ராஜீவின் புத்திரியும், நளினியும், IPL 20/20யும் - மேன்மக்கள் மேன்மக்கள்தான்!!!
கவிதைக்கு நன்றி அரசுபால்ராஜ்
வேலூர் சிறையில்
கண்ணீரால் முறையிட்ட
ஆனந்த பவனத்து
குலக்கொழுந்துக்கு,
நளினி
என்ன பதில்
சொல்லியிருக்கக் கூடும்?
தெரிந்து கொள்ள
யாருக்கும் ஆர்வம் இல்லை.
பதில் கிடக்கட்டும்.
இந்தப் புதுமை
புல்லரிக்க வைக்கவில்லையா?
குற்றவாளி
தனது குற்றத்தை உணர்ந்து
குமைய வைக்கும் கண்ணீர்...
மனங்களிடையேயான
அகழிகளை நிரப்பும்
பாதிக்கப்பட்டவர்களின்
பரிசுத்தமான கண்ணீர்...
என்ன இருந்தாலும்
மேன்மக்கள் மேன்மக்களே!
ஆனால்,
கேவலம்
அவ்வாறு
கண்ணீர் சிந்தி கதறியழும்
வாய்ப்பையேனும்
என்றைக்காவது
எமக்கு வழங்கியிருக்கிறீர்களா
எசமானர்களே...?
தகப்பன் பாசம் கூட
சீமாட்டிகளுக்குத்தான்
சொந்தமோ?
மணிப்பூரின் தாய்மார்கள்
மன்மோகன் சிங்கை சந்திக்கவும்,
நரோடா பாட்டியாவின்
இசுலாமியக் குழந்தைகள்
மோடியை கண்டு முறையிடவும்...
முறையிட அல்ல,
மனுக் கொடுப்பதேனும் சாத்தியமா?
இவற்றுக்கும்
உளவுத் துறை
உறுதுணையாய் வருமா?
சீமாட்டிகளின்
பொழுதுபோக்குகளில்
சுவாரஸ்யத்திற்கு
பஞ்சமில்லை.
அதனால்தான்
அடுத்த சில நாட்களில்
அரை மணி நேரத்திற்கு
ஒரு விவசாயி
தற்கொலை செய்து கொள்ளும்
இழவு நாட்டில்,
சற்றும் துணுக்குறாமல் நடைபெறும்
வக்கிரக் கொண்டாட்டத்தில்
அம்மையார் பிரசன்னமானார்.
வேலூர் சிறை 'த்ரில்'
அலுத்துப் போயிருக்கலாம்.
ஷாருக் கானின் அருகாமையில்
புதிய 'த்ரில்'
தேவைப்பட்டிருக்கலாம்.
அல்லது
அங்கும் கூட
அன்பிற்குரிய
அப்பா தென்பட்டிருக்கலாம்.
உண்மைதானே,
21-ஆம் நூற்றாண்டுக்கு
இந்தியாவை அழைத்துச் செல்லும்
ராஜீவின் கனவு
20-20-ல் தானே நிறைவேறுகிறது...
ஆனால்,
பிரியத்திற்கிடமற்ற
பிரியங்கா அம்மையாரே...
ஒன்றை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்...
தண்ணீரை விட மட்டுமல்ல,
கண்ணீரை விடவும்
இரத்தம் அடர்த்தியானது.
7 பின்னூட்டங்கள்:
வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கை இல்லை.. இருந்தாலும் எழுதுகிறேன்..... உலகில் எது நடந்தாலும் உங்களுக்கு தப்புதான் போலும்... பிரியங்கா நளினி சந்திப்பு ஒரு சாதரண நிகழ்வு.. சரி, தவறு என்று ஆராய்வது கூட அவசியமற்ற ஒரு நிகழ்வு. அவர் எதற்கு வந்தார்? தெரியாது.... என்ன பேசினார்.. தெரியாது. வெளி வரும் செய்திகள் உண்மையா... புரட்டா? தெரியாது.. ஆனால் அதை குறை சொல்ல மட்டும் நன்றாக தெரியும்... நல்ல நியாயம்..
புரட்சி, செம்படை, செங்கொடி, மக்கள் புரட்சி, கலகம்.... இதெல்லாம் பேச நன்றாகத்தான் இருக்கும்... நடைமுறைக்கு சாத்தியமா என்று பாருங்கள் தோழரே...
மறுபதிப்பு செய்தமைக்கு நன்றி தோழர் அசுரன்.
இந்த வாரம் குமுதம் படித்துப் பாருங்கள்..
நளினி சொல்லியிருக்கிறார்.
"ஏறக்குறைய 50 நிமிடங்கள் என்னிடம் (பிரியங்கா) பேசினார். பேச்சு முழுக்க ஆங்கிலத்தில் இருந்தது. பேசி விட்டு போன பிறகு என் மனபாரம் குறைந்தது. நான் எந்தவிதத் தவறும் செய்யவில்லை என்பதை அவர் புரிந்து கொண்டார் என்பதை அவர் முகத்தில் ஏற்பட்ட புன்சிரிப்பு மூலம் தெரிந்து கொண்டேன்."
வாழைப்பழத்தில் ஊசியேற்றும் சாணக்கியப் பார்ப்பனர் ஞாநி இந்த சந்திப்பின் மூலம், "மறப்போம், மன்னிப்போம்" என்ற அண்ணாவின் வாசகத்தை மாற்றான் தோட்டத்து மல்லிகை (ஞாநியின் சொற்கள்) பிரியங்கா நிறைவேற்றி ஒரு முன்னுதாரணமாக திகழ்வதாக தொடங்கி ஓவராக, 'ஓ ' போட்டிருக்கிறார்.
கூஜாக்கள்தான் கூச்சல் போடுகிறார்கள்.ஆனால், பிரியங்கா இதுவரைக்கும் தான் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ஒருபோதும் சொல்லவில்லை. ஏன் சந்தித்தீர்கள் என்பதற்கு பிரியங்கா சொன்ன பதில், "coming in to terms of loss"(ஏதாவது புரிந்ததா,..இழப்பை புரிந்து கொள்கிறாராம்...)
சரி அப்படியே வைத்துக் கொள்வோம். நேரடி சம்பந்தமில்லாத, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முருகனை நேசித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை சந்திப்பதன் மூலம் இழப்பை புரிந்து கொள்ள முடியுமா? மின்சாரமில்லாத வவுனியாக் காடுகளுக்கு சென்று, நேரடியாக பிரபாகரனை சந்திக்கலாமே.
தகப்பன் பொற்பாதம் பட்டு அமைதிப்படை பிறந்தது. மகளின் பொற்பாதம் பட்டு, அமைதி பூ பூக்குமில்லையா? ஞாநி சொன்னது போல அதற்கு பிறகாவது விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அரசுக்கும் 'அறிவு' வரலாம். அப்படிச் செய்யாமல் வேலூர் சிறைக்கு சென்றதை எப்படி புரிந்து கொள்வது,
ஒரு 'த்ரில்' என்பதைத் தவிர? ஞாநிகளுக்கும், அவர்களது மகாராணிகளும் மட்டுமே இத்தகைய 'த்ரில்'-களை சிலாகித்துக் கொண்டிருக்க முடியும். நளினியும், நளினி போன்ற அப்பாவிகளும் மேன்மக்களின் பொழுதுபோக்குகளில் தாங்கள் மோட்சமடைந்ததாக எண்ணி பரவசப்படலாம். ஆனால், அறிவு நாணயம் உடையவர்கள் சிந்திக்க வேண்டும்.
சொறிங்க சாரங்கன் ஆப்பிசர்...
அப்பாலிக்கா அந்த(profile) போட்டோ வுல சும்மா குஜாலிக்கா போஸ் கொடுத்துனுக்கீறிங்க.... சூப்பரப்பு...
அசுரன்
//சரி அப்படியே வைத்துக் கொள்வோம். நேரடி சம்பந்தமில்லாத, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முருகனை நேசித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை சந்திப்பதன் மூலம் இழப்பை புரிந்து கொள்ள முடியுமா? மின்சாரமில்லாத வவுனியாக் காடுகளுக்கு சென்று, நேரடியாக பிரபாகரனை சந்திக்கலாமே.
தகப்பன் பொற்பாதம் பட்டு அமைதிப்படை பிறந்தது. மகளின் பொற்பாதம் பட்டு, அமைதி பூ பூக்குமில்லையா? ஞாநி சொன்னது போல அதற்கு பிறகாவது விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அரசுக்கும் 'அறிவு' வரலாம். அப்படிச் செய்யாமல் வேலூர் சிறைக்கு சென்றதை எப்படி புரிந்து கொள்வது,//
இத ஏதோ உலகமாஹா முக்கிய வரலாற்று நிகழ்வு போல ஞானியும் குமுதமும் சிலாகித்து எழுதியுள்ளன. அந்த அம்மா பிரியங்கா ஏதோ போற போக்குல உப்புமா சாப்பிட்ட மாதிரி நளினிய சந்திச்சுட்டு போயிருச்சி இவிங்க அத வைச்சிக்கிட்டு ஆடுற ஆட்டம் வக்கிர கூத்தாக இருக்கு. ஞானியோட ஆட்டம்தான் அதி வக்கிரமாக இருக்கிறது.
இந்த அக்காவ வன்னி காட்டுக்கு அனுப்பி பிராபகரன சந்திக்க சொன்ன ஐடியா நல்ல விசயம். ஓ.... ஞானி அவர்கள் இதனை பரிசீலித்து பரிந்துரைத்தால் வரலாறு அவரை போற்றும்.
ஏன்னாக்க இவிங்களுக்கெல்லாம் முன்னோடியா துன்பியல் சம்பவம்னு அப்பீசியலாவே கேஸ கிளோஸ் பன்னிவுட்டாரு பிராபகரன் சார்.
//அப்படிச் செய்யாமல் வேலூர் சிறைக்கு சென்றதை எப்படி புரிந்து கொள்வது,
//
அப்படி செய்யாமல் வேலூர் சிறைக்கு சென்றதை ஏற்கனவே சொன்னது போல உப்புமா சாப்பிட சென்றதாக புரிந்து கொள்ளலாம். புதிய உணர்வுகளை வெறி கொண்டு தேடும் மேல்தட்டு மனோபாவமாக புரிந்து கொள்ளலாம் அதாவது நீங்கள் சொன்னது போல.
உண்மையிலேயே இந்த அக்கா இழப்ப புரிந்து கொள்ளனும்னா அது அமைதிப்படை பாதம் பட்ட ஈழத்திற்க்கு சென்று வந்தால்தான் புரிந்து கொள்ள முடியும்(அதி அற்புத புதிய உணர்வாகவும் இருக்கும்). என்ன புரிந்து கொண்டதை நமக்கு ஆங்கிலத்தில் புரியாத வரிகளில் விளக்குவதற்க்காக திரும்ப வரு முடியுமா என்பதற்க்கு கேரண்டி இல்ல.
அந்த அக்கா அங்க போயி இழப்ப புரிஞ்சிக்குமா? திரும்பி வரு முடியுமா? திரும்பி வந்து கருத்து சொல்லுமா? சொன்ன கருத்து பிரியற மாதிரி இருக்குமா? இதெல்லாம் நம்ம கவலையில்ல என்பது வேறு விசயம். ஒருவேள சாரங்கன் கவலைப்படலாம்(சோறிங்க சாரங்கன் சார் உங்க பேர விழித்துவிட்டேன்).
சில இழப்புகளை கால கடந்த பிற்பாடு புரிந்து கொள்ள இயலாதவை - சிலருக்கு.
ராஜிவ் என்ற துரோகியின் சாவுக்கு சந்தோசப்பட வேண்டியவர்கள் அதை தவறு என்று சொல்வதன் அரசியல் பின்னணி அவலமானது. அது ஈழத்தின் அரசியல் அவலத்துடனும், கையறு நிலையிலும் பொதிந்துள்ளது.
கருத்திற்கு நன்றி தோழர் அரசு பால்ராஜ்
அசுரன்
/**************************************
புரட்சி, செம்படை, செங்கொடி, மக்கள் புரட்சி, கலகம்.... இதெல்லாம் பேச நன்றாகத்தான் இருக்கும்... நடைமுறைக்கு சாத்தியமா என்று பாருங்கள் தோழரே...
**************************************/
200 ஆண்டுகளுக்கு முன் வானில் பறப்பது அன்றைய நடை முறைக்கு சாத்தியமில்லாத விஷம் தான்.
ஆனால் இன்று எது நடைமுறை என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
//200 ஆண்டுகளுக்கு முன் வானில் பறப்பது அன்றைய நடை முறைக்கு சாத்தியமில்லாத விஷம் தான்.
ஆனால் இன்று எது நடைமுறை என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.//
நல்ல கருத்து வெங்கட்ராமன்.... நன்றி
//200 ஆண்டுகளுக்கு முன் வானில் பறப்பது அன்றைய நடை முறைக்கு சாத்தியமில்லாத விஷம் தான்.
ஆனால் இன்று எது நடைமுறை என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.//
நல்ல கருத்து வெங்கட்ராமன்.... நன்றி
Post a Comment