TerrorisminFocus

Thursday, July 12, 2007

ராமதாஸும், கருணாநிதியும் பிணங்களிலும் புரட்சி செய்வர்!

ந்திய தேசிய பார்ப்னியத்தின் பலத்தில் வன்முறை செலுத்தும் கருணாநிதி என்கிற தரகு தாத்தாவும், ராமதாஸ் என்கிற தரகு மாமாவும் புலிகளுக்கு ஆதரவாக என்ன்விதமான நடவடிக்கை எடுக்கீறார்கள்?

ஒன்றும் கிடையாது.

சரி தனி தமிழ் தேசியத்திற்க்கான என்ன விதமான நடவடிக்கை எடுக்கிறார்கள். ஒன்றும் கிடையாது.

சரி தமிழ் தேசியத்தை வடக்கு தெற்கு என்று பிரிக்க கோரிக்கை வைத்த ராமதாஸின் அரசியல் தந்திரம் என்ன வகையீனம்? ஒருவேளை வன்னிய தேசம் என்று புதிதாக எதையும் வரலாற்றில் நுழைக்கும் எண்ணம் உள்ளதோ?

அன்புமணி Alias துன்பமணி உள்ளிட்டவர்கள் மத்தியில் உட்கார்ந்து கொண்டு குழலி எதிர்க்கும் அதே இந்திய தேசியத்தை வலுப்படுத்துவதுடன் அல்லாமல் தனித் தமிழீழத்தின் இருப்பை கேள்விக் குள்ளாக்கும் சிங்கள் இன வெறி அரசிற்க்கு ஆயுத உதவி செய்வதையும் வலுப்படுத்துகிறார்கள்.

கூரை ஏறி கோழி பிடிக்க இயலாத இவர்கள்தான் கோபுரம் ஏறி வைகுண்டத்தை அடைவதற்க்கு வழி சொல்கிறார்களாம்.

சரி நண்பர்களே உங்களிடம் ஒரேயொரு கேள்வி கேட்க்கிறோம், உங்கள் பாணியிலேயே.

நீங்கள் குறிப்பிடும் 'தனித் தமிழ் தேசியம்', 'இந்திய பார்ப்ப்னிய தேசிய எதிர்ப்பு' இவற்றிற்கு எதிராக பல்லக்கு தூக்கும் ராமதாஸ், கருணாநிதி முதலான துரோகிகளை துரோகிகள் என்று ஒத்துக் கொள்வீர்களா?

ஆம், இல்லை என்று ஒரு வரியில் பதில் சொல்லுங்கள் சுயமரியாதை (அப்படி ஒன்று இருந்தால்) சிங்கங்களே :-))

அப்புறம் பிளிறுங்கள் நச்சென்று வேளங்களாய் - கொட்டையை நசுக்கி விட்டோம் என்று.

வெறுமே தனித் தேசியம் எனது லட்சியம் என்று சொல்லிக் கொண்டு, இந்திய பார்ப்ப்னியம் நிச்சயம் என்பதை நடைமுறையில் கொண்டு, சொல்லுக்கும் செயலுக்கும் வெறுபாடுடன் துரோகம் செய்வதை சமரசம் அல்லது சாணக்கியத்தனம் என்று நண்பர்கள் சொல்லுவார்கள்.

இவர்களின் தனித் தமிழீழம் கடைசியில் ஈழத்தை ஏகாதிபத்தியங்களுக்கு திறந்து விடுவதில் கொண்டு போய் விட்டுள்ளதே அந்த மர்மம் குறித்தும் அலாதியான மௌனம் சாதிப்பார்கள் அட்டை கத்தி சூரர்கள்.

ஒருவேளை அமெரிக்க தேசியம் இவர்களின் கொள்ளுத் தாத்தா வழி உறவோ?

என்னவோ போங்க... சுயமாரியாதை, நேர்மை, கள்ள மௌனம் இவையெல்லாம் பிறரிடம் இருக்கும் பார்ப்ப்னியத்தை எதிர்ர்கும் போது மட்டும்தான் ஞாபகத்துக்கு வந்து விமர்சிப்பர் போலும், தம்மிடமே ஒளிந்து கொண்டு வேலையை காட்டும் பார்ப்னியத்தை சுட்டிக் காட்டினால் நண்பர்களின் அகராதியிலிருந்து மேற்சொன்ன வார்த்தைகள் ஓடி ஒளிந்து கொள்கின்றன.

அசுரன்


Related Article:

ம.க.இ.கவின் நிலைப்பாடு என்பது சர்வாதேசியமே

மக்கள் தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய கருணா என்ற பாசிச கூலிக்கும்பல் அல்ல

"புரளி பேசும் போலி தமிழ தேசியவாதிகள்"

26 பின்னூட்டங்கள்:

said...

குழலிக்கு இட்ட பின்னூட்டத்தின் நகல்:

அடேங்கப்பா...வைக்கோ எனும் அசிங்கம் சிறையில் கிடந்ததே...அது பன்னி மாதிரி மேடைகளில் உறுமியதைத் தவிர ஈழத்துக்கு என்ன செய்தது?

பிரபாகரன் படம் போட்ட கொஞ்சம் டீ சர்ட் வித்ததை தவிர?

சவடால் அடிக்கும் இந்தப் புலி பாராளுமன்றத்தில் அனல் பறக்க பேசியதைத் தவிர என்ன புடுங்கியது?

குறைந்தது எல்.டி.டி.ஈ. மீதான தடையை பின்வாங்குமாறாவது செய்ததா?

6 ஆண்டுகாலம் வாசுபாயியுடன் உருண்டு புரண்டதுதானே வைக்கோ... அப்போது அது ஈழத்துக்கு ஆற்றிய அரும்பணி என்ன?

கைதட்டலுக்காக சும்மா சவடால் பேசும் இவர்களை என்னமோ ஈழத்துக்காகப் போராடுவது மாதிரி காட்டுவதே பித்தலாட்டம்தான்.

அனானி

said...

ஏன் எடுக்கவில்லை?

தமிழ்த் தீவிரவாதத்தைப் பேசுவோர் மீதும் பரப்புவோர் மீதும் நடவடிக்கை எடுக்க கியூ பிராஞ்சை இந்திய நாட்டிலே முதன் முதலாக ஆரம்பித்தது கழக ஆட்சியிலேதான்!

குட்டிமணியைக் கைது செய்து சிங்களப் போலீசாரிடம் ஒப்படைத்ததும் கழக ஆட்சியிலேதான்!

தமிழர் வாழ்வுரிமை மாநாடு போட்ட நெடுமாறனைக் கம்பி எண்ண வைத்ததும் கழக ஆட்சியிலேதான்.

வி.புலிகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்து சிறையில் தள்ளியதும் கழக ஆட்சியிலேதான்.. அப்போது என்னுடன் இருந்த அருமைத்தம்பி வைக்கோவும் அமைதியாகத்தான் இதைக்கண்டும் காணாமலும் இருந்தார்..

தனித்திராவிடத்தை சுடுகாட்டுக்கு அனுப்பிய அண்ணன் வழி வந்த நாம் மாநில சுயாட்சியின் மண்டை ஓட்டை எரிப்பதுதானே அண்ணாவின் தம்பிக்கு அடையாளம்!

தட்சிணாமூர்த்தி என்ற முத்துவேல் கருணாநிதி...சாட்சி..தியாகராஜ சுந்தரம் அய்யர் என்ற முரசொலி மாறன்.

said...

நீங்கள் குறிப்பிடும் 'தனித் தமிழ் தேசியம்', 'இந்திய பார்ப்ப்னிய தேசிய எதிர்ப்பு' இவற்றிற்கு எதிராக பல்லக்கு தூக்கும் ராமதாஸ், கருணாநிதி முதலான துரோகிகளை துரோகிகள் என்று ஒத்துக் கொள்வீர்களா?

ஆம், இல்லை என்று ஒரு வரியில் பதில் சொல்லுங்கள் சுயமரியாதை (அப்படி ஒன்று இருந்தால்) சிங்கங்களே :-))


இதுதான் ஹைலைட்டே!! ஹா ஹா ஹா ஹா..

ஸ்டாலின்

said...

வர்க்க பார்வையற்றவர்கலால் முன்னெடுக்கப்படும் போலித்தனமான போராட்டங்கள் இறுதியாக எந்த முட்டுச் சந்தில் முட்டிக்கொண்டு நிற்க்கும் என்பதை 60 ஆண்டு கால தமிழக அரசியலிலிருந்தும் தரகு தாத்தா கருனானித்யிடமிருந்துமே போதும் போதும் என்கிற அளவுக்கு தமிழக மக்கள் பாடம் கற்றிருப்பதாகவே நான் நினைகிறேன்

என்னை கேட்டால் சிங்கள பேரினவாதிகலால் ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களை விட தமிழக அரசியல் வியாதிகலை நம்பி ஒரு குறைந்தபட்ச வாழ்வியலை எதிர்பார்த்து,மறுக்கப்பட்டு நகரங்கலின் மூலைகலில் ஒதுங்கி கனவுகளையும் ஏக்கங்களயும் மட்டும் சுமந்து மடிந்த மனித உயிர்கள் அதிகமிருக்கும்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முனையும் எவனும்(ராமதாஸ்)ஆரம்ப கட்டங்கலில் காட்டும் சித்து வேலைகலின் போலித்தனத்தை உடனுக்குடன் அம்பலப்படுத்தாவிட்டால் தமிழகத்துக்கு இனியொரு கருனானிதி நிச்சயம்

துரோகிகளா ... முதலில் அவர்கள் மனிதர்கல்தான் என்பதை உறுதிபடுத்திக்கொல்லுங்கள்

said...

இலங்கையில் சுரண்டுவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கும் குழலிக்கு, சுரண்டல் என்பதன் பல பரிமாணங்களை விளக்கி ஆகவேண்டும் போலுள்ளது.சுரண்டல் என்றால் ஒரு பன்னாட்டு கம்பெனி வந்திறங்கி 400 ஏக்கருக்கு பூமியை தோண்டி நிலக்கரியை அள்ளிக்கொண்டு செல்வது மட்டும்தான் எனச் சிலர் புரிந்து வைத்துள்ளார்கள்.இலங்கையின் கால் நடை வளர்ப்பையும் மொத்த பால் உற்பத்தியையும், முடக்கி விட்டு நெஸ்லே பால் பவுடர் உள்ளிறங்கி அடிமைப்படுத்துவதும் சுரண்டல்தான்.என்.டி.பி.சி. எனும் இந்திய நிறுவனம் அங்கு போய் அனல் மின் நிலையம் அமைத்து ஈழத்துக்கு யூனிட்டுக்கு இவ்வளவு தொகை என மின்விநியோகம் செய்வதும் தேசம் கடந்த சுரண்டல்தான்.இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன் அந்நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் விநியோகத்தைக் கைப்பற்றி ஏகபோகமாவதும் சுரண்டல்தான்.செல்போன் சேவை, விவசாய அபிவிருத்தி சேவை என எண்ணிலடங்கா சுரண்டல்களும் உள்ளன.ஏகாதிபத்தியத்தின் குறியீடான கோக்கும், ஆயத்த ஆடைகளும், மற்றும் பல்விதமான எலெக்றானிக் சாதனங்களும் விற்க ஈழம் போன்ற பரந்த சந்தையும் ஏகாதிபத்தியத்துக்கு தேவை.அவர்கள் (மேலை தேசத்தினர்) ஓய்வெடுத்து குஷியாய் இருக்க பீச் ரிசார்ட்டுகள் அமைக்க இலங்கையின் கடற்கரையில் மூன்றில் இரண்டு பங்கை வைத்திருக்கும் புலிகளின் ஒத்துழைப்பு அவர்களுக்கு தேவை.இருக்கவே இருக்கு..போரினால் நாசமடைந்த ஈழத்தை மறுசீரமைப்பு செய்கிறோம் என்று உள்ளே இறங்கி..அதன்பேரில் தரப்பட இருக்கும் பில்லியன் டாலர்கள் கடனை முடிவின்றி வட்டியாக வசூலிக்க..


குழலிக்கு புரிகிறதா?

************

தமிழ்த் தேசியம் பேசும் தலைவர்கள், குறைந்தபட்சம் தங்கள் கொள்கைகளுக்காவது விசுவாசமாக இருக்கிறார்களா?முதலில் தமிழ்வழிக் கல்வியை எடுத்துக் கொள்வோம்.5ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப்பாடமாக்கு எனக்கோரி தமிழ்ச்சான்றோர் பேரவை உண்ணாநோன்பு இருந்தது.

அதன் நிறுவனர் நா.அருணாசலமோ தன் பேரனை ஊட்டியில் உள்ள தமிழே சொல்லித்தரப்படாத உயர்தர கான்வெண்ட் ஒன்றில் படிக்க வைத்துள்ளார். பெயர்த்தியையும் மெட்ரிகுலேசனில்தான் படிக்க வைத்துள்ளார்.ராமதாசின் பேரன் (அன்புமணியின் மகன்) தில்லியில் 8 தமிழ்ப்பள்ளிகள் இருந்தும் இந்தி,இங்கிலீசு பள்ளியில்தான் படிக்கிறான்.வீரமணி கும்பலைக் கேட்கவே வேண்டாம்.. 'பெரியார் தமிழை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காட்டுமிராண்டி மொழி' என்று சொன்ன கருத்து, வீரமணி மெட்ரிகுலேசன் வியாபாரம் நடத்த உதவுகிறது..தமிழ் தேசியம் பேசும் பலரின் வீட்டுக்குள் தமிழே வாசிக்கத் தெரியாது என்பதுதான் உண்மை.மெற்றிகுலேசன் பள்ளிகளின் சங்கத்தலைவர் மதிமுக காரர். ஆனால் கட்சியில் பேசுவது தமிழ் ஈழம்..தமிழ் தேசியம்..திமுகவில் சற்குணம்,பூங்கோதை ஆலடி அருணா, கீதா ஜீவன் என ஆரம்பித்து வட்டச்செயலாளர் வரை தமிழை ஒழிக்கும் பணியை செம்மையாகச் செய்து வருகின்றனர்.தமிழ்தேசிய தலைவர்களில் பலரும் இட ஒதுக்கீட்டுக்கொள்கையை ஆதரிப்பவர்கள்தான்.அவர்கள், "தமிழ் வழிக்கல்வியில் +2 முடிப்பவர்களுக்கு அவர்களின் விகிதாச்சார அடிப்படையில் மருத்துவம்,பொறியியல் கல்வியிலும் அரசு வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வேண்டும்" எனக் குரல் கொடுப்பார்களா? மாட்டார்கள்.. ஏனெனில் அதனால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் அவர்கள் குடும்பங்களாகவே பெரும்பாலும் இருக்கும். கர்நாடக மாநிலத்தில் இம்மாதிரியான இட ஒதுக்கீடு ஏற்கெனவே இருக்கிறது. தமிழ்நாட்டில் இதனை முதல் முதலாக எதிர்ப்பவர் மாமா வீரமணியாகத்தான் இருப்பார். ஏனெனில் திக வில் 99% பேரின் குழந்தைகளுக்கு தமிழ் அவ்வளவாக வாசிக்க வராது...வாசிக்கவே ஆளில்லாத வீடுகளுக்கு விடுதலை பேப்பர் வரும் என்பது முரண் நகைதான்.தமிழ்வழிக் கல்வியின் சீரழிவு மறுகாலனி ஆதிக்கத்துடன் நேரடி சம்பந்தப்பட்டது..காலனி ஆதிக்கத்தை வீழ்த்தாமல் தாய்மொழி வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை எத்தனை தமிழ்த் தேசியர்கள் புரிந்திருக்கிறார்கள்?


புல்டோசர்

said...

குழலியினுடைய அரைவேக்காட்டு வாதங்களுக்கும், இட்டுக் கட்டப்பட்ட அவதூறுகளுக்கும் முந்தைய பதிவில் தாங்கள் பொறுமையோடு பதில் சொல்லியிருக்கிறீர்கள். அதனை புரளி என தாங்கள் வரையறுத்திருப்பது சரியானது.பல விசயங்களில் அந்தப் புரளிகளை ஆக்கப்பூர்வமான முறையில் நீங்கள்தான் அணுகி,
பதிவிலும், பின்னூட்டங்களிலும் பதில் சொல்லியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்!

//மக்கள் போர் படை (PWG) கணபதி போன்றவர்கள் மகஇக தலைமையை இந்திய ஏஜென்சிகளின் கையாட்கள் என்றே விமர்சித்துள்ளதாகவும் அதற்கான காரணங்களையும் சொல்லியிருப்பதாகவும் படித்திருக்கிறேன், அது தொடர்பான கட்டுரைகள் எங்கேயாவது கிடைக்கிறதா என்று நண்பர்களிடம் கேட்டுள்ளேன்.//

மேற்குறிப்பிட்ட பத்திதான் குழலியின் உச்சகட்ட உளறல். அவருக்கு அத்தகைய 'காணக்கிடைக்காத ஆதாரங்களை', அவரது நண்பர்கள்(பாசத்துக்குரிய கிளிப்பிள்ளை சந்திப்பு, மேதாவி அரவிந்தன் ஆகியோர் போன்ற 'உண்மை' ஆதாரங்களோடு உலவும் ஆய்வாளர்களோ..?)வழங்குவதற்கு ரொம்ப நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் போலிருக்கிறதே!

said...

ராமதாசின் பேரன் (அன்புமணியின் மகன்) தில்லியில் 8 தமிழ்ப்பள்ளிகள் இருந்தும் இந்தி,இங்கிலீசு பள்ளியில்தான் படிக்கிறான்.//வீரமணி கும்பலைக் கேட்கவே வேண்டாம்.. 'பெரியார் தமிழை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காட்டுமிராண்டி மொழி' என்று சொன்ன கருத்து, வீரமணி மெட்ரிகுலேசன் வியாபாரம் நடத்த உதவுகிறது..//

அசுரன் அய்யா,
எனக்கு நம்ம கட்சியோட கொள்கை என்ன என்பதில் திடீர்னு கொஞ்சம் சந்தேகம் வந்து விட்டது.
நாம முதலில் ஒழிக்க வேண்டியது
எது?
அமெரிக்க ஏகாதிபத்திய பார்ப்பனீய முதலாளித்துவமா?இந்திய மறுகாலனி ஆதிக்க பார்ப்பனீயமா?தரகு முதலாளித்துவ மஞ்சதுண்டு திராவிட பார்ப்பனீயமா,இல்லை மரம்வெட்டி அய்யா செய்யும் தரகு அடிவருடி மாமா பார்ப்பனீயமா?கொஞ்சம் குழப்பமா இருக்கு.இதுக்கு செம்மையா கொஞ்சம் கொள்கை விளக்கம் கொடுத்தீங்கன்னா முழுமூச்சோடு கட்சிப் பணி ஆற்ற முடியும்.

said...

அசுரரே, இதத்தான் கைகாட்டும் உத்தி என்று பெயர். நீங்கள் தெளிவா என்றால் அவன் தெளிவா, இவன் தெளிவா என்று மற்றவனை காட்டி தப்பிக்கும் உத்தி! ஈழத்தில் நடந்தது வர்க்கப் படுகொலை. அதன்எதிர்வினையாக ஆயிரம் ஆயிரம் மக்கள் துவக்குகளை எதிர்கொண்டு போராடுவது அமெரிக்க ஏகதிபத்தியத்தின் பால்பவுடர்களை விற்பதற்கு உதவுவதற்காகவே... போதுமா! சந்தோசமா? மயிர் கூச்சறிக்கிறது தங்கள் வாதஙகளை பார்த்து!

said...

அசுரன்,

மாவோவின் எழுத்துக்களை படித்துக் கொண்டிருக்கிறேன். சீன விடுதலைப் போரின் போது மக்களை பல குழுக்களாக அடையாளம் பிரித்து எந்தப் பிரிவு புரட்சிக்கு ஆதரவளிக்கும், எந்தப் பிரிவு தலைமை தாங்கும், எந்தப் பிரிவு ஊசலாடும், எந்தப் பிரிவு எதிர்க்கும் என்று அழகாக அலசுகிறார்.

இன்றைய சூழலில் இந்தியாவில் எந்த மாதிரி குழுக்கள் இருக்கின்றன? இந்தியாவில் எந்த மாதிரியான புரட்சி வரும்? பல்வேறு குழுக்களை எப்படி ஒருங்கிணைத்துப் போகத் திட்டம் இருக்கிறது?

புரியும்படி சுருக்கமாக விளக்கினால் மகிழ்வேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

பிகு: கடந்த ஒரு மாதமாக நீங்கள் புரியும் விவாதங்கள் பெரிதும் நிரடுகின்றன, குழலியுடனான இந்த விவாதமும் சேர்த்து.

said...

// ஆம், இல்லை என்று ஒரு வரியில் பதில் சொல்லுங்கள் சுயமரியாதை (அப்படி ஒன்று இருந்தால்) சிங்கங்களே :-))

அப்புறம் பிளிறுங்கள் நச்சென்று வேளங்களாய் - கொட்டையை நசுக்கி விட்டோம் என்று.
///

நாங்க இதே மாதிரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியலதானே?
அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு போங்க

நெருப்பு

said...

மா சி,

மாவோ வர்க்கமாகத்தான் பிரித்தார், குழுக்களாக பிரிக்கவில்ல்லை. ஒருவேளை மாவோவினுடைய ஏதேனும் குறிப்பான புத்தகத்தில் சீன கட்சிகள் குறித்த அவரது கருத்தை உள்வாங்கிச் சொல்கிறீர்கள் என்று கருதுகிறேன்.

வர்க்க அடிப்படையில் கட்சிகளை வகை பிரிப்பதை ஒவ்வொரு முறையும் விளக்கிக் கொண்டிருக்க இயலாது என்பதால் கட்சி என்ற அளவிலேயே எழுதியிருந்திருப்பார் மாவோ.

மாவோவின் மார்க்ஸிய முன்னெடுப்பு என்பது, லெனினினுடைய ஏகாதிபத்திய வரலாற்று காலக்கட்டத்திற்க்கான மார்க்ஸிய ஆய்வின் தொடர்ச்சியாக இருந்தது.

சீனா அல்லது அது போன்ற காலனிய நாடுகள் எல்லாமே தமது நிலபிரபுத்துவ உற்பத்தி முறைகளை ஒரு பக்கம் பிரதான தொழில் உற்பத்தி முறையாக கொண்டிருந்தன(சிதறிய உற்பத்தி). அதே நேரத்தில் உள்நாட்டு முதலாளித்துவம் வளர்ந்து பரிணமிப்பதை தடுத்து ஏகாதிபத்திய மூலதனம் இணையாக சுரண்டி வந்தது/வருகிறது.

தேசிய முதலாளித்துவம் என்று ஏதேனும் ஒன்று இது போன்ற நாடுகளீல் இருந்தால் அது மிகப் பெரும்பான்மையாக ஏகாதிபத்திய நிறுவனங்களின் தேவைக்கான சிறு உறப்த்தி என்ற அளவிலேயே இருக்கிறது. சில குறிப்பான விதி விலக்குகள் தவிர்த்து.

இது தவிர்த்து ஏகாதிபத்தியம் உள்நாட்டில் ஏற்கனவே அதிகாரத்தில் உள்ள வர்க்கங்களுடன் கூட்டுச் சேர்ந்தும் நிறுவனங்கள் நடத்தும். இந்த அதிகார வர்க்கம் தரகு வர்க்கம் எனப்படுகிறது.

தேசிய முதலாளியையும், தரகு முத்லாளீயையும் பிரித்துக் காட்டுவது எது?

ஏகாதிபத்திய மூலதனத்தை இந்தியாவில் சுரண்டுவதற்க்கு அனுமதிப்பவனே தரகு முதலாளி, உள்நாட்டு மூலதனத்தை பயன்படுத்துபவன் தேசிய முத்லாளீ.

இந்திய நிறுவனங்கள் எல்லாம் பன்னாட்டு கம்பேனிகளாக மாறிவிட்டன எனவே இந்தியாவில் தரகு முதலாளி என்ற ஒருவன் இல்லை என்று சமீபத்தில் சிலர் பேசுகிறார்கள். அவர்கள் கவனிக்க தவறும் விசயம் இந்த ஏகாதிபத்திய மூலதனம் என்கிற அம்சம்.

அதாவது ஏகாதிபத்திய நாடுகள் எல்லாமே தமது உலக சுரண்டலை தமது வலுவான நிதி மூலதன் வலைப்பின்னல் மூலமே சாதிக்கின்றனர். ஆசியன் டெவெலெப்மெண்ட வங்கி, உலக வங்கி, JP மார்கன், ஆஸ்திரேலிய வங்கிகள் முதல் இப்படி நீதி மூலதன் மேலாதிக்கம் என்பது அவர்களீன் கையில்தான் உள்ளது. இந்த நிதியை நக்கிப் பிழைப்பவ்ர்கள்தான் இந்திய தரகு முதலாளிகளான TCS, ITC, அம்பானி கும்பல் எல்லாம்.

இந்தியா போன்ற காலனி நாடுகளீன் மிகப் பெரிய உழைப்பு வளத்தை உபயோகப்படுத்தும் அளவுக்கு ஏகாதிபத்தியத்திற்க்கு தேவை இல்லை. எனவே பெரும்பான்மை உழைப்பு சக்தி வேலையின்றி அல்லது அரைகுறை வேலையில் வீணாகிறது. இப்படி உருவாகும் வர்க்கமே உதிரிப் பாட்டாளி வர்க்கம். அமைப்பு ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சாலை பாட்டாளியை விட இந்தியா போன்ற காலனிய நாடுகளில் உதிரி பாட்டாளிகள் மிக மிக அதிகமாகவெ இருப்பர். ஏனேனில் இது ஏகாதிபத்திய சுரண்டல் பொருளாதாரத்தின் தவிர்க்க இயலாத விளைவு.

ஆக, இப்பொழுது நம்முடைய கையில் எத்தனை வர்க்கங்கள் உள்ளன?

#1) நிலபிரபுத்துவ வர்க்கம் - (மூப்பனார், சங்கராச்சாரி, நிலவுடைமை மத நிறுவனங்கள்) இவற்றின் பிரதிநிதிகளாக BJP, காங்கிரஸ், அதிமுக, பாமக, JDS, சில இஸ்லாமிய, கிறுத்துவ அமைப்புகள், ஆதிக்க சாதி நிறுவனங்கள் போன்றவை.

#2) விவசாயிகள் - கூலி விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், பணக்கார விவசாயிகள். (விவசாய சங்கங்கள், தலித் இயக்கங்கள்)

#3) பாட்டாளி - கம்யுனிஸ்டு அமைப்புகள், ஜனநாயக அமைப்புகள்

#4) உதிரி பாட்டாளி - அமைப்பு ரீதியாக எனில் கம்யுனிஸ்டு அமைப்புகளில்தான் அதிகம் உள்ளனர். மற்றபடி தரகு வர்க்க அமைப்புகளீன் அடியாட்களாக, தொண்டர்களாக சீரழிக்கப்படுகிறார்கள்.

#5) குட்டி முதலாளி - டெய்லர் கடை, மளிகை கடை, ப்ரௌசிங் சென்டர், விஞ்ஞானி, மாணவர்கள், வங்கி ஊழியர்.

#6) தேசிய முத்லாளி - சிறு பட்டறை முதலாளீ, ஒரளவு பெரிய நிறுவனங்களீன் முதலாளி - சக்தி மசாலா, திருப்பூர் பனியன் கம்பேனி முதலாளிகள். (வியாபாரிகள் சங்கம், பெரியாரிய இயக்கங்கள், தேசிய உரிமை இயக்கங்கள்)

#7) தரகு முதலாளி - பன்னாட்டு கூட்டு நிறுவனங்க்ள் என்ற அடிப்படை கொண்டது, அல்லது முன்னாள் தேசிய முதலாளி நிறுவனமாக இருந்து இன்று பன்னாட்டு மூலதனத்துடன் உறவாடுவதாக மாறியிருப்பது. - TCS, ITC, அம்பானி, பார்த்தி (திமுக, திக, CPM)


இதுதான் விசயம். ஒரு கட்சியினுடைய சொல் அல்ல அதனுடைய செயலே அது எந்த வர்க்கத்தின் பிரதிநிதி என்பதை தீர்மானிக்க உதவுகீறது. தேசிய உரிமை என்ற பெயரிலான அமைப்பு உண்மையில் பல இடங்களில் நிலபிரபுத்துவத்திற்க்கு சேவை செய்கிறது(எ-கா: கர்நாடகா).

அதே போல தரகு வர்க்கமும், ஏகாதிபத்தியமும், பார்ப்ப்னிய-நிபியும் தனது தேவைக்காக இந்தியவிலுள்ள பல்வேறு வர்க்கங்களின் கோரிக்கைகளை நிறுவனமாக்கி அழிக்கும். எனவே ஒரு கட்சியினுடைய சொல் அல்ல மாறாக செயல்பாடே இங்கு பரிசீலிக்கப்பட வேண்டும்.

இந்த அம்சத்தில் விரிவான விவாதம் இங்கு வேண்டாம்.

மற்றபடி இந்த கட்டுரை பேசும் விசயம் குறித்து விரிவாக பேச் ஆவலுடன் உள்ளேன்.

அசுரன்

said...

குழலிக்கு பேச்சு வரவில்லை ,

அவர் அமைதியாகிவிட்டார் எனவே
அவரை தாக்கவேணாம் தோழர் .

எதோ ஒரு உந்துதலில் கேள்வி கேட்க ஆரம்பிச்சார் .

பதில் வந்த உடன் ருமாங்கத அய்யர்னு
கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே சொல்லிகிட்டு இருக்கார் .

சரி விடுங்க

said...

//நாங்க இதே மாதிரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியலதானே?
அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு போங்க//

நெருப்பு இப்படி சொல்லியுள்ளார்,

ஆனால் உண்மையென்னவென்றால் எமது நிலைப்பாட்டை வெகு தெளிவாக் ஆரம்பத்திலேயே அதாவது குழலி கேள்வி கேட்க்கும் முன்பே வைத்து அதன் மீது நானும் ஸ்டாலின் குரு என்ற தோழரும் விவாதித்து வருகிறோம்.

என்ன நெருப்பு, நமத்து போச்சி போலருக்கே :-))

இப்போவாவது குழலி உள்ளிட்டவர்கள் தமது நிலைப்பாட்டிற்க்கு நேர்மையாக பதில் சொல்வார்களா?

ஓசை செல்லா அவர்கள் ரொம்ப விசனப் பட்டு எழுதியுள்ளார் 'காட்டிக் கொடுப்பது' என்று.

துரோகிகளை மக்களுக்கு காட்டிக் கொடுப்பதில் எமக்கு சந்தோசமே.

மக்களில் ரசிகர்களும் இருப்பார்கள் அவர்கள் விசனப்படுவதில் விந்தையொன்றுமில்லை.

ஈழத்தின் பிரச்சனையில் இன்று பின்னி பிணைந்துள்ள சர்வதேச அரசியலின் சிக்கலை சொல்லு விதமாகவே வர்க்க சுரண்டலை நான் குறிப்பிட்டேன் உடனே இன வெறி என்கிற அம்சத்தை நான் மறுப்பதாக அவர்களே முடிவெடுத்து விட்டார்கள்.

வர்க்க பாரவையற்ற் ஈழப் போராட்டம் என்பது தமிழர்களை சிங்கள இன வெறி அடிமைத்தனத்திலிருந்து வேறு ஒரு அடிமைத் தனத்திற்க்கு பரிணாமிக்க செய்யும் என்ற அம்சத்தை சுட்டவே அப்படி குறிப்பிட்டேன்.

எளிய தர்க்கங்களைக் கூட உள்வாங்க மறுக்கும் ரசிக மனோபாவம் இந்த சிக்கலான தர்க்கத்தை உள்வாங்கும் என்று எதிர்பாரத்தது எனது தவறுதான்.

இன வெறிக்கு பதிலடி இன ரீதியாக அமைப்பு கட்டுவது, மத வெறிக்கு பதிலடி மத ரீதியான அமைப்பு கட்டுவது என்று இவர்களின் சுலபமான சித்தாந்த அடிப்படையில்லா தந்திரத்தை விரிவுபடுத்தி எல்லா இடத்திலும் செயல்படுத்தலாம.. என்ன விளைவுதான் நாம் எதிர்ப்பார்ப்பதாக இருக்காது.

உண்மை என்னவெனில் எந்த விதமான அடக்குமுறைக்கும், வெறிக்குமான பதிலடி என்பது ஜனநாயக சக்திகளின் கூட்டிணைவின் மூலம் செய்யப்பட வேண்டும். இந்த அம்சத்தில் புலிகள் செய்துள்ளது எல்லாம் ஜனநாயக சக்திகள் என்ற ஒன்றை இல்லாமல் ஒழித்துக்கட்டியதுதான்.

அசுரன்

said...

குழலிக்கு இடப்பட்ட இடுகையின் நகல்:

BC இல் இருந்து நீக்கப்பட வேண்டிய சாதிகளின் பட்டியல்:
1) Gavara, Gavarai and Vadugar(Vaduvar)(other than Kamma, Kapu,Balija and Reddi)
2) Gounder
3) Kongu Vellalars
4) Nadar
5) Nagaram
6) Reddy

--கணேசு..

said...

நேற்றுக்கு முதல் நாளே, இப்பின்னூட்டத்தை குறள்நெறிச் செல்வர் குழலியின்(நன்றி:ஸ்டாலின்) வலைப்பதிவில் இட்டேன். ஒரு வேளை சேகுவேரா சொல்லியிருப்பது போல், குழலி அமைதியாகி விட்டார் போலிருக்கிறது.

அங்கே இட்ட பின்னூட்டத்தின் நகல்:

ஆக மொத்தத்தில் அய்யா, தனிக்காட்டு ராஜாவாக்கும்? சரி, இப்படிப் பேசுவோம்.உமது 'சொந்த' அரசியலுக்காக இதுவரை நீங்கள் செய்திருக்கும், மக்களை அணிதிரட்டுவதற்கான அரசியல் செயல்பாடுகள் என்ன?

ஈழப் பிரச்சினைக்கு தீர்வுப் புண்ணாக்கு வழங்கி விட்டு உங்கள் லாப்-டாப்பை தட்டிக் கொண்டிருப்பீர்களாக்கும்? இருபது வருடங்களுக்கும் மேலாக, புரட்சியே வாழ்க்கையாய், மக்களை சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சியாளர்களை எந்த ஆதாரமுமின்றி, அவர்களது வாழ்க்கை, நடைமுறை எதையும் கருத்தில் கொள்ளாமல், அவர்கள் பிறந்த சாதிக்காக 'சந்தேகம்' கொள்வீர்களாக்கும்?

உனது யோக்கியதை என்ன? அதை முதலில் சொல்.சும்மா கட்டுரை எழுதினேன், கவிதை எழுதினேன் என்றெல்லாம் கதையளக்கக் கூடாது. நிலைப்பாடுகள் மூளைக்குள் ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பதால் எதற்கும் பிரயோசனமில்லை. தெருவில் நின்று பேசிப் பார், பிறகு தெரியும் சேதி. ஈழப் பிரச்சினைக்காக உனது தீர்வையே முன்வைத்து தமிழகத்தில் பத்து பொதுக் கூட்டம் நடத்துவோம். வந்து பேசத் தயாரா?

said...

குழலியின் பதிவில் இட்ட பின்னூட்டத்தின் நகல்..

//உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டடீரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது.//

குழலி, இது தான் மோசடியென்பது. பார்ப்பனரல்லாத "தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோ ரும்" என்று சொல்வதன் மூலம் தலித், பழங்குடி, பிற்பட்டோ ர் எனப்படுவோர் அனைவரையும் ஒரே தட்டில் நிற்க வைக்க முடியாது. இங்கே பிற்பட்டோ ர் என்று வகைப் படுத்தப்பட்டுள்ள எல்லோரையும் ம.க.இ.க ஆண்ட பரம்பரையென்று சொல்லி நிராகரிக்கவில்லை. அவர்களுக்குள்ளும் சேவைச் சாதிகளாய் இருக்கும் குயவர், தச்சர், குரும்பர், வெள்ளாளர்களில் ஒரு சில வகையினரை இடஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்றே சொல்கிறார்கள். அதாவது இடஒதுக்கீடு அதன் முழுமையான பலன் யாருக்குச் செல்ல வேண்டுமோ அவர்களுக்கே செல்ல வேண்டும் என்பதே ம.க.இ.க நிலை.

இதில் உங்கள் மோசடி எங்கே வருகிறது? "பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டோ ர்" என்கிற வகையின் கீழ் ஆதிக்க சாதிகளான தேவர், மறவர், செட்டியார், வெள்ளாலக் கவுண்டர்கள், முதலியார்கள், நாயுடுக்கள், நாயக்கர்கள்.. இப்படி பண்ணெடுங்காலமாக பார்ப்பனியத்தின் செயல் வீரர்களாய் இருந்தவர்களையெல்லாம் ஒரே பட்டியலில் அடைப்பது என்பது எப்படி சரியானதாகும்? 1987 - 88 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படியே நாட்டில் உள்ள 77 சதவீத முற்பட்ட பிற்பட்ட சாதியினர் 83% நிலத்துக்கு உடைமையாளர்களாய் இருப்பது வெளிப்பட்டுள்ளது ( இதில் பார்ப்பனர்கள் உள்ளடங்கவில்லை )

இதற்கு நீங்கள் முன்னே வைத்த வாதம் என்ன?

//பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு ஆண்ட சாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ம க இ க தோழர்கள், சற்று யோசித்து பார்க்க வேண்டும், இடஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் சொல்வது இந்த ஆண்ட சாதிகள் எத்தனை சதவீத இடங்களை பிடித்துள்ளனர், பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர்களும் சுரண்டுபவர்கள் என்றால் பார்ப்பனர்களும் இவர்களும் இணையாகவோ அல்லது ஓரளவிற்காவது நிரம்பியிருக்க வேண்டுமே, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு முன் இவர்கள் நிரம்ப வில்லையே ஏன்?//

அரசுப் பணிகளில் அமரவோ, டாக்டர் போன்ற சேவைத் தொழிலில் இறங்க வேண்டிய கட்டாயமோ இந்தச் சாதிகளுக்கு 1800களின் பிற்பகுதி வரையில் எழவில்லை என்பது தான் உண்மை. கவுண்டர் தேவர் போன்ற சாதிகளெல்லாம் வரலாற்று ரீதியில் நிலவுடைமையாளர்களாவே இருந்து வந்துள்ளனர் ( பெருமளவிலோ, குறைந்தளவிலோ ).. இவர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. அப்படி இவர்களை ஒடுக்கியிருந்தால் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இந்த சாதியினர் பார்ப்பனர்களை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள். சமூகத்தில் பார்ப்பனர்கள் மேலே ஏறினார்கள் என்றால் அப்படி அவர்கள் மேலேயே உட்கார்ந்திருப்பதற்கான தேவை இவர்களுக்கும் இருந்தது. இவர்களுக்கும் கீழே அடக்கி ஒடுக்கப்பட்டு கடுமையாக சுரண்டப்பட்டு, நிலத்தின் மேல் ஆதிக்கம் இல்லாதிருந்த சாதிகளிடம் "பார் எனக்கு மேலே அவன் உனக்கு மேலே நான்" என்று நியாயப்படுத்துவதற்கு தேவையாய் இருந்தது.

அரசு வடிவம் மாறி ஆங்கிலக் கல்வியுள்ளவர்களுக்கு ( மாண்டேகு- சிம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் இரட்டை ஆட்சிமுறை ) அரசுப் பணி என்றும் அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் கிடைக்க ஆரம்பித்த புள்ளியில் தான் இவர்களுக்கும் அரசுப்பணியின் அவசியம் ஏற்பட்டது. அது நிராகரிக்கப்பட்டவனின் உரிமைக் குரல் அல்ல - மாறாக இது வரையில் இருந்த ஆதிக்கத்தை நிலை நிறுத்தியாக வேண்டியதன் கட்டாயத்தில் எழுந்ததே. உங்கள் மூலமான நீதிக் கட்சியின் நிறுவனர்கள் பழைய ஜமீந்தாரிகள், மன்னர்கள் என்பது நினைவிருக்கட்டும் ( பொப்பிலி மகாராஜா போல ).. இவர்கள் ஆரம்பத்திலேயே பெரியார் போல பகுத்தறிவு இயக்கம் நடத்தவோ பார்ப்பனிய எதிர்ப்பிலோ ஈடுபட்டிருக்கவில்லை.. மாறாக பார்ப்பனியத்தின் அத்துனை கூறுகளையும் உட்செறித்து மேலே வந்து விட முடியுமா என்கிற முயற்சியில் தான் ஈடுபட ஆரம்பித்தனர். ..

மேலும் நீங்கள் கேட்பது போல இடஒதுக்கீட்டுக்கு முன் இவர்கள் நிறம்பவில்லையே ஏன்? என்கிற கேள்வியே அப்போது எழவில்லை. இடஒதுக்கீடு அமுலான ஆரம்ப காலத்திலேயே அதன் பலன்களை அதிகம் சுருட்டிக் கொண்டதும் ( தமிழக அளவில் உதாரணம் தர முடியும் ) இந்த "பிற்படுத்தப் பட்டோ ர்" என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்ட ஆண்டைகள் தான்.

இவர்கள் அதிகாரத்திற்கு வந்த பின் 1927ம் ஆண்டே வகுப்புவாரி உரிமை என்னும் அரசானையின் படி தமக்கான உரிமையை நிலை நாட்டிக் கொண்டனர்.. இடஒதுக்கீடு அமுலான முதல் (20 ஆண்டுகளில் ஆண்டைகளும் நிலவுடைமையாளர்களும் தமது ஆதிக்கத்தை அரசு மட்டத்திலும் உறுதிப்படுத்திக் கொண்டனர். அதற்கு முன் - குறிப்பாக மாண்டேகு - சிம்ஸ்போர்ட் சீர்த்திருத்தங்களுக்கு முன் - இட ஒதுக்கீட்டுக்கான தேவை சாதி இந்துக்களுக்கு எழவே இல்லை.. ஏனெனில் அவர்கள் நிதர்சனத்தில் ஆதிக்க சாதிகளாகத் தான் இருந்தனர்.


இப்போது மீண்டும் உங்கள் பதிவுக்கு வந்தால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் - தமிழகத்தில் எல்லோருமே தங்களை ஆண்ட சாதிகள் என்று தான் பெருமையடித்துக் கொள்கிறார்கள் என்கிறீர்கள். இது பார்ப்பனியம் தோற்றுவித்த காரணிகளில் ஒன்று தான். எல்லோரும் தங்களை ஆண்ட சாதி என்று சொல்லிக் கொண்டாலும் - நடைமுறையில் யார் நிலவுடைமையாளர்கள், ஆதிக்க சாதிகள் என்பதைக் கொண்டு தான் முடிவெடுக்க முடியும். இந்த வாதத்தை நீங்கள் விரிவாக்கிச் சென்றால் - தெற்கே திராவிடர்கள் வருவதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு ஆண்ட
சாதி என்பது இப்போது மலைவாழ் மக்கள் என்று அறியப்படுபவர்கள் தான் எனவே ம.க.இ.க மலைவாழ் மக்களுக்கும் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லுமா என்று கேணத்தனமாகக் கேள்வி கேட்கும் அளவிற்கும் போகலாம்... ஆனால் துரதிர்ஷ்டவசமாக ம.க.இ.கவின் நிலை அதுவல்ல.. நாம் அறிந்த வரலாற்றிலும், நிதர்சனத்திலும் எவர் ஆதிக்க சாதியாய் இருக்கிறார்கள் என்பதைத் தான் கணக்கில் எடுக்கச் சொல்கிறார்கள். எனவே நீங்கள் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது மட்டுமல்ல முட்டாள்தனமானதும் கூட.

பல்லவன் குடிசையில் பன்றி மேயுது என்கிற பம்மாத்து இல்லாமல் நேரடியாகச் சொல்லுங்கள் - வன்னியர்கள் அடிமைச் சாதி தானா? அடிமைச்சாதியென்றால் "வன்னிய குல சத்திரியர்" என்கிற வெட்டிப் பெருமை மட்டும் எதற்கு? அப்படி வெட்டிப் பெருமையடிப்பதற்காக ராமதாஸ் போன்றவர்களை நீங்கள் கண்டிக்க தயாரா?

இல்லை வன்னியர்கள் குடிசையில் பன்றி மேய்வது உண்மையானால் அதற்கும் சக்கிளியன் சேரியில் பன்னி மேய்வதற்கும் ஒரே காரணம் தானா? அதாவது பார்ப்பனியம் தானா? தீண்டாமையால் கொடுமைப் படுத்தப்பட்ட சாதி தான் வன்னிய சாதியா?

வன்னியர்களையும் காட்டு நாயக்கர்களையும் ( அவர்கள் தங்களை ஆண்ட சாதி என்று கருதிக் கொள்வதால் ) ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது என்பது முழு முட்டாள் தனம்.

said...

///வர்க்க பார்வையற்றவர்கலால் முன்னெடுக்கப்படும் போலித்தனமான போராட்டங்கள் இறுதியாக எந்த முட்டுச் சந்தில் முட்டிக்கொண்டு நிற்க்கும் என்பதை 60 ஆண்டு கால தமிழக அரசியலிலிருந்தும் தரகு தாத்தா கருனானித்யிடமிருந்துமே போதும் போதும் என்கிற அளவுக்கு தமிழக மக்கள் பாடம் கற்றிருப்பதாகவே நான் நினைகிறேன்

என்னை கேட்டால் சிங்கள பேரினவாதிகலால் ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழர்களை விட தமிழக அரசியல் வியாதிகலை நம்பி ஒரு குறைந்தபட்ச வாழ்வியலை எதிர்பார்த்து,மறுக்கப்பட்டு நகரங்கலின் மூலைகலில் ஒதுங்கி கனவுகளையும் ஏக்கங்களயும் மட்டும் சுமந்து மடிந்த மனித உயிர்கள் அதிகமிருக்கும்

அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முனையும் எவனும்(ராமதாஸ்)ஆரம்ப கட்டங்கலில் காட்டும் சித்து வேலைகலின் போலித்தனத்தை உடனுக்குடன் அம்பலப்படுத்தாவிட்டால் தமிழகத்துக்கு இனியொரு கருனானிதி நிச்சயம்

துரோகிகளா ... முதலில் அவர்கள் மனிதர்கல்தான் என்பதை உறுதிபடுத்திக்கொல்லுங்கள்///

தேசியம் உரிமை குறித்த உங்களது கோரிக்கையில் நீங்கள் நேர்மையாகவே இருக்கிறீர்கள் தோழர் ஸ்டாலின் குரு.

வோட்டு கட்சி கழிசடைகளின் துரோகத்தையும் தெளிவாக உணர்ந்தே இருக்கிறீர்கள். நல்லது..

போன கட்டுரையின் தலைப்பில் போலி தமிழ் தேசியவாதிகள் என்று குறிப்பிட்டது வெறுமே தேசிய கோரிக்கையை முன் கொண்டு வரும் அத்தனை பேரையும் விமர்சித்து அல்ல.

அந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்தே உள்ளேன். மாறாக அதனை செயல்படுத்தும் நடைமுறைத் தந்திரம் குறித்துதான் அத்தனை கருத்து வேறுபாடுகளும்


நமது கருத்து வேறுபாடுகளை களைந்து விடுவோம் என்று நம்புகிறேன்.


அசுரன்

said...

ஆண்ட பரம்பரைகள்னு போகிற போக்கில் சொல்லி ரகசியமாய் மகிழ்ந்து கொள்ளும் அறியாமையில் கிடக்கும் ஜனங்களை நோக்கிக் கூறப்பட்டதல்ல 'ஆண்ட பரம்பரையா! அடிமைப்பரம்பரையா?" என்பது.

நாங்கள் மூவேந்தரின் வாரிசுகள் என்றும், பல்லவனின் பரம்பரை என்றும் மேடை போட்டு முழங்கி முக்குலத்தோரின், வன்னியரின் உணர்வுகளை முறுக்கேற்றி, அவர்களின் போலி கவுரவத்தை வளர்த்தெடுத்து, பிற சாதியினரை (வேறு யாரை தலித்துகளைத்தான்) தங்களுக்கு அடிபணிந்து போகச்சொல்லி மிரட்டும் 'ஆண்ட பரம்பரை'ப் பொறுக்கிகளுக்குத்தான்...இட ஒதுக்கீட்டை ரத்து செய்யச் சொல்லுகிறோம்.

பொன்.பரமகுருவில் இருந்து மலைச்சாமி வரை எத்தனையோ பேர்கள் இட ஒதுக்கீட்டால் படித்து முன்னேறினார்கள்தான். அவர்கள் தங்கள் பணிக்காலத்தில் செய்தது என்ன? தங்கள் சாதிக்காரனாகப் பார்த்து போலீசுதுறையில் ரொப்பிக்கொண்டார்கள். ஓய்வு பெற்றவுடன் ஓடிச்சென்று தேவர்பேரவை போன்ற சாதித்தீ மூட்டும் அமைப்பில் ஒட்டிக்கொண்டார்கள் என்பதில் இருந்தே இவர்களின் அரசுப்பணியின் லட்சணத்தை நல்லாவே யூகிக்கலாம். யூகம் என்ன எல்லாமே நெசந்தான். 70% பேர் போலீசுக்காரங்களா இருப்பது..ஆண்ட பரம்பரை 'தேவர்'தான். தேவர் சாதிப்போலீசின் மிருகத்தனத்தை ஒவ்வொரு தலித் - தலித் அல்லாதோரின் மோதல்களிலும் பார்க்க முடியும்.. சமீபத்தில்--கடந்த 10 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டில் வந்த தேவர் சாதி போலீசுக்கும்பல் கொடியங்குளத்திலும் தாமிரபரணிக்கரையிலும் போட்ட வெறியாட்டம்...2 வயது சிறுவன் விக்னேசைக்கூட விட்டு வைக்கவில்லை.
.......
பறையர் பையனைக்காதலித்த குற்றத்துக்காக கண்ணகி-முருகேசனைக்கொன்ற சாதி வெறியர்களைக் காப்பாற்ற உள்வேலை செய்பவனோ, இட ஒதுக்கீட்டில் படித்து கலெக்டராக இருந்தவன்..இவன் திருநெல்வேலிக்கு கலெக்டராக இருக்கும்போதுதான் 17 தலித்கள் போலீசால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அன்று போலீசின் அத்துமீறலை ஆரம்பித்து வைத்து வன்கொடுமை சாதி வெறியந்தான் அந்த கலெக்டர்.. இவர்களுக்கு இட ஒதுக்கீட்டை தரக்கூடாது என்கிறோம்.

பிற்பட்டோ ர் பட்டியலுக்குள் ஆதிக்க சாதிகள் எல்லாம் உட்கார்ந்து கொண்டு உண்மையிலே பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடமில்லாமல் ஆக்குகிறார்கள் என்பதற்கு புள்ளிவிவரங்களைத்தேடி எல்லாம் செல்ல வேண்டாம்.

தென் மாவட்டக்கல்லூரிகள் எங்கும் நடக்கும் மாணவர் மன்றத் தேர்தல்களே இதற்கு சான்று. BC பட்டியலில் 80 சதவீத இடங்களை நாடார்களோ நாயுடுகளோ (அதாவது வடுகன் என்பவர்கள்) ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச் சங்கமே மாணவர்கள் மத்தியில் அமைத்து சாதி வெறி உண்டாக்கி தேர்தலில் நிற்கின்றனர். MBC ஒதுக்கீட்டில் பெருமிடங்களை தேவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச்சங்கம் கட்டி, உணவு விடுதிகளில் தலித் மாணாக்கரை 'ஓசிச்சோறு' என்றும், தலித் மாணவிகளை பாலியல்ரீதியாகக் கொச்சைப்படுத்திப்பேசி வக்கிரமாய் நடந்து கொள்வதும், சேவைத் தொழில் செய்யும் சாதியில் இருந்து வரும் ஒன்றிரண்டு மாணவர்களிடம் 'எனக்கு சிரைத்து விடு' என்றோ 'என் செருப்பைத் தைடா' என்றோ சாதித்திமிரோடு நடந்து கொண்டு வருவது வெளிப்படையான விசயம்.

அக்கல்லூரிகளில் உட்கார்ந்திருக்கும் ஆசிரியர்களும் தங்களைஆதிக்க சாதி சங்கங்களுக்குள் இணைத்துக் கொண்டு அதே சாதி மாணவர்களைக் கொம்பு சீவி விடுகின்றனர்.. இதை எல்லாம் சொல்லி இந்தக் கேடு கெட்ட சாதிவெறியன் களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்.. பிற்பட்டோ ர் பட்டியலை சீர் செய் என்றால்...மறைமுகப் பார்ப்பனீயம் என்கிறார்கள்..

ஆதிக்க சாதிகள் என நாம் சொல்லிடும் நாயுடு,கவுண்டர்,தேவர்,நாடார்,வன்னியர் எனப்படும் சாதியினரிடம் நூற்றுக்கணக்கிலும்,ஆயிரக்கணக்கிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்லூரிகளும் குவிந்து கிடக்கின்றன. அங்கு இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றதாக வரலாறு உண்டா? எப்படி நாடார் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பியூனில் இருந்து தலைமை ஆசிரியர் வரை நாடார்களாகவே இருக்க முடிகிறது? நாயுடு கல்லூரியும் அப்படித்தான்..கவுண்டன் கல்லூரியும் அப்படித்தான். ஆனால் பட்டியலில் இருக்கும் பல நூறு சாதிகளால் ஒரு நர்சரி பள்ளி ஆரம்பிக்கக் கூட தெம்பு கிடையாது என்பதுதான் உண்மை. எங்காவது வண்ணார் சங்கப் பள்ளியையோ மருத்துவ சாதி சங்க கலைக்கல்லூரியையோ காட்ட முடியுமா?

இதே மாதிரி எண்ணற்ற உதாரணங்கள் தமிழகம் எங்கும் பெருத்துக் கிடக்கும்போது சமூக நீதிப் புடுங்கிகள் இதற்கு எதிராக என்ன புடுங்கினார்கள்?

கல்லூரிக்கு அடுத்து வேலை செய்யும் இடங்களைப் பார்த்தால் பொதுத்துறை நிறுவனங்களுக்குள் ஆதிக்க சாதிக்கும்பல்தான் வேலை வாய்ப்பில் பெரும் இடங்களைப் பிடித்துக் கொண்டு சாதி ரீதியாய் தொழிற்சங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்கம் என்றால் ஏதோ தொழிலிடப் பிரச்சினைகளுக்காகப் போராடும் அமைப்பு என்றெல்லாம் எண்ண வேண்டாம். யார் யார் வீட்டில் கல்யாண வயசில் பொண்ணு இருக்கு? என்பதை விசாரித்து தங்களுக்குள் திருமணம் மூலம் மேலும் சாதியாய் இறுகிக்கொள்ளவும், மறக்காமல் ஆண்டுதோறும் தங்கள் குலதெய்வத்தின் விழா எடுக்கவும்தான் இச்சங்கங்கள்.. திருச்சி பெல்லில் பார்க்கலாம்..பெல்-சேனைத்தலைவர் சங்கம்..பெல்-வன்னியர் சங்கம்..லொட்டு லொசுக்கு எல்லாம்.

விப்ரோ டெக்னாலஜியில் பார்ப்பனர் சங்கம் கட்டி இருக்கிறார்கள்.. சவுராஸ்டிரா சங்கம் வைத்திருக்கிறார்கள்.. நவீன தொழில்நுட்பவாதிகள் இல்லையா? மெயிலிங் லிஸ்ட்டில் - ஈ-சாதிச்சங்கமாய் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு சங்கமாய்த் திரண்டு சாதியைக் காப்பாற்றும்/ சாதி வன்முறையை (கல்லூரி அளவிலேயே) வளர்க்கும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். அல்லது BC ஐ இரண்டாகப்பிரித்து இந்த மாதிரி ஆதிக்க சாதிகளை BC1ல் வைத்து 3 சதவீதம் அவர்களுக்கும்... இதர 200 BCகளை 27% கொடுத்து BC 2லிலும் வைப்பதுதான் உண்மையான சமூக நீதி.

சமூகநீதிப் புடுங்கிகள் என்றைக்காவது சாதிமறுப்புத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கோரி இருக்கிறார்களா? சாதி ஒழிப்புதானே - சமூக நீதியாகும்! சாதி ஒழிப்பை சாதிமறுப்பு திருமணம் தானே சாதிக்கும்!

சாதி மறுப்புத் திருமணம் மூலம் பிறந்தவர்களுக்கு பெயரளவில் இருந்த சிறு வீத ஒதுக்கீட்டையும் 'சமூக நீதியை' காத்த வீராங்கனை ஒழித்துக்கட்டியது.. ஆனாலும் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த 'சமத்துவப் பெரியாரும்' இதைக் கண்டு கொள்ளவே இல்லை.

Bulldozer

said...

சாதி ஒழிப்பைத் தவிர்த்து விட்டு, இட ஒதுக்கீட்டில் மட்டும் அழுத்தம் கொடுக்கும் திராவிட,தமிழ்தேசிய,வன்னியவிய,தேவர்வெறியியக் கட்சி/குழுக்களால் ஏற்பட்ட சமூகவியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ள சில சான்றுகள்.

1) திண்ணியம் ஊரில் சக்கிலியர் வாயில் மலத்தைத் திணித்த சாதிவெறியர்களில் ஒருவர் - அரசுப்பணியில்-ஆசிரியராகப் பணியாற்றியவர். பெயர் என்ன தெரியுமா? குடியரசு.

2) சமதாக் கட்சியின் தமிழ் நாடு பிரிவுக்கு ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார். பெயர் குடியரசுத் தேவர். (1929இலேயே வாலை நறுக்கிய இயக்கப்பின்னணி கொண்ட பெயருடையவருக்கு வால் முளைக்கிறது)

3) பெரியார் திராவிடர் கழகத்தினர் பழனி ஒன்றியத்தில் கவுண்டர் சாதிவெறியர்கள் நிறைந்த பகுதியில் 'தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பயணம்' மேற்கொண்டிருந்தபோது 'இரட்டைக்குவளைகள் முறை பற்றி'கண்டித்துப் பேசி வந்தனர். ஆத்திரமுற்ற கவுண்ட சாதி வெறியர்கள் பெ.தி.க. தொண்டர்களைத் தாக்க முயன்றனர். அப்போது அவர்கள் சொன்னது "தி.க.ங்கிற..சாமியப் பத்திப் பேசு..இட ஒதுக்கீடு பத்திப் பேசு..ஆனால் ரெட்டக்கிளாஸ் அது இதுன்ன..கொளுத்திப்புடுவோம்.."

bulldozer

said...

மீண்டும் மீண்டும் புரளி கிளப்பும் குழலிக்கு ஆதாரப்பூர்வமாக அடி கொடுத்திருக்கும் தோழர்.குரல்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், அவருடைய பின்னூட்டத்தை குழலி அனுமதிக்க மாட்டார் என்னும் அளவிற்கு குழலியின் ஜனநாயக உணர்வை புரிந்து வைத்திருக்கும் தோழர். குரல்களுக்கு மீண்டுமொரு வாழ்த்துக்கள், சவுக்கடி போல இக்கட்டான கேள்விகளை கேட்டு அதனை குழலி வெளியிடுவார் என்று நம்பிய தோழர். அரசுவிற்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள் .

தோழமையுடன்
ஸ்டாலின்

said...

அடுக்கடுக்காக ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறைகளை அடுக்கிச்செல்லும் தோழர் புல்டோசரின் வரிகள் எனக்கு கட்டுக்கடங்காத கோபத்தை ஏற்படுத்துகின்றன, சமூக நீதி பேசும் சாதி வெறி பிடித்த நாய்களை பற்றி பேச ஒன்றுமில்லை த்த்தூதூதூதூ…
தோழர் அசுரன், புல்டோசர் மற்றும் தோழர்.குரல்களுடைய பின்னூட்டங்களை அவசியம் கருதி தனி பதிவாக்கி பிரசுரிக்குமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்…


ஸ்டாலின்

said...

ஆண்ட பரம்பரைகள் என தங்களை சொல்வதாலேயே ! அவர்கள் ஆண்ட பரம்பரை ஆகிவிட முடியுமா . அதை வைத்து நீங்கள் அவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என சொல்வது

அவர்களுக்கு உங்களுக்கு சமூகத்தின் நிலைமை புரியவில்லை என காட்டுகிறது .

உதாரணமாக தேவர்கள் எனும் முக்குலத்தோர் தனது சாதிக்காக எத்தனை போலீஸ் ஸ்டேசன்களில் அவமானபடுத்தப்படுகிறார்கள் அவர்களை இன்னமும் ஏன் அரசு குற்றப்பரம்பரையாக கருதுகிறது என உங்களுக்கு தெரியுமா?

அவர்கள் ஆதிக்க சாதின்னு ஒரே பாட்ட பாடாதீர்கள் . அவர்களில் இந்த தலைமுறைதான் கல்வி கற்றுள்ளது என்பதற்கு ஆதாரங்கள் தந்தால் அந்த ஆதாரங்கள் அதிகமாக தந்தால் நீங்கள் உங்கள் வாதத்தை விட்டுவிட தயாரா ?

சாதிய ஒடுக்குமுறை செய்யும் சாதிக்கு இட ஒதுக்கீடு வேணாம் இந்த வாதம் சரின்னு வச்சுக்குவோம்

சாதிய ஒடுக்குமுறை என்பது அறியாமை அதாவது பார்பனியத்தின் காரணமாக தோன்றியது என நீங்கள் ஒத்துகொண்டீர்கள் என்றால் முதலில் களைய வேண்டியது அந்த அறியாமை தவிர அவர்களுக்கு கிடைக்கும் கொஞ்சூண்டு உதவிகளை அல்ல.

பொடுகு வந்தா தலையை எடுக்கும் வேலை உங்களது .

அடுத்த வாதம்
இட ஒதுக்கீடு தீர்வல்லன்னா அதை எடுக்கனும்கறது இருக்கனும்கறதோ நீங்க சொல்ல தேவை இல்லையே .

அதான் தீர்வு இல்லைன்னாச்சே அத மேற்கொண்டு ஏன் பேசுகிறீர்கள் .
?

சரி இட ஒதுக்கீடு வேணாம்பா

சாதி ஒடுக்குமுறை செய்யாம விட்டுடுவானா ?

அதுக்கு என்ன உத்திரவாதம் கிடையாது அது வேற பிராசஸ் , இது வேற பிராசஸ்

அதாவது சாதி வேறுபாடுகளை அவர்களது மண்டையில் இருந்து கழட்டுவது வேற , அதுக்கு இட ஒதுக்கீடுக்கும் சம்பந்தம் இல்லை

அப்படி இருக்கையில் நீ இடஒதுக்கிடு கொடுக்காதேன்னு சொல்வது தீர்வாகாத போது அதை ஏன் திரும்ப திரும்ப சொல்றீங்க .

அது இந்த ஆதிக்க சாதியில் இருந்து வரும் தோழர்களை வெறுக்க வைக்க உதவும் வேற ஒன்னும் செய்யாது

said...

கம்யுனிஸ பூச்சாண்டி சொல்வதை பார்த்தால் படித்தவன் எல்லாம் சாதி வெறயில்லாம இருப்பதாக இருக்க வேண்டும். அப்ப்டி இல்லை என்பதைத்தான் கனேசு, அன்பரசன், குரல்கள், புல்டோ சர் உள்ளிட்டவர்களின் எ-கா சொல்கிறது. இன்னும் சொன்னால் கல்வி நிலையங்க்ளில் சாதி ரீதியாக திரண்டு பிற சாதியினரை இழிவுபடுத்தும் போக்கு உங்களது வாதத்திற்க்கு முரனாகவே இருக்கிறது.

கல்வியறிவினால் சாதி ஒழியும் என்பதே ஒரு அப்பட்டமான மோசடி.

எப்படி பொருளாதார விடுதலை மட்டுமே சாதியை ஒழித்துவிடும் என்று கம்யுனிஸ்டுகள் சொன்னது அடிப்படையற்றதோ அதே போல வெறுமே பண்பாட்டு சீர்திருத்தங்களால் மட்டும் சாதி ஒழிந்து விடும் என்பதும் அடிப்படையற்றதே.

தத்துவம், பொருளாதாரம், அரசியல் என்று மூன்று முனைகளிலும் சம்ரசமற்ற போராட்டமே சாதியை ஒழிக்கும்.

இடஓதுக்கீட்டை சர்வரோக நிவாரணியாக காட்டும் உங்களது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தையே படித்தவன் முதல் பலரும் தமது சாதி வெறியை விடாமல் இருப்பதும், இன்றைக்கு திராவிட அரசியலுக்கு உரிமை கொண்டாடும் பாமக உள்ளிட்டவர்கள் சாதி ரீதியாக அணி திரண்டு உரிமை பெறுங்கள் என்று அப்பட்டமாக பிழைப்புவாதம் பெசுவதும், குஜ்ஜார் பிரச்சனைகளும் காட்டுகின்றன. இடஓதுக்கீடு ஒரு சீர்த்திருத்தம் என்பதை புரிந்து கொள்ளாத நண்பர்கள் அதனது யாதர்த்த விளைவுகளை கண் கொண்டு நோக்கும் வலுவின்றி இருப்பது பரிதாபமே.


//சரி இட ஒதுக்கீடு வேணாம்பா

சாதி ஒடுக்குமுறை செய்யாம விட்டுடுவானா ? //

அதனால இடஓதுக்கீட்டை தருகிறீர்களா? உங்களது வாதம் நகைப்புக்கிடமாக இருப்பதை உணர்கிறீர்களா இல்லையா?//அது இந்த ஆதிக்க சாதியில் இருந்து வரும் தோழர்களை வெறுக்க வைக்க உதவும் வேற ஒன்னும் செய்யாது //


அப்படியா? எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை.

இன்றைக்கு இடஓதுக்கீட்டிற்க்கு எதிராக பார்ப்ப்னியருடன் கூட்டுச் சேர்ந்து கோசம் போடுபவர் யார் தெரியுமா?


//அதாவது சாதி வேறுபாடுகளை அவர்களது மண்டையில் இருந்து கழட்டுவது வேற , அதுக்கு இட ஒதுக்கீடுக்கும் சம்பந்தம் இல்லை //

இடஓதுக்கீட்டிற்க்கும் சாதி ரீதியாக அணி திரள்வதற்க்கும் சம்பந்தமுள்ளது என்பதை புல்டோ சரோ யாரோ ஒரு தோழர் குறிப்பிட்டிருந்தார் அதை மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

அசுரன்

said...

எல்லாரும் சூத்திரர்தானே என்று பழைய பாட்டைப்பாடும் தி.க. தோழர் தமிழனிடம் சில கேள்விகள்

1) திக நடத்தி வரும் கல்வி நிலையங்களில் சூத்திரர்கள் எல்லோருக்கும் பஞ்சமர்கள் எல்லோருக்கும் சமமாக வேலை வாய்ப்பை அளிக்காமல் இருப்பது ஏன்?

2) அந்நிறுவனங்களில் கள்ளர் சாதியினர் மட்டும் ஆதிக்கம் செலுத்துவது ஏன்?

3) தி.க. அமைப்பிலும், அது நடத்தி வரும் நிறுவனங்களிலும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ள தலித்துகள் சதவீதம் எத்தனை?

4) அமைப்பில் பதவிக்கு வரும் கள்ளர் அல்லாத சாதியினரை கட்சி கள்ளர்களைப்போல மரியாதையாக நடத்துகிறதா? ஆம் என்றால் துரை சக்கரவர்த்தி பொதுச்செயலாளராக இருந்த கொஞ்சகாலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வசதிகளும்,மரியாதைகளும் ஏன் கள்ளர் அல்லாத சாதியினர் பதவிக்கு வந்த பின்னர் க.அல்லாத சாதியினருக்குத் தரப்படவில்லை? தி.க.வே கள்ளரின் கூடாரமா?

இட ஒதுக்கீடு, சூத்திரப்பட்டம் என்று அரைத்த மாவையே எத்தனை நாளைக்கு அரைப்பீர்கள்? விமர்சித்தால் பார்ப்பான் நுழைந்துவிடுவான் எனும் பூச்சாண்டியையே எத்தனை காலத்துக்கு காட்டுவீர்கள்


சிவகாமி ஐ.ஏ.எஸ். பாணியில் கேட்போமாயின், பெரியார் புரா திட்டத்தில்
1) பயனாளிகளில் தலித்துகள் 18% பேர் பயனடைந்தார்களா?
2) புரா மருத்துவ திட்டத்தில் எத்தனை பேர் தலித் டாக்டர்கள்?
3) புராவின் ஒவ்வொரு திட்டமும் 4 கோடி ரூபாய்க்கும் மேலே உள்ளன. அத்தொகையில் 18% தலித்துகளுக்கு செலவிடப்படுகிறதா?

இதற்கெல்லாம் பேந்தப்பேந்த முழித்து விட்டு சும்மா 'சூத்திர','பார்ப்பன' பூச்சாண்டிகளாலேயே 80 வருசமா காலத்த ஓட்டியாச்சு

இமானுவேல்

said...

தன்னுடைய இருப்பில்தான் (அதாவது ஆதிக்க சாதி) பார்ப்பனியம் உயிர் வாழ்கிறது,தனது இருப்பையும் மேலாதிக்கத்தையும் உறுதி செய்துகொள்கிறது என்கிற் புரிதல் கூட இல்லாத குழந்தை பிள்ளைகள் பாருங்கள் இவர்கள்

துணிவிருந்தால் அக மணமுறை மறுப்பை கட்சி விதியாக்கி நடைமுறைபடுத்தலாமே நமது சூராதி சூரர்கல் ,ஒற்றை திருமணத்தை கூட நடத்திக்காட்ட முடியாது இந்த ஓட்டுப் பொறுக்கிகலால்

said...

குழலியின் பதிவில் தோழர்.புல்டோசரை விமர்சித்து ஈழத்தமிழர் என்ற பெயரில் பிண்ணூட்டமிட்டிருந்தவர்க்கு நான் இட்ட பின்னூட்டம்:

ஈழத்தமிழர் என பிண்ணூட்டமிட்டிருப்பவருக்கு,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த பின்னூட்டம் டோசர் என்ற பெயரில்தான் இடப்பட்டிருக்கிறதே ஒழிய, புல்டோசர் என்ற பெயரில் இடப்படவில்லை என்பதனை சாதரணமாக பார்த்தாலே தெரியும், ஒருவேளை வெளி என்று ஒருவர் போட்டிருந்தால் அதனை மிதக்கும் வெளி என்று நீங்கள் எடுத்துக்கொள்வீர்களா,
பின்னூட்டமிட்ட எல்லா இடங்களிடும் அவர் புல்டோசர் என்றுதான் போட்டிருக்கிறாரே தவிர டோர் என்று எங்குமே போட்டதில்லை, அதனை விடுத்து புல்டோசரிடம் உங்கள் கீழ்தரமான அரசியல் என்று சொல்வதிலிருந்தே நீங்கள் எதனை நிறுவ வருகிறீர்கள் என்ற உள்நோக்கம் புரிகிறது,
புல்டோசர் எனும் பெயரோடு ஆதாரபூர்வமாக ஆதாரபூர்வமாக பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கும் தோழர்.புல்டோசரை தூற்றுவதற்கு இப்படி உணர்ச்சிபூர்வமான ஒரு ஏற்பாடா? இதனை எப்படி எடுத்துக்கொள்வது, மேலும் அந்த பின்னூட்டத்தில் புலித்தோழர்கள் என்று புலிகளை விளித்திருக்கிறது, எல்லோரையும் தோழர்கள் என்று அழைக்கும் பழக்கம் ம.க.இ.கவினருக்கு என்றுமே கிடையாது, அப்படி அழைப்பதற்கு அவர்கள் சி.பி.எம்மினரோ, பின்நவீனத்துவவாதிகளோ கிடையாது, மார்க்சியவாதிகள்.. 80களில் புலிகள் சோசலிச தமிழீழம் என்று சொல்லிய போது கூட ம.க.இ.க அவர்களை தோழர்கள் என்று அழைத்தது கிடையாது போராளிகள் என்றுதான் பு.ஜவும் பு.கவும் எழுதியது, ஒரு அரைநிலப்பிரபுத்துவ அரைக்காலனிய நாட்டில ஜனநாயகப் புரட்சிதான நடத்துமுடியுமேயல்லாமல் சோசலிச புரட்சி நடத்தமுடியாது ஆகவே சோசலிச தமிழீழம் என்பது தெளிவற்ற போர்தந்திரம் என்று விமர்சித்தது புதிய ஜனநாயகம், இன்று புலிகள் கம்யூனிஸ்டுகளை பூதங்கள் என்கிறார்கள், அமெரிக்கா சாத்தானின் ஆதரவை எதிர்பார்க்கும் போது கம்யூனிஸ்டுகள் பூதங்களாகத்தான் தெரிவார்கள். உடனே பேரினவாத கட்சியான ஜே.வி.பியோடு சேர்த்துவைத்து முத்திரை குத்திவிடாதீர்கள், அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று நம்புபவர்கள் சோசலிச கட்சி என்று பெயர் வைத்திருந்த ஹிட்லரையும் கம்யூனிஸ்டு என்றுதான் நம்பவேண்டும், சரி இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் எந்த ம.க.இ.கவினரும் புலிகளை தோழர்கள் என்றழைக்கும் அளவிற்கு பாமரர்கள் கிடையாது என்பதற்காகத்தான். அந்த பின்னூட்டத்தில் துருத்திக்கொண்டு நிற்கும் தோழர் எனும் சொல் வேண்டுமென்ற எமது தோழர்களை முத்திரை குத்துவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றுதான் ஐயுறவேண்டியிருக்கிறது. இதனையெல்லாம் கவனதில் கொண்டு யார் அந்த கீழ்தரமான அரசியலை செய்தவர்கள், யாருக்கு தோழர்.புல்டோசரை வாயடைக்க அவரை உணர்ச்சிபூர்வமான அரசியலில் சிக்கவைக்கவேண்டிய தேவை இருக்கிறது என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு நீங்கள் கண்டிக்க கிளம்பினால் நன்றாயிருக்கும்..

ஸ்டாலின்

Related Posts with Thumbnails