அம்மானா சும்மாயில்லாடா....
பாசிச வெறியும், மனிதப் பண்புகள் கிஞ்சித்துமற்ற ஆணவமும் கலந்த பேய்தான் ஜெயா என்பதை அனைவரும் அறிவோம். இந்தப் பாசிச பேயின் வாயாலேயே பாசிசச் சட்டம் என்று ஒரு சட்டம் வசவு வாங்கியுள்ளது. ஜெயலலிதா வாயால் பேர் பெற்ற அச்சட்டம்தான் மத வெறி வன்முறை தடுப்புச் சட்டம், 2011.
ஒரு மாநிலத்தில் சிறுபான்மையினரான முஸ்லீம், சீக்கியர், கிருத்துவர்கள் மீதும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீதும், மொழிச் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் வன்முறைகளின் போது மத்திய அரசு நேரடியாக அதிகாரத்தை தனது கையில் எடுத்துக் கொள்ள இச்சட்டம் வகை செய்கிறது. இதன் மூலம் சிறுபான்மை சமூகத்தினர் காக்கப்படுவர் என்பதை இச்சட்டத்தின் நோக்கமாக மத்தியில் ஆளும் காங்கிரசு அரசு சொல்லுகிறது.
இச்சட்டம் உண்மையிலேயே ஆர்எஸ்எஸ் இந்து பயங்கரவாதிகளின் தேசத் துரோக சதிகளையும், கலவரங்களையும் தடுத்துவிடும் என்பது பகல் கனவே. ஆயினும், பேரளவில் கூட இந்து பயங்கரவாதிகளுக்கு எதிரானதொரு செயல்பாடு நடப்பதை ஜெயலலிதா கொதித்தெழுந்து எதிர்ப்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.
இதற்கு முன்பு மாநில அரசின் அதிகாரத்தை தூக்கியெறியும் சட்டங்கள் பல மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. வாட் வரி விதிப்பு முதல் வட கிழக்கு-காஷ்மீர் மாநிலங்களில் உள்ள ஆயுதப் படை சிறப்புச் சட்டம் வரை பல இவ்வாறானவையே. இவற்றையெல்லாம் பாசிசப் பேய் ஜெயா உளப்பூர்வமாகவே ஆதரித்தவர்தான். மதவெறி வன்முறை தடுப்புச் சட்டத்தை பாசிசம் எனக் குறிப்பிடும் இந்த பூதம்தான் 'பொடா', 'உபா', பசு வதை தடுப்புச் சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம், எஸ்மா, டெஸ்மா போன்ற பாசிச சட்டங்களை எல்லாருக்கும் முந்திக் கொண்டு ஆதரித்துள்ளதுடன், தமிழ்நாட்டில் கொண்டு வந்து அமுல்படுத்தியும் உள்ளார்.
சோழியான் குடுமி சும்மா ஆடுமா என்ன? தான் ஒரு பச்சைப் பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே ஓலமிட்டவர்தான் இந்த பாசிசப் பாப்பாத்தி. இவர் இன்றைக்கு முதலமைச்சர் ஆனதில் ஊர்த் திருடன் கலைஞரின் அராஜக ஆட்சிக்கெதிரான மக்களின் வெறுப்பு ஒரு பக்கமெனில், இன்னொரு பக்கம் ஆர்எஸ்எஸ் பார்ப்பன தேசத் துரோக கும்பல் திட்டமிட்டு எல்லா வலது சாரி(வலது-இடது கம்யூனிஸ்டு வலதுசாரிகளையும் சேர்த்து) சக்திகளையும் பாசிச ஜெயாவின் பின்னே திரட்டியது முக்கியக் காரணமாக உள்ளது.
போன ஜெயலலிதா ஆட்சிகளைப் போல ஜெயாவின் தனிப்பட்ட அகங்காரமும், சசிகலா குடும்பத்தின் அவசரமும் மட்டுமே கூத்தாடும் ஆட்சியல்ல இது. கல்லு குடித்த சொறிக் குரங்கின் ஆட்டத்தைப் போல பாசிச ஜெயாவின் ஆணவத் திமிரும், ஆர்எஸ்எஸ் பயங்கரவாதக் கூட்டத்தின் திட்டமிட்ட சதியாலோசனைகளும் சேர்ந்து களமிறங்கும் புதுவகைப்பட்ட ஆட்சி இது.
எனவேதான் மிகச் சரியாக மதவெறி வன்முறை தடுப்புச் சட்டத்தின் இலக்கு எதுவாக இருக்க முடியும் என்பதை புரிந்து முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது இந்த முகமூடி ஆட்சி. சமச்சீர் கல்வி வெறுப்பு, ஈழத் தமிழ் ஆதரவு வேசம், இந்து மதவெறி ஆதரவு, போலீஸு ரவுடித்தனம் என ஆரம்பித்த ஒரிரு மாதங்களிலேயே தான் யார் என்பதையும், தனக்குப் பின்னே இருக்கும் காவி நோய் பீடித்த மூளை எந்த வகைப்பட்டது என்பதையும் காட்டியுள்ளார் அம்மையார். இன்னும் ஐந்து வருடங்கள் உள்ளன. பாசிச முகமுடிக்கு பின்னே இருந்து ஆடும் ஆர்எஸஎஸ் இந்து மதவெறி கும்பலின் சதிகள் எல்லாம் ஒவ்வொன்றாய் அரங்கேறும். ஈழத்தாயின் கரங்களை வலுப்படுத்தியவர்கள் எல்லாம் வறுத்தெடுக்கப்படுவார்கள். இருண்ட காலம் பாகம் 3ன் இலக்கு பரிபூரண பார்ப்பன பாசிச தமிழகம் என்பது அப்போதாவது மரமண்டைகளுக்கு உரைக்குமா தெரியவில்லை.
அசுரன்
17 பின்னூட்டங்கள்:
தலைவா சூப்பரு
சாதி துவேசம் என்பது இனவெறியை போன்றதே நீங்கள் வர்க்க போராட்டத்தை நடத்துகிறீர்களா சாதி ரீதியான போராட்டத்தை நடத்துகிறீர்களா?
//சாதி துவேசம் என்பது இனவெறியை போன்றதே நீங்கள் வர்க்க போராட்டத்தை நடத்துகிறீர்களா சாதி ரீதியான போராட்டத்தை நடத்துகிறீர்களா?//
சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?
வர்க்க துவேசம் சரியானதா தவறானதா?
வர்க்கம் என்பது அவனது பொருளாதார நிலை மாறும் போது மாறிவிடும் ஆனால் சாதி அப்படி மாறிவிட கூடியதா?
//வர்க்கம் என்பது அவனது பொருளாதார நிலை மாறும் போது மாறிவிடும் ஆனால் சாதி அப்படி மாறிவிட கூடியதா?//
இத நான் மறுக்கலையே? என்னோட கேள்வி இதுவல்லவே?
எனது கேள்விகளை மீண்டும் இடுகிறேன்.
#####
//சாதி துவேசம் என்பது இனவெறியை போன்றதே நீங்கள் வர்க்க போராட்டத்தை நடத்துகிறீர்களா சாதி ரீதியான போராட்டத்தை நடத்துகிறீர்களா?//
சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?
வர்க்க துவேசம் சரியானதா தவறானதா?
##########
சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?
-ஒன்றுதான்
வர்க்க துவேசம் சரியானதா தவறானதா?
- சரியானது
//சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?
-ஒன்றுதான்
//
ஏன் ஒன்று?
//
வர்க்க துவேசம் சரியானதா தவறானதா?
- சரியானது//
//
இதில் பிரச்சினையில்லை...
//சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?
-ஒன்றுதான்
//
ஏன் ஒன்று?
உங்கள் புரிதலை சொல்லி விடுங்கள் அல்லது நான் யோசிப்பதில் என்ன கோளாறு என்பதை சொல்லிடுங்க தினம் ஒரு கேள்வின்னு போனால் ரொம்ப போர் அடிக்குது :)
////சாதி துவேசமும் இனவெறியும் ஒன்றா?
-ஒன்றுதான்
//
ஏன் ஒன்று?
உங்கள் புரிதலை சொல்லி விடுங்கள் அல்லது நான் யோசிப்பதில் என்ன கோளாறு என்பதை சொல்லிடுங்க தினம் ஒரு கேள்வின்னு போனால் ரொம்ப போர் அடிக்குது :)//
ஒன்று இல்லை என்பது என் கருத்து. சிங்கள இனவெறியும், பார்ப்பனிய - ஆதிக்க சாதிய வெறியும் ஒன்றா? அவை ஒன்றல்ல என்பதால்தான் நீங்கள் எந்த அடிப்படையில் ஒன்று என்று சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்டேன். இக்கேள்வியை நான் முதல் தடவையே கேட்டுவிட்டேன் நீங்கள்தான் பதில் சொல்லாமல் இவ்வளவு போரடித்துவிட்டது :-)
அதான் மரமணடையாச்சே! எப்படி உரைக்கும்.பின்னாடி குத்துதே! குடையுதுதே!என்று புலம்பி தவிப்பதுதான் மரமண்டைகளுக்கு வேலையா போச்சு.
//இல்லை என்பது என் கருத்து. சிங்கள இனவெறியும், பார்ப்பனிய - ஆதிக்க சாதிய வெறியும் ஒன்றா? அவை ஒன்றல்ல என்பதால்தான் நீங்கள் எந்த அடிப்படையில் ஒன்று என்று சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்டேன். //
பார்பன சாதி ஆதிக்கத்தை ஆரிய - திராவிட இனவெறியினூடாகவே பெரியார் முதல் நீங்கள் போற்றும் அனைத்து திராவிட தலைவர்களும் இயம்பி வந்தார்கள் என்பதை அறிவீர்களா ?
////இல்லை என்பது என் கருத்து. சிங்கள இனவெறியும், பார்ப்பனிய - ஆதிக்க சாதிய வெறியும் ஒன்றா? அவை ஒன்றல்ல என்பதால்தான் நீங்கள் எந்த அடிப்படையில் ஒன்று என்று சொல்கிறீர்கள் என்று கேள்வி கேட்டேன். //
பார்பன சாதி ஆதிக்கத்தை ஆரிய - திராவிட இனவெறியினூடாகவே பெரியார் முதல் நீங்கள் போற்றும் அனைத்து திராவிட தலைவர்களும் இயம்பி வந்தார்கள் என்பதை அறிவீர்களா ?//
அது மட்டுமா இந்து - இந்தி - இந்தியா என பார்ப்பனிய ஆதிக்கத்தை தேசிய இன வரையறிலும் வைத்து பேசுகிறார்கள் மேற்சொன்னவர்கள் எனவே சாதி என்பது ஒரு தேசிய இனவாதம் என்று சொல்லலாமா?
ஆசிய சொத்துடமை வடிவத்தில் சிறப்பு அம்சமாக இந்தியாவில் சாதி சமூக உற்பத்தி உறவாகவும், பண்பாட்டு சித்தாங்த ஒடுக்குமுறையாகவும் இரு வகையிலும் சுரண்டுகிறது. இது நால் வர்ணக் கோட்பாடிலிருந்து பின்பு படிநிலை சாதியமாக பரிணாம வளர்ச்சியடைந்தது. இவ்வாறு வளர்ச்சியடையும் பொழுது ஒவ்வொரு இனக் குழு சமுதாயத்தையும் படிநிலை சாதியாக உட்செறித்தது (அம்பேத்கர் சொன்னது). எனவே சாதி என்பது தொல்குடி மரபு சார்ந்தது என்று சொல்லலாம?
சாதி என்பது இந்திய சமுதாயத்தில் மேல்கட்டுமானம், கீழ்கட்டுமானம் இரண்டிலும் உள்ளது. அது வெறும் இனவாதம் அல்ல.
சரி உங்களது புரிதலுக்கு ஒரு சின்ன கேள்வி கேட்கிறேன்.
இனவாதம் - வரையறை செய்க
சாதி - வரையறை செய்க
சாதி என்பது அடி கட்டுமானமாக இருவது மீள் கட்டு மானது என்றால் அடி கட்டுமானம் தற்போது எதை சார்ந்தது அது வர்க்கத்தை சாராமல் உற்பத்தியை சாராமல் உருவாகிறது என சொல்லமாட்டீர்கள் என நம்புகிரே ன்
//சாதி என்பது அடி கட்டுமானமாக இருவது மீள் கட்டு மானது என்றால் அடி கட்டுமானம் தற்போது எதை சார்ந்தது அது வர்க்கத்தை சாராமல் உற்பத்தியை சாராமல் உருவாகிறது என சொல்லமாட்டீர்கள் என நம்புகிரே ன்// இந்திய உற்பத்தி உறவில் சாதியில்லைஎன்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
முதலாளித்துவ ஏகாதிபத்திய வளர்ச்சி என்பதும் சாதியை அடிநிலையாக கொண்டது எனும் இயக்கமறுப்பியல் வாதத்துக்குள் போகிறீர்களா
சாதி வளரும் உறவா - முதலாளித்துவத்தில்
என்னாச்சு என்னோட கமெண்டு
Post a Comment