சிம்ரன், அவரின் தங்கை மோனல் தற்கொலை செய்து கொண்ட போது

அந்த தற்கொலையின் பின்னுள்ள நடனை இயக்குனர், அவரின் தங்கை, மோனலின் காதலன், இதில் நடிக மும்தாஜின் பங்கு என பேட்டியில் பேசிய சிம்ரன் ஒரே ஒரு குற்றச்சாட்டாக

மும்தாஜ் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை மோனலின் வீட்டிலிருந்து திருடியதாக கூறிவிட்டார், மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு மிக அதிகமாக ஊடகங்களும் மும்தாஜீம் மற்றவர்களும்

பேசியது ஐம்பதாயிரம் ரூபாய் விடயத்தை தான், இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கும் மும்தாஜ் இதை செய்திருப்பாரா என்பதில் ஆரம்பித்து அத்தனை கவனமும் இதிலே தான் இருந்தது,

இதில் சிம்ரன் அம்பலப்படுத்திய மற்ற அனைத்தும் மறைந்து விட்டன, ஏனெனில் ஆட்டவிதி அப்படி.

மற்றவர் மனம் புண்படாமலெல்லாம் எதையும் எழுத முடியாது உடைக்க முடியாது, இந்து மத மூடப்பழக்கங்களை இந்து மதத்தினர் புண்படுவார்கள் என பேசாமல் இருக்க முடியாது,

இசுலாமிய அடிப்படை வாதத்தை அவர்கள் மனம் புண்படுமென எழுதாமல் இருக்க முடியாது, நடிகர்களின் ரசிகர்களின் கோமாளித்தனத்தையும், அரசியல் தலைவர்கள். தொண்டர்களின்

கோமாளித்தனத்தையும் மணம் புண்பட்டுவிடும் என பேசாமல் இருக்க முடியது, ஆனால் விமர்சனங்கள் கண்டிப்பாக கேவலமான வார்த்தைகளில் இருக்க கூடாது என்பது என் எண்ணம்,

விமர்சனத்திற்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது, நல்ல வார்த்தைகளில் காழ்ப்புணர்ச்சியை துப்பினாலும் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும், எல்லாருடைய

எழுத்துகளும் நிலைப்பாடுகளும் மற்றவர்களால் தொடர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கின்றார்கள், எத்தனை போலித்தனத்தையும் அவர்களால் உடனே கண்டுபிடிக்க

முடியவில்லையென்றாலும் நாளாக நாளாக அவர்களால் கண்டுபிடிக்க முடியும் அப்போது சாயம் வெளுக்கும் அதுவரை முடிந்த அளவிற்கு அவர்களை அம்பலப்படுத்திக்

கொண்டிருந்தாலே போதும்.

எல்லா மனிதர்களுக்கும் பிரேக்கிங் பாயின்ட் என்று ஒன்று உண்டு சிலருக்கு அது உடனே இருக்கும் சிலருக்கு கொஞ்சம் நேரம்பிடிக்கும்.

பண்பற்ற வார்த்தைகளினால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் எத்தனை சேதத்தை கருத்து தளத்தில் அவர்கள் விளைவிக்கின்றார்கள் என்பதை விளக்க கிடைத்த சந்தர்ப்பமாக இதை

எடுத்துக்கொள்கின்றேன்.

நன்றி

said...

குழலி,

உங்களுட்ன் முழுமையாக ஒத்துப் போகிறேன். இதுதான் விடாது கறுப்பின் மீதான எனது விமர்சனமும் கூட.

இதைத்தான் சமீப காலங்களில், ஆளும் தத்துவம் அவல குரலெழுப்பி தனது வெற்றியை உறுதிபடுத்திக் கொள்ள முயல்கிறது, எச்சரிக்கை என்று பல பின்னூட்டங்களில் குறிப்பிட்டிருந்தேன்.

நீங்களே சொல்லுவது போல் ஆட்டத்தின் விதிகள் இரு புறமும் கூர்மையான கத்திதான். மிக மிக ஆபத்தான கட்டம்தான். சரியாக கையாள வேண்டும்தான்.

பொறுமை மிக மிக அவசியம்.

ஆனால் தங்கள்(தங்கள் மீது மட்டுமல்ல) மீதான விமர்சனம் என்னவென்றால். இதை நீங்கள் ஏன் விடாது கறுப்பிடம் முன்பே சொல்லி அவரது அணுகுமுறையின் ஆபத்தை புரியவைக்க முயற்சி எடுக்கவில்லை (அப்படி எடுத்திருந்தால் என்னை மீண்டும் மன்னிக்கவும்).

நான் வலைப்பூ உலகிற்க்கு புதிது. நிதானமாக இந்த விசயங்களைப் பற்றி அவரிடம் பேசலாம் என்றிருந்தேன்.

இது பற்றி இனி முடிவெடுக்க வேண்டியது விடாது கறுப்புதான்.

குழலி தங்களது அக்கறையான பொறுமையான அணுகுமுறைக்கு தங்களை வாழ்த்துகிறேன்.

தங்களது ஆழமான இந்த பின்னுட்டத்திற்க்கு மிக்க நன்றி.

வேறு விசயங்கள் இருந்தால் தனிமடலில் தெரிவிக்கவும்.

asuran@inbox.com

இந்த பதிவு பற்றிய எனது கருத்து இதுதான். விடாது கறுப்பு மீது முத்திரை குத்தும் முயற்சியை முறியடிப்பது. அதன் மூலமாக ஒட்டு மொத்தமாக பார்ப்பனிய எதிர்ப்பின் மீதும் முத்திரை குத்தும் முயற்சியை முறியடிப்பது. தற்பொழுத் இந்த பதிவு நல்ல விளைவுகளை உள்ளடக்கியுள்ளதா? பாதகமான விளைவுகளை உள்ளடக்கியுள்ளதா? என்று தெரியவில்லை.

நன்றி,
அசுரன்

said...

//பண்பற்ற வார்த்தை பிரயோகங்கள் பிரயோகிப்பவருக்கு மட்டுமல்லாமல் யார் மேல் அது பிரயோகிக்கப்பட்டதோ அவர்களை நியாயமான காரணங்களால் எதிர்ப்பவர்களுக்கும் சேர்த்தே

அளவற்ற சேதத்தை உருவாக்குகின்றது, அது மட்டுமல்லாமல் எதிரில் வார்த்தைகளால் தாக்கப்படுபவர்களுக்கு இது மாபெரும் வெற்றியாகவும் அமைகிறது, இதனை தொடர்ந்து

நடைபெறும் விடயம் தான் மிக முக்கியமானது, இந்த பண்பற்ற வார்த்தைகளை யாருக்கு எதிராக பயன்படுத்துகின்றார்களோ அவர்கள் புனிதர்கள் ஆகின்றனர், மேலும் அவர்கள் அப்படி

திட்டு வாங்கியதாலேயே பரிதாபத்திற்குறியவர்களாகவும் அவர்களது கருத்துகளை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள் போலவுமான சித்தரிப்பும் விழுகின்றது.


இங்கே நிதானம் மிக முக்கியம், அதுவும் வெகுசன ஊடகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களை (உதாரணம் சாதிக்கட்சிகள் மோசமானவை, சாதியில்லை என்கிறீர் ஆனால் சாதி

ரீதியானா இடஒதுக்கீடு தேவை, அரசியல்வாதிகளே சாதிக்கு காரணம், சாதிபற்றி பொதுவில் பேசுவதே பாவம், திராவிடம், etc...) உடைக்க முயலும் போது அது அத்தனை சுலபமானது //

குழலியின் இந்த வரிகள் தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான் விமர்சனம்

said...

நன்றி அசுரன் அவர்களே.

said...

நல்ல விவவாதம் நடைப்பெறுகிறது நான் ஒரம் கட்டி வேடிக்கைமட்டும் பார்க்கிறேன். அதற்கு முன் ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன்.

திரைப்படங்களுக்கே தணிக்கை கூடாது என இயக்கம் நடைப்பெற்று வரும் சூழலில் , அதை விட சுதந்திரமான எழுத்து துறைக்கு தணிக்கை வேண்டும் என்பது போல் சிலர் சொல்லி வருகிறார்கள். அச்சு ஊடகங்களில் இது போன்ற தணிக்கை இருக்கிறது எனத்தான் பிளாக் உருவானது என்ற அடிப்படை உண்மை தெரியாத பாமரர்கள் இவர்கள் என்பேன்.

உண்மையில் தரமில்லாத ஒன்று என சொல்ல இவர்கள் யார், விடாது கருப்பு எழுத தடை சொல்ல யார் இவர்களுக்கு உரிமை தந்த்தார்கள்.அவர் எழுதுவது தரம் இல்லை எனில் நீங்கள் படிக்க வேண்டாம். போனபார்ட் சொன்னார்ப்போல தரமில்லாதவைகள் தானே புறகணிக்கப்படும் படிப்பவர்கள் ஒன்றும் அம்மாஞ்சிகள் அல்ல, அவர்களும் புரிந்து புறக்கணிப்பார்கள் அதை விட்டு அவர் பதிவை நீக்க வேண்டும் என்பதெல்லாம் கருத்து சுதந்திரத்தின் குரல் வலையை நெறிப்பது போன்றது.


ஆபாசம் எது ,தரம் தாழ்ந்தது எது எனப்படிப்பவரின் முடிவுக்கே விடுங்கள் வேறு யாரும் தர நிர்ணயம் செய்ய வர வேண்டாம்! "உங்கள் கண்டனத்தை பதிவு செய்யுங்கள்" அதை விடுத்து தமிழ்மணத்தை முன்னிருத்தி பிரச்சினை பண்ண வேண்டாம். அது ஒரு பொதுவான தளம் , தனிநபர்களின் கருத்துக்கு பொருப்பாகாது.

Related Posts with Thumbnails