TerrorisminFocus

Saturday, September 28, 2013

பூவாடைக்காரி தெய்வமும், பெண் பித்து பிடித்த தஞ்சை நாயக்கர் அரசும்!!

ஆந்திர தேசத்து தெலுங்கு சாதியினர் பலர் முஸ்லீம் அரசர்களின் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட அடக்குமுறைகளுக்கு தப்பிப் பிழைத்து அலை அலையாக தமிழகம் வந்தது பற்றி கி ராஜநாரயணன் நாவலில் ஒரு விவரிப்பு உண்டு. இதே போன்று பொதுவில் முஸ்லீம் அரசுகள் இந்தியாவில் பாலியல் அத்துமீறல்கள், கொடுமைகள், கோயில்கள் மீது தாக்குதல், 'இந்து'க்கள் மீது ஒடுக்குமுறை செய்தது குறித்து பொதுபுத்தி ஒன்று உருவாக்கப்பட்டு பரவலாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது ஒரு வகைப்பட்ட உயர்சாதி/மேட்டுக்குடி அரசியல் உருவாக்கிய சமூக உளவியலே. புத்தி கெட்ட நடுத்தர வர்க்க பேமானிகளால் பராமரிக்கப்பட்டு பரப்புரை செய்யப்படுகிறது. இதனை புரிந்து கொள்ள இங்கே வலைப்பூக்களிலும் மோடிக்கு நேரடியாக வக்காலத்து வாங்கும் நேர்மையும்(காவி கும்பலிடம் இதை எதிர்பார்ப்பது தப்புதான்), தைரியமும் இன்றி 'இந்து'க்கள் பாதிக்கப்படுவதாக உச்சுக் கொட்டி, காஷ்மீருக்கெல்லாம் கேமராவை சூம் செய்து கதை சொல்லும்  வெள்ளை வேட்டிக்குள் காவி டவுசர் போட்ட பதிவர்களைச் சொல்லலாம். இவர்களின் நம்பகத்தன்மைக்கு உரைகல் அதே 'இந்து'க்கள் தீண்டாமைக் கொடுமைக்கும், படுகொலைக்கும் ஆதிக்க சாதி வெறியர்களால் ஆட்படும் போது பாரமுகமாக இருப்பது. இவர்களின் கரிசனம் 'இந்து' மீது அல்ல என்பது இங்கு புலப்படும்.

சரி இதற்கும் பூவாடைக்காரிக்கும் என்ன தொடர்பு?... பிடிக்காத மாமியார் கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்று சொல்வார்களே அது போல. முஸ்லீம் மன்னர்களின் அடாவடித்தனங்களை மட்டும் சூம் போட்டு காட்டும் வரலாற்றுப் பார்ப்பனியம், அதே அளவுக்கும், அதை விட கொடூரமாகவும் 'சாதி இந்து' அரசர்கள் செய்துள்ள கொடுமைகளைப் பற்றி பேசுவதில்லை. உதாரணத்திற்கு சொல்ல வந்துதான் பூவாடைக்காரி தெய்வம் உருவான கதை.

தஞ்சை நாயக்கர் ஆட்சி காலத்தில் பாளையக்காரர்கள் கண்ணில் படும் அழகிளம் பெண்களை கடத்திச் சென்று வன்புணர்ந்து அடிமைகளாக விற்று விடுவர். பிரேவ் ஹார்ட் படத்தில் வருமே - திருமணம் ஆனால் முதலிரவு அப்பகுதி படைத்தலைவனுடன் நடக்க வேண்டும் என்று, அது போல பூப்படைந்த பெண்களை கடத்தி வந்து வன்புணர்ச்சிக்குள்ளாக்குவர். இதிலிருந்து தப்பிக்க பூப்படைந்த பெண்களை கௌரவக் கொலைகள் செய்வதும் நடந்துள்ளது. அப்படி கொல்லப்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பான பெண் தெய்வப் பெயர் வழங்கப்படுகிறது. தரங்கம்பாடி பகுதியில் இவ்வகை தெய்வங்களுக்கு பூவாடைக்காரி என்று பெயர் வழங்கப்படுகிறது. (தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி - 1 இராமச்சந்திரன்.சீ - உங்கள் நூலகம், ஆ, சிவசுப்பிரமணியன் செப் 2013)

விடுதலைப் போர் வீரன் கட்டபொம்மனுக்கும் கூட இவ்வகை கதையாடல் உண்டு. அது குறித்து நாட்டுப்புற வழக்கும் உள்ளது. 7 அண்ணன்களுக்குப் பிறந்த தங்கையை கட்டபொம்முவிடமிருந்து காக்க அவர்கள் கொன்ற கதை அது. இதே போல இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்ட கேரளாவை கொள்ளையடித்த கதை. பல்வேறு 'இந்து' மன்னர்கள் பக்கத்து நாடுகள் (இந்தியாதான் 50 கிமீ 100 கிமீ உள்ளயே) மீது  படையெடுத்து கோயில்களை கொள்ளையடித்த வரலாறுகள். இவைகள் நிகழ்காலத்தில் கலவரத்தை உண்டாக்கும் ரசவாதத்திற்கு உட்படாத கல்வெட்டுக்கால வரலாறுகள்.  காரணம் வரலாறு நெடுகிலும் காவி டவுசர்கள் பார்ப்பனியத்தின் பெயரில் உருவாக்கி வைத்துள்ள திட்டமிட்ட முஸ்லீம் வெறுப்பு கருத்தாக்கம்.

எப்படி இன்றைய காவி டவுசர் பதிவர்கள் அய்யோ காஷ்மீர் என்று அலறி போலியாக துடித்தாவது மோடிக்கு காவடி தூக்குகிற அதே வேளையில் கண்முன்னே சக 'இந்து'வுக்கு நிகழும் கொடுமையைக் கண்டும் காணாமல் போகிறார்களோ, மூடி மறைக்கிறார்களோ அதே போல வரலாறு நெடுகிலும் மன்னர் என்றாலே அடாவடித்தனம், ஒடுக்குமுறை சுரண்டல் என்ற உண்மையின் ஒரு பக்கத்தை மட்டும் முஸ்லீம் என்று குறிப்பிட்டு காட்டி பிரிவினை கிளப்புகிறார்கள்.

இந்த அடிமடையர்களுக்கும் அல்லக்கை கூட்டம் உண்டு. ஏனேனில் நாம் இருப்பது காலனிய அடிமைத்தனத்தில் ஊறித் திளைத்த சாதி வெறி இந்தியாவில். இது இதற்கு மீறி சிந்தித்தால்தான் நாம் ஆச்சர்யப்பட வேண்டும். இவர்களின் மொன்னைத்தனத்திற்கு ஒரு பூவாடைக்காரியை உருவாக்கினால் ஒழிய இதற்கு விடிவில்லை.

அசுரன்

தொடர்புடைய பதிவுகள்:
'இந்து' மன்னர்களால் இடிக்கப்பட்டவை எவை? 

தெய்வங்கள் உருவான கதை 

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

 
13 பின்னூட்டங்கள்:

said...

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் அசுரனின் அதிரடி ..

இனி சரவெடி தானா ?..

said...

Hi Asuran,

First of all let me clarify you that I am not வெள்ளை வேட்டிக்குள் காவி டவுசர் போட்ட பதிவர்.

I am admirer of your posts and I am for new communism (communism minus errors plus improvements). If you have any problem with me commenting in English, please tell.

//முஸ்லீம் மன்னர்களின் அடாவடித்தனங்களை மட்டும் சூம் போட்டு காட்டும் வரலாற்றுப் பார்ப்பனியம், அதே அளவுக்கும், அதை விட கொடூரமாகவும் 'சாதி இந்து' அரசர்கள் செய்துள்ள கொடுமைகளைப் பற்றி பேசுவதில்லை.//

//வரலாறு நெடுகிலும் மன்னர் என்றாலே அடாவடித்தனம், ஒடுக்குமுறை சுரண்டல் என்ற உண்மையின் ஒரு பக்கத்தை மட்டும் முஸ்லீம் என்று குறிப்பிட்டு காட்டி பிரிவினை கிளப்புகிறார்கள்.//

On reading the above statements, I think you seem to ignore/whitewash important differences between Muhamadan rulers and Non-muhamadan rulers. I would like to throw some light on these differences.
Muhamadans have their ‘Muhamad’s commands/maargam’ to justify all their evil doings while Non-muhamadan rulers don’t have those commands.
Muhamadans are commanded to wage jihad on non- muhamadans, slaughter all the men (including young boys starting to grow pubic hair) encountered for 3 days in a place, from 4th day onwards, force convert to Muhamadism or kill those men who deny to convert, etc, enslave all the women and girls of non- muhamadans and use them as sex toys and domestic servants and enslave male children, castrate them young, make them ‘Alis’ and use them as guards in their harems. Muhamadan rulers did all this with no remorse of any sort.
Of course, Muhamadan rulers could not follow all the Muhamad’s commands in India for known & unknown reasons. They did not kill all those who denied conversion. Instead they enslaved as many men as they can and used them for their building their monumental buildings, maintaining their mega sized harems, etc. Thus they may be considered kinder than Muhamad.

We can discuss them in detail.

For a very detailed account on Islamic jihad and slavery in India, please read islamic-jihad-legacy-of-forced-conversion-imperialism-slavery by M.A. Khan (http://www.islam-watch.org/authors/65-khan/809-islamic-slavery-part-1.html )

In addition, I would like to make the following comments.
// முஸ்லீம் அரசர்களின் பாலியல் அத்துமீறல்கள்//
Usage of ‘பாலியல் அத்துமீறல்கள்’ is a typical way of whitewashing or rather rubbing salt on the wound. Muhamadans did not just rape the women, leave them and go. They took the women with them, kept them in their captivity and raped them whenever they pleased, sold them away to other Muhamadans when they were sated with them, used them as domestic servants when they are no longer young.
//தஞ்சை நாயக்கர் ஆட்சி காலத்தில் பாளையக்காரர்கள் கண்ணில் படும் அழகிளம் பெண்களை கடத்திச் சென்று வன்புணர்ந்து அடிமைகளாக விற்று விடுவர்.//

‘அடிமைகளாக விற்று விடுவர். This is most probably falsification. There is no clear cut system of selling and buying of the enslaved people existed here in India as in Areas where Muhamadism had upperhand. If at all பாளையக்காரர்கள் have sold the girls, they should have sold them to most probably to Muhamadans of adjacent Muhamadan ruled lands. In non-muhamadan households in non-muhamadan ruled lands, slave holding may not have been possible.

said...

அன்புள்ள யுனிவர்படி, உங்களது பாரபட்சமான இஸ்லாமிய விரோதம் கண்ணோட்டம் உண்மை உற்று நோக்க தடை போடுகிறது என்பதாக தோன்றுகிறது. இஸ்லாம் மதம் யோக்கியமானது என்றோ அதன் அடிப்படைவாதம் சரி என்று எங்கும் சொலல்வில்லையே. கோயிலை கொள்ளையடிக்க இஸ்லாம் தனது சட்டத்திலேயே சொல்லியுள்ளது என்பதைப் பற்றி எனக்கென்ன கவலை? கொள்ளையடிப்பதுதான் நிதர்சனம் எனும் போது இந்து மன்னன் கொள்ளையடிப்பதற்கு தஞ்சை கோயில் கட்டு வேண்டுமென்ற காரணம் இருப்பதற்கும், இஸ்லாம் மன்னம் கொள்ளையடிக்க இஸ்லாம் சட்டம் காரணமாக இருப்பதற்கும் வித்திய்சாம் மத அடையாளம் மட்டும்தான். மற்றபடி ரெண்டு பேரும் மன்னன் என்பதும் அயோக்கியன் என்பதும்தான் மிஞ்சி நிற்கும் உண்மை. தமிழகத்தில் அடிமை முறை பற்றி ஆ. சிவ சுப்பிரமணியன் புத்தகம் படியுங்கள். அது மட்டுமின்றி வெகு தெளிவான அடிமை விற்பனை முறை அதற்கான சட்டங்கள் இந்தியாவில் நடைமுறையிலிருந்தன. கம்யூனிசத்தை விரும்புவது உயிரியல். மனிதனாக பிறந்த, உணர்ந்த ஒவ்வொருவனும் உயிரியல் உந்துதலின் காரணமாக கம்யூனிசத்தையே விரும்புவான்.ஆனால் அதனை நிஜமாக்கிக் காட்டுவது அறீவியல். உங்களது கம்யூனிச அறிவியலை, கண்ணோட்டத்தை புடம் போடுவது இத்தகைய பாரபட்சமான வரலாற்றுக் கண்ணோட்டத்தை, தடுமாற்றத்தை சரி செய்ய உதவலாம்.

said...

Dear Asuran,

Thanks for your reply.

//உங்களது பாரபட்சமான இஸ்லாமிய விரோதம் கண்ணோட்டம்//

As per most of your posts you hate Paarpanism. Aren’t you biased against it?

I hate Muhamadism as well as Paarpanism. But I know that the first is present and certain danger to the world than the other. It is the one much less discussed by people. So, I want to change the debate to important topic.

// கொள்ளையடிக்க இஸ்லாம் தனது சட்டத்திலேயே சொல்லியுள்ளது என்பதைப் பற்றி எனக்கென்ன கவலை?//

You don’t worry about global danger but only about local one? I request you to worry about it too.

// இந்து மன்னன் கொள்ளையடிப்பதற்கு தஞ்சை கோயில் கட்டு வேண்டுமென்ற காரணம் இருப்பதற்கும், இஸ்லாம் மன்னம் கொள்ளையடிக்க இஸ்லாம் சட்டம் காரணமாக இருப்பதற்கும் வித்திய்சாம் மத அடையாளம் மட்டும்தான்//

No other religion command as categorically as Muhamadism to attack and rob the believers of other religions. Muhamadans take quran and qadith as literal directions from God itself. No other people have such clear text which is read by all the followers and valid today and forever. That makes a lot of difference. I am open to discuss it further.

// ஆ. சிவ சுப்பிரமணியன் புத்தகம் படியுங்கள்.//

Sure. Will try to get it and read. Please read M.A.Khan’s book.

said...

//
As per most of your posts you hate Paarpanism. Aren’t you biased against it?//

காமெடி பன்னாதீங்க யுனிவர்படி. நான் பயாஸ்டு என்பதை எங்குமே மறைத்ததில்லையே? நீங்கள்தான் நியூட்ரல் என்று உள்ளதாக கற்பனையில் இருப்பது போல தெரிகிறது. அப்படியொன்று கிடையாது.


//I hate Muhamadism as well as Paarpanism. But I know that the first is present and certain danger to the world than the other.//

அப்படியா? அது என்னவகையான டேஞ்சர் கொஞ்சம் சொல்லுங்களேன்.

இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பனியம்தான் முதல் எதிரி. ஏகாதிபத்தியமும், பார்ப்பனியமும் இணைந்த ஒடுக்குமுறைதான் இந்தியாவின் அனைத்து சீரழிவுக்கும் காரணம்.உலகின் இரண்டாவது பெரிய இஸ்லாமிய தேசமான இந்தியாவில் இஸ்லாம் அடிப்படைவாதம் என்பது ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளின் பாபர் மசுதி இடிப்பு, இனப் படுகொலைகளுக்குப் பிறகே காலூன்றியது. எனவே வெறூம் வாய்ப் பேச்சுகளில் அல்லாமல் உறுதியான தரவுகளின் அடிப்படையில் உங்கள் தரப்பு கருத்துக்களை முன் வைப்பது நலம்.

//You don’t worry about global danger but only about local one? I request you to worry about it too.//

எது கோயிலை கொள்ளையடிப்பதா? அதை நாங்கள் கம்யூனிஸ்டுகள் செய்வோம் எனும் போது நீங்கள் சொல்வது ஒரு வேளை உண்மையென்றால் இஸ்லாம் எங்களுடன் போட்டியில்தான் இருக்கும். எனவே அது பற்றி கவலையில்லை எமக்கு. மேலும் கோயிலை வரலாற்றில் கொள்ளையடித்தது பற்றி கவலைப்படும் நடுநிலையாளர் யுனிவர்படி, வரலாறு நெடுகிலும், இன்றும் கூட கோயிலின் பெயரால் கோயிலையும், மக்களையும் கொள்ளையடிக்கும் கும்பலை கண்டுகொள்ளாமல் எஸ்கேப் ஆவதேன்?


//No other religion command as categorically as Muhamadism to attack and rob the believers of other religions.//

அப்படியா? உங்களது மத அறிவு என்னை வியக்க வைக்கிறது. இந்து சனதான மதம் சமணர்களுக்கும்/பொருள்முதல்வாதிகளுக்கும் சட்டப்படி பரிந்துரைக்கும் தண்டனைகள் தெரியுமா உங்களுக்கு. கூகிள் செய்தால் கூட கிடைக்கும். கழுதை விட்டையில் முன் விட்டை பின் விட்டை நன்மை பற்றி நிரூபிக்க விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு கழுதை விட்டையில் விருப்பமில்லை வேறெங்காவது விற்றால் போனியாகும்.

//
Sure. Will try to get it and read. Please read M.A.Khan’s book.//

இந்தியாவில் அடிமை முறை பற்றிய உங்களது அறியாமையை போக்க ஆ. சிவசுப்பிரமணீய்ன் புத்தகத்தை விவரங்களுக்கு படிக்கச் சொன்னேன். இஸ்லாமிய மதத்தின் பெயரிலான ஒடுக்குமூறைகளைப் பற்றி எனக்கு மாற்றுக் கருத்து எதுவும் இல்லையே? கண் முன் அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்தியாவில் ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதமும் நடத்தும் அயோக்கியட்தனத்தை எதிர்க்க துப்பில்லாதவர்கள் இஸ்லாம் ஜிஹாத் என்று சூ கிளப்பும் மர்மம் என்ன? அது வேறொன்றும் இல்லை, காவி டவுசர் வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயம்தான்..

said...

ஆடிமாதத்தில் ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டில் பூவாடைக்காரி கும்பிடுவார்கள். இதற்கு என்ன மீனிங் என்று புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன். நன்றி தோழர்.

said...

//காவி டவுசர் வெளியே தெரிந்துவிடுமோ என்ற பயம்தான்.. //

Inspite of me having said in my first comment itself that i am not a 'kaavi

trouser', you have not resisted to evoke it.I did not expect it from you.

Can't a person hate muhamadism as well as paarpanism? I am atheist/agnostic.

//நீங்கள்தான் நியூட்ரல் என்று உள்ளதாக கற்பனையில் இருப்பது போல தெரிகிறது. //

I didnt even imply it. I said muhamadism to be more dangerous than

paarpanism.

//என்னவகையான டேஞ்சர் கொஞ்சம் சொல்லுங்களேன்.//

I will, in subsequent comments. I need some time.

//இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பனியம்தான் முதல் எதிரி.//

I agree. But not very long. Soon Muhamadism will show its original colors of

the yore.

//ஏகாதிபத்தியமும், பார்ப்பனியமும் இணைந்த ஒடுக்குமுறைதான் இந்தியாவின் அனைத்து சீரழிவுக்கும் காரணம்.//

I also add that Muhamadism also has a part in it as it had power over India

for over 1000 years and it came before ஏகாதிபத்தியம்.

//இந்தியாவில் இஸ்லாம் அடிப்படைவாதம் என்பது ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளின் பாபர் மசுதி இடிப்பு,

இனப் படுகொலைகளுக்குப் பிறகே காலூன்றியது. எனவே வெறூம் வாய்ப் பேச்சுகளில் அல்லாமல் உறுதியான

தரவுகளின் அடிப்படையில் உங்கள் தரப்பு கருத்துக்களை முன் வைப்பது நலம்.//

I disagree. Muhamadist terrorism originated from its founder Muhamad himself.

Moplah riots, nao-khali riots, etc came well before Babri masjid. Lets

discuss these things in coming weeks.

//எது கோயிலை கொள்ளையடிப்பதா? // & //கோயிலை வரலாற்றில் கொள்ளையடித்தது பற்றி கவலைப்படும் //

I meant the all the laws of Muhamadism as the global danger, not just the law

on robbing.

//அதை நாங்கள் கம்யூனிஸ்டுகள் செய்வோம் //

I think that Robbing (of places of cults) is not a right word for a communist

to use. Recovery is the right word. Though there are not much of high value

materials, we can recover some covered spaces for public use with some

alteration. In the process, We can also recover some amount of stones,

rubble, metals of shine and rust, timber, wood, etc for reuse.

//சனதான மதம் சமணர்களுக்கும்/பொருள்முதல்வாதிகளுக்கும் சட்டப்படி பரிந்துரைக்கும் தண்டனைகள் தெரியுமா //

I don't know. From which religious book you have got this info? Is it read

and refered by all the paarpanists? Is it available in the houses of all the

paarpanists?

//அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்தியாவில் ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதமும் நடத்தும் அயோக்கியட்தனத்தை

எதிர்க்க துப்பில்லாதவர்கள் இஸ்லாம் ஜிஹாத் என்று சூ கிளப்பும் மர்மம் என்ன? //

In this post, you speak about only the atrocities of some indian rulers while

ridiculing the facts on Muhamadist rulers' atrocities. I have pointed about

this glaring omission of yours in my starting comment. For this i don't have

to talk about American hegemony, RSS, etc which are also the things I oppose.

said...

//In this post, you speak about only the atrocities of some indian rulers while

ridiculing the facts on Muhamadist rulers' atrocities. I have pointed about

this glaring omission of yours in my starting comment. // யுனிவர்படி பதிவை எதற்கும் ஒருமுறை படித்துவிடுங்கள் பதிவின் நோக்கமே இந்து மன்னர்களின் கொடுமைகள் ஒமிசன் ஆவதை பற்றித்தானே ஒழிய முஸ்லீம் மன்னர்கள் புனிதர்கள் என்று சொல்ல அல்ல. பதிவின் கருத்தை தலைகீழாக புரிந்து கொண்டால் நான் என்ன செய்வது?

said...

Dear Asuran,

I have read the post again. I have not misunderstood it. You have written as follows in the very beginning itself.

//ஆந்திர தேசத்து தெலுங்கு சாதியினர் பலர் முஸ்லீம் அரசர்களின் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட அடக்குமுறைகளுக்கு தப்பிப் பிழைத்து அலை அலையாக தமிழகம் வந்தது பற்றி கி ராஜநாரயணன் நாவலில் ஒரு விவரிப்பு உண்டு. இதே போன்று பொதுவில் முஸ்லீம் அரசுகள் இந்தியாவில் பாலியல் அத்துமீறல்கள், கொடுமைகள், கோயில்கள் மீது தாக்குதல், 'இந்து'க்கள் மீது ஒடுக்குமுறை செய்தது குறித்து பொதுபுத்தி ஒன்று உருவாக்கப்பட்டு பரவலாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது ஒரு வகைப்பட்ட [ஆதிக்க] சாதி அரசியல் உருவாக்கிய சமூக உளவியலே. புத்தி கெட்ட நடுத்தர வர்க்க பேமானிகளால் பராமரிக்கப்பட்டு பரப்புரை செய்யப்படுகிறது.//

This is denying & hiding & whitewashing the atrocities perpetrated by Muhamadan invaders. If you have not written this prelude, you can say “பதிவின் நோக்கமே இந்து மன்னர்களின் கொடுமைகள் ஒமிசன் ஆவதை பற்றித்தானே ஒழிய முஸ்லீம் மன்னர்கள் புனிதர்கள் என்று சொல்ல அல்ல”.

Later you have also written as “அதை விட கொடூரமாகவும் 'சாதி இந்து' அரசர்கள் செய்துள்ள” to make your wrong comparison to show.

said...

//முஸ்லீம் மன்னர்கள் புனிதர்கள்// Where is it in the post?

//This is denying & hiding & whitewashing the atrocities perpetrated by Muhamadan invaders.//

Where in the post it is denied and hide?

The misinterpretation is what addressed in the post.

Yes Cast Hindus and their Rulers did more worst things than what Muslim rulers did to this country.

said...

//பொதுவில் முஸ்லீம் அரசுகள் இந்தியாவில் பாலியல் அத்துமீறல்கள், கொடுமைகள், கோயில்கள் மீது தாக்குதல், 'இந்து'க்கள் மீது ஒடுக்குமுறை செய்தது குறித்து பொதுபுத்தி ஒன்று உருவாக்கப்பட்டு பரவலாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு வகைப்பட்ட [ஆதிக்க] சாதி அரசியல் உருவாக்கிய சமூக உளவியலே. புத்தி கெட்ட நடுத்தர வர்க்க பேமானிகளால் பராமரிக்கப்பட்டு பரப்புரை செய்யப்படுகிறது//

If the above text is not denying & hiding the Muhamadan rulers’ atrocities, what else? Explain it.

//Yes Cast Hindus and their Rulers did more worst things than what Muslim rulers did to this country//

Can you justify this statement of yours adequately?

said...

//
If the above text is not denying & hiding the Muhamadan rulers’ atrocities, what else? Explain it./ அய்யா உங்களது மொக்கை மஹா மரண மொக்கையாக உள்ளது என்பதை தெரிவித்தே தீர வேண்டியுள்ளது.

எனினும் சமூக அக்கறை கருதி மொக்கைய கொஞ்சம் விரிவாக பார்ப்போம் நான் கொடுத்துள்ள எனது கட்டுரையின் பகுதியாக நீங்கள் காட்டிய பகுதி இது "'இந்து'க்கள் மீது ஒடுக்குமுறை செய்தது குறித்து பொதுபுத்தி ஒன்று " இதில் பொதுபுத்தி என்பது எதைக் குறித்தது? கொட்டேசன்ல இருக்கே அந்த இந்துக்கள் மீது நடந்த முஸ்லீம்களின் கொடூரம் என்ற பொதுப்புத்தி. ஆனால் உண்மையில் மன்னன் என்றாலே கொடூரன் தான் இதில் இந்து முஸ்லீம் எல்லாம் பெரிய வித்தியாசமில்லை என்பதை குறிப்பதே அவ்வரிகள். இன்னும் புரியலைன்னா காஷ்மீரில் பழங்குடி அப்கானியர்கள் ஆட்சியின் போது இந்து முஸ்லீம் மக்கள் இரு பிரிவினருமே அனுபவித்த சொல்லோனாத் துயரத்தை படித்து பாருங்கள்.


//
//Yes Cast Hindus and their Rulers did more worst things than what Muslim rulers did to this country//

Can you justify this statement of yours adequately?//

இங்கே காஸ்ட் ஹிந்து என்று ஆங்கிலத்திலும், கட்டுரையில் சாதி இந்து என தமிழிலும் குறிப்பிட்டூள்ள சாதி இந்து மன்னர்களின் வர்னாஸ்ரம கொடுங்கோன்மை முஸ்லீம் மன்னர்களின் கொடுங்கோன்மைக்கு உரை போடக் காணுமா?

இதுக்கு மேல இந்த சின்னக் கட்டுரையை என்னால் போஸ்ட்மார்ட்டம் பன்ன முடியாது. நீங்க ஒரு ஓரமா உட்கார்ந்து இதில் உள்ள வரிகளை உங்கள் சிந்தாந்தத்திற்கு எட்டிய அளவில் எப்படியெல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது என்று ஆய்வு செய்து கொண்டே இருங்கள். எதிர்கால சந்ததியினர் வந்து கேட்டு தெளிவாக்கிக் கொள்ளட்டும்.

said...

You have declared my comments as மஹா மரண மொக்கை and you cannot do any more post-morteum of this small article. Actually the article may be small, but the underlying ideas are not small. I expected this discussion to last for many weeks & months.

Anyway, let's stop. Finally, I have one request. Please read the book of M.A. Khan, at least the chapters VI (Islamic Imperialism in India) and Chapter VII (Islamic Slavery). It is readily available in the net at the link i provided above.

Related Posts with Thumbnails