TerrorisminFocus

Friday, May 18, 2007

இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது!

ந்து சேர்ந்தது வீட்டுக்கு
வண்ணத் தொலைக்காட்சி
வைத்துப் பார்ப்பதற்கேற்ற
வாட்டமான இடம்
விவாதத்துக்கிடையில்
ஒருவழியாக முடிவானது
கூடத்து மூலையில் கிடந்த
கிழவியின் படுக்கை
திண்ணைக்குப் போனது
கேட்க ஆளின்றி
பாட்டியின் கதைகளும்,அனுபவமும்
பேச்சு மறந்து வீணாய்ப் போனது.

ஆட்டிவிடும்போது
தொலைகாட்சிக்கு
அடிபட்டுவிடும் என்று
குழந்தையின் தொட்டிலும்
கழட்டப்பட்டது முன்வாசலில்
கேபிள் கொடி படர்வதற்கு
இணங்காத
முருங்கையின் கிளை
முறிக்கப்பட்டது.

ஆறுமணி தொடர் பார்ப்பதற்கு
ஊறு நேராதவாறு
ஐந்து மணிக்கெல்லாம்
கோழியின் கூடை கவிழ்க்கப்பட்டது
தண்ணீர் வேண்டி கத்திப்பார்த்த
சினையாடு
கண்டு கொள்ள ஆளில்லாமல்
வேலிதாண்டி கர்ப்பம் கலைந்தது.

படாத இடத்தில்
தொலைக்காட்சிக்குப்
பட்டுவிட்டால் வருமா எனப்பயந்து
பையனின் 'ஒளிந்து பிடித்து'
விளையாட்டும்
வீட்டை விட்டு விரட்டப்பட்டது.

விளம்பர இடைவேளைக்கிடையே
கொஞ்சம் விசாரிப்பு பின்பு
வெடுகென்று முகத்தை திருப்பி
'கோலங்கள்'
குடும்பத்தின் 'கவனிப்பு' தாங்காமல்
சொல்லாமலே ஓடிப்போனான்
சொந்தக்காரன்.
தொலைக்காட்சிப் பூவில்
தேனெடுக்கத் தவித்து
சுருண்டு விழுந்த வண்டைப் பார்த்து
பரிதாபத்தோடு
'இச்சு' கொட்டியது பல்லி.

மனிதக்குரலற்று வெறிச்சோடிய
வீதியைப் பார்த்துபீதியுற்று
அலறியது தெருநாய்
கதவைத் திறந்து கொண்டு
வந்தவனின்
மனிதக்குரைப்பைக் கேட்டு
நடுங்கிப் போனது நாய்.


"ச்சீ...நல்ல நாடகம் ஓடுறப்ப
இங்க வந்தா கத்துற நாயே...!" என
அடிக்கப் பாய்ந்து வந்த
குடும்பத்தலைவனின் விழிகளில்
இதற்கு முன் இப்படியொரு
வெறித்தனத்தைப்
பார்த்திராத தெருநாய்
உயிர்ப்பிழைத்தால் போதுமென்று
ஊரை விட்டே ஓடியது.

துரை.சண்முகம்

புதிய கலாச்சாரம் மே 2007 இருந்து

நன்றி ஸ்பார்டகஸ்



தொடர்புடைய பதிவுகள் :

" புதிய கலாச்சாரம்" மே 2007

17 பின்னூட்டங்கள்:

said...

மிக அருமையான கவிதை. மனிதம் தொலைவதை நெஞ்சார உணர முடிந்தது.

இன்னும் நிறைய எழுத ஆசை. "மை டியர் பூதம் ஆரம்பம் ஆகப் போகிறது. ஆகவே நான் பெறுகிறேன் விடை. :)

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

:-)) :-(( ?

said...

Absolutely beautiful post Mr.Asuran. My father used to tell me that TV has destroyed the relationship in the family. It is quite true. When i was in school, probably, 20 years back, wherein we were not having a TV set at our house. After dinner, we used to sit on the verandah of our house and we used to discuss, with mild music from vividhabharathi playing at the background.

I used to play with my street kids, all sorts of games which the present generation has not even heard of. 7 Stones, "Kalla Manna", "Thoonuku Thoon", to name a few.

It was an enjoyable experience, but the present generation has lost it, because of this idiot box.

It is a cultural degradation that has happened.

Since, my blog id is having some problems, i am posting this as "Anonymous". Sorry for this.

Regards,

Babupriya

said...

மெதுவாக நாம் நம் இயல்புகளை இழந்து வருவதை அழகாக சொல்லியிருக்கீங்க. வருத்தமான உண்மை.

said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி

அசுரன்

said...

தொலைக்காட்சி வீட்டுக்குள் வந்ததால், என்னென்ன பிரச்ச்னைகள் என கவிஞர் அழகாய், அழுத்தமாய் சொல்லியுள்ளார்.

அழுது வடியும் மெகா சீரியல்களும், தொடர்ச்சியாய் ஒளிபரப்பப்படும் மோசமான தமிழ்படங்களும் வெளியிடும் நச்சு, போபால் விஷ வாயுவை விட மிகவும் கொடியது.

said...

டோ ண்டு, லொடுக்கு, அனானி, மகா, பிரபு ராஜதுரை, பாபு பிரியாவும் சொன்னது போல நாம் மனிதம் இழந்து வருகிறோம். மிகச் சரியாகவே போபால் விச வாயுவுடன் ஒப்பிட்டுள்ளார் மகா. கலாச்சார சிரழிவு என்ற கோணத்தை சரியாக கூறியுள்ளார்கள் மற்றையவர்களும்.

நல்ல ஆக்கப் பூர்வமான நமது சிந்தனைக்கான வாய்ப்புகளை எவனோ ஒருவன் எவனிடமோ விற்பதற்க்கு இலவசமாய் கொடுக்கிறோம்.

ஒன்றுக்கும் உதவாமல் நமது நேரத்தை இவன் இன்னொருவனிடம் விற்று கோடிகளில் சம்பாதிக்க நாமே துணை போகிறோம்.

தொலைக்காட்சி அது மட்டுமே பேசி நம்மை பேசா மடந்தையாக களிமண்ணாக மாற்றி பிறகு விருப்பம் போல அவனது தேவைக் கேற்ப்ப நம்மை செதுக்குகிறது.

பாபு பிரியா இதன் விளைவுகளை நன்றாகவே குறிப்பிட்டுள்ளார். முன்பெல்லம் வீதிகளில் இரவானால் ஒரே குழந்தைகளின் கும்மாலமும் கோட்டமும்தான் இருக்கும், மக்கள் வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு கதையடிப்பது, பல்வேறு அனுபவங்களை பகிர்ந்து கொள்வது. பாட்டு பாடுவ்து என்று சோசியலைஸ் ஆவதற்க்கான வாய்ப்புகள் முழுமையாக எவனொருவனது விளம்பர வருவாய்க்காக நாம் அனாமத்தாக கொ(கெ)டுத்து வருகிறோம்.

தனிமனித நச்சுப் பாம்புகளாய், தனிமனித ரோகம் பிடிக்க தொலைக்காட்டி கலாச்சாரம் வெகு வெகு முக்கியமாக உதவுகிறது.

ஓய்வு நேரங்களில் பொழுதைக் கழிக்க நேற்றைய உலகில் ஓவியம், பாட்டு பாடுவதும், புத்தகங்களை விரட்டி விரட்டி வெறி கொண்டு படிப்பது, உச்சி வெயிலிலும் கும்மிருட்டிலும் சளையாமல் வியர்க்க விறு விறுக்க விளையாடுவது இப்படியான இளமைப் பருவம் இன்றைய குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது.

தொலைக்காட்சி தகவல் தொடர்புக்கான ஒரு சிறந்த ஊடகம் என்ற வரம்பை கடந்து நம் ஒவ்வொருவரின் மீதும் சர்வாதிகாரமாக ஆதிக்கம் செலுத்தும் புதிய யுகத்தின் நாட்டாமையாக உருவெடுத்துள்ளது.

ஒவ்வொருவரும் தொலைக்காட்சியை பொழுது போக்கு என்ற கோணத்தில் பார்ப்பதை களைந்து கொண்டு குறிப்பிட்ட நிகழ்ச்சியை குறிப்பிட்ட நேரத்தில் பார்ப்பது என்று திட்டமிட்டு அதனை வரம்பிடுவது மட்டுமே நல்ல கலாச்சார மாற்றத்திற்க்கான அடி கோலாக இருக்கும்......

சிறு பிள்ளைகளுக்கு தொலைக்காட்சியை பத்தோடு பதினொன்றான ஒரு ஊடகமாக மட்டுமே அறிமுகப்படுத்தி வைப்பதே பெற்றோர்களின் அதி முக்கிய முதல் கடமையாக இருக்கிறது.

தொலைக்காட்சி - அது ஆளும் வர்க்கத்தின் உள்வீட்டு காவல்துறை என்ற கோணம்தான் நான் மிக முக்கியமாக வலியுறுத்தும் விசயம். இந்த அம்சத்தில் எத்தனை பேர் என்னுடன் ஒத்து வருவார்கள் என்று தெரியவில்லை. :-)

அசுரன்

said...

மிகச் சிறந்த ஒரு கவிதையைப் படித்த திருப்தி. எவ்வளாவு அழகாக கூறியுள்ளார்.

//மனிதக்குரலற்று வெறிச்சோடிய
வீதியைப் பார்த்துபீதியுற்று
அலறியது தெருநாய்//

முகத்திலறைந்தது போன்று இருந்தது.

said...

அரசு கணினியை இலவசமாகக் கொடுத்தாலும் இதே போல் புலம்புவீர்களோ.மைக்ரோசாப்ட்.அதைத் திணிக்க செய்யப்படும் ஏகாதிப்பத்திய சதி என்று ஆரம்பித்துவிடுவீர்களே. ஐயா,மேதாவிகளே, கணினியும், இன்டர்நெட்டினால் மனித உறவுகளில் மாற்றம் வருவதில்லையா.வீட்டில் யாருடனும் பேசாமல் கணினி,இணையமே கதி என்று இருப்பதில்லையா.சிலர் புத்தகங்களே போதும் என்று இருப்பதில்லையா. உங்களுடைய பிரச்சினை என்ன - தொழில்நுட்பமா, அதன் மூலம் கிடைக்கும் உள்ளடக்கமா, இல்லை, இரண்டுமா. சோசலிச அரசில் அரசுப் பிரச்சாரம் செய்யும் தொலைக்காட்சி அரசு இலவசமாகத் தரும் போது உவப்பாக இருக்குமோ. இல்லை 24 மணி நேரமும் ஸ்டாலின், மாவோ, மக இக பிரச்சாரமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா. பல கிராமங்களில் வீடுகளில் தொலைக்காட்சிகள் இல்லை. மக்கள் பொதுவான இடத்தில் உள்ள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். பல வீடுகளில் கேபிள் இணைப்பு இல்லை. அவர்கள் அருகில்
உள்ள வீடுகளில் இணைப்பு இருந்தால் பார்க்கிறார்கள். தொலைக்காட்சி வந்தது, அது ஒழிந்தது,
இது ஒழிந்தது என்று புலம்பி ஒப்பாரி வைக்கும் முன் ஒரளவாவது சிந்தியுங்கள்.

said...

It was an enjoyable experience, but the present generation has lost it, because of this idiot box.

It is a cultural degradation that has happened.
அந்தக் காலத்தில என்று ஆரம்பித்து புலம்பும் பெரிசுகளின் ரவுசு தாங்க முடியாத கொடுமையா இருக்கு.இந்தப் பெரிசுகள் பேசாம தெருவில இறங்கி கண்ணா மூச்சி ஆடலாம், யாரு தடுத்தது ?

said...

எனக்கு ஒரு சின்ன சந்தேகம். மாற்று கருத்து உள்ளவர்கள், உங்களிடம் விவாதிக்க விரும்புவர்கள் .... ஏன் முகவரி இன்றி, காற்றில் அலையும் அனானிகளாக வருகிறார்கள்?

அவ்வை சண்முகியில், தெளிய வைத்து, தெளிய வைத்து அடிப்பார்களே, அதே போல், எழுத்தில் நீங்கள் அடிப்பிடிங்களோ?

said...

"தொலைக்காட்சி - அது ஆளும் வர்க்கத்தின் உள்வீட்டு காவல்துறை என்ற கோணம்தான் நான் மிக முக்கியமாக வலியுறுத்தும் விசயம். இந்த அம்சத்தில் எத்தனை பேர் என்னுடன் ஒத்து வருவார்கள் என்று தெரியவில்லை" - i totally agree with you mr.asuran. The change has to come slowly and from within.

Regards,

Babupriya

said...

அந்தக் காலத்தில என்று ஆரம்பித்து புலம்பும் பெரிசுகளின் ரவுசு தாங்க முடியாத கொடுமையா இருக்கு.இந்தப் பெரிசுகள் பேசாம தெருவில இறங்கி கண்ணா மூச்சி ஆடலாம், யாரு தடுத்தது ?"

Mr.Anonymous - I am ready to play கண்ணா மூச்சி with everybody, because while playing my body gets reenergised, whereas the kids of today-even my kids-they are 6 years and 2 years and they sit in front of TV sets for hours together and watching JETIX, POGO,etc. This just brainwash them and not allowing them to have a creativity on their own.

To bring change, i have made it a point to take my kids outside on week ends-making them play and just play and nothing else. I can see the freshness on their face the next day morning.

Unfortunately, i can't do this all day because of work compulsions, but playing as a habit has been lost with the present generations.

Regards,

Babupriya

said...

சுவாரஸ்யமான, யோசிக்க வைத்த, வெட்கப்பட வைத்த கவிதை.. என்ன செய்தாலும் மக்களின் மனநிலையே ஒரே நாள் இரவில் மாற்றிவிட முடியாது. அவர்களாகவே மாறினால்தான் உண்டு.

said...

Well, in most American homes (99.99) there is TV.
But i never heard of anything wrong in family structure. What has started here is a good thing in my view. The only way for India - especially in TN, where most people aren't politically cosnscious - to go forward with poverty extinction, and better living conditions and overall positive devolopment, there must be a good governance. In Democratic means it's not possible, when people don't vote by judging history or policies. Therefore, by buying people with these goods, the government is going on the right direction and making an investment toward good governance, which in turn fuel stable government to run country/state well. As long as people under the poverty line vote for policies, these goods would have to be given out

said...

அருமையான சொல்லாடல்

நன்றி

said...

எல்லாத்தையும் இயந்திரகதியில் இந்தியாவுடன் ஒப்பிடுவது சரியல்ல. அமெரிக்காவின் முதலாளித்துவ ஜனநாயகத்திற்க்கு 200 வருடங்களுக்கும் மேல் அனுப்வம் உள்ளது. இந்தியாவிலோ இன்றூ வரை முதலாளித்துவ ஜனநாயகமே வரவில்லை.

அதனால் அங்குள்ள காலாச்சார அடிப்படைகளையும் இங்குள்ள கலாச்சார அடிப்படைகளையும் ஒன்று என்று கருதுவதன் அடிப்படையிலான கருத்துக்கள் தவறாகவே முடியும்.

ஆனானப்பட்ட அங்கேயே தொலைக்காட்சி மக்களின் பொதுக்கருத்தில் புகுந்து விளையாடுவது கடுமையாக விமர்சனத்திற்க்கு ஆளான ஒரு விசயம் எனபதையும் கவ்னத்தில் கொள்க.

அதையெல்லாம் விடுங்கள். இந்த கவிதையில் சொல்லப்பட்டுள்ள விச்யம் உண்மையா இல்லையா? உண்மையெனில் என்ன செய்யலாம்?

தொலைக்காட்சிக்கு என்ன வரம்போ அதற்க்குள்ளிட்டு அதனை வைத்துக் கொள்வதில் உங்களுக்கென்ன பிரச்சனை வந்துவிட்டது(ஒருவேளை நீங்கள் ஏதேனும் தொலைக்காட்சி சானல் உரிமையாளரா - சும்மா ஜாலிக்கு).....

*************

மின்னுது மின்னலின் வருகைக்கு நன்றி

அசுரன்

Related Posts with Thumbnails