TerrorisminFocus

Thursday, September 27, 2007

அத்வானி, இல.கணேசன், ராம.கோபாலன் ஆகியோர் சமூகத்துக்கு தலித் 'இந்து' எழுதும் கடிதம்!

அத்வானி, இல.கணேசன், ராம.கோபாலன் ஆகியோர் சமூகத்துக்கு தலித் இந்து எழுதும் கடிதம்:


அய்யா! எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே எங்கள் வீட்டில் சுடலைமாடனத்தான் கும்பிட்டுக் கொண்டு வருகிறோம். எனது பெயரும் கூட சுடலைமணிதான். 15 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் ஊருக்கு கொஞ்சம் பேர்கள் வந்தார்கள். இராமனுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்றார்கள். செங்கல்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து பூசைகள் எல்லாம் போட்டார்கள்.

எங்களை எல்லாம் இந்துக்கள் என்று சொன்னார்கள்..

அதற்கு பிறகுதான் கொடியங்குளம் ஊரில் எங்கள் ஆட்களை தேவமார்களும், போலீசும் சேர்ந்து கைகால்களை உடைத்துப் போட்டார்கள்.. குடிதண்ணீர்க் கிணத்தில் பீ அள்ளிப்போட்டெல்லாம் அநியாயம் பண்ணினார்கள்... எங்கேயோ உத்திரப்பிரதேசத்துக்கு செங்கல் அனுப்பனும் என்று எங்களை இந்து என்று சொல்லி ஆள் பிடிக்க வந்த நீங்கள் யாரும் கொடியங்குளத்துக்கு ஏனய்யா வரவில்லை? யார் யாரெல்லாமோ ஆறுதல் சொன்னார்கள்.. சாதி வெறியர்களைக் கண்டித்துப் பேசினார்கள்... ஏனய்யா!... அப்போது உங்கள் வாயில் என்ன வைத்திருந்தீர்கள்?

அதே மாதிரி எங்காட்கள் குறிஞ்சாங்குளத்தில் கல்லால் சிலை வடித்து அம்மனைக் கும்பிட முடிவு பண்ணியபோது நாயக்கர் சாதி வெறியர்கள் எங்காட்களின் குலையை அறுத்து வெறியாட்டம் நடத்திய போது எதைப் பிடுங்கப் போயிருந்தீர்கள்?

மேலவளவிலே பஞ்சாயத்துத் தேர்தலில் நின்னு ஜெயிச்சதைப் பொறுக்க முடியாத சாதி இந்துக்களான தேவர் சாதி வெறியர்கள் முருகேசனுடன் சேர்த்து 4 தலித்துகளின் தலையைச் சீவி எறிந்தார்களே! ராமனின் பேரைச் சொல்லி இந்துக்களின் ஒட்டுமொத்தக் குத்தகை எடுத்திருக்கும் பார்ப்பனப் பதர்களே! அப்போது எங்கே போயிருந்தீர்கள்?

பானையிலே குடிக்க நீர் எடுத்தாள் எனும் குற்றத்திற்காக ஒன்றாம் வகுப்பு தலித் மாணவி தனத்தின் கண்ணைத் தாக்கிப்பார்வையைப் பறித்தானே ஓர் ஆசிரிய மிருகம்! அப்போது எந்தக் கிரகத்தில் இருந்தீர்கள்?

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைக்காக ஊர்வலம் போனபோது தேவர்சாதிப் போலீசால் அடித்தே ஆற்றில் வீசப்பட்டு 17 பேர்கள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டார்களே தெரியுமா? அவர்களில் 2 வயது சிறுவன் விக்னேசும் ஒரு ரத்த சாட்சி தெரியுமா? அவர்களின் பிணங்களுக்காவது கண்ணீர் அஞ்சலி செலுத்த மனசு வந்ததா உங்களுக்கு?

கண்ணகி எனும் வன்னிய சாதி மங்கையைக் காதலித்ததற்காக முருகேசன் எனும் தலித்தையும் அந்தப்பெண்ணையும் நஞ்சு புகட்டிக் கொன்றதே ஆதிக்க வன்னிய இந்து சாதி வெறி! அதைக் கண்டிக்க வந்தீர்களா?

நாட்டார் மங்கலம், கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி ஆகிய ஊர்களில் தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்கள் எனக்காத்த சாதி வெறியன் முத்துராமலிங்கத்தின் அடிப்பொடிகள் 10 ஆண்டுகளாக பஞ்சாயத்துத் தேர்தலைக் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருந்தபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

கூத்தரப்பாக்கத்தில் சாமி எங்கள் தெருவழியாக வர வேண்டும் என நாங்கள் கேட்டபோது ஊத்தவாயன் சங்கராச்சாரி "நீங்கள் சுத்தபத்தமாய் இருந்தால் சாமி உங்கள் தெரு வழியே வரும்" என நரகல் வார்த்தை உதிர்த்தபோது வாயில் என்ன வைத்திருந்தீர்கள்? அதே சாதிவெறியன் கொலைக்குற்றத்தில் உள்ளே இருந்தபோது ஜெயில் வாசலில் விழுந்து கும்பிடத் தெரிந்த உங்களுக்கு கண்டதேவியில் நாங்கள் தொட்டிழுக்க முடியாத தேருக்காக உரிமைக்குரல் கொடுக்க மனசு இருந்ததா?

கீழ்வெண்மணியில் கருகினோம்..விழுப்புரத்தில்,புளியங்குடியில்,போடி நாயக்கனூரில், ஊஞ்சனையில் வெட்டுப்பட்டு செத்தோமே...ஒப்பாரி வைத்து அழவாவது வந்தீர்களா?

மகாராஷ்டிரத்தில் உங்கள் சாதி வெறி தாளமுடியாமல் புத்தமதத்துக்கு ஓடிய பின்னர்கூட உங்கள் இந்து வெறியர்கள் குடும்பத்தையே நிர்வாண ஊர்வலம் விட்டு தாய்,மகள், கண் பார்வையற்ற மகனை அடித்தே கொன்றார்களே! அய்யா! ராமனின் வாரிசுகளே! அக்கொடுமையைக் கண்டிக்கவாவது செய்தீர்களா?

மாட்டுக்குப் பிறந்தவர்களே! (பசு மாட்டை 'மாதா' என்பவர்களை அப்படி அழைக்கலாம்தானே!) செத்த மாட்டின் தோலை உரித்துப் பிழைத்தவர்களை ஹரியாணாவில் உயிருடன் அடித்தே கொன்றீர்களே! அதை எங்களால் மறக்க முடியுமா?

கோவையில் முசுலீம்களைக் கொல்வதற்கு குவார்ட்டர் பாட்டிலைக் கொடுத்தே எங்கள் அருந்ததியர்களைக் கூலிப்படைகளாக மாற்றி நரவேட்டை ஆடினீர்களே! அதே அருந்ததியர்களின் வாயில் காய்ந்த பீயைத் திணித்தார்களே திண்ணியத்தில். (மலம் என்று தேவ பாஷையில் கூறினால்தான் புரியுமா?) அத்வானியே! ராமகோபாலனே! பீயின் சுவையை நீ அறிந்திருக்கிறாயா? அக்கொடுமையை எதிர்த்து மனச்சாட்சியுள்ள மனிதர்கள் அனைவரும் கொதித்தெழுந்தபோது எந்த நாட்டில் நீங்கள் இருந்தீர்கள்?

இன்னமும் பட்டிதொட்டி எங்கும் எங்களுக்கு தனிக்குவளை,தனிச்சுடுகாடு என ஒவ்வொரு நொடியிலும் அவமானப்படுத்தப்ப்டுகின்றோம். (கடைகளின் பட்டியலை கடிதத்துடன் இணைத்துள்ளேன்.) ராமர் பாலத்தை உடைக்கக்கூடாது, பாபர் மசூதியை உடைக்க வேண்டும் என வெறியேற்றும் இந்துக்காவலர்களே! என்றைக்கு இரட்டை டம்ளர்களை உடைக்க வருவீர்கள்?

நீங்கள் முன்னிருத்தும் ராமன் எங்களுக்கு ஒருநாளும் நாயகனாக முடியாது. சூத்திரனாகிய சம்புகனைக் கொன்ற அவன் தான் எங்களது (சூத்திர, பஞ்சம மக்களுக்கு) ஜென்ம விரோதி என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

தசாவதாரம் எடுத்த உங்கள் விஷ்ணு மீனாகப்பிறந்தான்..ஆமையாகப் பிறந்தான்..பீ தின்னும் பண்ணியாகப் பிறந்தான்..பாப்பானுக்கு பிறந்த ராமனாகப் பிறந்தான்..ஒரு தலித்தாக ஏன் அவன் பிறக்கவில்லை? என்பதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?

இன்றைக்கு இந்துக்களின் மனது புண்பட்டு விட்டது என்று தினமலத்திலும் (தினமலர்தான்) தினமணியிலும் ஊளையிடும் மிருகங்களே! இரண்டாயிரம் ஆண்டுகளாய் அடிமையாக்கி வைத்திருந்த கொடுமையிலிருந்து எங்கள் சகோதரர்கள் தப்பித்து இசுலாமிலும் கிறித்துவத்திலும் அடைக்கலமானார்கள் எனும் வரலாறு எமக்குத் தெரியும்...உனது 'இந்து'மதவெறிக்குப் பலியாகி எமது சகோதரர்களை வெறுக்க நாங்கள் இனியும் இளிச்சவாயர்களோ கேணையர்களோ கிடையாது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே இந்தக்கடிதம்.

அம்பேத்கர் உங்களைப்பற்றி மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்.

"இவர்கள் நாவிலே ராமனையும் கைகளிலே கூர்வாளையும் வைத்திருப்பார்கள். யோகிகளைப்போன்று பேசுவார்கள். ஆனால் கொலைகாரர்களாக நடந்து கொள்வார்கள்.கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறான் என்பார்கள். ஆனால் விலங்கிலும் கேவலமாய் மனிதனை நடத்துவார்கள். இவர்களுடன் சேராதீர்கள். இவர்கள் மிகக் கொடிய வஞ்சனையாளர்கள். எறும்புக்கு சர்க்கரை உணவிடுவார்கள். ஆனால் இங்குள்ள மனிதர்கள் குடிப்பதற்கு - நீரெடுக்கத் தடை விதிப்பார்கள். இவர்களுடன் தொடர்பு கொள்ளாதீர்கள்"

இவண்
சுடலைமணிஇணைப்பு:

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தீண்டாமை வெறி:‘இரட்டைக் குவளை’ அமுலிலுள்ள தேனீர் கடைகள் பட்டியல் - பாரீர்!

ஈரோடு, கோவை, திண்டுக்கல், தென்னாற்காடு மாவட் டங்களில் ‘இரட்டைக் குவளை’ முறை அமுலி லுள்ள தேனீர்க் கடைகள் மற்றும் தலித் மக்களை அனுமதிக்காத கோயில்களின் பட்டி யலை - பெரியார் திராவிடர் கழகத் தோழர் கள் தயாரித்துள்ளனர். அந்தப் பட்டியலை, இங்கு வெளியிடுகிறோம்.


பாபு, த/பெ. ராமசாமி, பாபு டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638503.

முருகேஷ், த/பெ. ரங்கசாமி, முருகன் டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம்௬38 503.

அழகிரிசாமி (கண்ணன்), கண்ணன் டீ ஸ்டால், முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல் சத்தி வட்டம் - 638 503.

வெங்கடேஷ், த/பெ. செட்டியார், வெங்கடேஷ் டீ ஸ்டால், கடைவீதி சாலை, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

சுந்தரமூர்த்தி, த/பெ. வெள்ளேகவுண்டர், சுந்தரமூர்த்தி டீ ஸ்டால், அம்மன் கோவில் வீதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

ராமசாமி, த/பெ. கருப்பண முதலியார், ராமசாமி டீ ஸ்டால், பாரஸ்ட் ரோடு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

சஞ்சீவி, சஞ்சீவி டீ ஸ்டால், கடைவீதி ரோடு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

இராசு, இராசு டீக்கடை, புது மேட்டூர், ஆயில் மில் அருகில், சத்தி ரோடு, தவிட்டுப்பாளையம், அந்தியூர் அஞ்சல், பவானி வட்டம்.

சம்பத் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

கிரி தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

மல்லிகா டீ ஸ்டால், சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம். (உணவு பரிமாறுவதற்கு இரண்டு பெஞ்சுகள் உள்ளன)

இராயப்பன் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சிவாயாள் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம். (உணவு பரிமாறுவதற்கு இரண்டு பெஞ்சுகள் உள்ளன)

முருகபவன் தேனீர்க் கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

ஆசனூர்க்காரர் டீக்கடை, சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பாய் டீக்கடை, மசூதி பின்புறம், சத்தி மெயின் ரோடு, காசிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

தங்கவேல், தங்கவேல் தேனீரகம், முதன்மைச் சாலை, அளுக்குளி அஞ்சல், கோபி வட்டம்.

முத்துசாமி டீக்கடை, செங்கோட்டையன் நகர், குள்ளம்பாளையம் வழி, நாதிபாளையம் ஊராட்சி, கோபி வட்டம்.

கந்தசாமி டீக்கடை, செங்கோட்டையன் நகர், குள்ளம்பாளையம் வழி, நாதிபாளையம் ஊராட்சி, கோபி வட்டம்.

வேலன் டீக்கடை, குள்ளம்பாளையம் பிரிவு, ஈரோடு மெயின் ரோடு, குள்ளம்பாளையம்,கோபி வட்டம்.

ஜெயராணி டீக்கடை, வேலன் டீக்கடை எதிரில், ஈரோடு மெயின் ரோடு, குள்ளம்பாளையம், கோபி வட்டம்.

சுப்ரமணியம் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பி.எஸ். கிருஷ்ணன் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பாரியூர் அம்மன் மகளிர் சுயஉதவிக்குழு டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

கார்மேகம் டீக்கடை, ஈரோடு மெயின் ரோடு, பொலவக்காளிபாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

அசோக் டீ ஸ்டால், தாசம்பாளையம், ஈரோடு மெயின்ரோடு, கோபி வட்டம்.

முருகேசன், த/பெ. சின்னப்ப உடையார், முருகேசன் டீக்கடை, காராப்பட்டி,
கரட்டுப்பாளையம் அஞ்சல், குருமந்தூர் வழி.

சின்ன அம்மணி டீக்கடை, க/பெ. கே.பி. ராஜா, கரட்டுப்பாளையம் அஞ்சல், குருமந்தூர் வழி.

நாச்சிமுத்து டீக்கடை, எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சங்கீதா டீக்கடை, பேரூராட்சி அலுவலகம் அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

காளியப்பன் டீக்கடை, தெற்குப் பகுதி, அரிசி ஆலை அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர்,செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

பொன்னுச்சாமி டீக்கடை, தெற்குப் பகுதி, அரிசி ஆலை அருகில், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர் செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

சின்னப்பன் (எ) காளையன், மாரனூர், ஊத்தண்டியூர் ஊராட்சி, மாரனூர் மேடு, செண்பகபுதூர் அஞ்சல், சக்தி தாலுக்கா.

சிந்து உணவகம் (தேனீர்க்கடை), குமாரசாமி, செண்பகப்புதூர் ஊராட்சி, செண்பகபுதூர் அஞ்சல், சத்தியமங்கலம் வட்டம்.

பாலன் உணவகம் (தேனீர்க்கடை), மாரனூர், உத்தண்டியூர் ஊராட்சி, மாரனூர் மேடு, செண்பகபுதூர் அஞ்சல், சத்தியமங்கலம் வட்டம்.

ராஜேந்திரன் தேனீரகம், வேடச்சின்னானூர் (பேருந்து நிறுத்தம் அருகில்) வேடச்சின்னானூர் ஊராட்சி செண்பகபுதூர் அஞ்சல், சத்தி வழி.

கோபால் தேனீர்க் கடை, விண்ணப்பள்ளி ஊராட்சி, பாலிபாளையம் அஞ்சல், சத்தி வட்டம்.

மாகாளி நாய்க்கர் தேனீர்க்கடை, புதுரோடு (பேருந்து நிலையம் அருகில்), செண்பகபுதூர் அஞ்சல், விண்ணப்பள்ளி ஊராட்சி, சத்தி
வழி.சிக்கரசம்பாளையம் (ஊராட்சி)

பொன்னம்மா உணவகம், சிக்கரசம்பாளையம் புதுகாலனி, பேருந்து நிலையம் அருகில், சிக்கரசம்பாளையம் அஞ்சல்சக்தி வட்டம் - 638 401. சிக்கரசம்பாளையம் ஊராட்சி

ராமசாமி தேனீரகம், குளத்தூர் பிரிவு, சிக்கரசம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 401.அரியப்பம்பாளையம் பேரூராட்சி

சின்னப்பன் டீ, உணவகம், மூலக்கிணறு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

பழனிசாமி டீ, உணவகம், மூலக்கிணறு, அரியப்பம்பாளையம் அஞ்சல்,சக்தி வட்டம் - 638 402.

தனலட்சுமி டீ, உணவகம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

மணி, டீ, உணவகம், கொத்துக்காடு, அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

தமிழரசு டீ, உணவகம், (கோவில் அருகில்), பெரியூர், அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், பெரியூர், அரியப்பம்பாளையம் அஞ்சல், சக்தி வட்டம் - 638 402.

சிவகாமி டீ, உணவகம், (காலனி அருகில்), சதுமுகை அஞ்சல், தா.க. புதூர் வழி, சக்தி வட்டம் - 638 503.

முருகேசன், டி, உணவகம், காலனி அருகில், கெம்மநாய்க்கன்பாளையம் அஞ்சல், தா.க.புதூர் வழி, சக்தி வட்டம் - 638 503.

கோபால் டீ ஸ்டால் (பட்டரை ஸ்டாப் கூடக்கரை), ராஜகோபால், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

பாலாஜி டீ ஸ்டால் (பட்டரை ஸ்டாப் கூடக்கரை), பழனியப்பன், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

ரவி டீ ஸ்டால் (மேற்கு பகுதி கூடக்கரை),ரத்தினசாமி, கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

லட்சுமி டீ ஸ்டால் (கூடக்கரை மேற்கு), மணி பண்டாரம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

தங்கராசு டீ ஸ்டால் (கூடக்கரை மேற்கு), இராமலிங்கம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி தாலுக்கா - 638 454.

கொண்டையம்பாளையத்துக்காரன் டீ ஸ்டால், (கூடக்கரை மேற்கு), சுப்பிரமணியம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

கிட்டுசாமி டீ ஸ்டால், (கூடக்கரை மேற்கு), சுப்பிரமணியம், கூடக்கரை அஞ்சல், காசிபாளையம் வழி, கோபி - 638 454.

சரவணன் புரோட்டா ஸ்டால், உணவகம், கூடக்கரை மேற்கு, உரிமை : சரவணன், இவர் அரியப்பம்பாளையத்தை சார்ந்தவர்.

குறிப்பு: அனைத்துக் கடை களிலும் செயற்கைக் குவளை (பிளா°டிக் கப்) அதிகம் பயன்படுத்தப்படு கிறது.

முடி திருத்தக் கடைகள்

சுப்பிரமணி சலூன் கடை, கடைவிதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல், சத்தி வட்டம் - 638 503.

வெள்ளியங்கிரி சலூன் கடை, முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

சுப்பிரமணி சலூன் கடை, பெரியசாமி கோவில் வீதி, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

பெரியசாமி சலூன் கடை (சின்னப்பையன்), முருகன் கோவில் திடல், கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

பெரியசாமி சலூன் கடை, நரசஸ்சாபுரம் பிரிவு, கெம்பநாயக்கன்பாளையம் அஞ்சல்,சத்தி வட்டம் - 638 503.

செல்வம், யுவராஜ் முடித்திருத்தகம், எலத்தூர் மெயின்ரோடு, எலத்தூர்,செட்டிப்பாளையம் அஞ்சல், கோபி வட்டம்.

செல்வன் சலூன் கடை, உரிமை: செல்வன், லோகு சலூன் கடை, உரிமை: லோகநாதன், லிங்கேஸ் சலூன் கடை, உரிமை: லிங்கேஸ்ரன்,

லைட் (எ) ஆறுமுகம், அயனிங்கடை, கூடக்கரைமேற்கு, கூடக்கரை.
(இங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி வெட்டுவதில்லை)

கோயில் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் கூடக்கரை (வடக்கு).


கோவை மாவட்டம்கோவை புறநகர்

மோளப்பாளையம், சித்திரைச்சாவடி, வடிவேலம்பாளையம், விராலியூர், நரசிபுரம், அஜ்ஜனூர், கண்டப்பாளையம், காளப்பநாயக்கன் பாளையம், ஜாகீர் நாயக்கன் பாளையம், வெள்ளருக்கம் பாளையம், சிலம்பனூர்.பெரியநாயக்கன் பாளையம், காரமடை மேற்கு - புஜ்ஜனூர், திம்மம்பாளையம், கே.புங்கம்பாளையம், புன்னையூர், வெள்ளியங்காடு, கண்டியூர், சின்னப்புத்தூர், பெரிய புத்துர்,மங்களக்கரை புதூர், மூலத்துறை, பாலப்பட்டி, வச்சினப்பாளையம், கிட்டாம்பாளையம், புதூர்.

அன்னூர் :

மோக்கனூர், எ°. புங்கம்பாளையம், பகத்தூர், பல்லேபாளையம். இரும்பொறை : கவுண்டன்பாளையம், மீனம்பாளையம், கனுவக்கரை, கள்ளப்பட்டி, சின்னரங்கம்பாளையம், பெரியரங்கம்பாளையம்.

அவிநாசி

சேவூர், நம்பியாம்பாளையம் (கருவலூர் சாலை),ராணியம்பாளையம், தண்டுக்காரன்பாளையம்.

ஈரோடு உட்கோட்ட எல்லை

காவிரி பாளையம், குப்பன் துறை, உக்கரம், கடத்தூர்,பனையம்பாளையம்.

பல்லடம்


பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம், சித்தநாயக்கன்பாளையம், லட்சுமி நாயக்கன்பாளையம், கரடிவாவி, பருவாய்,ஆராக்குளம், அனுப்பட்டி, லட்சுமி மில்ஸ், ஐயம்பாளையம், 11 சென்னிபாளையம், அப்பம்பாளையம், காளிகாளப்பட்டி,வேலம்பட்டி, மடுகபாளையம், எளவந்தி, துத்தாரிபாளையம்,கேத்தனூர், வெங்கிட்டாபுரம், பணப்பட்டி, பிரண்டம்பாளையம், சிக்கனத்தூர்.

மேட்டு கடை டீ கடை, பாரதியார் நகர், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

ராமாத்தாள் டீ கடை, பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை - 641 016.

ஆசாரி மணி கடை, கரும்புரவிபாளையம், வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

பாலு உணவகம், கரடிவாலி, பல்லடம் , கோவை மாவட்டம்.

வஞ்சியம்மன் உணவகம், லட்சுமி உணவகம், செம்மிபாளையம் அஞ்சல்,
பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

குமார் உணவகம், சுக்கம்பாளையம், சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம், கோவை மாவட்டம்.

அமாசையப்பன் கவுண்டர் உணவகம், காமராசர் நகர், கண்ணம்பாளையம் அஞ்சல், சூலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை மாவட்டம்.

கவுண்டர் தேனீர் நிலையம், சிக்கனூத்து, சுல்தான் பேட்டை ஒன்றியம், கோவை மாவட்டம்.

தெற்குப்பாளையம், பொங்கலூர் ஒன்றியம், கோவை மாவட்டம்.

புத்தரச்சல் டீ கடை, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் தாலுக்கா.

நடுகவுண்டர் பெரிய பாப்பா கடை, வடவேடம்பட்டி, வடவேடம்பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

சுப்பையா கவுண்டர் டீ கடை, கிருஷ்ணா நகர், கரடிவாலி, பல்லடம் தாலுக்கா, கோவை.

முத்தக்கா டீ கடை, அனுப்பட்டி, பல்லடம் தாலுக்கா, கோவை.

பழனிச்சாமி கவுண்டர் டீ கடை, வெங்கிட்டாபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.

நடராஜ் டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

சுப்ரமணி டீ கடை, குள்ளம்பாளையம் மேற்கு, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

செந்தில் நாயக்கர் டீ கடை, துத்தாரிபாளையம் பிரிவு, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.

எலவந்தி வடுகபாளையம், மூன்று டீ கடை, பொங்கலூர் ஒன்றியம், பல்லடம் தாலுக்கா, கோவை.

மாரப்பன் கவுண்டர் டீ கடை, காளிவேலம்பட்டி, சுக்கம்பாளையம் அஞ்சல், பல்லடம் தாலுக்கா, கோவை.

கீர்த்திகா டீ கடை, வடவேடம்பட்டி, வடவேடம் பட்டி அஞ்சல், கேத்தனூர் வழி, சுல்தான்பேட்டை, பல்லடம் தாலுக்கா, கோவை.

தனி சுடுகாடு உள்ள இடங்கள்:


இராஜீவ்காந்தி நகர் வடவள்ளி, கணுவாய், நாதேகவுண்டன்புதூர், மேட்டுக்காடு, முல்லைநகர்,புதூர் புதுக்காலனி, போளுவாம்பட்டி, தெனமநல்லூர், ஆலாந்துறை, செம்மேடு, ஆறுமுகனூர், பச்சாபாளையம், கோவைப்புதூர், இடையர்பாளையம், லிங்கனூர் ஆதி தமிழன் நகர்.

பெருமநாயக்கன் பாளையம். பெருமாநாயக்கன்புதூர்,

குண்டடம் ஒன்றியம்

எடையபட்டி, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

பாரபாளையம், கொடுவாய் ஒன்றியம், காங்கயம் வட்டம்.

வலையபாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

வெல்லநத்தம் கிழக்கு.வெல்லநத்தம் வடக்கு, குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

சாத்தநாயக்கன்பாளையம், குண்டடம் ஒன்றியம், தாராபுரம் வட்டம்.

தீண்டாமை கடைபிடிக்கும் பொது கோவில் :

காளப்பட்டி மாரி அம்மன் கோயில்
மாகாளியம்மன் வீரமாத்தியம்மன் கோயில், பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை

சலூன்

வளர்மதி சலூன் - மல்லேஸ்வரி சலூன்,பாப்பம்பட்டி, பாப்பம்பட்டி அஞ்சல், சுல்தான்பேட்டை ஒன்றியம், கோவை.

ஹீராட் சலூன், சித்நாயக்கன்பாளையம், சுல்தான்பேட்டை, கோவை

நிலா நிரோஷா ஹேர் லைன்ஸ், குப்புசாமி நாயுடுபுரம், பல்லடம் தாலுக்கா, கோவை.


விழுப்புரம் மாவட்டம்


அப்பு (ஆறுமுகம்), அருத்தங்கொடி, திருக்கோவிலூர் வட்டம்.
குமார் (செகதீசன்), லக்கிநாயக்கம்பட்டி, சங்கராபுரம் வட்டம்.

ஆதி திராவிடர்களை அனுமதிக்காத கோயில்கள்

சிவன் கோயில் - கடுவனூர், சங்கராபுரம் வட்டம்.துரோபதி அம்மன் - தொழுவந்தாங்கல், சங்கராபுரம் வட்டம்.

துரோபதி அம்மன் - கள்ளிப்பட்டு, சங்கராபுரம் வட்டம்.

ஈசுவரன் கோயில் - கூவனூர், திருக்கோவிலூர் வட்டம்.

கல்வராயன் கோயில் - கோமனூர், கள்ளக்குறிச்சி வட்டம்.

வினாயகர் கோயில் - நாகந்தூர், செஞ்சி வட்டம்.


திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டைக்குவளை, இரட்டை இருக்கை முறைகள் உள்ள கிராமங்களின் பட்டியல்

பழனி ஒன்றியம்


1. மிடாப்பாடி2. மயிலாபுரம் 3. நல்லெண்ணக்கவுண்டன்புதூர்4. பாப்பாகுளம்5. அய்யம்பாளையம்6. சின்னாக்கவுண்டன்புதூர்7. வேலாயுதம்பாஇளையம் புதூர்8. காவலப்பட்டி 9. போடுவார்பட்டி10. கரடிக்கூட்டம்


ஓட்டன்சத்திரம் ஒன்றியம்

11. திருவாண்டபுரம்,12. மோதுப்பட்டி,13. அப்பியம்பட்டி,14. நால்ரோடு,15. கூத்தம்பூண்டி,16. கழுத்தறுக்கன்பாளையம்,17. கரியாம்பட்டி,18. அம்மாபட்டி,19. குத்திலிப்பை,20. ஓடைப்பட்டி,21. சக்கம்பட்டி,22. சிந்தலப்பட்டி.23. சவ்வாதுபட்டி24. கோ.கீரனூர்25. புதுஅத்திக்கோம்பை26. அரசப்பிள்ளைபட்டி27. காவேரியம்மாபட்டி28. சின்னக்கரட்டுப்பட்டி29. பெரிய கரட்டுப்பட்டி30. பெரியகோட்டை31. தேவத்தூர்32. கொத்தயம்33. கந்தப்பகவுண்டன்வலசு34. 16 புதூர்35. கிலாங்குண்டல்36. கப்பல்பட்டி37. புலியூர்நத்தம்38. முத்துநாயக்கன்பட்டி39. நவாலூத்து40. இ.கல்லுப்பட்டி41. புளியமரத்துக்கோட்டை42. பி.என்.கல்லுப்பட்டி43. குளிப்பட்டி44. சின்னக்குளிப்பட்டி45. மறுநூத்துப்பட்டி46. சிறுநாயக்கன்பட்டி47. வடகாடு 48. பால்கடை49. வண்டிப்பாதை50. கொசவபட்டி51. தங்கச்சியம்மாபட்டி52. மேட்டுப்பட்டி (அம்பிளிகை)53. வளையபட்டி ( இடையகோட்டை 54. வெரியப்பூர்55. சீரங்கக்கவுண்டன்புதூர்56. கொல்லபட்டி57. குட்டில்நாயக்கன்பட்டி

தொப்பம்பட்டி ஒன்றியம்


58. கோவில்அம்மாபட்டி 59. இராஜம்பட்டி 60. அத்திமரத்துவலசு 61. பணம்பட்டி 62. அக்கரைப்பட்டி 63. சரவணப்பட்டி 64. ஆலாவலசு 65. பூலாம்பட்டி 66. வாகரை 67. மரிச்சிலம்பு 68. கொழுமங்கொண்டான் 69. சங்கஞ்செட்டிவலசு 70. கல்துரை 71. கோட்டத்துரை 72. பெரியமொட்டனூத்து 73. தாளையூத்து 74. நாச்சியப்பக்கவுண்டன்வலசு75. புங்கமுத்தூர்,76. அப்பனூத்து,77. குமராசாமிக்கவுண்டன்வலசு,78. அரண்மனைவலசு79. தீத்தாக்கவுண்டன் வலசு80. திருமலைக்கவுண்டன்வலசு81. பருத்தியூர்,82. வடபருத்தியூர்,83. பொருளூர்84. மேட்டுப்பட்டி (கள்ளிமந்தையம்)85. ஒத்தையூர்( கள்ளிமந்தையம் 86. வேலம்பட்டி87. புளியம்பட்டி

8 பின்னூட்டங்கள்:

said...

சரியான சமயத்தில் வந்திருக்கும் தேவையான பதிவு அசுரன்.

இந்தியாவின் முதல் எதிரிகளே இது போன்ற சக சமுதாயத்தை கீழ்தரமாக நடத்தி சாகடிக்கும் இந்து மற்றும் மேல் சாதி (?) சமூக மக்களே. நமக்கு பாக்கிஸ்தானாலோ அல்லது அமெரிக்காவாலோ வரும் ஆபத்துக்களை விட இது போன்ற அபாயகரமான விளைவுகளால் நாட்டின் ஒற்றுமை கெடுக்கும் நாசக்கார கும்பல்களால் வரும் விளைகள் மக்களையும் நாட்டையும் நாட்டின் ஒற்றுமை, பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் நாசப்படுத்தி வருகின்றனர்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

said...

Iya… naan kekkurathu ellaam orey kelvithaanunga… BJP panrathu sariyaa thappaangirathu ellaam vivadhathukku uriya porul thaanungo…. Aanaa, indha visayathula thaakki pesurathukku ungalukku enunga BJP mattum kidaikkuthungo? Ella katchigalum(BJP’um serthu thaanunga) paara patchamillaama, thangaloda suyanalathukku katchi nadathittu irukkum pothu, yenunga ungalukku BJP mattum kannula padunthunga?

Appuram innoru visayamunga… indha thasaavathaaram so and so ellaam andha kaalathula endha endha samoogam irunthuchungalo appo ezhuthunathungo… Athula varra krishnavathaaram Krishnan aattidaiyannu thaanungo sollum. Avanga ezhuthuna kaalathula Dalit’ndra oru inam illaama irunthathaala avangalaala krishnanai appadi compare panna mudiyalaingo…

Indha vilakkam podhungalaa?

Appuram innonunga... naan onnum BJP aadharavaalan illaingo. Ellaa katchigal melaiyum nambikkai izhantha oru saadharana manusan thaanungo.

said...

பாமரத் தனமாகத் தொடங்கிய உங்களுக்கு இறுதிவரை அந்தப் பாணியைப் பின்பற்ற முடியாமலாகி விட்டதே!

மேற்காணும் பட்டியல் புதிய ஜனநாயகத்தில் வெளியிடப் பட்டதுதானே?

said...

அதிஅழகு,

இந்த பட்டியல் பெரியார் திக தோழர்கள் வெளியிட்டது. புதிய ஜனநாயகத்தில் வந்தது அல்ல. இங்கு இணையத்திலும் சுகுணா திவாகர் உள்ளிட்டவர்கள் தளத்தில் இந்த பட்டியல் காணக் கிடைக்கும்.

அசுரன்

said...

அதி அழகு,
வட்டார நடையில் எழுதத் தொடங்கினாலும் சம்பவங்களை எழுதி வரும்போது கோபம் நம்மையும் அறியாமல் நம் நடையை மாற்றி விடுகின்றது..நடையா இப்போ முக்கியம்? தலித்களுக்காக என்றுமே குரல் கொடுக்காத ராம வெறியன்களை செருப்பால் அடித்த மாதிரி கேக்கணுன்னு தானே இந்த கடிதமே!

சுடலைமணி

said...

//மேலவளவிலே பஞ்சாயத்துத் தேர்தலில் நின்னு ஜெயிச்சதைப் பொறுக்க முடியாத சாதி இந்துக்களான தேவர் சாதி வெறியர்கள் முருகேசனுடன் சேர்த்து 4 தலித்துகளின் தலையைச் சீவி எறிந்தார்களே! //

மொத்தம் 6 தலைகள் தோழர்.

நல்ல பதிவு.

said...

என்ன இது, ஒரே தலைப்பில் இரண்டு இடுகைகள் உள்ளன.

said...

கடிதத்தின் முதல் பகுதியை கீழ்க்கண்டவாறு மாற்றிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சுடலைமணி
==================================
அத்வானி,இல.கணேசன்,ராம.கோபாலன் ஆகியோர் சமூகத்துக்கு தலித் இந்து எழுதும் கடிதம்:

அய்யா! எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே எங்கள் வீட்டில் சுடலைமாடனத்தான் கும்பிட்டுக் கொண்டு வருகிறோம். எனது பெயரும் கூட சுடலைமணிதான். 15 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் ஊருக்கு கொஞ்சம் பேர்கள் வந்தார்கள்.
இராமனுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்றார்கள். செங்கல்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து பூசைகள் எல்லாம் போட்டார்கள்.

எங்களை எல்லாம் இந்துக்கள் என்று சொன்னார்கள்..

அதற்கு பிறகுதான் கொடியங்குளம் ஊரில் எங்கள் ஆட்களை தேவமார்களும், போலீசும் சேர்ந்து கைகால்களை உடைத்துப் போட்டார்கள்..குடிதண்ணீர்க்கிணத்தில் பீ அள்ளிப்போட்டெல்லாம் அநியாயம் பண்ணினார்கள்... எங்கேயோ உத்திரப்பிரதேசத்துக்கு செங்கல் அனுப்பனும் என்று எங்களை இந்து என்று சொல்லி ஆள் பிடிக்க வந்த நீங்கள் யாரும் கொடியங்குளத்துக்கு ஏனய்யா வரவில்லை? யார் யாரெல்லாமோ ஆறுதல் சொன்னார்கள்..சாதி வெறியர்களைக் கண்டித்துப் பேசினார்கள்...ஏனய்யா!...அப்போது உங்கள் வாயில் என்ன வைத்திருந்தீர்கள்?

அதே மாதிரி எங்காட்கள் குறிஞ்சாங்குளத்தில் கல்லால் சிலை வடித்து அம்மனைக் கும்பிட முடிவு பண்ணியபோது நாயக்கர் சாதி வெறியர்கள் எங்காட்களின் குலையை அறுத்து வெறியாட்டம் நடத்திய போது எதைப் பிடுங்கப் போயிருந்தீர்கள்?
==================

Related Posts with Thumbnails