TerrorisminFocus

Showing posts with label ம.க.இ.க.. Show all posts
Showing posts with label ம.க.இ.க.. Show all posts

Monday, December 08, 2008

சந்தேகமிருந்தால், ஆர்.எஸ்.எஸ் கும்பலே, ஒட்டிப் பாருங்கள் இன்னொரு சுவரொட்டியை!!

இந்து மதவெறி பாசிஸ்டுகளை எதிர்கொள்வது எப்படி?

கடந்த 08-11-08 அன்று சென்னை சேத்துப்பட்டு பகுதிச் சுவர்களில் விநோதமாய்ப் படர்ந்திருந்தது ஒரு விதக் காளான். "இந்து மதவெறிக் கொலைகாரன்" அத்வானிக்கு 82-வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள்தான் அவை!

மக்கள் கலை இலக்கிய கழகம், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய புரட்சிகர ஜனநாயக அமைப்புகள் செயல்படும் இப்பகுதியில், சேவா பாரதி, தலித் இந்துக்கள் சபை, திராவிடர் பறையர் முன்னேற்றக் கழகம், பிரம்ம குமாரிகள் சங்கம் எனப் பல 'அவதாரம்' எடுத்துக் கடந்த காலங்களில் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக கும்பல் காலூன்ற முயன்று வந்தது. அப்போதெல்லாம் இப்பார்ப்பன பாசிஸ்டுகளின் தந்திரத்தை அம்பலப்படுத்தி, இந்த நச்சுப் பாம்புகளை சேத்துப்பட்டு பகுதியில் அண்டவிடாமல் விரட்டியடித்தனர் இவ்வமைப்பினர்.

இந்நிலையில், அடுத்தகட்ட படையெடுப்புக்கு முன்னறிவிப்பாய், அத்வானியின் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததைக் கண்ட ம.க.இ.க. மற்றும் பெரியார் தி.க.வினர், அச்சுவரொட்டிகளைக் கருப்பு மையிட்டு அழித்து, உடனே எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இப்பிரச்சினையில் ம.க.இ.க., பெரியார் தி.க.வினரை நேருக்கு நேர் சந்திக்க திராணியில்லாத இந்து வெறியர்கள், தோழர்களை தண்டிக்க போலீசிடம் தஞ்சம் புகுந்தனர்.

உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், ம.க.இ.க., பெரியார் தி.க. தோழர்களை அழைத்து "போஸ்டர் ஒட்ட பி.ஜே.பி.க்கு இருக்கும் ஜனநாயகத்தை"ப் பற்றி வகுப்பெடுத்தனர்.

"அவுங்க கேஸ் கொடுத்திருக்காங்க, சமாதானமா போயிருங்க. மையிட்டு அழித்த சுவரொட்டிகளைக் கழுவிவிட்டு, மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்" - என்றதுதான் தாமதம், "நாண்டுகிட்டு செத்தாலும் சாவேனே தவிர, அழித்த சுவரொட்டியைக் கழுவமாட்டேன்" என முகத்திலறைந்து எதிர்வினையாற்றினார் போலீசு நிலையம் சென்றிருந்த தோழர்களில் ஒருவர்.

"சரி, நீங்கள் அழித்த சுவரொட்டிகள் மீது மீண்டும் அதே சுவரொட்டியையாவது ஒட்டிக் கொள்ளட்டுமே" - என்று போலீசு 'இறங்கி' வந்த போதும், "மீண்டும் ஒட்டினால் மீண்டும் அழிப்போம் சட்டப்படி என்ன செய்கிறீர்களோ செய்து கொள்ளுங்கள்" - என்று உறுதியாய் நின்றனர் தோழர்கள்.

மறுநாள் சுவரொட்டி அழிக்கப்பட்டதன் நோக்கத்தை விளக்கியும், பா.ஜ.க. பார்ப்பன பாசிஸ்டுகளின் கோர முகத்தையும், இதற்கு துணை போகும் போலீசின் கைக்கூலித்தனத்தையும் அம்பலப்படுத்தி, ம.க.இ.க., பெரியார் தி.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து சேத்துப்பட்டு பகுதி முழுவதும் தெருமுனைப் பிரச்சாரங்களை நடத்தி, இந்து மதவெறி பாசிசக் கும்பலுக்கெதிராக மக்களின் ஆதரவைத் திரட்டின.

இதனைக் கண்டு பாசிசக் கும்பலுக்கு ஆத்திரம் தலைக்கேறியது. போலீசுக்கோ இது கௌரவம் சம்பந்தப்பட்ட பிரச்சினையானது. விளைவு, சுவரொட்டிகளை மையிட்டு அழித்தக் 'குற்றத்திற்காக' ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர் வாசுதேவன், பெரியார் தி.க.வைச் சேர்ந்த தோழர் ராஜன் ஆகியோர் மீது பிணையில் வரமுடியாத, கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து சிறையிலடைத்தது.

சுவரொட்டியில் இருந்த அத்வானியின் முகத்தை மையிட்டு அழித்ததற்கே கொலை முயற்சி வழக்கும் சிறை தண்டனையுமென்றால், குஜராத், மும்பை, பகல்பூர், கோவை எனப் பல இடங்களில் மதக் கலவரம் நடத்தி ஆயிரக்கணக்கான முசுலீம்களைப் படுகொலை செய்த, அரியானா மாநிலம் துலினாவில் ஐந்து தாழ்த்தப்பட்டவர்களை உயிருடன் அடித்துக் கொன்ற "கொலைகாரன்" அத்வானிக்கு தூக்குத் தண்டனை கொடுத்திருக்க வேண்டும். இந்நேரம் அத்வானியின் கல்லறையில் மரமும் வளர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், நாடறிந்த இந்த கொலைகாரனுக்கு சட்டமும் நீதிமன்றமும் என்ன தண்டனையை வழங்கியுள்ளது? இம்மத வெறி கலவரங்களுக்காக அத்வானி மீது ஒரு 'பெட்டி கேஸாவது' போட்டிருக்கிறதா?

இப்படிப்பட்ட கொலைகாரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டி ஒட்டக் கூடாது என்ற பொதுநோக்கத்தில்தான் அத்வானியின் பிறந்தநாள் சுவரொட்டி மீது ம.க.இ.க.வும், பெரியார் தி.க.வினரும் மையிட்டு அழித்தனரே தவிர, வேறெந்த 'உள்நோக்க'மும் அவர்களுக்குக் கிடையாது.

இப்பார்ப்பன-பாசிச கும்பல், தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பவர்களையெல்லாம் வன்முறையால் மட்டுமே எதிர்கொண்டு வருகிறது. ஆனால், மற்றவர்கள் மட்டும் இவர்களை எதிர்க்கும் போது "சட்டம் சொல்கிறபடி" நடந்து கொள்ளவேண்டும் என உபதேசம் செய்கிறது.




"சாதிக்கொரு நீதி" பேசும் பார்ப்பன-பாசிசக் கும்பலிடம், இப்பித்தலாட்டத்தைத் தவிர, வேறென்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?

ஆர்.எஸ்.எஸ்.ஐயும்-பி.ஜே.பி.யையும் மற்ற ஓட்டுக் கட்சிகளைப் போல பார்க்க முடியாது. அடிப்படையிலேயே இவை இந்து மதவெறி பிடித்த, ஆதிக்க சாதிவெறி பிடித்த, ஆயுத பயிற்சி எடுத்துக் கொண்ட ஒரு பாசிச வன்முறைக் கும்பல். இவர்களை ஒழித்துக் கட்டாமல், சமூக அமைதியை பாதுகாக்க முடியாது. எனவே, இப்பாசிஸ்டுகளின் ஒவ்வொரு அசைவையும் - சுவரொட்டிகள் ஒட்டுவதில் தொடங்கி, விளக்கு பூஜை, ஷாகா நடத்துவது அனைத்தையும் கண்காணித்து, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, இப்பாசிஸ்டுகளுக்கெதிராக மக்களை அணி திரட்டியாக வேண்டும்.

தனது எதிரிவை வன்முறையால் மட்டுமே அணுகும் இக்கும்பலை, சட்டம், ஜனநாயகம் என்ற வரம்பிற்குள் மட்டுமே நின்று கொண்டு எதிர்கொள்ளவும் முடியாது. அவசியமான பொழுது சட்டத்தை மீறியும்தான் எதிர்கொண்டாக வேண்டும். அவாளின் "மொழியில்" சொன்னால்தானே "அவாளுக்குப் புரியும்"!

சிறையிலிருந்து வெளிவந்த தோழர்களை, ம.க.இ.க., பெரியார் தி.க., வி.சி. அமைப்புகளும், பகுதி மக்களும் பெருந்திரளாக அணி திரண்டு வரவேற்றனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து முழக்கமிட்டபடியே ஊர்வலமாய்ச் சென்று, அருகிலுள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, "இப்பாசிஸ்டுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராட"ச் சூளுரைத்தனர்.

பார்ப்பன பாசிசத்தை வேரறுக்க வேண்டிய அவசியத்தை சேத்துப்பட்டு பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதற்க்கு சான்றாக அமைந்தது சிறை சென்று வந்த தோழர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி.

சந்தேகமிருந்தால், ஆர்.எஸ்.எஸ். கும்பலே ஒட்டிப் பாருங்கள் இன்னொரு சுவரொட்டியை!

ம.க.இ.க., சென்னை

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2008

Thursday, January 10, 2008

மரணத்த விக்குறான் மோடி, மானத்த விக்குறார் கிருக்ஷ்ணசாமி!!

ம.க.இ.க. பொதுச் செயலாளர் மருதையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை புதிய கலாச்சாரம் பத்திரிகை சார்பில் அனானியாக ஒரு தோழர் பின்னூட்டமிட்டுச் சென்றுள்ளார். காமாரஜர் அரங்கத்தை மோடி என்கிற சொறி நாய்க்கு வாடகைக்கு விடுவதை கண்டித்தும் அது வெறுமே காங்கிரஸ் என்ற கும்பல் சம்பந்தப்பட்டது அல்ல தமிழர்களின் மானம், சுயமரியாதை சம்பந்தப்பட்டது எனவே அதனை பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது என்று அனைத்து ஜனநாயக, முற்போக்கு அமைப்புகளுக்கும் அழைப்பு விடுத்து இந்த அறிக்கை வந்துள்ளது. படித்துப் பார்க்கவும்.

**************************

ம.க.இ.க. பொதுசெயலர் தோழர் மருதையன்
இன்று பத்திரிகைகளுக்கு அளித்த அறிக்கை

"மரண வியாபாரி நரேந்திர மோடி பங்கேற்கும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்சிக்கு காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு தரக்கூடாது" என்று காங்கிரஸ் தலைவரிடம் நாங்கள் கோரியிருக்கிறோம் இந்த கோரிக்கையை முன் வைத்து சத்தியமூர்த்தி பவன் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த எங்களது தோழர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருக்ஷ்ணசாமியோ "வியாபார ரீதியில் நிர்வகிக்கப்படும் யார் கூட்டம் நடத்துகிறார்கள் என்பதை தமிழக காங்கிரஸ் கண்கானிக்க முடியாது என்றும் இந்த விசயத்தில் தலையிட முடியாது" என்றும் கூறியிருக்கிறார். வியாபார விசத்தில் இவ்வளவு கறாராக நடந்து கொள்ளும் காங்கிரஸ் தலைவர் அரசியல் விசயங்களையும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.

சமீபத்திய குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி அரசை "மரண வியாபாரிகள்" என்று விமர்சித்ததிற்காக சோனியாவை 'வெளி நாட்டுக்காரி' என்று சாடினார் மோடி. முன்னால் ம.பி முதல்வர் திக் விஜை சிங் மோடியை 'இந்து பயங்கரவாதி' என்று சரியாகவே குறிப்பிட்டார். "அது பிரச்சாரம்-இது வியாபாரம்" என்கிறாரா கிருக்ஷ்ணசாமி? அப்படியானால் லக்ஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள் பணம் கட்டினால் அவர்களுக்கும் காமராஜ் அரங்கத்தை வாடகைக்கு விடுவாரா?


இனப்படுகொலை குற்றத்திற்காக மோடி மீது அய்ரோப்பாவில் வழக்கு உள்ளது. அவர் அங்கே சென்றால் மறு கனமே கைது செய்யப்படுவார். இனப்படுகொலை குற்றவாளி என்ற காரணத்தினால் தான் "அமெரிக்காவில் கால் வைக்க கூடாது" என்று மோடிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. வியாபார ஒப்பந்தம் போடுவதற்காக கூட அமெரிக்காவிலோ, அய்ரோப்பாவிலோ மோடி நுழைய முடியாது என்பது தான் இதன் பொருள். அமெரிக்க, அய்ரோப்பிய முதலாளிகளே வியாபாரத்தை பொருட்படுத்தாத போது கிருஸ்ணசாமி வியாபாரத்தில் இவ்வளவு குறியாக இருப்பது ஏன் ?


2002 இனப்படுகொலையின் போது காங்கிரஸ் எம்.பி இஸான் ஜாப்ரியை அவரது வீட்டில் வைத்தே கண்டதுண்டமாக வெட்டிக்கொன்றதும் மோடியின் காவிப்படை தான். இந்த கொலையில் முதல் குற்றவாளி மோடி தான் என்றும், அவரை கைதுசெய்ய வேண்டும் என்றும் ஜாப்ரியின் மனைவி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். "கொலை வேறு வியாபாரம் வேறு" என்கிறாரா கிருஸ்ணசாமி?

கிருக்ஷ்ணசாமியின் மீது தாக்குதல் நடந்த உடனே "தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கே சீர்குழைந்து விட்டது" என்று குமுறினார் அவரது மகன் விக்ஷ்னு பிரசாத். குஜராத் முசுலீம்கள் கொல்லப்பட்ட போது "அதை கண்டு கொள்ள கூடாது" என்று போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தவர் தான் இந்த மோடி இதை எதிர்த்த சிரீ குமார் என்ற குஜராத் உளவுத்துறையைச் சேர்ந்தவர் தனது பதவியையே இழந்திருக்கிறார். ஆனால் கிருக்ஷ்ணசாமியோ 'வியாபாரத்தை இழக்க முடியாது' என்கிறார்.


காமராசரை கொலை செய்ய முயன்ற கூட்டம் தான் மோடியின் ஆர்.எஸ்.எஸ் என்ற உண்மையை கிருக்ஷ்ணசாமி மறுக்கிறாரா? காந்தி கொலையை நியாயப்படுத்தும் " நான் கோட்சே பேசுகிறேன்" என்ற நாடகம் மற்ற மாநிலங்களிலெல்லாம் தடை செய்யப்பட்ட போதும் அதை குஜராத் முழுவதும், நடத்திக்காட்டியவர் மோடி. பணம் கொடுத்தால் கோட்சே நாடகத்தை நடத்துவதற்கும் காமராசர் அரங்கத்தை கிருக்ஷ்ணசாமி வாடகைக்கு விடுவார் போலிருக்கிறது.

இது மதச்சார்பின்மை நிலவும் பெரியார் பிறந்த மண். உலகமே காறி உமிழ்ந்த ஒரு மத வெறி கொலைகாரன் இந்த மண்ணில் கால் வைக்க அனுமதிப்பது தமிழன் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அவமானம். கிருக்ஷ்ணசாமிக்கு பணம் தான் முக்கியம் என்றால் அவர் நட்டப்பட வேண்டாம்! காமராசர் அரங்கத்திற்கான ஒரு நாள் வாடகையை மக்களிடம் வசூலித்து நாங்கள் அவருக்கு தந்து விடுகிறோம், பணத்தைக் காட்டிலும் மானமும் மனிதாபிமானமும் மதச்சார்பின்மையும் தான் நமக்கு முக்கியம்.

மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு காமராசர் அரங்கை கொடுப்பதற்கு தமிழகத்தின் எல்லா கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மதவெறிக்கு துணை போகும் கிருக்ஷ்ணசாமியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். டில்லியில் உள்ள எமது தோழமை அமைப்புகள் சார்பில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். மதவெறி கொலைகாரன் மோடி தமிழகத்தில் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம் !

இவன்
மருதையன்
பொதுச்செயலர், ம.க.இ.க. 10.12008



Related Articles:

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் நம்ப விரும்புகிறோம் அல்லவா??!!!

பாஸிஸ்டுகளின் வெற்றி !!

குஜராத் : தோல்வி யாருக்கு?

வர்ணாசிரம கிரிமினலும்! ஹவாலா கிரிமினலும்!

“இறுதித் தீர்ப்பு” குஜராத் படுகொலை :ஆவணப்படம்

வரலாறு பழிக்கிறது நாம் கோமாளிகள் என்று!

மோடியின் ராம ராஜ்ஜியம்Do we have a choice?

இந்துத்துவம் என்றால் பொய்த்துவம், பித்தலாட்டம், கர...

கலி முற்றும் பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!!!

படியுங்கள், பயங்கொள்ளுங்கள்.... 3_4

கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்: நவீன மனுநீதி!

கொலை வெறிக்கூட்டத்தின் வாக்குமூலம் தமிழில் 1 -2

பய பீதியில் மோடியும், ஜெயலலிதாவும் - பாசிசம்=கோழைத்தனம்!

Rama.... Rama....

Related Posts with Thumbnails