மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல், CPMன் தோல்வி, ரவுடியிசம், உத்தபுரம்
சமீபத்தில் நிறைவுற்ற மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்களில் CPM பெரும் சரிவை சந்தித்து உள்ளது. குறிப்பாக டாடா சலீம் கும்பலுக்கு மாமா வேலை பார்த்து மக்களை சாகடித்த சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. இந்த பகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றியடைந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரசு, சுசி(SUCI) கூட்டணி நந்திகிராம் ஜில்லா பரிஷத்துகள் 53ல் 35ல் வெற்றி பெற்றுள்ளனர். ஜில்லா பரிஷத்தை கைப்பற்றியுள்ளனர். நந்திகிராமின் கிராம் பஞ்சாயத்துக்கள் பத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சிங்கூர் பகுதியிலோ 16 கிராம் பஞ்சாயத்துக்களில் 15 திரிணாமுல் காங்கிரஸ் வென்றுள்ளது. இந்த இரண்டு இடங்களும் CPMன் கோட்டைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இருபது வருடங்களில் ஜில்லா பரிஷத் அளவில் அவர்கள் தோல்வியடைவது இதுதான் முதல் முறை.
குறிப்பாக இந்த தேர்தலில் CPM சரிவு தனது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது தெரிகிறது. மேற்கு வங்காளத்தை பொறுத்த வரை CPMன் பிடி என்பது நழுவிக் கொண்டிருப்பதைத்தான் கடந்த தேர்தல்கள் அனைத்தும் காட்டியுள்ளன. ஆனால் இந்த முறை CPMன் கோட்டை என நம்பப்படும் கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் பெரும் பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டுள்ளது. இந்த பின்னடைவு வெறுமே நந்திகிராம், சிங்கூர் பகுதிகளில் மட்மல்ல. மே.வ. முழுவதுமே அரசாங்க வெறுப்பு மனோபாவம் வெளிப்பட்டுள்ளது.
போனமுறை கிராம பஞ்சாயத்துகளில் 2303 இடங்கள் வென்றது போய் இந்த முறை 1633தான் வென்றுள்ளனர். மாறாக எதிர்கட்சியினர் 917 இடங்களிலிருந்து 1463 என்று அதிகமாகியுள்ளனர். பஞ்சாயத்து ஸமிதிகளில் போன முறை 45 இடங்கள் வென்ற எதிர் அணியினர் இந்த முறை 189 இடங்களில் வென்றுள்ளனர். CPM 284 இடங்களிலிருந்து 189ஆக சுருங்கியுள்ளனர்.
CPMன் ஜனநாயக மாண்பும், ரவுடியிசமும்:
இது ஒரு பக்கம் இருக்க, ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக் கொண்டே அத்தனை அராஜகங்களையும், ரவுடியிசங்களையும், பாசிச நடவடிக்கைகளையும் செய்யும் CPM இந்த தேர்தலிலும் கூட வழமை போல குண்டுகள் போடுவது, ஓட்டு போட வருபவர்களை மிரட்டி விரட்டுவது, வாக்கு சாவடிகளை கைப்பற்றுவது உள்ளிட்ட எல்லா தோழமை நடவடிக்கைகளையும் முயற்சி செய்தே பின்னடைவை சந்தித்துள்ளனர்.
(மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM!)
இடது முன்னணி கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளில் ஒன்றான RSPக்கும், CPMக்கும் இடையே நடந்த சண்டைகள் CPMன் புரட்சிகர நடைமுறைக்கு சாட்சியாக நிற்கிறது. குண்டுகள் வீசிக் கொண்டும் துப்பாகிகளால் தாக்கிக் கொண்டும் என்று ஜனநாயக நடைமுறைகளை செழுமையாக கடைபிடித்துள்ளனர். CPM குண்டர்கள் தாக்கியதில் 4 RSP தொண்டர்கள் பலியாகியுள்ளனர். ஏற்கனவே கல்காத்தாவில் நடந்த ஒரு SEZ எதிர்ப்பு போராட்டத்தில் பார்வார்ட் ப்ளாக் கட்சி தொண்டர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது போல பல இடங்களில் குண்டு வீச்சுகள் நடந்துள்ளன. வாக்குச் சாவடி 17, 18-ல் CPM குண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டு குண்டு வீசியதில் வாக்குச்சாவடி அலுவலர் காயமடைந்ததை ஒட்டி அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நந்திகிராமில் தேர்தலுக்கு பல நாட்கள் முன்பிருந்தே தமது அயோக்கியத்தனங்களை ஆரம்பித்து விட்டனர் காமரேடுகள். மே 10 ஆம் தேதி பூமி பாதுகாப்பு சங்கத்தினர் மீது துப்பாக்கி சுடு நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. துப்பாக்கி குண்டடி பட்டவர்கள் தம்லக் ஆஸ்பத்திரிக்கு அனுப்பட்டனர். இன்னொரு இடத்தில் CPMஆல் விரட்டியடிக்கப்பட்ட 200 வீடில்லாதவர்கள் தேர்தல் பெட்டிகளை கைப்பற்றி போராட முற்பட்டுள்ளனர்.
நந்திகிராமில் CRPFக்கும் லோக்கல் போலீசுக்கும் சண்டை. வீடுகளில் ஆயுதங்கள் ஒழித்து வைத்துள்ளனரா என்றூ தேட முனைந்த CRPFயினரை லோக்கல் போலீசு தடுத்துள்ளனர். இத்துடன் CRPF, CPM சண்டை தொலைக்காட்சிகளில் நாறியது தனிக்கதை. நந்திகிராமில் பலருடைய வாக்காளர் அடையாள அட்டைகளை பறித்துள்ளனர் CPM குண்டர்கள். புகார் கொடுத்த பிற்பாடு இரண்டு இடங்களில் வேறு அடையாள அட்டைகளை உபயோகப்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டே தேர்தல் நடந்துள்ளது.
மேவவில் தனது பாசிச நடவடிக்கைகளை - அது தொழிற்சங்க தலைவர்களை, தொழிலாளர்களை அடித்து மிரட்டுவதாகட்டும், அல்லது இது போன்ற தேர்தல் வன்முறையாகட்டும் அல்லது வெகு மக்கள் போராட்டங்களை துப்பாக்கி குண்டுகளால் ஒடுக்குவதாகட்டும் - தனது குண்டர் படை கொண்டும், அரசின் அதிகாரப்பூர்வ குண்டர் படையான போலீசின் துணை கொண்டும் நிறைவேற்றி வருகிறது CPM. இன்று வரை இந்த நடவடிக்கைகள் குறித்து எந்தவொரு வருத்தமும் தெரிவிக்கவில்லை CPM தலைமை. மாறாக மக்கள் தமக்கு விரோதமாக செல்வதாயிருந்தால் கூட மே.வவை பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கு கூட்டிக் கொடுப்பதிலிருந்து பின் வாங்க மாட்டோம் என்கிறார்கள் CPM தலைவர்கள். பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கு கோபம் வரக் கூடாது என்பதற்க்காக தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. வேறு தொழில்சங்கம் வைக்கும் முயலும் தொழிலாளர்கள் மக்கள் முன்னிலையிலேயே CPM குண்டர்களால் அடித்து நொறுக்கப்படுகிறார்கள்.
உத்தபுரமும், இரட்டை நாக்கு பாசிச CPM:
இப்படி அப்பட்டமாக ஒரு ஓட்டுக் கட்சிக்குரிய அத்தனை சீரழிவு பண்புகளையும் வெட்கமின்றி, மற்ற ஓட்டுக் கட்சிகளை விட மோசமான பாசிச முறைகளில் நடைமுறைப்படுத்தும் இந்த கட்சி பிற இடங்களில் முற்போக்கு வேடம் போட்டு ஊரை ஏமாற்றி வருகிறது. குறிப்பாக உத்தபுரம் ஆதிக்க சாதிவெறி சம்பவத்தில் CPM கட்சி மிகப் புரட்சிகர வேடம் ஏற்று சிறப்பாக நடித்து வருகிறது. உத்தபுரம் தாழ்த்தப்பட்டவர்களுக்காக CPMன் தமுஎச உறுப்பினரும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவருமான ஆதவன் தீட்சன்யா குரல் கொடுப்பார், ஆனால் அதே தமுஎசவின் மேலான்மை பொன்னுசாமி உள்ளிட்டோர் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதி வெறியர்களின் தலைவனும், தேவர் சாதி வெறியனுமான முத்துராமலிங்கனின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வர். அதுவும் பாஜகவின் திருநாவுக்கரசு தலைமையில். இப்படி பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் வேசம் கட்டி இரண்டு பக்கத்து ஓட்டுக்களையும் நக்கி தின்கும் முற்போக்கு செயல்தந்திரம்தான் உத்தபுரம் விசயத்தில் வேலை செய்கிறது. குறிப்பாக சொன்னால் இவர்களது MP தொகுதியான மதுரைக்கு அருகிலுள்ள பாப்பாபட்டி, கீரிப்பட்டி பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க முடியாமல் இருந்த பிரச்சினையில் இவர்கள் அடக்கி வாசித்ததும், இந்த உத்தபுரம் பிரச்சினையில் வீறு கொண்டு எழுந்து புரட்சி வேசம் கட்டி ஆடுவதிலும் உள்ள வேறுபாட்டை தீர்மானிப்பது வோட்டு எண்ணிக்கைதானேயன்றி வேறல்ல. ஏனேனில் பாப்பாபட்டி கீரிப்பட்டியில் ஆதிக்க சாதியினர் வோட்டு எண்ணிக்கை அதிகம் ஆனால் உத்தபுரத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் வோட்டு எண்ணிக்கை அதிகம். மற்றபடி உத்தபுர தாழ்த்தப்பட்டவர்கள் மீதான ஒடுக்குமுறை இவர்களின் போராட்டத்தை தீர்மானிக்கவில்லை. இன்றைய உத்தபுர புரட்சியாளர்கள், நாளை உத்தபுரத்தை இன்னொரு நந்திகிராமாகக் கூட மாற்றுவார்கள் என்பது வேறுகதை. உத்தபுரத்தில் பெரிய நன்னூல் போல பேசும் CPM பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் மேலான்மை பொன்னுசாமி சொன்ன கருத்துக்களுக்கு கள்ளமவுனம் சாதித்த மர்மமும் இந்த வோட்டு பொறுக்கித்தனத்தில்தான் அடங்கியுள்ளது.
அசுரன்
Related Article:
CPM government has shot killed five Forward Bloc party persons over Anti SEZ protest
SEZயை எதிர்த்த பார்வேர்ட் ப்ளாக் கட்சியினர் ஐந்து பேர் CPM அரசால் சுட்டு சாகடிக்கப்பட்டனர்
கம்யுனிஸ்டு பார்ட்டி ஆப்பு இந்தியா - CPM வெறி நாயும்! CPIயும்!
4 பின்னூட்டங்கள்:
CPM போடும் இரட்டை வேசம். தேவர் சாதி வெறியருக்கு விரட்டி விரட்டி மரியாதை செலுத்துகிறார் மார்க்ஸிஸ்ட் தலைவர்.
//
ஓய்வுக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி பசும்பொன் கிராமத்திற்குக் காரில் செல்கிறார். காலை 10 மணிக்கு தேவர் நினைவிடம் செல்லும் முதல்வர் அங்கு அஞ்சலி செலுத்துகிறார்.
பிறகு அருகில் உள்ள மைதானத்தில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார். அரசு நடத்தும் இந்த விழாவுக்கு செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தலைமை தாங்குகிறார். அமைச்சர் சுப. தங்கவேலன் முன்னிலை வகிக்கிறார்.
விழாவில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழா நினைவு கட்டடங்களைத் திறந்து வைத்து நினைவு மலரை வெளியிடுகிறார்.
இந்த விழாவில் பாமக தலைவர் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர். திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
//
&
//
முத்துராமலிங்கத் தேவரின் சொந்த ஊரான, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர், அங்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவர் நூற்றாண்டு விழா கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.
இதேபோல் இன்று பிற்பகல் பசும்பொன்னுக்குச் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜி.கே. வாசன், பாமக தலைவர் ஜி.கே. மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் என். வரதராஜன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
//
உத்தப்புரம் பிரச்சினையில் சிபிஎம்-இன் நிலைப்பாட்டைக் கண்டித்த கொடிக்கால் பிள்ளைமார் சாதியினர் போஸ்டர் ஒட்டி இருந்தார்களாம். அதில் பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்தும் முக்குலத்தோரை எதிர்க்க சிபிஎம் தயாரா? என சவால் விட்டிருந்தார்களாம்.. (ஆதாரம்.. ஸ்டாலின் ராஜாங்கத்தின் காலச்சுவடு கட்டுரை)
கொ.பிள்ளைமார் எண்ணிக்கை சிறுபான்மை என்பதாலும் மதுரையில் முக்குலத்தோரின் ஓட்டு வங்கியில் ஓட்டை விழக்கூடாது என்பதாலும் ரொம்ப பாதுகாப்பாக உத்தபுரத்தில் சுவரிடித்தும், பசும்பொன்னில் குலதெய்வம் தேவரய்யாவுக்கு மாலையிட்டும் தீவிரமாய் சாதி ஒழிப்பு செய்கிறது சிபிஎம்..
மருது
தங்களுடைய இந்த பதிவும் அதையொட்டிய பின்னூட்டங்களும் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.
'நான் ஒரு மநு விரோதன்' என்கிற பெயரில் நூல் ஒன்றை வெளியிட்டுவிட்டு அதேமேடையில் தன்னுடைய 'மநு' ஆதரவுக் கருத்தை பாரதியின் மூலமாக வெளிப்படுத்திச் சென்ற போலி வேடதாரியான 'புதுவிசை'ஆதவனையும், தமுஎசவின் பிரதிநிதியாக பாப்பாப்பட்டி, கீரிப்பட்டிக்கு 'உண்மை கண்டறியும் குழு'வின் மூலமாக சென்று, அங்குள்ள ஆதிக்க சாதிவெறியர்களின் நியாயமான உணர்வுகளுக்கு பாதம் தாங்கிய மேலான்மை பொண்ணுச்சாமியையும் தாங்கள் ஒப்பிட்டுத் திரைகிழித்திருப்பது மிகவும் சரியானது.
தோழமையுடன்,
ஏகலைவன்.
வேறு வேலை இல்லையா உங்களுக்கெல்லாம்?
Post a Comment