கௌரதைக்கு கொலை செய்வது மற்றும் அதைத் தடுப்பதற்கொரு குன்சான திட்டம்!
கௌரதைக்கு கொலை செய்வது என்றால் என்ன? சாதி மீறி திருமணம் செய்து கொள்ளும் காதலர்களை, சாதி வெறி பிடித்தவர்கள் தமது கௌரவத்தை காக்கும் பொருட்டு 'வேறு வழியின்றி' கொடூரமாக கொல்வதற்குப் பெயர்தான் கௌரவக் கொலைகள்(honor killing). 'வேறு வழியின்றி' செய்யப்படும் இப்படிப்பட்ட கொலைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப் போகிறார்களாம் (அடக் காலக் கொடுமையே... இதுக்கெல்லாம தண்டன?).
'கௌரவக் கொலைகள்' இப்படித்தான் உச்ச நீதிமன்றத்திலிருந்து, ஊடகங்கள் வரை அனைத்தும் எழுதுகின்றன (கரெக்டாத்தான் சொல்றாய்ங்க...). இவர்கள் அத்தனை பேரும் ஒரு விசயத்தை மிகத் தெளிவாக பேசுகிறார்கள். இது போல கொலை செய்வதுதான் தவறு, மற்றபடி சாதி வெறிப்பிடிப்புடன் இருப்பது என்பது கௌரவமான ஒரு பண்பாடு என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறார்கள் (நல்ல விசயந்தான..). சமீபத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் கூட தனது சகோதரி சாதி மீறி திருமணம் செய்து கொண்டதற்காக கொலை செய்த சகோதரன் குடும்ப கௌரவத்திற்க்காகவே வேறு வழியின்றி அவ்வாறு செய்தான் என்று அவனை மறைமுகமாக பாராட்டியது இதற்கு ஒரு உதாரணம் (சரியான தீர்ப்புய்யா...).
ஆகவே மக்களே, அரசும், 'ஜனநாயகத்தின்' இன்னொரு தூணான ஊடகங்களும், மக்களின் கடைசிப் புகலிடமாம்(??) நீதிமன்றங்களும் அறிவித்துள்ளபடி சாதி வெறியை பறை சாற்றி நீங்களும் ஒரு 'கௌரவ'மான குடிமகன் என்ற தகுதியை பெருமையுடன் அறிவிக்க வேண்டும். மேலும், உங்களது 'கௌரவ'த்தின் அடையாளமான சாதி வெறியை கொலை செய்வது போன்ற கொடூரமான நடவடிக்கைகள் மூலம் அல்லாமல், நாசூக்கான பல்வேறு வழிமுறைகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் (கொஞ்சம் கஷ்டம்தான் பழகிக்கிறோம்...).
ஒரு வேளை உங்களிடம் வெளிப்படுத்தத் தகுதியான அளவிற்கு சாதி வெறி இல்லை என்றாலோ, அல்லது நீங்கள் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ற வகையில் சாதிப் பெருமை என்று எதையும் சொல்லிக் கொள்ள இயலாத துரதிருஷ்டசாலி 'அகௌரவ'க் குடிமகனாகவோ இருப்பின், அதுதான் உங்களது தலைவிதி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், 'கௌரவ' சாதி வெறியர்களின் சாதிப் பெருமைகளுக்கு தலை வணங்கி அவற்றை மதித்து நடக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் 'கௌரவக்' கொலைகளையும் நாம் தடுத்து விடலாம் அல்லவா? மேலும் 'கௌரவக்' கொலைகளை சாதி வெறிக் கொலைகள் என்று சொல்பவர்களையும், சாதி வெறிப் பண்பாடுகளை தட்டிக் கேட்பவர்களையும் களையெடுக்கும் சட்டங்களையும் கொண்டு வர வேண்டும் (இது மாதிரி உருப்படியான ஐடியாவக் கொடுக்கிறத விட்டுப்பிட்டு சட்டம் போடுறாய்ங்களாம்...)
படங்கள் நன்றி: திங்கள் சத்யா


Related Links
தலித் வன்கொடுமைகள்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்
0 பின்னூட்டங்கள்:
Post a Comment