TerrorisminFocus

Friday, October 19, 2007

மாசி என்பவர் ஒரு பொய்யரா?

மாசி(Ma. Sivakumar) என்பவர் பொய்யரா அல்லது காந்தியவாதியா? என்று எனக்கு சந்தேகம் வந்ததில்லை. ஏனேனில் இந்த இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் பெரும்பாலும் இருப்பதில்லை. சமீபத்தில் மாசியினுடைய பொய்கள் இமாலயத்தை விஞ்சி செல்கின்றன.

மாசி சொல்கிறார் இந்தியா ஒரு சோசலிச நாடாக இருந்தது என்று. மாசி சொல்கிறார் கம்யுனிஸ்டுகள் மொட்டையாக பதில் சொல்லி தப்பிக்கிறார்கள் என்று.

இந்தியா ஒரு சோசலிச நாடாக இருந்ததா? அப்படி எந்த காலத்திலும் இருந்ததில்லை. ஆனாலும் கூட இன்றைய உலகமய பொருளாதாரத்தால் வளப்பமுறும் ஒரு சிறுபான்மை மக்கள் விரோத கும்பல் மட்டுமே இப்படி ஒரு பொய்யை முன் வைப்பதன் மூலம் உலகமயத்திற்க்கு புனித வட்டம் கட்டுகின்றனர்(மாசி எந்த கும்பல் என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும்).

1947 போலி சுதந்திரத்திற்க்குப் பிறகு இந்தியா ஏகாதிபத்திய மூலதனத்திலிருந்து விடுதலை பெற்ற சோசலிசா நாடாக இருந்ததா என்றால் இல்லை. மாறாக பிரிட்டன் மற்றும் அமெரிக்க மூலதனங்கள் இங்கு முகமூடி போட்டுக் கொண்டு வேலை செய்தன அவ்வளவுதான் வித்தியாசம். சில போலச் செய்தல் பாணி சோசலிச நடவடிக்கைகள மட்டுமே இவர்கள் இந்தியாவை சோசலிச நாடு என்று சொல்ல வாய்ப்பளிக்கின்றன(எ-கா: ரேசன் கார்டு, அரசு தொழிற்சாலைகள், கோட்டா உற்பத்தி முறை, பலமான அரசு வங்கிகள் பொது நிறுவனங்கள் etc).

ஆனால் இதே காலகட்டத்தில்தான் பசுமை புரட்சி, வெண்மை புரட்சி என்ற பெயர்களில் ஏகாதிபத்திய நிறுவனங்கள் இங்கு தமது சுரண்டலை விரிவுபடுத்தத் தொடங்கின. யூனியன் கார்பைடு முதல் சுசுகி வரையான நிறுவனங்கள் இந்திய தரகு முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தமது மூலதன சுரண்டலுக்கு அடித்தளம் அமைத்துக் கொண்டனர். தமது ஆயுதங்களை விற்க்கும் சந்தையாக இந்தியாவை வைத்துக் கொண்டனர். பசுமை புரட்சி என்ற பெயரில் இஸ்ரேல் முதலான நாடுகள் தமது ஆயுத ரசாயனங்களை பூச்சிக் கொல்லி மருந்தாகவும், உரமாகவும் விற்று மண்ணையும், நீரையும் நாசமாக்கினர். பெரிய அணைக்கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு தே஡ல்விகரமான(தோல்விகரமானது என்று இந்திய அரசே பல்வேறு கட்டங்களில் ஒத்துக் கொண்டுள்ளது) திட்டங்களில் மக்களின் வரிப்பணத்தை முடக்கினர். இதே காலகட்டத்தில்தான் சமூக ஏகாதிபத்தியமான ரஷ்யாவிற்க்கும், அமெரிக்காவிற்க்கும் அல்லக்கை தேசமாக இந்தியா வேலை செய்து கொண்டிருந்தது. ஆனால் தற்போதைய நிலையைப் போல அப்பட்டமாக அடிவருடித்தனம் செய்ய இந்திய அரசாலும் இயலவில்லை, அப்பட்டமாக நாட்டாமைத்தனம் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களாலும் இயலவில்லை என்ற ஒரே காரணம் மட்டுமே 1990 களுக்கு முந்தைய இந்தியாவை சோசலிச இந்தியாவாக கருத ஆதாரம் ஆகி஢விடாது.

இந்தியாவில் அன்னிய மூலதனம் குறித்தும், மாசி உள்ளிட்டவர்கள் பொய்களை அம்பலப்படுத்தவும் கீழே உள்ள கட்டுரை உதவும்: The Transfer of Power: Real or Formal? -- Suniti Kumar Ghosh

சோசலிசம் என்பது தனியுடைமைக்கு எதிரானது (தனியுடைமையை இல்லாதொழிக்கும் வளர்ச்சிப் போக்கு கொண்டது) மாறாக இந்திய஡வில் இவர்கள் இருந்ததாக சொல்லும் சோசலிசம் எந்த காலத்தில் தனியுடைமைக்கு எதிரானதாக இருந்தது? இந்தியாவில் சோசலிசம் இருந்ததாக சொல்லும் இந்த வருடங்களில் டாடா பிர்லா கும்பல்களேல்லாம் ஆணி பிடுங்கிக் கொண்டிருந்தார்களா? காதில் பூ சுற்றுவதற்க்கு ஒரு அளவு வேண்டாம்? ஒரு சிறிய விவசாய சீர்திருத்தம் கூட இந்த காலகட்டத்தில் நடந்து விடவில்லை என்பது ஒன்றே சோசலிசம் என்று இந்தியாவை இவர்கள் சொல்லும் பொய்க்கு ஒரு அத்தாட்சியாகும் (நில உச்ச வரம்பு சட்டமும், நிலங்களை பகிர்ந்து கொடுக்கும் திட்டமும் படு தோல்வி என்பதனை அடுத்தடுத்த ஐந்தாண்டு திட்ட அறிக்கைகளும், வேறு சில ஆய்வறிக்கைகளும் மிகத் தெளிவ஡க எடுத்துரைக்கின்றன. மேலும் விவசாய சீர்திருத்தம், விவசாயத்தில் சோசலிசம் என்ற பொய்களின் அவலம் விவசாயத்தின் தொடர் ஧தால்விகளின் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரியும் ஒரு உண்மை ஆகும்).

இந்தியாவில் உலகமயத்திற்க்கு முன்பு இருந்தது சோசலிச பொருளாதாரம் இல்லையெனில் அது எவ்வகையில் தற்போதைய பொருளாத஡ரத்துடன் மாறுபட்டது? இந்திய சிறு மூலதனத்தை சேகரமாக்கும் ஒரு வளர்ச்சிக் கட்டமாகவும், ஏகாதிபத்தியம் தற்காப்பு நிலையிலிருந்த பொழுது தனது இருப்பை பாதுகாக்க பயன்படுத்திய தந்திரமாகவுமே 1947க்கு பிறகான காலகட்டம் உள்ளது. மேலும் தரகு மூலதனத்தை (டாடா பிர்லா ரிலையன்ஸ் கும்பல்) வளப்படுத்துவதும், தேசிய முதலாளித்துவத்தை தேவைப்படுகின்ற அளவு வளர்த்து விடுவதும஡ன ஒரு போக்கு கொண்டதாகவே இந்த காலகட்டம் முழுவதும் இருக்கிறது. எந்த வகையிலும் சோசலிசம் என்று சொல்லிக் கொள்வதற்க்கான அடிப்படையில்லாத ஒரு பொருளாதார அமைப்பை சோசலிசம் என்று பொய்யாக சொல்வதற்க்கு மாசிக்கு சில தேவைகள் இருக்கலாம்(இருக்கலாம்..). சிறப்புப் பொருளாதார மண்டலத்தை நியாயப்படுத்துவதும், அதனை எதிர்ப்பவர்களை அறிவற்றவர்கள் என்பதாக கூற கருத்து அடிப்படைகளை உருவாக்குவதும், சிபொமாவின் கேடுகளுக்கு புனித வட்டம் கட்டவும் என்று பல காரணங்கள் இருக்கலாம்(இருக்கலாம்...).

சீனாவில் சிபொமா ஒரு தோல்வி என்பதை வலியுறுத்தும் பின்வரும் கட்டுரைக்களுக்கு அப்படியே மாசி விளக்க்ம கொடுத்தால் இன்னும் சிறப்பு. சீனாவில் சிபொமா கொத்தடிமை கூடாரமாக இருப்பதை அம்பலப்படுத்தி நாம் மட்டும் கட்டுரை எழுதியதாக் யாரும் எண்ணிவிட வேண்டாம். நண்பர் பத்ரி அவர்கள் கூட சிபொமா பற்றி தமிழ்மணத்தில் விவாதம் பொறி பறந்து கொண்டிருந்த பொழுது சீனாவில் அது தோல்வியடைந்த இந்த அம்சம் குறித்து கட்டுரை எழுதி கேள்வி எழுப்பியிருந்தார். சீனாவில் உலகமயத்திற்க்கு பிறகு மக்களின் போராட்டம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று சீன அரசின் அறிக்கையே ஒத்துக் கொண்டுள்ளது. இத்தனைக்கும் சீனாவில் மொத்தமே 6 சிபொமாக்களோ என்னவோதான் உள்ளன. இந்தியாவில் இது வரை அனுமதி கொடுத்துள்ள சிபொமா எண்ணிக்கை 300க்கும் மேல்.

சிபொமா குறித்த பத்ரியின் கட்டுரை:

சிபொமா குறித்து அசுரனில் வந்த கட்டுரை: நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ! சிபொமா குறித்த எந்தவொரு கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல், அதிலுள்ள மோசடிகள் குறித்து எந்தவொரு கேள்வியும் எழுப்பாமல், சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்டது இங்கு ஏன் முடியவில்லை என்று மட்டும் ஆத
ங்கத்துடன் கேள்வி கேட்டுள்ளார் மாசி. ரொம்ப நோண்டி அவரிடம் கேள்விகள் கேட்டால் நான் ஏங்க அசுரன் அப்படி கேக்க போ஧றன் என்பது போல ஏதாவது மழுப்பலான பதில்களை கைவசம் எப்பொழுதும் வைத்திருக்கிறார் மாசி.

இது தவிர்த்து புஜ(புதிய ஜனநாயகம்)வில் சீனாவின் இன்றைய நிலைமைகள் குறித்து கடந்த மூன்று மாதங்களில் சில கட்டுரைகள் வந்தன. அவற்றின் மென்வடிவம் இன்னும் வலையேற்றப்படவில்லை(தமிழ்சர்க்கிள்). அந்த கட்டுரைகளிலும் சீனா உலகமயத்திற்க்கு பிறகு மக்களின் வாழ்க்கைத் தரம் படு பாதாளத்திற்க்கு சென்றுள்ளது குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளன.

மாசி தனது பதிவில் கம்யுனிஸ்டுகளிடம் அவரது சிபொமா குறித்த அந்த கேள்வியை கேட்டால் ஒரு நாட்டினுடைய அனுபவத்தை அப்படியே இன்னொரு நாட்டுக்கு பொருத்த முடியாது என்ற ஒற்றை பதிலை மட்டும் சொல்வதாக எழுதியுள்ளார்(கதை விட்டுள்ளார்). எந்த கம்யுனிஸ்டிடம் அவர் விவாதித்தார் என்று சொன்னால் வசதியாக இருக்கும். அல்லது இதோ இங்கு ஒரு கம்யுனிஸ்டு காத்துக் கெ஡ண்டிருக்கிறேன், சி.பொ.மா குறித்து விவாதம் செய்ய. உண்மையில் மாசிதான் எந்தவொரு விவாதத்திலும் தரவு, தர்க்க ரிதியாக ஸ்திரமாக வாதிடாமல் நழுவும் போக்கு கொண்டவர். ஒரு கருத்து சர்வாதிகாரியாக திரும்ப திரும்ப எந்த ஒரு தர்க்க அடிப்படையுமின்றி ஒரே
கருத்தை முன் வைத்து வாதிடும் போக்கு கொண்டவர் அவர். இதனை குறிப்பிட்டு அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களும், அவருடனான எமது முந்தைய விவாதங்களும் இதற்க்கு சாட்சியாக எமது தளத்திலும், அவரது தளத்தில் சில கட்டுரைகளாக கிடக்கின்றன (காந்தி மற்றும் அஹிம்ஸை குறித்தான கட்டுரைகள்).

இது தவிர்த்து அடுக்கடுக்காக பல பொய்களை சொல்லிச் செல்கிறார் மாசி. இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்பாம், ஜனநாயகமாம்... அதாவது சிபொமா விசயத்தில் மக்களுக்கும் அரசுக்கும் நடந்த மோதலுக்கு காரணம் இந்த அமைப்பை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்தானே தவிர்த்து மற்றபடி இந்த அமைப்பு ஜனநாயகமாகவே உள்ளது என்கிறார் மாசி. அது சரி மாசி.. சிபொமாக்கள் வருவது நின்றுவிட்டதா என்ன? மக்களின் குரல் துப்பாக்கி குண்டில் கறைந்தது மட்டுமே நடந்துள்ளது. மற்றபடி நந்திகிராமிலும், கலிங்காநகரிலும் பன்னாட்டு மூலதனம் பதுங்கு குழியில் பயந்து ஒளிந்திருப்பதிற்க்கு காரணம் மாசி சிலாகிக்கும் போலி ஜனநாயக அமைப்பு அல்ல மாற஡க அந்த குறிப்பிட்ட பகுதி மக்களின் போராட்டம் மட்டுமே காரணம். இந்த போராட்ட உணர்வும் தியாகமும் பிரிட்டிஸ் ஆட்சி செய்த
பொழுதும் இருந்த ஒன்றுதான். உடனே பிரிட்டிஸ் அரசின் ஜனநாயக சிறப்பே சிறப்பு என்று மாசி பதிவு போட்டாலும் போடுவார். அவரது நோக்கம் தனது வர்க்க நலனுக்கேற்ற சமூக அமைப்புக்கு புனிதம் பிம்பம் கட்டும் வேலை. இதே இடத்தில் சீனா குறித்த தனது அறியாமையையும் முன் வைக்கீறார் மாசி. சீனாவில் உலகமயத்திற்க்கு பிறகு மக்களின் போராட்டங்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன. அங்கும் பிரச்சினைகள் கருக் கொண்டு வளர ஆரம்பித்து விட்டன என்ற உண்மை எந்தளவுக்கு அவருக்கு தெரியும் என்று நமக்கு தெரியவில்லை. குறைந்த பட்சம் சீன அரசின் அதிகாரப்பூர்வ ஆண்டறிக்கைகளை வாசித்தாலே சில தெளிவுகள் கிட்டும் என்று தெரிகிறது.

இந்திய நாடாளுமன்றத்திற்க்கு ஒரு அதிகாரமும் கிடையாது என்பதுதான் உண்மை. எ-காவிற்க்கு 1990 காட்ஸ் ஒப்பந்தமும், தற்போநதய அணு ஆயுத ஒப்பந்தமும் நாடாளுமன்ற ஒப்புதல்(123-agreement - அடிமை ! அடியாள் !! ) இன்றியே நடைமுறைக்கு வந்துள்ளன(இது தவிர்த்து பல்வேறு ஒப்பந்தங்களும் கூட இதே போல). இந்த ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கூட நாடாளுமன்றாத்திற்க்கு அதிகாரம் இல்லை என்பது குறித்தாவது மாசிக்கு தெரியுமா? இதுதான் ஜனநாயகம். இவ்வளவுதான் ஜனநாயகம். மாறாக நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே மக்கள் செய்துள்ள போராட்டங்களே இந்த அரசை பின்வாங்கச் செய்துள்ளது(சிபொமா முதல் சில்லறை வணிகம் வரை). இப்படிப்பட்ட போலி ஜனநாயகத்தை, நாடாளுமன்ற ரப்பர் ஸ்டாம்பை கேள்வி கேட்டு (அணு அயூத ஒப்பந்தம் சம்பந்தமாக) போடப்பட்ட வழக்கை விசாரிக்கக்கூட எடுக்காமல் நீதிமன்றம தள்ளுபடி செய்து விட்டது. காரணம் கேட்ட பொழுது வந்த பதில்தான் மாசி கட்டியெழுப்பும் புனித போர்வையை கிழிக்கீறது. நீதிமன்றம் சொன்னது: "வழக்கை நிராகரிக்க காரணம் சொல்லும் அவசியம் நீதிமன்றத்திற்க்கு இல்லை. வழக்குகளை எடுப்பதும் நிராகரிப்பதும் நீதிமன்றத்தின் தனிப்பட்ட விருப்பம்(discretion) சார்ந்தது". என்னே உங்கள் ஜனநாயக மான்பு!!! இதே நீதிமன்றம் பார்ப்ப்னியத்திற்க்கு ஆபத்து வந்த ஆதாம் பால பிரச்சினையிலும் சரி, உழைக்கும் மக்களை மாநகரங்களை விட்டு விரட்டியடிப்பது உள்ளிட்ட ஏகாதிபத்திய திட்டங்களிலும் சரி யாரும் கூப்பிடாமலே வந்து தனது அதிகாரத்தை வைத்து மிரட்டியுள்ளது. அரசு என்பது அரசாங்கம் என்பது வெவ்வேறு என்பதாவது மாசிக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இந்த அரசு தரகு அதிகார வர்க்க அரசு, அரசாங்கம் என்பது அதற்க்கான முகமூடி
அவ்வளவுதான். முகமூடியை மாற்றி/சீர்திருத்தி எந்த பிரயோசனமும் இல்லை.

அப்புறம் அவரது பொய்களிலேயே மிகப் பெரிய பொய் வருகிறது,

//முதலில் நல்ல எண்ணமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட தலைவர்கள் அரசு கொள்கையை வகுக்கிறார்கள்.//
யாருய்யா இந்த நல்லெண்ணம் கொண்ட ஆத்மாக்கள்.... விவசாயிகள் ஒரு லட்சம் பேர் சாவதை வேடிக்கை பார்த்தவ்ரகளா? அல்லது அவர்கள் சாவுக்கு காரணமான கொள்கைகளை வகுப்பவர்களா? சில்லறை வணிகத்திலும் கூட பன்னாட்டு மூலதனத்தை நுழைத்த அயோக்கிய சிகாமணிகளா? அணு ஆயுத ஒப்பந்தம் முதல் பல்வேறு அடிமை ஒப்பந்தங்களை மக்களிடம் பொய் சொல்லிவிட்டு விமானம் ஏறிப் போய் கள்ளத்தனமாக கையெழுத்து போட்டு வந்தார்களே அவர்களா? வேதாந்த கம்பேனியின் நிர்வாகியாக நேற்று வரை இருந்த பா சிதம்பரமா? அல்லது தான் லீகல் அட்வைசராக வேலை பார்த்த என்ரான் கம்பேனிக்கு தான் நிதிஅமைச்சர் ஆனவுடன் 7000 கோடி ரூபாய் கிடைக்க வழி செய்த பா சிதம்பரமா? கங்கையை கூட்டிக் கொடுத்த வாஜ்பேயியா? ராணுவ ஒப்பந்தம் முதல் அணு ஆயுத ஒப்பந்தம் வரை மக்களிடமும், நாடாளூமன்றத்திடமும் பொய் சொல்லி கையெழுத்திட்டு வந்த மன்மோகன் சிங் உள்ளிட்ட அடிய஡ள் கும்பலா? கேள்வி கேட்க்க கூட பணம் வாங்கிய புண்ணியாத்மாக்களா? ஹவாலா முதல் பல்வேறு கொலை கொள்ளை மாபியா வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 80% மேலான நாடாளுமன்ற உறுப்பினர்களா? அல்லது இத்தனைக்கும் பிறகும் நாடாளுமன்ற மாண்பு காக்கும் சோம்நாத் சேட்டர்ஜியா?

ஏன் மாசி இந்தளவுக்கு தரம்தாழ்ந்து போய்விட்டீர்கள் என்று கேட்க்க மாட்டேன். பூனைக்குட்டி வெளிவந்துவிட்டது என்று வேண்டுமானல் சொல்வேன்.

//நாடாளுமன்றத்தில் பொருளாதார மண்டலம் குறித்த விவாதத்தின் போது எதிர்கட்சிகள் வேறு ஏதாவது தலைப்புச் செய்தியை உருவாக்கும் கலாட்டாவில் இறங்கி மசோதாவை அலசலின்றி நிறைவேற விட்டிருக்கலாம்.//

இப்படி தமது சகோதரர்கள் மீது பலி விழுந்து விடக் கூடாது என்பதற்க்காக யூகங்கள் வேறு. உண்மையில் நாடாளுமன்றத்தில் மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கும் யாருக்கும் சிபொமா குறித்து கருத்து வேறுபாடே கிடையாது. அதனால் விவாதமும் தேவைப்படவில்லை. இன்னும் சொன்னால் காட்ஸ் ஒப்பந்தம் முதல் இறக்குமதி சலுகைகள், விவசாய விதை நெல் சீர்திருத்த சட்டம், தண்ணீர் தனியார்மயம் முதலான எந்தவொரு மக்கள் விரோத திட்டமும், உலகமயத் திட்டமும் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யப்படவில்லை. செய்ய வேண்டிய தேவை நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும் மாசியின் ஆதரவு பெற்ற நல்லொழுக்க சீலர்களுக்கும் கிடையாது. அவர்களின் சொந்த சம்பாத்தியம் மற்றும் அதிகார பகிர்வு குறித்த கட்டபஞ்சாயத்து கூடமாகவும், வோட்டு பொறுக்கி சில்லறை நாடக அரங்கமாகவும், அரட்டைமடமாகவுமே இருக்கும் அளவு மட்டுமே அதிகாரம் பெற்ற ஒரு அமைப்பு குறித்துதான் மாசி சிலாகிக்கிறார்.


அசுரன்

37 பின்னூட்டங்கள்:

said...

அசுரன்,

அல்பத்தனமாக சூடான இடுகையில் வர வேண்டும் என்று அடிக்கும் கூத்தாகவே இருக்கிறது உங்கள் பதிவு!

உண்மையில் கருத்தாக்கம் கொண்ட விவாதமாக பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இப்படி பதிவிட்டு இருக்க மாட்டீர்கள்.

//இந்தியா ஒரு சோசலிச நாடாக இருந்ததா? அப்படி எந்த காலத்திலும் இருந்ததில்லை. ஆனாலும் கூட இன்றைய உலகமய பொருளாதாரத்தால் வளப்பமுறும் ஒரு சிறுபான்மை மக்கள் விரோத கும்பல் மட்டுமே இப்படி ஒரு பொய்யை முன் வைப்பதன் மூலம் உலகமயத்திற்க்கு புனித வட்டம் கட்டுகின்றனர்(மாசி எந்த கும்பல் என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும்).//

இந்தியா சோசலிச நாடாக எக்காலத்திலும் இல்லை எனில் தற்போது எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ மாநில அரசுகள் இல்லை! இதை மறுக்க முடியுமா?

மேலும் பல மாற்றுக்கருத்துக்கள் இருப்பினும், உங்கள் அடிப்படை வாதமே தவறு என்பதால் ... உங்களுக்கு நீங்களே ஓரங்க நாடகப்பாணியில் விவாதம் செய்துக்கொள்ள அனுமதி அளித்து வழி விடுகிறேன் :-))

said...

//இந்தியா சோசலிச நாடாக எக்காலத்திலும் இல்லை எனில் தற்போது எந்த மாநிலத்திலும் கம்யூனிஸ மாநில அரசுகள் இல்லை! இதை மறுக்க முடியுமா?//

what the hell is there to deny this? yes.. There is no communist state governments in india. If you feel so, please proove it.

vouvaal.. don't pretend to be genious and don't try to be too smart

said...

அய்யா அதி அறிவு ஜீவி வவ்வாலு... நீங்க மறுக்கமுடியுமா என்று சவால் விட்ட விசயத்தை நானும் மறுக்கிறேன்... இப்ப என்ன செய்யலாம்... சொல்லுங்க.....

இந்தியாவில் கம்யுனிஸ்டுகள் எங்கும் ஆட்சி செய்யவில்லை/செய்ததில்லை. இதுதான் உண்மை.

மாசியுடன் இதற்க்கும் முன்பும் பலமுறை விவாதம் செய்தாகிவிட்டது. நாம் முன் வைக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல், தரவுகளையும் மறுக்காமல் தனது கருத்தை மட்டும் திரும்ப் திரும்ப இட்டுச் செல்லும் ஒரு போலி மனிதாபிமானி அவர்.

இப்பொழுது என்னடாவென்றால் சிபொமா குறித்து புனித வட்டம் கட்டும் படு கேவலமான தனது வர்க்க இயல்பின்பாற்ப்பட்ட முயற்சியிலும் இறங்கிவிட்டார். அதான் இந்த பதிவு.

ஏதேனும் வலுவான கருத்துக்கள் இருந்தால் சொல்லவும். இல்லையெனில் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கவும். புரளி பேச் வேண்டாம்.(அதுதான் உங்களுக்கு பழக்கமெனில் ஒன்றும் செய்ய முடியாது).

கருத்துக்களை தர்க்க அடிப்படையிலோ அல்லது தரவு அடிப்படையிலோ முன் வைக்கவும். சோசலிசம் இல்லை என்பதற்க்கு இங்கு வைத்துள்ள வாதங்களை மறுத்துப் முயற்சி செய்யவும்

அசுரன்

said...

//இந்திய நாடாளுமன்றத்திற்க்கு ஒரு அதிகாரமும் கிடையாது என்பதுதான் உண்மை. எ-காவிற்க்கு 1990 காட்ஸ் ஒப்பந்தமும், தற்போநதய அணு ஆயுத ஒப்பந்தமும் நாடாளுமன்ற ஒப்புதல்(123-agreement - அடிமை ! அடியாள் !! ) இன்றியே நடைமுறைக்கு வந்துள்ளன(இது தவிர்த்து பல்வேறு ஒப்பந்தங்களும் கூட இதே போல). இந்த ஒப்பந்தங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கூட நாடாளுமன்றாத்திற்க்கு அதிகாரம் இல்லை என்பது குறித்தாவது மாசிக்கு தெரியுமா? இதுதான் ஜனநாயகம். இவ்வளவுதான் ஜனநாயகம்//

இப்போது கையெழுத்தாகியுள்ள அணு ஒப்பந்தத்திற்கு எதிராக சிபிஎம்/சிபிஐ கட்சியினர் துள்ளிக் குதித்த
போதும் இதையே தான் சொன்னார் பிரதமர்.. பாராளுமன்றத்தில் விவாதிப்பது எந்த வகையிலும் அணு சக்தி ஒப்பந்தத்தை
நிறுத்தி விடாது என்று. இந்த ஒப்பந்தமும் இதற்கு முன் காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட போதும்
சில அதிகாரிகள் தான் அனைத்து முக்கிய முடிவுகளை எடுத்தது.. பாராளுமன்றம் எப்போதும் போல அதைப் பற்றி
"விவாதிக்க" மட்டுமே செய்தது. அமைச்சர்களை ரப்பர் ஸ்டாம்பு அடிக்க மட்டுமே.

//அரசு என்பது அரசாங்கம் என்பது வெவ்வேறு என்பதாவது மாசிக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இந்த அரசு தரகு அதிகார வர்க்க அரசு, அரசாங்கம் என்பது அதற்க்கான முகமூடி
அவ்வளவுதான். முகமூடியை மாற்றி/சீர்திருத்தி எந்த பிரயோசனமும் இல்லை.//சமீபத்தில் கலைஞருக்கும் நீதிமன்றத்துக்கும் நடந்த உரசல்களைக் கவனித்தால் கூட இது தெரியும்.. இதை
கலைஞர் ஓரளவுக்காவது உணர்ந்திருப்பதால் தான் நேரடியாக அரசு இயந்திரத்தோடு மோதுவதை தவிர்க்கிறார்.
அப்படி அவர் செய்யத் துணிந்தால் அவரை தூக்கி எறியவும் அரசு இயந்திரம் தயங்காது என்பது தான் உண்மை..!

இப்போது மாசி போன்ற இந்திய ஜனநாயகத்தின் காதலர்கள் சிந்திக்க வேண்டும்.. மக்களோடு எந்த தொடர்பும்
இல்லாத; மக்களிடம் இருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு தனித்து நிற்கும்; சில நீதிபதிகள் அவ்வளவு
துணிச்சலுடன் லட்சக்கணக்கான மக்களின் ஓட்டுக்களை வாங்கி உருவான ஒரு அரசாங்கத்தை மிரட்டி
அடி பணிய வைக்க முடிகிறது என்றால் - 1) இன்றைய நிலையில் இருக்கு அமைப்பு மக்களுக்கான
ஜனநாயகமில்லை 2) இந்த அமைப்புக்குள் நடக்கும் தேர்தல்கள் போலியானது அதற்கு மக்கள் (ஒரளவுக்காவது)
அளிக்கும் ஆதரவு அர்த்தமற்றது.

நல்ல கட்டுரை தோழர்..

வாழ்த்துக்கள்..!

said...

விவதமாகவோ, உரையாடலாகவோ கருத்து பரிமாற்றம் செய்யும் எண்ணம் இருந்தால் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருக்க மாட்டீர்கள், மட்டை அடியாக அடிக்கும் இடத்தில் வேடிக்கை பார்க்க கூட எதுவும் இல்லை.

புரளி பேசுவது நீர் தான் அசுரன்!

எப்படியோ பேசிவிட்டுப்போங்கள், கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற நிலைக்கு வந்து விட்டீர்கள் போல இருக்கு :-))

said...

//மாசியுடன் இதற்க்கும் முன்பும் பலமுறை விவாதம் செய்தாகிவிட்டது. நாம் முன் வைக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல், தரவுகளையும் மறுக்காமல் தனது கருத்தை மட்டும் திரும்ப் திரும்ப இட்டுச் செல்லும் ஒரு போலி மனிதாபிமானி அவர்.

இப்பொழுது என்னடாவென்றால் சிபொமா குறித்து புனித வட்டம் கட்டும் படு கேவலமான தனது வர்க்க இயல்பின்பாற்ப்பட்ட முயற்சியிலும் இறங்கிவிட்டார். அதான் இந்த பதிவு.

ஏதேனும் வலுவான கருத்துக்கள் இருந்தால் சொல்லவும். இல்லையெனில் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கவும். புரளி பேச் வேண்டாம்.(அதுதான் உங்களுக்கு பழக்கமெனில் ஒன்றும் செய்ய முடியாது).

கருத்துக்களை தர்க்க அடிப்படையிலோ அல்லது தரவு அடிப்படையிலோ முன் வைக்கவும். சோசலிசம் இல்லை என்பதற்க்கு இங்கு வைத்துள்ள வாதங்களை மறுத்துப் முயற்சி செய்யவும்

அசுரன்
//

I have to reiterate this again My dear Vowval....

said...

இந்த சிபொமா எல்லாம் நல்லதா கெட்டதான்னு முடிவு செய்ய முடியலை :-). ஆனால், அரசு, வர விண்ணப்பங்களை அப்ரூவ் பண்ற வேகத்தைப் பார்த்தா பகீர்ங்கது :-) சம்திங் ஃபிஷி.( பிடிஎஃப் கோப்பு இணைப்பு) .

// வேதாந்த கம்பேனியின் நிர்வாகியாக நேற்று வரை இருந்த பா சிதம்பரமா?//

வேதாந்தா கம்பேனின்ன அனில் அகர்வாலோட ஸ்டெர்லிங் ஆ? இது லிட்டரலா சொல்றதா இல்லே, ஒரு கோவத்துல சொல்றதா?

//அல்லது தான் லீகல் அட்வைசராக வேலை பார்த்த என்ரான் கம்பேனிக்கு தான் நிதிஅமைச்சர் ஆனவுடன் 7000 கோடி ரூபாய் கிடைக்க வழி செய்த பா சிதம்பரமா//

இதுவும் புரியலை.. எனக்குத் தெரிஞ்ச வரை, என்ரான், ஸ்காண்டல்ல மாட்டின பிறகு, தபோல் பவர் கம்பெனியின் இயக்கம் நின்னு போச்சு. உள்ள மாட்டிக்கிட்டு இருந்த பங்குதாரர்கள் எல்லாரும் சேர்ந்து, என்ரானைக் கழட்டி விட்டுட்டு, புது கம்பெனியின் பெயரிலே சொத்துக்களை மாற்றி, திரும்பவும் பவர்ப்ளாண்ட்டை ஆரம்பித்தார்கள். இதிலே சிதம்பரம் எங்கிருந்து வந்தார்?

கங்கையைக் கூட்டிக் கொடுத்த வாஜ்பாய்? புரியவில்லை.. என்ன மேட்டர் இது? உங்க பதிவிலே தேடுவது சிரமமா இருக்கு.. சுட்டி கொடுத்தால் மகிழ்ச்சி.

said...

அசுரன்
வவ்வால் ஏதோ சொல்ல வருகிறார் விடுங்களேன்...
என்ன வவ்வால்,
அசுரனிடம் சொல்லியாச்சு, இப்ப வாங்க அவர் ஓரங்க நாடகம் நடத்துராரானு பாத்திருவோம்.
இப்ப எதப்பத்தி பேச வந்தீங்க, இந்தியாவுல கம்யூனிஸ்டு ஆட்சி இப்பவும் இதுக்கு முன்னேயும் எந்த மாநிலத்திலேயும் இல்லை, அதப் பத்தி பேசுவோமா, இல்ல சிபொம அதாங்க சிறப்புப் பொருளாதார மண்டலம் அதப் பத்திப் பேசுவோமா, உங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருப்பினும் அசுரனது அடிப்படைவாதத்தை அம்பலப்படுத்திட உதவுங்களேன்.

said...

நீங்கள் காட்ஸ், உலக வர்த்தக மையம்,சர்வதேச நிறுவனங்களின் சுரண்டல் , சிறப்பு பொருளாதார மண்டலம், பற்றி மட்டும் பேசுவதாக இல்லையே, இது நேரடியாக தனிமனித தாக்குதல் அதற்கு ஒரு பின்புலமாக மேற்சொன்னவற்றை ஒரு காரணம் மட்டும் காட்டுகிறீர்கள் என்பது தான் நான் சொல்ல வருவது.

உங்களுக்கு மா.சி யுடன் இதற்கு முன்னர் கடந்த ஆண்டே ஒரு நேரடி விவாதம் நடைப்பெற்றது என்றும் அறிவேன்.

ஆனாலும் அவர் சொல்வதை மறுப்பது வேறு, அவர் சொல்வது தவறு , சொன்னாலும் கேட்க மாட்டார் என்று நீங்களே ஒரு தீர்மானம் போட்டுவிட்டு அப்புறம் அது குறித்து ஆக்கப்பூர்வமாக பேசு என்றால் என்னத்த பேச!அசுரன், உங்களுக்கு அதிகம் தெரிந்து இருக்கலாம், ஆனாலும் எனக்கும் கொஞ்சம் தெரியும், அரசியல் பொருளாதாரம் என , புதிதாக அறியாத ஒன்றை பேசப்போகிறீர்கள் என நினைத்தேன் , பழைய குப்பையை தான் கிளறிக்கொண்டு இருக்கிறீர்கள் ,எனவே நீங்கள் சொல்லி தெரிந்துகொள்ளும் அளவுக்கு ஒன்றும் என் நிலை மோசமாக ஆகிவிடவில்லை.

இது போன்ற விஷயங்களில் ஏன் தனி மனித தாக்குதல் வர வேண்டும், சாதாரணமாகவே பேசி இருக்கலாமே!

ஆக்கப்பூர்வமாக பேசுவது என்றால் கலந்து கொள்வேன் இல்லை எனில் கழண்டு கொள்வேன்.

சாதாரணமாக பேச அனானியாக வருவதில் தவறில்லை , கொஞ்சம் விரிவாக , அதே சமத்தில் பிரச்சினைக்குரிய ஒன்றை பேசும் போதெல்லாம் அனானி ஆட்டம் ஆடினால் , கண்டுக்கொள்ள மாட்டேன்!

அதிகமாக அனானி பின்னூட்டங்கள் மட்டும் வரும் பாருங்கள்!

said...

தாங்கள் நம்பும், விரும்பும் வகையிலான பொதுவுடைமை அரசு இதுவரை உலகில் எங்காவது அமைந்துள்ளதா? இந்தக் கேள்வி ஏனென்றால் ரஷ்யா, சீனா, கிழக்கு அய்ரோப்பா, வங்காளம், கேரளம், திரிபுரா போன்ற இடங்களில் ஆட்சி புரிந்தவர்களை நீங்கள் கம்யூனிஸ்டுகளாகவே கருதவில்லை போலிருக்கிறது.

புரிதல் தவறென்றால் விளக்கவும்.

said...

//இந்த சிபொமா எல்லாம் நல்லதா கெட்டதான்னு முடிவு செய்ய முடியலை :-). ஆனால், அரசு, வர விண்ணப்பங்களை அப்ரூவ் பண்ற வேகத்தைப் பார்த்தா பகீர்ங்கது :-) சம்திங் ஃபிஷி.( பிடிஎஃப் கோப்பு இணைப்பு) .
////


Dear Prakash,

@@@@@@@@@@
// வேதாந்த கம்பேனியின் நிர்வாகியாக நேற்று வரை இருந்த பா சிதம்பரமா?//

வேதாந்தா கம்பேனின்ன அனில் அகர்வாலோட ஸ்டெர்லிங் ஆ? இது லிட்டரலா சொல்றதா இல்லே, ஒரு கோவத்துல சொல்றதா?
@@@@@@@@@

He was an executive committe member of Vedanda Company till the day he took responcibility as a minister.


@@@@@
//அல்லது தான் லீகல் அட்வைசராக வேலை பார்த்த என்ரான் கம்பேனிக்கு தான் நிதிஅமைச்சர் ஆனவுடன் 7000 கோடி ரூபாய் கிடைக்க வழி செய்த பா சிதம்பரமா//

இதுவும் புரியலை.. எனக்குத் தெரிஞ்ச வரை, என்ரான், ஸ்காண்டல்ல மாட்டின பிறகு, தபோல் பவர் கம்பெனியின் இயக்கம் நின்னு போச்சு. உள்ள மாட்டிக்கிட்டு இருந்த பங்குதாரர்கள் எல்லாரும் சேர்ந்து, என்ரானைக் கழட்டி விட்டுட்டு, புது கம்பெனியின் பெயரிலே சொத்துக்களை மாற்றி, திரும்பவும் பவர்ப்ளாண்ட்டை ஆரம்பித்தார்கள். இதிலே சிதம்பரம் எங்கிருந்து வந்தார்?
@@@@@@@@@

The major stakes of Enron was bought by GE and Bechtel(US imperialist Corporations). PC was legal advisor to this group.

And Indian government gave 7000 crores to this group and handed over to GAIL. GAIL leads lamented about this move. Because enron has no prospect at all. Because it used Natural gas.

///
கங்கையைக் கூட்டிக் கொடுத்த வாஜ்பாய்? புரியவில்லை.. என்ன மேட்டர் இது? உங்க பதிவிலே தேடுவது சிரமமா இருக்கு.. சுட்டி கொடுத்தால் மகிழ்ச்சி.
//

Vajpayee leased Ganga river to French Corporate Thems Demodarant(Spelling is not correct).

Asuran

said...

//தாங்கள் நம்பும், விரும்பும் வகையிலான பொதுவுடைமை அரசு இதுவரை உலகில் எங்காவது அமைந்துள்ளதா?//

Socialist Russia, Socialist China even in some small countries.

Asuran

said...

Dear Vowval,

I have to reiterate this again.

//மாசியுடன் இதற்க்கும் முன்பும் பலமுறை விவாதம் செய்தாகிவிட்டது. நாம் முன் வைக்கும் கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல், தரவுகளையும் மறுக்காமல் தனது கருத்தை மட்டும் திரும்ப் திரும்ப இட்டுச் செல்லும் ஒரு போலி மனிதாபிமானி அவர்.

இப்பொழுது என்னடாவென்றால் சிபொமா குறித்து புனித வட்டம் கட்டும் படு கேவலமான தனது வர்க்க இயல்பின்பாற்ப்பட்ட முயற்சியிலும் இறங்கிவிட்டார். அதான் இந்த பதிவு.

ஏதேனும் வலுவான கருத்துக்கள் இருந்தால் சொல்லவும். இல்லையெனில் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கவும். புரளி பேச் வேண்டாம்.(அதுதான் உங்களுக்கு பழக்கமெனில் ஒன்றும் செய்ய முடியாது).

கருத்துக்களை தர்க்க அடிப்படையிலோ அல்லது தரவு அடிப்படையிலோ முன் வைக்கவும். சோசலிசம் இல்லை என்பதற்க்கு இங்கு வைத்துள்ள வாதங்களை மறுத்துப் முயற்சி செய்யவும்

அசுரன்//


Just read my previous arguments with MaSi. Me and Many of our comrades put forward many historical proofs and Analytical arguments and statistics. MaSi never addressed any of these arguments In turn he will again go back to his old argument(like Comedian Vadivelu do in one of his film).

And I have clearly exposed he is 'Karuthhu Sarvathikari' in my previous arguments.

And even in his SEZ articles he doesn't even bother about great lot of proofs and data available against it. Simply he choose to establish his opinions with Honey shaded Words. He likes to play his politics with his Pseudo Image. So I have no other obtion but expose his ill Intention and fake image with proofs...

Both(exposing his ill Intention and put forwrd proofs against his opinion) are in this article. Please let yourself proof I am wrong and Help me come out of my wrong opinion.

Asuran

said...

அனைவருக்கு:

ஒரு திருத்தம்.. என்னோட முந்தைய கமண்டிலே ஸ்டெர்லிங் என்று இருப்பதைஉ ஸ்டெர்லைட் என்று மாற்றி வாசிக்கவும். நன்றி.

said...

இந்தியா ஒரு சோசலிச நாடாக இருந்தது என்று வீராவேசமாக பேசிய வவ்வால், அதற்கு தர்க்கபூர்வமான ஆதாரங்களை முன்வைத்து விவாதிக்காமல், இப்போது ஏன் கடை, கல்லா என்று பேசிக்கொண்டிருக்கிறார். எப்போதுமே கடை வைப்பது, கல்லா கட்டுவது பற்றிய நினைவுதான் போலும் அவருக்கு., சோசலிசம் என்பது என்ன விதமானது என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல், இது 'அல்பதனமான இடுகை' என்று ஆவேசப்படுகிறார் என்றால் எல்லாம் தெரிந்ததாக நினைக்கும் அவருடைய அல்பத்தனம் இங்குதான் பல்லிளிக்கிறது.

அய்யா வவ்வால் இங்கு யாரும் விவாதிக்க அஞ்சவும் இல்லை, உரையாடமல் ஒதுங்கவும் இல்லை, நீர் புரளி பேசவில்லையெனில் எதற்கு தயக்கம் இந்தியா ஒரு சோசலிச நாடு என்பதை உங்கள் ஆதரங்களால் நிறுவிக்காட்டுங்கள், அப்படியே இது அல்பத்தனமான இடுகை(உங்களது முதல் பின்னூட்டம்), போன்ற மட்டையடி பின்னூட்டத்திற்கு எப்படி பதிலளிக்கலாம் என்றும் கூறவும், எந்த ஆதாரமும், பேசுகின்ற விசயத்தை பற்றி எந்த புரிதலும் இல்லாமல் இவர் வந்து, இது சூடான இடுகைக்கு எழுதப்பட்ட பதிவு, இதில் ஒன்றுமில்லை, ஒரங்க நாடகம் நடந்துங்கள் என்று புரளி பேசுவாராம், அதற்கு பதிலளித்தால் மட்டையடி, மண்டையிடி என்று புலம்பிகொண்டு போய்விடுவாராம். என்ன விதமான விவாத முறை இது.


தோழர் அசுரன்,

//யாருய்யா இந்த நல்லெண்ணம் கொண்ட ஆத்மாக்கள்.... விவசாயிகள் ஒரு லட்சம் பேர் சாவதை வேடிக்கை பார்த்தவ்ரகளா? அல்லது அவர்கள் சாவுக்கு காரணமான கொள்கைகளை வகுப்பவர்களா? சில்லறை வணிகத்திலும் கூட பன்னாட்டு மூலதனத்தை நுழைத்த அயோக்கிய சிகாமணிகளா? அணு ஆயுத ஒப்பந்தம் முதல் பல்வேறு அடிமை ஒப்பந்தங்களை மக்களிடம் பொய் சொல்லிவிட்டு விமானம் ஏறிப் போய் கள்ளத்தனமாக கையெழுத்து போட்டு வந்தார்களே அவர்களா? வேதாந்த கம்பேனியின் நிர்வாகியாக நேற்று வரை இருந்த பா சிதம்பரமா? அல்லது தான் லீகல் அட்வைசராக வேலை பார்த்த என்ரான் கம்பேனிக்கு தான் நிதிஅமைச்சர் ஆனவுடன் 7000 கோடி ரூபாய் கிடைக்க வழி செய்த பா சிதம்பரமா? கங்கையை கூட்டிக் கொடுத்த வாஜ்பேயியா? ராணுவ ஒப்பந்தம் முதல் அணு ஆயுத ஒப்பந்தம் வரை மக்களிடமும், நாடாளூமன்றத்திடமும் பொய் சொல்லி கையெழுத்திட்டு வந்த மன்மோகன் சிங் உள்ளிட்ட அடிய஡ள் கும்பலா? கேள்வி கேட்க்க கூட பணம் வாங்கிய புண்ணியாத்மாக்களா? ஹவாலா முதல் பல்வேறு கொலை கொள்ளை மாபியா வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 80% மேலான நாடாளுமன்ற உறுப்பினர்களா? அல்லது இத்தனைக்கும் பிறகும் நாடாளுமன்ற மாண்பு காக்கும் சோம்நாத் சேட்டர்ஜியா?//

அருமையான பதிவு வாழ்த்துக்கள்,


தோழமையுடன்
ஸ்டாலின்

said...

//even in some small countries.//

அவைகளை குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?

நன்றி.

said...

Instead of writing this why don't write the following
1. A clear picture of Nandhigram WB. Why did that killings happend
2. Pranayi (Kerala) looted lot of money rumour or True?
3. What is the status of Area occupied by china. Why we need to support them after they occupied our lands.
4. Which version of comminism you are following....
a)Chinese
b) Russion (past)
c) Quba
d) Kerala

We have lot to discuss...

said...

//அசுரன், உங்களுக்கு அதிகம் தெரிந்து இருக்கலாம், ஆனாலும் எனக்கும் கொஞ்சம் தெரியும், அரசியல் பொருளாதாரம் என , புதிதாக அறியாத ஒன்றை பேசப்போகிறீர்கள் என நினைத்தேன் , பழைய குப்பையை தான் கிளறிக்கொண்டு இருக்கிறீர்கள் ,எனவே நீங்கள் சொல்லி தெரிந்துகொள்ளும் அளவுக்கு ஒன்றும் என் நிலை மோசமாக ஆகிவிடவில்லை.//

Vouval, this is the problem with you. "நீங்கள் சொல்லி தெரிந்துகொள்ளும் அளவுக்கு ஒன்றும் என் நிலை மோசமாக ஆகிவிடவில்லை" by telling this, what point you are trying to prove? If you think you are an intelligent, then please come forward and deconstruct the arguments of com.Asuran. Instead of arguments, you are trying to push yourself up by repeatedly telling you are an "intelligent". Its boring to see com.asuran winning all the debates.. Come on and let you make some difference in here. If you do so, there are lot of ppl awaiting to applaud you. ;)

//அதிகமாக அனானி பின்னூட்டங்கள் மட்டும் வரும் பாருங்கள்!//

whats your problem? I dont have a blogger account and not intrested to have one. then how do I comment?

Come on sir! try to ditch the arguments of asuran in this post or any of the previous posts - offcourse if you have guts to do that!

said...

//Vajpayee leased Ganga river to French Corporate Thems Demodarant(Spelling is not correct).//

Correction:

"Thems Demodarant(Spelling is not correct)"

This must be read as

"Suez Demodarant(Spelling is not correct)"

said...

அசுரன்,

கேட்டீர்கள், கொடுத்து விட்டேன் . கொஞ்சம் இடைவெளிகள் விட்டாவது விவாதத்தில் தொடர்ந்து கலந்து கொள்வேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

said...

சோசலிச நாடான (உங்கள் பார்வையில) சீனா தோல்வியடைந்த (உங்கள் பார்வையில்) சிபொம திட்டத்தை இன்னும் தொடருவது ஏன்?

இந்தியாவில் ஏற்படும் பிரச்சினைகள் சீனாவில் ஏற்படவில்லையா?

அவர்கள் அதை எப்படி சமாளித்தார்கள்?

said...

மாசி,

நான் இதையா கேட்டேன்?....

சிபொம குறித்த உங்களது பொய், இந்திய ஜனநாயகம் குறித்த பொய், நல்லெண்ணம் கொண்ட தலைவர்கள் குறித்த உங்களது பொய், இந்தியாவில் சோசலிசம் குறித்த உங்களது பொய்களுக்கு என்ன பதில் என்று கேட்டால் வழக்கம் போல அரைத்த மாவை அரைக்கும் கருத்து சர்வாதிகாரியாக பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கிறீர்களே மாசி.... உங்கள் மீது வைக்கப்பட்ட எந்தவொரு விமர்சனத்தையும் பொய்யாக்குவதில்லை என்று சங்கல்பம் எடுத்துள்ளீர்களா?

இந்த முறையாவது என்ன எழுதப்பட்டுள்ளது என்று படித்து எதிர்வினை செய்ய முயற்சி செய்யவும்.

முந்தைய விவாதங்களில் செய்தது போலவே இந்த முறையும் இருக்காதீர்கள்.

அசுரன்

said...

//சோசலிச நாடான (உங்கள் பார்வையில) சீனா ///

இன்றைய சீனா சோசலிச நாடு என்று எங்கேய்யா நான் சொன்னேன்....

said...

சிபொம / stp போன்றவர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை ப‌ல வருடங்களுக்கு (stp வைத்திருப்பவர்கள் பாவம் ராமலிங்க ராஜு, அசிம் பிரேம்ஜி, நாராயண மூர்த்தி போன்ற ஏழைகள் பாருங்கள்).

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கூடாது, வரி விலக்கு கூடாது என்பார்கள் இந்த உலகமயமாக்கல் ஆதரவாளர்கள்.

said...

good one...

said...

அசுரன்,

நீங்கள் என்னைப்பற்றி எந்தவிதமாக வேண்டுமானாலும் முடிவுக்கட்டிக்கொள்ளுங்கள், எதுவும் தெரியாது என்றும் வைத்துக்கொள்ளுங்கள்(ஸ்டாலின், அனானிக்கும் இது பொருந்தும்)

இப்பதிவினை இட்ட நோக்கம் வேறாகவும், பேசும் விதம் வேறாகவும் இருக்கிறது, மாசி என்ற தனி மனிதரை குறிவைத்து வீசப்பட்ட அம்பு ஆக உள்ளப்பதிவில் , பொருளாதாரம் குறித்து பேசுவோம் என்று ஒரு "பொறி" வைத்து உங்களுக்கு ஆள் பிடிக்காதீர்கள்.

அப்படி பேச வேண்டும் எனில் தனியாக வேறு பதிவில் பேசிக்கொள்ளலாம்.

said...

வவ்வால்,

யாரையும் தாக்கி விளம்பரம் தேடும் நிலையில் தற்போது அசுரன் பதிவு இல்லை. அதை முதலில் மனதில் கொள்ளுங்கள். இரண்டாவது விசயம் இந்த பதிவின் நோக்கமும் அதில் மாசியின் புனித பிம்பத்தை திரை கிழிப்பதின் அவசியமும்
குறித்து.

மாசி என்பவர் ஒரு நல்ல மனிதராக சதாரண மனிதர்கள் படும் கடும் துன்பங்களின் காரணம் என்ன என்று தேடி கடைசியில் காந்தியிசத்தில் அக்கியமான மனிதாரகவே எனக்கும் அறிமுகமானார். அவருடன் எந்தளவுக்கு கருத்து பரிமாற்றம் செய்ய இயலுமோ அந்தளவுக்கு செய்வோம் என்று எண்ணியே எனது ஆரம்ப காலங்களில் அவருடன் விவாதம் செய்துள்ளேன். குறிப்பாக காந்தி குறித்தும், அஹிம்ஸை குறித்தும் மட்டும் ஐந்தாறு பதிவுகள் அசுரன் மட்டுமே இட்டுள்ளேன். அனைத்தும் மாசியுடன் விவாதம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இடப்பட்டது. அவற்றில் தனிமனிதனை நோக்கிய தர்க்கங்கள் இல்லை என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

ஆனால் இந்த எல்லா விவாதங்களிலும் மாசியினுடைய நேர்மையின்மையே பளிச்சென்று வெளிப்பட்டன. நாம் முன் வைக்கும் எந்த தர்க்க பூர்வமான கேள்விகளுக்கோ அல்லது தரவுகளுக்கோ விடையளித்தோ அல்லது மறுத்தோ பேசாமல் திரும்ப திரும்ப ஒரே கருத்தை வெவ்வேறு வார்த்தைகளில் வைத்து விளையாடும் மோசடியில் அவர் ஈடுபடத் தொடங்கினார். இதனையும் அவ்வப்போது விரிவாக அம்பலப்படுத்தி அவரை விமர்சனம் செய்தே வந்துள்ளேன். இவையணைத்தும் இன்றும் சாட்ச்சியாக அசுரன் மற்றும் அவரது தளத்தில் கட்டுரைகளில் காணக் கிடக்கின்றன. (அவரது விவாதம் ஒன்றில் ஒரு கட்டத்தில் அமெரிக்காவை நியாயப்படுத்தும் அளவு தரம் தாழ்ந்தும் சென்றார். இதனை விமர்சித்த பிறகு அதற்க்கு பதிலேதும் சொல்லாமல் கள்ளமௌனமும் சாதித்தார்).

அதன் பிறகு அவரை கண்டு கொள்வதில்லை. கருத்து நேர்மையற்ற ஒரு சர்வாதிகாரியிடம் வாதம் செய்து பிரோயோசனம் இல்லை என்று விட்டுவிட்டேன். ஆனால் சமீபத்திய அவரது சிபொம குறித்த பதிவுகளில் அவரது பொய்கள் அத்துமீறி போனதுடன், அவரது புனித பிம்பத்தின் உதவியுடன் மக்கள் விரோத கருத்துக்களை பலப்படுத்த துவங்கிவிட்டார். இந்த நிலையில் அவரது பொய்களை அம்பலப்படுத்துவதும், அவரது புனித பிம்பம்பத்தை அம்பலப்படுத்துவது என்று இரண்டு நோக்கங்களின் அடிப்படையிலேயே இந்த பதிவு உள்ளது.

தற்போதையை இந்த பதிவுக்கும் கூட நேர்மையாக எதிர்வினை செய்யவில்லை மாசி. நான் இங்கு அவரது பொய்கள் குறித்து எழுதினால் அவை குறித்து எதுவும் சொல்லாமல் விவாதத்தை புதிதாக சோசலிசம் குறித்து திசை திருப்புகிறார் இந்த நேர்மையாளர். நான் ஒரு பொய்யன்.. சரி... எனக்கு எதிர்வினை செய்வது என்று முடிவாகிவிட்ட்டால் எனது பொய்களை புரளிகளையல்லவா அம்பலப்படுத்த வேண்டும். ஏன் மாசி ஓடி ஒளீந்து கொள்கிறார்?

உங்களை இங்கு பொருளாதாரம் குறித்து வாதம் செய்ய அழைக்கவில்லை. மாசி குறித்தும் அவரது பொய்கள் குறித்தும் உங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவியுங்கள்(எங்கள் மீது மட்டும்தான் கருத்து வைப்பீர்களோ?). பிறகு அதனடிப்படையில் எனது பதிவு புரளியா அல்லது விளம்பரமா அல்லது உண்மையான பதிவா என்பது குறித்த உங்களது கருத்தை முன் வையுங்கள். இந்த கருத்துக்களுக்கு உங்களை இட்டுச் சென்ற தரவு தர்க்க அடிப்படைகளையும் முன் வையுங்கள். அவற்றில் உண்மை இருக்கின்ற பட்சத்தில் எமது தவறுகளை திருத்திக் கொள்ள உதவும். அதை விடுத்து மாசியை போல நீங்களும் கருத்து சர்வாதிகாரியாக வாளேடுத்து எம்மீது சுற்றாதீர்கள். அதை விடுத்து வெறுமே நான் புரளி பேசுகிறேன் என்பது போல அடிப்படையற்ற புரளிகளை இட்டுச் செல்லாதீர்கள்.

அசுரன்

said...

நம்ம மாசி சிலாகிக்கும் ஜனநாயகம் பின்வருமாறுதான் வேலை செய்கிறது. அவரோ இது மற்றும் இது தவிர்த்த இன்ன பிற அவரது அகாச புளுகுகள் குறித்த ஆதரப்பூர்வமான நமது மறுப்புகளுக்கு பதில் சொல்லாமல் நேர்மையின்றி பழைய மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார். என்ன செய்ய.... அவரது வர்க்க இயல்பு அப்படி....


http://www.hinduonnet.com/fline/fl2418/stories/20070921501101800.htm


FINALLY, it was a scrawl in the cryptic shorthand of a court stenographer that almost ruined Sudaram Nag’s monsoon crop. “Sudaram Nag, 50 yrs, Takraguda, Bastar. Section:107.116(b), 03-08-07,” it said, communicating to the 50-year-old rice farmer in the Bastar district of Chhattisgarh that he was hereby summoned to present himself at the Magistrate’s Court on August 3, 2007, to show cause why proceedings should not be initiated against him for a breach of peace under Section 107.116 of the Criminal Procedure Code (CrPC).

Since early this year, more than 60 of Sudaram’s neighbours and other residents of the village have spent more time in the courts in Jagadalpur than in tending to their fields and harvests. Their crime: they protested against the rigging of gram sabha hearings initiated to acquire 2,161 hectares of fertile agricultural land for Tata Steel Limited’s greenfield steel plant in the district.

In an instance of truly Orwellian coincidence, the Memorandum of Understanding (MoU) for the Tata steel plant was signed on June 4, 2005, two days after the formal launch of the controversial Salwa Judum programme in the Bastar and Dantewada districts, and marked, in the eyes of many, the point of coalescence of the administration, industry and the security agencies. The State government also signed an MoU with the Essar group the same day.

said...

அசுரன்,

1. நான் காந்தீயம்தான் ஒரே வழி என்று எங்கும் சொல்லவில்லை. காந்தியின் வாழ்க்கையும் அரசியலும் என்னையும் கேள்விகள் கேட்க வைக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கு விடை தேடிக் கொள்கிறேன்.

2. அப்படி நீங்களே உருவகித்துக் கொண்டு 'காந்தீயம் என்றால் பொய்யர்கள்' என்று சொல்லும் அதே பாணியில் 'சோஷலிசம் என்றால் ஏமாற்று வேலை' என்று நல்லவற்றை எல்லாம் மறந்து விட்டு ஒரே அடியாக முத்திரை நான் குத்தும் போது உங்களுக்கும் வருத்தம் ஏற்படத்தானே செய்கிறது!

3. அதையும் தாண்டி, உணர்வு பூர்வமான இந்த இரண்டு இடுகைகளோடு நிதானித்து, நீங்கள் சொல்லும், 'நான் சார்ந்த வர்க்க மனோபாவம்' என்ன என்று எண்ணிப் பார்க்க முயற்சிக்கிறேன். ஓரிரு மாதங்கள் நேரம் தேவைப்படும்.

அதன் வெளிப்பாடுகளையும் சீனாவில் நான் இருந்த போது பார்த்த, உணர்ந்த, படித்த, வியந்த கூறுகளையும் அப்புறமாக பகிர்ந்து கொள்கிறேன்.

4. நாம் இருவரும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்க முடியும் என்றே நான் நம்புகிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

said...

Dear Asuran,
Why no one here is answering to your questions and do a constructive debate based on facts??? They Just ignoring your arguments and talikng something away from the core issues raised by you. I feel your arguments are correct and you proved yourself.
Regads
Izzath

said...

Dear Asura,
Thank you for writing such brilliant articles and for your time and efforts.


Anbudan
Izzath

said...

//அசுரன்,

1. நான் காந்தீயம்தான் ஒரே வழி என்று எங்கும் சொல்லவில்லை. காந்தியின் வாழ்க்கையும் அரசியலும் என்னையும் கேள்விகள் கேட்க வைக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கு விடை தேடிக் கொள்கிறேன்.

2. அப்படி நீங்களே உருவகித்துக் கொண்டு 'காந்தீயம் என்றால் பொய்யர்கள்' என்று சொல்லும் அதே பாணியில் 'சோஷலிசம் என்றால் ஏமாற்று வேலை' என்று நல்லவற்றை எல்லாம் மறந்து விட்டு ஒரே அடியாக முத்திரை நான் குத்தும் போது உங்களுக்கும் வருத்தம் ஏற்படத்தானே செய்கிறது!

3. அதையும் தாண்டி, உணர்வு பூர்வமான இந்த இரண்டு இடுகைகளோடு நிதானித்து, நீங்கள் சொல்லும், 'நான் சார்ந்த வர்க்க மனோபாவம்' என்ன என்று எண்ணிப் பார்க்க முயற்சிக்கிறேன். ஓரிரு மாதங்கள் நேரம் தேவைப்படும்.

அதன் வெளிப்பாடுகளையும் சீனாவில் நான் இருந்த போது பார்த்த, உணர்ந்த, படித்த, வியந்த கூறுகளையும் அப்புறமாக பகிர்ந்து கொள்கிறேன்.

4. நாம் இருவரும் ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்க முடியும் என்றே நான் நம்புகிறேன்.

அன்புடன்,
மா சிவகுமார்

///

வருகைக்கும் பதிலுக்கும் மிக்க நன்றி மாசி,

காந்தியம் என்றால் பொய்யர்கள் என்ற புரிதலுக்கு உங்களது செயல்பாடுகள் மூலமே நான் இட்டுச் செல்லப்பட்டேன். உறுதியாக நமது ஆரம்ப கால விவாதங்களில் காந்தியின் பொய்மைகளைத்தான் பேசியிருப்பேனேயன்றி உங்கள் மீது நம்பிக்கை வைத்தே எனது ஆரம்ப கால விவாதங்கள் இருந்ததை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். தொடர்ந்த செயலூக்கமற்ற வறட்டு வார்த்தை வித்தைகளீல் நீங்கள் பேசு தொடங்கிய பிறகே எனது விமர்சனங்கள் உங்களை குறித்ததாக நீட்சியுற்றன(காந்தி குறித்தான நமது ஆரம்ப கால விவாதங்களை பாருங்கள். உண்மையிலேயே அது ஓரளவு ஆக்கப்பூர்வமானதாகவே இருந்தது. அதில் சோசலிசம் முதற்கொண்டு பல்வேறு விசயங்களை நாம் பேசினோம்.)

உங்களது அனுபவங்களை கட்டாயம் எழுதுங்கள். உங்களையே காந்தியாக கற்பனை செய்து கொள்ளாமல், தர்க்க ரீதியாக, தரவு ரீதியாக எழுதுங்கள். உங்களை மனதில் வைத்து எழுதாதீர்கள் அதனை படிப்பவர்கள் அறிவுப் பூர்வமாக உள்வாங்கும் வகையில் எழுதுங்கள் அதுவே செயலூக்கமுள்ள வினையாக வெளிப்படும். இல்லையேல் ஒத்த உணர்வு மட்டம் கொண்ட ஆட்களுக்கான அரட்டை அரங்கம் என்ற அளவில் நமது எழுத்துக்கள் விணாகிவிடும்.

நாம் இருவரும் சந்திக்க புள்ளி இருக்கிறது என்ற நம்பிக்கை தற்போது எனக்கு பலமாக இல்லை. ஆனால் இந்த பதிலை பார்த்த பிறகு துளிர்விடுகிறது. மக்களின் நலன் மீதான காதலும், மக்கள் படும் கஸ்டங்கள் மீதான கோபமும், குற்றவுணர்வுமே அந்த புள்ளியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

மிக முக்கியமாக சோசலிசம் மட்டுமல்ல எதை வேண்டுமானலும் யாரும் விமர்சிக்கலாம். விமர்சித்தால் எதிர்வினை இருக்கும் அவ்வளவுதான். அந்த எதிர்வினையின் தரம் தன்மை என்பது முதல் வினையின் தரம் தன்மையைப் பொறுத்தது.

காந்தியிசம் குறித்து நான் எழுதியதை நீங்கள் விமரிசியுங்கள் என்றே கூறுகிறேன். மாறாக சோசலிசம் குறித்து நீங்கள் எழுதக் கூடாது என்று எங்கும் நான் சொல்லவில்லை.

குறிப்பாக இந்த பதிவு சோசலிசத்தின் நன்மை தீமை குறித்த அல்ல. உங்களது சிபொமா என்ற படு கேடான ஒரு பதிவை அம்பலப்படுத்தியும் அதில் இந்தியாவில் சோசலிசம் குறித்த உங்களது மாயக் கருத்துக்களை அம்பலப்படுத்தியுமே இந்த பதிவு இருக்கும் போது இந்த பதிவுக்கான எதிர்வினை என்பதும் அது குறித்து இருப்பதே நேர்மையாக இருக்கும் மாறாக நீங்கள் சோசலிசம் குறித்து எழுதும் போது உங்களது நேர்மையை சந்தேகபடும் நிர்பந்தமான சூழ்நிலைக்கு நான் தள்ளப்படுகிறேன்.

அன்புடன்
அசுரன்

said...

////சோசலிச நாடான (உங்கள் பார்வையில) சீனா ///

இன்றைய சீனா சோசலிச நாடு என்று எங்கேய்யா நான் சொன்னேன்....
//

அப்போ, சீனா எப்போ சோசலிச நாடா இருந்தது?

////தாங்கள் நம்பும், விரும்பும் வகையிலான பொதுவுடைமை அரசு இதுவரை உலகில் எங்காவது அமைந்துள்ளதா?//

Socialist Russia, Socialist China even in some small countries.

Asuran
//

இது நீங்க சொன்னதுதானே?

said...

//சோசலிசம் என்பது தனியுடைமைக்கு எதிரானது (தனியுடைமையை இல்லாதொழிக்கும் வளர்ச்சிப் போக்கு கொண்டது) மாறாக இந்திய஡வில் இவர்கள் இருந்ததாக சொல்லும் சோசலிசம் எந்த காலத்தில் தனியுடைமைக்கு எதிரானதாக இருந்தது? இந்தியாவில் சோசலிசம் இருந்ததாக சொல்லும் //

Annony,

Even the above also I said. China was socialist. And russia was socialist. There are articles explaingin this present in this blog and our comerades blog.

If you believe your intentions are true and honest please read those articles and understand what do we mean.

Asuran

said...

Annony,

Even the below also I said

//குறிப்பாக இந்த பதிவு சோசலிசத்தின் நன்மை தீமை குறித்த அல்ல. உங்களது சிபொமா என்ற படு கேடான ஒரு பதிவை அம்பலப்படுத்தியும் அதில் இந்தியாவில் சோசலிசம் குறித்த உங்களது மாயக் கருத்துக்களை அம்பலப்படுத்தியுமே இந்த பதிவு இருக்கும் போது இந்த பதிவுக்கான எதிர்வினை என்பதும் அது குறித்து இருப்பதே நேர்மையாக இருக்கும் மாறாக நீங்கள் சோசலிசம் குறித்து எழுதும் போது உங்களது நேர்மையை சந்தேகபடும் நிர்பந்தமான சூழ்நிலைக்கு நான் தள்ளப்படுகிறேன்.

//

The above was a reply to Masi. This post is intended for what it has been given above.

Asuran

said...

சீன சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்:சீழ் பிடித்து ந...

http://tamilarangam.blogspot.com/2007/11/blog-post_03.html

said...

சீனா குறித்து புஜாவில் வந்த கட்டுரைகளில் சில:


சீன சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்:சீழ் பிடித்து நாறும் இரணங்கள்
http://tamilarangam.blogspot.com/2007/11/blog-post_03.html

'வளர்ச்சி"யின் சீனா அவலத்தில் தொழிலாளர்கள் http://www.tamilcircle.net/unicode/puthiyajananayagam/2007/aug/aug_2007_13.html

இதையும் படித்து பார்த்து பதில் சொல்லட்டும் மாசி.

Related Posts with Thumbnails