பெரியார் சிலை உடைத்த திமுகவினர் - ங்கொய்யால இது திராவிட லுக்குப்பா!!!
சென்னையில் பெரியார் திகவினர் கனிசமான அளவு இருக்கும் இடங்களில் ஒன்று ராயப்பேட்டை. இந்த தேர்தலுக்குள் ராஜபக்சேவுக்கு சங்கு ஊத முடிகிறதோ இல்லையோ ஆனால் அம்மா ஆட்சியை தமிழகத்தில் மலரவிட்டு தமிழர்களுக்கு அந்த சங்கை ஊதியே தீருவோம் என்று பெதிக தோழர்கள் சூறாவளியாக வேலை செய்யும் இடங்களில் ஒன்று ராயப்பேட்டை. பெரியார் திகவினரின் இந்த நடவடிக்கைகளிலுள்ள அபத்தம், அறிவிழிந்த நிலை குறித்து அடுத்த பதிவில் பார்க்கும் முன்பாக, லக்கிலுக் போன்ற சுயமரியாதை சிங்கங்களின் கட்சியான திமுக ராயப்பேட்டையில் செய்துள்ள புரட்சி குறித்து எனது காதுகளுக்கு வந்தவற்றை அறிவார்ந்த வலையுலக சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ராயப்பேட்டை பகுதியில் ஒரு கோயிலுக்குப் பின்புறமாகவே பெரியதொரு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதனையொட்டியே பெரியார் படிப்பகமும் உள்ளது. கோயிலை ஒட்டியே 'கடவுளை நம்புபவன் அயோக்கியன்' முதலான கடவுள் மறுப்பு பெரியார் முழக்கங்கள் எழுதப்பட்டிருப்பது சிறப்பு. அதனை படித்துக் கொண்டே கோயிலை பக்தன் வலம் வரும் அவனது புதிய பகுத்தறிவோ அதனினும் சிறப்பு. இந்த ஒரு தெருவில் மட்டும் அருகருகே இரண்டு திமுக வாக்கு சேகரிப்பு சாவடிகளை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். இரண்டுக்கும் நடுவே பெதிகவினரின் படிப்பகம்.
இந்த பகுதியில் சமீபத்தில் அதிமுகவினரை வைத்து பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர் பெதிக தோழர்கள். இன்னிலையில்தான் அந்த சம்பவம் நடந்தது. சில நாட்களுக்கு முன்பாக திமுகவினர் அங்கிருந்த பெரியார் சிலையின் கையை உடைத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த பெதிகவின் சாலை மறியல் போராட்டத்தில் திட்டமிட்டு கல்லெறிந்து கலவரமாக உருமாற்றி, போலீசாரின் லத்தியால் பெதிக தோழர்களையும் பதம் பார்த்து சந்தோசமுற்றனர் உடன்பிறப்புக்கள்.
மக்களுக்காக கடந்த பல பத்து வருடங்களில் ஒரு மசிரு போராட்டம் கூட நடத்தியேயிராமலேயே சில பல எம்.பி., எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருக்கும் காங்கிரஸு கட்சியும், தமது உள் கம்பேனி தகாராறுகளுக்காகவே பல போராட்டங்கள் நடத்தி மக்களின் இழவை கொட்டும் திமுகவும் இணைந்து நடத்தியுள்ள இந்த பெரியாரிச சிலை உடைப்பு வைபவம் சுயமரியாதையுள்ள கண்களைத் திறக்கும். நக்கிப் பிழைக்கும் லுக்குகளுக்கோ கண் திறப்புத் தேவையில்லை.
அதிகார மையத்தில் சமரசம் செய்து கொண்டே பார்ப்பனியத்தை புடுங்கிவிடுவோம் என்று கிளம்பியவர்கள் அனைவருக்கும் என்ன நிகழ்ந்ததோ அதுவே திமுகவுக்கும் நிகழ்ந்துவிட்டது. ஆனாலும், இன்னும் பெரியார் முகமூடி போட்டுக் கொண்டு பார்ப்பனிய இந்திய அரசு அதிகாரத்தை நக்கிப் பிழைத்து, சமரசம் செய்து விடுதலை பெற்று விடலாம் என்று உலாவுபவர்களின் எண்ணிக்கை மாத்திரம் குறைந்த பாடாய்க் காணோம்.
நேற்று பெரியார் சிலை உடைத்தனர் ஆர்.எஸ்.எஸ் சொறிநாய்கள். தட்டிக் கெட்ட புரட்சிகர அமைப்புகளை மண்டையிலேயே தட்டி ஒடுக்கினார் மஞ்சள் துண்டு தா(த்)தா. பெரியாரிசத்தின் ஹோல்சேல் உரிமையாளர்களான தலைவர்களோ நாகரிகமாக போராட வேண்டினர். பெரியாரிய தொண்டர்களும், புரட்சிகர அமைப்புகளும் மட்டுமே அன்று களத்தில் நின்றனர். இன்று பெரியாரியத்தின் வழிவந்த கட்சியே பெரியார் சிலை உடைத்துள்ளது. பெரியாரியத்தின் ஹோல்சேல் உரிமையாளர்களோ பாப்பாத்திக்கு பாத பூசை செய்கிறார்கள். மண்டையுடைந்ததோ மீண்டும் பெரியாரிய தொண்டர்களுக்குத்தான்.
இந்த போராட்டமும் கூட வெற்று வோட்டு அரசியல் சண்டையாகவே பெதிகவால் முன்னெடுக்கப்படுவது இன்னுமொரு அவலம். விமர்சனம்-சுயவிமர்சனமற்ற, மலட்டு பிழைப்புவாதம் இப்படித்தான் வரலாற்றில் நகைப்புகிடமாக முடியும்.
பெரியாரின் நோக்கங்களுக்கு நேர்மையாக இருப்பவர்கள், அந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல சரியான அரசியல் வழி எதுவென்று சீர்தூக்கி பார்த்து செயல்பட வேண்டிய நேரமிது.
அசுரன்
தொடர்புள்ள பதிவுகள்:
பெரியார் திராவிடர் கழகம் – வெங்காயத் தோலை உரிக்கும் வீணர்கள்!!!
பு.ஜ.மீதான பெரியார் தி.க.வின் விமர்சனம்: முரண்பாடுகளின் மூட்டைவிசுவநாத் பிரதாப் சிங் : காக்கை குயிலாகாது!
4 பின்னூட்டங்கள்:
அசுரன் அவர்களே ! வாழ்த்துக்கள் ! நீண்ட காலத்திற்குப் பிறகு உங்கள் பதிவினைப் படிக்கும் பாக்கியம் கிடைத்ததே !.
லக்கி லுக்கின் சுய கேள்வி - பதில் படித்து விட்டு வாழ்க்கை வெறுத்துப் போய்விட்டது. இவர் வளைந்த வளைவிற்கு, முதுகு தண்டு ஒடிந்து இருக்க வேண்டும்.
ஆனால் நீங்கள் கொடுத்தப் பதிலடி அருமை.
இலங்கைப் பிரச்சனைக்கு முன் தமிழகத்தில், தமிழின முகமுடி, தேசிய முகமூடி அணிந்து இரு கட்சிகள் இருந்தன. ஆனால், இப்போது, அனைத்துக் கட்சிகளுக்கும் கொள்கை டவுசர் கிழிந்து விட்டது.
பார்ப்போம் என்னதான் நடக்கிறது என்று !
நம்மால் செய்ய முடிந்தது எல்லாம், தேர்தல் புறக்கணிப்பு செய்வதுதான் !
என்ன செய்ய ? இந்தியாவில் பிற்ந்தாலே, ஒன்றும் செய்ய முடியாத ஒரு வெற்று நுகர்வு இயந்திரமாகி விட்டோமே !
அறிவுடைநம்பி
தோழரே,
வணக்கம்.
//பார்ப்போம் என்னதான் நடக்கிறது என்று !//
தேர்தல் முடியட்டும் அனைத்து புரச்சிகர, வயிற்றுப்போக்கு சமரச முகங்களும் தொங்கி வடியும். நமது வேலை தேர்தலுக்கு பிறகுதான் இருக்கிறது.
//என்ன செய்ய ? இந்தியாவில் பிற்ந்தாலே, ஒன்றும் செய்ய முடியாத ஒரு வெற்று நுகர்வு இயந்திரமாகி விட்டோமே !//
அப்படியெல்லாம் இருந்துவிட முடியாது தோழர். இது நம்து பொறுப்பின்மையை காட்டுகிறது. ஊர் கூடித் தேர் இழுக்கவரை நான் ஒதுங்கியிருப்பேன் என்ற மனநிலை தவறு.
தேர் இழுக்கப்பட வேண்டுமா அல்லது அங்கேயே கிடந்து சீரழிய வேண்டுமா என்ற கேள்விக்கான பதில் மட்டும்தான் நமது ந்டவடிக்கையை தீர்மானிக்க வேண்டும்.
தேர் இழுக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய தேவை. அதை செய்வதில் சுணக்கம் வேண்டாம் தோழரே.
அசுரன்
பெரியார் சிலை உடைப்பும், பெரியாரிஸ்ட்டுகளின் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்யும் தலைமைகளும்!
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1229
தமிழச்சி கட்டுரைக்கான லிங்குக்கு நன்றி அனானி,
தோழர் தமிழச்சியின் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்தே வருகிறேன். இந்த கட்டுரையையும் உள்ளிட்டு வாசித்து விட்டேன்.
அசுரன்
Post a Comment