TerrorisminFocus

Monday, June 23, 2008

விழுப்புரத்தில் விவிமு தோழர்களை வெட்டிப் படுகொலை செய்த பாசிச CPM

விழுப்புரம் மாவட்டத்தில் ம க இ கவின் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி வெட்டிக் கொன்றுள்ளது பாசிச CPM. இந்த தாக்குதலில் தோழர் இராசேந்திரன் படுகொலை செய்யப்பட்டுவிட்டார். மேலும் மூன்று தோழர்கள் மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்கள். விவரங்கள் தோழர் ஏகலைவன் மற்றும் சந்திப்பின் இருட்டடிப்பு தளங்களில் உள்ளன. தாமதமாக இன்றுதான் இந்த தகவல் தோழரின் தளத்திலிருந்து தெரியவந்துள்ளது. இது எமக்கு துயரத்தை அல்ல மாறாக இந்த தியாகங்களுக்கு நேர்மையாக இருந்து இன்னும் உறுதியுடன் நின்று எதிரிகளை துவம்சம் செய்யும் மன உறுதியை தருகிறது.
'CPM = Corporate Party of Murderers'


பாசிச CPMன் மக்கள் விரோத மோசடி வித்தைகளையும், திரிபுவாதங்களையும், பாசிச நடைமுறைகளையும் அம்பலப்படுத்தி தொடர்ந்து தோழர்கள் செயல்பட்டு வந்ததன் எதிர்வினையாகவே இது நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. பார்ப்பன பயங்கரவாத அமைப்பான பாசிச RSSயை புரட்சிகர சக்திகள் அம்பலப்படுத்திய போது கூட அவர்கள் பதில் தாக்குதல் பல இடங்களில் தொடுத்துள்ள போதும் கூட இது போல திட்டமிட்டு மாபியாக்களாக தாக்குதல் நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CPM எந்த வகையிலும் ஒரு சாதாரண வோட்டு பொறுக்கி கட்சிக்குரிய அடிப்படை ஜனநாயக பண்புகள் கூட இல்லாத சுத்தமான பாசிச அமைப்பாக உருவெடுத்திருப்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. இதை தனி ஒரு சம்பவமாக கருதி இந்த கருத்துக்களை சொல்லவில்லை. தொடர்ந்து நந்திகிராமிலும், சிங்கூரிலும், மே.வாவில் பல்வேறு ஜனநாயக சக்திகளை ஒடுக்கிய நடவடிகைகளிலும், கேரளா, மே.வாவில் இதே போன்ற பல்வேறு போராட்டங்களில் புகுந்து பாசிச CPM ரவுடிகள் நடத்திய பல்வேறு கொலைவெறி தாக்குதல்களை கவனத்தில் கொண்டுமே இந்த முடிவுகளை அறிவிக்கிறோம்.

இது ஏதோ விதிவிலக்கான ஒரு நிகழ்வு அல்ல. CPMன் தலைமையில் திரிபுவாத மாமாக்கள் உட்கர்ந்து கொண்டு வாய் கூசாமல் பொய்களை பேசி நாட்டை கூட்டிக் கொடுப்பதில் முன்னணியில் உள்ளனர். அவர்களின் அணிகளோ தாம் இருக்கின்ற இடங்களில் தண்ணீர் குழாய் கனெக்சனிலிருந்து, மின்சார கனெக்சன் வரை மாமா வேலை பார்த்து பொறுக்கி தின்பதும், கட்சி விட்டு கட்சி மாறி நக்கிப் பிழைப்பதும், எல்லா போர்ஜெரி, 420 வேலைகளையும், சாதிய ஆதிக்க நடவடிக்கைகளையும் செய்வதற்க்கான ஒரு அரசியல் அங்கீகாரமாகவே CPMல் உள்ளனர். இந்த மொள்ளமாறித்தனங்களுக்கு ஒரே அடிப்படை உழைக்கும் மக்களை சுரண்டி சுகம் காணும் CPM என்ற பாசிச திரிபுவாத அமைப்புதான். அவர்களின் பிசினஸுக்கு ஆதாரம் இந்த அமைப்புதான். போலீசிடம், அதிகாரிகளிடம் CPM என்ற அடையாளத்துடன் சென்று மொள்ளமாறித்தனங்களுக்கு பேரம் பேசி ஆன்மவிபச்சாரம் செய்வதற்க்கு அங்கீகாரம் கொடுப்பது இந்த சிவப்பு நிறம்தான். எனவேதான் புரட்சிகர அமைப்பினரின் செயல்பாடுகள் வெறுமே அரசியல் ரீதியான விளைவுகளையல்ல மாறாக அவர்களின் நக்கிப் பிழைக்கும் பொறுக்கித்தனத்திற்கே ஆப்பறைவதாக இருக்கிறது. ஏனேனில் அவர்களின் அதிகாரத்துவமே அவர்களின் பிழைப்பிற்கு அடிப்படை. CPM அம்பலமானால் அதன் அணிகள் அனாதைகளாக மாறி அதிகாரமிழப்பர். இதனை அந்த அணிகளில் உள்ள உணர்ப்பூர்வமான தோழர்களை விதிவிலக்காக கருதியே சொல்கிறோம்.

திரிபுவாத ரவுடி கும்பலின் பொருளாதார அடித்தளத்திற்க்கு வேட்டு வைக்கும் இந்த நடவடிக்கைகள் பாசிச CPMமிடமிருந்து வேறு விளைவுகளை ஏற்படுத்தியிருந்தால்தான் ஆச்சர்யம்.

ஆயுதம் தாங்குவதற்க்கு எதிராக ஏதோ அமைதி விரும்பி அஹிம்சாவாதிகள் போல வேசம் கட்டும் இந்த பாசிஸ்டுகள், ஜனநாயகத்தின் பிரதிநிதிகள் போல அறிவுஜீவிகள் அடிக்கும் ஜாலராக்கள் துணையுடன் கல்லாக் கட்டும் இந்த பாசிஸ்டுகள் - உண்மையில் அராஜகத்தையும், நேர்மையின்மையையும், மொள்ளமாறித்தனத்தையும், தாதாயிசத்தையும் மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துகிறது. 'எமது ஆயுதம் எது என்பதை எமது எதிரி தீர்மானிக்கிறான்' என்பதை நடைமுறையாகக் கொண்ட புரட்சிகர அமைப்புகள் CPMயை ஜனநாயக வழிகளில் மக்களிடம் சென்று பேசியே அம்பலப்படுத்தி வந்துள்ளன. மாறாக மக்களின் எதிரி CPM மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் புரட்சிகர அமைப்புகளை அரிவாள் கொண்டு சந்திப்பதாக முடிவு செய்துள்ளது. மக்களின் எதிரி CPM ஜனநாயக வழிமுறைகளை அல்ல மாறாக அராஜக ஆயுத வழியில் கணக்குத் தீர்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளதை தெளிவு படக் காட்டிவிட்டான். ஜனநாயகத்தின் பிரதிநிதியாக CPMயை தலையில் தூக்கி வைத்து ஆடிய ஜனநாயகத்தின் குலக் குஞ்சுகள் அந்த பிரச்சாரத்தை இன்னும் விரிவாக செய்ய இதுவே சரியான தருணம். ஏனேனில் இவர்கள் குறிப்பிடும் ஜனநாயகம் யாருக்கான ஜனநாயகம் என்பது வெளிப்படையாக அம்பலப்பட்டுள்ளது. "மக்களுக்கு பாசிசம், அடிவருடி பூட்ஸ் நக்கிகளுக்கு ஜனநாயகம்" - இதுதான் இவர்களின் ஜனநாயகம்.
CPMல் இருக்கும் உணர்வுப்பூர்வமான தோழர்களே! உங்களுக்கு சுரணையிருந்தால் உங்களது கம்யூனிச உணர்வுகளை நடைமுறையுடன் உரசிப் பார்த்துக் கொள்ளும் தருணம் இது. பாசிச CPMல் இருந்து மக்களிடம் அவமானப்படுவதை விட உங்களது நேர்மையான நடைமுறைக்கேற்ற புரட்சிகர ஜனநாயக அமைப்புகளில் அணி திரளுங்கள்.

வர்க்கப் போராட்டத்தில் படு கொலை செய்யப்பட்ட அந்த இனிய தோழருக்கு வீரவணக்கங்கள்....

அசுரன்

நந்திகிராமத்திலிருந்து விழுப்புரம் வரை சிபிஎம் ரவுடிக் கும்பலின் கொலைவெறித் தாண்டவம்....

ஆயுதத்தை கைகள் நடுங்க கோழைத்தனமாக ஏந்திவிட்ட‌ கூலிப்படை பொறுக்கி கும்பல்

கூலிப்படைகளாய் ஆன‌ போலி கம்யூனிஸ்டுகள்

23 பின்னூட்டங்கள்:

said...

தோழர் இராசேந்திரனின் படுகொலைக்கு எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

said...

////
அதில் தோழர் இராசேந்திரன் என்ற எமது அமைப்பின் ஆதரவாளர் கொடூரமான தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று தோழர்கள் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமணையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.பாஜக பயங்கரவாதிகள் தமது தில்லி தலைமை அலுவலகத்தைத் தாக்கியதை எதிர்த்து அதற்கு பதிலாக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் மாநில அலுவலகங்கலால் சூழப்பட்டிருக்கின்ற, பாஜக வின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு அடையாள ஆர்ப்பாட்டம் கூட நடத்த முடியாத அந்த சொரனையற்ற சிபிஎம் தொடைநடுங்கிக் கும்பல், நிராயுதபானிகளாகக் களத்தில் பணியாற்றும் எமது பாட்டாளி வர்க்கத் தோழர்களை தனது வர்க்க எதிரியாகக் கொண்டு இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்துகிறார்கள்.இத்தாக்குதலுக்கு தக்க எதிர்விணையாற்றுவதோ பதிலடி கொடுப்பதோ நமக்கொன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனால், இந்த நிமிடம் வரை சிபிஎம் என்ற கடைந்தெடுத்த போலிக்கும்பலை கம்யூனிஸ்டுகளாகப் பார்க்கிற அக்கட்சியின் உண்மையான தோழர்கள், இப்படிப்பட்ட ஒரு இழிவான செயல் அம்பலமான பிறகும் அக்கட்சியை ஒரு கம்யூனிஸ்டு கட்சி என்று நம்புவார்களா? ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளாக எம்மைத் தொடர்ந்து சித்தரித்துவரும் சிபிஎம் தலைமையின் கோரமான கொலைமுகத்தை இனியேனும் அறிவார்களா??


http://yekalaivan.blogspot.com/2008/06/blog-post_21.html
//

said...

எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்

புரட்சிக்காரன்

said...

வாங்க சுந்தரவடிவேலு

said...

வர்க்கப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த தோழர்.இராசேந்திரனின் படுகொலைக்கு எனது வன்மையான கண்டனத்தை பதிவுசெய்கிறேன் தோழர்.

said...

DmDk party member r ur soc party col to DMDk

said...

வாங்க வுடுதல...

உங்களுக்கு வெக்கம் மானம் சூடு சொரனையே கிடையாது அப்படீங்கறதா திரும்ப திரும்ப எப்படியா இப்படி விளம்பரம் செஞ்சிக்கிறீங்க....???

படுகொலை செய்யப்பட்ட தோழர் ராசேந்திரன் தேமுதிகவைச் சேர்ந்த ஆதாரவாளர். விவிமு தோழரை CPM ரவுடிகளிடமிருந்து பாதுகாக்கும் முயற்சியில் படுகொலை செய்யப்பட்டுவிட்டார். அவரது அப்பாவும் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். இந்த தகவல் எனக்கு மிக தாமதமாகவே தெரிய வந்தது... நிற்க....

புரட்சிகர அமைப்புகள் ஒன்றும் கள்ளச்சாரய மாபியா(கர்நாடக எல்லையில் நடந்தது போல), ஊழல் பெருச்சாளிகள், தொழிலாளியை சுரண்டும் முதலாளிகள், சாதி வெறியர்கள் உள்ளிட்டவர்களிடம் உறவு வைத்துக் கொள்ளவில்லை. அப்படி உறவு வைத்துக் கொள்வதுடன் அவர்களை வைத்து கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் வுடுதலையின் CPM பாசிஸ்டுகள் இது குறித்து வெட்கப்படுவதில்லை.

சதாரண உழைக்கும் மக்கள் போக்கிடமின்றி இருக்கும் கையறு நிலையைத்தான் விஜயகாந்தின் கட்சி அறுவடை செய்து வருகிறது. இந்த கையறு நிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று வோட்டுப் பொறுக்கி அரசியலில் ஏதோ புனிதமாக இருக்கிறது என்று மக்களை நம்ப வைத்த கழுத்தறுத்த CPM/CPI உள்ளது. இந்த காரணத்தினாலேயே மாற்றுக் கட்சிகளில் இணைந்துள்ள உழைக்கும் மக்கள் புரட்சிகர அமைப்புகளில் வேலை செய்வது இயல்பான ஒன்றாக இருந்து வருகிறது.

தேமுதிக தோழர், விவிமு தோழரை காக்க, தனது வர்க்கத்தின் பிரதிநிதியை காக்க போராடி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்த CPM பாசிஸ்டுகளின் அடிவருடி வுடுதலை இங்கே வந்து வெட்கம் மானமின்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

வுடுதல, சந்திப்பு போன்றவர்களின் இணையச் செயல்பாடுகளே CPM போன்ற மாமா பாசிஸ்டுகளின் தரத்தை சொல்லும் ஒரு சோறு பதமாக இருக்கின்றன.

பின்னூட்டுமிட்டு அம்பலமானதிற்கு நன்றிகள் வுடுதல..

அசுரன்

said...

விவிமு தோழரை சாகடிப்பேன் என்று CPM மாநில செயற்குழு உறுப்பினர் இருந்த மேடையிலேயே சவால்விட்டுள்ளனர் CPM ரவுடிகள்.... பிறகுதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது... தொழிலாளி பேரச் சொல்லிக் கொண்டு தரகு பன்னாட்டு முதலாளிக்கு கூஜா தூக்குவதற்க்கு வெட்க்கப்படாத CPMமும் அதன் அல்லக்கைகளான வுடுதல, சந்திப்பு போன்றவர்களும் இந்த விழுப்புரம் சம்பவத்திற்க்கா சஞ்சலப்படப் போகிறார்கள்.... அடிமைகளிடம் மனிதனுக்குரிய சுயமரியாதை உணர்ச்சிகள் பிறப்பதில்லை....

நந்திகிராம் படுகொலைகளை நக்சல், மம்தா கூட்டணி என்று கூறி நியாயப்படுத்த முயன்றது CPM தலைமை, அதைப் போலவே விழுப்புரம் படுகொலையை நியாயப்படுத்த விரும்புகிறார் சிஸ்யக் கொழுந்து அல்லக்கை அடிமை திருவாளர் வுடுதல....

said...

தோழர் உங்க அனுமதி இல்லாமலேயே இதை வெட்டி என்னுடைய (senkodi.multiply.com) தளத்தில் ஒட்டிவிட்டேன். தவறென்றால் கூறுங்கள் நீக்கி விடுகிறேன். பரவாயில்லை என்றால் தொடர்ந்து இதுபோல் செய்யலாமா?

said...

//
அதில் தோழர் இராசேந்திரன் என்ற எமது அமைப்பின் ஆதரவாளர் கொடூரமான தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று தோழர்கள் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமணையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

தேமுதிக வை சேர்ந்தவரோடு எப்போது உங்கள் புரட்சிகர போலி நக்சல் கட்சி கூட்டணி வைத்தது?

//இத்தாக்குதலுக்கு தக்க எதிர்விணையாற்றுவதோ பதிலடி கொடுப்பதோ நமக்கொன்றும் கடினமான காரியம் இல்லை.//

அப்படியா ?

இப்பதிவில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்களில் இருந்து நீங்கள் கிரகித்தது இதுதானா? எதிரியைவிட துரோகி எவ்வளவு பயங்கரமானவன் என்பது உங்களுக்குத் தெரியாதா?

கம்யூனிஸ்ட்களுக்கு எதிரி உங்களை போன்ற கொள்கை தெளிவில்லாத புரட்சிகர போலிகள் sos நீங்கள்தான் .என்பதை லெனின் கருத்துகளை மீண்டும் படிப்பதன்மூலம் யார் தூரோகி என்பது தெளிவாகும் .

//அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று நீங்கள் உறுதியாகச் சொன்னீர்களானால், அவர்களே அதனை மறுப்பார்கள். //

போங்க.. தமாஷ் பன்னிக்கிட்டு எனக்கு சிப்பு வருது

//இதில்தான் நாங்களும் நமது மாவோயிசத் தோழர்களின் பாதையிலிருந்து வேறுபடுகிறோம்.//

அவங்கள இதைவிட அசிங்க படத்த கூடிய வார்த்தை எதுவும்.

//புரட்சிக்காக மக்களை அணிதிரட்டுவதற்கு மாற்றாக, தாமே ஆயுதம் தரித்துக் கொண்டு தனிமனித சாகசவாதிகளாக, சினிமா கதாநாயகனைப் போன்று கற்பனையில் களத்தில் போராடுவது முட்டாள்தனமானது. இதனை இடது தீவிரவாதம் என்கிறோம்.//

இதை மொதல்ல நல்லா தெளிவா புரிஞ்சிக்கிட்டு நீங்க செய்யற கம்யூனிச தூரோகத்திற்கு முடிகட்ட தவறான கருத்தியலை புகுத்திற திரிக்கிற வேலை நிறுத்தினா சரிதான்.

//அவர்களில் பலர், நான் உள்பட, அக்கட்சியின் உண்மை நிலையினை உணர்ந்து வெளியேறி மகஇகவின் நிலைப்பாடுகளோடு செயல்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.//

நல்லவேல தப்பித்தது சிபிஎம் அங்க இருத்து குழப்பாம வெளியே வந்தது..

said...

மகஇக புரட்சிகர அமைப்புகள் அந்த கிராமத்தில் கள்ளச்சாரய மாபியா கும்பலுடன் கூட்டனி. கோயில் திருவிழா என்று சொல்லி ஊழல் பெருச்சாளிகளாக தின்னு கொழிப்பது .

மறைமுக கட்சி என்ற பெயரில் அப்பாவி தொழிலாளிகளை சுரண்டியும்.மத, சாதி வெறியர்கள் உள்ளிட்ட அனைத்து பிற்போக்கு அமைப்புகளோடு உறவு வைத்துக் கொண்டு அந்த கிராமத்திற்கு காவல்துறை வரக்கூடாது.மக்கள் இந்த போலி மகஇக காரர்களை மீரி எதும் செய்யமுடியாத சூழ்நிலையில் மக்கள் தவித்துகொண் இருந்த நிலையில் அங்கு புதியதாக சிபிஎம் கட்சி தொங்கி அவர்களின் அராஜகத்திற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கோடு செயல்பட்டு வந்த . சிபிஎம் தோழர்களை தீர்த்துக் கட்டும் (அவர்களின் புரட்சிகர புரட்சி )வேலை தொடங்கி
சிபிஎம் தோழர்களை தாக்கி அவர்களின் வீடுகலை கொலுத்தியும் வன்முறையில் ஈடுபடும்போது தங்களை தற்காத்து கொள்ள முயற்சிக்கும்போது நடந்த கொலைதான் அது.

இதன் பிறகு அந்த கிராமமக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள் இனி முன்புபோல அந்த அராஜக கும்பலின் அடக்குமுறைகள் இருக்காது என்று.

மகஇக எந்த வகையிலும் ஒரு மிகபெரிய வார்த்தை பொறுக்கி கட்சிக்குரிய அடிப்படை ஜனநாயக பண்புகள் கூட இல்லாத சுத்தமான பாசிச அமைப்பாக உருவெடுத்திருப்பதையும். இதை தனி ஒரு சம்பவமாக கருதி இந்த கருத்துக்களை சொல்லவில்லை.

TNOC(மகஇக)ன் தலைமையில் திரிபுவாத மாமாக்கள் உட்கர்ந்து கொண்டு வாய் கூசாமல் பொய்களை பேசி கம்யூனிஸ்ட்களை தவறானவர்கள்என்றும் மக்கள் விரோதிகள் என்றும் காட்டிக் கொடுப்பதில் முன்னணியில் உள்ளனர்.

அவர்களின் அணிகளோ (விவிமு)அந்த கிராமத்தில் தண்ணீர் குழாய் கனெக்சனிலிருந்து, மின்சார கனெக்சன் வரை மாமா வேலை பார்த்து பொறுக்கி தின்பதும், கட்சி விட்டு கட்சி மாறி(தேமுதிக,திமுக,அதிமுக) நக்கிப் பிழைப்பதும். எல்லா போர்ஜெரி, 420வேலைகளையும், சாதிய ஆதிக்க நடவடிக்கைகளையும் செய்வதற்ககான ஒரு அரசியல் அங்கீகாரமாகவே மகஇகல் உள்ளனர். நான் சொன்ன உண்மை செய்திகளை தெரிந்துகொள்ளவேண்டுமானால் அந்த கிராமத்திற்கு சென்று தெரிந்து கொள்ளாம்.

said...

//வேலை தொடங்கி
சிபிஎம் தோழர்களை தாக்கி அவர்களின் வீடுகலை கொலுத்தியும் வன்முறையில் ஈடுபடும்போது தங்களை தற்காத்து கொள்ள முயற்சிக்கும்போது நடந்த கொலைதான் அது.
//வா வுடுதல.... எப்படீக்கீற...?

உண்ட்ட எனக்கு புட்ச்த்தே மத்தவங்க மாதிரி மாத்தி மாத்தி பேசாம ஒரே மாதிரி பித்தலாட்டம் செய்யிறதுதான். இத்தே கதயத்தான் நந்திகிராமல்யம் விட்டீங்க.... சரி அத்த வுடு இந்த லேட்டஸ்ட் கதைக்கி வருவோம்.

ம க இ க உங்கள தாக்கும்னு தெரிஞ்சிதான் உங்காளுங்க, CPM மாநில செயற்குழு உறுப்பினர் மேடைலேயே இருந்த போதே கொலை மிரட்டல் விட்டனரா?

உங்காளுங்களுக்கு எத்தினி பேருக்கு காயம் பட்டுச்சின்னு கொஞ்சம் விசாரிச்சி சொல்லுபா....

அப்புறம் கொலை செஞ்ச கும்பல் மேல சாராய குற்றச்சாட்டு இருக்கா இல்ல ம க இ க மேல இருக்கான்னும் கொஞ்சம் விசாரிச்சு சொல்லுபா...

மேப்படி நீ சொன்ன மேதிரி எதுனா வன்முறை நடந்தததுக்கு ஆதாரம் கீதாரம் இருந்தா கொடுபா? அட்லீஸ்டு ஒரு போலீசு கேசு....

தண்ணிக் குழாய் கனெக்சன், மின்சார கனெக்சனெல்லாம் கொடுக்க சொல்லோ கமிசன் அடிக்கிற கும்பல் யாருன்னு நான் சொல்ல விரும்புல வுடுதல.... அது உனக்குத்தான் என்னவிட நல்லாத் தெரியும்.

//மக்கள் இந்த போலி மகஇக காரர்களை மீரி எதும் செய்யமுடியாத சூழ்நிலையில் மக்கள் தவித்துகொண் இருந்த நிலையில்///

நீதான் புன்னூட்டத்துல ம க இ க எங்கடா இருக்கு அது ஒரு அமைப்பே இல்ல சில தனி நபர்கள்னு கத வுடுற, இங்க என்னடான்னு 1990க்களில் வந்த கிராமத்து சினிமா எப்கெட்டுல ம க இ க ஒரு கிராமத்தேயே அதுவும் விழுப்புரத்திற்க்கு அருகில் உள்ள ஒரு முழு கிராமத்தையே தன்னோட கட்டுப்பாட்டுல வைச்சி மக்களை கொடுமைப்படுத்தி வந்ததுன்னு சொல்ற.... ஆனாக்கூட உங்காளுங்க யாரும் அடிபடல, சாவல.... ம க இ க ஆதரவாளரத்தான் உங்காளுங்க போட்டு தள்ளிறுக்கானுங்க. ஒருவேள CPM கட்சி குண்டர்களுக்கு விஜயகாந்த், விஜய், சிம்பு போன்ற சாகச நாயகர்களிடம் காயம் படாமல் எதிரியை அழிப்பதற்க்கான விசேச சண்டை பயிற்சி எடுக்கிறாஙக்ளா என்னன்னு தெரியல.... கொஞ்சம் கேர் ஃபுல்லாத்தான் ஹேண்டில் பன்னனும்....


அசுரன்

said...

//தோழர் உங்க அனுமதி இல்லாமலேயே இதை வெட்டி என்னுடைய (senkodi.multiply.com) தளத்தில் ஒட்டிவிட்டேன். தவறென்றால் கூறுங்கள் நீக்கி விடுகிறேன். பரவாயில்லை என்றால் தொடர்ந்து இதுபோல் செய்யலாமா?//

No problem Comrade.... you are most welcome... :-)

Asuran

said...

Excerpts from Puthiya Kalacharama Article:

http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2147:2008-07-15-20-26-30&catid=67:2008&Itemid=83

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!


தலித் மக்களுக்கு எதிராக மிகக் கொடூரமான கலவரங்கள் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்ற காலங்களிலும் கூட சாதிவெறி தலைதூக்காத கிராமம் காரப்பட்டு. உள்ளூர் கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த தலித் மக்களைத் திரட்டி வெற்றிகரமானதொரு கோயில் நுழைவுப் போராட்டத்தை வி.வி.மு. நடத்திய கிராமம் அது. அப்போராட்டத்தின் விளைவாக நிலைநாட்டப்பட்ட தலித் மக்களின் கோயில் நுழைவு உரிமையை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் கிராமம்.


திருமண நிகழ்ச்சிகளுக்கு தலித் மக்களும் பிற சாதியினரும் ஒருவரையொருவர் அழைப்பதையும் ஒரே பந்தியில் அமர்ந்து கலந்துண்பதையும் தனது பண்பாடாகவே மாற்றிக் கொண்டிருக்கும் கிராமம். ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மக்கள் தமக்குள் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த வி.வி.மு. தோழர்களை அழைப்பதும், அவர்கள் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பதும், வி.வி.மு. நடத்தும் ஊர்க்கூட்டங்களில் எல்லாச் சாதிகளையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவதும் வழமையாக நடைபெற்று வரும் கிராமம் அது.


தமக்கிடையிலான முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ள மக்கள் அங்கே போலீசுக்கோ கோர்ட்டுக்கோ போவதில்லை. பணப் பரிவர்த்தனையும் நிலப்பரிவர்த்தனையும் கூட பெரிதும் வாய்மொழியின் அடிப்படையிலேயே நடைபெறும் அளவுக்கு மக்களிடையே நம்பிக்கையும் நேர்மையும் நிலவி வரும் கிராமம் அது. கள்ளச்சாராய விற்பனை அங்கே நெடுநாள் முன்னரே ஒழிக்கப்பட்டுவிட்டது. குடித்துவிட்டுத் தெருவில் ஆடுவதும், பொது இடங்களில் புகை பிடிப்பதும் அங்கே தடை செய்யப்பட்டிருக்கின்றன.


இவற்றையெல்லாம் ஆயுத பலம் கொண்டோ அதிகார பலம் கொண்டோ மக்களின் மீது விவசாயிகள் விடுதலை முன்னணி திணித்து விடவில்லை. கிராமத்தில் உள்ள பிற கட்சியினரின் ஆதரவோடும் ஆகப்பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடும்தான் இவை அங்கே அமல்படுத்தப்படுகின்றன. எனினும் விரல் விட்டு எண்ணக்கூடிய பிழைப்புவாதிகளும் அவர்களால் தூண்டிவிடப்பட்ட லும்பன்களும் இவற்றை எதிர்க்கத்தான் செய்தனர். தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு அவர்களுக்கு ஒரு கட்சி தேவைப்பட்டது. செங்கொடிக்கு எதிராகச் செங்கொடியை நிறுத்துவதுதான் புத்திசாலித்தனம் என்பதை அந்தக் கிரிமினல்கள் புரிந்திருந்தார்கள். மார்க்சிஸ்டு கட்சியோ அவர்களை வாரி அணைத்துக் கொள்ளத் தயாராக இருந்தது.


ஆனால் இந்தக் கிரிமினல் கும்பல் ஒரு கட்சியாகத் திரளுவதை ஏற்பதற்கு மக்கள் தயாராக இல்லை. மார்க்சிஸ்டு கட்சி கொடிக்கம்பம் ஊன்றுவதையே மக்கள் அனைவரும் (எல்லா சாதியினரும்) திரண்டு நின்று எதிர்த்தார்கள். ""நாலு பேராக இருந்தாலும் அது அவர்களது ஜனநாயக உரிமை'' என்பதை மக்களுக்கு விளக்கிக் கூறி கொடிமரம் ஊன்றும் உரிமையை அன்று மார்க்சிஸ்டுகளுக்கு வாங்கிக் கொடுத்தவரே வி.வி.மு. தோழர் ஏழுமலைதான். ஆயினும் கொடிதான் ஊன்ற முடிந்ததே தவிர, அவர்களுடைய கட்சி அங்கே காலூன்ற முடியவில்லை.


ஊர்ப் பொதுச்சொத்தைத் திருடித் தின்பது, கொடுக்கல் வாங்கலில் ஏமாற்றுவது, நகரத்தில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, தட்டிக் கேட்டால் குடித்து விட்டுத் தகராறு செய்வது, பிரச்சினை முற்றினால் சென்னைக்கு ஓடிவிடுவது, மீண்டும் வந்து வம்பு வளர்ப்பது.. இவைதான் காரப்பட்டில் மார்க்சிஸ்டு உறுப்பினர்கள் ஆற்றிய கட்சிப்பணிகள். இத்தகைய கட்சிப்பணிகளின் மூலம் களவாணிகளை மட்டுமே அவர்களால் திரட்ட முடிந்தது.
இவை ஒவ்வொன்றிலும் வி.வி.மு. தலைமையிலான மக்களின் எதிர்ப்பை அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. தற்போதைய கொலைக் குற்றவாளி வெங்கடேசன் கள்ளச்சாராயம் விற்க முயன்று ஊர்மக்களால் விரட்டியடிக்கப்பட்டவன். பிறகு கருமாதிக் கொட்டகையின் இரும்புக் குழாயைத் திருடியபோது வி.வி.மு. தோழர்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டவன். இவனும் இவனது "தோழர்களும்' கரண்டு கம்பி திருடிப் பிடிபட்ட வழக்கோ நிலுவையில் இருக்கிறது. இவைதான் மார்க்சிஸ்டுகள் அங்கே ஆற்றிய மக்கள் சேவைகள்.


தங்களது "மக்கள் சேவையை' வி.வி.மு.வின் தலையீடின்றி தொடர வேண்டுமெனில், ஊராட்சித் தலைவர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று கணக்குப் போட்டுத் தேர்தலிலும் போட்டியிட்டுப் பார்த்தனர். அதிலும் தோல்வியையே கண்டனர்.


தாழ்த்தப்பட்டோருக்கான தொகுப்புவீடு கட்டும் திட்டம் வந்தது. தலைக்கு ரூ. 3000 கொடுத்தால் உடனே முடித்து விடலாம் எனக் கூறி மக்களிடம் வசூல் செய்ய முனைந்தனர். ""இலஞ்சம் கொடுக்காமல் தொகுப்பு வீட்டைப் பெறுவோம்'' என்று வி.வி.மு. மக்களை ஒன்று திரட்டியது. "நக்சலைட்டுகள் மக்கள் நலத்திட்டத்தை தடுக்கிறார்கள்' என்று கூச்சல் போட்டுப் பார்த்தார்கள் மார்க்சிஸ்டுகள்; எடுபடவில்லை. இப்படி ஒவ்வொரு பிரச்சினையிலும் அவர்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டார்கள். அதன் விளைவுதான் இந்தக் கொலைவெறி!


சிந்தித்துப் பாருங்கள்! நிலப்பட்டாவுக்கும், ரேசன் கார்டுக்கும், தொகுப்பு வீட்டுக்கும் மக்கள் இலஞ்சம் கொடுக்க மறுக்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆத்திரப்படலாம். மார்க்சிஸ்டுகளுக்கு ஏன் ஆத்திரம் வரவேண்டும்? எந்தக் கேசும் ஒரு ஊரிலிருந்து வரவில்லை என்றால் அந்த ஊரில் "அரசியல் சட்டத்தின் ஆட்சி' நடைபெறாதது குறித்து போலீசுக்காரன் கோபம் கொள்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மார்க்சிஸ்டு கட்சிக்காரனுக்கு ஏன் கோபம் வரவேண்டும்?

said...

மகஇக யோக்கியர்களுக்கு !
காரப்பட்டு: விவிமு, மகஇக அழித்தோழிப்பு வெறியாட்டமும்: இனையத்தில் பொய்பிரச்சாரமும். சாதிவெறி தலைமையும்! கிரிமினல் தொண்டர்களும்!

http://soccpiml.blogspot.com/

said...

நன்றி வுடுதல,

உங்காளுங்களுக்கு தங்களோட கருத்தைக்கூட நேர்மையாக தங்களுடைய பெயரிலேயே சொல்ல முடியாமல் ம க இ கவின் கட்சியான CPI ML(SOC) பெயரில் வலை பதிந்து சொல்கிறார்கள் என்பதே உங்களது நேர்மைக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது.

கொல்லப்பட்ட ராஜேந்திரனை ம க இ கதான் கொன்றத என்ற இந்த அரிய உண்மையை கண்டுபிடிப்பதற்க்கு CPM ஏன் இத்தனை நாள் எடுத்துக் கொண்டது என்ற ரகசியத்தையும் வுடுதலையே சொல்லிவிட்டால் சிறப்பாக இருக்கும்.

அப்புறம், அந்த கிராமத்தில் மக்கள் ம க இகவை வெறுக்கிறார்கள் எனில் CPM ஏன் அங்கு செல்ல முடியவில்லை என்பதையும், ம க இ கவுடன் பெருந்திரளாக மக்கள் அங்கு அணி திரள்வது ஏன் என்பதையும் கூட வுடுதலை விளக்கலாம்.

சொந்த செலவில் சூனியம் வைத்து அம்பலமாகும் உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. :-) வாழ்த்துக்கள். தொடர்ந்து இதே போன்ற செயல்களை செய்வதற்க்கு உங்களை ஊக்குவிக்கிறேன்.

அசுரன்

said...

//கொல்லப்பட்ட ராஜேந்திரனை ம க இ கதான் கொன்றத என்ற இந்த அரிய உண்மையை கண்டுபிடிப்பதற்க்கு CPM ஏன் இத்தனை நாள் எடுத்துக் கொண்டது என்ற ரகசியத்தையும் வுடுதலையே சொல்லிவிட்டால் சிறப்பாக இருக்கும்.//


உண்மையை வெளியிட்டது ஜுலை 21ந்தேதி இதில் ரகசியத்தை கண்டுபிடிக்கவேண்டிய அவசியமே இல்லை யோக்கியர்களே


//அப்புறம், அந்த கிராமத்தில் மக்கள் ம க இகவை வெறுக்கிறார்கள் எனில் CPM ஏன் அங்கு செல்ல முடியவில்லை என்பதையும், ம க இ கவுடன் பெருந்திரளாக மக்கள் அங்கு அணி திரள்வது ஏன் என்பதையும் கூட வுடுதலை விளக்கலாம்.//

திமுக, அதிமுக, தேமுதிக அந்த கட்சிகளில் கூட பெருந்திரளான மக்கள் இருக்கிறார்கள், உங்களை போன்ற போலிகள் கொள்கையை சொல்லி மக்களை வென்றெடுப்பதை விட அடக்குமுறையாலும் ,அதிகார பலத்தாலும் , சாராயம் காய்ச்சி விற்பதாலும் ,சாதி வெறியாலும்
குண்டர் ரவுடிகளாலும் நடத்தப்டும் ஆராஜகவாதிகள் கேட்ககூடாத கேள்வி இது பெரும்பாலும் தலித் உறுப்பினர்களாக உள்ள சிபிஎம் கட்சி தோழர்களை தடுப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை போலிகளே !

said...

///உங்காளுங்களுக்கு தங்களோட கருத்தைக்கூட நேர்மையாக தங்களுடைய பெயரிலேயே சொல்ல முடியாமல் ம க இ கவின் கட்சியான CPI ML(SOC) பெயரில் வலை பதிந்து சொல்கிறார்கள் என்பதே உங்களது நேர்மைக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது.///

இதுக்கும் சேர்த்து பதில் சொல்லிருக்கலாமே வுடுதல.... ஏன் இந்த செலக்டிவ் இக்னோரியா?

இது கொஞ்ச நாள் முன்ன போட்ட புன்னூட்டம் இப்போ:
//
புரட்சிகர அமைப்புகள் ஒன்றும் கள்ளச்சாரய மாபியா(கர்நாடக எல்லையில் நடந்தது போல), ஊழல் பெருச்சாளிகள், தொழிலாளியை சுரண்டும் முதலாளிகள், சாதி வெறியர்கள் உள்ளிட்டவர்களிடம் உறவு வைத்துக் கொள்ளவில்லை. அப்படி உறவு வைத்துக் கொள்வதுடன் அவர்களை வைத்து கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் வுடுதலையின் CPM பாசிஸ்டுகள் இது குறித்து வெட்கப்படுவதில்லை.//

காரப்பட்டில் கள்ளச் சாரயம் காச்சி ஓடிப் போனது, திருட்டு போலிஸ் கேஸ் ஆனது எல்லாம் CPM கும்பல்தான். ம க இ க இல்லை.

இது நீ சொன்னது:
//உங்களை போன்ற போலிகள் கொள்கையை சொல்லி மக்களை வென்றெடுப்பதை விட அடக்குமுறையாலும் ,அதிகார பலத்தாலும் , சாராயம் காய்ச்சி விற்பதாலும் ,சாதி வெறியாலும்
குண்டர் ரவுடிகளாலும் நடத்தப்டும் ஆராஜகவாதிகள் //

ஏண்டா சொம்பை. ம க இ க ஒரு கும்பல் அது தமிழகத்தில் எங்குமே இல்லனு சொல்ற. ஆனா திரும்ப திரும்ப லூசு மாதிரி அதிகார பலம் கொண்டு ம க இ க மக்களை அடக்கி வைத்திருக்கிறது அப்படீங்கற...

உன்ன பாத்தா தலிவர அவமானப்படுத்திட்டான்னு சொல்லி ரோட்டோரம் தண்ணியடிச்சுட்டு புலம்பறவன் ஞாபகம்தான் வருது.

நீ உளவியல் படிச்சவன்னு எங்கியோ சொல்லியிருந்தீங்க, பெட்டர் நல்ல மனநல மருத்துவரை நீங்கள் பார்ப்பது.

அசுரன்

said...

//தலித் மக்களுக்கு எதிராக மிகக் கொடூரமான கலவரங்கள் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்ற காலங்களிலும் கூட சாதிவெறி தலைதூக்காத கிராமம் காரப்பட்டு. உள்ளூர் கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருந்த தலித் மக்களைத் திரட்டி வெற்றிகரமானதொரு கோயில் நுழைவுப் போராட்டத்தை வி.வி.மு. நடத்திய கிராமம் அது. அப்போராட்டத்தின் விளைவாக நிலைநாட்டப்பட்ட தலித் மக்களின் கோயில் நுழைவு உரிமையை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் கிராமம்.


திருமண நிகழ்ச்சிகளுக்கு தலித் மக்களும் பிற சாதியினரும் ஒருவரையொருவர் அழைப்பதையும் ஒரே பந்தியில் அமர்ந்து கலந்துண்பதையும் தனது பண்பாடாகவே மாற்றிக் கொண்டிருக்கும் கிராமம். ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மக்கள் தமக்குள் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த வி.வி.மு. தோழர்களை அழைப்பதும், அவர்கள் பஞ்சாயத்து செய்து தீர்த்து வைப்பதும், வி.வி.மு. நடத்தும் ஊர்க்கூட்டங்களில் எல்லாச் சாதிகளையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக அமர்ந்து பேசுவதும் வழமையாக நடைபெற்று வரும் கிராமம் அது.
//

///கொலையை நேரில் பார்த்த மல்லிகா, புகார் கொடுப்பதற்காக அன்றிரவு 11.30 மணிக்கு காவல் நிலையத்திற்குச் சென்ற போது, கொலைகாரனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே மல்லிகாவிடம் விசாரணை நடத்தியிருக்கிறார் இன்ஸ்பெக்டர். ""ரெண்டு பேர்தான் வெட்டினதா வெங்கடேசன் சொல்றான், நீ என்னம்மா இவ்வளவு பேர் சொல்ற'' என்று கூறி, மல்லிகாவின் புகாரை வெங்கடேசன் முன்னிலையிலேயே நிராகரித்திருக்கிறார் இன்ஸ்பெக்டர் இராசேந்திரன். கொள்ளை குறித்த புகாரையும் பதிவு செய்ய முடியாதென போலீசு மறுத்திருக்கிறது.///

///வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் தம்மைத்தாமே காயப்படுத்திக் கொண்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கின்றனர். அங்கே தயாராகக் காத்திருந்த மார்க்சிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலர் ஆனந்தன், அவர்களை ஆஸ்பத்திரியில் படுக்கவைக்க ஏற்பாடு செய்துவிட்டு, "வி.வி.மு. ஆட்கள் 10 பேர் தங்களது தோழர்களைக் கொலை செய்ய முயன்றதாக' முன்கூட்டியே தயாராக எழுதி வைத்திருந்த பொய்ப்புகாரை முதல் புகாராகத் திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்திலும் கொடுத்திருக்கிறார்.////

///
மறுநாள் காலையில் ""கொலைகாரர்கள் அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்யாவிட்டால் இராசேந்திரனின் பிணத்தை வாங்கமாட்டோம்'' என்று விழுப்புரம் மருத்துவமனை முன் போராடினார்கள் வி.வி.மு. தோழர்கள். அதன் பின்னர்தான் கொலைக் குற்றவாளிகள் பட்டியலில் 7 பேர் சேர்க்கப்பட்டனர். ஆனால் இதனை ஈடுகட்டும் விதத்தில் வி.வி.மு. தோழர் ஏழுமலை உள்ளிட்ட 19 பேர் மீது கொலைமுயற்சி, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பொய்வழக்கு பதிவு செய்துவிட்டது போலீசு.


தற்போது ஏழுமலை உள்பட 3 தோழர்கள் சிறையில் உள்ளனர். கொலைகாரர்களும் 3 பேர்தான் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மற்ற 4 கொலைகாரர்களை போலீசு "தேடி'க்கொண்டிருக்கிறதாம்! போலீசைப் பொருத்தவரை இந்தக் கொலை நக்சல்பாரி அமைப்பினரை ஒடுக்குவதற்குக் கிடைத்த வரப்பிரசாதம். இலஞ்சமும் கொடுத்து, ஆள்காட்டி வேலைஅடியாள் வேலைகளை இலவசமாகவும் செய்து தருகின்ற மார்க்சிஸ்டுகளின் சேவையில் புல்லரித்துப் போய் நிற்கிறது போலீசு நிர்வாகம்.///


//
ஆனால் இந்தக் கிரிமினல் கும்பல் ஒரு கட்சியாகத் திரளுவதை ஏற்பதற்கு மக்கள் தயாராக இல்லை. மார்க்சிஸ்டு கட்சி கொடிக்கம்பம் ஊன்றுவதையே மக்கள் அனைவரும் (எல்லா சாதியினரும்) திரண்டு நின்று எதிர்த்தார்கள். ""நாலு பேராக இருந்தாலும் அது அவர்களது ஜனநாயக உரிமை'' என்பதை மக்களுக்கு விளக்கிக் கூறி கொடிமரம் ஊன்றும் உரிமையை அன்று மார்க்சிஸ்டுகளுக்கு வாங்கிக் கொடுத்தவரே வி.வி.மு. தோழர் ஏழுமலைதான். ஆயினும் கொடிதான் ஊன்ற முடிந்ததே தவிர, அவர்களுடைய கட்சி அங்கே காலூன்ற முடியவில்லை.
///

////தற்போதைய கொலைக் குற்றவாளி வெங்கடேசன் கள்ளச்சாராயம் விற்க முயன்று ஊர்மக்களால் விரட்டியடிக்கப்பட்டவன். பிறகு கருமாதிக் கொட்டகையின் இரும்புக் குழாயைத் திருடியபோது வி.வி.மு. தோழர்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டவன். இவனும் இவனது "தோழர்களும்' கரண்டு கம்பி திருடிப் பிடிபட்ட வழக்கோ நிலுவையில் இருக்கிறது. இவைதான் மார்க்சிஸ்டுகள் அங்கே ஆற்றிய மக்கள் சேவைகள்.////

said...

டேய் வுடுதல அடுத்து நீ கீழே இருக்குற மாதிரி சொன்னாலும் சொல்லுவ...

"""
இந்த கொலைக்காரன் வெங்கடேசன் இருக்கானே அவன் ம க இ கவால் CPMக்குள் அனுப்பப்பட்ட உளவாளி. அவன் உண்மையில் ம க இ கக்காரன்னு சொல்லுவ.
"""

அசுரன்

said...

//உங்காளுங்களுக்கு தங்களோட கருத்தைக்கூட நேர்மையாக தங்களுடைய பெயரிலேயே சொல்ல முடியாமல் ம க இ கவின் கட்சியான CPI ML(SOC) பெயரில் வலை பதிந்து சொல்கிறார்கள் என்பதே உங்களது நேர்மைக்கு ஒரு சாட்சியாக இருக்கிறது.///

ஓ.. இதுதான் உங்க கட்சி பேரா ? நல்லவேல இப்பவாவது சென்னங்க இல்லான யாருக்கும் தெரியாம போய்யிருக்கும்.

//
புரட்சிகர அமைப்புகள் ஒன்றும் கள்ளச்சாரய மாபியா(கர்நாடக எல்லையில் நடந்தது போல), ஊழல் பெருச்சாளிகள், தொழிலாளியை சுரண்டும் முதலாளிகள், சாதி வெறியர்கள் உள்ளிட்டவர்களிடம் உறவு வைத்துக் கொள்ளவில்லை.//

காரப்பட்டில் அதிமுகாவோடு தேர்தல் உடன்பாட்டுக்கு என்ன பெயர் அந்த உறவுக்கு என்ன பெயர் புரட்சிகர உறவா? கள்ளஉறவா?

காரப்பட்டில் கள்ளச் சாரயம் காச்சி ஓடிப் போனது, திருட்டு போலிஸ் கேஸ் ஆனது எல்லாம் ம க இ க கும்பல்தான்.

திருவொன்னையூர் காவல் நிலைய வழக்குபதிவிலும் கண்டமங்களம் காவல் நிலைய பதிவிலும் விவிமு யோக்கியர்களின் பெயர் புரட்சிகரமாக சாராயம் விற்றதற்காக போலிஸ்கர எழுத்தால் எழுதி இருப்பதை போய் பார்த்துவிட்டுவரவும்.

//ம க இ க ஒரு கும்பல் அது தமிழகத்தில் எங்குமே இல்லனு சொல்ற.//


தமிழகத்தில் எங்குமே இல்லாத மகஇக விவிமு அந்த கிராமத்தில் மட்டும் இருப்பதற்கு காரணம் சாதிவெறியர்களின் சாதியாதிக்கத்தால்தான்.

said...

டேய் வுடுதல தண்ணியடிச்சவன் மாதிரி சொன்ன பொய்யையே திரும்ப திரும்ப புலம்பாத... போய் வூட்டுல வேற ஏதுனா வேல இருந்தா பாரு....

said...

விவிமுன் சாதி வெறி விழுப்புரத்தில்

// ""நாய் நுழையும் கோவிலுக்குள் நாங்கள் நுழையக்கூடாதா?'' — தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வி.வி.மு. ஆர்ப்பாட்டம்
புதிய ஜனநாயகம் - 2007
Written by புதிய ஜனநாயகம்
Saturday, 01 September 2007 10:33

http://tamilcircle.net/index.php?view=article&catid=36%3A2007&id=1102%3Aqq------------&option=com_content&Itemid=30


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள அகரம் என்கிற குலதீபமங்கலம் கிராமத்திலுள்ளது தர்மராஜா திரௌபதையம்மன் கோவில். அரசுக்குச் சொந்தமான இப்பொதுக்கோவிலில் வழிபடச் சென்ற தாழ்த்தப்பட்ட மக்களைத் தடுத்து தாக்கி வெறியாட்டம் போட்டுள்ளனர், வன்னியர் உடையார் சாதிவெறியர்கள்.

வருடந்தோறும் தேரோட்டத்தை மையப்படுத்தி உருவாகி வந்த பிரச்சினை, இவ்வாண்டு தாழ்த்தப்பட்டோர் தேருக்கு மாலைபோட்டு வழிபடும் உரிமையையே பறிக்கும் வகையில் முற்றிவிட்டது. தேர் ஊர்வலப் பாதுகாப்புக்காக வந்த போலீசார், ஊர்வலத்தன்று நள்ளிரவில் சாதிவெறியர்களால் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்பட்டதைத் தடுக்கவில்லை. சாதிவெறியர்களைக் கைது செய்யக்கோரி சாலை மறியல் செய்த தாழ்த்தப்பட்டோரை, 144 தடையுத்தரவு பிறப்பித்து விரட்டியடித்தனர். கோயிலும் பூட்டப்பட்டு ""சீல்'' வைக்கப்பட்டது. அதன்பிறகு முகையூர் எம்.எல்.ஏ.வான கலியவரதன் தலைமையில் திரண்ட வன்னிய சாதிவெறியர்கள் அரசு பூட்டுப் போட்டு வைத்த ""சீலை'' உடைத்து வெறியாட்டம் போட்டபோதும் அரசு கைகட்டி நின்றது. தாழ்த்தப்பட்டோர் கோயிலில் வழிபடும் உரிமையையும் மறுத்து வருகிறது.தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை மறுத்து கொட்டமடிக்கும் சாதிவெறியர்களை எதிர்த்து, தொடர்ந்து இப்பகுதியில் பிரச்சாரம் செய்த வி.வி.மு., அதன் தொடர்ச்சியாக 13.8.07 அன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டக்கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குலதீபமங்கல கிராம மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.இதைத் தொடர்ந்து 27.8.07க்குள் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குச் சென்று வழிபட அரசு உரிய ஏற்பாடு செய்யும் என்று மாவட்ட வருவாய்த்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஆனாலும், சாதிவெறியர்கள் இதை நீர்த்துப் போக வைத்து, தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட எல்லாவகையான சதிகளிலும் இறங்கியுள்ளனர். இதற்கெதிராக தாழ்த்தப்பட்டோரை அணிதிரட்டிவரும் வி.வி.மு. அடுத்தகட்ட போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.///

Related Posts with Thumbnails