TerrorisminFocus

Thursday, November 23, 2006

யாரு சொல்றதுன்னு பாத்தீகளா?

உலகமயம், உலகமயம் அப்படின்னு கம்யுனிஸ்டுகளும், பிற அரசியல் கட்சியினரும் அடிக்கடி உரக்க கூவுகிறார்களே, அதை இந்தியாவில் அமல் படுத்திய பெருந்தகை மெக்காலேயின் புத்திரன் மன்மோகன் சிங்தான். அன்னார், நரசிம்மாராவ் அரசில் நிதியமைச்சராக இருந்த போது இந்தியாவ தொறந்து விட்டாரு. தொறந்த வீட்டில பாகாசுர வெறி நாய்கள் நுழைஞ்சு அழிச்சாட்டியம் பன்றதப் பத்தித்தான் திரும்ப திரும்ப நாங்களும் எழுதி வருகிறோம். சரி, இப்ப அதுக்கு என்ன வந்ததுன்னு கேக்கிறீங்களா? தொடர்ந்து படிங்க.....

உலக மயம் தோற்றுவிக்கும் உலக உண்மை:

* ஏழை பணக்காரன் பிளவு அதிகரித்து வருகிறது.

* ஏழைகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தருவதற்க்கான, அவர்களது பிரச்சனைகளை காது கொடுத்து கேட்ப்பதற்க்கான சக்தியை அரசு இழந்து வருகிறது. மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளை போதுமான அளவு செய்து தருவதற்க்கு வக்கற்று உள்ளது.

* வளர்ச்சி கிராமங்களை அடைவதில்லை.

* இந்த மேற்சொன்ன காரணங்களால், மக்கள் அரசை வேறுக்க தொடங்கியுள்ளனர். இது மாற்றுமைப்பு தேடும் சக்திகளை வளர்த்தெடுக்கிறது. இது ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தவிடாமல் அரசை தடுக்கிறது.

இப்படித்தான் நாங்க முட்டாப்பயக கம்யுனிஸ்டுகள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இத திரும்ப போட வேண்டிய அவசியமென்ன?.
இத இந்த முறை சொன்னது சாட்சாத் மாமா மன்மோகன் சிங்தான். அதுவும் பிரிட்டிஸ் ஜெண்டில் மேன், மற்றும் லேடிஸ் மத்தில போயி சொல்றாரு.

பாராளுமன்றத்தின் போலித்தனத்தை அம்பலப்படுத்துவது யார்?

ஏன் இதே விசயம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லி கதை விடப்படும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை?

நியாயமாக அங்குதானே விவாதிக்கப்பட வேண்டும்.

உண்மையிலேயே அதி முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விதை நெல் சீர்திருத்தச் சட்டம், அணு சக்தி ஒப்பந்தம், அமெரிக்க ராணுவ ஒப்பந்தம், VAT, சில்லைறை வியாபாரத்தில் FDI, காப்புரிமைச் சட்டம், தண்ணீர் ஒழுங்குமுறை ஆணயச் சட்டங்கள் இப்படி இன்னும் சில பத்து அடிமை சாசனங்களையே கூட விவாதிக்காமலேயே அனுமதித்து பாராளுமன்றம்.
இதன் மூலம் அப்சல் குண்டு வைத்த இந்திய பாரளுமன்றம் என்பது ஏகாதிபத்தியத்தின் outpost, ரப்பர் ஸ்டாம்பு என்று அம்பலப்படுத்துவது கம்யுனிஸ்டுகளா அல்லது ஏகாதிபத்திய அடிமைகளா?

அல்லது 1947 போலி சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவின் ஒவ்வொரு பிரச்சனைகளை பற்றியும் பிரிட்டிஸ்க்காரர்களிடம் கேஞ்சி கேட்டு(லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்..) முறையிடுவோமே, அது போலத்தான் இப்பொழுதும் இந்தியாவின் நிலைமை உள்ளதா? அதாவது இந்தியா இன்னும் அடிமை நாடுதானா?

ஏனெனில் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டு இங்கு எதுவும் பேசாமல் பிரிட்டிஸ் மண்ணில் பேசும் போது இந்த சந்தேகம் உறுதிப் படுகிறது.

இதே மன்மோகன்சிங் தான் போன முறை ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் அவார்டு கொடுத்த பொழுது பிரிட்டிஸ்க்காரர்களின் காலனி ஆதிக்கத்திற்க்கு நன்றி தெரிவித்து தான் ஒரு பச்சை தரகு வர்க்க அரசியல்வாதி என்பதை வெட்கமின்றி பறை சாற்றினார். வேறு எப்படி? மெக்காலே கல்வி முறையின் புதிய வார்ப்பு அல்லவா?

அசுரன்

19 பின்னூட்டங்கள்:

said...

Neruppu siva,

சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

தமிழ் மணத்தில் எனது பின்னூட்டங்கள் சேகரிக்கப்படுகின்றன என்றே தெரிகிறது. இந்த பின்னூட்டத்தை எழுதும் போது கூட எனது பதிவுகள் அங்கு தெரிகின்றன.

அசுரன்

said...

அருமையான கிண்டல் நடை தோழர்,

இது காங்கிரஸின் அதே பழைய தந்திரம் தான் என்று நினைக்கிறேன் - அதாவது, எதிரியும் நானே அதற்கு எதிர்ப்பும் நானே. துரோகமும் நானே தியாகமும் நானே..

பின்னே வேறு எவராவது எதிர்க்கப் போய் மக்கள் அவர்கள் பின்னால் போய் விட்டால் கடை நடத்த முடியாதல்லவா?

said...

ராஜவனஜ்,

அது மட்டும் காரணமல்ல,

உலகமயத்தின் வெறி கொண்ட பசி இந்திய விவசாயம் மற்றும் சிறு தொழில் துறையை முற்றிலும் அடித்து துவைத்து விட்டது. இதனால் இங்கு உருவாகும் சமூக அழுத்தம் சார்ந்த வன்முறையை சமாளிக்க ஏதுவாக சில சலுகைகளை கொடுங்கள் என்று போன தோகா பேச்சுவார்த்தையில் காலில் விழுந்து மன்றாடினார்கள் இந்த பன்றிகள். ஒன்றும் பலனில்லை என்றவுடன் இன்று பிரிட்டிஸ் மண்ணில் மறைமுகமாக மிரட்டுகிறார்கள். அதாவது இப்படியே விட்டாக்க, ஆட்சி நம்ம கையில இருக்காது, அப்புறம் ஒரு மசிரும் பிடுங்க முடியாது அப்படின்னு.

இதை 1947க்கு முந்தைய காலனியாதிக்க காலத்தில் உள்ள் இந்திய பிரதமர் செய்வதுடன் ஒப்பிட்டால் வித்தியாசம் ஒன்றுமில்லை.

இருவரும் ஏகாதிபத்தியத்திடம் இந்தியாவில் பொங்கி வரும் அரசு வெறுப்பை காரணம் காட்டி சலுகைகள் கொடுக்கக் கேட்கிறார்கள்.

இதைத்தான் அடிமைத்தனம் என்கிறோம். இதைத்தான் மறுகாலனியாதிக்கம் என்கிறோம்.

இதை சிலர் வளர்ச்சி என்கிறார்கள். சொல்பவர்களின் முதுகு வளைந்து ரப்பர் துண்டங்களைப் போல தொங்குகிறது.

அசுரன்

said...

//இதை 1947க்கு முந்தைய காலனியாதிக்க காலத்தில் உள்ள் இந்திய பிரதமர் செய்வதுடன் ஒப்பிட்டால் வித்தியாசம் ஒன்றுமில்லை.//

47க்கு முன்னும் பின்னும் நேரு பிரிட்டிஸ் அரசுக்கு எழுதிய கடிதங்களில் இருந்த "மேதகு பேரரசுக்கு..." என்பது போன்ற வரிகளில் தெறித்த அதே விசுவாசம்..

நம்ம 'மன்னு'மோகன் பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் நன்றி தெரிவித்த போதும் பல்லிளித்தது.

அன்று காந்தியின் கடிதங்களில் இருந்த அதே மன்றாடல் தொனி, இப்போது தோஹா மாநாட்டிலும் எதிரொலிக்கிறது.

ஆட்கள் மாறினார்கள், கொடி மாறியது, பெயர் மாறியது, புதிதாக ஒரு விடுமுறை சேர்ந்தது ஆனால் அந்த அடிமை உணர்ச்சி மட்டும் மாறவில்லை அப்படியே தொடர்கிறது.

said...

என்னவே பஞ்சாப்புல வெள்ஞ்ச கோதுமைய விட்டுட்டு அமெரிக்காவுல வாங்குறோம்ல அமெரிக்கா கோதும வேண்டமோ? வித்ச்சவன் எலிய சாப்டா எங்களுக்க்கொன்ன

விவசாயத்துக்க்கே தண்ணி இல்லனாலும் பெப்சி கோக் கம்ம்ப்னிக்கு விக்கிறோம்ல கர்னபரம்பரையா நாங்க

சொல்லவந்துட்டாரு

(இத சொல்லி எந்த புன்னியமும் இல்லை சகோதரரே ஆட்சியில் இருப்பவர்களுக்கு தெரியோனும்)

said...

If we read Globalisation and It's Discontents by Stglitz(Nobel winning economist)We 'll get to know the worst face of Globalisation and few good areas as well.We can see how hypocratic the IMF.Worldbank are and also how the west is preserving it's interest by supressing developing country in the name of globalisation.

said...

வணக்கம் இறையடியான் அவர்களே,

தங்களது நக்கலான பின்னூட்டம் இந்த நாட்டின் இழிநிலை குறித்த தங்களது ஆதங்கத்தை வெளிக்காட்டுகிறது.

ஆயினும் கடைசியில் பிராக்கெட்டில் கொடுத்துள்ள பின்வரும் வரிகள் மற்றவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வியை எழுப்புகிறது.

//
(இத சொல்லி எந்த புன்னியமும் இல்லை சகோதரரே ஆட்சியில் இருப்பவர்களுக்கு தெரியோனும்)
//

ஆட்சியில் இருப்பவர்கள்தான் அப்பட்டமாக ஏகாதிபத்திய சேவை செய்கிறார்கள்.

என்ன செய்யலாம்?

இப்போதைக்கு நம் வீட்டில் நெருப்பு பிடிக்கவில்லை(நெருப்பின் புழுக்கத்தை உணரத் தொடங்கிவிட்டாலும் கூட) அதனால் 'இத சொல்லி எந்த புண்ணியமும் இல்லை சகோதரரே' என்று சுலபமாக சொல்லத் தோன்றுகிறது. ஆனால் இந்த திரு நாட்டில்தான், நமக்கு அனைத்து வளங்களையும் அள்ளி அள்ளி கொடுக்கும் இந்த தாய் திருநாட்டில்தான் நமது குழந்தைகளும் வாழப் போகிறார்கள், நமது காலமும் இங்குதான் கழியப் போகிறது.
ஒரு சமூகமே இழிநிலை அடையும் போது அதில் வாழும் நம்மைப் போன்றவர்கள் மட்டும் நல்வாழ்க்கை வாழ்ந்துவிட முடியுமா?

என்ன செய்யலாம்?

வழியில் படுத்துக் கிடந்து லாரியில் அடிப்பட்டு சாகும் ஒரு நாயைப் போல வீதியில் நடப்பது நம்மீது பாயும் வரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே 'ஒரு புண்ணியமும் இல்லை' என்று அங்கலாய்ப்போமா அல்லது வீதியில் இறங்கி இன்றைக்கு நமது சகோதர வர்க்கத்திற்க்கு நேரடியாக நடக்கும் அனீதியை தட்டிக் கேட்க்க அணி திரளலாமா?

என்ன செய்யலாம்?

சகோதரரே இறையடியான் , அறிவுரை கூறுங்கள் ....


அசுரன்

said...

// ஏன் இதே விசயம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லி கதை விடப்படும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை? //

நன்றாய் இருக்கிறதே நீங்கள் சொல்வது. இதையெல்லாம் விவாதிப்பதற்கு பாராளுமன்றம் இருக்கிறது என யார் சொன்னது?? கிரிக்கெட்டில் ஏன் தோற்றோம், சேப்பல் தேவையா இல்லையா?? சோனியா, முன்னாள் மற்றும் இந்நாள் பிரதமர்களின் மசிராண்டிகளுக்கு sorry sorry பேராண்டிகளுக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பது என்பது போன்ற நாட்டின் முக்கியமான விடயங்களை விவாதிக்கத் தானே பாராளுமன்றம் இருக்கிறது.!!

//அல்லது 1947 போலி சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவின் ஒவ்வொரு பிரச்சனைகளை பற்றியும் பிரிட்டிஸ்க்காரர்களிடம் கேஞ்சி கேட்டு(லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன்..) முறையிடுவோமே, அது போலத்தான் இப்பொழுதும் இந்தியாவின் நிலைமை உள்ளதா? அதாவது இந்தியா இன்னும் அடிமை நாடுதானா? //

No. No. அந்தக் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது, மாண்புமிகு ஐயா, என தொடங்கி, "பணிவுடன் -- தாழ்மையுடன் -- பணிந்து -- தரையில் விழுந்து வணங்கி -- காலை நக்கி -- கேட்டுக்கொள்கிறேன்" என்று முறையிடவேண்டும்.

// இதே மன்மோகன்சிங் தான் போன முறை ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் அவார்டு கொடுத்த பொழுது பிரிட்டிஸ்க்காரர்களின் காலனி ஆதிக்கத்திற்க்கு நன்றி தெரிவித்து தான் ஒரு பச்சை தரகு வர்க்க அரசியல்வாதி என்பதை வெட்கமின்றி பறை சாற்றினார். வேறு எப்படி? மெக்காலே கல்வி முறையின் புதிய வார்ப்பு அல்லவா? //

அது மட்டுமல்ல அதே "ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் அவார்டு" நிகழ்ச்சியில், என் தலையில் இருக்கும் நீலத்துணி, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் வண்ணத்தின் நினைவாக (அதாவது ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் கோவணம், மன்மோகனின் தலைப்பாகை) என்று கூசாமல் சொன்னாரே!!!

said...

////
// இதே மன்மோகன்சிங் தான் போன முறை ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் அவார்டு கொடுத்த பொழுது பிரிட்டிஸ்க்காரர்களின் காலனி ஆதிக்கத்திற்க்கு நன்றி தெரிவித்து தான் ஒரு பச்சை தரகு வர்க்க அரசியல்வாதி என்பதை வெட்கமின்றி பறை சாற்றினார். வேறு எப்படி? மெக்காலே கல்வி முறையின் புதிய வார்ப்பு அல்லவா? //

அது மட்டுமல்ல அதே "ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் அவார்டு" நிகழ்ச்சியில், என் தலையில் இருக்கும் நீலத்துணி, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் வண்ணத்தின் நினைவாக (அதாவது ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியின் கோவணம், மன்மோகனின் தலைப்பாகை) என்று கூசாமல் சொன்னாரே!!!
////

சபாபதி சரவணன்,

சிற்ப்பாக அம்பலப்படுத்தியுள்ளீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.

அசுரன்

said...

///

If we read Globalisation and It's Discontents by Stglitz(Nobel winning economist)We 'll get to know the worst face of Globalisation and few good areas as well.We can see how hypocratic the IMF.Worldbank are and also how the west is preserving it's interest by supressing developing country in the name of globalisation.
///


நண்பர் Gopalan Ramasubbu,

இது குறித்து மேலதிக தகவல்கள் இங்கு பரிமாறிக்கொள்ளும் வடிவில் இருந்தால், கொடுத்து இதற்க்கெதிரான போராட்டத்தில் உங்களது பங்களிப்பையும் செய்யுங்களேன்.

தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

அசுரன்

said...

அசுரன் அவர்களே

நான் சொன்னது இந்த இனையத்தில் சொல்வதால் அது இதை பர்க்காத பாமரனுக்கு சேருமா? அவனுக்கு புரியுமா? நாம் தாம் ஜாதிகளின் பெயரால் கட்சிகளின் பெயரால் பிரிந்திருகிறொமே பசியால் துடித்தவர்களிடம் கஞ்சி தொட்டி திறந்தும் பிரியானி கொடுத்தும் அரசியல் ருசி கண்டோமே

தேர்தல் வந்தால் ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கு தானே "உங்கள் ஓட்டு ........." என்று மைக் பிடித்து சுற்றி கொண்டிருகிறோம்

சரி இந்திய ரத்தைதை உறிஞ்சும் பெப்சிய்யையும் கோக்கையும் இனி தொடமாட்டேன் என யாராவது சொல்ல முடியுமா?

//என்ன செய்யலாம்?

சகோதரரே இறையடியான் , அறிவுரை கூறுங்கள்//

சும்மா கிடைப்பது அறிவுரை மட்டும் தானே

தாங்கள் கூறுங்கள் உண்ணாவிரதம் இருப்போமா பஸ் மறியல் செய்து 'அஹிம்சை' வழியில் சென்று போராடுவோமா? நாம் தான் கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் வாங்கியவர்களாயிற்றே(திப்பு சுல்தான் சின்னமலை கேரளாவில் மாப்பிள்ளை மார்கள் சிந்தியது ரத்தமில்லயா இன்னும் ஜாலியன் வாலாபாக்கில் குண்டுக்கு பலியானவர்கள் சிந்தியது ரத்தமில்லையா?)

நமக்கு தெரிந்தெல்லாம் பஸ் மறியலும் கண்ணாடி உடைப்பும் தாணே நெருப்பை மட்டும் அனைக்காமல் நெருப்பு வைப்பவனையும் சேர்த்தே அழிக்க வேண்டும். யாரல்லாம் தாயார் சிலர் வருகிறார்கள் சில நாட்களில் தடம்மாறுகிறார்கள். ஆட்சி கனவு கான்கிறார்கள் அவர்களை நம்பியவர்கள் அதே கதிதான் இது அல்லாமல் இறுதி வரை போராட யாரெல்லாம் தயார். பேசுவதையும் பேசிவிட்டு மறக்காமல் ஓட்டு போடுவது தானே நம்மில் உள்ளது

இதை மாற்ற இனையத்தில் எழுதுவதால் முடியுமா? ஏழைகளின் ரத்தைதை உறிஞ்சும் கந்து வட்டி மீட்டர் வட்டி போண்றவற்றை ஒழிக்கமுடியுமா சொல்லுங்கள் அசுரன் அவர்களே முடியுமா?

said...

அசுரன்,

நல்ல தமாசா இருக்கே..

இங்கே உழைப்பவர்களை பட்டினியு போட திட்டமும் போட்டு விட்டு எஜமானனிடம் ரொட்டித் துண்டு பிச்சையும் கேட்பவர்கள்தானா நம்மை ஆளுகிறார்கள்.

said...

இது போன்ற நகைச்சுவை துணுக்குகள் அடிக்கடி எழுதவும்

நன்றி
வசந்த்

said...

//நான் சொன்னது இந்த இனையத்தில் சொல்வதால் அது இதை பர்க்காத பாமரனுக்கு சேருமா? அவனுக்கு புரியுமா? நாம் தாம் ஜாதிகளின் பெயரால் கட்சிகளின் பெயரால் பிரிந்திருகிறொமே பசியால் துடித்தவர்களிடம் கஞ்சி தொட்டி திறந்தும் பிரியானி கொடுத்தும் அரசியல் ருசி கண்டய்மே

தேர்தல் வந்தால் ஏகாதிபத்திய அடிவருடிகளுக்கு தானே "உங்கள் ஓட்டு ........." என்று மைக் பிடித்து சுற்றி கொண்டிருகிறோம்

சரி இந்திய ரத்தைதை உறிஞ்சும் பெப்சிய்யையும் கோக்கையும் இனி தொடமாட்டேன் என யாராவது சொல்ல முடியுமா? //


இறையடியான்,

இணையத்தில் இந்த விசயங்கள் பேசுவதன் அவசியம் இங்கு உலாவும் தகவல் தொழில் நுட்ப துறையினரும் கூட ஏகாதிபத்திய பொருளாதாரத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும், இந்த வர்க்கம் மேற்சொன்ன பிரச்சனைகளை பேசவும், புரிந்து கொள்ளவும் வாய்ப்பும் வசதியும் கொண்டது என்பதாலும். அதனாலேயே இது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதில் மிகச் சிறந்த பங்களிப்பை செய்ய முடியும் என்பதாலும். இங்கு இந்த விசயங்களை பேசுவது மிகவும் முக்கியமாகிறது.

ஆனால், இங்கு மட்டும் பேசி திரிவதில் எந்த லாபமும் கிடையாது எனும் தங்களது கருத்து மிகச் சரி.





////
//என்ன செய்யலாம்?

சகோதரரே இறையடியான் , அறிவுரை கூறுங்கள்//

சும்மா கிடைப்பது அறிவுரை மட்டும் தானே

தாங்கள் கூறுங்கள் உண்ணாவிரதம் இருப்போமா பஸ் மறியல் செய்து 'அஹிம்சை' வழியில் சென்று போராடுவோமா? நாம் தான் கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் வாங்கியவர்களாயிற்றே(திப்பு சுல்தான் சின்னமலை கேரளாவில் மாப்பிள்ளை மார்கள் சிந்தியது ரத்தமில்லயா இன்னும் ஜாலியன் வாலாபாக்கில் குண்டுக்கு பலியானவர்கள் சிந்தியது ரத்தமில்லையா?)

நமக்கு தெரிந்தெல்லாம் பஸ் மறியலும் கண்ணாடி உடைப்பும் தாணே நெருப்பை மட்டும் அனைக்காமல் நெருப்பு வைப்பவனையும் சேர்த்தே அழிக்க வேண்டும். யாரல்லாம் தாயார் சிலர் வருகிறார்கள் சில நாட்களில் தடம்மாறுகிறார்கள். ஆட்சி கனவு கான்கிறார்கள் அவர்களை நம்பியவர்கள் அதே கதிதான் இது அல்லாமல் இறுதி வரை போராட யாரெல்லாம் தயார். பேசுவதையும் பேசிவிட்டு மறக்காமல் ஓட்டு போடுவது தானே நம்மில் உள்ளது
////

நண்பர் இறையடியான்,

நான் மக்களை அணி திரட்டி போராடும் மக்கள் திரள் வழியில்தான் நம்பிக்கை வைத்துள்ளேன். அது என்ன விதமாகவும் இருக்கலாம். துப்பாக்கி ஏந்தி எதிரியின் நெற்றிப் பொட்டில் சுடுவதாகவும் இருக்கலாம். நெடுஞ்சாலைகளை மறித்து அரசின் கழுத்தை இறுக்கி பிடிப்பதாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது மக்கள் செய்ய வேண்டும், நமது வேலை அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு கொடுத்து அமைப்பாக அணீதிரட்டுவதே. இங்கு ஒரு விசயத்தை குறீப்பிட விரும்புகிறேன், நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நம் எதிரி முடிவு செய்கிறான்.

நீங்கள் குறிப்பிடுவது போல மக்க்ளின் அரசியல் மட்டம் தாழ்வாகத்தான் உள்ளது. அத்ற்க்கு காரணம் தொலைக்காட்சி, சினிமா உள்ளிட்ட ஊடகங்களின் வாயிலாக வீட்டிலேயே ஒரு போலிஸ்க்காரனை நிப்பாட்டி உள்ளானே அதுதான். ஆனால் இதை மீறித்தான் இந்தியா அவ்வப் பொழுது, ஆங்காங்கே கொதித்தெழுகிறது. இந்த போராட்டங்களை ஒருங்கிணைத்து அகில இந்திய பரிணாமம் கொடுக்கும் ஒரு அமைப்பை உருவாக்குவதுதான் அறிவு ஜீவி வர்க்கதாராகிய நமது இன்றைய கடமை.



//இதை மாற்ற இனையத்தில் எழுதுவதால் முடியுமா? ஏழைகளின் ரத்தைதை உறிஞ்சும் கந்து வட்டி மீட்டர் வட்டி போண்றவற்றை ஒழிக்கமுடியுமா சொல்லுங்கள் அசுரன் அவர்களே முடியுமா?
//

இணையத்திலும் எழுத வேண்டும். ஏனெனில் இன்று இணையமும் ஏகாதிபத்திய, பார்ப்பினிய சக்திகளின் கையில் அகப்பட்டு, பொதுக்கருத்தை முடிவு செய்யும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாக உள்ளது. ஆகவே இங்கும் நாம் இயங்க வேண்டியுள்ளது.

ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் எதுவாகிலும் அதை அந்த பகுதி மக்களை அமைப்பு ரீதியாக திரட்டி அரசியல் விழிப்புணர்வடையச் செய்து போராடினால் அடித்து துவம்சம் செய்து விடலாம்.

அசுரன்

said...

// இதை மாற்ற இனையத்தில் எழுதுவதால் முடியுமா? //

இறையடியான் அவர்களின் இந்த கேள்வி அர்த்தம் உள்ளது.

ஆனாலும் அசுரன் போன்றவர்கள் இனையத்தில் இதையெல்லாம் எழுதா விட்டால், இந்தியாதான் அமெரிக்காவின் எஜமான் என மாற்றி பரப்பி விடுவார்கள்.

ஆனாலும் இவற்றை மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும். என்ன செய்யலாம்.

said...

வசந்தத்தின் இடிமுழக்த்திற்க்கு நன்றிகள் :-))

இறையடியானின் அந்த கேள்வியை சரியான கேள்வியே. மக்களிடம் இறங்கி வேலை செய்யாத வரை ஒன்றும் செய்ய முடியாது.

//ஆனாலும் இவற்றை மக்களிடையே எடுத்து செல்ல வேண்டும். என்ன செய்யலாம். //

புத்தகஙக்ள், மக்களது சொந்த போராட்டங்களின் ஊடாக அவர்களது சாதாரணப் பிரச்சனையும் எவ்வகையிலெல்லாம் ஏகாதிபத்திய திட்டங்களுடன் இணைந்துள்ளது என்பதை சொந்த அனுபவத்தீல் உணர வைப்பது.

அசுரன்

said...

அமெரிக்க ஏகாதிபத்தியம் விரைவில் அழியும். அது அழிவை நோக்கியே சென்றுகொண்டுள்ளது. நாம் இதுபோண்றதொரு ஊடகத்தின் மூலமாக தொடர்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டிருந்தாலே அதில் பங்கு பெருபவர்கள் தம்மை சார்ந்தவர்களை சிறிதுசிறிதாக உண்மைகளை உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி ஏகாதிபத்தியத்திற்கு ஒரு முடிவுகட்ட இயலும்.

said...

சும்மா ஒரு விளம்பரம்.....

said...

ஏழை பணக்காரன் பிளவு அதிகரித்து வருகிறது.

Related Posts with Thumbnails