TerrorisminFocus

Showing posts with label குண்டு வெடிப்பு. Show all posts
Showing posts with label குண்டு வெடிப்பு. Show all posts

Thursday, October 07, 2010

தீபாவளி, நவராத்தியின் போது பயங்கரவாதிகளின் தாக்குதல் அபாயம் உள்ளது எச்சரிக்கை!!

வெடிகுண்டு 1:

கடந்த தீபாவளியைப் போலவே இந்த தீபாவளிக்கும் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பு தாக்குதல் அபாயம் உள்ளதென்று உளவுத் துறை எச்சரிக்கை செய்துள்ளது. அதுவும் குறிப்பாக கோவாவில் அபாயம் அதிகமாம்.

போன வருடம் உளவுத் துறை எச்சரிக்கை செய்ததைப் போலவே காவி பயங்கரவாதிகள் கோவாவில் இந்துக்கள் மீது குண்டு வைக்கும் முயற்சியிலிருந்த பொழுது, அந்த சதியில் தாமே பலியாகி வெடித்துச் சிதறினர்.

ஆகவே ஜனங்களே, அதே போல இந்த தீபாவளிக்கும் இந்துக்கள் மீது இந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாலும். போன தடவை செய்து மாட்டிக் கொண்டது போலல்லாமல், இந்த முறை திறம்படச் செய்து முஸ்லீம்கள் மீது பலி போட்டு, அவ்வகையான தாக்குதலைக் காரணம் காட்டி மதவெறி தூண்டி மக்களை துண்டாடி, ரத்தம் குடிக்கும் அபாயம் இருப்பதாலும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், இந்து காவி பயங்கரவாதிகளின் பிரித்து மோதவிடும் அரசியலுக்கான ரத்த பலி சூத்திர/தாழ்த்தப்பட்ட இந்துக்களின் உடலிலிருந்தே எடுக்கப்பட வேண்டியுள்ளதை அவர்களின் முந்தைய நடவடிக்கைகள் பல நிரூபித்துள்ளன என்பதால், இந்த எச்சரிக்கைகளை இந்துக்கள் எனச் சொல்லப்படுபவர்கள் தகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டுகிறேன். இந்து என்றால் யார் என்று சந்தேகமுள்ளவர்களுக்கு கீழ்கண்ட சட்ட விளக்கம்:

"யார் முஸ்லீம், கிருத்துவ, சீக்கிய மதங்களைச் சேர்ந்தவரில்லையோ அவர் இந்து".**


இந்த பதிவை படித்து எழுச்சியுற்ற இந்துக்களுக்கான பாடல்(கிளிக்கி பாடலைக் கேட்க்கவும்):

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை....
அந்த ஆர் எஸ் எஸுக்காரன் வற்றான் எச்சரிக்கை...

எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை....
கையில் தீவட்டிய எடுத்து வற்றான் எச்சரிக்கை...



**இந்து குறித்த இந்த சட்ட விளக்கம் அப்படியே அயோத்தி தீர்ப்பு நகலைப் போல டாமால் டூமீலாக இருப்பதற்கு கொம்பேனி பொறுப்பல்ல.

அசுரன்

Monday, September 06, 2010

அக்சார்தம் கோயிலை தாக்கியவர்களுக்கு மரணதண்டனை, பாபர் மசூதியை தாக்கிய காவி பயங்கரவாதிகளுக்கு?

இந்தியாவின் அதி பயங்கர உள்நாட்டு அச்சுறுத்தல் - தேசத் துரோக காவி பயங்கரவாதி அத்வானி

ல்லாயிரம் பேரை கொன்றுவிட்டு, கோயிலை இடித்துவிட்டு, கலவரங்கள் செய்துவிட்டு இந்தியாவில் பாதுகாப்பாக, பெருந்தலைவர்களாக வலம் வர முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டியவன்தான் அத்வானி என்ற காவி பயங்கரவாதி. இவனது அடியொற்றிய அதி பயங்கரவாதிதான் மோடி என்பவன்.













இன்று அக்சார்தம் கோயிலைத் தாக்கியவர்களுக்கு மரண தண்டனை இடை-நிறுத்தி வைக்கப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் மரண்தண்டனை வழங்கப்பட்ட பயங்கரவாதிகள்தான் இவர்கள். ஏனேனில், இவர்கள் சிறுபான்மை முஸ்லீம்கள் என்பதால், 'சிறுபான்மையை குளிர்விக்கும்' நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், இதற்கும் முன்பே பாபர் மசூதியை இடித்ததுடன், ரத யாத்திரைகள், கலவரங்கள் நடத்தி பல ஆயிரம் மக்களை படுகொலை செய்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாதி அத்வானியோ ஒரு தண்டனைக்கும் இதுவரை ஆளாகவில்லை. அவர்களது காவி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பரிசாக இந்தியாவின் 'முக்கிய'த் தலைவர்கள் என்ற கௌரவம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.






இது என்னவகையான சிறுபான்மையை குளிர்விக்கும் அரசியல் என்பதை ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்தான் விளக்க வேண்டும். அத்வானி, மோடி போன்ற தேசத் துரோக காவி பயங்கரவாதிகள் மீது சிறு துரும்பைக் கூட தூக்கிப் போட வக்கில்லாத 'காவி மனிதாபிமானி'கள்தான் தற்போது மரண தண்டனை ஒப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சிறுபான்மை குளிர்விப்பு அரசியல் என்று ஓநாயைப் போல ஓலமிடுகிறார்கள். இவர்கள் அத்வானி, மோடி போன்றோருக்கு மரண தண்டனை இன்று வரை நிறைவேற்றப்படாததை எதிர்த்தும் ஓலமிட்டிருந்தால் நியாயவான்களாக கருத இடமுள்ளது.

இப்படி எரிப்பது எப்போது?

டைம்ஸ் நௌ போன்ற காவி பயங்கரவாத ஊடகங்களோ அல்லது என் டி டி வி போன்ற அரசு பயங்கரவாத ஊடகங்களோ அத்வானி போன்ற காவி பயங்கரவாதிகளுக்கு தமது ஆதரவையே எப்போதும் தருவார்கள். 'காவி பயங்கரவாதம்' என்ற வார்த்தை சரியா தவறா என்று தேச முக்கியத்துவம் வாய்ந்தவற்றை விவாதிப்பவர்கள்தான் இவர்கள். இத்தகைய காவி பயங்கரவாதிகளை பாதுகாக்கும் அவர்களின் பினாமி அரசா தண்டனை தரப் போகிறது?....

அசுரன்

படியுங்கள், பயம் கொள்ளுங்கள்

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...1 -2

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில்...3_4

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

Sunday, July 18, 2010

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

(இந்து பயங்கரவாத அமைப்பின் கொடி)





(அயோத்தியில் பஜ்ரங்தள் சிறார்களுக்கு ஆயுதப் பயிற்சி)

சி
பிஐ வசம் இருக்கும் சில முக்கிய விடியோக்களை போன வாரம் ஹெட்லைன்ஸ் டுடே என்ற செய்தித் தொலைக்காட்சி சேவை நிறுவனம் ஒலிஒளி பரப்பியது (6 விடியோக்கள்) . அவை அனைத்தும் பட்டாசு ரகங்கள். ஆர் எஸ் எஸ்ன் முக்கியத் தலைவர்கள் பயங்கரவாதிகள் என்ற உண்மை வெளிவந்தது. இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை கொல்வதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளனர் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள்.

இந்த பயங்கரவாத கும்பலை இயக்கியவர்களில் ஒருவன் இந்திரேஸ் குமார். இவர் ஆர் எஸ் எஸ்ல் பல முக்கியப் பொறுப்புகள் வகிப்பவர். இவன் தான் காஷ்மீர் அமர்நாத் நிலப் பிரச்சினையை தூபம் போட்டு வளர்த்தவர்களில் ஒருவன். இவன் தான் நேபாள் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும் வேலை செய்துள்ளான். குறிப்பாக ஆர் எஸ் எஸ்ன் முஸ்லீம் பிரிவின் தலைவரே இவர்தான். என்னவொரு முரன்நகை? ஆர் எஸ் எஸ் கும்பல் முஸ்லீம் வேசம் போட்டு குண்டு வைக்கும் போது அதன் தலைவர்களோ முஸ்லீம்களுக்கு அமைப்பு ஏற்படுத்தி அதற்கு தலைமை வகிக்கிறார்கள்.

கடந்த சில வருடங்களில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் ஆர். எஸ். எஸ்ன் பாத்திரம் மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகி வந்துள்ளது. குறிப்பாக, மலேகான் குண்டு வெடிப்பு கைதுகள் விரிவாக நடந்து அதில் ஆர் எஸ் எஸ்ன் நேரடி பாத்திரம் மறுக்க இயலாத அளவு அம்பலமானது. ஆயினும் ஆர் எஸ் எஸை தடை செய்யவோ அதன் அலுவலகங்களை சோதனையிட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்யவோ அரசு தயாராக இல்லை (இந்த இடத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்பின் மீது நடத்தப்பட்டுள்ள அரசு தாக்குதல்களை ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளவும்).
(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாதிகள்)


(இந்து பயங்கரவாதி இந்திரேஸ் குமார் - ஆர் எஸ் எஸ் தலைவன்)


ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் மிகத் தைரியமாக பேசி வருவதும், ஏதோ முஸ்லீம் குண்டு வைச்சான் அதனால் நான் திருப்பி குண்டு வைக்கிறேன் என்பது போலவும் நியாயப்படுத்தி வந்துள்ளது. ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் முஸ்லீம் வேசம் போட்டுக் கொண்டு இந்துக்கள் கூடும் இடங்களில் குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. மேலும் இதுவரை இவர்கள் மாட்டிக் கொண்டுள்ள குண்டு வெடிப்புகள் எதிலுமே அவை முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையிலேயே செய்துள்ளனர். ஆக இவர்களின் நோக்கம் மக்களை மத அடிப்படையில் மோத விட்டு ரத்தம் குடிக்க வேண்டும் என்பதே ஆகும். இஸ்லாம் பயங்கரவாதிகள் ஆர் எஸ் எஸ்ன் எதிர்பார்ப்புக்கு பொறுத்தமான அளவு அதிகமான குண்டு வெடிப்புகளை நிகழ்த்தவில்லை என்பதே இவர்களின் வருத்தம். வருத்தத்தை தீர்க்கும் வகையில் முஸ்லீம் வேசம் கட்டி ஆர் எஸ் எஸ் கும்பலே குண்டுகள் வைக்கத் தொடங்கிவிட்டனர்.

(இந்து பயங்கரவாதிகள் குண்டு வைத்துள்ள இடங்கள்)

ஆதாரம்: outlook india

மாட்டிக் கொண்டவர்களின் இன்னொரு பயங்கரவாத தலைவன், பாஜகவின் முன்னாள் இருமுறை எம்பி பி. எல். சர்மா. இவனும் மாலேகான் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளிகள் தாயனந்த் பாண்டே மற்றும் லெப்டினண்டு ஸ்ரீரிகாந்த் புரோகித் ஆகியோர் இந்தியா முழுவதும் குண்டு வைத்து லட்சக்கணக்கில் மக்களைக் கொல்வது குறித்து பேசுகின்ற விடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் எஸ்ன் முகமுடி அமைப்பான அபினவ் பாரத் என்ற பயங்கரவாத குழுவே முக்கிய குண்டு வெடிப்பு குற்றவாளி ஆகும். இந்த அமைப்புடன் பல விவாதங்களில் பங்கெடுத்துள்ளான் பாஜக முன்னாள் எம்பி சர்மா.

ஜனவரி 2008ல் பரிதாபாத்தில் நடந்த இவர்களின் கூட்டத்தில் (சர்மா மற்றும் பிற பயங்கரவாதிகள்) இந்திய குடியரசுத் துணைத்தலவரை கொல்லும் திட்டம் தோல்வியடைந்தது குறித்து விவாதித்துள்ள விடியோவும் அம்பலமாகியுள்ளது.

(பயங்கரவாதிகளின் அணிவகுப்பு)
ஆர் எஸ் எஸ் தலைவன் பயங்கரவாத கும்பலின் வழிகாட்டி இந்திரேஸ் குமார் பேட்டி எடுத்தது ஹெட்லைன்ஸ் டுடே. ஆர் எஸ் எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்ற உண்மைகளை சொல்லி அவனிடம் பேசிய பொழுது மறுக்க வழியின்றி ஒடிவிட்டான் பயந்தாக்கொள்ளிப் பயல்.

உண்மைகளை வெளிப்படுத்திய குற்றத்திற்காக ஹெட்லைன்ஸ் டுடே நிறுவனத்தை வெள்ளிக்கிழமை 2000 ஆர் எஸ் எஸ் ரவுடிகளை அனுப்பி தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் குறித்தும் ஆர் எஸ் எஸ் அம்பலமானது குறித்தும் பிற இந்திய ஊடகங்கள் அதிகபட்ச மௌனம் காத்தன (தெஹல்காவிற்கு காட்டியது போலவே).

இவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை போய்விட்டதாம் எனவே இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகிறார்களாம். இதே போல கூறிய 'குற்றத்திற்'காகத்தான் தியாகத் தோழர் ஆசாத்தின் படுகொலை நியாயப்படுத்தப்பட்டது. இந்திய அரசு ஆர் எஸ் எஸ் தலைவர்களை நாயைச் சுடுவது போல சுட்டுக் கொல்லுமா? நாய்க்கும் தன் குட்டி பொன் குட்டி, எனவே அவர்கள் செய்ய மாட்டார்கள்......

அசுரன்

தரவுகள் ஆதாரம்: ஹெட்லைன்ஸ் டுடே

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!



சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!



Hindu Rashtra: Saffron terror's hall of shame



The Headlines Today sting




Vedio-Saffron goons attack HT Delhi office


Saffron goons attack Headlines Today office


Hindu terror is a reality, yet India refuses to utter its name

Saturday, July 10, 2010

சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!




ஜ்மீர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்து பயங்கரவாதி தேவேந்திர குப்தா சிபிஐ அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். அதன்படி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆர் எஸ் எஸ் முன்னணித் தலைவர்களான அசோக் வார்செனே மற்றும் அசோக் பெரே ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து லக்னோ சித்தாப்பூர் பகுதிகளில் தங்க வசதி செய்து கொடுத்துள்ளனர். இது குறித்து சின் என் என் ஐபிஎன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இங்கே.




(பயங்கரவாதிகளின் அணிவகுப்பு)

ஏற்கனவே, தேவேந்தர் குப்தா தீவிரமான ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் தெரிவித்திருந்தார். ஏதோ தனது அணிகள்தான் உணர்ச்சிவசப்பட்டு குண்டு வைத்துவிட்டார்கள் விடுங்கள் என்பது போல கதை விட்டு வந்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாத கும்பல் இப்போது தனது முன்னணி தலைவர்களே மாட்டிக் கொண்டுள்ளது பற்றி வாயை மூடி மௌனம் காக்கிறார்கள்.

இதே அஜ்மீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் அரசு சொன்னது என்ன தெரியுமா? முஸ்லீம் பயங்கரவாதிகளே காரணம் என்று சொன்னது. Ajmer blast trail leads to Hurriyat


(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாதிகள்)

ஏற்கனவே, 2009ல் தீபாவளிக்கு முந்தைய நாள் கோவாவில் இந்துக்கள் கூடும் இடத்தில் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் இருவர் குண்டு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அது தவறுதலாக வெடித்து கொல்லப்பட்ட சம்பவத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவும். கடந்த சில வருடங்கள் முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையில் வேசமிட்டுக் கொண்டு ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகள் நடத்திய பல்வேறு குண்டு வெடிப்புகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன. அவற்றில் இதுவும் ஒன்று. ஆனாலும், ஆர் எஸ் எஸ் ஒரு கலாச்சார அமைப்புதான் என்று இன்னமும் சில நல்லவர்கள் சொல்லி வருகிறார்கள். இந்துவோ அல்லது வேறு எதுவோ மத அடிப்படைவாத பயங்கராவாதிகள் யாராயிருந்தாலும் நிராகரிக்கப்பட வேண்டும், சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட வேண்டும்.

அசுரன்

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

Tuesday, July 29, 2008

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!

குண்டு வெடிப்புகளின் அரசியல், இது மிக முக்கியமான சமூக ஆய்வு பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக பார்ப்பன இந்து பயங்கரவாதிகள் சமீப காலங்களில் குண்டு வெடிப்புகளின் ஈடுபட்டு பிடிபட்டுள்ளதும். அவை எல்லாமே இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது பலி போடுவதை நோக்கமாக கொண்டிருந்தன என்கிற அம்சமும், இங்கு முக்கியமாக கவனிக்கத்தக்கது. தற்போதைய பெங்களூர் குண்டு வெடிப்புகளும் கூட இந்த கோணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன. குறிப்பாக பெங்களூர் குண்டு வெடிப்புகள் தொழில் நேர்த்தியில்லாத குழுவால் செய்யப்பட்டுள்ளது என்பதும், உள்ளூர் குழுக்கள் செய்துள்ளன என்ற போலீசின் சந்தேகமும் இங்கு கவனிக்கத்தக்கது. இவை நடந்துள்ள மாநிலங்களும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் பார்ப்பன ஊடகங்கள் காட்டிய அவசரமும்(குறிப்பாக டைம்ஸ் ஆப்பு(ஆப்பு இந்தியாவுக்கு) இந்தியா பத்திரிகை) சந்தேகத்தை வரவழைக்கிறது. பெங்களூர் குண்டு வெடிப்புக்கு காரணம் என்று முதல் பக்கத்தில் சில சந்தேகங்களை எழுப்பியிருந்தது டைம்ஸ் ஆப்பு இந்தியா. அதில் அங்கு சமீபத்தில் நடந்த மசூதியில் பன்றி மாமிசம் வீசப்பட்ட சம்பவத்திற்கு பலி வாங்குவதாக இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று பொறி பற்ற வைக்கப்பட்டிருந்தது. விசாரணை ஆரம்பிக்கக் கூட இல்லை, ஆனால் தீர்ப்புக்கான நகல் எழுதப்பட்டுவிட்டது. வெடித்த குண்டுகள் IED வகை Crude வெடி குண்டுகள். இதே வடிவத்திலான குண்டு வெடிப்புகள்தான் மாலேகான் மசூதி குண்டு வெடிப்பு உள்ளிட்ட சமீபத்திய சில மசூதி குண்டு வெடிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பஜ்ரங் தள் பார்ப்பன பயங்கரவாதிகள் கடந்த சில வருடங்களில் கைது செய்யப்பட்டுள்ள குண்டு வெடிப்புகள் இதே வகையைச் சேர்ந்தவை என்பதும் கவனிக்கத்தக்கது.
பெங்களூரில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் எல்லாமே மக்கள் அதிகம் கூடும் இடத்தில், மக்கள் வராத பகுதியாக வைக்கப்பட்டிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. சமீபத்திய காங்கிரஸ் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தோல்வியடைந்துள்ளதும், அதன் உறுப்பினர்கள் மாற்றி வோட்டு போட்டிருந்ததும், இவை பாஜகவின் இமேஜை பெரிய அளவில் டேமேஜ் செய்துள்ளதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. மன்மோகனை ஆட்சிக் கட்டிலில் உறுதிப்படுத்த அமெரிக்க ஆளும் கும்பல் இங்கு பஞ்சாயத்து செய்திருக்கலாம் என்பதும், பாஜகாவின் உடன்பாடு அதில் கோரப்பட்டிருக்கலாம் என்பதும் ஒரு அம்சமாக இருந்த போதும், பாஜகாவின் இமேஜ் பாதிக்கப்பட்டுள்ளது நிதர்சன உண்மை. ஆகவே, மீண்டும் தேச வெறி பிரச்சாரம் செய்ய வேண்டிய நிர்பந்தம் அந்த கட்சிக்கு ஏற்ப்பட்டுள்ளது. இந்த விசயத்தை குண்டு வெடிப்புகளின் அரசியல் குறித்த மிகப் பெரிய உண்மை ஒன்றுடன் ஒப்பிட வேண்டியுள்ளது. குண்டு வெடிப்புகளின் அரசியலால் ஆதாயம் அடைவது என்றைக்குமே ஆளும் ஒடுக்குமுறை கும்பல்தான். இந்தியாவில் அது பாஜகாதான். குஜராத்திலும் கூட தொடர்ந்து பயங்கரவாத பீதியை உற்பத்தி செய்வதற்க்கு மோடி செய்த நாடகங்கள் வெட்ட வெளிச்சமானதை இங்கு நினைவில் கொள்ளத்தக்கது.

நிற்க, இவையெல்லாம் ஒரு சம்பவம், அதன் அரசியல் குறித்த உண்மையின் பல்வேறு கோணங்களை, உறவுகளை பார்க்க உதவுவததற்க்காக இங்கு சொல்லப்பட்டுள்ளவைதானேயன்றி எதுவும் அறுதியிட்டுக் கூறப்படவில்லை. அப்படி அறுதியிட்டு கூறுவதற்க்கு அத்வானி, மோடி போன்ற அணைத்தும் தெரிந்தவர்கள் அல்ல கம்யூனிஸ்டுகள். அத்வானி, மோடி கும்பலிடம் இருப்பது போல அதி உன்னத ஜோசிய கும்பல் எதுவும் கம்யுனிஸ்டுகளிடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்கு கீழே குண்டு வெடிப்புகளின் அரசியல் குறித்த ஒரு விரிவான கட்டுரை வினவு தளத்திலிருந்து மறு பிரசூரம் செய்யப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புகள் யார் செய்தனர் என்ற ஆய்வு செய்வதை விட அதன் பாரிய வெகு மக்கள் விரோத அரசியலையும், அது யாருக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்துகிறது என்கிற அம்சத்தையுமே பிரதானமாக விவரித்து இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. படித்து பாருங்கள்.
__________________________________________________________

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!
vinavu எழுதியது

மாநிலத் தலைநகரங்களில், மாநகரங்களில், மக்கள் கூடுமிடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கின்றன. குண்டுகள் எங்கு, எப்போது வெடிக்கும் என்பதை முன்னறிவிக்காது என்றாலும் வெடித்த பிறகு என்ன நடக்குமென்பதைத் தெரிவிக்கின்றன. உற்றாரைப் பலிகொடுத்த உறவினரின் சோகம் பத்திரிகைகளில் படிமங்களாக, குண்டுவெடித்த இடங்களை வழக்கமாக பார்வையிடச் செல்லும் அரசியல் தலைவர்களின் பயணமாக, வெடித்த இடத்தில் பதட்டமாக இருக்கும் வாழ்க்கை வெடிக்காத இடங்களில் சகஜமாக, அடுத்த பரபரப்புச் செய்திகள் வரும்வரை குண்டு வெடிப்பை தொலைக்காட்சிப் பெட்டிகளில் மீண்டும் மீண்டும் நிகழ்த்தும் அலைவரிசைகள், விளம்பர இடைவெளிகளில் மகிழ்ச்சியாக, மொத்தத்தில் நாடு வழமையாகவே இயங்குகிறது. முன்புபோல நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வலிமையினை இப்போது அடிக்கடி வெடிக்கும் குண்டுகள் இழந்துவிட்டன. பொழுதுபோக்குகளில் மையம் கொள்ளும் இன்றைய நுகர்வுக் கலாச்சார வாழ்க்கை சமூக நிகழ்வுகளை ஏறெடுத்துப் பார்க்காமல் இருப்பதற்குத் திறமையாக பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. குண்டுகள் வெடிப்பதற்குப் பிந்தைய விளைவுகளின்பால் அனுதாபமோ, வெடிப்பதற்கு முந்தைய அரசியலின்பால் கவனமோ அற்றுப்போய்விட்டதனால் இப்போது குண்டுகள் மலிவாக வெடிக்கின்றன. எனினும் குண்டுகள் வெடிப்பதற்குக் காரணம்தான் என்ன?
அரசு மருத்துவமனைகளுக்கு வரும் அனாதைப் பிணங்களை சடங்குக்காக அறுத்து நீதிமன்றத்திற்காகப் பதிவு செய்து யாரும் கோருபவர் இல்லாமல் எரிக்கப்படுவது போல குண்டு வெடிப்பின் அலசல்கள் அரசியல் அரங்கிலும், ஊடகவெளியிலும் உயிரின்றி பேசப்படுகின்றன. அண்ணாசாலையில் தொழிலாளி ஊர்வலம் சென்றால் அதைப் போக்குவரத்திற்கு இடையூறு என்று இந்து பேப்பருக்கு வாசகர் கடிதம் எழுதும் நடுத்தரவர்க்க அறிவாளிகள் போல குண்டுவெடிப்பைத் தடுப்பதற்கு பலரும் ஆலோசனைகளை இலவசமாக வழங்குகின்றனர். போலீசின் அலட்சியம், உளவுத்துறையின் குறைபாடு, பலவீனமான மத்திய அரசு, குண்டு வைப்பவர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை எடுக்காதது, பாக்கிஸ்தான் ஐ.எஸ்.ஐயின் சதிகளை முறியடிக்காதது என்று நீளும் இந்தப்பட்டியல் ஆத்திச்சூடி அறஞ்செய விரும்பு போல மக்களிடம் மனப்பாடமாய் இறக்கப்பட்டிருக்கிறது. பள்ளி செல்லும் குழந்தையை தூக்கத்தில் எழுப்பி தீவிரவாதத்திற்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் கூட அழகாய் ஒப்புவிக்கும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் குண்டு வெடிப்பு நிகழ்கிறுது என்றாலும் இது தேசத்திற்கெதிரான போர் என்று முழங்கும் அத்வானி பொடா போன்ற கடுமையான சட்டங்களை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்கிறார். புரட்சித் தலைவியும் அதனை வழிமொழிகிறார். ஈழத்தமிழர்களை ஆயுள்தண்டனை கைதிகளாக முகாம்களில் அடைத்து கண்காணிப்பது போல வங்கதேச அகதிகளை கண்காணிக்கவேண்டும் என்று தலையங்கம் எழுதுகிறது தினமணி. நாடாளுமன்றத் தாக்குதலுக்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி அப்சல்குருவை இன்னும் தூக்கில் போடாதது தீவிரவாதிகளுக்கு குளிர் விடச்செய்திருக்கிறது என்கிறார் ஒரு தலைவர். உதட்டளவிலோ, அரசியல் ஆதாயத்திற்காகவோ, உள்ளத்தில் இருக்கும் சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பினாலோ பேசப்படும் இந்த போதனைகளால் குண்டுகள் அழிந்துவிடுமா?
குண்டுகள் இந்த வெற்றுப்பேச்சினை சட்டை செய்வதில்லை. ஓரிடத்தில் குண்டுவெடிப்பது ஏதோ தீபாவளி பட்டாசு வெடிப்பது போல, ஹாலிவுட் படத்தில் நிகழ்வது போல அவ்வளவு சுலபமில்லை. அதிரடிக்காட்சிகளை நொறுக்குத்தீனியாக மனதில் பதியவைத்திருக்கும் திரைப்பட-தொலைக்காட்சி உணர்ச்சி, உண்மைக்கும் கற்பனைக்குமான வேறுபாட்டை, நிஜத்தின் வலியை உணர்த்துவதில்லை. உண்மையில் குண்டு வைப்பதற்கு இரும்பு மனம் கொண்ட நபர்கள், அதுவும் உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சலுடன், பிடிபட்டால் போலீசின் சித்திரவதைக்கும், நீதிமன்றத்தின் மரணதண்டனைக்கும் பயப்படாத நெஞ்சுரத்துடன் வேண்டும். இந்த மன உறுதியை வைத்து இவர்கள் வாழ்க்கை முழுவதும் கொள்கைக்காக களமிறங்குபவர்கள் என்று பொருளல்ல. இது குறிப்பிட்ட சமூகக் காரணத்தால் கணநேரத்தில் வந்துபோகும் சாகச உணர்வு. குறிப்பிட்ட நடவடிக்கையின் காலம் வரைக்கும் மனதில் இருக்கும் தற்கால உறுதியால் நினைத்ததை முடிக்கும் வல்லமையினை இவர்கள் பெறுகிறார்கள். அதே சமயம் இவற்றை தனிநபராக இருந்து மட்டும் செய்ய முடியாது. இரகசியமாய் பணம் திரட்டுவது, பொருட்களை சேகரிப்பது, தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொள்வது, ஆயுதங்களை சோதித்தறிவது, இரகசிய இடங்களை உருவாக்குவது, எல்லாவற்றுக்கும் உதவி செய்யும் ஆதரவாளர்களை அணிசேர்ப்பது வரை பல தயாரிப்புகள் வேண்டும். இலட்சியத்தின்பால் இருக்கும் உறுதியுடன் கூடவே அப்பாவி மக்களை கொல்லுவது குறித்த இரக்கமின்மையும் கணிசமாக வேண்டும். ஆனாலும் சங்கபரிவாரங்களால் அடுத்த பிரதமராக முன்னிறுத்தப்படும் அத்வானி இரும்புக் கரம் கொண்டு குண்டுகளை அடக்கமுடியுமென வன்மையாக எடுத்துரைக்கிறார். அதன்படி குண்டுகளை அடக்க முடியுமா?அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே பொடா சட்டமும், அதில் அப்பாவி முசுலீம்கள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்படுவதும், வங்கதேச ஏழை அகதிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விரட்டப்படுதும், இசுலாமிய அமைப்புகள் பல தடைசெய்யப்பட்டதும் என ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் எத்தனையோ செய்து பார்த்தும் குண்டுகள் மறையவில்லையே! சொல்லப்போனால் இந்த இரும்புக்கர நடவடிக்கைகள் குண்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தின. எனில் இந்த சட்டதிட்டங்களை தகர்த்தெறியும் வலிமையினை குண்டுகள் எங்கிருந்து பெற்றன?
குண்டுகள் அந்த வலிமையினை வரலாற்றின் அநீதியிலிருந்து பெற்றுக்கொண்டன. குண்டுகளினுள் பொதியப்பட்டிருக்கும் வேதிப்பொருட்களின் வீரியத்தினைவிட சமகால வரலாற்றின் வீரியம் அதிகமானது. குண்டுகள் தன்னளவில் இயல்பாக வெடித்துவிடுவதில்லை. கூர்ந்து நோக்கினால் அவை வரலாற்றின் விளைபொருட்கள்! 1992 பம்பாய் கலவரத்திற்கு பிந்தையதுதான் 1993 பம்பாய் குண்டுவெடிப்பு! 2002 குஜராத் கலவரத்திற்கு பிந்தையதுதான் 2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு! 1996 கோவை கலவரத்திற்கு பிந்தையதுதான் 1999 கோவை குண்டுவெடிப்பு! இந்த சங்கிலித் தொடர் நிகழ்வின் தீர்மானிக்கும் கண்ணியாக கலவரங்கள் இருக்கின்றது. இருதரப்பார் அடித்துக்கொள்வதுதான் கலவரம் என்பதன் இலக்கணமாக இருக்கும்போது அவற்றைக் கலவரங்கள் என அழைப்பது பொருத்தமற்றது. சரியாகச் சொல்வதானால் அவை இந்துமதவெறியர்களால் தொடுக்கப்பட்ட போர்! இசுலாமிய மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை! இவற்றின் பரிமாணங்களைப் புரிந்து கொண்டால் குண்டுகளின் தோற்றுவாயை அறிந்து கொள்ள இயலுமா?
நிச்சயம் முடியும். 91 ஆம் ஆண்டு குஜராத்தின் சோமநாத்தில் ஆரம்பித்த அத்வானியின் இரத யாத்திரை வட இந்தியா முழுவதும் இசுலாமிய மக்களை காவு வாங்கியபடிதான் இரத்த யாத்திரையாக சென்றது. அதன் உச்சம் பம்பாய் கலவரமாக வெடித்தது. சிவசேனாவின் தலைவர் பால் தாக்கரே தனது சாம்னா பத்திரிகையின் மூலம் இசுலாமிய மக்களை அடித்து விரட்டுமாறு கட்சிக் குண்டர்களுக்கு ஆணையிட்டார். போலீசு உதவியுடன் இசுலாமிய குடியிருப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டன. இந்த உண்மைகளை எடுத்துக்கூறி குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் அறிக்கை இன்றைக்கு குப்பைத்தொட்டியி்ல் தூங்குகிறது. ஒரு வேளை நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களைக் கொன்ற சிவசேனா வெறியர்களை தண்டித்திருந்தால் பின்னர் பம்பாயில் குண்டுகள் வெடிக்காமலே போயிருக்கலாம். ஆனால் ஒருவேளை என்ற சொல்லை வரலாற்றை பரீசீலிப்பதற்கு பயன்படுத்தலாமே ஒழிய வரலாற்றை மாற்றிப்போட்டு கற்பனை செய்வதற்கு இடம் கிடையாது. இன்று பம்பாய் குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். அவர்களில் பல அப்பாவிகள் நிரபராதியாக பல வருடங்களாக சிறையில் கழித்தார்கள். எனினும் பம்பாய் கலவரக் குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை என்பதோடு வழக்கே நடைபெறவில்லை. கலவரங்களுக்கு சலுகை! குண்டுகளுக்கு தண்டனை! எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?
2002 குஜராத்தில் நடந்த இனக்கலவரம் நாடே அறியும். 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். நரோடா பாட்டியாவின் சவக்கிடங்கு, கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து தாயும், சேயும் கறுவறுக்கப்பட்ட காட்சி, பெஸ்ட் பேக்கரியின் 17பேரை உயிரோடு எரித்த சம்பவம், இரத்தக் கவிச்சி அடிக்கும் வெறியுடன் இந்து மதவெறியர்கள் சம்பவங்களை குதூகலத்துடன் தெகல்காவின் கேமராவில் வருணித்த ஆதாரம், முடிவில்லா குஜராத்தின் இனப்படுகொலைப் படிமங்கள் உணர்ச்சியுள்ள எவருக்கும் நெஞ்சை விட்டு அகன்றிருக்காது. ஆனால் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்காக, செய்யாத குற்றத்திற்காக பல அப்பாவி முசுலீம்கள் சிறையில் வாடும்போது இனப்படுகொலை செய்த இந்து மதவெறிக் குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடுகின்றனர். குண்டுகள் செய்யும் இரகசிய ஏற்பாடுகளெல்லாம் இந்து மதவெறியர்களுக்கு தேவையில்லை. குஜராத்தில் அவர்கள் நடத்திய நரவேட்டைக்கான துப்பாக்கிகள், குண்டுகள், ஆயுதங்கள், எல்லாம் அண்டை மாநிலங்களிலிருந்து வண்டி வண்டியாக இறங்கின. குண்டுகளின் ஏற்பாடுகளை சதிகள் எனப்பார்க்கும் பொதுப்புத்தி இந்துமதவெறியர்களின் ஏற்பாடுகளை கலவரங்களில் நடக்கும் வழக்கமான ஒன்றாகப் பார்க்கின்றது. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?
கோவையில் காவலர் செல்வராசு கொலைசெய்யப்பட்டதை அடுத்து நடந்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்ட முசுலீம் மக்கள் கொலைசெய்யப்பட்டு பல கோடி மதிப்பிலான இசுலாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கோவை சங்கபரிவார ரவுடிகளை கைது செய்து தண்டிக்க முடியாத இந்த சமூக அமைப்பு கோவை குண்டுவெடிப்பின் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து தண்டித்திருக்கிறது. அதிலும் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் பல வருடங்களை சிறையில் கழித்து விட்டு நிரபராதி என்று விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். குற்றமின்றி தண்டனையை மட்டும் அனுபவித்துவிட்டு மனைவியையும், குழந்தைகளையும் நிர்க்கதியில் தவிக்கவிட்டு வாழ்வைத் தொலைத்திருக்கும் இந்த சாதரண மனிதர்களுக்கு இந்த சமூக அமைப்பின் மேல் எத்தனை பெரிய கோபம் இருக்கும்? இவர்கள் எவரும் படித்து வசதியாக வாழும் நடுத்தரவர்க்கத்தினரோ, இசுலாமிய மதத்தின் பால் ஆழ்ந்தபிடிப்போ, வெறியோ, இந்துக்களின் மீது விரோதமோ கொண்டவர்கள் அல்லர். இவர்களின் நெஞ்சில் வஞ்சினத்தை ஏற்றுவதற்கு ஐ.எஸ்.ஐ தேவையில்லை. அது உண்மையுமில்லை. இரக்கமற்று தனிமைப்படுத்தும் சமூகத்தின் காரணத்தால் இந்த இளைஞர்களின் அவலம் குண்டுகளாக பரிமாணம் கொள்கின்றன. எனில் குண்டுகள் ஏன் வெடிக்காது?
இந்து மதவெறியர்கள் இந்தியாவில் நடத்தியிருக்கும் கலவரங்களில் பதிவு செய்திருக்கும் கொலைக்கணக்கும், பொருள் இழப்பும் அளவில் குண்டுகளை விட பலநூறு மடங்கு அதிகம்தான். ஆனால் அவை பொதுவில் தீவிரவாதிகள் செய்த குற்றமென்று மதிப்பிடப்படுவதில்லை. பெரும்பான்மை இந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு சிறு கும்பலான சங்கபரிவாரம் செய்யும் அநீதிக்கான அங்கீகாரம் பெரும்பான்மையின் மவுனத்தில் இருக்கிறது. குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் எல்லா இந்துக்களும் பங்கேற்கவில்லை என்றாலும் நேரடி மவுன சாட்சியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த மவுனம் அநீதியை மறுக்கவில்லை. அதுவே அநீதியின் அங்கமாக மாறிவிடுகிறது. இதன் விளைவால் உண்மையான தீவிரவாதிகளான இந்துமதவெறியர்கள் பொது அங்கீகாரத்துடன் எல்லாக் கட்சிகளைப்போல ஒரு கட்சியாக இயங்குகிறார்கள். சமூகநீதி, திராவிடம் பேசும் எல்லா கட்சிகளும் இந்து மதவெறியர்களுடன் தேர்தல் கூட்டணி வைப்பது முதல் அரசில் பங்கேற்பது வரை முரணின்றி செய்கின்றன. இந்தியாவின் பொதுவாழ்வில் இந்து மதவெறியர்கள் அதிகாரத்துடன் ஆணவமாக நடந்து கொள்வதற்கு இத்தனை சலுகைகள் இருக்கும்போது குண்டுகளுக்கான முயற்சிகள் எங்கோ இரகசியமாக நடந்து கொண்டுதானே இருக்கும்?
குண்டுகள் உருவாதற்கான நிலைமைகளை உருவாக்கிவிட்டு குண்டுகள் மட்டும் வேண்டாம் என்று நினைப்பதி்ல் பயனொன்றும் இல்லை. இந்திய அரசியல் அரங்கில் இந்துமதவெறிச் சக்திகள் கறுவருக்கப்படாதவரை குண்டுகளையும் கருவறுக்க முடியாது. மதசார்பாற்ற அரசியல் அதன் உண்மையான பொருளில் அமலுக்கு வராதவரை குண்டுகள் வந்து கொண்டே இருக்கும். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் போராட்டத்தில் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் வெல்லும்வரை குண்டுகள் தோல்வி அடையப்போவதில்லை. ஆகையால் குண்டுகளை நாம் நியாயப்படுத்துகிறோமா?
குண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி. அதாவது இந்துமதவெறியர்களின் கோரப்பிடியிலிருந்து இசுலாமிய மக்களை பாதுகாப்பதில் குண்டுகள் தோல்வியடைவதோடு உண்மையில் பாதுகாப்பின்மையைத்தான் அதிகப்படுத்தியிருக்கின்றன. குண்டுகளின் முக்கியமான விளைவுகளே இந்துமதவெறியை வலுப்படுத்துவதும், இசுலாமிய மக்களை தனிமைப்படுத்துவதும்தான். தற்போதைய குண்டுவெடிப்புகளில் கூட இந்துமதவெறியர்கள் எவரும் சாகவில்லை என்பதோடு அப்பாவி உழைக்கும் மக்கள்தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். எதிர்கால குண்டுவெடிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக மாநகரங்களில் உள்ள ஐ.டி நிறுவனங்களுக்கும், கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் அரசு உழைக்கும் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பையும் அளிக்கவில்லை. இப்படி குண்டுகள் வெடித்தால் நிச்சயமாக கொல்லப்பட இருக்கின்ற உழைக்கும் மக்கள்தான் உண்மையில் பார்ப்பன இந்துமதவெறியால் ஏற்கனவே அடிமைகளாக நடத்தப்படுவர்களாகவும், வர்க்க ரீதியில் இந்துமதவெறியர்களை வீழ்த்துவதற்கான சக்தியாகவும் இருக்கின்றனர். குண்டுகள் இந்த மக்களைத்தான் இந்துமதவெறியர்களின் கைகளில் எளிதாக மாற்றித் தருகின்றன. எல்லாவற்றுக்கும் மேல் வாழ்க்கைப் போராட்டத்தால் கவலையில் உழன்று கொண்டிருக்கும் அப்பாவி மக்களை இரக்கமின்றி கொல்லும் குண்டுகளில் பாசிச மனமும் கலந்திருக்கிறது. மறுபுறம் தமது எதிர்வரிசையில் எல்லாப் பிரிவு மக்களையும் ஒன்று சேர்க்கும் வேலையையும் குண்டுகள் அடி முட்டாள்தனமாக செய்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க குண்டுகளால் இசுலாமிய மக்களுக்கு என்ன பாதிப்பு?
ஒவ்வொரு குண்டுவெடிப்பின்போதும் எண்ணிறந்த பாதிப்புகளை இசுலாமிய மக்கள்தான் எதிர்கொள்கின்றனர். குண்டுகளின் அரசியலுக்கு கடுகளவும் தொடர்பில்லாத அப்பாவிகள் கைதுசெய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் சிறையில் இருப்பதும், இசுலாமிய மக்கள் அனைவரையும் பொதுச்சமூகம் தீவிரவாதிகளாக பார்ப்பதும், இதன் தொடர் விளைவாக இசுலாமிய மக்களுக்கு வீடு வாடகைக்கு இல்லை, கல்வி இல்லை, வேலை இல்லை மொத்தத்தில் மதிப்பு இல்லை என்ற நிலைமை உருவாக்கப்படுகிறது. இதையே இந்துமதவெறியர்கள் பிரச்சாரத்தின் மூலம் செய்வதை குண்டுகள் தமது வெடிப்பின் மூலம் செய்கின்றன. யாரை எதிர்த்து உருவனதோ அவர்களுடன் எதிர்மறையில் ஒன்றுபடுவதுதான் குண்டுகளின் தர்க்கரீதியான முடிவு. வெடிமருந்தின் மேல் அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கும் குண்டுகள் வெகுஜன அரசியல் நடவடிக்களுக்காக பொறுமையுடன் ஈடுபடுவதில்லை. பொறுமையிழந்து அவசர அவசரமாக வெடிக்கும் குண்டுகள் நீண்டகால நோக்கில் இசுலாமிய மக்களைத்தான் காவு கேட்கின்றன. குண்டுகளுக்கும் இசுலாமிய மதத்திற்கும் என்ன தொடர்பு?
குண்டுகளின் தோற்றுவாயை சமூக நிலைமைகளே தோற்றுவிக்கின்றன என்ற போதிலும் குண்டுவைப்பவர்களின் மன உறுதிக்கு இசுலமிய மதப்பற்றும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. குண்டுகள் தாம் இசுலாமிய மதத்தைப் பாதுகாக்கும் புனிதப்போரில் ஈடுபட்டிருப்பதாக நம்புகின்றன. இதை பல இசுலாமிய சமுதாயப் பெரியோர்களும், மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் குண்டுகள் தாம்தான் உண்மையான இசுலாமியர்கள் என்று கற்பித்துக் கொள்கின்றன. ஆனால் உலக வரலாறு நெடுகிலும் இந்தக் கற்பிதம் பொய்யென்றே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய அரசியல் சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இசுலாமிய மதம் ஒரு தீர்வாக அமைய முடியாது. கூடவே உலகில் இசுலாமிய மதத்தை உண்மையாக பின்பற்றும் நாடு எதுவும் கிடையாது, அப்படி இருக்கவும் முடியாது என்பதே அறிவியல்பூர்வமான உண்மை. இசுலாமிய நாடாக அறிவித்துக்கொண்ட பாக்கிஸ்தானில் சன்னி, ஷியா பிரிவுகளிடையே மசூதியில் குண்டு வைத்துக் கொல்லும் அளவுக்கு பிளவு இருப்பதும், ஷரியத்தின் சட்டதிட்டங்களை கறாராக பின்பற்றும் வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் விசுவாசிகளாக இருப்பதும், ஏழை இசுலாமிய மக்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்த பணஉதவி செய்யும் அரபு ஷேக்குகள் தனிப்பட்ட வாழ்வில் களிவெறியாட்ட பொறுக்கிகளாக இருப்பதும் இந்த உண்மைகளை எடுத்தியம்பும். ஆனால் குண்டுகள் இந்த யதார்த்த்த்தை மறுப்பதுடன் கற்பனையான மத உலகை சித்தரித்துக்கொண்டு வாழ முயல்கின்றன. எனில் குண்டுகளின் எதிர்காலம் என்ன?
எதிர்காலம் இந்துமதவெறியர்களின் எதிர்காலத்தைப் பொறுத்தது. சங்க பரிவாரங்கள் இருக்கும் வரையிலும் இந்துத்வா திட்டமும், முசுலீம் மக்களின் மீதான துவேசமும், கலவரங்களும் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் இடம்பிடித்தபடியே இருக்கும். இந்த நிகழ்ச்சிநிரலை மாற்றாதவரை, வரலாறு திருத்த்தப்படாதவரை குண்டுகளையும் இரத்து செய்ய முடியாது.ஆகவே நம்முன் இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று அடுத்த குண்டு எங்கு எப்போது வெடிக்கும் என்று திகிலுடன் வாழ்வது. அல்லது குண்டுகளைத் தோற்றுவிக்கும் சங்கபரிவார கும்பலை வீழ்த்துவது. இதைத்தாண்டி குண்டுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்றாவது வழி ஏதும் இல்லை.

நன்றி வினவு

Related Articles:

கோவை குண்டு வெடிப்பு சதி ஒரு பொய்யான நாடகம் - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி!!!

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

"கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்:நவீன மனுநீதி!"

"கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை"

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!

Tuesday, February 12, 2008

கோவை குண்டு வெடிப்பு சதி ஒரு பொய்யான நாடகம் - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி!!!


News From: Newscap
கோவையில் 2006ஆம் வருடம் ஜூலை மாதத்தில் மனித நீதி பாசறை என்ற அமைப்பைச் சேர்ந்த மூன்று முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பைப் வெடிகுண்டுகள், மதவெறி துண்டு பிரசூரங்கள் போலீசால் கைப்பற்றப்பட்டன. இப்படி செய்தி வந்திருந்தது பத்திரிகைகளில். முதல் பக்கத்தில் வந்து பரபரப்பு கிளப்பியது இந்த செய்தி. தமுமுக இந்த வழக்கை CB-CID போலிசார் விசாரிக்க வேண்டும் என்று கோரியதை ஒட்டி வழக்கு CB-CIDயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதோ இன்று ஒன்றரை வருடங்கள் கழித்து அந்த வழக்கு சுத்தமான பொய் வழக்கு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மதானி பத்து வருடங்களுக்கு மேலாக கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கோடூரமான சிறைவாசம் அனுபவித்து சித்திரவதைப் பட்டுள்ளார். ஆயினும் அவர் மீதான குற்றம் கடைசியில் நிரூபிக்கப்படவில்லை. ஆயினும் நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய மறுத்துவிட்டது. ""இவர்கள் மீது அரசால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், இவர்கள் மீது வேறு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரம் உள்ளதாக'' "கண்டுபிடித்து' தீர்ப்பளித்தது நீதிமன்றம். இது தவிர்த்து நெல்லை மற்றும் கோவையைச் சேர்ந்த பல அப்பாவிகள் இந்த வழக்கில் சம்பந்தமில்லாமல் இணைக்கப்பட்டுள்ளது தெரிந்த செய்திதான். நல்ல நீதி.... பார்ப்பான் ஆளும் நாட்டில் நீதி பாழும் கிணற்றில் செத்து மிதக்க மட்டுமே முடியும்.

முஸ்லீம்கள் குறித்த பயங்கரவாத செய்திகள் கிடைத்தால் அதை முதல் பக்கத்தில் போட்டு பொய்யான தகவல்களை சேர்த்து பரபரப்பூட்டும் பத்திரிகைகள் எதுவும் அவை பொய் என்று நீருப்பிக்கப்பட்டு வரும் செய்திகளை தமது பத்திரிகைகளில் போடுவதில்லை அல்லது கண்ணுக்கு தெரியாத ஏதாவதொரு இடத்தில் போடுகின்றன. ஏனேனில் பத்திரிகைகளும் பார்ப்பனிய பயங்கரவாதத்தின் ஊதுகுழல்களாகத்தான் உள்ளன. இதோ இந்த செய்தியும் கூட பத்தோடு பதினொன்றாக மூலையில் போடப்பட்டிருந்தது.

இந்த செய்தி வரும் இதே நேரத்தில் கர்நாடகாவில் ஹூப்லி பகுதியில் இரு முஸ்லீம் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஏதோ மிகப் பெரிய சதி வலைப் பின்னலின் சூத்திரதாரிகள் என்று தினம் ஒரு செய்தி பத்திரிகைகளில் எழுதப்படுகிறது. RSS மற்றும் இந்த பார்ப்பினிய அரசின் முந்தைய கால வரலாற்றை பார்க்குமிடத்து இந்த செய்திகளின் நம்பகத்தன்மையை நாம் சந்தேகத்துடன்தான் பார்க்க வேண்டியுள்ளது. ஏனேனில் கர்நாடக போலிசு குறிப்பாக வட கர்நாடக போலிசு RSS கும்பலுடன் இணைந்து பொய் பிரச்சாரம் செய்வதும் கலவரம் செய்வதும் விரிவாக அம்பலமான விசயமாகவே இருக்கிறது.

ஏற்கனவே தென்காசியில் குண்டு வைத்து முஸ்லீம்கள் மீது பழி போட்டு மக்களை பிளவு படுத்த எண்ணியவர்கள்தான் இந்த மக்கள் விரோத பயங்கரவாதிகள். மாஹாராட்டிரம் நாண்டடில் குண்டு தயாரிக்கும் போது மாட்டிக் கொண்டவர்கள்தான் இந்த கும்பல். இன்னும் சொன்னால் பல பகுதிகளிலிருந்தும் RSS கும்பல் குண்டு தயாரிக்கும் போது வெடித்து அந்த சம்பவங்கள் சிலிண்டர் வெடித்த சம்பவங்களாக திரிக்கப்பட்டது குறித்து பல செய்திகள் வருகின்றன. தென்காசி செய்தி எந்தவொரு பத்திரிகையிலும் வரவில்லை. நாண்டட் சம்பவமோ சுத்தமாக எங்குமே வரவில்லை(வெகு சொற்பமான ஏடுகளில் தவிர்த்து).

RSS கும்பல் இப்படி அப்பட்டமான ஆயுத மோதல் தயாரிப்பு மற்றும் மக்களை பிளவு படுத்தும் சதி திட்டங்களில் ஈடுப்பட்டுள்ளது பல முறை அம்பலப்பட்டிருந்தாலும், இந்த பயங்கரவாத அமைப்புகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. நிரபாராதிகளும், அப்பாவி உழைக்கும் மக்களையும் மட்டுமே தண்டிக்கும் இந்த அரசு உறுப்புகள் என்று காட்டியதன் மூலம் அரசு என்பது ஆளூம் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி என்ற கம்யுனிஸ்டு புரட்சியாளர்களின் கருத்து நிதர்சனாமாகியுள்ளது.

செய்தி ஆதாரம்: இமெயில் கோவையன்

செய்திவிமர்சனம்

The News:

Blast plot charge on five Kovai men found false

Saturday February 9 2008 08:52 IST

COIMBATORE: The Special Investigation Team of the CB-CID that probed the arrest of five Muslim men on July 22, 2006, on charges of plotting a series of bomb blasts in the city, has termed the charges as ‘false’.

The ‘findings’ of the SIT were placed before a Judicial Magistrate here recently and the court had reportedly accepted the findings.

Police had arrested Haroon Basha of Itteri, Kurichi Pirivu in Podanur here, his brother Malik Basha, Ravi alias Thippu Sulthan, Athikur Rehman and Shamsudeen and seized incriminating documents and also a pipe bomb from them.

They were alleged to be members of an organisation called MNP and that since they wanted to take revenge for the atrocities committed on Muslims, they decided to create terror.

Podanur police had registered the case and arrested them. The case was subsequently handed over to the SIT, CB-CID.

The findings submitted in the court by R Balan, Addl SP, SIT, CB-CID, Chennai, states: “The FIR in the Podanur police station under the Explosives Act, 1908 and seizure mahazars are fabricated and false.

“The statements of witnesses recorded by me conclusively confirm this and I am treating this case as ‘false.’ The witnessess collected during investigation exclusive of the police officials lend assurance to the fact that absolutely a false case has been registered and a false recovery of explosives was effected,” the report said.

The investigation done by the SIT is fully corroborated by the aggrieved persons and among them Athikur Rehman was subjected to narco test at a forensic lab at Madivala, Karnataka, and the report of polygraph confirms the theory of initiation of a false case.

Thanks: Indian Express

முதல் பக்கத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ள செய்தி: நன்றி 'தி ஹிந்து'



2006 ஜுலை 23-ல் வந்துள்ள செய்தி: நன்றி 'தி ஹிந்து'

Five held in Coimbatore, explosive materials seized

V.S. Palaniappan

`Conspiracy to bomb hospital and other places foiled,' explosive materials seized

Coimbatore: The Coimbatore city police on Saturday arrested five persons and recovered materials and components meant for assembling improvised explosive devices (IEDs).

Commissioner Karan Singha told reporters that the police had, in the last fortnight, stepped up surveillance on a couple of suspects. With inputs pointing the finger at a group trying to assemble bombs and plant them on Saturday, the police conducted a pre-dawn swoop at three different locations.

First, the police searched a house at Kurichipirivu in the Podanur police limits, arrested brothers Haroon Basha and Malik Basha, and seized components for assembling an IED. Later, they searched a house in the Ganapathy area from where Tippu Sultan and Athikur Rehman were arrested.

Some documents and explosive materials were seized. The operation ended with the arrest of K. Samsudeen of Ramanathapuram, suspected to be a co-conspirator.

The recovered explosive materials are suspected to be a potassium chlorate mixture (weighing close to 400 gm), glass pieces, iron balls, small iron pipes, two batteries, a country bomb and an electric detonator. These could be used to make low-intensity bombs. The idea was to create a fear psychosis by unleashing terror.

Bid to blast hospital


A map with eight places marked was also recovered. Going by the markings, police suspect that the accused had plans to plant explosives in the Coimbatore Medical College Hospital and a few other places. The seized documents include photographs, names and details of a route map of the houses of activists of Hindu outfits, and their daily walking routine.

Special teams led by Deputy Commissioners K. Shanmugavel and P.C. Thenmozhi and Assistant Commissioner V. Rathinasabapathy, conducted the operations.

Mr. Singha lauded the officers and their teams for the ``meticulously planned successful operation.''


Related Articles:

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

"கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்:நவீன மனுநீதி!"

"கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை"

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

Monday, February 04, 2008

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

நன்றி: செய்திரசம்

Photobucket

Photobucket நன்றி: நன்றி: தினமலர்

தென்காசியில் RSS பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள் மக்களை பிளவுபடுத்தி எல்லா அயோக்கியத் தனங்களையும் செய்து வருவது அனைவரும் அறிந்த செய்திதான். சமீபத்தில் நில உரிமை பிரச்சினை என்ற தனிப்பட்ட பிரச்சினையை மத பிரச்சினையாக திசை திருப்பி கலவரம் செய்து சில உயிர்கள் சிவலோக பதவியடைய உதவி செய்தவர்களும் இந்த கும்பல்தான்.

இன்னிலையில் அந்த பகுதியில் தமது செல்வாக்கை மேலும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக RSS அலுவலகத்தில் தாங்களே குண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர் மீது பலி போடும் தனது பாரம்பரிய தந்திரத்தை இங்கும் செய்து அம்பலப்பட்டு போயுள்ளது RSS பார்ப்பன இந்துத்துவ வெறி கும்பல்.

இது போன்ற நடைமுறை இவர்களுக்கு புதிதானதொன்றும் இல்லை. ஏற்கனவே நாண்டடில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து அம்பலப்பட்டு போனவர்கள்தான் இவர்கள். அந்த சம்பவத்தில் இறந்தவன் தவிர்த்து மாட்டிக் கொண்ட வெறியர்கள் முஸ்லீம் மசுதி குண்டு வெடிப்புகள், நாக்பூர் RSS அலுவலக குண்டு வெடிப்புகளில் தொடர்பு கொண்டிருந்தது வெளிவந்தது.

இதே கும்பல் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து பயிற்சி செய்வதும் இவற்றை தமது ஊர்வலங்களில் உபயோகப்படுத்துவதும் எல்லா பத்திரிகைகளிலும் வந்து அம்பலமானதுதான். குஜராத்தில் ராக்கேட் லாஞ்சர்கள் உபயோகித்தது குறித்து பாஜக கட்சி MLA வே வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

காந்தியை கொன்ற கோட்சே தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்கும் நேர்மையின்றி கோழைத்தனமாக, ஒரு பன்றியைப் போல முஸ்லீமின் பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டு இந்திய முஸ்லீம்களை கொன்றொழிக்க நினைத்தவனின் வாரிசுகள் வெறு விதமாக செயல்பட்டிருந்தால்தான் ஆச்சரியம்.

Photobucket

Photobucket

Photobucket

குண்டு வைத்தவனின் வாக்குமூலம்:

"இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்."

குண்டு வெடித்தவுடன் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய் என்று ஏற்கனவே திட்டமிட்டபடி இந்துத்துவ வெறியுடன் பேசிய RSS குரங்கு படையின் தலைவன்.

"திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வழக்கம் போல் அரசு செயல்பட்டு வருவதால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெளிப்படையாக வன்முறை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

தொடர்ந்து ஹிந்துக்கள் மீதும், ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தென்காசியில் கடந்த வருடம் ஹிந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியன் அவரது வீட்டு முன்பே படுகொலை செய்யப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவரது சகோதரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசித் தாக்கியுள்ளனர். இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது தாக்குதல் தடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கர வாதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்."

இவன் கணக்குபடியே குண்டு வைச்சவனை கைது செஞ்சாச்சி. ஆனா இந்த கும்பல் இப்போ கைது செஞ்சது தப்புன்னு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.


Related Articles:

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

Related Posts with Thumbnails