TerrorisminFocus

Thursday, June 28, 2007

மாமாவுக்கு சோப்பு போடும் அடிவருடி - வீரமணி தொடர்கிறார்

டாலர் செல்வன் பலமுறை தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு நம்மிடம் அம்பலமானவர்தான். ஒரு கட்டத்தில் இதற்க்கு மேல இவரை அவமானப்படுத்த, அம்பலப்படுத்த ஒன்றுமில்லை என்றாகிய பிற்ப்பாடு அவரது புரளி பதிவுகளுக்கு எல்லாம் பின்னூட்டங்களிலேயே எதிர்வினை செய்வதே அதிகம் என்று புரிந்து கொண்டு அதையே அதிக பட்சம் செய்து வந்தேன்.

ஆனால் தற்போது நட்பு சக்திகளடையே ஏற்ப்பட்டுள்ள கருத்து வேறுபாட்டில் தனது அடிவருடி வேலைக்கு மீண்டும் அடித்தளம் அமைத்துக் கொள்ளும் முயற்சியாக பெரியார் புரா குறித்து மீண்டும் ஒரு அகாசப் புளுகை அவிழ்த்து விட்டுள்ளார் டாலர் செல்வன். இதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து பதிவிடுவதே நலம் என்று கருதியதால் தனிப்பதிவு.

ஏதோ பெரியார் புரா நடந்து வரும் இடங்கள் எல்லாம் பட்டினியில் தவித்தது போலவும், அங்கு பிழைப்புக்கு வழியே இல்லாமல்தான் பல நூறாண்டு காலமாக மக்கள் வாழ்ந்து வருவது போன்றும், வீரமணி கும்பல் அவர்களுக்கு வாழ்வளிக்க வந்த அவதாரங்கள் போலும் புனித வட்டம் கட்டி உடன்பிறப்புகளை புளங்காகிதப் பட வைத்துள்ளார் டாலர். துரதிருஷ்டவசமாக சில எளிய உண்மைகளை பார்க்கும் போதே டாலரின் வழமையான வார்த்தை ஜாலங்களுக்கு பின்னால் உள்ள அடிவருடியின் மோடி மஸ்தான் வித்தை கண்ணுக்கு புலப்படுகிறது.

குறிப்பாக, ஏற்கனவே புதிய ஜனநாயகத்தில் வந்திருந்த கட்டுரையும் சரி, அதனையொட்டி அசுரனில் பிரசூரமான சில கட்டுரைகளும் - இந்திய வளங்களை ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாக மாற்றி, இந்திய கிராம வளங்களை சுரண்டும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே புரா திட்டங்கள செயல்படுவதை விரிவாக அம்பலப்படுத்தியிருந்தன. அந்த அம்சத்தில் எந்தவொரு எதிர்வாதமும் வைக்க திராணியில்லாத டாலர் அடிவருடி, புரா திட்டம் ஏழை விவசாயிகளின் வாழ்வை மலர வைக்கும் அற்புதம் என்ற மாற்றுப் பிரச்சாரத்தை முன்னுக்குக் கொண்டு வந்துள்ளார். இந்த பிரச்சாரத்திற்க்கு அடிப்படையாக அந்த கிராமங்கள் எல்லாம் பிழைக்க வழியற்ற பாலைவன பூமிகள் போல ஒரு சித்திரத்தை புகைப்படங்கள் உள்ளிட்ட சாத்யமான வித்தைகள் அனைத்தையும் உபயோகித்து நிறுவ முற்பட்டுள்ளார்.

ஆனால் உண்மை வேறாக உள்ளது என்று இன்னொரு தோழர் பின்னூட்டத்தில் ஒரு கட்டுரையை விட்டுச் சென்றுள்ளார். அவரது பெயர் புல்டோசராம். வாங்க புல்டோசர்... வந்து சமூக ஏற்றத்தாழ்வுகளை உபயோகித்து கூட்டிக் கொடுக்க அலையும் டாலர் அடிவருடிகளை உடைத்து நொறுக்குங்கள்....

இது சம்பந்தப்பட்ட ஒரு முந்தைய கட்டுரையில் சில வரிகள் வரும் அதனை இங்கு ஞாபகப்படுத்துவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

@@@@@
ஆம் லாபம் வருமென்றால் மூங்கில் பயிரிட வேண்டியதுதானே. பிழைப்புவாதம் பேசும் டாலர் கண்மணிகளே உங்கள் வீட்டுப் பெண்களை கொஞ்சம் கூட்டிக் கொடுங்களேன் சில எச்சில் டாலர்களை உங்கள் மணம் குளிரும் அளவு மலையாய் அள்ளி குவிக்கிறேன். செய்வீர்களா அடிவருடிகளே?
@@@@@

புதிய ஜனநாயகத்தில் வந்ததொரு விரிவான கட்டுரை: பெரியார் புரா : தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை


புரா திட்டத்தில் உள்ள அடிப்படையான பிரச்சனையை மட்டும் பேசும் கட்டுரை:
ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொருவன் கன்னத்தை காட்டிக் கொடு - புதிய புரா

இந்த அத்தனை விவாதத்திற்க்கும் காரணமான கட்டுரை:
வீர'Money' - சுயமரியாதை பிரச்சாரமா? மாமா வேலை விபச்சாரமா?

இத்துடன் அவர்களிடம் சில அடிப்படைக் கேள்விகள், ஏன் ஏகாதிபத்தியத்திற்க்கு தூக்கு தூக்கியே இந்திய விவசாயம் பிழைக்க வேண்டும் என்ற நிலையை அரசு உறுதிப்படுத்துகிறது? இஸ்ரேல் எனும் கட்டாந்தரையில் பயிர் செய்ய துணிந்தவர்கள் எங்கே ஏற்கனவே போகம் விளைந்த, தண்ணீர் வசதியிருக்கும் இடங்களையும் SEZக்களுக்கும், மூங்கில், கட்டாமணக்கு, அவுரி, பூ என்று மண் வளத்தை அழிக்கும் பயிர்களை பயிரிட மாமா வேலை செய்யும் புராக்கள் எங்கே?

அல்லது இந்திய விவசாயத்தின் வளர்ச்சிதான் தன்னிறைவை அடைந்து உபரியை விற்க்கும் நிலையில் உள்ளோமா? தரங்கெட்ட கோதுமையை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்த கேவலத்தையும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.


இப்போ டாலரின் புளுகு மூட்டைகளுக்குள் நம்மை புல்டோ சரில் வைத்து அழைத்துச் செல்ல வருகிறார் தோழர் புல்டோ சர்.

***********************

மைனர் கெட்டால் மாமா; மாமா கெட்டால்?

தளபதி கெட்டால் தமிழர் தலைவர்; த.தலைவர் கெட்டால்?பெரியார் புரா எனும் ஏகாதிபத்திய சதியை 'புதிய ஜனநாயகம்' பத்திரிக்கை ஏற்கெனவே அம்பலப்படுத்தி இருக்கிறது. அதனை இணைப்பில் காண்க.

மாமா வீரமணியின் புரா- அடியாள் சேவை முப்போகம் நெல் விளையும் (விளைவது அரிசி அல்ல) நிலத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது என்று நாம் எவ்விடத்திலும் சொல்லவில்லை. அதே நேரத்தில் அந்த 65 புரா கிராமங்களில் இருக்கும் நிலங்கள் வறண்ட பொட்டல்களும் அல்ல. காவிரி டெல்டாவை ஒட்டி இருப்பதனால் மண்வளமும் நிலத்தடி நீரும் உள்ளது. மழைக்காலத்தில் நெல்லும், கோடையில் உளுந்து, காய்கறிகளும் பயிரிடப்பட்ட நிலங்கள்தான் புராவின் 65 கிராமங்களும்.

பழையபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் பெரியார் மருந்தியல் கல்லூரி மூலிகைப்பயிர் பிரச்சாரம் செய்யும் முன்னர் அவ்வூர்களில் இரு போகம் விளைச்சல் செய்து வந்ததை அவ்வூர் மக்களும், பிரச்சாரம் செய்யப்போனவர்களும் ஒத்துக்கொண்டுள்ளனர்.

என்ன வகை மூலிகைகள் வளர்க்கிறார்கள்? அவுரி.. அவுரி எதற்கு? வெளிநாட்டாருக்கு இயற்கை சாயம் தயாரிக்கவும், பேதி மாத்திரை உள்ளிட்ட சில வகை மருந்துகள் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கவும். ஆக வெளிநாட்டில் பேதி எடுக்க உள்நாட்டில் பட்டினி போடுகிறது புரா. வெள்ளைக்காரன் 19 ஆம் நூற்றாண்டில் பஞ்சங்களை உருவாக்க பயிரிடச் சொன்ன அவுரியை, உள்ளூர் மாமா வீரமணி பயிரிடச் சொல்கிறார், அவரின் கல்லாவை ரொப்ப.

அச்சம்பட்டி மக்கள் சாப்பாட்டுக்கே திண்டாடும் வகையில் அவ்வூரில் சகாரா பாலைவனமும் இல்லை. அங்கு புரா திட்டத்தில் பெரியார் மணியம்மை கல்லூரி முதல்வர் ராமச்சந்திரனின் உறவினர்கள் லாபம் சம்பாதிக்க என்றே தொடங்கப்பட்ட கயிறு தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருளை வழங்கும் தென்னைகள் எனக்குத் தெரிந்தவரை வளமான இடத்தில்தான் பயிராகும்.

மேலும் புரா திட்டப்படி பெ.ம.பொ.கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட சர்வேக்களின்படி,

குமாரபுரத்தில் ஏதேனும் தொழில் ஒன்றை செய்வதாகச் சொல்லி இருக்கும் 577 பேர்களில் 485 பேர் விவசாயிகள்.
பழையபட்டியில் 261 பேர்களில் 206 பேர் விவசாயிகள்.
அச்சம்பட்டியில் 137 பேரும் ராயமுண்டன்பட்டியில் 160 பேர்களும் வீரமரசன்பேட்டையில் 116 பேர்களும் விவசாயிகளே. எஞ்சிய மக்கள் தொழிலாளிகள் என்கிறது அந்த சர்வே.

இந்தத் தகவல்களையும் அதே பெரியார்புரா இணையதளம் தான் சொல்கிறது. இவ்வாறு பெருவாரியாக விவசாயம் செய்பவர்களே இருக்கும் ஊரை ஏதோ விவசாயமும் தொழிலும் இல்லாத ஊராகச் சித்தரித்துப் புளுகுவதன் மூலம் நம் மீது அவதூறு செய்ய முயலும் கூமுட்டைத்தனத்தை விட்டு விட்டு யோசிக்க வேண்டும். அதாவது பகுத்தறிவை பயன்படுத்த வேண்டும்.

நெல்விளைச்சலில் லாபம் இல்லைதான். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதிக விலை நிர்ணயிக்க சொல்லி அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அதை விட்டு விட்டு டாலருக்காக எதை வேண்டுமானாலும் செய்யச் சொல்வது எப்படி புத்திசாலித்தனமாகும்? நெல்லை விட்டுவிட்டால் நாளை உண்ண என்ன செய்வது? கப்பலுக்காக காத்திருப்பதா?

பொண்டாட்டியும் புருஷனும் இன்னைக்கு வேலைக்கு போனால்தான் ஏதோ வாழ்க்கையை ஓட்ட முடிகிறது. கூலியைக் குறைத்து ஒட்டச்சுரண்டுகிறார்கள். இச்சுரண்டலை எதிர்த்துப் போராடுகிறார்கள். போராட்டத்தில் இணைவது நேர்மையான செயல் என்கிறோம் நாம். வீரமணி போன்றவர்கள் சொல்வது என்ன என்றால்.."கூலி குறைவாகத்தான் இருக்கும். வேலைக்கு போவதை விட்டு விடு.. பவுடர் பூசி சிங்காரி..கிராக்கி பிடித்து தருகிறேன்" என்கிறார். இதைத்தான் மாமா வேலை என்கிறோம்.

புல்டோசர்


Related Articles:

மாமா வீரமணியும் மயங்கிக் கிடக்கும் மாப்பிள்ளைகளும்

Sunday, June 24, 2007

வீர'Money' - சுயமரியாதை பிரச்சாரமா? மாமா வேலை விபச்சாரமா?

வீரமணியைப் பற்றி எல்லாருக்கும் ஓரளவு தெரியும் ஆனாலும் கூட ஏன் மாமா என்று சொல்கிறீர்கள். அது எங்களைப் புண்ப்படுத்துகிறது என்று பலரும் சொல்கிறார்கள்.

வீரமணியை மாமா என்றவுடன் புண்பட்ட உங்களது மணம், எமது மக்களையும், எமது மண்ணையும், வளங்களையும் விபச்சாரியாக அவர் மாற்றிய பொழுது ஏன் புண்படவில்லை என்று எமக்கு கேள்வி எழுகிறது. அதுவே இந்த பதிவு.

*********************************

வீரமணிக்கு தரப்படும் வேன் சுயமரியாதை பிரச்சாரத்துக்கா?

சிறு தொழிலிலோ ஏற்றுமதி நிறுவனத்திலோ உழைப்புச் சுரண்டல் மூலம் பல லட்சம் லாபம் சம்பாதிக்கும் தொழில் அதிபர்கள் தாம் சொகுசாக இருப்பதற்கு பங்களாக்கள் கட்டிக் கொள்வதையும், ஏ.சி. கார்கள் வாங்கிக் கொள்வதையும் பார்த்திருக்கிறோம். கார்களை வாங்கும்போது சந்தையில் வந்திருக்கும் அதி நவீன, விலை உயர்வான, முடிந்தால் இறக்குமதி செய்யப்பட்ட கார்களாக வாங்குவது அவர்களிடையே உள்ள வழக்கம். ஆனால் எந்தத் தொழில் அதிபராவது காரை வாங்குவதை தொழிலாளர்களைக் கொண்டு விழா எடுத்து, தொழில் வளர்ச்சிக்காக 'அன்னாருக்கு' கார் வழங்கும் விழா நடத்தியதை எங்காவது பார்த்தது உண்டா?

அப்படி ஒரு அதிசய நிகழ்வை மாணவர் தி.க. சென்னையில் 21 ஜூனில் நடத்துகிறது. மானமிகு வீரமணிக்கு கலைஞர் கரத்தால் சுயமரியாதைப் பிரச்சார வேன் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது அந்த அமைப்பு. இந்த வேனை வாங்க பணம் எங்கிருந்து திரட்டப்பட்டது? பெரியார் பெயரில் வீரமணி நடத்தி வரும் கல்வி வியாபார நிறுவனங்களான பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், பார்மசி கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட கட்டாய நன்கொடையால்தான் வேன் வாங்கி இருக்கின்றனர்.

வீரமணிக்கு வேன் வழங்குவது இது முதன்முறை அல்ல.. ஏற்கெனவே 2001 இலும் வழங்கி இருக்கின்றனர். அப்போதும் ஊழியர்களின் பையில் இருந்து பிடுங்கினர். அங்கு பணியாற்றும் பலரும் "ஒரு மாசம் கூட சம்பளத்தை முழுசா தந்ததில்ல.. ஆசிரியருக்கு வேன் வழங்குறோம். எடைக்கு எடை நாணயம்..தர்றோம்னு 10%மாவது பறித்துக் கொள்கிறார்கள்" எனப் புலம்புகிறார்கள்.

சரி.. வழிப்பறி செய்து வேன் வாங்குகிறாரே, மானமிகு தளபதி! அதை வைத்துக்கொண்டு என்ன சுயமரியாதையைப் பிரச்சாரம் செய்கிறார்? அதிமுக ஆட்சிக்கு வந்தால் சமூகநீதி காத்த வீராங்கனையை ஆதரித்தும் திமுக ஆட்சிக்கு வந்தால் சூத்திரரை ஆதரித்தும் மானம்கெட்ட பிரச்சாரம் செய்கிறார்!


ஏற்கனவே ஆரம்பித்து விட்ட மாமா வேலைகள்..... மேலை நாட்டினரைக் குஷிப்படுத்தும் புரா

இப்போது 3 ஆண்டுகளாக தஞ்சை விவசாயக் கிராமங்களை அந்நியனுக்கு அடகு வைக்கும் புரா திட்டத்துக்கு பிரச்சாரம் செய்கிறார்.
தமிழ் நாட்டின் நெற்களஞ்சியத்தை சுடுகாடாக்கிட மூங்கிலையும் காட்டாமணக்கையும் பயிர் செய்யச் சொல்லி பிரச்சாரம் செய்கிறார்.

கார்பொரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், புராக்கள் இனிமேல் கிராமங்களில் விருந்தோம்பலையும் சுற்றுலாவையும் மேம்படுத்த செயல்திட்டங்களை வகுத்து வருகின்றன. புரா கிராமங்களுக்கு வருகை தரப்போகும் மேலை நாட்டு எஜமானர்களை மனம் குளிர வைக்கும் (குஷிப்படுத்தும்) இத்திட்டத்தை வகுத்துத் தர இருப்பவர்கள் 'லே மெரிடியன்' பழனி பெரிய சாமி போன்ற நட்சத்திர விடுதி முதலாளிகள். அதாவது சுற்றுலா, விருந்தோம்பல் எனும் பெயரில் விபச்சாரத்தை ஊக்குவிக்கப் போகின்றனர்.

சுற்றுலாத்தொழில் எந்த எந்த ஊர்களில் எல்லாம் ஊக்குவிக்கப்பட்டதோ அங்கெல்லாம் சிறுவர், சிறுமியர் உட்பட பலரும் விபச்சாரத்தில் தள்ளப்பட்டனர். மாமல்லபுரத்திலும், கோவாவிலும் இது தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

இப்போது சொல்லுங்கள்... வீரமணிக்கு தரப்படும் வேன் சுயமரியாதை பிரச்சாரத்துக்கா? பெரியார் புரா மூலம் விபச்சாரத்துக்கா?

சின்ன கட்டபொம்மன் (பின்னூட்டத்தில்)Related Articles:


இது பெரியார் புராணம் அல்ல!


ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொருவன் கன்னத்தை காட்ட...

Friday, June 22, 2007

ராமதாஸ்க்கு எங்கேங்கேங்கேங்கேங்யோ அதிருது!

நண்பர் குழலி ராமதாஸ் ஆதரவாளர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம்தான். ஆனாலும் அவரது ஆதரவு ராமதாஸ் பேரச் சொன்னாக்க அதிருது என்று விளம்பரம் செய்யும் அளவு போவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க இயலவில்லை.

ராமதாஸ் ஒரு தரகு அரசியல் பிழைப்புவாதி என்பதை தாண்டி ஒன்றும் கிடையாது எனபதை நண்பருக்குச் சொல்வது எனது கடமை என்றே கருதுகிறேன். மேலும் அவர் பேரச் சொன்னாக்க ஒரு சொறிநாய்க்குக் கூட அதிராது என்ற உண்மையையும் அவருக்குச் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

கொஞ்ச நாள் முன்ன சென்னையில திரும்பன பக்கமெல்லாம், 'அன்று கொள்ளையடித்தான் வெள்ளைக்காரனை விரட்டினோம் இன்று கொள்ளையடிக்கும் அம்பானியை விரட்டுவோம்' என்பது போல புரட்சிகரமான சுவரொட்டிகள் ஒட்டப் பட்டிருந்தன. என்னாடயிதி அதிசயம் ராமதாஸ் ஒரு உண்மையான மக்கள் விடுதலை தலைவராக மாறிவிட்டாரா என்று சின்ன அதிர்ச்சி, பிறகு ஒரு சின்ன சந்தேகம் மனதில் எழுந்தது ஒரு வேளை அம்மாவுக்கும், அய்யாவுக்கும் மாற்றி மாற்றி கூஜா தூக்கிய நரித்தனம் போலவே இதுவும் ஒரு அரசியல் தந்திரமோ என்று. கடைசியில் நான் சந்தேகப்பட்டதுதான் உண்மையாகியது.

ரிலையன்ஸ் அம்பானியை கல்லாவ காலி பண்ண சொல்லி ரொம்ப வீறாப்பா பேசுன நம்ம அதிருது தலைவர் மாலடிமை(ராமதாசு) கொஞ்ச நாள்லேயே அம்பானியின் கால்ல விழும் போராட்டம் நடத்தி தனக்கு யார் பேரச் சொன்னா எங்க எப்படி அதிரும் என்று வெளிப்படுத்தினார். (ரிலையன்ஸ் சில்லறை வியாபாரம் எதிர்ப்புப் போராட்டம்). (மாலடிமை - இங்கு மால் என்று சொல்வது ராமரை, பெரிய அடுக்குமாடி கடை என்ற பொருளில் இங்கு மால் பயன்படுத்தப்படவில்லை).

கற்புக்கும், சிகரெட்டுக்கும் நேரடியாக செருப்பு, வெளக்குமாறு போன்று ஆயுதங்களை ஏந்திக் கொண்டு மாதர்களை போராட வைத்த மாலடிமைக்கு சில்லறை வியாபாரம் என்றவுடன் படு சில்லறைத்தனமாக காலில் விழும் போராட்டம் நடத்த தோன்றிய மர்மம் எனக்கு தெளிவாகவே புரிகிறது. பெரியாரை தங்களது தலைவராக கருதிக் கொள்ளும் இவர்கள் காலில் விழும் போராட்ட நடத்திய பொழுது யாருடைய சுயமரியாதை பறி போனது என்று புதிய வியாக்கானங்களை தரும் அபாயம் உள்ளது.

மாலடிமையினுடைய சீமந்த புத்திரன் அன்புமணி துன்பமணியாக அவதாரமெடுத்த சம்பவங்களும் உண்டு. அதில் வெகு விமரிசையான ஒன்று, கோக், பெப்ஸி கம்பேனிகளுக்கு பூட்ஸ் நக்கியதுதான்.

பெப்ஸி, கோக் கம்பேனிகளுக்கு காவடி தூக்கி மாலடிமையின் புத்திரன் பாராளுமன்றத்தில் நின்றுக் கொண்டு ஆற்றிய உரையைப் போன்றதொரு கேவலமான, அப்பட்டமான அடிவருடித்தன உரையை மன்மோகன் சிங்கிடம் மட்டுமே கேட்டிருக்கிறேன்.

அப்பனுக்கு அம்பானியக் கண்டாக்க அதிருது, புத்திரனுக்கு கோக் பெப்ஸி பேரக் கேட்டாக்க அதிருது. நம்ம நண்பர் குழலியோ ராமதாஸ் பேரச் சொன்னா யார்யாருக்கோ அதிருது என்று விளம்பரம் இடுகிறார். யாதர்த்தத்தை பரிசீலித்து உணர அவருடைய ராமதாஸ் ரசிப்புத் தன்மை தடுக்கிறது எனில் அவருக்கும் ரஜினி ரசிகனுக்கும் என்ன வேறுபாடு? இது ஒரு கேள்விதான்.

ஏகாதிபத்திய பாத தாங்கி ராமதாசுக்கு இவ்வளவு ஆடம்பரம் அவசியமில்லை என்பது எனது கருத்து.. நீங்க என்ன சொல்றீங்க குழலி? பேசாம அவர் பேர ஏகாதிபத்திய அடிமை என்று மாற்றச் சொல்லுங்கள்.

குழலி இந்த கருத்துக்களை உள்வாங்கி பரிசீலித்து பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

நண்பர் குழலியின் கருத்தை கேட்க்க ஆவலுடன் காத்திருக்கும்.

அசுரன்


Related articles:

அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் - தாமிரபரணியும்

அக்காமாலா, கப்ஸியும் - இம்சை அரசன் துன்பமணியும்

**
தோழர்களின் விமர்சனத்தை முன்னிட்டு தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை நீக்குகிறேன்

Sunday, June 17, 2007

நிர்வாண ஓவியங்களும் இந்து தேசியமும்!

நீலகண்டன் என்ற பொய்யன் தமிழ்மணத்திலிருந்து நமது கேள்விகளை எதிர்க் கொள்ள திராணியின்றி ஏதேதோ சாக்குகள் சொல்லி ஓடிப் போன பிற்பாடு தேன்கூடு எனும் பார்ப்பன திரட்டியின் உதவியுடன் தனது பொய்யுரைகளை பரப்பி வருகிறான். சமீபத்தில் பார்ப்பன கடவுள்களை வைத்து நிர்வாண ஓவியங்கள் வரைந்த சில ஓவியக் கலைஞர்களை போலிஸ், முதலமைச்சர் ஆதரவுடன் தாக்கிய பார்ப்பன பயங்கரவாதிகளை நியாயப்படுத்தி கட்டுரை எழுதியிருந்தான் இந்த பொய்யன்.

அதில் ஏதோ அந்த பார்ப்பன பயஙகரவாதிகள் மிகவும் சாத்வீகமாக நடந்து கொண்டதாக நிறுவ முயன்றிருந்தான். இதனை டானிஷ் பத்திரிகையில் இஸ்லாமிய இறைத் தூதர் முகமதுவை கிண்டல் செய்து வந்த கார்டூனுக்கு இஸ்லாமிய சமூகம் கொந்தளித்ததை ஒப்பிட்டு நியாயப்படுத்தியிருந்தான்.

ஆனால் வழக்கம் போல அரைப் பொய்களை வைத்து ஜல்லியடிக்கும் இந்த பயங்கரவாதி இங்கும் கூட உண்மையின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறான். இஸ்லாமியர்கள் என்றாலே பயஙகரவாதிகள் என்று மேற்குலக ஊடகங்களும், பார்ப்பன் ஊடகங்களும் தொடர்ந்து பல்வேறு நுண்ணிய தளங்களில் பிரச்சாரம் செய்து வருவதன் ஒரு தொடர்ச்சியாக திட்டமிட்ட ஒரு நடவடிக்கையாக அந்த கார்டூன் இருந்ததை படிப்பவர் கருத்திலிருந்து மறைக்கிறான் இந்த பயங்கரவாதி. அதுவும் ஒரு வெகுசன பத்திரிக்கையில் பிரசூரமாகியது அந்த கார்டூன். அதுவும் நேரடியாக இஸ்லாமை பயஙகரவாதத்துடன் ஒப்பிட்டு இருந்தது. இதற்க்கு அந்த சமூகம் அமைதி காத்திருந்து ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்பது பார்ப்பன பயங்கரவாதியின் எதிர்பார்ப்பு.

ஆனால் இவர்கள் எதிர்த்த கலை கல்லூரி ஓவியங்களோ அல்லது எம். எப் ஹுசைனின் ஓவியஙகளோ எந்தவொரு வெகு சன ஊடகங்களிலும் பிரசூரிக்கப் படுவதில்லை. அவைகள் ஏதோ சில அறிவுஜீவி கோஸ்டிகள், தின்ற சோறு செரிக்க வக்கற்ற கஸ்ட ஜீவிகள் துட்டு கொடுத்து பார்த்துச் செல்லும் கண்காட்சி பொருட்களாகவே காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இந்த வித்தியாசம் புரிந்தால் அதாவது திட்டமிட்டு பொதுக்கருத்தை உருவாக்கும் பார்ப்பன-ஏகாதிபத்திய ஊடகங்களின் பிரச்சாரத்திற்க்கும், தனியொரு கழிசடைக் கலைஞன் வெகு சொல்பமான பார்வையாளர்களுக்கு காட்சிப் படுத்தும் ஓவியங்களின் தன்மைக்கும் இடையிலுள்ள இந்த வித்தியாசம் புரிந்தால் இந்த பயஙகரவாதிகள் தமது பாசிஸ்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவான பொதுக் கருத்தை உருவாக்கும் முகமாகவே இது போன்ற செயல்களை செய்வது புரியவரும். இதனை முன்னிட்டே இந்த இரண்டையும் ஒன்று என்று நிறுவ முற்ப்படுகிறார்கள்.

சரி உண்மையில் இவர்களின் பாரத மாதாவை கதற கதற பாலியல் பாலத்காரம் செய்து, நிர்வாணப்படுத்தி, ஒரு ஒவியனால் வரைய முடியாத அளவுக்கு வக்கிரமாக பாரத மாத எனும் தாயை ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தும் சம்பவங்கள் குறித்து இந்த பயங்கரவாதிகள் என்ன எதிர்வினை செய்கிறார்கள்?

கங்கா மாதாவை வாஜ்பேயி எனும் சுயம் சேவக் சுயஸ் டேமொடெரெண்டு எனும் பன்னாட்டு கம்பேனிக்கு கூட்டி கொடுத்த பொழுது கூட்டி கொடுத்த காசில் தின்றவர்கள்தான் இந்த பயங்கரவாதிகள். (இந்திய வளங்களை பெண்ணின் உடல் பாகங்களோடு ஒப்பிட்டு எழுதுவதற்க்கு பெண்கள் என்னை மன்னிக்கவும், இந்தியாவை இந்த பயங்கர்வாதிகள் மாதா என்று பெண்ணுடன் ஒப்பிடுகிறார்கள். இந்த ஒப்பீட்டில் உள்ள கயமைத்தனத்தை, வக்கிரத்தை புரிய வைக்கும் முகமாகவே இந்தியாவை அதே போன்று பெண்ணுடன் ஒப்பிட்டு அவளுக்கு செய்யப்படும் அவமானங்களை முன்னுக்கு கொண்டு வந்து. அந்த செயல்களுக்கு பார்ப்பன பயஙக்ரவாதிகள் என்ன செய்கிறார்கள் என்பதை அம்பலப்பத்த வேண்டியுள்ளது) தண்ணீர் தனியார்மயம் முதல், இந்திய வளங்களை, இந்தியாவின் விவசாய நிலங்களை அதாவது பாரத மாதாவின் ஒப்புயர்வற்ற அற்புதமான உடல் பாகங்களையெல்லாம்(சௌந்தர்ய லகிரியில் வர்ணித்திருப்பது போல அற்புதமான உடல் பாகங்கள்) பன்னாட்டு தரகு கம்பேனி முதலாளிகளுக்கு கூட்டி கொடுப்பதற்க்கு இவர்கள் எந்தவொரு எதிர்ப்பும் காட்டுவதில்லை. இன்னும் சொன்னால் கூட்டிக் கொடுக்கும் தரகு வேலையில் ஆர்வத்துடன் ஈடுபட்டு தமது பயஙகரவாத பிரச்சாரத்திற்க்கு பொருளீட்டுவதில் முன்னணியில் நிற்கிறார்கள் இவர்கள்.

சாதி வெறியர்கள் இந்தியாவின் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களை அவமானபடுத்தியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களை சொல்ல வாய்கூசும் முறைகளில் கொடுமைப்படுத்தி கொன்றுள்ளார்கள் அது போன்ற அவமானகரமான சமபவங்களுக்கு RSS பயங்கரவாதிகளின் எதிர்வினை என்ன? பல இடங்களில் சாதி இந்துக்கள்தான் RSSன் செயல்வீர்ர்களாக இருக்கின்றனர். பல இடங்களில் இது போன்ற வன்கொடுமைகளுக்கு ஆதரவாளர்களாகவே இருந்துள்ளனர்(சமீபத்தில் மத்திய கர்நாடகாவில் BJP MLA தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைக்கு ஆதரவாக வேலை செய்தார்.)

ஆக, உண்மையில் எம். எப் ஹுசைன் எனும் கழிசடை ஓவியனை விட பல மடங்கு பெரிய அளவில் பாரத மாதாவை அவமானப்படுத்துபவர்கள் இந்த பார்ப்பன் பாசிஸ்டுகள்தான். பாரத மாதாவை இவர்கள் பாசையில் இந்து தேசியத்தை அவமானப்படுத்துபவன் எவனோ அவனுக்கு அவனது குற்றத்தின் தன்மைக்கேற்ப தண்டனை எனில் மரண தண்டனைக்கான தகுதி பார்ப்பன பாசிஸ்டுகளான RSS கும்பலுக்கே சேரும். இந்த உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதால்தான் போலியாக எதிரிகளை உருவாக்கி சாதாரண மக்களை மதி மயங்கச் செய்கிறார்கள் இந்த புரோக்கர்கள். ஆங்கிலேயன் பாரத மாதாவை வன் புணர்ச்சி செய்ய விளக்கு பிடித்த கோல்வால்கரின் பாரம்பரியம் அல்லவா? இதில் 80 வருட அனுபவம் வாயந்த அமைப்பல்லவா? விளக்கு பிடிக்கும் வேலையை மிகவும் நூதனமாகவே செய்கிறார்கள்.

அசுரன்

நன்றி அரசுபால்ராஜ்

இந்தியாவை இந்த பாசிஸ்டுகள் முழுவதும் விற்பதற்க்கு முன்பு மீட்போம்!

இந்திய மாதாவை தேவதாசி தொழில் செய்வதிலிருந்து மீட்டெடுப்போம்!

Wednesday, June 13, 2007

தமிழ் மக்கள் இசை விழா DVDக்கள் வெளிவந்துவிட்டன!

மிழ் மக்கள் இசை விழா பெருந்ந்தகடு(DVD) வெளிவந்து விட்டது......(DVDக்கு எதுனா நல்ல தமிழ் பெயர் சொல்லுங்கப்பா...)

இரு பெருந்தகடுகளாக நிமிசத்துக்கு நிமிசம் கருத்துச் செறிவுமிக்க கருத்தரங்க உரைகள் ஒரு பெருந்தகடிலும், கலை செறிவு மிக்க கலை நிகழ்ச்சிகள் இன்னொரு பெருந்தகடிலும்.

வாங்கிவிட்டீர்களா......!!!!!!!!!!!!!!!!!!!!!!

மேல் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்

தமிழ் மக்கள் இசை விழா ஒளிக் குறுந்தகடுகள் (DVD)

கொசுறு செய்தியே இப்படியா?

ஒரு கொசுறுச் செய்தி: குரு திரைப்படத்தின் தயாரிப்பில் அனில் அம்பானியின் அட்லாப் என்ற நிறுவனமும் இருக்கிறது. அதாவது இது (குரு) அம்பானி கம்பெனியின் விளம்பரப்படம். விளம்பரப் படத்தைப் போட்டுக் காட்டுவதற்கு இரசிகர்களிடம் காசு வசூலிக்கப்பட்டதாக எங்கேயாவது நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் அம்பானி. செத்தபின்னும் திருடுவார்,

திருட்டுபாய் அம்பானி!

********************

கொசுறு செய்தியே இப்படியென்றால் கட்டுரையை முழுவதும் படித்தால் அம்பானி கும்பல் குறித்தும் அவர்களை புனிதப்படுத்தி படம் எடுத்த மணிரத்னம் குறித்தும், இது போன்ற அதி உன்னத உலகின் பலம் பெரும் தொழில்களை அதை விட அதி உன்னதமான வார்த்தைகளில் பாராட்டும் சுஜாதா குறித்தும் என்னவெல்லாம் புரியவரும்?

புரிந்து கொள்ள குரு திரைப்பட விமர்சனம் படியுங்கள்:

அம்பானி: முதலாளிகளின் குரு மோசடிகளின் கரு

தன்மானமும் ரஜினி ரசிகனும்!

ரஜினி என்கிற கெட்ட கேப்மாறி ஒன்னத்துக்கிமில்லாம ஒரு படத்தை எடுத்து உழைக்கும் மக்கள் உழைத்து சேர்க்கும் பணத்தை கொள்ளையடிக்க செய்யும் அத்தனை கூத்துக்களும் பொழுது போக்கு என்ற பெயரில் புனிதப்படுத்தப்படுகிறது. அவனது வக்கிரமான பிழைப்புவாத நடவடிக்கைகள் வெளிப்படையாக இருப்பினும் கூட அதனை விமர்சனம் செய்யக் கூட ரசிகர் கூட்டம் அனுமதிக்காத அளவுக்கு போதையேற்றி விடப்பட்டுள்ளது. ரசிகர்களின் கூச்சலும் அவனுக்கு வெறியேற்றிவிட அவனை விட அதிகமாய் கூச்சலிடும் ஊடகங்களின் மாமாத்தனமும் என்றைக்குமில்லாத அருவெறுக்கத்தக்க நிலையை அடைந்து காதுகளை கசடாக்குகிறது.

ரஜினிக்கு காவடி தூக்க இங்கு தமிழ்மணத்திலும் கூட 'ஏதோ தாமெல்லாம் கொஞ்சம் விவராமனவர்கள்' என்று நினைத்துக் கொள்ளும் சில அடி மடையர்களும் ரஜினிக்கு கோமணம் தூக்கி பதிவுகள் போடும் மானக் கேடு நடந்து வருகிறது. இந்த படு கேடு கெட்ட நிலையில் கலகக் குரலாய் ஒலித்த இந்த பின்வரும் கட்டுரையை இங்கு பிரசூரிக்கிறேன். கட்டுரை ரஜினி குறித்து எல்லா அம்சங்களிலும் வலுவான வாதஙக்ளை வைப்பதில் வெற்றிகரமானதாக இருக்கிறது என்று சொல்ல மாட்டேன். சில வாதங்கள் பலவீனமாகவே இருக்கின்றன. ஆயினும் சிந்திக்க தெரிந்த ஆறரிவு ஜீவன்களுக்கு கட்டுரை சிறப்பாக உதவும் என்பதில் ஐய்யமில்லை.

ரஜினிக்கு மூத்திர கும்பா தூக்கிய பிற அல்லக்கைகள் இங்கு வந்து அவமானப்பட வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

ரஜினி படம் குறித்து இன்னும் ஒரு தெளிவான மிகச் சிறப்பான விமர்சனம் இங்குள்ளது:
ஊடக ஒளியில் உலவும் கழிசடை - சிவாஜி- I


ரஜினி என்னும் கழிசடைத்தன போதையிலிருந்து ரசிகனை முகத்திலறைந்து மீட்ப்பது எப்படி என்பது குறித்த நடைமுறை அனுபவம் இங்குள்ளது:
கஞ்சிக்கு மக்கள் மிதிபடும் நாட்டில் இவனுக்கு என்னடா பால்குடம்?


**********************


ரஜினி பிம்பமும் உண்மையும்
- திருவாளர் தினா

நன்றி: கீற்று

ஜூனியர்கள் அறியாத ரகசியங்கள்!

ஒரு திரைப்படம் வெற்றி பெற எது முக்கியம்?

நல்ல கதை?... ... ..ஊகும்

நல்ல திரைக்கதை?.. ... .. ஊகும்

திறமையான இயக்குநர்?... .. ஊகும்

கதாபாத்திரத்தை உணர்ந்த நடிகர்கள்?... ஊகும்

தொழில்நுட்பக் கலைஞர்கள்?...... ...... ஊகும்.


திரைத்துறையினரில் சிலரைக் கேட்டால், இவை எல்லாவற்றையும் விட பூஜை போட்ட நாளிலிருந்து படம் வெளியாகும் நாள்வரை நடைபெறும் `கட்டுமானப் பணி'தான் முக்கியம் என்பார்கள். கட்டுமானப் பணியா? அது இன்ஜினியர், மேஸ்திரி, கொத்தனாரு, சித்தாளு சம்பந்தப்பட்ட வேலையாச்சே என்று குழம்புகிறீர்களா? ஒருவேளை, திரைப்படங்களுக்குப் போடப்படும் செட்டிங்குகளாக இருக்குமோ என யோசிக்கிறீர்களா? இது வேறுவிதமான கட்டுமானப் பணி. அதுக்குப் பேருதாங்க `பில்டப்பு'

டப்பும் பில்டப்பும் இருந்தால் படத்தை ஓட்டிவிடலாம் என்று கணக்குப் போட்டுச் செயல்படும் திறமைமிக்கவர்கள் திரையுலகில் அதிகரித்துக்
கொண்டிருக்கிறார்கள். அப்படிப் பில்டப்பு கொடுக்கப்பட்ட படங்களில் முதலிடம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் சிவாஜிக்கு உண்டு. ஏ.வி.எம். தயாரிக்க, ஷங்கர் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரஜினி நடிக்கும் படம் இது என்பதை நேற்றுப் பிறந்த குழந்தைகளும் நாளைக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளும்கூட தெளிவாகச் சொல்லிவிடும்.

சிவாஜியைப் பற்றி அதை விடவும் கூடுதலான தகவல்களையும் சொல்லக் கூடும். ஏனென்றால் சிவாஜி படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ஓர் ஆண்டுக்கு மேலாகியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பில்டப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. சிவாஜி என்ற படத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது சன் டி.வி.க்குத் தலைப்புச் செய்தி. தினத்தந்தியில் தினம் ஒரு சிவாஜி தகவல் இடம்பெறாமல் இருந்ததில்லை. நாளிதழ்கள், வார இதழ்கள், புலனாய்வு இதழ்கள் என எதைப் புரட்டினாலும் சிவாஜி பற்றி ஆதரவாகவோ எதிராகவோ எழுதப்படும் செய்திகளுக்குத் தனி இடம் தரப்பட்டிருக்கும் (தாகம் உள்பட)

படம் பற்றிய அறிவிப்பு வெளியான சில நாட்களில் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் அதிமுக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டார். ‘சிவாஜி என்ற தலைப்பை வைப்பதற்காக நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டோம். அவர்களும் பெருந்தன்மையுடன் ஒப்புதல் அளித்துவிட்டார்கள். அந்தப் பெயரையே டைட்டிலாக வைத்துப் படம் எடுக்கிறோம்" என்பதுதான் தயாரிப்பாளர் தந்த தகவல். அட.. ஙொக்கமக்கா! இதுதாம்ப்பு பில்டப்புக்குப் பிள்ளையார் சுழி.

சிவாஜி என்று பெயர் வைத்ததால் நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தின் அனுமதியை வாங்கினார்களாம். ரஜினி ஏற்கனவே பாட்சா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதற்காக அல்-உமா பாட்சாவிடம் அனுமதி வாங்கினாரா? முத்து என்ற படத்தில் நடித்தார். அதற்காக மு.க.முத்துவிடமோ, மதுரை முத்து குடும்பத்தாரிடமோ, முத்துராமன் மகன் கார்த்திக்கிடமோ அனுமதி வாங்கினாரா? அவையெல்லாம் எங்கள் தயாரிப்பு அல்ல என்று ஏ.வி.எம். நிறுவனம் சொல்லக்கூடும். ஏ.வி.எம் நிறுவனத்திலேயே வசந்தி என்ற பெயரில் படம் தயாரித்து வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் எத்தனையோ வசந்திகள் இருக்கிறார்கள். எந்த ஒரு வசந்தியிடமாவது ஏ.வி.எம். இப்படி அனுமதி கேட்டிருக்குமா? சிவாஜி என்ற தலைப்புக்காக சிவாஜி குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டதாகக் கட்டுமானப் பணிக்கு அடித்தளம் போட்டார்கள்.

அப்படியே அனுமதி கேட்பது என்றால் யாரிடம் கேட்டிருக்க வேண்டும்? வி.சி. கணேசனாக இருந்த நடிகர் திலகத்திற்குச் சிவாஜி கணேசனாகப் பெயர் சூட்டியவர் தந்தை பெரியார். அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லை. அவருடைய இயக்கத்திற்கும் உடைமைகளுக்கும் உரிமையுடைய திராவிடர் கழகம் இருக்கிறது. அவருடைய கொள்கைகளை முழங்கும் பெரியார் திராவிடர் கழகம் இருக்கிறது. ஏ.வி.எம்.மின் நிலைப்பாட்டின்படி பார்த்தால் இவர்களிடமல்லவா அனுமதி கேட்டிருக்க வேண்டும்? போக் சாலையில் உள்ள அன்னை இல்லத்திற்குச் சென்று அனுமதி கேட்டவர்கள் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்குமல்லவா சென்று அதே அனுமதியைக் கோரியிருக்க வேண்டும்? கேட்பவன் கேணையனாக இருப்பான். எழுதுபவன் ஏமாளியாக இருப்பான் என்று கணக்குப் போட்டே ரஜினி+ஷங்கர் கூட்டணி, ஏ.வி.எம்மைப் பயன்படுத்திக் கொண்டு கட்டுமானப் பணிகளை ஈஃபில் கோபுரம் அளவுக்குக் கொண்டு சென்றது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஊடகங்கள் ஏமாளிகளாகி, சிவாஜி படக்குழு கக்கிய வாந்தியையெல்லாம் வழித்தெடுத்து வெளியிட்டன.

ரஜினி தும்மினார், அவருடைய மருமகனுடன் கட்டிப்பிடித்து ஆடிவிட்டு அடுத்த படத்திலேயே அவரையும் கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா குனிந்து நிமிர்ந்தார், இயக்குநர் ஷங்கர் இருமினார், ஏ.ஆர்.ரகுமான் எழுந்து உட்கார்ந்தார் என்ற அளவில் தினம் ஒரு தகவலை வெளியிட்ட ஊடகங்கள், அதே சிவாஜி படத்திற்காக அதன் படப்பிடிப்புக் குழுவினருக்கு அளிக்கப்பட்ட விருந்து பற்றியும் அதில் ஒருவர் இறந்தது பற்றியும் எந்த அளவுக்குச் செய்திகளை வெளியிட்டன? படத்தின் ஒலிப் பொறியாளர் சச்சிதானந்தன் என்பவர், கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நடந்த அந்த மது விருந்தில் பங்கேற்று, அங்கே 4 அடி தண்ணீர் இருந்த நீச்சல் குளத்தில் விழுந்து இறந்துபோனார். அது கொலையா, தற்கொலையா என்ற விவாதங்கள் எழுந்தது ஒருபுறமிருக்கட்டும்.

தான் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தில் நேற்றுவரை ஒன்றாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர் இன்று உயிருடன் இல்லை. அதுவும் தனது படப் பிடிப்புக்குழுவுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டு மரணமடைந்திருக்கிறார். சச்சிதானந்தத்தின் மனைவி கதறித் துடிக்கிறார். அவரது பிள்ளைகள் அப்பாவை இழந்து தவிக்கின்றன. ஆறுதல் சொல்லக்கூட ரஜினி அங்கே எட்டிப் பார்க்கவில்லை. ஷங்கரைக் காணோம். ஒருவரும் வரவில்லையே என்று அந்தக் குடும்பம் கதறுகிறது. நல்லது நடக்கும்போது பக்கத்தில் இல்லாவிட்டாலும், கெட்டது நடந்து விட்டால் துணைக்கு இருக்கவேண்டும் என்று தமிழகக் கிராமப்புறங்களில் சொல்வார்கள். மராட்டியத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து, பிழைப்புக்காகத் தமிழகத்திற்கு வந்து பல ஆண்டுகளாகியும் ரஜினிக்கு இந்த இங்கிதம்கூடத் தெரியவில்லை. சச்சிதானந்தத்தின் இறுதி ஊர்வலத்தில் சிவாஜி குழுவினர் ஒருவரும் இல்லை என்பதை நக்கீரனைத் தவிர வேறெந்தத் தமிழ்ப் பத்திரிகையிலும் பார்க்க முடியவில்லை.

சச்சிதானந்தன் அதிகமாகக் குடித்திருந்தார். அதனால்தான் அவர் மரணமடைந்தார் என்று செய்திகள் வெளியிடப்பட்டன. இருக்கலாம். ஒருவேளை, அவரைவிடவும் அதிகமாக ரஜினி குடித்திருந்ததால், சச்சிதானந்தன் இறந்த தகவலைக்கூட அவரது இறுதி ஊர்வலம் நடந்து முடியும் வரை அறியாமல் இருந்தாரோ! அதனால்தான் வரவில்லையோ... ... யாரறிவார் பராபரமே!

தன்னை நம்பிப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவக் கூடியவர் என்ற நல்ல பெயர் ரஜினிக்கு உண்டு. அவர்கள் நட்டமடைய விடமாட்டார் என்பதும் ரஜினிக்கு இருக்கும் குணாம்சம். இவை பாராட்டுக்குரியவைதாம். தயாரிப்பாளர் என்ற `எஜமானுக்கு' இலாபம் ஈட்டித் தரக்கூடிய நல்ல `வேலைக்காரனாக' இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் தொழிலான திரைத்துறையில் அந்தப் பணத்தின் மதிப்பை உணர்ந்து மிகப்பிரபலம் வாய்ந்த ஒரு நடிகர் செயல்படுகிறார் என்பதை யாரும் வரவேற்காமல் இருக்க முடியாது. அதே நேரத்தில், பணத்திற்குக் கொடுக்கும் மதிப்பை உயிருக்குக் கொடுக்காமல் போய் விட்டாரே என்ற கேள்விக்கு எந்தப் பதிலும் தென்படவில்லை. உடன் பணியாற்றியவர் மரணமடைந்ததும் கண்டும் காணாமல் விட்டவர், தன் படத்திற்காக ஆண்டுக்கணக்கில் தவமிருக்கும் தீவிர ரசிகர்களையும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரது படத்தை எதிர்பார்த்திருக்கும் பலதரப்பட்டவர்களையும் வைத்து என்னக் கணக்குப் போட்டு வைத்திருக்கிறார் தெரியுமா?

சிவாஜி திரைப்படம் சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகிறது. இதனை தமிழகத்தில் மட்டும் 65 கோடி ரூபாய்க்குக் குறையாமல் விற்கவேண்டும் என்பதில் ரஜினியும் இயக்குநரும் படத்தயாரிப்பாளரும் பிடிவாதம் காட்டினர். இதுதவிர வெளிமாநிலங்கள், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகள், தொலைக்காட்சி உரிமை, ஒலிநாடா உரிமை என ஏகப்பட்ட கோடிகளுக்கான விற்பனை தனி. படம் எடுத்தவன் விற்காமல் என்ன செய்வான் என்று கேட்கலாம்.

விற்கட்டும்... இலாபகரமாகவே விற்கட்டும்.. ஆனால், தொழிலில் ஒரு நேர்மை வேண்டுமே! விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பலரும் இவ்வளவு விலையா என்று மலைத்துப் போய், குறைத்துத் தருமாறு கேட்டிருக்கிறார்கள். 65 கோடிக்குக் குறைய மாட்டோம் என சிவாஜி தரப்பு பிடிவாதமாக இருந்துவிட்டதைக் கோபத்தோடு சுட்டிக்காட்டுகிறது கோடம்பாக்கம் வட்டாரம்.

தமிழகத்தில் சிவாஜி படத்தை 150 பிரிண்ட்டுகள் போட்டு வெளியிட்டு, அனைத்து திரையரங்குகளிலும் அவை ஒரு நாளுக்கு 4 காட்சிகள் என 100 நாட்களுக்கும் தொடர்ச்சியாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினாலும்கூட 40 கோடி ரூபாய்தான் கிடைக்கும். தமிழகத்தில் உள்ள திரையரங்கங்களையும் அதன் கட்டணங்களையும் கணக்கிட்டுப் பார்த்தால் இவ்வளவு தான் வசூலாக முடியும்.

என்ன செய்யப் போகிறீர்கள் என்று விநியோகஸ்தர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் கேட்டால், "என்னங்க செய்றது? ரேட்டைக் கம்மி பண்ணிப் படப் பெட்டியைக் கொடுங்கன்னு சொன்னா கேட்க மாட்டேங்குறாங்க. ரஜினி படத்தை 100 ரூபாய் கொடுத்தும் ஜனங்க பாப்பாங்கய்யா. நீ டிக்கெட் ரேட்டை ஏத்தி வித்துக்கோன்னு சொல்றாங்க" என்கின்றனர். தமிழகத்தின் பெருநகரங்கள், சிறுநகரங்கள் ஆகியவற்றில் டிக்கெட் கட்டணத்தைத் திருத்தியமைத்திருக்கிறது தமிழக அரசு.

படம் பார்க்கச் செல்லும் குடும்பத்தினர் ஒட்டுமொத்த மாதச் சம்பளத்தையும் ஒரு படத்திற்கே டிக்கெட் கட்டணமாகச் செலவு செய்ய வேண்டிய நிலைமையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த முடிவு. ஒவ்வொரு திரையரங்கிலும் குறைந்தபட்சக் கட்டணம் எவ்வளவு இருக்கவேண்டும். அதிக பட்ச கட்டணம் எவ்வளவு இருக்கவேண்டும் என்பதை அரசு நிர்ணயித்துள்ளது.

அரசாங்கம் என்ன சொன்னால் என்ன? நாங்கள் நிர்ணயிப்பதே டிக்கெட் கட்டணம் என தனி ராஜாங்கம் நடத்த முன்வந்திருக்கிறது சிவாஜி படக்குழு. அதுவும் எப்படிப்பட்டவர்கள் இந்தக் குழுவில் இருக்கிறார்கள் தெரியுமா? 5 பைசா திருடினா தப்பா... 5 கோடி பேரு 5 பைசா திருடினா தப்பா.. 5 கோடி பேரு 5 கோடி தடவை 5 பைசா திருடினா தப்பா... என்று வசனம் எழுதி, திருட்டுக்கும் இலஞ்சத்திற்கும் எதிராகப் போர் தொடுக்கப் பிறந்தவர்கள் போலக் காட்டிக்கொண்ட `அந்நியன்'கள்தான் தமிழகத்தின் 5 கோடி மக்களிடமும் டிக்கெட் கட்டணத் திருட்டை பகிரங்கமாகச் செய்வதற்குத் தயாராகியிருக்கிறார்கள். தன்னை வைத்து நடக்கும் இந்த அநியாய வியாபாரத்திற்கு ஆதரவாகவே இருக்கிறார் ரஜினி. அதனை ஊக்கப்படுத்தவும் செய்கிறார். 1600 ரூபாய் செலுத்தி 20 டிக்கெட்டுக்கான கூப்பனை வாங்கிக் கொண்டு போ என்று ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களிடம் வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கிறது ரஜினியின் தலைமை ரசிகர் மன்றம்.

ஒரு வணிக நிறுவனம் என்றால் அதன் வாடிக்கையாளர்களுக்கு மற்றவர்களைவிடக் குறைந்த விலையில் பொருட்களைத் தருவது தான் தொழில் தர்மம். திரைப்படத் தொழிலிலோ, இந்தப் படத்தை ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்க்கிறார்கள் என்றால் அவர்களின் சட்டைப் பையை மொத்தமாகச் சுரண்டிவிடு என்பதுதான் தொழிற் கொள்கையாக இருக்கிறது. அதனைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கிறார் ரஜினி. தமிழகத்தின் எந்தத் திரையரங்கிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி சிவாஜி படத்திற்கான டிக்கெட் கிடைக்காது என்பதே தற்போதைய நிலைமை. சிவாஜி படத்தில் கல்வி வியாபாரத்தை எதிர்த்துக் கிளர்ந்தெழுவாராம் ரஜினி. அதைவிட அநியாய வியாபாரத்தை திரைத்துறையில் நடத்திக் கொண்டிருக்கிறாரே, அவரை எதிர்த்து யார் கிளர்ந்தெழுவது?

ஒவ்வொரு ரஜினி படத்திற்கும் கொடுக்கப்படும் பில்டப்புகளால் அவரது பிம்பம் உயர்ந்து நிற்கிறது. ஆனால், உண்மைகள் ஆழத்தில் புதைந்து கிடக்கின்றன.

"சந்திரமுகி" படத்தில் நடந்தது என்ன தெரியுமா?

- தணிக்கை இல்லாமல் தொடரும்


Related Article:

ரஜினி - கழிசடைக்கு பிறந்த நாள் - வர்க்க பிறழிகள்!

Tuesday, June 12, 2007

செய்தி: பயங்கரவாதி!

செய்தி:

தமிழகத்தில் விஏஓ பதவிக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதற்கான வினாத்தாளில், 17வது கேள்வியாக பாலகங்காதர திலகர், அரவிந்தகோஷ், வஉசி, சுரேந்திரநாத் பானர்ஜி உள்ளிட்ட சுதந்தர போராட்ட தியாகிகள் பெயர் குறிப்பிட்டு, இதில் யார் தீவிரவாதிகள் இல்லை என கேட்கப்பட்டிருந்தது.

***************

பயங்கரவாதம் வலைப்பூவிலிருந்து

//அருந்ததிராயின் வார்த்தைகளில் சொல்வதென்றால், "இந்திய ஒரு போலீஸ் ராஜ்யமாக மாற இருக்கிறது. அங்கு நடப்பவற்றை ஏற்றுக் கொள்ளாத ஒவ்வொருவரும் பயங்கரவாதி என்று அழைக்கப்படும் அபாயம் உள்ளது..... பயங்கரவாதம் என்ற சொல்லாடலுக்கு எந்தவொரு தெளிவான விளக்கமும் கொடுக்காமல் விட்டு வைத்திருப்பதன் மூலம் அதன் அர்த்தம் மிகப்பரந்து விரிந்ததாக திட்டமிட்டே விடப்பட்டுள்ளது. நாமும் கூட வெகு விரைவில் மாவோயிஸ்டுகள் என்றோ நக்சலைட்டுகள் என்றோ, பயஙகரவாதிகள், பயங்கரவாதி ஆதரவாளன் என்றோ அழைக்கப்பட்டு முடித்துக்கட்டப்படும் நாள் வெகு தூரத்திலில்லை."//


//வரைமுறையின்றி இந்தியாவின் வளங்களை கூட்டிக் கொடுக்கும் தரகு வர்க்க அரசியல்வாதிகளும், அதற்க்கு தரகு வேலை செய்யும் பார்ப்ப்னிய பயங்கரவாதிகளும் தமது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ள தொடர்ந்து ஒரு போலியான எதிரியை உருவாக்கும் தேவை உள்ளது.//


//தொடர்ந்து பயங்கரவாத பீதியூட்டுவதன் மூலம் தமது பாசிச செயல்பாடுகளையே நியாயமானது என்ற பொதுக்கருத்தை வலுப்பெறச் செய்யும் தேவை இருவருக்கும் உள்ளது.//

//எதிர்மறையாக நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், இவர்களின் பாசிச நடவடிக்கைகளும் வீரியம் பெற இருக்கின்றன என்பதே ஆகும். இவர்களின் பய பீதியூட்டும் கோயபல்ஸ் பிரச்சாரம் வேகம் பிடிக்கப் போகின்றன என்பதே ஆகும். பய பீதியூட்டவும், போலி எதிரியை உருவாக்கவும் தேவையான சம்பவங்கள் இனி தொடர்ந்து அடிக்கடி உற்பத்தி செய்யப்படும் என்பதே ஆகும்.//

அசுரன்

மக்கள் மீது மலம் கழிக்கும் நாட்டை 'பீ' காடாக்குவோம்!

ங்க நாற்க்கர சாலைகள் என்ன?, பட்டன் அளவே உள்ள கைத் தொலைபேசிகள் என்ன? வித விதமாய் ஆடைகள், ஆங்கில படங்களுக்கு நிகராக தமிழகத்திலேயே வாழ்க்கை நடத்த பன்னாட்டு கம்பேனிகள் வீட்டு வாசலில் வந்து நமது உச்சி முகர்ந்து கொஞ்சி கூத்தாடும் அற்புதம் என்ன? என்னே இந்த இந்தியாவின் வளர்ச்சி பாரீர்.

ஆனால் இதே இந்தியாவில் மிகப் பெரும்பான்மை மக்கள்(30% மேல்) 12ரூபாய் காசில் தின வாழ்க்கையை ஓட்டும் அவலமும் நடக்கிறது. இதே இந்தியாவில்தான் காலையில் மலம் கழிக்க இடமின்றி மக்கள் அல்லலுறும் அவலமும் நடந்தேறுகிறது.

அட நீ ஒன்னு, அவிங்கள்ளாம் கொழுப்பெடுத்தவனுங்க, காலைக் கடன்களை ரோட்டிலேயே இருப்பானுங்க இன் டீசண்ட் ஃபேலோஸ் - இப்படி ஒரு அல்பை அலுத்துக் கொள்வது காதில் கேட்க்காமலில்லை. ஆமாம் கிராமங்களில் அவர்களது வாழ்க்கையை தொலைத்த அவ்ர்கள் இன் டீசண்ட் ஃபேலோஸ்தான், வாழ்வுரிமை பறிக்கப்பட்ட இந்த பெரும் பட்டாளத்தை குறைந்த கூலிக்கு நகரங்களில் சுரண்டி தின்க்கும் நடுத்தர மற்றும், உயர் வர்க்கமோ டீசண்டொ டீசண்ட்.... தூ..... உண்மையில் காலை மலத்தின் அதி அற்புத மணத்தை விட இவர்களின் இந்த பிழைப்புவாத கள்ளமௌனமும், நாகரிகம் குறித்த பொய் நடிப்புகளுமே ஆகக் கேவலமாக மூக்கையடைக்கிறது.

இந்த பெரும்பான்மை மக்களின் அடிப்படை உரிமைகளை வெறுமே பிரச்சாரம் செய்து சொன்னால் அவர்களை சுரண்டுபவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? இப்படித்தான் ஒரு காந்திய கற்பனாவாதி சொல்லிக் கொண்டிருக்கிறார். உண்மையில அவரது சித்தாந்தத்தில் அவருக்கே நம்பிக்கை கிடையாது ஆயினும் ஒவ்வொருவருக்கும் தன்னை பற்றி ஒரு பிம்பத்தை உருவாக்கி பராமரிக்கும் நிர்பந்தம் உள்ளதல்லவா? நம்ம கற்பனாவாதிக்கும் அந்த அளவில் காந்தி தேவைப்படுகிறார் போலும். துரதிருஷ்டவசமாக காந்தியே இந்த விசயத்தில் படு கயமைத்தனமானவர். இப்படி பிரச்சாரம் செய்து அடக்கும் வர்க்கத்தை திருத்தி சமனிலை உருவாக்கலாம் என்று இவர் போன்றவர்கள் ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் மக்கள் தங்கள்து உரிமைகளை தாங்களே மீட்டெடுக்கும் போராட்ட வழிமுறைகளை இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பரிசோதிக்கத் துவங்கியுள்ளனர்.

SEZக்களுக்கு எதிரான போராட்டங்கள் - வட கர்நாடக, புதுச் சேரி, சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான், நந்திகிராம், சிங்கூர் என்று பற்றிப் பரவுகிறது, சில்லறை வியாபாரி ரிலையன்ஸ் அம்பானி போலிஸ் பாதுகாப்புடன் தான் கடை நடத்த வேண்டும் என்ற நிலை ராஞ்சியில், பெருத்து தடித்து கொழுத்த ஊடகங்களோ அய்யரின் ஆசன வாயில் இருந்து வரும் வளிக்கு கொடுக்கும் முதற் பக்க முன்னுரிமையை மறந்தும் கூட இது போன்ற மக்கள் திரள் போராட்டங்களூக்கு கொடுப்பதில்லை. இதே போன்றதோரு போர்க்குணமிக்க போராட்டம் சமீபத்தில் கோயெம்பேடை ஒட்டியுள்ள மதுரவாயல் நகராட்சி பகுதியில் நடந்தது.

போபால் விசவாயு நடந்து வருசம் பல ஆகி விட்டது கற்பனாவாத போராட்டங்களை நடத்தி கண்ட பலன் ஒன்றுமில்லை. அதே விசவாயு குரூப் மேற்கு வங்கத்தில் Dow Chemicals என்ற பெயரில் மீண்டும் கடை பரப்பும் அவலம் தவிர. நர்மதா போராட்டம்... அடேங்கப்பா எத்தனை கவர்ச்சிகரமான போராட்டம் அது. பிருமாண்டமான பின்னனியுடன் அதனால் சாதிக்க முடிந்தது எல்லாம் ஒரு தேசிய விவாதத்தை எழுப்பியதை மட்டுமே. தேசிய விவாதஙகள் எழுவது என்ன புதிய விசயமா என்ன? பெண்களை கள்ள பாஸ்போர்ர்டில் கடத்தியோ, நாடாளூமன்றத்தில் பேசுவதற்க்கு துட்டு வாங்கியோ சுலபமான பல வழிகளில் தேசிய விவாதத்தை கிளப்பலாம். மணிப்பூரின் விடுதலைக்காக 6 வருடங்களாக உண்ணாவிரதம் இருந்து கண்ட பலன் மதிய இடைவேளியில் வயிறு முட்ட உண்ட பிற்பாடு ஒரு சுகமான ஏப்பாத்திற்க்கு பிற்பாடு வெளி வந்த ச்சோ... ச்சோ.. மட்டுமே.

அருந்ததிராய் சொல்கிறார்: "வன்முறையற்ற போராட்டங்களுக்கான முயற்சிகள் ஒவ்வொன்றின் மீதும் இந்த அரசு தனது கதவுகளை அறைந்து சாத்திவிட்டது. மக்கள் இப்பொழுது அதிகமாக துப்பாக்கிகளை நாடுகிறார்கள்"

மதுரவாயல் மக்களுக்கும் கூட இதே அனுபவம்தான். அருந்ததிராய் இங்கு துப்பாக்கி என்று சொல்வதை ஒரு குறீயீடாக எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்த அரசு நமக்கான அரசு அல்ல என்பதை புரிந்து கொண்டு மக்கள் அதற்கேற்ப போராட்ட வடிவங்களை தீர்மானிக்கும் தன்மையை குறிப்பதாக கொள்ளலாம். மதுரவாயல் மக்களும் பல முறை முயன்ற பிற்ப்பாடு தங்களது போராட்ட முறைகளை மாற்றினர். கோரிக்கை வைத்து பலனில்லை. தாம் அனுபவிக்கும் துன்பம் என்னவென்பதை மணக்க மணக்க சம்பந்தப்பட்ட அரசுக்கு புரியவைப்பதே ஒரே வழி என்று தீர்மானித்து முள்ளை முள்ளால் - வன்முறையை வன்முறையால் ஈடுகட்ட களமிறங்கினர்.

மதுரவாயல் நகராட்சி அலுவலகத்தையே தமது தற்காலிக கழிவறையாக்க தீர்மானித்து ஒரு நல்ல நாளில் நகராட்சி அலுவலகத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் நடத்தத் தீர்மானித்தனர். விசயம் கேள்விப்பட்ட அரசு நிர்வாகிகள் நிலையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. காலையில் ஒருவர் உள்ளே போய் 'வெளியே' வந்த பிற்பாடு அடுத்த ஆள் உள்ளே போவதற்கே பல்வேறு சுவாசப் பிரச்சனைகளை சந்திக்கும் அவர்களுக்கு நாள் முழுவதும் ஒரு கழிப்பறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பது என்ற விசயம் கனவில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத கோடுரமே. தமது மூக்கை பாதுகாக்கும் குறைந்த பட்ச தேவையை முன்னிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளது அரசு நிர்வாகம். அழுத குழந்தை பால் குடிக்கும் - லட்சம் விவசாயிகளின் தற்கொலை சாவு ஒரு டீக்கடை உரையாடலுக்கான தகுதியைக் கூட இழந்த அவலமும், 12 நந்திகிராம் மற்றும் ஒரிஸ்ஸா கலிங்காநகர் போராளிகளின் தியாகம் நாட்டையே உலுக்கி மக்கள் விரோத திட்டங்களை ஓட ஓட விரட்டிய அற்புதமும் நம் கண் முன்னே காணக் கிடக்கிறது. மலத்தை விசிறியடிக்கும் இந்த போராட்டமும் கூட இரண்டாம் வகையீனமே. அரசு, கலாச்சார நிறுவனங்களும் பல நுண்ணிய தளங்களீல் மக்கள் மீது வன்முறை செலுத்துகிறது எனில் மக்களின் எதிர் நடவடிக்கையும் அதற்க்கிடான நுண்ணிய தளங்களில் எதிர்வன்முறை செலுத்தும் வகையிலே அமைந்து விடுகிறது.

இரங்கிக் கேட்டு இதுவரை இந்த நாட்டாமை அரசும் நமது குரலுக்கு செவிமடுத்ததாக வரலாறு இல்லை. இதோ மதுரவாயல் மக்கள் மீண்டும் நமக்கு சொல்லித் தருகிறார்கள் - இந்த அரசுக்கு எப்படி லாடம் கட்டுவது என்று. ஜனநாயகம், நாகரிகம் என்று வழக்கம் போல ஏமாந்த சோனகிரி அல்பவாதிகள் புனிதங்களின் போதையில் மயங்கிக் கிடக்கட்டும். நாம் அநீதிகளை கண்ட இடத்திலேயே பொசுக்கும் மன வலிமை கொண்டு இயங்க வேண்டிய காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

அசுரன்

பின்னுட்டத்தில் இது குறித்து செய்தி கொடுத்த அனானிக்கு நன்றி!

கழிவறை கட்டித்தர வக்கில்லாத மதுரவாயல் நகராட்சியை மலக்காடாக்குவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சென்னை மாநகரத்தின் நுழைவு வாயில்களில் ஒன்றான கோயம்பேட்டின் அருகில் உள்ளது மதுரவாயல் நகராட்சி. இந்த நகராட்சியின் 2 - வது வார்டுதான் பிள்ளையார் கோவில் தெரு பகுதி. இப்பகுதியில் கடந்த 25 வருடங்களாக எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. குறிப்பாக மனித கழிவுகளை வெளியேற்றுவதற்கு கக்கூசு (கழிவறை) கூட இல்லாதது, இப்பகுதி அவலத்தின் உச்சம்.

ஒரு வீடோ , அலுவலகமோ கட்டும்போது அங்கு முதலில் அமைப்பது குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள்தான். இதை நகராட்சி விதிமுறைகள் கூட கூறுகின்றன. ஆனால் வரிவசூல் மூலம் கொள்ளையடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இப்பகுதி நகராட்சியோ உழைக்கும் மக்களின் அடிப்படை வசதிகளைப்பற்றிக் கண்டு கொள்வதே இல்லை.

கடந்த 2003 ஆம் வருடத்திலிருந்து இலவச கழிவறை கட்டித்தர வேண்டுமென்று பலமுறை நகராட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது. பகுதி மக்களுடன் நேரில் சென்று கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் பலன் ஒன்றும் இல்லை.

ஒருபுறம் உழைக்கும் மக்கள் பிரச்சினையை மயிருக்குச் சமமாக நினைக்கும் மதுரவாயல் நகராட்சி, மனுக்களையும், கோரிக்கைகளையும் குப்பையில் வீசி எறிந்து விட்டது. மறுபுறம், அருகிலுள்ள V.G.P. குடியிருப்பு, 'மேட்டுக்குடி' முதலாளிகளுக்கு காற்று வாங்கவும், உடற்பயிற்சி செய்யவும், அழகிய பூங்காவை அவர்கள் கேட்காமலேயே அமைத்துக் கொடுத்து வர்க்க பாசத்தோடு நடந்து கொள்கிறது.

இப்படிப்பட்ட ஆட்சியாளர்களின் தடித்த தோலுக்கு உறைக்கும் வகையில்தான் 2004-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மலம் கழிக்கும் போராட்டத்தை அறிவித்தோம். அறிவிப்பைக்கண்டு அரண்டு போன நகராட்சித் தலைவர் 6 மாதத்தில் கழிவறை கட்டித் தருவதாக உறுதியளித்தார். காலம் ஓடியது, தேர்தலும் நடந்தது, நகராட்சித் தலைவரும் மாறினார். ஆனால், இப்பகுதியில் அவலம் மட்டும் இன்னும் மாறவே இல்லை.

இதற்கெல்லாம் காரணம் என்ன?

சாலைகளை அகலப்படுத்த வேண்டுமென்றால் யாரையும் கேட்காமலேயே சாலை ஓரத்திலுள்ள வீடு, கடைகளை இடித்து தேவையான இடத்தை எடுத்துக்கொள்ளும் நகராட்சிக்கு பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் கழிவறை கட்ட மட்டும் இடம் இல்லையா? மக்களிடம் கட்டாயமாக வரி வசூலித்து சம்பளம், கார், டெலிபோன் வசதி, நகராட்சி கூட்ட செலவு என்று மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் வீணடிக்கும் நகராட்சியில் பணம்தான் இல்லையா? இதுவல்ல காரணம்.

உண்மை என்ன தெரியுமா?

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற நாசகார கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, 'காட்ஸ்' என்ற ஒப்பந்தத்தை அனைத்து ஓட்டுக் கட்சிகளும் கொண்டு வருகின்றன. அதனால்தான் கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இன்று நம் போற உழைக்கும் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. சேவைகள் அனைத்தும் லாபகரமான தொழிலாக மாற்றப்பட்டு வருகின்றன.

எனவேதான் இந்த அரசுகள் நகராட்சிகள் மூலம் கழிவறை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டை படிப்படியாகக் குறைக்கின்றன. சுலாப் இண்டர்நேஷனல் என்ற கட்டணக் கழிப்பறைகளை அனுமதிக்கின்றன. எனவே ஆட்சியாளர்களின் பொய் வாக்குறுதிகளை நம்புவதில் பயன் இல்லை. வீதியில் இறங்கி போராடினால் மட்டுமே நமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும்.

அத்தகைய போராட்டங்களால் மட்டுமே ஆட்சியாளர்களை பணிய வைக்கவும் முடியும் என்பதற்கு நமது பகுதிக்கு அருகிலுள்ள பாடிக்குப்பம் மக்கள் தொடர்ச்சியாகப் போராடி இலவச கழிவறை பெற்றுள்ளது முன்னுதாரணமாகும். அவர்கள் வழியில் நாமும் உறுதியாகப் போராடுவோம். கோரிக்கையை வென்றெடுப்போம். நிறுத்தி வைத்த மலம் கழிக்கும் போராட்டத்தை நடத்திடுவோம். "நம்முடைய வேதனைகள் நகராட்சிக்குத் தெரிய வேண்டுமென்றால் அதை அவர்களும் அனுபவிக்க வேண்டும்" என்ற வகையில் மதுரவாயல் நகராட்சி அலுவலகத்தைப் "பீ"க் காடாக்குவோம்!

மலம் கழிக்கும் போராட்டம்

04-06-2007
காலை 5.30 மணி மதுரவாயல் நகராட்சி அலுவலகம்

RSYF புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சென்னை.

தொடர்புக்கு
வ.கார்த்திகேயன் நெ.1 பிள்ளையார் கோவில் தெரு, மதுர வாயல் சென்னை-95 செல்: 944516625

Monday, June 11, 2007

இது பெரியார் புராணம் அல்ல!

இந்த கட்டுரைய படிச்சிட்டு கீழ உள்ள கட்டுரய படிச்சாக்க எதப் பத்தி பேசுறோம் அப்படிங்கறத பத்தி கொஞ்சம் தெளிவா இருக்கும். என்ன நாஞ் சொல்றது.....

***************
பெரியார் புரா :
தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை


நன்றி: விவாதமேடை


தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஆவாரம்பட்டி முத்துவீரகண்டயன்பட்டி கிராம மக்களுக்கு ஒரே ஆச்சரியம்! இக்கிராமத்துக்கு கடந்த ஆண்டுசெப்டம்பர் 24ஆம் தேதியன்று வந்த அரசுத் தலைவர் அப்துல்கலாம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்து, அக்குடிநீரில் ஒரு குவளை பருகி கிராம மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். வழக்கமாக இதுபோன்ற திட்டங்களை மாநில முதல்வர் அல்லது அமைச்சர் அல்லது மாவட்ட ஆட்சியர்தான் தொடங்கி வைப்பார்கள். ஆனால், அரசுத் தலைவரே முக்கியத்துவமளித்து இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பதைக் கண்டு வியந்த மக்கள், விழா மேடையைப் பார்த்தார்கள். அங்கே அரசுத் தலைவருடன் தி.க.வின் வீரமணியும் அருகே அமர்ந்திருக்க, இக்குடிநீர் திட்டத்தை ""பெரியார் புரா'' நடத்துவதாக விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.அது என்ன ""பெரியார் புரா''? நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கும் அளித்தல் எனும் ஆங்கில பெயர்ச் சுருக்கம்தான் ""புரா''. . இதனை தி.க.வின் வீரமணி நடத்திவரும் வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை பொயியற் கல்லூரி நிர்வாகம் செயல்படுத்தி வருவதால் ""பெரியார் புரா'' திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.அரசுத் தலைவர் அப்துல்கலாம் இக்குடிநீர் வழங்கல் திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்கு சில மாதங்கள் முன்பு, ""பெரியார் புரா'' திட்டத்துக்கு நிதியும் தொழில்நுட்ப உதவியும் அளித்துவரும் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பியூர்ஓடெக் நிறுவனத்தின் அதிகாரிகள் பூதலூர் அருகிலுள்ள ஆவாரம்பட்டி மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களைச் சுற்றிப் பார்த்தனர். இக்கிராமங்களில் நிலத்தடி நீரில் புளூரைடு எனும் வேதிப் பொருள் அதிகமாக உள்ளதால், குடிநீருக்காக மக்கள் பல மைல் தூரம் சென்று அவதிப்படுவதை அறிந்து, தாங்களே தண்ணீர் குடத்துடன் நடந்து பார்த்து வேதனையடைந்து, அதைப் புகைப்படம் எடுத்து நாளேடுகளில் வெளியிட்டு, உடனடியாக சுத்திகரிப்பு எந்திரத்தை நிறுவி புளுரைடு இல்லாத குடிநீர் கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தனர். இதைத் தொடர்ந்து, அரசுத் தலைவர் அப்துல்கலாம் இக்குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.குடிநீர் வழங்குவதோடு ""பெரியார் புரா'' திட்டம் முடிவடைந்து விடவில்லை. கிராம மக்களுக்கு சுயதொழில் பயிற்சி, மூலிகைச் செடி பயிரிட உதவி, சிறு தொழில் பட்டறை நிறுவ உதவி, இணையதள மையங்கள், காட்டாமணக்கு பயிரிட்டு பயோடீசல் தயாரிக்கப் பயிற்சி என அடுக்கடுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.கல்வி வியாபாரக் கம்பெனி நடத்தி வரும் தி.க.வும் வீரமணியும் திடீரென கிராமப்புற சமூக சேவை நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது ஏன்? அடிப்படைத் தேவைகளை அரசே செய்வதற்குப் பதிலாக, அரசும் வீரமணியின் கல்லூரி நிர்வாகமும் கூட்டுச் சேர்ந்து ""புரா'' என்ற புதிய திட்டத்தின் மூலம் செயல்படுத்துவது ஏன்? இத்திட்டத்திற்கு அமெரிக்க நிறுவனம் நிதியும் தொழில்நுட்ப உதவியும் செய்வது எதற்காக? என்ற கேள்விகளுடன் ""புரா'' திட்டத்தை ஆராயும்போது அதன் பின்னணியில் மிகப் பெரிய ஏகாதிபத்திய சதித்திட்டம் ஒளிந்திருப்பது தெரிய வந்துள்ளது.எதற்காக இந்த ""புரா'' திட்டம்? அதன் பின்னணி என்ன?ராஜீவ் காந்தி அரசால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 73வது திருத்தமாகக் கொண்டு வரப்பட்ட ""பஞ்சாயத்து ராஜ்'' சட்டம்தான், இன்றைய ""புரா'' திட்டத்தின் தாயும் தந்தையுமாவார். இப்பஞ்சாயத்துராஜ் சட்டமானது, ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வ நிறுவனங்களை (அரசு சாரா நிறுவனங்களை) கிராம நிர்வாகத்துக்கு இழுத்து வந்தது. இச்சட்டத்திற்கு வலுவூட்ட பிறப்பிக்கப்பட்ட இதர அரசாணைகள், இத்தன்னார்வ நிறுவனங்களைச் சட்டரீதியாக பஞ்சாயத்து நிர்வாகத்தில் இணைத்து விட்டது.இவ்வாறு சட்டபூர்வமாக தன்னார்வ நிறுவனங்களை கிராம நிர்வாகத்துக்குள் நுழைய விட்ட இந்திய அரசு, தனித்தனியாக இயங்கி வந்த ஊராட்சிகளை ஒன்றிணைத்து, அந்த வட்டாரத்தில் ஏகாதிபத்திய வல்லரசுகளின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் விவசாய உற்பத்தியை மாற்றியமைத்து, இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கப்பட்டதே ""புரா''.கிராமப்புறங்களில் மகளிர் மற்றும் ஆண்கள் சுய உதவிக் குழுக்களைக் கட்டியமைப்பது, சமூக சேவையிலிருந்து தொடங்கி பின்னர் அக்குழுக்களின் செயல்பாடுகளை ஏகாதிபத்திய சேவையாக மாற்றி விடுவது என்பதுதான் இந்தியா, இலங்கை, வங்கதேசம் போன்ற ஏழை நாடுகளில் ஏகாதிபத்தியங்கள் வகுத்துக் கொண்டுள்ள புதிய உத்தி.இப்புதிய உத்தியும் செயல்பாடுகளும் இப்போது அடுத்த கட்டத்தை நோக்கிப் பாயத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலுள்ள தன்னார்வ நிறுவனங்களுடன் தனியார் பல்கலைக் கழகங்கள், கம்பெனிகள் ஆகியவற்றையும் அரசின் சில துறைகளையும் ஒருங்கிணைத்து ஏகாதிபத்திய வல்லரசுகளின் நிதியுதவியோடு கிராமப்புறங்களை ஒரு வட்டார அளவுக்கு சுயநிர்வாகப் பிரதேசங்களாக மாற்றுவது; அப்பிராந்தியத்தில் பாரம்பரிய விவசாயத்தை ஒழித்துக் கட்டிவிட்டு ஏகாதிபத்திய தேவைக்கேற்ற ஏற்றுமதி சார்ந்த விவசாயம் மற்றும் கைவினைப் பொருட்களின் உற்பத்தி மண்டலமாக மாற்றுவது என்ற திட்டத்துடன் ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய ஆட்சியாளர்களும் களமிறங்கியுள்ளனர். இத்திட்டத்திற்காக சமூக சேவை என்ற முகமூடியுடன் உருவாக்கப்பட்டிருப்பதுதான் ""புரா''.நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிரண்டு ""புரா'' மண்டலங்கள் அமைய உள்ளன. இப்""புரா'' அமைப்பின் கீழ் அவ்வட்டாரத்தில் பல வகையான தன்னார்வக் குழுக்கள் செயல்படும். கிராமப்புற மக்களின் விவசாயம், கைவினைத் தொழில், சுகாதாரம், சுற்றுச்சூழல், அடிக்கட்டுமானம், கல்வி, மகளிர் நலம் முதலான அனைத்தையும் இத்தன்னார்வக் குழுக்கள் மேற்பார்வையிட்டு வழி காட்டி நெறிப்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால், கிராமப்புறங்களில் தன்னார்வக் குழுக்களின் ஆட்சியை நிறுவுவதற்கான துவக்கப் புள்ளிதான் ""புரா''.கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள், சமூக இயக்கங்கள், அரசு நிறுவனங்கள் ஆகியன தனியாகவோ கூட்டு சேர்ந்தோ ""புரா'' மண்டலங்களைத் தெரிவு செய்து கொள்ளலாம். இவை, இப்பகுதியிலுள்ள பஞ்சாயத்துராஜ் அமைப்பைக் கலந்தாலோசித்து திட்டத்தை முன்வைத்து அனுமதி பெறலாம். இத்திட்டத்திற்காக தனிச்சிறப்பான தொழில்நுட்பம் அல்லது உரிய உற்பத்தி முறையை முடிவு செய்து அரசே அதற்குத் தேவையான நிலம் அளிக்கும். பின்னர், ஏகாதிபத்திய நிறுவனங்கள் மற்றும் ஏகபோக முதலாளிகளிடமிருந்து நிதியாதாரம் திரட்டப்பட்டு ""புரா'' செயல்படத் தொடங்கும். ""புரா''வுக்கு இசைவாக, அரசின் பிற திட்டங்களது நிதியும் அவசியம் கருதி ""புரா''வுக்குத் திருப்பப்படும். இவ்வாறாக, போலீசு, நீதித்துறை தவிர பிற அனைத்து அதிகாரங்களையும் ஏகாதிபத்திய ஏஜெண்டுகளான தன்னார்வக் குழுக்களின் கைகளில் ஒப்படைத்து தனி சுயாட்சி பிராந்தியங்களை நிறுவுவதுதான் ""புரா'' திட்டம்.காலனிய ஆட்சிக் காலத்தில் விக்டோரியா மகாராணியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் பிரிட்டிஷ் இந்தியா என்றும், பெயரளவுக்கு அதிகாரம் கொண்ட 526 சரிகைக் குல்லா மன்னர்களின் குட்டி சமஸ்தானங்களுமாக அன்றைய இந்தியா இருந்தது. இன்று மறுகாலனியாக்கத்தின் கீழ், விக்டோரியா மகாராணிக்குப் பதிலாக, பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களின் வரம்பற்ற அதிகாரம் கொண்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களும், குட்டி சமஸ்தானங்களுக்குப் பதிலாக ""புரா'' மண்டலங்களும் உருவாகியுள்ளன.பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்த தி.க.வின் வீரமணி, தான் நடத்தி வரும் வல்லம் பெரியார்மணியம்மை பொறியியற் கல்லூரி எனும் கம்பெனி மூலம் மூன்றாண்டுகளுக்கு முன்பு ""புரா'' திட்டத்தைத் தொடங்கி, அதற்குப் ""பெரியார் புரா'' என்று பெயரிட்டுள்ளார். பெரியாரின் பெயரால் ""புரா'' திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், இது சமூக சேவையுடன் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யப் போகிறது என்று நீங்கள் கருதினால், அதைவிட ஏமாளித்தனம் இருக்க முடியாது. பெயரில் மட்டும்தான் பெரியார் இருக்கிறாரே தவிர, ""பெரியார் புரா'' செய்து வருவது ஏகாதிபத்திய அடியாள் வேலைதான்!தஞ்சை மாவட்டமும் அதை ஒட்டியுள்ள புதுக்கோட்டை மாவட்டமும் ""பெரியார் புரா'' திட்டத்துக்கென இனங்காணப்பட்டு, செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட 65 கிராமங்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. ""புரா'' கிராமங்களிலுள்ள பலநூறு சுய உதவிக் குழுக்களுக்கு பால் பண்ணை நடத்துவது, உயிர்ம வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிப்பது, கக்கூசுக்கான பீங்கான் செய்வது, மண்புழு உரம் தயாரிப்பது, தரிசு நில மேலாண்மை, சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்துவது முதலானவற்றில் பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. இப்பகுதியில் ""வேன்''கள் மூலம் நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. வெண்டையம்பட்டி, ஆவாரம்பட்டி, திருமலை சமுத்திரம், குரும்பூண்டி, வளம்பக்குடி, ஆச்சாம்பட்டி ஆகிய கிராமங்களில் இணையதள மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வல்லம் கல்லூரி வாயிலாக அளிக்கப்பட்டுள்ள பயிற்சியைக் கொண்டு எரிபொருளுக்காக காட்டாமணக்கு செடியும், மருந்து மற்றும் சாய உற்பத்திக்காக அவுரியும், கத்தாழையும் பயிரிடப் போகின்றனர், ""பெரியார் புரா'' கிராமத்தினர். தேங்காய் நாரிலிருந்து கைவினைப் பொருட்கள் தயாரிப்பதை அச்சம்பட்டி கிராமமும், மூங்கில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பை குமாரபுரம் கிராமமும், மூலிகைச் செடி பயிரிடுவதை பழையபட்டி கிராமமும், பால் பொருட்கள் உற்பத்தியை ராயமுண்டன்பட்டி கிராமமும், சுடுமண் பொம்மைகள்பானைகள் தயாரிப்பதை மனையேறிப்பட்டி கிராமமும், பித்தளைப் பொருட்கள் உற்பத்தியை நாச்சியார்கோயில் கிராமமும் ஒருங்கிணைக்கும் மையங்களாக மாறப் போகின்றன.""பெரியார் புரா''வின் துணை அமைப்பான (தி.க.வால் நடத்தப்படும்) ""பவர்'' நிறுவனம், ஒரத்தநாடு, பூதலூர், தஞ்சை, திருவாணம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மகளிர் ஆடவர் சுயஉதவிக் குழுக்களைக் கட்டி நிதிக்கடன் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. ரூ. 1.3 கோடியை சுழற்சி மூலதனமாகக் கொண்ட இத்தன்னார்வ நிறுவனம் தெக்கூரிலும் மனையேறிப் பட்டியிலும் மட்பாண்டங்களைச் செய்ய பயிற்சி அளித்து வருகிறது. களிமண்ணால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள், சணல் பைகள், தரைவிரிப்புகள் தயாரிப்பு, உள்கூடான செங்கல் தயாரிப்பு ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் மையமாக தெக்கூர் மண்டலம் செயல்படத் தொடங்கியுள்ளது. காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, ஸ்கிரீன் பிரிண்டிங் அட்டைகள், வற்றல், ஊறுகாய் தயாரிப்பு ஆகியவற்றை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து இப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் மையமாக ஒரத்த நாடு மற்றும் வல்லம் மண்டலங்கள் செயல்படவுள்ளன.சுருக்கமாகச் சொன்னால், தாராளமயத்தால் விவசாயம் திவாலாகி, விவசாயத்தை விட்டே விவசாயிகள் விரட்டப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளின் அதிருப்தியும் கோபமும் ஆட்சியாளர்களுக்கு எதிரான கலகமாக மாறிவிடுவதைத் தடுத்து சாந்தப்படுத்தி, மாற்றுப் பயிர் மாற்றுத் தொழில் என்ற பெயரில் வடிகால் வெட்டி, அவற்றை ஏகாதிபத்திய சேவையாக மாற்றி விடுவதற்கான ஏற்பாடுகளே இவை. இதற்காகவே ""பெரியார் புரா'' கிராமப் பள்ளிக் குழந்தைகளை வைத்து நாட்டு நலத் திட்ட முகாம் என்ற பெயரில் மூளைச் சலவையையும், வல்லம் பொறியியற் கல்லூரி மாணவர்கள் மூலம் கத்தாழையும் காட்டாமணக்கும் பயிரிடச் சொல்லும் பிரச்சாரத்தையும் முடுக்கி விட்டுள்ளார் வீரமணி. இதுவும் போதாதென்று, தன்னார்வக் குழுக்கள் பண்பலை ஒலிபரப்பைத் தொடங்க இந்திய அரசு அனுமதித்துள்ளதைச் சாதகமாக்கிக் கொண்டு, ""பெரியார் புரா'' மூலம் சமுதாய வானொலி எனும் பண்பலை ஒலிபரப்பையும் தொடங்கியுள்ளார்.அப்படியானால் யார் நெல் பயிரிடுவது? ""உலகச் சந்தையில் நெல்லும் கோதுமையும் "மலிவான' விலைக்குக் கிடைக்கும் போது, நாம் ஏன் அவற்றைப் பயிரிட்டு நட்டப்பட வேண்டும்? நாம் கள்ளியும் கத்தாழையும் காட்டாமணக்கும் பயிரிட்டு ஏற்றுமதி செய்வோம்; அதற்கீடாக நெல்லையும் கோதுமையையும் இறக்குமதி செய்து கொள்வோம்'' என்கிறார்கள், ""புரா'' நிர்வாகத்தை நெறிப்படுத்தும் ""ஜெட்ரோ'' எனும் ஜப்பானிய நிறுவனத்தின் அதிகாரிகள்.ஏழை நாடுகளின் உணவுச் சந்தையைக் கைப்பற்றிக் கொண்டு ஆதிக்கம் செலுத்த ஏகாதிபத்திய வல்லரசுகளின் உணவு வர்த்தக நிறுவனங்கள் நீண்ட காலமாக முயற்சித்து வருகின்றன. உணவு தானியங்களை ஏழை நாடுகளில் இறக்குமதி செய்து ஆதிக்கம் செய்வதில் அவை குறியாக இருக்கின்றன. எனவேதான் ""உணவு உற்பத்தியைக் குறை; மானியங்களை நிறுத்து'' என்று உத்தர விடுகிறது உலக வங்கி. "மலிவான' விலையில் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து கொள்ளுமாறும், உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் கைவிடுமாறும் பன்னாட்டு ஏகபோக கம்பெனிகள் ஏழை நாடுகளை நிர்பந்திக்கின்றன. எனவேதான் ""கோதுமையையும் நெல்லையும் விட்டுத் தொலையுங்கள்; தோட்டப் பயிர், மலர்ப்பண்ணை போன்று நல்ல ஏற்றுமதி வாய்ப்புள்ள உற்பத்திக்கு மாறுங்கள்'' என்று 2001ஆம் ஆண்டிலேயே அரியானா விவசாயிகளுக்கு உபதேசித்தார் அன்றைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய். இப்போது ""பெரியார் புரா'' திட்டத்தின் மூலம் இதனைச் செயல்படுத்தி, ஏகாதிபத்திய சேவையில் ஓட்டுக் கட்சிகளையெல்லாம் விஞ்சி முன்னணியில் நிற்கிறார் "தளபதி' வீரமணி.வீரமணியின் ""பெரியார் புரா'' நிர்வாகத்தை நெறிப்படுத்தும் தலைமைக் குருபீடமான ஜப்பானிய முதலாளிகளது ""ஜெட்ரோ'' நிறுவனத்தின் இயக்குநர் கவர்ச்சிகரமான முறையில் ஒரு தொலைநோக்குத் திட்டத்தைத் தயாரித்துள்ளார். ""ஒரு கிராமம்; ஓர் உற்பத்திப் பொருள்'' என்பதுதான் அத்திட்டத்தின் பெயர். இதன்படி ""புரா'' மண்டலத்திலுள்ள ஒரு கிராமத்தில் கத்தாழை பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்; மற்றொரு கிராமத்தில் காட்டாமணக்கு பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும்; இன்னொரு கிராமத்தில் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும். இக்கிராம மக்களுக்கு இதற்கான பயிற்சியளித்து, உற்பத்தி செய்து, அவற்றை ஏற்றுமதி செய்வதை ""புரா'' அமைப்பினர் கண்காணித்து வழிகாட்டுவர்.கடந்த பிப்ரவரி 2007இல் டெல்லியில் ""ஜெட்ரோ'' நிறுவனம் நடத்திய கண்காட்சியில் கலந்து கொண்ட ""பெரியார் புரா''வின் தயாரிப்புகளில், 40 பொருட்கள் இந்நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பொருட்களின் மாதிரிகள் வரும் ஜூலையில் ஜப்பானுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவற்றில் தேவைப்படும் மாற்றங்களைக் கேட்டு வந்து, அதன்படி ""பெரியார் புரா'' மண்டலத்திலுள்ள கைவினைஞர்களுக்கு வேலை கொடுத்து, அப்பொருட்களை ஏற்றுமதி செய்து, கிராமப்புற கைவினைஞர்களுக்கு வாழ்வளிக்கப் போவதாக ""பெரியார் புரா'' அறிவித்துள்ளது.சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம், இந்திய விண்வெளித் துறை ஆகிய மைய அரசின் நிறுவனங்களோடு, கனடா நாட்டின் வட அட்லாண்டிக் கல்லூரி, அமெரிக்காவின் சான்டியாகோ பல்கலைக் கழகம், இல்லினாய்ஸ் தொழில்நுட்பக் கழகம், அமெரிக்க ஜப்பானிய ஏகபோக கம்பெனிகள் ஆகியவற்றின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் ""பெரியார் புரா'' கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வட்டாரத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் ""புரா'' நிர்வாகிகள் திட்டப் பரிசீலனைக் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். இவ்வாறாக, தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களின் குக்கிராமங்கள் அன்னிய மூலதனத்துடன் பிணைக்கப்பட்டு அதன் அடியாளாகச் செயல்படும் ""பெரியார் புரா''விடம் கிராமப்புற உற்பத்தியும் நிர்வாகமும் மாற்றப்பட்டு வருகிறது.தி.க.வின் வீரமணி இப்போதெல்லாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதில்லை. அதற்கு மாறாக, தன்னார்வக் குழுக்களுக்காகவும் ""புரா'' கிராமங்களுக்காகவும் ""வாழ்வியல் சிந்தனைகள்'' எனும் பெயரில் சுயமுன்னேற்றக் கட்டுரைகளை எழுதத் தொடங்கி விட்டார். பெருந்தொழில் நிறுவனங்களில் மேலாண்மை செய்யும் நிர்வாகிகளுக்குக் கற்றுத் தரப்படும் விதிமுறைகளையே தேனில் குழைத்துத் தரும் வேலையை வீரமணி செய்து வருகிறார். ""வேலை வெட்டியின்றி இருக்கும் இளைஞர்கள் சுய தொழில் செய்ய முனைய வேண்டும்,'' ""இருப்பதை வைத்து சிறப்புடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்'', ""மேலை நாட்டினர் நம் அருகில் உள்ளபோது நாம் தாய்மொழியில் பேசிக் கொள்வது, அவர்களது மனதப் புண்படுத்தும்'' என்றெல்லாம் தனது அடிமைத்தனத்தையே "உரை நடைத் திருக்குறளாக' (வாழ்வியல் சிந்தனைகள் நூலுக்கான விளம்பர வாசகம்) எழுதித் தள்ளுகிறார்.வீரமணி புதிய நூல் எழுதுவது சுய விளம்பரத்திற்கல்ல; அது ஏகாதிபத்திய சேவையின் புதிய அத்தியாயம். ""பெரியார் புரா'' திட்டம் என்பது வெறுமனே சமூக சேவைக்கும் கைவினைப் பொருள் ஏற்றுமதிக்குமானதல்ல; அது விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடித்து, நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தக் கிளம்பியுள்ள ஏகாதிபத்திய சதியின் ஓர் அங்கம். உணவு தானிய உற்பத்தியை ஒழித்து, ஒற்றைப் பயிர்முறைக்கு விவசாயம் மாற்றப்பட்டால் பேரழிவுகளே விளையும். ""புரா'' திட்டப்படி, ஒரு ஊர் முழுக்க அவுரிச் செடியும் மற்றொரு ஊர் முழுக்க காட்டாமணக்கும் பயிரிடப்பட்டால் உயிர்மப் பன்மம் பாழாகி நிலம் மலடாகிப் போகும். சுற்றுச்சூழல் நாசமாகி இயற்கையின் முறைகுலைவுகள் ஏற்படும். அதன்பிறகு, இன்னுமொரு சோமாலியா, எத்தியாப்பியாவாக இந்தியா மாறிப் போகும்.ஏகாதிபத்திய வல்லரசுகள் புதிய நுட்பமான வழிமுறைகளைக் கொண்டு மீண்டும் காலனியாதிக்கத்தை நிறுவ முயற்சித்து வருகின்றன. இதர தன்னார்வக் குழுக்களையும் ஓட்சிக் கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு ""பெரியார் புரா'' திட்டத்தின் மூலம் ஏகாதிபத்திய அடியாள் வேலையில் முன்னணியில் நிற்கிறார் "தளபதி' வீரமணி. ஏகாதிபத்தியங்களின் நூதன வடிவிலான காலனியாதிக்கத்துக்கும், பெரியார் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்தும் நவீன எட்டப்பர்களுக்கும் எதிராக, உழைக்கும் மக்களை காலனியாதிக்க எதிர்ப்புப் போருக்கு அணிதிரட்டுவதே இன்று நம் முன் அவசர அவசியக் கடமையாக உள்ளது.· இரணியன்ஒரே புற்று இரண்டு பாம்புகள்!கொள்கையில் கீரியும் பாம்பும் போலத் தோற்றமளிக்கும் திராவிடர் கழகமும் இந்துவெறி ஆர்.எஸ்.எஸ்.ம் ""புரா'' திட்டம் மூலம் ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்வதில் புதிய பங்காளிகளாகியுள்ளன. மத்தியப் பிரதேசத்திலுள்ள தீனதயாள் ஆய்வு மையம் எனும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனம் நடத்தி வரும் ""புரா'' திட்டம்தான் இந்தியாவின் முன்னோடித் திட்டம். இதனையடுத்துதான் வீரமணியின் ""பெரியார் புரா'' திட்டம் தொடங்கப்பட்டது. ""சித்ரகூடம் புரா'' எனப்படும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ""புரா'' திட்டம் பழத்தோட்டம், மூலிகைப் பண்ணை, பழங்குடியினர் மேம்பாடு, பசு பாதுகாப்பு என பல அரங்குகளிலும் நுழைந்து 100 மண்டலங்களில் காலூன்றியுள்ளது. பார்ப்பனியத்துடன் ஏகாதிபத்திய சேவையை விசுவாசமாகச் செய்துவரும் ""அம்பி''கள் இப்போது ""பெரியார் புரா''வின் சேவையைப் பாராட்டி ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.நகர்ப்புறங்கள் சுண்டி இழுக்கும் கவர்ச்சியால் கிராமப்புற இளைஞர்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்கின்றனர் என்றும் இதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை உணர்த்தி இந்த இடப்பெயர்ச்சியைத் தடுத்து நிறுத்தவே ""புரா'' திட்டத்தை செயல்படுத்தி வருவதாக ஆர்.எஸ்.எஸ்.இன் ""சித்ரகூடம் புரா'' கூறுகிறது. ஏகாதிபத்திய அடியாள் வேலையை மறைத்து இந்து வெறியர்கள் இப்படியொரு காரணத்தை அவிழ்த்து விட்டுள்ளபோது, "தளபதி' வீரமணியின் ""பெரியார் புரா'' வேறொரு காரணத்தைச் சொல்கிறது.1944ஆம் ஆண்டு கிராம முன்சீப்கள் பயிற்சி மைய விழாவில் பேசிய பெரியார், ""நகரத்தில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் கிராமத்திலும் கிடைக்கச் செய்யவேண்டும்'' என்று குறிப்பிட்டாராம். எனவேதான், பெரியார் கொள்கை வழியில் ""புரா'' திட்டத்தைத் தொடங்கி கிராம மக்களுக்கு நகர்ப்புற வசதிகள் அனைத்தும் கிடைக்கச் செய்ய வீரமணி கும்பல் பாடுபடுகிறதாம்! இதே பாணியில், பெரியாரின் பேச்சுகள் எழுத்துக்களிலிருந்து இன்னும் பல புதிய காரணங்களை வீரமணி கும்பல் கண்டுபிடித்து, அவிழ்த்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.""புரா'' திட்டத்தைச் சாதகமாக்கிக் கொண்டு, ஏகாதிபத்திய சேவையுடன் ""கோமாதா பாதுகாப்பு'' எனும் கொள்கையை செயல்திட்டமாக வைத்து ஆர்.எஸ்.எஸ்.இன் சித்ரகூடம் புரா இயங்கி வருகிறது. ஆனால், பெரியார் பெயரை வைத்து பிழைப்பு நடத்தும் வீரமணி கும்பலின் பெரியார் புரா திட்டத்தில், ஏகாதிபத்திய அடியாள் வேலையைத் தவிர, பெயரளவுக்குக்கூட பெரியாரின் கொள்கையோ வெங்காயமோ இல்லை.

· இரணியன்

புதிய ஜனநாயகம் மார்ச் 2007

பகுத்தறிவின் லீலைகள் வியந்தோதாய் உடன்பிறப்பே…

நன்றி: விவாதமேடை

ஏய்! சாயிபாபா

வெறுங்கையிலிருந்து விபூதியும் பூச்செண்டும்

வரவழைத்தாயே! அதுவா அற்புதம்?

வெயிலறியா உன் தலைமுடியிலிருந்துவிதவிதமாய்

கடிகாரங்களை வரவழைத்தாயே!

அதுவா அற்புதம்?

பசியறியா உன் வயிற்றியிலிருந்து

பலப்பல லிங்கங்களை வரவழைத்தாயே!

அதுவா அற்புதம்?

அடே! சாயிபாபா

வழியறியா உன் காவிக் கஜானாவிலிருந்து

கடைசியில் கருணாநிதியை

வெளியே வரவழைத்தாயே!

அதுவன்றோ அற்புதம்!!

வீழ்ந்திற்றோ கொள்கைக் குன்று என்று

விளங்காத உடன்பிறப்பே...

இருநூறு கோடி எதிரே வருகையில்

பெரியார் பார்வையா பார்க்க முடியும்?

கொஞ்சம் பகுத்தறிவோடு பார்!

யாருக்கும் தலைவணங்காத சுருள்முடியையே

கோபாலபுரம் தன் காலடிக்கு வரவழைத்தது

ஆன்மீகத்திற்கே பேரடி அல்லவா?

அதிசயம் அல்லவா?

அற்புதத்தில் விஞ்சி நிற்பது

பாபாவா? கலைஞரா? பார்!

வெறுங்கையிலிருந்து நோக்கியாவை

வரவழைத்தார்!

இதோ... ஊமைகள் பேசுகிறார்கள்!

காலிக் கஜானாவிலிருந்து

கலர் டி.வி.யை வரவழைத்தார்!

அதோ... குருடர்கள் பார்க்கிறார்கள்;

வாயிலிருந்தே இரண்டு ஏக்கர் நிலத்தை

வரவழைத்தார்!

அதோ முடவர்கள் நடக்கிறார்கள்.

அது மட்டுமா...?

அணுவைத் துளைத்து, மலைகள் விழுங்கி,

ஆழ்கடல் குடித்து ஆயிரமாய் விளைநிலங்கள் செரித்து

குறுகத் தறிக்கும் உலகமயப் பொதுமறையை

ஓவியமாய்த் தீட்டும் அற்புதம்

அந்த பாபாவுக்கு வருமா?

அவரா, இவரா?

அற்புதத்தைத் தெரிவு செய்ய முடியாமல்

திக்குமுக்காடி நெளிகிறது தெலுங்கு கங்கை.

ஆசீர்வாதத்திற்குப் பயந்து

ஓடி ஒளிகிறது கூவம்!

துரை. சண்முகம்

Wednesday, June 06, 2007

ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொருவன் கன்னத்தை காட்டிக் கொடு - புதிய புரா

ந்த புறா இல்ல புறா.... வெள்ளையா இருக்கும். கக்கா போறது கூட வெள்ளையாவே கழியும்.... ஆங்.... நம்ம மாமா(நோ டபுள் மீனிங் ப்ளீஸ்) நேருகூட கையில வைச்சி சின்ன குழந்தைகள ஏமாத்துவாறே... அதே புறாதான். சமீபத்துல ஒரு புறாவ பத்தின கட்டுரைகள் சிலது படிச்சேன். உடனே மண்டக்குள்ளாற முதல்ல ஓடுனது மேல சொன்ன விசயங்கதான்.

அது வேற ஒன்னுமில்ல, சுயமரியாதை செம்மல் கீக்கீக்கீக்கீ வீரமணி அய்யா புறாவ வைச்சி ஏதோ செய்யிறாருன்னு படிச்சேன். எதோ பெரியார் புராவாம். கிரகத்துக்கு RSS அயோக்கிய பய புள்ளகளும் ஏதோ கோல்வால்கர் புரா அப்படின்னு புறா வளக்குறாங்கன்னு படிச்சவுடனே ரொம்ப குழப்பமாயிருச்சி. என்னாடாது தீடீர்னு புறாவுக்கு வந்த கேடு, ரெண்டு அயோக்கிய தறுதலைகளும் புறாவ வைச்சி ஏதோ முழு மூச்சா பன்றாய்ங்களே, உறுதியா நாட்டுக்கு நல்லது செய்யிற மாதிரி இருக்காதே அப்படின்னு.

RSSக்காரன விடுங்க அது பன்னி வாய் வச்ச வைக்கப்படப்பு மாதிரி எப்போதுமே புளுத்து நாறும், நம்ம வீரமணி அய்யா ஒழுங்கத்தான பொழப்ப ஓட்டிக்கிட்டு இருந்தாரு. ஏதோ அவருக்கு தெரிஞ்ச அளவுல திருகு வேலகள் பாத்துக்கிட்டு கண்ண மண்ண உறுத்தாமத்தான் அலஞ்சிக்கிட்டு இருந்தாரு. அப்பப்போ கொஞ்சம் கையறிப்பா இருந்தனா 'சுயமுன்னேற்றம்', 'கூட்டி கெடுத்தும்'.. சீ... 'கொடுத்தும் பிழைப்பது எப்படி?' அப்படிங்கற மாதிரி 'யு கென் வின்' பாணி கட்டுரைகள் எழுதிக்கிட்டிருந்தார். இலமர காய்மறயாத்தான் புண்ணாக்கு பாண்டி வேலைகள பாத்துக்கிட்டிருந்தாரு. ஆனா தீடீர்னு புறாவ வைச்சி என்ன பிசினஸ் கெட்ட கிரகத்த செய்றாங்கன்னு தெரியலயேன்னு ஒரே மண்ட குடைச்சல். ஏதுவும் புறாவுக் கூட்டிக் கொடுக்கிறாய்ங்களான்னு விபரீதமா நினைச்சி மனசு கெடந்து அடிச்சுக்கிது. சரி இத கண்டுபிடிச்சே தீர்ரதுன்னு எல்லாந் தெரிஞ்ச ஏகாம்பரத்துக்கிட்ட கேட்டேன்.

அவன் வழக்கம் போல சம்பந்தமில்லாம கரடி விட்டைப் போட்டது, யானை முட்டைப் போட்டதுன்னு வாய்க்கு வந்தத அடிச்சு விட்டான். இவிங்கிட்ட எதுவும் தேறாதுன்னு நாமளா எங்கனா தேடி தெரிஞ்சுக்க வேண்டியதுதான்னும் முடிவு பன்னிட்டேன்.

சரி விளையாட்டை விடுவோம், விசயத்துக்கு வருவோம்.

சமீபத்தில வடகர்நாடகாவிலும், மஹாராஸ்டிராவிலும் இன்னும் பல பகுதிகளிலும் கரும்பு விளைவித்த விவசாயிகள் அதனை வாங்க ஆளில்லாமல், உற்பத்திச் செலவுக்கு ஈடான விலை கொடுக்க ஆளில்லாமல் கரும்புகள் விறகுகளாய் மாறுவதை காணச் சகியமால் தற்கொலை செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக விதர்பா பகுதி விவசாயிகளிடம் கரும்பு விளைவிக்கச் சொல்லி போன வருடம் கோரிக்கை விடுத்தார் மஹாராஸ்டிர முதலமைச்சர். அவரது சொல்லைக் கேட்டு கரும்பு விளைவித்த விவசாயிகள் அதனை வாங்க ஆளில்லாமல் தற்கொலை செய்து வருகின்றனர். தாங்கள் விளைவித்த கரும்பு காய்ந்து விறகாய் மாறிய பிறகு அதனை தீ வைத்து கொளுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று கொளுத்தி வருகின்றனர்.

இதற்க்கு காரணமாக இந்த வருடம் வேறு எந்த வருடத்தையும் விட மிக மிக அதிகமாக கரும்பு விளைந்து விட்டது என்று ஒரு சொத்தை வாதத்தை வைக்கிறார்கள். அதிகமாய் என்றால்? தன்னிறைவை ஈடுக்கட்டுவதை மீறிய அளவு கரும்பு விளைந்து விட்டதா? அல்லது சர்க்கரை இந்தியாவில் எல்லாருக்கும் தேவையான அளவு கிடைத்துக் கொண்டிருக்கிறதா? இல்லையே?

உண்மையில் இந்தியாவின் தன்னிறைவை நிறைவு செய்யும் அளவு கரும்பு உற்பத்தி செய்வது என்றால் இதை விட அதிகப்படியாகவே உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும். ஒரு பக்கம் கரும்பு குறைந்த பட்ச விலை கொடுத்து வாங்கவும் ஆளில்லை ஆனால் சந்தையில் மட்டும் சர்க்கரை விலை குறையக் காணோம்.

இதே நிலைமைதான் பிற தானிய வகையாறாக்களிலும். கரும்பு முதல் இன்னபிற அத்தியாவசிய விளை பொருள்கள் எல்லாம் இந்தியாவின் தன்னிறைவை ஈடு செய்யும் அளவு உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதற்க்கு எடுத்துக்காட்டு கோதுமையை நாம் இறக்குமதி செய்த அவலம். ஆனால் அரசோ இவற்றின் விளைச்சல் அளவை அதிகப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதோடல்லாமல் விளைவித்த பொருட்களையும் அழிய விட்டு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அழிவு தக்காளியில் தொடங்கி, பருத்தியில் வீரியமாகி, விவசாயியின் தற்கொலை வரை நீடிக்கிறது

சும்மாவா சொன்னார் மார்க்ஸ், உற்பத்தி சக்திகளின்(உழைப்பில் ஈடுபடும் மனிதனின் அனுபவ அறிவு, உற்பத்திக்கு உதவும் பொருட்கள், உற்பத்தியாகும் பொருட்கள்) முன்னேற்றத்துக்கேற்ப உற்பத்தி முறையில்(நிலபிரபுத்துவ பாணி உற்பத்தி, சிதறிய உற்பத்தி, முதலாளித்துவ உற்பத்தி) மாறாவிடில், உற்பத்தி சக்திகளின் அழிவு ஏற்ப்படும் என்று.

இப்படி அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகமாக இருப்பினும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளவற்றை விநியோகம் செய்யவும் ஆளில்லை, உற்பத்தியை பெருக்கி எல்லாருக்கும் அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க செய்யவும் ஆளில்லை. ஆனால் எந்த தறுதலைக்கும் உயிராதாரமான விசயமாயில்லாத மூங்கில் பயிர் வளர்க்க சொல்லி இந்த அரசும், NGO உளவாளிகளும் இந்திய விவசாயத்தின் முகத்தை மாற்றி வருகின்றனர்.

ஒரு சின்ன ஒப்பீட்டைப் பார்ப்போம். சர்க்கரைத் தேவைக்காக கரும்பு பயிர் செய்யும் இந்தியாவில் கரும்பு விவசாயம் செய்தவன் நாண்டு கொண்டு சாகும் நிலைதான் உள்ளது. ஆனால், ஒருவேளை இதே கரும்பை ஏகாதிபத்திய தரகு நிறுவனங்களுக்கு தேவையான ஏதோவொன்றை தாயாரிக்கும் விசயமாக இங்கு தயாரித்தால் நாண்டு கொண்டு சாகும் நிலையிருக்குமா?

இந்திய விவசாயிக்கு இருக்காது அன்பர்களே! ஆனால் இந்தியர்கள் என்ற வகையில் நாண்டு கொள்ள வேண்டிய நிலை நம்மெல்லோருக்கும் ஏற்ப்படும். இதோ இந்திய கரும்பு விவசாயத்தை பயோடீசல் தயாரிக்க பயன்படுத்தும் திட்டம் விரைவில் அமலாக இருக்கிறது. கரும்பு விவசாயம் நமது தேவைக்கு என்று இருந்த வரை ஆதரிக்க ஆளின்றி அழிந்த கதை போய் ஏகாதிபத்தியத்தின் தேவைக்கு என்று மாறிய பிறகு கொடுக்கப்படும் அதி அற்புத உபச்சாரத்தை நம் பார்க்க இருக்கிறோம்.

இதைத்தான் மறுகாலனியாதிக்கம் என்கிறோம். இந்திய வளங்களை நமது தேவைக்காக அன்றி ஏகாதிபத்தியங்களின் சந்தை தேவைக்காக சுரண்டும் இந்த அப்பட்டமான கொள்ளையைத்தான் மறுகாலனியாதிக்கம் என்கிறோம்.

நேற்று பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் அவனது சாயப் பட்டறைகளுக்கு தேவையான அவுரி செடி பயிரிடச் சொன்னான். பல்லாயிரம் வருடங்கள் பண்படுத்தப்பட்ட மண்ணும், நீரும், நிலமும் நாசமாகும் என்பதை உணர்ந்த விவசாயி உயிரை விட்டானே ஒழிய அவுரி பயிரிட ஒப்புக் கொள்ளவில்லை. அவன் தன்மானமுள்ளவன்.

இன்று நெல் பயிரிட்ட இடங்களிலெல்லாம் அவனது செண்ட் தொழிற்சாலைகளுக்கான பூ பயிரிடச் சொல்லி அரசும், NGO வும் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்திய மக்களின் தேவைக்கான விவசாய உற்பத்தி அனைத்தும் திட்டமிட்ட அழித்தொழிக்கப்பட்டு அதன் விளைவாய் விரக்தியில் இருப்பவனிடம் சென்று ஏகாதிபத்தியத்திற்க்கு விவசாயம் செய் என்று பிரச்சாரம் செய்யும் படு கேவலமான கைக்கூலிகளாக அரசும், NGOக்களும் செயலபட்டு வருகிறார்கள். பூ பயிரிட தேவைப்படும் தண்ணீரின் அளவு குறித்து ஒரு தோழர் என்னுடன் உரையாடும் போது விளக்கினார். கேட்க்க மலைக்க இருந்தது. ஒருவேளை இந்த அதீத சுரண்டலில் தண்ணீர் வற்றிப் போனால்? அவனுக்கென்ன வந்தது. இந்தியா இல்லாவிட்டால் ஒரு இலங்கை. அவனது பூ தேவையை உலகம் முழுவதும் இடம் தேடி கண்டுபிடித்து பூர்த்தி செய்து கொள்வான். நமது உணவு தேவை?

இதோ கரும்பு பயிர்களெல்லாம் அமெரிக்க கார்களில் கரியாகப் போகிறது. இதோ கண்முன்னே கோதுமை இறக்குமதி செய்கிறோம். நமது தேசம் இயறகை வளமில்லாத பாலைவனம் இல்லையா அதனால்தான் கோதுமையை, உணவை இறக்குமதி செய்கிறோம்.

இதோ கட்டாமணக்கு பயிரிடுகிறோம். கட்டாமணக்கு தட்டுப்பாட்டால்தான் உபியிலும், ஒரிஸ்ஸாவிலும் பட்டினி சாவுகள் நிகழந்தனவல்லவா? அதனால்தான்.

இதோ பெரியார் புரா சொல்கிறார் 'அன்பர்களே மூங்கில் பயிரிடுங்கள்' என்று. பெரியாரை அவமானப்படுத்த இதைவிட வேறு சிறந்த வழியிருக்குமா தெரியவில்லை. தன்மானமின்றி கூட்டிக் கொடுக்கும் தரகு வேலைக்கு பெரியார் புரா என்று பெயர். இவர்களும் கூட கோல்வால்கர் புரா என்றே பெயர் வைத்திருக்கலாம். கூட்டிக் கொடுக்கும் தொழிலுக்கேற்ற பொருத்தமான பெயராகவாவது இருந்திருக்கும்.

முப்போகம் நெல் விளைந்த தஞ்சை மண். ஆனை கட்டி போரடித்த மண். சோழ வள நாடு சோறுடைத்து என்று பண்டைய இலக்கியங்களிலெல்லாம் பாடல் பெற்ற பாரம்பரிய விவசாய பூமி. வெள்ளையன் ஆட்சியில் கூட இந்தளவு ஒவ்வொரு முக்குச் சந்தும் அவனது சுரண்டலுக்கு ஆளாகியிருக்குமா தெரியவில்லை ஆனால் மறுகாலனியின் ஆட்சியில் தஞ்சையிலும் கை வைத்து விட்டனர் ஏகாதிபத்தியங்கள். நெல் விளைந்த பூமி இனி மூங்கில் விளைவித்து கப்பலில் ஏற்றுமதி செய்யும்.
சாலையின் இருமறுங்கில் பயிர்கள் பரந்து விரிந்து எங்கே வாகனங்களின் சக்கரங்களை தொட்டு விடுமோ என்று பரிதவிப்பை ஏற்படுத்தும் அடர்ந்த பச்சை, தொடுவானம் வரை நீண்டு கிடக்கும் வயல் வெளிகள். சிறு குழந்தையின் வெற்றுடம்பில் இயற்கை அன்னை முத்தமிட்ட தடங்களோ என்று வியப்பை ஏற்படுத்தும் வெள்ளி மடைகள். அதிகாலையின் இளம்குளிரில் நீராவி மேக மூட்டமாய் குவிந்து பயிர்களின் மீது போர்வை போர்த்தியிருக்கும் அழகு. சோம்பல் முறித்து அந்த பயிர்கள் சூரியனின் அன்பு அரவனைப்பில் உருகி பனி நீரை சொறியும் அற்புதம். இவையெல்லாம் காப்பிய கனவுகளாய் மாறும் காலம் வெகு தூரமில்லை. மூங்கில் பயிரிடும் தஞ்சை எப்படியிருக்கும்? சென்னை உயிரியல் பூங்காவில் மூங்கில் காடுகளைப் பார்த்ததில்லை நீங்கள்? சென்னைவாசிகள் தஞ்சையின் அழகை சென்னையிலேயே ரசிக்கலாம்.

அஸ்ஸாம் தேயிலையின் நிறம் என்னவென்றே கூட தெரியாத இந்தியர்கள்தானே நாம். லாபம்... ஆம் லாபம் வருமென்றால் மூங்கில் பயிரிட வேண்டியதுதானே. பிழைப்புவாதம் பேசும் டாலர் கண்மணிகளே உங்கள் வீட்டுப் பெண்களை கொஞ்சம் கூட்டிக் கொடுங்களேன் சில எச்சில் டாலர்களை உங்கள் மணம் குளிரும் அளவு மலையாய் அள்ளி குவிக்கிறேன். செய்வீர்களா அடிவருடிகளே?

எதிர்காலத்தை விற்று நிகழ்காலத்தை கரியாக்கும் இந்த கேட்டிற்க்கு பெயர் திறமையாம், லாபமாம்.

இப்படி ஏகாதிபத்தியத்திற்க்கு இந்தியாவை கூட்டிக் கொடுக்கும் வேலையில்தான் இந்த எதிர்பாராத கூட்டணி ஏற்ப்பட்டுள்ளது. RSS, திராவிடர் கழகம் கூட்டணி. ஜார்ஜ் புஷ் செப் 11யை ஒட்டி சொன்னான் "ஒன்று நீங்கள் எங்கள் பக்கம் அல்லது பயங்கரவாதிகளின் பக்கம்" என்று. இதோ மறுகாலனியாதிக்கம் செவுளில் அறைந்து இதே கேள்வியை கேட்கிறது ஒவ்வொருவரையும். வீரமணியும் கூட அறை வாங்கியிருப்பார் உடனே சுயமரியாதை பொங்க முடிவெடுத்திருப்பார்: "பெருந்தகையீரே! ஏகாதிபத்தியமே! நாங்கள் உங்கள் பக்கம்" என்று. அவர் செயல் வீரர். தந்து விசுவாசத்தை நிரூபித்தும் காட்டுகிறார்

செவுளில் அறை வாங்குபவர் அவர் மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் நித்தம் வாங்குகிறோம். நாம் எந்த பக்கம் என்பதை உறுதியாக நாம் வாங்கும் அறை முடிவு செய்வதில்லை. அது ஒவ்வொருவரின் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விசயம். நீங்கள் அறை வாங்கினீர்களா? நீங்கள் எந்த பக்கம்? உங்களுக்கு சுயமரியாதை உள்ளதா?

அசுரன்


Related Articles:

நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!
இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்
பத்ரியின் கிராமப் பொருளாதாரக் கட்டுரை - ஒரு உட்டோஅடிமை நாடும், போலி சுதந்திரமும்
இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்
அவனுடைய உமியும் - நம்முடைய நெல்லும்!
India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா?

Tuesday, June 05, 2007

கவுண்ட சாதி வெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

“சாமியப் பத்தி பேசு, இடஒதுக்கீடு கேளு; ஆனா, இரட்டை டம்ளர் பத்திப் பேசாதே!''

கன்னல்

நன்றி: தலித் முரசு

சாதி இழிவுகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்க்கத் துணியும் எவருக்கும் இந்த சமூகம் அளிக்கும் ஒரே பரிசு அவமானமும், அடி உதை யும் மட்டுமே. இச்சமூகத்தின் பிற கேடுகளை எதிர்க்கும் சமூகப் போராளிகள் சந்திக்க நேரிடும் அச்சுறுத்தல்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் நடுவே அவர்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச அங்கீகாரம்கூட, சாதி ஒழிப்புப் போராளிகளுக்கு கிடைப்பதில்லை. மனதையும் உடலையும் வருத்திக் கொள்வதிலேயே சாதி ஒழிப்புப் போராளிகளின் பயணம் நீடிக்கிறது. அதை விரும்பி ஏற்று, அயராது தொடர்பவர்களாலேயே சமூக விடுதலையும் சாத்தியமாகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் அண்மையில் கையிலெடுத்த ஒரு பிரச்சினை நமக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

திண்டுக்கல் மற்றும் பழனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இன்று வரையிலும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையும், இரட்டை இருக்கை முறையும் நிலவி வருகிறது. சாதி இந்துக்களுக்கு, கண்ணாடி குவளையிலும், தலித் மக்களுக்கு பிளாஸ்டிக் குவளையிலும் தேநீர் வழங்கப்படுகிறது. மேலும், தலித் மக்கள் அமர்வதற்கு சற்றே தாழ்ந்த பெஞ்சோ, சிமெண்ட் திண்ணை அல்லது தரையோதான் ஒதுக்கப்படுகிறது. இக்கொடுமைகளை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகத்தினர் 11.4.2007 முதல் பிரச்சாரப் பயணத்தை மேற் கொண்டனர். இதனால் சாதி இந்து கவுண்டர்களால் மிரட்டி விரட்டப்பட்டுள்ளனர்.

“முதலில் இரட்டை டம்ளர் முறை ஒழிப்பு பற்றி மட்டுமே பிரச்சாரம் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். அச்சமயத்தில் அதாவது பிப்ரவரியில் ஒட்டன்சத்திரம் அருகே பழையபட்டி என்ற கிராமத்தில் தலித் ஒருவருக்குச் சொந்தமான பூமிதான நிலத்தை, செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு கைப்பற்றி, நிலத்துக்குச் சொந்தக்காரரான தலித்தை தாக்கி நிலத்திலிருந்து விரட்டியது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டக் கலெக்டர் வாசுகி மற்றும் எஸ்.பி. பாரி ஆகியோர் இருந்தனர். தங்கவேல் என்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும் இதற்கு துணையாக இருந்தார். இந்தப் பிரச்சனையை கையிலெடுத்த தமிழக தலித் விடுதலை இயக்கம், பெரியார் திராவிடர் கழகத்தின் ஆதரவைக் கோரியது. அச்சமயத்தில் அப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பஞ்சமி நிலங்கள் பற்றியும் அறிந்தோம். எனவே, இரண்டு பிரச்சனைகளையும் இணைத்துப் பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்தோம்'' என்கிறார், பெரியார் திராவிடர் கழக களப்பணி ஒருங்கிணைப்பாளர் தாமரைக் கண்ணன்.

ஏப்ரல் 11 அன்று திண்டுக்கல் மாவட்ட கிழக்கு எல்லையான குருவன் வலசில் இருந்து 20 தோழர்கள் ஒரு மினிடோரிலும், 4 இரு சக்கர வாகனங்களிலும் பயணத்தைத் தொடங்கினர். "இரட்டை டம்ளர் ஒழிப்பு பஞ்சமி நில மீட்பு இந்திய தேசிய பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை எதிர்ப்புப் பயணம்' என விளம்பரப் பதாகை பொருத்தப்பட்ட பிரச்சார வாகனத்திலேயே ஒலிபெருக்கி இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஊரிலும் மக்கள் அதிகம் கூடும் தேநீர்க் கடைகள் முன்பு முதலில் ஒரு பாடல் பாடி, பிறகு அரை மணிநேரம் அங்கு சாதி தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக உரை நிகழ்த்தப்படும். அப்போதே துண்டறிக்கை விநியோகம் மற்றும் உண்டியல் வசூல் என்று பிரச்சாரம் நடைபெற்றுள்ளது.

“5 நாட்கள் நடந்த இப்பிரச்சாரத்தில், உண்டியல் வசூல் 4,600 ரூபாய் என்பது மக்களிடம் உள்ள வரவேற்பைக் காட்டியது. தாழ்த்தப்பட்ட மக்களிடம் நாங்கள் எதிர்பாராத ஆதரவு கிடைத்தது. ஒரே நாளில் 90 "தலித் முரசு' இதழ்கள் விற்பனை ஆனது'' என்கிறார் பெரியார் திராவிடர் கழகத் தோழர் ஜவகர்.

காவல் துறைக்கு தெரிவித்த ஊர்களைத் தவிர, இக்கொடுமை எங்கெங்கு உள்ளது என கேள்விப்பட்ட பெரும்பாலான ஊர்களுக்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்றுள்ளனர். குறிப்பாக, பழனி ஒன்றியத்தில் அவர்கள் பயணம் செய்த மிடாப்பாடி, மயிலாபுரம், நல்லெண்ணக் கவுண்டன் புதூர், பாப்பாகுளம், அய்யம்பாளையம், சின்னாக் கவுண்டன் புதூர், வேலாயுதம்பாளையம் புதூர், காவலப்பட்டி ஆகிய ஊர்களிலும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் கோவில் அம்மாபட்டி, அத்திமரத்துவலசு, ராஜாம்பட்டி, பணம்பட்டி, அக்கரைப்பட்டி, சரவணப்பட்டி, ஆலாவலசு, புலாம்பட்டி, வாகரை, மரிச்சிலம்பு, போதுப்பட்டி, கொழுமங்கொண்டான், சங்கஞ்சட்டிவலசு, பெரியமொட்டனூத்து, தாளையுத்து, நாச்சியப்பன்கவுண்டன் வலசு ஆகிய ஊர்களில் இரட்டை பெஞ்ச் முறையும், இரட்டை டம்ளர் முறையும் உள்ளதை நேரில் பார்த்துள்ளனர்.

“முதலில் எதிர்ப்பு வரவில்லை. சேரிகளுக்குச் சென்று அங்குள்ள கொடுமைகள் பற்றி விசாரித்தோம். வேலாயுதம்பாளையம் புதூர் என்ற ஊரில் அப்படிப் பேசுவதைப் பார்த்த கவுண்டர்கள் சிலர், நாங்கள் கிளம்பியதும் தலித்துகளிடம் மிரட்டும் தொனியில் பேசியதைப் பார்த்தோம். எனவே, தலித்துகளிடம் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்த்தோம். முதல் நாள் அய்யம்பாளையம் என்ற ஊரில் ஆங்காங்கே தனியாக நின்றுகொண்டு கண்டபடி ஆபாசமாக சாதி இந்துக்கள் திட்டத் தொடங்கினர். பெரும்பாலும் அனைத்து வகையான கெட்டவார்த்தைகளையும், முறைப்புகளையும் கண்டோம்'' என்கிறார் தாமரைக் கண்ணன்.

ஏப்ரல் 11 அன்று தொடங்கிய பயணம் பழனி மற்றும் தொப்பம்பட்டி ஒன்றியங்களில் உள்ள பல கிராமங்களைக் கடந்து ஏப்ரல் 15 அன்று மாலை 5 மணிக்கு திண்டுக் கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த வாகரையை அடைந்தது. பிரச்சாரக் குழுவினர், ஒலிபெருக்கியில் துண்டறிக்கையை முதலில் வாசித்தனர். “நாங்க துண்டறிக்கையை வாசிக்கத் தொடங்கிய உடனே அவ்வூரைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்லத்துரையை அழைத்து "மரியாதையாகக் கூட்டத்தை நிறுத்து' என்றனர். சிறிது சிறிதாக மக்கள் குவியத் தொடங்கினர். தேநீர்க் கடையில் இருந்த நானும் தோழர் மருத மூர்த்தியும் அங்கு ஓடினோம். "மரியாதையாக ஓடிவிடுங்கள். இரட்டை டம்ளர் அது இதுன்னு பேசினா... உயிரோட போக மாட்டீங்க. ஓடுங்கடா முதல்ல' என்றனர். கடுமையான கெட்டவார்த்தை ஒன்றால் திட்டினர். தோழர் மூர்த்தி கொஞ்சம் ரோஷப்பட்டு, முகத்தில் கொஞ்சம் கோபத்தைக் காட்டிவிட்டார். உடனே ஒரு பத்துப்பேர் சேர்ந்து அவரைப் பிடித்துக் கீழே தள்ளினர். வேறொரு டீக்கடையில் இருந்து பிற தோழர்கள் ஓடிவந்தனர். வாகனத்தை சுமார் 50 பேர் சூழ்ந்து கொண்டனர். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பெட்ரோலை எடுத்துட்டு வாடா, வண்டியக் கொளுத்தணும் எனக் காட்டுக் கூச்சல் கேட்டது. தோழர் ஜவகர் அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தார்.

“என்ன சொல்ல வர்றோம்னு கொஞ்சம் கேட்டுட்டுப் பேசுங்க, என நானும் கெஞ்சிப் பார்த்தேன். "பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க அறிவில்லையாடா ஒனக்கு? தி.க.ன்னா சாமியப் பத்திப் பேசு, 69 சதம் இடஒதுக்கீடு கேளு, அத விட்டுட்டு, இரட்டை டம்ளர்னு பேசுனா என்னடா அர்த்தம்? ஒரு மாசமா இங்க பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு, இங்க வந்து கலகம் பண்றீங்களா? யார் சொல்லிடா வந்தீங்க? எங்க பஞ்சாயத்து தலைவன் சொன்னானா? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். கூட்டமோ, என்னடா பேச்சு ஊத்துடா பெட்ரோல என்றது. சரி நாங்க பேசல. இப்படியே போயிடறோம் என்றோம். ஓடுங்கடா ஓடுங்கடா என விரட்டி விட்டனர்'' என்கிறார் தாமரைக்கண்ணன்.

தேவகோட்டை பகுதியில் ‘நாடு' அமைப்பு உள்ளது போல பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியங்களில் உள்ள சாதி இந்து கவுண்டர்கள், சாதி வளர்ச்சிக்காக நிதி திரட்டி ஒருங்கிணைப்பாக உள்ளனர். இக்கிராமங்கள் "பண்டு கிராமங்கள்' (Fund) என்று குறிப்பிடப்படுகின்றன. இக்கிராமங்களில் காவல் துறையோ, இந்திய அரசியல் சட்டமோ – சாதி இந்துக்களை மீறி எதுவும் செய்ய முடியாது. ஒரு ஊரில் தலித் மக்கள் ஏதாவது கலகம் செய்தால், கிட்டத்தட்ட 50 கி.மீ. சுற்றளவில் அவர்கள் பிழைக்க வழியிருக்காது என்ற நிலையை பண்டு கிராமங்கள் உருவாக்கியுள்ளன. வாகரை அம்மாதிரியான கட்டமைப்பில் உள்ள ஒரு கிராமம்.

வாகரையின் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பூசாரிக் கவுண்டன் வலசைச் சேர்ந்த அருந்ததியரான சின்னான். இவர் குடியிருக்கும் பூசாரிக் கவுண்டன் வலசு பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தருவதற்காக வாகரையிலிருந்து பைப்லைன் போட்டுள் ளார். சாதி இந்துக்கள் அந்த பைப் லைனை வெட்டி, தண்ணீர் கொண்டு செல்லவிடாமல் தடுத்துவிட்டனர். பிறகு மீண்டும் பைப்லைன் பதிக்கிறார். அதையும் சாதிவெறியர்கள் வெட்டி விட்டனர். எனவே, இது பற்றி தொப்பம்பட்டி பி.டி.ஓ.விடம் புகார் செய்த தலைவர், சின்ன தொப்பம்பட்டி பி.டி.ஓ. அலுவலகம் சென்றபோது, அவரை அலுவலக வாசலிலேயே கவுண்டர்கள் அடித்து உதைத்தனர். இது தொடர்பாக கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு பஞ்சாயத்து தலைவர் சின்னான், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் அருள்செல்வனை அணுகி ஆதரவு கோரியுள்ளார். அதன் பிறகுதான் சட்டமன்றத்தில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டது.

உடனே திண்டுக்கல் கலெக்டர் வாசுகி வாகரைக்கு நேரில் சென்று விசாரித்து அங்கே இரட்டை டம்ளர் முறையோ, எந்த அடக்குமுறைகளுமோ கிடையாது என அறிவித்தார். தலைவர் சின்னõனும் அவ்வாறே கூற வைக்கப்பட்டார். பிறகு ஜெயா டி.வி.யில் கொடுமை நடப்பதாக தொலைபேசியில் கூறினார். இந்த சிக்கல் அண்மையில் நடந்துள்ளதால், அந்த பஞ்சாயத்து தலைவர் சின்னான் சொல்லித்தான் பிரச்சாரக் குழுவினர் வந்திருப்பார்கள் என சாதி இந்துக்கள் கருதியிருக்கின்றனர். அதன் பிறகு பிரச்சாரக் குழுவினர் அங்கிருந்து தப்பி 12 கி.மீ. தொலைவிலுள்ள கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். உதவி ஆய்வாளர் சீனிவாசன் புகாரை வாங்க மறுத்திருக்கிறார்.

"யாரைக்கேட்டு அங்கு சென்றீர்கள்? யாரைக் கேட்டு உள்ளே நுழைந்தீர்கள்' என மிரட்டி, புகாரையும் வாங்க மறுத்திருக்கிறார். அதற்குள் செய்தி கேள்விப்பட்டு பழனி ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து சுமார் 50 தோழர்கள் காவல் நிலையம் முன் திரண்டனர். அதே நேரத்தில் துண்டறிக்கையில் இருந்த தாமரைக் கண்ணனின் எண்ணை வைத்து, பண்டு கிராமப் பகுதியிலிருந்து அவரது எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். தன்னை ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், "உங்களைத் தாக்க பண்டு கிராமம் எல்லாம் திரளுகிறது. உடனே கள்ளிமந்தையத்தை விட்டுக் கிளம்புங்கள்' என்று கூறியுள்ளார்.

இருப்பினும், புகார் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல மனமின்றி பிரச்சாரக் குழுவினர் புகாரை வாங்கச் சொல்லி, உதவி ஆய்வாளரிடம் வாதம் செய்து கொண்டி ருந்திருக்கின்றனர். அச்சமயம், இரவு 7 மணி அளவில் 2 மினி லாரிகளில் சாதி இந்துக்கள் சுமார் 100 பேர் அங்கு வந்து இறங்கினர். 7.15 மணியளவில் மீண்டும் 2 மினி லாரிகளில் ஆட்கள் இறங்கினர். காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மட்டுமே இருந்திருக்கிறார். காவலர்கள் யாரும் இல்லை. அதனால் அந்த உதவி ஆய்வாளர் வெளியே வந்து கவுண்டர்களிடம் பேசி, "உங்கள் புகாரைக் கொடுங்கள் வாருங்கள்' எனக் கூறி, அவர்களைத் தனியே அழைத்துச் சென்றுள்ளார். கவுண்டர்கள் விலகிச் சென்ற உடன், பிரச்சாரக் குழுவினர் தப்பி ஓடி வந்துள்ளனர்.

ஆனால், இப்பிரச்சினையை பெரியார் திராவிடர் கழகத்தினர் இத்துடன் விடுவதாக இல்லை.

“எத்தனை நாட்கள்தான் மென்மையாகப் போராடுவது? சாதி வெறியர்களுக்கு அழுத்தமாக உணர்த்தும் வகையில் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். ஒத்த கருத்துள்ள அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஆகியவற்றையும் இணைத்துக் கொண்டு, அதே கிராமங்களில் ஆகஸ்டு 15 அன்று இரட்டை டம்ளர் மற்றும் இரட்டை பெஞ்சு உடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளோம். அது வரையில் மே 26 தொடங்கி அக்கிராமங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டும் பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளோம்'' என்கிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

உண்மைதான். சாதியின் கோர முகத்தை மென்மையான கரங்களால் பிய்த்து எறிய முடியாது. சாதி தனது இருப்பை என்றுமே மென்மையாக வெளிக் காட்டியதில்லை. கீழ் வெண்மணி, மேலவளவு, கயர்லாஞ்சி என எங்கும் நாம் கண் டது, சாதியின் கொடூர முகத்தை மட்டுமே. எதிர்ப்புகளும் போராட்டங்களும் மட்டும் எதற்கு மென்மையாய்?


Related Post

கயரலாஞ்சி காட்டும் பேருண்மைகள் - உலகமயம் - தலித்தியம் - தலித் விடுதலை

Friday, June 01, 2007

அந்த அமைச்சரும் மயங்கிச் சரிந்தார் - 8 நாட்களாக சாப்பிடவில்லை!

ஸ்யாவின் சோசலிச அரசு குறித்து பல்வேறு அவதூறுகளை இங்கு சொல்லி வந்தார்கள் அடிவருடிகளும், பாசிஸ்டுகளும். அவர்களுக்கு தக்க பதில் கொடுக்கப்பட்டது அப்பொழுது. ஆயினும் பலருக்கு இன்னும் கூட சோசலிசத்தின் சாதனை என்ன என்பதும் அதன் பிரமாண்டமும், தியாகமும் தெரியாத விசயமாகவே உள்ளது.

1917-ல் ஆரம்பித்து இரு உலகப் போர்கள், உள்நாட்டுப் போர், ஒரு சுற்றி வளைப்புப் போர், அதனை தொடர்ந்த பஞ்சம், மீண்டும் உள்நாட்டு சதி என்ற தொடர் பெரும் துயரங்களை சந்தித்தே அந்த நாடு ஒரு தொழில் வல்லரசாக வளர்ந்தது. இந்த போராட்டங்களின் ஊடாகத்தான் முதலாளித்துவ மீட்சிக்கான அடிப்படைகள் வேரூண்றீன என்பது தனிக்கதையாக இருக்கிறது. இந்த வரலாறு குறித்து குழந்தைகளுக்கும் புரியும் வகையில் மிக எளிமையாக எழுதப்பட்ட தொடர்-சிறு கட்டுரைகள் பின்வரும் வலைப்பூவில் காணக் கிடக்கிறது. லெனினினுடைய வாழ்க்கையின் ஊடாக இந்த கட்டுரைகள் நமக்கு சோவியத் ரஸ்யாவை புரிந்து கொள்ள உதவுகிறது. வாசிக்க சுவராசியமாக, விறு விறு என்று, எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரைகள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியால் வெளியிடப்பட்டு இந்த தளத்தில் மறு பிரசூரம் செய்யப்பட்டுள்ளது. படித்து கருத்துக்களை அங்கு இடுங்கள்.அந்த கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள்:


@@@@
அதுமட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரசியா செய்தது. ஜார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழுவிடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக மக்களால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளிலுள்ள மக்கள் பிரிந்து போக விரும்பவில்லை. லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார்.

தொழிற்சாலை உற்பத்தி, விவசாய உற்பத்தியும் பெருகியது. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக நடைபோட்டது. அப்போதுதான் அந்தக் கொடுமை நடந்தது. ஒரு இளம் குழந்தையைக் குத்திக் குதற 22 கழுகுகள் பாய்ந்தன. சோவியத் யூனியன் மீது 21 பணக்காரநாடுகள் படையெடுத்தன.
@@@@@@@@@@
போரினால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தலைநகரில் உணவு தானியம் மிக அரிதாகவே கிடைத்தது. உணவுப் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க லெனின் அமைச்சரவையைக் கூட்டினார். அந்த கூட்டம் நடந்து கொண்டு இருந்த போதே உணவுத்துறை அமைச்சர் மயங்கி விழுந்தார். காரணம் அவர் கடந்த எட்டு நாட்களாக ஒரு வாய் உணவு கூட அருந்தவில்லை. தன் கட்டுபாட்டில் இருந்த உணவை குழந்தைகள், நோயாளிகள், பெண்கள், முதியவர் ஆகியோருக்கு விநியோகித்தார். நாட்டு மக்கள் வயிறார சாப்பிடும் போதுதான் தானும் வயிறார சாப்பிடப் போவதாக உறுதி எடுத்துக் கொண்டார். சோசலிச சோவியத் யூனியனில் மந்திரிகள் அப்படித்தான் இருந்தனர்.

அந்த தோழர் மட்டும் அல்ல லெனினும் பலநாள் பட்டினி தான். ஆனாலும் அவர் சோர்ந்து போகவில்லை. சோசலிசத்தைப் பாதுகாக்க இரவு பகலாக உழைத்தார். அவர் இராணுவத்தை வழி நடத்த வேண்டியிருந்தது. உணவுப் பிரச்சினையை தீர்க்க வேண்டியிருந்தது. கல்வி, தொழில் வளர்ச்சிக்கான திட்டம் இடுதலை நிறைவேற்ற வேண்டியிருந்தது. பொதுவுடைமைச் சமுதாயத்தை நோக்கி நாட்டை வழி நடத்த வேண்டியிருந்தது. உள்ளுக்குள் இருந்து சதி செய்த சதிகாரங்களை களையெடக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் தோன்றின. அனைத்தையும் லெனினே முன்னின்று தீர்க்க வேண்டியிருந்தது.

தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் லெனினைத் தேடி வந்தனர். உழைக்கும் மக்களின் மன்றமான சோவியத்தை வைத்துக் கொண்டு எப்படி ஆட்சி நடத்துவது என்று அவரிடம் கேட்டு அறிந்தனர். அவர் ஒரு நாளைக்கு இருபத்திரண்டு மணி நேரம் உழைத்தார். இந்தக் கடினமான உழைப்பினாலும், உணவுப் பற்றாக்குறையாலும் லெனினுடைய உடல்நிலை மோசமடைந்தது.
@@@@@


நன்றி: சுனா பானா


அசுரன்


Related Articles:

சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!

தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!

மாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!

பயங்கரவாதம் தளத்தில் புதிய கட்டுரை

பயங்கரவாதம் தளத்தில் புதிய கட்டுரை

நீ எங்கள் பக்கம் இல்லையென்றால் பயங்கரவாதிகளின் பக்கம் இருப்பதாக அர்த்தம்

Related Posts with Thumbnails