TerrorisminFocus

Thursday, May 15, 2008

அன்பழகன் வைத்த செக்கும், கருணாநிதி திருப்பிக் கொடுத்த ஆப்பும், மற்றும் கொளுகைப் போராளி சுப.வீ.யும்

2008 மே 11 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் காரைக்குடி ராம.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

காரைக்குடி ராம.சுப்பையா, ஆத்திகர்களின் அசைக்கமுடியாத கோட்டையாகவும், பார்ப்பன அடிமைகளின் கூடாரமாகவும் திகழ்ந்த காரைக்குடியைச் சுற்றியுள்ள செட்டிநாட்டுப் பகுதியில் 1930களின் தொடக்கம் முதல் சுயமரியாதை இயக்கத்தையும், சுயமரியாதை சமதர்மக் கட்சியையும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் கட்டி அமைத்தவர். பல இன்னல்களுக்கு மத்தியில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தை செட்டிநாட்டில் வேரூன்றச் செய்த சுப்பையா 1949 வரை பெரியார் இயக்கத்திலும், 1949 முதல் 1997இல் அவர் இறக்கும் வரை திமுகவிலும் செயல்பட்டவர். கட்சியை தனது சொந்த நலனுக்காக பயன்படுத்தாத சுப்பையாவின் போராட்டக்களன்களாக 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் 1953இல் திமுக நடத்திய கல்லக்குடி போராட்டத்தையும் சொல்ல முடியும்.

அவரின் நூற்றாண்டு விழாவை அவர் சார்ந்த திமுகவும், அவரின் வாரிசுகளும் இணைந்து நடத்தினர். அவரின் வாரிசுகளில் இருவர் சற்றே பிரபலமாய் இருப்பவர்கள். மூத்தவர் எஸ்பி.முத்துராமன் என்ற 'மாபெரும்' மசாலா சினிமா இயக்குநர். இளையவர், 80,90களில் தமிழ்த்தேசியம், பெரியாரியம், ஈழ ஆதரவு, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்றெல்லாம் பேசியும் எழுதியும் வந்த சுப.வீரபாண்டியன்.

விழாவில் வீரபாண்டியன் (அதுதாங்க சுப.வீ) இதுவரை தனக்கு சூட்டி இருந்த அறிவாளி, கொள்கைக்காரர், போராளி போன்ற கனமான போர்வைகள், மேலாடைகள், உள்ளாடைகள் அனைத்தையும் உதறிவிட்டு, 'எரிக்கப்போகும் சூரியனே', 'ஓய்வறியா உதய சூரியனே' என்று கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கும் இன்னொரு தொண்டரடிப்பொடியாக மாறிப்போனார். அநேகமாக அந்த விழாவை அவரின் தந்தைக்கு நூற்றாண்டு விழாக் கூட்டமாகவும், அவருடைய அரசியலுக்கு அஞ்சலிக்கூட்டமாகவும் நாம் கருதிக்கொள்ளலாம். வீணாய்ப்போன வலம்புரிஜானின் இடத்தைப் பிடிக்க எப்படி எல்லாம் பல்லிளிக்க வேண்டியிருக்கிறது!

ஏற்கனவே நாறிப்போயிருந்த கோடம்பாக்கத்தில் மேலும் பல பன்னிச்சாணிகளைக் கொட்டிய மாதிரி ரஜினி,கமல் கழிசடைகளை வைத்து சினிமா எனும் பேரில் பல குப்பைகளை எடுத்து தள்ளியவர் இந்த முத்துராமன். அவர் இந்த மேடையில் ஒரு சுவாரசியமான விசயம் சொன்னார். அவர் 10ஆம் வகுப்புப் படிக்கும்போது ஒருமுறை திமுக பேச்சாளர் ஒருவர் வராததால், அவருடைய அப்பாவின் வேண்டுகோளின்படி கூட்டத்தில் பேசப்போனாராம். அதே கூட்டத்தில் பேசி முடித்த க.அன்பழகன், கூட்டம் முடிந்ததும் 'யார் நீ?' எனக்கேட்டிருக்கிறார். முத்துராமன், 'ராம.சுப்பையாவின் மகன்' என்றதும் 'இதுதான் கடைசி..முதலில் படிச்சு முடிக்கிறதப் பாரு' என்று அன்பழகன் சொன்னாராம்.

எஸ்.பி.முத்துராமன், ஒழுங்காய் அன்பழகன் சொன்னதைக் கடைப்பிடித்துப் படித்திருந்திருக்கலாம். நாமும் பல கழிசடை குப்பைகளை பார்த்து கஸ்டப்பட்டிருக்க வேண்டியதிலிருந்து தப்பித்திருக்கலாம். சகலகலாவல்லவன்,முரட்டுக்காளை... உயர்ந்த உள்ளம், நல்லவனுக்கு நல்லவன்...... அடத் தூ....

வாழ்த்துரை வழங்க வந்த ராம.வீரப்பன் (முருகன் கை வேல் எடுத்த ஆர்.எம்.வீ. அண்ணே தான்), தன்னை ராம.சுப்பையாதான் அரசியலுக்கு அழைத்துவந்ததாகச் சொன்னார். பின்னர் இருவரும் வேறுவேறு பாதைகளில் அரசியல் பயணம் மேற்கொண்டதாகச் சொன்னது நம்மை வியப்பில் ஆழ்த்தியது. ஆர் எம் வீ 40களுக்குப் பிறகு அரசியலில் என்ன செய்துவிட்டார் என்று வேறு பாதையில் பயணித்ததாக கூறுகிறார்? எம்.ஜி.ஆருக்கு மேனேஜராகவும், எம்.ஜி.ஆரின் பல கள்ளத்தனமான வெளியில் சொல்லக்கூச்சப்படும் செயல்களுக்கு எடுபிடியாகவும் (மாமா) வேலை பார்த்ததை எல்லாம் அரசியல்பணி என்று சொல்லமுடியாது. எதனை சொல்வது? பெரியாரின் கைப்பிடித்து வளர்ந்த வீரப்பன், எம்.ஜி.ஆரிடம் அமைச்சராகி சங்கராச்சாரியின் பல்லக்கை சுமந்த மாட்டு வண்டியை மாட்டிற்குப் பதிலாக இழுத்து வந்தகதையையா? முருகனுக்கே மொட்டை போட்டு வைர வேலை எங்கப்பா? எங்க வீரப்பா? என்று மக்கள் கேட்டதையா? என்னமோ போங்க.

ஆர்.எம்.வீ. சொன்னார் 'அண்ணன் சுப்பையாவின் கடைசிக்காலங்களில் அவ்வப்போது அவரை சந்திப்பதுண்டு','ஏன் வீரபாண்டியன் தம்பி எதிர்ப்பா இருக்குதுன்னு தெரியலை என்பார். அவர் இப்ப இருந்திருந்தால் வீரபாண்டியனின் இன்றைய நிலைப்பாட்டைக்கண்டு மகிழ்ந்திருப்பார்' என்றார். இதைச் சொல்வதன் மூலம் ராம.சுப்பையாவுக்கு தேசிய இன, பெரியாரிய, தமிழ்த் தேசிய அரசியல் எதுவும் தெரியாது என்பதையும்(அதாவது வீராபண்டியன் ஏன் இந்த அடிப்படைகளில் கருணாநிதியை எதிர்த்தார் என்பது பற்றிய புரிதல் ராம. சுப்பையாவுக்கு இல்லை என்பதையும்) வீரபாண்டியன் தற்போது கடைசியில் கலைஞரின் நாய்க்குட்டியாகி எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டவர் என்பதையும் சொல்லாமல் சொன்னார்.

Photobucket Link

அன்பழகன் பேசும்போது உள்குத்து ஒன்றை வைத்து விட்டு அமர்ந்தார். "கலைஞர் ஒருவர்தான் ராம.சுப்பையா அவர்களை அண்ணன் என்று அழைப்பார். நாங்கள் அவரை 'தோழர்' என்றுதான் கூப்பிடுவோம். சுயமரியாதை இயக்கம் அப்படித்தான் பழக்கி இருந்தது. பெரியாரையே தோழர்.ராமசாமி என்றுதான் அழைப்பார்கள்" என்று குறிப்பிட்டார். இப்பேச்சின் சாரம் என்ன என்பதை அடிமட்ட கலைஞர் உடன்பிறப்பு புரிந்து கொள்ள மாட்டான். ஆயினும் தலைவர்மட்டத்தில் உடனடியாக உணர்ந்து கொள்வர்.

"யோவ்..கருணாநிதி..உம்மைவிட 15 வயசு மூத்தவரான ராம.சுப்பையாவையே தோழர்னுதான் அழைத்தோம். நீரோ என்னை விட 2 வயது இளையவர். உம் பெயரைக்கூட சொல்லிடாமல் 'தமிழினத் தலைவர்'னு அழைக்கணுமா?" - இதுதான் அன்பழகன் சொல்லாமல் சொன்ன விசயம்..

கருணாநிதி எப்பேர்ப்பட்ட ஆசாமி! அன்பழகன் வைத்த செக்குக்கு ஆப்புக் கொடுக்க வேண்டாமா? எப்படி இதைச் சமாளிப்பார் என்று பார்த்தோம்..

Photobucket Link

"கல்லக்குடி போராட்டத்தில் எங்களில் 30 பேர்களை முதலில் அரியலூர் சப்-ஜெயிலில் அடைத்தார்கள். ஏழெட்டுப் பேர்களை ஒரே செல்லில் அடைத்தார்கள். உள்ளே கடுமையான துர்நாற்றம். இரவு நல்ல காற்றை சுவாசிக்க மூக்கை கம்பிக்கு வெளியே நீட்டியபடி நின்று கொண்டிருந்தேன். இரவு வெகு நேரமான பின்னரும் நின்று கொண்டிருந்தேன். அப்போது அண்ணன் ராம.சுப்பையா , கால்கள் வலிக்குமே என்று என்கால்களைப் பிடித்து அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார். அவர் வயதென்ன? என் வயதென்ன? இதெல்லாம் அவர் செய்தது எதனால்? அதன் பெயர்தான் தொண்டு" என்று கருணாநிதி பேசினார்.

அதாவது,
"யோவ்..பெருசு..என்னமோ..அவரையே தோழர்னு சொல்லுவியா? ஒன் தோழரே என் காலைப்பிடிச்சுக்கிட்டு தொண்டு செஞ்சவர் பாத்துக்கோ..உன் மனசில அந்த மாதிரில்லாம் 'தோழர் கருணாநிதி..அடேய் கருணாநிதி'ன்னுல்லாம் கூப்பிடனும்னு வேற நினப்பிருக்கா? காலைப்பிடிப்பதுதான் தொண்டனுக்கு அழகு..பாத்துக்கோ"...இதுதான் கருணாநிதி சொல்லாமல் சொன்ன பதில்..

அன்பழகனுக்கு ஆப்படித்தாயிற்றா?

கூட்டம் முடிந்த பிறகு இதனைத் தோழர்கள் குறிப்பிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தனர். தோழர் ஒருவர் சொன்னார்.."கூட்டம் முடிந்து வீட்டுக்குப் போய் துணைவியாரிடம் அன்பழகன் சொல்வார் 'கருணாநிதிக்கு நல்லா செக்கு வச்சிட்டேன்'. அந்த அம்மா கேட்க்கும் 'அப்புறம்..என்னங்க ஆச்சு'. அன்பழகன் உடனே சொல்வார் 'பாவி மனுசன்..நம்மை நல்லா மூக்க உரிச்சிட்டான்..'. பதிலுக்கு அந்த அம்மா, 'அதான் 40 வருசமா இதுதான நடக்குது... என்னமோ புதுசா இன்னைக்குதான் நடக்கிற மாதிரி..போய்த் தூங்கும்வே,.ம்பாங்க"

விழாவை ஒட்டி ராம.சுப்பையா மலர் எனும் பெயரில் அவரின் குடும்ப போட்டோ ஆல்பம் ஒன்றை வெளியிட்டார்கள்..

ரூ100 கொடுத்து வாங்கிப் படித்துப் பார்த்த பின்னர்தான் தெரிந்தது.. சுயமரியாதையில் சாதிஒழிப்பு என்ற ஒன்றை ராம.சுப்பையா குடும்பம் கடைப்பிடிக்கவே இல்லை என்பது.... ஒரு வேளை "செட்டியார் சுயமரியாதையோ" என்னமோ?

நன்றி பின்னூட்டத்தில்
---வில்லாளன்----

11 பின்னூட்டங்கள்:

said...

காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாம்...

said...

இது தினமலர் நாழிதழில் வந்த செய்தி..

""""
ஈ.வெ.ராமசாமி, அண்ணா போன்றவர்கள் சிறையில் சோளக்கஞ்சியை சாப்பிடவில்லையா?”
"""


கருணாநிதி தனது பேச்சில் “பெரியாரும் அண்ணாவும் சிறையில் சோளக்கஞ்சியை சாப்பிடவில்லையா?” என்று கேட்டதை

வேண்டுமென்றே ஈ.வெ.ராமசாமி
என்று தினமலர் எழுதுவது பார்ப்பனக் குசும்பில்லாமல் வேறென்ன?

said...

////ஈ.வெ.ராமசாமி, அண்ணா போன்றவர்கள் சிறையில் சோளக்கஞ்சியை சாப்பிடவில்லையா?”
"""


கருணாநிதி தனது பேச்சில் “பெரியாரும் அண்ணாவும் சிறையில் சோளக்கஞ்சியை சாப்பிடவில்லையா?” என்று கேட்டதை

வேண்டுமென்றே ஈ.வெ.ராமசாமி
என்று தினமலர் எழுதுவது பார்ப்பனக் குசும்பில்லாமல் வேறென்ன?
//

in 60s ee.ve.ramasamy was in fact addressed as ev.ve.ramasamy.
it is just who is bringing and paarpanam and hinduism here. people will understand

Params

said...

கருணாநிதி தெளிவாக மைக்கில் பேசியது "பெரியாரும் அண்ணாவும்"..
இதைக் கேட்டுக்குறிப்பெடுத்த தினமலம் பத்திரிக்கைக்காரப் பூணூலுவின் எழவெடுத்த காதில் எப்படி ஓய் "ஈ.வெ.ராமசாமியும் அண்ணாதுரையும்" என்று விழுந்தது?

சங்கராச்சாரி என்று ஒருவர் பேசியதை எழுதும்போது மட்டும் காஞ்சி சுவாமிகள் என்று விழுகிறதே? அது எப்படி?

காதில் என்ன பார்ப்பனிய டிரான்ஸ்லேட்டர் வைத்திருக்கிறாளோ?

இதுக்கு பரம்ஸ் எனும் கூமுட்டை விளக்கவுரை வேறு?

1938இலேயே ஈவெராவை பெண்கள் மாநாட்டில் பெரியாராக மாற்றி விட்டார்கள்..இது வரலாறு..

கவி

said...

கருணாநிதி, நெஞ்சுக்கு நீதியில் புளுகிப் பதிவாகாத சிலவற்றை இப்போது புளுகுகிறார்.

ஆனால் ஒவ்வொன்றையும் அம்பலப்படுத்த ஆட்கள் இருக்கின்றார்களே..

1993 முதல் புதிய வரலாற்றை சொல்ல ஆரம்பித்தார். அது தி.க. கொடி பிறந்த கதை. அதாவது குடியரசில் கருணாநிதி வேலை பார்த்தபோது திக கொடி வடிவமைக்க சொல்லி இருந்தார்களாம்.. கருணாநிதியும் கவிஞர் கருணானந்தமும் யோசிச்சு யோசிச்சு நடு இரவில் 'இப்போது இருக்கும் திக கொடியை' வடிவமைத்தார்களாம். கருப்புக்கு கருப்பு மையை காகிதத்தில் தடவினார்களாம். நடுவில் சிவப்புக்கு சிவப்பு மை இல்லையாம்..வேறு வழியின்றி கருணாநிதியே தனது கையை ஊசியால் குத்தித் தனது ரத்தத்தை சிந்தி (விக்கிரமன் படம் மாதிரி இருக்கா?) நடுவில் இருக்கும் வட்டத்தைப் போட்டாராம்.

இந்த வரலாற்று (?) சம்பவத்தை கருணானந்தம் காலமான பிறகுதான் சொல்ல ஆரம்பித்தார்.. இந்தப் புரூடாவை திக பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் செம்மையான ஆதாரங்களுடன் மறுத்து எழுதிய பின்னர் கருணாநிதி அடங்கிவிட்டார்.

இப்போது கல்லக்குடிப் போராட்டத்தில் ராம.சுப்பையா தனது காலைப் பிடித்ததாக புதுக் காவியம் எழுத ஆரம்பித்திருக்கிறார்.

// அவர் ஏன் என் காலைப் பிடிக்க வேண்டும்? அதுதான் தொண்டு//

இதை முதலில் கட்டுடைப்போம்.

1953 இல் கருணாநிதி, திமுகவில் சாதாரணப் பேச்சாளர்.. அதாவது வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் மாதிரி.. அப்போதைய முன்னணித் தலைகளான அண்ணாதுரை, சம்பத், நெடுஞ்செழியன், சோமு, மதியழகன் ஆகியோர்களுக்கும் கீழே ஏறிக்கொண்டிருந்த ஆள். அவரை ஏன் சுப்பையா காலைப் பிடிக்க வேண்டியிருந்தது? சுப்பையா என்ன தீர்க்கதரிசியா? பின்னாளில் கழகத்தை இந்த வசனகர்த்தா கைப்பற்றுவார் என வருங்காலம் கணித்தவரா?

சொந்தத் தொகுதியிலே ஒரு தடவை கூட வெல்ல முடியாத, மக்கள் தன்னை வெல்ல வைப்பார்களா என்பதைக்கூட அறிய முடியாத சுப்பையாவின் தீர்க்கத்தரிசனம் பூச்சியமாகத்தானே இருக்க முடியும்?

4 வால்யூம்களில் கதையும் உண்மையுமாய் நெஞ்சுக்கு நீதி சொன்னவர், அந்த 4 வால்யூம்களில் சொல்லாத 'கால் அமுக்கும் வைபவத்தை' ராம.சுப்பையா இறந்த பிறகு சொல்கிறாரே..ஏன்?

இதனை யாரும் மறுக்கப் போவதில்லை. இல்லை எனச் சொல்ல சுப்பையாவே இல்லை.. கண்ணதாசன் இல்லை..முல்லை சத்தி இல்லை..

சுப.வீயோ எஸ்பிஎம் மோ இச்சம்பவத்தைக்கூட 'கலைஞரின் காலைப் பிடித்த பாரம்பரியம்' எனப் பெருமிதம் அடையலாம்...

'தோழர்' என்று அழைத்து சோசலிசப்பாதையில் போக இருந்த இயக்கம், 'கரிகாலனே', 'வாழும் வள்ளுவனே','ராஜராஜ சோழனே' என விளிக்கும் நிலவுடமைச் சமூக எச்சக்கலப் புத்திக்குத் திரும்பிச் சென்றதுதான் திராவிடக் கொழுந்துகளின் சாதனை..

இதனை அம்பலப்படுத்தும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.
//
வேட்டியப் புடிச்சுக்கிட்டு வேனிலே தொங்குறான்.. இவ வேப்பிலையக் கட்டிக்கிட்டு வேண்டுதல் என்கிறா..
வேப்பிலை என்ன..வேட்டி என்ன..

ஒரு கூட்டமே அலையுது பொறுக்கித் தின்ன...
//

--
ராம.கரு.லெ.ராம.நாராயணன்.

said...

மிஸ்டர் வெ. ஜெயகணபதி,

உங்க காமாலையில்லா கண்ணுக்கு நெஞ்சுக்கு நீதியில்லாமல் கருணாநிதிவிட்ட உடான்சுகள் என்று மேலே கொடுத்துள்ள பின்னூட்டம் தெரியுமா? இல்ல மஞ்சகலர்ல(கருணாநிதியோட சால்வைத் துணி கலர்) எதுனா இருந்தாதான் கண்ணுக்கு தெரியுமா?

அசுரன்

said...

மருதமலை மாமணியே மருதய்யா :-)))))

said...

ஜெயகணபதி உடன்பிறப்பே..

உடான்சு உடன்பிறப்பு ரொம்ப காலமாகச் சொல்லி வரும் இன்னொரு புளுகையும் கேளாய்..

அது நெருக்கடி நிலைக்காலம்.
ஒருநாள் காமராஜ், கருணாநிதியின் கையைப் பிடித்துக் கொண்டு "நீங்கள்தான் தமிழ்நாட்டைக் காப்பாத்தணும்" என்று சொன்னாராம்..

இதனையும் காமராஜின் மரணத்துக்குப் பிறகுதான் முத்தமிழறிஞர் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது...

--
ராம.கரு.லெ.ராம.நாராயணன்.

said...

தோழர்களே மிகவும் சிறப்பானதொரு கட்டுரைக்கு அதற்கேற்றார்ப்போல் வருகின்ற பின்னூட்டங்களையும் பார்த்து, எதிலும் குறுக்கிடமுடியாமல் நிற்கிறேன். வாழ்த்துக்கள்!

தோழமையுடன்,
ஏகலைவன்.

said...

கட்டுரை மிக அற்புதம்.இதைப் படித்த பிறகாவது வசனத்திற்க்கு விசிலடிச்சான் குஞ்சுகளான உடன் பிறப்புகள் திருந்துவார்களா?....
//ஜெயகணபதி உடன்பிறப்பே..

உடான்சு உடன்பிறப்பு ரொம்ப காலமாகச் சொல்லி வரும் இன்னொரு புளுகையும் கேளாய்..

அது நெருக்கடி நிலைக்காலம்.
ஒருநாள் காமராஜ், கருணாநிதியின் கையைப் பிடித்துக் கொண்டு "நீங்கள்தான் தமிழ்நாட்டைக் காப்பாத்தணும்" என்று சொன்னாராம்..

இதனையும் காமராஜின் மரணத்துக்குப் பிறகுதான் முத்தமிழறிஞர் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது...//
இதையும் சொல்லுவார்....
இந்திராகாந்தி சாகும் போது ராஜீவை பிரதமர் ஆக்கி ராஜீவையும்,அதன் மூலம் நாட்டு மக்களையும் காப்பாற்றுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்....
ராஜீவ் காந்தி இறக்கும் போது என்னிடம் சோனியாவையும்,குழந்தைகளையும்,காப்பாற்றி ராகுல்காந்தியைப் பிரதமராக்கி,ராகுல்காந்தியையும் அதன் மூலமாக நம் நாட்டை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டே என் மடியில் உயிரை விட்டார்...
கேட்கிறவன் கேனையனாக இருந்தால்.....###%%^%$$%&()*(&^^%$$##$#^%$^%&%%&^*^^....!

said...

எது உண்மை எது பொய் என்றே தெரியல.. கொழப்பமா இருக்குடா சாமி..

Related Posts with Thumbnails