TerrorisminFocus

Tuesday, April 27, 2010

வினவை அவதூறு செய்யும் அராஜகவாதிகளின் புனிதக் கூட்டணி!!

மீபத்தில் சில வருடம் முன்பு, தோழர் தமிழச்சி தமிழ்மணத்தை தனது கோ(யோ)ணிக் கட்டுரைகளால் கதிகலக்கிக் கொண்டிருந்த காலகட்டம். அவரது கோ(யோ)ணிக் கட்டுரைகளால் கலவரமாகியிருந்த தமிழ்மணக் கலாச்சார காவலர்கள் குலாம் அவரை மொத்தமாகக் ‘குறி’வைத்துக் குமுறிக் கொண்டிருந்த நேரம் அது. அவரது உடல்மொழியைச் சார்ந்தே பல்வேறு அவதூறுகள், எதிர்வினைகள், கவிழ்ப்புகள் அரங்கேறின, ஆனால் இந்தக் குமுறல்கள் எல்லைமீறி அவரை பெண் என்று தனிமைப்படுத்தி வக்கிரமாகத் தாக்கும் எல்லைக்குச் சென்ற பொழுது தலையிடும் தேவை ஏற்பட்டது. ‘தமிழச்சியை விமர்சிக்கப் புகுந்த ஆணியத் தற்குறிகள்’ என்று ஒரு கட்டுரை அசுரனிலும், தோழர் ரயாகரனின் தமிழரங்கத்தில் சில கட்டுரைகளும் எழுதப்பட்டன.

அன்று தமிழச்சிக்கு எதிராகப் புனிதக் கூட்டணி சேர்ந்த அன்றைய பதிவர்கள் அவர் தமிழ்மணத்திலிருந்து வெளியேற்றப்படுவதையும் கடைசியில் சாதித்துக் காட்டினார்கள். அத்தனைக்கும் தமிழச்சியின் கட்டுரைகள் லீனாவினுடையதைப் போல கலவி, காமம், வரைமுறையற்ற புணர்ச்சி, உடல் அவயங்களை கிளர்ச்சிப் பூர்வமாக முன்னிறுத்துவது, மிக முக்கியமாக ஒடுக்குமுறைக்குள்ளான மக்களையும், போராடும் மக்களையும், புரட்சியாளர்களையும் ‘மட்டும்’ அவதூறு செய்யும் மோசடியான ஒன்றாக இல்லை. இன்னும் சொன்னால், தமிழச்சியை லீனாவுடன் ஒப்பிடுவதே வக்கிரமானது ஏனேனில், தமிழச்சியின் கட்டுரைகள் பெண்களின் பல்வேறு பிரச்சினைகள், மத பிற்போக்குவாதிகள் யோனிகளை எப்படியெல்லாம் புண்படுத்துகிறார்கள், பெண்ணடிமைத்தனம் என்று பல்வேறு விசயங்களைப் பேசின.

ஆயினும், அவர் வெளியேற்றப்பட்டார். அன்றைக்கு எம்மையும், தோழர் தமிழச்சியின் நண்பர்கள் சிலரும், முற்போக்கு பேசும் பதிவர்களும் தவிர யாருமே அவருடன் நிற்கவில்லை. புனிதக் ‘பசு’ பதிவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து அவர் மீது நடத்திய அராஜகம் அது. அவ்வாறு, அவரை வெளியேற்றக் ‘குறி’ பார்த்துக் கூட்டுச் சேர்ந்த அராஜகவாதிகள் இன்று லீனாவுக்காகவும் ஒன்று சேர்வது ஆச்சர்யமானதல்ல. அன்று, தமிழச்சியோ தனது யோனிக் கட்டுரைகளை யாரிடம் காட்டினாலும் பேசத் தயார் என்றுதான் சொன்னார். மக்கள் விரோதமாக இருந்தால் அல்லவா அவர் பயப்பட்டிருக்க வேண்டும்?

தமிழச்சியின் கருத்துரிமையை கொல்வதற்காக அன்று ஒன்று சேர்ந்தவர்களில் அய்யனார்-உண்மைத்தமிழன் போன்ற இன்றைய கருத்துரிமைக் காவலர்களும் அடங்குவர். அன்று, உண்மைத்தமிழன் அண்ணாச்சி எழுதிய பதிவு.

உண்மைத்தமிழன் இன்று லீனாவின் _காக எழுதியது ( இது கருத்துரிமைக்கான _ ),
@@@
ஆனால் என்ன எழுதுவது என்பது அவரது உரிமை. அவரது வலைத்தளத்தில்தான் அதனை எழுதியுள்ளார். இப்படித்தான் எழுத வேண்டும்.. இதை எழுதக்கூடாது என்று நாம் தடுக்க முடியாது. தடுப்பதற்கு உரிய அத்தாட்சியை கையில் வைத்திருப்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மட்டுமே.. இது அவருக்கு மட்டுமல்ல.. நமக்கும் பொருந்தும்.
@@@


உண்மைத் தமிழன் தோழர் தமிழச்சியை வெளியேற்றுவது சரி என்று அன்று எழுதியது,
@@@
இதற்கு முன்பேயே வீராங்கனையின் தோஸ்த்து கோயம்புத்தூர்காரர் ‘படங்களாக’ காட்டியபோதே தமிழ்மணம் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தால், இப்போதைய துரதிருஷ்டமான நிலை நமக்கு வந்திருக்காது. தமிழ்மண நிர்வாகம் அப்போதெல்லாம் சுண்டக்கஞ்சி குடித்துவிட்டு, குப்புறப்படுத்து தூங்கியதைப் போல் இருந்தது.. அதற்கெல்லாம் இப்போது பதில் இல்லை.
@@@

நியாயமாக இவர் தமிழச்சியிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும், விவாதம் செய்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யாமல் அறிவுரை வழங்கியிருக்கிறார் இந்த பெரிய மனிதர், அதற்கு அடங்காத பொழுது வெளியே போ என்று வன்முறையை ஏவியுள்ளார் இன்றைய கருத்துரிமை காவலர்.

அன்றைய புனிதக்கூட்டணியில் உ..த. அண்ணாச்சி:
@@
தமிழச்சியின் பதிவுகளை நீக்குக - தமிழ்மணத்திற்கு கோரிக்கை
@@

அன்று தமிழச்சியின் கருத்துரிமையைக் கொன்றொழிக்க ‘குறி’ப்பறிந்து புனிதக் கூட்டு சேர்ந்தவர்கள், இன்று லீனா என்ற XXXவாதி எழுதிய அவதூறு கன்றாவியை முன்னிறுத்தி மீண்டும் அராஜகவாதிகளின் புனிதக் கூட்டணியைச் சேர்த்துள்ளனர். போன முறை கலாச்சார போலீசாக கலாச்சாரத்தைக் (ஆணாதிக்கத்தை) காப்பற்றவும், இந்த முறை கன்றாவியை காப்பாற்றி புரட்சியாளர்களை அவதூறு செய்ய கருத்துரிமை என்ற பெயரிலும் கூட்டுச் சேர்ந்துள்ளனர். அன்று அவர்களின் அநீதியான நடவடிக்கையை நியாயம் என்று சொன்னவர்கள், இன்று ம.க.இ.க.வினரின் நீதியான நடவடிக்கையை அராஜகம் என்கிறார்கள். அன்று தமிழச்சியின் யோனி இலக்கியத்துக்காக தோழர்கள் நின்றோம், இன்று லீனாவின் யோனி இலக்கியத்துக்காக அராஜகவாதிகள் நிற்கிறார்கள். ஆக, விசயம் யோனியல்ல, அது யாருடையது என்பதிலும், என்ன வகையானது என்பதிலும் தான் பிரச்சினையே. அராஜகவாத புனிதர்களில் சில வகைமாதிரிகளை(குறிப்பாக உண்மைத்தமிழன்) மட்டும் பார்த்தாலே ஒட்டுமொத்தமாக அவர்களைப் புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கும். உ.தவைப் பார்த்தோம் அடுத்து அய்யனார்,

அய்யனார் இன்று லீனாவுக்காக:
@@லீனாவின் இரண்டு கவிதைகளுக்கும் எதிரான விமர்சன அர்ச்சனைகளும் வினவின் அதே பதிவில் எழுதப்பட்டிருந்தது. அந்த அர்ச்சனைகள் பெண் எழுத்தால் எழுந்த பதட்டங்களாகத் தோன்றியதே தவிர அறிவு தளத்தினூடான விமர்சனமாக எனக்குப் படவில்லை.
@@

லீனாவின் கவிதைக்கு எதிரான வினவின் கருத்தை மேலே உள்ளவாறு பதட்டமான எழுத்து என்று எழுதியுள்ள அய்யனார் என்ற நல்லவர். தோழர் தமிழச்சிக்கு எதிராக உதிர்த்துள்ள முத்துக்கள் கீழே உள்ளன. அவை பெண் எழுத்துக்கெதிரான பதட்டமா என்று எனக்குத் தெரியவில்லை. லீனாவிடம் இருப்பது தமிழச்சியிடம் என்ன மிஸ்ஸிங்க் என்றும் தெரியவில்லை. ஒருவேளை தமிழச்சி அய்யனாரின் பார்வையில் பெண்ணாகவே தெரியவில்லையோ என்னவோ?

அய்யனார் என்று கருத்துரிமை காவலர் அன்று தமிழச்சியை எதிர்த்து எழுதிய பதட்டமான எழுத்துக்கள்:

@@பொழுது போவலன்னா கும்புதல், குறி பார்த்து சுடல், இப்படி புச்சு புச்சா கும்பு வார்த்தைகளை லக்கி அன்ட் கோ கூட சேர்ந்து கண்டு புடிங்கோ ... அட அவிங்களும் ஆட்டைக்கு வரலன்னா கும்மில ஒரு பதிவு போட்டு பகுத்தறிவு கும்மி அடிப்போம் நானும் வர்ரேன்.. அண்ணாச்சி, குசும்பன், கதிருன்னு மக்க எல்லாரையும் கூட்டிகினு வர்ரேன் தயவு செய்ஞ்சி இந்த மாதிரி உணர்வுபூர்வமான வெசயங்களோட உங்க பொரட்சி கள புகுத்தாதீங்க..

எவ்ளோ கஷ்டபட்டு அடக்கிபாத்தேன் தமிழச்சிக்கா ஆனா முடியல.. கொட்டிட்டேன்..செல்லா ஒங்களுக்கு மேட்டர் கெடச்சிடுச்சி நீங்க ஆரம்பிக்கலாம்..
@@

அத்தனைக்கும், சிங்கள இன வெறியர்கள் ஈழத் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதை குத்திக் காட்டிய ஒரு தமிழச்சியின் கவிதைக்குத்தான் அய்யனார் மேற்படி எதிர்வினை செய்துள்ளார். ஆனால், லீனாவின் யோனி கன்றாவியோ அல்லது சங்கரசுப்பிரமணியனின் கன்றாவியோ சமூக அக்கறையை விடுங்கள், குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இன்றி போராடுபவர்களை வக்கிரமாக சித்தரித்து எழுதின. அதற்கு வக்காலத்து வாங்குகிறார் இந்த அராஜகவாதி.

வினவு மீதான அய்யனாரின் அவதூறுகள் அல்லது அராஜகங்கள்:
அவதூறு1:
@@
மேலும் கவிதையை வைத்தே பெண்ணை அலைபவளாக நிறுவ முயல்வது வன்முறையாகத்தான் தோன்றியது.
@@

வினவு அவ்வாறெல்லாம் நிறுவ முயலவில்லை. வினவை இவர் படிப்பதேயில்லை போலருக்கு, அல்லது பிரதியை இவருக்கேற்ப வாசிப்பு செய்கிறாரோ என்னவோ. வினவு, லீனாவினுடைய மொழி நடையை அப்படியே திருப்பிப் போட்டு கவிழ்ப்பைச் செய்திருந்தது. பின்நவீனத்துவத்தில் இது அலவ்டுதானே? ஓ.. அவர்களுக்கு மட்டுமே அலவ்டு என்ற ரகசிய சட்டவிதி இருப்பதை மறந்துவிட்டேனோ?

அவதூறு2:
@@தன்னுடைய மதம், தான் நம்பும் கடவுள் இவ்விரண்டிற்கும் எதிராக ஒரு சிறு அசைவைக் கூட பொறுத்துக் கொள்ள இயலாத வெறியாளர்களைப் போலத்தான் இச் சித்தாந்த வாதிகளும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.@@

சங்கர சுப்பிரமணியன் பிரச்சினை என்னவென்றே தெரியாமல் தீர்ப்பு எழுதுகிறார் இந்த அவதூறு மன்னன். ஈராக் மக்களை கேவலப்படுத்தி எழுதியது நாங்கள் நம்பும் கடவுளை கேவலப்படுத்திய எழுதியதாக அய்யனாருக்கு புரிகிறது என்றால் அவர் இயங்குவது அறிவுத்தளமா அல்லது அறியாமைத்தளமா அல்லது அக்கறையற்ற போலி மேட்டிமைத்தளமா என்பதை அவரே சுயபரிசீலைனை செய்து கொள்ளட்டும்.

அய்யனாரும் சரி பலரும் சரி லீனா கூட்டத்தில் நடந்தது என்னவென்று உண்மைத்தமிழன் பதிந்து வைத்துள்ளதை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பு எழுதியுள்ள நிலையில் அதனை/அவரைக் கொஞ்சம் விரிவாகப் பார்த்து விடுவது சரி என்று கருதுகிறேன். அதற்கு முன்பாக சில கொசுறு கேள்விகளை கவனிப்போம். படைப்பும், பிரதியும், படைப்பாளனும் வேறு என்ற பின்நவீனத்துவ மொள்ளமாறித்தனங்களில் எமக்கு நம்பிக்கை கிடையாது.

அ. மார்க்ஸின் சிஸ்யப் பிள்ளை சுகுணா திவாகர் தனது பினாமி (திருத்தம்: பினாமி என்ற கருத்து வாபஸ் வாங்க்கப்பட்டுள்ளது) தியாகு மூலம் முன்னிறுத்திய மிக அறிவுப்பூர்வமான கேள்வி, லீனா எழுதியதை மக்களிடம், பக்கத்து வீட்டுக்காரனிடம் காட்டுவேன் என்று சொல்லும் ம.க.இ.க. தோழர்கள், அதே போல அவர்களை நக்சல்பாரிகள் என்று பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சொல்வதை(போட்டுக் கொடுப்பதை) ஏற்றுக் கொள்வார்களா? என்று கேட்டுள்ளார். அவரது பின்நவீனத்துவ மூளைக்கு எட்டிய அல்பத்தனமான கேள்வி இது ஒன்றுதான். புரட்சியாளர்களை காட்டிக் கொடுப்பது சமூகவிரோதியின் வேலை, மக்கள் விரோதியை, பொறுக்கியை காட்டிக் கொடுப்பது முற்போக்குவாதிகளின் வேலை. சுகுணா மற்றும் அவரது பினாமி (திருத்தம்: பினாமி என்ற கருத்து வாபஸ் வாங்க்கப்பட்டுள்ளது) தியாகு ஆகியோர் சமூகவிரோதிகள், ம.க.இ.க. முற்போக்குவாதி என்பதே இவர்களின் கேள்வியிலிருந்து பெறப்படும் முடிவு. லீனா என்ற பொறுக்கியை மக்களிடம் அம்பலப்படுத்தினால் நாம் லீனாவின் எதிரி. புரட்சிக்காரர்களை ஒருவர் காட்டிக் கொடுத்தால் அவர் புரட்சிக்காரர்களின் எதிரி. சுகுணா திவாகர் இந்த இரண்டில் கடைசி வேலையே சிறந்தது என்று கருதுவது அவரது பின்நவீனத்துவ கட்டுடைப்புக்குப் பொருத்தமாகவே இருக்கும். லீனாவின் எதிரியாக இருப்பதை விட புரட்சியாளர்களின் எதிரியாக இருப்பதே அவருக்கும், பினாமி(திருத்தம்: பினாமி என்ற கருத்து வாபஸ் வாங்க்கப்பட்டுள்ளது) தியாகுவுக்கும் உவப்பானதாக இருக்கும் எனில் யார் என்ன செய்ய முடியும்? இவ்வாறு ஒப்புமை செய்வதன் மூலம் அவர்கள் என்ன நிறுவ விரும்பினார்கள் என்பது பின்நவீனத்துவத்துக்கே வெளிச்சம்.

இன்னொரு புத்திசாலித்தனமான கேள்வி இந்துக் கடவுளர்களை இது போலத்தானே அவமானப்படுத்தினீர்கள் அப்பொழுது எங்களுக்கு கோபம் வந்து கலகம் செய்யலாமா? என்று சந்தடி சாக்கில் கேட்கப்பட்டுள்ளது. கேட்டது உண்மைத்தமிழன் அண்டு அதியமான் அண்ணாச்சி. முற்போக்குவாதிகளின் கூட்டத்துக்கு வந்து கலகம் செய்யுங்க, கேள்வி கேளுங்க பதில் சொல்றோம்('எல்லா'வகையிலும்). பேரூந்துகளிலும், ரயில்களிலும் பல வருடங்களாக ம.க.இ.க. தோழர்களும், பெரியார் தி.க.வினரும் தனியாகத்தானே இந்தக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள்? பேசுகிறார்கள்? விவாதிக்கிறார்கள்? யாருக்கும் பயப்படவில்லையே? மக்களிடம் செல்வதா அய்யோ, அவிங்களுக்கு அறிவுகம்மி அடிச்சுப் புடுவாங்க என்று மேட்டுக்குடி லும்பன்களைப் போல அவர்கள் ஒன்றும் பயப்படவில்லையே?

இன்னொன்று கம்யூனிசத் தலைவர்களை விமர்சிக்கக் கூடாது என்று வினவு சொன்னது போல சிலர் திரிக்கிறார்கள்(அதியமான் அவ்வாறு திரிப்பவர்களில் முதன்மையான பொய்யர்). வினவு தளத்தில் கம்யூனிசத்தை விமர்சித்து, கம்யூனிசத் தலைவர்களை விமர்சித்து எத்தனை விவாதங்கள், அவதூறுகள்? அதியமான் வினவில் எழுதியதில் 90% இதுதான். அவர் மீது இந்த அம்சத்தில் கோபம் கொண்டு திட்டத் தொடங்கிய தியாகுவை(கார்ல்மார்க்ஸ் என்ற முகமூடிப் பெயரில்) விமர்சனம் செய்து அதியமானின் கருத்துரிமைக்கு துணை நின்றது வினவு. தமிழ்மணத்தில் கம்யூனிசத்தின் மீதும், கம்யூனிசத் தலைவர்கள் மீதும் நிகழ்த்தப்பட்ட ஒவ்வொரு தாக்குதலும் கருத்துப் பூர்வமாகவே எதிர்கொள்ளப்பட்டுள்ளது. யார் வீட்டுக்கும் ஆள் அனுப்பப்படவில்லை. ஆனால், லீனாவினுடையது கருத்துக்கள் அல்ல, அவை கம்யூனிசத் தலைவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையே யோனி தேடி அலையும் ஆண்குறிகளாகச் சித்தரிக்கும் புளுபிலிம் ஆகும். அது ஒரு வன்முறை ஆகும். புளுபிலிமை, அது உருவாக்கும் சமூக வன்முறையை தோழர்கள் எப்படி எதிர் கொள்வார்கள் என்பதை அராஜகவாதி உண்மைத்தமிழன் தனது பதிவில் பதிவு செய்துள்ளார் (அவருக்கு ஆத்திரம் என்னடா புளுபிலிம் போடுற தியேட்டரை தோழர்கள் உடைச்சுட்டாங்களே, அராஜகவாதிகள் , என்று ஒரே புலம்பல்ஸ்).

அத்தனைக்கும் லீனா ஒரு புளுபிலிம் தரகர் என்ற போதும் ம.க.இ.க. நியயமாகவே கேள்வி கேட்டுள்ளனர். ஆனால், இதையே கருத்துரிமைக்கெதிரானதாக திரிக்கிறார்கள் உண்மைத்தமிழனும்-அய்யனார் அண்டு கோவும். அராஜகவாதிகள் உண்மைத்தமிழனும், அய்யனாரும் வேண்டுமானால் தமது வீட்டாரை புளுபிலிமில் சித்தரித்து எடுப்பவனிடம் சென்று அஹிம்சை பேசி விளக்கம் கேட்கும் உயர்ந்த உள்ளம் படைத்தவர்களாக தங்களைக் காட்டிக் கொள்ள முயலாலாம். புரட்சியாளர்களுக்கு அவ்வாறு சுயமாரியதை விற்று நடித்து நல்லவன் பட்டம் வாங்க வேண்டிய அவசியமில்லை.

ஓவர் டூ உண்மைத்தமிழன்,

லீனா கூட்ட நிகழ்வுகள் குறித்து உண்மைத்தமிழன் ‘சோ’த்தனமாகக் காட்சிகளைச் சித்தரிக்கும் விதம்,

@@“பேசணும் ஸார்.. கொஞ்சம் சந்தேகம் இருக்கு ஸார்.. கண்டிப்பா பேசியே ஆகணும் ஸார்.. கொஞ்சம் தயவு பண்ணுங்க ஸார்..” என்று முதலில் நாகரிகமாகத்தான் ஆரம்பித்தது வினை.@@

@@'நயமான, நாகரிமான' கேள்வியை எழுப்ப.. அதைக் கேட்டு அதைக் கேட்டு சட்டென்று உஷ்ணமான லீனா ஏதோ சொல்லிக் கொண்டே முன்னால் வர..@@

லீனாவிடம் நயமாக கேட்க்கப்பட்ட கேள்வி என்னவென்று எழுத
வேண்டியதுதானே உ.த. சார்? வினவு எழுதியுள்ளதே? வினவைத் தவறாகச் சித்தரிக்கத் தேவையானதை விலாவாரியாகவும், எதிர்தரப்பை ஏதோ செஞ்சுட்டாங்க என்பது போல காட்டி நல்லவர்களாக்கத் தேவையானதை சுருக்கமாகவும், பூடகமாகவும் எழுதும் இந்த நரித்தனம் ஒன்றுதான் உண்மைத்தமிழனின் ஒரே பலம் போலும். மேலும், லீனா அடிக்க வந்தார், இடையில் ஒரு தோழர் புகுந்து அதை மட்டுப்படுத்த பலரும் இடையில் புகுந்து சீரமைக்க அடிதடி தவிர்க்கப்பட்டது. ஆனால், உ.த. எழுதியுள்ளதோ லீனா முன்னால் வந்தாராம். எதுக்கு வந்தார்? தோழர் கேட்ட கேள்வி சரியாகக் காதில் விழவில்லையென்று திரும்ப கேட்பதற்கு வந்தாரா?

உண்மையில், ம.க.இ.க. கேட்டிருந்த கேள்வி,
“’கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம் முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது”’

லீனாவினுடைய எழுத்துக்களிலிருந்துதான் இந்த கேள்வியும் தயாரிக்கப்பட்டது எனும் போது அதற்கேயுரிய உடல்மொழி தவிர்க்க முடியாததே.

மீண்டும், உ.த.
@@அவர் பேசி முடிக்கின்றவரையில் அமைதி காத்த தோழர்கள் மறுபடியும் எழுந்தார்கள்.. இம்முறை ஆதரவுக் கூட்டத்தில் இருந்து ஒருவர் ஆவேசமாகப் பேச பதிலுக்கு இவர்களும் ஆவேசமாகப் பேச கனன்றது அரங்கத்தின் சூழ்நிலை..@@

@@இந்த நேரத்தில் ஆதரவுக் கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் 'டா' போட்டு பேச.. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்பதைப் போல பிடித்துக் கொண்டார்கள் தோழர்கள்.@@

ஆதரவுக் கூட்டத்தில் இருந்தவர்களுக்கு திட்டுவதற்கு உரிமை உண்டு என்று சொல்ல வருகிறார் உண்மைத்தமிழன். அயோக்கியத்தனத்தையும் செய்துவிட்டு, திட்டவும் செய்வானாம் நாம் அமைதியாக வரவேண்டும் என்பது உண்மைத்தமிழனின் எதிர்பார்ப்பு. அப்படியெல்லாம் வரமுடியாது. மேலும், அவர் சொல்வது போல வெறும் ‘டா’ போட்டு மட்டுமல்ல, வசவுகளும், திட்டுகளுமே ம.க.இ.கவினரை பார்த்து நிகழ்ந்தன.

@@ ஆனாலும் நமது தோழர்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தொண்டை கிழிய கத்திக் குவித்துவிட்டு, தயார் செய்து கொண்டு வந்திருந்த கோஷங்களையும் எழுப்பிவிட்டுத்தான் வெளியேறினார்கள். அவர்களுடன் வந்திருந்த பெண் தோழியர்கள் லீனாவையும், அவரது ஆதரவாளர்களையும் திட்டியதை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அதேபோலத்தான் தோழர்களும்..@@

அதாவது தோழர்களின் கத்தல்கள் மட்டுமே உ.த.வின் காதில் விழுந்துள்ளது எனில் அவர் நல்ல மனநல மருத்துவரை அனுகுவது நல்லது. லீனாவின் அடிபொடிகள் சலம்பியை எதுவுமே அவர் காதில் விழவில்லையெனில் அந்த வார்த்தைகள் எல்லாம் உ.த.வின் காதில் தேனாக பாய்ந்துள்ளது என்றே பொருள்.

உ.த.வின் உளறல்களை அம்பலப்படுத்தி அவரது தளத்தில் வந்த பின்னூட்டங்களுக்கு அவரது எதிர்வினை,

@@
[[[கிருஷ்ணமூர்த்தி said...

இங்கே பிரச்சினையே, சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பதை ஆளுக்காள், அவரவர் சௌகரியங்களுக்கேற்றபடி புரிந்து கொண்டிருப்பதுதான்!

Your freedom ends where my nose begins என்பதாக ஒரு விவரணையும்கூட உண்டு!

கருத்துச் சுதந்திரம் என்பது என்னவாக, எப்படிப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது உங்களுடைய கருத்தாக இருந்தால், உங்கள் வாதப்படியே, லீனா அண்ட் கம்பனிக்குத் தங்கள் கருத்தை அவர்களுக்குத் தெரிந்த உபரி மயிர் வார்த்தைப் பிரயோகத்தில் சொல்ல உரிமை இருப்பது போலவே, வினவு தளத்துக்கும் அவர்கள் வழியில் கலகத்தைத் தோற்றுவிப்பதும் சரியானதே!]]]

உ.த.அண்ணாச்சி: எப்படி ஸார்..? லீனா எழுத்தில்தான் தனது கருத்தைப் பதித்தார். வினவு அண்ட் கோ..?
@@

அடிக்க வந்தது லீனா, வினவு தனது கருத்துக்களை கடைசி வரை கருத்துக்களாகத்தான் பதிவு செய்துள்ளதை உ.த.வின் பதிவும் பதிவு செய்துள்ளது. ஆனாலும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது கருத்து உ.த.வின் மொத்த பதிவையும் ஒன்றுமில்லாமல் செய்கிறது என்றவுடன் இப்படி டுவிஸ்டு செய்கிறார் மிஸ்டர் உண்மை.

மேலும், ம.க.இ.க. அனுகுமுறை சரி என்று சொன்ன ஒருவரை ம.க.இ.க.வின் பி.ஆர்.ஓ.வா என்று கேட்கிறார் உ.த. இவரென்ன லீனாவின் பி.ஆர்.ஓ.வா?.


@@
[[[அந்தக் கூட்டத்தை நடத்திய அமா பத்தி உங்களுக்க தெரியாது. எழுதுனா இந்து மக்கள் கட்சியும் ம•க•இ.க.வும் ஒன்னுன்னு கூட்டம் போடுற•.. ஏம்பா ன்னு கேக்க வந்தா பேச விடமாட்ட•.. எங்க அம்மாவ தேவடியான்னு சொல்லுவ கேக்க வந்த உனக்கு ஜனநாயகம் இருக்கும்ப•.. என்னப்பா நியாயம்]]]

உ.த.அண்ணாச்சி: அ.மார்க்ஸ் பற்றி வெளியுலகில் எந்த அளவுக்குத் தெரியுமோ அது அளவுக்குத்தான் எனக்கும் தெரியும்.. இந்த இடத்தில் அவரது முந்தைய செயல்பாடுகளை பற்றி நாம் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்..?
@@

அதாவது, ம.க.இ.க.வைப் பற்றி பேசும் போது மட்டும் எல்லா எஸ்டிடியும்(ஹிஸ்டரியும்) பேசுவார் மிஸ்டர் உண்மை. ஆனால், ம.க.இ.க. மட்டும் இளிச்சவாயன் மாதிரி அ.மார்க்ஸ்,லீனாவினுடைய முந்தைய நடவடிக்கைகளை சுத்தமாக மறந்துவிட்டு புதிதாக எல்லாம் செய்ய வேண்டும் என்கிறார் இந்த ‘சோ’க்கால்டு உண்மைத்தமிழன்.

உ.த.வின் மழுப்பல்ஸ்,
@@[[[ஏழர said...

''கம்யூனிசத்தையும் கம்யூனிஸ்டுகளையும் இழிவு படுத்தி லீனா எழுதியிருக்கிறார். அவருக்கு சி.பி.ஐ, சி.பி.எம் முடன்தான் நெருக்கம் அதிகம். எனவே இவ்வாறு அவரை எழுதத் தூண்டிய அனுபவத்தை அவர் கூறினால் நல்லது”

இதுதான் அதியமான் அந்த கேள்வி. இது தொடர்பான வினவின் பதிவு
http://www.vinavu.com/2010/04/17/pala-rising/]]]

உ.த.அண்ணாச்சி: கோபம் வராம என்ன செய்யும்..? நீங்கள் நேரில் கேட்டதால் அவரும் நேரிலேயே தனது கோபத்தை வெளிக்காட்டிவிட்டார்..

எழுத்தில் செய்திருந்தால் அவரும் எழுத்தில் தனது ஆவேசத்தைக் காட்டியிருப்பார்..!

இதிலென்ன தவறு..?@@

லீனாவுக்கு நேரில் கேட்டால் கோபம் வரும் எங்களுக்கு எழுத்தில் படித்தால் கோபம் வரும். கோபம் வருவதில் கூட சீமாட்டிக்குத்தான் உரிமை உண்டு எனஜ் ஜொள்ளுகிறார் உ.த.


@@
[[[ஏழர said...
ம்கஇக செய்த 1000 விசயங்களை விடுத்து, லீனா மேட்டர் கிடைத்தவுடன் அராஜக கம்யூனிசம் என்று முடிவுக்கு வந்து எழுத முடிந்த உங்களால் தீபக்கை லீனாவும் சோபாவும் அடித்ததை வைத்து அவர்கள் மேல் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறீங்க பாருங்க. அடடா. அதுதான் சார் உண்மைத் தவிப்பு!!!]]]

ஏழர அண்ணே..!

இதுக்கு மேல அந்த விஷயத்துல என்ன எழுதுறது..? நீங்களே சொல்லுங்க.. தெரிஞ்சுக்குறேன்..!@@

ஏன், அழையா விருந்தாளியாக கூட்டத்துக்குப் போகிறாய்? என்பது இன்னொரு வாதம். லீனா ஆதரவு அராஜகவாதிகளின் இந்தக் கூட்டம் ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாக வினவை குறிவைத்தே தயாரிக்கப்பட்டது. மேலும், வினவு குறிப்பிட்டது போல “இ.ம.கட்சி, ம.க.இ.க, வினவு தளம் ஆகியோரை இணைத்து லீனா ஏற்கெனவே எழுதியிருந்ததார். இதையே குமுதம் கட்டுரையிலும் குறிப்பிட்டிருந்தார்”.

‘இணையத்தள அராஜகம்’, ‘இடது தீவிரவாதம் பேச மட்டும் செய்யும் சிறு கும்பல்’ போன்ற சொற்றொடர்கள் வினவை நேரடியாகக் குறிப்பிட்டு வம்பை விலைக்கு வாங்கப் பயப்படும் வகையில் பூடகமான, அயோக்கியத்தனமான சொல்லாடல்கள் பயன்படுத்தப்பட்டன. சரியாகச் சொன்னால் உண்மைத்தமிழன் பாணி சொல்லாடல்கள் அவை. அ.மார்க்ஸும் பலரை வினவைக் குறிப்பிட்டே கூட்டத்திற்கு அழைத்துள்ளார். மேலும், கூட்டம் குறித்த கீற்றுவில் வெளிவந்த அழைப்பிதழில் முதல் பேராவிலேயே ‘இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது’ என்று வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. ஆஹ, உண்மைத்தமிழன், அய்யனார் ஆகியோர் வீட்டார் விபச்சாரம் செய்வதாக ஒரு கவிதை அதை எதிர்த்து அதே மொழியில் அவர்கள் பேசினால் அவர்களை அராஜகவாதிகள் என்று கண்டித்து ஊர் பெரியமனுசங்க எல்லாம் கூட்டம் போடுவானுங்க. அதைக் கண்டிக்காமல் அமைதியாக இருக்க வேண்டும், விளக்கம் கேட்க வேண்டும், மறுநாள் அங்கு அதே போல கூட்டம் போட வேண்டும் என்று உண்மைத்தமிழனும், அய்யனாரும் நியாயம் பேசுவார்கள். அவர்களது வீட்டில் இதே போலச் சொல்லிப்பார்க்கட்டும், அதற்குப் பிறகு அங்கு நிகழும் குடும்ப அராஜகமே அவர்களுக்குச் சரியானதைத் தேர்ந்தெடுக்கக் கற்றுக் கொடுக்கும். என்ன செய்ய புரட்சியாளர்கள் மானங்கெட்டவர்கள் அல்லவே? ஒருவேளை உ.த.வின் குடும்பத்தாருக்கு அவ்வாறு நிகழ்ந்தால் உண்மைத்தமிழன் அண்ணாச்சி வழக்கமாக தான் விண்ணப்பிக்கும் முருகனுக்குப் பதிலாக போலீசைக் கூப்பிடவும் வாய்ப்புள்ளது(தமிழச்சியை மிரட்ட தமிழ்மணத்திற்கு விண்ணப்பித்த கருத்துரிமைக்காவலர்தானே இவர்). ஏனென்றால் போலீசுக்கு அராஜகம் செய்யும் உரிமை உண்டு என்று நம்பும் சோவின் சீடர்தானே அவர்.
லீனாவுக்கு மட்டுமே பம்மி பதுங்கும் இந்தக் கருத்துரிமை காவலர் சதாரண மக்களின் சில்லரைத் தவறுகளுக்கு எதிராக பிரயோகித்துள்ள அராஜகங்களில் ஒன்றை பார்ப்போமா? சினிமாத் தியேட்டரில் கள்ள டிக்கெட் விற்பவர்களுக்கு எதிராக அண்ணன் உ.த.வின் அராஜகம்.

@@@நான் அவருடன் வாக்குவாதம் செய்வதைப் பார்த்தபடியே இருந்த ரவுடிகள் கூட்டம் தூரத்தில் இருந்தே என்னை கவனித்தபடியே இருந்தார்கள். எனக்கு என்ன வேகம் வந்ததோ தெரியவில்லை. சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்து கத்திக் குவித்துவிட்டேன். "எல்லாம் உங்களாலதாண்டா.. ஒருத்தனாவது உதவிக்கு வர்றீங்களாடா..? காசு இருக்குதுன்னு நிறைய பேரு அள்ளி வீசுறதாலதான் அவன் கொள்ளையடிக்கிறான். ஏண்டா நாய்களா கொடுக்குறீங்க?" என்று கத்தினேன்.(இந்த வாரம் முழுக்கவே ரொம்ப டென்ஷனா இருக்கு) கூட்டம் வேடிக்கைதான் பார்த்ததே ஒழிய.. உதவிக்கு வரவில்லை..@@@

@@@அண்ணன் கமல் வெடிகுண்டுகளை ஒவ்வொரு இடத்திலும் வைக்கும்போது இந்தத் தியேட்டரிலும் அப்படியொரு குண்டை வைக்கக் கூடாதா என்றுதான் எனக்குத் தோன்றியது.@@@

தியேட்டரில் டிக்கெட் பிளாக்கில் விற்கும் அநியாயத்துக்கே உ.த. அண்ணாச்சிக்கு இவ்வளவு கோபம் வருகிறது. அவரை யாராவது சினிமாவுக்கு வா என்று கூப்பிட்டார்களா? அல்லது கள்ளடிக்கெட்டில் பார் என்று கூவி அழைத்தார்களா? கவுண்டரில் டிக்கெட் இருந்தால் பார், இல்லையெனில் என்னைக்கு கிடைக்கிறதோ அன்று வந்து பார். இதுவே அவரது கருத்துரிமை கோட்பாட்டின் படி சரியான நடைமுறையாக இருக்க முடியும். ஆயினும், நம்ம அண்ணாச்சி, அங்கு சென்று போலீசுக்காரரையும், டிக்கெட் விற்றவர்களையும் திரும்பத் திரும்ப தொந்தரவு செய்துள்ளார், பிறகு யாரும் எதுவும் செய்யாமலேயே(ஒருத்தனும் அவரை கண்டுகொள்ளவில்லயென்றவுடன்) அவரது கோபம் உச்சத்துக்குச் சென்று 'டேய்' 'போய்' என்று சுற்றியிருந்தவர்களை கத்தி அவதூறு செய்து ரவுடியிசம் செய்துள்ளார். குண்டு வைத்து அவர்களைக் கொல்ல வேண்டும் என்றும் விருப்பபட்டு பயங்கரவாதியாக மாறியுள்ளார். ஆனால், ம.க.இ.க.வினரோ லீனா கூட்டத்தில் அமைதியாகவே கேள்வி கேட்டுள்ளனர், லீனா கும்பல் திட்டத் தொடங்கிய பிற்பாடே ஆக்ரோசம் அடைந்து பதிலுக்குத் திட்டியுள்ளனர். இத்தனைக்கும் ம.க.இ.க. கோபம் கொண்டதோ சமூகப் பிரச்சினைக்கு ஆயினும் இவர்கள் கருத்தில் அது அராஜகவாதம். உண்மைத்தமிழன் போன்றோரின் சினிமா டிக்கெட் பிரச்சினையோ ஜனநாயகவாதம். அடப் போங்கப்பா.. முருகன் ஏன் கோவனத்தோடு பழனியில் குந்தியிருக்கான் என்று இப்போதான் தெரியுது. உ.த. மாதிரி பக்தர்களின் சல்லை தாங்கமால்தான் கோவணமாவது மிஞ்சட்டும் என்று அங்கு போய்விட்டான்.

@@ஆனாலும் நமது தோழர்கள் தங்களது எதிர்ப்புக்களைத் தொண்டை கிழிய கத்திக் குவித்துவிட்டு, தயார் செய்து கொண்டு வந்திருந்த கோஷங்களையும் எழுப்பிவிட்டுத்தான் வெளியேறினார்கள். அவர்களுடன் வந்திருந்த பெண் தோழியர்கள் லீனாவையும், அவரது ஆதரவாளர்களையும் திட்டியதை காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. அதேபோலத்தான் தோழர்களும்@@

மொத்தத்தில் அங்கு கெட்டவார்த்தை பேசியது கத்தியது எல்லாம் ம.க.இ.க.வினர் மட்டுமே, லீனா தரப்பினர் அமைதியாகவே (சிலர் உணர்ச்சிவசப்பட்டு 'டா' என்று சொன்னது தவிர்த்து) இருந்தனர், லீனா சும்மா ஓடிப்பார்த்தார், தோழர்களோ கொலை வெறியோடு பாய்ந்தனர், என்று உண்மையை உள்ளபடியே பதிவு செய்துள்ளார் உண்மைத்தமிழன். இன்னொன்றையும் அவர் சேர்த்துச் சொல்லியிருக்கலாம், லீனா தரப்பினரை அடித்து, துவைத்து காயப்போட்டு, வெளியே அனுப்பிவிட்டு கூட்டத்தை ம.க.இ.க. மொத்தமாகக் கைப்பற்றிக் கொண்டது என்று. எதுக்கு சார் பெயரில் தேவையில்லாமல் 'உண்மை'யை வைச்சிருக்கீங்க? பெசாம எடுத்துடுங்க எல்லாம் வல்ல முருகப்பெருமானாவது பிழைத்துப் போகட்டும்.

வினவு மீதான உண்மைத்தமிழனின் ஆத்திரத்திற்கு காரணங்களில் ஒன்று புளுபிலிம் தியேட்டரை உடைத்து அவரது எண்டெர்டெயின்மெண்டுக்கு ஆப்பு வைத்தது என்பதாகக் கருதலாம் (எனது கருத்துச் சுதந்திரம்) எனில், இன்னொரு காரணத்தையும்(அவருக்கு மட்டுமல்ல அய்யனார், சுகுணா, அ.மார்க்ஸ் உள்ளிட்ட பல அராஜகவாதிகளுக்கும் இதுவே பயமுறுத்துகிறது) சுட்டுகிறார், பின்வருமாறு, அவரது ‘இனிய நண்பர்’ சங்கராமசுப்பிரமணியனுக்கு நிகழ்ந்த அனுபவத்தை கூறுகிறார். ‘இனிய நண்பர்’ என்ன செய்தார்? என்ற கேள்வி படிக்கும் பதிவர்களுக்குத் தேவையில்லாதது. அவர் நித்தியானந்தனாகக் கூட இருக்கலாம். வினவின் அராஜகமே இங்கு முக்கியம் என்று சொல்லாமல் சொல்கிறார் உண்மைத்தமிழன். ஈராக், ஆப்கானில் போராடும் மக்களை படுமோசமாக இழிவுபடுத்தி கவிதை என்ற பெயரில் குடித்துவிட்டு எழுதினார்கள் அவரது ‘இனிய நண்பர்’கள். அவர்கள் உண்மைத்தமிழனின் ‘இனிய நண்பர்’கள் என்பதால் ம.க.இ.க.வினர் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதும், அதுவே ஜனநாயகம் என்பதும் அவரது எதிர்பார்ப்பாக இருக்கலாம். அவ்வாறு இருக்க முடியாது. சரி இவராவது இவரது ‘ஜனநாயக முறை’ப்படி ‘இனிய நண்பர்’களிடம் ஐயன்மீர் ஏன் இவ்வாறு கவிதை எழுதினீர்கள் என்று கேட்டாரா (இப்போது லீனாவின் கருத்துரிமைக்காக பக்கம் பக்கமாக எழுதி சோடா குடிக்கிறார் இல்லையா அது போன்றதொரு உன்னதமான அக்கறையின் வெளிப்பாடாக ஈராக் மக்களின் கருத்துரிமைக்காக அவர்களிடம் பேசினாரா?) என்றால் அதுவும் இல்லை. மொத்தத்தில் இவருக்கு இவரது நட்பு முக்கியம், எங்களுக்கு எமது கற்பு (அவருக்கு கற்பு தேவையில்லாமல் இருக்கலாம்) முக்கியம் என்ற சின்ன லாஜிக்கை அராஜகவாதம் என்ற பெரிய பிரேமில் போட்டு அடைக்க முயன்று சோடா குடித்துள்ளார் உண்மைத்தமிழன். அத்தனைக்கும் அவரது ‘இனிய நண்பரி’ன் வீட்டுக்குச் சென்று அவரது சுற்றத்தாரிடம் இந்தக் கவிதையை எழுதியவர் இவர்தான், இதில் உங்களுக்கு ஒப்புதலா என்றுதான் தோழர்கள் கேட்டுள்ளார்கள். நல்லவிதமாக எழுதியிருந்தால் ‘இனிய நண்பர்’ பெருமைப்படலாம், அவ்வாறுஇல்லாததால் நல்லவன் வேசம் போட்டு மாட்டிக் கொண்டு கிளைமாக்ஸில் தவிக்கும் வில்லனைப் போன்ற நிலைக்காளாகிவிட்டார் ‘இனிய நண்பர்’. வில்லனாக இருந்தாலும் இனிய நண்பர் எனும் பொழுது அவர் மீது ஏவிவிடப்பட்ட ‘வன்முறை’ உ.த.வை பாதித்துவிட்டது.


எதையைதையோ கட்டுடைக்கும் அய்யனார் அண்டு கோவினர் உண்மைத்தமிழனின் இந்தப் பதிவில் ஒளிந்திருக்கும் அவதூறு முரன்பாடுகளை கட்டவிழ்க்கத் தெரிந்திராத அப்பாவிகளாகவே கடைசி வரை இருந்துவிட்டனர் பாவம். அவர் சொன்னதை அப்படியே வாமிட் செய்து மேலே கொஞ்சம் தமது அறிவுச் செருக்காலான அலங்காரங்களை டாபிங்க்ஸ் போட்டு கருத்துப் பந்தி பரிமாறிவிட்டனர். என்னவொரு கருத்துச் சுதந்திரம்.

இத்தனை கூறிய பிறகு ஒரு கேள்வி எழலாம் கருத்துச் சுதந்திர புனிதக்கூட்டணியாளர்கள், எப்போதுமே அராஜகவாதம் தவறுதான் என்று சொல்லும் உத்தமர்கள், ஆனால் ம.க.இ.க.வினரோ அயோக்கியத்தனத்திற்கு அராஜகமே பதில் என்று சொல்லும் வன்முறையாளர்கள் என்ற கருத்து சரிதானே?

நிற்க, மேற்படி உண்மைத்தமிழன் - அய்யனார் அண்டு கோவின் கருத்துரிமை கபர்தஸ்து சுத்த சுயம்புவான அராஜகவாதமாக பல்லிளிக்கும் இடமே ‘இனிய நண்பர்’ விவகாரத்திலும் லீனா விவகாரத்திலும்தான் உள்ளது. அதாவது, எந்தவொரு விசயத்தையும் மக்களிடம் முன் வைத்து பிரச்சாரம் செய்யும் நடைமுறையைக் கொண்ட ம.க.இ.க. நான் மக்களிடம் சென்று இவற்றை பேசிக் கொள்கிறேன் என்று சொன்னால் அது கருத்துரிமைக்கு எதிரான பாசிசம் என்கிறார்கள் இந்த அராஜகவாதிகள். அதாவது, மக்களுக்கான கருத்துரிமையை எதிர்க்கிறார்கள். அதாவது, மக்கள் முட்டாள், அவர்களுக்கு இவற்றை புரிந்துகொள்ளும் அறிவு கிடையாது என்ற மேட்டுக்குடித் திமிரிலிருந்து வரும் அராஜகவாதமே இவர்களின் கூற்று. இன்னும் சொன்னால் எதையும் சொல்லும், தெரிந்து கொள்ளும் ‘கருத்து’உரிமை எங்களை மாதிரி இண்டலெக்சுவலுக்கு மட்டுமே உண்டு, மக்கள் எல்லாம் அந்தளவுக்கு வளரவில்லை, அவர்களுக்கும் சேர்த்து நாங்களே படித்து சிந்திக்கிறோம் எனவே மக்களுக்கு அனைத்தும் அறிந்துகொள்ளும் ‘கருத்து’உரிமைக்கான வாய்ப்பை வழங்கி விடாதே என்பதே இந்த அராஜகவாதிகளின் கோரிக்கை, பார்ப்பனியக் கோரிக்கை(பார்ப்பனியம் என்ற வார்த்தை அய்யனாருக்குப் பிடிக்காது).
மக்களைப் பார்த்து பயப்படும் இவர்களின் பிழைப்புவாத அரசியலும், உ.த.வின் எதிர்புரட்சி அரசியலும் புரட்சியாளர்களுக்கு எதிராக இவ்வாறு புனிதக் கூட்டணி சேர்ந்துள்ளது. அராஜவாதத்தை உள்ளடக்கமாகக் கொண்ட இவர்கள் புரட்சியாளர்களை அராஜகவாதிகள் என்று சொல்வது வேடிக்கையானது. இவர்களின் கருத்துரிமை ஆவேசங்கள் ஆபரேசன் கிரின் ஹண்டு போன்ற பிரச்சினைகளை எதிர்த்து என்றுமே வெளிவராது. உண்மைத்தமிழனோ, அய்யனாரோ இது சார்ந்து பதிவு போட்டதாக தெரியவில்லை. அவர்களது அதிகபட்ச கருத்துரிமை எதிரிகள் கள்ள டிக்கெட் விற்பவன், சூடு வைத்த ஆட்டோ மீட்டர், போன் கனெக்சனுக்கு கமிசன் கேட்பவன், அப்புறம் லீனாவை எதிர்க்கும் வினவு போன்றோர்.

லீனாவின் யோனிக் கவிதையில்தான் உனது கருத்துரிமை கொப்புளிக்கிறது என்றால், ஆப்புரேசன் கிரின் ஹண்டு போன்றவற்றில் கருத்துரிமை பறிபோவது பற்றி நீட்டி முழக்க நீ தயாரில்லை எனில், உன்னுடைய கருத்துரிமை என்ற பெயரிலான அராஜகவாத பிதற்றலை யோனி மசிராகக் கூட நான் மதிக்க வேண்டிய அவசியமில்லை.

புரட்சிக்காரன் சமூகவிரோத சக்திகளிடமிருந்து தன்னைக் காக்க தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான், அயோக்கியன் மக்களிடமிருந்து தன்னைக் காக்க தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான். இரண்டும் ஒன்று என்பது அயோக்கியர்களின் கருத்தாகத்தான் இருக்கும். இப்படியாக அனைவருக்குமான இவர்களின் கருத்துரிமை, அராஜகவாதமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தளவுக்கு அற்பமானதுதான் இவர்களது கருத்துரிமை அராஜகவாதம். அதாவது லீனாவின் யோனிக்கு மட்டுமே இவர்களது கருத்துரிமை செல்லுபடியாகும்.

அசுரன்

54 பின்னூட்டங்கள்:

said...

ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

:)

said...

வெல்கம் பேக் தோழர்..!

இந்த வருடத்தில் இதுவரை வெறும் இரண்டு பதிவுகள் தானா?

said...

//இந்த வருடத்தில் இதுவரை வெறும் இரண்டு பதிவுகள் தானா?//

வாங்க பாலபாரதி, அதான் வினவு எழுதுறாங்களேன்னு சொன்னாலும், உண்மையான காரணம் யாருமில்லாத நம்ம கடையில டீ ஆத்தி போரடிச்சிடுச்சி :-) அதான் இப்போல்லாம் வினவுல பார்ட் டைமா பின்னூட்ட சேவை செய்யிறேன்.

என்னண்ணே செய்யிறது, நம்ம எழுத்துக்கு மவுசு அவ்வளவுதான்.

அசுரன்

said...

வாங்க தோழர்...

பணி நெருக்குதலை தாண்டியும் தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

//வாங்க தோழர்...

பணி நெருக்குதலை தாண்டியும் தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டும்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்//

வணக்கம் தோழர் பைத்தியக்காரன்,

ம. க. இ.கவினரின் லீனா கூட்ட நடைமுறையை அராஜகம் என்று நீங்களும் குறிப்பிட்டிருந்ததில் எனக்கு சிறிது வருத்தம் இருந்தது. உண்மைத் தமிழனது கட்டுரையின் அடிப்படையிலேதான் அவ்வாறு கூறியிருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

தோழமையுடன்,
அசுரன்

said...

//ம. க. இ.கவினரின் லீனா கூட்ட நடைமுறையை அராஜகம் என்று நீங்களும் குறிப்பிட்டிருந்ததில் எனக்கு சிறிது வருத்தம் இருந்தது.//

தோழர், தகவலுக்காக -

இப்படி எங்குமே நேர் பேச்சிலும் சரி, மறுமொழியிலும் சரி, குறிப்பிடவில்லை.

அராஜகமாக அந்தச் செய்கை இல்லாதபோது எப்படி அப்படியொரு அடைமொழியில் சொல்லமுடியும்?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

அன்பான நண்பர் திரு அசுரன்,

வணக்கம் சார்! நீங்கதானா அது! சந்திப்பதில் மகிழ்ச்சி!

என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க?? உங்க எழுத்துக்கு அவளவுதான் மவுசா? யார் சொன்னது சார்? எல்லாமும் தெரிந்த ஞானி ஒருவர் முதல் ஆளா வந்து மகிழ்ச்சி தெரிவித்து, நடத்துங்க என்று வேறு சொல்லிட்டு போவிட்ட்டார்! அப்புறமுமா உங்களுக்கு டவுட்டு? எப்பேர்பட்ட அறிவாளிகளின் அழைப்பு மற்றும் வாசிப்பு உங்களுக்கு இருக்கு! படிக்கிறவன் பத்தே ஆனாலும் அவிங்க எல்லாம் முத்தா இருக்கணும் சார்! அதுவும், வந்த முதல் முத்து, ஒரு அறிவு வித்து, அன்னாரின் வாழ்த்தே உங்களின் சொத்து! வேண்டாம் உங்கள் எழுத்துகளுக்கு ரத்து! தொடர்ந்து எழுதுங்க சார்! நீங்களும் கடையை திறவுங்கள், புரட்சி தமாஷு பல வழிகளில் வழியட்டும்! நாட்டுல entertainment இலவசமாக அவ்வளவாக கிடைக்காததால் ஒரு வினவு மட்டும் இருந்தால் பத்தாது! நீங்களும் வந்தால் பொழுது போகும்!

நன்றி

தோழமையுடன்
நோ

said...

தோழர் பைத்தியக்காரன்,

அராஜகவாதி அய்யனாரின் தளத்தில் கீழ் கண்ட உங்களது கருத்துக்களை கண்டேன்.

//லீனாவின் பாசிசத்திலிருந்து மற்றவர்களை திசை திருப்பவா? அல்லது தோழர்களின் 'அராஜகத்தை' மேலும் பூதாகரமாக காண்பிக்கவா? அல்லது வேறு ஏதேனுமா?//

ஒருவேளை அய்யனாரை பகடி செய்யக்கூட இவ்வாறு எழுதியிருக்கலாம்(கமாவுக்குள் எழுதியதை இப்பொழுதுதான் கவனிக்கிறேன்) நீங்கள்.

அசுரன்

said...

//அய்யனாரை பகடி செய்யக்கூட இவ்வாறு எழுதியிருக்கலாம்//

ஆம் தோழர், நண்பர் சங்கரராமசுப்ரமணியத்துக்கும் சேர்த்து சொல்லப்பட்ட பகடியேதான்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

//ஆம் தோழர், நண்பர் சங்கரராமசுப்ரமணியத்துக்கும் சேர்த்து சொல்லப்பட்ட பகடியேதான்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்//

நன்றி தோழர்

said...

அருமை. கள்ளக் கூட்டுக் களவானிகளின் டவுசரை அவுத்து டரியல் ஆக்கி விட்டீர்கள். இந்தப் பின்னவீனத்துவ பொறுக்கி அரசியலின் உண்மையான
முகத்தை தோலுரித்துக் காட்டும் பதிவு.

வாழ்த்துக்கள் அசுரன்.

//யாருமில்லாத நம்ம கடையில டீ ஆத்தி போரடிச்சிடுச்சி :-) //
யாரும் இல்லாத டீக் கடைன்னா என்ன - டீ நல்லா இருந்தா போதாதா? தொடர்ந்து டீ ஆத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

said...

தோழர்!

சந்தித்து நீண்டகாலமாகிறது. மீண்டும் ‘புரட்சி' வெடிக்கட்டும்! :-)

said...

நன்றி தோழர் அசுரன், உண்மை அண்ணன், கவிஞர் அய்யனார் இருவருக்கும் இப்படி ஒரு கிரைம் ரிக்கார்டு பின்னணி இருக்குமென்பது தெரியாது. உண்மை அண்ணன் ஏதோ அப்பாவி என்றுதான் நினைத்திருந்தோம். அப்பாவிகள் கூட அறியாமை காரணமாக தப்பான முடிவுகளுக்கு வருவார்களோ?

பிறகு இங்கு பின்னூட்டமிட்டுள்ள பிரபல பதிவர்கள் கோவி.கண்ணன், பாலபாரதி இருவரும் பதிவு பற்றி கருத்து சொல்லவில்லை எனோ?

said...

நீங்கள் சமீபத்தில் வினவின் மீதான மதவெறியர்களின் தாக்குதலை எழுதுவிட்டீர்களோ, வட போச்சோ என்று நினைத்தேன். வடை இருக்கிறது..!!

முருகா முருகா. அய்யா அய்யா..

said...

அன்பான நண்பர் திரு அசுரன்,

போன பின்னூடத்தை நீக்காமல் போட்டதற்கு முதற்க்கண் நன்றி சார்! நண்பர் திரு வினவு நான் ஏதாவது எழுதினால் நீக்கிவிடுவார்! நீங்க போடுறீங்க! நீங்க ரொம்ப நல்லவரு! விடயத்திற்கு வருவோம்!

மூச்சு விடாது எழுதப்பட்ட உங்களின் கட்டுரையின் டைட்டில் நல்லா இருந்தாலும் கொஞ்சம் மாற்றி வைத்தால் இன்னமும் நன்றாக இருக்கும்!
அதாவது வினவை அவதூறு செய்யும்.........என்பதற்கு பதிலாக "அவதூறையே அவதூறு செய்யும்.........." என்று!

சூரியனுக்கே டார்ச் லைட்டா என்பது போல, அவதூருக்கே அவதூரா??? திரு வினவு எழுதுவதெல்லாம் எந்த வகையை சேர்ந்தது ஐயா??
போன பின்னூட்டத்தில் மவுசு பற்றி சொன்னேன், இதிலும் மவுசு பற்றி சொல்லப்போகிறேன்! ஆனால் நீங்க நினைக்கிற மவுசு இல்லை! நான் சொல்லப்போவது Mouse, அதாவது சுண்டலி பற்றி!

Mouse that roared என்பார்கள் ஆங்கிலத்தில்! அதாவது உறுமியது ஒரு சுண்டலி என்று!

ஒரு பெரிய நகரமாம், அதன் மூலையில் ஓரமாக இருக்கும் ஒரு சிறு பேட்டையின் மூலையில் இருக்கும் ஒரு சிறு மண் தெருவில் ஓரத்தில் இருக்கும் ஒரு சிறு வீட்டு வாயிலின் அருகே இருக்கும் சிறு பொந்தில் இருந்ததாம் ஒரு சுண்டலி!!! பக்கத்து தெருவில் ஒரு வீடு கட்டும் பணி நடந்ததாம், அதானால் வந்த சத்தம் சுண்டெலியின் தூக்கத்தை கெடுத்ததாம், கோபமுடன் வெளியே வந்து சுண்டெலி, யாரங்கே நான் தூங்க வேண்டும், நிறுத்துங்கள் உங்கள் வேலையை
என்று கர்ஜனை இட்டதாம்! ஆனால் பாவம் பாருங்கள் அது யாருக்கும் கேட்கவில்லையாம்! கோபமுடன் கத்த ஆரம்பித்த சுண்டலி அரை மணி கத்திய பின்பு
மீண்டும் தன பொந்துக்குள் வந்ததாம்! இதை பார்த்த அங்கே இருந்த சில கரப்பான்பூச்சிகள், இந்த சுண்டலி பொந்துக்குள் போகாமல் இருந்தால் அது திருடி சேர்த்து வைத்த தானியங்களை அதுகள் அடிக்க முடியாதே என்று நினைத்து, "சுண்டலி அண்ணே, சும்மா கலக்கறீங்க, விடாதீங்க போட்டு தாக்குங்க" என்றனவாம்! இதை கேட்ட சுண்டலி இன்னும் குஷியாகி, "நிஜமாகவா" என்று கேட்டதற்கு, கரப்பான்பூச்சிகளும், "ஆமாம் எலி அண்ணே, உங்க வாயாலையே
வேலை ஆட்கள் பாண்ட்டு சட்டை எல்லாம் கிழிச்சுடீங்க" என்று புகழாரம் சூடிச்சாம்! இதை கேட்டதும் மிக குஷியான சுண்டலி, வெளியே குதித்து வந்து, ரோடில் இறங்கி, காச்சு மூச்சு என்ற சத்தம் போட ஆரம்பித்ததாம்! தூரத்தில் இருந்து கரப்பான் பூச்சிகளும் "ஆஹா விடாதீங்க, போடுங்க, அப்படிதான்" என்று ஏற்றிவிட, இன்னும் ஏறிப்போய், சுண்டலி நடு ரோடில் ஓட ஆரம்பித்ததாம்! எதிரே வந்தது ஒரு சின்ன சைக்கிள்! அதன் டயர் முன்னே வந்த சுண்டலி, "நிறுத்தடா, நான் யார் தெரியுமா??"" என்றதாம்!!!

சைக்கிள் டயர் சுண்டெலியின் மேலே ஏறி பச்சக்க் என்ற சத்தத்துடன் நகர்ந்ததாம்!

End of story!

நன்றி
தோழமையுடன்
நோ

said...

பிரபல பதிவர்கள் லக்கிலுக் என்ற யுவகிருஷ்ணா, செந்தழல்ரவி இருவரும் கட்டுரை குறித்த கருத்துக்கள் தெரிவிக்கவில்லையே, ஏனோ?

said...

//சைக்கிள் டயர் சுண்டெலியின் மேலே ஏறி பச்சக்க் என்ற சத்தத்துடன் நகர்ந்ததாம்!

End of story! //

இது போல பல சுண்டெலிகள் இங்கு வந்து நசுங்கிப் போன கதையை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி இன்னொரு சுண்டெலி.

said...

//பிரபல பதிவர்கள் லக்கிலுக் என்ற யுவகிருஷ்ணா, செந்தழல்ரவி இருவரும் கட்டுரை குறித்த கருத்துக்கள் தெரிவிக்கவில்லையே, ஏனோ//

தோழர் கட்டுரை குறித்த ஆமோதிப்பையே வேறு வார்த்தைகளில் தெரிவித்திருக்கிறோம்.

மற்றபடி வேலியிலே போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக் கொள்ள வேண்டுமா என்று இருவருமே யோசித்ததால்தான் நைசாக நழுவிவிட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன் :-)

said...

//இது போல பல சுண்டெலிகள் இங்கு வந்து நசுங்கிப் போன கதையை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி இன்னொரு சுண்டெலி//

அதுதான் தெரியுமே! நசுகிட்டேன் பார் என்று சொன்னால் முடிந்தது, புரட்சி வந்தாகிவிட்டது, மாவோ ஆட்சி நாளைக்கு என்பது போல! காசா பணமா?? வாய்தானே?

said...

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

வெல்கம் பேக் தோழர்..!

இந்த வருடத்தில் இதுவரை வெறும் இரண்டு பதிவுகள் தானா?
//


வழிமொழிகிறேன்..

//உண்மையான காரணம் யாருமில்லாத நம்ம கடையில டீ ஆத்தி போரடிச்சிடுச்சி :-) அதான் இப்போல்லாம் வினவுல பார்ட் டைமா பின்னூட்ட சேவை செய்யிறேன்.

என்னண்ணே செய்யிறது, நம்ம எழுத்துக்கு மவுசு அவ்வளவுதான்.

அசுரன்//

:-(((((

அசுரனின் எழுத்துக்களுக்காக காத்திருப்போரில் ஒருவன்.

said...

//உண்மையான காரணம் யாருமில்லாத நம்ம கடையில டீ ஆத்தி போரடிச்சிடுச்சி :-) அதான் இப்போல்லாம் வினவுல பார்ட் டைமா பின்னூட்ட சேவை செய்யிறேன்.//

தோழர்களே, நண்பர்களே மேலே உள்ளது பாலபாரதியின் பின்னூட்டத்தை பார்த்த சந்தோசத்தில் நகைச்சுவைக்காக சொன்னது. அதன் பேரில் கருத்துக்கள் வேண்டாமே? சுயவிளம்பரம் போல சென்றுகொண்டிருக்கிறது. இந்த அடிப்படையிலான கருத்துக்களை எடிட் செய்து வெளியிடுவதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

தோழமையுடன்,
அசுரன்

said...

கருத்தில் ஓரளவுக்கு உடன்படுகிறேன்..நீங்கள் எழுதிய விதத்தை ரசித்தேன்.வேர்டு வெர்ஃபிகேஷன்?

said...

//வேர்டு வெர்ஃபிகேஷன்?//

நன்றி மணிஜீ. எடுத்துவிட்டேன்.

said...

ஒரு நல்ல ஓட்டும், ஒரு கள்ள ஓட்டுமாக இரண்டு பிளஸ் குத்துக்களைக் குத்தியிருக்கிறேன்..!

நன்றி..!

said...

நான் எப்போதாவது எழுதுவதைவிட மிக நீண்ட பதிவாக இது இருப்பதால் எனது பதிலையும் தனிப் பதிவாகத்தான் போடணும் போலிருக்கிறது அசுரன்ஜி..!

கொஞ்சம் டைம் வேணும்..!

said...

ஏன் வினவு அண்ணன் இந்தப் பதிவில் வந்தவர்களிடத்திலெல்லாம் பதிவு பற்றிக் கருத்து கேட்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை..

தோழர் வினவு பெயர், புகழையெல்லாம் தாண்டியவராயிற்றே..!

said...

இசக்கியாக வந்து கும்மாங்குத்து குத்திவிட்டுப் போன பின்பும் யாரென்று தெரிந்து கொள்ளாமல் மீண்டும் அவரிடமே ஏன் கருத்துச் சொல்லவில்லை என்று குடுமிப்படி பிடிக்கும் அப்பாவியான வினவு அண்ணனை வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

தமிழக அரசியலைவிட முதலில் வலையுலக அரசியலைக் கற்றுக் கொள்ளுங்கள் வினவு..!

said...

அண்ணன் அசுரனே பின்னூட்ட மட்டுறுத்தல் செய்கிறாரா..?

கொடுமை..!

said...

[[[மணிஜீ...... said...
கருத்தில் ஓரளவுக்கு உடன்படுகிறேன்.]]]

எந்த அளவுக்கு.. எந்தெந்த இடத்தில் என்பதை விலாவாரியாக விளக்கிச் சொன்னால் உங்களையும் கும்முவதற்கு தோதாக இருக்கும் மணிஜீ..!

said...

Vinavu is a great saint who always maintains calm while these two fellows are rogues who are all out to defame St.Vinavu.Hence another saint St.Asuran has taken upon himself the noble and holy task of exposing rogues and safeguarding honor of St.Vinavu.

said...

நல்ல அலசல் கட்டுரை தோழர்
லீனாவின் பொறம்போக்கு பேத்தல் கவிதைகள்
சமூகத்தில் செல்வாக்கு பெறுவதற்கான அபாயகரமான வாய்ப்பு நிறையவே
இருக்கிறது, அதை வினவு தோழர்கள் எதிர்த்து அம்பலபடுத்தியதும்
மகஇக தோழர்கள் நேரில் சென்று சனநாயக முறையில் போராடியதும்
தேவையான ஒன்று, இல்லையெனில் அராஜகவாதிகளின் ஆகாவளித்தனங்கள் வீரியத்துடன் தொடர்வதோடு மட்டுமில்லாமல்,
பல ஆகாவளிகளை(followers)
உருவாக்கி நாறடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்,

விடுதலை

said...

Unfortunately for you India is not Stalinist Russia or Maoist China.
Why dont you talk to Dr.Rudhran who is upset with your folks for your behavior in this issue.Vinavu & company gave more than enough publicity to Leena.

said...

"லீனாவின் யோனிக் கவிதையில்தான் உனது கருத்துரிமை கொப்புளிக்கிறது என்றால், ஆப்புரேசன் கிரின் ஹண்டு போன்றவற்றில் கருத்துரிமை பறிபோவது பற்றி நீட்டி முழக்க நீ தயாரில்லை எனில், உன்னுடைய கருத்துரிமை என்ற பெயரிலான அராஜகவாத பிதற்றலை யோனி மசிராகக் கூட நான் மதிக்க வேண்டிய அவசியமில்லை."

:-) சுற்றி வளைக்காத, நேரடியான நெற்றிப் பொட்டிலறையும் போர்ப்பறை முழங்குகிறது.. சில ஆண்டுகளுக்கு முன் அன்றாடம் வந்து பார்த்த, அவ்வப்பொழுது REFERENCE போல படித்துப் பார்த்த தளம் இது... மறுவருகைக்கு மனதார வாழ்த்துக்கள்! சுயவிளம்பரம் என்று எடிட் செய்து எனது 'கருத்துரிமையை' செய்து விடாதீர்கள். எப்பூடி? :-)

said...

அண்ணே..

எனது பதில்களை பதிவாக போட்டுள்ளேன்..!

http://truetamilans.blogspot.com/2010/04/blog-post_28.html

நன்றி..!

said...

இவ்வளவு நேர்த்தியாக கருத்துகளை தொகுத்து தெளிவு படுத்தி இருக்கும் தாங்கள் அதியமான் உடனான விவாதத்தையும் தொகுத்து தெளிவு படுத்துவது அவசியமானதாக கருதுகிறேன் நன்றி தொடர்ந்து எழுத வேண்டுகிறேன் .

said...

’கண்டன ஒன்றுகூடல்’ கூட்டத்தில் ம.க.இ.க நடத்திய குழப்பத்திற்குப் பின்னான பதிவுகளில் ரோசாவசந்தின் பதிவில் மட்டும், அதுவும் என் பெயரில்தான் பின்னூட்டமிட்டிருந்தேன். ஆனால் நீங்களும் உங்களது தோழர்களும் நான் எழுதாத பின்னூட்டங்கள் குறித்து அவதூறுகளைப் பரப்புகிறீர்கள். உங்களது பல்வேறு நிலைப்பாடுகளை நான் ஆதரித்திருக்கிறேன். பல சமயங்களில் எனது நிலைப்பாடுகள் பலவற்றை நீங்களும் உங்களது தோழர்களும் ஆதரித்திருக்கிறீர்கள். அப்போதெல்லாம் நான் உங்கள் தோழமைச் சக்தியாய் இருந்தேன். ஆனால் உங்களது கருத்தில் மாறுபடும்போது அல்லக்கை என்றும் பினாமி என்றும் சிஷ்யப்பிள்ளை என்றும் மிக மோசமான முறையில் இழிவுசெய்கிறீர்கள். தொடர்ச்சியாக இந்த்துவத்தையும் பார்ப்பனீயத்தையும் மார்க்சிய விரோத சக்திகளையும் எதிர்த்து பல ஆண்டுகாலமாக எழுதி வருகிற என்னைப் பொறுக்கி என்றும் சமூகவிரோதி என்றும் அழைத்து அடையாளப்படுத்திய உங்கள் அன்புக்கு நன்றி தோழர். கண்டன ஒன்றுகூடல் கலாட்டாவுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் கருணாநிதிக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட ம.க.இ.கவின் போராட்டங்களையும் அரசியல் நிலைப்பாடுகளையும் நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன். ஆனால் அதற்காக ம.க.இ.கவை விமர்சிக்கிற விமர்சன உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். உங்களைப் போலவே வேறொருகளத்தில் பார்ப்பனீயத்தையும் இந்துத்துவத்தையும் எதிர்த்து இயங்குகிற தோழமைச் சக்திகளின் மீது மிக மோசமான முறையில் இழிவுகளைச் சுமத்தி, ஆதாரமற்ற அவதூறுகளைக் கிளப்புவதன்மூலமும் யூகங்களையே உண்மைகளாக மாற்றுவதன் மூலம் எதைச் சாதிக்கப்போகிறீர்கள் தோழர்?

said...

தமிழச்சிக்குத் தமிழ்மணத்தில் எதிர்ப்புகள் எழுந்தபோதும் சரி, அவர் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்டபோதும் சரி அதை நான் உறுதியாக எதிர்த்திருக்கிறேன். ஆனால் அந்த பிரச்சினை பற்றி எழுதும்போது அதைப் பதிவு செய்யாத உங்கள் அரசியல் மனச்சாட்சிக்கு நன்றி தோழர். ஆனால் நீங்கள் சித்தரிக்கும்படி தமிழச்சி யோனி குறித்து எழுதியது எல்லாமே பெண்விடுதலை சம்பந்தமானது அல்ல. அவைகளில் பல அவரது விளம்பரத்துக்காக எழுதப்படுகின்றன என்கிற காரணம் சொல்லித்தான் எதிர்க்கப்பட்டன. குறிப்பாக கோணேஸ்வரி குறித்த அவரது எழுத்து, ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகத்தான் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் அதை மறைத்து தமிழச்சியை ஒரு பெண்ணிய வீராங்கனையாக நிறுத்த முயலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ‘தமிழச்சி விளம்பரத்துக்கு எழுதுவதாக இருந்தாலும்’ அல்லது ‘அரைகுறை அரசியல் புரிதலில் எழுதுவதாகக் குற்றம் சாட்டப்பட்டாலும்’ அவர் எழுதுவதைத் தடை செய்வதற்கோ, அவரைத் தமிழ்மணத்தை விட்டு வெளியேற்றுவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடாக இருந்தது. இப்போதும் அதுதான். அதுமட்டுமில்லாமல் தோழர்.தமிழச்சி, தனது புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பி அதை பரப்பியதும், இப்போது உங்களை ஆதரிக்கும் லக்கிலுக்,’தோழர்.தமிழச்சியின் புதிய புகைப்படம் வெளியாகியிருக்கிறது’ என்று பதிவுபோட்டதும் நடந்தது. நான் அதைக் கண்டித்தும் எழுதியிருக்கிறேன். அதேநேரத்தில் தமிழச்சியின் எழுத்துரிமையை ஆதரிக்கவும் செய்திருக்கிறேன். ஆனால் நடந்த நிகழ்வுகளில் உங்களுக்குத் தேவையான பகுதிகளை மட்டும் எழுதி, தேவையான பிம்பத்தை உருவாக்கிக்கொள்கிறீர்கள். மிக்க நன்றி.

said...

அன்புள்ள தோழர்,

மீண்டும் பதிவு எழுத வந்ததற்கு மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள். எனக்கு உங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் நீங்களும் போகிறபோக்கில் ’அ. மார்க்ஸின் சிஸ்யப் பிள்ளை சுகுணா திவாகர் தனது பினாமி தியாகு மூலம் முன்னிறுத்திய மிக அறிவுப்பூர்வமான கேள்வி’ என்று அவதூறைக் கிளப்பி, ‘வதந்திகளைப் பரப்புவதே புரட்சிகர அரசியல்’ என்று அப்பாவித்தனமாக நம்பும் அவதூறுவாதிகள் வரிசையில் நீங்களும் சேர்ந்திருப்பது வருத்தமளிக்கிறது. உங்களுக்குத் தெரிந்த அளவுக்குக்கூட எனக்குத் தியாகு பழக்கம் கிடையாது. அது எப்படி தோழர் முந்தாநேற்றுவரை உங்கள் நிலைப்பாடுகளை ஆதரிக்கும்போது தியாகு தோழராயிருந்தார், இப்போது சுகுணாவின் பினாமி ஆகிப்போனார்? உங்கள் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிற ஒருவர் ஏதாவது ஒரு கருத்தில் மாறுபடும்போது அவருக்கு அல்லக்கை, பினாமி, துரோகி பட்டம் சுமத்தி அவதூறு செய்வது என்பது ஈழத்தில் நடந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமையிலிருந்து விளைகிற அறியாமை என்றே எடுத்துக்கொள்கிறேன். சரி, தியாகுவின் பதிவிலும் அய்யனார் விஸ்வநாத் பதிவிலும் அனானியாக வந்த பின்னூட்டத்தை எடுத்துக்கொள்வோம். அந்த பின்னூட்டத்தின் இரண்டாம் பகுதி இது.

/இரயாகரன் இதனை புலியிசத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கிறார் என்றால் அ.மார்க்ஸும் அப்படித்தான் பார்க்கிறார். அதாவது கூட்டத்தில் கலகம் செய்தது புலி ஆதரவாளர்கள் என்று ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்து ம.க.இ.கவினரை புலி ஆதரவாளர்களாக்கி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று கணக்கு போடுகிறார் அ.மார்க்ஸ், “யாரைக் கண்டித்து கூட்டம் நடத்துகிறோம் என்று சொல்லக்கூடத் துணிவில்லாத கோழைகள் எதுக்குடா கூட்டம் நடத்துறீங்க?” என்று ஒரு தோழர் கேட்டதாக வினவு தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறது. உண்மையில் அ.மா யாரை கண்டித்து கூட்டம் போடுகிறோம் என்று மட்டுமல்ல, யார் அந்த கூட்டத்தில் கேள்வி எழுப்பியது என்று கூட சொல்லத் துணிவில்லாத கோழை என்றே சொல்ல‌ வேண்டியிருக்கிறது.,/

உங்களாலும் வினவாலும் ‘அ.மார்க்சின் சிஷ்யப்பிள்ளை’ என்று சித்தரிக்கப்படுகிற நான் இப்படியொரு பின்னூட்டத்தை எழுதியிருப்பேனா என்பதைக் குறைந்தபட்ச பகுத்தறிவு இருந்தால் கூட சிந்தித்துப் பார்க்க முடியும். மேலும் நான் ஏன் அனானியாக வந்து இப்படியொரு பின்னூட்டத்தைப் போட வேண்டும்? பார்ப்பனீயம், இந்துத்துவம் தொடங்கி ஜெயமோகன் வரை எனது பெயரில்தான் எதிர்த்து எழுதியிருக்கிறேன். வரவணையான் - ம.க.இ.க பிரச்சினை தொடர்பான பதிவிலும் என் பெயரில்தான் ம.க.இ.கவைக் கண்டித்திருந்தேன். அனானியாகவோ பினாமியாகவோ விமர்சனங்கள் வைக்க வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு இல்லை. ஆனால், இப்படியான அவதூறுகளைப் பரப்பி என் சொந்த அடையாளம் குறித்துக் கேள்வி கேட்கும் உங்கள் நண்பர் ஏழரையிடம் ‘ரேஷன் கார்டிலேயே அவர் பெயர் ஏழரைதானா’,சொந்த அடையாளமா என்பதை மட்டும் கேளுங்கள்.

said...

உ.த.வின் எதிர்வினை (அல்லது) கிழிந்த டவுசரை மேற்கொண்டு இன்னும் அதிகமாக கிழித்துக் கொள்வது எப்படி என்பதற்கான செயல்முறை விளக்கம்.

தமிழச்சியை உ.த. அண்டு கோ தமிழ்மணத்திலிருந்து விரட்டியது பற்றி:
பாகம்-1:
//
தமிழ்மணத்தை திறக்க கணிணி முன்பு உட்காரும்போதே "முருகா.. இன்னிக்காச்சும் நல்ல தலைப்பா வைச்சுத் தொலைஞ்சிருக்கணும்.. மானத்தை வாங்கிராத.." அப்படீன்னு வேண்டிக்கிடே எத்தனை பதிவர்கள் அப்போதைக்கு நடுக்கத்துடன் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா..?
//

தோழர் தமிழச்சியை வெளியே அனுப்பு என்று சொல்ல உ.த.விற்கு என்ன நியாயம் இருந்ததோ அதே நியாயம் லீனாவை எதிர்த்து அவரது குசும்பு-கண்டனக் கூட்டத்தில் கேள்வி கேட்க ம.க.இ.க.வுக்கு உண்டு என்பதை வலியுறுத்தவே அந்த வாதம். உ.த. அண்ணாச்சியோ கடைசி வரை இந்த ஆர்க்யும்ண்டு பக்கம் வரவேயில்லை. அதாவது லீனாவுக்கும், உ.த.வுக்கும் இருக்கும் கருத்துரிமை வினவுக்கு உண்டு என்ற ஆர்க்யுமெண்ட். அங்கு வந்தால் அம்பலமாகிவிடும் அபாயம் உள்ளதல்லவா?

அவரது இந்தப் பதிவிலேயே அவரது 'இனிய நண்பர்' விவகாரம் குறித்து உ.த. சொல்லியுள்ளது:
//கவிதை எழுதவது அவரவர் உரிமை.. பிடித்திருந்தால் பாராட்டலாம். பிடிக்காவிட்டால் விமர்சிக்கலாம். இல்லாவிட்டால் நாமும் எதிர் கவிதை எழுதலாம்..!
//

தமிழச்சி விவகாரத்தில், தமிழச்சிக்கு இவரும் எதிர்பாட்டு பாட வேண்டியதுதானே? ஏன் அவரை வெளியே அனுப்பு என்று தமிழ்மணத்திடம் சிபாரிசு செய்யும் அராஜகத்தை செய்தார்? அவருக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதுதானே அவரது இந்த முரன்பட்ட நடவடிக்கைகள் உண்ர்த்தும் விசயம்?



///பேச்சு பேச்சா இருக்கும்னா என்ன வேணாலும் பேசலாம்ண்ணே. நீங்கதான் அடுத்த ஸ்டெப்புக்கு தயாரா இருக்கீங்களே..? அப்ப அதுக்கும் தயாரா இருக்குறவங்கதான் உங்ககிட்ட சரிக்கு சரி மல்லுக்கட்ட முடியும்.. எங்களால முடியாதுங்கண்ணா..!//

கருத்துக்களில் எதிர் கொண்டால் கருத்தாகவும், தடி எடுத்து வந்தால் தடியுடனும் எதிர்கொள்ளத் தயார் என்பதையே 'எல்லா' வகையிலும் என்று குறிப்பிட்டிருந்தேன். மேலும், இப்படி டுவிஸ்ட் செய்வதது உங்களுக்கு கை வந்த கலை என்பதால்தான் அடுத்த வரிகளிலேயே ம.க.இ.க., பெரியார் திகவினர் தனியாகத்தான் பிரச்சாரம் செய்கிறார்கள், கம்பு, கட்டையுடன் ஆயுதபானியாக அலைவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன். வழக்கம் போல உ.த.வின் டுவிஸ்ட் பிரையின்(மூளை) இதையும் தனக்கு சாதகமாக திருப்பிக் கொண்டது.


Cont-

said...

பாகம் - 2
//[[ஆனால், லீனாவினுடையது கருத்துக்கள் அல்ல, அவை கம்யூனிசத் தலைவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையே யோனி தேடி அலையும் ஆண் குறிகளாகச் சித்தரிக்கும் புளுபிலிம் ஆகும். அது ஒரு வன்முறை ஆகும்.]]]

இங்கேதான் நீங்கள் மீண்டும், மீண்டும் தவறு செய்கிறீர்கள். மேலே சொல்லப்பட்டது உங்களுடைய கருத்துதான். ஆனால் நீங்கள் சொல்கின்ற முறை எப்படி இருக்கிறதெனில், இந்தக் கவிதை பற்றி நீங்கள் சொல்வதுதான் சரியானது.. இறுதியானது. கடைசி வார்த்தை.. யாரும் மறுக்கக் கூடாது. அதுதான் நியாயம்.. அதனை நீங்கள் அனைவரும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற மறைமுகமான மிரட்டல்.. பயமுறுத்தல்..! இது எப்படி ஜனநாயகமாகும்.!
//

லீனாவினுடைய கன்றாவி என்னவென்பதாக நாங்கள் புரிந்து வைத்துள்ளோம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு பிறகு அதற்கேற்ப எமது எதிர்வினைகளை நாங்கள் செய்கிறோம். அவ்வாறு எமது புரிதலைக் குறிப்பிடுவதையே மிரட்டுவதாகச் சொல்கிறார் 'கருத்துரிமை'க் காவலர் உ.த.

மாறாக, உ.த. தமது புரிதலைக் குறிப்பிடாமல் நாங்கள் எமது புரிதலைக் குறிப்பிடுவதை, 'மிரட்டுவது என்று சொல்வது கருத்துரிமையாம். என்னக் கொடுமை முருகா இது....

உ.த. உள்ளிட்ட 'கருத்துரிமை'வாதிகள் எங்களது புரிதல் தவறு என்பதை (அதுவும் இப்போ மாட்டிக் கொண்ட பிறகுதான் சொல்றாய்ங்க) மட்டும்தான் சொல்கிறார்களே ஒழிய, இவர்கள் என்னவிதமாக புரிந்து கொண்டார்கள் என்பதை இன்றைய தேதி வரை தேவ ரகசியமாகவே வைத்துள்ளனர். இப்படி தேவ ரகசியம் காப்பதுதான் இவர்களின் கருத்துரிமை. அதில் ஒரு வசதி இருக்கிறது என்பதாலேயே அவ்வாறு மெயின்டெயின் செய்றாங்க.


//அந்தக் கேள்வி லீனாவின் தனி மனித வாழ்க்கை பற்றியது. அது போன்று கேள்வி கேட்கவோ, வெளிப்படுத்தவோ வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதால்தான் அந்தக் கேள்வியை நான் புறந்தள்ளினேன்..!
//

உ.த. சொல்வது போல அது அவ்வாறான கேள்வியல்ல என்பதை அந்தக் கேள்வியையே தளத்தில் இட்டு கேட்டுள்ளார்கள்(ளேன்). உ.த. அண்ணாச்சியின் பார்வையில் அது விழவில்லை போலும். லீனாவின் கன்றாவியை ம.க.இ.க. தவறாக புரிந்து கொண்டுவிட்டது என்று சொல்லும் உ.த., அதே போல ம.க.இ.கவின் கேள்வியை உ.த. உள்ளிட்டோர் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று அவர்கள் சொல்வதை கன்சிடர் செய்ய மறுக்கிறார். ஏனேனில் அவர் ஒரு 'கருத்துரிமை'வாதி*

(* - கண்டீசன்ஸ் அப்ளை).



//படம் பார்க்கச் செல்வது எனது உரிமை.. அதனால் சென்றேன்.. தியேட்டருக்கு வந்து படம் பார் என்று சொல்லியிருப்பது அரசு. அங்கே எனக்காக சில வசதிகளை செய்து வைத்திருப்பதாக உறுதியளித்திருப்பது அரசு. டிக்கெட் விலையை நிர்ணயம் செய்திருப்பது அரசு.. அதனை சரியான முறையில் கவனிக்க வேண்டியது அரசு. எனது அரசு அதனைச் செய்யவில்லை என்னும்போது சாதாரண பாமரனுக்கு என்ன தோணுமோ அதுதான் எனக்கும் அன்றைக்குத் தோன்றியது..! அந்த நிமிடத்தில் என் மனதில் தோன்றிய எண்ணத்தைத்தான் நான் பதிவு செய்திருக்கிறேன். போலியாக இல்லையே..!
//

இதே போல சட்டவாதமுறைப்படி ஒரு கூட்டத்தில் சென்று கேள்வி கேட்பதும், என்னைப் பற்றிய கூட்டத்தில் எனது விளக்கத்தை, எனது கேள்வியை முன் வைத்து பேசுவதற்கு வாய்ப்பு தா என்று கோருவதும் உரிமைதான் என்பதை உ.த. அண்ணாச்சியால் ஏற்றுக் கொள்ள இயலுமா என்று தெரியவில்லை. தியேட்டரில் படம் பார்க்க வந்த அப்பிராணிகளை 'டேய்' 'நாய் என்று திட்டும் ரவுடித்தனத்துடன் நடந்து கொண்டவர்தான் நாகரிகமான முறையில் நடந்த ம.க.இ.க.வினரை அராஜகவாதிகள் என்று சொல்கிறார்.

Cont--

said...

நல்ல பதிவு தோழர்.

said...

[[[அசுரன் said...
தோழர் தமிழச்சியை வெளியே அனுப்பு என்று சொல்ல உ.த.விற்கு என்ன நியாயம் இருந்ததோ அதே நியாயம் லீனாவை எதிர்த்து அவரது குசும்பு - கண்டனக் கூட்டத்தில் கேள்வி கேட்க ம.க.இ.க.வுக்கு உண்டு என்பதை வலியுறுத்தவே அந்த வாதம்.]]]

அண்ணே.. தமிழ்மணம் என்ற வரையறுக்கப்பட்ட சட்டத்திட்டங்களை கொண்ட ஒரு நிறுவனத்தில் நானும் மெம்பர். தோழர் தமிழச்சியும் மெம்பர்..

அவருடைய நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாக இருந்ததால் அவரை வெளியேற்றும்படி கோரிக்கை வைக்க தமிழ்மணம் எனக்கு அனுமதி கொடுத்துள்ளது. உரிமையும் உண்டு. அதனால்தான் செய்தேன்..

லீனா உங்களது ம.க.இ.கழகத்தில் இருந்துகொண்டு இதை எழுதி, இந்தப் பிரச்சினையை உங்களுடைய பொதுக்குழுவில் எழுப்பியிருந்தால் அப்போது லீனா இதே போல் நடந்து கொண்டிருந்தால், உமது தோழர்களும் இதே போல் நடந்திருந்தாலோ.. இங்கே யாருக்குத் தெரியப் போகிறது..?

[[[அவரது இந்தப் பதிவிலேயே அவரது 'இனிய நண்பர்' விவகாரம் குறித்து உ.த. சொல்லியுள்ளது:

//கவிதை எழுதவது அவரவர் உரிமை.. பிடித்திருந்தால் பாராட்டலாம். பிடிக்காவிட்டால் விமர்சிக்கலாம். இல்லாவிட்டால் நாமும் எதிர் கவிதை எழுதலாம்!//

தமிழச்சி விவகாரத்தில், தமிழச்சிக்கு இவரும் எதிர்பாட்டு பாட வேண்டியதுதானே? ஏன் அவரை வெளியே அனுப்பு என்று தமிழ்மணத்திடம் சிபாரிசு செய்யும் அராஜகத்தை செய்தார்? அவருக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதுதானே அவரது இந்த முரன்பட்ட நடவடிக்கைகள் உண்ர்த்தும் விசயம்?]]]

மறுபடியும் சொல்கிறேன்.. அது ஒரு வலைப்பதிவர்கள் இணைந்துள்ள நிறுவனம்.. அதனால் சிலவற்றுக்குக் கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் விதித்துள்ளது. அதனை ஏற்றுத்தான் நாங்கள் அதில் இணைந்திருக்கிறோம்.

ஏன் இப்போதுகூட தோழர் தமிழச்சி அதே போன்று எழுதட்டும்.. யார் வேண்டாம் என்பது.. நிச்சயமாக யாரும் கேட்க மாட்டார்கள்..!

[[[பேச்சு பேச்சா இருக்கும்னா என்ன வேணாலும் பேசலாம்ண்ணே. நீங்கதான் அடுத்த ஸ்டெப்புக்கு தயாரா இருக்கீங்களே..? அப்ப அதுக்கும் தயாரா இருக்குறவங்கதான் உங்ககிட்ட சரிக்கு சரி மல்லுக்கட்ட முடியும்.. எங்களால முடியாதுங்கண்ணா..!//

கருத்துக்களில் எதிர் கொண்டால் கருத்தாகவும், தடி எடுத்து வந்தால் தடியுடனும் எதிர்கொள்ளத் தயார் என்பதையே 'எல்லா' வகையிலும் என்று குறிப்பிட்டிருந்தேன். மேலும், இப்படி டுவிஸ்ட் செய்வதது உங்களுக்கு கை வந்த கலை என்பதால்தான் அடுத்த வரிகளிலேயே ம.க.இ.க., பெரியார் திகவினர் தனியாகத்தான் பிரச்சாரம் செய்கிறார்கள், கம்பு, கட்டையுடன் ஆயுதபானியாக அலைவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன். வழக்கம் போல உ.த.வின் டுவிஸ்ட் பிரையின்(மூளை) இதையும் தனக்கு சாதகமாக திருப்பிக் கொண்டது.]]]

சந்தோஷம்.. பேசுகின்ற வாய்ப்பு வரும்போது பேசுவோம்ண்ணே..!

said...

[[[அசுரன் said...
இங்கேதான் நீங்கள் மீண்டும், மீண்டும் தவறு செய்கிறீர்கள். மேலே சொல்லப்பட்டது உங்களுடைய கருத்துதான். ஆனால் நீங்கள் சொல்கின்ற முறை எப்படி இருக்கிறதெனில், இந்தக் கவிதை பற்றி நீங்கள் சொல்வதுதான் சரியானது.. இறுதியானது. கடைசி வார்த்தை.. யாரும் மறுக்கக் கூடாது. அதுதான் நியாயம்.. அதனை நீங்கள் அனைவரும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற மறைமுகமான மிரட்டல்.. பயமுறுத்தல்..! இது எப்படி ஜனநாயகமாகும்.!//

லீனாவினுடைய கன்றாவி என்னவென்பதாக நாங்கள் புரிந்து வைத்துள்ளோம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு பிறகு அதற்கேற்ப எமது எதிர்வினைகளை நாங்கள் செய்கிறோம். அவ்வாறு எமது புரிதலைக் குறிப்பிடுவதையே மிரட்டுவதாகச் சொல்கிறார்
'கருத்துரிமை'க் காவலர் உ.த.]]]

இல்லை. நீங்கள் உறுதியாகச் சொல்வதினால்தான் நானும் திருப்பிச் சொல்கிறேன்.

இது எங்களது கருத்து மட்டுமே.. என்று ஒரு வார்த்தை கூடவே சொன்னால் ஒரு குட்பை போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போவோம்..!

said...

[[[உ.த. உள்ளிட்ட 'கருத்துரிமை'வாதிகள் எங்களது புரிதல் தவறு என்பதை (அதுவும் இப்போ மாட்டிக் கொண்ட பிறகுதான் சொல்றாய்ங்க) மட்டும்தான் சொல்கிறார்களே ஒழிய, இவர்கள் என்னவிதமாக புரிந்து கொண்டார்கள் என்பதை இன்றைய தேதி வரை தேவ ரகசியமாகவே வைத்துள்ளனர். இப்படி தேவ ரகசியம் காப்பதுதான் இவர்களின் கருத்துரிமை. அதில் ஒரு வசதி இருக்கிறது என்பதாலேயே அவ்வாறு மெயின்டெயின் செய்றாங்க.]]]

அண்ணே.. நான் இப்போதுவரைக்கும் கவிதையின் உட்பொருளுக்கும், அது சொல்கின்ற அர்த்தங்களுக்குள் நுழையவில்லை.. நுழையவும் விரும்பவில்லை..!

தமிழச்சியின் கவிதைகளையே விரும்பாதவன் நான். இதனையா விரும்பப் போகிறேன். எழுதப்பட்டிருக்கவே கூடாத கவிதை இது என்றுதான் சொல்லியிருக்கிறேன்..

விஷயத்தை நீங்கள் கவிதை பக்கமே மீண்டும், மீண்டும் திசை திருப்பாதீர்கள்..!

நீங்கள் கேள்வி கேட்ட முறைகள்.. அதனை எதிர்கொண்ட விதம்தான் தவறு என்கிறோமோ ஒழிய வேறொன்றுமில்லை..

இந்தத் தவறு என்கிற வார்த்தை எப்படி எங்களிடமிருந்து வருகிறது என்றால் இந்திய அரசு அதன் குடிமகனாகிய எனக்கு அளித்துள்ள தனி மனித சுதந்திரத்தினால் எழுந்த புரிதலினால்..!

இதற்கு நான் நீதிமன்றம், காவல்துறையினரைத் தவிர வேறு யாருக்கும் விளக்கமளிக்க வேண்டிய கட்டாயமுமில்லை. அவசியமுமில்லை..!

said...

[[[அந்தக் கேள்வி லீனாவின் தனி மனித வாழ்க்கை பற்றியது. அது போன்று கேள்வி கேட்கவோ, வெளிப்படுத்தவோ வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதால்தான் அந்தக் கேள்வியை நான் புறந்தள்ளினேன்..!//

உ.த. சொல்வது போல அது அவ்வாறான கேள்வியல்ல என்பதை அந்தக் கேள்வியையே தளத்தில் இட்டு கேட்டுள்ளார்கள்(ளேன்). உ.த. அண்ணாச்சியின் பார்வையில் அது விழவில்லை போலும்.]]]

இல்லை. நான் பார்த்தேன். எனது பதிவில் அதனை நான் இட வேண்டிய அவசியமில்லை என்பது எனது கருத்து. அந்த அளவுக்கு நாகரிகமில்லாதது என்பதும் எனது கருத்து. அதனால்தான் இடவில்லை..!

said...

[[[லீனாவின் கன்றாவியை ம.க.இ.க. தவறாக புரிந்து கொண்டுவிட்டது என்று சொல்லும் உ.த., அதே போல ம.க.இ.கவின் கேள்வியை உ.த. உள்ளிட்டோர் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று அவர்கள் சொல்வதை கன்சிடர் செய்ய மறுக்கிறார். ஏனேனில் அவர் ஒரு 'கருத்துரிமை'வாதி*]]]

உங்களது கேள்வியும், கருத்துரிமையும் எழுத்தாகவும், பேச்சாகவும் இருந்து தொலைந்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது..!

நான் கருத்துரிமைவாதியல்ல. அராஜகவாதி.. எனக்குப் பிடித்ததைத்தான்.. எனக்குள் தோன்றுவதைத்தான் எழுதுவேன்..!

said...

ஆமாம்.. அது ஏண்ணே..

நான் எழுதின பதிவுல இருந்து எல்லாத்தையும் இங்கே எடுத்திட்டு வந்து பதில் சொல்றீங்க..?

கவுரவம் பார்க்குறீங்களோ..?

said...

[[[தியேட்டரில் படம் பார்க்க வந்த அப்பிராணிகளை 'டேய்' 'நாய் என்று திட்டும் ரவுடித்தனத்துடன் நடந்து கொண்டவர்தான் நாகரிகமான முறையில் நடந்த ம.க.இ.க.வினரை அராஜகவாதிகள் என்று சொல்கிறார்.]]]

ஆமாம்.. அன்றைய நிகழ்வில் எனக்கிருந்த கோபத்தில் பொங்கிய, வெளிப்பட்ட வார்த்தைகள்தான்..!

மொத்த டிக்கெட்டையும் கையில் வாங்கி வைத்திருந்தவர்களை பார்த்து கத்தியதுதான்..!

மறைக்காமல் எழுத வேண்டுமே என்பதற்காகத்தான் எழுதி வைத்தேன்..!

பெண்கள் முகம் சுழிக்கும் வண்ணமோ, ஆபாச வசனங்களையோ, அவருடைய மூதாதையர் பரம்பரையையே இழுக்கின்ற அளவுக்கு கீழ்த்தரமாகவோ நான் பேசவில்லை..!

ஆனால் நான் பேசியது தவறுதான் என்பது எனக்கே தெரியும். கோபத்தில் வந்துவிட்டதை வாபஸ் வாங்கவா முடியும்..?

ஆனால் நான் அங்கே செல்வதற்கும், அது பற்றிய கேள்வியை எழுப்புவதற்கும் எனக்கு சட்டப்படி உரிமை உண்டு..!

said...

[[[படம் பார்க்கச் செல்வது எனது உரிமை.. அதனால் சென்றேன்.. தியேட்டருக்கு வந்து படம் பார் என்று சொல்லியிருப்பது அரசு. அங்கே எனக்காக சில வசதிகளை செய்து வைத்திருப்பதாக உறுதியளித்திருப்பது அரசு. டிக்கெட் விலையை நிர்ணயம் செய்திருப்பது அரசு.. அதனை சரியான முறையில் கவனிக்க வேண்டியது அரசு. எனது அரசு அதனைச் செய்யவில்லை என்னும்போது சாதாரண பாமரனுக்கு என்ன தோணுமோ அதுதான் எனக்கும் அன்றைக்குத் தோன்றியது..! அந்த நிமிடத்தில் என் மனதில் தோன்றிய எண்ணத்தைத்தான் நான் பதிவு செய்திருக்கிறேன். போலியாக இல்லையே..!//

இதே போல சட்டவாத முறைப்படி ஒரு கூட்டத்தில் சென்று கேள்வி கேட்பதும், என்னைப் பற்றிய கூட்டத்தில் எனது விளக்கத்தை, எனது கேள்வியை முன் வைத்து பேசுவதற்கு வாய்ப்பு தா என்று கோருவதும் உரிமைதான் என்பதை உ.த. அண்ணாச்சியால் ஏற்றுக் கொள்ள இயலுமா என்று தெரியவில்லை.]]]

அவர்கள்தான் உங்களை கூப்பிடவே இல்லையே..? பின்பு எதற்கு இந்த வீணான தர்க்கம்..?

என்னைக் குறிப்பிட்டு இந்தத் தியேட்டருக்கு நான் வரக்கூடாது என்று சொன்னால் அது பற்றி சட்டப்படி என்ன செய்ய முடியுமோ, வேண்டுமோ அதனை நான் கண்டிப்பாகச் செய்வேன்.. அவ்வளவுதான்..!

said...

test

said...

test

said...

வில்லன்களுடன் மோதும் உங்களுக்கு, லீனா போன்ற காமெடியன் களிடம் மோதுவது எந்த விதத்திலும் பெருமை தராது...

மற்றபடி, நடுநிலையாளர்களையும், சாமான்யர்லையும் அரவணைத்து செல்வதில்தான் உங்கள் வெற்றி இருக்கிறது... உங்கள் உழைப்பின் பலன் பெருமளவு கிடைப்பது நடுத்தர வரகதிற்குத்தான்... அனால், அவர்கள் உட்பட அனைவரையும் திட்டி எழுதி, அனைவரையும் எதிர்பதுதான் உங்கள் அமைப்பின் வேலை என்ற தவறான என்னத்தை ஏறப்டுத்துகிர்றேர்கள்...

இணையத்தில்தான், இந்த நிலை... தனிப்பட்ட முறையில், நாம் சந்திக்கும் உங்கள் இயக்கத்தினர் மக்களுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்... என் ஆசிரிகர்களிலேயே, நகைசுவை உணர்ச்சி உள்ள, இனிமையான, மறக்க முடியாத ஆசிரியர், உங்க இயக்கத்தை சார்ந்தவர் தான்...

இணையத்தில் , உங்கள் மேல் நல்லெண்ணம் கொண்டவர்களுடன் மோதுவது, ஆச்சர்யமாக உள்ளது

said...

விவாதம் இங்கு தொடர்கிறது:

http://poar-parai.blogspot.com/2010/04/blog-post_28.html

said...

////இன்னொன்று கம்யூனிசத் தலைவர்களை விமர்சிக்கக் கூடாது என்று வினவு சொன்னது போல சிலர் திரிக்கிறார்கள்(அதியமான் அவ்வாறு திரிப்பவர்களில் முதன்மையான பொய்யர்). வினவு தளத்தில் கம்யூனிசத்தை விமர்சித்து, கம்யூனிசத் தலைவர்களை விமர்சித்து எத்தனை விவாதங்கள், அவதூறுகள்? அதியமான் வினவில் எழுதியதில் 90% இதுதான்.////

இல்லை. தவறு. ஸ்டாலின், மாவோ பற்றி எழுதியது குறைந்த அளவே. இந்திய பொருளாதாரம் பற்றி, தாராளமயமாக்கலின் விளைவுகள் பற்றி மற்றும் பல்வேறு விசியங்கள் பற்றி அதிகம் எழுதியதாக ஞாபகம். ஸ்டாலின், மாவோ பற்றிய வரலாற்று ’உண்மைகளை’ எழுதினால் அவற்றை ’அவதூறகள்’ என்று தொடர்ந்து மறுப்பதால், அந்த விசியங்களை பற்றி எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். Why waste my time and energy to ‘prove’ history to those who refuse to look at reality and continue to live in fanatasy. ஸ்டாலின் பற்றிய கவிதைகளில் கூட பின்னூட்டம் இடவில்லை. நீங்களும், வினவு குழுவும் என்ன நம்பினாலும், அல்லது நம்பாவிட்டாலும் என்ன ஆகப்போகிறது. By the way, except for a fringe group like these, no one in this world disbelives what happened under Stalin or Mao. Most ‘rational’ Marxists understood the reality.

லீனா மணிமேகலையில் கவிதைகளை பற்றி மிக சரியான விமர்சனம் மற்றும் பார்வை ஜமாலன் மற்றும் பெருந்தேவி எழுதியதுதான் என்று கருதுகிறேன் :

http://jamalantamil.blogspot.com/2010/04/x.html
கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெண்.

மற்றபடி கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை சுதந்திரம் பற்றி பேசும் போது, சங்கர ராமசுப்பிரமணியனின் விட்டில் நுழைந்து, நடந்து கொண்ட விதம் பற்றி அவரே கீற்று தளத்தில் இட்ட பின்னூட்டத்தை பார்க்கவும். அத்திமீறல்கள் என்றால் என்னவென்று நீங்களே சொல்லிக்கொள்ள முடியாது. இன்று எழுதப்படுவது போல அமைதியாக அவரிடம் ‘விளக்கம்’ கேட்க்கப்படவில்லை. அவர் எழுதியதையும் பார்க்கவும் :

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=5740:2010-04-13-19-16-28&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139

Related Posts with Thumbnails