''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்!
துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஓர் நாள்.
"மகிழ்ச்சி என்பது போராட்டம்" - கார்ல் மார்க்ஸ்
பதிந்தவர் அசுரன் நேரம் Friday, June 27, 2008 17 பின்னூட்டங்கள்
லேபிள்கள்: இந்தியா, பீ, மலம், ரீஜெண்ட், வல்லரசு
நந்திகிராமத்திலிருந்து விழுப்புரம் வரை சிபிஎம் ரவுடிக் கும்பலின் கொலைவெறித் தாண்டவம்....
ஆயுதத்தை கைகள் நடுங்க கோழைத்தனமாக ஏந்திவிட்ட கூலிப்படை பொறுக்கி கும்பல்
திமுக பாமக கூட்டணி முறிந்துவிட்டது. ஏதோ பாமக மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தது போலவும் அது பொறுக்காமல் திமுக அவர்களுடனான கூட்டை முறியடித்துக் கொண்டதாகவும் பொதுக் கருத்து உருவாக்கப்படுகிறது. கருணாநிதியோ ராமதாஸ்தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக இருக்கிறார் என்றும் பிரச்சாரம் செய்கிறார். ஆனால் உண்மை என்னவோ வேறாக உள்ளது. பதவி சுகத்தை நக்கிப் பிழைக்க ராமதாஸ் செய்யும் பிழைப்புவாத பித்தலாட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் மக்கள் பிரச்சினைகள் என்ற பெயரில் கருணாநிதியை எதிர்க்கிறார். தமிழ்நாட்டை கூட்டி கொடுத்து தனது உறவினர்களும், இன்ன பிறரும் வளப்பமாக அலைவதற்க்காகவே தரகு வேலை பார்க்கும் கருணாநிதி பாமகவை தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவராக சித்தரிக்கிறார். இவர்களிடையேயான இந்த நாற்காலிச் சண்டையைத்தான் ஏதோ மிகப் பெரிய கொள்கை முரன்பாடாகவும், மக்கள் நலன் சார்ந்த விசயமாகவும் காட்டி நம்மை நம்ப சொல்கிறார்கள் ஊடகங்கள். இந்த அம்சத்தில் இவர்களது பிழைப்புவாதத்தை குறித்து வந்துள்ள பின்வரும் புதிய ஜனநாயக கட்டுரை இங்கு மறு பிரசூரம் செய்யப்படுகிறது.
___________________________________________________
பதிந்தவர் அசுரன் நேரம் Tuesday, June 17, 2008 3 பின்னூட்டங்கள்
லேபிள்கள்: திமுக, நக்கிப் பிழை, பாமக, மறுகாலனியாதிக்கம், மாமா
இந்தியாவை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பற்ற வேண்டுமா, பாஜகவுக்கு ஓட்டு போடுங்கள். இப்படி சொல்லித்தான் ஊரெல்லாம் ஓட்டு பொறுக்கி வருகிறது பாசக. உண்மையில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது பாசகவினால்தான் வளர்கிறது என்கிற் அம்சம் ஒரு பக்கம் இருக்க. உண்மையிலேயே பயங்கரவாதம் என்பது மக்களை பய பீதிக்கு ஆளாக்கி படு கொலை செய்வதுதான் என்றால் அப்படிப்பட்ட மிகக் கொடூரமான பயங்கரவாதம் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற பெயரில் நாட்டை கூட்டிக் கொடுத்து விவசாயிகளை லட்சக்கணக்கில் தற்கொலை செய்ய வைக்கும் மறுகாலனியாதிக்க கொள்கையும், அதை நடைமுறைப்படுத்தும், அதை வைத்து நக்கிப் பிழைக்கும் தரகு பார்ப்பனிய முதலாளிகளும், அதிகார வர்க்கமும்தான் மிகக் கொடூரமான பயங்கரவாதிகள்.
இந்த விசயத்தைத்தான் பார்ப்பன பயங்கரவாதிகளிடம் நாம் எப்போதுமே முன் வைத்து பேசுவோம். நீதான் பெரிய புடுங்கி ஆச்சே, பயங்கரவாதிகளை அடிச்சு துவம்சம் செய்றதுல பெரிய மயிராண்டி அப்படின்னு சொல்லிக்கிற இல்லையா.... அப்படின்னா இந்த பொருளாதார பயங்கரவாதிகளுக்கு எதிரா ஏதாவது செய்யேண்டா என்பதுதான் நாம் எப்போதுமே அவர்கள் முன் வைக்கும் வாதம். இதற்க்கு அவர்கள் பதில் சொன்னதில்லை. பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி ஒளிவதை தவிர்த்து வேறொன்றும் செய்ததில்லை.
இப்படி இருக்கும் போது, பாசக கட்சி இந்தியாவில் சாதரண சனங்களை பயங்கரவாத கொடுமையில் தள்ளும் ஒரு விசயத்தை போன வாரம் மிகச் சரியாக அடையாளம் கண்டு கண்டித்துள்ளது. அதனை எதிர்த்து பாசகவோ அல்லது அரை டவுசர் RSS கேப்மாறிகளோ போராடுவார்களா என்பதுதான் நமது கேள்வி. அவர்கள் அடையாளம் கண்டுபிடித்துள்ள பயங்கரவாதி வேறு யாருமல்ல அது விலைவாசி உயர்வுதான்.
"""common man terrorised: BJP ""
விலைவாசி உயர்வுக்கு பின்னே உள்ள காரணங்கள் வருமாறு, 1)உலகமய கொள்கைகளினால் நாசம் செய்யப்பட்ட விவசாயமும், விவசாயிகளின் தற்கொலைகள் அதனால் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ள உணவு தானியம் உள்ளிட்ட விவசாய உற்பத்தியும். 2) இருக்கின்ற நிலங்களையும் அமெரிக்க கார்களுக்கும், பணக்கார பன்னாடைகளும் உல்லாசமாக ஒருத்தன் ரெண்டு பேர் பிராயணம் செய்யும் சொகுசு கார்களுக்கும் தேவையான பயோ டீசல் தாயாரிக்க தேவையான பயிர்களை விளைவிக்கும் நிலங்களாக மாற்றப்பட்டது - அதாவது உணவு தானிய உற்பத்தி பயோ டீசல் தானிய உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டது, 3) மிச்ச சொச்ச உணவு பொருட்களும் பங்கு சந்தை யூக வணிக சூதாட்டத்திற்கு திறந்து விடப்பட்டதன் காரணமாக போலியாக விலைகள் பல மடங்கு ஊதிப் பெருக்க வைக்கப்பட்டன, 4) அமெரிக்காவின் பெட் ரோல் - அரசியல்/பொருளாதார வக்கிர விளையாட்டுக்கள் எண்ணெய் விலையேறுவதற்க்கு அடிப்படையாக இருப்பதும், அது பிற எல்லாப் பொருட்களின் விலையையும் ஏற்றிவிடுவதும்.
ஆக, பாசக, பயங்கரவாதிகளை எதிர்க்கும் கட்சி என்று சொல்வது உண்மையெனில் அதுவே சொல்வது போல விலைவாசி உயர்வுக்குக் காரணமான பன்னாட்டு தரகு கும்பல்களையும் அவர்களின் புரோக்கர் பன்னாடைகளையும் துவைத்து எடுக்க போராடுமா?
அது எப்படி?... பாசகவாவது போராடறதாவது. பங்கு சந்தை குப்புறடிக்க வுழுந்ததுக்கு காரணமான பயங்கரவாதிகளை துப்பியெறிந்து கண்டுபிடித்த பாசக. விலைவாசி உயர்வு பயங்கரவாதத்துக்கு காரணமானவர்கள் வெளிப்படையாக தெரிந்தும் அவர்கள் குறித்து எதுவும் பேசாது. தனது கையை வைத்தே தனது கண்களை குத்திக் கொள்ளும் தவறை பாசக செய்ததேயில்லை. இன்னும் சொன்னால் பாசகவின் அர்த்தத்தில் பயங்கரவாதிகள் என்ற லிஸ்டில் வரும் இஸ்லாமிய பயங்கரவாதிகளே பாசகவின் வளர்ச்சியைத்தான் தமது வளர்ச்சிக்கான அடிப்படையாகக் கொண்டுள்ளனர் எனும் போது தனக்கு புரோக்கர் பணம் கிடைக்க வகை செய்ய்ம் பன்னாட்டு தரகு கும்பல்களை இவர்கள் எதிர்க்கப் போவதில்லை/அம்பலப்படுத்தப் போவதில்லை.
உண்மையில் இவர்கள் போன முறை ஆட்சியிலிருந்த பொழுதுதான் அதிக முறை விலைவாசியும், பெட் ரோல் விலையும் உயர்த்தப்பட்டது. அன்றைக்கு இந்தியாவின் உடலெங்கும் இருந்த உலகமய சிரங்கும் புண்ணும் பொட்டலம் கட்டுகிற ரேஞ்சில் இருந்தது. இன்னைக்கு அது வெடித்து சிதறி சீழ் பீய்ச்சி அடிக்கிறது. புண்ணும், சிரங்கும் என்னவோ அதிகாமாத்தான் ஆகி இருக்கிறது, அதுக்கு மேல தடவுற புணுகு பேரத்தான் பாசக, காங்கிரஸு, CPM/CPI அப்படின்னு விதவிதமா மாத்திக்கிறானுங்க. போன முறை இவிங்க ஆட்சி செஞ்ச போதுதான் இந்தியா ஒழிஞ்சது... சீ... ஸாரி.. ஒளிர்ந்தது. காங்கிரஸ் கொழுத்திப் போட்ட மறுகாலனியாதிக்க நெருப்பு அது, பாசக ஆட்சியிலே 'செக சோதியா சொலித்த' இந்தியாவா அந்த நெருப்பு மாறி, அந்த சொலிப்பு முத்திப் போயி காங்கிரஸ் ஆட்சியில இப்போ சொக்கப் பானையா கொழுந்து விட்டு எரியுது.
இந்த நெருப்புல பீடித் துண்டு பத்த வைச்சிக்கத்தான் பாசக முதல் அத்தனை எதிர்க் கட்சிகளும் வக்கிர கூப்பாடு போடுகின்றன. இந்த நெருப்பு பீடித் துண்டுகளையல்ல அவற்றை பீடித்திருக்கும் கரங்களையும் எரிக்கும் வல்லமையுள்ளதாக மாற்றுவதுதான் இந்த உலகமய வக்கிரத்திற்க்கு தீர்வு. அப்படிப்பட்ட மாற்றங்களின் அச்சாரமாகத்தான் ஒளிரும் அவர்களின் இந்தியாவின் சில பகுதிகள் இருளடைந்து வருகின்றன. இருட்டுக்குப் பின் கிழக்கில் சிவக்கும் என்பது உலக பொது நியதி. (அவர்களின்) இந்தியா ஒழிந்து கொண்டிருக்கிறது.....
Thanks: செய்திரசம்
Related Article:
சிரிக்க, சிந்திக்க, செயல்பட சில கார்ட்டூன்கள்!!!
உலக மக்களின் எதிரி அமெரிக்காவும் - மக்களின் உணவை திருடி கொழுக்கும் கார்ப்போரேட் வேளாண் கழகங்களும்!!
One tight slap!
பொதுவாக பார்ப்பனிய பத்திரிகைகளின்/ஊடகங்களின் மிக முக்கியமான தந்திரம் பார்ப்பனிய எதிர்ப்பாளர்களை கோமாளிகளாக சித்தரிப்பதும், பார்ப்பனிய பயஙகரவாதிகளை மிக ரீஜெண்டாக சித்தரிப்பதும் ஆகும். பார்ப்பனிய எதிர்ப்பு என்பது நக்கிப் பிழைப்பதற்க்கான எதிர்ப்பாக இருந்தாலும் சரி அல்லது சுத்த சுயம்புவான பெரியாரிய பாணி எதிர்ப்பாக இருந்தாலும் சரி பார்ப்பனிய ஊடகங்களின் இலக்குக்கு அவை ஆளாகி விடுகின்றன.
எடுத்துக்காட்டுக்கு, கர்நாடகாவின் தேவ கௌடாவை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு சோம்பேறி, தூங்கு மூஞ்சி, கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி என்ற விசயங்களை வெகு விமரிசையாக அதற்க்கு தோதான படங்களுடன் தொடர்ந்து செய்தி வெளியிட்டு இந்த பத்திரிகைகள் பிரச்சாரம் செய்கின்றன. இதே போல லல்லு பிரசாத் யாதவ், கருணாநிதி, வீரமணி, திருமாவளவன், ராமதாஸ் போன்றவர்களை கோமாளிகளாகவும், உண்மையான திறமையற்றவர்களாகவும் சித்திரித்தே இந்த பத்திரிகைகள் எழுதுகின்றன(அதாவது அப்துல் கலாம், அத்துவானி போல மெஜஸ்டிக்கான திறமையில்லாதவர்கள்). விசயம் என்னவென்றால் இவையெல்லாம் உண்மைதான். இவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள், காரியவாதிகள் என்பதிலெல்லாம் சந்தேகமேயில்லை. ஆனால் இவர்களை மட்டும் குறிப்பிட்டு பிரச்சாரம் செய்யும் பார்ப்பனிய கொழுப்பெடுத்த பத்திரிகைகள் இதேவிட பல மடங்கு கோமாளித்தனமான, சந்தர்ப்பவாத பார்ப்பன பயங்கரவாதிகளை ஏதோ ஆகச் சிறந்த பண்பாளர்களாகவே சித்தரிக்கிறது.
ஒரு எடுத்துக்காட்டுக்கு: நம்ம இராம. கோபாலன் ஒரு ஆள் போதும். இன்னொரு வக்கிர வில்லன் கம் காமெடியன் என்றால் அது காஞ்சி போன காம கேடி ஜெயேந்திரன். தேவகௌடாவிற்கு இணையான ஆளாக வாஜபேயி என்ற பொய்யர் இருக்கிறார். குறிப்பாக உழைக்கும் மக்களை அவர்களின் கோரிக்கையின் அடிப்படையிலேயே அணி திரட்டியுள்ள தலைவர்களாயிருந்தால் பார்ப்பனிய கும்பலுக்கு அல்வா சாப்பிடுவது போல. படு கேவலப்படுத்தி எழுதுவார்கள். உண்மையிலேயே அந்த தலைவர் அந்த உழைக்கும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்க வேண்டியதில்லை, மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் மக்களை அணி திரட்டியிருந்தாலே போதும். எடுத்துக்காட்டுக்கு: திருமா, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர். இந்த கும்பலில் இவர்களின் ஆதரவாளர்களே இருந்தால் கூட கேவலப்படுத்துவார்கள். எடுத்துக்காட்டுக்கு: மும்பையின் பால்தாக்கரே, அவனோட அரசியல் வாரிசுகள் (இவர்கள் பாசிஸ்டுகளாய் இருந்தால் கூட இவர்கள் மக்களை அணி திரட்டியுள்ளது அவர்களின் பிரச்சினைகளின் அடிப்படையிலேயே). இதே மக்களை சும்மா வேறு போதைகளை காட்டி அணி திரட்டியவர்கள் எனில் பார்ப்பனிய பத்திரிகைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களின் படு கேவலமான கோமாளித்தனங்களைக் கூட வீர சாகசமாக சிலாகித்து எழுதும் இந்த பத்திரிகைகள். எடுத்துக்காட்டுக்கு: விஜயகாந்த், எம்ஜிஆர், ரஜினிகாந்த், மோடி.
இப்போ நாம குறிப்பாக பார்க்க போகிற ஒரு பாசிஸ்டு காமெடியன் கர்நாடகாவின் பாஜக தலைவர் எடியூரப்பா. கிட்டத்தட்ட வட்டாள் நாகராஜுக்கு இணையான கோமாளிப் பேர்வழி இந்த எடியூரப்பாதான். ஆனால் இவனையெல்லாம் ஒரு பெரிய புடுங்கி போல பில்டப்பு கொடுப்பதில் பார்ப்பனிய பத்திரிகைகள் முன்னணியில் இருக்கின்றன. ஒரு ஒப்பீடு என்ற பார்த்தால் கர்நாடகாவின் எஸ் எம் கிருஷ்ணா போன்றோ அல்லது மத்தியில் உள்ள பிற காங்கிரஸ் மாமாக்கள் போன்றோ கோமாளித்தனத்தை விட்டொழித்த காரியவாதம் இந்த பார்ப்பனிய காமெடியன்களிடம் கிடையாது.
கம் பேக் டூ எடியூரப்பா, இந்த எடியூராப்பா ரொம்பவே மூட நம்பிக்கைக்களில் ஊறிப் போனவன். எவனாவது நல்லா காவி உடுப்ப போட்டுக்கிட்டு போய் காலையில் கக்கூஸ் போகறதுக்கு முன்னாடி, பின்னாடி சில யாகங்கள் செய்யனும்னு சில சம்ஸ்கிருத வார்த்தைகளை சொல்லி சொன்னாக்க உடனே அதை அப்படியே வரி பிசகாம செய்வான். இவன் தன்னோட பேரக்கூட கொஞ்ச நாள் முன்ன இப்படித்தான் மாத்தினான். இப்போ சமீபத்தில் எல்லா கோயில்களிலும் காலையில இவன் பேருல அர்ச்சனை செய்யனும்னு அதிகாரப்பூர்வமா உத்திரவு சுற்றறிக்கை அனுப்பியிருக்கான். இவன் பதவி ஏற்ற போதும் இதே போலத்தான் பல கோமாளித்தனமான பூஜைகள், புனஸ்காரங்களுடன் கும்பாபிஷேகம் ரேஞ்சுக்கு தாடாபுடால செஞ்சான். இதுல வேற, ரெண்டு கிராஸ் பெல்டுங்களுக்கு குடுமி சண்டையாயிடுச்சு. ஒருத்தான் 10 மணிக்கு போன்னு சொன்னான், இன்னொருத்தன் 12 மணிக்கு போன்னு சொன்னான் எடியூரப்பா இன்னொருத்தன் சொன்னது கேட்டு அவன் சொன்னபடி பதவியேற்றார். உடனே முதல்ல சொன்னவன் எடியூரப்பாவிற்க்கு ஆப்பு, அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பமாயிருச்சின்னு பரபரப்பு கிளப்புறான்.
தேவகௌடா இவனுக்கு பதவி ஆசை காட்டி, திரும்ப ஏமாத்தி, திரும்ப பதவி ஆசை காட்டி சின்னப்புள்ளைகள விளையாட்டு காட்டுற மாதிரி சும்மா சுத்தி சுத்தி அலையவிட்டார். கட்சீல ஒரு வாரம் பதவில உக்கார வைச்சி... அப்புறமா விரட்டிவிட்டார். கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையேன்னு இவனுக்கு ஒரே ஆத்தாமை. ஒரே அழுவாச்சி. எடியூரப்பா மூஞ்சி ஏற்கனவே நல்லா அடிவாங்கி அழுத மூஞ்சி கணக்காதான் இருக்கும். இதுல இந்த தும்பம் வேற சேர்ந்ததுல முகரகட்ட ரொம்ப அழுமூஞ்சியாகி பாக்குறதுக்கே கோறாமையா இருந்தது. இப்படி புலம்பிக்கிட்டே இருந்ததுல இவனுக்கு புத்தியே கலங்கி போச்சி. வெளியே வந்தவுடனே இவன் என்ன சொன்னான்னா தேவகௌட கும்பல் எனக்கு எதிரா பில்லி சூனியம் வைச்சி யாகம் செஞ்சிருக்கானுங்க அப்படின்னு. அதுவும் இவருக்கு யாகம் செஞ்ச இடம் மொதக் கொண்டு தெரியுமாம். அதனாலதான் பதவி போச்சாம்.
தேவகௌடா கும்பலை சந்தர்ப்பவாதி என்று கேவலப்படுத்துகிறது இந்த கும்பல். ஏதோ தேவகௌடா அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷோட பதவி பகிர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சந்தர்ப்பவாதமாக இருந்தது போல
பேசுறானுங்க. தேவகௌடா கும்பலுக்கு கிஞ்சித்தும் குறைவின்றி சந்தர்ப்பவாதமாக அவர்களுடன் உறவு கொண்டவர்கள் இந்த பார்ப்பன பயங்கரவாத கோமாளிகள்தான். ஏற்கனவே காங்கிரஸுக்கு பேப்பே காட்டிட்டுதான் தேவகௌடா கும்பல் பாஜகவோட உறவு வைத்துக் கொள்கிறது. இவர்கள் பெரிய நன்னூல் எனில் அப்போதே விட வேண்டியதுதானே. மாறாக கிடைச்ச வரைக்கும் நக்கிக்கலாம் என்று சந்தர்ப்பவாதமாக சேர்ந்து கொண்டனர். இதுக்கு பிறகு பதவி கைமாற்ற வேண்டிய நேரத்தில் ஏமாத்துனாரு தேவகௌடா. அப்போகூட இந்த சொரனையற்ற முண்டங்களுக்கு புத்தியில்ல. ஒரேடியா அத்துவிட்டு வராம, ஒப்பாரி பாடிக்கிட்டு இருந்தான் எடியூரப்பா. உடனே திரும்ப பதவி கொடுக்க ஒத்துக்கிட்டாரு தேவகௌடா. உடனே திரும்ப ஓடிப் போயி சேந்துக்கிட்டானுங்க. தேவகௌடா ஒரே வாரத்தில திரும்ப கவுத்தி எடியூரப்பாவுக்கு பல்பு சொருகினாரு. தேவகௌடாவுக்கு கர்நாடக மக்கள் பல்பு செருகினது வேற விசயம். ஆனா இங்க கவனிக்க வேண்டியது தேவகௌட கும்பல் தமது சந்தர்ப்பவாத செயல்களைக் கூட ஒரு தொழில் நேர்த்தியுடன் செய்துள்ள போது, இந்த எடியூரப்பா கோமாளி படு காமெடித்தனமாக அவர்கள் இழுத்த இழுப்புக்கேல்லாம் போயிருக்கிறான். ஒரே நோக்கம் எப்படியாவது நக்கிப் பிழைக்க முடியாதா என்கிற வேகம்தான். சந்தர்ப்பவாதத்தில் இவனுக்கும் தேவகௌடா கும்பலுக்கும் போட்டி வைச்சால் யார் ஜெயிப்பார்கள் என்பதை கணிப்பது கஸ்டமே. இவனெல்லாம் சிறந்த தலைவனாம், நிர்வாகியாம். எந்த வகையிலும் விஜயகாந்தைவிட பெரிய பாசிஸ்டு காமெடியனெல்லாம் கிடையாது இவன்.
ஒரு மாநில கட்சியின் தலைவன், முன்னாள் முதலமைச்சர் அதற்க்கான பொறுப்புணர்வுடன் பேச வேண்டும். இது நாம் சொல்வது அல்ல. கருணாநிதிக்கு எதிராக, அவரது பார்ப்பனிய எதிர்ப்பு சிறு சலசலப்புக்கும் எதிராக பார்ப்பனிய பத்திரிகைகள் பிரச்சாரம் செய்யும் அட்வைஸ். சேது சமுத்திரத்திலிருந்து, ஹொகேனாக்கல் வரை இதுதான். இந்த நல்லொழுக்க அட்வைஸ் எல்லாம் சூத்திரனுக்குத்தான். பார்ப்பனனுக்கும் பார்ப்பன கொட்டை தாங்கிகளுக்கும் இந்த அட்வைஸ் பொருந்தாது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள பார்ப்பன மற்றும் பா.கொ.தாங்கிகளின் பேச்சுகள், நடவடிக்கைகளை உதாரணமாக கொடுக்க முடியும். இங்கு நாம் எடியூரப்பா என்ற பா.கொ.தாங்கியை பார்த்துக் கொண்டிருப்பதால் அவரை மட்டும் கவனிக்கலாம். ஹொகேனாக்கல் பிரச்சினையில் கருணாநிதியின் நியாயமான எதிர்வினைகளையே பொறுப்பற்ற பேச்சுக்கள் என்று அவதூறு செய்யும் இந்த பார்ப்பனிய பத்திரிகைகள், அதே ஹொகேனாக்கல் பிரச்சினையில் வாய்துடுக்கோடு மட்டும் இல்லாமல் படு பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட எடியூரப்பாவை அதுவும் அவன் அண்டை மாநிலத்துக்காரன், நமக்கு தண்ணீர் தராதவன் என்று தெரிந்தும் உயர்த்திப் பிடிக்கின்றன தமிழ்நாட்டு இந்த பத்திரிகைகள். மொழி வெறியின் மூலம் ஆட்சியை பிடிக்கும் நப்பாசையில் ஹொகேனாக்கலில் நுழைந்து பிரச்சினையை திரி கொளுத்திப் போட்டான் இந்த பாசிஸ்டு கோமாளி எடியூரப்பா.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் எஸ் எம் கிருஷ்ண உள்ளிட்ட பல்வேறு கர்நாடக தலைவர்களம் ஓரளவு எச்சரிக்கையாகவே பேசினர். பாஜக மற்றும் கர்நாடக இன வெறியர்கள் மட்டும்தான் அப்பட்டமாகவே மொழி வெறியுடன் பேசி வந்தனர். ஹொகேனாக்கல் தமது என்று சொந்தம் கொண்டாடினர். கர்நாடகாவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தமிழ்நாட்டின் பக்கம்தான் நியாயம் என்றே பேட்டி கொடுத்தார். பிரச்சினையை ஆரம்பித்தவர் என்ற வகையில் எடியூரப்பா கோமாளியை பத்திரிகையாளர்கள் சில கேள்விகள் கேட்டனர். அதற்க்கு அவர் சொன்ன பதில் படு பயங்கர காமெடி கலந்த திமிர்த்தனத்தின் உச்சம். உண்மையில் பொறுப்பற்ற பேச்சு, வகிக்கின்ற பதவிக்கு தகுதியான பேச்சு இல்லாமை - என்பதின் சுத்தமான எடுத்துக்காட்டாக எடியூரப்பாவின் திமிர்த்தனமான பேச்சு இருந்தது. தெஹல்கா பேட்டியில் அவன் சொல்லுவதை பாருங்கள்:
மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய பிற்பாடே ஹொகேனாக்கலில் வேலை நடக்க வேண்டும் என்றான் எடியூரப்பா. அதுதான் அனுமதி 1998லேயே வாங்கியாச்சே, அதுல கார்நாடகவும் கையெழுத்து போட்டுருக்கேன்னு கேட்டா அதுக்கு இவன் என்ன சொல்றான்னா:
"அதப் பத்தி எனக்கு தெரியாது. அது உண்மையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை".
விடாம தெஹல்கா கேள்வி கேட்டது: "தமிழ்நாடு மத்திய அரசின் அனுமதியில்லாமல் செய்கிறது என்று சொல்ல வருகிறீர்களா?"
இதுக்கு திரும்பவும் எடியூரப்பா கோமாளி என்ன சொல்றான்னு பாருங்க:
"எதுவும் கிளியரன்ஸ் கொடுத்தாங்களா என்னன்னு எனக்கு தெரியல"
ஒன்னு தெளிவா இல்லனு சொல்லனும், இல்ல ஆமான்னு சொல்லனும். ரெண்டுக்கும் இல்லாம இவரோட நம்பிக்கைகளின் அடிப்படையில் கொஞ்சம் கூட பொறுப்பின்றி ரத்த விளையாட்டு விளையாடுகிறான் இவன். பாபர் மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்ததும், சேது பாலமும் எங்க நம்பிக்கை என்று பேசும் பார்ப்பன திமிர்த்தனமும், எடியூரப்பாவின் கோமாளித்தனமும் இணைந்த பதில் இது.
ஏண்டா பாசிஸ்டு கோமாளி, ஒரு பிரச்சினையை பத்தி ஆதி முதல் அந்தம் வரை தெரிஞ்சுக்கனும்னு அவசியமில்ல. குறைஞ்ச பட்சம் ஒரு பத்து வருசம் முன்னால முக்கியமாக நடந்த விசயத்தை பத்தி எனக்கு எதுவும் தெரியாது என்றும், அது பத்தி கவலையில்லை என்ற தோணியிலும் பதில் சொல்லும் இவன் பொறுப்பானவனாம், ஆனால் நியாயமான கருத்துக்களை தெரிவிக்கும் கருணாநிதி பொறுப்பற்றவராம். சூத்திரனுக்கு ஒரு நீதி பார்ப்பனன் மற்றும் பார்ப்பன கொ.தாங்கிகளுக்கு ஒரு நீதின்னு இதத்தான் சொல்றோம்.
இதே மாதிரி சமீபத்தில் விதை நெல் தட்டுப்பாடு குறித்த பிரச்சினையில் இவனோட ஸ்டேட்மெண்டுகள் படு காமெடி. பிரச்சினை ஆரம்பிக்கிறதுக்கு முன்னயே உளவுத் துறை மூலமா மோப்பம் பிடிச்சானா என்னன்னு தெரியல, ஒரு நாள் முன்னயே அறிக்கை விட்டான். அதாவது கர்நாடகாவில் தேவையான அளவு விதைநெல் இருக்கு, யாரும் யார் பேச்சையும் கேட்டு கலவரம் செய்யாதீங்க, கலவரம் செய்றதுக்கு சிலர் சதி செய்றாங்க அப்படின்னு. இது மட்டுமில்ல மத்திய அரசை பாராட்ட வேற செஞ்சான். கலவரம் நடந்தது. இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் குண்டடி பட்டு மருத்துவமனையில். இப்போ என்ன சொல்றான்னா, விதை தட்டுப்பாடு இருக்கு, அதுக்கு காரணம் மத்திய அரசும், கவர்னரும்னு சொல்றான். விதை இருக்குன்னு சொல்லி மத்திய அரசு போதுமான சப்ளை இருக்க வழி செஞ்சதுக்கு பாராட்டுனது உண்மையா இல்ல இப்போ ரெண்டாவது நாளு அப்படியே தலைகீழா மாத்தி பேசுறது உண்மையா அப்படிங்கறத விட வேற ஒரு கேள்விதான் பெரிதாக மனதில் நிற்கிறது. விதை இருக்குன்னு சொல்லி அதுக்காக போராடினத சதின்னு சொன்னான் நேத்து. இன்னைக்கு விதை இல்லைனு அவனே சொல்றான் ஆனா இன்னமும் போராடுனவங்கள சதிகாரங்கன்னுதான் சொல்றான். உண்மையிலேயே பாசிஸ்டு கோமாளி யாருன்னு மக்களே... நீங்களே முடிவு செஞ்சிகோங்க..
விசயம் என்னன்னா, கோமாளித்தனமும், பாசிசமும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள். கோழைத்தனமே பாசிசத்தின் இன்னொரு முகம். எனவே பிரச்சினைகளை நேர்மையாக அணுக பயப்படும் பாசிஸ்டுகள் குறுக்கு வழி தேடி கோமாளிகளாக, சந்தர்ப்பவாதிகளாக வெளிப்பட்டுவிடுகிறார்கள்.
பாசிஸ்டு பார்ப்பன பயங்கரவாதிகளை பிரச்சாரம் செய்யும் ஊடகங்களோ அவர்களை ஹீரோக்களாக முன் நிறுத்தி, ஜனநாயக கோரிக்கைகளை ஏதோ ஒரு வகையில் பிரதிபலிப்பவர்களை காமெடியன்களாக சித்தரிக்கின்றன. நாம்தான் எச்சரிக்கையாக இவற்றை புரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி கட்டுரை ஆதாரம்: இமெயிலில் எழில்
அசுரன்
Related Articles:
துக்ளக் சோ நாறிய இடம்!
கழிசடைத் தளபதி விஜயகாந்தும், புரட்சிக்காரன் ரமணாவு...
தன்மானமும் ரஜினி ரசிகனும்!
அத்வானி, இல.கணேசன், ராம.கோபாலன் ஆகியோர் சமூகத்துக்...
வர்ணாசிரம கிரிமினலும்! ஹவாலா கிரிமினலும்!
வாஜ்பேயிக்கு கட்டாயம் கொடுக்கனும் பாரத ரத்னா!
பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத...
ஒகேனாக்கல் - எச்சப் பொறுக்கி RSS எடியூரப்பாவும், ம...
'Why did Karunanidhi talk the way he did?'
Yeddyurappa does a U-turn
பதிந்தவர் அசுரன் நேரம் Thursday, June 12, 2008 12 பின்னூட்டங்கள்
லேபிள்கள்: எடியூரப்பா, கோமாளிகள், பாசிஸ்டு, பார்ப்பனியம்
பதிந்தவர் அசுரன் நேரம் Sunday, June 08, 2008 1 பின்னூட்டங்கள்
லேபிள்கள்: சட்டீஸ்கர், சல்வாஜூடம், நக்சல்பரி, பினாயக் சென்
இதத்தான் நாங்களும் சொல்றோம்.... புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரிதான்....
இந்திய மக்களை ஆபத்திலிருந்து காப்பற்றும் போலி கம்யூனிஸ்டுகள்
பாஜக, காங்கிரஸ், CPM, CPI அத்தனை ஓட்டு கட்சிகளும் இதைத்தான் செய்கின்றன. அதாவது நாட்டை கூட்டிக் கொடுப்பது. அது பார்லிமெண்ட் அல்ல.. 'மாமா'மன்றம்
மாஜிக் மாமா....
கடைசீல டேங்க் கவர் கூட மிஞ்சாது போலருக்கு...
ஆடம்பரமாக அல்ல அத்தியாவசிய தேவைகளை கனவில் கண்டால் கூட இனி வரி விதிக்கும் இந்த அரசு. ஒட்டுண்ணியாக வெறும் வரி விதிப்பதையும், போலீசு, ராணூவம், சிறைச்சாலை, நீதிமன்றம் கொண்டு மக்களை ஒடுக்குவதையும் மட்டுமே செய்யும் இந்த அரசை தீ வைத்து சொக்கபானை கொளுத்துவது ஒன்றுதான் தீர்வு....
பங்கு சந்தை அதள பாதாளத்துக்கு போனா மட்டும் வந்துற்றானுங்க... நாடே அதள பாதாளத்துல தொங்குறத காப்பாத்தா இவங்கி எவனும் வரமாட்டான்கள். அத செய்யிறதுக்கு நக்சல்பாரிகள்தான் வரனும்...
அசுரன்
Related Articles:
உலக மக்களின் எதிரி அமெரிக்காவும் - மக்களின் உணவை த...
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - பகுதி 3
பஞ்சம்... பஞ்சம்.... பஞ்சம்...
எரிபொருள் எரிக்கிறதே...! எரிக்கிறதே...!!
அப்பாவி ஆடுகள் மீது பாயும் அமெரிக்க ஓநாய்
மக்களிடம் பணம் அதிகமாகிடுச்சு அதான் விலைவாசி உயர்வ...
தமிழக விவசாயத் துறை : பன்னாட்டு நிறுவனங்களில் தரகன்!
விலைவாசி உயர்வு : தனியார்மயம் பரப்பும் கொள்ளைநோய்!
பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம்
பதிந்தவர் அசுரன் நேரம் Friday, June 06, 2008 9 பின்னூட்டங்கள்
லேபிள்கள்: கார்ட்டூன்கள், பெட்ரோல், மாமாஸ், விலைவாசி
உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறையும், விலைவாசி உயர்வும் மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். இதற்கு முக்கிய காரணமாக, விவசாய உற்பத்தி(குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தி) திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதும், பயோ டீசலுக்கு என்று உணவு தானியங்கள் திருப்பி விடப்படுவதும், இருக்கின்ற கொஞ்ச விவசாய விளை பொருட்களும் பங்கு சந்தை சூதாட்டத்திற்கு என்று முன்பேர வர்த்தகம்(Futures Trading) மற்றும் காமாடிட்டி(Commodity) வர்த்தகம் என்ற பெயரில் திறந்துவிடப்பட்டுள்ளது, சர்வதேச அளவில் உயர்ந்து வரும் எண்ணைய் விலை உள்ளிட்டவைதான் காரணமாக உள்ளன. எண்ணைய் விலை உயர்விற்க்கும் அமெரிக்காவில் வேர் கொண்டுள்ள உலக நிதி மூலதன சிக்கலுக்கும் தொடர்புள்ளது என்று சொல்கிறார் ஒரு பதிவர். மேற்காசிய நாடுகளில் உள்ள எண்ணைய் வளங்கள் மீதான தனது ஆதிக்கத்திற்க்காக அங்கு தொடர்ந்து யுத்தங்களை உருவாக்கி அரசியல் செய்யும் அமெரிக்காதான் எண்ணைய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.
குறிப்பாக எண்ணைய் விலை என்பது ஒரு பேரல் என்பது 90டாலரோ என்னவோ இருந்து தற்போது 135டாலருக்கு உயர்ந்துள்ளது. இது மேலும் கடுமையாக உயரும் 1000 டாலரைக் கூட கடக்கும் என்று சொல்லி அபாயச் சங்கு ஊதுகிறார்கள்.
இப்படி தனது லாப வெறிக்காக உலக மக்களின் தலையில் அனைத்து அபாயங்களையும் ஏற்றியுள்ள அமெரிக்கா உலக மக்கள் அனைவரின் எதிரியாக நிற்கிறது. அமெரிக்க மேலாதிக்க ஒற்றை துருவ வல்லரசின் தலைமையிலான சர்வதேச ஏகாதிபத்திய முதலாளிகள் அதன் பின்னே அணிவகுத்து நிற்கின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மூன்றாம் உலக நாட்டிலும் உள்ள தரகு-நிலபிரபுத்துவ அதிகார வர்க்கம் மாமாக்களாக இருந்து ஓட்டச் சுரண்டிக் கொள்ளையடிக்க உதவுகின்றனர். இந்தியாவில் அம்பானி, பாஜக, டாடா, காங்கிரசு, CPM, CPI உள்ளிட்ட கட்சிகள் இந்த வேலையை தலைமேல் எடுத்துக் கொண்டு செய்து வருகின்றன.
இதுதான் தற்போதைய இந்த உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்த சுருக்கமான விவரனையாக உள்ளது.
இதன் விளைவாக அமெரிக்காவில் கூட ரேசன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஒரு எ-காவிற்கு அமெரிக்காவில் அரிசியின் விலை ஒரே மாதத்தில் 10 டாலர் இருந்தது 25 டாலர் என்று உயர்ந்துள்ளது. ஜிம்பாப்வே போன்ற நாடுகள் மிக மிக மோசமான விலைவாசி உயர்வை சந்தித்து வருகின்றன. உலகின் பல பகுதிகளும் ரேசன் விநியோகத்தை தொடங்கியுள்ளன. ஆப்பிரிக்க நாடுகளில் மண் பிஸ்கெட் சாப்பிடுகிறார்கள். இந்தோனேசியா அரிசிக்கு பதிலான எண்ணைய் தருவதாக பேரம் பேசுகிறது. தெற்காசிய நாடுகள் பலவற்றில் தானிய/நெல் கிடங்குகளுக்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மியான்மரில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து போரட்டம் பெரிய அளவில் நடந்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் உணவு தானிய ஏற்றுமதியை தடை செய்துள்ளன.
இந்த பிரச்சினைகள் குறித்து தமிழ்மணத்தில் கூட பல பதிவர்கள் ஆக்கப்பூர்வமாக பல்வேறு கட்டுரைகள் எழுதியிருந்தனர். வாழ்க்கை என்பதே கும்மிதான் என்று வசதியான வாழ்க்கை வாய்க்கப்பெற்ற (ரொம்ப) நல்லவர்களை இங்கு குறிப்பிடவில்லை. இழவு வீட்டிலும் கும்மியடிக்கும் அளவு நீச்சலனமான மனநிலை கொண்ட மிக உயர்ந்த ஆன்மாக்கள் அவர்கள். மாறாக அதிகளவு வாசகர்களை இழுக்காவிட்டாலும் இன்றைக்கு உலகையே அச்சுறுத்தி வரும் உணவு பற்றாக்குறை, விலைவாசி உயர்வு குறித்து ஒவ்வொரு குறிப்பிட்ட அம்சங்களில் அலசி ஆராய்ந்து, சிந்தனையை செலவழித்து எழுதும் அந்த முகம் தெரியாத பதிவர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள். அவர்களை தனித்தனியே பாராட்ட பேரவாவாக இருந்தாலும் அதற்க்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் இந்த கட்டுரை ஊடாக சமூக அக்கறை மிளிர எழுதும் அந்த பதிவர்களை பாராட்டுகிறேன்.
நிற்க, உணவு பற்றாக்குறை, விலைவாசி உயர்வில் முக்கிய காரணியாக இருப்பனவற்றில் ஒன்றான பங்கு சந்தை சூதாட்டத்தில் பதுக்கி வைத்து கோடிகளில் லாபம் சம்பாதிக்கும் கார்ப்போரேட் வேளாண் கழகங்கள் குறித்துதான் சுருக்கமாக இப்போது பார்க்க இருக்கிறோம். எரிகிற வீட்டில் சுருட்டிய வரை லாபம் என்று கொள்ளையடிக்கும் கல் நெஞ்சு படைத்த மிருகங்களாக பன்னாட்டு நிதி மூலதன முதலைகளும், கம்பேனிகளும் செயல்பட்டுள்ளதற்க்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்ல முடியும். சுனாமியால் மக்கள் லட்சக்கணக்கில் செத்து மடிந்த பொழுது அந்த அழிவை மறுகட்டுமானம் செய்யும் வாய்ப்புள்ளதை கவனத்தில் கொண்டு கட்டுமான தொழில்கழகங்களின் பங்குகளில் சர்வதேச நிதி குவிந்து சுனாமி பாதிக்கப்பட்ட நாடுகளின் பங்கு சந்தை குறீயீடு சுனாமி சாவைவிட படு வேகமாக உயர்ந்த அநாகரிகம் ஒன்று போதும் இவர்களைப் பற்றி புரிந்து கொள்ள.
தற்போது ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தானியங்களை பதுக்கியும், ஊகமாக தானியங்கள் இருப்பதாக காட்டி அதன் மீது பேரம் பேசி விலைஏற்றும் முன்பேர வர்த்தகத்தின் மூலம் தமது லாபத்தை 80% வரை உயர்த்தியுள்ளன இந்த சர்வதேச கொள்ளைக்கார கும்பல். உலக மக்களின் இழவில் தனது பாகாசுர வயிற்றை ரொப்பிக் கொள்கின்றனர் இந்த கிரிமினல் கும்பல்கள்.
தானிய கொள்முதல், விநியோகம் உள்ளிட்ட தானிய சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த சப்ளை செயின் எனப்பட்டும் அதன் முழுமையான விநியோக சங்கிலியிலும் ஈடுபட்டுள்ள கார்க்கில் எனும் அமெரிக்க கம்பேனி 2.34பில்லியன் டாலர் லாபம சம்பாதித்துள்ளது 2007ல் இது போன வருடத்தை விட 54% லாபம். இந்த கம்பேனி தற்போதைய உலகத்தின் இழவில் சூதாடி எவ்வளவு சம்பாதித்துள்ளது என்பதை பாருங்கள். 2008 முதல் காலாண்டு நிதி அறிக்கையில் காமாடிட்டி வர்த்தகத்தின் மூலம் மட்டும் அதனது வருவாய் 86% உயர்ந்துள்ளது. இதே போன்ற வேளாண் கழகமான அமெரிக்க கார்ப்போரேட் கம்பேனியான ஆர்ச்சர் டேனிய்ல் மிட்லாண்ட்ஸ் என்ற கம்பேனியும் பல மடங்கு லாபம் சம்பாதித்துள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த நோபல் குழுமம் வேளாண் பொருட்களின் மீது காமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபட்டு 95% லாபம் அதிகமாக ஈட்டியுள்ளது.
நம்மக்கிட்ட இருந்து அடிமாட்டு விலைக்கு நம்மோட ஒரு பொருளை வாங்கிட்டு பிறகு அதே பொருளை நமக்கே பல மடங்கு விலை உயர்த்தி விற்றால் அந்த பொருளை வாங்குபவனை அடி முட்டாள் என்று சொல்வது தகும் எனில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்து வருவது அதைத்தான். என்ன ஒரேயொரு வித்தியாசம் நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி கொடுத்துள்ள ஓட்டுக் கட்சி தரகர்கள்தான் நம்மை அடிமுட்டாள்களாக மாற்றியுள்ளனர். ஒரு எடுத்துக்காட்டுக்கு பாருங்கள் 1996-ல் அமெரிக்க கோதுமை உற்பத்தி பூச்சி தாக்குதலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டது. வேளாண் வியாபாரத்தில் முழு விநியோக சங்கிலியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்க்கில் நிறுவனம் ஒரு டன் 60$ முதல் 100$ வரை கொடுத்து இந்திய கோதுமையை வாங்கி அதனை சர்வதேச சந்தையில் 230$ முதல் 240$ வரை லாபம் வைத்து கொள்ளையடித்தது. இந்த பன்னாட்டு பன்றிகளுடன் வியாபரம் செய்ததால் மட்டும் நூறு மில்லியன் டாலர் ஏற்றுமதி லாபத்தை இந்தியா இழந்தது. இந்த ஏற்றுமதி இந்தியாவில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது இதன் விளைவாக சர்வதேச சந்தையில் விலை கூட இருந்த தான் தயாரித்த அதே கோதுமைய அதிக விலை கொடுத்து வாங்கியது இந்தியா. அதாவது அடிமாட்டு விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 2மில்லியன் டன் கோதுமையை திரும்ப சர்வதேச சந்தை விலை கொடுத்து வாங்கியது இந்தியா. ஒன்னுமே செய்யாமல் பல மில்லியன் கோடிகளில் நக்கிக் கொண்டு சென்றன பன்னாட்டு கொள்ளைக்காரர்கள். இது பாஜக ஆட்சியின் போது நிகழ்ந்தது.
இதே விசயம் வேறு வகையில் நடந்ததற்க்கு இன்னொரு எடுத்துக்காட்டு பாருங்கள். போன வருடம் கோதுமை, அரிசி கொள்முதலை வேண்டுமென்றே குறைத்துக் கொண்டது மத்திய அரசு. மேலும் விவசாயிகள் கேட்ட கொள்முதல் விலையும் தர மறுத்தது. இன்னிலையில் விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் விளை பொருட்களை விற்றுவிட்டனர். அதற்க்கு பிறகு ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து நமது விவசாயிகள் உருவாக்கியதை விட தரம் குறைந்த கோதுமை, அரிசியை விவசாயிகளுக்கு கொடுத்த கொள்முதல் விலையை விட அதிகம் கொடுத்து இறக்குமதி செய்தது இந்த அரசு.
1996-ல் போடப்பட்ட இந்தியா அமெரிக்க வேளாண் துறை ஒப்பந்தத்தின் (U.S.-India Agricultural Agreement) படிதான் இந்திய விவசாயத் துறை பன்னாட்டு கார்ப்போரேட் கம்பேனிகளின் சூறையாடலுக்கு திறந்துவிடப்பட்டது. 1990க்கு முன்பு உணவு உற்பத்தியில் தான் அடைந்திருந்த தன்னிறைவை உலகமயத்திற்க்கு பிறகு அதுவும் குறிப்பாக 1996 ஒப்பந்ததிற்க்கு பிறகு மொத்தமாக இழந்துவிட்டு நிற்கிறது இந்தியா. இந்த ஒப்பந்தத்தின் ஊடாகத்தான் கார்க்கில், AWB, கோனக்ரோ, ITC, லீவர் உள்ளிட்ட கார்ப்போரேட் கொள்ளையர்கள் இந்திய விவசாயத்தை சூறையாடியுள்ளனர்.
இப்படி பெரும்பான்மை மக்களின் அன்றாட வயிற்றுப்பாடு ஒரு சில ஊக வணிக வெறியர்களின் லாப வெறியின் நிழலில்/கருணைப் பார்வைக்காக விட்டு வைக்கப்பட்டுள்ளது . மனித ரத்த ருசி கண்ட காட்டு விலங்காக கொழுத்த லாபம் கண்டுள்ள இந்த நிறுவனங்கள் ரத்த வெறி பிடித்து உலகை உணவு பஞ்சத்தை நோக்கி நகர்த்தி செல்கின்றன. உலக மக்களின் எதிரியான அமெரிக்கா அரசயும், லாப வெறி பிடித்து உலகை வெட்டுகிளியாக சூறையாடி வரும் பன்னாட்டு-தரகு முதலாளிகளையும், அவர்களை போற்றி பாதுகாத்து நாட்டை கூட்டிக் கொடுக்கும் ஓட்டு கட்சிகளையும், இந்த போலி ஜனநாயக சுரண்டல் அமைப்பையும் தூக்கியெறியாமல் விடிவு இல்லை என்பதைத்தான் நாளுரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடக்கும் அனைத்து சம்பவங்களும் நிரூபிக்கின்றன.
அசுரன்
பாரதிதாசனின் பாடல் வரிகளை மனதில் ஏற்போம்:
பொல்லாத தீவினையால்
எல்லாப் பொருளும் தமக்கேயென்று
தள்ளாத வயதிலும்
தள்ளாது பொருட்குவிப்போருக்கும் - அதனால்
சொல்லொனா துயரத்தில் வாடுவோருக்கும்
இடையிலான வர்க்கப் போராட்டமே
இதுவரையிலான வரலாறு!
நெடும்பனை போல பொருள் வளர்க்க
கொடும்பாவம் செய்யும்; நல்லோர் நெறியறியா
இடும்பராம் ஒடுக்குபவரும்
ஒடுக்கப்படும் ஏழைகளும்
நேர் எதிர் நின்று நிரந்தரமாக
போர் புரிகின்றனர் புது புது களத்தில்
ஒரு நேரம் நேராகவும்
மறு நேரம் மறைமுகமாகவும்
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால்
ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆகிடுவார் உனரப்பா நீ!
ம க இ கவின் புரட்சிகர பாடல்களில் இருந்து சில வரிகள்:
கஞ்சி ஊத்த வக்கில்ல.. என்னடா கவர்மெண்டு.
நாட்டைக் கொண்டு போயி வித்துப்போட்டு என்னடா பார்லிமெண்டு.
:::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::
நகராட்சி வளர்ந்து மாநகராச்சு.. நாலணா வளர்ந்து ஒரு ரூபா ஆச்சு..
கக்கூசுக்குமாடா விலைவாசி உயர்வு? அதுக்கு காட் ஒப்பந்தத்திலே கண்டிசனாடா இருக்கு?
::::::::::::::::::::::
::::::::::::::::::::::
செட்டி நாட்டு சிதம்பரம்..இனி பட்டினிதாண்டா நிரந்தரம்
சினிமா பாடலில் வரும் சில வரிகள்:
**அண்ணே அண்ணே!
சிப்பாய் அண்ணே!
நம்ம ஊரு இப்பொ ரொம்ப கெட்டுப் போச்சிண்ணே!
இத சொன்னா வெக்கக்கெடு!
சொல்லாட்டி மானக்கேடு.....
::::::::::::::::::::
::::::::::::::::::::
ஒன்னரையணா... காய்கறிய....
ஒன்னாரூவா.... ஆக்கிப்புட்டாய்ங்க....
சொல்லுறத நான்... சொல்லிப் புட்டேண்ணா....
செய்யுறத... செஞ்சிப்புடுங்க..... ஹோய்...ஹோய்... ஹோய்...
அண்ணே அண்ணே!
சிப்பாய் அண்ணே!
Related Articles:
"உலகமயமாகும் உணவுப் பஞ்சம்"
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் - பகுதி 3
பஞ்சம்... பஞ்சம்.... பஞ்சம்...
எரிபொருள் எரிக்கிறதே...! எரிக்கிறதே...!!
அப்பாவி ஆடுகள் மீது பாயும் அமெரிக்க ஓநாய்
மக்களிடம் பணம் அதிகமாகிடுச்சு அதான் விலைவாசி உயர்வ...
தமிழக விவசாயத் துறை : பன்னாட்டு நிறுவனங்களில் தரகன்!
விலைவாசி உயர்வு : தனியார்மயம் பரப்பும் கொள்ளைநோய்!
பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம்
முன்பேர வர்த்தகம்: இன்னுமொரு சூதாட்டம்
பெட்ரோலியத் துறை : பொன் முட்டையிடும் வாத்து
பதிந்தவர் அசுரன் நேரம் Wednesday, June 04, 2008 11 பின்னூட்டங்கள்
லேபிள்கள்: பங்கு வணிகம், பஞ்சம், மாமா, முன்பேர வர்த்தகம், விவசாயம்
கர்நாடக வெற்றியை தொடரந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் நோக்கத்துடன் காய் நகர்த்த துவங்கியுள்ளது பாஜக. தனது வெளிநாட்டு கொள்கை அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது பாஜக. அதனையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நேபாளம் குறித்து சொன்னவைதான் கீழே உள்ள பத்திரிகை செய்தி.
கொழுப்பெடுத்த பாரதிய ஜனதாவின் கருத்துக்களை நோக்குங்கள். ஏற்கனவே காக்கி அரைடவுசர்கள் நேபாளத்தில் மன்னராட்சியை காப்பாற்ற பகிர பிரயத்தனம் செய்து மண்ணை கவ்வியுள்ளனர். தமது நேரடி முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில். நியாயவான்கள் போல வேசம் கட்டிக் கொண்டு புரளி பேசி வருகின்றனர் தற்போது. வழக்கம் போல தனது புரளி பிரச்சாரங்களை மெது மெதுவாக செய்து பிறகு தாக்குதல் தொடுக்கும் அதே தந்திரத்தை கைகொள்ள தொடங்கியுள்ளது இந்த பயங்கரவாத கட்சி.
இனி எதிர்காலத்தில் குட்டியூண்டு நாடு நேபாளம் இந்தியாவில் நடக்கும் பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு பயங்கரவாதிகளை தயாரிக்கும் நாடு, எல்லை தாண்டிய பயங்கரவாதிகளை உருவாக்கும் நாடு என்று பிரச்சாரம் செய்யப்படும். இந்திய தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் எல்லா அட்டுழியங்களும் வழக்கம் போல செய்யப்படும்.
இந்த சின்ன செய்தியில்தான் எத்தனை பொய்களை சொல்கிறது பாஜக...(சிகப்பு எழுத்தில் உள்ளவற்றை கவனிக்கவும்).
மாவொயிஸ்டுகள் பயமுறுத்தியே இத்தனை வோட்டு வாங்கியதாக பொய் சொல்கீறார்கள் இவர்கள். இதே குற்றச்சாட்டை மன்னர் ஆதரவு கும்பல் (வேற யாரு RSS நாய்கள்தான்) வைத்த போது. முன்னாள் அமெரிக்க அதிபர் கார்ட்டர் உள்ளிட்டோ ர் மாவொயிஸ்டுகள்தான் பிற கட்சியினாரால் மிரட்டி தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர் என்பதை குறிப்பிட்டதுடன் இந்த தேர்தல் மிக ஜனநாயகமான முறையில் நடந்துள்ளது என்று பாராட்டுகிறார்கள்.
//The elections were given a clean chit by international observer missions, including the United Nations, the European Union and the Carter Centre. All these bodies praised Nepal's Election Commission -- assisted by the United Nations Mission in Nepal (UNMIN) -- for smoothly executing the elections across the country. //
இதுவும் சர்வதேச சமூகம் இந்த தேர்தல் குறித்து சொன்னதுதான். இந்த தேர்தல் வாக்கு எடுப்பு திறந்த வெளியில் நடந்ததால் மொள்ளமாறித்தனம், கள்ளவோட்டு போன்றவை செய்ய வசதியில்லாமல் போய்விட்டது. விசயம் இப்படியிருக்க வழக்கம் போல பொய்களை நம்பியே அரசியல் செய்யும் பயங்கரவாத அமைப்பான கா(லி)வி கும்பல் இதிலும் பொய் சொல்கிறது.
மூன்றில் ஒரு பங்கு ஓட்டுதான் மாவோயிஸ்டுகள் வாங்கியுள்ளனர் எனவே மாவோயிஸ்டுகள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பாஜக மிரட்டுகிறது. அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டு நாட்டாமைத்தனம் செய்வது அநாகரிகமானது என்ற அடிப்படை நாகரிகம் இவர்களுக்கு ஆதரவான ஒரு வெறியன் ஆட்சி செய்தால் மட்டுமே இவர்களுக்கு ஞாபகம் வரும் போலும். இதே நேபாளத்தில் இந்நேரம் அந்த மன்னன் ஆட்சி செய்து அயோக்கியத்தனமாகா ஏதேனும் செய்திருந்தால் இவர்கள் அது அடுத்த நாட்டு விவகாரம் என்று கள்ளமௌனம் சாதித்திருந்திருப்பர். மக்களின் ஆதரவே இன்றி இதுவரை ஆட்சி செய்த மன்னருக்கு பாஜக வெறியர்கள் காவடி தூக்கிய பொழுது இந்த வோட்டு Sharing விசயம், people's Mandate போன்ற விசயங்கள் மறைந்த இடம் தெரியவில்லை. அதை விடுங்கள், இவர்கள் தற்போதைய கர்நாடக தேர்தலில் கூட காங்கிரசை விட கம்மியாகத்தான் வோட்டு வாங்கியுள்ளனர் (பாஜக 33.9, காங்கிரஸ் 34.6). ரொம்ப நன்னூல் எனில் ஆட்சியமைக்காமல் வெளியே செல்ல வேண்டியதுதானே காக்கி அரைடவுசர் பயங்கரவாதிகள்? மாறாக வந்த மறு நிமிடத்திலிருந்தே தமது வெறித்தனங்களை அரங்கேற்றி வருகின்றனர். தமிழ் சினிமா ஷூட்டிங் செய்தவர்கள் தாக்கப்பட்டதிலிருந்து, ஹொகேனாக்கல் பிரச்சினையில் திமிர்த்தனம் செய்வது வரை.
செக்குலர் என்றால் சனாதன தர்மமாம். எங்கே சனாதன தர்மம் என்றால் சாதி வெறி தத்துவம் என்று சாணியடிப்பார்களோ என்று பயந்து போய் 'தி ஹிந்து' தனது சொந்த முயற்சியில் பிராக்கெட்டில் ஹிந்துயிசம் என்று விளக்கம் வேறு கொடுக்கிறது. சனாதன தர்மம் அதாவது ஹிந்துயிசம்தான் செக்கூலரானதாம்? எப்படி என்பதற்க்கு ஆதாரமாக பாபர் மசூதி இடிப்பிலிருந்து, சிதம்பரம் கோயில் பிரச்சினை, நீதிமன்ற தீர்ப்புகள், சேது சமுத்திரம் பிரச்சினைம், கோமாதாவுக்கு புண்ணாக்கு வரை பலவும் ஆதாரங்களாக உள்ளன. செக்கூலர் என்பதற்க்கு இவர்களது அகராதியில் வழக்கம் போல ஒரு தலைகீழ் அர்த்தம் வைத்திருப்பார்கள்.
செக்குலர் என்கிற வார்த்தையை பயன்படுத்துவது நெகடிவாம், மாறாக ஹிந்துயிசம் என்று பார்ப்ப்னியத்தை கடைபிடிப்பது மட்டும்தான் உண்மையான செக்கூலரிசமாம். ஏற்கனவே இந்தியாவில் பெயரில் செக்கூலரிசம் என்று போட்டுக் கொண்டு நடைமுறையில் பார்ப்பனியத்தை கடைபிடிப்பதையே இவர்கள் போலி செக்கூலரிசம் என்று சொல்லும் பொழுது, நடைமுறையிலும் பார்ப்பனியத்தை கடைபிடிக்காமல் போகும் அபாயம உள்ள இடங்களை எந்தளவுக்கு வெறுப்பார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவர்கள் கணக்கில் உலகில் நேபாளம் மட்டுமே இது வரை செக்கூலராக இருந்த நாடு. அந்த ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. கொள்ளையடிப்பதையே உழைப்பு என்றும், ஏமாற்றி பிழைப்பதையே திறமை என்றும் கூறும் இந்த ஏகாதிபத்திய ஏவல் நாய்கள் பார்ப்பினியத்தையே செக்கூலரிசம் என்று சொல்வது ஒன்றும் வித்தியாசமானது அல்ல.
ஒரு ஆதிக்க வெறி தத்துவம் செக்கூலராக எப்படி இருக்க முடியும் என்பதை காக்கி அரைடவுசர்களின் இணைய கோமானாண்டிகள் இதே பதிவில் நமக்கு விளக்கினால் சிறப்பாக இருக்கும். நமக்கும் அவிங்கள அடிச்சு டவுசர லைவா(Live) கழட்டி ரொம்ப நாள் ஆயிருச்சி... வருவார்களா?
அசுரன்
Nepal as a secular state, a negative development: BJP
Neena Vyas
NEW DELHI: The declaration of Nepal as a secular state is a “negative development,” but the end of monarchy in what was till recently the world’s only Hindu kingdom is the result of the “wishes of the people,” says the Bharatiya Janata Party.
Releasing the party’s seven-page foreign policy resolution here on Monday, the former External Affairs Minister, Jaswant Singh, clarified its views in response to questions.
Clearly, the BJP did not think that the recent election gave the Communist Party of Nepal(Maoists) any mandate, although it expressed its “satisfaction” with the poll. It said the CPN(M) needed to be restrained in its conduct and utterances “as they had only about a third of the popular vote, and that too, obtained through intimidation.”
As for abolition of monarchy, Mr. Singh said, “It is for the people of Nepal to decide not to have a monarchy.”Was the BJP happy about Nepal becoming a secular state? He said: “As an Indian and a believer in ‘sanatan dharma’ [Hinduism], I feel diminished. … There are four ‘dhams’ [pilgrimage centres] in India and the fifth, Pashupati Nath, is in Nepal. There is nothing more secular than ‘sanatan dharma’. … This is a negative development [in Nepal].”
Related Article:
நோபளம் : இதுவன்றோ ஜனநாயகத் தேர்தல்!
பதிந்தவர் அசுரன் நேரம் Tuesday, June 03, 2008 5 பின்னூட்டங்கள்
லேபிள்கள்: BJP, RSS, செக்கூலரிசம், நேபாளம், பொய்
சமீபத்தில் நிறைவுற்ற மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்களில் CPM பெரும் சரிவை சந்தித்து உள்ளது. குறிப்பாக டாடா சலீம் கும்பலுக்கு மாமா வேலை பார்த்து மக்களை சாகடித்த சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. இந்த பகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றியடைந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரசு, சுசி(SUCI) கூட்டணி நந்திகிராம் ஜில்லா பரிஷத்துகள் 53ல் 35ல் வெற்றி பெற்றுள்ளனர். ஜில்லா பரிஷத்தை கைப்பற்றியுள்ளனர். நந்திகிராமின் கிராம் பஞ்சாயத்துக்கள் பத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சிங்கூர் பகுதியிலோ 16 கிராம் பஞ்சாயத்துக்களில் 15 திரிணாமுல் காங்கிரஸ் வென்றுள்ளது. இந்த இரண்டு இடங்களும் CPMன் கோட்டைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இருபது வருடங்களில் ஜில்லா பரிஷத் அளவில் அவர்கள் தோல்வியடைவது இதுதான் முதல் முறை.
குறிப்பாக இந்த தேர்தலில் CPM சரிவு தனது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது தெரிகிறது. மேற்கு வங்காளத்தை பொறுத்த வரை CPMன் பிடி என்பது நழுவிக் கொண்டிருப்பதைத்தான் கடந்த தேர்தல்கள் அனைத்தும் காட்டியுள்ளன. ஆனால் இந்த முறை CPMன் கோட்டை என நம்பப்படும் கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் பெரும் பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டுள்ளது. இந்த பின்னடைவு வெறுமே நந்திகிராம், சிங்கூர் பகுதிகளில் மட்மல்ல. மே.வ. முழுவதுமே அரசாங்க வெறுப்பு மனோபாவம் வெளிப்பட்டுள்ளது.
போனமுறை கிராம பஞ்சாயத்துகளில் 2303 இடங்கள் வென்றது போய் இந்த முறை 1633தான் வென்றுள்ளனர். மாறாக எதிர்கட்சியினர் 917 இடங்களிலிருந்து 1463 என்று அதிகமாகியுள்ளனர். பஞ்சாயத்து ஸமிதிகளில் போன முறை 45 இடங்கள் வென்ற எதிர் அணியினர் இந்த முறை 189 இடங்களில் வென்றுள்ளனர். CPM 284 இடங்களிலிருந்து 189ஆக சுருங்கியுள்ளனர்.
CPMன் ஜனநாயக மாண்பும், ரவுடியிசமும்:
இது ஒரு பக்கம் இருக்க, ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக் கொண்டே அத்தனை அராஜகங்களையும், ரவுடியிசங்களையும், பாசிச நடவடிக்கைகளையும் செய்யும் CPM இந்த தேர்தலிலும் கூட வழமை போல குண்டுகள் போடுவது, ஓட்டு போட வருபவர்களை மிரட்டி விரட்டுவது, வாக்கு சாவடிகளை கைப்பற்றுவது உள்ளிட்ட எல்லா தோழமை நடவடிக்கைகளையும் முயற்சி செய்தே பின்னடைவை சந்தித்துள்ளனர்.
(மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM!)
இடது முன்னணி கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளில் ஒன்றான RSPக்கும், CPMக்கும் இடையே நடந்த சண்டைகள் CPMன் புரட்சிகர நடைமுறைக்கு சாட்சியாக நிற்கிறது. குண்டுகள் வீசிக் கொண்டும் துப்பாகிகளால் தாக்கிக் கொண்டும் என்று ஜனநாயக நடைமுறைகளை செழுமையாக கடைபிடித்துள்ளனர். CPM குண்டர்கள் தாக்கியதில் 4 RSP தொண்டர்கள் பலியாகியுள்ளனர். ஏற்கனவே கல்காத்தாவில் நடந்த ஒரு SEZ எதிர்ப்பு போராட்டத்தில் பார்வார்ட் ப்ளாக் கட்சி தொண்டர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது போல பல இடங்களில் குண்டு வீச்சுகள் நடந்துள்ளன. வாக்குச் சாவடி 17, 18-ல் CPM குண்டர்கள் தாக்குதலில் ஈடுபட்டு குண்டு வீசியதில் வாக்குச்சாவடி அலுவலர் காயமடைந்ததை ஒட்டி அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நந்திகிராமில் தேர்தலுக்கு பல நாட்கள் முன்பிருந்தே தமது அயோக்கியத்தனங்களை ஆரம்பித்து விட்டனர் காமரேடுகள். மே 10 ஆம் தேதி பூமி பாதுகாப்பு சங்கத்தினர் மீது துப்பாக்கி சுடு நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. துப்பாக்கி குண்டடி பட்டவர்கள் தம்லக் ஆஸ்பத்திரிக்கு அனுப்பட்டனர். இன்னொரு இடத்தில் CPMஆல் விரட்டியடிக்கப்பட்ட 200 வீடில்லாதவர்கள் தேர்தல் பெட்டிகளை கைப்பற்றி போராட முற்பட்டுள்ளனர்.
நந்திகிராமில் CRPFக்கும் லோக்கல் போலீசுக்கும் சண்டை. வீடுகளில் ஆயுதங்கள் ஒழித்து வைத்துள்ளனரா என்றூ தேட முனைந்த CRPFயினரை லோக்கல் போலீசு தடுத்துள்ளனர். இத்துடன் CRPF, CPM சண்டை தொலைக்காட்சிகளில் நாறியது தனிக்கதை. நந்திகிராமில் பலருடைய வாக்காளர் அடையாள அட்டைகளை பறித்துள்ளனர் CPM குண்டர்கள். புகார் கொடுத்த பிற்பாடு இரண்டு இடங்களில் வேறு அடையாள அட்டைகளை உபயோகப்படுத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டே தேர்தல் நடந்துள்ளது.
மேவவில் தனது பாசிச நடவடிக்கைகளை - அது தொழிற்சங்க தலைவர்களை, தொழிலாளர்களை அடித்து மிரட்டுவதாகட்டும், அல்லது இது போன்ற தேர்தல் வன்முறையாகட்டும் அல்லது வெகு மக்கள் போராட்டங்களை துப்பாக்கி குண்டுகளால் ஒடுக்குவதாகட்டும் - தனது குண்டர் படை கொண்டும், அரசின் அதிகாரப்பூர்வ குண்டர் படையான போலீசின் துணை கொண்டும் நிறைவேற்றி வருகிறது CPM. இன்று வரை இந்த நடவடிக்கைகள் குறித்து எந்தவொரு வருத்தமும் தெரிவிக்கவில்லை CPM தலைமை. மாறாக மக்கள் தமக்கு விரோதமாக செல்வதாயிருந்தால் கூட மே.வவை பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கு கூட்டிக் கொடுப்பதிலிருந்து பின் வாங்க மாட்டோம் என்கிறார்கள் CPM தலைவர்கள். பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கு கோபம் வரக் கூடாது என்பதற்க்காக தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. வேறு தொழில்சங்கம் வைக்கும் முயலும் தொழிலாளர்கள் மக்கள் முன்னிலையிலேயே CPM குண்டர்களால் அடித்து நொறுக்கப்படுகிறார்கள்.
உத்தபுரமும், இரட்டை நாக்கு பாசிச CPM:
இப்படி அப்பட்டமாக ஒரு ஓட்டுக் கட்சிக்குரிய அத்தனை சீரழிவு பண்புகளையும் வெட்கமின்றி, மற்ற ஓட்டுக் கட்சிகளை விட மோசமான பாசிச முறைகளில் நடைமுறைப்படுத்தும் இந்த கட்சி பிற இடங்களில் முற்போக்கு வேடம் போட்டு ஊரை ஏமாற்றி வருகிறது. குறிப்பாக உத்தபுரம் ஆதிக்க சாதிவெறி சம்பவத்தில் CPM கட்சி மிகப் புரட்சிகர வேடம் ஏற்று சிறப்பாக நடித்து வருகிறது. உத்தபுரம் தாழ்த்தப்பட்டவர்களுக்காக CPMன் தமுஎச உறுப்பினரும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவருமான ஆதவன் தீட்சன்யா குரல் கொடுப்பார், ஆனால் அதே தமுஎசவின் மேலான்மை பொன்னுசாமி உள்ளிட்டோர் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்கும் ஆதிக்க சாதி வெறியர்களின் தலைவனும், தேவர் சாதி வெறியனுமான முத்துராமலிங்கனின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வர். அதுவும் பாஜகவின் திருநாவுக்கரசு தலைமையில். இப்படி பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் வேசம் கட்டி இரண்டு பக்கத்து ஓட்டுக்களையும் நக்கி தின்கும் முற்போக்கு செயல்தந்திரம்தான் உத்தபுரம் விசயத்தில் வேலை செய்கிறது. குறிப்பாக சொன்னால் இவர்களது MP தொகுதியான மதுரைக்கு அருகிலுள்ள பாப்பாபட்டி, கீரிப்பட்டி பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் தேர்தலில் நிற்க முடியாமல் இருந்த பிரச்சினையில் இவர்கள் அடக்கி வாசித்ததும், இந்த உத்தபுரம் பிரச்சினையில் வீறு கொண்டு எழுந்து புரட்சி வேசம் கட்டி ஆடுவதிலும் உள்ள வேறுபாட்டை தீர்மானிப்பது வோட்டு எண்ணிக்கைதானேயன்றி வேறல்ல. ஏனேனில் பாப்பாபட்டி கீரிப்பட்டியில் ஆதிக்க சாதியினர் வோட்டு எண்ணிக்கை அதிகம் ஆனால் உத்தபுரத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் வோட்டு எண்ணிக்கை அதிகம். மற்றபடி உத்தபுர தாழ்த்தப்பட்டவர்கள் மீதான ஒடுக்குமுறை இவர்களின் போராட்டத்தை தீர்மானிக்கவில்லை. இன்றைய உத்தபுர புரட்சியாளர்கள், நாளை உத்தபுரத்தை இன்னொரு நந்திகிராமாகக் கூட மாற்றுவார்கள் என்பது வேறுகதை. உத்தபுரத்தில் பெரிய நன்னூல் போல பேசும் CPM பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் மேலான்மை பொன்னுசாமி சொன்ன கருத்துக்களுக்கு கள்ளமவுனம் சாதித்த மர்மமும் இந்த வோட்டு பொறுக்கித்தனத்தில்தான் அடங்கியுள்ளது.
அசுரன்
Related Article:
CPM government has shot killed five Forward Bloc party persons over Anti SEZ protest
SEZயை எதிர்த்த பார்வேர்ட் ப்ளாக் கட்சியினர் ஐந்து பேர் CPM அரசால் சுட்டு சாகடிக்கப்பட்டனர்
கம்யுனிஸ்டு பார்ட்டி ஆப்பு இந்தியா - CPM வெறி நாயும்! CPIயும்!
பதிந்தவர் அசுரன் நேரம் Sunday, June 01, 2008 4 பின்னூட்டங்கள்
லேபிள்கள்: CPM, உத்தபுரம், தேர்தல், பொறுக்கி, மேற்கு வங்கம்