TerrorisminFocus

Monday, September 11, 2006

கம்யுனிச அவதூறு பதில் -1

(இதில் உள்ள புள்ளி விவரங்களில் சில எனது ஞபகத்தில் இருந்து எடுத்து இடுகிறேன் எனவே சிறு தகவல் பிழைகள் இருக்க வாய்ப்புண்டு. சரிபார்க்க அவகாசம் இல்லை. அதனால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.)


***********


செல்வனின் பதிவிற்க்கு இந்தப் பதில்:

அவரது பதிவின் தலைப்பு - "கம்யுனிஸ்டுகள் ஏன் ஒப்பாரி வைத்து அழுகிறாகள்?"

இதில் CIA, மற்றும் Wrold Bankன் புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்தியா முன்னேறுகிறது என்று ஒரு போர்ஜரி வேலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்.

அதற்க்கு பதில் சொல்லும் முகமாக:

இந்தியாவில் ஒரு சில பகுதிகள் வீங்கிப் பெருப்பதும் பெரும் பகுதிகள் ஒன்றுமில்லாமல் சுருங்குவதும் நடந்து வருகீறது என்பதை கவனத்தில் கொள்க. நாட்டில் கிராம மக்களின் சராசரி வருமானம் என்பது அதளபாதாளத்திற்க்குப் போய்விட்டதாக அரசு புள்ளி விவரம் சொல்கிறது(சாய் நாத் கட்டுரை) (இதே நேரத்தில் 100 புதிய மில்லினியர்கள் இந்தியாவில் உருவாகியிருக்கிறார்கள் - ஆக சராசரி என்னவோ அதேதான் இருக்கும் போல). சமீபத்தில் வறுமை கோடு பற்றிய அரசு வரையறையை மாற்றீயது தொடர்பாக கடும் விவாதம் நடந்ததைக் கவனிக்க நமது டாலர் செல்வனுக்கு நேரமிருந்திருக்காது.

அப்புறம் அப்படியே, அதிகமாகியிருக்கும் பட்டினி சாவுகள் (அரைப் பட்டினி ஆசாமிகள் அதிகமுள்ள் நாடு அதாவது சஹாரா பாலைவனத்தை விட அதிகம் என்று UNO புள்ளி விவரம் சொல்கிறது) (இந்த தொடர்ச்சியான பட்டினி சாவுகள் 1990 க்கு முன்பு கிடையாது என்பதை மனதில் கொள்க), social indicator தர வரிசையில் சறுக்கி 20 புள்ளிகள் இந்தியா இறங்கியிருப்பது பற்றி(இதுவும் UNO தான்), விவசாயிகள் தற்கொலை (இதுகூட 1990க்கு முன்பு இந்தளவுக்கு கிடையாது (இரு வருடத்தில் 1 லட்சம்)), அதளபாதாளத்தில் தொங்கும் விவசாய குடிகளின் ஆண்டு சராசரி வருமானம் (இதுவும் அரசு புள்ளிவிவரம்தான்), குழந்தைகளுக்கான ஆபத்தான நாடுகளில் 7 வது இடம் (இது மட்டும்தான் அரசு புள்ளி விவரம் கிடையாது).

அப்புறம் வெளிப்படையாக நாட்டை அடகு வைத்துள்ள விதை நெல் சீர்திருத்த சட்டம் (விவசாயி விதைப்புக்கு நெல் செர்த்து வைப்பதை தடை செய்யும் சட்டம்), அணு ஆயுத ஒப்பந்தம், தண்ணீர் தனியார்மய சட்டங்கள், ராணுவ ஓப்பந்தங்கள், காப்புரிமை சட்டம் காரணமாக மருத்துவ வசதியின்றி(குறிப்பாக ரேபிஸ்) சமீபத்தில் மாண்ட ஒரிஸ்ஸா, தமிழக, கர்நாடக அப்பாவிகள், விலை அதிகமான அத்தியாவசிய மருந்துகள், அப்படி மருத்துவ வசதி மறுக்கப்பட்ட நோயாளிகளை, ஏழை நோயாளிகளை சோதனை எலியாக பயன்படுத்த அனுமதி கொடுக்கும் சட்ட திருத்தம், இந்த மருத்துவ துறை அவலங்களை கூட 'இந்தியா மெடிக்கல் டூரிஸ மைய்யா'மாகி வருகிறது என்று பிரச்சாரம் செய்து மறைக்கலாம்.

இந்த சட்டங்களைப் பற்றி நாடாளுமன்றத்தில் இது வரை ஒரு விவாதம் கூட நடக்கவில்லையே அதைப் பற்றி டாலர் செல்வன் என்ன சொல்வார்?

ஒரு பக்கம் சர்க்கரை போன்ற பொருட்களீன் சந்தை விலை ஏறீவருவது, அதே நேரத்தில் விவசாய்யிகளிடம் இவற்றை கொள்முதல் செய்யும் விலை குறைந்து கொண்டே வருவதும் பற்றியெல்லாம் டாலருக்கு கவலையில்லை. அவரது கவலை எப்படி இந்த கம்யுனிஸ்டுகள் மக்களிடம் உண்மைகளை சொல்வதிலிருந்து கெடுப்பது என்பதுதான்.

டாலர் செல்வனின் டாலர் பாசமும் அவரது போலி தேசப்பற்றும் எனக்கு புதிதல்ல.

லட்சக்கணக்கில் அத்துக் கூலிக்கு நவீன நடோ டிகளாக விவசாய நிலத்தை விட்டு விட்டு ஓடி வரும் கிராமப்புற மக்கள், நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு அடையாளம் என்பவன் ஒரு வக்கிர பாண்டியனாகத்தான் இருக்க முடியும். அடுத்தமுறை வசந்த பவன்களுக்கு சென்றால் இலை பொறுக்கும் சிறுவனிடம் பேசிப்பாருங்கள், நாகப்பட்டினம், தஞ்சை, புதுக்கோட்டைகளின் ஏக்கம் தெரியவரும். தங்கையின் படிப்பு, அக்காவின் திருமணம், மருத்துவ செல்வுகள், அடுத்த விதைப்புக்கு ஏற்பாடு செய்வது.... இதேல்லாம் டாலரில் சம்பாதிப்பவருக்கான கவலைகள் கிடையாது.

அப்படி உண்மையில் இவருக்கு கவலையிருந்தால் வலைப்பூ உலகில் ஒரு விவாசாயி மாதமாதம் கட்டுரை எழுதி கதுறுகிறார், அதற்க்கு இதுவரை ஒரு பதில் ஒரு கட்டுரை, பின்னூட்டம் எழுதியிருக்கிறாரா இந்த அறிவு ஜீவி(??) டாலர் செல்வன்?

வேலைவாய்ப்பு குறைந்து விட்டது என்று நான் சொல்லவில்லை இந்தியாவின் RBI(reserve bank of India) சொல்கிறது. ஏழு வருடத்தில் 70,000 சிறு தொழிற்சாலைகள் கர்நாடகாவில் மூடப்பட்டுவிட்டதாக நான் சொல்லவில்லை அரசு சொல்கிறது, இப்படி இந்தியா முழுவதும் வேலை இழந்தவர்கள் 15 லட்சத்திற்க்கும் அதிகமானவர்கள் இவர்கள் இன்று காண்ட்ராக்ட் தொழிலாளர்களாக பிழியப்படுகிறார்கள். இதைப் பற்றி கூட டாலர் செல்வன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்(அவர் முரன்பாடு முத்தன்னா என்பதை இங்கும் நிருபிக்கீறார்).


இந்தியா is no more a low cost destination என்றூ கூறி MNCக்கள் சிறிது சிறிதாக கடையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். மிக சமீபத்தில் WTO வால் இந்தியாவுக்கு ஒரு மசிரும் கிடைக்கலன்னு எல்லா அரசியல், அதிகார வர்க்க தலைகளும் கட்டுரைகள், மேடைப்பேச்சுகள், பேட்டிகளில் சொன்னதை அவதனிக்கும் அவசியம் டாலர் செல்வனுக்கு கிடையாது.

அப்துல் கலாம் கனவு பற்றி விதந்து பேசுகிறார் திரு டாலர் செல்வன். அப்துல் கலாம் ஒரு நல்ல நடிகர் அதுவும் நயவஞ்சமமிக்க ஒரு காமெடி நடிகர். மக்கள் பிரச்சனை எதிலும் மிக கவனமாக கருத்துச் சொல்வதை தவிர்த்து 'கனவு காண் கனவு காண்' என்று ஊரை ஏமாற்றும் ஒரு பதர்....

திரு டாலர் சொல்வது போல இந்தியா முன்னேறும்.... ஒரு விசயத்தை கவனத்தில் கொண்டால்....

இந்தியாவின் எல்லைகள் நாட்டைச் சுற்றி ஓடவில்லை நாட்டின் குறுக்காக ஒடுகிறது என்பதை கவனத்தில் கொண்டால் எந்த இந்தியா ஒளிர்கிறது என்பதும் எந்த இந்தியா தேய்கிறது என்பதும் தெளிவாகும்.

அய்யா செல்வன், தங்களுக்கு உண்மையில் மிகவும் வலு இருந்தால் எனது பொருளாதார கட்டுரை எதையாவது சீண்டிப்பாருங்களேன்....

இதோ Url: kaipulla.blogspot.com
poar-parai.blogspot.com

கான்சர் திட்டுக்களும் வளர்ச்சிதான் என்ன செய்ய நாங்கள் அவற்றை வெட்டியெறிந்துதான் பழக்கம்


***********


CIA புள்ளீவிவரத்தை நம்புவது அவரவர் விருப்பம். CIAவின் நம்பகத்தனமை பற்றி குறைந்த பட்ச பகுத்தறிவு உள்ளவனுக்கும் தெரியும். இப்போ கூட அது நைஜீரியாவில் போர் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டது தொடர்பான இமெயில் பேச்சுக்கள் பத்திரிக்கைகளில் அம்பலமாகி நாறியுள்ளது.

டாலரின் டாலர் பற்று புள்ளியறுக்க வைக்கிறது... சீ... ஸாரி... புல்லரிக்கவைக்கிறது.

****


இதில் உள்ள பெரும்பாலான புள்ளிவிவரங்களுக்கு kaipulla.blogspot.com தளத்தில் லிங்க் உள்ளது. இப்பொழுது லிங்க் கொடுக்கும் அவகாசம் இல்லை. வாய்ப்பிருந்தால் பின்னூட்டத்தில் சாத்தியமான அனைத்து லிங்க்குகளையும் தருகிறேன்.


Related Posts:

43 பின்னூட்டங்கள்:

said...

test

said...

அசுரன் அவர்களே,
ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன்.

கிடைத்ததா? எனக்கு எர்ரெர் மெசேஞ் தான் வந்தது.

முந்தைய பின்னூட்டம் வந்திராவிட்டால் மட்டும் இதை பதிப்பிக்கவும்.

நன்றி.

said...

வணக்கத்துடன்,

தங்களது முந்தைய பின்னு஖ட்டம் கிடைக்கவில்லை.
மீண்டும் இடுங்கள்

நன்றி,
அசுரன்

said...

அசுரன் செல்வனின் கட்டுரையை இப்போதுதான் படித்தேன்.

நேரமின்மை காரணத்தால், என்னுடைய மனிதவள மேம்பாடு குறித்த கட்டுரையையே அவருக்கு பதிலாக அளித்துள்ளேன்.

தங்களது பதில் அருமையாக உள்ளது. டாலர் செல்வன் இந்திய மக்களைப் பற்றி கவலைப்படுவதைவிட, கம்யூனி°ட்டுகளை நினைத்து அலறுவதைத்தான் அவரது கட்டுரை வெளிப்படுத்துகிறது. நாள்தோறும் நாளிதழ்களில் விவசாயிகள் தற்கொலை குறித்து வண்டி, வண்டியாக கட்டுரைகள் வந்தாலும் டாலர் கண்களுக்கு மட்டும் படுவதில்லை! இதற்காக நாம் வருத்தப்பட முடியாது.

http://santhipu.blogspot.com/2005/11/blog-post_27.html

said...

வணக்கத்துடன்,

//இந்தியாவின் எல்லைகள் நாட்டைச் சுற்றி ஓடவில்லை நாட்டின் குறுக்காக ஒடுகிறது என்பதை கவனத்தில் கொண்டால் எந்த இந்தியா ஒளிர்கிறது என்பதும் எந்த இந்தியா தேய்கிறது என்பதும் தெளிவாகும்.
//

இது போன்ற பதிவுகள் (உண்மை)முலம் போலி முகங்களின் திரையை கிழித்தெறிய வேண்டும்,..

நன்றி.

said...

செல்வன் முத்தழிழ் கூகிள் குழுமத்தில் மேலும் சில புள்ளி விவரங்களை இட்டு, இந்தியா முன்னேறுகிறது என்ற தனது அடிப்படையற்ற கூற்றை நிறுவ முயற்சி செய்திருந்தார். அதற்க்கான பதில்:

*************
பஞ்ச சாவுகள், நாடோ டிகளாக லட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து அத்துக் கூலிக்கு நகரங்களில் வேலை செய்யும் கிராமப்புற விவசாயிகள், உலகின் வறுமையில் வாடும் குழந்தைகளில் 50% பேர் இந்தியாவில் இருப்பது பற்றிய ஐ.நா. அறிக்கை(ஆகஸ்டு 2006 அறிக்கை) - இப்படி நானும் பதிலுக்கு வளைத்து வளைத்து புள்ளி விவரங்களை அடுக்க முடியும்

(மேலும் புள்ளி விவரங்களுக்கு சந்திப்பின் ஒரு கட்டுரை http://santhipu.blogspot.com/2005/11/blog-post_27.html).
(மேலும் அதி அதிகப்படியான ஆளும் வர்க்க புள்ளிவிவரங்கள் அடிப்படையிலேயே மோசடிகளை அம்பலப்படுத்தும் கட்டுரைகளுக்கு http://www.rupe-india.org/,
on Health care ==> http://www.indiatogether.org/2006/jan/psa-health.htm

On rural earnigs ==>
http://www.indiatogether.org/2005/nov/psa-income.htm)


ஏன நீங்கள் கொடுத்துள்ள புள்ளி விவரங்களில் கிராமப்புற ஆண்டு சாராசரியை எடுத்துக் கொள்ளுங்கள். அது வளர்ந்திருக்கிறதா என்றால் ஆமாம் உண்மைதான் ஆனால் இணையாக விலைவாசி உயர்வு இதைவிட பல் மடங்கு வளர்ந்துள்ளதே?... விவசாய இடுபொருள்கள் விலையோ இதைவிட சில நூறு மடங்கு வளர்ந்துள்ளதே?....

இப்படி ஒப்பிட்டுப் பார்த்தால் வாழ்க்கைத் தரம் தாழ்ந்து அதுவும் மிகவும் தரம் தாழ்ந்து போயுள்ளது தெரிகிறது (நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில்தான் சாய்ராம் ஒரு ஐந்து மாதத்திற்க்கு முன்பு கட்டுரை எழுதியிருந்தார்- அதை எனது முந்தைய பதிலிலும்
குறீப்பிட்டிருப்பேன்).


சரி GDP வளர்ந்து விட்டது வளர்ந்து விட்டது என்று சொல்கிறேர்களே விவசாய துறையில் GDPயின்(3.5 அல்ல்து 2 என்று நினைக்கிறேன்) பங்கு அதலாபாதளத்தில் தவழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அதை நம்பியுள்ள் 60% க்கும் மேற்ப்பட்ட மக்களின் வாழ்க்கை முன்னேறிவிட்டது என்று ஒரே நாள் இரவு இணையத்தை பிரட்டி நீங்கள் அளிக்கு முடிவு நகைப்பிற்க்கிடமாக உள்ளது.

மகராட்டிரா, தமிழ்னாடு போன்ற மானிலங்களின் வளர்ச்சிக்கு பிரதான காரணம் இங்கு நிகழ்ந்த பரவலான முதலாளித்துவ வளர்ச்சி-அதாவது சிறு தொழில் வளர்ச்சி நன்கு இருந்ததுதான் காரணம். ஆனால் உலகமயத்திற்க்கு பிற்பாடு சிறு தொழில் அழிந்து நசிந்து வருவதாக அரசு புள்ளி விவரம் சொல்கிறது.

நேரு காலத்திலிருந்தே இந்தியா மறைமுக காலனிதான். நேரு இந்தியாவை, ஊர் பெருசுகளுக்கு ஆய் கழுவிவிடும் வேலைக்கு ஏற்ப்பாடு செய்தார். இன்றைய தலைவர்கள் ஊர் முழுவதற்க்குமான ஆய் கழுவிவிடும் வேலைக்கு மாற்றுவிட்டார்கள் அவ்வளவுதான் வித்தியாசம். அதனால் இரண்டு காலகட்டத்தையும் ஒப்பிட்டு பேசுவது இரண்டு பன்றியில் எந்த பன்றி நல்ல வாசமுள்ளது என்று நிரூபிக்கும் முயற்சியே.

செப் 2005-ல் மும்பையில் நடந்த CII - இந்திய தரகு முதலாளிகள் சங்கக் கூட்டத்தில் அன்றைய செயலாளரான(தற்பொழுது அசோக் லேலாண்ட் தலைவர், செய்லாளராக உள்ளார்) டாடா குழுமத்தின் தலைவர், இந்தியாவின் மிகப் பெரிய உள் நாட்டு ஆபத்தாகா 2016(வருடம் மிகச் சரியாக ஞாபகம் இல்லை) -ல் 44 கோடி இளைஞர்கள் வேலையின்றி இருப்பர் என்றார்.

இதே கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் 2018(சரியாக் ஞாபகமில்லை)-ல் 28 கோடி இளைஞர்கள் வேலையின்றி இருப்பர் என்றது அரசு அறிக்கை(Sep 2006). இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்கும் வாய்ப்புள்ள ஒரே துறை விவசாயத் துறை(விவசாய கூட்டுறவு பண்ணைகளில் லட்சக்கணக்கான ஏக்கரில் முதலாளித்துவ முறையில் பயிர் செய்தல், இதற்க்கு பின்புலமாக நாடு தழுவிய தகவல் தொழில் நுட்ப வலைப் பின்னல், சந்தைகள், சாலைகள், பிற உள்கட்டுமானங்கள் )(ஏனெனில் ஏற்கனவே நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் இந்த துறையிலேயே இருப்பதால் -சில அடிப்படை உற்பத்தி முறை மாற்றாங்கள் அபரிமிதமான வளர்ச்சியை ஏற்படுத்தும் - ஆனால் இந்த மாற்றங்களை செய்வது விடுங்கள், அதைப் பற்றீ யோசிப்பதையெ தடுப்பது யார்?-இதற்க்கான விடைதான் சமீபத்திய WTO ஜெனிவா பேச்சு தோல்வியில் தெரியவந்தது).

இந்த பாதையில்(விவசாயத்தில் விவசாயியை விரட்டாமல் முதலாளித்துவ வளர்ச்சி) இந்தியாவின் வளர்ச்சி இருப்பதாக இருந்தால் அது உண்மையான வளர்ச்சியாக இருக்கும். ஆனால் ஏற்கனவே சொல்லியதுபோல விவசாய GDP, டங்குவார் அந்து தொங்குகிறது. அப்புறம் எப்படி இந்தியா முன்னேறூகிறது என்பது ஆச்சரியமான் பகல் கனவு.

புள்ளி விவரங்கள் நீங்களும் தரலாம் நானும் தரலாம் ஆனால் விசயம், இரண்டுமே ஆளும் வர்க்கத்தின் புள்ளி விவரங்கள்தான். அதில்தான் இதன் நமபகத்தன்மை குறித்த சூட்சமமும் அடங்கியுள்ளது.

அய்யா food security என்ற கௌரத்திற்க்காக மத்திய உணவுகிடங்குகளில் உணவை அடைத்து வைத்து பொது விநியோகத்தில் கைவைத்த அரசுதான் இது(பஞ்சாப் விவசாயிகள் டில்லியில் போராடினார்கள் வாஜ்பேயி அரசில், இதே நேரத்தில்தான் ஒரிஸ்ஸா, மகாராட்டிர பஞ்சத்தில் நூற்றூக்கணாக்கானோர் செத்தனர்). அதனால் தனது கௌரவத்திற்க்காக அது செய்யும் சல்ஜாப்புகளை புள்ளிவிவரங்கள் என்று நீங்கள் வைத்தால். அதே அரசு வேறு வடிவங்களில் உண்மையை வெளிப்படுத்தியுள்ளதை புள்ளி விவரங்களாக நாங்கள் வைக்கிறோம். இரண்டும் ஆளும் வர்க்கம் வெளிப்படுத்திய உண்மை எனும் பொழுது இதில் எதை எடுப்பது என்பதை யாதார்த்தில் மக்கள் படும் கஸ்டங்களைப் பார்ப்பவர்கள், அரசு புள்ளிவிவரங்களிலேயே வெளிப்படும் முரன்பாடுகளினுடே தெரியும் உண்மைகள் இவற்றின் அடிப்படையில் முடிவு செய்யட்டும்.

கான்சர் திட்டுக்களையும் வளர்ச்சி என்று கூறலாம். சிலர் அதை புணூகு தடவி அழகு பார்ப்பார்கள் நாங்கள் அவற்றை வெட்டி யெறிந்துதான் பழக்கம்

நான் எழுப்பிய கேள்விகளுக்கு, குறீப்பாக நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களுக்கு பதில் தெரிகிறதா என்று முயற்சி செய்யவும். அவை எந்த வகையில் இந்தியாவை முன்னேற்றும் என்பதற்க்கும் பதில் சொல்லவும்.


அசுரன்.

said...

//குறீப்பாக நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட பல்வேறு மக்கள் விரோத சட்டங்களுக்கு//

அதே நாடாளுமன்றத்தில் இருக்கும் கம்யுனிஸ்ட்டுக்கள் என்ன செய்தார்கள் எதிர்த்து?...

said...

சந்திப்பு,

தங்களது கட்டுரை தொகுப்பாக புள்ளிவிவரங்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. நல்ல கட்டுரை வாழ்த்துக்கள். எனக்கு பதில் சொல்ல வேண்டாம் விடுங்கள். எங்களிடையே சமீபத்தில்தான் ரசாபாசம் ஆகியது. உங்கள் பதிவிற்க்குப் பதில் சொல்லலாமே?... ஏன் இன்னும் அவர்கள் பதில் சொல்லவில்லை.??

**********

புதிய காற்று,

தங்களது வருகை புத்துண்ர்வு ஊட்டுகிறது.... புதிய காற்றல்லவா... :-))

தொடர்ச்சியாக அருமையான கட்டுரைகளை பதித்து வருகிறேர்கள். வாழ்த்துக்கள்..

தங்கள் வருகைக்கும், ஊக்கத்திற்க்கும் நன்றி.

நன்றி,
அசுரன்

said...

//அதே நாடாளுமன்றத்தில் இருக்கும் கம்யுனிஸ்ட்டுக்கள் என்ன செய்தார்கள் எதிர்த்து?... //

வோட்டுக் கட்சி கம்யுனிஸ்டுகளிடம் இந்தக் கேள்வியை கேட்கவும். இந்த அரசை தூக்கியெறி, போலி ஜன நாயகப் பாதையை தேர்தலை புறக்கணி என்னும் ம.க.இ.க வின் அரைக்கூவலால் கம்யுனிசத்தை பற்றிக் கொண்டவன் நான்.


ஆக, கேள்வியை தவறான இடத்தில் வைக்கிறேர்கள் அன்பு அனானி... எனது மற்றைய பதிவுகளைக் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.

"தேர்தல் பாதை திருடர் பாதை..."


நன்றி,
அசுரன்

said...

எங்க செல்வன்,
கம்யுனிசம் ஒரு செத்த பாம்பு, அத ஏன் திருப்பி அடிக்கிறிர்கள்...

அசுரரெ,
உலகம் முழுவதும் கம்யுனிசம் அழிகிறது...நீங்க ஏன் குழி பொணத்தெ எடுத்து எழவு கொண்டாடுகிரறீர்கள்....

said...

கம்யுனிசம் அழிகிறது என்றால் ஏன் அதை குழிதோண்டி புதைத்து விட்டாதாக அறிவித்து பதினைந்து வருடம் கழித்தும் இப்பொழுதும் உலகம் முழுவதும் கம்யுனிசமே ஏகதிபத்தியத்துக்கு முதல் எதிரியாக தொடரும் மர்மம் என்ன?... :-)))

அனானி.... உங்களப் பாத்தா பாவமா இருக்கு.....

சமூக அறிவ வளக்கறதுக்கு கொஞ்சம் முயற்சி செய்யுங்க....

தங்கள்து கூற்றுப்படி ஒரு செத்த பாம்ப அடிக்கறதுக்கே தன்னோட பெரும் சக்திய ஏகாதிபத்தியம் செலவழிக்கிறது... நீங்க முட்டாளா அல்லது ஏகாதிபத்தியம் முட்டாளான்னு குழப்பம் வருது....

சரி அது இருக்கட்டும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கப்பு.....


நன்றி,
அசுரன்

said...

இங்க சண்டை போட்டுட்டு இருக்கம் but, விசயத்தோட ஆபத்த நெனச்சுப் பாத்து எனக்கு பக்குனு அடைக்கிறமாதிரி இருக்கு...

ச்சுப்... என்னத்த சொல்ல.....?

said...

//கம்யுனிசம் அழிகிறது என்றால் ஏன் அதை குழிதோண்டி புதைத்து விட்டாதாக அறிவித்து பதினைந்து வருடம் கழித்தும் இப்பொழுதும் உலகம் முழுவதும் கம்யுனிசமே ஏகதிபத்தியத்துக்கு முதல் எதிரியாக தொடரும் மர்மம் என்ன?... //

நன்றீ அசு...

எகாதிபத்ய எதிர்ப்பு எல்லாம் கம்யுனிசமா?....

எனது சிறறிவுக்கு எட்டியவரை (நிங்கள் தான் மெத்த படித்தவர்) எல்லா தேசத்திலும் கம்யுனிஸம் தோல்வியெ தழுவுகிறது...தற்போதய சீனா, பேயரளவிலெயெ கம்யுனிச நாடு...

said...

அசுரன்,
உங்களின் தார்மீகக் கோபமும் அதன் நியாயமும் புரிகிறது.ஓட்டுக்கட்சிகளால் பயனில்லை என்றாலும் ஜனநாயக அமைப்பின் பலம் உண்மையில் நல்லது. நிற்க ..இந்தியாவில் அது சரியாகப் பின்பற்றப்படவில்லை.

தேர்தலைப் புறக்கணித்தாலும் நம்மை ஆளப்போவது இவர்களே :-(

ம.க.இ.க ? மக்கள் கலை இலக்கியக் கழகம் ..????
இவர்கள் அரசியல் பாதைக்கு வர வேண்டும்.இது போன்றவர்கள் திசைமாறி சென்றுவிடுகிறார்கள்.
அஸ்ஸாம் கன பரிசத்கூட மாணவர்களால் உருவான அமைப்புத்தான் ஆனால் இப்போது.....?

அரசியல் நிராகரிப்பு இதற்கு தகுந்த மாற்று அல்ல. ஒரு நல்ல அரசியல் தலைமைதான் வேண்டும்.
சமுகம் பற்றிய அறிவும் நல்ல எண்ணமும் சிறு வயதில் இருந்தே ஊட்டி வளர்க்கப்பட வேண்டும்.

இந்தியா முன்னேறுகிறது..ஒளிர்கிறது என்று வரும் கோஷங்கள் மேல்மட்ட பகட்டு வாழ்க்கை ஜம்பாவான்களிடம் இருந்துதான். ஒரு சராசரி இந்தியன் அன்றாடம் வாழ்வதற்கு என்ன பாடுபடுகிறான் என்பது இவர்களின் கவலை அல்ல.

இந்தியா முன்னேறியது என்று நினைக்கும் நண்பர்கள் ஒரு மாதம் இரண்டாம் வகுப்பு (ஸ்லீப்பர் கிளாஸ் ) இரயில் பயணியாக இந்தியாவை வலம் வர வேண்டும். குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு மாவட்டதின் சிற்றூர்களுக்கு மிதி வண்டிப்பயணம் செய்ய வேண்டும்.

இவர்கள் கூண்டுக்கிளிகள். கூண்டு தங்கத்தால் செய்யப்பட்டு இருப்பதற்காக சந்தோசம் கொள்வார்களே தவிர கூண்டை விட்டு வெளியில் வரத்தயங்குபவர்கள்.

உண்மைதான், உலக வங்கியின் மேற்பர்வையில் தந்திர மோகன்களாலும் பசி அறியா சிதம்பரங்களாலும் செய்யப்பட்ட கார்ப்போரேட் தங்கக்கூண்டுக்குள் வாழும் இவர்களின் வாழ்க்கை அன்றாடங்காய்ச்சி மனிதனை விட ஒளிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கிறது.

நானும் ஒரு கோர்பரேட் தங்கக்கூண்டுக் கம்பெனியில் வேலை செய்கிறேன்.:-((( குற்ற உணர்வும் உண்டு. ஒவ்வொரு முறையும் சக மனிதன் துன்பப்படுவதைப் பார்க்கும் போது மனது வலிக்கிறது. என்ன செய்ய எல்லோராலும் ரோட்டுக்கு வந்து சேவை செய்ய முடியாது. குறைந்தபட்சம் இது போன்ற அபத்தக் கருத்துக்களை பரப்பாமல் இருக்கலாம்.

இந்தியா முன்னேற வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் இவர்கள் விரும்பும் கார்பொரேட் முன்னேற்றம் அல்ல நான் விரும்புவது.

said...

பாரத மாதாவே...எங்களைக் காப்பாற்று!

தொழில் வளர்ந்த நாடுகளில் கம்யூனிசம் வளரவில்லை;
கம்யூனிசம் வளர்ந்த நாடுகளில் தொழில் வளரவில்லை என்பது சரித்திரம்.

ஆப்பம் சுடும் ஆயாவிற்கும், அதனை விற்றுத் தரும்
அவளது பேத்திக்கும் இடையே வர்க்க பேதத்தைத்
திணிப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

நியாயமற்ற கோரிக்கைகலை வைப்பதும்; அநியாயமான போராட்டங்களைத் தூண்டுவதும் கம்யூனிஸ்ட்டுகளின் வாடிக்கை!

அதனால் எத்தனையோ இடங்களில் தொழில்
நசிந்திருக்கின்றன; தொழிலாளர் வாழ்க்கையும்
சீர் கெட்டிருக்கிறது.

ஒவ்வொரு முறையும் கம்யூனிஸ்ட்டுகள் போராடும் பொழுது சில தொழிலுக்குச் சங்கு ஊதப்படுகிறது. அல்லது சில தொழிலாளர்களுக்கு சங்கு ஊதப்படுகிறது

தஞ்சையில் நெல்லின் கொள் முதல் விலையை உயர்த்தப் போராட்டம்; சென்னையில் அரிசி விலையைக் குறைத்துக் கொடு என்று போராட்டம்.

மதுரையில் பருத்தி விலையை உயர்த்து என்று போராட்டம்; கோவையிலும், திருப்பூரிலும்
நூல் விலையைக் குறைத்துக் கொடு என்று ஆர்ப்பாட்டம்

இது எப்படி சாத்தியமாகும்?

படிப்பறிவும், பகுத்தறிவும் இல்லாத அப்பாவி இளைஞர்களும், தொழிலாளர்களுமே கம்யூனிஸ்ட்டுகளின்
மயக்கு வாதத்தில் மயங்கி வாழ்வை இழந்தனர்.

அஞ்சல் துறையில் பெரிய தொழில் சங்கத்தை நடத்தி வருவது இந்தக் கம்யூனிஸ்டுகள்தான். அஞ்சல் துறையில் அகில இந்திய அளவில் 'ஈடி' என்று அழைக்கப்படும் புற நிலை ஊழியர்கள் மூன்று லட்சம் பேர் உள்ளனர். எனது கணவரும் 'ஈடி' ஊழியரே. இந்த 'ஈடி' ஊழியரை இலாக்கா ஊழியராக்கு என்று சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து
கம்யூனிச தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது.
இது வரை இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.மாறாக, இவர்கள் 'ஈடி' ஊழியர்களிடம் 'சந்தா' என்றும், வழக்குச் செலவு என்றும் காசு பிரித்துக் கொண்டிருப் பதுதான் மிச்சம். இது நிறைவேறாத கோரிக்கை என்றே போராடுவதும் தொடர்கிறது.

இவர்கள் எங்கெங்கே செங்கொடியை நாட்டினரோ அங்கெல்லாம் தொழிற்சாலைகள் விழுந்து விட்டன. அந்தக்கொடிக்கு அப்படியொரு மகத்துவம் உண்டு.

பாட்டாளிகளின் கூட்டாளிகளாகவும், உழைப்பாளிகளின் உடன் பிறப்புகளாகவும் கம்யூனிஸ்ட்டுகள் பொய் வேஷம் போடுகின்றனர். உண்மையில் அவர்களைப்போல தொழிலாளர் விரோதிகளை வேறு எங்கும் பார்க்க முடியாது.

மேற்கு வங்காளத்தில் சணல், பஞ்சாலை தொழிற்சாலைகளில் வேலை செய்த நான்கு லட்சம் தொழிலாளர்களின் வேலையைப் பறித்து அவர்களை வீதியில் விட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான்

எல்லாவற்றையும் அரசுடைமையாக்கச் சொல்வது
கம்யூனிஸ்ட்டுகளின் வழக்கம். இதே கம்யூனிஸ்ட்டுகள்தான் மேற்கு வங்காளத்தில் 'பாரத்' சணல் ஆலையைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கின்றனர்.
இதுபோன்று பற்பல நிறுவனங்கள் தனியார் வசமாகிவிட்டன.

கடந்த 29 ஆண்டுகளாக இவர்களது அட்சி நடைபெறும் மேற்கு வங்காளத்தில், தொழில் துறை தற்கொலை விளிம்பிற்குப் போயிருக்கிறது. 94 ஆயிரம் சிறிய, பெரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன.

இதையெல்லாம் விடக் கொடுமை என தெரியுமா?
எந்தவித நஷ்ட ஈடும் தராமல் தொழிற்கூடங்கள் மூடப்பட்டதாலிரண்டாயிரம் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு மடிந்து போயினர் என்பதுதான்.
அதி 1,600 தொழிலாளர்களின் சாவை, கம்யூனிஸ்ட்டுகளே மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் ... துளிக்கூட வெட்கமில்லாமல்.

இந்த விடியா மூஞ்சிகள்தான் இங்கே 'பாட்டாளிகளின் நண்பர்கள் நாங்கள்' என்று பகட்டுகின்றனர்.

தேர்தல் முடிந்துள்ள நிலையில் இப்படிப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள் மத்திய ஆட்சியில் இடம் பெற்று விடாமல் இருக்க அன்னை பாரத மாதா தான் உதவ வேண்டும்!

எழுதியவர்
டி.சரஸ்வதி,
ஆனார்,
கன்னியாகுமரி மாவட்டம்

(11.5.2004 தேதியிட்ட தினமலர் நாளிதழில், வாசகர் கடிதம் பகுதியில் இக்கடிதம் வெளிவந்தது - தேவைப்படுபவர் சொல்லுங்கள். ஸ்கேன்டு காப்பி அனுப்பி வைக்கப்படும்)

said...

//எனது சிறறிவுக்கு எட்டியவரை (நிங்கள் தான் மெத்த படித்தவர்) எல்லா தேசத்திலும் கம்யுனிஸம் தோல்வியெ தழுவுகிறது...தற்போதய சீனா, பேயரளவிலெயெ கம்யுனிச நாடு... //அய்யா அனானி,

தங்களுக்கு சிற்றறிவு என்று கூறியதோடு நிறுத்தியிருக்கலாம். அதை நிருபிக்கவும் வேண்டுமா?..:-))

இது வரை நடைமுறைப்படுத்தப்பட்ட எந்த இடத்திலும் கம்யுனிசம் தோல்வி கிடையாது. அது மீண்டும் முதலாளித்துவ பாணி பொருளாதாரத்துக்கு போய்தான் தோல்வி அடைந்திருக்கிறது.

ஆகா, சீனா, ரஸ்யா என்று எல்ல இடத்திலும் படு தொல்வியை தழுவியது முதலாளித்துவம்தான். கம்யுனிசம் இருந்தவரை அங்கு வறுமை கிடையாது, சுரண்டல் கிடையாது, சோம்பெறி கிடையாது, எந்த நாட்டையும் சுரண்டாமல் ஒரு முழு முதல் வளர்ச்சி சாத்தியமாயிற்று. அந்த நாடுகளில் நுகர்வு வெறிக்கு தீனி போடும் அம்சங்கள் இல்லை, ஆனால் நுகர்வு வெறியை வெளியிலிருந்து பரப்பும் ஏகாதிபத்தியம் இருந்தது அதனால் அந்த நாடுகளில் சில முரன்பாடுகள் ஏற்ப்பட்டன.

இதுவரை தோல்வியை தழுவியது முதலாளித்துவ பொருளாதாரம்தான்..... எல்லா நாட்டிலும்.....

கம்யுனிசம் எங்கும் வெற்றிதான்... இதைப் புரிந்து கொள்ளா கம்யுனிச பொருளாதாரம் என்றால் என்னவென்று படிக்க வேண்டும்..

கொஞ்சம் சிரமம் பார்க்காமல் எனது 'அனானிக்கு ஒரு பதில்' கட்டுரையை, பின்னூட்டத்தைப் படிக்கவும்

நன்றி,
அசுரன்

said...

லிவிங் ஸ்மைல் வருகைக்கு நன்றி,
ஆய் கழுவிவிடும் சமாச்சாரத்தை தற்பொழுது மாற்று வசவாக பயன்படுத்துகிறேன்...

எப்படி.... எதாவது ஒரு வழி செஞ்சு திட்டறத மட்டும் நிப்பாட்டாம பத்துக்குவோம்

நன்றி,
அசுரன்

said...

கல்வெட்டு,

இது ஒரு ஜன நாயக் அமைப்பே அல்ல என்பதைத்தான் இதுவரை பல பதிவுகளில் வலியுறுத்தி விட்டேன்.

சட்டமன்றம், நாடாளுமன்றத்தின் மூலம் மேலிருந்து சீர்திருத்தம் மூலம் கம்யுனிசத்தை நடைமுறைப்படுத்திவிடலாம் என்று தத்துவமற்று நம்பியதன் விளைவு... கேராளாவின் முதல் கம்யுனிச அரசு கலைக்கப்பட்டது... மே.வா. அதே கம்யுனிச அரசு சொந்த வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்து சுட்டுக் கொன்றது.

இது ஜன நாயக அமைப்பு இல்லை என்பதை வலியுறுத்தி இன்றுதான் ஒருவருக்கு முத்தழிழ் குழுமத்தில் பதில் சொன்னேன், அதை மீண்டும் இங்கு இடுகிறேன்(பிறகு). அவரை குறித்து எழுதியதால் இந்த பின்னூட்டத்தில் அவர் மீது சில விமர்சனங்கள் இருக்கும் அவற்றை தங்களுக்கான விமர்சனம் என்று தயவ்ய் செய்து தவறாக கருதிவிடாதீர்கள்....//அரசியல் பாதைக்கு வர வேண்டும்//
அரசியல் பாதைதான் எல்லாமே.... தேர்தல் பாதை என்று கூறவும்.... மேலே கூறிய பதில்தான் இதற்க்கும் பதில்...

மக்களை அணிதிரட்டி ஏன் போராட முடியாது என்று நினைக்கிறீர்கள்??

மாவோ சொல்கிறார் "மக்கள் மீது நம்பிக்கை வை" " நாம்தான் பல நேரங்களில் சிறுபிள்ளைகளைப் போல இருக்கிறோம்... மக்கள் மக்கள் மட்டுமே அனைத்தையும் செய்யக்கூடிய சக்தி" என்று....

தேர்தல் பாதை என்பது போலி ஜன் நாயகத்துக்கு அங்கீகரம் கொடுத்து மக்களிடம் அவர்களை அம்பலப்படுத்துவதில் பின்னடைவை ஏற்படுத்தும் மிக ஆபத்தான பாதை.

ம.க.இ.க வின் தற்போதைய நிலைப்பாடு சரிதான். ஒருவேளை அவர்கள் மாற்றிக் கொண்டாலும் எனது நிலைப்பாடு எனது சொந்த அறிவின் புரிதலில் தான் எடுப்பேன்.
************

//உண்மைதான், உலக வங்கியின் மேற்பர்வையில் தந்திர மோகன்களாலும் பசி அறியா சிதம்பரங்களாலும் செய்யப்பட்ட கார்ப்போரேட் தங்கக்கூண்டுக்குள் வாழும் இவர்களின் வாழ்க்கை அன்றாடங்காய்ச்சி மனிதனை விட ஒளிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கிறது.//

ஆம்... ஒளிர்கிறது.... ஒரு மங்கிக் கொண்டிருக்கும் டியுப் லைட்டைப்போல.... ஒரு சமூகமே சிரழிந்து கொண்டிருக்கும் பொழுது அச்சமூகத்துடன் ஆக மேலதிகமாக பின்னிபிணைந்திருக்கும் நடுத்தர வர்க்க யுப்பிக்கள் மட்டுமெ சந்தோசமான நிம்மதியான வாழ்க்கை வாழ முடியுமா?....

ஆப்பு அனைவருக்குமே....


//இந்தியா முன்னேற வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் இவர்கள் விரும்பும் கார்பொரேட் முன்னேற்றம் அல்ல நான் விரும்புவது. //

நல்ல விசயம்....


நன்றி,
அசுரன்

said...

இது வேறு யாரோ இட்ட ஒரு கருத்து என்றாலும், இங்கு நீங்க்ள் இட்டதால். தங்களுடைய கருத்தாக்வே கருதி பதில் சொல்கிறேன்:

//தொழில் வளர்ந்த நாடுகளில் கம்யூனிசம் வளரவில்லை;
கம்யூனிசம் வளர்ந்த நாடுகளில் தொழில் வளரவில்லை என்பது சரித்திரம்.//

தங்களுக்கு சரித்திரம் தெரியாது என்று தெரியப்படுத்தியமைக்கு நன்றி.... சோவியத் ரஸ்யாவும், மாவோவின் சீனாவும் தொழில் நுட்பத்தில் முன்னூறு வருட முதலாளித்துவ நாடுகளை முழுங்கி ஏப்பம் விட்டவை....

தொழில் நசிவைப் பொறுத்தவரை 1990 க்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள் காரணம் என்று பல முறை புள்ளி விவரத்துடம் சொல்லியாயிற்று, இந்த பதிவிலேயே ஒரு பின்னூட்டமிட்டுள்ளேன் தயவு செய்து படித்து பிறகு வாதாடவும்...

அரிசி, பருத்தி, பஞ்சாமிர்தம் இப்படி எந்த விசய்த்திலும் கம்யுனிஸ்டுகளின் கோரிக்கை மக்களின் நலன் தான். நீங்கள் கூறிய எடுத்துக்காட்டுகளில் யார் பாதிக்கப்படுகிறார்கள்..... இரண்டிலுமே சுரண்டல்காரர்கள்தான்.

விவசாய பொருட்கள் விலை இந்த 15 வடுடங்களில் பல மடங்கு உயர்ந்துள்ளது ஆனால் விவசாயியிடம் கொள்முதல் செய்யும் விலை பல மடங்கு இறங்கியுள்ளதே இடையில் இந்த பணத்தை(விவசயியின் உழைப்பு, சாதாரண மக்களின் பணம்) சுரண்டுவது சரஸ்வதியின் சொந்த்க்கார தரகு வியாபாரி யாரவது இருக்கும். அதனால்தான் இந்த ஆவேசம் போல....

இது வரை எந்த தரகு முதலாளியும் வியாபாரத்திற்க்காக தற்கொலை செய்ததாக இல்லை...

ஏன் உங்க ஈ.டி பிரச்சனை சொந்த பிரச்சனைதானே நீங்களே களத்தில் இறங்கி சம்பந்தப்பட்ட தொழிற்சங்கத்தை புறக்கணித்து, அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து தொழிலாளர்களை அணீ திரட்டி போராடுங்கள்... யார் வேண்டாமென்று சொன்னது.. அப்படி போராட்டம் நடந்தால் அதன் நோக்கம் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் எந்த உண்மையான கம்யுனிஸ்டும் ஆதரிப்பான்.


மேற்கு வங்கத்தில் நடப்பது போலி கம்யுனிச ஆட்சி என்று பலமுறை சொல்லியாயிற்று....

தேர்தல் பாதையை புற்க்கணீக்கு கொள்கை கொண்டவன் நான். எனவே இந்த விசய்த்தை ஏதாவது வோட்டுக் கட்சி கம்யுனிஸ்டிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளவும்..

அப்புறம் நண்பி சரஸ்வதியிடம் ஒரு வேண்டுகோள். கொஞ்சம் சிரமம் பார்க்காமல் எனது பதில் களைப் படித்து பின்னூட்டமிடவும்... ஒரே வாதத்த எத்தன பேர் வைப்பீங்க..... ???

நன்றி,
அசுரன்

said...

// தங்களுக்கு சரித்திரம் தெரியாது என்று தெரியப்படுத்தியமைக்கு நன்றி.... சோவியத் ரஸ்யாவும், மாவோவின் சீனாவும் தொழில் நுட்பத்தில் முன்னூறு வருட முதலாளித்துவ நாடுகளை முழுங்கி ஏப்பம் விட்டவை....//


அப்படியா நண்பரே!
தகவலுக்கு நன்றி

அப்படி ஏப்பம் விட்டதாலோ என்னவோ இன்று ரஷ்யா சிதறுண்டு மருதுவமனையில் படுத்திருக்கிறது
சைனா அமெரிக்காவிடம் மருந்து (முதலீடு) வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது

அதை யாரும் உங்களிடம் சொல்லவில்லையா?

said...

டி.சரஸ்வதி,

மீண்டும் தங்களது அறியாமையை பறைசாற்றுகிறீர்கள்,

ரஸ்யாவில் தோற்றது முதலாளித்துவம்தான் என்று கொஞ்சம் முன்புதான் ஒருவருக்கு பின்னூட்டத்தில்(comments) கூறியிருந்தேன்.

இன்றைய முதலாளித்துவ சீனாவிலும் தோற்றது முதலாளித்துவம்தான்.

இன்றைய சீனா மற்றொரு ஏகாதிபத்தியமாக பரிணமிப்பததற்க்கு அடிப்படையே தனது பொருளாதாரத்தை ஏகாதிபத்திய தாக்குதலில் இருந்து இதுவரை காத்து உள் நாட்டு முதலாளிய வளர்ச்சியை அதன் முழுமையான அளவுக்கு வளர்த்தெடுத்துதான். அவர்கள் செய்த தவறு என்ன என்று... இப்படியே விவரித்துச் சென்றால் பெரிய பின்னூட்டமாகிவிடும். ஏற்கனவே இந்த விசயங்களை இந்த ப்திவின் பீன்னூட்டத்திலேயே சில இடங்களில் கூறியுள்ளேன்.

கம்யுனிசம் வறுமையை கொடுத்ததாக இது வரை சரித்திரம் இல்லை. கம்யுனிச பொருளாதாரம் என்றால் என்ன, முதலாளித்துவ பொருளாதாரம் என்றால் என்ன - இவற்றில் எந்த வகை பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தும் போது அங்கு வறுமை, வேலையின்மை கள்ளத் தோனி ஆகியவை ஏற்ப்பட்டது என்று பாருங்கள்.

ப்தில் சொல்வதில் காட்டும் அவசரத்தை குறைத்து எனது பின்னூட்டங்களின் மூலம் எந்த விசய்த்தின் அடிப்படையில் நான் பேசுகிறேன் என்பதை புரிந்து கொண்டு வாதாடுங்கள்.


நன்றி,
அசுரன்.

said...

"ரஸ்யாவில் தோற்றது முதலாளித்துவம்தான் என்று கொஞ்சம் முன்புதான் ஒருவருக்கு பின்னூட்டத்தில்(comments) கூறியிருந்தேன்.

இன்றைய முதலாளித்துவ சீனாவிலும் தோற்றது முதலாளித்துவம்தான்."
இதை சொல்வதால் உங்களுக்கு ஆறுதல் கிட்டுமென்றால் தாராளமாக சொல்லிக் கொள்ளுங்கள். உங்களை மாதிரி சிலர் ஈசானிய மூலையில் அமர்ந்து புலம்புவதும் பார்க்க வேடிக்கையாக உள்ளது. நன்றாக நேரம் போகிறது. மிக்க நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//இன்றைய முதலாளித்துவ சீனாவிலும் தோற்றது முதலாளித்துவம்தான்."
இதை சொல்வதால் உங்களுக்கு ஆறுதல் கிட்டுமென்றால் தாராளமாக சொல்லிக் கொள்ளுங்கள். உங்களை மாதிரி சிலர் ஈசானிய மூலையில் அமர்ந்து புலம்புவதும் பார்க்க வேடிக்கையாக உள்ளது. நன்றாக நேரம் போகிறது. மிக்க நன்றி.//

நண்பர் டோண்டு ராகவன்,

தங்களது வருகைக்கு மிக்க நன்றி....

ஆறுதல் தேவைப்படும் நிலையில் நான் இல்லை, நான் நம்பும் சித்தாந்தத்தின் வெற்றியை எனது சொந்த வாழ்க்கை அனுபவம் ஒவ்வொன்றிலும் நடைமுறைப்படுத்தும் பொழுது பார்க்கிறேன்.

5 ஆயிரம் வருட அரதப் பழசான சித்தாந்தத்த்தின் சொந்தக்காரர்கள்தான் தற்பொழுது ஆறுதல் கோரும் நிலையில் உள்ளனர்.

நேரம் செலவழித்து பின்னூட்டமிட்டதிற்க்கு நன்றி...

அப்படியே எனது இத்ர பிற பதிவுகள், பின்னூட்டங்களைப் படித்து நகைச்சுவையாகவேனும் தங்களது உலக அறிவை வளர்த்துக் கொள்ளுங்களேன்.... பின்னூட்டமிட வேண்டும் என்று கட்டாயமில்லை

நன்றி,
அசுரன்

said...

முத்தமிழ் குழுமத்தில் ஒருவர் எனது அடிமை நாடும் பற்றிய ஒரு பதிவிற்க்கு பதில் சொல்லியிருந்தார். அவர் இந்திய ஜன நாயகம் பற்றி சிலாகித்து எழுதியிருந்தார். ஏற்கனவே பல முறை சொல்லிய விசயங்கள்தான் ஆனாலும் மீண்டும் சில விவரங்களை ஞாபகப்படுத்தும் முகமாக பதில் சொல்ல வேண்டியதாகியது. அந்த பதில் கீழே:

*************

அபத்தம் பற்றி வேந்தன்
சொல்லியிருந்தார் அதன்
பொருள் குறித்து வேறு
யாரையும் விட வேந்தனுக்கு
நன்கு தெரியும் போல்
இருக்கிறது... விளையாட்டு
இருக்கட்டும்...

1947லிருந்து இந்தியாவில்
கம்யுனிசம்
நடைமுறைப்படுத்தப்படுகீறது
என்பது ஆளும் வர்க்கம்
பரப்பு ஒரு அருமையான
வதந்தி. இது குறித்து
மேலதிகமாக தெரிய
விரும்புகிறாவர்கள் பின்
வரும் எனது கட்டுரையை
படிக்கவும்(1947 களிலேயே
கோகோகோலா அதிக்கம்
செலுத்தத் தொடங்கிவிட்டது
-
http://kaipulla.blogspot.com/2006/06/indian-freedom-and-imperialism.html).


ஏகாதிபத்தியம், சுரண்டலை
விட்டால் வாழ முடியாது
என்பது பாவம் சமூகத்தின்
இயங்கியல் புரியா டாலர்
பாண்டியர்களுக்கு
தெரிந்திருக்க
வாய்ப்பில்லை.
*********


வேந்தனின் இந்த
வாதத்துக்கு மட்டுமே எனது
பதில் தேவைப்படுகிறது.


//நமக்கு தெரிந்த விடுதலை
என் ஊரின், மாநிலத்தின்,
நாட்டின் ஆட்சி
பொறுப்பில்,
பொதுவுடைமை தோழர்கள்
உட்பட, யார் இருக்க
வேண்டும், நான் எங்கு
சென்று
குடியிருக்க வேண்டும்,
நான் என்ன படிக்க வேண்டும்,
என்ன தொழில் செய்ய
வேண்டும்,
நான் சேர்த்த காசை எப்படி
செலவிட வேண்டும், நான்
யாருடன் இன்றைய பொழுதை
கழிக்க
வேண்டும், நான் எந்த மதத்தை
தழுவ வேண்டும், எந்த சாமியை
கும்பிட வேண்டும்.
எனக்கு தோன்றிய கருத்தை
அச்சமின்றி சொல்ல வேண்டும்
என பலவாக, நாம் பெற்ற
உரிமைகளே. அவை இன்று
இந்தியாவில் இல்லையா?
அவர்களுக்கே வெளிச்சம்.
//


இது அத்தனையும் இன்றைய
அமைப்பை
கேள்விக்குள்ளாக்காமல்
செய்யலாம். இதே சுதந்திரம்
ஆங்கிலேயன் காலத்திலும்
இருந்தது. அன்றும் தேர்தல்
நடந்தது, மதம் இருந்தது,
தொழில் செய்யலாம்(இன்றைய
நிலை போலவே), படிக்கலாம்
சிற்சில வேறுபாடுகள்
இருக்கின்றன. இல்லையென்று
சொல்லவில்லை. அந்த பாரிய
வேறுபாடுகள்
இருப்பதனால்தான் இன்னும்
விடுதலை பெறவில்லை என்ப்தை
புரிய வைப்பதற்க்கு
பதிவுகளில் வாதாட
வேண்டியுள்ளது. கவலைப்பட
வேண்டாம் கூடிய விரைவில்
அந்த சிற்சில ஜன நாயக போலி
வெளி முகமூடிகளும் களைந்து
விடும்.


கோக் ஒரு ஆலை... அதுவும் சோடா
தயாரிக்கும் ஆலை. அந்த ஆலை
வருவதால் தண்ணீர்
மாசுபடும் அதை வரவிடாதே
என்று சொல்லி சுவரொட்டி
ஒட்டியவருக்கு(மக்கள் கலை
இலக்கிய கழகம்) சதி
வேலையில் ஈடுபட்டதாக் 3
மாதம் சிறை(இதே போல
தர்மபுரியில், வேலூரில்
சிலர் சிறை
வைக்கப்பட்டனர்). அந்த
சுவரொட்டியில் இருந்த
வாசகங்கள்:
"அமெரிக்க கோக்கே வெளியேறு,
--- ல் கோக் மற்றும்
பன்னாட்டு பொருட்கள்
எதிர்ப்பு போராட்டம்"


இதே கோக்கின் ஆபத்துக்களை
அம்பல்ப்படுத்தி படம்
எடுத்தார்கள்
த.மு.எ.ச(தேர்தல்
கம்யுனிஸ்டுகள்). மூழ்கும்
நதி என்று பெயர். இந்த
திரைப்படத்தை திரையிட தடை
போட்டது போலிசு.


கங்கை கொண்டான் கிராம
பஞ்சாயத்தில் கோக் ஆலையை
எதிர்த்து தீர்மானம்
நிறைவேற்ற முடிவு
செய்தார்கள். இதை உளவுத்
துறை மூலம் மோப்பம்
பிடித்த கோக் Factory full time
வாட்ச்மேன் 'கலெக்டர்',
இந்திய ஜன நாயகத்தீன்
அடையாளம் என இராஜீவ்
காந்தி தூக்கிப் பிடித்த
கிராம சபை கூடுவதற்க்கே
தடை போட்டு விட்டார்...
சூப்பர் ஜன நாயகம் போங்க்....


இதை மீறி குடியரசு
தினமன்று கூட்டத்தை
கூட்டியே தீரவேண்டிய
சூழலில் மக்கள் கோக்கை
எதிர்த்து தீர்மானம்
நிறைவேற்றினார்கள். கோக்
அந்த கவுன்சிலர்களை
அடுத்த் வாரம் கடத்தி
சென்று வேறு இடத்தில்
இன்னொரு தீர்மானம்
நிறைவேற்றியது.


இந்த ஜன நாயகத்தில் அதிக
பட்சம் உங்களால் கிசு
கிசுக்கள் மட்டுமே எழுத
முடியும்.


சரி கீழ்மட்டத்தில் இப்படி
என்றால் மேல்மட்டத்தில்
எப்படியுள்ளது?


ஊழலை அம்பலப்படுத்திய
தெகல்கா மீது போலிசு கேசு.
பாராளுமன்றத்தில் விவாதம்
இது பற்றி. மாட்டிக்கிட்ட
மக்கள்(??) பிரதி நிதிகளை
பற்றியல்ல விவாதம். மாறாக
இனி இது போல கேமார வைச்சி
படம் பிடிச்சு மக்கள்ட்டா
மாட்டி வுடுறது தடுக்க
கிரிமினல் சட்டம் கொண்டு
வரனும்னு விவாதம்.


இதே கேப்புல இரண்டு முறை
சம்பள உயர்வு. ஆனா இதே
கேப்புல குரல்
வாக்கெடுப்பு மூலமா
நிறைவேறிய சட்டங்கள்:


விதை நெல் சீர்திருத்த
சட்டம், மகாராட்டிர
தண்ணீர் ஒழுங்குமுறை ஆணயச்
சட்டம்(இரு குழந்தைக்கு
மேல இருந்தா ட்புள் சார்ஜ்
வேற), சூப்பர் டூப்பர் அணூ
அயுத ஒப்பந்தம்(இப்ப
ரிசண்டாத்தான் சட்டி
கிழிஞ்சு அம்மனாமா
தொங்கிச்சு), இந்திய
ராணுவத்த அமெரிக்க கூலிப்
படையாக்கும் ராணுவ
ஒப்பந்தம், நதிகளை தனியார்
நிறுவணங்களுக்கு எழுதி
வைப்பது(தமிழ் நாட்டில்
தஞ்சையில் ஒரு நதி, யமுனா to
தேம்ஸ் டெடொரண்ட் etc),
முக்கியமா பேடட்ண்ட்
ரைட்ஸ்(இத போட்டவுடனே
கான்சர் மருந்து 250 ரூ
லிருந்து 750 ரூவாய்க்கு
போனது) இன்னும் இது மாதிரி
இன்னும் சில ஆப்புச்
சட்டங்கள் இது எல்லாமே
பாரளுமன்றத்தில்
/சட்டமன்றத்தில் விவாதம்
செஞ்சி போட்ட பட்டவை அல்ல...


இவை எல்லாவற்றிலும் முன்பே
அதிகாரிகள் சுற்றுலா
செல்கிறோம் என்பது போல பல
பொய் காரணங்களை சொல்லி
வெளி நாடு சென்று
கையெழுத்திட்டு பிறகு
பாரளுமன்றம்,
சட்டமன்றத்தில் ரப்பர்
ஸ்டாம்பு குத்தி
செயல்படுத்தப்பட்டவை.


வேந்தனும் அவரது சகலப்
பாடிகளூம் ஏதேனும் ஸ்பெஷல்
தேர்தலில் வாக்கு குத்தி
இந்த அதிகாரிகளை
தேர்ந்தெடுக்கிறார்களா
என்று தெரியவில்லை. நான்
கேள்விப்பட்டவரை இவர்கள்
வெறும் கல்வித் தகுதியின்
அடிப்படையில் வரும்
மெக்காலேயின் productகள்.


இதைத்தான் இவர் ஜன நாயகம்
என்று சொல்கிறாரா?


அம்மாவோட எடுப்பு ஓ.பி.
பன்னீர் செல்வன் ஆட்சி
செய்த போது விவசாயிகள்
இலவச மின்சாரம் கேட்டாங்க.
அப்ப பொன்னுச்சாமிதான்
மின்சார அமைச்சர். அவர்
சொன்னார்- "உலக வங்கி இலவசமா
மின்சாரம்
கொடுக்ககூடாதுங்கிது ,
நான் என்ன செய்ய?"


இப்படி சோக்காளிகளையே
அப்பாவிய வாய்விட்டு
காட்டிக் கொடுத்தார் அந்த
அனுபவ குறைவான அமைச்சர்.
அவர் அப்பாவியான்
மொள்ளமாறி. இவை அனைத்தும்
தெரிந்தும்,
பத்திரிக்கைகளில், பல
ஊடகங்களில் இது பற்றி
தொடர்ந்து படித்தும் இதனை
மறைத்து பேசும் அல்ப
ஜீவன்களை என்னவென்று
பெயரிட்டு அழைப்பது??


அல்லது உலக வங்கி கூட
அடுத்த தேர்தலில் போடியிட
செய்யலாமா? இதத்தான்
அவிங்க யோசிச்சிகிட்டு
இருக்காங்க. சமீபத்தில்
வால்ஸ்டிரிட் ஜெர்னலில்
ஒரு கட்டுரை வந்தது: இந்திய
தேர்தல் தேவையில்லாம
பிசினஸ கெடுக்குது அதனால்
அத்த சட்டுபுட்டுன்னு
முடிக்கிற
வழியப்பாருங்கப்பான்னு
சொல்லி...


அடுத்த ஒரிரு மாதங்களில்
இங்கு நடந்த தேர்தல் ஒரே
மாதத்தில் நடத்தப்பட்டன.
இப்போ அந்த பத்திரிக்கை,
இந்திய அரசின் முடிவுகளை
தீர்மானிக்கும் உரிமை அந்த
மக்களுக்கு மட்டுமே
உரியது? இந்தியாவில்
முதலீடு செய்யும்
கம்பேனிகளும் கூட
பாதிக்கப்படுவார்கள், எனவே
அவர்களுக்கும் பிரதி
நிதித்துவம் வேண்டும்
என்று எழுதியுள்ளது. இது
நடக்கும் நடக்காதது
ஒன்றுமில்லை....


ஏனெனில் ஒரு பக்கம்
மருந்து கிடைக்க விடாமல்
மக்களை அவதிபடுத்திய
பேடண்ட் ரைட்ஸ் சட்டத்தை
இயற்றிய அரசு அதே கையோட
அந்த ஏழை சிக்காலிகள(
நோயாளிகள்) அமெரிக்க
கம்பேனிகள் தங்களது புது
மருந்துகள போட்டு
ப்ரிசொதிக்கும் சோதனச்
சாலை எலிகளா பயன்படுத்தும்
சட்டமும்
இயற்றியிருக்கிறார்கள்.


இந்த போலி ஜன நாயக
விசயங்களைத்தான் 'அடிமை
நாடும் போலி சுதந்திரமும்'
கிற இந்த கட்டுரையிலும்
பேசியிருக்கிறது. அதில்
ஒன்றைக் கூட பதில்
சொல்லாமல் தலைப்புக்கு
மட்டும் பதில் சொல்லும்
வேந்தனின் திறமை.... சும்மா
சொல்லக் கூடாது சூப்பர்....


அப்பு... எதிராளிக்கு நாங்க
ஆப்பு வைக்கிறதுல பழைய
அப்பாவி கம்யுனிஸுடுகள்
கிடையாது.... சும்மா சுழட்டி
சுழட்டி சொருகும் புதிய
கம்யுனிஸ்டுகள்...


அசுரன்.


இது பற்றிய விலாவாரியா
இங்கன எழுதிருக்கேன்
படிச்சு புன்னியம்
தேடிக்கோங்க:


India become Supper Power - Indians become Super Poor ==>
http://www.google.com/url?sa=D&q=http://kaipulla.blogspot.com/2006/08/india-become-supper-power-indians.html


Indian Freedom and Imperialism - Immediately after August 15 ==>
http://kaipulla.blogspot.com/2006/06/indian-freedom-and-imperialism.htmlDog-bite-rabies-vaccine-in-ghbeware
http://kaipulla.blogspot.com/2006/05/dog-bite-rabies-vaccine-in-ghbeware.html


i-am-exposedheeehhehe-dont-seex-rated
http://kaipulla.blogspot.com/2006/04/i-am-exposedheeehhehe-dont-seex-rated.html


milesstones-of-this-week-focus-great
http://kaipulla.blogspot.com/2006/04/milesstones-of-this-week-focus-great.html


mncs-again-they-are-fishing-indians
http://kaipulla.blogspot.com/2006/03/mncs-again-they-are-fishing-indians.html


parliament-mp-are-for-sale-summer
http://kaipulla.blogspot.com/2006/03/parliament-mp-are-for-sale-summer.html
***********


//அதனால் இன்றைய கல்லூரி
மாணவர்கள்
முன் எப்போது இல்லாத நல்ல
நம்பிக்கையை
எதிர்காலததின் மேல்
கொண்டுள்ளார்கள்.
//


ஆமாம் ரயில்வே காலசி
போஸ்டுக்கு சில ஆயிரம்
இஞ்னியர்களும், சில நூறு mba
க்களும் விண்ணப்பிச்சு
மக்கள் மேற்காமே நகர
ஆரம்பிச்சுட்டாங்க.... அய்யா
கொஞ்சம் செய்திகள படிக்க
நேரம் ஒதுக்குங்க...
இல்லயின்னா என்னோட
ஆங்கிலப் பதிவுகள படிங்க.


கலைஞ்ர்தான் அந்த திட்டத்த
சமுத்துவ புரம் சமாதான்
புரம்னு சுருக்கி குறுக்கி
பே... பெப்பேன்னு கையை
விரிச்சுட்டாரே... அது உங்க
கண்ணூல படலையா?


பத்து ஆண்டுகளில் என்ன
மாற்றம் நிகழ்ந்துள்ளது
என்பதைத்தான் செல்வனின்
அவதூறு பதிவுக்கு பதிலாக
போட்டுள்ளேன். இந்த
தளத்தில்தான் அதுவும்
உள்ளது உங்கள் வலுவை
அங்கேயும் வந்து
காட்டவும்.


இந்த 10 வருசத்தில இந்தியா
அடைஞ்ச வளர்ச்சில ஓவரா
அனுபவிச்சுட்டு இனிமே
அனுபவிக்க ஒன்னுமில்லன்னு
தெரிஞ்சுக்கிட்டுத்தான்
விவசாயிகள் கொத்து கொத்தா
சாவுறாங்க..... ஹா ஹாஅ......
அய்யோ.... அய்யோ....


அசுரன்

said...

if some body has understood or exploited in the name of communism they mighthave been vanished.
communism will never ever vanish.
communism will rule the world.

said...

சீனா,கியுபா போன்ற கம்யுனிச நாடுகளில் அதன் தலைவர்கள் சர்வதிகார ஆட்சியைதான் செய்கின்றனர்.தேர்தல்,ஓட்டுகள்,அரசியல் கட்சிகள் போன்ற எந்தவொரு மணங்கட்டியும் அங்கே இல்லை.ஆனால் இந்தியாவில் மட்டும் கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகள் ஆரம்பிப்பார்களாம்.தேர்தலிலும் போட்டியிடுவர்களாம்.அப்படியே ஆட்சியையும் பிடிப்பார்களாம்.

said...

//முதலாளித்துவ கட்சிகள்
என்று தமிழ் நாட்டில்
உண்டா? //

இந்தியாவில் முதலாளித்துவ
கட்சிகள் உண்டு.
முதலாளித்துவ கட்சிகள்
மட்டுமல்ல ஒவ்வொரு
வர்க்கமும் தன் இயல்பில்
அமைப்பாக மாறியிருக்கும்.
ஆகவே ஒரு நாட்டின் ஒரு
சமூகப் பொருளாதார
கட்டத்திற்க்கான
வர்க்கங்கள் அனைத்தும்
தனக்கான நலன்களை
முன்னிறுத்த அமைப்பாக
திரண்டிருக்கும்.


வெள்ளையன் தலைமையிலான
வியாபாரிகள் சங்கம் தேசிய
முதாலாளிகளின் கட்சி, CII, NASCOM
போன்றவை தரகு முதலாளிகளின்
கட்சி.


அமேரிக்காவில் ஒரு அடுப்பு
எரிய உலகின் ஏதேனும் ஒரு
பகுதி சுடுகாடாக மாற
வேண்டும். சொந்த சுகத்தைத்
தவிர்த்து ஒட்டு மொத்த
மனித குலத்திற்க்கு என்ன
உபயோகமாயிருக்கும் என்று
சிந்தித்தால் இது போல
குறுக்கிப் பார்க்கத்
தோனாது.


//"எல்லோரும் எல்லாமே பெற
வேண்டும்.
இங்கு இல்லாமை இல்லாத நிலை
வேண்டும்".


பொதுவுடைமை பாதையில் அது
நட க்காது என்று
சொல்லிவந்து அது
நிறுவப்பட்டு
விட்டது. இனி
மாற்றுபாதையான தனி
உரிமைதான் ஒரே வழி. //


அப்படியா??? நீங்கள்
சொல்லும் விசயம் இதுவரை
எங்கும்
நிறுவப்பட்டதில்லை.
ஏதெனும் எ-கா இருந்தால்
சொல்லவும்.


உண்மையில் பொதுவுடைமை
சமுதாயம் எல்லாருக்கும்
எல்லாம் என்பதை சாதித்தது.
எந்த நாட்டையும்
சுரண்டாமல். தனியொரு
நாட்டில் பொதுவுடமை
வாழ்வது கடினம் என்ற
நிபந்தனையுடந்தான் இந்த
சாதனையை செய்ய விளைந்தனர்
மார்க்ஸிய முன்னோர்கள்.


லெனினும் சரி, ஸ்டாலினும்
சரி, மாவொவும் சரி ஒரு
வெற்றிகரமான முதலாளித்துவ
மிட்சி சாத்தியமே.
அப்படியொன்று நடக்காமல்
தொடர்ந்து வர்க்கப்
போராட்டத்தை(அதாவது எதிர்
வர்க்கத்துக்கு எதிரான
போராட்டத்தை) நடத்த
வேண்டுமெனெ திரும்ப
திரும்ப
வலியுறுத்துகிறார்கள்.


இந்த விசயத்தில் கடும் உள்
நாட்டு, வெள் நாட்டு
பிரச்ச்னைகள்(சதி, உலக
யுத்த அபாயம், ஜெர்மனியின்
யுத்த மிரட்டல்)
கவனமிழந்து ஸ்டாலின்
முதலாளித்துவ மீட்சி பற்றி
தான் எச்சரிக்கை செய்ததையே
கவனத்தில் கொள்ளாமால் சில
சட்ட சீர்திருத்தங்களை
செய்தார். அதை விரைவில்
உணர்ந்து வேறு சில
கட்டுப்பாடுகளை -
அவற்றையும் தவறாகவே -
செய்தார். இந்த இரண்டும்
கட்சிக்குள் எதிர் புரட்சி
கோஸ்டிகள் ஊடுருவ
வழிவகுத்தது...


இந்த விசயத்தில் மாவொ is very very
good.... அவர் இருந்த வரை ஒரு
பிற்போக்கு சக்தியும்
வாழாட்ட முடியவில்லை.


//எங்கள் பாதை மக்களுக்கு
வாய்ப்பு கொடு, அவன் அவன்
முன்னேறிக்கொள்வான்
என்பதே.
பாதை சமைக்கப்பட்டு
விட்டால் பயணம் யார்க்கும்
எளிது. //


இது முதலாளித்துவ பாதை. இது
இந்தியாவில்
மறுக்கப்படுகிறது. இதை
உறுதிப்படுத்துவதுதான்
இந்தியாவில்
கம்யுனிஸ்டுகள் செய்யக்
கூடிய புரட்சி. அதாவது ஒரு
தேசிய முதலாளி செய்ய
வேண்டிய
புரட்சியை(வெள்ளையன்
கோஸ்டி) அவர்கள்
வலுவற்றவர்களாக
இருப்பதால். பாட்டாளி
செய்வதுதான் இந்தியா போன்ற
நாடுகளின் சிறப்பு. இது
உண்மையில் முதலாளித்துவ
புரட்சியே...


வேந்தன் சொல்வது போல
புரட்சி நடந்தால்
முதாலாலிட்ட் போய்
எல்லாத்தையும்
பிடுங்கிருவாங்க கறது
அடிப்படையற்ற பயம்.


இந்தியாவில் புரட்ச்
முடிந்தவுடன் உள்ள நிலைமை
இதுதான்;


நிலங்கள் உழபவர்களுக்கு
சமமாக பிரித்துக்
கொடுக்கப்பட்டு கூட்டுறவு
பண்ணைகள் அமைக்கப்படும்.


ஏகாதிபத்திய, தரகு முதலாளி
நிறுவனங்கள் அனைத்தும்
நாட்டுடைமை அல்லது அந்த
கம்பெனிகளிடம்
காண்ட்ராக்ட் எடுத்து
செய்து கொண்டிருக்கும்
சிறு தெசிய முதலாளிகளுடனான
அரசு இணைந்த கூட்டமைப்பின்
கீழ் கொண்டு வருவது.


தகவல் தொழில் நுட்பத் துறை
முற்று முதலாக இந்திய
தொழில் துறை, மற்றும்
பிரதானமாக
விவசாயத்துறைக்கான
முதுக்கெலும்பாக வேலை
செய்யும்....


இப்படி ஒரு பொருளாதார
அமைப்புதான் நீண்ட
புரட்சியின் முடிவில்
அமைந்திருக்கும்


மாவோ தெளிவாக சொல்கிறார்.
தேசிய முதலாளிகளுடன்னா
முரன்பாட்டை நட்பாக
தீர்க்க வேண்டும் என்று.
அதாவது அவர்களுடன் இணைந்து
இந்திய பொருளாதாரத்தை
வளர்த்து அதே நேரத்தில்
பொதுவுடமையை அவர்களுக்கு
கற்பித்து அவர்களு
ஒப்புதலுடன்
அரசுடமையாக்கச்
சொல்கிறார்.


அசுரன்

said...

//Anonymous said...
சீனா,கியுபா போன்ற கம்யுனிச நாடுகளில் அதன் தலைவர்கள் சர்வதிகார ஆட்சியைதான் செய்கின்றனர்.தேர்தல்,ஓட்டுகள்,அரசியல் கட்சிகள் போன்ற எந்தவொரு மணங்கட்டியும் அங்கே இல்லை.ஆனால் இந்தியாவில் மட்டும் கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகள் ஆரம்பிப்பார்களாம்.தேர்தலிலும் போட்டியிடுவர்களாம்.அப்படியே ஆட்சியையும் பிடிப்பார்களாம்.
//


Anony,
இந்தியாவின் பல கட்சி பங்கெடுக்கும் தேர்தல் கை நிறைய கழுதை விட்டை.


கம்யுனிசத்தில் தேர்தல் என்பது ஒரு கட்சிதான் கட்சியே அரசு நிர்வாகத்திலும் இருக்கும், கட்சி நிர்வாகத் தேர்தல் என்பது உள்கட்சி ஜன் நாயக் முறைப்படி நடத்தப்படும். அரசி நிர்வாக தேர்தல் என்பது கட்சியிலுள்ளவர்கள் நிற்க்க மக்கள் ஓட்டளித்து நடைபெறும்.

இதன் அணூகூலம் எந்த அரசு அதிகாரியும் (ஜனதிபதி முதல் லோக்க்கல் தாசில்தார் வரை) மக்களால் நெரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விருப்பமில்லையெனில் திருப்பியழைத்துக் கொள்ளலாம்(அதாவது குறிப்பிட்ட நிர்வாகி எந்த மட்டத்தில் அதிகாரத்தில் உள்ளார் என்பதைப் பொறுத்து அங்குள்ள வெகுஜன கூட்டமைப்புகளில் அவ்ரை திருப்பியழைக்கும் முடிவை வைத்து வாக்கெடுப்பு நடத்தப்படும்.

ஒரு அரசு என்ற அமைப்பு நிலவுவதே சர்வாதிகாரம்தான்.

அரசு என்பதே பகையான வர்க்கங்களிடையே கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு ஒடுக்குமுறை உறுப்புதான்.

ஆக புரட்சி செய்த உடனெ கம்யுனிசத்தை அடைந்துவிட முடியாது. அது சிறிது காலம் எடுக்கும் அதுவரை எதிரி வர்க்கத்தை(ஏகாதிபத்தியம், நிலபிரபுத்துவம்) அடக்க ஒரு அரசு தேவைப்படுகிறது.

அந்த அரசு பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கானது, சிறுபான்மை எதிரி வர்க்கத்துக்கு சர்வாதிகாரம்


கீழ் உள்ள கட்டுரையை படிக்கவும்:

அனானிக்கு ஒரு பதில் - அதிகார ருசி, புரட்சி, கம்யுனிசம்
http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_115375045154005106.html


**********

And I forgot to mention. I am against electoral politics. This I emphasised again and again. but repeatedly people come up with that presumption.
நன்றி,
அசுரன்

said...

//if some body has understood or exploited in the name of communism they mighthave been vanished.
communism will never ever vanish.
communism will rule the world. //சரியாத்தான் சொல்றீங்க அனானி....


டொடெண் டொய்ன்....

ஏய்.. என்ன வைச்சி காமெடி கீமெடி பன்னலையே.... :-)))


நன்றி,
அசுரன்

said...

கலாச்சார புரட்சி பற்றிய விசயத்தில் அரைகுறையாக ஆடுபவர்களுக்கு ஒரே ஒரு விசயம்தான்,
ஒரு நாட்டின் வரலாறை முழுமையக புரிந்து கொண்டு பேசவும், குறைந்த பட்சம் எந்த விசய்ததைப் பற்றி பேசுகிறோமோ அந்த காலகட்டத்தின் வரலாற்று தொடர்புகளை தெரிந்து கொண்டு பேசவும்.

இது போன்ற அனுகுமுறை பாசிச மத வெறி பன்றிகளுக்கு கிடையாது என்பதை பல இடங்களில் அம்பலப்படுத்தியதுதான். அதனால் அவர்களைப் பற்றி மேற்கொண்டு சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் மற்ற வாசகர்களுக்கு சில விசயங்களை சொல்வது சரி என்று படுகிறது.

#1) மேற்கு வங்க பற்றிய செய்தி உண்மையா பொய்யா என்ற விரிவான பகுதிக்கு நான் செல்ல அவசியமில்லை. எனது கருத்துப்படி வோட்டுக் கட்சி கம்யுனிசத்தின் விளைவு ஒன்றும் மக்கள் நலமல்ல. அது கம்யுனிசமே கிடையாது என்பதுதான் எனது நிலைப்பாடு அதனால் கம்யுனிசம் இல்லாத ஒன்றை கம்யுனிசம் என்று தூக்கிக் கொண்டு பேசுவது திரிபுவாதம்.

ஒரு மருந்தை, ஒரு பத்தியத்தை அரைகுறையாக எடுக்கலாம் என்று எங்காவது படித்ததுண்டா? அப்படி அரைகுறையாக எடுத்தால் என்னாகும்? கேடு விளையும். அதே விசயம்தான் கம்யுனிசத்திலும். அதை வெட்டிக் குறுக்கி நமது மன உந்துதலுக்கேற்ப பயன்படுத்துவது ஆபத்தே. மக்கள் மக்கள் மட்டுமே கம்யுனிசத்தின் ஒரே உந்து சக்தி.


#2) சீனாவில் தியன்மென் சதுக்கத்தில் - நாட்டின் நிலைமை, விடுதலையைப் பெற அந்த நாடு செய்த தியாகம் பற்றி எல்லாம் கிஞ்சித்தும் புரிந்துண்ர்வு இன்றி ஏகாதிபத்திய நுகர்வு வெறி பிடித்து ஆட்டம் போட்டவர்களை என்ன செய்வது?

அய்யா.. ஒரு விசயத்தை புரிந்து கொள்ளவும் சீனாவின் புரட்சி ஒரு நாள் இரண்டு நாளில் நடந்து விடவில்லை சில பத்து வருடங்கள் தொடர்ந்து நடந்த ஒரு விசயம். குறீப்பாக மக்கள் மன்றங்களை கட்டியமைத்து எல்லா அரசு அதிகாரத்திலும் மக்களின் முழுமையான பாத்திரத்தை உறுதிப்படுத்திய ஒரு புரட்சி அது.

அதனால் அங்கு ஆட்சிக்கு வரும் ஒரு தலைமை மக்கள் விரோதமாக இப்படி அப்பட்டமாக வெல்லாம் நடந்து கொள்ள் முடியாது. அப்படி நடந்து கொண்டு ஆட்சியில் நிலைக்க முடியாது. ஒவ்வொரு பகுதி அளவிலும் மக்களின் கைகளீல்தான் அதிகாரமுள்ளது. இது சீனாவின் அந்த கால நிலைமைகளை நேரில் சென்று பார்த்து எழுதிய பல்வேறு முதலாளித்துவ அறிஞர்களின் கட்டுரைகளைப் படித்தால் தெரியும்(எழுதிய பலர் கம்யுனிசம் மாற்று என்று நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதை கவனத்தில் கொள்க).


அன்றைய கம்யுனிஸ்டு கட்சியில் இரு விதமான போக்கு நிலவியது: ஒன்று கட்ரியில் அதிகாரம் செலுத்திய முதலாளித்துவ கோஸ்டிகள், இரண்டு மக்களின் தலைவரான மாவோவின் தலைமையிலான சோசலிச குழு. முதல் குழுவால் கட்சியில் அதிகாரம் செலுத்தியும் நாட்டின் கொள்கை முடிவுகளில் அதிகாரம் செலுத்த இயலாத நிலைமையை ஒப்பிட்டு புரிந்து கொள்ளவும். இதற்க்கு காரணம் கீழே மக்கள் மீது ஆதிக்கம் செலுத்திய சோசலிச குழு(இந்த அதிகார பிரிவினை எவ்வாறு இப்படி perfect ஆக ஏற்பட்டது என்பதை புரட்சி நடந்த வரலாறைப் படித்தல் புரிந்து கொள்ளலாம்).

அதாவது முதாலாளித்துவ மீட்சிக்கான திட்டங்களை தலைமையின் ஒரு பகுதி வைக்கும் போதெல்லாம் மாவோ அதை எதிர்த்து அம்பலப்படுத்துவார், அதை மக்கள் மத்தியில் கொண்டு சென்று நாடு தழுவிய விவாதத்தை ஏற்படுத்துவார். இது அடிமட்டத்தில் கிளப்பும் அழுத்தம் தாங்காமல் மவோ தலைமையிலான குழுவின் கூற்றுக்களே கடைசியில் பெரும்பான்மை பலம் பெறும்.

இந்த முதலாளித்துவ மிட்சி முயற்சியை மாவோ இருந்த வரை கட்டுப்படுத்த முடிந்தது. மாவொவிற்க்கு பிறகு கட்சியில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திய முதலாளித்துவ தலைமை அதிகாரத்துக்கு வந்து நிதானமாக மக்களின் கண்ணை உறுத்தா வண்ணம் தனது திட்டத்தை நிறைவேற்றியது.

சரி மாவோ தலைமையிலான கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்ப்பட்ட சிக்கல் என்ன? இதை நடைமுறையில் சீர்குலைக்க கட்சி அதிகாரத்தில் இருந்த எதிரணி தனது அதிகார வலிமையைக் கொண்டு திட்டங்களை பாய்ச்ச்லாக நடைமுறைப்படுத்தும் ஒரு முனைக்கு செல்வது அல்லது நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடும் இந்த முனைக்கு செல்வது என்று அழிவு வேலைகளில் நைச்சியாக ஈடுபட்டனர்(ஒரு பகுதியில் உற்பத்தி குறித்து ஒரு அள்வு-எ.காவுக்கு ஒரு டன் - என்று நிர்ணயித்தால் இந்த குழு ஒன்று பாய்ச்சல் வேகம் பத்தாது அதனால் 10 டன் என்று மாற்றச் செய்து அழிவுண்டாக்கும், இல்லை சூழ் நிலை சரியில்லை அதனால் 0 டன் என்று அழிவுண்டாக்கும்). இவையெல்லாம் கட்சியில் அம்பலப்படுத்தப்பட்டு அவர்கள் மக்கள் மத்தியில் பதில் சொல்லவைக்கப்பட்டனர், பலர் தண்டிக்கப்பட்டார்கள்.

குறிப்பாக (அவரது பெயர் தற்பொழுது ஞ்பாகம் இல்லை) ஒரு தலைவரை இருமுறை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய மாவோ அவரை கடைசிவரை கட்சியிலிருந்து நீக்கவில்லை. இதன் காரணம் வேறொன்றுமில்லை, மக்கள்... மக்கள்... மக்கள் முடிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை. ஆனால் மக்களிடம் தலைமையில் உள்ள எதிரணீகளீன் சதியை கொண்டு செல்லும் இணைப்பு இழை மாவோவுக்கு பிறகு அறுந்தது. அந்த இருமுறை மன்னிக்கப்பட்ட தலைவரே அதிகாரத்தைப் பிடித்தார்.

மற்றபடி அபின் தேசம் என்ற அறியப்பட்ட சீனா, தொடர்ந்து 30 வருட உள் நாட்டு, வெளி நாட்டு, ஆக்கிரமிப்பு யுத்தத்தால் முற்றிலும் சீர்குலைந்து, அதே காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சியை விட பல மடங்கு அதல பாதாளத்தில் இருந்த ஒரு நாடு. புரட்சிக்கு பிறகு அபரிமிதமான வளர்ச்சி பெற்றது. எந்த நாட்டையும் சுரண்டாமல். இது அதிசயம்தான். இதில் முந்தைய சமூகத்தின் படு கேவலமான நிலைமையின் பாதிப்பின்றியா நடந்திருக்கும்? பாதிப்பு இருக்கும்.. அவைதான் ஏகாதிபத்தியங்களால் ஊதிப் பெருக்கப்பட்டது.

மாவோவின் ஒரு அரைகூவலுக்கு மக்கள் எதையும் தியாகம் செய்ய தயாராயிருந்தார்கள். கொசு ஒழிப்பு இயக்கம், நதிகளை கட்டுப்படுத்தும் அதிசயங்கள் பல செய்த இயக்கம், நாட்டின் ஐந்தாண்டு திட்டங்களை திட்டமிட்ட காலத்தைவிட குறுகிய காலத்தில் சாதித்து மிக விரைவாக் சோசலிசத்தை எட்டிய பொருளாதார வளர்ச்சி. பொருளாதாரம் சோசலிசத்தை எட்டுவது ஒன்றும் சாதரணமான விசயமில்லை. அதுவும் சீனா ட்புள் ஜம்ப் செய்தது - ஒன்று இந்தியாவைவிட படுபாதளத்தில் இருந்த பொருளாதாரத்தை முதலாளித்துவ பொருளாதராத்துக்கு நாடு முழுவதும் பரவலாக கொண்டு வந்தது, அடுத்து சோசலிச பொருளாதாரத்துக்கான கட்டுமானங்களை வெற்றிகரமாக நிறுவியது..... இப்படி பல சாதனைகள் கொண்ட காலகட்டம் அது. அதனால்தான் இன்றும் மாவோ, சீனாவின் மக்கள் நாயகன்.

ரஸ்யா ஸ்டாலின் பற்றீயதும் கூட பல புரளிகளின் அணிவரிசைதான். இது குறித்து பல இடங்களில் எழுதியாயிற்று.

இவர்களின் ஆட்சிக்காலங்களில் பலர் இறந்தனாரா? ஆம், ஆனால் அவை சுற்றீ வளைத்து எதிரி நாடுகள் செயற்கையாக உருவாக்கிய பொருளாதார நெருக்கடிகள், ஏற்கனவே உலகப்போரில் அழிந்து நாசமான உள்கட்டமைப்புகள்(குறிப்பாக ரஸ்யா, ஒரு உலகப் போர், தொடர் உள் நாட்சு யுத்தம், எல்லை அபகரிக்கும் யுத்தம்(இந்த யுத்தத்தில் மாஸ்கோவில் 4 லட்சம் தொழிலாளர்கள் லெனின் அழைப்பை ஏற்று அதிகப்படியாக உழைக்க முன் வந்தார்கள்- சிலர் சொல்வது போல மக்கள் எதிராக இருந்தால் எப்படி ஆட்சி நிலைத்து நிற்க்க முடியும்?), பிறகு வந்த பஞ்சம், ஒரு உள் நாட்டுச் சதி, இரண்டாம் உலகப் போர்), புரட்சிக்கு பிந்தய உள் நாட்டு, வெளி நாட்டு ஏகாதிபத்திய சதிகள்...

இன்னும் சிறப்பாக சொன்னால் அன்றைய நிலைமையில் வேறு விதமான ஆட்சியிருந்தால் இதைவிட படுகேவலாமன நிலை ஏற்பட்டிருக்கும் ஆனால் அதை ஊதிப் பெருக்க வேண்டிய அவசியம் ஏகாதிபத்தியத்துக்கு இருக்காது. நாமும் அதைப் பற்றி இன்றுவரை விவாதம் செய்து கொண்டிருக்க மாட்டோ ம்.


ஒன்னுமில்லாத லோக்கல் ரௌடி சதாம் அண்ணாச்சியை ஆப்படிக்கவே பல தில்லாலங்கடி வெலை செய்த ஏகாதிபத்தியம்(பிபிசி யின் முக்கிய பிரமூகரின் மர்ம மரணம், டாகுமெண்ட் போர்ஜரி, அதிபயங்கர ஆயுதம் பற்றிய டூபாக்கூர், இதில் கொடுமையாக் செப் 11 யை அரசே செய்திருக்கு என்று பல முதலாளித்துவ அறிஞர்களே ஆதாரத்துடன் பேசுகிறார்கள்). ஸ்டாலின், மாவோ விசயத்தில் எந்த அள்வு வேலை செய்திருப்பார்கள்?

சாதாமுக்கே இப்படியென்றால். அமேரிக்காவின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியா மாபெரும் தலைவர்கள் பற்றி என்னவிதமான முயற்சிகள் நடந்திருக்கும் என்பது கற்பனைக்கெட்டாத ஒரு விசயம்.


அதனால் இந்த அவதூறுகள் பற்றி எடை போட விரும்புகிறவர்கள் சீனா, ரஸ்யா பற்றிய தங்களது வரலாற்று , பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்ளவும்.

இது குறித்து மேலும் ஆணித்தரமான தகவல்களுக்கு:

tamilcircle.net (இங்கு சுந்தர ராமசாமி பற்றீய ஒரு விமர்சன கட்டுரையில் விரிவாக பேசியிருக்கிறார்கள் - புத்தகங்கள் பகுதி)

புதியகாற்று எனும் வலைப்பூவில் சில கட்டுரைகள் உள்ளன.


யார் வேண்டுமானலும் வந்து எனது வாயை பிடுங்கலாம். தக்க பதில் கொடுக்கப்படும்.....

நன்றி,
அசுரன்

said...

Dear Mr Asuran,,
While you are right about America's quest for hegemony the track records of Stalinist Soviet Russia and Mao's China unfortunately are worse.

Thousands were slaughtered by Stalin, one of the worst Dictators.the world had seen..
Equally the cultural revolution spawned in China killed millions..
PolPot of Combodia probably was the worst butcher the world had seen who was supported by Communist China.

The kind of genocide communists have spawned has not been intiated by Hegemony of USA, not even in CIA inspired coup in Chile and Argentina.

To me that has been the tragedy of Communism. I am sure Karl Marx wouldn't have approved of Stalin or Mao.

Sridhar

said...

//Dear Mr Asuran,,
While you are right about America's quest for hegemony the track records of Stalinist Soviet Russia and Mao's China unfortunately are worse.

Thousands were slaughtered by Stalin, one of the worst Dictators.the world had seen..
Equally the cultural revolution spawned in China killed millions..
PolPot of Combodia probably was the worst butcher the world had seen who was supported by Communist China.

The kind of genocide communists have spawned has not been intiated by Hegemony of USA, not even in CIA inspired coup in Chile and Argentina.

To me that has been the tragedy of Communism. I am sure Karl Marx wouldn't have approved of Stalin or Mao.

Sridhar //

Dear Sridhar,

Will you give any genuine proof for your claim... ?.....

Atleast could you tell me something so that I will believe you have done some basic research before coming to this coclusion.


Allegations... Rumours....

****************


மாவோவின் மீது எனக்கு ஆரம்பத்தில் பெரிய மரியாதையெல்லாம் கிடையாது. கலாச்சார புரட்சி, இன்னும் பல விசயங்களில் அவரைப் பற்றி வோட்டுக் கம்யுனிஸ்டுகளும், ஆளும் வர்க்கமும் பல புரளிகளை கிளப்பியிருந்ததால் எனது மன நிலையும் கூட தங்களைப் போலத்தான் இருந்தது. ஆனால் அவரைப் பற்றி ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் என்ற சூழலில் முழுமையாக் ஆய்வு செய்துதான் அவரைப் பற்றிய(ஸ்டாலின் பற்றி) அபிப்ராயத்தை கூறுகிறேன்.

ஒருவேளை நீங்கள் அவ்வாறு ஏதேனும் செய்து மாவோ பற்றியும் ஸ்டாலின் பற்றியும் ஆய்வு செய்து முடிவுக்கு வந்திருந்தால் அதை கொஞ்சம் விளக்கிக் கூறி எனது மாயைக் கலைக்க உதவி செய்யவும்.

வெறுமே ஆளும் வர்க்க பத்திரிக்கைகளின் புரளிகளின் அடிப்படையில் தயவு செய்து ஜல்லி அடிக்காதீர்கள்.

பிரச்சனையை நேர்மையாக ஆய்வு செய்து முடிவுக்கு வாருங்கள்.

ஒரு சின்ன விசயத்தை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்:

//இவர்களின் ஆட்சிக்காலங்களில் பலர் இறந்தனாரா? ஆம், ஆனால் அவை சுற்றீ வளைத்து எதிரி நாடுகள் செயற்கையாக உருவாக்கிய பொருளாதார நெருக்கடிகள், ஏற்கனவே உலகப்போரில் அழிந்து நாசமான உள்கட்டமைப்புகள்(குறிப்பாக ரஸ்யா, ஒரு உலகப் போர், தொடர் உள் நாட்சு யுத்தம், எல்லை அபகரிக்கும் யுத்தம்(இந்த யுத்தத்தில் மாஸ்கோவில் 4 லட்சம் தொழிலாளர்கள் லெனின் அழைப்பை ஏற்று அதிகப்படியாக உழைக்க முன் வந்தார்கள்- சிலர் சொல்வது போல மக்கள் எதிராக இருந்தால் எப்படி ஆட்சி நிலைத்து நிற்க்க முடியும்?), பிறகு வந்த பஞ்சம், ஒரு உள் நாட்டுச் சதி, இரண்டாம் உலகப் போர்), புரட்சிக்கு பிந்தய உள் நாட்டு, வெளி நாட்டு ஏகாதிபத்திய சதிகள்...

இன்னும் சிறப்பாக சொன்னால் அன்றைய நிலைமையில் வேறு விதமான ஆட்சியிருந்தால் இதைவிட படுகேவலாமன நிலை ஏற்பட்டிருக்கும் ஆனால் அதை ஊதிப் பெருக்க வேண்டிய அவசியம் ஏகாதிபத்தியத்துக்கு இருக்காது. நாமும் அதைப் பற்றி இன்றுவரை விவாதம் செய்து கொண்டிருக்க மாட்டோ ம்.


ஒன்னுமில்லாத லோக்கல் ரௌடி சதாம் அண்ணாச்சியை ஆப்படிக்கவே பல தில்லாலங்கடி வெலை செய்த ஏகாதிபத்தியம்(பிபிசி யின் முக்கிய பிரமூகரின் மர்ம மரணம், டாகுமெண்ட் போர்ஜரி, அதிபயங்கர ஆயுதம் பற்றிய டூபாக்கூர், இதில் கொடுமையாக் செப் 11 யை அரசே செய்திருக்கு என்று பல முதலாளித்துவ அறிஞர்களே ஆதாரத்துடன் பேசுகிறார்கள்). ஸ்டாலின், மாவோ விசயத்தில் எந்த அள்வு வேலை செய்திருப்பார்கள்?

சாதாமுக்கே இப்படியென்றால். அமேரிக்காவின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியா மாபெரும் தலைவர்கள் பற்றி என்னவிதமான முயற்சிகள் நடந்திருக்கும் என்பது கற்பனைக்கெட்டாத ஒரு விசயம்.


அதனால் இந்த அவதூறுகள் பற்றி எடை போட விரும்புகிறவர்கள் சீனா, ரஸ்யா பற்றிய தங்களது வரலாற்று , பொருளாதார அறிவை வளர்த்துக் கொள்ளவும்.

இது குறித்து மேலும் ஆணித்தரமான தகவல்களுக்கு:

tamilcircle.net (இங்கு சுந்தர ராமசாமி பற்றீய ஒரு விமர்சன கட்டுரையில் விரிவாக பேசியிருக்கிறார்கள் - புத்தகங்கள் பகுதி)

புதியகாற்று எனும் வலைப்பூவில் சில கட்டுரைகள் உள்ளன.
//

அசுரன்

said...

Dear Asuran,

The excesses commited by Mao and later by the (in)famous Gang of Four have all been recorded by authentic sources.The web resorces available for these are far too many and detailed for me to give you any one URL>

U pls search for "cultural Revolution" and "the Great Leap Forward" you will obtain so many authentic resorces. I have gone thru many of them.

Recently Dr Amartya Sen while comparing India's economic Model and the present Chinese Model(which of course is any thing but Communistic) pointed out the pains and excesses suffered by China during the Great Leap forward.

Pol POt of Cambodia's case is also very well recorded and true and cannot suffer deniability.

Equally, the roots of Islamic Terrorism were planted by the CIA and the State Dept of US Administration which pursued funding of Jihadists thru pakistan just in the name of fighting Communism and in the process created Osama and the Taliban.
They paid a dear price for this folly thru 9/11( some would say poetic justice)

The short point is that all political models tried in human history have had a fair share of intolerance of dissent and associated violence.
But the saving grace is that democracies increasingly offer political space for dissent where as theocratic or communist models will deny this once in power while using and many times misusing this right available to them under the democratic dispensation.
I take it, that you are advocating a model in which electoral process will be done away with as a tool for ensuring participative governance.

Unfortunately this model as sought to be implemented by the Maoists will have disastruos consequences and doomed for failure and will bring in allround misery if it grows. This will be a classic case of the "cure beiung worse than the disease".
As the saying goes the cure for the ills of democracy is not less democracy but more of it.

You are right about the US folly in IRAQ and the shaneless ways in which they cretaed and twisted facts/half truths and blatant lies to garner world support for waging a war on IRAQ but the majority of the world did not support this while the majority did support the war on Afghanistan..
The US many a times have been vicious despite their pretensions to support democracy in the world.
But it is also true that, if given a choice any sane person would choose to live in democratic USA rather than in Maoist Nepal/India(if maoism succeeds in these places)

regards,

Sridhar

said...

Dear Sridhar,

My suggestion to you is read the history of communist states not just from Internet. They are not always authentic sources.

Then your claim that the present china - a communist state is false perception. And I request you to go through my justification of 'Cultural revolution' in this posting And try to understand what china has acheived and were it has failed. Then you would find it is not communism that is to blame. Don't take incidents as a singular event. try to understand and correlate everything with it's historical back drop.

Amertya Sen is nothing but just a bit more than any other capitalist economists. I am not a fan of him. Neither I have a good opinion about him. His request for the present corporate world is to be just reponsible. That's it. He is nowhere against this economic system. And those who compare India and China, please explain the mirracle behind a state emeging as a Imperialism(though I have negative view on this) now from Ash(at the time Revolution happened in china).

I haven't read much about Pol pot and his supported by Mao. So I avoid comment my opinion on this.


//The short point is that all political models tried in human history have had a fair share of intolerance of dissent and associated violence.
But the saving grace is that democracies increasingly offer political space for dissent where as theocratic or communist models will deny this once in power while using and many times misusing this right available to them under the democratic dispensation.
//

The written history of Human soceity is nothing but Class struggle - Marx. So there will be blood stain through out the human history. If look at these incident singularly you would conclude like this. There is a science behind the evolution of human society. Just try to understand what it is. With out understanding your soceity how come you would diagnose the problem and solution.

What do you mean by a democracy? representation by Majority. Just tell me where in India the majority is represented?. Regarding this also I have replied in this posting. Please read.

I have been talking about a Capitalist revolution deprived for India. Which has to be completed by Communists. So the revolution for India or Nepal or any other country like us is a capitalist revolution.

Please read my other replies and article - "badri's village economic system is an Utophis".


// that you are advocating a model in which electoral process will be done away with as a tool for ensuring participative governance.
//

This is completely wrong perception. Please read my article as an reply to one anony's question "A reply to Anony - Revolution, Communism, Authoritarianism'.//Unfortunately this model as sought to be implemented by the Maoists will have disastruos consequences and doomed for failure and will bring in allround misery if it grows. This will be a classic case of the "cure beiung worse than the disease".
As the saying goes the cure for the ills of democracy is not less democracy but more of it.//

If the 'sane' is an explioting Yuppi..... who is living in Imperialistic country, he will sure worry about. India has 60% or more of it's people in Village, and only 30 corore people are the benificieries of the present model of economy and in which vast majpority of them also bear the negative brunt of this process.

Sridhar, Your arguments are good and put forward with genuine intentions. Thanks for these kind of healthy arguments. But I there are no new points from your reply. You could find elaborate answer for your doubts, claims in my various articles and replies. Apart from that You are perception about Nepal is just your opinion there is no tangiable proof or analytical conclusion offered by you.

Expect you reply

Thanks and Regards,
Asuran

said...

//சாதாமுக்கே இப்படியென்றால். அமேரிக்காவின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியா மாபெரும் தலைவர்கள் பற்றி என்னவிதமான முயற்சிகள் நடந்திருக்கும் என்பது கற்பனைக்கெட்டாத ஒரு விசயம்.

//
ஆழ்ந்த - நிதர்சன உண்மையை ஒப்பிட்டு விளக்கியது சிறப்பு.

மாபெரும் சதி என்ற புத்தகத்தின் பாதிப்பை மிண்டும் உணர முடிந்தது.


புதிய காற்று

said...

*//
//சாதாமுக்கே இப்படியென்றால். அமேரிக்காவின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியா மாபெரும் தலைவர்கள் பற்றி என்னவிதமான முயற்சிகள் நடந்திருக்கும் என்பது கற்பனைக்கெட்டாத ஒரு விசயம்.

//
ஆழ்ந்த - நிதர்சன உண்மையை ஒப்பிட்டு விளக்கியது சிறப்பு.

மாபெரும் சதி என்ற புத்தகத்தின் பாதிப்பை மிண்டும் உணர முடிந்தது.
//*

புதிய காற்றின் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி,
அசுரன்

said...

சமீபத்தில்எழுதியுள்ளேன். தங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்
http://chella.info/webgypsy/archives/112

said...

"அய்யா.. ஒரு விசயத்தை புரிந்து கொள்ளவும் சீனாவின் புரட்சி ஒரு நாள் இரண்டு நாளில் நடந்து விடவில்லை சில பத்து வருடங்கள் தொடர்ந்து நடந்த ஒரு விசயம். குறீப்பாக மக்கள் மன்றங்களை கட்டியமைத்து எல்லா அரசு அதிகாரத்திலும் மக்களின் முழுமையான பாத்திரத்தை உறுதிப்படுத்திய ஒரு புரட்சி அது.

அதனால் அங்கு ஆட்சிக்கு வரும் ஒரு தலைமை மக்கள் விரோதமாக இப்படி அப்பட்டமாக வெல்லாம் நடந்து கொள்ள் முடியாது. அப்படி நடந்து கொண்டு ஆட்சியில் நிலைக்க முடியாது. ஒவ்வொரு பகுதி அளவிலும் மக்களின் கைகளீல்தான் அதிகாரமுள்ளது. இது சீனாவின் அந்த கால நிலைமைகளை நேரில் சென்று பார்த்து எழுதிய பல்வேறு முதலாளித்துவ அறிஞர்களின் கட்டுரைகளைப் படித்தால் தெரியும்(எழுதிய பலர் கம்யுனிசம் மாற்று என்று நம்பிக்கை இல்லாதவர்கள் என்பதை கவனத்தில் கொள்க)."

ஹய் அப்ப ஏன் அதே சதுக்கத்துல வச்சு 1990 30,000 பேரை கொன்னுகுவிச்சாங்க.?

said...

இது நடந்தது 1989-ல்(இறந்தவர் எண்ணிக்கை தவறு - 300 என்கீறது அரசு, 3000 என்கிறது செஞ்சிலுவை சங்கம்).

அதாவது இன்றைய முதலாளித்துவ சீனா ஆட்சி செய்த பொழுது.

இதற்க்கும் கம்யுனிசத்துக்கும் தொடர்பு கிடையாது என்பதையும், தற்போதைய சீன அரசு கம்யுனிச அரசு கிடையாது என்பதையும் பலமுறை கூறிய பிற்ப்பாடும் அதே பல்லவியை பாடுவதேன்..??


//Since 1978, Deng Xiaoping had led a series of economic and political reforms which had led to the gradual implementation of a market economy and some political liberalization that relaxed the system set up by Mao Zedong. By early 1989, these economic and political reforms had led two groups of people to become dissatisfied with the government..//

அதாவது முதலாளித்துவ பொருளாதார சீர்திருத்தங்களை செய்ததன் விளைவால் சீன சமூகம் பாதிக்கப்பட்டு அந்த பாதிப்புகளை(வேலையில்லாத் திண்டாட்டன் etc) எழுந்ததுதான் இந்த போராட்டம் என்று விக்கிபிடியாவில் உள்ளது.

ஆக, இங்கும் கூட தோல்வியடைந்தது முதலாளித்துவ பொருளாதார கொள்கைதான்.

இதற்க்கு முன்பு தியான்மென் சதுக்கம் பற்றி சில தவறான தகவல்கள் கொடுத்து விட்டேன். எனது நண்பர்கள் சிலருடன் அவசரமாக விவாதித்து(மெயிலில்) பதில் சொன்னதால் முன்பு தவறு செய்து விட்டேன். அது குறித்த எனது பார்வைகளை திருத்திக் கொள்கிறேன். நான் கற்றுக் கொள்ளும் மாணவன் தான் என்பதை மனதில் கொண்டு எனது தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.


அசுரன்

said...

அனானி சொன்னது,
"ஹய் அப்ப ஏன் அதே சதுக்கத்துல வச்சு 1990 30,000 பேரை கொன்னுகுவிச்சாங்க?"

அது மட்டுமல்ல அனானி,

இந்த ஃபலுன் காங் அதாவது நம்ம ஊர் "Art of Living" போல் ஒரு ஆன்மீக அல்லது "spiritual program" அப்படீன்னு வைத்துக் கொள்ளுங்களேன்..சீனர்களிடையே கொஞ்சம் பிரபலமாக தொடங்கின உடனே..பயந்துட்டங்க நம்ம சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள்...அதனால் அவங்க ரொம்ப நியாயமா falun gong புத்தகங்களை கொளுத்தி, அந்த முறையை பின்பற்றுவர்களை ஜனநாயக முறையில அடிச்சி தூள் கிளப்பிட்டாங்க
மேலெ ஸ்ரீதர் சொன்னது
"The short point is that all political models tried in human history have had a fair share of intolerance of dissent and associated violence.
But the saving grace is that democracies increasingly offer political space for dissent where as theocratic or communist models will deny this once in power while using and many times misusing this right available to them under the democratic dispensation."
இந்த மாறி செய்றவங்கதான் நம்ம கம்யூனிஸ்ட்கள்..மொத்தத்திலெ தெய்வப்பிறவிங்க/ரொம்ப நல்லவங்க இவங்க..

பாலா

said...

பாலா,

ரொம்ப அவசரப் படுறேள். அப்பயும் உங்க முதலாளித்துவ சமுதாயம்தான் அந்த கொடுமையைச் செய்ததாக வரலாறு உள்ளது. மேலே நான் கொடுத்த பதிலை மீண்டும் கொடுக்கிறேன்:

********
இது நடந்தது 1989-ல்(இறந்தவர் எண்ணிக்கை தவறு - 300 என்கீறது அரசு, 3000 என்கிறது செஞ்சிலுவை சங்கம்).

அதாவது இன்றைய முதலாளித்துவ சீனா ஆட்சி செய்த பொழுது.

இதற்க்கும் கம்யுனிசத்துக்கும் தொடர்பு கிடையாது என்பதையும், தற்போதைய சீன அரசு கம்யுனிச அரசு கிடையாது என்பதையும் பலமுறை கூறிய பிற்ப்பாடும் அதே பல்லவியை பாடுவதேன்..??


//Since 1978, Deng Xiaoping had led a series of economic and political reforms which had led to the gradual implementation of a market economy and some political liberalization that relaxed the system set up by Mao Zedong. By early 1989, these economic and political reforms had led two groups of people to become dissatisfied with the government..//

அதாவது முதலாளித்துவ பொருளாதார சீர்திருத்தங்களை செய்ததன் விளைவால் சீன சமூகம் பாதிக்கப்பட்டு அந்த பாதிப்புகளை(வேலையில்லாத் திண்டாட்டன் etc) எழுந்ததுதான் இந்த போராட்டம் என்று விக்கிபிடியாவில் உள்ளது.

ஆக, இங்கும் கூட தோல்வியடைந்தது முதலாளித்துவ பொருளாதார கொள்கைதான்.
**********


//The short point is that all political models tried in human history have had a fair share of intolerance of dissent and associated violence.
But the saving grace is that democracies increasingly offer political space for dissent where as theocratic or communist models will deny this once in power while using and many times misusing this right available to them under the democratic dispensation //


My Previous reply for this:

***
The written history of Human soceity is nothing but Class struggle - Marx. So there will be blood stain through out the human history. If look at these incident singularly you would conclude like this. There is a science behind the evolution of human society. Just try to understand what it is. With out understanding your soceity how come you would diagnose the problem and solution.

What do you mean by a democracy? representation by Majority. Just tell me where in India the majority is represented?. Regarding this also I have replied in this posting. Please read.

I have been talking about a Capitalist revolution deprived for India. Which has to be completed by Communists. So the revolution for India or Nepal or any other country like us is a capitalist revolution.
***

Current Reply:

சரி எல்லா செட்டப்பும் மக்கள் விரொதமா போகுதுன்னு சொல்ற நம்ம பாலா&CO, மக்கள் விடுதலைக்கு என்ன மாற்று செட்டப் சொல்றாருன்னு பாத்தாக்க கம்னு வாயப் பொத்திகினு இப்ப அனுபவிக்கிற அடக்குமுறைய கன்டினியு பன்னுன்னு சொல்றாரு.

இது மாதிரி, சில பேரு விவாதம் செய்ய அவிங்க தரப்புல ஒன்னும் இல்ல, வழியில்லைன்னாக்க எல்லாமே ராங்குப்பான்னு(Wrong) ஜகா வாங்குவாங்க. அவிங்களோட மேல் சட்டையை கிழிச்சுப் பாத்தா, ஆளும் வர்க்க முத்திரையை முதுகில் குத்தியிருப்பார்கள். இவரும் அப்படித்தான். :-))

எஸ்கேப் ஆகிறதுக்கு இது ஒரு வழி...

அசுரன்

said...

அசுரன் சொன்னது
"இது மாதிரி, சில பேரு விவாதம் செய்ய அவிங்க தரப்புல ஒன்னும் இல்ல, வழியில்லைன்னாக்க எல்லாமே ராங்குப்பான்னு(Wrong) ஜகா வாங்குவாங்க. அவிங்களோட மேல் சட்டையை கிழிச்சுப் பாத்தா, ஆளும் வர்க்க முத்திரையை முதுகில் குத்தியிருப்பார்கள். இவரும் அப்படித்தான். :-)) "

அசுரன்,

சட்டையை கிழிச்சு பாத்ததிலெ.
சட்டை கிழிஞ்சுதது தான் மிச்சம்.

ஆளுமாவது/வர்க்கமாவது.. நீங்க ஒண்ணு..
ஏதொ வண்டியை ஓட்டிட்டிருக்கேனுங்க
அம்புடுத்தேன்.

நீங்க சொன்னது புரிஞ்சதுங்கோ..
உண்மையான கம்யூனிச ஆட்சி, கொஞ்ச நாள் லெனின் அப்பறம் கொஞ்ச நாள் நம்ம மாவோ..அதுக்கபுறம் இனிமே அசுரன் ஆட்சிக்கு வந்தா தான் இது சாத்யம்..
சீக்கிரம் ஆட்சியை பிடிங்க.
நானும் உங்க ஆட்சியிலே ஆளும் வர்க்கமா ஆக முடியுமான்னு பாக்கறேன்.
என்ன, அப்ப நம்ம ராஜ் வனஜ் வந்து சட்டய கிழிச்சி நம்ம கையிலே பச்சையை குத்தி ஆளும் வர்க்கம்னு சொல்லி முதுகிலெ குத்து வுடுவாரு.
எல்லம் நம்ம ராசி..

பாலா

said...

அப்போ எஸ்கேப்பா?.... ஓகே.... பாலா.

தற்பொழுது உள்ள விவாதம், கம்யுனிச பொருளாதாரம் சரியா அல்லது ஏகாதிபத்திய பொருளாதாரம் சரியா என்பதுதான். அப்படியிருக்கையில் இதுவரை யாரும் கம்யுனிச பொருளாதாரம் அமுலப்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தில் சுரண்டல் இருந்ததாக நிருபிக்க வில்லை. மேலும் அந்த சமுதாயங்கள் அதி வேகமாக வளர்ந்ததையும் யாரும் மறுக்க வில்லை.

அவர்கள் அதற்க்கு நேரடியாக மறுப்பு தெரிவிக்க வழியின்றி ஏகாதிபத்திய பொருளாதாரத்திலும் வளர்ச்சி ஏற்ப்படுகிறது என்று பிழையான ஒரு புள்ளிவிவரத்தின் அடிப்படையில் விவாதம் செய்தனர்($செல்வன்). அதையும் நொறுக்கி அப்படியெல்லாம் இல்லை என்பதை நிறுவியாகிவிட்டது.

இந்த விவாதத்தின் ஊடாக முந்தைய கம்யுனிச சமூகங்கள் சுற்றிலும் ஏகாதிபத்திய சூழ்ச்சிகள், அந்த சமூகங்களிலேயே இருந்த உள் முரன்பாடுகளை தொடர்ந்து கையாள்வதற்க்கான தலைமையின்றி மீண்டும் முதலாளித்துவ, ஏகாதிபத்திய பாதைக்கு போய் சிரழிந்ததையும், இந்த விசயங்களையும் கூட மாவோ, லெனின், ஸ்டாலின் போன்றோர் முன்பே குறிப்பிட்டிருந்ததையும் இங்கு ஞபகப் படுத்துகிறேன்.

அதாவது, ஒரு நாட்டில் சோசலிசம் சாத்தியம், கம்யுனிசம் சாத்தியம் கிடையாது. சோவியத் ரஸ்யா, சோசலிச சீனா இரண்டிலும் முதலாளித்துவ மீட்சிக்கான சாத்தியம் எப்பொழுதுமே உள்ளது. இந்த அபாயம் உலகம் முழுவதும் சோசலிச புரட்சி முழுமையடையும் போதுதான் நீங்கும். அது வரை இந்த போன்ற அலைவடிவ தாழ்வும், எழுச்சியும் இந்த வரலாற்றுக் கட்டம் முழுவதும் இருக்கும் என்பதும் தவிர்க்க முடியாது, ஏனெனில் முந்தைய வேறெந்த புரட்சியை விடவும் இந்த புரட்சி மிகவும் புரட்சிகரமானது ஏனெனில் இது தனியுடைமை சுரண்டலுக்கு முடிவு க்ட்டுகிறது எனவே மிகக் கடினமான பாதையை கடந்தே நிறைவேறும், ஆனால் இது நிறைவேறும் என்பது தவிர்க்க இயலாததும், இதற்க்கு மாற்று என்பது இயற்கையுடனான் முரன்பாட்டிலும், மனிதர்களிடையேயான முரன்பாட்டிலும் ஏற்படும் மனித குல அழிவு என்பதும் - என்றும் அவர்கள் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளனர்.


இது தவிர்த்து கம்யுனிச நாட்டில் ஜன நாயக் அமைப்பு முறை எப்படி மேம்பட்டதாக் இருந்தது இருக்கும் என்பதையும் ஒரு பதிவில் விளக்கியுள்ளேன். பாலாவின் வார்த்தைகளின் நம்பகத்தன்மையை அங்கு சென்று படித்து புரிந்து கொள்ளுங்கள்

அசுரன்

Related Posts with Thumbnails