லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!
லால்கார், மேற்கு வங்கத்தில் உள்ள பழங்குடியினர் பகுதியாகும். இங்கு தற்போது ஈழம் அளவுக்கு இல்லாவிடிலும் அதனை ஒத்ததொரு கோடூரமானதொரு தாக்குதலை இந்திய அரசும் அதன் அல்லக்கையான CPM அரசும் மேற்கொண்டு வருகின்றன. துணை ராணுவப் படை உதவியுடன் அங்கு மக்கள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களின் போராட்டத்தை முறியடிப்பதுடன், இந்த போராட்டத்தை வழி நடத்தும் மாவோயிஸ்டு புரட்சியாளர்களை ஒழித்து கட்டவும் வேலைகள் நடந்து வருகின்றன.
""Sources say the forces want to minimize casualties and will thus move slowly.""
மேலேயுள்ள வார்த்தைகளின் அர்த்தம் அங்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களை கொன்றொழிக்கும் முடிவில் அரசு படைகள் இறங்கி விட்டன என்பதே ஆகும். இதற்கு தோதாக ஊடகங்களும் தமது வார்த்தைப் பிரயோகங்களை மாற்றிக் கொண்டுள்ளன. சில நாள் முன்பு வரை பழங்குடியின மக்கள் அரசுக்கு எதிராக போராடுவதாக எழுதி வந்த ஊடகங்கள் திடீரென்று நேற்று முதல் மாவோயிஸ்டு அராஜகம் என்று எழுதத் துவங்கியுள்ளன. ஆனால், உண்மையில் அங்கு உள்ள பழங்குடியின மக்கள் தமது வாழ்வாதார உரிமையை பறிக்கும் பன்னாட்டு-தரகு கம்பேனிகளுக்கும், அவர்களின் அல்லக்கையான CPMக்கும் எதிராக மக்கள் கமிட்டி அமைத்து போராடி வருகிறார்கள். இவர்களுக்கான அரசியல் தலைமையைத்தான் மாவோயிஸ்டுகள் வழங்கி வருகிறார்கள்.
தரகு கம்பேனியான ஜிண்டால், இரும்பு எஃகு ஆலை அமைக்க ஏதுவாக காடுகளை அழித்து, அங்குள்ள பழங்குடி மக்களை விரட்டி விட்டு 5000 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ CPM-போலி கம்யூனிஸ்டு பாசிஸ்டுகள் ஏற்பாடுகள் செய்து வருவதை எதிர்த்தே மக்கள் அங்கு போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் கடந்த ஆறேழு மாதமாகவே நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை சிதைக்க போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், நந்திகிராம பாணி CPM குண்டர் படை தாக்குதல்களையும் தொடர்ந்து ஏவி வருகிறது CPM-போலி கம்யுனிஸ்டு பாசிஸ்டு கட்சி. இதற்கு உள்ளூர் CPM காலிகளின் காட்டிக் கொடுப்பு வேறு உதவியுள்ளது.
இன்னிலையில், போலீசின் அடக்குமுறைக்கு எதிராக 600மேலான கிராமத் தலைவர்களை ஒன்று கூட்டி 'போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி''யைக் கட்டியமைத்தனர் மாவோயிஸ்டுகள். இதனைத் தொடர்ந்துதான் CPM குண்டர் படை தாக்குதல்கள் நடந்தன. சமூக பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட சி.பி.எம். ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகள் சதிகளைப் புரிந்து கொண்ட பழங்குடியின மக்கள், தாங்கள் கட்டியமைத்துள்ள ''போலீசு அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் கமிட்டி'' (கஇஅகஅ) முடிவின்படி, ஏப்ரல் 6ஆம் தேதியன்று கொல்கத்தா நகரில் ஆர்ப்பாட்ட பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் நடத்தினர். பல்வேறு மனித உரிமை ஜனநாயக உரிமைக்கான அமைப்புகளும், எழுத்தாளர்கள் பத்திரிக்கைகள் கலைஞர்கள் உள்ளிட்ட அறிவுத் துறையினரும் பங்கேற்ற இந்தப் பேரணியும் பொதுக்கூட்டமும், லால்கார் பகுதியை இன்னுமொரு நந்திகிராமமாக இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கத் துடிக்கும் போலி கம்யூனிச ஆட்சியாளர்களை மக்களிடம் திரைகிழித்துக் காட்டுவதாக அமைந்தது.
மறுகாலனியாதிக்கச் சூழலில், மக்களின் அடிப்படை வாழ்வாதரங்களை பறிக்கும் உலகமயத் திட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் எல்லாம் சீரழிக்கப்பட்டுள்ளன. ஆனால், நக்சல்பாரி புரட்சியாளர்களின் போராட்டம் மட்டுமே வெற்றி பெற்று வருகிறது. அப்படிப்பட்டதொரு போராட்டம்தான் லால்கார் போராட்டம் இதனை சிதைத்து அழித்தொழிக்க மத்திய காங்கிரசும், மாநில CPM-பாசிஸ்டுகளும், இதர பெரு ஊடகங்களும் களமிறங்கியுள்ளனர். இதனை படித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு போர் உக்கிரம் பெற்றிருக்கும்.
லால்கார் குறித்து மேலதிக தகவல்களுக்கு பின்வரும் புதிய ஜனநாயகம் கட்டுரையை படிக்கலாம்.
பின்னூட்டத்தில் தெரியப்படுத்தி சுட்டிகள் கொடுத்த தோழர் பூச்சாண்டிக்கு நன்றி
சந்தால் பழங்குடியின மக்களின் எழுச்சி: மண்டியிட்டது, சி.பி.எம்.
போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !
அசுரன்
Tribals on warpath in Lalgarh; say can work better than govt
Tribals stop paramilitary from entering Lalgarh, reinforcement rushed
Security forces begin ops to free Lalgarh from Maoists
25 பின்னூட்டங்கள்:
டைம்ஸ் நௌவில் காட்டப்படும் சலனப்படங்களின்படி:
அரிவாள், கத்தி போன்ற மரபு வழி ஆயுதங்களுடன் மக்கள் தூரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்கிறார்கள்.
வீடுகளில் உள்ளவர்கள், வயதான(80வயது இருக்கும்) கிழவி என்று பார்த்து பார்த்து அடித்து நொறுக்குகிறார்கள்.
மக்களின் பைக்குகள் உள்ளிட்ட அவர்களின் சொத்துக்க்கள் போலிசாரால் அடித்து நாசம் செய்யப்படுகின்றன.
குறைந்த அளவிலான சேதாரத்துடன்(உயிர் பலி என்று புரிந்து கொள்ளவும்) லால்கரை மீட்டு ஜிந்தால் என்ற தரகு முதலாளியின் கையில் ஒப்படைப்போம் என்று அரசு சொல்கிறது. இதே வசனங்களைத்தான் ஈழத்திலும் நாம் கேட்டோம்: "குறைந்த அளவிலான உயிர்பலி."
பிருந்தா காரத் முதலான பாசிஸ்டு பன்றிகள், ஏதோ இந்த பிரச்சினை இன்றுதான் நடப்பது போலவும், இது வரை அந்த மக்களின் குரலுக்கு செவி சாய்க்க தயாராக இருந்தது போலவும் தொலைக்காட்சியில் உளறினார். CPMன் பிமன் போசிடம் தேர்தலுக்கு முன்பு கேட்ட பொழுது அவர் சொன்னது: "அந்த(லால்கர்) 22 வாக்குச் சாவடிகளை நாங்கள் கட்டிக் கொண்டு அழத் தயாரில்லை. அவை எங்களுக்குத் தேவையில்லை" என்றார்.
ஆம், அவர்களுக்குத் தேவைப்படுவது ஜிந்தால் போன்ற தரகு முதலாளிகளின் அன்பும், கரிசனமும்தான். CPM-பாசிஸ்டுகளின் நண்பர்கள் அவர்கள்தான்.
மாவொயிஸ்டு புரட்சியாளரின் பேட்டியை திட்டமிட்டே அரைகுறையாக மொழிபெயர்ப்பது, போலீஸின் காட்டுமிராண்டித்தனங்கள் தெரியாத்தனமாக கேமாராவில் விழுந்தால் ஒரு நொடி தடுமாறி பிறகு அதனை படம் பிடிப்பது என்று தமது சேவையை மிகச் சரியாக செய்து வருகிறார்கள் ஊடகங்கள்.
அசுரன்
Report of Fact-finding Team from JNU on the Eve of Lalgarh Violence
by A Fact-finding Team of Students from Jawaharlal Nehru University, New Delhi
http://mrzine.monthlyreview.org/lalgarh180609.html
நக்சல்பாரிகளை மக்கள் பாதுகாக்கிறார்களா? அல்லது மக்களை நக்சல்பாரிகள் மனித கேடயமாக பயன்படுத்துகிறார்களா? இதோ படித்து பாருங்கள். மக்களின் கைகளில் ஆயுதமும், அரசியலும் தவழ்கிறது. அதனை தந்த நக்சல்பாரிகளை மக்கள் பாதுகாக்கிறார்கள்.
http://timesofindia.indiatimes.com/India/Forces-resume-advance-to-Lalgarh/articleshow/4675055.cms
Security forces resume advance to Lalgarh
19 Jun 2009, 1133 hrs IST, PTI
Print Email Discuss Share Save Comment Text:
PIRAKATA (WB): After foiling resistance by Maoist-backed tribals, security forces today resumed their push cautiously towards Lalgarh, a
stronghold of the ultras, sweeping the roads for mines as the agitators blew up a bridge to stall their movement.
The forces moved out from Pirakata where they had halted for the night and resumed the march towards Lalgarh, 26 km from here, in a pincer movement from Pirrakuli and Sarenda in adjacent Bankura district, a senior police officer said.
They used mine detectors to sweep the roads and forests before driving ahead in heavy vehicles from Pirrakuli, 10 km from here.
An IAF helicopter made a sortie over Lalgarh, where Maoist leaders, including a key functionary Kisanji, were believed to be holed up, dropping leaflets asking the people not to allow themselves to be used as human shields.
The tribals under the People's Committee Against Police Atrocities blocked all the roads leading to Lalgarh which has come under their control with the police having withdrawn from camps earlier fearing capture of their weapons.
Roads at Dahijuri and Dherua were dug up and trees felled to obstruct the advance by armed police and Central security forces, while a bridge over a river at Binpur was blown up, the police official said.
The security forces planned to set up base camps at Goaltore, Salboni and Jhargram, besides in Pirakata, he said.
Click here to comment on this story.
ஊடகத்துறையினரையே அடித்து விரட்டும் போலீசு, ராணுவ ஏவல் படைகள், மக்களை என்ன செய்திருப்பார்கள்?
http://stbin.msn.com/i/29/BCDA51910D755974C8A80A3A3326A.jpg
நின்று கொண்டு வசதியாக குறிபார்த்து, காட்டு விலங்குகளை வேட்டையாடுவது போல மக்களைப் பார்த்துச் சுடுகிறான் இந்த ஏவல் நாய். ஒருவேளை அந்த பக்கம் உள்ள மக்களிடம் துப்பாக்கி கூட வேண்டாம், சில கற்கள் இருந்தாலே போதும், இந்த சொறிநாய்கள் பதுங்கி மோத்திரம் பேய்ந்து விடுவார்கள்.
http://stbin.msn.com/i/33/C7DFB5C139A31AEC328BEFD9621B.jpg
இன்றைய தினமணி (20 ஜூன் 2009), லால்கார் புரட்சியின் மீது அமிலத்தைக் கக்கி உள்ளது. ஏதோ தீவிரவாதிகள் மக்களை மூளைச் சலவை செய்து தங்கள் பக்கம் ஈர்த்துக்கொண்டதாக பொய்களை அள்ளிவீசி இருக்கின்றது இந்தப் பத்திரிக்கை. மேலும் CPM அரசியல்வாதிகளின் ஏதேச்சதிகாரத்தால், தங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள அந்தப் பத்திரிகை, ஜிண்டால் நிறுவனத்தைப் பற்றியோ அவர்களுக்காகத்தான் இந்த அடக்குமுறை நடப்பது பற்றியோ மூச்சுக் கூட விடாத தினமணி, தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்க வேண்டும் என்று மட்டும் சொல்வதோடு சாமார்த்தியமாக லால்கார் மக்களின் போராட்டத்தை மூடி மறைத்து விடுகின்றது.
அறிவுடைநம்பி
http://timesofindia.indiatimes.com/articleshow/msid-4685348,prtpage-1.cms
'Scared' Lalgarh cops using youths as shields
22 Jun 2009, 0232 hrs IST, Caesar Mandal, TNN
PIRAKATA: The message from Writers' Buildings to show a human face while dealing with the warring populace in Lalgarh apparently hasn't reached the force. Why else would a section of the state armed police (SAP) — terrified of IED explosions - catch hold of local youths and force them to poke around for hidden mines and explosives?
Acts like this will trigger more calls for vengeance and lead people to doubt the sincerity of the government's attempts to pacify the tribal villagers. It also exposes the lack of preparedness of the administration.
There are just two CID bomb disposal experts stationed at Lalgarh. A second team is kept in reserve in Midnapore town to be deployed in case of 'VIP movement'. A third is cooling its heels in Kolkata. There is not a single explosives expert with police forces anywhere else in the war zone.
Ever since Friday evening's blast at Kuldiha, in which the Domkal SDPO's vehicle was hit and three policemen were injured, police have been wary of such attacks. The moment they come across any culvert, many policemen are scared to cross, fearing that Maoists might have planted an IED.
Four blasts and half a dozen gunbattles have been reported ever since forces started their march to Lalgarh. Though no policeman has died, the guerrillas have scored a psychological victory — they have sown the seeds of fear and anxiety. It's this fear that has led some policemen, who are themselves not trained to detect explosives, to force local youth to do the dangerous job for them.
Eighteen-year-old Shambhu Ghosh, Madan Mahato (20) and Shakti Ghosh (23) from Dhangori village were among the unlucky locals. They have been on the run since last Thursday when security forces entered the village searching for Maoists.
On Sunday morning, they were having breakfast at a roadside eatery, close to the Pirakata camp, when a team of policemen surrounded them. One of them asked if they were from Dhangori village.
"When we said yes, they asked us where we had been hiding for the last three days? We didn't give any answer. One of the policeman grabbed us by our collars and threatened to arrest us of we didn't work for them," Shambhu said.
The two were taken to Pirakata camp and given three-foot-long S-shaped rods (possibly taken from a construction site). They're then told to scan for any suspicious object — say, an abandoned bag or a box — lying on the roadside and use the rod to poke around and see if it triggers an explosion.
Tribals clash with cops on Naxal trail
http://timesofindia.indiatimes.com/India/Tribals-clash-with-cops-on-Naxal-trail/articleshow/4685386.cms
22 Jun 2009, 0247 hrs IST, Sukumar Mahato, TNN
BELPAHARI (W MIDNAPORE): More and more cases of clashes between security forces and tribals — some reportedly sympathisers of Maoists and the
rest innocents — are emerging as the battle of Lalgarh enters a crucial phase. On Sunday, when security forces arrested three rebel suspects — Lubu Tudu, Lodhu Singh and Dadan Hansda — they faced a hostile crowd baying for their blood.
Scores of men and women resisted the forces as they caught hold of the three. A woman, Rajari Tudu, led the village folk and attacked the BSF jawans with household knives, injuring a jawan.
The security forces are facing another trouble: at many places shopkeepers simply refuse to give them eatables citing Maoist boycott. On Sunday afternoon, security personnel from three police camps — Banspahari, Neguria, Jamtalgora in this part of Jangalmahal — beat up a shopowner, Gostha Das, in the Chakadoba Market after he refused to sell food articles to the jawans. The locals said Gostha declined them food because of a "police boycott". "The jawans then barged into his shop and started beating him," said Tarani Hansda.
This was not all. Angry jawans raided the huts. Tarachand Soren, panchayat executive of the Banspahari gram panchayat, was pulled by his collar and given a thrashing. Block Development Officer (BDO) Bhaskar Pal had to talk to the additional superintendent of police (operations) M. Murlidharan following which Soren was released.
All these ignited the simmering tension in the neighbouring villages. A large number of women came out of the huts and dared the forces on patrol near Neguria Police Camp. The police, however, claim that while the locals challenged the forces, the Maoists from the forests fired on security personnel. "The shots from fired from the forest, where Maoist run a training camp," said Manoj Verma, superintendent of police of West Midnapore.
Local leader of the People’s Committee Against Police Atrocities (PCPA) Jagannath Singh Sardar, however, rubbished the charge. "It’s an excuse to harass the locals," said Sardar.
He pointed to the plight of the ordinary villagers running for their lives, leaving their elders behind. "This is a malaria-prone zone. Many people are suffering from the fever, but there is no transport to take them to the block health centre, 36 km away. Buses have stopped plying and jeeps demand Rs 400 per patient," Sardar said.
District Congress leader Subrata Bhattacharya defends Sardar. "I don’t subscribe to the police action. Our own party activist
Kalpana Kalindi of Bardanga is a victim of police torture," Bhattacharya said.
http://news.rediff.com/interview/2009/jun/22/interview-with-convenor-of-peoples-committee-against-police-atrocities.htm
The Lalgarh crisis is far from over. Though security forces on Saturday moved into Lalgarh and took control of the police station, violence orchestrated by the Communist Party of India-Maoist and the tribal organisation People's Committee Against Police Atrocities still rocks the area.
An arrest warrant was issued against Chhatradhar Mahato, convenor of the PCAPA, on Saturday.
Yet, the tribal leader is unfazed and vows to put up a strong resistance against the central and state forces.
Mahato spoke to rediff.com's Indrani Roy Mitra on late Friday night and also on Saturday.
There is an arrest warrant against you. Would you like to comment on it?
It is but expected of the government forces. Sixty-two years have passed since India's Independence but neither the central government nor the state government did anything for the welfare of the tribals of Bengal's Jangalmahal.
Under the CPI-M's [ Images ] tenure, a group of leaders became millionaires by exploiting the tribals of the area. Therefore, while sons of the soil died of starvation, the CPI-M leaders built palaces.
Now when the tribal leaders are protesting, the central forces are either unleashing violence or planning to arrest their leaders. Great moves indeed!
However, should they arrest me, Lalgarh will be torn apart by violence, hitherto unseen and unheard of.
;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;
Are you ready for talks with the state government if you get a chance?
Of course. We have attempted to arrive at an amicable solution on several occasions in the past. Even now, we are not averse to discussions.
However, I don't expect the governments to have any intent of holding talks. They want their guns to do the talking.
You no longer belong to the Trinamool Congress and if the central and state forces manage to wipe out the PCAPA, you will lose your political identity altogether. What are your plans?
I never had any political ambition. I have always wanted to better the lives of my folks.
Till my last breath, I will try to achieve my goal. Success or failure doesn't matter. What matters to me is the work at hand.
Hypothetically speaking, if you manage to drive away the central and state forces and win, what do you plan to do for the people of Lalgarh?
We want to encourage the tribals to move ahead in life.
We would ensure that they get four square meals a day, enjoy their fundamental rights and that their children get proper education.
We would also ensure that no political party ever gets a chance to exploit the simple tribal folks of this area. We would never again let the CPI-M leaders to build mansions here by extorting from the tribals.
Photo: Dipak Chakraborty
கீழே உள்ள கட்டுரையில் தமிழகத்தில் சுரண்டும் ஜிண்டால் நிறுவனம்தான் லால்கரிலும் சுரண்ட எத்தணிக்கிறது. இதை எதிர்த்து போராடுபவர்கள் பயங்கரவாதிகளாம்...
http://poovulagu.blogspot.com/2009/06/blog-post_25.html
திருவண்ணாமலையில் ஜிண்டால் சுரங்கம் - தோண்டத் தோண்ட ஊழல்
மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகத்தால் பாதுகாக்கப்பட்ட காடுகளாக (Reserve Forest) அறிவிக்கப்பட்டுள்ள கவுத்தி மலை, வேடியப்பன் மலைப்பகுதிக்குள் சுமார் 4 லட்சம் மரங்கள் இருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த மலைப்பகுதிகளில் சுமார் 35 மில்லியன் டன் இரும்புத்தாது இருப்பதாகவும் கண்டறியப் பட்டுள்ளது.
@@@@@
India is China's second largest supplier of iron ore and exported 68.5 million tonnes to that country in 2005-06. Many of those shipments contained the famous high-quality ore (65%+ Fe content) from Bellary. As the country looks to increase annual domestic steel production from the current 38 million tonnes to 100 million tonnes by 2020, many worry that the best iron ore will have already been spent.
Unscrupulous trade:
With the cost of production at Rs.100 a tonne, the region's mine owners made a total profit estimated at Rs.3,100 crores last year. Yet government royalties have remained shockingly low, rising from Rs.24 to just Rs.27 a tonne in October 2004, well after the China boom had begun. According to the DMG, Karnataka collected Rs.80 crores in royalties in 2004-05, less than 2 per cent of what the ore was worth in the market.
@@@@
Mining frenzy
in Bellary
http://www.hinduonnet.com/fline/fl2311/stories/20060616002104300.htm
The terrible consequences of uncontrolled iron ore mining in Bellary district prompt a demand for its curtailment.
Mines of scandal
http://thehindu.com/fline/fl2603/stories/20090213260304000.htm
VIKHAR AHMED SAYEED
in Bangalore
The Karnataka Lokayukta’s report emphasises that illegal mining has caused severe loss to the State exchequer.
53 மார்க்சிஸ்டுகளை இந்த மாவோயிஸ்டுகள்... மன்னிக்கவும்... இந்த மம்தாயிஸ்டுகள் கொன்றொழித்திருக்கிறார்கள் என்பதையும், மாவோயிஸ்டுகளுக்கு ஆத்திரமூட்டும் அளவிற்கு லால்கர் பகுதி அடங்கியுள்ள மக்களவைத் தொகுதியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதையும் குறிப்பிட்டிருந்தால் நேர்மையாக இருந்திருக்கும்.
ஓஹோ மாவொயிஸ்டுகள் இதெல்லாம் செஞ்சா நீங்க ஜிண்டால் எனும் தரகு முதலாளிக்கு கூட்டி கொடுப்பது நியாயம் ஆகிவிடுமோ? சூப்பர் மார்க்ஸியம்....
நிற்க, போலிசுக்கு எதிரான மக்கள் கமிட்டியின் பேரணியில் புகுந்து தாக்கி சிலரை கொன்றது, லால்கர் பகுதியில் ஆயுதம் தாங்கிய மார்க்ஸிஸ்டு குண்டர்கள் தாக்குதல் தொடர்ந்து தொடுத்தது, போலீசுக்கார்களின் தொடர் அட்டுழீயங்கள், நந்திகிராம் பாணியில் புல்லட் மார்க்ஸிஸ்ட் கூலிப்படையினரை இறக்கி வெறியாட்டம் போட்டது. இவையெல்லாம் எந்த கணக்கில் வரும்?
லால்கர் என்பது ஜக்ரம் தொகுதியில் உள்ள ஒரு செக்மெண்டில் உள்ள ஒரு பகுதி அவ்வளவுதான். மேலும் ஓட்டு அரசியல்தான் ஒரு பிரச்சினை குறித்த மக்களின் மனோநிலையை பிரதிபலிக்கிறது எனில், ஈழப் பிரச்சினையில் மக்கள் ராஜபக்சே பக்கம் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டி வரும்.
சிபிஎம் பாசிஸ்டுகள் அப்படித்தான் சொல்வார்கள் என்பது வேறு விசயம்.
இன்னொரு பக்கம் நந்திகிராமில் அப்பட்டமாகவே பல பொய்களை சொல்லி வெட்கமில்லாமல் மாட்டிக் கொண்ட சிபிஎம் கும்பல் லால்கரிலும் அது போல பல பொய்களை சொல்லி வருகிறார்கள். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள 50 சொச்சம் சிபிஎம் லால்கர்இழவுகளுக்கு என்ன ஆதாரம் என்று தெரியவில்லை.
மேலும், லால்கர் பகுதியில் ரோடு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மக்கள் போராட்ட கமிட்டி செய்துள்ள நிலையில் சிபிஎம் கும்பல் இப்படி பொய் சொல்லித் திரிகிறது.
இது ஒரு பக்கம் இருக்க உண்மையில் லால்கரில் தேர்தல் எப்படி நடந்தது?
இதோ செய்தி:
http://ibnlive.in.com/news/lalgarh-poll-boycott-a-slap-on-buddhas-face/91554-37.html
Lalgarh (West Bengal): In a major worry for West Bengal's Left Front government in West Bengal, the voter turnout was a pathetic 0.45 per cent in the tribal belt of Lalgarh in Jhargram constituency due to a near total boycott by the residents of the area.
At the polling booths in the tribal-dominated Lalgarh area of West Midnapur out of 11,000 voters only 50 turned up.
மொத்தமே 0.45% ஓட்டுதான் லால்கரில் பதிவாகியிருக்கிறது. இத வைச்சிக்கிட்டுதான் மக்கள் எங்கள் பக்கம்னு கத விட்டுக்கிட்டு திரிகிறார்கள் இந்த போலி கம்யுனிஸ்டு பாசிஸ்டுகள்.
இதுக்கு வலதுசாரி (அல்லது லிபரல் வலதுசாரி) பிரவீன் சாமியின் ஆதரவு வேறு.... நல்ல கூட்டணி...
சிபிஐ தலைவர் பரதன் சிபிஎம் காலை வாரி விட்டிருக்கிறார். சமீபத்தில் மேற்கு வங்கம் சென்று வந்த தா. பாண்டியன், அங்கு திமுகவைவிட மோசமான அராஜக-குண்டா ராஜ்யத்தை சிபிஎம் நடத்துவதாக சொல்லி வருகிறார் என்று கேள்வி....
http://www.hindu.com/2009/06/29/stories/2009062959371000.htm
Bardhan blames West Bengal government for Lalgarh violence
NEW DELHI: Criticising the Communist Party of India (Marxist) for the Maoist violence in Lalgarh, CPI general secretary A.B. Bardhan has blamed the Left Front government in West Bengal for failing to do anything for the masses, especially tribals, after the agrarian reforms.
Mr. Bardhan said his party was not consulted on administration, describing this attitude as one of the “failings” of the CPI (M)-led government, which he said was run like a single-party dispensation. “Incompetence is a very harsh word. But I must say an element of neglect...an element of not undertaking the actual work they should have done, especially in areas inhabited by the tribal people. There is a need for paying special attention to the tribal people…,” Mr. Bardhan said.
Though the Left Front government had undertaken agrarian reforms, it did not do more, he said. “About 75 per cent of the tribal people are beneficiaries of the agrarian reforms. Beyond that, you have to do something more.”
“They neglected it. Yes, I will say so...particularly it has been aggravated in the last 10 years,” Mr. Bardhan told Karan Thapar on the Devil’s Advocate show on CNN-IBN, answering a question whether the government’s “incompetence” was behind the Lalgarh violence.
Asked why he did not talk up to the government, he said: “No. At that time, there was no question of my giving any advice. In fact, the government was being run as a one-party government, more or less.”
He also attributed the Trinamool Congress’ success in the elections to the “failings” of the government.
He alleged that Trinamool leader Mamata Banerjee was willing to join hands with the Maoists, and the Maoists were willing to help her.
Mr. Bardhan called for some corrective measures. “There has to be a post-mortem, and there has to be a cure.” — PTI
Pls also see :
http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2009062659761000.htm&date=2009/06/26/&prd=th&
Lalgarh: is it liberated or ruled by fear?
Praveen Swami
Is the violence in West Medinipur district really an adivasi uprising?
——————————————————————————–
Land reform has given adivasis a high level of freedom and security
Poll results in the area showed no resentment against CPI(M)
http://poar-parai.blogspot.com/2009/06/blog-post.html#comment-738696195292302088
//அரிவாள், கத்தி போன்ற மரபு வழி ஆயுதங்களுடன் மக்கள் தூரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்கிறார்கள்.
வீடுகளில் உள்ளவர்கள், வயதான(80வயது இருக்கும்) கிழவி என்று பார்த்து பார்த்து அடித்து நொறுக்குகிறார்கள்.//
மேல இருக்குறவங்கள்ளாம் மாவோயிஸ்டுகள், அதியமான் மற்றும் பிரவீன் சாமி அகராதிப்படி....
http://epw.in/epw/uploads/articles/13653.pdf
"""
Not only opposing political parties, the
CPI(M) has also targeted anyone who has
dared to show dissent against their corrupt
practices, misappropriation of funds
and non-implementation of government
schemes.
""""
நெஞ்சிலிருந்து நீங்கிய நெருஞ்சி முள்
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9219:2010-06-04-05-42-52&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139
கு.பால்ராஜ் வெள்ளி, 04 ஜூன் 2010 11:06
சிபிஐ(எம்) தலைவர்களுக்கல்ல… ஊழியர்களுக்கே
(சிபிஐ(எம்) கட்சியிலிருந்து விலகிய தோழர் கு.பால்ராஜ் அவர்களின் திறந்த மடல்)
கடந்த 10 வருடங்களாகக் கட்சியின் திருவில்லிப்புத்தூர் நகர்க் குழு உறுப்பினராகவும் தமுஎகசவின் மாவட்டக் குழு உறுப்பினராகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து எனக்கிருந்த எல்லா வாய்ப்புகளையும் கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திய நான் தற்பொழுது வேறு வழியின்றி உள்கட்சிப் போராட்டத்தை நடத்த இயலாது கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். என்னுடைய இந்த விலகல் முடிவைக் கட்சி என்னை நீக்கி விட்டதாகப் பரப்புரை செய்வதை நான் மறுக்கிறேன். என்னைக் கட்சியிலிருந்து நீக்கியதாகத் தோழர்களிடம் தவறான செய்தி கொண்டு செல்லப்படுவதால், சமூக மாற்றத்தை விரும்பி தம் சொந்த நலன்களை மறுத்து, உழைப்பாளி மக்களுக்காய்க் கட்சிக்குள் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களிடம் அரசியல் ரிதியாக உரையாட இக்கடிதம் ஒரு பொதுவெளியை உருவாக்கும் என்னும் நம்பிக்கையில் இதை நான் எழுதுகிறேன்.
paulraj_300மேலும் என்னுடைய சொந்தக் காரணங்களுக்காக அல்லாமல், அரசியல் ரிதியான காரணங்களுக்காகவே கட்சியிலிருந்து வெளியேறுகிறேன் என்றும், தொடர்ந்து அநீதி, சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்க்கவும், உழைப்பாளி மக்களின் அரசியல் அதிகாரத்தை உருவாக்கவும் பாடுபடுவேன் என்றும. எனவே நான் கட்சியிலிருந்து விலகியது என்னுடைய சொந்தக் காரணங்களுக்காக அல்ல என்றும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியல் காரணங்கள்
ஈழ விடுதலையை எதிர்ப்பதும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி உரிமையுடைய மாநிலமாகத் தமிழர்கள் பகுதியை இலங்கை அரசு அங்கீகரிப்பதும் என்ற கட்சியின் நிலைப்பாடு அரசியல் அடிப்படையற்றது.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்னும் தீர்வை கட்சி முன்வைப்பதன் மூலம் இன்றைய இலங்கைக்குள் தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது என்பதைக் கட்சி ஒத்துக் கொள்கிறது. மேலும் கட்சி சொல்கின்ற தீர்வை எடுக்கும் நிலையில் உள்ள இலங்கை அரசு மாநில சுயாட்சி கொடுப்பதற்காவது ஒத்துக் கொள்ளுமா? புலிகள் இயக்கம்தான் பிரச்சனை என்றால் மே17 இனப்படுகொலை மற்றும் புலிகள் இயக்கத்தின் தற்போதைய பின்னடைவுக்குப் பின் கட்சி சொல்கிற அரசியல் தீர்வை உருவாக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த யாருமில்லை. இதுகாறும் நாம் சொல்லி வந்த அரசியல் தீர்வு என்ன ஆயிற்று? ஈழப் படு கொலைக்குப் பின் முள்வேலி முகாமுக்குள் அடைபட்டுக் கிடக்கின்ற ஈழத் தமிழர்களுக்கு அறிக்கைகள் மட்டும் போதுமா?
மேலும் இலங்கையில் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே ஏதோ “சாதிச் சண்டை” நடப்பதைப் போலவும், சிங்கள, தமிழர்களிடையே பிரிவினைவாதக் குழுக்கள் இயங்குவதைப் போலவும் இலங்கை அரசு நடுநிலையாக இருப்பது போலவும் பாசாங்கு செய்வதும், அதையே அணிகளுக்குச் சொல்வதும் சகிக்க முடியாதவை. அங்கு நடப்பது அரச பயங்கரவாதம். ஓர் இனப் படுகொலையை அரசே தலைமையேற்று நடத்தும் போது தனது சொந்த நாட்டுக் குடிமக்களுக்கு எதிராகத் தனது இராணு வத்தைப் பீரங்கிகளைப் பயன்படுத்தும் போது இன ரிதியாக ஒடுக்கப்பட்ட அம்மக்களை ஒடுக்கும் அரசிடம் பிச்சை கேட்கச் சொல்வது எவ்வகையான அரசியல்?
சிங்களப் பகுதிக்குள் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் இனவாத அரசியலை முன்னெடுக்கும் போது அரசியல் ரிதியான தீர்வுக்கு ஏதாவது வழியுண்டா?
மேலும் இலங்கை என்ற நாட்டின் இறையாண்மைக்குள் தலையிடுவது சரியல்ல என்ற வாதம் அரசியல் ரிதியானதல்ல. மற்ற நாடுகளின் இறையாண்மைக்குள் தலையிடுவது இல்லை என்ற முடிவை கட்சி வாதமாக வைத்தால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்ற வாதத்தை ஏன் கட்சி முன் வைக்கிறது? இந்திய அரசு தெற்காசிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு கட்சிக்கு இருக்கிறது. ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்க இந்திய அமைதிப் படையை அனுப்புவதும், தற்பொழுது நடந்த இனப் படுகொலைக்கு இந்தியா இராணுவ ரிதியாக உதவி செய்வதும் மற்ற நாடுகளின் இறையாண்மைக்குள் தலையிடுவது ஆகாதா? இந்தியாவின் உதவி, சோனியாவின் தந்திரம், இந்திய உளவுப் படையின் சதி ஆகியவற்றைக் கட்சியால் மறுக்க முடியுமா?
ஆயுதப் போராட்டம் என்றால் கட்சிக்கு ஏன் இந்த அலர்ஜி? நம்மால் முடியாததை வேறு யாரும் செய்யக் கூடாதா? உலகப் புரட்சிகள் எங்காவது ஆயுதமின்றி நிறைவு பெற்றுள்ளனவா? புரட்சியைக் கைவிடுவதானால் ஆயுதத் கைவிடலாம்.
மேலும் போரில் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்ற வாதம் தவறானதா? மேலும் ஈழ விடுதலைப் போராட்டம் நேரடியாக ஆயுதப் போராட்டத்தில் துவங்க வில்லை. அமைதி வழியில் நடந்த எல்லாப் போராட்டங்களும் சிங்கள பௌத்தப் போpனவாத அரசால் அங்கீகரிக்கப் படவில்லை. ஒடுக்குபவன் ஒடுக்குவதற்கு வன்முறையைப் பயன்படுத்தும் போது ஒடுக்கப்படுபவன் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள வேண்டுமா? மனிதனாலோ, எந்த உயிரினத்தாலோ வன்முறையை எதிhப்பின்றித் தாங்க முடியுமா? வன்முறையை எதிர்ப்பது வன்முறையாகுமா? கோழி தன் குஞ்சைக் காப்பாற்றப் பருந்தோடு நடத்தும் போராட்டம் பருந்தின் வன்முறையோடு ஒப்பிடக் கூடியதா?
சிங்கள இலங்கை அரசின் வன்முறையைக் காட்டிலும் விடுதலைப்புலிகளின் போராட்டமே வன்முறை மிகுந்தது என கட்சி அணிகளுக்குப் பயிற்சி கொடுத்திருப்பது எந்த வகையில் மார்க்சிய அணுகுமுறை ஆகும்?
வர்க்கப் போராட்டத்தைத் தவிர கட்சி வேறு போராட்டங்களை நடத்தாமல் இருக்கிறதா? இன்றைய கட்சித் திட்டம் மக்கள் ஜனநாயக புரட்சியைத் தான் முன் மொழிகிறது. ஜனநாயகம், சோஷலிசம் என்பது தானே போராட்டப் படிநிலை? ஜனநாயகம் மறுத்த சிங்கள பௌத்தப் போpனவாத அரசிடம் முதலில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடுவது தவறாகுமா? யூதர்களை ஜெர்மனியில் ஹிட்லர் ஒழித்த போது அதை எதிர்க்க முதலாளித்துவ நாடுகளுடன் சோவியத் கூட்டு வைத்த வரலாற்றை மறுக்க முடியுமா?
இக்கவிதையின் பொருள் புரிந்த யாருக்கும் அதன் அறம் விளங்கும்.
கரிகாலனின் கவிதை
பூக்களைத் தூவுவதைப் போல்
பள்ளி செல்லும் உங்கள் குழந்தைகள் மீது
சொந்த ராணுவம் குண்டுகளை வீசினால்
உங்கள் சுவாசக் காற்றை உறிஞ்சும்
ரசாயனக் குண்டுகளை
அரசாங்கம் வீதியெங்கும் தௌpத்தால்
ராணுவச் சிப்பாய்களால்
குழுபலாத்காரம் செய்யப்பட்டு
பூப்புச் சடங்கு முடியு முன்னரே
உங்கள் மகள் பைத்தியமானால்
உங்கள் சகோதரியின் பிடுங்கிய விழிகள்
பூட்சு கால்களால் நசுக்கப்பட்டால்
ஒரே ஆண்மகனின் பிறப்புறுப்பை நசுக்கி
உங்கள் வம்சம் அழிக்கப்பட்டால்
உங்கள் நிலத்தை, இல்லத்தை
உறவை, மொழியை அபகரித்து
உங்கள் தேசம் உங்களை அகதியாக்கினால்
நண்பர்களே நீங்களென்ன செய்வீர்கள்
உங்கள் ராணுவம்
உங்கள் அரசாங்கம்
உங்கள் தேசம்
அதன் இறையாண்மை
எல்லாம் வெடித்துச் சிதறும்படி
ஒரு மனித வெடிகுண்டாக மாறுவீர்கள்தானே
அப்போது அரசாங்கம்
உங்களை பயங்கரவாதிஎனச் சுட்டக்கூடும்
கவிஞன் யானோ மாவீரனென்பேன்.
ஈழத்தை ஆதரித்தால் தமிழகத்தில் இனவாதம் தலைதூக்கும் என்ற வாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒடுக்கப்படும் இனத்திற்காகக் குரல் கொடுப்பது இன விடுதலையை முன்வைத்தே என்பதை மறைத்து, அது பிற இனங்களை ஒடுக்கத்தான்என்பதும், மனிதனின் அகமனத் திலிருந்து மொழியை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அடையாளங்களை அழிப்பதைத் தடுக்க எடுக்கும் முயற்சிகளை மேற்கட்டுமானம் என்ற ஒற்றைச் சொல்லிற்குள் புதைத்து விடுவதும் மார்க்சியத்தை வளரும் அறிவியலாக மாற்றவோ, மேலும் வளர்த்தெடுக்கவோ எவ்விதத்திலும் உதவாது. (19 ஆம் நூற்றாண்டின் மையத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாய் விளைந்த முதலாளித்துவத்தின் அசமத்துவ வளர்ச்சியினால் பெரும்பான்மை உழைக்கும் வர்க்கமான தொழிலாளர்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த போது, முதலாளித்துவ வளர்ச்சியின் அடிப்படை விதியான சுரண்டலை, உபரி மதிப்பைத் தன் மூலதனம் என்ற நு}லில் வெளிப்படுத்தி, முதலாளித் துவத்தின் உயிர்த்தலத்தில் ஓங்கி உதைத்தார் மார்க்ஸ். உழைக்கும் வர்க்கத்திற்கு அமைப்பு வேண்டும் என்ற அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சியையும், கட்சிக்கு ஒரு திட்டத்தையும் முன்வைத்து பாட்டாளி வர்க்க அரசியலை வளர்த்தெடுத்தார். ஆனால், மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ் வரையறை செய்தது போலல்லாமல் முதலாளித்துவ முரண் முற்றாத கொடுங்கோல் ஜார்மன்னனின் ஆட்சியில் கடும் ஒடுக்குமுறையைச் சந்தித்த தொழிலாளிகள் விவசாயிகள் சார்பாக ருஷ்யப் புரட்சியை லெனின் நடத்தி முடித்தார்.)
கடந்த 30 வருடங்களாக மாறாத முடிவை ஈழபிரச்சனையில் கட்சி வைத்திருப்பதாகச் சொல்வது இயங்கியலாகுமா? இனம், மொழி, தேசிய சுயநிர்ணயம், ஜனநாயகம், உள்கட்சிப் போராட்டம், தேசம், தேசியம், சோஷலிசம், கம்யூனிசம், ரஷ்யா, சீனா, வியட்நாம், கியூபாப் புரட்சி என ஏதாவது கட்சி அணிகளுக்கு வகுப்பு உண்டா? இந்த வகையான வகுப்புகளை எடுத்தால் கட்சி ஊழியர்கள் புரட்சிகர அரசியலின் பகுதியாகத் தங்களை மாற்றிக் கொள்ள இயலும். ஊழியர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக அல்லது பொறுப்புள்ளவர்களாகத் தலைவர்கள் இருப்பார்கள். அப்பொழுது ஊழியன் கேள்வி கேட்பான் எனத் தலைவர்கள் தங்கள் அறிவை விரிவு செய்யவும் முயற்சிப்பார்கள். அன்றாடப் பணி செய்யும் அரசியல் சடங்குகளை நிறைவேற்றும் இயந்திரகதியான ஒரே வகைமாதிரியான வேலைமுறைகளுக்கு ஊழியர்கள் பழக்கப்படுவதால் உள்கட்சியில் ஜனநாயகம் என்பதும், உள்கட்சியில் விவாதம் என்பதும் பெயரளவிற்குக் கூட இல்லை. இந்நிலையில்தான் ஈழம் குறித்த வரலாறு, கட்சியின் நிலைப்பாடு இரண்டையும் குறித்து 'சிறப்பு அறிவு மண்டலங்கள்' என கருதப்படும் மேல் கமிட்டிகளின் முடிவைக் கட்சி திணிக்கும்போது என் போன்ற ஊழியர்களுக்கும, சமூக மாற்றம் மற்றும் புரட்சியின் மீது நம்பிக்கையுடையோருக்கும் கட்சியின் மீது நம்பிக்கையில்லாமல் போகிறது.
இதற்காகக் கட்சியை விட்டு வெளியேறலாமா? கம்யூனிஸ்ட் கட்சிகளின் எல்லாத் தளங்களிலும் இயங்கும் குழுக்களின் வேலையை ஆய்வு செய்வதும் அதன் மீது முடிவெடுப்பதும் இல்லாத போது ஆய்வின்றி, விளக்கமின்றி, விவாதமின்றி எடுக்கப்படும் முடிவுகள் இதுபோன்றே முரட்டுத்தனமாக, தான்தோன்றித்தனமாக இருக்கும். எனவே தமிழின மக்கள் இவ்வளவு அடக்குமுறைகளையும் சந்தித்த பின்பும், அரச பயங்கரவாதத்தைச் சந்தித்த பின்பும் அமைதி வழியில் போராட வேண்டும் என்று சொல்பவர்களை கம்யூனிஸ்ட்கள் என்று சொல்ல முடியுமா? காரண காரியத் தொடர்புகள் அற்ற சிந்தனை முறை பகுத்தறிவுக்கு ஆகாது.
கட்சிக்கு வெளியிலிருப்பவர்கள் கட்சியைக் குறித்து கேள்வி எழுப்பினால் அது உள்கட்சி பிரச்சனை என சொல்வதும், அவர்கள் கேட்பதில் உள்ள உண்மைகளை ஆய்வு செய்யாமல் கட்சிக்கு எதிராக அவதூறு செய்கிறார்கள் எனச் சொல்வதும் கட்சிக்குப் பயன்படாது. கட்சி தன்னுடைய நிதிக்காக மக்களைத்தான் சார்ந்திருக்கிறது. கட்சி அவர்களிடம் கொள்கைகளை பரப்புரை செய்யும் போது பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் அதற்கு உண்டு. கட்சியை விமர்சிக்க அனுமதிக்காத போது, மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள மறுக்கும் போது அது ஒரு வகையான 'மதத்தன்மை' உடையதாக மாறிப் போகிறது. (கட்சி கடைபிடிப்பது ஜனநாயக மத்தியத்துவம் அல்ல, மத்தியத்துவ ஜனநாயகம்).
ஜனநாயக மத்தியத்துவம் என்பது ஒவ்வொரு குழுவிலும் குழு உறுப்பினர்கள் விவாதித்து, பெரும்பான்மை முடிவுக்குச் சிறுபான்மை கட்டுப்படுவதாகும். மேலும் சிறுபான்மைக் கருத்துடையோர் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை வைத்துக் கொள்ளவும் அதைப் பரப்புரை செய்து பெரும்பான்மைக் கருத்தாக மாற்றவும் உரிமை உண்டு. ஆனால் கட்சிக்குள் நடப்பது மேல் கமிட்டி முடிவுகளை அமல்படுத்துவது மட்டுமே. தற்பொழுது கட்சிக்குள் இருப்பது உள்கட்சி ஜனநாயகம் ஆகாது. மத்தியப்படுத்தப்பட்ட ஜனநாயகமே அன்றி ஜனநாயக மத்தியத்துவம் ஆகாது.
கட்சித் திட்டத்திற்கு மாறாகச் செயல்படுபவர் அல்லது அதை ஏற்றுக் கொள்ளாதவர் கட்சியில் உறுப்பினராக நீடிக்க முடியாது. ஆனால் கட்சித் திட்டமே தெரியாத ஒருவர் மாவட்டக் குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினராகக் கூட இருக்க முடியும். கட்சிக்குள் துணைக் குழுவாகச் சேர்க்கப்பட்ட ஒருவர், கட்சி உறுப்பினர் பொறுப்பை அடையும் போது கட்சித் திட்டம் குறித்த கல்வி நிறைவு செய்யப்படாமல் அன்றாட அரசியல் நிகழ்வுகளின் மீது தன்னுடைய அரசியல் கருத்தைத் திட்டத்திற்கு உட்பட்டு எவ்வாறு பரப்புரை செய்ய முடியும்?
கட்சியின் திட்டப்படி மக்கள் ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தில் நம்முடைய எதிரி அணியில் பெருமுதலாளிகள் உள்ளனர். டாடா இந்தியாவின் பெருமுதலாளியாக மாட்டாரா?. இன்றைய கட்சித் திட்டம் தான் அவரை எதிரி என்கிறது. இந்தியா, மைய அரசு, பாராளுமன்ற ஜனநாயகம் இவற்றை ஒத்துக் கொண்டே கட்சி இந்த திட்டத்தை முன்வைக்கிறது. கட்சி ஆளும் மாநிலத்திலேயே எதிரி வர்க்கமான பெருமுதலாளி டாடாவுக்கு நமது வர்க்க அணியின் முன்னணிப் படையான விவசாயிகளிடம் நிலம் பறித்து எதிரிகளிடம் கையளிப்பது வர்க்க துரோகம்தான். கூடுதலாக (டாடா விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்த முயற்சிக்கவில்லை) அரசே நிலம் கையகப் படுத்தி சேவைச் செய்வது கட்சித திட்டப்படி சரியாகுமா?
சிங்கூர், நந்திக்கிராம், வால்கார் சம்பவங்களால் கட்சி உண்மையில் முதலாளித்துவக் கட்சிகளின் குணாம்ச நிலைக்குத் தாழ்ந்து விட்டது என்பதும், தோழர் டபிள்யூ. ஆர்., சோம்நாத் (எனக்குப் பெயர் தெரியாத உதாரணங்கள்) போன்ற தனிநபர் பலவீனங்களும், கேரளாவில் தோழர் அச்சுதானந்தன், பிரனாயி விஜயன் ஆகியோரிடையிலான உட்பூசல்களும் முதலாளித்துவச் சீரழிவு கலாச்சாரம் கட்சித் தோழர்களிடம் பரவி வருவதைத் தடுக்க முடியவில்லை என்பதைத தானே காட்டுகிறது?
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது போல ஒரு பிரமை உருவாக்கப்பட்டிருப்பதும், அதை வைத்தே 'வண்டி ஓட்டுவதும்' எவ்வகையில் சரியாகும்? தற்பொழுது கடந்த 10 ஆண்டுகளாகச் சிறை சென்றோர் எத்தனைப் பேர்? கட்சியின் இன்றைய தலைவர்கள் படிப்பாளிகளே. ஆனால் அவர்கள் போராட்டத் தலைமையல்ல. தலைவர்களுக்கே சிறை அனுபவம் இல்லை என்பது கட்சி ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்கிறது என்பதைத்தானே காட்டுகிறது?
மூன்று மாநில வெற்றிகள் நாட்டில் முன்னுதாரணமாக இருக்கவில்லை. கலைஞர் சொல்வதைப் போல் ஒரு ரூபாய் அரிசி, இலவச மின்சாரம், இலவச TV., சத்துணவு, ஏழை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்... இப்படி சொல்லக் கூடாது. உற்பத்தி, விநியோகம் இரண்டையும் ஆட்சிக் காலத்தில் அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதா? ஏகாதிபத்திய முதலாளித்துவச் சுரண்டலை எவ்வளவு தூரம் தவிர்த்துள்ளது? நிலஉடைமை உடைப்பு என்பதையே அளவு கோலாகக் கொள்ள வேண்டும்.
நேபாள மாவோயிஸ்ட்டுகளின் போராட்டம், புலிகளின் ஆயுதப் போராட்டம், பழங்குடி மக்களைத் திரட்டி இந்திய மாவோயிஸ்ட்டுகளின் போராட்டம் இவைகளை ஏன் கட்சி மறுக்கிறது? ஆயுதப் போராட்டம் என்பது கட்சித் திட்டத்தில் எப்போதும் இல்லை என்பதைக் கட்சி பகிரங்கமாக அறிவிக்குமா? முதலாளித்துவ அரசைத் தூக்கியெறிய அதன் ஒடுக்கும் கருவிகளின் ஆயுதமான இராணுவம், போலீஸ், துணை இராணுவப்படைகள் இவற்றை எப்படி எதிர் கொள்வது? கூலிப்படைகளான அவைகளின் குணாம்சம் காகிதப் புலி என்பதை உலகப் புரட்சிகர வரலாறு உணர்த்தி இருக்கிறது. இந்தப் பிரச்சனையில் இந்திய ஆளும் வர்க்கக் கருத்துக்களும், கம்யூனிஸ்ட்டுகளின் கருத்துக்களும் ஒன்றே போல் அமைந்திருப்பது வியப்பிலும் வியப்பு.
கட்சிக் கல்வி, சுய கல்வி இரண்டுமில்லை என்றால் ஒரு புரட்சிகர ஊழியனை உருவாக்குவது எப்படி? கட்சியின் பல தோழர்கள் பொருள் முதல்வாதம் என்பதைப் பொருளாதார முதல்வாதம் என்பதாகப் புரிந்து வைத்துள்ளனர் என்னும் செய்தி கட்சித் தலைமைக்குத் தெரியு[மா?
அளவு மாற்றம், குண மாற்றம் என்பதைச் சொல்லி மக்கள் தயாராக இல்லை எனச் சொல்வதை, குண மாற்றம் இல்லை, இதனால் அளவு மாற்றமும் இல்லை எனச் சொல்லிப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். புரட்சிகரமான அமைப்பைக் கடடியமைப்பதற்குரிய முக்கிய அடிப்படை என்ன? தோழர் ஸ்டாலின் கூறுகிறார், புரட்சிகரமான அமைப்பைக் கட்டியமைப்பதற்கான முக்கிய அடிப்படை புரட்சிகரமான ஊழியரே. புரட்சிகர ஊழியர் யார்? எவரொருவர் தனது சொந்த முன்முயற்சியில் சூழ்நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்பக் கொள்ளைகளை நடைமுறைப்படுத்தக் கூடியவராக இருக்கின்றாரோ அவரே புரட்சிகரமான ஊழியராவார். அவர் யாருடைய உதவிக்காகவும் காத்திருப்பதில்லை. இந்த ஸ்டாலின் வரையறை பொருத்தமானதாய்ப் படுகிறது. கட்சியில் அப்படிச் செயல்படுபவர் தன்னிச்சையாகச் செயல்படுபவர், கூட்டு முடிவுக்கு உட்படாதவர் என்றும் முத்திரையிடப்படுகிறது. ஊழியர்களின் திறைமையைக் கண்டுணர்ந்து கட்சி அத்திறமையை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக மட்டுப்படுத்தி சமரசவாதியாய் மாற்றி ஏனைய பிற அமைப்பில் செயல்படும் ஊழியர் நிலைக்கே மாற்றி விடுகிறது. பதவி, மேல் கீழ் பிரச்சனைகளும் மலிந்த கீழ்த்தரமான முதலாளித்துவக் குணக்கேடுகளும் நிறைந்த அமைப்பாகக் கட்சி மாறி இருக்கிறது.
கட்சி மாநாட்டு அறிக்கைகள, தீர்மானங்கள் மீது மீளாய்வு மறுபரிசீலனை, சுயவிமர்சனம் எதற்காவது வாய்ப்புண்டா? கட்சியில் பத்து வருடத்திற்கு முன்பு கமிட்டியில் எதை விவாதித்தோமோ அதைத்தான் இன்றும் விவாதிக்கிறோம். அரசியல் பயிற்சியின்மை, சூழலை உள்வாங்குவதில் திறனற்று இருப்பது போன்ற எதையும் களைவதற்கோ வளர்த்தெடுப்பதற்கோ முயற்சியேதும் இல்லை. விமர்சிப்பவன் கட்சி விரோதி, விவாதிப்பவன் தலைக்கனம் பிடித்தவன், திருத்த முடியாது, அதி தீவிரவாதி போன்ற பல முத்திரைகள்...
வெகுஜன, வர்க்க ஸ்தாபனப் பதிவுகளும் நடைமுறைகளும் அரசியலற்றும் பரிசீலனையின்றியும் நடக்கின்றன. கடந்த பத்து வருடங்களில் நடந்த உறுப்பினர் பதிவுகளுக்கும் கட்சிக்கு வந்தவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அதே வேலையைச் செய்வோர் மத்திய கமிட்டியில் பேரெடுக்க வேண்டும். சேர்த்து விட்டுப் பயிற்சி அளிக்க எண்ணிக்கையில் சிக்கனம் தேவை. ஆனால் உறுப்பினர் பதிவு குறித்து நம் ஊழியர்களிடம் இருக்கும் நம்பிக்கை மூடநம்பிக்கையே. ஒரு வருடம் ஐந்து வருடம் பத்து வருடம் இருபது வருடங்களாகப் பயனற்ற வேலைமுறை. படிப்பதற்கு நேரமில்லாமல் ஒரேமாதிரியான வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டு சலிப்பும், விரக்தியும் அடைந்து களைத்துப்போன தோழர்கள் நம்மவர்கள்.
உலகமயத்தைக் கொள்கை ரிதியாக எதிர்த்துக் கொண்டே அதை நடைமுறையில் செயல்படுத்த புறவழிச்சாலை அமைத்துக் கொடுத்துள்ளது நமது கட்சி. உண்மையில் அயல் நேரடி முதலீடு (FDI) சம்பந்தமாக மாநாட்டில் விவாதிக்காமல் தனியாக மத்தியக் குழு விவாதித்து அங்கீகாரம் அளித்ததோடு கட்சி அணிகளுக்கு உண்மையை விளக்காமல் அந்நிய முதலீட்டுக்கான சமரசத் திட்டத்தை நிறைவேற்றி மத்தியக் குழு ஒரு ஏகாதிபத்திய சேவை செய்து முடித்துள்ளது. சீனாவைப்பார் என்கிறீர்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் அரசியல் அதிகாரம் இருப்பதை மறந்து விட்டு நாம் காட்டும் வான வேடிக்கை போலியானது.
இந்திய ஆளும் வர்க்கச் சதியில் உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் வரிச் சலுகைகளும் என்பதையே நாம் பின்பற்றும் போது, இந்திய ஆளும் வர்க்கக் கருத்தியலோடு சற்றே மாறுபட்டுக் காட்டிக் கொள்ளும் கருத்துகள் மிகுந்த குழப்பம் வாய்ந்தவை.
கடைசியாக
இந்த விமர்சனங்களைக் கட்சியின் மீது வைத்திருப்பவர் கட்சியில் 10 ஆண்டு காலக் களப்பணி ஆற்றிக் கொண்டே சுய விமர்சனம், சுய கல்வி என்பதைத் தொடர்ந்து செய்தவர் என்பதை மறந்து விடாதீர்கள். கட்சியின் மீதான அவதூறு என வகைப்படுத்தி இதையும் புறக்கணிப்பதால் கட்சிக்கோ, மக்களுக்கோ எவ்விதப் பயனும் இருக்காது. என் போன்ற பலருக்குக் கட்சித் தலைமையோடு இருக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது கட்சிக்கு எவ்வகையிலும் பயனளிக்காது. இளைய தலைமுறை தொடர்ந்து தயங்காது, அஞ்சாது, எதிர்பார்ப்பில்லாது போராடும் எனச் சொல்லி நிறைவு செய்கிறேன்.
என்றும் தோழமையுடன,
கு. பால்ராஜ்
(சமூகநீதித் தமிழ்த் தேசம் மே 2010 இதழில் வெளியான கட்டுரை)
Post a Comment