TerrorisminFocus

Monday, February 09, 2009

கம்முனுஸ்டு மிஸ்டர் மீட்டிங்கு, ஈழப் பிரச்சினைக்கு தீர்வு சொல்றாருடோய்…. !!!

CPM பாசிஸ்டு கட்சியின் இணைய பிரசங்கியான சந்திப்பு வேறு வழியின்றி மார்க்ஸியத்தின் ஒளியில் விசயங்களை பரிசீலிக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார். ஆயினும் அப்படி ஒரு ஆய்வு முறை பயிற்சியின் மூலமே ஒருவருக்கு கைவரும் என்பதும், 'போலச் செய்தல்' என்பது இங்கு சாத்தியமில்லை என்பதும் அவரது கட்டுரையை படிக்கும் போது புலப்படுகிறது. குறிப்பாக முதலாளித்துவ சிந்தனை முறைக்கு பழகிய CPM கும்பல்களால் இயங்கியல் ரீதியில் சிந்தித்து கருத்துக்களை வெளிப்படுத்துவது என்பது இயலவே இயலாத காரியமாகிவிட்டது. பரிதாபம்தான். எனினும், அவரது முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

நிற்க, ஈழம் பிரச்சினையில் புரட்சிகர அமைப்புகளை இலக்காக வைத்தே கட்டுரை எழுதியுள்ளார் திருவாளர் சந்திப்பு. நல்லது ஆனால் பிரச்சினை என்னவென்றால் புரட்சிகர அமைப்புகளின் நிலைப்பாடென்று அவரே ஒன்றை கற்பனை செய்து கொண்டு பேசுகிறார். இது நகைப்பிற்குரியது. அடுத்தவர் மண்டையில் உட்காந்து கொண்டு சிந்திக்கும் இவரது தோழர் கோமாளி வுடுதலையை இவர் ஞாபகப்படுத்துகிறார்.

சந்திப்பு சொன்னது:
""தமிழகத்தில் உள்ள பல இனவாத நக்சலிச அமைப்புகள் உட்பட பலரும் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ""

'சுயநிர்ணய உரிமை' என்ற சொல்பதத்தின் மார்க்ஸிய அர்த்தத்தை முதலில் சந்திப்பு புரிந்து கொண்டாரா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மார்க்ஸியத்திலிருந்து மேற்கோள் காட்டி அவர் விவாதிக்கும் ஒரு பிரச்சினை தனது நாட்டு எல்லைகளை கடந்து உள்ள ஒரு அந்நிய பிரதேசம் பற்றியது என்பதை சுத்தமாக மறைத்து விடுகிறார் அவர். இன்னொரு நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைக்கு அடுத்த நாட்டு கம்யுனிஸ்டு கட்சி தனது அரசியல் ஆதரவை மட்டுமே நல்க முடியும், தீர்வுகளை அல்ல என்பதை காமரேடு சந்திப்புக்கும், அவர் சார்ந்த CPM பாசிஸ்டுகளுக்கு ஞாபகப்படுத்த கடமைப் பட்டுள்ளேன்.

மேலும் இந்த விசயத்தில் ம க இ கவினுடைய நிலைப்பாடு என்பது ஒன்றிணைந்த இலங்கை என்பதையே விரும்புகிறது. ஆனால் அதனை முடிவெடுக்கும் தகுதி அந்த மக்களுக்கே சொந்தம். CPMமோ அல்லது இந்திய அரசோ அல்லது இலங்கை அரசோ அல்லது புலிகளோ கூட இதில் முடிவெடுக்க உரிமையற்றவர்கள்.

ஒரு முதலாளித்துவ அரசில், ஏகாதிபத்திய சூழலில் ஒரு பகுதி மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்திற்கு வேற்று நாட்டு கம்யுனிஸ்டு கட்சி தீர்வுகளை அல்ல மாறாக தனது ஆதரவைத்தான் நல்க முடியும். இப்படி நாடு விட்டு நாடு தாண்டி தீர்வுகளை நல்கும் நாட்டாமைத்தனம் அதிகாரத்துவ இயங்கியலின் ஒரு பதம் எனில் அதன் இன்னொரு எதிர்ப்பதம் 'சரண்டர்'த்தனம்.

ஒன்றுபட்ட போலி கம்யுனிஸ்டு கட்சியாக இவர்கள் இருந்த பொழுது இந்தியாவுக்கான தீர்வைத் தேடி ஸ்டாலினிடம் சென்று 'சரண்டர்' ஆகி அதனை அவர் கண்டித்து உங்களது நாட்டுக்கு ஏற்ப மார்க்ஸியத்தை நடைமுறைப்படுத்துவதை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்று கூறிய கதையின் இன்றைய மறுஎதிர் ஒளிபரப்புதான் CPM கட்சி சிரிலங்கா பிரச்சினைக்கு தீர்ப்பு சொல்லும் தற்போதைய கதை. என்றைக்குமே ஒவ்வொரு நாட்டு பாட்டாளி வர்க்கமும் அந்தந்த நாட்டு பிரச்சினைக்கான தீர்வுகளை அவர்களே பருண்மையாக கண்டுணர்வதுதான் சாத்தியம். அப்படியில்லாத ஒரு தீர்வு கருத்துமுதல்வாத திரிபே ஆகும்.

இதையெல்லாம் விட மிக முக்கியமானது ஒரு நாட்டில் நடக்கும் தேசிய விடுதலை போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் அதன் பக்கத்து நாட்டு கம்யுனிஸ்டு கட்சியானது அந்த தேசிய விடுதலை போராட்டத்தின் எதிரியாகிய ஏகாதிபத்தியத்தையும், அது சர்வதேச எதிரி என்பதையும், அது ஒடுக்கும் தேசிய இனத்தின் எதிரி என்பதையும் அம்பலப்படுத்தியே அரசியல் செய்ய வேண்டும். மாறாக ஏகாதிபத்தியத்திற்கு புனித முகமூடி போடும் வேலையை செய்யக் கூடாது. இந்த அம்சத்தில் ஈழப் பிரச்சினையில் பிராந்திய ஆதிக்க சக்தியான இந்தியாவின் ஆக்கிரமிப்பு நோக்கங்களை அம்பலப்படுத்துவம், அதன் பின்னே இருந்து கொண்டு சுரண்டும் இந்திய தரகு முதலாளிகளை அம்பலப்படுத்துவதுமே சரியான அரசியலாகும்.

இந்திய மக்களின் வரிப் பணத்தில் ஈழத்தை இந்திய தரகு முதலாளிகள் சுரண்டுவதை எதிர்ப்போம், ஈழ சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்போம் என்ற அடிப்படையிலான அரசியல் முழக்கங்கள்தான் இந்திய, சிங்கள, ஈழத் தமிழர்களை, மற்றும் சர்வதேசிய உழைக்கும் மக்களை ஈழத்திற்கு ஆதரவாக திரட்டும் சரியான அரசியல் வழியாக இருக்க முடியும். ஆனால் CPM கும்பலோ இந்தியாவின் இந்த அரசியல் பொருளாதார நோக்கங்களை பற்றி பேசவே காணோம். இதுதான் இவர்களின் மார்க்ஸியம்.

சொந்த நாட்டிலேயே கூட முதலாளித்துவ அரசின் கீழ் செயல்படும் பொழுது அது அரை காலனிய நாடாக இருக்கும் பட்சத்தில் பரந்துபட்ட மக்களுடன் ஐக்கியப்பட்டு ஆளும் வர்க்கத்தை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு ஏதுவாக அந்த நாட்டின் தேசிய இன உணர்வுக்கு முதலில் அங்கீகாரம் வழங்குவதும். அதனுடாக அவர்களுடன் ஐக்கியப்பட்டு செயல்படுவதின் மூலம் அதனை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திற்கு வளர்ப்பதும் தேவைப்படுகிறது. இதன் அர்த்தம் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவு என்று ஒருவன் கூறிக் கொண்டால் அவனை மார்க்ஸியவாதி என்று சொல்லுவதற்கு ஒரு அடிப்படையும் இல்லை. ஏனேனில் வைத்தால் முடி சிரைத்தால் மொட்டை என்பதும் இயக்கமறுப்பியல் வகைப்பட்ட சிந்தனைதான். எதையுமே அதன் வளர்ச்சி போக்கில் வைத்து புரிந்து கொள்வதும், பரிசீலிப்பதுமே இயக்கவியல் சிந்தனை முறை.

தேசிய இன பிரச்சினையில் சமரசமின்றி சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதைத்தான் மார்க்ஸியம் வலியுறுத்துகிறது. சந்திப்பு மேற்கோள் காட்டும் குறிப்பிட்ட பகுதியில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தேசிய இனம் பிரிந்து செல்ல விரும்பும் போது அது பாட்டாளி வர்க்க நலனுக்கு ஊறாக இருக்கின்ற பட்சத்தில் அனுமதிக்க முடியாது என்ற ஒரு விலக்கு விதியே சொல்லப்பட்டுள்ளது. ஒரு எ-காவுக்கு ஜெர்மனியுடனான ஒரு யுத்த தருணத்தில் ஒரு தேசியம் பிரிந்து செல்ல விரும்புகின்ற பட்சத்தில் அதனை அனுமதிப்பது முடியாது. ஆனால் இதனையே பொது விவரிப்பாக கூறும் சந்திப்பு சுயநிர்ணய உரிமை என்பதையே பிரிந்து செல்வது என்பதாக இன்னும் குறுக்கி சிதைக்கிறார். அதாவது விவாகரத்து உரிமையையே விவாகரத்தாக கருதி அவதூற்றும் பிற்போக்குவாதிகள் போல.

மார்க்ஸியத்தை பருண்மையாக அமுல்படுத்தியதிலிருந்து பல்வேறு நாடுகள் பெற்ற அனுபவங்களில் விதி விலக்கான விசயங்களை மட்டுமே முன்னிறுத்தி தனது திரிபுவாதத்தை நியாயப்படுத்த பயன்படுத்தும் CPM கும்பல் எப்பொழுதும் போலவே இப்பொழுதும் அதையே செய்துள்ளது ஆச்சர்யமான விசயமல்ல. பாராளுமன்றம், ரகசிய கட்சி, ஆயுத புரட்சி, வெகு ஜன அமைப்பு, புதிய ஜனநாயக கோட்பாடு போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள விதி விலக்கான விசயங்களையே பொது மார்க்ஸியமாக CPM பாசிஸ்டுகள் திரிப்பது முன்பு பலமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தேசியம் குறித்த திரிபும் சேர்கிறது.

சிரிலங்கா பிரச்சினையில் மட்டும்தான் இவர்களது நிலைப்பாடு இது என்றால் அப்படியில்லை. காஷ்மீர் முதல் எல்லா இடங்களிலும் இந்திய ஆளும் வர்க்கங்களின் நிலைப்பாடிற்கு சிங்கி அடிப்பதுதான் இவர்களின் மார்க்ஸியமாக உள்ளது. தரையில் ஊன்றி நடக்கச் சொல்லி நமக்கு அறிவுறுத்தும் இவர்கள் முதலில் இந்திய ஆளும் வர்க்கத்தின் தோள் பட்டையில் உட்கார்ந்து மக்களை காட்டிக் கொடுப்பதை விட்டொழித்து கீழே இறங்கி வரட்டும்.

அசுரன்

சி.பி.எம்.(மோடியிஸ்ட்) கும்பலின் கழிப்பறைக் காகிதம் - தீக்கதிர்!.... மற்றும் ’கோயபல்ஸ்’ செல்வப்பெருமாள்!!... (ஏகலைவனின் அருமையானதொரு கட்டுரை)

சுயநிர்ணயத்தை மறுக்கும் போலி (சி.பி.எம் சந்திப்பு) கம்யூனிஸ்டுகளின் கழுதை அரசியல்

CPM கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட ஈழ நிலைப்பாடும், டவுசர் கழண்ட சந்திப்பும்!!

யுத்தத்தின் பின், தமிழ்மக்கள் பேரினவாத அரசுக்கு தம் எதிர்ப்பை காட்டுவார்களா?

இந்திய அரசே ஈழத்தில் தலையிடாதே!! CPM பாசிஸ்டே கோயபல்ஸ்தனத்தை நிறுத்து!!

ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

21 பின்னூட்டங்கள்:

said...

ஒரு செய்தி:
எஸ்எப்ஐ ன் முன்னாள் மாநில செயலர் ஒருவர் சொன்னது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கு தனியாக பொலிட்பீரோ கிடையாதாம். இந்திய பொலிட்பூரோதானாம். இது மிகவும ரகசியம் யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்றார். என்ன செய்ய வாய்தவறி வந்து விட்டது

said...

தோழர்...
எங்களுக்கு புரிந்த வரை இலங்கையின் புதிய ஜனநாயக புரட்சிதான் வர்க்க ரீதியான விடுதலைக்கு வழிவகுக்கும். ஆனால், சிங்கள பெருந்தேசிய இனவாதம் ஈழத்தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் அடக்குமுறைக்கு எதிராக அம்மக்கள் நடத்தும் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் காத்திருக்கத்தேவையில்லை. நமது முழக்கத்தில் தனி ஈழம் என்றில்லாமல் சுய நிர்ணய உரிமை என்றுதான் இருக்கிறது அதே சமயம் தனி ஈழம் என்ற முழக்கத்தை நாம் முன்வைக்காவிட்டாலும் எதிர்க்கவில்லை.

said...

//எங்களுக்கு புரிந்த வரை இலங்கையின் புதிய ஜனநாயக புரட்சிதான் வர்க்க ரீதியான விடுதலைக்கு வழிவகுக்கும். ஆனால், சிங்கள பெருந்தேசிய இனவாதம் ஈழத்தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் அடக்குமுறைக்கு எதிராக அம்மக்கள் நடத்தும் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் காத்திருக்கத்தேவையில்லை. நமது முழக்கத்தில் தனி ஈழம் என்றில்லாமல் சுய நிர்ணய உரிமை என்றுதான் இருக்கிறது அதே சமயம் தனி ஈழம் என்ற முழக்கத்தை நாம் முன்வைக்காவிட்டாலும் எதிர்க்கவில்லை.//

மேற்கூறிய கருத்துடன் கட்டுரை முரன்படவில்லை என்று கருதுகிறேன். ஒருவேளை கவனிக்க தவறியிருந்தால் சுட்டி காட்டி உதவுங்கள்.

தோழமையுடன்,
அசுரன்

said...

//சொந்த நாட்டிலேயே கூட முதலாளித்துவ அரசின் கீழ் செயல்படும் பொழுது அது அரை காலனிய நாடாக இருக்கும் பட்சத்தில் பரந்துபட்ட மக்களுடன் ஐக்கியப்பட்டு ஆளும் வர்க்கத்தை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு ஏதுவாக அந்த நாட்டின் தேசிய இன உணர்வுக்கு முதலில் அங்கீகாரம் வழங்குவதும். அதனுடாக அவர்களுடன் ஐக்கியப்பட்டு செயல்படுவதின் மூலம் அதனை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திற்கு வளர்ப்பதும் தேவைப்படுகிறது.//

தோழர் வினவு,

மெலேயுள்ள இந்த பகுதியைத்தான் குறிப்பிடுகிறீர்கள் எனில் இது ஒரு விரிவான விசயத்தின் சுருக்கமான விவரணை. ஐக்கியப்படுவது என்பது விமர்சனமற்ற ஐக்கியமல்ல. அப்படியொன்று பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திற்கு தேசிய விடுதலை போராட்டத்தை எப்படி வளர்த்துச் செல்லும்?

கட்டுரையின் பரப்பெல்லையை குறுக்கி வைப்பதற்காக இந்த விசயங்களை இப்படி சுருக்கமாக குறிப்பிட்டிருந்தேன்.

அசுரன்

said...

///மேலும் இந்த விசயத்தில் ம க இ கவினுடைய நிலைப்பாடு என்பது ஒன்றிணைந்த இலங்கை என்பதையே விரும்புகிறது. ஆனால் அதனை முடிவெடுக்கும் தகுதி அந்த மக்களுக்கே சொந்தம். CPMமோ அல்லது இந்திய அரசோ அல்லது இலங்கை அரசோ அல்லது புலிகளோ கூட இதில் முடிவெடுக்க உரிமையற்றவர்கள்///

மேற்கூறிய வாக்கியம் நேர்மறையில் நமது நிலைப்பாட்டை விளக்கவில்லை என்று கருதுகிறோம். மேலும் ஈழத்திற்கான நமது ஆதரவு தார்மீகரீதியானது என்பதைத் தாண்டி சிங்கள பேரினவாத அரசுக்கும் இராணுவத்திற்கும் பேருதவிகள் செய்யும் இந்திய அரசு மற்றும் நம்நாட்டு ஆளும் வர்க்கங்களை எதிர்த்தும் அம்பலப்படுத்தியும், பணியவைக்கும் அளவுக்கும் நாம் போராட வேண்டியுள்ளது.

உங்கள் விளக்கத்தில் கோட்பாட்டிலிருந்து யதார்த்திற்கு செல்லுதல் என்ற முறை அதிகமிருக்கிறது. இதைத் திருப்பி போட்டு எழுதினால் பெருமளவு குழப்பங்களைத் தவிர்க்கலாம். மற்றபடி உங்கள் கட்டுரையில் பாரிய தவறெதுவும் இல்லை.

வினவு

said...

//சொந்த நாட்டிலேயே கூட முதலாளித்துவ அரசின் கீழ் செயல்படும் பொழுது அது அரை காலனிய நாடாக இருக்கும் பட்சத்தில் பரந்துபட்ட மக்களுடன் ஐக்கியப்பட்டு ஆளும் வர்க்கத்தை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு ஏதுவாக அந்த நாட்டின் தேசிய இன உணர்வுக்கு முதலில் அங்கீகாரம் வழங்குவதும். அதனுடாக அவர்களுடன் ஐக்கியப்பட்டு செயல்படுவதின் மூலம் அதனை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திற்கு வளர்ப்பதும் தேவைப்படுகிறது.//

தோழர், இந்த கருத்து, இனப்படுகொலை அளவு இன ஒடுக்குமுறை உள்ள தேசங்களுக்குப் பொருந்தாது. ஒரே இனத்துலுள்ள் பல்வேறு வர்க்கங்களுக்குதான் இந்த வாதம் பொருந்தும்.

ஆக, 'சுயநிர்ணய உரிமையின் உச்ச எல்லை, பிரிந்து போகும் உரிமை' என்ற மார்சிச சித்தாந்ததிற்கு ஏற்ப, தனி ஈழம் என்பது சரியானதுதான். ஆனால், மக்களை அரசியல் படுத்தி, அதை சாதிக்கிறோமா ? இல்லையா ? என்பதில் தான், மக இக, புலிகளோடு முரண்படுகிறது என்பது என் அவதானிப்பு.

'அரசியல் புரட்சிக்கு, முதலில் இராணுவ இயக்கங்களை கட்ட வேண்டும், பிறகு புரட்சி வென்ற பிறகு, அரசியல் விடுதலை எளிதாகப் பெறலாம்' என்ற யாரோ ஒரு (பெயர் நினைவில் இல்லை) என்ற ஒரு கியுப புரட்சிவாதியின் கருத்தை மந்திரம் போல, பிரபாகரன் கருதியதால் தான், கருணா முதல் எல்லா வினைகளும் அவரை பிடித்து ஆட்டுகின்றன ! இனியும் ஆட்டும் !.

வினவு, நான் தவறாக சொல்லி இருந்தால், திருத்தவும்.

அறிவுடைநம்பி
http://purachikavi.blogspot.com

said...

//சொந்த நாட்டிலேயே கூட முதலாளித்துவ அரசின் கீழ் செயல்படும் பொழுது அது அரை காலனிய நாடாக இருக்கும் பட்சத்தில் பரந்துபட்ட மக்களுடன் ஐக்கியப்பட்டு ஆளும் வர்க்கத்தை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு ஏதுவாக அந்த நாட்டின் தேசிய இன உணர்வுக்கு முதலில் அங்கீகாரம் வழங்குவதும். அதனுடாக அவர்களுடன் ஐக்கியப்பட்டு செயல்படுவதின் மூலம் அதனை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திற்கு வளர்ப்பதும் தேவைப்படுகிறது.//

தோழர், இந்த கருத்து, இனப்படுகொலை அளவு இன ஒடுக்குமுறை உள்ள தேசங்களுக்குப் பொருந்தாது. ஒரே இனத்துலுள்ள் பல்வேறு வர்க்கங்களுக்குதான் இந்த வாதம் பொருந்தும்.

ஆக, 'சுயநிர்ணய உரிமையின் உச்ச எல்லை, பிரிந்து போகும் உரிமை' என்ற மார்சிச சித்தாந்ததிற்கு ஏற்ப, தனி ஈழம் என்பது சரியானதுதான். ஆனால், மக்களை அரசியல் படுத்தி, அதை சாதிக்கிறோமா ? இல்லையா ? என்பதில் தான், மக இக, புலிகளோடு முரண்படுகிறது என்பது என் அவதானிப்பு.

'அரசியல் புரட்சிக்கு, முதலில் இராணுவ இயக்கங்களை கட்ட வேண்டும், பிறகு புரட்சி வென்ற பிறகு, அரசியல் விடுதலை எளிதாகப் பெறலாம்' என்ற யாரோ ஒரு (பெயர் நினைவில் இல்லை) என்ற ஒரு கியுப புரட்சிவாதியின் கருத்தை மந்திரம் போல, பிரபாகரன் கருதியதால் தான், கருணா முதல் எல்லா வினைகளும் அவரை பிடித்து ஆட்டுகின்றன ! இனியும் ஆட்டும் !.

வினவு, நான் தவறாக சொல்லி இருந்தால், திருத்தவும்.

அறிவுடைநம்பி
http://purachikavi.blogspot.com

said...

இலங்கையில் உள்ளது இனக்குழும நிலை.
மலையகத்தமிழர் தற்போது தாம் தனியான சிறுபான்மைத் தேசிய இனமாக பிரகடனப்படுத்துகிறார்கள்.
முஸ்லிம் மக்கள் தனியான தேசியமாக 90ற்குப்பின் அடையாளப்படுத்துகிறார்கள்.உயிர்ப்பு கட்டுரைகளைப் பார்க்கவும்.
72 இன் பின் சிறுபான்மைத்தமிழர்(தலித்)தனியான தேசியமாக எம்.சி.முன்வைத்தார்.
மிஞ்சியிருப்பது வடக்கு கிழக்குமாகாண தமிழர்கள்.

கிழக்குமாகாண நிலை இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
மலையக,முஸ்லிம்,தலித்,கிழக்குமாகாணமென்று நிறைய குழும நிலை கொண்டது நமது இலங்கைதமிழர் சமூகம்.
இந்தியத் தமிழர்களாக அடையாளப்படுத்தப்படும் மலையகம் எப்போதுமே இலங்கை அரசமைப்புடன் தான் தன்னை தகவமைக்கிறது.
தமிழ்த்தேசியம்,பிரிவினை பரப்புரைகளில் நாம் வந்தடைந்த நிலை பார்க்கிறீர்கள்.
பல்லின மக்களும் சகோதரத்துவத்தோடு வாழவேண்டிய நாடு.
முதலாளித்துவத்தின் பிரித்தாளும் தந்திரோபாயத்திற்கு மாற்றாக
அனைத்துமக்களின் ஐக்கியமே இங்கு சிறந்த மார்க்கமாகும்.

said...

//மேற்கூறிய வாக்கியம் நேர்மறையில் நமது நிலைப்பாட்டை விளக்கவில்லை என்று கருதுகிறோம். மேலும் ஈழத்திற்கான நமது ஆதரவு தார்மீகரீதியானது என்பதைத் தாண்டி சிங்கள பேரினவாத அரசுக்கும் இராணுவத்திற்கும் பேருதவிகள் செய்யும் இந்திய அரசு மற்றும் நம்நாட்டு ஆளும் வர்க்கங்களை எதிர்த்தும் அம்பலப்படுத்தியும், பணியவைக்கும் அளவுக்கும் நாம் போராட வேண்டியுள்ளது.

உங்கள் விளக்கத்தில் கோட்பாட்டிலிருந்து யதார்த்திற்கு செல்லுதல் என்ற முறை அதிகமிருக்கிறது. இதைத் திருப்பி போட்டு எழுதினால் பெருமளவு குழப்பங்களைத் தவிர்க்கலாம். மற்றபடி உங்கள் கட்டுரையில் பாரிய தவறெதுவும் இல்லை./

நன்றி தோழர் வினவு,


//உங்கள் விளக்கத்தில் கோட்பாட்டிலிருந்து யதார்த்திற்கு செல்லுதல் என்ற முறை அதிகமிருக்கிறது. இதைத் திருப்பி போட்டு எழுதினால் பெருமளவு குழப்பங்களைத் தவிர்க்கலாம். //

இதனை கவனத்தில் கொள்கிறேன்.

அசுரன்

said...

//
ஆக, 'சுயநிர்ணய உரிமையின் உச்ச எல்லை, பிரிந்து போகும் உரிமை' என்ற மார்சிச சித்தாந்ததிற்கு ஏற்ப, தனி ஈழம் என்பது சரியானதுதான். ஆனால், மக்களை அரசியல் படுத்தி, அதை சாதிக்கிறோமா ? இல்லையா ? என்பதில் தான், மக இக, புலிகளோடு முரண்படுகிறது என்பது என் அவதானிப்பு.//

இல்லை தோழர் அறிவுடைநம்பி,

சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடியது. ஈழ மக்கள் பிரிந்து செல்ல விரும்பினால் பிரிந்து கொள்ளலாம். அவ்வளவுதான். பிரிவதுதான் தீர்வு என்று ம க இக சொல்லுவது போல தெரியவில்லை.

said...

"வார்த்தைக்கோர்வைகளில் அடங்காமல் இரத்த போர்வைக்குள் ஈழ நிசம் உறங்குவதை கலைக்கிறது எங்கிருந்தோ பறந்து வந்து விழுந்து வெடித்து மக்களோடு மரணித்த ஷெல்"

ஓசை செல்லாவின் சமீபத்திய கவிதைகளில் இருந்து சில வரிகள்

said...

http://yekalaivan.blogspot.com/2009/02/blog-post_08.html

தோழர் அறிவுடைநம்பி,

உங்களுக்காக ஏகலைவனின் தளத்திலிருந்து.

//தனி ஈழம் அல்லது ஒன்றுபட்ட இலங்கை என்கிற இருவேறு கருத்துக்களுக்கும் மத்தியில், தீர்வினை ஒடுக்கப்படுகின்ற மக்களின் சுயநிர்ணய உரிமையின் மூலமாகத்தான் எட்டமுடியும் என்று சொல்பவர்களெல்லோரும் திரிபுவாதிகளாம். சுயநிர்ணய உரிமை என்பது என்ன? ஒடுக்கப்படுகின்ற தமிழ் இனமக்கள், இத்தனையாண்டுகாலம் தம்மை ஒடுக்கியழித்த சிங்கள பேரினவாதத்தோடு இணைவதையோ அல்லது விலகுவதையோ தமது சொந்த அனுபவத்தின் மூலமாக முடிவு செய்வதுதான் சுயநிர்ணய உரிமையாகும். அது தனி ஈழக் கோரிக்கையினை ஆதரிக்கலாம், அல்லது எதிர்க்கலாம். அதேபோல் ஐக்கியத்தையும் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். சுய நிர்ணய உரிமை என்பது தனி ஈழத்தை மட்டுமே கோரிக்கையாகக் கொண்டது அல்லவேஅல்ல. இதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.//

said...

CPMயை அம்பலப்படுத்தும் ஒரு அனானியின் பின்னூட்டம்:

Anonymous said...

hi cr. asuran ... this is my response to Feb'2009's DYFI "ilaingar muzakkam"s editorial

முட்டாள்தனமான தலையங்கம் இது. வேலையில்லை சுகாதர வசதியில்லை என்பதற்காக நடப்பதல்ல ஈழ மக்களின் போராட்டம். உங்களுக்கு ஆயுத்ம்தான் பிரச்சினை என்றால் அதனை நேரடியாக சொல்லலாமே..ஏன் ஒளிவு மறைவு..

தேசிய இனங்கள் எந்த சூழலில் பிரிந்து செல்லலாம் என தோழர் லெனின் சொன்னது இது. ''எந்த ஒரு தேசத்துக்கோ அல்லது மொழிக்கோ சிறப்பு சலுகை எதுவும் கிடையாது; ஒரு தேசிய சிறுபான்மையினரைப் பொறுத்தவரை மிகச் சிறு அளவுகூட ஒடுக்குமுறையோ அநீதியோ இருக்கக்கூடாது. இவைதாம் உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தின் கோட்பாடுகள் ஆகும். (லெ.தொ.நூ. 19.91, ஒப்: 243).
வரப்போகிற உலகப் புரட்சியின் தீர்மானமான போர்களில் தேசிய விடுதலை என்பதை முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ள உலக மக்களில் பெரும்பான்மையோரது இயக்கம், முதலாளியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானதாகத் திரும்பும் என்பதும், நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகக் கூடுதலான புரட்சிகரப் பங்கை வகிக்கக் கூடும் என்பதும் தெளிவாகிவிட்டது. (லெ.தொ.நூ. 32. 482)

தேசிய ஒடுக்குமுறையைத் துடைத்தெறிய, தன்னாட்சிப்பகுதிகளை உருவாக்குவது மிகவும் முக்கியம், அவை எவ்வளவு சிறியதாகவும் இருக்கலாம். இவை முற்றிலும் ஓரின மக்கள் தொகையினரைக் கொண்டவையாக இருக்க வேண்டும். நாடு முழுவதிலும் - ஏன் - உலகம் முழுவதிலுமே சிதறிக் கிடக்கின்ற அந்தந்த தேசிய இன மக்களை ஈர்க்கக்கூடிய பகுதிகளாக இருக்க வேண்டும். அவர்கள் எல்லாவகை உறவுகளையும் சுதந்திரமான இணைப்புகளையும் ஏற்படுத்தி கொள்ளக்கூடிய தன்னாட்சிப் பகுதிகளாக இருக்க வேண்டும். (லெ.தொ.நூ. 20.50)
ஐடியலான முரணற்ற முழுமையான ஜனநாயக குடியரசு பற்றிய லெனின் (லெ.தொ.நூ. 19.427) சொன்னது '' இவ் அடிப்படை சட்டம், எல்லா தேசங்களுக்கும் மொழிகளுக்கும் முழுச் சமத்துவத்தை உத்திரவாதம் செய்ய வேண்டும்; எந்த ஒரு கட்டாய ஆட்சி மொழியையும் ஏற்காததாக இருக்க வேண்டும். சொந்த மொழிகள் அனைத்திலும் கல்விபுகட்டுகிற பள்ளிகளை மக்களுக்கு வழங்குகிற ஒன்றாக இருக்க வேண்டும். எந்த ஒரு தேசத்துகக்கும் தனிச்சலுகை வழங்குவதையும், தேசிய சிறுபான்மையினரின் உரிமைக்ள் மீது கை வைப்பதையும் தடை செய்கின்ற சட்டமாக இருக்க வேண்டும்.''

So லெனின் முட்டாள்தனமாக பேசி உள்ளாரா ? அல்லது நீங்களா ? என்பதை தெளிவு படுத்துங்கள்.

தொன்மை சமூகம் நாடாள வேண்டும என்ற ஆவலில் தோன்றியதா ஈழமக்களின் போராட்டம்? வரலாறு பாமர மக்களுக்கு தெரிந்த அளவு கூடவா தங்களை மார்க்சியவாதிகள் என்ச் சொல்லிக் கொள்பவர்களுக்கு தெரியாது. அதிகாரத்தின் மீதான பற்று என நீங்கள் சொல்லியிருப்பது சுதந்திரத்திற்கான தாகத்தை. மேலே கண்ட லெனின் வாசகங்களை மீண்டும் படியுங்கள். நீங்கள் ஈழத்தை கேவலப்படுத்தவில்லை. மாறாக லெனினைக் கேவலப்படுத்தி உள்ளீர்கள்.
/“இதற்கும் மேலே சென்று’’ இந்திய அரசு இலங்கையை வலியுறுத்துவது என்ற எதிர்பார்ப்பு ஒரு வித மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது” என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்./
இது உண்மையான கூற்று நீங்கள் எதனையும் புரிந்து கொள்ள மறுப்பது என்ற ஜனநாயப்பண்பை எப்போதே பெற்று உள்ளீர்கள். பிராந்திய வல்லரசாக, அமெரிக்காவின் தெற்காசியப் பேட்டை ரவுடியாக இந்தியா உள்ளது என அறிவுஜீவிகள் விமர்சித்தால் பாஜக வைவிட உங்களுக்குதான் கோபம் வரும்போல தெரிகின்றது. என்ன செய்ய உங்களது கொள்கையை விட சொம்நாத் சட்டர்ஜி காட்டிய நாடாளுமன்ற விசுவாசம் அதற்கு வவாய்ப்பு கிடைக்காத தங்களைப் போன்றோருக்கு தேசாபிமானமாக வெளிப்படுகின்றது, தேச ஆளும் வர்க்கம் ஒரு பேட்டை ரவுடியாக இருந்தால் கூட.
/ தமிழகத்தில் நீண்ட காலமாக இருக்கிற சமூகக் கொடுமைகளில் ஒன்றாக தீக்குளிப்பும் நீடிக்கிறது. போராடி வெல்வது, வெல்வதற்காகப் போராடுவது, தமிழ் இலக்கிய சான்றாக இருக்கிறபோது, தன்னைத் தானே அழித்துக் கொல்வதும், அதை அரசியலாக்க முயற்சிப்பதும், இரைஞ்சுவதற்கு ஒப்பாகும்/தீக்குளிப்பது சமூகக் கொடுமைதான் அது சதி என்ற வடிவில் வந்தால். சக மனிதர்கள் மீது இன ஒழிப்பு நடக்கும்போது வாளாவிருக்கும் உங்களைப் போன்ற இளைஞர் இயக்கங்கள் இருக்கும் தேசத்தில் தீக்குளித்துதான் ஒரு இளைஞன் உங்களது கள்ள மவுனத்தை உடைக்க முடிகின்றதென்றால் அதற்காக முத்துக்குமரன் வெட்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. முத்துக்குமரன் இந்திய அரசுட்ன போராடவில்லை, கள்ள மவுனம் இன்றளவும் சாதிக்கும் போலி ஜனநாயக, கம்யூனிச வாதிகளின் மன்ச்சாட்சிக்கு எதிராகத்தான் போராடி உள்ளான். வரலாறு தெரிந்தால் வியத்நாம் புத்தபிக்குகள் அமெரிக்க ஏகாதிபத்திய போர்வெறிக்கு எதிராக அறுபதுகளில் நிகழ்த்திய தீக்குளிப்பு வடிவத்தை என்னவென்று சொல்வீர்கள்.

அதெல்லாம் இருக்கட்டும். தமிழக இளைஞர்களை வாயைக் கட்டி போராட்டம், நாமம் போட்டு போராடுவது, கழுதையிடம் மனுக் கொடுத்து அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடுவது, திருவோடு எடுத்து போராடுவது, கோவணம் கட்டிப் போராடுவது, ....இப்படி இரைஞ்சுகினற் வடிவங்களையெல்லாம் போராட்டம் என அழைத்துக் கொண்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் தாங்கள் என்பது மறந்துவிட்டதா?
/ “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம்” என்றான் பாரதி. இதற்கு முரணாக ஒருவன் அழிந்து தமிழனை காக்கலாம் என்பது, பகுத்தறிவு அற்றது./
சுய அறிவில்லாமல் அல்லது லாஜிக் இல்லாமல் எழுதப்பட்ட ஒரு வாக்கியம் பகுத்தறிவு பற்றிப் பேசுவது முரண்நகை. கடைசியாக பேச்சுவார்த்தை அதாங்க அரசியல் தீர்வுன்னு நீங்க சொல்ற கட்டப்பஞ்சாயத்துதான் வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் சமத்துவவாதிகள். இப்போரை ராஜபக்ஷ நிறுத்தவும் கோருவீர்கள் எனக் கருதுகிறேன். அது சரி... அதுக்கு யாரிடம் வலியுறுத்து போராடுவீர்கள். இந்தியாவிடமா? ஒரு நிமிசம். இந்தியாவும் டாங்கிகள், ரேடார்களோடு தனது ராணுவத்தையும் அனுப்பியுள்ளது. என்ன சொல்லி தப்பிக்க போறீங்க..
February 13, 2009 12:39 AM

said...

சிரிலங்காவுக்கு வக்காலத்து வாங்கும் CPMமே இதையும் பார்:

Tamils In Lanka Jews Under Nazis?

A former US diplomat makes serious charges of genocide against Lankan officials, which could go all the way to US courts, reports PC VINOJ KUMAR
Cover Story

Crying out Protests over the assassination of senior Lankan journalist Lasantha Wickramatunga
Photo: AFP

THE SRI LANKAN government is claiming an all-out victory in its recent campaign against the insurgent Liberation Tigers of Tamil Eelam (LTTE). Even as the United Nations voiced concern over the increasing number of civilian Tamil casualties in the war between the LTTE and the Sri Lankan army, pressure is building on the nation’s hardline Sinhala leadership over its allegedly genocidal acts against the Tamil minority. Former US Deputy Associate Attorney General Bruce Fein has compiled evidence he believes is sufficient to prosecute Sri Lankan Defence Secretary Gotabaya Rajapaksa and army chief Lt Gen Sarath Fonseka under the United States Genocide Accountability Act. Gotabaya, brother of President Mahinda Rajapaksa, is a US citizen and Fonseka is a US Green Card holder.

Fein, associated with a US-based group, Tamils Against Genocide, was on a private visit to Chennai last week. Speaking to TEHELKA, Fein says he has prepared a 1,000-page model indictment against Gotabaya and Fonseka for submission to the US Department of Justice. “Since Gotabaya and Fonseka assumed office (in 2005), there have been virtually one to three extra-judicial killings daily in Sri Lanka,” states Fein. These, he clarifies, do not include LTTE casualties. “My work has nothing to do with the LTTE,” Fein says.

THE CHARGES

‘The national identity cards help identify Tamils easily, so the government knows whom to kill’

‘People are abducted in mysterious white vans, with no license plates. They are never heard of again’

‘The government has complete authority over the perpetrators of genocide: army, police, thugs, army deserters’

The model document, if accepted in the US would make Gotabaya the first US citizen to be tried for genocide

Comparing the present conditions of Tamils in Sri Lanka to the sufferings of the Jews under the Nazis and of the blacks during the apartheid era in South Africa, Fein says: “The national identity cards given to the Tamils are almost like the Star of David badges the Jews had to wear during the Nazi era.” He alleges that the cards are meant to identify Tamils easily so the government knows “whom to kill”.

Conditions have allegedly worsened over the last three years. People are abducted in “mysterious white vans” that have no license plates, Fein says. The abducted are never heard of again and are counted among the thousands of ‘disappeared’ persons. The genocidal intent of the Rajapaksa regime can be established through its various discriminatory policies against the Tamils. “The government has been creating conditions intended to promote their physical destruction,” claims Fein, arguing that many Rajapaksa policies constitute genocidal acts under US law. The blockade on transporting essential commodities to Tamil areas is one example, Fein says, for the starvation it has caused to the north Lankan civilian population.

GOTABAYA RETIRED from the Sri Lankan army in 1992, having served in it for 20 years. He then moved to the US and worked as a computer systems administrator at the Loyola Law School in Los Angeles. He returned to Sri Lanka in 2005 to assist Rajapaksa during his presidential campaign. Ever since his brother became President, Gotabaya has been part of his core group and is urging Rajapaksa to pursue a military solution to the 25- year-old ethnic conflict.

Sri Lanka’s Tamils have suffered repression at the hands of the Sinhalese since the 1940s. Soon after achieving independence from British colonialism in 1948, the Lankan government passed the Citizenship Act by which about a million Tamils lost their citizenship and voting rights. Later, Sinhala was made the country’s only official language, placing Tamils at a disadvantage, particularly for government jobs. Moderate Tamil politicians failed to impact the government to change its policies. Finally, in the 1970s, Tamil youths took to an armed struggle.

In 2002, Rajapaksa’s predecessor, Ranil Wickremasinghe, entered into a ceasefire agreement with the LTTE. Rajapaksa withdrew from the ceasefire in January 2008. Since then, the country has been plunged into bloodshed.
Cover Story

Accuser Bruce Fein is concerned about the systemic violence against the Tamils under Rajapaksa
Photo: PRABHU K

In his model indictment document, Fein seeks to establish the motivational context and the processes of the genocide under the Rajapaksa regime. Detailing the charges against Gotabaya and Fonseka, the document notes that “the alleged acts or omissions were committed with specific intent to destroy, in whole or in substantial part, a national, ethnic, racial, or religious group as such, under the pretext of counter-insurgency warfare”. The document describes the victims of the alleged genocide as “Hindu-Christian Northeast Sri Lankan Tamils (HCNSLTs)”. Different forms of genocidal tactics against the HCNSLT have been recorded, among them large-scale abduction, indiscriminate aerial bombardment, artillery shell attacks and systematic deprivation of essential foods, and medicines.

The army’s powers to enforce ad hoc restrictions on “who and what goods can and cannot pass” over arterial roads to reach the HCNSLTs, media censorship on the happenings in Tamil areas, and the ban on petrol are part of Fein’s genocide charges against Fonseka and Gotabaya.

Tamils face “complex bureaucratic procedure” to travel abroad or within the country, especially in government-controlled Jaffna peninsula. “The process takes two to three months, whereby the application may be rejected. The army or government-sponsored paramilitaries are known to have murdered the applicants, the majority of whom were male.”

Fein’s priority now is to satisfy the US Department of Justice that a prima facie case has been made out and get the US Government’s support for forming a grand jury to prosecute Gotabaya and Fonseka. “I hope to have a grand jury set up in about three to four months time,” he says. If the jury indicts the accused, then the stage would be set for bringing Fonseka and Gotabaya to stand trial in the US.

Meanwhile, the situation of journalists in Sri Lanka is turning worse. Media sources in Colombo said at least 10 Sri Lankan journalists have fled the country. Senior journalist Lasantha Wikramatunga was assassinated by unknown persons in Colombo earlier this month — government hit-men are suspected. Senior Sinhalese journalist Sunanda Deshapriya has taken refuge in Chennai, where media persons have formed a forum called Journalists Against War to protest the violence on the Press under the Rajapaksa regime in Sri Lanka.

WRITER’S EMAIL
vinoj@tehelka.com
From Tehelka Magazine, Vol 6, Issue 5, Dated Feb 07, 2009

THE CURIOUS TALE OF MUMBAI TERROR
By Raveena Hansa
The Mumbai attacks need a thorough investigation Read>>

Aishwarya's political debut likely from Bihar
By Anand ST Das

Journalist Self-Immolates, Students Protest
By PC Vinoj Kumar

Only A Small Fish?
By Sanjana
More Stories>>

said...

//தோழர் அறிவுடைநம்பி,

உங்களுக்காக ஏகலைவனின் தளத்திலிருந்து.

தனி ஈழம் அல்லது ஒன்றுபட்ட இலங்கை என்கிற இருவேறு கருத்துக்களுக்கும் மத்தியில், தீர்வினை ஒடுக்கப்படுகின்ற மக்களின் சுயநிர்ணய உரிமையின் மூலமாகத்தான் எட்டமுடியும் என்று சொல்பவர்களெல்லோரும் திரிபுவாதிகளாம். சுயநிர்ணய உரிமை என்பது என்ன? ஒடுக்கப்படுகின்ற தமிழ் இனமக்கள், இத்தனையாண்டுகாலம் தம்மை ஒடுக்கியழித்த சிங்கள பேரினவாதத்தோடு இணைவதையோ அல்லது விலகுவதையோ தமது சொந்த அனுபவத்தின் மூலமாக முடிவு செய்வதுதான் சுயநிர்ணய உரிமையாகும். அது தனி ஈழக் கோரிக்கையினை ஆதரிக்கலாம், அல்லது எதிர்க்கலாம். அதேபோல் ஐக்கியத்தையும் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். சுய நிர்ணய உரிமை என்பது தனி ஈழத்தை மட்டுமே கோரிக்கையாகக் கொண்டது அல்லவேஅல்ல. இதில் நாம் //

Comrade Asuran,

The people of tamil eelam already decided that they are fighting for Tamil Eelam. They refused to go to SLA controlled areas and they are still supporting LTTE. So, we need to support Tamil Ealam since the struggling party decided that decision. So, in addition to support their own decision, we (M.L) should need to publicly declare "we are supporting Tamil Eelam since people of tami eelam decided like that". We can have different opinions on LTTE for their path - "arming the people first& politicing people later" which is contractory to our stand "politizing people first
", but we need to support LTTE un animously since LTTE is the only one organization fighting for their people.

Arivudai nambi.

said...

சி.பி.எம். என்கிற பிழைப்புவாத போலிகம்யூனிச முகாமின் வாலான dyfi சார்பில் வெளியிடப்படும் பத்திரிக்கையில் இதைவிட வேறெதை எதிர்பார்க்க முடியும்? இதற்குமேல் வேறொரு வார்த்தைகளை அவர்கள் இணைக்க விரும்பினாலும் ‘ஹிந்து’ராம் போன்ற அதி’முற்போக்கு’வாதிகளிடம் அனுமதி பெறாமல் முடியுமா?

இது ஒரு தலையங்கம்! இது ஒரு பத்திரிக்கை!! என்ன இருக்கிறது இதில், ஏனைய பிற்போக்கு, முதலாளித்துவ ஏடுகளில் இல்லாத எதுவும் இதில் இருக்கிறதா? சோ வின் எழுத்தும், ஜெயாமாமியின் வியாக்கியானங்களும், இந்துவெறி பாசிஸ்டுகளின் மொழியைத் தவிர இதற்குள் வேறு என்ன இருக்கிறது?

முத்துக்குமாரின் மரணத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதற்கு இது தருணம் அல்ல. முத்துக்குமாரின் முடிவை இங்கு யாருமே ஆதரிக்கவில்லை. ஆனால், தன்னுடைய அந்த முடிவின் மூலமாக அவர் சொல்லியிருக்கும் செய்தியினைத்தான் அனைவருமே உயர்த்திப்பிடிக்கின்றனர். அப்படி அவருடைய தீக்குளிப்பை மட்டுமே, அவரது ஆதரவாளர்கள் பற்றிக்கொண்டிருந்தால் அதன் தொடர்ச்சியாக அவர்களும் தீக்குளிக்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இந்திய - இலங்கை அரசுகளுக்கு எதிரான போராட்டக் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். முத்துக்குமார் மூட்டிய தீயை உயர்த்திப்பிடித்து எழுச்சியோடு நிற்கின்றனர் அவர்கள்.

ஈழப் போராட்டம் புலிகளுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுவதாகவும், அப்பாவித் தமிழர்களுக்கொன்றும் பாதிப்பில்லையென்றும் எழுதிக்கொண்டு, அங்கு நடைபெற்ற கிரிக்கெட் சூதாட்டத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டு மகிழும் தீக்கதிர் என்கிற நாளேடு, மேற்படி போலி கம்யூனிச சி.பி.எம். கும்பலுடையது. முத்துக்குமார் வீரமரணத்தைத் தழுவிய மறுநாள், சமூகத்தில் எந்த விதமான முக்கியத்துவமும் பெறாத சினிமாக் கோமாளி நாகேஷுக்கு படத்துடன் செய்திவெளியிட்ட இந்த தீக்கதிர், முத்துக்குமாரின் செய்தியை வெறும் ‘வாலிபர் தற்கொலை’ என்கிற பெட்டி செய்தியோடு முடித்துக்கொண்டது, அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.

இவர்களின் சிந்தை கிரிக்கெட் சூதாட்டத்திற்கும், சினிமாக் கழிசடைக்கும் சோரம் போயிருக்கும் நிலையில் இவர்களிடமிருந்து வெளிவரும் எழுத்துக்களில் நாம் வேறு எதையும் எதிர்பாக்க முடியாது.

முத்துக்குமாரின் முடிவு பகுத்தறிவற்றது என்று எழுதும் இந்தப் போலிகள்தான் இந்துவெறிக்காலிகளுடன் கைகோர்த்து ஆயுதபூசை நடத்தி வருகிறார்கள். பகுத்தறிவைப் பற்றி யார் பேசுவது? போகட்டும், முத்துக்குமாரின் முடிவைக் குறித்து நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். இன்னும் சற்று சுதி கூட்டி வேண்டுமானாலும் வசைபாடிக்கொள்ளுங்கள், ஆனால், அவர் இறுதியாக இச்சமூகத்துக்கு விட்டுச் சென்றுள்ள மரண சாசனத்தைப் பற்றி இதுவரை எங்காவது வாய்திறந்திருக்கிறீர்களா? ஒற்றை வார்த்தையையாவது எழுதியிருக்கிறீர்களா? ஏன் செய்யவில்லை?! மக்களைப் போராட்டத்திற்கு திரட்டுகின்ற மொழியை பாசிஸ்டுகளால் எப்படி ரசிக்க முடியும்? அதுதான் இதற்கான காரணமாக இருக்கிறது.

அய்யா, பிழைப்புவாத கனவான்களே! உங்களுடைய பிழைப்பை எப்படி வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளுங்கள்; முற்போக்கு முகமூடியையும் கம்யூனிச வேடத்தையும் தயவுசெய்து கழற்றி விடுங்கள்; அத்துவானிகள், மோடிகள், சுப்பிரமணியசாமிகள் உங்களை அள்ளித்தழுவக் காத்திருக்கின்றனர்.

நேர்மையான சி.பி.எம். ஆதரவாளர்கள், இங்கு பதியப்படும் எதிர்வினைகளுக்கு முறையான பதில்களைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நட்புடன்,
ஏகலைவன்.

இந்த மோசடியான தலையங்கத்தையும் பத்திரிக்கையினையும் கண்டித்து இங்கு கருத்து பதிந்துள்ள வசந்தி போன்ற தோழர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

said...

//Comrade Asuran,

The people of tamil eelam already decided that they are fighting for Tamil Eelam.//

அது அப்படியாக இருக்கின்ற பட்சத்தில் அது அப்படியே நடக்கட்டும் :-). ஆனால் மலையகத் தமிழர்களும், முஸ்லீம் மக்களும் இந்த விசயத்தில் என்ன சொல்லுகிறார்கள்? தனித் தமிழீழத்தை விடுங்கள் குறைந்த பட்சம் தேசிய சுயநிர்ணய உரிமையாவது இவர்களுக்கு கிடைக்கும் வகையிலான பெரும் இயக்கம் எதுவும் அங்கு உள்ளதா?

தனி தமிழீழம் இந்த தேசிய இனங்களுக்கும் சேர்த்து விடுதலை கொடுக்கும் என்ற கொள்கையின் தோல்விதானே தற்போது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

விசயம் ஒன்றுதான். தனித் தமிழமா ஒன்றிணைந்த தன்னாட்சி பகுதியா என்பதை மக்களின் கையில் விடுவதே நலம்.
//
They refused to go to SLA controlled areas and they are still supporting LTTE. So, we need to support Tamil Ealam since the struggling party decided that decision.//

ஈழத்தின் தற்போதைய நிலை இரு பாசிசங்களின் ஆட்சி என்பதுதான். ஒன்று புலிகள். இன்னொன்று சிங்கள இன வெறி. இந்த நிலையில் அங்குள்ள உண்மையான நிலை என்னவென்றே தெரியாமல் நமது விருப்பங்களுக்கேற்ப புரிந்து கொள்வது தவறு. ஈழ விடுதலை போரை ஆதரிப்பதும் அதை எதிர்க்கும் ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளை போர்க்குணத்துடன் போராடி பலஹீனப்படுத்துவதும்தான் நாம் இங்கிருந்து செய்யக் கூடிய வேலை.

//So, in addition to support their own decision, we (M.L) should need to publicly declare "we are supporting Tamil Eelam since people of tami eelam decided like that".///

தேசியம் என்றும் எப்போதும் முதலாளித்துவ கோரிக்கையே. அதனை மாலே அமைப்பு சொல்ல முடியாது. காஸ்மீரில் கூட மக்களின் கருத்தரியும் ஓட்டேடுப்பு நடத்துவதும் அதற்கு முன் நிபந்தனையாக ராணுவம் உள்ளிட்ட ஏதேச்சதிகார அமைப்புகள் வெளியேறுவதையுமே நாம் கோருகிறோம்.

//We can have different opinions on LTTE for their path - "arming the people first& politicing people later" which is contractory to our stand "politizing people first
", but we need to support LTTE un animously since LTTE is the only one organization fighting for their people.
//


புலிகளின் விசயத்தில் ஆயுதம் முன்னாலும், அரசியல் பின்னாலும் என்கிற விசயத்தில் மட்டும் நாம் வேறுபடவில்லை. இந்த விசயத்தை மாவொயிஸ்டுகளிடம் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் புலிகள் விசயத்தில் அடிப்படை நிலைப்பாடுகளே பாராதூரமாக தவறானது. மிகத் தவறானது. மீளப் பெற முடியாத அளவு ஈழ விடுதலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அளவுக்கு தவறானது. அதனது தந்திரம் என்றும் எப்போதும் சந்தர்ப்பவாதமே. அதனது அரசியல் என்றும் எப்போதும் ஆளும் வர்க்க தெய்வங்களிடம் வேண்டிக் கொள்வதே ஆகும். இந்த விசயத்தில் அவர்கள் சுய விமர்சனம் எடுத்துக் கொண்டு சரியான பாதைக்கு வராத வரை அவர்கள் குறித்து பேசி பிரயோசனம் இல்லை. ஈழ விடுதலை என்னும் முகம் புலிகளின் தவறுகளை மறைக்க போதுமானது அல்ல.

அசுரன்

said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

said...

//“சுயநிர்ணய உரிமை என்ற கோஷத்தை நாங்கள் ஏற்கவில்லை. தனி ஈழம் என்பதற்கும் சுயநிர்ணய உரிமை என்பதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. ஒரே நாட்டுக்குள் இரண்டு மக்களும் நிரந்தரப் பகையாளியாக மாறி மோதிக் கொண்டிருக்கும் சூழலுக்கே இட்டுச் செல்லும்” (தீக்கதிர், 4.11.08). “ஒருங்கிணைந்த இலங்கைக் குள் கூடுதலான சுயாட்சியோடு, தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்” (ஜனசக்தி, 10.3.2009) என்றும் கூறுகிறார்.//

said...

http://www.keetru.com/kannottam/jun09/jayaraman.php

“சுயநிர்ணய உரிமை என்ற கோஷத்தை நாங்கள் ஏற்கவில்லை. தனி ஈழம் என்பதற்கும் சுயநிர்ணய உரிமை என்பதற்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. ஒரே நாட்டுக்குள் இரண்டு மக்களும் நிரந்தரப் பகையாளியாக மாறி மோதிக் கொண்டிருக்கும் சூழலுக்கே இட்டுச் செல்லும்” (தீக்கதிர், 4.11.08). “ஒருங்கிணைந்த இலங்கைக் குள் கூடுதலான சுயாட்சியோடு, தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்” (ஜனசக்தி, 10.3.2009) என்றும் கூறுகிறார்.

Related Posts with Thumbnails