TerrorisminFocus

Thursday, July 01, 2010

அஹிம்சை என்றால் துரோகம்!!

ந்தியப் பிரிவினையின் போது லட்சக்கணக்கில் மக்கள் பலி கொடுக்கப்பட்டனர்.

காரணம் பிரிட்டிஸ்க்காரனின் பிரித்தாளும் சூழ்ச்சி. ஆனால் இதே பிரிட்டிஸ்க்காரனை எதிர்த்து பிரிவினை படுகொலைக்கு சில மாதங்கள் முன்புதான் மக்கள் சாதி, மத வேறுபாடுகளை களைந்து ஒன்று திரண்டு போராடினர். காரணம் விடுதலை உணர்வு.

அந்த போராட்டத்திற்கு அச்சாரம் போட்டது மும்பை மாலுமிகள் கலகம். இந்தப் போராட்டத்தை காட்டிக் கொடுத்து கருவறுத்த 'தேசப் பிதா' காந்தியின் காங்கிரசு மற்றும் காந்தி.

தல்வார் புரட்சி எனப்படும் இந்தப் போராட்டத்தில் ஒருவேளை பிரிட்டிஷை எதிர்த்து சில ஆயிரம் பேர் செத்திருந்தாலும் அது சுதந்திரத்திலேயே முடிந்திருக்கும். மக்களின் ஒற்றுமை நிலை பெற்றிருந்திருக்கும். வரலாற்றை 'ஒருவேளை' என்று கற்பனை செய்வது ஒரு அபத்தம் எனினும் சில எளிய புரிதல்களுக்கு இது போல பார்ப்பதில் தவறில்லை.

ஆனால், சில நல்லவர்கள் சொல்கிறார்கள். கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்தது என்று. யாருடைய கத்தியின்றி? யாருடைய ரத்தமின்றி?

பிரிட்டிஷ்க்காரனின் கத்தியின்றி, பிரிட்டிஷ்க்காரனின் ரத்தமின்றி என்பதைத்தான் நல்லவர்கள் அஹிம்சை என்கிறார்கள். அதாவது பிரிட்டிஷ்க்காரனுக்கு ஹிம்சை(இம்சை) செய்யாத ஒன்றைத்தான் இவர்கள் அஹிம்சை என்று சொல்கிறார்கள்.

அப்போ பிரிவினையின் போது செத்து போன லட்சக்கணக்கானவர்கள்? அவர்கள் அடைந்த இம்சை? அது சாதரண மக்கள்தானே, அந்த உயிர்களுக்கு என்ன மதிப்பு இருந்துவிடப் போகிறது?

இதையெல்லாம் கூட்டிக் கழிச்சுப் பாத்தாக்க அஹிம்சை என்றால் துரோகம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. நல்லது மஹா ஜனங்களே துரோகத்தையும், துரோகியையும் தூக்கி வைத்து கொண்டாட இயலாது. மன்னிக்கவும்.

அசுரன்

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு : பு.ம.இ.மு

அசுரன்: காந்தி நல்லவரா? கெட்டவரா?

'ஹே ராம்' விமர்சனமும், காந்தி வாங்கிக் கொடுத்த தந்திரமும்

அஹிம்ஸை - ஒரு அபாயகரமான அதி பயங்கர வன்முறையே!

6 பின்னூட்டங்கள்:

said...

who killed those millions of people?

said...

//who killed those millions of people?//

தெரியலையே வெத்து வேட்டு நீங்களே சொல்லிருங்களேன்....

said...

what happened to the money Gandhi received from British Government for working as an agent for them??

said...

//what happened to the money Gandhi received from British Government for working as an agent for them??//

இந்த விசயம் இன்னும் புதுசா இருக்கு. நீங்களே விவரமாச் சொல்லீட்டீங்கன்னா நல்லாருக்கும்.எதுக்கும் மா.சி (மா. சிவக்குமார்)என்ன சொல்றாருன்னு கேட்டுக்கோங்க

said...

நல்ல பதிவு நன்றி

said...

நேற்று சி என் என் ஐபிஎன்ல் நக்சல்பாரிகளின் மாஸ்டர் மைண்டு என்று ஒரு 20 வயது ஜர்னலிஸ்ம் படிக்கும் இளைஞனை சட்டீஸ்கர் போலீசு அறிவித்துள்ளது குறித்து விவாதம் நடந்தது( face the nation). அருந்ததிராய் உள்ளிட்ட பல மனித உரிமையாளர்களை, எழுத்தாளர்களை இந்த மாஸ்டர் மைண்டுடன் நேரடி தொடர்புடைய மாவோயிஸ்டுக்காரர்கள் என்று சட்டீஸ்கர் போலீசு குறிப்பிட்டிருந்ததும் விவாதிக்கப்பட்டது.

அதில் அந்த ஜர்னலிஸ்ம் மாணவரும், அவரது வக்கீலும் கலந்து கொண்டனர். வக்கீல் சுலபமானதொரு கேள்வி கேட்டார். துரோகமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தியாகத் தோழர் ஆசாத் அவர்கள் இந்திய அரசியலமைப்பு என்பது பெரும்பான்மை மக்களைப் பொறுத்த வரை ஒரு கழிப்பறை காகிதம் என்று சொல்லியிருந்ததை குறிப்பிட்டு கேள்வி கேட்டார். ஒருவர் அரசியலமைப்புச் சட்டத்தை கழிப்பறை காகிதம் என்று சொன்னாலே அவரை சுட்டுக் கொல்லும் உரிமை அரசுக்கு வந்துவிடுமா என்பதுதான் கேள்வி.

அதற்கு சிபிஐயைச் சேர்ந்து ஒரு பன்னு மண்டையன் சொன்ன பதில், ‘இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு நாங்கள் உள்ளோம். அதை ஏற்றுக் கொள்ளாமல் ஒருவர் இங்கு இருப்பது அனுமதிக்க முடியாது. எப்படி இரு நிலைப்பாடுகள் ஒருங்கே இருக்க முடியும்’ என்றார். சிஎன் என் ஐபிஎன் நிகழ்ச்சியை நடத்திய ஒருங்கிணைப்பாளரே அதிர்ச்சியடைந்துவிட்டார். பல எதிர்க் கருத்துக்களும் ஒருங்கே செயல்படுவதுதான் ஜனநாயகம் என்று அவர் வலியுறுத்திச் சொல்லி சிபிஐ பன்னு மண்டையனுக்கு பல்பு கொடுத்தார். வக்கீல் இந்த இடத்தில் ஒரு விசயத்தைச் சொன்னார், இந்திய போலீசு பாசிச மயமாகி வருகிறது, அரசோ எந்த எதிர்கருத்தினைக் கண்டும் வெறுப்படையும் நிலைக்குச் சென்றுவிட்டதையே இந்த நிகழ்வு காட்டுகிறது என்றார்.

காஷ்மீர் விசயத்திலும் இதுதான் நடந்து வருகிறது. பத்திரிகைகள் இதற்கு ஒத்து ஊதுவதில் ஆச்சர்யமில்லை. மக்களிடம் இவர்களை அம்பலப்படுத்தி விரிவாக கொண்டு செலல வேண்டிய வேலை ஜனநாயகத்தை விரும்பும் அனைவரின் கடமையாக உள்ளது. காஷ்மீர் பிடிபி கட்சியினர் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு இரு நாட்கள் முன்பு அளித்திருந்த பேட்டியும் வாசிக்கத் தகுந்தது.

அசுரன்

அந்த வக்கீல் குறிப்பிட்ட இன்னொரு கருத்து, சட்டீஸ்கர் போலீசு இது போல அறிக்கை வெளியிட்டவுடன் இந்தப் பிரச்சினையை பெரிதாக்கியதற்கு காரணம் உள்ளது என்று சொன்னார் வக்கீல். அவரது சந்தேகம் என்னவென்றால், இது போல ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு சில நாட்களுக்குப் பிறகு லிங்கரமை ரகசியமாக கடத்திச் சென்று என்கௌண்டர் செய்து கொன்றுவிட்டு, மாவோயிஸ்டு முக்கியத் தளப்தி கொல்லப்பட்டார் என்று செய்தி வெளியிடும் வாய்ப்புள்ளது என்கிறார் வக்கீல்.

அசாத் விசயத்தில் அவருடன் ஒரு பக்கம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே அது இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிலையில் அவரை போட்டுத்தள்ளிய துரோகிகள்தானே பாசிதம்பரம் குமப்ல்? (கட்டுரைக்குத் தொடர்பில்லை எனினும் பதிவு செய்ய வேண்டிய அவசியமுள்ளதால் இங்கு பதிகிறேன்)

Related Posts with Thumbnails