நாய் படும்பாடும், நாகரிகம் படும்பாடும்
இவை வழக்கத்திற்க்கு வந்த காலத்தில் ஒரு வேளை நாய்களின் பிழைப்பு இந்திய விவசாயிகளின் நிலைக்கு கிட்டே வரும் அளவு மோசமாக இருந்திருக்கலாம். ஆனால், இனிமேலும் அந்த வார்த்தை பிரயோகம் உபயோகப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவில் அல்ல, அமெரிக்காவில் நாய்களின் வாழ்க்கை இந்த நாய் குறித்த சொற்றொடர்களை வழக்கத்துக்கு ஒவ்வாததாக மாற்றி விட்டது. இந்தியாவில் மேனகா உள்ளிட்ட ஆன்ம-வியாபார பன்றிகள் இன்னும் சில கோடிகளை வாங்கிக் கொண்டு இந்தியா நாய்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பட்சத்தில், நாய்களின் கேவலமான வாழ்க்கையை சுட்டிக் காட்ட 'விவசாயியின் பிழைப்பு' என்ற புது வார்த்தை வழக்கத்திற்க்கு வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வேலையத்த சாய்நாத்தும், சமூக அரிப்பும்:
சாய்நாத் என்பவர் வேலையத்துப் போய் இந்திய விவசாயிகளின் கஸ்டத்தை, அவர்களின்-இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை ஏகாதிபத்திய வேட்டைக்கு இரையாகியிருப்பதை பல்வேறு தொடர் கட்டுரைகள் மூலம் உலகறியச் செய்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர். ஒரு சம்பவம் முதல் முறை நடக்கும் பொழுது அதிக கவனத்தை பெறுவதும் பிறகு போகப் போக இதெல்லாம் சகஜம்தானே பாஸ் என்று ஏற்றுக் கொள்வதும் விழிப்புணர்வற்ற சமூகத்தின் இயல்பு. வழக்கம் போல விவசாயிகளின் விசயத்திலும் அதுவே நடந்தது. அரசு புள்ளி விவரத்தின் படியே 1 லட்சம் பேர் தற்கொலை செய்திருக்கிறார்கள் எனில் இதன் வீச்சும் பரவலான பொது அம்சமும் குறைந்த பட்ச மனிதாபிமானம் உடையவர்களையும் அதிர்ச்சியுறச் செய்கிறது.
ஆயினும் சுனாமிக்கு வால் போஸ்டரும் இரண்டு பதிவும் போட்டதுடன் தனது சமூக அரிப்பு தீர்ந்து விட்ட படியால் அந்த கோடூரமான சுனாமியையே பட்டப் பெயராக வைக்கும் அளவு சொரனையின்றி அலையும் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகளின் பிரச்சனை, இந்தியா எனும் எரிமலை குமுறிக் கொண்டிருப்பது குறித்த பிரக்சை அதிகமாக இருப்பதற்க்கான வாய்ப்புகள் கம்மி. சுனாமி சேகர் என்று பட்டப் பெயர் வைத்துக் கொண்டால் அவரென்ன சில பத்தாயிரம் பேரை கொன்றவரா? அப்படிக் கொண்றிருந்தாலும் அது கொண்டாடக் கூடிய விசயமா என்பதெல்லாம் பகுத்தறிவு உள்ளவர்களுக்கான விசயம். பன்றிகளுக்கு சக உயிரின் துன்பங்களைக் குறித்து கவனமெல்லாம் கிடையாது. ஆகவே அவர்கள் இது குறித்து கவலைப் படுவதில்லை. எங்கு __ கிடைக்கிறோதோ அங்கு சவக் சவக் தான்.
இந்த சாய்நாத், விவசாயிகள் பற்றி, பிரச்சனை பற்றி எழுதுவது மேட்டுக் குடி மக்களுக்கு எரிச்சலை தருகிறது என்று நினைத்தாரா தெரியவில்லை. அல்லது அப்துல் கலாம் நம்மை ரோசிக்க சொல்லி ஒரு மெயில் அனுப்புகிறாரே - அதாவது 'ஏன் நாட்டை குறை கூறிக் கொண்டே இருக்கிறீர்கள்? நாடு என்ன செய்தது என்று பார்க்காதே நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று யோசி?" என்பது போல. அதை எதுவும் சாய்நாத் படித்து தொலைந்தாரா என்று தெரியவில்லை. பாசிட்டிவ்வான விசயங்களை எழுதுவது என்று முடிவெடுத்து கட்டுரை எழுதத் துவங்கி விட்டார். அதுவும் அல்ட்ரா மாடர்ன் வாழ்க்கை வாழும் ஒரு வர்க்கத்தைப் பற்றி எழுதினால் பத்திரிக்கை அதுவும் ஆங்கிலப் பத்திரிக்கை படிக்கும் அறிவு ஜீவி(சொறிவு ஜீவி என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் இது சமூக விசயங்களை பேசுவது அதிக பட்சம் அது சார்ந்த தனது அறிப்பை சொறிந்து விட்டுக் கொள்ளத்தான்) நடுத்தர சுக போக வர்க்கத்துக்கு காலை நேர சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கும் என்று அவருக்கு தோன்றியதா தெரியவில்லை.
அப்படி ஒரு கட்டுரைதான் அமெரிக்க நாய்கள் பற்றிய அவரது கட்டுரை. துன்பத்துக்கு - கேடு கெட்ட முட்டாப் பய விவசாயி, மகிழ்ச்சிக்கு - புத்திசாலி, திறமைமிக்க கரெக்டாக டார்க்கெட் செய்து ஒரு அமெரிக்க பெண் நாயின் வயிற்றில் பிறந்த, அதுவும் அழகாக பிறந்த நாய்கள். துன்பத்தை எழுதாதே, நல்லதை எழுது என்று கான்சர் வந்த மயிலுக்கு விளக்கு பிடித்த மனிதாபிமான அப்துல் காலாம் சாய்நாத்தின் இந்த நாய்த்தனமான கட்டுரையின் முதல் சில பத்திகளைப் படித்து அவருக்கு ஜனதிபதி அவார்டு கொடுக்க சிபாரிசு செய்ய வாய்ப்புகள் உள்ளதை நான் குறிப்பிட்டே தீர வேண்டும். அப்படி சிபாரிசு செய்வதன் மூலம் சொந்த செலவில் சூனியம் வைத்து அவர் உழைக்கும் மக்கள் முன்பு அம்பலப்பட எல்லாம் வல்ல இறைவனை கன்னத்தில் அறைந்து(அவரோட கன்னத்துலதான். நமக்கு ஒரு கன்னத்த காட்டு இரண்டு கன்னத்த காட்டுங்கற வழிமுறையில் நம்பிக்கை கிடையாது) கேட்டுக் கொள்கிறேன்.
ஆயினும் கட்டுரை எழுதி முடிக்கும் முன்னே சாய்நாத்தின் கேடு கெட்ட பேனாவானது துன்பங்களை மட்டுமே எழுதி பழக்கப்பட்டுள்ளதால் ஆட்டோ மேட்டிக்காக மக்களின் துன்பத்தை எழுதத் துவங்கி விடுகிறது கடைசிப் பேராவில்.
புல்சிட்... நாய குளிப்பாட்டி நடு வீட்டில வைச்சாலும் அது தெருவுக்குத்தான ஓடுது... க்ளைமாக்ஸ்ல வந்து கெடுத்தான்டா....
சாய்நாத் ஆயிரம் அப்துல காலாம் லெட்டரப் படிச்சாலும் அவர் புத்தி திரும்பவம் எலி பிடிக்கிறவங்க பின்னத்தானே ஓடுது.
நல்லா, பாசிட்டிவ்வான, அப்துல் கலாமுக்கு பிடிச்ச - ஒரு நாடே நாய்களுக்கு பிஸ்கெட்ட் வாங்கி போடும் அழகை எழுதிக் கொண்டிருக்கும் பொழுதே ஏன் இவர் எழுத்து அந்த கேடு கெட்ட எலிக் கறி தின்னும் விவசாயிகளைப் பற்றி பேசுகீறது? சீட்... (Shitத்தான் அப்படி பேரிக்கன் பாணில நீட்டி முழக்கி சொன்னேன்).
விவசாயிகளும், நாயும்:
நாயும் விவசாயியும் ஏறக்குறைய ஒன்னு. இது சும்மா பொழுது போகாம சொல்லவில்லை. வயிறெரிந்து சொல்கிறேன். பக்கத்தில் ஒரு பெரும்பான்மை வர்க்கத்தினன், சக மனிதர்கள் - இந்த சமூகத்தின் முதுகெலும்பாய் இருந்து கூனிக் குறுகி தேய்ந்து போய் வயல்களில் தொலைந்த தனது வாழ்வை நகரங்களின் தெருக்களில் நாய்களுடன் நாயாக தங்கியிருந்து தேடிக் கொண்டிருக்கிறானே, அவனின் அன்றாடப் பிரச்சனைகள் குறித்து பேசுவதை விட கேலி கிண்டல் கேளிக்கைகள் பேசுவதில் அதிக ஆர்வமாக இருக்கும் சுரனையற்ற கூட்டத்தின் தடித்த தோல்கள் என்னை இவ்வாறு பேசச் சொல்கிறது.
தடித்த தோல்காரர்களே தயவு செய்து வாருங்கள் - நாய்களைப் பற்றியும், நாய்களை ஒத்த வாழ்க்கை வாழும் திறமையில்லாதா மூடர்களான விவசாயிகள் பற்றியும் பேசுவோம். பிறகு பிறப்பால் விவசாயிகளான, மூடர்களான விவசாயிகள் சமூக அழுத்ததின் கோபத்தை அணி திரண்டு வெளிப்படுத்தும் போதும், பிறப்பால் நாய்களான தெரு நாய்கள் வெறி பிடித்து அலையும் போதும் எப்படி கையாளுவது, சுட்டுக் கொல்வதா, அல்லது தற்கொலைக்கு தள்ளுவதா என்பது குறித்து பேசுவோம்.
நாய்கள் என்றால் ப்ளு க்ராஸ் வரும், வந்தால் பிரச்சனையில்லை சில வெள்ளிப் பணத்தை விட்டெறிந்தால் பன்றிகளைப் போல மொய்த்து பொறுக்கிச் சென்று விடுவார்கள். விவசாயிகளுக்கோ பிரச்சனையேயில்லை கேட்க நாதி கிடையாது. அடித்து துவைக்கலாம். வாருங்கள் தடித்த தோல்காரர்களே விவாதிப்போம்.... இந்த திறமையற்ற முட்டாள் கூட்டம் நமது ரசனை மிக்க வாழ்வை பொறாமை கொண்டு கெடுத்து விடாமல் இருப்பதற்க்கு என்ன செய்யலாம் என்று மெக்டவல்லின் பொன்னிற சிக்கன் வறுவலை சப்பிக் கொண்டே பேசுவோம்.
அல்லது இவர்கள் அணி சேருவதை தடுப்பதற்க்கான அனைத்து வழி வகைகளையும், ஜனநாயக முறைகளையும் மன்மோகன் சிங் பிரிட்டனில் பேசும் போது ஒத்துக் கொண்டதைப் போல நடைமுறைப்படுத்தி நமது ரசனைமிக்க களி வெறி வாழ்வின் உன்னத சுகங்களை கோக் கோலாவின் தில் மாங்கே மோர் சுவையுடன் சேர்ந்து ருசிப்போம்.
இடையில் நமது காட் பாதர்களான தரகு வர்க்க, பன்னாட்டு முதலாளிகள் நம்மை நட்டாற்றில் விட்டு விட்டு வேறு குறை கூலி தூர தேசங்களுக்கு தோணியேறிவிடாமல் இருப்பதற்க்கான பொறுப்பை எல்லாம் வல்ல இறைவனின் பாதங்களில் சமர்பித்து, சிறிது உற்சாக பானம் குடித்து இளைப்பாறுவோம்.
சுகமே சிறப்பு!
சக மனிதனோ பன்றி!
துன்பங்கள் வரும் பொழுது உ.பாவும் க.பாவும் துணை!
சமுகமோ அரிப்பை சொறிய நல்லதொரு சொறி கட்டை!
வாழ்க ஏகாதிபத்திய தனிமனித நுகர்வு கலாச்சாரம்!
வளர்க நின் யுப்பியின் பண்பாட்டு புரட்சிகள்!
************
அசுரன்
உ.பா - உற்சாக பானம்
க.பா - கடவுள் பாராயணம்.
பின்குறிப்பு:சாய்நாத் தொடர்ந்து விவசாயிகள் பற்றிய கட்டுரைகள் எழுதி ஒரு கட்டத்தில் அது குறித்து மேட்டுக் குடி அறிவு ஜீவிகளிடம் ஒரு வெறுப்புணர்வு மெதுவே உருவாகத் துடங்கியதை உணர்ந்துதானொ என்னவோ(இது எனது அனுமானம்), சந்தையின் அடிப்படை விதியான 'பழைய கள்ளாக இருந்தாலும் புதிய மொந்தையில் கொடு' என்பதின் அடிப்படையில். மக்கள் பிரச்சனை குறித்து வேறு வடிவங்களில் பேசும் நிர்ப்பந்தத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளாரோ என்று ஐய்யம் ஏற்ப்பட்டது. அவரது இந்த கட்டுரை முழுவதும் அமெரிக்க நாய்களின்(நிஜ நாய்) வசதி வாய்ப்புகள் குறித்து பேசுகிறார். கடைசிப் பேராவில் மக்கள் பிரச்சனையை பேசுகிறார். ஆயினும் நடுத்தர வர்க்கத்திடம் இந்த மேற் சொன்ன சலித்துக் கொள்ளும் உணர்வு(சிட்...) இருப்பதை நானும் உணர்ந்ததால் அதை கடுமையாக குத்திக் காட்ட வேண்டும் என்ற வேகத்தில் மேற்சொன்ன கட்டுரை வஞ்ச புகழ்ச்சி அணி பாணியில் எழுதியுள்ளேன்.
சாய்நாத்தின் கட்டுரை: http://www.hindu.com/2006/10/25/stories/2006102504411100.htm
14 பின்னூட்டங்கள்:
test
அசுரன்,
//சாய்நாத் என்பவர் வேலையத்துப் போய் இந்திய விவசாயிகளின் கஸ்டத்தை, அவர்களின்-இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை ஏகாதிபத்திய வேட்டைக்கு இரையாகியிருப்பதை பல்வேறு தொடர் கட்டுரைகள் மூலம் உலகறியச் செய்தவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்//
சாய்நாத்தின் "நாய்கள்" பற்றிய கட்டுரைக்கு தொடுப்பு கொடுத்திருந்தீர்கள். ஆனால் அவர் முன்னர் விவசாயப் பெருமக்களின் நிலைப்பற்றிய கட்டுரை(களு)க்கு தொடுப்பு கொடுத்தால் நலமாய் இருக்கும். ஏனெனில் நான் HINDU படிக்கும் பழக்கம் இல்லாதவன். நீங்கள் தொடுப்பு கொடுத்தால் அவற்றை படித்துவிட்டு மீண்டும் இங்கு வருகிறேன்
சபாபதி சரவணன்,
வருகைக்கு நன்றி,
பின் வரும் சுட்டியில் சாய்நாத்தின் பிற கட்டுரைகளை காணலாம்.
http://www.indiatogether.org/opinions/psainath/
அசுரன்
தோழர் அசுரன்,
சாய்நாத் கட்டுரைகள் படித்ததில்லை ஆனால் பெரும்பாலானோருக்கு இது நிகழ்கிறது..இதற்கு சலிப்பு காரணமாயிருக்கலாம் அல்லது வெறும் எழுத்துக்கள் மட்டும் மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற நினைப்பு தகர்ந்தது கூட
காரணமாயிருக்கலாம் என்று நினைக்கிறேன்..
//ஒரு சம்பவம் முதல் முறை நடக்கும் பொழுது அதிக கவனத்தை பெறுவதும் பிறகு போகப் போக இதெல்லாம் சகஜம்தானே பாஸ் என்று ஏற்றுக் கொள்வதும் விழிப்புணர்வற்ற சமூகத்தின் இயல்பு//
உண்மை..!!
//இந்த சமூகத்தின் முதுகெலும்பாய் இருந்து கூனிக் குறுகி தேய்ந்து போய் வயல்களில் தொலைந்த தனது வாழ்வை நகரங்களின் தெருக்களில் நாய்களுடன் நாயாக தங்கியிருந்து தேடிக் கொண்டிருக்கிறானே, அவனின் அன்றாடப் பிரச்சனைகள் குறித்து பேசுவதை விட கேலி கிண்டல் கேளிக்கைகள் பேசுவதில் அதிக ஆர்வமாக இருக்கும் சுரனையற்ற கூட்டத்தின் தடித்த தோல்கள் என்னை இவ்வாறு பேசச் சொல்கிறது//
அவை வெறும் தோல்கள் அல்ல - காண்டாமிருகத் தோல்கள்..
அசுரன்,
//நாயும் விவசாயியும் ஏறக்குறைய ஒன்னு. இது சும்மா பொழுது போகாம சொல்லவில்லை. வயிறெரிந்து சொல்கிறேன். பக்கத்தில் ஒரு பெரும்பான்மை வர்க்கத்தினன், சக மனிதர்கள் - இந்த சமூகத்தின் முதுகெலும்பாய் இருந்து கூனிக் குறுகி தேய்ந்து போய் வயல்களில் தொலைந்த தனது வாழ்வை நகரங்களின் தெருக்களில் நாய்களுடன் நாயாக தங்கியிருந்து தேடிக் கொண்டிருக்கிறானே, அவனின் அன்றாடப் பிரச்சனைகள் குறித்து பேசுவதை விட கேலி கிண்டல் கேளிக்கைகள் பேசுவதில் அதிக ஆர்வமாக இருக்கும் சுரனையற்ற கூட்டத்தின் தடித்த தோல்கள் என்னை இவ்வாறு பேசச் சொல்கிறது.
//
நேர்மையான, சரியான இன்றைய சமுகத்தின் நிலையை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
வர்க்க உணர்வற்றவர்களின் சமுக பார்வை கோணலானது தான் என்பது நிரூபணமாகி உள்ளது.
வருகை தந்து கருத்க்களை பின்னூட்டிய ராஜவனஜ் மற்றும் கரும்பலகைக்கு நன்றி,
அசுரன்
தோழர் அசுரன்,
நெசவாளர்களை
பட்டினி போடும் நாடு
நிர்வானத்தை நேசிக்கிறது...
என்று யாரோ சொன்ன நினைவு.. அப்படியானால்
விவசாயிகளை
பட்டினி போடும் நாடு?
என்றும் தோழமையுடன்,
ஒடுக்கப்பட்டவன்
//சாய்நாத் கட்டுரைகள் படித்ததில்லை ஆனால் பெரும்பாலானோருக்கு இது நிகழ்கிறது..இதற்கு சலிப்பு காரணமாயிருக்கலாம் அல்லது வெறும் எழுத்துக்கள் மட்டும் மாற்றங்களைக் கொண்டு வரும் என்ற நினைப்பு தகர்ந்தது கூட
காரணமாயிருக்கலாம் என்று நினைக்கிறேன்..
//
தோழர் ராஜவனஜ்,
உண்மையைச் சொன்னால் சாய்நாத் இந்தக் கட்டுரையை அமெரிக்க தனிமனித நுகர்வின் வக்கிரத்தை அம்பலப்படுத்தும் விதத்தில் திருக்குறளைப் போல நறுக்குத் தெறித்தாற் போலவே எழுதியுள்ளார். நான்தான் அதை போலி சமூக அக்கறையாளர்களை, தனிமனித கழிசடைப் பண்பாட்டுக்காரர்களை விமர்சனம் செய்ய பயன்படுத்திக் கொண்டேன். அவருக்கு நான் குறிப்பிட்டது போல எதுவும் உணர்வு(சலிப்பு அல்லது தனது கட்டுரைகளுக்கான சந்தையை இழந்ததாக ஒரு உணர்வு) நிகழ்ந்ததாகா தெரியவில்லை. ஒரு கற்பனையான தளத்தை உருவாக்கி அதில் இருந்து கொண்டு சில விசயங்களை பேசுவதற்க்காக நானே வலிந்து கூறியவைதான் அவையெல்லாம்.
சாய்நாத் கட்டுரைகள் குறித்து அப்படி ஒரு உணர்வு வெளியே ஓரளவு இருந்தது உண்மை ஆனால் அந்த உணர்வை அடித்து நகர்த்தும் வகையில் அவர் இரண்டு மாதத்திற்க்கு முன்பு ஒரு அருமையான கட்டுரை வெளியிட்டார்(அதற்க்குப் பிறகு ஒரு சொதப்பல் கட்டுரையாக காந்தியம் குறித்து எழுதினார் என்பது வேறு விசயம்). அதற்க்குப் பிறகு இந்த கட்டுரை சிறப்பானதாக அமைந்துள்ளது.

இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன். முழுமையாக படித்துவிட்டு மீண்டும் வருகிரேன்
வசந்த்
அசுரன்,
சாய்நாத் கட்டுரை பற்றிய கட்டுரைக்கும் சுட்டிக்கும் நன்றி.
நான் விவசாயிகள் பிரச்சனை பற்றி பலரிடமும் பேசி உள்ளேன். ஆரம்பம் முதல் முடிவு வரை அவர்களிடம் ஒரு சலிப்பு கலந்த வாதமே வெளி வந்தது. அதை மிகச் சுருக்கமாக சொன்னால்
* விவசாயிக்கு மட்டும்தான் பிரச்சனையா ? யாருக்குத்தான் இங்கு பிரச்சனை இல்லை.
* விவசாயிக்காவது கடனை தள்ளுபடி பன்னராங்க. நமக்கு கடன்காரன் வாசலுக்கு வந்துல்ல நிற்கரான்.
இப்படி பேசுபவர்களை என்னவென்று சொல்ல.... " விதர்ப்பா கிராமம் " என்றால் என்னவென்று தெரியாமலே இருப்பவர்கள் ஒருபுறம். தெரிந்து கொண்டே சற்றும் பனிதாபிமானமே இல்லாமல் இருப்பவர்கள் மறுபுறம்.
கடனை தள்ளுபடி செய்ததை போட்ட பத்திரிக்கைகள், விவசாயிகள் தற்கொலை செய்ததையும் போட்டிருந்தால் சிலருக்கேனும் தெரிந்திருக்கும். தயவு செய்து தெரிந்து என்ன பயன் என்று கேட்டு விடாதீர்கள். சொரணையற்ற சமூகத்தை தட்டி எழுப்ப செய்தி மட்டும் பத்தாது, மருதையன் அவர்களின் உரைவீச்சு வர வேண்டும் தலையங்கத்திற்குப் பதிலாக.
நன்றி

தோழர் ஒடுக்கப்பட்டவன்,
//விவசாயிகளை
பட்டினி போடும் நாடு?//
விவசாயிகளை பட்டினி போடும் நாடு புரட்சியை விரும்புகிறது :-))
இதை புரட்சி தவிர்க்க இயலாதது என்ற பொருளில் கூறுகிறேன்.
அசுரன்
வசந்த்,
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
//நான் விவசாயிகள் பிரச்சனை பற்றி பலரிடமும் பேசி உள்ளேன். ஆரம்பம் முதல் முடிவு வரை அவர்களிடம் ஒரு சலிப்பு கலந்த வாதமே வெளி வந்தது. அதை மிகச் சுருக்கமாக சொன்னால்
* விவசாயிக்கு மட்டும்தான் பிரச்சனையா ? யாருக்குத்தான் இங்கு பிரச்சனை இல்லை.
* விவசாயிக்காவது கடனை தள்ளுபடி பன்னராங்க. நமக்கு கடன்காரன் வாசலுக்கு வந்துல்ல நிற்கரான்.
//
ஆம், உண்மைதான். விசயம் என்னவென்றால் பெரும்பாலனவர்கள் அவர்களது சொந்த பிரச்சனையிலிருந்து அது எப்படி நாட்டின் இதர பிரச்சனைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது, அது எப்படி விவசாயி, தொழிலாளி, மாணவர், தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்கள், பிற உலகமய நடுத்தர வர்க்க குஞ்சுகள் இவர்களின் பிரச்சனைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது என்று விளக்கும் பொழுது ஆர்வமடைகிறார்கள்.
//
இப்படி பேசுபவர்களை என்னவென்று சொல்ல.... " விதர்ப்பா கிராமம் " என்றால் என்னவென்று தெரியாமலே இருப்பவர்கள் ஒருபுறம். தெரிந்து கொண்டே சற்றும் பனிதாபிமானமே இல்லாமல் இருப்பவர்கள் மறுபுறம்.
//
இந்த ஏகாதிபத்திய பொருளாதாரமானது வர்க்க பிளவுகளை கூர்மையாக்குகிறது. தி.க எனும் போலி சுயமரியாதைக் கட்சி இன்றூ சுயமரியாதை இழந்து தரகு வர்க்க அரசியல் கட்சியாக சீரழிந்து MNCக்களுக்கு சேவை செய்கிறது எனில் அது இந்த சமூக இயங்கியலின் விதி. ஆக, விரைவில் இந்த வர்க்கத்தினர்(ஏற்கனவே பரவலான ஒரு விழிப்புணர்வு ஆரம்பமாகியுள்ளது) பெரிய விழிப்புணர்வை பெறுவார்கள். அதற்க்கு கட்டியம் கூறும் வகையில்தான் இந்த வலைப்பூ உலக அனுபவமும் உள்ளது.
//
கடனை தள்ளுபடி செய்ததை போட்ட பத்திரிக்கைகள், விவசாயிகள் தற்கொலை செய்ததையும் போட்டிருந்தால் சிலருக்கேனும் தெரிந்திருக்கும். தயவு செய்து தெரிந்து என்ன பயன் என்று கேட்டு விடாதீர்கள். சொரணையற்ற சமூகத்தை தட்டி எழுப்ப செய்தி மட்டும் பத்தாது, மருதையன் அவர்களின் உரைவீச்சு வர வேண்டும் தலையங்கத்திற்குப் பதிலாக.
//
ஆம், இது உண்மைதான். மக்களை தட்டியெழுப்பி அவர்களின் பிரச்சனைகளை அவர்களே சொந்தமாக தீர்த்துக் கொள்ள உத்வேகப்படுத்தும் எழுத்துக்களுக்கு வெகு சன ஊடகங்களில் ஏது இடம்? இதை உடைத்தெறியும் வகையில் மாற்று புரட்சிகர ஊடகங்களை வெகு சன ஊடகங்களாக வளர்த்தெடுக்க வேண்டிய கடமை உள்ளது. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் (நீங்கள் குறிப்பிட்ட மருதையன் சார்ந்த அமைப்பின் பத்திரிக்கை), RUPE, Monthly Reveiw பத்திரிக்கைகளை ஆதரித்து வளர்த்தெடுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
அசுரன்
Post a Comment