CPM கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட ஈழ நிலைப்பாடும், டவுசர் கழண்ட சந்திப்பும்!!
ஆங்கிலத்தில் உள்ளவை ஜெவிபியின் பினாமி கட்சியான CPM கோயபல்ஸ் பீரோவின் அறிக்கை.
////The government of India should seek the assistance of the United Nations to ensure the safety of the Tamil civilian population in the northern province.////
இலங்கையில் இந்தியா நேரடியாக தலையிடுவது அம்பலமாகியுள்ள இந்த சூழலில், CPMன் குலக்கொழுந்துகளான சந்திப்பு, விடுதலை போன்ற கோயபல்ஸுகளுக்கு ஒரு சவால் விடுகிறேன். இந்தியா ராணுவ வீரர்களும் அதிகாரிகளும் ஈழத்தில் யுத்தத்தில் தலையிட்டு வருவது குறித்து உங்களது கருத்து என்ன? அதனை ஆதரிக்கிறீர்களா? ஏனேனில் இந்தியா தலையிடவில்லை எனில் பாகிஸ்தான், அமெரிக்கா ஆதரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளீர்கள் அதனால்தான் கேட்கிறேன்.
//Sri Lankan government immediately take up the provision of genuine autonomy for the Tamil-speaking areas within a united Sri Lanka as promised during the visit of the External Affairs Minister to Colombo.//
சிங்கள அரசு தமிழர்களுக்கு உரிமை கொடுக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுப்பதும், ஒப்பந்தங்கள் இடுவதும் இது முதல் முறையா? வரலாற்றில் இது போல பலமுறை நடந்துள்ள பொழுது எந்த அடிப்படையில் சிங்கள அரசை CPM நம்புகிறது? ஒருவேளை ஹிந்து ராமின் நண்பர்கள்தான் சிங்கள இனவெறி அரசு என்ற அடிப்படையிலா?
மொத்தத்தில் என்னதான் சொல்ல வருகிறீர்கள்? நாங்கதான் உள்ளூர் ஆளுங்க. நீங்கதான் அகில இந்திய கட்சியாயிற்றே ஏன் பாலஸ்தீன பிரச்சினைக்கு அகில இந்திய அளவில் துடித்த உங்களால் ஈழப் பிரச்சினைக்கு உள்ளூர் அளவில் கூட துடிக்க முடிவதில்லை?
எப்படி புலிகளை எதிர்ப்பதையே ஈழ எதிர்ப்பாக புலி ஆதரவாளர்கள் முத்திரை குத்துகிறார்களோ அதே போல ஈழ ஆதரவையே புலி ஆதரவாக முத்திரை குத்தும் சிங்கள வெறி அரசுக்கும், இந்திய அரசுக்கும், சோ, ஹிந்து ராம், ஜெயலலிதா, சுசுவாமி வகையாறாக்களுக்கும், CPM பாசிஸ்டுகளுக்கும் என்ன வேறுபாடு?
வேறுபாடு இல்லை என்பதுதான் எமது கருத்து. சந்திப்பு போன்ற கூலிக்கு மாரடிப்பவர்கள் தம்மளவில் இந்த உண்மையை ஒத்துக் கொண்டால் எமது வேலை மிச்சம்.
ஜேவிபி இனவெறி கட்சியுடன் உங்களது கள்ள சிநேகிதம் தொடர்வதின் விளைவுதானா இது? அல்லது ஜெவிபியின் பினாமி கட்சியா CPM?
மக்களை சர்வதேச அளவில் அணி திரட்டி அந்தந்த நாடுகளில் உள்ள ஜனநாயக சக்திகளின் துணையுடன் அந்தந்த அரசுகளை ஈழ பிரச்சினையில் அழுத்தம் கொடுக்க கோரி போராடுவது என்பதும், இந்தியாவில் இந்திய அரசு ஈழத்தில் தலையிடுவதை எதிர்த்து மக்களை, ஜனநாயக சக்திகளை திரட்டி போராடுவது என்பதும் ம க இ கவின் நிலைப்பாடு இதற்கு பதிலாக ஜோசியக்காரன் போல ஐநாவை நம்பு, பிராந்திய மேலாதிக்க இந்தியாவை நம்பு, ராஜபக்சேவை நம்பு என்று கதை விட்டுக் கொண்டு சிங்கள இனவெறிக்கு, இந்திய தரகு முதலாளிக்கு முதுகு சொறியும் CPM கட்சி ஜெவிபியின் பினாமி என்பதில் என்ன தவறு உள்ளது என்று சந்திப்பு தெளிவுப்படுத்துவது நலம்பயக்கும்.
நாங்க மக்களை நம்பு என்கிறோம் CPM வழக்கம் போல ஆளும் வர்க்கத்தையும், அரசையும் நம்பு என்கிறார்கள். இதுதான் கம்முனிசமாம். போங்கடா....
அசுரன்
54 பின்னூட்டங்கள்:
ஈழ சுயநிர்ணய உரிமை போராட்டத்தையும், புலிகளையும் ஒன்று என முன் வைத்து பிரச்சாரம் செய்வதுதான் சிங்கள இனவெறி முகத்தை மறைக்க சரியான முகமூடி.
இப்படிப்பட்டதொரு பிரச்சாரத்தைத்தான் CPMமும், சோ, ஹிந்து ராம், ஜெயலலிதா உள்ளிட்ட பார்ப்பனிய பன்றிகளும் செய்து வருகிறார்கள்.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4931:2009-02-05-10-35-57&catid=277:2009
//தம் இனம் மீதான யுத்தம், பேரினவாத கொக்கரிப்புகள் என்று எதையும், சமூகம் எதிர்கொள்ளத் தயாராகவில்லை. புலம்பெயர் சமூகம் மட்டும், இடைக்கிடை புலியைச் சுற்றி உருவெடுத்து ஆடவைக்கப்படுகின்றது. மண்ணில் வாழும் மக்கள் அமைதியாகி, நடைப் பிணமாகிவிட்டனர். பேரினவாதத்தை நக்கும் கண்ட கண்ட நாய்கள், மக்களை மேய்க்;கும் நிலையில் மக்கள் வாழ்கின்றனர். இந்த நிலைமை எப்படி உருவானது.
உண்மையில் இதை புலிகள் தான் உருவாக்கினர். தாம் அல்லாத எந்த செயலையும், எம் மண்ணில் உயிர்வாழ அனுமதிக்கவில்லை. மொத்தத்தில் அதை அழித்தன் விளைவு, சமூகம் செயலற்ற தன்மைக்கு சென்றுள்ளது. சமூகத்தில் எதைச் செய்தாலும் புலிகள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற பாசிச சர்வாதிகாரம், அவர்கள் மேலான அழித்தொழிப்பின் போது ஓட்டுமொத்த சமூகத்தை செயலற்றதாக்கியுள்ளது. //
//ஒரு இன அழிப்பு யுத்தம் முடிந்தபின், வடக்கு கிழக்கு தமிழினம் தன் மேலான இன அழிப்பு நடந்த உணர்வின்றியே வாழ்வது தவிர்க்கமுடியாது. அப்படியான ஒரு நிலையை, புலிகள் உருவாக்கிவிட்டுள்ளனர். //
(CPM கோயபல்ஸுகளே தோழர் ரயாகரன் இங்கு இன அழிப்பு யுத்தமென்ற வார்த்தையையே பயன்பர்டுத்துகிறார்.)
//பேரினவாதம் முதல் ஏகாதிபத்தியம் வரை, இதை நன்கு உணர்ந்து உள்ளனர். எந்த தீhவையும் தமிழினத்துக்கு வழங்கவேண்டிய அவசியமில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அதை கோரும் நிலையில் மக்கள் இல்லை. எலும்புக்கு அலையும் நாய்கள் மட்டும், அப்படி ஒன்றைப் பெறுவர்.//
(இங்கு ஏகாதிபத்தியம், பேரினவாதத்துடன், CPMமையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்)
//மலையக மக்கள் மற்றும் மூஸ்லீம் மக்கள் இன்று வாழ்கின்ற நிலைக்கு, தமிழினம் அரசியல் ரீதியாக சிதைந்து போனது. ஒட்டுண்ணிகளும், பொறுக்கிகளும், பிழைப்புவாதிகளும் அரசின் தயவில் நக்கி வாழும் வாழ்வைத்தான், தமிழ் மக்களின் எதிர்காலம் என்று சொல்லும் நிலைக்கு தமிழினத்தை புலிகள் கொண்டு வந்து விட்டுள்ளனர்.//
சிபிஎம் மை பற்றிய உங்கள் அம்பலபடுத்தலை புலிகள் பற்றிய ஈழம் பற்றிய நமது உரையாடலை துவக்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்
///எப்படி புலிகளை எதிர்ப்பதையே ஈழ எதிர்ப்பாக புலி ஆதரவாளர்கள் முத்திரை குத்துகிறார்களோ///
இந்திய அரசு கூட இதையேதான் சொல்கிறது இலங்கை தமிழ் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல,அவர்கள் நல்வாழ்வுக்காகத்தான் நாங்கள் உழைத்துக்கொண்டிருக்கிறோம் அதற்கு புலிகள்தான் தடையாக இருக்கிறார்கள் என்று
புலிகளை எதிர்த்து ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் உங்கள் நடவடிக்கைக்கும்,அதே புலிகளை அழித்து ஈழ் மக்களை வாழ வைக்க போவதாக சொல்லும் இந்திய அதிகார வர்க்கத்தின் குரலுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கவும்
//புலிகளை எதிர்த்து ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் உங்கள் நடவடிக்கைக்கும்,அதே புலிகளை அழித்து ஈழ் மக்களை வாழ வைக்க போவதாக சொல்லும் இந்திய அதிகார வர்க்கத்தின் குரலுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கவும்//
நாங்க ஏன் விளக்கனும், நீங்கதான் ஈழ மக்களின் விடுதலைக்கு ஹோல் சேல் அத்தாரிட்டி எடுத்திருக்கிறீர்கள் அல்லவா நீங்களே எங்களுக்கு ஒரு முத்திரை குத்தி விடுங்கள்
///ஈழ சுயநிர்ணய உரிமை போராட்டத்தையும், புலிகளையும் ஒன்று என முன் வைத்து பிரச்சாரம் செய்வதுதான் சிங்கள இனவெறி முகத்தை மறைக்க சரியான முகமூடி.//
இது பிழைப்புவாதிகளின் முகத்தையும், அரசியல் சோம்பேறிகளின் முகத்தையும், மக்கள் பினாமிகளின் முகத்தையும் மறைக்கும் நல்ல முகமூடி என்பதை சேர்த்துக் கூற தவறிவிட்டேன்.
நாங்க ஏன் விளக்கனும், நீங்கதான் ஈழ மக்களின் விடுதலைக்கு ஹோல் சேல் அத்தாரிட்டி எடுத்திருக்கிறீர்கள் அல்லவா நீங்களே எங்களுக்கு ஒரு முத்திரை குத்தி விடுங்கள்///
ஈழ மக்களின் விடுதலைக்கு ஹோல் ஸேல் அத்தாரிடியை நாங்கள் எடுத்துகொள்வதா ஹா ஹா
நாங்கள் என்ன மக இக வினர் போல
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை
இந்தியாவிலும்,ஈழத்திலும், புரட்சியின் பெயரால் ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்திருக்கிறோமா ?
முத்திரை குத்துவதில் உங்களை விட எங்களுக்கு திறமை அதிகம் இல்லை என்றே நினைக்கிறேன்
ஒரு இனவாதிக்கு கூட பொறுமையாக பதில் அளித்து மார்க்சிய போதம் செய்யும் பிழைப்புவாதிகள் அல்லாத அரசியல் வாழ்வின் எழுச்சியின் உச்சத்தில் சுறுசுறுப்பில் திளைத்துக்கொண்டிருக்கும் உங்களிடம் இருந்து விளக்கம் பெறலாம் என்கிற நப்பாசையை கொண்டது எனது தவறுதான் மன்னிக்கவும்
////புலிகளை எதிர்த்து ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் உங்கள் நடவடிக்கைக்கும்,அதே புலிகளை அழித்து ஈழ் மக்களை வாழ வைக்க போவதாக சொல்லும் இந்திய அதிகார வர்க்கத்தின் குரலுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கவும்/////
யார் முத்திரை புத்திரர் என்பது இருக்கட்டும். உங்களது கேள்வியில் தொக்கி நிற்கும் ஹோல்சேல்தனத்தை பார்க்கும் முகமாக ஒரு எதிர் கேள்வி கேட்கிறேன்.
புலிகளையும், ஈழ விடுதலையையும் ஒன்று என்று சொல்லி ஈழ விடுதலையை ஒடுக்கும் இந்திய அரசுக்கும். புலிகளையும், ஈழவிடுதலையையும் ஒன்று என்று சொல்லி ஈழ விடுதலையை ஒடுக்க மறைமுகமாக உதவி செய்யும் பிழைப்புவாதிகளுக்கும் என்ன வேறுபாடு என்று சொல்லுங்கள் முதலில்
உங்களது கேள்வியில் தொக்கி நிற்கும் திமிர்த்தனத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
உங்களது நப்பாசையில் தவறில்லை. ஆனால் இதற்கு முன்பு எங்கு விவாதத்தை விட்டு சென்றீர்களோ அங்கிருந்து ஆரம்பிக்கும் நேர்மையையுமின்றி கேள்வியில் அகங்காரம் தோனிக்க ஒலிக்கும் உங்களுக்கு எனது முதல் எதிர்வினை இப்படித்தான் இருக்கும்.
அசுரன்
//ஒரு இனவாதிக்கு கூட பொறுமையாக பதில் அளித்து மார்க்சிய போதம் செய்யும் பிழைப்புவாதிகள் அல்லாத அரசியல் வாழ்வின் எழுச்சியின் உச்சத்தில் சுறுசுறுப்பில் திளைத்துக்கொண்டிருக்கும் உங்களிடம் இருந்து விளக்கம் பெறலாம் என்கிற நப்பாசையை கொண்டது எனது தவறுதான் மன்னிக்கவும்//
ஸ்டாலின் குரு,
உங்களது முதல் கேள்வியை கொஞ்சம் திரும்ப படியுங்கள் அதில் கீழ்கண்ட கிளைக் கேள்விகள் என்னுள் அரும்ப வாய்ப்புள்ளதா எனபதை பரிசீலியுங்கள்.
நீங்க யார் எங்களை எடை போட? உங்களுக்கு எதற்கு நாங்கள் விளக்கம் கொடுக்க வேண்டும்?
அந்தளவுக்கு நீங்கள் என்ன ஈழ விடுதலையில் எங்களைவிட முக்கிய உரிமை பெற்றவரா? நீங்களும் நாங்களும் ஒன்றுதானே?
உங்களிடம் நாங்கள் சரியானவர்கள் என்று முத்திரை பெற வேண்டிய அவசியமென்ன?
அசுரன்
புலிகளையும், ஈழ விடுதலையையும் ஒன்று என்று சொல்லி ஈழ விடுதலையை ஒடுக்கும் இந்திய அரசுக்கும்.////
அடடா என்னப்பா ஆயிற்று உங்களுக்கு ?
உங்கள் வரையரறையின்படி இந்திய மற்றும் உலக ஏகாதிபத்திய அடிவருடிகளான புலிகள்,எப்பொழுது இந்திய மற்றும் உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகளாக உங்களுக்கு மாறினார்கள் என்று சொல்லவே இல்லை,
அப்படி இந்திய அரசு அவர்களை மதிப்பிடுகிறது(அதாவது புலிகள்தான் ஈழ் தேசிய விடுதலை போராட்டத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்துடன் முன்னெடுப்பவர்கள் என்று ) என்பதாக நீங்கள் கருதுகிறீர்களா ?
நிச்சயமாக அது உங்கள் கருத்தாக இருக்காதபோது
///புலிகளையும், ஈழவிடுதலையையும் ஒன்று என்று சொல்லி ஈழ விடுதலையை ஒடுக்க மறைமுகமாக உதவி செய்யும் பிழைப்புவாதிகளுக்கும் என்ன வேறுபாடு என்று சொல்லுங்கள் முதலில்///
இந்தியாவின் தெற்கு ஆசிய மேலாதிக்க கனவை நிறைவேற்ற புலிகளுக்கு எதிரான போரை நடத்தும் இந்திய அதிகார வர்க்கத்தின் கருத்துக்களுக்கும் புலிகள் மீதான உங்கள் கருத்துக்களுக்கும் இடையில் இருக்கும் மயிரிலழையிலான வேறுபாட்டில் புகுந்து ஆய்வு செய்கிற வேளையை எங்களை போன்ற இனவாதிகளுக்கு வைக்காமல் நீங்களே விளக்குங்கள் என்பதுதான் எனது கோரிக்கை
புலிகளையும், ஈழ விடுதலையையும் ஒன்று என்று சொல்லி ஈழ விடுதலையை ஒடுக்கும் இந்திய அரசுக்கும்.///
காமெடியாக தெரியவில்லையா உங்களுக்கே,
புலிகளை ஒடுக்கி ஈழ மக்களுக்கு தேசிய இன விடுதலையையை வாங்கி கொடுக்க இந்தியா விரும்புகிறது என்று சொல்ல வருகிறீர்களா ?
இந்திய அதிகார வர்க்கத்துக்கு எதிரான புலிகளின் எதிர்ப்பு வரையறுக்கப்பட்ட அளவிலேனும் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா ?
புலிகளையும், ஈழவிடுதலையையும் ஒன்று என்று சொல்லி ஈழ விடுதலையை ஒடுக்க மறைமுகமாக உதவி செய்யும் பிழைப்புவாதிகளுக்கும் என்ன வேறுபாடு என்று சொல்லுங்கள் முதலில்///
இந்திய அதிகார வர்க்கம் புலிகளுக்கு எதிராக நடத்திக்கொண்டிருக்கும் போரில் அவர்களை எதிர்த்து நிற்கும் புலிகளை ஆதரிப்பது எந்த வகையில் பிழைப்புவாதம் என்றும்,அது எவ்வாறு ஈழ விடுதலைக்கு பங்கம் விளைவிக்கும் என்பதையும் நேர்மையுடன் விளக்கவும்
நீங்க யார் எங்களை எடை போட? உங்களுக்கு எதற்கு நாங்கள் விளக்கம் கொடுக்க வேண்டும்?///
ஈழத்தை பற்றிய ஒரு கருத்தை முன் வைக்கும் நீங்கள் அதன் மீது தார்மீக பொறுப்பேற்று,அந்த கருத்துக்கு நிகழ்த்தப்படும் எதிர்வினைகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்றே கருதுகிறேன்
முன் அனுமாங்க்ங்களை வைத்துக்கொண்டு ஒரு விவாதத்தை அணுகுவதோ உங்கள் மீது முத்திரை குத்துவதோ எடை போடுவதோ எனக்கு தேவை இல்லாத விஷயம்
அப்படி கருதிகொண்டால் அது உங்களின் மனரீதியான பிரச்சனை அதற்கு நான் ஒன்றும் செய்ய இயலாது
அந்தளவுக்கு நீங்கள் என்ன ஈழ விடுதலையில் எங்களைவிட முக்கிய உரிமை பெற்றவரா? நீங்களும் நாங்களும் ஒன்றுதானே?///
ஒன்றா இல்லை மாறுபட்ட கருத்துகளை கொண்டவர்களா என்பதையும், எந்த அளவுக்கு ஈழ போராட்டத்துக்கு நேர்மையாக இருக்கிறோம் என்பதையும் கண்டறிய இந்த விவாதம் உதவும் என்று கருதுகிறேன்
உங்களிடம் நாங்கள் சரியானவர்கள் என்று முத்திரை பெற வேண்டிய அவசியமென்ன?///
உங்களுக்கு முத்திரை குத்துவது எனது நோக்கம் அல்ல எனது வேலையும் அல்ல,
ஒரு கருத்தையோ கேள்வியையோ முன் வைக்கும்போது அதுவே முத்திரை குத்துதலாக உங்களுக்கு தோன்றினால் முடிந்தால் உங்கள் கருத்தின் வலிமையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும்போது அதை உடைத்து காட்டுங்களேன்
//அதுவே முத்திரை குத்துதலாக உங்களுக்கு தோன்றினால் முடிந்தால் உங்கள் கருத்தின் வலிமையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கும்போது அதை உடைத்து காட்டுங்களேன்//
உங்களிடம் அப்படி உடைத்து நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். நான் ஆதரிக்கிற புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடு நடைமுறையில் நீருபித்துக் கொண்டிருப்பதை பாரா முகமாக இருந்து கொண்டு கண்ணை மூடிய பூனை போல பேசும் உங்களிடம் எதனை நான் நிரூபிக்க வேண்டும்?
//இந்தியாவின் தெற்கு ஆசிய மேலாதிக்க கனவை நிறைவேற்ற புலிகளுக்கு எதிரான போரை நடத்தும் இந்திய அதிகார வர்க்கத்தின் கருத்துக்களுக்கும் புலிகள் மீதான உங்கள் கருத்துக்களுக்கும் இடையில் இருக்கும் மயிரிலழையிலான வேறுபாட்டில் புகுந்து ஆய்வு செய்கிற வேளையை எங்களை போன்ற இனவாதிகளுக்கு வைக்காமல் நீங்களே விளக்குங்கள் என்பதுதான் எனது கோரிக்கை//
அதை உங்களைப் போன்ற இனவாதிகள் உங்களது சொந்த தோல்விகளில் மீள் பரிசீலனை செய்து கொள்ளுங்கள் என்பது எனது கோரிக்கை.
//அவர்களை எதிர்த்து நிற்கும் புலிகளை ஆதரிப்பது எந்த வகையில் பிழைப்புவாதம் //
வரலாற்று பொருள்முதல்வாதம் என்று ஒன்று உண்டு நண்பரே. அதனடிப்படையில் ஈழ போராட்டத்தை பரிசீலியுங்கள் என்று உங்களுக்கு ஆலோசனை கூறும் அளவில் நிறுத்திக் கொள்வதே சரி என்று கருதுகிறேன். முடிந்தால் உங்களது சொந்த முயற்சியில் படித்து, ஜீரணித்து புரிந்து கொள்ளுங்கள். நான் ஊட்டி விடுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள்.
//
ஈழத்தை பற்றிய ஒரு கருத்தை முன் வைக்கும் நீங்கள் அதன் மீது தார்மீக பொறுப்பேற்று,அந்த கருத்துக்கு நிகழ்த்தப்படும் எதிர்வினைகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்றே கருதுகிறேன்//
அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். கருத்துக்களுக்கான எதிர்வினைகளை, ஆனால் புரளிகளுக்கு?
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4913:2009-02-03-07-37-06&catid=277:2009&Itemid=76
மூன்று சகாப்த காலமாக நிலவிய உங்கள் அரசியல் முடிவுக்கு வரும் இந்த தருணத்தில், மக்களுக்காக ஒரு கணம் சிந்தியுங்கள். உங்கள் தவறுகளை நிவர்த்தி செய்யுங்கள். இதன் மூலம் எதிர்கால தலைமுறை தனக்காக போராடவும், இந்த தலைமுறை தான் இழைத்த வரலாற்றுத் தவறுகளை உணர்ந்து கொள்ளவும் உதவுங்கள்.
இன்று பலரும் மேக்கப் செய்து உங்களை பாதுகாத்து விடலாம் என்று நினைக்கின்றனர். ஏன் அப்படி முனைகின்றனரும் கூட. அது இனி சாத்திமில்லை என்பது, உங்களுக்கு நன்கு தெரியும். ஏன் இந்த நிலைமை? எதனால் இது நடந்தது? தற்போதாவது உங்கள் மீதான அழித்தொழிப்பு நிகழும் கணத்தில் கூட, உங்களால் வரலாற்றுக்கு சொல்ல கூடிய, தவறுகளை திருத்தக் கூடிய இறுதிச் சந்தர்ப்பங்கள் இன்னமும் உண்டு.
நாம் கடந்த மூன்று சகாப்தமும் உங்களுடன் ஒரு எதிர் போராட்டத்தை நடத்தியவர்கள். நாம் கோரியது எல்லாம், போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும்படிதான். இன்றும் அதைத்தான், இந்த கணத்திலும் நாம் கோருகின்றோம்.
வரலாறு உங்களை தூற்றக் கூடாது. இன்று உங்களைப் போற்றுபவர்கள் தான், நாளை உங்களை முதன்மையாக தூற்றுவார்கள். அப்போது உங்களின் சரியான பக்கத்தை, நாம் மட்டும் தான் காப்பாற்றுவோம்.
உங்கள் நாட்கள் எண்ணப்படும் இன்றைய நிலையில், இன்றும் நீங்கள் மக்களுக்கு செய்யக் கூடியதுண்டு.
1. நீங்கள் கடந்தகாலத்தில் மக்களுக்கு இழைத்த அனைத்து தவறுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அதை உணரும் வண்ணம், அதை பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்யுங்கள். நாளை அவர்கள் உங்களை மதிக்கும் வண்ணம், தவறை உணர்ந்ததற்காக நன்றி கூறும் வண்ணம், உங்கள் வரலாற்றை அவர்களுக்கு விட்டுச்செல்லுங்கள்.
2. நீங்கள் மக்களை விடுவிக்காவிட்டால், அவர்களின் அழிவுக்கு அவர்களே பொறுப்பு என்று பேரினவாதம் கொக்கரித்துள்ளது. பேரினவாதம் உங்கள் இரத்த உறவுகளையும் உங்களுடன் சேர்த்து கொல்வதை, நீங்கள் அனுமதிக்க போகின்றீர்களா!? தயவு செய்து அவர்களை விடுவித்து, மக்கள் நலன் சார்ந்த உணர்வுடன் வரலாற்றை முடியுங்கள். தவறுகள் தவறாக இதனுடனாவது நிறுத்திவிடுங்கள்.
3. உங்களுடன் சண்டையில் நிற்கின்றவர்களில், சண்டை செய்ய விரும்பாதவர்களை விடுவியுங்கள். அவர்களால் சண்டை செய்ய முடியாது. இந்த தவறையும் திருத்திக் கொண்டு, மொத்த தவறுகளையும் ஓத்துக் கொண்டு, அதற்காக போராடுங்கள். அதன் பின் ஒருநாளும் சரண் அடைந்து விடாதீர்கள். மக்களுக்காக போராடி மரணியுங்கள். வரலாறு அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கின்றது.
4. நாம் ஏன் தோற்றுப்போனோம்? அதை வழமையான உங்கள் பதிலுக்கு பதில், மனித வரலாற்றில் தேடுங்கள். அதிகாரம் முதல் நவீன ஆயுதங்கள் எல்லாம் இருந்தும், பெரும் படையிருந்தும் ஏன் தோற்றோம்? வரலாற்றை தீர்மானிப்பவர்கள் மக்கள். இதை கடந்தகால மனித வரலாறு காட்டுகின்றது. ஏன் உங்கள் வரலாறு இன்று காட்டுகின்றது. இதை இன்றாவது உணர்ந்து, அதை ஓத்துக்கொண்டு, உங்கள் காலத்தில் அதை திருத்திக் கொள்வதன் ஊடாக, மனித வரலாறு உங்களை போற்றவையுங்கள். தியாகங்களை வரலாறு கொச்சைப்படுத்த விட்டுவிடாதீர்கள்.
கடந்த வரலாற்றில் அதன் தவறுகளையும் உணர்வதன் மூலம், இன்றே வரலாற்றை மாற்றமுடியும். நாளைய தலைமுறை அதை உணரும்; வண்ணம், மக்களை இன்றே நேசிக்க முனையுங்கள். இந்தக் கணமே, அதை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.
மூன்று சகாப்தமாக மனிதத்தை சிதைந்து சின்னாபின்னமாக்கிய உங்களின் அரசியல் வரலாற்றில் இருந்து, உங்கள் இறுதி மூச்சை மனிதத் தன்மையாக்குங்கள். அதை வரலாற்றில் புதைத்து விடாதீர்கள். மொத்த தவறையும் உணர்ந்து, வரலாற்றை சரி செய்யுங்கள்.
பி.இரயாகரன்
03.02.2009
உங்களிடம் அப்படி உடைத்து நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன்.//
நல்லது கைப்புள்ள கதாபாத்திரம்தான் நினைவுக்கு வருகிறது
நான் ஆதரிக்கிற புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடு நடைமுறையில் நீருபித்துக் கொண்டிருப்பதை பாரா முகமாக இருந்து கொண்டு கண்ணை மூடிய பூனை போல பேசும் உங்களிடம் எதனை நான் நிரூபிக்க வேண்டும்?//
பூனை கண்ணை மூடிக்கொண்டு இருக்கும் உவமானம் என்னை விட உங்களுக்கே அதிகம் பொருந்தும் என்று நினைக்கிறேன்,உங்கள் திட்டங்கள் கருத்துகள் அடிப்படையில் பிரச்சனையை அணுகி யதார்த்தை புறக்கணிக்கும் உங்கள் நடைமுறை எதை நிருபித்துக்கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அறிவார்கள்
இவ்வளவு காலமும் புலிகளுக்கு எதிராக நாம் செய்துகொண்டிருந்த விமர்சனத்தை இன்றைக்கு இந்திய துணை ஏகாதிபத்திய அரசு புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்துகொண்டிருக்கும் காலத்தில் எப்படி முன்னெடுப்பது என்பதில் உங்களுக்கு உள்ள குழப்பம் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல இருப்பதில் ஆச்ச்சரியம் இல்லை
அதை உங்களைப் போன்ற இனவாதிகள் உங்களது சொந்த தோல்விகளில் மீள் பரிசீலனை செய்து கொள்ளுங்கள் என்பது எனது கோரிக்கை.//
நேரமிருந்தால் அந்த தோல்விகள் பட்டியலிடவும்
வரலாற்று பொருள்முதல்வாதம் என்று ஒன்று உண்டு நண்பரே. அதனடிப்படையில் ஈழ போராட்டத்தை பரிசீலியுங்கள் என்று உங்களுக்கு ஆலோசனை கூறும் அளவில் நிறுத்திக் கொள்வதே சரி என்று கருதுகிறேன்.///
அறிவுரைக்கு நன்றி
முடிந்தால் உங்களது சொந்த முயற்சியில் படித்து, ஜீரணித்து புரிந்து கொள்ளுங்கள். நான் ஊட்டி விடுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள்.//
நான் எதிர்பார்கவும் இல்லை நன்றி
அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். கருத்துக்களுக்கான எதிர்வினைகளை, ஆனால் புரளிகளுக்கு?//
கருத்தா புரளியா என்பதை தீர்மானிக்கும் அளவுகோல் என்ன ? அல்லது அப்படிப்பட்ட அளவுகோலை படிப்பவர்களுக்கு விட்டுவிடாமல் அதை நீங்களே முடிவு செய்துகொள்வது எந்த வகையான செயல் ?
வார்த்தைகள் கோர்வையாகவும் உணர்வுபூர்வமாகவும் தொனித்தாலும் இரயாகரனின் எழுத்துகளுக்குள் எந்த உள்ளடக்கத்தையும் காண இயலவில்லை
மூன்று சகாப்த காலமாக நிலவிய உங்கள் அரசியல் முடிவுக்கு வரும் இந்த தருணத்தில்,///
எந்த இந்திய அதிகார வர்க்கத்த்தால், உருவாக்கப்பட்டு வளர்க்கபட்டதாகவும் அவர்களுக்கு விசுவாசமானவர்களாகவும் உங்களால் காலம் பூராவும் விமர்சிக்கப்பட்ட புலிகளை அதே இந்திய அதிகார வர்க்கம் இன்றைக்கு ஏன் ஒடுக்க முனைந்தது என்பதன் ரகசியத்தை கண்டறிய முயற்சி செய்யுங்கள் இரயாகரன் அவர்களே
ஏன் தங்களுக்கு சார்பான புலிகளின் அரசியலை இந்தியா முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது என்பதற்கு உங்களின் பதில் என்ன ?
மக்களுக்காக ஒரு கணம் சிந்தியுங்கள். உங்கள் தவறுகளை நிவர்த்தி செய்யுங்கள். இதன் மூலம் எதிர்கால தலைமுறை தனக்காக போராடவும், இந்த தலைமுறை தான் இழைத்த வரலாற்றுத் தவறுகளை உணர்ந்து கொள்ளவும் உதவுங்கள்.//
அப்புறம் நல்லாத்தான் எழுதுறீங்க )))
இன்று பலரும் மேக்கப் செய்து உங்களை பாதுகாத்து விடலாம் என்று நினைக்கின்றனர். ஏன் அப்படி முனைகின்றனரும் கூட. அது இனி சாத்திமில்லை என்பது, உங்களுக்கு நன்கு தெரியும். ஏன் இந்த நிலைமை? எதனால் இது நடந்தது? தற்போதாவது உங்கள் மீதான அழித்தொழிப்பு நிகழும் கணத்தில் கூட, உங்களால் வரலாற்றுக்கு சொல்ல கூடிய, தவறுகளை திருத்தக் கூடிய இறுதிச் சந்தர்ப்பங்கள் இன்னமும் உண்டு///
ஏன் புலிகள் மீதான அழித்தொழிப்பு இந்திய அரசாலும் உலக ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளாலும் மேற்கொள்ளப்படுகிறது என்பதற்கான பதிலை தேட நீங்கள் முதலில் முயற்சி செய்து உங்கள் பார்வையின் தவறை திருத்திக்கொள்ளுங்கள் முதலில்
. நீங்கள் கடந்தகாலத்தில் மக்களுக்கு இழைத்த அனைத்து தவறுகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அதை உணரும் வண்ணம், அதை பகிரங்கமாக சுயவிமர்சனம் செய்யுங்கள். நாளை அவர்கள் உங்களை மதிக்கும் வண்ணம், தவறை உணர்ந்ததற்காக நன்றி கூறும் வண்ணம், உங்கள் வரலாற்றை அவர்களுக்கு விட்டுச்செல்லுங்கள்.
இதில் கூட ஓரளவு மட்டுமே உடன்பட முடியும்
நீங்கள் மக்களை விடுவிக்காவிட்டால், அவர்களின் அழிவுக்கு அவர்களே பொறுப்பு என்று பேரினவாதம் கொக்கரித்துள்ளது. பேரினவாதம் உங்கள் இரத்த உறவுகளையும் உங்களுடன் சேர்த்து கொல்வதை, நீங்கள் அனுமதிக்க போகின்றீர்களா!? தயவு செய்து அவர்களை விடுவித்து, மக்கள் நலன் சார்ந்த உணர்வுடன் வரலாற்றை முடியுங்கள். தவறுகள் தவறாக இதனுடனாவது நிறுத்திவிடுங்கள்///
புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் என்கிற இந்திய இலங்கை அரசுகளின் குரலை இது பிரதிபலிகவில்லையா ?
அவர்களும் மக்களை அனுப்பி விடுங்கள் என்று மிரட்டுகிறார்கள்,நீங்களும் அவர்களின் உயிர் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் அனுப்பி விடுங்கள் என்று சற்று தோணி மாற்றி கேட்கிறீர்கள் இரண்டுக்கும் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை என்னால்
அரசு பாதுகாப்பு பகுதி என்று அறிவித்துவிட்டு அங்க வரும் மக்களையே கொல்லும் அரசை நம்பி புலிகள் மக்களை அனுப்ப வேண்டும் அடடா என்ன ஒரு தெளிவான கரிசனையான அரசியல் கோரிக்கை
உங்களுடன் சண்டையில் நிற்கின்றவர்களில், சண்டை செய்ய விரும்பாதவர்களை விடுவியுங்கள். அவர்களால் சண்டை செய்ய முடியாது. இந்த தவறையும் திருத்திக் கொண்டு, மொத்த தவறுகளையும் ஓத்துக் கொண்டு, அதற்காக போராடுங்கள். அதன் பின் ஒருநாளும் சரண் அடைந்து விடாதீர்கள். மக்களுக்காக போராடி மரணியுங்கள். வரலாறு அதைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கின்றது.///
தங்களுக்காக மடிகிறவர்கள் யார் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிந்தே உள்ளனர்
நாம் ஏன் தோற்றுப்போனோம்?///
உலக ஏகாதிபத்திய நாடுகள் துணை ஏகாதிபத்தியமான இந்தியாவின் ராணுவ ஆலோசனைகள்,வாரி வாரி வழங்கப்பட்ட ஆயுத நிதி உதவிகள்,ஒற்றை துருவ ஏகாதிபத்தியமாக நீடித்துகொண்டிருக்கும் உலக அரசியல் அரங்கில் எந்த ஒரு நாட்டிம் ஆதரவுன் உதவியும் இல்லாமல் தனித்து நின்று மூன்று வருடங்ககளா புலிகள் சண்டையிட்டது நீங்கள் சொன்ன மக்கள் மயபடுத்தபடாத போராட்டத்தின் மூலம்தானா என்பதை நீங்ககே உங்களை கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்
அதை வழமையான உங்கள் பதிலுக்கு பதில், மனித வரலாற்றில் தேடுங்கள். அதிகாரம் முதல் நவீன ஆயுதங்கள் எல்லாம் இருந்தும், பெரும் படையிருந்தும் ஏன் தோற்றோம்?///
எப்படி எப்படி
ஏழு நாடுகள் வழங்கிய அளப்பரிய ராணுவ ஆலோசனைகள்,துல்லியமாக ஆளில்லா விமானங்கள் மூலம் காட்டிகொடுக்கப்பட்ட புலிகளின் நிலைகள்.இந்தியாவால் தடை செய்யப்பட்ட ஆயுத விநியோகம்,கப்பல் கப்பலாக இலங்கை அரசுக்கு அளிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவைகளை வைத்துக்கொண்டு அசுரத்தனமாக தாக்குதல் நடத்திய இலங்கை அரசை எதிர்த்து புலிகள் போராடியிருக்கின்றனர் என்கிற விசயத்தை தவிர்த்துவிட்டு வெறுமே இதை புலிகளின் அரசியல் ரீதியான தோல்வி என்று பேச எவ்வாறு இயலும் என்று தெரியவில்லை
//இதில் கூட ஓரளவு மட்டுமே உடன்பட முடியும்//
எந்தளவுக்கு?
//ஏன் புலிகள் மீதான அழித்தொழிப்பு இந்திய அரசாலும் உலக ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளாலும் மேற்கொள்ளப்படுகிறது //
நீங்களே அந்த அரிய கண்டுபிடிப்புகளை முன் வையுங்களேன்
//கருத்தா புரளியா என்பதை தீர்மானிக்கும் அளவுகோல் என்ன ? அல்லது அப்படிப்பட்ட அளவுகோலை படிப்பவர்களுக்கு விட்டுவிடாமல் அதை நீங்களே முடிவு செய்துகொள்வது எந்த வகையான செயல் ?//
இந்திய ஆளும் கும்பலுடன் எம்மை அடையாளப்படுத்தும் கேள்வி உங்களிடமிருந்து வர வேண்டிய அவசியமென்ன? அப்படி வரும் கேள்வி/சந்தேகம் ஒரு பிழைப்புவாத பன்றியிடமிருந்தோ அரசியல் விழிப்புணர்வற்ற ஒரு சாதரண வாசகனிடமிருந்தோ வரலாம் உங்களிடமிருந்து வந்தால் அதன் பெயர் புரளிதான்.
அந்த கேள்விக்கு உங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டால் நமது உறவு சுமுகமாகும் சாத்தியக் கூறு உண்டு
அசுரன்
//தங்களுக்காக மடிகிறவர்கள் யார் என்பதை தமிழ் மக்கள் நன்கு அறிந்தே உள்ளனர்//
புலிகளின் வரலாற்று பங்களிப்பில் நிறைகளும் உண்டு. இதோ ரயாகரனின் வரிகளில்
""
வரலாறு உங்களை தூற்றக் கூடாது. இன்று உங்களைப் போற்றுபவர்கள் தான், நாளை உங்களை முதன்மையாக தூற்றுவார்கள். அப்போது உங்களின் சரியான பக்கத்தை, நாம் மட்டும் தான் காப்பாற்றுவோம்.
"""
//
அரசு பாதுகாப்பு பகுதி என்று அறிவித்துவிட்டு அங்க வரும் மக்களையே கொல்லும் அரசை நம்பி புலிகள் மக்களை அனுப்ப வேண்டும் அடடா என்ன ஒரு தெளிவான கரிசனையான அரசியல் கோரிக்கை//
முடிவை மக்களிடம் விடுங்கள் மக்களின் பினாமியாக செயல்பட்டதால்தானே இன்றைய நிலைக்கு வந்து சேர்ந்துள்ளோம்
//ஏன் தங்களுக்கு சார்பான புலிகளின் அரசியலை இந்தியா முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறது என்பதற்கு உங்களின் பதில் என்ன ?//
மேலேயுள்ளது ரயாகரனின் கேள்வி
//நல்லாத்தான் எழுதுறீங்க///
இது உங்களது எதிர்வினை. புலிகளின் அரசியலை விமர்சனமின்றி அரவணைக்கும் உங்களது பதில் இதுதான் எனில் உங்களிடம் கருத்து ரீதியான வளர்ச்சியை நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? எந்த அடிப்படையில் விவாதம் செய்ய முடியும்?
இப்படி ஒரு யுத்தத்தை இன்னும் ஒரு ஐம்பது வருடம், நூறு வருடம் கூட நடத்தலாம். புலிகளுக்கும் கூட அதுதான் நோக்கம் போலும் ;-).
ஈழ பிரச்சினைக்கும், மக்களுக்கும் உங்களது பெருமிதமிகு யுத்த கள வெற்றிகளும், தாக்குபிடிப்புகளும் பெற்று தந்தது ஒரு சட்டி ரத்தம் தானே?
அரசியலற்ற ராணுவ வழி பாதை இப்படித்தான் மக்களை மறந்து, அவர்களின் துயரை மறந்து பேசிக் கொண்டிருக்கும். ரயாகரன் சரியாகத்தான் சொல்கிறார்: "இன்றைக்கு புலிகளை விமர்சனமின்றி தூக்கி வைத்து ஆடுபவர்கள் நாளை அவர்களை தூற்றும் போது..." என்று.
//புலிகள் சண்டையிட்டது நீங்கள் சொன்ன மக்கள் மயபடுத்தபடாத போராட்டத்தின் மூலம்தானா என்பதை நீங்ககே உங்களை கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்//
மக்கள் மயமப்படுத்துவது என்பதை இந்தளவுக்கு கொச்சையாக ஒரு புலி ஆதரவாளனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் :-).... நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு ஆயுதம் கொடுத்து அணி திரட்டுவதன் பெயர் மக்களை அணி திரட்டுவதல்ல. அதனைத்தான் நீங்கள் கருதுகிறீர்கள் எனில் அங்கு உண்மையிலேயே புலிகளுக்கு மக்களை திரட்டி தருவது சிங்கள ராணுவம்தான் :-)
//இதை புலிகளின் அரசியல் ரீதியான தோல்வி//
ராணுவ ரீதியான யுத்த தந்திர செயல்பாடுகளையே அரசியல் ரீதியான வெற்றியாக முன்னிறுத்தும் புலி மனப்பாங்குதான் உங்களிடம் இப்படி வெளிப்படுகிறது. இதனைச் சொல்ல மார்க்ஸியம் தேவையில்லை. இது சுத்தமான ராணுவவாத கண்ணோட்டம். பிறகு ஏன் மார்க்ஸிய போதம் பெற விவாதம் செய்ய வந்ததாக போலி நடிப்பு?
//நீங்கள் சொன்ன மக்கள் மயபடுத்தபடாத போராட்டத்தின் மூலம்தானா எ//
அது சரி ஈழத் தமிழ் மக்கள் உள்ள வன்னி தவிர்த்த பிற பகுதிகளில் உள்ள இருபது லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் மயப்படுத்தப்பட்டு தொலைக்காட்சியில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்களோ?
ஸ்டாலின் குரு,
உங்களது தனிப்பட்ட மன எழுச்சிகளுக்கு ஏற்ப வரலாற்றையும், யாதார்த்தத்தையும் உருவகப்படுத்திக் கொள்ளும் கற்பனையிலிருந்து வெளியே வாருங்கள்.
hi cr. asuran ... this is my response to Feb'2009's DYFI "ilaingar muzakkam"s editorial
முட்டாள்தனமான தலையங்கம் இது. வேலையில்லை சுகாதர வசதியில்லை என்பதற்காக நடப்பதல்ல ஈழ மக்களின் போராட்டம். உங்களுக்கு ஆயுத்ம்தான் பிரச்சினை என்றால் அதனை நேரடியாக சொல்லலாமே..ஏன் ஒளிவு மறைவு..
தேசிய இனங்கள் எந்த சூழலில் பிரிந்து செல்லலாம் என தோழர் லெனின் சொன்னது இது. ''எந்த ஒரு தேசத்துக்கோ அல்லது மொழிக்கோ சிறப்பு சலுகை எதுவும் கிடையாது; ஒரு தேசிய சிறுபான்மையினரைப் பொறுத்தவரை மிகச் சிறு அளவுகூட ஒடுக்குமுறையோ அநீதியோ இருக்கக்கூடாது. இவைதாம் உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தின் கோட்பாடுகள் ஆகும். (லெ.தொ.நூ. 19.91, ஒப்: 243).
வரப்போகிற உலகப் புரட்சியின் தீர்மானமான போர்களில் தேசிய விடுதலை என்பதை முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ள உலக மக்களில் பெரும்பான்மையோரது இயக்கம், முதலாளியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானதாகத் திரும்பும் என்பதும், நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகக் கூடுதலான புரட்சிகரப் பங்கை வகிக்கக் கூடும் என்பதும் தெளிவாகிவிட்டது. (லெ.தொ.நூ. 32. 482)
தேசிய ஒடுக்குமுறையைத் துடைத்தெறிய, தன்னாட்சிப்பகுதிகளை உருவாக்குவது மிகவும் முக்கியம், அவை எவ்வளவு சிறியதாகவும் இருக்கலாம். இவை முற்றிலும் ஓரின மக்கள் தொகையினரைக் கொண்டவையாக இருக்க வேண்டும். நாடு முழுவதிலும் - ஏன் - உலகம் முழுவதிலுமே சிதறிக் கிடக்கின்ற அந்தந்த தேசிய இன மக்களை ஈர்க்கக்கூடிய பகுதிகளாக இருக்க வேண்டும். அவர்கள் எல்லாவகை உறவுகளையும் சுதந்திரமான இணைப்புகளையும் ஏற்படுத்தி கொள்ளக்கூடிய தன்னாட்சிப் பகுதிகளாக இருக்க வேண்டும். (லெ.தொ.நூ. 20.50)
ஐடியலான முரணற்ற முழுமையான ஜனநாயக குடியரசு பற்றிய லெனின் (லெ.தொ.நூ. 19.427) சொன்னது '' இவ் அடிப்படை சட்டம், எல்லா தேசங்களுக்கும் மொழிகளுக்கும் முழுச் சமத்துவத்தை உத்திரவாதம் செய்ய வேண்டும்; எந்த ஒரு கட்டாய ஆட்சி மொழியையும் ஏற்காததாக இருக்க வேண்டும். சொந்த மொழிகள் அனைத்திலும் கல்விபுகட்டுகிற பள்ளிகளை மக்களுக்கு வழங்குகிற ஒன்றாக இருக்க வேண்டும். எந்த ஒரு தேசத்துகக்கும் தனிச்சலுகை வழங்குவதையும், தேசிய சிறுபான்மையினரின் உரிமைக்ள் மீது கை வைப்பதையும் தடை செய்கின்ற சட்டமாக இருக்க வேண்டும்.''
So லெனின் முட்டாள்தனமாக பேசி உள்ளாரா ? அல்லது நீங்களா ? என்பதை தெளிவு படுத்துங்கள்.
தொன்மை சமூகம் நாடாள வேண்டும என்ற ஆவலில் தோன்றியதா ஈழமக்களின் போராட்டம்? வரலாறு பாமர மக்களுக்கு தெரிந்த அளவு கூடவா தங்களை மார்க்சியவாதிகள் என்ச் சொல்லிக் கொள்பவர்களுக்கு தெரியாது. அதிகாரத்தின் மீதான பற்று என நீங்கள் சொல்லியிருப்பது சுதந்திரத்திற்கான தாகத்தை. மேலே கண்ட லெனின் வாசகங்களை மீண்டும் படியுங்கள். நீங்கள் ஈழத்தை கேவலப்படுத்தவில்லை. மாறாக லெனினைக் கேவலப்படுத்தி உள்ளீர்கள்.
/“இதற்கும் மேலே சென்று’’ இந்திய அரசு இலங்கையை வலியுறுத்துவது என்ற எதிர்பார்ப்பு ஒரு வித மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது” என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்./
இது உண்மையான கூற்று நீங்கள் எதனையும் புரிந்து கொள்ள மறுப்பது என்ற ஜனநாயப்பண்பை எப்போதே பெற்று உள்ளீர்கள். பிராந்திய வல்லரசாக, அமெரிக்காவின் தெற்காசியப் பேட்டை ரவுடியாக இந்தியா உள்ளது என அறிவுஜீவிகள் விமர்சித்தால் பாஜக வைவிட உங்களுக்குதான் கோபம் வரும்போல தெரிகின்றது. என்ன செய்ய உங்களது கொள்கையை விட சொம்நாத் சட்டர்ஜி காட்டிய நாடாளுமன்ற விசுவாசம் அதற்கு வவாய்ப்பு கிடைக்காத தங்களைப் போன்றோருக்கு தேசாபிமானமாக வெளிப்படுகின்றது, தேச ஆளும் வர்க்கம் ஒரு பேட்டை ரவுடியாக இருந்தால் கூட.
/ தமிழகத்தில் நீண்ட காலமாக இருக்கிற சமூகக் கொடுமைகளில் ஒன்றாக தீக்குளிப்பும் நீடிக்கிறது. போராடி வெல்வது, வெல்வதற்காகப் போராடுவது, தமிழ் இலக்கிய சான்றாக இருக்கிறபோது, தன்னைத் தானே அழித்துக் கொல்வதும், அதை அரசியலாக்க முயற்சிப்பதும், இரைஞ்சுவதற்கு ஒப்பாகும்/தீக்குளிப்பது சமூகக் கொடுமைதான் அது சதி என்ற வடிவில் வந்தால். சக மனிதர்கள் மீது இன ஒழிப்பு நடக்கும்போது வாளாவிருக்கும் உங்களைப் போன்ற இளைஞர் இயக்கங்கள் இருக்கும் தேசத்தில் தீக்குளித்துதான் ஒரு இளைஞன் உங்களது கள்ள மவுனத்தை உடைக்க முடிகின்றதென்றால் அதற்காக முத்துக்குமரன் வெட்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. முத்துக்குமரன் இந்திய அரசுட்ன போராடவில்லை, கள்ள மவுனம் இன்றளவும் சாதிக்கும் போலி ஜனநாயக, கம்யூனிச வாதிகளின் மன்ச்சாட்சிக்கு எதிராகத்தான் போராடி உள்ளான். வரலாறு தெரிந்தால் வியத்நாம் புத்தபிக்குகள் அமெரிக்க ஏகாதிபத்திய போர்வெறிக்கு எதிராக அறுபதுகளில் நிகழ்த்திய தீக்குளிப்பு வடிவத்தை என்னவென்று சொல்வீர்கள்.
அதெல்லாம் இருக்கட்டும். தமிழக இளைஞர்களை வாயைக் கட்டி போராட்டம், நாமம் போட்டு போராடுவது, கழுதையிடம் மனுக் கொடுத்து அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடுவது, திருவோடு எடுத்து போராடுவது, கோவணம் கட்டிப் போராடுவது, ....இப்படி இரைஞ்சுகினற் வடிவங்களையெல்லாம் போராட்டம் என அழைத்துக் கொண்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் தாங்கள் என்பது மறந்துவிட்டதா?
/ “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம்” என்றான் பாரதி. இதற்கு முரணாக ஒருவன் அழிந்து தமிழனை காக்கலாம் என்பது, பகுத்தறிவு அற்றது./
சுய அறிவில்லாமல் அல்லது லாஜிக் இல்லாமல் எழுதப்பட்ட ஒரு வாக்கியம் பகுத்தறிவு பற்றிப் பேசுவது முரண்நகை. கடைசியாக பேச்சுவார்த்தை அதாங்க அரசியல் தீர்வுன்னு நீங்க சொல்ற கட்டப்பஞ்சாயத்துதான் வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் சமத்துவவாதிகள். இப்போரை ராஜபக்ஷ நிறுத்தவும் கோருவீர்கள் எனக் கருதுகிறேன். அது சரி... அதுக்கு யாரிடம் வலியுறுத்து போராடுவீர்கள். இந்தியாவிடமா? ஒரு நிமிசம். இந்தியாவும் டாங்கிகள், ரேடார்களோடு தனது ராணுவத்தையும் அனுப்பியுள்ளது. என்ன சொல்லி தப்பிக்க போறீங்க..
//இதில் கூட ஓரளவு மட்டுமே உடன்பட முடியும்//
எந்தளவுக்கு?
போதுமான அளவு இல்லாவிட்டாலும் அவர்கள் தங்களுக்குள் சுய விமர்சனங்களை தொடர்ந்து செய்துகொண்டு இருப்பதால்தான் இந்த அளவுக்கு போராட்டத்தை நடத்தி செல்ல இயன்றிருக்கிறது
தோழர் மாவோவின் வார்த்தைகளில் சொன்னால் விமர்சனத்தை அமைப்புக்குள்ளும் வெளியிலேயும் அனுமதிக்காத ஒரு அமைப்பு வளருவது என்பது சாத்தியமே இல்லை
புலிகள் எப்படி வளர்ந்தார்கள் ராணுவ ரீதியாகவும் போதுமான அளவு இல்லாவிட்டாலும் அத்தியாவசியமான அளவுக்கு அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை தவிர்த்ததனாலா ?
//ஏன் புலிகள் மீதான அழித்தொழிப்பு இந்திய அரசாலும் உலக ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளாலும் மேற்கொள்ளப்படுகிறது //
நீங்களே அந்த அரிய கண்டுபிடிப்புகளை முன் வையுங்களேன்//
வாழை குழைத்துக்கொண்டு இந்திய தரகு பார்ப்பனிய அரசு அந்நிய எகாதிபத்தியகளுக்கு காட்டுகிற விசுவாசத்தை, இலங்கை அரசு இந்திய மற்றும் அந்நிய ஏகாதிபத்திய அரசுகளுக்கு காட்டுகிற விசுவாசத்தோடு ஒப்பிட முடியும்
வேளையில் நேபாளத்தில் ஒரு குறிப்பிட்ட வரலாற்று சூழலில் புரட்சியையும் மக்களின் வாழ்வுக்கான போராட்டத்தையும் முன்னெடுக்கும் மாவோயிஸ்ட்டுகள் அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கும் அதன் முதலீடுகளுக்கும் காட்டும் வரையறுக்கப்பட்ட எதிர்ப்பை ஒற்றை துருவ உலக மய சூழலில் தேசிய இன விடுதலை போரை முன்னெடுக்கும் புலிகளோடும அவர்களின் வரையறுக்கப்பட்ட எதிர்ப்போடும் ஏன் ஒப்பிட கூடாது ?
முற்று முழுதாக சிங்கள பகுதிகளை அடகு வைக்க முனையும் இலங்கை தரகு முதலாளித்துவ அரசையும்,அதன் அதிகார வர்க்கத்தையும் எதிர்த்து போரிடுவதன் மூலம், புலிகள் தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள உழைக்கும் வர்க்கத்துக்கும் வழி காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
சிங்கள பெரும் தேசிய வியாதிகளின் தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் எதிரான போருக்கு முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதன் மூலம், தங்களின் சிங்கள பகுதிகள் மற்றும் தமிழ் ஈழ பகுதிகளில் உள்ள வளங்களின் மீதான பிடியை இறுக்கி கொள்ளவும் பேரம் பேசும் திறனை உயர்த்தி கொள்ளவுமே இந்திய துணை வல்லரசு உள்ளிட்ட மற்ற வல்லரசுகளும் புலிகளுக்கு எதிரான போரை நடத்திக்கொண்டிருக்கின்றன.
இந்திய ஆளும் கும்பலுடன் எம்மை அடையாளப்படுத்தும் கேள்வி உங்களிடமிருந்து வர வேண்டிய அவசியமென்ன? அப்படி வரும் கேள்வி/சந்தேகம் ஒரு பிழைப்புவாத பன்றியிடமிருந்தோ அரசியல் விழிப்புணர்வற்ற ஒரு சாதரண வாசகனிடமிருந்தோ வரலாம் உங்களிடமிருந்து வந்தால் அதன் பெயர் புரளிதான்.///
ஒரு அரசியல் விழிப்புணர்வு பெற்ற மனிதன், சமூக அக்கறை உள்ளவன்,ஒரு மார்க்சியவாதி என்கிற அடையாளங்களையெல்லாம் எனக்கு நானே சுமத்திக்கொண்டு அகங்காரம் பிடித்து சாதாரண உழைக்கும் வர்க்க மனித உயிர்களிடமிருந்து என்னை வேறுபடுத்திகொள்வதில் எனக்கு உடன்பாடில்லை,
எனக்கு நீங்கள் வழங்க முனையும் தகுதியை நிராகரித்து ஒரு பாமரனாகவே இருக்க விரும்புகிறேன்
ஒரு சராசரி தமிழனின் புரளியாகவே (கேள்வியாகவே நீங்கள் அதை கருதலாம் )
அந்த கேள்விக்கு உங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டால் நமது உறவு சுமுகமாகும் சாத்தியக் கூறு உண்டு///
வருத்தம் தெரிவிக்கும் தேவையை நான் உணரவில்லை
வரலாறு உங்களை தூற்றக் கூடாது. இன்று உங்களைப் போற்றுபவர்கள் தான், நாளை உங்களை முதன்மையாக தூற்றுவார்கள். அப்போது உங்களின் சரியான பக்கத்தை, நாம் மட்டும் தான் காப்பாற்றுவோம்///
ஹி ஹி
//
அரசு பாதுகாப்பு பகுதி என்று அறிவித்துவிட்டு அங்க வரும் மக்களையே கொல்லும் அரசை நம்பி புலிகள் மக்களை அனுப்ப வேண்டும் அடடா என்ன ஒரு தெளிவான கரிசனையான அரசியல் கோரிக்கை//
முடிவை மக்களிடம் விடுங்கள் மக்களின் பினாமியாக செயல்பட்டதால்தானே இன்றைய நிலைக்கு வந்து சேர்ந்துள்ளோம்//
மக்களுக்கான போராளிகளா இல்லை மக்களுக்கான பினாமிகளா என்பதை ஈழ் மக்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்,கணினி கிடைத்தது என்று தட்டிகொண்டிருக்கும் கனவான்களிடம் அல்ல
இது உங்களது எதிர்வினை. புலிகளின் அரசியலை விமர்சனமின்றி அரவணைக்கும் உங்களது பதில் இதுதான் எனில் உங்களிடம் கருத்து ரீதியான வளர்ச்சியை நான் எப்படி எதிர்பார்க்க முடியும்? எந்த அடிப்படையில் விவாதம் செய்ய முடியும்?///
புலிகள் மீது எங்களுக்கு எந்த விமர்சனமும் இல்லை என்று எதை கொண்டு முடிவு செய்தீர்கள் ?
அது இரயாக்ரனுக்கான கேள்வி என்று சொல்லியிருக்கிறேன்
அடுத்த நல்லாத்தான் எழுதிரிங்க என்பது அதே பாராவில் உள்ள அடுத்த பத்திகானது
ஈழ பிரச்சினைக்கும், மக்களுக்கும் உங்களது பெருமிதமிகு யுத்த கள வெற்றிகளும், தாக்குபிடிப்புகளும் பெற்று தந்தது ஒரு சட்டி ரத்தம் தானே?
அரசியலற்ற ராணுவ வழி பாதை இப்படித்தான் மக்களை மறந்து, அவர்களின் துயரை மறந்து பேசிக் கொண்டிருக்கும். ரயாகரன் சரியாகத்தான் சொல்கிறார்: "இன்றைக்கு புலிகளை விமர்சனமின்றி தூக்கி வைத்து ஆடுபவர்கள் நாளை அவர்களை தூற்றும் போது..." என்று.///
கடந்த பத்தாண்டுகளாக புலிகளும் மக்களும் சேர்ந்து கட்டி அமைத்த தங்கள் வாழ்வுக்கான கட்டமைப்பை அறியாமலும் அந்த மனித உழைப்பின் வியர்வையின் மதிப்பை இன்று செங்கல் செங்கலாக உடைத்தெறியும் சிங்கள ராணுவத்தின் குரூரத்தையும் காமாலை கண் கொண்டவர்களால்தான் காணாமல் இருக்க முடியும்
மக்கள் மயமப்படுத்துவது என்பதை இந்தளவுக்கு கொச்சையாக ஒரு புலி ஆதரவாளனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் :-).... நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு ஆயுதம் கொடுத்து அணி திரட்டுவதன் பெயர் மக்களை அணி திரட்டுவதல்ல. அதனைத்தான் நீங்கள் கருதுகிறீர்கள் எனில் அங்கு உண்மையிலேயே புலிகளுக்கு மக்களை திரட்டி தருவது சிங்கள ராணுவம்தான் :-)///
இந்தியர்களால் இயக்கப்படும் பாகிஸ்தானிய ஆர்டிலரிகள் முன் அந்த நாலு இலட்சம் போரையும் நிறுத்தி ஆர்பாட்டம் செய்வதுதான் ஒரு நல்ல மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம் போல )))))))))))))
ஏழு நாடுகள் வழங்கிய அளப்பரிய ராணுவ ஆலோசனைகள்,துல்லியமாக ஆளில்லா விமானங்கள் மூலம் காட்டிகொடுக்கப்பட்ட புலிகளின் நிலைகள்.இந்தியாவால் தடை செய்யப்பட்ட ஆயுத விநியோகம்,கப்பல் கப்பலாக இலங்கை அரசுக்கு அளிக்கப்பட்ட ஆயுதங்கள் ஆகியவைகளை வைத்துக்கொண்டு அசுரத்தனமாக தாக்குதல் நடத்திய இலங்கை அரசை எதிர்த்து புலிகள் போராடியிருக்கின்றனர் என்கிற விசயத்தை தவிர்த்துவிட்டு வெறுமே இதை புலிகளின் அரசியல் ரீதியான தோல்வி என்று பேச எவ்வாறு இயலும் என்று தெரியவில்லை///
மேலே நான் சொல்லி உள்ளது போல இத்தனை நாடுகளின் ஆலோசனைகள் ராணுவ உதவிகள் மேலும் முக்கியமாக உங்கள் இந்தியாவின் ஆளில்லா உளவு விமானகளின் சேவை வேறு,இதையெல்லாம் பற்றி அடக்கி (உங்கள் புதிய ஜனநாயகம் இதழ் கூட இருநூறு இந்திய வீரர்கள் பலியானதாக் தெரிய வருகிறது என்றே சொல்கிறது) வாசித்துக்கொண்டு புலிகளின் அரசியல் பிழைகளை பற்றி நீட்டி முழக்கி கொண்டிருக்கும் உங்களை இந்திய ஆளும் வர்க்க கும்பலோடு அடையாளபடுத்துவது எவ்விதம் தவறு என்று விளக்கவும்
இந்த பதிவை அனுமதிப்பீர்கள் என்று வேறு நம்பி தொலைக்கிறேன்
அது சரி ஈழத் தமிழ் மக்கள் உள்ள வன்னி தவிர்த்த பிற பகுதிகளில் உள்ள இருபது லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் மயப்படுத்தப்பட்டு தொலைக்காட்சியில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்களோ?///
இருக்கலாம் இலங்கை அரசு வாரி வழங்கி கொடுத்து கொண்டிருக்கும் உரிமைகளால் அந்த நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதுதான் )))))))))
வெகு அக்கறையாக இரயாகரன் புலிகளே உங்கள் ரத்த உறவுகளை வெளியே அனுப்புங்கள் என்பதில் அந்த நான்கு இலட்சம் மக்களில் பெரும்பாலானோர் தங்கள் உறவுகளை புலி படைக்கு அனுப்பியவர்கள் என்கிற அர்த்தம் மறைந்திருந்ததை நாங்களும் உணர்ந்தே உள்ளோம்
பள்ளிக்கு வேனில் செல்லும் குழந்தைகள் மீது கூட குண்டு வீசி கொள்ளும் ராணுவத்துக்கு முன் அந்த மக்கள் எப்படிப்பட்ட போராட்டங்ககளை முன்னெடுப்பது என்று பாரிசில் இருந்து நீங்கள் கற்றுக்கொடுங்கள் ))))))))
ஸ்டாலின் குரு,
உங்களது தனிப்பட்ட மன எழுச்சிகளுக்கு ஏற்ப வரலாற்றையும், யாதார்த்தத்தையும் உருவகப்படுத்திக் கொள்ளும் கற்பனையிலிருந்து வெளியே வாருங்கள்//
அறிவுரைக்கு நன்றி )))))
//உங்களை இந்திய ஆளும் வர்க்க கும்பலோடு அடையாளபடுத்துவது எவ்விதம் தவறு என்று விளக்கவும் //
அப்படி நம்புகிற பட்சத்தில் இங்கு வந்து அளாவலாவிக் கொண்டிருக்கிற தேவை என்ன? யாரும் உங்களை வருந்தியழைக்கவில்லையே? உங்களது அன்பு இனவாதிகளுடனேயே கூடிக் குலாவலாமே?
அசுரன்
அப்படி நம்புகிற பட்சத்தில் இங்கு வந்து அளாவலாவிக் கொண்டிருக்கிற தேவை என்ன? யாரும் உங்களை வருந்தியழைக்கவில்லையே? உங்களது அன்பு இனவாதிகளுடனேயே கூடிக் குலாவலாமே?
சரிங்க கைப்புள்ள
Post a Comment