TerrorisminFocus

Wednesday, September 15, 2010

'வினை'யகர் சதுர்த்தி!!

பெரும்பாலான வீதி முனைகளில் இருட்டின் துணையுடன் ஒன்னுக்கடிக்கக் கூடிய வாய்ப்பான இடங்கள் அமைந்திருக்கும். பாதசாரிகளின் 'ஒன்னாம்' நம்பர் அவசரத் தேவைகளுக்கு உடனடித் நிவாரணமாக அமைபவை இத்தகைய முனைகளே. மூத்திரச் சந்துகளை விட இந்த தெரு முனைகள் சுகாதாரமானவை, பாதுகாப்பானவையாகும் என்பது இவற்றின் பிரபல்யத்திற்கான காரணமாக அமைகின்றன. அப்படியான மூத்திர முக்குகளையெல்லாம் திட்டமிட்டு ஆக்கிரமித்து விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் விநாயகனின் சிலையை வைக்கும் அபாயகரமான கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகி வருகிறது. இது தமிழகத்து ஆண்களின் உயிர்நாடியில் கை வைக்கும் ஒரு அத்துமீறல் என்பதாகவே நான் உணர்கிறேன்.

அத்தகையதொரு மூத்திர உரிமையை மீறிய விநாயகனின் சிலை ஒன்றை கே கே நகரில் பார்த்தேன். அந்த வினை தீர்க்கும் வினாயகர் சிலைக்குப் பின்னே 'முஸ்லீம்களுக்கு சலுகை இந்துக்களுக்கு ஒன்றுமில்லையா' என்ற வினையான வாசகம் வக்கிரமாய் சிரிக்கிறது. உபயம், காவி பயங்கரவாத கட்சிகளில் ஒன்றான இந்து மக்கள் கட்சி. பெரும்பான்மை இந்து உழைக்கும் மக்கள் தெரு முனைகளில் ஒன்னுக்கடிக்கும் உரிமையை சிலை வைத்து தடுத்துள்ளதைத்தான் இப்படிச் சொல்கிறார்களோ என்று மனதில் எழுந்த சிறு ஐய்யத்தை முஸ்லீம் என்ற வார்த்தை களைத்தது. இது வேறு ஏதோவொரு பிரச்சினை என்று புரிந்தது. ஆனால், 'இந்துக்களுக்கு ஒன்றுமில்லையா' என்பதன் பொருள் மட்டும் புரியாமலேயே குழப்பியது. யாராவது விளக்கினால் தேவலாம் என்றும் தோன்றியது. இத்துடன் இன்னொரு கிளைக் கேள்வி எழுந்தது அது இந்த பதிவின் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மல்லாக்கப் படுத்து விட்டத்த பாத்தா எவ்வளவு சுகமா இருக்கு... ம்... அதுவும் கால விரிச்சுப் படுத்தா எவ்வளவு காத்தோட்டம்..

எனக்கும், சச்சார் கமிட்டியில் அறிக்கை எழுதியவருக்கும் தெரிந்த வரையில் இந்தியாவிலேயே ஏழ்மையான, வறிய, பின் தங்கிய, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினர் தாழ்த்தப்பட்டவர்களும், முஸ்லீம்களும்தான், இந்துக்களல்ல எனும் போது இந்துக்கள் என்று குறிப்பிட்டு வினாயகனுக்கு பின்னே ஒளிரும் இந்த வாசகங்கள் வன்மம் நிறைந்தவையாகத்தான் தோன்றுகின்றன.

தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள்தான் என்று வினாயகன் சிலை வைத்தவர்கள் சொல்லக் கூடுமோ என்று ஒரு சிறு எண்ணம் தோன்றியது. ஆனால், அவர்களும் இந்துக்கள்தான் எனில் ஏன் கோயிலுக்குள் விடுவதில்லை, கோயில் மரியாதைகளை அவர்களுக்குக் கொடுப்பதில்லை, அவர்களுக்கு ஏன் பலரும் வீடு வாடகைக்குக் கொடுப்பதில்லை, அவர்களுடன் திருமணம் பந்தம் ஏன் வைத்துக் கொள்வதில்லை, சாதிப் பெருமிதம் என்று காட்டிக் கொள்ள பூனூல், நாமம் என்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏன் எதுவும் இல்லை, மாட்டு மாமிசம் சாப்பிட்டால் ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் பிற சாதி இந்துக்களால் தாக்கப்படுகிறார்கள், அவர்கள் மீது நாடு முழுவதும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சாதி வெறி தாக்குதல் நடத்தப்படுவதை இதே 'இந்து'க்களின் கட்சிகள் ஏன் கண்டு கொள்வதேயில்லை என்று பல கேள்விகள் மூளையை சல்லடையாகத் துளைத்தன.

இவற்றுக்கு கிடைத்த ஒரே விடை இந்துக்கள், கடவுள் என்ற பெயரில் இந்த கட்சிகள் நடத்துவதெல்லாம் மதவெறி பிரச்சாரம் மட்டுமே என்பதே ஆகும்.

ங் கொய்யால குப்புறக் கவுத்திடாய்ங்களே....

இந்தக் கட்சிகளை விட வன்மம் நிறைந்தவையாக உள்ளன வினாயகனின் பெயரில் நடைபெறும் இந்த மதவெறி அரசியலை, எவன் இழவு கொட்டினால் எனக்கென்ன என் வீட்டில் இனிப்பு சேவு கிடைக்கிறதா போதும் என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு வினாயகனை மட்டும் வாழ்த்தும் படித்த, நுண்ணறிவு நிரம்பிய சிலரின் நடவடிக்கைகள்.

இவர்கள் வழிபடும் ஒரு கடவுளின் பெயரால் நடக்கும் மதவெறி அயோக்கியத்தனத்தை எதிர்த்து குரல் கொடுக்க ஞாபகமாக மறந்துவிடும் இவர்களை என்னவென்று சொல்ல? இவர்கள் வழிபடும் வினாயகனை அவமானப்படுத்தி வினாயகன் என்றால் ஒரு மதவெறி, ரத்தவெறி பிடித்த மிருகம் என்ற பிம்பத்தை உருவாக்கும் காவி பயங்கரவாத கட்சிகளின் மேல் பக்தர்களின் கோபம் திரும்பவதில்லையே ஏன்?

இந்தக் கேள்விகளால் வறட்சியுற்ற எனது மூளை அடுத்த டாபிகிற்க்கு வேகமாக தாவ எத்தணித்தது. துரதிருஷ்டவசமாக அதுவும் இந்துக்கள் பற்றியதாகவே அமைந்துவிட்டது. இதோ அடுத்த டாபிக்...

இந்துக்கள் என்றால் யார் என்பது குறித்தும், மத நல்லிணக்கத்தின் சாத்தியக்கூறு குறித்தும் தோ. பரமசிவன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். (நன்றி: நறும்புனல்)

(தோ. பரமசிவன்)

இந்து” என்ற சொல் சமய ஆதிக்கச் சொல்லாக மட்டுமின்றி அரசியல் ஆதிக்கச் சொல்லாக வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்து என்பவன் யார்? இந்தியச் அரசியல் சட்டப்பிரிவுகள் “இந்து” என்ற சொல்லாடலுக்கு நேரிடையான வரவிலக்கணத்தை தரவில்லை..என்பது தான் இந்து என்ற சொல்லாடலை வைத்துப் பிழைக்கும் இந்துத்வவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது.ஆகவே இந்து என்ற சொல்லாடலுக்கு அரசியல் சட்டம் நேரிடையான விளக்கம் தரவேண்டும்..அந்தச் சொல் பல்வேறு சமயஙகளையும், நம்பிக்கைகளையும், வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை நெறிப்படுத்தி சட்டமாக்க வேண்டும்.அதுவரை சமய நல்லிணக்கம் என்பது சமயச் சிந்தனையாளர்களின் கனவாவே இருக்க முடியும்...

(மூத்திர தெருமுனைகளை ஆக்கிரமித்த குற்றத்திற்காக அடித்து நொறுக்கப்பட்ட விநாயகன்)

(கிளைக் கேள்வி: மூத்திர முக்குகளை ஆக்கிரமித்து உரிமைமீறலில் ஈடுப்பட்டுள்ள வினாயகனை மூத்திரச் சந்தில் வைத்து அடித்து நொறுக்குவதுதானே தர்க்க(லாஜிக்கல்)ரீதியாக சரியாக இருக்கும்? ஏன் கடலில் கொண்டு போய் அடித்து நொறுக்குகிறார்கள்?)

இப்படிக்கு,
மூத்திரச் சந்து முனிசாமி


பதிந்தவர்
அசுரன்

8 பின்னூட்டங்கள்:

said...

//மல்லாக்கப் படுத்து விட்டத்த பாத்தா எவ்வளவு சுகமா இருக்கு... ம்... அதுவும் கால விரிச்சுப் படுத்தா எவ்வளவு காத்தோட்டம்..//


super...

said...

when are the people going to understand the politics behind these events..

said...

வரவர இந்த காவி கபோதிங்க கொடுக்கிற தொல்லைகளுக்கு வறைமுறையே இல்லாமல் போய்விட்டது. இவனுங்க தென்னாட்டிலும் செய்கிற கலாட்டவுக்கு பதிலா நமக்கு பாக்கிஸ்தானிலிருந்து இலங்கை வழியா ஆப்பு வரப்போகுது.

பதிவிற்கு மிக்க நன்றி.

said...

காவி பயங்கரவாத நோய் தாட்ஸ் தமிழ் இணைய பத்திரிகையையும் பீடித்துள்ளது. ராமகோபலன் காலையில் ஆய் வருவதற்கு முக்கினார் என்பது போன்ற 'முக்கிய'ச் செய்திகளை மறக்காமல் போடுகிறார்கள். அந்த செய்திகளில் கருத்துச் சொன்னால் அவற்றை மாடரேசன் செய்து அழித்து விடுகிறார்கள்.

said...

போட்டோ கேப்சன்ஸ் ஒவ்வொன்றும் நச்.....

said...

நல்ல கேள்விகள்.
விநாயகனை காவிப் பயங்கரவாதத்தின் சின்னமாக பயன்படுத்தலாம்.

said...

//விநாயகனை காவிப் பயங்கரவாதத்தின் சின்னமாக பயன்படுத்தலாம்.//

அப்படித்தானே ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் பல பத்து வருடங்களாக பயன்படுத்தி வருகிறார்கள்?

said...

படித்த புறம்போக்குகள் இந்துத்துவவாதிகளாக இருப்பது எப்படி என்பது ஓரளவு புரிகிறது. ஆனால் அடித்தட்டு மக்கள் பழக்கமில்லாத இந்த சாக்கடையில் எப்படி விழுகிறார்கள் என்பதை முடிந்தால் விளக்கவும்.

Related Posts with Thumbnails