TerrorisminFocus

Friday, July 04, 2008

இன்று தெலுங்கானா புரட்சி தொடங்கிய நாள்!!!

இன்று தெலுங்கானா புரட்சி தொடங்கிய நாள்!!!

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

பெண்களும் ஆயுதமேந்தி போராடினோம்! தெலுங்கானா வீராங்கனை மல்லுஸ்வராஜ்யம் பேட்டி

1930 ஆம் ஆண்டு நான் நல் கொண்டா மாவட்டம் கருவிரால் வட் டம் கொத்த கூடம் கிராமத்தில் ராமி ரெட்டி-சொக்கம் மாஸ்தம்பதிகளின் நான்காவது மகளாய் பிறந்தேன். என் அப்பா எனக்கு ‘ஜூகுனு’ (மின்மினி) என்று செல்லமாய் பெயரிட்டார். எனது தாய்மாமா ஒரு காந்தியவாதி. உப்புசத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றவர். அவர்தான் எனக்கு சுதந்திரம் என்ற பொருளில் சுயராஜ் ஜியம் என்று பெயரிட்டார்.

எனது அண்ணன் நரசிம்ம ரெட்டி கம்யூனிஸ்டாக இருந்தார். 1943ம் ஆண்டு விஜயவாடாவில் நடை பெற்ற கட்சி வகுப்புக்கு அண்ணன் என்னையும் அழைத்துச் சென்றார். அப்போது எனக்கு வயது பதிமூன்று தான். அங்குதான் எனக்கு மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் கிடைத்தது. அந்த ஒரே நாவல் என்னை கம்யூ னிஸ்டாக மாற்றிவிட்டது. என் அம் மாவும் அதைப்படித்தார். அவர் ஆந் திர மகாசபையில் சேர்ந்து அதன் பெண்கள் அமைப்பில் பணியாற்றி னார். எங்கள் பகுதியில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்தனர். அம்மா தனது பெண்கள் அமைப்பின் மூலம் கோஷா எதிர்ப்பு, குழந்தைத் திருமண எதிர்ப்பு, பெண் குழந்தைக ளின் கல்வி மறுப்புக்கு எதிராக போரா டினார். அன்னை மற்றும் அண்ண னின் நடவடிக்கைகள் என்னைப்பதி னான்கு வயதிலேயே புரட்சிக்காரி யாக மாற்றியது.

ஏழைகளை அடிமைகளாக நடத் துவது, அவர்களை சர்வசாதாரணமாக சாட்டையால் அடிப்பதைக் கண்டித்து ஆந்திர மகாசபை நடத்திய போராட் டங்களில் அம்மாவுடன் நானும் இணைந்து கொண்டேன். விவசாயி கள் நிலம் கோரிப் போராடினர். கம்யூ னிஸ்டுகள் அக்காலத்தில் ஆந்திர மகாசபை மூலமே போராடினர். நிலப் பிரபுக்களின் அட்டூழியம் அதிகரித் தது. தொட்டி குமரய்யா கொலை செய் யப்பட்டார். அதைத்தொடர்ந்து 1946ல் ஆயுதம் தாங்கிப் போராடுவதென கட்சி முடிவு செய்தது. கட்சியின் முக் கிய ஊழியர்களுக்கு மேஜர் ஜெய் பால்சிங் ஆயுதப்பயிற்சியளித்தார். அதில் நானும் பங்கேற்றேன். பின்பு நானும் பெண்களுக்கு ஆயுதமேந்த வும், சுடவும் பயிற்சியளித்தேன்.

தோழர் பி.சுந்தரய்யா புரட்சிக்கு ‘மக்களை எழுப்புக’ என்ற கோஷத் தைக் கொடுத்தார். ரவிநாராயண் ரெட்டி, எல்ல ரெட்டி, ரபிஅகமது, வாவிகோபாலகிருஷ்ணையா ஆகி யோருடன் என்னையும் பிரச்சாரக் குழுவில் இணைத்தார். சென்னை முதல் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் வரை ஆடல் -பாடல் கலை நிகழ்ச் சிகள் மூலம் பிரச்சாரம் செய்தோம். அப்போது சென்னையிலிருந்த தெலுங்கு சினிமா நடிகர்களும், சினிமா இயக்குநர்களும் தங்க இட மளித்து உதவினர். எனது ‘உய்யாலா’ பாடல்கள் மக்களைக் கவர்ந்தன. நானே எழுதிப்பாடுவேன். பின்பு மேடைகளிலும் கிராமங்களிலும் உய் யாலா பிரபலமாகிவிட்டது. மக்களை எழுப்புவதில் எனது கலைப்பணியை பல தோழர்கள் பின்பற்றினர்.

பின்பு நான் பிண்டிபோல் வனப்ப குதியில் மானு கோட்டை வட்டாரத் தில் பெண்கள் படையை திரட்டி அவர்களுக்குத் துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தேன். முந்நூறு பேர் கொண்ட பெண்கள் படையில் இரு நூறு பேர் மலைவாசிப் பெண்களாவர். அதன் பின் நான் கொரில்லா ஆர் கனைசராக்கப்பட்டேன். எங்களுக்கு கமாண்டராக மல்லுவெங்கட நரசிம்ம ரெட்டி என்பவர் இருந்தார். முடிவுகள் எடுப்பதிலும் அவற்றை நடைமுறைப் படுத்துவதிலும் அவர் மிகத்திறமை யானவர். ஐதராபாத் நிஜாமின் படை களை விரட்டியடித்தோம்.

ஒவ்வொரு தளமாகக் கைப்பற்றி முன்னேறினோம். பத்து லட்சம் ஏக்கர் நிலங்களைக் கைப்பற்றி நிலங்களைப் பிரித்து விவசாயிகளுக்குக் கொடுத் தோம். போரில் ராஜக்கா என்ற கொரில்லா வீராங்கனை சுட்டுக் கொல் லப்பட்டார். எனது தலைமறைவு வாழ்க்கையில் அந்த புகழ்மிக்க வீராங்கனையான ராஜக்கா என்ற ஒரு பெயரையே சூட்டிக்கொண்டேன். குதிரை மீது ஏறி போர்க்களங்களைச் சுற்றி வந்தேன். கம்மம், வாரங்கல் பகுதி முழுவதும் நான் ராஜக்காவாகச் சுற்றி வந்தேன். சுந்தரய்யா என்னை ஜான்சிராணி போல் தோன்றுவதாக கூறி பாராட்டினார். என்னைக் காட்டிக் கொடுத்தால் பத்தாயிரம் ரூபாய் பரிசு என்று நிஜாம் அரசு அறிவித்தது.

1947ல் சுதந்திரம் கிடைத்தது. நேரு தலைமையில் ஆட்சி வந்தது. ‘நிஜாம் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும், நாங் கள் விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுத்த நிலங்களைப் பறிக்கக் கூடாது, கம்யூனிஸ்டுகள் உருவாக் கிய கிராமராஜ்யங்களை அங்கீகரிக்க வேண்டும்’ என்று நேருவிடம் கோரி னோம். நேரு வாக்குறுதியளித்து விட்டு துரோகம் செய்தார். 1948 செப்டம்பரில் ஐம்பதாயிரம் பேர் கொண்ட இந்திய ராணுவத்தை எங் கள் மீது ஏவினர். எங்கள் கட்சியின் கட்டளையை ஏற்று நாங்கள் ஆயுதங் களைக் கீழே வைத்தோம். இந்திய ராணுவம் எங்கள் தோழர்களை ஆயி ரக்கணக்கில் சுட்டுக் கொலை செய்தது.

6000 பேர் படுகொலை செய்யப் பட்டனர். முப்பதாயிரம் பேர் குற்றுயி ரும் குலைஉயிருமாக சிதைக்கப்பட் டனர். எங்கள் கிராமராஜ்யங்களை அழித்து, விவசாயிகள் பகிர்ந்தெடுத்த நிலங்களைப் பறிமுதல் செய்து மீண்டும் நிலப்பிரபுக்களிடமே ஒப்ப டைத்து காங்கிரஸ் ஆட்சி அக்கிரம தாண்டவமாடியது.

எங்கள் தெலுங்கானாப் புரட்சி, காங்கிரஸ் கட்சியால் ரத்த வெள்ளத்தி லேயே மூழ்கடிக்கப்பட்டாலும் இந் திய அரசு நிலச் சீர்திருத்த உச்ச வரம் புச்சட்டத்தை கொண்டுவரவைத்தது. வினோபா போன்றவர்களைப் பூமி தான இயக்கம் துவங்க வைத்தது.

தெலுங்கானாப் போராட்டத்தால் தான் உச்ச வரம்புச் சட்டம் வந்தது. ஆனால் நிலங்கள் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவேயில்லை. கேரளா, மேற்குவங்கம், திரிபுரா ஆகிய மூன்று மாநில அரசுகளைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் விவ சாயிகளுக்கு நிலம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி அன்று முதல் இன்று வரை விவசாயிகளை வஞ்சித்து வரு கிறது. வளர்ச்சியின்றி தேசம் தேங்கி நிற்கிறது. நிலப்பிரபுத்துவம் தகர்க்கப் பட்டு நில வினியோகம் நடைபெறா மல் நாடு முன்னேறாது.

உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாய நிலங்களை பத்துமடங்கு விலை கொடுத்து அபகரித்து கார்ப்ப ரேட் விவசாயம் செய்து வருகிறது. வாழ வழியின்றி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வரு கிறது. மதவெறியர்கள் சனாதனத்தைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். ஆண்டான் அடிமைத்தனம், பெண் அடிமைத் தனத்தையும் நிலைநிறுத்த முயற்சிக்கி றார்கள். இதற்கெதிராக பெண்களும் ஆண்களும் இணைந்து போராட வேண்டும். சமூக விரோதிகளை எதிர்த்துப் போராட பெண்கள் பயிற்சி பெற வேண்டும். ஆயுதப் போராட் டமே வழி என்பது வெறும் கூக்குரல் தான். நாங்கள் அதை நடத்தியவர்கள். இன்றைய கடமை மக்களை ஜன நாயக முறையில் வெல்வதுதான்.

1954ல் தோழர் ராஜேஸ்வரராவ் எனக்கும் கமாண்டர் மல்லு வெங்கட நரசிம்ம ரெட்டிக்கும் திருமணம் செய்து வைத்தார். அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவிலிருந்து செயல்பட்டார். 2004ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். நான் ஆந்திர மாநி லக்குழுவில் பணியாற்றி வருகிறேன். 1981 முதல் 2007 வரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணைத்தலைவராய் செயல் பட்டேன். எனது பணி இன்றும் தொடர்கிறது. எனக்கு 78 வயதாகி விட்டாலும் மார்க்சியம் வென்றே தீரும் என்ற நம்பிக்கையுடன் பணி யாற்றுகிறேன். அது உயிருள்ள வரை தொடரும்.

பேட்டி: எஸ்.ஏ.பி.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

Comments 1:
துரோகத்தின் வரலாறு - தெலுங்கானா புரட்சியை வழி நடத்த துப்பற்ற அன்றைய இந்திய கம்யுனிஸ்டு கட்சி படு கோழைத்தனமாக அதனை காட்டிக் கொடுத்தது. சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே எந்த ஒரு மக்கள் போராட்டத்தையும் தலைமை தாங்கும் தைரியமற்ற இந்த கட்சி எண்ணற்ற போராட்டங்களை இப்படி கருவறுத்துல்லது. பிரிட்டிஸ்க்காரனை நாட்டை விட்டு விரட்டிய மும்பை மாலுமிகள் கலகம் மற்றும் தொழிலாளர் கலகத்தையும் கூட கடைசியில் காட்டிக் கொடுத்தது CPI. அந்த வரிசையில் தெலுங்கானா புரட்சியும் ஒன்று. இந்தியா தொழிலாளர் வர்க்கமும், விவசாய வர்க்கமும் தனது சொந்த கைகளில் ஆட்சியதிகாரத்தை நடத்த முடியும் என்று நிரூபித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி அது. அது குறித்த ஒரு கட்டுரை அதே போலி கம்யுனிஸ்டின் தீக்கதிர் பத்திரிகையில் வந்துள்ளது. வரலாற்றின் பக்கங்களை நாம் மறு வாசிப்பு செய்ய தூண்டுகோலாக இருக்குமென்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


Question 1:
//
மாலுமிகள் கலகம் மற்றும் தொழிலாளர் கலகத்தையும் கூட கடைசியில் காட்டிக் கொடுத்தது CPI.
//
இவை சரியான தகவல்களா?

தல்வார் கப்பல் புரட்சியில் மாலுமிகளுக்கு ஆதரவாக வேலைநிறுத்தப் போராட்டத்தை மும்பையில் கட்சி நடத்தியது. போலீசு துப்பாக்கிச்சூட்டில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதுதான் சரியான தகவல்கள் எனக் கருதுகிறேன். தல்வாரைக் காட்டிக் கொடுத்தவர்கள் காங்கிரசும், ஜின்னாவும்தான்.


Ans1:
தல்வார் புரட்சியிலும் கூட இந்தியாவின் மக்களை தலைமை தாங்குவதற்க்கான் முயற்சி எதுவும் செய்யாமல் அதற்க்கான தைரியம் இல்லாமல் காங்கிரஸ் பின்னே தொங்கி கொண்டிருந்தார்கள் இவர்கள். நாடு முழுவதும் புரட்சி அலை வீசும் போது அதை ஒருங்கிணைத்து ஒரு எரிமலையாய் பிரிட்டிஸ் நாய்களை சுட்டு பொசுக்குவதை விட்டு விட்டு சரணடைய சொல்லி கடைசியில் வழக்கம் போல முடிவு செய்தனர் தோழார்கள்.

கட்சி தலைமை குறித்துத்தான் இங்கு விமர்சனமே தவிர அதன் உணர்வுப் பூர்வமான தோழர்களின் ஈடு இணையற்ற தியாகங்களுக்கும், நமக்கு கற்றுக் கொடுக்கும் முன்னுதாரணங்களுக்கு அல்ல நமது விமர்சனம்.

ஏன் இந்த போராட்டங்களின் மூலம் இந்தியாவின் தனிப் பெரும் தலைமை சக்தியாக தன்னை உயர்த்திக் கொள்ள இந்த கட்சி முயற்சி செய்ததே இல்லை? இவர்களின் பாரம்பரியம் என்று சொந்த கொண்டாடும் எந்தவொரு போராட்டமாவது இவர்களது கட்சி தலைமையால் ஆரம்பிக்கப்பட்டதாகவோ அல்லது வழி நடத்தப்பட்டதாகவோ இருக்கவில்லையே ஏன்?

காட்டிக் கொடுத்தது என்பது இந்த அம்சத்தில்தான் வருகிறது.


அசுரன்

17 பின்னூட்டங்கள்:

said...

தங்களின் இந்த பதிவு, புதிய தோழர்களுக்கு ஓர் உண்மை சரித்திரத்தை நினைவு கூறவும் புதிய உத்வேகத்தையும் தந்துள்ளது. சரியான சமயத்தில் போலிகளின் முகத்திரையை கிழித்துள்ளீர்கள் தோழர்.

said...

அசுரன் அவர்களே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் CPI ன் ஒரு அங்கம் தானே ? எனக்கு தெரிந்து கடுமையான் கண்காணிப்பின் பின் தானே கம்பியுனிஸ்ட் கட்சியில் உறுப்பின்ராக சேர்ப்பார்கள் ? பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார்கள் ? (இன்னும் பிராமணர்களாகவே உள்ளார்கள்) - அறிவுடை நம்பி

said...

அசுரன் அவர்களே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் CPI ன் ஒரு அங்கம் தானே ? எனக்கு தெரிந்து கடுமையான் கண்காணிப்பின் பின் தானே கம்பியுனிஸ்ட் கட்சியில் உறுப்பின்ராக சேர்ப்பார்கள் ? பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார்கள் ? (இன்னும் பிராமணர்களாகவே உள்ளார்கள்) - அறிவுடை நம்பி

said...

செந்தீயின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்

said...

//அசுரன் அவர்களே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் CPI ன் ஒரு அங்கம் தானே ? எனக்கு தெரிந்து கடுமையான் கண்காணிப்பின் பின் தானே கம்பியுனிஸ்ட் கட்சியில் உறுப்பின்ராக சேர்ப்பார்கள் ? பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார்கள் ? (இன்னும் பிராமணர்களாகவே உள்ளார்கள்) - அறிவுடை நம்பி
//

வாங்க அறிவுடைநம்பி,

தாமதமான எதிர்வினைக்கு மன்னிக்கவும். CPI மாதிரி போலி கம்யுனிஸ்டு கட்சிகளுக்கே கொள்கைகளிலும், தத்துவத்திலும், திட்டத்திலும் தெளிவு இல்லை. இந்த இழவில் அவர்களால் எப்படி பிற்போக்கு அடக்குமுறை சக்திகளை கட்சிக்குள் வரவிடாமல் தடுக்க இயலும்? CPM போன்ற பாசிஸ்டு கட்சிகள் இன்று ஆளும் வர்க்கமாக சுத்தமாகவே பரிணமித்துள்ளனர் எனும் போது பார்ப்பனியர்கள் தலைமையை அழங்கரிப்பது ஒன்றும் ஆச்சர்யமான விசயமல்ல.

said...

vanakkam

said...

அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் கம்யூனிஸ்ட்களும் இல்லை கம்யூனிஸ்ட்கள் போலவும் இல்லை. துரோகிகள், போலிகள் என்பதெல்லாம் பொருட்குறைவான சொற்கள். புதுச்சொற்கள் தாம் வேண்டும் இவர்களை குறிக்க.


தோழமையுடன்

செங்கொடி

said...

AIDWA is not affiliated with CPI, it is an organization controlled
by CPI(M).Despite many shortcomings
it is active and is vocal on womens' issues. Perhaps it is the
largest womens' group among the womens' groups of all left parties
and movements.
"எனக்கு தெரிந்து கடுமையான் கண்காணிப்பின் பின் தானே கம்பியுனிஸ்ட் கட்சியில் உறுப்பின்ராக சேர்ப்பார்கள் ? பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார்கள் ?"

அறிவில்லாத நம்பிக்கு

கம்யுனிஸ்ட் இயக்கத்தில் சாதி பேதம்
பார்த்து உறுப்பினர் சேர்ப்பதில்லை.
மைதிலி சிவராமன் தமிழ்னாட்டில்
AIDWA வளர்ச்சிக்காக பாடுபட்டவர்.
அமெரிக்காவில் மேற்படிப்புஅ படித்தவர்.விரும்பியிருந்தால்
அங்கேயே நிரந்தரமாக இருந்திருக்கலாம் அல்லது
இங்கே ஒர் நல்ல வேலையில்
சேர்ந்திருக்கலாம்.அவர் தெரிவு
இயக்கம்-மக்கள் தொண்டு.
தொழிற்சங்க தலைவராகவும்
செயல்பட்டார்.திருமணம் செய்து
கொண்டது கருணாகரன் என்ற
பார்பனரல்லாத தோழரை.
இவர் போல் பலர் இருக்கிறார்கள்.
வறட்டு மார்க்சியம் பேசும்
வெட்டி மக இக கும்பலின்
அடிவருடிகளுக்கு இதெல்லாம்
தெரியுமா. இந்தப் போலிகளுக்கும்
பெரியாரியம் பேசிக் கொண்டே
ஆளும் வர்க்கத்தின் பாதங் தாங்கியாக
இருப்பவர்களுக்கும் பிறரை திட்டத்தான் தெரியும்.

said...

அன்பு அனானி,

உங்களால் பார்ப்பனியர்கள் என்பதற்க்கும் பார்ப்பனர்கள் என்பதற்க்கும் வித்தியாசம் கண்டுகொள்ள இயலவில்லை என்பது வருந்தத்தக்கதே.

கட்சியின் பார்ப்பனிய ஆதரவு தன்மையைத்தான் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது இங்கு, கட்சி தலைமை குழுக்களின் பார்ப்பனிய நிலைப்பாடுகள்தான் விமர்சிக்கப்பட்டுள்ளது. அது பார்ப்பனர்களிடமிருந்துதான் வர வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. சேறடிக்கும் அவசரத்தில் அரைகுறையாக வாசித்து விட்டீர்கள் போல இருக்கிறது. வாழ்த்துக்கள்

அசுரன்

said...

அசுரன்
அறிவுடை நம்பி எழுதியது இது
”அசுரன் அவர்களே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் CPI ன் ஒரு அங்கம் தானே ? எனக்கு தெரிந்து கடுமையான் கண்காணிப்பின் பின் தானே கம்பியுனிஸ்ட் கட்சியில் உறுப்பின்ராக சேர்ப்பார்கள் ? பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார்கள் ? (இன்னும் பிராமணர்களாகவே உள்ளார்கள்) ”

இதில் பார்பனியர்கள் என்ற சொல்லே
இல்லை. இன்னும் பிராமணர்களாகவே
உள்ளார்கள் என்று எழுதுகிறார்.அதற்கு
என்ன ஆதாரம். மைதிலி சிவராமனை
உதாரணம் காட்டியது அதை மறுக்க.
ஆனால் நீங்கள் எழுதுகிறீர்கள்
“அன்பு அனானி,

உங்களால் பார்ப்பனியர்கள் என்பதற்க்கும் பார்ப்பனர்கள் என்பதற்க்கும் வித்தியாசம் கண்டுகொள்ள இயலவில்லை என்பது வருந்தத்தக்கதே.

கட்சியின் பார்ப்பனிய ஆதரவு தன்மையைத்தான் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது இங்கு, கட்சி தலைமை குழுக்களின் பார்ப்பனிய நிலைப்பாடுகள்தான் விமர்சிக்கப்பட்டுள்ளது. அது பார்ப்பனர்களிடமிருந்துதான் வர வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. சேறடிக்கும் அவசரத்தில் அரைகுறையாக வாசித்து விட்டீர்கள் போல இருக்கிறது. வாழ்த்துக்கள்”

உங்களுக்கு தமிழ் அறிவும், புரிதலும்
குறைவு என்பது என் குறை அல்ல :).

அறிவுடை நம்பி எழுதியது
'பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார்கள் ?'

அதற்கான பதில்
சீனிவாச ராவ், A.K.S.ஐயங்கார், பி.ராமமூர்த்தி போன்றவர்கள் என்ன செய்தார்கள், யாருக்காக
போராடினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.பிராமணர்கள் காங்கிரஸ் இயக்கத்திலும், கம்யுனிஸ்ட்
இயக்கத்திலும் பெருமளவு பங்கேற்றனர். அப்போது பெரியார் ஆங்கில ஏகாதிப்பத்தியத்தின் பாதந்தாங்கிகளுடன் கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்தார்.ஈரோட்டு திட்டத்தை கைவிட்டார்.அதன்மூலம் சமரசம் செய்துகொண்டு தன்னை காத்துக் கொண்டார்.ஆனால் காங்கிரஸ்,கம்யுனிஸ்ட் இயக்கங்கள் ஆங்கிலேயரை தொடர்ந்து எதிர்த்தன. எனவேதான் ஆங்கிலேய அடிவருடி பெரியாருக்கு இரண்டையும் பிடிக்கவில்லை.

இன்று கம்யுனிஸ்ட் கட்சிகளில்
தலைவர்களாக இருப்பவர்கள்
ஒரு குறிப்பிட்ட சாதியைச்
சேர்ந்தவர்கள் அல்ல. தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு தலித்,
திரு டி.ராஜா CPI தேசிய செயலளாராக இருக்கிறார்.
எனவே எதையும் தெரிந்து
கொண்டு எழுதுங்கள்.

said...

Cr did u see such two articles at https://vinavu.wordpress.com.

said...

vanakkam thozhar

said...

//பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார்கள் ? (இன்னும் பிராமணர்களாகவே உள்ளார்கள்) - ///


மேலேயுள்ளது அறிவுடை நம்பி சொன்னது. இதில் பிராக்கெட்டில் இருப்பதை அனானி படிக்க மறந்துவிட்டார் போல தெரிகிறது. அறிவுடை நம்பி குறிப்பிடுவதாக நான் புரிந்து கொண்டது: "தலைமையில் பார்ப்பனர் இருப்பதையல்ல மாறாக அவர்கள் பார்ப்பனர்களாகவெ தொடர்வதையே அவர் குறிப்பிடுகிறார்".

ரெண்டு விசயம் இருக்கு,

ஒன்னு இங்க CPI/CPMனுடைய ஊசாலாட்ட திரிபுவாத அம்சங்களை முன்னிறுத்தியே கட்டுரை இடப்பட்டுள்ளது. அதனைத்தான் நான் வலியுறுத்தி பேச முடியும்.

ரெண்டு, அறிவுடை நம்பி பார்ப்பான் கட்சி தலைமையில் இருந்தால் தவறு என்ற கருத்தை சொல்லியிருந்தாலும் கூட அதற்க்கு விளக்கம் தர வேண்டியது இங்கு எனக்கு முக்கியமாக படவில்லை. அதை விட CPI/CPMனுடைய பார்ப்ப்னிய நடவடிக்கைகளை விமர்ச்னம் செய்வதே எனக்கு முக்கியம். ஏனேனில் அறீவுடைநம்பிக்கு இந்த கருத்து வலுப்பேறுவதற்க்கு காரணமே கட்சியின் பார்ப்ப்னிய நடவடிக்கைகக்ள்தான்.

இது தவிர்த்து சில விசயங்கள். தமிழகத்தையே ஒரு பெண் முதல்வர் ஆட்டிபடைப்பதன் அர்த்தம் பெண்கள் விடுதலையடைந்துவிட்டார்கள் என்பது அல்ல.

பாஜகாவினுடைய தலைமையில் ஒரு பிற்படுத்தப்பட்ட சூத்திர சாதியைச் சேர்ந்தவனான மோடி இருப்பதன் அர்த்தம் அது பார்ப்ப்னிய கட்சியல்ல என்பது அல்ல. RSS இந்துத்துவ அமைப்புகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேந்தவர்கள் இருப்பதன் அர்த்தம் அந்த அமைப்பு சமூக நீதியை நிலைநாட்டிவிட்டது என்பது அல்ல. இதே போலத்தான் CPIயில் ஒடுக்கப்பட்டவர் இருபப்தன் அர்த்தம் அந்த கட்சி பார்ப்ப்னிய இயல்பை விட்டொழித்துவிட்டது என்பது அல்ல.

இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேந்தவரான திரு நாராயணனோ அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த கோமாளி அப்துல கலாமோ இருந்ததன் அர்த்தம் இந்தியா ஒரு ஜனநாயக நாடாக மாறிவிட்டது, தனது பார்ப்னிய வர்க்க இயல்பை இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இப்படியெல்லாம் கதை கட்டி வருபவர்களும் கூட இதே CPI கும்பலதான் என்பதும் இங்கு மனதில் இருத்த்தத்தக்கது.

பிறப்பின் அடிப்படையில் ஒருவனை பார்ப்பனியத்துடன் அடையாளபபடுத்துவது எமக்கு ஏற்புடையதல்ல ஆயினும் அது சார்ந்த அறிவுரைகளை இங்கு கொடுக்க எனக்கு அவகாசமில்லை. அதனை விட பார்ப்ப்னியத்தை அம்பலப்படுத்துவதற்க்கே எனது நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன். உங்களுக்கு விருப்பமெனில் அறீவுடை நம்பியுடன் அது சார்ந்த விவாதத்தில் தாராளமாக ஈடுபடலாம் நேரமிருந்தால் நானும் வருகிறேன்.

நன்றி,
அசுரன்

said...

தோழர் வினவு,

தங்களது தளத்திற்கு முன்பே வந்திருந்தேன். ஆயினும் கடந்த சில நாட்களாக இணையத்தில் செலவழிக்க நேரமில்லை எனவே தளம் குறித்து கருத்துச் சொல்வதை தவிர்த்திருந்தேன். உங்களது அம்ர்நாத் சோம்நாத் ஒப்பீட்டு கட்டுரை, மற்றும் இப்பொழுது இட்டுள்ள பீச் வாலிபால் கட்டுரை இரண்டையும் படித்தேன்.

குறிப்பாக பீச் வாலிபால் குறித்த கட்டுரை வெகு அருமை. இந்த பின்வரும் வரிகள் முத்தாய்ப்பாக இருந்தன

//பார்ப்பனிய நிலப்பிரபுத்துவம் பாதுகாப்பு என்ற பெயரில் பெண்ணை அடிமைப் படுத்துகிறது. உலகமயத்தின் முதலாளித்துவமோ சுதந்திரம் என்ற பெயரில் பெண்ணைக் கடித்துக் குதறுகிறது. இத்தகைய வக்கிர நிகழ்ச்சிகளை நாம் உடனுக்குடன் எதிர்ப்பது//

இந்த அம்சத்தில் தோழர் ராயகரன் தளத்தில் உலகமயம் பெண்களை எப்படி வக்கிரமாக கையாள்கிறது என்பதைப் பற்றிய கட்டுரைகள் வந்துள்ளன. படித்துப் பார்க்கலாம்.

பேசலாம் இன்னும்....

தோழமையுடன்,
அசுரன்.

said...

"அதற்கான பதில்
சீனிவாச ராவ், A.K.S.ஐயங்கார், பி.ராமமூர்த்தி போன்றவர்கள் என்ன செய்தார்கள், யாருக்காக
போராடினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.பிராமணர்கள் காங்கிரஸ் இயக்கத்திலும், கம்யுனிஸ்ட்
இயக்கத்திலும் பெருமளவு பங்கேற்றனர். அப்போது பெரியார் ஆங்கில ஏகாதிப்பத்தியத்தின் பாதந்தாங்கிகளுடன் கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்தார்.ஈரோட்டு திட்டத்தை கைவிட்டார்.அதன்மூலம் சமரசம் செய்துகொண்டு தன்னை காத்துக் கொண்டார்.ஆனால் காங்கிரஸ்,கம்யுனிஸ்ட் இயக்கங்கள் ஆங்கிலேயரை தொடர்ந்து எதிர்த்தன. எனவேதான் ஆங்கிலேய அடிவருடி பெரியாருக்கு இரண்டையும் பிடிக்கவில்லை.

இன்று கம்யுனிஸ்ட் கட்சிகளில்
தலைவர்களாக இருப்பவர்கள்
ஒரு குறிப்பிட்ட சாதியைச்
சேர்ந்தவர்கள் அல்ல. தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு தலித்,
திரு டி.ராஜா CPI தேசிய செயலளாராக இருக்கிறார்.
எனவே எதையும் தெரிந்து
கொண்டு எழுதுங்கள்."

தாமதமான பதிலிற்கு மன்னிக்கவும்.

அனானி சொன்னது போல,

பெரியார் ஆங்கிலேயரை ஆதரித்து எத்தனை பேருக்கு வேலை வாங்கித் தந்தார் என்று சொல்ல முடியுமா ?

பிராமணர்கள் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து குலக்கல்வி திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை கொண்டு வந்தார்களே !! இதுதான் பிராமணர்கள் செய்த சேவையா ?

கொல்லைப்புறம் வழியாக கவர்னர் ஜெனரலாக வந்தது யார் பெரியாரா ? அதன் மூலம், இந்திய அதிகார பீடம் முழுவதும் ஒரே பூணுலாக தொங்குகிறெதே ? இன்று வரை வேறு யாரும் வர முடிய வில்லையே ? (இப்போதைய கணக்கெடுப்பின் படி, 2% பிராமணரல்லாதவரே மிக உயர்ந்த பதிவிகளில் உள்ளனர். மீதி 98 % பதவிகளை அம்பிகள் தான் அலங்கரித்துக் கொண்டு "தேச பஜனை" பாடிக் கொண்டு இருக்கிறார்கள். அதுதான் ஆங்கிலேயரை அம்பிகளின் ஆச்சாரியார் 'எதிர்த்தன்' விளைவா ?


பி.ராமமூர்த்தி எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா அம்மையாரோடைய வலைய வந்தாரே ! அது ஏன் ?

பாலக்காடு போன்ற பகுதிகள் கேரளத்தோடு சேர்க்கப் பட்ட போது, பி.ராமமூர்த்தி யாருக்கு ஓட்டளித்தார் என்று தெரியுமா ?

அனானியே ! பெரியார் என்ற மாமனிதரால் தான் எங்களைப் போன்ற சாமானியர்கள் எல்லாம் இணையத்தில் சிண்டைப் பிடித்து எழுத முடிகிறது.

அனானியே ! தைரியம் இருந்தால் உங்கள் உண்மையான முகத்தைதான் காட்டுங்களேன்.

said...

'பி.ராமமூர்த்தி எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா அம்மையாரோடைய வலைய வந்தாரே ! அது ஏன் ?'

பி.ராமமூர்த்தி சிபிஎம் தலைவர்.சிபிஐ
எமர்ஜென்ஸியை ஆதரித்தது.சிபிஎம்
எதிர்த்தது.அதன் தலைவர்கள் பலர்
சிறையில் தள்ளப்பட்டனர்.

'பாலக்காடு போன்ற பகுதிகள் கேரளத்தோடு சேர்க்கப் பட்ட போது, பி.ராமமூர்த்தி யாருக்கு ஓட்டளித்தார் என்று தெரியுமா ? '

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்
என்று புரியவில்லை.
‘பெரியார் ஆங்கிலேயரை ஆதரித்து எத்தனை பேருக்கு வேலை வாங்கித் தந்தார் என்று சொல்ல முடியுமா ?'

ஆங்கிலேயரை ஆதரிப்பதைத்தானே அவர் வேலையாகச் செய்தார் :)

'அனானியே ! பெரியார் என்ற மாமனிதரால் தான் எங்களைப் போன்ற சாமானியர்கள் எல்லாம் இணையத்தில் சிண்டைப் பிடித்து எழுத முடிகிறது.'

என்னைப் போன்ற சாமனியர்கள்
அதற்கு பதில் தர முடிகிறது.
காரணம் பெரியார் அல்ல.
அரசியல்சட்ட மேதை அம்பேத்கர்,
நேரு, காந்தி போன்றவர்களால்.

said...

அது யாருயா அது நேரு காந்தி? அவிங்கல்லாம் CPI உறுப்பினர்களா? சமூக நீதியில் நேரு, காந்தியினுடைய பங்கு என்பது குறித்தும் அனானி விளக்கினால் சிறப்பாக இருக்கும்.

பார்ப்ப்னியத்திற்க்கு எதிராக போராடி உழைக்கும் மக்களுக்கு சுயமரியாதை கிடைக்க வழி செய்தது பெரியார் அம்பேத்கார். அனானி பெரியாரை நிராகரிக்கிறார் மாறாக பெரியார், அம்பேத்கருக்கு எதிராக எல்லா வேலைகளும் செய்த காந்தி நேருவை சமூக நீதிக்கு போராடியவர்களாக சித்தரிக்கிறார். அனானி அவர்களின் நோக்கம் பெரியாரை சிறுமைப் படுத்துவது அன்றி வேறல்ல.

எனக்கு ஒரு சந்தேகம் உண்மையிலேயே CPIயில் பார்ப்பனியம் என்ற விமர்சனம் அனானிக்கு கோபம் தருகிறதா அல்லது பார்ப்ப்னியம் என்ற விசயத்தை நாம் பேசி வருவதே இந்த அனானிக்கு கோபமா? எனக்கு என்னவோ ரெண்டாவது விசயம்தான் தோன்றுகிறது. குறிப்பாக இப்படிப்பட்ட அரசியலை (இடதுசாரி அடிப்படை + வலதுசாரி அரசியல்) செய்யும் ஒரு பதிவர், அசுரனில் அனானியாகவே வாழ்ந்து வரும் பதிவர், ஏனோ நினைவில் வந்து செல்கிறார்.

இந்த விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொண்டு, CPI கட்சியில் பார்ப்ப்னியம் இருந்ததா இல்லையா, CPI ஒரு துரோக கட்சியா? என்கிற அம்சங்களிலான பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கிறேன்.

அசுரன்

Related Posts with Thumbnails