TerrorisminFocus

Friday, November 17, 2006

'ஹே ராம்' விமர்சனமும், காந்தி வாங்கிக் கொடுத்த தந்திரமும்

காந்திதான் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்று வெற்றிகரமானதொரு வரலாற்றுப் பொய்யை, ஒரு சார்பு வரலாறை ஆளும் வர்க்கங்கள் பொதுக்கருத்தாக மாற்றி விட்டன. ஆனால், வரலாற்றில் காந்தியின் வருக்கைக்கு முன்பும் , காந்தி செல்வாக்கு குன்றி ஒரு அடையாளாமாக இருந்த 1940களையும் பார்க்குமிடத்து சுதந்திரம் என்பது காந்திக்கு அப்பாற்ப்பட்ட ஒரு விசயமாகவே இருந்துள்ளது தெரிகிறது.
இது குறித்து புதிய கலாச்சாரம் இதழில் வந்த ஹேராம் பட விமர்சனத்தில் ஒரு பகுதியை தருவது சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் அது சுருக்கமாக 1940களில் காந்தி மக்களின் குரலாக இல்லாத நிலையையும், தன்னெழுச்சியாக மக்கள் ஆங்காங்கே போராடியதையும், பிரிட்டன் பலவீனமாகியிருந்ததையும், அமெரிக்கா பிரிட்டனை நெருக்கி வந்ததையும் குறிப்பிட்டுக் காட்டுகிறது. மேலும், இந்திய விடுதலை வரலாற்றில் 1906 க்கு முன்பு வரை இந்து முஸ்லீம்கள் மத வேறுபாடுகளை களைந்து ஒன்றாகவே போராடி வந்துள்ளனர். காஸ்மீரில் இந்தியா, பாகிஸ்தானின் தலையீட்டுக்கு முன்பு வரை அது மத சார்பின்மையின் இலக்கணமாக இருந்து வந்துள்ளது.
இந்த உணர்வு, 1940களில் த்லைவர்களற்ற பல் மக்கள் போராட்டங்களிலும் வெளி வருகிறது. இந்த பொது உணர்வை வளர்த்தெடுக்க ஏன் தவறினார்கள் அன்றைய வீரர்களாக நமது பாட புத்தகங்க்ள் சித்தரிக்கும் தலைவர்கள்?
அல்லது இன்னும் சிறப்பாக கேள்வி கேட்டால், மதக் கலவரங்களை மக்கள் விரும்பினார்களா அல்லது தலைவர்களா?

இது போல இன்னும் பல தர்மசங்கடமான(நமக்கல்ல்) கேள்விகளை எழுப்புகிறது நமது விடுதலைப் போராட்டத்தின் உண்மையான வரலாறு.
தமஸ்(இந்திய பிரிவினை குறித்த படம்) படத்தில் ஒரு வசனம் வருகிறது. ஒரு ஆங்கிலேய அதிகாரி அவன் மனைவியிடம் பேசுகிறான்:

"மதக் கலவரங்களால் யார் லாபம் அடைந்தார்களோ அவர்கள்தான் அதற்க்குக் காரணம்"
"ஒரு அரசு தனது நாட்டு மக்கள் எந்த விசயத்தில் ஒன்று படுகிறார்கள் என்பதை விட எந்த விசயத்தில் பிரிந்து முரன்படுவார்கள் என்பதில்தான் கவனம் செலுத்துகிறது."

*********
(சினிமா திரை விலகும் போது..... - ஹே ராம் பட விமர்சனத்தின் ஒரு பகுதி - புதிய கலாச்சாரம் வெளியீடு)

1946 நவீன இந்திய வரலாற்றின் மிகக் கொந்தளிப்பான ஆண்டு. 1945 ஏப்ரலில் இரண்டாவது உலகப் போர் முடிந்தவுடன் பிரிட்டிஸ்ஹ் ஏகாதிபத்தியம் அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பலவீனமடைகிறது. பிரிட்டனுக்கு 'எதிராக' அகிம்சை வழியில் இயக்கம் நடத்திக் கொண்டிருந்த காந்திக்கும் இந்திய மக்கள் மீது இருந்த செல்வாக்கு பலவீனமடைகிறது. நாடெங்கும் பல போராட்டங்கள் வெடிக்கின்றன.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் தளபதியான ஷா நவாஸ்(முசுலீம்), ஜி.எஸ். தில்லான்(சீக்கியர்), பிரேம் சேகல்(இந்து) ஆகியோரை பிரிட்டிஷ் அரசுக்குத் துரோகமிழைத்ததாகத் தண்டிக்க முற்ப்பட்ட போது, அரசுக்கெதிராக நாடெங்கும் இலட்சுக்கணக்கான மக்க்ள் கிளர்ந்தெழுந்த ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நவம்பர் 1945-இல் கல்கத்தா நகர வீதிகளில் மூன்று நாட்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர் இலட்சக்கணக்கான மக்கள். பிப்ரவரி 1946-இல் அப்துல் ரஷீத் என்ற ஒரு இந்திய தேசிய இராணுவ சிப்பாயை விடுதலை செய்யக் கோரி மீண்டும் கல்கத்தா கிளர்ந்தெழுந்தது. இந்த எல்லாக் கோரிக்கைகளுக்கும் பிரிட்டிஷ் அரசு பணிய நேர்ந்தது.

பிப்ரவரி 1946-இல் பிரிட்டிஷ் கடற்படையின் இந்திய மாலுமிகள் பம்பாயில் கலகம் செய்தனர். கம்யுனிஸ்டுகளால் திரட்டப்பட்ட பம்பாய் நகரமே அவர்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் செய்தது. 250 பேர் இரண்டே நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விமானப் படையில் வேலை நிறுத்தம், ஜபல்பூர் இராணுவத்தில் வேலை நிறுத்தம், பீகார், டெல்லி போலீசாரின் வேலை நிறுத்தம் என்றூ பிரிட்டிஷ் அதிகாரத்தின் தூண்களாக இருந்த அதிகார வர்க்க இராணுவமே அவர்கள் கையைவிட்டு நழுவிக் கொண்டிருந்தன. வங்காளம், உ.பி., பீகார், மகாராஷ்டிரா போன்ற இடங்களிலும், திருவிதாங்கூர், ஐதரபாத் நிஜாமின் சமஸ்தானங்களிலும் விவசாயிகளின் போராட்டம் ஜமீந்தார்களையும், மன்னர்களையும், பண்ணைகளையும் உலுக்கிக் கொண்டிருந்தது.

மாணவர் போராட்டம் நடைபெறாதா இடமே இல்லை; ஜூலை 1946-இல் தபால் தந்தி ஊழியர்கள் வேலை நிறுத்தம், ஆகஸ்டு 1946-இல் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறூத்தம் என எல்லாத் தொழில் துறைகளும் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தால் நிலை குலைந்திருந்தன. ஆனால் இது வரை குறிப்பிட்ட எந்த போராட்டமும் காந்தியோ, ஜின்னாவோ, சவர்க்காரோ அறைகூவல் விடவில்லை. மாறாக, போராட்டங்களை உடைக்கவும், திரும்பப் பெறவும், திசை திருப்பவும் தங்களாலான சேவைகளைத்தான் அவர்கள் செய்தார்கள்.

ஆனால், 1946 பிப்ரவரி மாதத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை ஒன்றுபட்டு எதிர்த்த கல்கத்தா மக்கள் ஆகஸ்டு மாத்த்தில் ஏன் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டார்கள் என்ற கேள்விக்கு நமக்கு விடை தேவைப்படுகிற்து.
அதே காலகட்டத்தில் ஐதரபாத் நிஜாம் என்ற முசுலீம் மன்னனையும், ரசாக்கள் என்ற அவனது கோடூரமான (முசுலீம்) படையையும் எதிர்த்துப் போராடிய தெலுங்கானா(இந்து) விவசாயிகளின் போராட்டம் மட்டும் ஏன் மதக் கலவரமாக மாறவில்லை என்பதற்க்கும் விளக்க்ம் தேவைப்படுகீறது.

பல்லாயிரம் மக்கள படுகொலை செய்யப்பட்ட நவகாளீக்கு அருகிலேயே விவசாயிகள் ஜமீந்தார்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். அந்த கிராமங்களுக்கு கலவரம் ஏன் பரவவில்லை என்பதற்க்கும் விடை தேவைப்படுகிறது.

அசுரன்

8 பின்னூட்டங்கள்:

said...

///
மாறாக, போராட்டங்களை உடைக்கவும், திரும்பப் பெறவும், திசை திருப்பவும் தங்களாலான சேவைகளைத்தான் அவர்கள் செய்தார்கள்.
///
யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லி விடலாம் ஆதாரங்கள் எதுவேணும் உண்டா?

said...

அசுரன்,
//
"மதக் கலவரங்களால் யார் லாபம் அடைந்தார்களோ அவர்கள்தான் அதற்க்குக் காரணம்"
"ஒரு அரசு தனது நாட்டு மக்கள் எந்த விசயத்தில் ஒன்று படுகிறார்கள் என்பதை விட எந்த விசயத்தில் பிரிந்து முரன்படுவார்கள் என்பதில்தான் கவனம் செலுத்துகிறது."//

மிகச்சரியான உண்மை.. நம் கண்முன்னாள் உள்ள உதாரணம் கோவை! - இந்த கலவரத்தால் மூன்று பிரிவினர் பலனடைந்தனர் ஒன்று -இந்துவெறியர்கள் ஏனென்றால் இதற்குப் பின் நிறைய அப்பாவி இந்துக்களை ஈர்ப்பதில் வெற்றிகண்டனர். இரண்டு முஸ்லிம் மதவெறியர்கள் இவர்கள் அப்பாவி முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றனர்.. மூன்று முதலாளிகள் - பொதுவாக கலவரத்துக்குப் பின் தான் தொழில்கள் முடக்கமடைந்தது என்கிற என்னம் இன்றும் மக்களிடையே உள்ளது.. ஆனால் அதற்கு முன்பே சீன உதிரி பாகங்கள் இறக்குமதி துவங்கியதால் வார்படதொழிலும்.. நவீன இயந்திரங்கள் பயன் படுத்ததுவங்கியதால் நகைப் பட்டறை தொழிலாளர்களும்.. வெளிநாட்டு நூல்ககளுடன் போட்டி போட முடியாமல் (மானியங்களை விலக்கி காலை வாரிவிட்டது.. நூல் சந்தையை பன்னாட்டு மில்களுக்கு திறந்து விட்டது) கலவரங்களுக்கு முன்பே ஒவ்வொரு மில்களாக தொழிற்சாலைகளாக மூடத்துவங்கி விட்டது.. கலவரம் நடந்த பின் மக்கள் கவனம் இந்து Vs முஸ்லிம் என்று திசை திரும்பி விட்டதால்.. இந்தப் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது..

said...

i liked this post very much! great questions. why dont uyou write answers comrade!

said...

///
///
மாறாக, போராட்டங்களை உடைக்கவும், திரும்பப் பெறவும், திசை திருப்பவும் தங்களாலான சேவைகளைத்தான் அவர்கள் செய்தார்கள்.
///
யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லி விடலாம் ஆதாரங்கள் எதுவேணும் உண்டா?
////



காந்தித் தொண்டன்,


அவர் நடத்திய பல்வேறு போராட்டங்களில் (மூன்று தேசிய அளவிலான போராட்டங்கள் உட்பட) பின்வாங்கியதை எப்படிப் பார்ப்பது?

அல்லது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஜெர்மனியின் வெற்றி வாய்ப்பிற்க்கு ஏற்றவாறு முன்னுக்கு பின் முரனாக பேசியதை எப்படிப் பார்ப்பது?

கல்கத்தா கப்பல் புரட்சியை காட்டிக் கொடுத்து வரலாற்று துரோகம் செய்ததை எப்படிப் பார்ப்பது. இன்றுவரை அந்த போராட்டத்தை வளர்த்தெடுக்காமல் விட்டதுதான் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு வரலாறு அளித்த ஒரு வாய்ப்பை தவறவிட்ட செயலாக பல வரலாற்றியலாளர்களும் சொல்வதிலிருந்து அந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம். இதன் மூலம் பல் லட்சக்கணக்கான மக்களின் சாவுக்கு காரணமாகக் கூட அன்றைய தலைவர்கள் இருதுள்ளனர் என்பதுதான் விசயம்.

அசுரன்

said...

///
பன்னாட்டு மில்களுக்கு திறந்து விட்டது) கலவரங்களுக்கு முன்பே ஒவ்வொரு மில்களாக தொழிற்சாலைகளாக மூடத்துவங்கி விட்டது.. கலவரம் நடந்த பின் மக்கள் கவனம் இந்து Vs முஸ்லிம் என்று திசை திரும்பி விட்டதால்.. இந்தப் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது.. //

ராஜவனஜ்,

இந்தியாவில் நடந்த பல்வேறு மதக் கலவரங்களை ஆய்வு செய்தவர்களின் கருத்து, அவையெல்லாமே வியாபாரிகளிடையே உள்ள போட்டி போறாமையின் ஒரு அங்கமாகவே இருக்கிறது.

அதனால்தான் முஸ்லீம் கடையில் வாங்காதே என்று கூறும் இந்துத்துவ குரங்குகள், முஸ்லீம் நாட்டு பெட்ரோலை பய்ன்படுத்துவது குறித்து வாய் திற்ப்பதில்லை.

எல்லா சமூக பிரச்சனைகளுக்கு அடிப்படை பொருளாதார அம்சமதான்.

மதப் பிரச்சனைகளும் விதிவிலக்கல்ல.

அசுரன்

said...

//i liked this post very much! great questions. why dont uyou write answers comrade! //

Osai chella,

மற்றவர்கள் கேள்வி கேட்க்கட்டும் பதில் சொல்லட்டும். அதன் ஊடாக கட்டுரையின் கேள்விகளூக்கு விடை கிடைக்கும். இன்னும் சொன்னால் கட்டுரையில் உள்ளா கேள்விகளே மறைமுகமாக விடைகளை சுட்டுகின்றன.

அசுரன்

said...

//ஆனால், 1946 பிப்ரவரி மாதத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை ஒன்றுபட்டு எதிர்த்த கல்கத்தா மக்கள் ஆகஸ்டு மாத்த்தில் ஏன் ஒருவரையொருவர் வெட்டிக் கொண்டார்கள் என்ற கேள்விக்கு நமக்கு விடை தேவைப்படுகிற்து.
அதே காலகட்டத்தில் ஐதரபாத் நிஜாம் என்ற முசுலீம் மன்னனையும், ரசாக்கள் என்ற அவனது கோடூரமான (முசுலீம்) படையையும் எதிர்த்துப் போராடிய தெலுங்கானா(இந்து) விவசாயிகளின் போராட்டம் மட்டும் ஏன் மதக் கலவரமாக மாறவில்லை என்பதற்க்கும் விளக்க்ம் தேவைப்படுகீறது.

பல்லாயிரம் மக்கள படுகொலை செய்யப்பட்ட நவகாளீக்கு அருகிலேயே விவசாயிகள் ஜமீந்தார்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். அந்த கிராமங்களுக்கு கலவரம் ஏன் பரவவில்லை என்பதற்க்கும் விடை தேவைப்படுகிறது. //

தோழரே, நன்றாய் இருக்கிறதே உங்களது கேள்விகள் ???

இவற்றுக்கான விடைகளை கண்டுபிடிக்கும் போது சட்டம் ஒழுங்கு சீர்குலையுமே! "அமைதிப்பூங்கா" அமைதியற்ற காடாகிவிடுமே! ரத்த ஆறு ஓடுமே! எங்கும் மரணஓலம் கேட்குமே! வானமே இடிந்து விழுந்துவிடுமே! அய்யகோ. இப்படி ஒரு கேட்டினை எம்மக்களுக்கு விளைவித்து விட்டீர்களே!!!

இதற்கான விடைகளை மக்கள் தங்கள் உள்ளங்கைகளை பார்ப்பது போன்று அவ்வளவு தெளிவாக பார்க்கலாம். ஆனால் அவர்கள் சுலபத்தில் பார்த்துவிட மாட்டார்கள். காரணம் நான் முதற்பத்தியில் சொன்னதைப் போன்று ஒரு பயத்தை வெற்றிகரமாக அவர்கள் மனத்தில் ஊன்றப்பட்டது தான்

said...

//
தோழரே, நன்றாய் இருக்கிறதே உங்களது கேள்விகள் ???

இவற்றுக்கான விடைகளை கண்டுபிடிக்கும் போது சட்டம் ஒழுங்கு சீர்குலையுமே! "அமைதிப்பூங்கா" அமைதியற்ற காடாகிவிடுமே! ரத்த ஆறு ஓடுமே! எங்கும் மரணஓலம் கேட்குமே! வானமே இடிந்து விழுந்துவிடுமே! அய்யகோ. இப்படி ஒரு கேட்டினை எம்மக்களுக்கு விளைவித்து விட்டீர்களே!!!

இதற்கான விடைகளை மக்கள் தங்கள் உள்ளங்கைகளை பார்ப்பது போன்று அவ்வளவு தெளிவாக பார்க்கலாம். ஆனால் அவர்கள் சுலபத்தில் பார்த்துவிட மாட்டார்கள். காரணம் நான் முதற்பத்தியில் சொன்னதைப் போன்று ஒரு பயத்தை வெற்றிகரமாக அவர்கள் மனத்தில் ஊன்றப்பட்டது தான்
///


மருதையன் தனது உரைவீச்சு ஒன்றில் கூறியிருப்பார்(சாடியிருப்பார்), தமிழ் சமூகத்தின் மலட்டுத்தனத்தை தீ வைத்து கொழுத்து, அமைதி பூங்க எரிந்து சாம்பலாகட்டும் என்று.

உண்மைதான், அமைதிப் பூங்கா என்று சொல்லி சொல்லி முதுகெலும்பை முற்றிலுமாக வல்லவா உருவிவிட்டார்கள்.

இது போன்ற கேள்விகளை கண் கொண்டு பார்ப்பதற்க்கும் நம் ஆட்கள் தாயாராயில்லையே...

அசுரன்

Related Posts with Thumbnails