TerrorisminFocus

TabView Widget by Hoctro

Tuesday, September 11, 2007

வசந்தத்தின் வலை முழக்கம் - புதிய வலைப்பூ!

றிமுகம் புதிய வலைப்பூ. மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உள்ளீட்ட தோழமை அமைப்புகளின் வெளியீடுகள், கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள், வெளியீடுகள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் போன்றவற்றை கொண்டதாக இந்த தளம் இருக்கும் என்று அதன் அறிமுக பகுதி தெரிவிக்கிறது.

திப்பு என்ற தோழர் தனது சொந்த ஆர்வத்தில் ஆரம்பித்திருப்பதாக வலைப்பூவின் அறிமுகப் பகுதியில் குறிப்பிட்டுள்ளார். புரட்சிகர அரசியலை இணையத்தில் எடுத்துச் செல்ல பெரும் பங்களிப்பு செய்யும் வகையில் இந்த தளம் இயங்கும் என்று வாழ்த்துகிறேன். தோழர் திப்புவின் முயற்சிக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

ஸ்பிரிங் தண்டர் என்ற பெயரில் இந்த தளம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. வசந்தத்தின் இடிமுழக்கம் என்பது 1960 களின் இறுதியில் மேற்கு வங்கத்தில் கிளர்ந்தெழுந்து இன்று வரை இந்திய ஆளூம் வர்க்கங்களின் அடி வயிற்றில் புளி கரைத்துக் கொண்டிருக்கும் நக்சல்பாரி எழுச்சியை குறிக்க சீன கம்யுனிஸ்டு கட்சி உபயோகப்படுத்திய உருவகம். இதோ வசந்தத்தின் இடிமுழக்கம் இன்னுமொரு உறுமலுடன் இந்த வலைத்தளத்தில் காணக் கிடக்கிறது. வசந்தத்தின் இசையை அனுபவித்து புரட்சிகர புத்துணர்வும், அறிவு செழுமையும் பெற வாருங்கள்.

தற்பொழுது PALA(மகஇக)வினுடைய இந்துத்துவம் குறித்த ஆங்கில கட்டுரையும், உலக சமூக மாமன்றத்தை அம்பலப்படுத்தி இந்த அமைப்புகள் மும்பையில் நடத்திய இணை மாநாட்டையொட்டி வெளியிட்ட கட்டுரைகளின் தொகுப்பும் வலையேற்றப்பட்டுள்ளது. தற்கால அரசியல் சூழலை புரிந்து கொள்ள பெரும் உதவிகரமாக இந்த தளம் இருக்கும் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான கட்டுரைகள் வரும் என்று நம்புகிறேன்.

"A single spark can start a prairie fire!"


தளம் குறித்து செய்தி வெளியிட்ட தோழர் அரசு பால்ராஜ்க்கு நன்றிகள்.

இந்த வலைப்பூ கட்டுரை குறித்த BlogBharti - Sanatan Dharma in a new bottle

புதிய தளம்: ஸ்பிரிங் தண்டர்





அசுரன்

10 பின்னூட்டங்கள்:

Izzath said...

Thank you Asuran for sharing this important information.

Izzath

Izzath said...

Thank you Asuran for sharing this important info.
Izzath

Izzath said...

Thank you asuran for sharing this information. Similar blogs supporting the marxist leninist ideology are more and more required.

Regards
Izzath

Izzath said...

Thank you Asuran for sharing this information.

Regards
Izzath

மஞ்சூர் ராசா said...

வசந்தத்தின் இடிமுழக்கம் என்னும் புதிய வலைப்பூவை பற்றிய விவரங்களுக்கு நன்றி நண்பரே.

லக்கிலுக் said...

வசந்தத்தின் வலை முழக்கம் திக்கெட்டும் அதிர வாழ்த்துக்கள் தோழர்!

அசுரன் said...

நண்பர்கள் மஞ்சூர் ரசா மற்றும் லக்கிலுக்கின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

அசுரன்

இரும்பு said...

பிரசுரிக்க வேண்டாம்:

அன்புள்ள தோழருக்கு வணக்கம்,
இரும்பு என்ற பெயரில் புதிதாக ஒரு வலைப்பதிவு தொடங்கியுள்ளோம், படித்துப் பார்த்து தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் தெறிவித்து உதவுங்கள்.

குரல்கள் said...

arimugaththirku nandri thozar

இரும்பு said...

பிரசுரிக்க வேண்டாம்

அன்புள்ளம் தோழர் க்கு

புதிதாக வலையுலககிற்கு அறிமுகமாகி உள்ளோம். தாங்கள் வருகை தந்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் தந்து எங்களை செழுமைப்படுத்தி உதவ வேண்டும்.

தளத்தின் முகவரி
thesteel.blogspot.com

Related Posts with Thumbnails