TerrorisminFocus

Monday, March 05, 2007

வீரமணியின் பதில்கள் - அம்மணமா ஒரு அசிங்கம்!

கேள்வி: பகுத்தறிவின் ஆரம்பம் பிராம்மண எதிர்ப்பு என்றும், முடிவு சொத்துக் குவிப்பு என்றும் திருவாளர் 'சோ' கூறுகிறாரே?

வீரமணி பதில்: காமாலைக் கண்ணனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத் தானே தெரியும். அவர் தொழுது ஏத்தும், உளவாளி தூதுவராக மாறும் காஞ்சி சங்கராச்சாரியாரின் சனாதனமும் - ஆன்மீகமும் - சொத்துக் குவிப்புக்கு அப்பாற்பட்டதா? புத்தரின் பார்ப்பன எதிர்ப்பு எதற்கு? மடங்களை உருவாக்கிய புத்தர் பிக்குகளை உருவாக்கியது எதற்கு? அது போல மக்கள் தருவது மக்களுக்கே என்பதே பகுத்தறிவு என்பது மக்களுக்கு புரிந்தே வருகிறது!

********************

"நைனா இன்னா சொல்றாரு,..... ஒன்னுமே பிரியலயே? ஒரு வேள உண்மைய சொன்னதுனால படப்பிடிப்பு ஆகி... ஸாரி படபடப்பாகி வார்த்தைகளை சிதற் விட்டுட்டாரா?"

என்று புலம்பும் அன்பர்களே, அசிரியர் வீரmoney சரியாகத்தான் சொல்கிறார்.

கடைசி வரைக்கும் சொத்து சேர்ப்பது பற்றி பதிலே இல்லை எனபது போல தெரிகீறது, ஆனால், "காஞ்சி மடம் மட்டும் சொத்து சேர்க்கலாம" என்று ஒரு கேள்வி கேட்டுள்ளாரே அதில்தான் விசயம் உள்ளது. அதன் அர்த்தத்தை அவரது சிஸ்ய குஞ்சுகளே கண்டுபிடித்துக் கொள்ளட்டும்.

அப்புறம் நம்ம சோமாறி சோவை விட்டுவிடலாமா? முதலில் பகுத்தறிவுக்கும் வீரமணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சுயமரியாதையை ஜெயலலிதாவிடமும், கருத்து கருணாநிதியிடமும், கடைசியில் இன்றூ ஏகாதிபத்தியங்களிடமும் அடகு வைத்து சுயமுன்னேற்றம் குறித்து எழுதி வரும் இந்த தரகு வர்க்க ஜந்து, திக என்ற அமைப்பை NGO அமைப்பாக திரித்து விட்டது. பெரியார் புறா... ஸாரி பெரியார் புரா என்ற பெய்ரில் இவர்கள் செய்யும் NGO வேலைக்கு முன்பு பாரம்பரிய NGOக்களே தோற்றுவிடுவார்கள்.

அதனால் 'சோ' மாறியின் கேள்வியே தப்பு. சரி இவிங்க ரெண்டு பேர பத்தியும் சில கட்டுரைகளை கீழே கொடுக்கிறேன் படிச்சு பயனடையவும். பகுத்தறிவுள்ளவர்கள் சிந்தித்தால் சரி.

#1) பெரியார் சிலை - மானமிகு கலைஞரும், மான்புமிகு ஆசிரியரும்

#2) துக்ளக் சோ நாறிய இடம்!


அசுரன்

14 பின்னூட்டங்கள்:

said...

//முதலில் பகுத்தறிவுக்கும் வீரமணிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சுயமரியாதையை ஜெயலலிதாவிடமும், கருத்து கருணாநிதியிடமும், கடைசியில் இன்றூ ஏகாதிபத்தியங்களிடமும் அடகு வைத்து சுயமுன்னேற்றம் குறித்து எழுதி வரும் இந்த தரகு வர்க்க ஜந்து, திக என்ற அமைப்பை NGO அமைப்பாக திரித்து விட்டது. பெரியார் புறா... ஸாரி பெரியார் புரா என்ற பெய்ரில் இவர்கள் செய்யும் NGO வேலைக்கு முன்பு பாரம்பரிய NGOக்களே தோற்றுவிடுவார்கள்.
//
இது மிகவும் சரி அசுரன். பெரியார் பெயரில் அவரது கருத்துக்களை பரப்புவதை தவிற மற்ற எல்லா வேலையும் இந்த கோஷ்டி தவறாம செய்யுது. இதுல பெரிய கமெடியே இவங்க பதிப்பகத்தில் வரும் புத்தகங்களில் பெரும்பாலும் வீரமணி எழுதியதாகவே இருக்கும். அப்புறம் இவர்களது கல்விக்கூடங்கள், பெரியார் பெயரில் கொள்ளை. நல்லா சம்பாதிக்கிறாங்க அது மட்டும் தெரியுது.

said...

சோ ஒரு விதமென்றால் வீரமணி இன்னொரு விதம். இருவரையும் கண்டு கொள்ளக் கூடாது. ஜெக்கும் கருணாநிதிக்கும் வீரமணி தூக்கிய காவடிகளை அடுக்க இடமில்லாமல் இருக்கிறது. சோ இன்னமும் எழுதுகிறாரா என்ன? அதையும் படிக்கின்றீர்களா என்ன?

said...

நாட்டார் தெய்வங்களை திருடி அவற்றிலும் பார்ப்ன்ர்களை நுழைக்கும் மோசடி கும்பல் யார்? அவனைத்தான் முதலில் கல்லறைக்கு அனுப்ப வேண்டும்

சோவின் துக்ளக் பத்திரிக்கை நின்றுவிட்டதா? இல்லையே? அதனை படிக்கும் மேல் தட்டு நடுத்தர வர்க்க சுய மோகிகளை எனக்கு நிறையவே தெரியும். இந்திய நடுத்தர வர்க்கத்தின் இயல்பான மனநிலையான பார்ப்ப்னிய பண்பாட்டை சுவிகரிப்பது என்பதில் ஒரு அங்கமாகவே துக்ளக் படிக்கும் ஒரு வட்டம் உள்ளது என்று கருதுகிறேன். டீசன்ஸி, நாகரீகம், சுய நலம், பிழைப்புவாதம், தற்பெருமை என்று இந்த வர்க்கத்திற்க்கு தீனி கொடுக்கும் விசயஙகளை தொடர்ந்து கொடுப்பதில் துக்ளக்குக்கு நிகர் அதுதான். அடுத்து ஆனந்த விகடனைச் சொல்லலாம்.

எனவே இந்த கருத்து திரிபுவாதிகளை எதிர்த்து என்றென்றும் போராட வேண்டியுள்ளது.

மேலும் சோ வீரமணி வகையாறாக்கள் எல்லாம் தனிப்பட்ட மனிதர்களோ அல்லது இந்த அல்லது அந்த சித்தாந்தங்களின் பிரதிநிதிகளோ அல்ல.

சமூக பொருளாதார காரணி தோற்றுவிக்கும் பல்வேறு வர்க்கங்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள்தான் இவர்கள். சோ இல்லாவிடில் ஒரு கோ. வீரமணி இல்லாவிடில் ஒரு சூரமணீ. வஜ்ரா, நேசமணி இல்லாவிடில் ஒரு நீலகண்டன், ஜாடாயு. $சல்வன் இல்லாவிடில் ஒரு புல்வன். தமிழ் சர்க்கிள் இல்லாவிடில் ஒரு தமிழ் சதுரம்.

ஆக, சோ, வீரமணி பற்றி எழுதுவது என்பது அவர்களின் வர்க்கத்தை குத்திக் காட்டி எழுதுவ்தே.

வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி ராகவன்.

அசுரன்

said...

// இதுல பெரிய கமெடியே இவங்க பதிப்பகத்தில் வரும் புத்தகங்களில் பெரும்பாலும் வீரமணி எழுதியதாகவே இருக்கும். அப்புறம் இவர்களது கல்விக்கூடங்கள், பெரியார் பெயரில் கொள்ளை. நல்லா சம்பாதிக்கிறாங்க அது மட்டும் தெரியுது. //

சந்தோஸ்,

இதுல் இன்னொரு கூத்து என்னான்னு தெரியுமா? பகுத்தறிவு, சுயமரியாதையை அடையாளப்படுத்தும் பெரியாரின் வாரிசுகள் என்றூ சொல்லிக் கொண்டு அவரது சொத்தை கொள்ளையடித்த இந்த பதர்கள். சுயமுன்னேற்றம் குறீத்து புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கும் சங்க்ராச்சாரிக்கும் என்ன வித்தியாசம்?

அசுரன்

said...

//மேலும் சோ வீரமணி வகையாறாக்கள் எல்லாம் தனிப்பட்ட மனிதர்களோ அல்லது இந்த அல்லது அந்த சித்தாந்தங்களின் பிரதிநிதிகளோ அல்ல.//

இதைப் பலபேர் வசதியாக மறந்து விடுவதுதான் நாட்டில் நடக்கும் பல பிரச்னைகளுக்கு மூல காரணம்.

சிந்திக்க வைத்த பதிவு.

said...

அசுரன் அய்யா,
என்னைக் கேட்டா, பேசாம நம்ம கட்சி,உங்களுக்கே வெள்ளை தாடி ஒட்ட வச்சி புதுப் பெரியாரா நாட்டுக்கு அடையாளம் காட்டலாம்.நீங்க கூடத் தான் பெரியாரை விடவே கீழ்த்தரமா திறமையோட பேசறீங்க.இந்த ஸ்ட்ராடஜிக்கு ஒத்துக்கிட்டீங்கன்னா வெற்றி நமக்குத்தான் அய்யா.

பாலா

said...

//சுயமுன்னேற்றம் குறீத்து புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.//

ஒரு வேளை சொத்தை கொள்ளையடிப்பதைத்தான் சுயமுன்னேற்றம்ன்னு சொல்லுறாங்களோ?

said...

தோழர் அசுரன் அவர்களே!
பேச்சுரிமை,எழுத்துரிமை நல்லது.அதை நன்கு படன்படுத்துவதும் நல்லது.
வீரமணி ஜெயலலிதாவை ஆதரித்தார் என்பதில் உள்ள ஆதங்கம் தெரிகிறது.பல முறை வேண்டுகோள் விட்டும் கலைஞர் பிஜேபி யை ஆதரித்த்தால் வேறு வழியின்றி பிஜேபி க்கு எதிர் கூட்டணி அன்றைய தேவை என்பதை ஏற்பதோ ஒதுக்குவதோ உங்கள் விருப்பம்.
பெரியார் அற்க்கட்டளை எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்பது பொறாமைப் படுபவர்களையே வியப்படச் செய்கிறது.தமிழனாகப் பிறந்தவர்கள் பலர் பல கட்சிகளில் பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் வி.பி.சிங் முதல் அப்துல் கலாம் வரை பெருமையுடன் வாழ்த்தியுள்ளார்கள்.அது கோடிசுவரர்களால் கட்டப்பட்டதன்று.ஏழைக் கருஞ்சட்டைப் படையின் நன்கொடை அதாவது வியர்வை,ரத்தம்.அங்கே வேலை செய்பவர்களும் வெறும் பணத்திற்காக் மணி பார்ப்பவர்கள் அல்லர்.பெரியார் பெயரில் கொள்ளை,ச்ம்பாதிக்கிறார்கள் என்று ஒருவர் எழுதியுள்ளார்.
தயவு செய்து நேரில் சென்று பாருங்கள் பின்னர் சொல்லுங்கள்.கடனிலும் நன்கொடையிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது.
வீரமணி அவர்களின் எளிமையான் அங்கே அவர் தங்கும் இடத்தைப் பாருங்கள்.அன்றிலிருந்து சம்பளம் வாங்காமல் உழைக்கும் உழைபைப் பார்க்க உங்கள் உள்ளங்கள் இடங்கொடுக்காவிட்டால் பரவாயில்லை,சேறாவது வீச வேண்டாம்.தன்னை வருத்திக் கொண்டு நன்றியோ பலனோ எதிர் பார்க்காமல் உழைப்பதற்கு எதிரிகள் வீசும் சேறு போதும்.அவரது நூல்கள்
"வாழ்வியல் சிந்தனைகள்" மட்டும் பல்லாயிரக் கணக்கில் விற்றுள்ளது.அது கழகக் கொள்கைக்கூட இல்லை,வாழ்வியல் பற்றியது.அதன் வரவெல்லாம் அறக்கட்டளைக்கே.அவருடைய பார்ப்பன எதிரிகளின் வருத்தமே மண்ணாசை.பெண்ணாசை,பொன்னாசை என்று எதிலுமோ எந்தக் கெட்டெ பழக்கங்களுக்கு அடிமையாகவோ இல்லை என்பதுதான்.
குறை சொல்லுங்கள்,கொஞ்சம் பொருந்தச் சொல்லுங்கள்.பயனுண்டாகும்.

said...

அன்பு நண்பர் தமிழன்,

இன்றைய நிலையில் பெரியாரின் வாரிசு என்று சொல்லிக் கொள்வதற்க்கு அவர வைத்துள்ள அறக்கட்டளையின் மீதான உரிமை தவிர்த்து வீரமணியிடம் ஒன்றுமில்லை. இதே பதிவில் போடப்பட்டுள்ள பெரியார் சிலை உடைப்பு குறித்த பதிவையும் படிக்கவும்.

தலித்துக்களின் விடுதலை என்பது பொருளாதார விடுத்லையையும் சேர்த்தே உள்ளது. என்று பெரியார் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதனை மறுக்கும் உலகமய பொருளாதாரத்திற்க்கு விளக்குப் பிடிக்கீறார் வீரமணி. ஒரு NGOவாக திகவை திரித்து விட்டு பெரியார் புரா என்று பூ சுற்றிக் கொண்டிருக்கிறார்.

பெரியாரின் வழியில் பார்ப்ப்னியத்தை எதிர்த்து பீடு நடை போடுபவர்களும்,. பெரியாரை வெகு சனங்களிடம் மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்துவதிலும் வீரமணி பூச்சியம்தான்.

இவரைப் போன்ற போலிகளையும் புரோக்கர்களையும் அம்பலப்படுத்துவது என்பதும் பார்ப்ப்னியத்திற்க்கெதிரான போராட்டத்தில் உள்ளது.

பகுத்தறிவுள்ள அனைவரும் இந்த போலி வேடாதாரியின் உண்மை முகமறிந்து செயல்பட வேண்டும்

இத்துடன் சின்னக் கட்டபொம்மன் என்பவர் இமேயில் அனுப்பிய பின்னூட்டத்தை இடுகிறேன்.

*******************
மானமிகு வீரமணியின் எளிமையைப் பற்றிச் சில விசயங்களைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

தான் செல்லும் வாகனத்திற்கு பெட்ரோல் போடுவது அதிக செலவு பிடிக்கும் என்பதால் எஞ்சினையே டீசல் எஞ்சினாக மாற்றி, மூத்திரப்பைப் பிரச்சினையினூடும், டீசல் எஞ்சினின் அதிர்வைத் தாங்கிக் கொண்டு சீர்திருத்தப் பிரச்சாரம் செய்தவர் பெரியார். வீரமணி ஏசி காருக்கு குறைவான எதிலுமோ, முதல் வகுப்பு ஏசி ரயிலுக்குக் குறைவான எந்தக் கம்பார்ட்மெண்டிலுமோ ஏறுவது உண்டா? வருடந்தோறும் ஓய்வு எடுக்க அமெரிக்காவுக்கும், சிங்கப்பூருக்கும் போவது எந்த வகை எளிமை?

சென்ற ஆண்டு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக ஆணை பிறப்பித்தமைக்காக கருணாநிதிக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தினார் வீரமணி. முதல்வரை நன்றாக சிறப்பித்தமைக்கு வீரமணிக்கு நன்றி தெரிவித்து ஒரு கறிவிருந்தை ஏற்பாடு செய்தனர் நண்பர்கள் குழு எனும் வீரமணியின் பினாமிகள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில மக்களுக்கு மட்டும் அழைப்பு தந்து, சென்னை ரேஸ்கோர்ஸ் உணவகத்தில் விருந்து. ஒரு இலைக்கு ரூபாய் 500 எனக்கணக்கிட்டு இரண்டு லட்சம் ரூபாய் வரை சாப்பாட்டிற்கு மட்டும் எளிய வகையில் செலவிட்டனர். இலைகளில் 42 வகை பதார்த்தங்கள் மட்டுமே சிக்கனமாகப் பரிமாறப்பட்டன. ரூ 500 ஐ ஒருவேளை சாப்பாட்டிற்கு செலவிட்ட வீரமணியின் எளிமையை வாசிக்கும் தமிழனுக்கு ஒரு செய்தி..சென்னையில் வீடு கழுவி, பெருக்கி, பாத்திரம் தேய்க்கும் வேலைக்காரர்களுக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு தரப்படும் ஊதியம் ரூபாய் 800 மட்டுமே (எண்ணூறு).

வாழ்வியல் சிந்தனைகளை பல்லாயிரம்பேர்கள் படிக்கிறார்கள் என்பதாலே அது நல்ல நூலாகி விடாது. அண்ணாசாலையில் சாக்குக்கு அடியில் விற்கும் சரோஜாதேவி கூட அதிக பதிப்பு கண்டு வருகிறது. அதற்காக அதன் ஆசிரியரைப் பெருமைப்படுத்தி விடமுடியுமா?

வாழ்வியல் சிந்தனை என்று அதனைச் சொல்வதைவிட 'பிழைப்புவாதக் குறிப்பேடு' என்பதே பொருந்தும்.

பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்பது அடிப்படையிலே மேல்கீழ் எனும் வருணாசிரம எதிர்ப்புத்தான்.
அந்த அடிப்படைக் கொள்கையையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு வீரமணி, "தம்மின் மெலியாரை நோக்கி...அம்ம..பெரிதென்க" எனும் நாலடியாரை விதந்தோதியும், "எனக்குக் காலுக்கு செருப்பில்லையே என்றிருந்தேன். ஒரு காலே இல்லாதவரைக் கண்டபோதுதான் நமக்குக் கிடைத்து இருக்கும் நல்ல வாய்ப்பிற்கு நன்றி சொல்லப் பழகினேன்" என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் வருணாசிரம சிந்தனையைப் போதிக்கிறார். ஓ.பி.சி. ஒருவன், தன்னை விடக் கீழாக இருக்கும் தலித்தை நினைத்து தன் நிலைமைக்குப் பெருமைப்படச்சொல்லும் ஒருவரை எதனால் அடிக்கலாம்?

ஊரெங்கும் சாராயத்தை ஊத்திக்கொடுக்கும் அரசைச் சாட மாட்டார், இந்தப் பிழைப்புவாதி..நண்பர்களே! மது அருந்தும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.. என்று அன்புக்கட்டளை இடுவாராம். இதனை வாசிப்பவர்களுக்கு, பெரியார், கள்ளுக்காக பயன்படக்கூடாதென்று 500 தென்னைகளை வெட்டித்தள்ளிய செயல்வீரம் தெரியவா போகிறது?

காலைஉணவாக கொஞ்சம் பாதாம்பருப்பையும், யோகர்ட் எனப்படும் அமெரிக்க உணவையும் பரிந்துரைக்கிறார் இவர். 20 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஒரு வேளை உணவு இன்றித்தவிக்கும் இந்தியாவில் ஒரு நபர் இந்தமாதிரி கொழுப்பெடுத்து எழுதுவதை தமிழன் சரி என்கிறாரா?

தூங்கப்போகும் முன் பல்விளக்குக, இதய நோயாளிகள் கூட தாம்பத்ய உறவு கொள்ளலாம் என உளறுவதும், அதற்குப் பெரியாரின் காசையே கரியாக்குவதும் 'பிழைப்புவாதம்' இன்றி வேறு என்ன?

கொலைகார கிரிமினல் சாய்பாபா கருணாநிதியை சந்தித்தபோது கருணாநிதியின் மனைவி அவரின் காலில் விழுந்தார். இதனை நேர்மையான பெரியாரின் வாரிசு என்ன செய்திருக்க வேண்டும்? விமர்சித்திருக்க வேண்டாமா? அதனை விட்டு விட்டு "இது பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி" என்று பெரியார் திடலில் இருந்து கொண்டே எழுதுவதை விட ஓட்டாண்டித்தனம் வேறு உண்டா?

ஆட்சியில் ஜெயலலிதா இருக்கும்போது மந்திரிகள் வேப்பிலைகட்டி ஆடினர், மண்சோறு தின்றனர். 'நான் பாப்பாத்திதான் என்ன செய்வே' என்றாள் அந்த அம்மா. அப்போதெல்லாம் நாத்திகக் கொள்கையை திராவிடன் நலநிதியின் பெட்டகத்துக்குள் பூட்டி வைத்தவர்தானே வீரமணி!

வாழ்வியல் சிந்தனைகளை மக்களிடம் பரப்புவது யார் யார் என்றால் மதுரை ஆதினமும், திருச்சி கத்தோலிக்க பாதிரியும்.. இதில் இருந்தே தெரியவில்லையா இந்தக் கழிசடையின் கொள்கைப்பற்று.

சின்ன கட்டபொம்மன்


அசுரன்

said...

தமிழன் எனும் பெயரில் இடுகை இட்டுள்ள தோழருக்கு,

தங்கள் இடுகைக்கு நன்றி.

தாங்கள் சொல்ல வரும் அறக்கட்டளை விசயத்தைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டி உள்ளது.

பெரியார் சிக்கனமாக இருந்து பொருள் சேர்த்து வைத்து அதனை சுயமரியாதைப் பிரச்சாரம் செய்யசொன்னபோது, சுயநிதிக் கல்லூரிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் நடத்துவதே சுயமரியாதைத் தொண்டாகும் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. சுயநிதிப் பொறியியல் கல்லூரி என்பது இன்றைக்கு பெருவாரியான பணத்தை அள்ளிக்குவிக்கும் தொழில். வீரமணி நடத்தும் கல்லூரிகளில் நன்கொடை வாங்கி விற்கப்படும் சீட்டுகளில், அக்கட்சியிலேயே 30, 40 ஆண்டுகாலம் உழைத்த பெருந்தொண்டர் குழந்தைகளுக்குக் கூட சலுகை தரப்படுவதில்லை. அவ்வளவு கராறாய் வியாபாரம் செய்கிறவர்தான் வீரமணி. அக்கல்லூரிகளில் பணியாற்றும் நபர்களைக் கேட்டால் "அவ்வப்போது ஆசிரியருக்கு வேன் வாங்குகிறோம் என்றோ எடைக்கு எடை வெங்காயம் தருகிறோம் என்றோ ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் சம்பளத்தைப் பிடித்து விடுகிறார்கள்".

இது போதாது என்று வெளிநாட்டு நிறுவனங்களுடனும் சென்னை ஐ ஐ டி யுடனும் கூட்டு சேர்ந்து கோடிக்கணக்கான டாலர் முதலீட்டில் 65 ஊர்களில் பெரியார் பெயரில் கயிறு திரித்தல், மூலிகைச் செடி வளர்த்தல், காட்டாமணக்கு வளர்த்தல் என்று வியாபாரம் சக்கை போடு போடுகிறது.

குடும்பவிளக்கு, திராவிடன் நலநிதி எனும் வட்டிக்கடை மூலம் பலரின் தாலியை அறுத்தவர்கள்தான் இவர்கள்..

பெரியார் இதை எல்லாம் செய்யச் சொல்லி எந்த இடத்திலும் சொன்னதில்லை.

உங்களை மாதிரி அப்பாவிகள் இன்னமும் வீரமணியையும் அவரின் அறக்கட்டளையையும் நம்புவதால்தான் அவரால் இன்னமும் கேட்பாரின்றி பெரியாரைத் திரித்துப் புரட்டிப் பிழைக்க முடிகிறது.

சம்பளம் வாங்காமல் உழைப்பது என்பதைப் பற்றிக் குறிப்பிட்டதால் உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த வேண்டும். நூறு கோடி ரூபா செலவில் வளர்ப்பு மகன் கல்யாணத்தை நடத்திய 'சமூகநீதி காத்த வீராங்கனை' வாங்கிய சம்பளம் ஒரு ரூபாதான்.

பெரியார் கல்லூரிகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்ற அரும்பாடு பட்டது சுயமரியாதைக் கொள்கைக்கா? சுயநிதிக் கொள்ளைக்கா? என்பதை ஒன்னாம் கிளாஸ் படித்தவனும் அறிவான்.

பெரியாரின் பேச்சுக்களும் எழுத்துக்களும் இன்னமும் முழுத் தொகுப்பாக வரவில்லை.

தமிழ்த் திரையுலகின் மாபெரும் குப்பை மசாலாவான 'புரட்சிக்காரனு'க்கு செலவழித்த பணத்தை இதற்கு செலவிட்டு இருக்கலாம்.

'பேச்சாளர்களுக்கு கைதட்டுங்கள்', 'சாப்பாட்டுத் தட்டைக்கழுவி வையுங்கள்' என்பது போன்ற புரட்சி முழக்கங்களை விற்றுக் காசாக்குவதும் ஒரு பிழைப்புத்தானா?

முதலில் பெரியாரியலை வீரமணியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

சின்ன கட்டபொம்மன்

said...

தோழர்களே!
எறியுங்கள்!சேற்றை வாரி எறியுங்கள்!
பலர் கேட்ட கேள்விகள்தான்.பெரியவர் மூப்பனார் வல்லம் வந்து பார்த்துவிட்டுச் சொன்னார்.பணம் வசூலித்துக்கொண்டே இருக்கிறார்களே என்னதான் செய்கிறார்கள் என்று நானும் யோசித்ததுண்டு.இங்கு வந்து பார்த்த் பின்னர்தான் தெரிகிறது,என் பங்காக ஒரு லட்சம் தருகிறேன் என்றார்.மாண்புமிகு வி.பி.சிங் ஒன்றாம் வகுப்புக்குமேல் படித்தவர்தான்.நாகம்மை குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை அளித்தார்.
வல்லம்,திருச்சி நிறுவனங்களால் எவ்வளவு பெண்கள் படித்து முன்னேறியுள்ளார்கள் என்பது தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.மற்றவர்கள் நடத்துவது போல பண வங்கிகளோ கோடிசுவரர்களின் ஆதரவுடனோ நடக்கவில்லை.செலவுகள்,கட்டிடங்கள்
என்று பாருங்கள்.பாலைவன்ம் சோலைவனமட்டுமல்ல எதிர் கால்த் தலைமுறை நிர்ணயிக்கப்படுகிறது அங்கே.
தஞ்சை சுற்றி முதலில் POWER(Periyar organisation for womens empowerment and renaissance)தொடங்கி கல்லூரி மாணவியர் கிராமங்களுக்குச் சென்று பேசி கிராம முன்னெற்றமாக ஆரம்பித்து,பல பெண்கள் சுய உதவிக்குழுக்களுடன் சேர்ந்து அடைந்திருக்கும் முன்னேற்றம் ஆம்,என்னைப்போல நேரிலே பார்த்தவர்கட்கு அதிசய்த்தைத் தருகிறது.பின்னர் அதுவே கல்லுரியுடன் சேர்ந்து 65 கிராமங்களுக்கு பெரியார் புராவாக(providing urban facilities for rural ares} என்ற மாண்புமிகு அப்துல் கலாம் அவரது புரா திட்டமாக அவரே நேரில் பார்த்து மற்ற அனைத்துக் கல்லூரிகள்,பல்கலைக் கழகங்கலை புராவை நீங்கள் 20,50 கிராமங்களை எடுதுக் கொள்ளுங்கள் என்று சென்ற இடமெல்லாம் வல்லம் பெரியார் புரா என்று பாடி வருகிறார்.
தஞ்சயைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் கலிபோர்னியாவில் அவருக்குத் தெரிந்த நீர் மாசுபடுத்தும் நிறுவனத்தினர் சுனாமி நடந்ததும் வந்து அவர்கள் செலவிலேயே நாகப்பட்டினம் மருத்துவ மனைக்குக் குடிநீர் வழி செய்தனர்.அண்மையில் இரண்டு கிராமங்களுக்கு அவர்கள் நன்கொடையாகக் குடிநீர எந்திரங்கள் பொறுத்தி அப்துல் கலாமும்,பர்னாலா அவர்களும் அந்த நீரைக் குடித்துத் திறந்துவைத்தனர்.65 கிராமங்கள் முன்னேறி வருவதும் அதிலே மாணவர்கள் பங்கேற்று நடத்துவதும் தவறா?
ஆம்!நன்கொடை வசூல்கள் நடந்தன ஆனால் அவை நிறுத்தப் பட்டுவிட்டன.
ஆம்!அந்த விருந்து சில நண்பர்களின் கட்டாய்த்தால் நடந்தது.அதுமாதிரி எத்தனை நடந்திருக்கிறது?
ஆட்சிகளுக்குத் துணைபோவதால்தான் ஒவ்வொருவரும் ஆட்சியில் இருக்கும் போது கல்வி நிறுவணங்களுக்குத் தொல்லைகள் கொடுத்தனரோ?
கடைசியாக ஆனால் முக்கியமாகப் பெரியார் கொள்கைப் பரப்பு இல்லை என்று சொல்கிறீர்களே?எத்தனை மாநாடுகள்,பள்ளிகள் கல்லூரிமுன் பிரச்சாரங்கள்?பெரியார் கள்ஞ்சியம் ஜாதி ஒழிப்பு மட்டும் எத்துனைத் தொகுதிகள் அழகாக வெளிவந்து்ள்ளன?புதிய அச்சிட்டுக்களில் அய்யாவின் நூல்கள் எத்தனை பெரியார் நூல் விற்பனை நிலையங்களில் எவ்வள்வு விற்கப்பட்டுள்ளன்,விற்கப்படுகின்றன தெரியுமா?
ஆங்கிலத்திலும்,பிரெஞ்சிலும் மொழி பெயர்க்கப்பட்டும்,இன்னும் மற்ற மொழிகளிலும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
பெரியார் படிப்பகங்கள் திறக்கப்பட்டு அங்கே மக்கள் படிப்பது தெரியுமா?
இட ஒதுக்கீடு முதல் ஈழப் போராட்டம் வரை,அர்ச்சகர் முதல் உச்சமன்றம் வரை எதற்குப் போராட வில்லை?
இன்று இளைஞர்கள் முன்னின்று நடத்துகிறார்களே.சீரங்கம் தோழர்களைக் குறை சொல்லியிருப்பது அவர்களின் கடும் உழைப்பிற்குச் செய்த அவமானமாகக் கருதுகிறேன்.அவர்கள் துடித்ததும் பட்டதும் அறியாமல் எழுதலாமா?உண்மையிலேயே வருந்துகிறேன்.
குறை சொல்லுங்கள்,அது எதிர்கால்த்திற்கு நல்லது படைக்கட்டும்.
பெரியார் யாருக்கும் சொந்தமல்ல.பெரியார் பெயரிலே யார் வேண்டுமானாலும் நல்லது செய்யட்டும்.செய்பவர்களை ஆதரிப்போம்,ஊக்குவிப்போம்.

said...

நெல் விளைந்து கொண்டிருக்கும் ஊர்களில் காட்டாமணக்கையும் அவுரிச் செடியையும் போடச் சொல்லி ஆசை காட்டி அவ்விளைபொருட்களுக்கு மார்க்கெட் ஏற்படுத்தித்தரும் தரகு வேலையைச் செய்து தருவதும் பெரியார் தொண்டா? அல்லது உணவுப்பயிரைக் கைவிடச்செய்து ஏகாதிபத்தியத்தின் கோதுமைக்குக் கையேந்த வைக்கச் செய்யும் சதியா?

குடிநீர் தருவதற்கு அமெரிக்காக் காரன், ரோடு போட்டுத்தரவும் கக்கூஸ் கட்டித்தரவும் டாலர் வாங்கிச் செயல்பட பெரியார் புரா என்றால், அரசு எதற்கு?

உடனே பதில் கிடைக்கும் தமிழன் போன்றவர்களிடமிருந்து...'எல்லாத்துக்கும் கவருமெண்டையே நம்பிக்கிட்டு இருக்கலாமா?'ன்னு.. அப்படின்னா என்னத்துக்குப் போய் 'அரசாங்கத்துகிட்ட இடஒதுக்கீடு கொடு'ன்னு கேக்கணும் பெரியார் தொண்டர்கள்? அரசாங்கத்தை நம்புனாதானேய்யா அரசுப்பணிகளும்...இடஒதுக்கீடும்??

உடனே 'தனியாரிலும் இடஒதுக்கீடு' கேட்டு தீர்மானம் போட்டாரு ஆசிரியரு அப்படிம்பீங்க..தெரியும்..

தனியாரிலும் இடஒதுக்கீடு கேக்கும் யோக்கியசிகாமணிகள் நடத்தும் நிறுவனங்களில் மட்டும் கள்ளர்கள் ஆதிக்கம் இருப்பது ஏன்? பெரியார்புரா, பவர் என்றும், மணியம்மை கல்லூரி என்றும், குடும்பவிளக்கு என்றும் ஏகத்துக்கு ஒரத்தநாட்டு ஆதிக்க சாதி கள்ளர்கள் குமிந்துகிடப்பது எப்படி?

கத்தாளையையும், மூலிகைச் செடியையும் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் பயிரிடச்சொல்லும் தேசத்துரோக வேலைக்கு வக்காலத்து வாங்கலாமா?

நன்கொடைகளை சரியாக நிர்வாகம் பண்ணிடுதல் எவராலும்தான் முடிகிற காரியம்.. பங்காரு அடிகளும், அமிர்தானந்தமாயியும், சாய்பாபாவும் கூட அதைத்தான் செய்கிறார்கள். இதில் என்ன கொள்கை வெங்காயம் வந்தது?

உழைக்கும் மகளிர்தினத்தை 'மகளிர்தினமாக' உலகம் புரட்டிக்கொண்டாடும் வேளையில் வீரமணியாரின் மகளிர் கோஷ்டிகள் சென்னையிலும் ஒரு மாநாடு கூட்டினார்கள். மகளிர் தினம் என்பதே அமெரிக்க உழைக்கும் பெண்கள் தங்கள் வேலைநேரத்தை 8 மணித்தியாலமாக்கப் போராடியதன் வரலாறாக உலகெங்கும் அனுசரிக்கப்படுகின்ற ஒன்று.

பாலிடெக்னிக்கிலும், எஞ்சினியரிங் கல்லூரியிலும் 10 மணிநேரத்துக்கும் அதிகமாக பெண் ஊழியர்களிடம் வேலையை வாங்கிக்கொண்டு, சடங்கு செய்வது மாதிரி மகளிர் தினம் கொண்டாடுகிறது தி.க.

சிரீரங்கத்தில் பெரியார் சிலையை உடைத்த கருங்காலிகளுக்கும் என்.எஸ்.ஏ. அதற்குப் பதிலடியாக பூணூல் அறுத்தாலும் ராமனுக்கு செருப்படி கொடுத்தாலும் என் எஸ் ஏ என்று பெரியாரின் கைப்பிடித்த கருணாநிதி அரசு நடந்து கொள்ளுமாம். அதை ஆசிரியர் ஆதரித்து பெரியாரை வெறும் சிலையாக மட்டும் பார்ப்பாராம்.
இதனைத் தமிழன் போன்றவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே நம் ஆசை..

சின்ன கட்டபொம்மன்

said...

தமிழன் அவர்களே,

மலேசிய அரசியலில் குண்டர்களை வைத்துக்கொண்டு அடாவடி அரசியல் பண்ணுகிற டத்தோ சாமிவேலு 2 லட்சம் கொடுத்தால் அவர் பேரிலும் கட்டிடம்..

ஊரை அடித்து உலையில் போட்ட 'நான் ஒரு பாப்பாத்திதான்' என்று திமிரோடு கேட்ட ஜெயா மாமி 5 லட்சம் கொடுத்தால் அம்மாமிதான் 'அன்புச் சகொதரி' அவரின் வலக்கரம் 'இரும்புக்கரம்' இடக்கரம் 'அன்புக்கரம்', அவர்தான் 'சமூக நீதிகாத்த வீராங்கனை'..

உழைக்கும் மக்கள் 44 பேரைக்கொளுத்திக்கொன்ற இரிஞ்சூர் கோபாலகிருஸ்ணநாயுடுவுக்கு (கீழ்வெண்மணி கொடூரம்) ஆதரவாக வழக்கு நடத்திய பண்ணையார் மூப்பனார் 1 லட்சம் கொடுத்தால் அவர் 'பெரியவர் மூப்பனார்'.

சாராயத்தால், அடியாட்களால் பலரைப் பரலோகத்துக்கு அனுப்பிய ஜேப்பியார் இனிமேல் லட்சம் கொடுத்தால் அவரை 'கல்வி வள்ளல்' என்பீர்களா?

அய்யா.. இதற்கு பெரியார் கொள்கை எல்லாம் தேவை இல்லை..

உள்ளூர் கரகாட்டத்திலே எந்தக்கழிசடை வந்து 100ரூபாய் கொடுத்தாலும் 'வள்ளல் பாரியின் திருக்கரத்தால்' என்ற அடைமொழியுடன் வாழ்த்துக்கிடைக்கும் கரகாட்ட செட்டிடம் இருந்து..

என்றைக்கும் கரகாட்டக்கோஷ்டியினர் தம்மைக் கொள்கையாளர்கள் எனச்சொன்னதில்லை..

சின்ன கட்டபொம்மன்

said...

ஈழத்துக்குப்போராடிய வீரமணியின் பெருந்தன்மையை..பூங்குழலி (நெடுமாறனின் மகள்) தொகுத்த, பேரறிவாளனின் தாயாரின் நினைவுக்குறிப்பு நூல் தெளிவாக அம்பலப்படுத்தி இருக்கின்றது. ஈழத்துப்பிரச்சினையை 80களில் தி.க. பேசிவந்தது உண்மைதான்.
ஈழத்தின் மீது ஆக்கிரமிப்புப் படையெடுப்பு நடத்திய பாசிஸ்ட் ராஜீவையும் அது தெளிவாகவே அம்பலப்படுத்தியும் வந்தது. இதெல்லாம், ராஜீவ் எனும் போர்க்குற்றவாளி தண்டிக்கப்படும் வரை. ராஜீவுக்குப் புலிகள் மரணதண்டனை கொடுத்த அடுத்த நாளே வீர (!) மணி உஷாராகி விட்டார். குண்டுக்கு பேட்டரி வாங்கிக்கொடுத்த குற்றத்துக்காக தேடப்பட்டு வந்த தி.க. இளைஞர் அறிவு என்கிற பேரறிவாளனை, தி.க., பெரியார் திடலில் வைத்து சி.பி.ஐ.க்குக் காட்டிக் கொடுத்தது. அதன் பின்னர் அறிவு விசாரணைக்கைதியாக பூந்தமல்லி சிறையில் 40 பேர்களுடன் அடைக்கப்பட்டிருந்தபோது அறிவு உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேருக்கும் பிஸ்கட், கைலி, சோப்பு வாங்கிக்கொண்டு ஜோலார் பேட்டை (அறிவின் சொந்த ஊர்) ஊரில் இருந்து புறப்பட்டு அறிவின் அம்மா அவர்களை மனுப்போட்டுப் பார்க்க வருவார். அதிகாலையில் பூந்தமல்லிக்குப் போகும் முன் முந்தைய இரவை பெரியார் திடலில் கழித்து வந்தபோது அவரிடம், இனிமேல் இங்கு வந்து தங்கக்கூடாது என்று விரட்டியதும், ஈழப்பிரச்சினையில் அக்கறை கொண்ட தி.க.தான். அதன்பின்னர், அந்த அம்மா, அதிகாலை பெங்களூர் மார்க்கமாய் வரும் ரயிலில் வந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் படுத்துக்கிடந்திருக்கிறார்.

பேரறிவாளன்(தூக்குக்கயிற்றின் விளிம்பில் நிற்கிறவர்) உள்ளிட்ட தி.க. தொண்டர்கள் கைதானவுடன், அவர்களுக்கும் தி.க.வுக்கும் சம்பந்தமே இல்லை எனக் கோழைத்தனமாய்க் கைவிரித்ததுதான் ஈழத்தொண்டா?

ராஜீவ் கொலையைப் பற்றி எவருமே மூச்சு விடாமல் வீரம் காட்டிக்கொண்டிருந்த போது, இந்தக்கொலை சரியானது என்ற விசயத்தை பத்திரிக்கையில் எழுதி ('யாரும் இவருக்காக அழமாட்டார்கள்' புதியகலாச்சாரம்) அதனை ரயில்களிலும் பஸ்களிலும் விற்றவர்கள் ம.க.இ.க. தோழர்கள். அவர்கள் ராஜீவ் கொலையின் அரசியலை மேடைபோட்டுப் பேச அன்றைக்கு பெரியார் திடலில் கதவுகள் திறக்க மறுத்தன என்பதை தோழர் மருதய்யனின் 'போராடும் வேளைகளில்' உரைவீச்சுத் தொகுப்பு பதிவு செய்துள்ளது.

அடுத்து, இட ஒதுக்கீட்டில் தி.க. போராடிய வீரம்:

2000 ஆம் ஆண்டில் சென்னை ஐ ஐ டி யில் தலித் மாணவர்கள் (+2வில் ஆந்திர மாநிலத்திலேயே முதல்மதிப்பெண் பெற்றவர்கள்) பழிவாங்கும் நோக்கில் பெயில் ஆக்கப்பட்டு துரத்தப்பட்டதும், தலித் இடஒதுக்கீட்டை அன்றைய ஐ ஐ டி இயக்குநர் செயல்படுத்த மறுத்ததும் பிரச்சினையாகி நெடுமாறன்,விடுதலை சிறுத்தைகள், பெரியார்திக போன்ற அமைப்புகள் போராடிக்கொண்டிருந்தபோது ஐ ஐ டியைக் கண்டித்து பெரியார் திடல் வாயையே திறக்காமல் வீரம் சாதித்தது.

காரணம் என்ன என்ற கேள்விக்கு இப்போதுதான் பெரியார் புரா பதில் சொல்கிறது. பெரியார் புரா திட்டத்தில் சென்னை ஐ ஐ டி யும் ஒரு பங்குதாரர்.

ஐ ஐ டி எனும் பார்ப்பனப் பங்காளிக்காக கொள்கைகளை விட்டுக்கொடுத்து விட்டு வெண்கலச் சிலைகளை மட்டும் 128 இடங்களில் நிறுவதற்கும், அரச மரமெங்கும் பிள்ளையார் சிலை பிரதிஷ்டை செய்வதற்கும் வேறுபாடு ஏதாவது உண்டா?

சின்ன கட்டபொம்மன்.

Related Posts with Thumbnails