பாரதியார், எஸ்.வி.ராஜதுரை மற்றும் சிலகேள்விகள்!!!
மார்க்சிய அறிஞர் என்றும் பெரியாரியல் மேதை என்றும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி என்றும் போற்றப்படும் எஸ்.வி.ராஜதுரையின் சொற்பொழிவு ஏப்ரல் 11 அன்று ரோஜா முத்தையா நூலகக் கட்டிடத்தில் நடைபெற்றது. தலைப்பு “ஃபுலே முதல் பெரியார் வரை: சுயமரியாதை ஏடுகள்”.
மகாத்மா புலே, அம்பேத்கர், பெரியார் ஆகிய மூவரும் ஆற்றிய தொண்டுகளை ஒப்பிட்டுப் பேசி வந்த எஸ்விஆர், சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசும்போது அக்காலகட்டத்தில் சாதிகுறித்து இம்மூவரைத் தவிர பிற அறிவுஜீவிகளின் கருத்து என்னவாக இருந்தது என்பதைத் தொட்டுச் செல்ல பாரதியை துணைக்கழைத்தார். இந்து பத்திரிக்கையில் ‘அரசியல் சீர்திருத்தங்களை விட சமூக சீர்திருத்தமே முதலில் செய்யப்பட வேண்டும்’ எனும் சங்கரன் நாயரின் கருத்தை ஆதரித்து பாரதி எழுதிய கடிதத்தைப் பற்றிக் குறிப்பிட்ட எஸ்விஆர், பாரதியிடம் வெளிப்பட்ட தடுமாற்றத்தையும் சரியாகவே குறிப்பிட்டார். ‘சங்கரன் நாயர் சொல்வது போல முதலில் செய்யப்பட வேண்டியது சமூக சீர்திருத்தமே. இதற்கு திலகர் வழிகாட்டி இருக்கிறார்’ என்று பாரதி எழுதிய கடிதத்தை சுட்டிக் காட்டிய எஸ்விஆர் ‘இங்குதான் நமக்குப் பிரச்சினை வருகிறது. ஒன்று சமூக சீர்திருத்தத்தை மட்டும் பேசி இருக்க வேண்டும். அல்லது திலகரை மட்டும் குறிப்பிட்டிருக்க வேண்டும். திலகர் சமூக சீர்திருத்தங்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் செயல்பட்டார்?” என்றும் பூலே,பெரியார் அம்பேத்கர் ஆகியோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பகவத்கீதையை பாரதியார் உயர்த்திப் பிடித்தார்’ என்றும் எஸ்விஆர் ஒப்பிட்டுப் பாரதியின் வர்ணாசிரம ஆதரவுப் போக்கை இலேசாக சுட்டிக் காட்டினார்.
இதை எல்லாம் சொல்வதற்கு முன், பீடிகையாக பாரதியார் இந்துவுக்கு எழுதிய கடிதங்களைத் தேடி எடுத்த ஆ.ரா. வெங்கடாசலபதியைக் கருத்தில் கொண்டு ‘இந்த இளம் முனைவர் ஆரம்பகட்டத்தில் பாரதியார் பிரெஞ்சு இந்தியாவில் இருந்து வெளியேறி பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் வருவதற்காக அழாத குறையாக தெண்டனிட்டு கவர்னருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதத்தைத் தேடி எடுத்தவர். அப்போது பாரதி எதுவுமே செய்யாமல் புதுவையில் முடங்கிக் கிடப்பதற்குப் பதில் எழுதிக் கொடுத்து விட்டு இந்தியாவிற்கு வந்து இயங்கலாமே எனும் உணர்வில் அப்படி செய்திருக்கக் கூடும். மேலும் அவர் அந்தக் காலகட்டத்தின் குழந்தை. இந்தக் கடிதத்தின் மூலம் அவரை மலினப்படுத்தக் கூடாது. அவருடைய அரசியல் மீது எனக்கு விமர்சனங்கள் இருப்பினும் தமிழின் நவீனப் போக்குகளுக்கு பாரதி வற்றாத ஊற்றுக்கண்.” என்றெல்லாம் சலபதியிடம் சொன்னதாக அறிஞர் தனது சொற்பொழிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அறிஞர் எஸ்விஆர், ஆய்வு என்பது எவ்வாறு காய்தல் உவத்தலின்றி இருக்கவேண்டும் என்றும் அறம் போதித்தார். “பாரதி ஆய்வாளர்கள் கூட பாரதியை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்திருக்கும் இரண்டு நூல்களையும் படித்து விட்டுத்தான் ஆய்வு முடிவுக்கு வரவேண்டும். அதில் ஒரு நூல் பாரதியை ஆர்.எஸ்.எஸ். இயக்க முன்னோடி என்று கூடக் கடுமையாக விமர்சித்திருந்தது. அந்த இரண்டு நூல்களின் ஆசிரியர்களில் ஒருவர் இங்கு வந்திருக்கிறார்” என்று நான்கைந்து முறை அந்த ‘இரண்டு நூல்’களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த அறிஞரோ சொற்பொழிவின் இறுதி வரை நூல்களின் பெயரைச் சொல்லவில்லை. சொற்பொழிவைக் கேட்க வந்திருந்தவர்களில் நாம் அந்த ஒருவரைத் தேடினோம். பாரதிய ஜனதாப் பார்ட்டி எழுதிய மதிமாறன் வரவில்லை. பாரதிபக்தர்களின் கள்ளமவுனம் நூலின் ஆசிரியர்களில் ஒருவரான மருதய்யன் எங்காவது ஒளிந்திருக்கிறாரா என்று தேடும் அளவிற்குக் கூட்டமும் அதிகமில்லை. அறிஞரையும் சேர்த்து 31 பேர்கள்தான் இருப்பர். ‘திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார்’ ஆசிரியர் வாலாசா வல்லவன் முதல்வரிசையில் அமர்ந்திருந்தது, கொஞ்ச நேரம் கழித்த பிறகுதான் தெரிந்தது.
கேள்வி நேரத்தின்போது ஒரு நண்பர் கேள்வி எழுப்பினார். “நீங்கள் சொன்னீர்களே மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பாரதி எதையாவது உருப்படியாகச் செய்யலாமேன்னு. பாரதி மன்னிப்புக் கடிதம் கொடுத்திட்டு வந்த பிறகு புரட்சி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லையே? கடலூர் சிறையில் இருந்து வந்தபிறகு அவர் செய்த காரியம் என்னவென்றால் எட்டப்ப மகாராஜாவிடம் தூது விட்டு ‘தங்கள் குலவம்ச வரலாற்றை சிறப்பாக எழுதித்தருகிறேன்’ என்றுதானே செயல்பட்டிருக்கிறார்” என்றார். எஸ்விஆர் இடைமறித்து “பாரதி, அரசியல்வாதி அல்ல. அவர் கவிஞர். அவர் கடுமையான வறுமையில் வாடியவர் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். இளமையிலும் சரி பின்னாளிலும் சரி அவர் புரட்சி ஏதும் செய்ததில்லை” என்றார். “இரண்டு நூல்கள் என்று சொன்னீர்களே! அதன் பெயரைக் கூறலாமே?” என்றதும் “அதுதான் பாரதிய ஜனதா பார்ட்டி..இன்னொன்னு வாலஜா வல்லவனோடது’ என்று குறிப்பிட்டார். (இத்தனைக்கும் மதிமாறனின் கட்டுரைத்தொடர் வெளிவந்த தலித்முரசுவிலே அக்கட்டுரைக்கு பக்கத்திலேயே எஸ்விஆர் கட்டுரைகளும் வெளிவந்தன. பெயரைக் குறிப்பிடாமலே இருக்கும் அளவிற்கு அந்த நூல், ‘அறிஞரை’ ரொம்பவே படுத்தி இருக்கிறது போல)
இன்னொருவர் எழுந்து நின்று “அப்படின்னா நீங்க சுஜாதாவை ஆதரிக்கிறீர்களா? ஏனென்றால் பாரதி,சுஜாதா இந்த ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. இரண்டு பேரும் செத்துப்போவதற்குக் கொஞ்சக்காலம் முன்பு பார்ப்பனர் சங்கத்தின் மாநாடு,பொதுக்கூட்டங்களில் போய்க்கலந்து கொண்டு சாதிப் பற்றாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டனர்” என்றார். இந்த விவாதம் இப்படிப்போனதுமே எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் கீழ் ‘புரட்சிகர’ நாடகங்களை நடத்தி வரும் அ.மங்கை ‘பாரதியும் சுஜாதாவும் ஒன்னா? ரெண்டு பேரும் வாழ்ந்த காலகட்டமும் ஒன்னா?’ என்று சாமியாட முனைந்தார்.
அறிஞர் ‘நான் சுஜாதாவை ஆதரிக்கலை’ என்றார். காலகட்டம் பற்றிய அ.மங்கையின் கேள்விக்குக் கூட்டத்தில் இருந்து கேள்வி கேட்ட முதல் நண்பர் “அவர்கள் வாழ்ந்த காலகட்டம் புரட்சிக்கு இளைஞர்கள் கிளர்ந்தெழுந்த கால கட்டம். ஜாலியன் வாலபாக் படுகொலையில் மக்கள் கொதித்தெழுந்த நேரம். அந்த நேரத்தில் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விட்டு ஒன்றுமே செயல்படாமல் பார்ப்பன சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்தானே பாரதி. தம்மிடம் இருக்கும் முரண்பாடுகளைக் களைந்து கொள்ள முயற்சித்து வெற்றி காண்பவர்கள்தான் கதாநாயகர்களாக இருக்க முடியும். முரண்பாடுகளிலிருந்து வெளியேற முடியாதவர்கள் நிறைய பேர் அக்காலகட்டத்தில் இருந்தார்கள். நீங்கள் சொல்வது போல் பார்த்தால் அவர்கள் அனைவருமே கதாநாயகர்கள்தான். காலகட்டம் கோருவதை நிறைவு செய்ய முடிந்தவர்கள்தான் கதாநாயகர்களாக முடியும். பாரதியைக் கதாநாயகனாக முன்னிறுத்துவதால்தான் பிரச்சினை. ஒரு பெரியாரிஸ்டாக, மார்க்சிய லெனினியத்தைப் படித்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்துகொண்டு பாரதியை எப்படி ரசிக்க முடிகிறது?” என்று எஸ்விஆரிடம் கேள்வி எழுப்பினார்.
எஸ்விஆர் இதற்கு சரியான பதிலைக் கூறாமல் “இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற கவிஞர் அவர். அவர் காலகட்டத்தின் குழந்தை. நவீன தமிழ் அவரிடம் இருந்துதான் ஆரம்பமாகிறது. அதை மதிக்கிறேன்.” என்று சொல்லி நழுவிக் கொண்டார்.
இப்படி பாரதியாரை கவிஞர் என்று மட்டுமே ரசிக்கப் பழகியவர், இதற்கடுத்த கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் ‘பாரதிதாசன், சாதி உணர்வாளர்தான். அவர் தன் சொந்த சாதியில்தான் குடும்பத்தினருக்குக் கல்யாணம் செய்துவித்தார்’ என்று அறிஞர் நீட்டி முழங்கிக் கொண்டிருந்தார். பாரதியின் அரசியலைக் குறித்துக் கேள்வி கேட்டால் அவரின் கவிதையை சிலாகித்துக் கொள்ளும் அறிஞர், பாரதிதாசனை மட்டும் ஏன் கவிதைக்கு வெளியில் நின்று விமர்சிக்கிறார் என்பது நமக்குப் புரியவில்லை.
அன்று கேள்வி நேரம் முடிந்துவிட்டாலும் அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் பல இன்னும் மிச்சம் உள்ளன.
1) பெரியார் சமதர்மம் போன்று தலையணை தடிமனுக்குப் புத்தகம் எழுதும் பெரியாரியல் அறிஞர், பாரதி பற்றிய பெரியாரின் கருத்து என்ன என்பதை ஏன் பேசுவதில்லை?
2) பெரியாரைப் பின்பற்றும் அமைப்பினர், மரபாக பாரதியை அவனுடைய பார்ப்பன சார்பைக் காரணமாக்கி ஒதுக்கி வைத்துப் பாரதிதாசனை உயர்த்திப் பிடித்து வருவது அறிஞருக்குத் தெரியுமா? பெரியார் ஆய்வு மையத்தில் இருந்து கொண்டே பாரதிதாசனைத் திட்டிக் கொண்டும் பாரதியை உயர்த்திப் பிடிப்பதும் பெரியாரியல் சிந்தனையா? அந்தக் கருத்துக்களை திரிக்கும் செயல் இல்லையா?
3) பாரதிக்கு அடுத்து தமிழுக்கு தொண்டாற்றியவர் சுஜாதாதான் என்கிறார்களே? வெறுமனே தமிழை, இலக்கியத்தை மட்டும் ரசிப்பவர் எஸ்விஆர் என்றால் சுஜாதாவை மட்டும் உதறித் தள்ளுவது ஏன்?
4) பல இசங்களைக் கரைத்துக் குடித்து விட்டு இப்போதைக்கு பெரியாரியலை ஒருவழி பண்ணிக் கொண்டிருக்கும் எஸ்விஆர், நீதிக்கட்சியைப் பற்றிய பாரதியின் கருத்து பற்றி என்ன கருதுகிறார்? (‘இன்றைக்கு நாங்கள்தான் முன்னர் ஆண்டோம் என்பார்கள். . .. இப்படியே போனால் நாளைக்கு காக்கை குருவிகள் கூட நாங்கள்தான் முன்னர் ஆண்டோம் எனக் கூறி உரிமை கோருவார்கள்’ என்று பாரதி நீதிக்கட்சியின் கொள்கையை நக்கல் செய்து எழுதினார்.)
5) போகிறபோக்கில் ஒரு மனிதனுடைய சாரம் கடைசிக்காலத்தில் இல்லை என்ற எஸ்விஆரின் வாதத்தை நியாயப்படுத்துவதற்காக பெரியாரையும் மாவோவையும் கடைசிக்காலத்தில் தங்களது கொள்கைகளின்பால் நம்பிக்கையற்றுத் தனிமையில் புலம்பியதாக அவதூறு செய்ததுதான் எஸ்விஆரின் அரசியலற்றவாதத்தின் அற்பத்தனம்தானே? ஒரு வாதத்திற்காக எஸ்விஆர் சொல்வது உண்மை என்றால் கூட ‘கராறான கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது’ என்ற எஸ்விஆரின் பிழைப்புவாதக் கண்ணோட்டம்தானே நியாயப்படுத்தப்படுகிறது? விமர்சனம் என்று சொல்லவந்தால் நேர்மையாக பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலை.யில் இருந்து பெரியாரை விமர்சித்து விட்டு ராஜினாமா செய்ய வேண்டியதுதானே?
பாரதியை பாரதிக்குள் நின்று ஆய்வு செய்வதை விட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அறிவுஜீவிகளிடம் இருந்து தொடங்கலாம். ஜாலியன்வாலாபாக்கிற்கு கள்ளமவுனம் சாதித்த பாரதி, ஒருவேளை வசதிவாய்ப்புகள் பெற்ற நபராக இருந்திருந்தால், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கோ, ஃபோர்டு பவுண்டேசனுக்கோ தன்னுடைய கவிதைப்படைப்பைக் காணிக்கையாக்கி இருப்பார். தில்லைவாழ் அந்தணர்களுக்கு ஆதரவாக ஆரிய சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு பராசக்தியையும் அழைத்திருப்பார், பாரதி. தீட்சிதர்களோடு நின்று மீசைக்கும் வெண்ணெய் தடவிப் போரிட்டிருப்பார். சோ ராமசாமிக்கும் அர்ஜூன் சம்பத்திற்கும் வேலை குறைந்திருக்கும்.
எஸ்விஆருக்கோ அல்லது அறிவு ஜீவிகளுக்கோ தம்முடைய படைப்பிற்கு நேர்மையாகத் தாம் இருக்கவேண்டும் என்ற கட்டாயத்தைக் காலம் என்றென்றைக்கும் கோருகிறது. சொல்லுக்கும் செயலுக்கும் ஒற்றுமை இருக்கவேண்டும் என்பது சாதாரண மனிதர்களுக்கே பொருந்தும்போது பூஜ்யங்களுக்குத் தலைமை வகிக்கும் இவர்களுக்கோ செயலில் மாத்திரம் பிற்போக்கு அவசியமாகிறது. அதுதான் அவர்களது சாரமும் கூட. சமூகம் இப்படித்தான் எல்லோரையும் மதிப்பிடுகிறது. கள்ளுண்ணாமைக்குத் தனி அதிகாரம் எழுதிய வள்ளுவர் எழுதிய களைப்புத் தீர கள்ளருந்தினார் என்று ஒருக்கால் கூறினால் அதனை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? தன்னார்வக்குழுக்களிடம் தாங்கள் சோரம் போன வரலாற்றின் காலகட்டத்தை இப்படித்தான் நியாயப்படுத்துகிறார்கள், இன்றைய அறிவுஜீவிகள். இவர்களுக்கு வகைமாதிரி பாரதி.
பாரதியின் கவிதைகளை ரசிப்பதாகச் சொல்லும் எஸ்விஆர், மகாபாரதத்தினையும் ரசித்தாக வேண்டும். கம்பராமாயணத்தை ரசிக்கத் தெரிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ராமர் பாலப் பிரச்சினையில் மூடநம்பிக்கைக்கெதிராக அதாவது ராமாயணத்துக்கு எதிராகப் போராடுவதை எப்படி வேறு வேறாகக் கருதினார்களோ அப்படித்தான் எஸ்விஆர் பாரதியையும் ரசிக்கிறார். பெரியாரையும் ரசிக்கிறார்.
ஆதிக்க சாதியில் பிறந்து முற்போக்கை அதாவது பரந்துபட்ட மக்களின் விடுதலையை தங்களுடைய extra-curricular activity ஆகப் பார்க்கப் பழகிய அறிவுஜீவிகளுக்கு தத்துவமோ, கட்சியோ கட்டுப்பாடுகள் போலத்தான் தெரிகிறது. இது பாரதியிடமும் இருந்தது. அறிவுஜீவிகளாக மாறி இருந்தாலும், ஆதிக்க சாதிக்கோ, தன்னை உயர்சாதிக்காரன் போலக் காட்டிக் கொள்ளுவதில் அகவிருப்பம், தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சொந்த சாதியின் ஆதிக்கத்திற்கு எதிராக, அரசியல், பண்பாட்டு, கலாச்சாரத் துறைகளில் போராடுவதன் மூலமாகத்தான் உண்மையான கம்யூனிஸ்ட்கள் தங்களைப் புடம்போடுகிறார்கள். அதற்குக் கட்சியும் தத்துவமும் உதவுகின்றன. கட்சி சார்பற்ற அறிவுஜீவிகளுக்கோ தாங்கள் நிலை தடுமாறிய தருணங்களை நியாயப்படுத்தச் சொல்கிறது. அதுதான் பாரதியின் அவலத்தை அவனைக் கண்டுகொள்ளாத சமூகத்தைப் பழிக்கச் சொல்கிறது. அதுதான், தான் போர்டு பவுண்டேசன் முன்னாலும் எம்.எஸ்.சுவாமிநாதன் முன்னாலும் கைகட்டி நிற்க நேர்ந்த தருணத்திற்காக சமூகத்தைப் பழிக்கிறது.
எஸ்விஆர், பாரதி, புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்காததற்கான காரணமாக வறுமையை சுட்டிக்காட்டுகிறார். வறுமையிலோ அல்லது இக்கட்டான தருணங்களிலோதான் மனிதனின் சாரமான குணம் வெளிப்படுகிறது.
இன்றைக்கும் அரசியல் போராட்டங்களில் கலந்து கொள்வதற்கு இந்துத்துவா, மற்றும் வலதுசாரிகளுக்குத்தான் வறுமையின்மை முன்நிபந்தனையாகிறது. ஆனால் மா-லெ இயக்கங்களுக்கோ இது ஒரு பொருட்டல்ல. வறுமையின்மைதான் பாரதியின் முன்நிபந்தனை என்றால், அதை ஆர்.எஸ்.எஸ். மட்டும் தான் நிறைவு செய்ய முடியும். இல.கணேசனும், ராம.கோபாலனும் பாரதி இலக்கியத்தின் உள்ளடக்கத்தை ரசிப்பதன் மூலம் தங்களது அகண்டபாரதக் கனவிற்கு பாரதியைத் துணைக்கு அழைப்பது, பாரதி அன்பர்களுக்கு கண்ணில் பட்ட முள்ளாக உறுத்துவதே இல்லை.
பாரதியின் அன்பர்கள் உதிர்ந்து கொண்டிருக்கும் நிலப்பிரபுத்துவ இந்திய சமூகத்தின் பிரதிநிதிகள். இவர்களுக்கு முன்னோடிகள், 50 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் சினிமாவில் ‘பா’வரிசைப் படங்களைத் தந்துவிட்டுப் போய்விட்டார்கள். ஆம், கடந்த காலம் அற்பவாதிகளுக்குச் சொந்தமானது (நன்றி-கார்ல்மார்க்ஸ்).
நன்றி: இமெயிலில் மருதன்
19 பின்னூட்டங்கள்:
எஸ்.வி.ராஜதுரை, அ.மங்கை போன்ற பிழைப்புவாதிகளுக்கு சரியான சூடு கொடுத்துள்ளது, இக்கட்டுரை..
வாழ்த்துக்கள்
கட்டபொம்மன்
காரல் மார்க்ஸ் அவர்கள் வேலைக்காரியுடன் கொண்ட கள்ளத்
தொடர்பால் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. இந்த ஒன்றை
வைத்து காரல் மார்கஸை ஒழுக்க
விரோதி,மனைவிக்கு துரோகம்
செய்தவர் என்று அவர் எழுதியையும்,
அவரையும் தூக்கி எறிந்துவிடலமா?.
ராஜதுரை பாரதியை விமர்சிக்கின்ற
அதே வேளையில் அவர் பங்களிப்பையும் பாருங்கள் என்கிறார்.
பாரதி போன்ற ஒரு ஆளுமையை
அணுகுவதில் அவர் சொலவ்து சரியென்று கருதுகிறேன்.பாரதியின்
எழுத்துக்கள் அனைத்தையும்
நிரகாரிப்பீர்களா?
பெரியார் சுதந்திர போராட்டத்திலிருந்து விலகியிருந்த காலகட்டமும் உண்டு. எனவே
அவர் காலனியாதிக்கத்தின் அடிவருடி
என்று சொல்ல்விடலாமா.
அ.மங்கை போன்றவர்களை
பிழைப்புவாதிகள் என்று
சொல்பவர்கள் தாங்கள் ஏகாதிப்பத்தியத்தினை எதிர்த்து
எத்தகைய வீரஞ் செறிந்த போராட்டங்களை எங்கெல்லாம்
நடத்தியுள்ளார்கள் என்பதையும்
சொல்லட்டும்.
அய்யா அனானி,
பாரதியை நீங்க விமர்சனம் செய்யுங்க, தூக்கி வைச்சி ஆடுங்க. ஆனா அவர் ஒரு குட்டி முதலாளித்துவ அல்பவாதி என்ற அம்சத்திலும், அவர் ஒரு முற்போக்குவாதியாக நடித்தார் என்ற அம்சத்திலும், அவர் ஒரு புரட்சிக் கவிஞர் அல்ல என்ற அர்த்ததிலுமே நமது வாதம் உள்ளது.
மாறாக் அவர் மேற்சொன்ன அடைமொழிகளுக்கு பொருத்தமானவர் என்று நேரடியாக மறைமுகமாக கூறுவதன் மூலம் தமது சொந்த அல்பத்தனத்திற்கு வரலாற்று வழியில் ஆதரவு தேடுபவ்வர்களையே இங்கு விமர்சிக்கிறோம். இது பாரதி மீதான விமர்ச்னம் அதன் நேர் பொருளீல். அதன் உண்மையான பொருளில் இவை பாரதி உள்ளிட்ட அல்பவாதிகளின் மீதான் விமர்ச்னமே. பாரதி உள்ளிட்ட அறிவு நாணயமற்றவர்களின் மீதான் விமர்ச்னமே.
கார்ல் மார்க்ஸ் ஒரு அல்பவாதி, அறிவு நாணயமற்றவர் என்று உங்களால் நிரூபிக்க முடிந்தால் எழுதுங்கள் யார் வேண்டாம் என்கிறார்கள். கார்ல் மார்க்ஸ்க்கு கள்ள குழந்தை என்கிற கேள்விப் படாத புரளி வேறு நடுவில். கார்ல் மார்க்ஸ், தான் எழுதியவற்றுக்கு முரனாக, தனது ஆளுமையாக பொது வெளியில் முன்னிறித்தியதற்க்கு முரனாக நடந்திருந்தால் அது கட்டாயம் விமர்சினத்துக்கு உட்பட வேண்டியதே.
மாறாக ஒரு ஆளுமையுனுடைய படைப்புகள் என்கிற் அம்சத்தில், கார்ல் மார்க்ஸோ அல்லது பிற முற்போக்குவாதிகளோ பாரதியோ ஒன்றா? பாரதி அப்படி என்ன பங்களிப்பு செய்துள்ளார் என்று கூறினால் சிறப்பாக இருக்கும். வெறும் அழகியல்தான் அடிப்படையென்றால் சுஜாதவும் பாரதியும் ஒன்றே. இதைத்தான் நீங்கள் சொல்கிறீர்கள் என்றால் நீங்கள் விவாதம் செய்ய வேண்டிய ஆள் சாட்சாத் எஸ்வி ராஜதுரைதான் ஏனெனில் அவர் சுஜாதவை மறுதலிக்கிறார், பாரதியை தூக்கிப் பிடிக்கிறார்.
ஏன் சுஜாதவை ஆதரிக்கிறார்? பாரதியை தூக்கிப் பிடிக்கீறார் என்பதற்க்கு அவரிடம் பதில் இல்லை.
ஆனால் பாரதியை விமர்சனம் செய்யும் போது ஒரு குழந்தையை செய்வது போல செய்ய வேண்டும் என்று கோரும் போது பாரதி ஒரு கவிஞன் மட்டுமே என்கிறார். இந்த அம்சத்தில் சுஜாதவும், பாரதியும் ஒன்றுதானே என்றால் அதற்க்கு அந்த அறிவுஜீவியிடம் பதிலில்லை.
காலத்தின் அனைத்து பிரதான உணர்ச்சி வெடிப்புகளையும் ஒரு கலைஞன் தனது கலையில் பிரதிபலிப்பது பெரிய விசயமல்ல. மாறாக அதற்க்கு நேர்மையான நடைமுறை கொண்டிருந்தான என்பதுதான் ஒரு ஆளுமைய தூக்கி பிடிக்க நமக்கு அடிப்படையாகிறது. பாரதியை அவனது கலை பங்களிப்புக்காக தூக்கிப் பிடித்து ஆடுங்கள் உங்களை ஒரு நாய் கூட் சீந்தாது. எமக்கும் கவலையில்லை. அதை விடுத்து அவர் ஏதோ வராது வந்த மாமணி போல புளுகு மூட்டை பில்டப்புகள் கொடுத்து புனித வட்டம் கட்டுவதுடன் அல்லாமல் அவரது இந்துத்த்துவ கருத்துக்களுக்கும் முற்போக்கு அங்கீகாரம் கொடுப்பது போன்ற சூழல் இருந்தால் அதை பார்த்துக் கொண்டிருக்க இயலாது.
பாரதிக்கு ஒரு அளவுகோல் பிறருக்கு ஒரு அளவுகோல் என்று அனுகும் அறிவுஜீவிகளின் ரெட்டை அனுகுமுறையையே இதன் மூலம் நாம் சுட்டுகிறோம்.
கீழே உள்ளது எஸ் வி ஆர் சொன்னது.
//மேலும் அவர் அந்தக் காலகட்டத்தின் குழந்தை. இந்தக் கடிதத்தின் மூலம் அவரை மலினப்படுத்தக் கூடாது. அவருடைய அரசியல் மீது எனக்கு விமர்சனங்கள் இருப்பினும் தமிழின் நவீனப் போக்குகளுக்கு பாரதி வற்றாத ஊற்றுக்கண் //
அதென்னயா குழந்தை? அதுவும் அந்த காலகட்டத்தின் குழந்தை? அப்படியென்னா அவரை ஒரு குழந்தையாக கருதி பாராட்டி சீராட்டி பாதுக்காக வேண்டிய அவசியம்? அதுவும் மார்க்ஸிய அறிஞர் என்று சொல்லிக் கொள்பவருக்கு?
இதே பாரதி இருந்த காலகட்டத்தில்தான் வ.உ.சி இருந்தார். அவர் களத்தில் போராடிக் கொண்டிருந்த பொழுது, பிரிட்டிஸ்க்காரன் கண்ணில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்த பொழுது, இந்தியாவின் முதல் தொழிலாளர் போராட்டத்தை தூத்துகுடி, நெல்லை மாவட்டங்கள் ஸ்தம்பித்து போகும் படி நடத்திக் கொண்டிருந்த பொழுது இந்த குழந்தை என்ன செய்து கொண்டிருந்தது? காக்கை குருவி எங்கள் சாதி என்று பாட்டு எழுதிக் கொண்டிருந்தது. இது போன்ற கற்பனவாத அல்பைகளின் சமூக பயன் நெகடிவ்தான் அதுவும் பார்ப்பனிய அரசியல் சார்பு கொண்ட அல்பைகள் எனில் ரொம்ப ஆபத்து.
வ.உ.சி தனது கடைசிக் காலங்களில் சுத்தமாக பொது செயல்பாடுகளை ஒதுக்கிக் கொண்டார். அதனை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை அவரை காலகட்டத்தின் குழந்தை என்று சொன்னால்கூட அது தவறான சொல்லாடல் என்ற போதும் வ.உ.சியின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது என்ற அம்சத்தில் ஏற்றுக் கொள்ளலாம். பாரதி?....... தனது குருநாதன் திலகர் இறந்ததற்க்குக் கூட இரஙக்ல் கடிதம் எழுதாத அளவுக்கு பிரிட்டிஷ்க்காரனுக்கு கொடுத்த வாக்குறுதியை பாதுக்காத்த மொள்ளாமாறி குழந்தை அல்லவா?
இப்படி தனது சுயமுரன்பாடுகளின் மொத்த உருவமாக இருந்த ஒரு தனிமனிதரின் உள்ளக் குமுறல்களுக்கு அவற்றீன் கலை பங்களிப்புக்காக நீங்கள் காவடி தூக்குகிறீர்கள் எனில் அதில் எமக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் பாரதியை அனுதாபத்துடன் பார்க்கச் சொல்லும் நீங்கள் மற்றவர்களை அப்படி பார்ப்பதில்லையே ஏன்?
பெரிய புடுங்கி போன்று ஆ... ஊ.. என்று ஆழ நோண்டி பிறரை விமர்சிக்கும் நீங்கள் பாரதி என்றால் மட்டும் நாக்கை பாதியாக் வெட்டிக் கொண்டது போல வார்த்தைகளை மென்று துப்புவதேன்?
ஏனேனில் மீண்டும் அதேதான், பாரதி என்பவன் பாரதி ஆர்வலர்களதான். பாரதி மீதான் விமர்சனம் எஸ்விஆர் போன்ற அறிவு நாணயமற்ற தனி நபர்களின் மீதான் விமர்சனம்தான். எனவேதான் தானும் ஒரு எதிர்கால பாரதி என்பதை உணர்ந்தவர்களாக பாரதியின் மீதான விமர்சனத்தை எந்த அமசத்தில், எந்த அளவுக்கு வலுவாக வைக்க வேண்டுமென்பதில் மிக எச்சரிக்கையாக இருக்கீறார்கள் இவர்கள்.
எஸ்விஆர் என்னத்த பெரிதாக பாரதியை விமர்சித்து விட்டார்? சுயமரியாதை குறித்த ஒரு அரங்கில் பாரதி என்ற ஆளுமை பார்ப்பினியம் என்கிற ஆக கேவலமான அடிமைத்தனத்தின், சுயமரியாதை எதிர்ப்பின் பிரதிநிதியாக இருந்தது அல்லவா விரிவாக அம்பலப்படுத்தப்பட வேண்டியது? அதை செய்யாமல் பாரதியின் இரட்டை தன்மையை, துரோகத்தை அம்பலப்படுத்தியவர்களை(ஆ.ரா. வெங்கடாசலபதி) இவர் ஏதோ ரொம்ப அறிவு நாணயமுள்ளவர் போல விமர்சனம் செய்வதை எந்த கணக்கில் சேர்ப்பது?
சுஜாதவுக்கு ஒரு அளவுகோல், பாரதிதாசனுக்கு ஒரு அளவு கோல், பாரதிக்கு ஒரு அளவுகோல், கலைஞனை பார்க்காதே அவனது கலையை மட்டும் பார் என்கிற படு அல்பத்தனமான வாதத்தில் போய் ஒளிந்து கொள்வது. இத்தனையும் மார்க்ஸிய அறிஞன், பெரியாரியல் அறிஞன் என்கிற பெயரில். இந்த இழவைத்தான் இந்த கட்டுரை பேசுகிறது.
எதற்க்கும் கட்டுரையை அனானி ஒரு முறை படித்து விடுவது நல்லது.
அத்துடன் சேர்ந்து பின்வரும் பழைய கட்டுரையையும் படித்து விடுங்கள்:
பார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை ==>
http://poar-parai.blogspot.com/2006/06/blog-post_16.html
எம். எஸ். சுவாமிநாதன் பாசறையில் இருந்து கொண்டு எத்தகைய வீரம் செறீந்த ஏகாதிபத்திய போர்களை நடத்த இயலும் என்பது குறித்து எமக்கு ஓரளவு பொதுஅறிவு உள்ளது.
அசுரன்
அசுரன்,
இந்தப் பதிவு எளிய நடையில் எழுதப்படாமல் எஸ்வி ராஜதுரை மாதிரியான ஆட்கள் எழுதும் சிறுபத்திரிக்கை நடையில் எழுதப்பட்டிருப்பதால் பாரதி பக்தர்களை அம்பலப்படுத்துவதில் சற்றே தொய்வு இருந்தாலும், அது சுட வேண்டியவர்களைச் சுட்டிருக்கிறது என்பதற்கு இங்கு வந்து விழும் பின்னூட்டங்களே சான்றாக இருக்கின்றன.
பாரதியின் கோழைத்தனத்தில் தங்களை இனம்கண்டு கொள்பவர்கள்தான், களத்தில் இறங்காமல், காரியவாதத்துக்காக எம்.எஸ்.சுவாமிநாதன் போன்ற கொடிய தேசத்துரோகிகளின் காலைநக்கிப் பிழைத்துக் கொண்டே புரட்சிகரச் சொல்லாடல்களை உதிர்ப்பவர்கள். தாங்கள் சந்தர்ப்பவாதிகள்தான், பிழைப்புவாதிகள்தான் என்பதை பாரதியின் முகமூடியில் மூடி மறைக்கப் பார்ப்பவர்கள். அந்த முகமூடியைச் சற்றே நாம் கிழித்துவிட்டோம் என்றால், நீங்கள் செய்தது என்ன? என்று கேள்வி கேட்டு உதார் விடுவதும், கார்ல் மார்க்ஸைக் கூட அவதூறு செய்வதும் நடக்கிறது.
எஸ்விஆரையே இன்னும் நெருக்கிக் கேட்டிருந்தால் ‘பெரியாருக்கு ஒரு இழவும் தெரியாது’ என்றே சொல்லக்கூடியவர்தான்.
இதை எல்லாம் வெளிப்படையாக நண்பர்கள் கேட்டதால்தான் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையில் கூலிக்கு நாடகம் போடுபவர்கள் சாமியாடுகிறார்கள்.
ஆச்சரியம் என்ன என்றால் கூலி வாங்கிக் கொண்டு இவர்கள் நடத்தும் "மொக்கை" நாடகங்களைக் கண்டு ரசித்து ஒருவர் இவர்களுக்கு ஆதரவாய் பின்னூட்டம் இடுகிறார் என்றால் அவர் உண்மையிலேயே “ரொம்ப நல்லவராய்” இருக்கணும்..
சுப்பு
Asuran,
Your reply has some mistakes.. one place you wrongly mentioned that svr supported sujatha..
// ஏன் சுஜாதவை ஆதரிக்கிறார்? பாரதியை தூக்கிப் பிடிக்கீறார் என்பதற்க்கு அவரிடம் பதில் இல்லை.//
Correct this to:
"SVR not supported sujatha"
/////காரல் மார்க்ஸ் அவர்கள் வேலைக்காரியுடன் கொண்ட கள்ளத்
தொடர்பால் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. இந்த ஒன்றை
வைத்து காரல் மார்கஸை ஒழுக்க
விரோதி,மனைவிக்கு துரோகம்
செய்தவர் என்று அவர் எழுதியையும்,
அவரையும் தூக்கி எறிந்துவிடலமா?.
ராஜதுரை பாரதியை விமர்சிக்கின்ற
அதே வேளையில் அவர் பங்களிப்பையும் பாருங்கள் என்கிறார்.
பாரதி போன்ற ஒரு ஆளுமையை
அணுகுவதில் அவர் சொலவ்து சரியென்று கருதுகிறேன்.பாரதியின்
எழுத்துக்கள் அனைத்தையும்
நிரகாரிப்பீர்களா?
பெரியார் சுதந்திர போராட்டத்திலிருந்து விலகியிருந்த காலகட்டமும் உண்டு. எனவே
அவர் காலனியாதிக்கத்தின் அடிவருடி
என்று சொல்ல்விடலாமா.
அ.மங்கை போன்றவர்களை
பிழைப்புவாதிகள் என்று
சொல்பவர்கள் தாங்கள் ஏகாதிப்பத்தியத்தினை எதிர்த்து
எத்தகைய வீரஞ் செறிந்த போராட்டங்களை எங்கெல்லாம்
நடத்தியுள்ளார்கள் என்பதையும்
சொல்லட்டும்./////
மேற்கண்ட அனானி பின்னூட்டத்தை இங்கே வழங்கியிருப்பது நிச்சயமாக எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா அல்லது அ.மங்கை போன்ற மாபெரும்(!) அறிஞர்(!!)களாகத்தான் இருக்கமுடியும், என்பது மேற்கண்ட வார்த்தைகளிலிருந்து தெளிவாக புலப்படுக்கிறது.
பாரதியைக் காப்பாற்ற பாரதிதாசனை விமர்சிக்கும் இவர்களுடைய கயமைத்தனம், இப்போது மார்க்ஸ் மற்றும் பெரியார் வரை நீண்டிருக்கிறது என்பதுதான் இந்த பதில் நமக்கு விளக்கும் உண்மையாக இருக்கிறது.
நம்முடைய பதிவுகளுக்கு நேரிடையாக பதிலலிக்க வக்கற்ற இவர்கள், நமக்கு பதில் சொல்லும் விதமாக, வெறும் இருபதுக்கும் மேற்பட்டோர் மட்டும் பார்வையாளர்களாக பங்கெடுத்திருக்கின்ற கூட்டத்தில் விளக்கம் சொல்கின்ற அறிவுத்தரம், இத்தகைய அறிஞர்களுக்கே உரியது போலும்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
Please read the biography and works of Subramania Bharathi.
He supported V.O.Chidambaram and his struggle against the British.
Bharathi was also active in the freedom struggle and had to seek
asylum in Pondicherry.There too
he was active.He welcomed the revolution in the then Russia and
praised Lenin.At one point he was too poor and could not even afford
food. He had a family to support
and was under survillence.
People like you should ask yourself asto whether are you a real revolutionary who has given up the comfort of a job and income
for the people before critizing him. Mangai used the support of Swaminathan Foundation for her theatre activities.What is your
problem with her work. Do the plays become meaningless because
of the support she got.
You live in a fools paradise with
a holier than thou attitude.Any one can say that fellows like you
who are in IT industry are tech coolies in the service of USA and
MNCs.You are neither a scholar who furthers the marxist theory
and practice, nor a revolutionary who lives with and serves the poor and downtrodden.But you think you can pass any comment on any one
as if you are a real revolutionary.
Is hypocrisy your first name?
Is vain pride your second name?
அனானியாக வந்து பின்னூட்டமிட்டவருக்கு,
//He supported V.O.Chidambaram and his struggle against the British.
//
வ.உ.சியின் நெல்லைசதி வழக்கிற்காக சாட்சி சொல்ல சென்னையில் இருந்து கிளம்பிய பாரதி, தஞ்சாவூர் ரயில் நிலையத்தை ரயில் தாண்டியபிறகு தப்பித்துப் போன வீரத்தனத்தை விளக்குவீர்களா?
//asylum in Pondicherry.There too
he was active.
//
தீவிரமாக பாரதி என்ன செய்தார்? கவர்னர் பெருமானாருக்கு மண்டியிட்டுக் கடிதம் எழுதினாரே அதனைச் சொல்கிறீரா?
1912,1913,1914 ஆகிய வருடங்களில் தொடர்ந்து பிரிட்டிஷார், தம்மிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கெஞ்சியபடி புதுவையில் இருந்து தொடர்ந்து கடிதங்களைப் பாரதி எழுதி இருக்கிறார்.
8/4/1914 இல் இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மக்டொனால்டுக்கு எழுதிய கடிதத்தில், தம்மை ஆஷ் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தித் தண்டித்து விடுவார்களோ எனும் பயத்தில், 'நான் புதுவை செல்வதற்கு முன்பே வாஞ்சி வந்துள்ளார். என்னை அவர் சந்திக்கவில்லை' என்று எழுதினார்.
1912இல் சென்னை கவர்னராயிருந்த கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி இறைஞ்சியுள்ளார்.
பின்னர் கவர்னரான பெண்ட்லாண்டு பிரபுவுக்கும் தன்னிலையை விளக்கி மற்றும் ஒரு கெஞ்சல் கடிதம் எழுதி இருக்கிறார்.
அதன் பின்னர் 1916 இல் சுதேசமித்திரனில் இன்னும் கீழே போய், 'ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டுப் போக வேண்டாம்' என்றிடும் அளவிற்குப் போய்விட்டார், சூரப்புலி.
//
He welcomed the revolution in the then Russia and
praised Lenin.
//
லெனின் தலைமையில் பாட்டாளிவர்க்கப் புரட்சி நடந்து, நிலங்கள் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டபோது, 'இந்த முறைமை பலாத்காரங்களின் மூலமாக உலகில் பரவி வருவது எனக்கு ஸம்மதமில்லை ' என்று பாரதி கண்டித்ததோடு லெனினைத் திட்டி 'கொலையாலும், கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத்தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன் ' என்கிறார். புரட்சித்தலைவர் லெனினை மூடன் என்று பாரதி சொன்னார்.
'உழுபவனுக்கே நிலம் சொந்தம் ', என இயக்கம் நடத்தியவர்களுக்கு பாரதி 1921ல், சென்னை மாகாண நிலப்பிரபுக்களுக்கு அரசு நிலத்தீர்வையைக் கூட்டியவுடனே 'இது லெனினுடைய கொள்கையில்தான் போய் முடியும், பூஸ்திதிகளை (நிலங்களை) எல்லாம் பறித்துக்கொண்டு உடையவரைத் தெருவில் விட வேண்டும் என்ற கொள்கை ' என்று எழுதியது தெரியாதா என்ன ?
//
Mangai used the support of Swaminathan Foundation for her theatre activities.What is your
problem with her work. Do the plays become meaningless because
of the support she got.
//
இங்கேதான் விசயமே இருக்கிறது. பாரதியை ரசிக்கிறவர்கள் பாரதியிடம் தன்னைக் காணும் இடம் இதுதான். படைப்பைப்பார்.. படைப்பாளியைப்பார்க்காதே எனும் கேடுகெட்ட சிந்தனையை பாரதியிடம் இருந்து தனக்குவரை பார்க்கும் அவலம் இதுதான். எம்.எஸ்.சுவாமிநாதனிடம் காசு வாங்கினால் என்ன? நாடகம் நல்லா இருக்கா பார்? சாராய வியாபாரி மல்லையாவிடம் காசு வாங்கினாலும் தப்பில்லை. பொறுக்கி ஜேப்பியாரிடம் காசுவாங்கினாலும் தப்பொன்றுமில்லை..நாடகத்தைப் பார் எனச் சொல்லிடும் அதே சிந்தனைதான் பாரதி மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தாலும் 'அச்சமில்லை..அச்சமில்லை'ன்னு அதே வருடம் பாட்டு எழுதினானே..அதைப்பார். என்று சொல்ல வைக்கிறது.
தேசத்துரோகியிடம் காசு வாங்கிக் கொண்டு புரட்சி வேசம் போடுவது சரியா? என்றால் பதில் சொல்லாமல் இணையத்தில் எழுதுபவர்கள் மட்டும் யோக்கியமா? என்பது பதில் கிடையாது என்பது எவருக்குமே புரியும்.
அது சரி.. விவசாயிகளின் குரல்வளையை அறுத்து எம்.எஸ்.சாமிநாதன் தந்த காசில் நடத்திய நாடகம் எந்தப் புரட்சியை சாதித்தது? பெண் விடுதலையைப் பெற்றுத் தந்து விட்டதா?
எனக்குத் தெரிந்து ஒரு புது நண்பரை தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் சார்பில் நடத்தப்பட்ட குறிஞ்சிப்பாட்டு, ஔவை நாடகங்களைப் பார்க்கக் கூட்டிச் சென்றேன். அவற்றைக் கண்டு வெறுத்துப் போய் என்னுடன் பேசுவதையே நிறுத்திக்கொண்டார்.
--சுப்பு
அனானி,
//
At one point he was too poor and could not even afford
food. He had a family to support
and was under survillence.
//
வறுமையில் ஒருவன் இருந்தால் அவன் புரட்சி செய்யவரமாட்டான் என்பது எவ்வளவு பெரிய நகைச்சுவை?
புரட்சிகர இயக்கங்களில் இன்று முழுநேரப் புரட்சியாளர்களாக இருப்பவர்களில் பலரும் வறுமைக்கு சொந்தக் காரர்கள்தான்.
பாரதி விசயத்தில் இந்த வாதத்தில் கூட மெய்ப்பொருள் உண்டா?
பாரதியை சிறைமீட்க அமைக்கப்பட்ட குழுக்களின் பட்டியலைப் பாருங்கள்.
மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார் மற்றும் அன்னிபெசண்ட்
நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர் போன்ற பணக்காரர்கள் பாரதிக்கு வேலை வாய்ப்பு தந்ததும், இக்கட்டான நேரங்களில் உதவியும் இருக்கின்றனர்.
அதே காலகட்டத்தில் தீவிரமாக நாட்டுக்காகப் போராடிய வ.உ.சி.க்கு இப்படி உதவ எந்தப் பணக்காரரும் வரவில்லை.
வ.உ.சி.யின் குடும்பத்துக்காக தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் நிதி திரட்டி, அதனை காந்தியிடம் கொடுத்து அனுப்பினார்கள். காந்தியோ அப்பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்தார். 300 ரூபாய் சொச்சம் என்று எண்ணுகிறேன். அதனைக் காந்தியிடம் இருந்து பெறுவதற்கு பல முறை கடிதங்களை வ.உ.சி. எழுதினார்.
(On May 28, 1915 Gandhi assured VOC: "I shall now send for the book subscribed in Natal. I don't know the amount nor the names. But I hope to get them". VOC seems to have been in desperate need of money. "Don't you know at least approximately the total amount given to you by your friend? If you know it, can you not send me that amount or a major portion of it now, so that it may be useful to me in my present difficult circumstances? The remainder you may send to me after you get the books", VOC pleaded (May 31, 1915). He also asked for the names of benefactors. In letter after letter he asked for these details. )
பலசரக்குக் கடை வைத்தும், மண்ணெண்ணெய் வியாபாரம் செய்தும் பலனில்லாமல் கோவில்பட்டிக்குத் திரும்பி சென்றவர் வ.உ.சி. இருப்பினும் அவர் மன்னிப்புக் கடிதம் கொடுத்தாரில்லை.
மன்னிப்புக் கடிதம் கொடுத்த மாவீரர்களின் பட்டியலில் இந்துவெறியன் சாவர்க்கர் உள்ளார். அடல்பிஹாரி வாஜ்பாய் உள்ளார். அதே பட்டியலில் நம்ம பாரதியும் இருக்கிறார்.
இனி பாரதி ரசிகர்களிடம் வருவோம். வறுமையில் இருந்தால் புரட்சி செய்ய மாட்டோம் என்று பாரதியைத் துணைக்கழைக்கும் இந்தப் புரட்சிக்காரர்கள் நல்ல வரும்படி வரும் என்.ஜி.ஓ.க்களில்தானே இருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு பாரதி ரசிகர், எஸ்விஆர், அரசாங்கப் பதவிக்கு நிகரான பெரியார் ஆய்வுமைய இயக்குநர் பதவியில் இருந்து கொண்டு வளமாய் வாழ்பவர்தானே.
ஒட்டுமொத்த நாடே அன்னிய ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்பட்டு மறுகாலனியாக்கப்பட்டு வரும்போது இந்தத் ‘திண்ணைப் புரட்சிக்காரர்கள்’ என்ன செய்கிறார்கள்? “மார்க்சுக்குள் ஆணாதிக்கம் இருந்தது”, “ஸ்டாலின் கொலைகாரர்”, என்றெல்லாம் கண்டுபிடித்து எழுதிக் கொண்டும், சுவாமிநாதனின் தயவிலோ, விடுதலை இறையியல் மையம், மக்கள் கண்காணிப்பகம் போன்ற என்.ஜி.ஓ.க்களின் தயவிலோ அவற்றின் மாதாந்திர வரவுசெலவுத் திட்டங்களுக்கேற்பவும் அவற்றின் திட்டங்களுக்கேற்பவும் கீழறுப்பு வேலை செய்பவர்கள்தானே?
(பாரதியும், எட்டப்பன் வம்ச சரித்திரம் எழுதிப்பார்க்க ஆசைப்பட்டவர்தான்)
இதைத்தான் நாம் சொல்கிறோம். பாரதியும் பாரதி ரசிகர்களும் வேறு வேறல்ல. சிந்தனையிலும் செயலிலும் இரு தரப்புமே ஒன்றுபடுகின்றனர்.
பாரதியைக் கீறிப்பார்த்தால், இவர்களுக்கு வலிக்கும் மர்மம் இதுதான்.
--சுப்பு
அப்படியானால் பெரியார்.ஒரு காலகட்டத்தில் விடுதலைப் போரிலிருந்து பெரியார் விலகி
விட்டாரே.கிட்டதட்ட 20 ஆண்டுகள்
விலகியே இருந்தாரே.அவரை இப்படி
விமர்சிப்பீர்களா.விடுதலைப் போரின்
போது நடந்து கொண்ட விதம் என்று
பார்த்தால் நீங்கள் இருவரையும்
நிராகரிக்க வேண்டும்.
“வ.உ.சி தனது கடைசிக் காலங்களில் சுத்தமாக பொது செயல்பாடுகளை ஒதுக்கிக் கொண்டார். அதனை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை அவரை காலகட்டத்தின் குழந்தை என்று சொன்னால்கூட அது தவறான சொல்லாடல் என்ற போதும் வ.உ.சியின் பங்களிப்பை அங்கீகரிக்கிறது என்ற அம்சத்தில் ஏற்றுக் கொள்ளலாம். ”
இது எப்படி.வ.உ.சி சிறையில்
துன்புற்றார்.காங்கிரஸ் அவருக்கு
உதவவில்லை என்றாலும்
அவர் ஒதுங்கிக்கொண்டது சரி
பாரதி ஒதுங்கிக்கொண்டது தவறா.
“ கார்ல் மார்க்ஸ்க்கு கள்ள குழந்தை என்கிற கேள்விப் படாத புரளி வேறு நடுவில்”
இது புரளியா என்பதை அறிய
ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள
அவரது வாழ்க்கை வரலாறுகளை
படிக்கவும்.
மங்கை அறக்கட்டளை ஆதரவில் மார்க்ஸிய எதிர்ப்பு நாடகம் போட்டாரா.அருந்ததி ராய், மேதா
பட்கர் போன்றவர்களும் NGOக்களின்
ஆதரவு பெற்றவர்கள்.அப்படியானால்
அவர்களும் கீழறுப்பு வேலை செய்பவர்கள்தானே?
மிஸ்டர் டுபாக்கூர் பாண்டி அனானி அவர்களே....
அருந்ததிராய் மட்டுமல்ல NGO குடுமியை பிடித்த யாரும் ஒரு கட்டத்தில் ஏகாதிபத்திய சீரழிவுவாதியாகவே மாறுவார்கள் இதனை NGOக்களில் உள்ள ஜனநாயக சக்திகளே ஒத்துக் கொள்கிறார்கள்.(NGOக்களின் ஸ்டேண்டர்ட் வசனம் இதுதான், 'நீஙக சொல்றதெல்லாம் சரிதான். என்னங்க செய்ய NGOக்காளால ஒரளவுக்குதான் முடியும், எங்களுக்கு நிதி வர இடத்துக்கு தக்கனதான் நாங்க செயல்பட முடியும்')
மேதா பட்கர் இன்னும் அப்படி ஒரு நிலையை அடைய வில்லை என்றே நம்புகிறேன். அல்லது இன்னொரு காந்தியாக அவர் உருமாறிக் கொண்டிருக்கிறார் என்றும் சொல்லலாம்(காந்திதான இந்தியாவின் முதல் NGO :-)).
அருந்ததிராய் இந்த விசயத்தில் NGOக்களை சரியாக்வே விமர்சித்துள்ளார். மும்பை WSFன் போதே அதே மேடையிலேயே இந்த அடிஅறுப்பு வேலைகளை அவர் விமர்சித்துள்ளார்.
மங்கை அப்படி எதுவும் நேர்மையான அனுகுமுறை கொண்டவரா அல்லது பசுமை புரட்சி பவுண்டேசனில் உட்கார்ந்து கொண்டு புரட்சி பேசுபவரா என்பதை படிப்பவர்களின் புரிதலுக்கே விட்டு விடுகிறேன்.
அசுரன்
//பாரதி ஒதுங்கிக்கொண்டது தவறா.//
பாரதிதான் ஆரம்பிக்கவே இல்லையே அப்புறமில்ல ஒதுங்கிறதுக்கு.
வேனுமின்னா இங்கு சுப்பு என்பவர் எழுதியுள்ளவற்றுக்கு மறுப்பு எழுத இயலுமா என்று யோசியுங்கள்.
//பாரதி ஒதுங்கிக்கொண்டது தவறா.//
பாரதிதான் ஆரம்பிக்கவே இல்லையே அப்புறமில்ல ஒதுங்கிறதுக்கு.
-------------------------------
அப்படியானால் சிதம்பரத்திற்கு ஆதரவாக எழுதிய, விடுதலைப் போரட்டத்தை ஆதரித்த, பிரிட்ட்டிஷ்
அரசின் அடக்குமுறைக்கு உள்ளான
சுப்பிரமண்ய பாரதி என்பவர்
இன்னொருவரா? தன் எழுத்துக்கள் மூலம் விடுதலை போராளிகளுக்கு ஆதரவு அளித்தவர் இவரில்லையா.
சுப்பு என்பவரின் கேள்விகளுக்கு
பதிலளிக்க இயலாத நிலையில்
இருக்கிறேன்.ஏனெனில் என்னிடம்
பாரதி குறித்த இலக்கியம் எதுவும்
தற்சமயம் இல்லை.பாரதி அன்பர்கள்
பதில் கூறக்கூடும்.
பிறரை பிழைப்புவாதி,அது இது
என்று எழுதும் நீங்கள் ஒடுக்கப்பட்ட
மக்களுக்காக எந்தப் போராட்டத்தில்
ஈடுப்பட்டிருக்கிறீர்கள், அரசின்
எந்த அடக்குமுறைகளை சந்தித்திருக்கிறீர்கள் என்பதை
எழுதலாமே.மிகுந்த தன்னடக்கம்
தடுக்கிறதா?. ஒருவேளை களத்தில்
நின்று கொண்டு இப்பதிவுகளை
எழுதுகிறீர்கள் போலும்.
மக்கள் கண்காணிப்பகம் இது ஒரு என்.ஜி.ஓ தான்.அவர்கள் செய்யும்
பணிகளை அந்த ஒரு காரணத்திற்காக
ஒதுக்கிவிட முடியாது.வீரப்பனை பிடிப்பது என்ற பெயரில் செய்யப்பட்ட
அத்துமீறல்கள்,மனித உரிமை மீறல்கள் உட்பட பல பொதுப் பிரச்சினைகளில் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக
செயல்பட்டுள்ளனர்.அதனால் காவல்
துறை,அரசின் வெறுப்பினை பெற்றுள்ளனர்.
சிபிஐ(எம்-எல்) இயக்கங்கள்
மனித உரிமை முண்ணணிகளை
அமைக்காத போது இவர்களின்
தேவையை மறுக்க முடியாது.
ராஜதுரை மார்க்ஸிய அறிஞர்.
கிராம்சி உட்பட பல சிந்தனையாளர்கள்
குறித்து எழுதியுள்ளார்.
அவரை பிழைப்புவாதி என்பதால்
அவர் பணியை மூடிமறைத்துவிட
முடியாது.
உங்களால் செய்ய முடியாதவற்றை
பிறர் செய்தால் அதை குறை
சொல்லமட்டும் தெரிகிறது.
ராஜதுரையினுடைய மார்க்ஸிய பங்களிப்புகளை இங்கு யாரும் குறை கூறவில்லை. மார்க்ஸியம் உலகை வியாக்கியானம் செய்வதற்கு மட்டுமானதல்ல. இது மார்க்ஸியர்களுக்கும் பொருந்தும். ராஜதுரை வியாக்கியானம் மட்டுமே செய்வேன் என்று சொல்வதன் வர்க்க பின்புலத்தை மட்டுமே இந்த கட்டுரை கேள்வி எழுப்புகிறது. அது தவிர்க்க இயலாமல் அவர் ஒரு பிழைப்புவாதி என்பதில் வந்து நிற்கிறது. என்ன செய்ய அறிவு ஜீவித்தனம் என்பது அறிவு நாணயம் பற்றியதாக இல்லை. எப்படி பாரதியின் அறிவுஜீவித்தனத்தை, கலைத் திறமையைக் கொண்டு அவருடைய அறிவுநாணயமற்ற செயல்களை மூடி மறைக்க முயல்கிறீர்களோ அதே போலவே ராஜதுரைக்கும் செய்கிறீர்கள். இதனாலதான் கட்டுரை மிகத் தெளிவாகவே சொல்கிறது - இந்த கட்டுரை பாரதி குறித்தானதல்ல அதன் உண்மையான அம்சத்தில் பாரதி ரசிகர்கள் குறித்தானது என்று.
பாரதி குறித்து சுப்புவின் கருத்துக்களை அந்தரத்தில் தொங்க விட்டுவிட்டு நீங்கள் பிடித்த முயலுக்கு மூனு கால் என்பீர்கள் அப்படித்தானே? அப்படியென்னய்யா பிரிட்டிஷ்க்காரனிடம் பாரதி பெரிதாக துன்பப்பட்டுவிட்டார்? சிறையில் அடைத்த ஒரே சமயத்தில் கூட தனது பார்ப்பன பிறப்பை காரணம் காட்டி தன்னை விடுதலை செய்யக் கோரியவர்தான் இந்த புரட்சிக் கவிஞர்.
அசுரன்
//
அப்படியானால் பெரியார்.ஒரு காலகட்டத்தில் விடுதலைப் போரிலிருந்து பெரியார் விலகி
விட்டாரே.கிட்டதட்ட 20 ஆண்டுகள்
விலகியே இருந்தாரே.அவரை இப்படி
விமர்சிப்பீர்களா.
//
பெரியாரை யாரும் விடுதலைப் போராட்ட வீரர் என்று போலியாக உயர்த்திப் பிடிப்பது கிடையாது.
1925 வரை காங்கிரசுக்கட்சியின் திட்டங்களை நிறைவேற்றும்வகையில் ஒத்துழையாமை இயக்கத்தின்போது
அவர் அரசுடன் மெய்யாகவே ஒத்துழைக்காமல் நடந்துகொண்டார். நீதிமன்றங்களில் ஆஜர் ஆகாமல் இருந்ததால் அந்தக்காலத்திலேயே 50 ஆயிரம் ரூபாய் வரை தனக்கு வரவேண்டியதை இழந்தார். ஆனால் அதே ஒத்துழையாமையை எதிர்த்தவர் பாரதியார்.
பெரியாரை சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் பார்ப்பனீய பயங்கரவாதத்தை எதிர்த்த போராளி என்றுதான் அனைவரும் மதிப்பிடுகின்றனர்.
அவருக்கு இல்லாத ஒரு பிம்பத்தை அனானியே உருவாக்கிக் கொண்டு அவர் விலகி இருந்தாரே என்று சொல்வது விவாதத்தை வேறு திசைக்குக் கொண்டு போய் பெரியாரை அவதூறு செய்ய வழி ஏற்படுத்திடும் குசும்பு என்றுதான் கருதுகிறேன்.
//
மக்கள் கண்காணிப்பகம் இது ஒரு என்.ஜி.ஓ தான்.அவர்கள் செய்யும்
பணிகளை அந்த ஒரு காரணத்திற்காக
ஒதுக்கிவிட முடியாது.வீரப்பனை பிடிப்பது என்ற பெயரில் செய்யப்பட்ட
அத்துமீறல்கள்,மனித உரிமை மீறல்கள் உட்பட பல பொதுப் பிரச்சினைகளில் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக
செயல்பட்டுள்ளனர்.
//
நம் நாட்டில் நடத்தப்படும் கொடுமைகளுக்கு எதிராக ஜெர்மனிக்காரன், அமெரிக்காக்காரனிடம் பணம் வாங்கிக் கொண்டு மனித உரிமை வியாபாரம் செய்வதை நியாயப்படுத்த முடியும் என்றால், சிங்கள ராணுவக் கொடுமைகளுக்காக இந்திய அமைதிப்படை ஈழத்தில் நுழைவதையும், தில்லி அரசின் ஆசி பெற்ற ஈழப் போராளிகளின் ஆயுதப் புரட்சியையும் ஆதரிக்க முடியும்.
சிந்து மக்களின் கோரிக்கைகளுக்காக ரா நடத்தும் குண்டுவெடிப்புகளையும் நியாயப்படுத்த முடியும்.
மக்கள் கண்காணிப்பகம் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஜெர்மனி ஆசி பெற்ற நிவாரணத்துக்கு வேலை செய்த அதே நேரத்தில் உலகமயமாக்கலை தீவிரப்படுத்த தனது பணியாட்களுக்குப் பயிற்சி முகாமையும் நடத்தியது தெரியுமா?
உள்ளூர் அரச பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள், உலக பயங்கரவாதத்தை (அதுதான் உலகமயம்) ஆதரிக்கிறார்களே?
இதுதான் விடுதலை இறையியல் எனும் பெயரில் தலித்துகளின் போராட்ட உணர்வை மட்டுப்படுத்தி அதே நேரத்தில் அவர்களை உலகமயமாக்கத்தின் மைய நீரோட்டத்தில் கோர்த்து விடும் பல என்.ஜி.ஓ.க்களின் உத்தி.
எஸ்விஆரின் மொழி பெயர்ப்புக்களையோ மார்க்சியக் கட்டுரைகளையோ நாம் பழித்துப் பேசவில்லையே.
இன்னும் சொல்லப்போனால் அவரும் இன்குலாபும் மொழிபெயர்த்த சில நூல்களை எல்லா மா-லெ இயக்கத்தினரும் (உதாரணம்: மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை) கற்கத்தான் செய்கின்றனர்.
அறிவுப்பணி செய்ய தன்னார்வக்குழுக்கள் மீது சவாரி செய்து கொண்டு ஸ்டாலின் அவதூறு, மார்க்சியத் திரிபு வேலை செய்வதையும், தனது என்.ஜி.ஓ. பிழைப்பிற்கு பாரதியைத் துணைக்கழைபப்தையும் மட்டும்தான் விமர்சிக்கிறோம்.
எம்மால் சில விசயங்களைச் செய்யமுடியாதுதான். என்.ஜி.ஓ.க்களுக்கு வாலாட்ட முடியாது. அதை அவர் செவ்வனே செய்வதால், எம்மால் செய்ய முடியாதவற்றை அவர் செய்யும்போது விமர்சிக்கிறோம். புரட்சிக்கு எதிரானவற்றை எல்லாம் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் செயலை நம்மால் செய்ய முடியாது.
--கட்டபொம்மன்
/////லெனின் தலைமையில் பாட்டாளிவர்க்கப் புரட்சி நடந்து, நிலங்கள் ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டபோது, 'இந்த முறைமை பலாத்காரங்களின் மூலமாக உலகில் பரவி வருவது எனக்கு ஸம்மதமில்லை ' என்று பாரதி கண்டித்ததோடு லெனினைத் திட்டி 'கொலையாலும், கொள்ளையாலும் அன்பையும் சமத்துவத்தையும் ஸ்தாபிக்கப் போகிறோம் என்று சொல்வோர் தம்மைத்தாம் உணராத பரம மூடர்கள் என்று நான் கருதுகிறேன் ' என்கிறார்.////
மிக மிக தீர்க்கதரிசனமான வார்தைகள் என்பதை சரித்திரம் பின்னர் நிருபித்தது...
இன்றய ரஸ்சியாவின் நிலை ?
வேணுகோபாலு,
1990க்கு முன் இருந்த ரஷ்யாவில் விபச்சாரம் இல்லை. பிச்சைக்காரர்கள் இல்லை. விலைவாசி ஏற்றம் இல்லை. கறுப்புப்பணம் இல்லை. பதுக்கல்காரர்கள் இல்லை. போதைப்பொருள் மாபியா இல்லை.
இவை அத்தனையையும் சாதித்தது முதலாளியம் அல்ல. சமூக ஏகாதிபத்தியமாகவே ரஷ்யா பின்னாளில் இருந்தாலும் இக்கொடுமைகள் எதுவும் தலைதூக்கவில்லை. 1930களில் முதலாளித்துவ நாடுகளில் பொருளாதார மந்தம் தலைதூக்கி அமெரிக்காவில் வேலையிழப்பும் பட்டினியும் தலைவிரித்தாடியபோது சோசலிச ரஷ்யாவில் உள்நாட்டு உற்பத்தி பல மடங்காக உயர்ந்தது.
விபச்சாரம்,கடத்தல்,போதைக்கு அடிமை, பிச்சை எடுத்தல் கூடவே வரைமுறையற்ற பாலுறவும், கூடவே எயிட்சும், இன்றைக்கு ரஷ்யாவிலே கொடிகட்டி ஆள்கின்றன.
இவற்றை ரஷ்யாவுக்கு 1990க்கு பிறகு வழங்கியது ஏகாதிபத்தியமும், முதலாளித்துவ மீட்சியும்தான்.
இப்போது சொல்லுங்க! கம்யூனிசம் தோற்றதா? முதலாளித்துவம் வென்றதா?
கவி
Post a Comment