TerrorisminFocus

Monday, January 21, 2008

நடுத்தர வர்க்க யுப்பிகளுக்கு ஆப்பு அடித்த ஸ்டாக் மார்க்கெட்!!!

நடுத்தர வர்க்க யுப்பிகளுக்கு ஆப்பு அடித்த ஸ்டாக் மார்க்கெட் - 6 நாளில் $300 bn!!

பங்கு சந்தை கடந்த ஆண்டு முழுவதும் போலியாக உப்பி பெருக்க வைக்கப்பட்டது. உண்மையான பொருள் உற்பத்திக்கான மூலதனமாக இல்லாமல் வெறும் சூதாட்டத்திற்க்கான மூலதனமாக அன்னிய மூலதனம் இந்திய சந்தைக்குள் வந்து விளையாடியது. இந்த விசயத்தை குறிப்பாக அமெரிக்க வீட்டு கடன் பிரச்சினையைத் தொடர்ந்த உலக நிதி மூலதன பிரச்சினைகளை கணக்கில் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது.

ஆனால் இந்த ஊதிப் பெருக்க வைக்கப் பட்ட பப்பிள் பொருளாதாரம் இதோ கடந்த சில வாரங்களாக உடைந்து கொண்டே வருகிறது. சமீபத்திய பொருளாதார உப்பலைத் தொடர்ந்து அதில் தமது சேமிப்புகளை முதலீடு செய்த நடுத்தர வர்க்க யுப்பிகள் இப்பொழுது அதன் நஸ்டத்தின் பலனை மட்டும் அனுபவிக்க காத்திருக்கிறார்கள். மேலும் விரிவான பங்கு சந்தை சரிவு பற்றிய தகவல்:

Investors lose over $300 bn in six days

*****************

$300 bn in Six days - Stock Market bubble bursts in to the purses of Middile Class Yuppies!!

Last year saw waves of huge influx of foreign funds, which accounted not for material movement, in to Indian Stock market. Because of which Indian comprador capitalist found a windfall at their hands. This highly speculative bubble economy, a true synonym of gambling, really caused more trouble to the common people. Right from the job losses and national economy break down due to currency appreciation to the price rise aka inflation rate.

Though the entire scenario should be perceived as part of the world fund crisis, a byproduct of Housing loan crisis in USA, the middle class yuppies encouraged by the quick money they earned from the bull driven economy invested their money in to the stock market to stack more quick bugs in to their account. But alas… the drama is over. Now the Capital crisis has bitten the middle class yuppie’s purses.

It is worth considering the fact that last week saw a huge influx of local capital in to stock market to maintain the stock market floating high.

For more on the fall of Indian Stock market:
Investors lose over $300 bn in six days


நன்றி: Not Just News

Related Article

அமெரிக்க குமிழிப் பொருளாதாரம், மிதக்கும் சூக்குமம்

29 பின்னூட்டங்கள்:

said...

தோழர். அசுரன் இந்த பங்குச்சந்தை சரிவு இந்திய பொருளாதாரத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், நமது அரசியல்வாதிகளால் சர்வரோக நிவாரணி போல பேசப்படும் அந்நிய மூலதனம் எனும் மாயமான் இதில் ஆற்றியிருக்கும் பங்கினை பற்றியும் கொஞ்சம் விரிவாக விளக்கியிருந்தால் இன்னும் பயனுள்ளதாய் அமைந்திருக்கும் என்று கருதுகிறேன்.


Stalin

said...

நடுத்தர வர்க்கத்திடமிருந்து பணம் பிடுங்க ரிலையன்ஸ் ஆடிய கடைசி நேர நாடகம்:

http://nanayam2007.blogspot.com/2008/01/ipo.html

said...

corrections are normal, as long as india grows in long term, it is ok.jobs are still coming to india.

said...

Hardly 2% of the population is
affected by all this. For a majority an increase in price of petrol or wheat or rice makes more
difference than all this sensex zooms and downs. If the sensex goes up or down many become rich
or poor, but most of them dont become poor on account of this. But poor are more vulnerable to price rise and have better things
to worry about.

said...

// But poor are more vulnerable to price rise and have better things
to worry about.//

விலைவாசி உயர்விலும், ஏற்றுமதி சார்ந்த விசயங்களீலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள பங்கு சந்தை சமீப காலங்களீன் மிக முக்கிய பாத்திரம் வகிக்கிறது. பங்கு சந்தை நேரடியாக மக்களை பாதிக்காது என்பது 1947 வருசத்து வாதம். ஏனேனில் தற்போது புராவிடண்ட பண்ட் முதல் மக்களின் சேமிப்புகளை பங்கு சந்தையில் சூதாட விடுவதற்க்கான தயாரிப்புகள் முன்னனியில் உள்ளன. இரண்டு இந்த முறை பங்கு சந்தையில் சாதாரண சிறு நகரங்களில் இருந்தவர்கள் கூட முதலீடு செய்துள்ளனர். வேண்டுமென்றால் நீங்கள் இருக்கும் சிறு நகரங்களில் கேட்டுப் பாருங்கள். ரிலையன்ஸ் பவர் பங்கிற்கு 5 லட்சம் கோடிகள் ருபாயில் விண்ணப்பம் வந்ததே இதற்க்கு சாட்சி.

பங்கு சந்தை உயர்ந்தால் நாடு முன்னேறுது என்று பல்லவி பாடுவது. அது ஒரேயடியாய் குப்புறடிக்கப் படுத்துவிட்டால் அதற்க்கும் நாட்டுக்கும் சம்பந்தமில்லை என்று கூறுவது.. வேடிக்கை மனிதரடா....

அசுரன்

said...

பங்குசந்தையென்பது வெறும் சூதாட்டமல்ல...அதுவும் ஒரு தொழில்.எல்லா தொழிலில் இருக்கும் நல்லவை,கெட்டவை இங்கேயும் உண்டு.

வித்தை தெரியாதவர்கள் விட்டில் பூச்சிகளாவதும்,சுதாரித்தவன் அள்ளிக் கொண்டு போவதும் எல்லாத் தொழிலிலும் இருக்கிற ஒன்று....

தங்கள் விரலுக்கு தக்க வீங்கும் எந்தவொரு முதலீட்டாளரும் இங்கே நஷ்டப்படுவதில்லை என என்னால் உறுதியாக கூற இயலும்.

பணம் வரும்போது அதை அடுத்தவனுக்கு தெரீயாமல் கொண்டாடுவதும், இத்தகைய நெருக்கடியான சூழலில் மொத்த கட்டமைப்பையே விமர்சிப்பதும் சரியல்ல என்றே நினைக்கிறேன்.

எல்லா இடத்திலும் இடது சாரி கொள்கைகளை பொறுத்திப் பார்க்காதீர்கள், சில இடங்களில் அது அழகாகவும் கம்பீரமாயும் ஏன் நியாயமானதாகவும் தெரியலாம், பொருந்தாத இடங்களில் அதை கோரமாய் பல்லிளிக்க வைத்து அதன் நம்பக தன்மையினை சீரழிப்பது உங்களை போன்ற தீவிர சிந்தனையாளர்கள்தான் என்பதை ஒப்புக்கொள்வீர்கள என நம்புகிறேன்.

said...

//பங்குசந்தையென்பது வெறும் சூதாட்டமல்ல...அதுவும் ஒரு தொழில்.எல்லா தொழிலில் இருக்கும் நல்லவை,கெட்டவை இங்கேயும் உண்டு.//

தொழில் என்றால் பொருள் உற்பத்தியோ அல்லது சேவை விற்பனையாகவோ இருக்க வேண்டும். மாறாக இந்த குதிரை செயிக்கும் என்று துட்டு கட்டிவிட்டு அது முதலீடு செய்யப்பட்ட தொழிலுக்கு எந்தவொரு சிந்தனை ரீதியான, உடல் ரீதியான பங்களிப்பும் செய்யாமல் பந்தயம் கட்டி துட்டு சேர்ப்பதை உங்கள் ஊரில் தொழில் சொல்வார்கள் எனில் நான் ஒன்றும் செய்வதற்க்கு இல்லை. ஆம் சூதாட்டமும் பல இடங்களில் தொழில்தான்.

விபச்சாரம் கூட இங்கு சட்டப்பூர்வமானதுதான், ரிலையன்ஸ் தொலை தொடர்பு துறையில் செய்தவைகளும், என்ரானுக்கு இந்தியா 7000 கோடி கொடுத்ததும் கூட சட்டத்திற்குட்பட்டே. சட்டத்தின் நியாயம் உங்களுக்கு தேவையாக இருக்கலாம். எமக்கு அது அளவுகோல் கிடையாது.

அது இருக்கட்டும். இந்த முதலீட்டு பிரச்சினையில் இங்கு குறிப்பாக பேசியுள்ள விசயம் அன்னிய முதலீடு ஏன் உற்பத்திக்கானதாக இல்லாமல் வெறுமே சூதாட்டத்திற்க்கு என்று வந்து சென்றது? என்பதைத்தான்.


//பணம் வரும்போது அதை அடுத்தவனுக்கு தெரீயாமல் கொண்டாடுவதும், இத்தகைய நெருக்கடியான சூழலில் மொத்த கட்டமைப்பையே விமர்சிப்பதும் சரியல்ல என்றே நினைக்கிறேன்.//

இந்த புத்திமதி திமிர் பிடித்த யுப்பி கும்பலுக்குரியது. யுப்பி கும்பலகளே கவனிச்சுகோங்கப்பா....


//தங்கள் விரலுக்கு தக்க வீங்கும் எந்தவொரு முதலீட்டாளரும் இங்கே நஷ்டப்படுவதில்லை என என்னால் உறுதியாக கூற இயலும்.
//

பங்கு சந்தையில் எந்த வகையிலும் சம்பந்தப்படாது அப்பாவி ஏழை விவசாய தொழிலாளி திருப்பூரிலும் இன்ன பிற இடங்களிலும் இந்த சூதாட்டத்தால் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? ரூபாய் மதிப்பு உயர்ந்த பொழுது பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் விரல் வீங்க வேண்டிய அவசியமென்ன? அவர்கள் என்ன பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்களா?

உங்களுடைய சூதாட்டத்தை, மொள்ளமாறித்தனத்தை, கால்வாறிவிட்டு விளையாடும் விளையாட்டுக்களை உங்களது விரல் வீங்குகிற அளவு எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் மாறாக ப்ங்கு சந்தை தற்போதைய நிலையில் மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட் எல்லா இடங்களிலும் ஊடுருவி வேலை காட்டி வருகிறது(சில்லறை விற்பனை முதல் விவசாய உற்பத்தி பொருளகள் வரை). அதனால் இந்த விரல் வீங்குகிறது போன்ற அந்தரத்தில் தொங்கும் சொலவடைகள் வேலைக்காகது.

முதாலீடு இல்லை என்று சொல்லி நியாயப்படுத்தப்பட்ட உலகமய கொள்கைகள் இன்று 16 வருடங்கள் க்டந்த பிறகு அன்னிய முதலீடு தேவையில்ல இந்தியாவில் உள்ள சேமிப்புகளே போதும் அதை கொடுங்கள் என்று கேட்கிறதே பன்னாட்டு நிதி மூலதன் நிறுவனங்கள் அதனை இத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். (ஓய்வூதியமும் இன்ன பிற சேமிப்புகளும் ஒரேடியாய் புட்டுக் கொண்டு போகத்தான் இந்த ஏற்ப்பாடு).


//எல்லா இடத்திலும் இடது சாரி கொள்கைகளை பொறுத்திப் பார்க்காதீர்கள், சில இடங்களில் அது அழகாகவும் கம்பீரமாயும் ஏன் நியாயமானதாகவும் தெரியலாம், பொருந்தாத இடங்களில் அதை கோரமாய் பல்லிளிக்க வைத்து அதன் நம்பக தன்மையினை சீரழிப்பது உங்களை போன்ற தீவிர சிந்தனையாளர்கள்தான் என்பதை ஒப்புக்கொள்வீர்கள என நம்புகிறேன்.//

பொது அறிவைத்தான் இடது சாரி கொள்கை என்று கருதூவீர்கள் எனில் உங்களை நினைத்து பரிதாப்பபட வேண்டியுள்ளது. இங்கு பொதுவுடமை குறித்து எதுவும் பேசப்படவில்லையே.

சொக்கன் சொல்கிறார் என்பதற்க்காக எதையும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று இருக்கிறதா என்ன?

அசுரன்

said...

//
தொழில் என்றால் பொருள் உற்பத்தியோ அல்லது சேவை விற்பனையாகவோ இருக்க வேண்டும். மாறாக இந்த குதிரை செயிக்கும் என்று துட்டு கட்டிவிட்டு அது முதலீடு செய்யப்பட்ட தொழிலுக்கு எந்தவொரு சிந்தனை ரீதியான, உடல் ரீதியான பங்களிப்பும் செய்யாமல் பந்தயம் கட்டி துட்டு சேர்ப்பதை உங்கள் ஊரில் தொழில் சொல்வார்கள் எனில் நான் ஒன்றும் செய்வதற்க்கு இல்லை. ஆம் சூதாட்டமும் பல இடங்களில் தொழில்தான்.

விபச்சாரம் கூட இங்கு சட்டப்பூர்வமானதுதான்
//

Equity is a share in the ownership of a company. It represents a claim on the company''s assets and earnings.

said...

ஒவ்வொரு தடவை மார்க்கெட் விழும்போதும் வரும் புலம்பல்தான் இது.வேற எதும் சொல்றதுக்கில்லை.

எப்பிடி இருந்தாலும் அன்னிய முதலீடும் நிக்க போறதில்லை மார்க்கெட்டும் பறக்காம இருக்க போறதில்லை. இது தற்காலிகாம்தான். என்ஜாய்!!

said...

//ஏனேனில் தற்போது புராவிடண்ட பண்ட் முதல் மக்களின் சேமிப்புகளை பங்கு சந்தையில் சூதாட விடுவதற்க்கான தயாரிப்புகள் முன்னனியில் உள்ளன. //

Look at CALPERS, california's public employees pension fund. They invest india. You may argue that they will loot indian wealth. Why not invest indian pension fund in any of the profitable market through out the world and make a decent profit?

Some links to kno about CALPERS.

http://www.calpers.ca.gov/index.jsp?bc=/about/home.xml

Calpers in India: It’s $1bn & counting

http://economictimes.indiatimes.com/Personal_Finance/Savings_Centre/Calpers_in_India_Its_1bn__counting/rssarticleshow/1919732.cms

said...

ஆபத்பாந்தவன் LIC

கடந்த ஒரு வாரமாகவே பங்கு சந்தை பலத்த சரிவுக்குள்ளாகி வருகின்றது. நேற்று 10% வரை சரிந்து பின்னர் 3% மீண்டு முடிவில் 7% இழப்பில் முடிந்திருந்தது. நேற்றைய தின துவக்கத்திலேயே 500 புள்ளிகள் இழப்புடன் மும்பை பங்கு சந்தை துவங்கியது. நேரம் செல்ல செல்ல சிறு முதலீட்டாளர்களூம் F & O முதலீட்டாளர்களும் பயத்தின் காரணமாக ஏகத்திற்கும் பங்குகளை விற்க தொடங்க பிற்பகலில் 2100 புள்ளிகள் வரை சரிவடைந்திருந்தது. எனினும் முதலீடு நோக்கில் கடைசி அரை மணி நேரத்தில் 700 புள்ளிகள் உயர்ந்து 1400+ புள்ளிகள் இழப்புடன் முடிந்தது.

இன்று காலை தொடங்கியதுமே முதலீட்டாளர்களின் பயம் காரணமாக எடுத்த எடுப்பில் 2000+ புள்ளிகள்குறைய பங்கு சந்தை சுமார் 1.5 மணிநேரம் தற்காலிகமாக மூட்டப்பட்டது. மேலும் F & O விற்பனையும் நாள் முழுவது நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் எல்லா முதலீட்டாளர்களூம், தரகர்களும் அரசின் தலையீட்டை எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பு கடந்த 2 நாட்களாகவே இருக்கின்றது. அரசு தலையிடாததை கண்டித்து எல்லா வலைதளங்களிலும் பதிவர்களும் முதலீட்டாளர்களும் நிதி அமைச்சரை திட்டி தீர்த்தனர். இன்று காலை அதனால் வேறு வழியின்றி நிதியமைச்சர் திருவாய் மலர்ந்தார்.

அதாவது முதலீட்டாளர்கள் பயம் கொள்ள வேண்டாம். தரகர்களுக்கு தேவையான லிக்விடிட்டி வழங்கப்படும். அதற்காக LIC, UTI ஆகிய நிறுவனங்கள் பங்குகளை வாங்கும் என்று அறிவித்தார். அதன் பின்னர் சந்தை சரிவிலிருந்து மீளத்தொடங்கியது.

இதே காங்கிரஸ் அரசில் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த போது 10 வருடங்களுக்கு முன்னர் இதே ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயமாக்க வேண்டுமென்று விருப்பம் மிகக்கொண்டு உலக வங்கியின் வலியுறுத்தல் காரணமாக முயற்சித்தார். அதை அந்த நிறுவன தொழிலாளர்களும் முகவர்களும் பெரிய முன்னெடுப்புகளை மக்களிடம் கொண்டு சென்று 1 கோடி கையெழுத்துகளை மக்களிடம் பெற்று(சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நானும் ஒரு கையெழுத்து போட்டிருக்கின்றேன்.) குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்க தனியார் மயம் என்னும் முயற்சியை உடனடியாக அரசு கைவிட்டது. அதன் பின்னர் தனியாரும் காப்பீடு துறையி அனுமதிக்கப்பட்டு ஏராளமான திடீர் நிறுவனங்கள் முளைத்து LIC ஐ சமாளிக்க முடியாமல் விரைவில் காணாமல் போயின(உம். AMP Sanmar). காரணம் அது கடைப்பிடித்த நேர்மை மற்றும் தரமான சேவை. உச்சகட்டமாக ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் காப்பீடு நிறுவனம் மகாராட்டிரத்தில் தடை செய்யப்பட்டதும் நடைபெற்றது.

அன்று LIC என்னும் தங்க முட்டையிடும் வாத்து தனியார் மயம் என்கிற கத்தியால் வெட்டு பட்டிருந்தால் இன்று பங்கு சந்தை காப்பாற்ற ஒரு நிறுவனம் இல்லாமல் போயிருக்கும். அரசும் முதலீட்டாளர்களை கைவிட்டு தனியார் மயத்தை ஒழித்திருக்கும். என்ன செய்ய தனியாரை காக்கவும் அரசு நிறுவனமே தேவை.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்ற கூற்றை அரசு மீண்டும். மெய்ப்பித்திருக்கின்றது. மேலும் சந்தையில் இந்த வீழ்ச்சி தொடருமானால் அரசு நிச்சயம் PF பணத்திலும் கைவைக்க கூடும்.

சந்தையின் வீழ்ச்சிக்கு மற்றொரு காரணமாக இன்று பங்கு தரகள் பரிமாரிக்கொள்ளும் வாசகம்

Reliance On - Market Gone.

பங்கு சந்தை வீழ்ச்சியில் ரிலையன்ஸ் பவர் ஐபிஓவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. அதுதான் வீழ்ச்சியை துவக்கி வைத்தது. ஆரம்பத்தில் முதல் நாளிலெயே 10 மடங்கு விண்ணப்பங்கள் குவிய அப்பொழுது உடனடியாக பங்கு சந்தை.சிதம்பரம் நாட்டின் அடிப்படை மிகவும் வலிமையாக இருக்கின்றது என்று மார்தட்டினார். அவருடைய நம்பிக்கை இரண்டு நாட்களில் அவநம்பிக்கையாகிவிடும் என்று அப்பொழுது அவர் உணர்ந்திருக்க மாட்டார்.

ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தில் முதலீடு செய்ய எல்லா முதலீட்டாளர்களும் பணத்தை பங்கு சந்தையிலிருந்து எடுக்க தொடங்கியதால் முதல் கட்ட வீழ்ச்சி தொடங்கியது. அதை இறுதி மூச்சில் இருக்கும் அமெரிக்க பொருளாதாரம் தன்பங்கிற்கு உச்சத்திற்கு கொண்டு சென்றது. அதனால் வெளிநாட்டு முதலீடு ஏகத்திற்கும் சந்தையிலிருந்ந்து திரும்பபெறப்பட்டது. இதனாலும் சந்தை சரிந்தது. சந்தை சரிவிற்கு முன்னர்தான் ரிலையன்ஸ் பவர் 79 மடங்கு விண்ணப்பம் பெற்றதாகவும் அது சாதனை என்றும் அனில் அம்பானி உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்றும் பத்திரிகைகள் பரபரத்தன. எல்லாமே 2 நாட்கள்தான்.

பங்குச் சந்தை இந்த அனில் அம்பானியை இன்று 1000+ இடத்திற்கும் முகேஷ் அம்பானியை 101 வது இடத்திற்கும் டி.எல்.எஃப். உரிமையளர் கே.பி.சிங்கை 250 ஆவது இடத்திற்கும் உலக அளவில் அழைத்து சென்றுள்ளது. இதன் உச்சமாக ரிலையன்ஸ் பவர் பங்கு கேட்டு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் இப்பொழுது செக்குகளுக்கு ஸ்டாப் பேமண்ட் கொடுத்திருப்பதாக செய்திகள் வருகின்றன(இதை வதந்தி என்று அனில் அம்பானி கூறியுள்ளார்). இதிலும் ரிலையன்ஸ் சாதனை படைக்கும் என்று நம்பலாம். லிஸ்டிங்கில் 1000 ரூபாய்க்கும் மேல் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் பவர் இப்பொழுது ஒளியிழந்து 450க்காவது வெளியாகுமா இல்லை இன்னும் கீழே வெளியாகுமா என்று எதிர்பார்க்கும் அளவில் உள்ளது.( 16.01.2008 அன்றே கிரே மார்கெட் பிரீமியம் என்றழைக்கப்படும் தொகை 470 இலிருந்து 420 ஆகவும், வெளியீட்டின் இறுதி நாளன்று 320 ஆகவும் நேற்று 150 ஆகவும் தேயந்து போனதிலும் ரிலையன்ஸ் பவர் சாதனை புரிந்துள்ளது.)

இன்றைய பங்கு மார்கெட் வார்த்தை Reliance Power On - India Gone.(இது ரிலையன்ஸ் பவர் விளம்பரங்களில் Riliance Power On - India On என்று வரும்).

விரைவில் அமெரிக்கா பொருளாதார சரிவை(Recession) அறிவிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் அது அமெரிக்க தேர்தலுக்கு பிறகாவது அறிவிக்கப்படும். அப்பொழுது சந்தை மேலும் சரியலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிறு முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுவது நலம் என்பதே இறுதி நீதி.

--
வலைப்பூ(BLOG) : http://agnisiraku.blogspot.com/
http://pothuvudaimai.blogspot.com/
நா.பிரதாப் குமார்.

said...

எபா... யாராச்சும் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கபா....

//அது இருக்கட்டும். இந்த முதலீட்டு பிரச்சினையில் இங்கு குறிப்பாக பேசியுள்ள விசயம் அன்னிய முதலீடு ஏன் உற்பத்திக்கானதாக இல்லாமல் வெறுமே சூதாட்டத்திற்க்கு என்று வந்து சென்றது? என்பதைத்தான்.//

அசுரன்

said...

//அந்நிய மூலதனம் எனும் மாயமான் இதில் ஆற்றியிருக்கும் பங்கினை பற்றியும் கொஞ்சம் விரிவாக விளக்கியிருந்தால் //

தோழர் ஸ்டாலின்,

விரிவாகவே எழுதலாம். இந்த அம்சத்தில் அதிகளவு அறிவில்லை என்பது ஒரு பிரச்சினை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்த உறவுகளை புரிந்து கொண்டு வருகிறேன். இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விசயங்களை பேச மிக்ப் பெரிய பொருளாதார அறிவு இருக்க வேண்டிய அவசியமில்லை. பொது அறிவு இருந்தால் போதும். இந்த் காரணத்தினாலேயே இந்த மட்டோ டு நிறுத்திக் கொண்டேன்.

அசுரன்

said...

அமெரிக்க குமிழிப் பொருளாதாரம், மிதக்கும் சூக்குமம்
http://tamilarangam.blogspot.com/2008/01/blog-post_942.html

பி.இரயாகரன்

இக் கட்டுரை அண்மையில் வெளியாகிய உலகமயமாதல் பாகம் இரண்டில் வெளிவந்தது. காலத்தின் தேவையை ஓட்டி பிரசுரமாகின்றது.

said...

தோழர் அசுரன்...

வாட் ஈஸ் திஸ் யுப்பி ? குப்பி தெரியும், பப்பி கூட தெரியும்...இந்த யுப்பியை கொஞ்சம் விளக்கக்கூடாதா ? அது என்ன நடுத்தரவர்க்க யுப்பி ? ஏன் பணக்கார யுப்பியோ, ஏழை யுப்பியோ கிடையாதா?

என்னுடன் பணிபுரியும் ஆந்திராக்காரன், ரிலையன்ஸ் பவர் அப்ளை செய்யவேண்டிய கடைசி நாளில், ஐ.சி.ஐ வங்கி பணப்பரிவர்த்தனை முடிந்துவிட்டபோதிலும், பெரிய அறிவாளி போல் நேரடியாக வங்கியில் சென்று காசை கட்டினான்...

இவன் பெரிய அறிவாளி என்று நினைத்தேன்...ரெண்டு நாளில் ப்ளாஸ்டிக் வாளி என்று தெரிந்தது :))

said...

பங்கு சந்தை என்பது எப்பொழுதுமே லாபத்தை தான் தரும் என்று எதிர் பார்க்க கூடாது. மேலும் அங்கு முதலீடு செய்யும் பொழுது ஏற்படக்கூடிய நஷ்டங்களையும் எதிர் பார்த்து தான் முதலீடு செய்ய வேண்டும்.

பங்கு சந்தை இல்லாவிடில் இந்த அளவு பொருளாதார முன்னேற்றம் அடைந்திருப்போமா என்பது சந்தேகமே. இது குறித்து எந்த அளவான விவாதங்களுக்கும் தயார்.

said...

அன்பன்,

மேலேயுள்ள பின்னூட்டங்களீல் கேட்டுள்ள கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் போதும் :-))

அசுரன்

said...

பங்கு சந்தை பாடம் சொன்னது - யாருக்கு? றன்ற பெயரில் மங்களூர் சிவா றன்பவர் பதிவு றழுதியுள்ளார். அதில் அசுரன் பதிநவயும் குறிப்பிட்டே அதில் ழன்றுமில்நல றன்பது போல றழுதியுள்ளார்.

ஆயினும் அவர் இந்த பதிவு றழுப்பியுள்ள சில ஸேள்விஸளுக்கு பதில் சொல்லவில்நல. வசதியாஸ ழதுக்ஸிவிட்டாரா றன்பது அவருக்குத்தான் தெரியும். நடுத்தர வர்க்ஸ யுப்பி ஸொழுந்தன்ஸள் ஸ`டப்படுவது ஸண்டு பொறுக்ஸு஡ட்டாமல் இந்த பதிவு போடப்படவில்நல. மாறாஸ பங்கு சந்நா சரிவு றன்னும் புற யணர்வின் ரடாஸ அன்னிய மூலதனத்தின் பக்ஸம் பார்நவநூ திருப்பும் முஸு஡ஸவே இந்த பதிவு போடப்பட்டுள்ளது.

இந்த பதிவு எழுப்பும் மையமான கேள்விகளும் அதுதான்,

அந்த கேள்விகள் மங்களூர் சிவா பங்கு சந்தை குறித்து பின்வரும் கேள்விகளில் எமக்கு பாடம் எடுத்தால் வசதியாக இருக்கும்:

////அது இருக்கட்டும். இந்த முதலீட்டு பிரச்சினையில் இங்கு குறிப்பாக பேசியுள்ள விசயம் அன்னிய முதலீடு ஏன் உற்பத்திக்கானதாக இல்லாமல் வெறுமே சூதாட்டத்திற்க்கு என்று வந்து சென்றது? என்பதைத்தான்.////


//மாறாக ப்ங்கு சந்தை தற்போதைய நிலையில் மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட் எல்லா இடங்களிலும் ஊடுருவி வேலை காட்டி வருகிறது(சில்லறை விற்பனை முதல் விவசாய உற்பத்தி பொருளகள் வரை). அதனால் இந்த விரல் வீங்குகிறது போன்ற அந்தரத்தில் தொங்கும் சொலவடைகள் வேலைக்காகது.

முதாலீடு இல்லை என்று சொல்லி நியாயப்படுத்தப்பட்ட உலகமய கொள்கைகள் இன்று 16 வருடங்கள் க்டந்த பிறகு அன்னிய முதலீடு தேவையில்ல இந்தியாவில் உள்ள சேமிப்புகளே போதும் அதை கொடுங்கள் என்று கேட்கிறதே பன்னாட்டு நிதி மூலதன் நிறுவனங்கள் அதனை இத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். (ஓய்வூதியமும் இன்ன பிற சேமிப்புகளும் ஒரேடியாய் புட்டுக் கொண்டு போகத்தான் இந்த ஏற்ப்பாடு).
//

//பங்கு சந்தையில் எந்த வகையிலும் சம்பந்தப்படாது அப்பாவி ஏழை விவசாய தொழிலாளி திருப்பூரிலும் இன்ன பிற இடங்களிலும் இந்த சூதாட்டத்தால் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? ரூபாய் மதிப்பு உயர்ந்த பொழுது பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் விரல் வீங்க வேண்டிய அவசியமென்ன? அவர்கள் என்ன பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்களா?
//


பங்கு சந்தையை முதலீடாக மட்டுமே பார்க்க வேண்டுமாம், ப்யுச்சர் மார்க்கேட் என்று விவசாய பொருட்களை பங்கு சந்தையில் விட்டுள்ளதை எந்த வகை முதலிடாக பார்ப்பது? வெறுமே பதுக்கி வைத்து விலை ஏற்றும் முதலீடாகவா? ஏனேனில் இங்கு விலை யேறும் போதெல்லாம் சர்வதேச சந்தையில் விலை ஏறிவிட்டது என்று கூறி பங்கு சந்தை மீது பலி போட்டது நானில்லை அது சாட்சாத் பா. சிதம்பரம்தான்.

இத்ற்க்கெல்லாம் பதில் சொல்லுங்கள்..

அசுரன்

said...

யுப்பி எனப்படுபவன் யாரென்றால்:

இளம் தொழில் நுட்ப வல்லுனன்/அல்லது இன்றைய காலத்தில் IT/BPO, அதிகப்படியான சம்பளம் வாங்கி சமூகத்தின் சராசரியை விட சிறிது வளப்பமான வாழ்வு வாழ்பவன். இதனாலேயே அவனிடம் நிலவும் அரோகண்டான பண்புகளும், தன்னைச் சுற்றிய சமூகத்தை இகழ்ச்சியாக பார்க்கும் திமிரும் சேர்ந்து இருக்கும்(இவற்றை வெளிப்படையாக காட்ட வேண்டியதில்லை.).

நேர்மையற்ற முறையில் பணம் சேர்ப்பது குறித்தெல்லாம் அவனுக்கு கவலை க்டையாது. அவனது கணக்கு, பணம் சேர்த்து என் ஜாய் பன்னுவது. ஆனால் இது போன்ற பங்கு சந்தை கையை கடித்த தருணங்களில் அவன் பேசுவது எல்லாம் அறவுணர்வு சார்ந்த ஒழுக்க போதைனைகளை. எனவேதான் அவனது திமிர்த்தனத்தை குத்தும் வகையில் பதிவும் தலைப்பும்.

அசுரன்

said...

//என்னுடன் பணிபுரியும் ஆந்திராக்காரன், ரிலையன்ஸ் பவர் அப்ளை செய்யவேண்டிய கடைசி நாளில், ஐ.சி.ஐ வங்கி பணப்பரிவர்த்தனை முடிந்துவிட்டபோதிலும், பெரிய அறிவாளி போல் நேரடியாக வங்கியில் சென்று காசை கட்டினான்...

இவன் பெரிய அறிவாளி என்று நினைத்தேன்...ரெண்டு நாளில் ப்ளாஸ்டிக் வாளி என்று தெரிந்தது :))//

நான் பேசிய பலருக்கும் இது போன்ற அனுபவம்தான் செந்தழல் ரவி. இந்த முறை பங்கு சந்தை எந்தளவுக்கு ஊடுருவியுள்ளது தெரியுமா? சதாரண சிறு நகரங்களில் கூட புரோக்கர்கள் பங்கு சந்தைக்கு ஆள் சேர்த்துள்ளனர். இதன் விளைவுதான் ரிலைய்னஸ் பவருக்கு குவிந்த அந்த மிகப் பெரிய மூலதனம். பங்கு சந்தை தனது இலக்கை துலக்கமாக தாக்கியது அதாவது சரியாக இன்கம் டேக்ஸ் சப்மிஸன் வரை பங்கு சந்தை உயர்வாக இருந்து அதன் இறுதி கட்டத்தில் படீரென்று குமிழி உடைந்துவிட்டது. கணக்கு காட்ட விரும்பியவர்கள் பெரும்பாலனவர்கள் இந்த முறை பங்கு சந்தையில் மூலதனமிடும் முயுச்சுவல் பண்ட் திட்டங்களாக அதுவும் ஐசி ஐசிஐ போன்றவை வழங்கும் கவர்ச்சிகரமான திட்டங்களீல் கடைசி நேரத்தில் முதலீடு செய்து கணக்கு காட்டினர்.

பங்கு சந்தை மீண்டும் ஏறியுள்ளது. அதன் தன்மை என்னவென்பதை இன்னும் அவதனிக்கவில்லை.

அசுரன்

said...

பி.இரயாகரன்

இக் கட்டுரை அண்மையில் வெளியாகிய உலகமயமாதல் பாகம் இரண்டில் வெளிவந்தது. காலத்தின் தேவையை ஒட்டி பிரசுரமாகின்றது.

பங்குச்சந்தைக்கு வரும் பணம் எங்கிருந்து வருகின்றது. அங்கு இலாபம் எப்படிப் பெறப்படுகின்றது. எதுவும் வானத்தில் இருந்து திடீரென இறங்குவதில்லை. மாறாக ஒருவரிடம் இருந்து ஒருவர் திருடுவது தான் பங்குச் சந்தை. ஒருவன் உழைப்பை, அவனின் சேமிப்பை அபகரிப்பதற்கான முதலாளித்துவ சுதந்திர வழிதான், பங்குச் சந்தை. இது ஒரு சூதாட்டம் தான்.

பணம் என்பது மனித உழைப்பிலானது. இந்த பணம் தான் பங்குச் சந்தையில் திருடப்படுகின்றது. உழைப்பின்றி மூலதனத்தை பெருக்கலாம் என்று ஆசை காட்டி, உழைப்பிலான பணத்தை திருடுவதே இதன் சூக்குமம். இப்படி மத்தியதர வர்க்கத்தினதும், அதற்கு மேற்பட்ட வர்க்கத்தினதும் சேமிப்புப் பணத்தை உறிஞ்சும் இடம் தான், பங்குச்சந்தை.

உள்ளடக்க ரீதியாக இதுவொரு சூதாட்டம். பணத்தைப் பெருக்கும் அற்ப முதலாளித்துவ சுதந்திர ஒழுக்கக் கோட்பாட்டு விதிக்கமைய, இதைக் கவர்ந்து எடுக்கும் திட்டம் தான் இந்த சூதாட்டம். வாங்கி விற்றல் என்ற, சாதாரணமான இலாபநட்ட கணக்குக்குள் தான் சேமிப்புகள் பிடுங்கப்படுகின்றது.

உண்மையில் பங்குச் சந்தை எந்த உழைப்பையும் செய்வதில்லை. நானும் நீயும் வைத்துள்ள பணத்தை முதலீட்டுப் பங்குகளில் போட வைப்பதன் மூலம், என்னுடைய பணத்தை உன்னிடம் எப்படி வரவைப்பது என்பதுதான் அதன் விதி. பங்குகளின் விலை நிலையானதோ, அந்த பணம் திருப்பித்தரப்படுவதோ அல்ல. அதை வாங்கலாம் விற்கலாம். அதாவது இலாப நட்ட கணக்கு உட்பட்டது. மூலதனம் திடீரென்று திவாலாகும் போது, போட்ட பணம் அதோ கதி தான்.

பங்கு ஏன் விற்கப்படுகின்றது. ஒன்று மற்றவன் பணத்தை திருடுவது. இரண்டு முதலீடு என்பது, உண்மையான மூலதனம் நிலையானதாக இருப்பதில்லை. போலியான மூலதனத்தின் நெருக்கடியை தவிர்க்க, அதன் திவாலை மூட, இலாப விகிதத்தினை ஈடுசெய்ய, பணத்தை சொந்த உற்பத்திக்கு வெளியில் இருந்து கறக்கவே, பங்குகள் பங்குச் சந்தைக்கு வருகின்றது.

பங்குக்கு வரும் முதலீடும், அது உருவாக்கும் உற்பத்தி இலாபமும், பங்கை வாங்குபவனுக்கு பகிரப்படுவதில்லை. பங்கு மற்றவன் வாங்கிய பங்குப் பணத்தில் இருந்துதான், திருட வேண்டும். அதேநேரம் பங்கு வாங்க கொடுக்கும் பணத்தின் ஒரு பகுதி, உற்பத்தி மூலதனத்தின் அசலான நபரிடம் பெருமெடுப்பில் குவிகின்றது.

உண்மையில் யார் இழக்கின்றனர். பங்கை வாங்கி விற்கின்றவர்கள் தான், தமது பணத்தை ஒவ்வொரு சதமாக இழக்கின்றனர். ஒருவர் அதிகம் பெற்றால், மற்றவர்கள் அதைக் கட்டாயமாக இழக்க வேண்டும். தனது பணத்தை இழப்பது, அல்லது பெருக்குவது என்ற எல்லைக்குள் தான் சிலர் பிழைத்துக்கொள்ள, பலர் அதில் அழிகின்றனர்.

உற்பத்தி முதலீடு திவாலாகிவிடும் போது, அதில் இயங்கும் பங்குகள் எல்லாம் ஒரு வினாடியில் பஸ்பமாகி விடுகின்றது. இப்படி பங்குகள் என்பது, மத்தியதர வர்க்கமும் அதற்கு மேற்பட்ட வர்க்கமும் ஒரு வர்க்கமாக இருக்கும், அதன் அடிப்படையாக உள்ள சேமிப்பை சூறையாடுகின்றது. அதாவது வர்க்கத்தின் இருப்பை, கீழே தள்ளுகின்றது.

2000ம் ஆண்டு பங்குனி மாதம் பங்குச் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, 670000 கோடி டொலர் காணாமல் போனது. காணாமல் போனது என்றால், அது சிலரால் திருடப்பட்டது. அத்துடன் இது போலியாக வீங்கி உள்ளிழுத்த பணம் சேர்ந்து காணாமல் போய்விட்டது. இது உலகம் தளுவிய வகையில், அதன் திவால் தெரியாதவரையில், இது இதற்குள் அதற்குள் அமிழ்ந்து காணப்படுகின்றது.

இப்படி உற்பத்தி மூலதனத்தையும், நிதி மூலதனத்தையும் பெருக்கும் அடிப்படையில் இயங்குவது தான் பங்குச்சந்தை. இப்படி பரந்துபட்ட மக்கள் சொத்துரிமை எதுவுமற்ற மந்தைக் கூட்டமாக மாற்றுவதில், பங்குச் சந்தையும் ஒன்று. இன்று இந்த சூதாட்டத்தில் அன்னிய பணம், தாராளமாக புகுந்து சூறையாடுகின்றது.

1999 இல் பாரிஸ் பங்குச் சந்தையில் 40 சதவீகிதம் வெளிநாட்டு பணமாக இருந்தது. அந்தளவுக்கு இது ருசி கண்ட பூனையாகவே உலகெங்கும் அலைகின்றது. இந்திய பங்குச் சந்தையில் இதுதான் நடந்தது.

2004 ம் ஆண்டு தேர்தலுடன் இந்திய பங்குச் சந்தையில் நடந்த சோகத்தைப் பாருங்கள். 133000 கோடி இந்திய ரூபா திடீரென காணாமல் போனது. உண்மையில் என்ன நடந்தது? இந்திய அரசை தமக்கு சாதகமாக நடக்கக் கோரி, விடுத்த மிரட்டல் மூலம் நிகழ்ந்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வர வேணடும் என்ற அடிப்படையிலும், அன்னிய மூதலீட்டு நிறுவனங்கள் 18000 கோடி இந்திய ரூபாவை திடீரென்று பங்குச் சந்தையில் கொட்டின. அதை இப்படி ஊதிப்பெருக்கியது. மறுபக்கத்தில் பா.ஜ.க விளம்பரம் செய்து வெல்ல வைக்க, 150 கோடி ரூபாவை செலவு செய்தது, இந்தா இந்திய ஒளிர்கின்றது என்றது. ஆனால் பா.ஜ.க தோற்க, அன்னிய நிறுவனங்கள் பங்கை விற்கத் தொடங்கியது. அதே நேரம் அரசை மிரட்டத் தொடங்கியது. 'நாங்கள் பங்குகளை விற்றுவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேறினால் உங்களின் அன்னியச் செலாவணி கையிருப்பு கரைந்து போகும். அதனால் எங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுங்கள்" என்று மிரட்டியது. இப்படித்தான் சுதந்திரமான ஜனநாயக சந்தைகள் கொழிக்கின்றது. இந்திய அரசில் அன்னிய செலவாணி கையிருப்பில் 10300 கோடி டொலர் இருந்தது. இதில் 3130 கோடி அன்னிய மூதலீட்டு நிறுவனங்களின் நிதி. இப்படி மிரட்டி இந்திய அரசை தனக்கு சாதகமாக இயங்க வைத்தது. இதற்குள்ளான இழப்பு தான் 133000 கோடி ரூபா. எப்படிப்பட்ட உண்மை, இந்த சூதின் சூக்குமத்தை நிர்வாணமாக்குகின்றது.

அதேநேரம் பொருளாதார நெருக்கடியும், மூதலீட்டு நெருக்கடியும் சுற்று வழிப் பாதைகளால் மக்களின் பணத்தைக் கொண்டு அடைக்கப்படுகின்றது. அமெரிக்கா 1999 இல் பங்குச் சந்தை பணத்தில் இருந்து 15000 கோடி டொலரை முதலீட்டுக்காக உறிஞ்சிக் கொண்டது. இதை செய்ய முன், அமெரிக்காவின் ஒய்வூதியப் பணத்தில் இருந்து 680000 கோடி டொலரை பங்குச் சந்தையில் கொட்டியது.

இப்படி நெருக்கடிகள் சுற்றிவளைத்து ஈடுகட்டப்படுகின்றது. திவாலைத் தடுக்க, மக்களின் பணத்தை உறிஞ்சி அதை அங்கும் இங்குமாய் கைமாற்றப்படுகின்றது. இன்று திருப்பிக் கொடுக்க முடியாத மக்களின் சேமிப்புப் பணம், ஒய்வூதியப் பணம், பங்கு மூலதனமாக்கி நாட்டை விழுங்கும் நடைமுறை புகுத்தப்படுகின்றது.

வீங்கிவெம்பிய வடிவங்களின் ஊடாக, ஊதிப்பெருக்கி பொருளாதார நம்பிக்கை என்ற மாயை தோற்றுவிக்கப்படுகின்றது. அதைக் கொண்டு மக்களின் சேமிப்புகளை இழுத்தெடுத்து அதை சூறையாடிக் கொடுப்பதும், திவாலை மூடிமறைப்பதும் நடக்கின்றது. மக்கள் ஒவ்வொருவரும் தனது உழைப்பிலான பணத்தை தாமே வைத்திருந்தால், வங்கி திவாலாகிக் கிடப்பதையும் நாடு நடுரோட்டில் அம்மணமாகிக் கிடக்கின்ற உண்மை வெளிப்படையாகவே வெளிப்படும்.

உதாரணமாக ஊதிப்பெருக்கி வளர்ச்சியடைந்து வருவதாக காட்டப்பட்ட ஒரு துறைதான், தொலைத் தொடர்புத்துறை. 1997-2000க்கும் இடையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் சேவைக்கு 400000 கோடி டொலரைச் செலவு செய்தது. இதன் பின்னால் ஒரு போலியான மூலதனம் இயங்கியது. பங்குச்சந்தைப் பணத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தது. இப்படி ஊதிப்பெருக்கிய பலூனில் இருந்து காற்று வெளியேறத் தொடங்கிய போது, தடாலென உலகப் பொருளாதாரமே சரிந்தது. தொலைத் தொடர்பு துறை தனது தவணைக்கடன் செலுத்த தவறுதல் 6000 கோடி டொலராகியது. இதில் இருந்து தப்பிப் பிழைக்க 2001 முதல் ஆறுமாதத்தில், 3 லட்சம் பேரை தொலைத்தொடர்பு வேலையில் இருந்து நீக்கினர். இதைச் சார்ந்து இருந்த துறைகளில் 2 லட்சம் பேர் வேலையை இழந்தனர். அதே நேரம் ஊதிப்பெருக்கிய பங்குச் சந்தை சரிந்தது. 2000 இல் தொலை தொடர்புத் துறையில் பங்கு மதிப்பு 630000 கோடி டொலராக இருந்தது. இது 2001 இல் 380000 கோடி டொலராக சரிந்து வீழ்ந்தது. ஆசியா நெருக்கடியின் போது பங்குகளின் இழப்போ மொத்தம் 81300 கோடி டொலர் மட்டும் தான். தொலைத்தொடர்பு நெருக்கடியோ அதை தாண்டி 250000 கோடி டொலரை உறிஞ்சி, அதை காணாமல் பண்ணியிருந்தது. அந்தப் பணம் சிலரிடம் விரைந்தோடிச் சென்றிருந்தது. இதை இழந்தவர்கள், பலவழிகளில் மக்கள். தனிப்பட்ட பணக்காரப் பட்டியலில் நடக்கின்ற அதிவுயர் செல்வக் கொழிப்பு இப்படித்தான், அகோர வேகத்தில் வளருகின்றது.

அமெரிக்காவில் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமும், தகவல் தொழில்நுட்பத்தில் உலகில் முதல் நிறுவனமான ~~வேல்ட்கொம் கவிழ்ந்தது. அதே நேரம் உலகில் மத்திய தர வர்க்கத்தின் மடியில் அடிவிழுந்தது. 65 நாடுகளில் 150000 கிலோ மீற்றர் நீளத்துக்கு கேபிள் கட்டமைப்பை கொண்டு 80000 ஊழியருடன் இயங்கிய இந் நிறுவனம், எப்படி திவாலானது? மூலதனம் தன்னதை தான் தனக்குள் வீங்க வைத்தது. இது தனக்குள் மோசடிகளில் ஈடுபட்டது. இதன் போது ஏற்பட்டும் நெருக்கடிகள், உண்மையின் சொரூபத்தை நிர்வாணமாக்கி விடுகின்றது. தனது சொந்த பங்கை அதிக விலையில் வாங்க வைக்க, 33.97 கோடி டொலரை பயன்படுத்தியது. சந்தையில் விலையை போலியாக உயர்த்த இது உதவியது. சந்தை களைகட்ட, சேமிப்புகள் வேகமாக உட்புகுந்தது. அதாவது இதன் மூலம் மத்தியதர வர்க்கத்தினதும் மேல் மட்டத்தினதும் சேமிப்புகளை கவர்ந்திழுத்தது. அதேநேரம் 3700 தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியது.

இப்படி மோசடிகள் மூலம், இந்த நிறுவனம் இலாபம் தரும் பங்கு நிறுவனமாக உலகெங்கும் காட்டிக்கொண்டது. அது திவாலாகி அம்பலமானதைத் தொடர்ந்து, விசாரணைகள் மூலம் உண்மைத்தன்மை தெரியவரும் வரை, இது வளர்ச்சி பெற்றுவரும் அதிக இலாபம் தரும் ஒரு நிறுவனமாக உலகில் காட்டப்பட்டது. இதன் விசாரணைகளின் போது, இந்த நிறுவனம் திவாலாகி கிடப்பது அம்பலமானது. 400 கோடி டொலர் நட்டம் ஏற்பட்டு இருந்ததும், அதை மூடிமறைக்க செய்த சதிகளும் அம்பலமானது. அத்துடன் சேவை முதலீடாக காட்டி, வரிச் சலுகை பெற்றதுடன், பங்குச் சந்தையில் தன்னை வீங்க வைத்தது அம்பலமானது. முதலில் பங்கை வாங்கியவர்கள், எதுவுமற்றவராக மாறினர். இதை இயக்கியவர்களின் தனிப்பட்ட சொத்து, பல கோடியால் பெருகியது.

எத்தனை மோசடி. பங்குச் சந்தை மோசடிகளில் ஈடுபட்ட உலக இணையம் (றுழுசுடுனு ஊழுஆ), தனது 4000 கோடி டொலர் கடனை மூடிமறைத்து இலாபம் தரும் நிறுவனமாக உலகை ஏமாற்றியது. 2001 இல் 380 கோடி நட்டம் ஏற்பட்ட போது, இலாபம் சம்பாதித்தாக உலகை எமாற்றி பங்குச் சந்தையை மோசடி செய்தது. தனது சொந்த பங்கை வாங்க, 33.97 கோடி டொலரை கடனாக கூட கொடுத்தது. பங்குச்சந்தையில் பங்குகள் மோசடிகள் ஊடாகவே அவை ஊதிப் பெருப்பிக்கப் படுகின்றது.

பாருங்கள், செரக்ஸ் (Xerox) என்ற அமெரிக்க நிறுவனம், 1997 முதல் தவறான வகையில் தனது இலாப நட்டத்தை முன்வைத்து பங்குச் சந்தையை ஏமாற்றியது. 1997 முதல் 2002 வரையான 5 வருடத்தில், 600 கோடி டொலரை தனது கணக்கு வங்கியில் மோசடியாக புகுத்தியது. தனது வருமானத்தை 200 கோடி டொலரால் அதிகப்படுத்தி காட்டியது. இதன் உயர் அதிகாரிகள் பங்குச் சந்தையின் மூலம், 3,5 கோடி டொலரை சுருட்டமுடிந்தது. இதன் உச்சக்கட்ட பங்கின் விலையோ 60 டொலராக இருந்தது. மோசடிகள் அம்பலமானதை அடுத்து, பங்கு 7 டொலராக சரிந்தது. ஆனால் இந்த நிறுவனத்தின் முக்கிய நபர், தனது தனிக்கணக்கில் 2.5 கோடி டொலரை சொந்தமாக்கிக் கொண்டார். யார் இதை இவரிடம் இழந்தனர் என்றால், பங்கை 60 டொலருக்கு வாங்கியவர்கள் தான்.

இது போல் தான் வேல்ட்கொம் (றுழசடனஉழஅ) 400 கோடி டொலரை சேவை மூலதனமாக காட்டி ஏமாற்றியது. இது குறுகிய இலாபத்தை காட்ட உதவியது.

இதுபோல் மருத்துவ நிறுவனமான ரிட் எயட் (சுவைந யுனை) 100 கோடியால் தனது வருமானத்தை உயர்த்திக் காட்டியது. மனித உழைப்பிலான சேமிப்புகளை உறிஞ்ச, மோசடிகள் தான் ஒரே வழி. இதில்தான் பங்குச் சந்தை இயங்குகின்றது.

உலகில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான என்ரோன் இதையே செய்தது. மின்சாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய என்ரோன் என்ற அமெரிக்க பன்நாட்டு நிறுவனத்தின் மோசடியில், அமெரிக்காவின் மிகப் பெரிய இரு வங்கிகளும் சேர்ந்து ஈடுபட்டன. இந்த குற்றத்தை மூடிமறைக்க, வங்கிகள் 25.5 கோடி டொலரை இலஞ்சமாக தரவேண்டும் என்ற உடன்பாட்டை செய்து கொண்டது. என்ன செய்தது, கடன்களைக் கூட பண வரவாக காட்டும் மோசடியைச் செய்தது. இதன் மூலம் பங்குச் சந்தையை கவர்ந்து, பல இலட்சம் மக்களின் சேமிப்புக்களை திவாலாக்கினர். இப்படி மோசடிகள் பல. அதை மூடிமறைக்க, இதில் இழந்த மக்களை ஏமாற்ற விசாரணைகள். அதாவது பங்குச் சந்தை நேர்மையானதாக காட்ட, அதில் தொடர்ந்தும் கொள்ளையிட விசாரணைகள் உதவுகின்றது. திருடர்கள் சேர்ந்து நடத்தும் சுய விசாரணைகள். திருட்டு ஒழுக்கமானதா என்று ஆராய்ந்து, திருட்டுச் சொத்தை சட்டபூர்வமானதாக்குவது தான்.



இப்படித் தான் 1978 இல் அமெரிக்க செனட் 130 தொழில்துறை தொடர்பான ஒரு விசாரணையை நடத்தியது. இதில் 530 தொழில்துறை தலைவர்கள் மற்றைய தொழில் துறை தலைமையகத்தில் திட்டமிடுபவர்களாக இருப்பது தெரியவந்தது. ஒரு திட்டமிட்ட கூட்டுக் கொள்ளை அம்பலமானது. அத்துடன் மூன்றாவது தொழில்துறை கூட்டத்தில் கலந்து கொள்ளுதல், வருடம் 13000 மாக இருந்ததும் தெரியவந்தது. மூலதனம் கூட்டுக் கொள்ளையை, திட்டமிடப்படுவதை இது மேலும் அம்பலப்படுத்தியது.

உலகில் மிகப் பெரிய பணக்காரப் பட்டியலின் எண்ணிக்கையும், கொள்ளையிட்ட தொகையும் அதிகரித்து வருகின்றது. 2007 க்கும் 2006 க்கும் இடையில் 100 கோடி டொலருக்கு மேல் செல்வத்தை கொள்ளையிட்டு குவித்தோர் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்து. இப்படி 100 கோடி டொலருக்கு மேல் செல்வத்தை கொள்ளையிட்டு வைத்திருந்தோர் எண்ணிக்கை, 946 ஆகியது. இது 2005க்கும் 2006 க்கும் இடையில், இந்த அதிகரித்த எண்ணிக்கை 102 யாக இருந்தது. அதே நேரம் 100 கோடிக்கு மேல் செல்வத்தை கொள்ளையடித்து வைத்திருந்தோரின், செல்வத்தின் அதிகரிப்பு 18 சதவீதமாக இருந்தது. இந்த அதிகரிப்பு 2.6 திரிலியன் டொலராக இருந்தது. இதேபோல் உலகில் 10 இலட்சம் டொலருக்கு மேலாக செல்வம் வைத்திருந்தோர் எண்ணிக்கை 2005 இல் 87 இலட்சமாக இருந்த எண்ணிக்கை, 2006 இல் 95 இலட்சமாகியது. செல்வத்தின் அதிகரிப்பு 11 சதவிகிதத்தால் அதிகரித்த அதேநேரம், அது 37.2 ரிலியன் டொலராக இருந்தது. இப்படி தனிநபரிடம் குவியும் செல்வம், எங்கிருந்து எப்படி வருகின்றது? ஆம் உலகமக்களின் உழைப்பில் இருந்து, உழைப்பின் சேமிப்புகளில் இருந்து, முன்னைய தலைமுறை விட்டுச்சென்ற உழைப்புச் செல்வத்தையும் கொள்ளையிடுகின்றது.

இது தான் உலகமயமாதல். உலகை கொள்ளையடிப்பது தான் உலகமயமாதல். உலக செல்வத்தை குவிப்பது தான், ஜனநாயகம் சுதந்திரம். அதற்கு உட்பட்டது தான் அனைத்தும்.

said...

TCS has announced that 10% from variable pay will be reduced from the salary due to low performance of TCS, A byproduct of Stock market issues.

Asuran

said...

//அந்த பணம் திருப்பித்தரப்படுவதோ அல்ல. அதை வாங்கலாம் விற்கலாம். அதாவது இலாப நட்ட கணக்கு உட்பட்டது. மூலதனம் திடீரென்று திவாலாகும் போது, போட்ட பணம் அதோ கதி தான்.
//
half the story. if you invest in good business, it returns profit. just like investin gin local maligai kadai. if you buy good business, you gain. if you buy bad business you lose.
just like small businesses close down when they invest in a bad shop not run properly.

it helps to close out/discourage businesses that are not run properly and encourage the ones that are run properly.


True, there was plenty of fraud in 2000. They looted public money in many ways , mainly through hyped IPOs.
Again stupidity and media hype
are all reasons why people got cheated.


In USA , some people got punished. Many escaped with fine. Surprising thing is , India has no scandals.
India has all good people, no one breaks rules!! difficult to believe.

said...

//அது இருக்கட்டும். இந்த முதலீட்டு பிரச்சினையில் இங்கு குறிப்பாக பேசியுள்ள விசயம் அன்னிய முதலீடு ஏன் உற்பத்திக்கானதாக இல்லாமல் வெறுமே சூதாட்டத்திற்க்கு என்று வந்து சென்றது? என்பதைத்தான்.//
p.chidambaram's fault (they collect zero taxes from investors and gamblers . ) other countries have lot of taxes on gamblers and lowertax for investors.
india takes zero tax for both. stupid.

said...

//
//அது இருக்கட்டும். இந்த முதலீட்டு பிரச்சினையில் இங்கு குறிப்பாக பேசியுள்ள விசயம் அன்னிய முதலீடு ஏன் உற்பத்திக்கானதாக இல்லாமல் வெறுமே சூதாட்டத்திற்க்கு என்று வந்து சென்றது? என்பதைத்தான்.//
p.chidambaram's fault (they collect zero taxes from investors and gamblers . ) other countries have lot of taxes on gamblers and lowertax for investors.
india takes zero tax for both. stupid.//


அது யார் பால்டா இருந்தா என்க்கென்ன கண்ணு... அன்னிய் மூலதனம் வந்துட்டு போனது ஆப்படிக்கவா இல்ல உனக்கு ஆப்பாயில் போட்டுக் கொடுக்கவா என்பதுதான் நான் கேட்ட கேள்வியின் அடிப்படை. யார் மாமா வேல பாத்தான்னா கேட்டேன்? அதுதான் ஊருக்கே தெரியுமே. போன தடவ அத்வானி, வாஜ்பேயி மாமா இந்த தடவ மன்மோகன், சிதம்பரம் மாமா.

கடசீல இந்தியாவுக்கு ஆப்படிக்கிறததான் உங்களுங்க வளர்ச்சின்னு சொல்றாங்கங்க்கிற.. .

அசுரன்

said...

10 ரூபாய் முகமதிப்பு கொண்ட ரிலயன்ஸ் பவரின் ஒரு பங்கினை 450 ரூபாய் கொடுத்து வாங்குகின்றவர்கள் எவ்வளவு பெரிய முட்டாள்களாக இருக்கமுடியும். அய்யோ பரிதாபம் லாட்டரி சீட்டு வாங்குவது போல் வாஙிவிட்டார்களே நமது மக்கள். ரிலயன்ஸ் பவர் மின்சாரத்தை தயாரித்து மாநில அரசுக்கு யூனிட் அதிகபட்சம் 3 ரூபாய்க்கு விற்கப்போகிறது அதர்க்கான மின் உற்பத்தி ஆலையை அமைக்க பணம் திரட்டுகின்றது இதன் தயாரிப்பில் நிறுவனத்திற்கு லாபம் கிடைக்குமா என்று பார்த்தால் அதுவே சந்தேகம் தான். இப்படி பத்து ரூபாய் பொருளை 450 ரூபாய்க்கு வாங்குபவர்கள் எவ்வளவு பெரிய திறமைசாலிகள்.

said...

when there was no other good place to money in their
own countries, they put all their money in china and
india. many people buy stocks on margin (loan). only problem is
when stocks start falling, the margin call comes and
everythign gets sold automatically. It was known that
china and india will be volatile. oru murai soodu kandaal,
next time market will go up more slow steady.
IT is only small part of india 's economy. (just makign too much noise). More than 90
percent of indian economy is domestic. They are trying to
build construction based economy. only problem is doing it
by replacing farms.
It is impossible for our farmers or even scientists to
predict whether ther is drought in australia or snow in
africa.
Farmers have ways to protect against price fluctuation using
commodity market itself. Because they are uneducated and
nobody is teaching them how to do it, they get hurt.
they have to buy put contracts for their commodity to preserve
minimum profit. when the harvest comes out, if prices are high
they can sell at whatever market price and profit. if market
prices dip, they will make up the money by selling their put
contract. (namakke idhu lesile puriyadhu). but they have to pay
this additional cost for buying thses contracts. Other ways to reduce
risk is to not invest in one crop but have multiple crops. If they( govt)
import food when there is plenty of production locally,
they have to fight in other ways.

Some farmers in US take money from local community people for a year
upfront and cultivate all the grains and vegetables for the whole year
for that family and deliver them.

In the olden days farmers paid the workers with paddy, good
quality produce. It did not go through the corrupt fci, ration shop,
smuggling, rice politics etc. Most of the poor is in village only. I think the farmers will join and do something on their own.

said...

//இப்படி பத்து ரூபாய் பொருளை 450 ரூபாய்க்கு வாங்குபவர்கள் எவ்வளவு பெரிய திறமைசாலிகள்.//


10 ரூபா பொருளை 450 ரூபா கொடுத்து வாங்க வைச்சவன் எந்தளவுக்கு முடிச்சவிக்கியா இருக்கனும்? இதே கும்ப்லதான் பூச்சி மருந்து பாட்டில் பெப்ஸி/கோக்கை சப்பு கொட்டி குடிக்கும் ஒரு அடிமை கும்பலை உருவாக்கியுள்ளது.

பார்ப்ப்னியம் பெரும்பான்மை மக்களை சாதியத்தில் ஆழ்த்துவன் மூலம் தனது அடிமையாக வைத்துக் கொள்கிறது. உலகமயமோ பெரும்பான்மை மக்களை பிழைப்புவாதிகளாக வைத்துக் கொள்வதன் மூலம் தனது சுரண்டலை செய்கிறது. பார்ப்ப்னியமும் உலகமய்மும் இணையும் ஜனநாயக மறுப்பு புள்ளிகள் நிறைய உள்ளன.

அசுரன்

said...

//10 ரூபாய் முகமதிப்பு கொண்ட ரிலயன்ஸ் பவரின் ஒரு பங்கினை 450 ரூபாய் கொடுத்து வாங்குகின்றவர்கள் எவ்வளவு பெரிய முட்டாள்களாக இருக்கமுடியும். அய்யோ பரிதாபம் லாட்டரி சீட்டு வாங்குவது போல் வாஙிவிட்டார்களே நமது மக்கள்//
who are these idiots? indians or nris ?. Many nris applied for this ipo with demat account. So India gets to gain some foreign money. How to say who won and who lost?

Related Posts with Thumbnails