TerrorisminFocus

Showing posts with label பங்கு சந்தை. Show all posts
Showing posts with label பங்கு சந்தை. Show all posts

Wednesday, January 14, 2009

முதலாளித்துவம் கொல்லுது - சத்யம் IT ஊழியரின் தற்கொலை

தற்கொலை செய்து கொண்ட சத்யம் ஊழியர்


த்யம் கம்பேனி 420 வேலை செய்து மாட்டிக் கொண்ட கதை இப்போது அனைவருக்கும் தெரிந்த விசயமாகிவிட்டது. இதே போல ஊழல் குற்றச்சாட்டில் விப்ரோ நிறுவனமும் அசிங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஒட்டிய கிளைக் கதையில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி கும்பலை சேர்ந்தவரின் பாலியல் வக்கிர கதைகள் மீண்டும் அரங்கிற்கு வந்து அசிங்கப்பட்டது.

இத்தனை அயோக்கியத்தனமும் செய்யும் இந்த பகாசுர சூதாட்ட முதலாளிகள், 420 பேர்வழிகள் எந்த தண்டனையும் அனுபவிப்பது இல்லை. ஆனால் எந்த தவறும் செய்யாதா அந்த நிறுவனங்களில் பணி புரிபவர்கள்தான் இதன் கஸ்டங்களை அனுபவிக்கிறார்கள். இந்திய தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கொழுத்த பணம் சேர்த்த தொழில்துறை முதலாளிகள் அந்த பணத்தை சூதாடி தோற்றனர். இன்று சூதாட்டத்தின் நஸ்டத்தை தொழிலாளர் தலையில் சுமத்தி வேலையை விட்டு நீக்குகிறார்கள், வயிற்றில் அடிக்கிறார்கள்.

அது போலவே இந்திய IT துறை சுதாடிகளும், 420 களும் செய்கிறார்கள். கடந்த சில மாதங்களில் பல ஆயிரக்கணக்கானவர்கள் வேலையை விட்டு தூக்கப்பட்டுள்ளனர் IT துறையில். IT துறை சூப்பரு சூப்பரு என்று சொல்லி எல்லாரையும் அதனையே படிக்க சொல்லி ஊக்கப்படுத்திய அரசுகளோ இன்று IT துறை கவிழ்ந்து கிடக்கும் நேரத்தில் முதலாளிகளுக்கு அறிவுரை வழங்கி காப்பாற்றுகிறது. இந்த அரசை நம்பி IT படித்தவர்களைப் பற்றியோ அல்லது விவசாயம் செத்து போனதால் நகரத்துக்கு வந்த தொழில்சாலை தொழிலாளி பற்றியோ இந்த அரசுக்கு கவலையில்லை. வாழ்வையிழந்த, எதிர்காலம் நிச்சயமற்ற சதாரண மக்களுக்கு வாய்க்கரிசி போட வருகிறது அரசு. முதலாளிகளுக்கோ சின்ன எறும்பு கடி என்றால் கூட பெயில் அவுட் எடுக்கிறது.

வெட்கமின்றி கொஞ்சம் கூட பயமின்றி சத்யம் கம்பேனியில் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சொல்லி அறிவுரை செய்துள்ளது இந்திய அரசு. இதன் மூலம் அதனது லாபம் 20% அதிகமாகும் என்று இந்த அறிவுரையை சொல்லியுள்ளது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு இன்னும் வரவில்லை என்று நாம் எண்ணியிருந்த வேளையில் மேலே பதியப்பட்டுள்ள சத்யம் ஊழியரின் தற்கொலை செய்தி வெளி வந்துள்ளது. அவரை வேலையை விட்டு தூக்கியதால் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவருகிறது.

எந்தளவுக்கு இந்த அரசு IT ஊழியர்களையும், இந்திய தொழிலாளர்களையும் கேவலமாக, முதுகெலும்பு அற்றவர்களாக நினைத்திருந்தால் 10,000 பேரை வேலையை விட்டு தூக்கிவிட அறிவுரை சொல்லியிருக்கும். மோசடி செய்தவனெல்லாம் சொகுசாக வலம் வருகிறான். வயிற்றுப் பிழைப்புக்கு கிடைத்த வேலையை செய்யும் சதாரணம் மக்களோ இப்படி உடனுக்குடன் தண்டனை அனுபவிக்கிறார்கள்.

ஒரு படத்தில் வடிவேலு சொல்லுவார், ஓரமா நின்னு பாத்தத்துக்கு தண்டனையாடா என்று அது போல முதலாளிகளின் மோசடிகளை நாம் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்ததற்கு நமக்கு தண்டனையா? இனிமேலும் இதை அனுமதிக்க முடியாது. இவர்கள் இனிமேலும் இந்த நாட்டை அதன் உற்பத்தியை நிர்வாகிக்கும் தகுதியை கொண்டிருக்க முடியாது. நாம்தான், மக்கள்தான் அனைத்தையும் உருவாக்குகிறோம் இதனை நாமே நிர்வாகிப்போம்.

தனிமனித லாப வெறியில் வித விதமாக சூதாடி, மோசடி செய்து, சதி திட்டம் தீட்டி நாட்டை நாசமாக்கும் பன்னாட்டு, தரகு பாகசுர முதலாளிகளை நாட்டை விட்டு விரட்டினால்தான் அனைவருக்கும் விடுதலை. வருத்தபப்ட்ட பாரம் சுமந்தது போதும் IT ஊழியர்களே. உங்களது சகோதரர்கள் உங்களுடன் தான் இருக்கிறார்கள். சிறிது கண் திறந்து பாருங்கள்.

முதலாளித்துவம் கொல்லும்! கம்யுனிசமே வெல்லும்!!

அசுரன்

ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!

விப்ரோ, சத்யம் போன்ற கம்பேனிகள் மோசடி 420 பேர்வழிகள் - உலக வங்கி அறிவிப்பு!!

வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் IT ஊழியர்களே! உங்கள் பாரங்களை (முன்னாள்)சத்யம்-ன் பிராபாத்திடம் இறக்கி வையுங்கள்!!

இங்கு கிழிந்த டவுசருக்கு மாற்றாக புது டவுசர் கிடைக்கும்!! - ரொம்ப நல்லவர்கள் கடை!!

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!

Sunday, December 21, 2008

இங்கு கிழிந்த டவுசருக்கு மாற்றாக புது டவுசர் கிடைக்கும்!! - ரொம்ப நல்லவர்கள் கடை!!

மீபத்துல அதாவது 2008 ஆரம்பத்துல ஏகாதிபத்திய பொருளாதாரம் டவுசர் கிட்டத்தட்ட கழன்று தொங்கிய நிலையில் இருக்கும் போது தனது டவுசரை காப்பாற்றும் கடைசி நிமிட போராட்டத்தின் ஒரு பகுதியாக கையில் கிடைத்த இடத்திலெல்லாம் தனது மூலதனத்தை போட்டு வைத்து சும்மா சுற்றி சுற்றி சூதாடியது(பங்கு சந்தை, முன்பேர வர்த்தகம்). குறிப்பாக முன்பேர வர்த்தகத்தில் சூதாடி அன்றாட பொருட்களின் விலையை சகட்டு மேனிக்கு உயர்த்தியது, பெட்ரோல் விலையை சகட்டு மேனிக்கு உயர்த்தியது, பிறகு தங்கம், பிறகு வெள்ளி இப்படி கடைசியில் மொத்த பன்னாட்டு-தரகு முதலாளிகளின் டவுசரும் கிழிந்து அம்மணக்கட்டையாக ஆகின்ற வரைக்கும் அவர்களின் சூதாட்டம் தொடர்ந்தது.

இந்த சூதாட்ட ஸ்ட்ரிப்டீஸ் டான்ஸ் காலம் முழுவதும் இது குறித்து நாமும் பலமுறை எழுதி எச்சரித்தே வந்தோம். குறிப்பாக பெட்ரோல் விலையேற்றத்தின் போது இது அப்பட்டமான சூதாட்டத்தின் விளைவு என்பதை ஆதாரப் பூர்வமாகவே பல தோழர்கள் எழுதினார்கள். ஆனால் இந்த காலகட்டம் முழுவதும் ஏகாதிபத்திய டவுசரின் பட்டன்களாகவும் திகழ்ந்து பெருமை சேர்த்த அல்லக்கை அடிவருடிகள் இந்த உண்மைகளை மூடி மறைக்க எல்லா மாய்மாலங்களையும் கையாண்டனர். குறிப்பாக பெட்ரோல் விலையேற்றம் குறித்த பிரச்சினையின் போது அதனை பீக் ஆயில் என்ற அரதப் பழசான செத்து சுண்ணாம்பான சித்தாந்தத்தை அதன் கல்லறையிலிருந்து தோண்டி வெளியே எடுத்து விளம்பரப்படுத்தினர்.

பீக் ஆயில் என்பது வேறு ஒன்றும் இல்லை எண்ணைய் இருப்புக்கும், அதன் தேவைக்கும், அது குறைந்த பட்ச எதிர்கால எண்ணைய் பயன்பாடு வளர்ச்சியில் ஏற்படுத்தும் பாதிப்பும் சேர்ந்து எண்ணையின் சந்தை விலையை உயர்த்துவதை குறிக்கும் ஒரு சொல். அதாவது இன்னும் சுலபமாக டிமாண்டு சப்ளை பிரச்சினை. அதாவது தீடீரென்று உலகம் முழுவதும் டிமாண்டு அதிகமாகி சப்ளை கம்மியாக இருந்ததால் பீக் ஆயில் பிரச்சினை முன்னுக்கு வந்து விட்டது என்று குன்சாக ஒரு கதையை ஆதாரமின்றி அளந்து விட்டார்கள் அடிவருடிகள். அப்பொழுது தோழர்கள் பலர் முன் வைத்த வாதங்களுக்கும் அவர்களிடம் பதில் இல்லை.

இதோ இன்று அவர்களின் எஜமான் ஏகாதிபத்தியங்கள் அவர்களுக்கு பதில் சொல்லியுள்ளன. முற்றிலும் டவுசர் கழண்டு, கிழிந்து நார் நாராக, மண்ணோடு மண்ணாக மக்கிய பிற்பாடு அடுத்த டவுசருக்கு அரசாங்கத்திடம் விண்ணப்பமிட்டு உட்கார்ந்திருக்கும் ஏகாதிபத்தியங்களும், அவர்களுக்கு புது டவுசர் எடுத்து கொடுத்து அடுத்த ரவுண்டு சூதாட்ட ஸ்டிரிப்டீஸ்க்கு அனுப்பி வைக்க உழைக்கும் மக்களிடம் பணம் பிடுங்க களம் இறங்கியுள்ள அரசுகளும் என்று விசயம் அப்பட்டமாக தலைகீழாக இருக்கும் இன்றைய நிலையில், உலகமகா பாகாசுர பன்னாட்டு அஸ்கா புஸ்கா கும்தலக்க கம்பேனிகள் எல்லாம் ஆப்டர் ஆல் சதாரண ஜனங்கள் கொடுக்கும் வரிப்பணத்தில் பிச்சை வாங்க எச்சில் ஒழுக நிற்க்கும் இந்த நேரத்தில், நாங்கெல்லாம் வெரி பிரில்லியண்டு, டேலண்டட், ப்ளடி மக்கள் என்னைக்கு என் வேகத்துக்கு வந்து நான் எப்போ முன்னேற அதனால் என்னை Freeயா விடு என்று பிலிம் காட்டி இன்று மூக்கில் ரத்தம் ஒழுக உடைப்பட்டுள்ள ஏகாதிபத்தியமும், எந்த ஜனங்கள் திறைமையற்ற அடி முட்டாள்களோ, அவர்கள் அதி திறைமையான, வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்கும், உலகின் ரட்சகனான பன்னாட்டு கம்பேனிகளுக்கு படியளக்கும் இன்றைய வெட்கம் கெட்ட சூழலில் சில விசயங்கள் நடந்து வருகின்றன.

ஏகாதிபத்திய ஆண்டவனே அம்மணமாக அலையும் போது அவனது அல்லக்கை முண்டங்கள் ஏகாதிபத்திய அடிவருடிகள் இன்னும் கேவலமான நிலையிலேயே இருப்பார்கள் என்பதை அவர்களது கல்லறை மவுனத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. ஆயினும் நமக்கு ஒரு சின்ன சந்தேகம் ஒருவேளை அவர்களுக்கு சுரனை இருக்குமோ என்று. அதுதான் இந்த பதிவை எழுதத் தூண்டியது. அல்லக்கைகளை கல்லறையிலிருந்து துயிலெழுப்பும் ஒரு உசாகால பாடலாக இந்த பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

மக்களிடம் பிச்சையெடுத்துதான் தனது லாபத்தை பராமரிக்க முடியும் என்ற நிலையில் இருந்த ஏகாதிபத்தியங்கள் தமது சூதாட்ட வெறியை குறைத்துக் கொண்டவுடன், விலைவாசி உயர்வு குறைந்தது, பெட்ரோல் விலை குறைந்தது. அதாவது அடிவருடிகள் சொன்னது போல உலகின் பயன்பாட்டு அளவு குறைந்ததால் பெட்ரோல் விலை குறையவில்லை. அல்லது உலகில் உற்பத்தி பொருட்களின், விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததால் விலைவாசி குறையவில்லை. மாறாக சூதாட்ட கும்பலின் டவுசர் கழண்டு கிழிந்ததாலேயே அதாவது ஏகாதிபத்திய மூலதனம் சூதாடுவதை நிறுத்தி கொண்டதாலேயே விலை குறைந்தது. இந்த உண்மையை வலுப்படுத்தும் முகமாக தற்போது ஒபேக் அமைப்பு தனது பெட்ரோல் உற்பத்தியை ஒரு நாளைக்கு 2 மில்லியன் பேரல் அளவுக்கு குறைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்தும் திட்டத்திலேயே இதனை செய்துள்ளது(தி ஹிந்து முதல் பக்கம், 18 டிசம்பர், 2008). அதாவது டிமாண்டு சப்ளையும் கிடையாது பீக் ஆயில் புண்ணாக்கும் கிடையாது என்பதைத்தான் இவை எல்லாம் நமக்கு சொல்லுகின்றன.

ஏகாதிபத்திய மூலதனம் சூதாடியதால் பெட்ரோல் விலை ஏறியது, சூதாட்டம் நின்றவுடன் பெட்ரோல் விலை அதளபாதாளத்திற்கு சென்றது. விலையை ஏற்ற போலியாக டிமாண்டு உருவாக்கும் முயற்சியாக பெட்ரோல் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. நமது பயன்பாடு அதிகரித்து அந்த தேவைக்கு ஏற்ப உற்பத்தியில்லை என்கிற காரணத்தினால் விலையேற்றம் நடக்கவில்லை. விசயம் இப்படியிருக்க விலைவாசி உயர்வுக்கு இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் நுகர்வு அபரி மிதமாக அதிகரித்து விட்டது என்று இந்த அல்லக்கைகள் குற்றம்சாட்டினர். பெட்ரோல் விலை உயர்வுக்கும் நாமதான் கிடைத்தோம் இந்த அடிவருடிகளுக்கு. அடேய் அல்லக்கைகளா இப்போ நடந்துள்ளதே இதுக்கு என்னடா பதில் சொல்லப் போறீங்க. உங்களோட உண்மையான முதலாளித்துவம் பதுங்கியிருக்கிற இடத்துல இருந்து தோண்டி எடுத்து காட்டுங்கடா.

மக்கள் பணத்தில் சூதாடிவிட்டு மக்களையே இகழ்ந்து நோக்கும் இந்த இழிந்த முதலாளித்துவ பொருளாதாரம் இனிமேலும் இந்த உலகில் நீடித்திருப்பதற்க்கு எந்த நியாயமும் இல்லை. மக்களிடம் பிச்சை வாங்கித்தான் வயிறு வளர்க்க வேண்டும் என்ற நிலையில் உள்ள இந்த திமிர்பிடித்த கிழட்டு ஏகாதிபத்தியத்தை கருணை கொலை செய்துவிடுவதே நல்லது. இந்த நிலைமை இனிமேலும் தொடராமல் இருக்க வேண்டுமானால் ஏகாதிபத்தியங்களின், அதன் உள்நாட்டு பிரதிநிதிகளான ஆளும் பிற்போக்கு அரசுகளின், தரகு பன்னாட்டு முதலாளிகளின் டவுசர்கள் நிரந்தரமாக கழட்டப்பட்டு அவை அம்மணமாக, அரை அம்மணமாக அலையும் உழைக்கும் மக்களிடம் கொடுக்கப்பட வேண்டும். ஏனேனில் நாமும் எத்தனை முறைதான் தரகு பன்னாட்டு முதலாளிகள் கிழிக்கின்ற டவுசர்களுக்கு மாற்றாக புது டவுசர் தயாரித்து அவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பது.

இனிமேல், நமக்கென்று டவுசர் தயாரிப்போம்!! அதை நாமே அனைவருக்கும் கொடுப்போம்!!

முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!!

அசுரன்

Related Article:

அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்தது!

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!

ஆரவாரத்தில் ஒபாமா ! அவலத்தில் அமெரிக்க மக்கள் !!

அமெரிக்க திவாலும் சில இந்தியத் தற்கொலைகளும் !

திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !

உலகை ஒடுக்கி உல்லாசமாக வாழ்ந்த அமெரிக்காவின் இன்றைய இழி நிலை! - அமெரிக்கா வல்லரசின் வஞ்சக வளர்ச்சியும் - வீழ்ச்சியின் தொடக்கமும். பாகம் 1

ஐரோப்பாவில் மீண்டும் கம்யூனிசம் : தீப்பொறி காட்டுத் தீயாக மாறிவருகின்றது

நிதி நெருக்கடியால் புரட்சி வெடிக்குமா?

சிக்காகோ தொழிற்சாலை தொழிலாளர் உடமையாகியது

'முடிந்துவிட்டது எல்லாம். எந்த பொன்னுலகமும் இங்கு வரவில்லை.

வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது

கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது

அமெரிக்க ஊடகங்கள் திவால்!!

Monday, February 18, 2008

பங்கு சந்தைக்கு ஆப்படித்தது யார் என்று கண்டுபிடித்துவிட்டார்கள் - பாசக துப்பியெறியும் படை!!!

ப்பா.. கட்சீல பங்கு சந்தை குப்புறக்கா கவுந்தடிச்சு கிடக்குறதுக்கு யாரு காரணம்னு கண்டுபிடிச்சுட்டானுங்களாம். யாராரோ காரணம்னு நியுஸ்கேப்பிலும், செய்தி விமர்சனத்திலும், அசுரனிலும், இன்னபிற பங்கு சந்தை பதிவுகளிலும் கரடி உட்டுனுறந்தாங்க ஆனா அதெல்லாம் சும்மா கில்மான்னு சமீபத்துல கண்டுபிடிச்சுட்டாங்க.

தென்காசில குண்டு வைச்சிட்டு முஸ்லீம் மேல பலிய போட்டது, கோவையில் அப்பாவிகள குண்டு வைச்சிருந்தானு உள்ள பிடிச்சு போட்டதுன்னு சின்ன லெவல்ல கண்ணாமூச்சி விளையாடிண்டு(டிண்டு.. டிண்டு) இருக்குது லோக்கல் பாஜக. நாங்க மட்டும் என்ன சும்மா நொல்லக்கையா நாங்களும் அடிச்சு ஆடுவோம்னு அகில இந்திய பாஜக பங்கு சந்தைய ஆராய்ச்சி செஞ்சி அது குப்புறடிக்கா கிடக்குறதுக்கு காரணம் பயங்கரவாதிகள்தான்னு குன்சா ஒரு புது கரடி ஒட்டுறுக்கு.

நாம் இந்த கரடிய ஒத்துக்கிறோம். ஆமாம் பங்கு சந்தை கவுந்தடிச்சி கிடக்குறதுக்கு காரணம் அமெரிக்க பயங்கரவாதிகள்தான். அப்படியே இந்த உண்மையை சொன்ன பாஜக தலைமை(யை) துப்பியெறியும் நிபுனர் ராசுநாத் சிங்குக்கு ஒரு விண்ணப்பமும் வைக்க விரும்புகிறோம். 'இந்து'யாவுல கடந்த 10 வருடத்தில் 1.5 லட்சம் 'இந்து'யா விவசாயிங்க தற்கொலை செஞ்சினுக்கிறாங்க. கடந்த வருடம் மட்டும் 17,000 பேர். இவிங்கள தற்கொலை செய்றதுக்கு தூண்டிய, மிரட்டிய எல்லை தாண்டிய பயஙகரவாதி யாருன்னு ராசுநாத் சங்கு மற்றும் சொங்கி பரிவார கும்பல் தலீவர்களான ஒத்துவானி, வாசுபேயி , போடி போன்றோர் ஆய்வு செய்து உண்மைய மக்களுக்கு சொன்னா சேமமா இருக்கும்.

துப்பியெறியும் கும்பல் தலைவன் - துப்பியெறியும் நிபுனர் ராசுநாத் சிங்கு

இதே தலைமை(யை) துப்பியெறியும் கும்பல் பங்கு சந்தையை கண்டமேனிக்கு நாறடிப்பவர்களுக்கு சிவியர் பணிஸ்மெண்டு கொடுக்கனும்னு சொல்லிறுக்கானுங்க. அதுப்படி பார்த்தா ரிலையன்ஸ் அம்பானியும் அவரோட குஜராத் கவுண்டர் பார்ட்டுங்களான (கவுண்ட சாதியில்லீங்கோ... இது இங்கீலிசு கவுண்டர்) சக பங்கு சந்தை புரோக்கனுங்களுக்கும் தான் சிவியர் பணிஸ்மெண்டு கொடுக்கனும் என்று தெரியவருகிறது.

எனக்கு தெரிஞ்சு இதுக்கு முன்ன ஒரு பயங்கரவாதி பங்கு சந்தையை உண்டு இல்லனு பன்னான். அவன் பேரு ஹர்ஸத் மெத்தா அவன் முஸ்லீம் இல்ல, சீக்கியன் இல்ல, கிருத்தவன் இல்ல, தலித்தும் இல்ல. அவன மாதிரி ஆளுங்களத்தான் துப்பியெறியும் கும்பல் சொல்லதான்னு தெரியல.

Terrorists manipulating stock markets: BJP
NEW DELHI: Viewing the recent fluctuations in the sensex with concern, BJP suspects that some anti-national elements, including terrorists, may be manipulating the stock markets and wants a probe to ascertain the antecedents of investors.

Party President Rajnath Singh said his concern stems from the fact that up to 40 per cent of investments in the stock markets were by the Foreign Institutional Investors (FIIs) through PN (Participatory Notes) system.

"What kind of money, whose money, what colour is it? There is no information," Singh said in an interview while referring to the recent crash in the stock market leading to losses worth crores of rupees to small investors.

"This has been happening for several years. There should be some system to identify whose money is being invested," he said, favouring a "tough law" to monitor these investments.

His views echo the apprehensions expressed by National Security Advisor M K Narayanan about a year ago that terrorists might be pumping money with a design to manipulate the stock markets.

Senior BJP leader L K Advani had also last week noted that there can be no place for "manipulation, malpractices and misuse" of the system by any of the players of the capital market and demanded that offenders must be punished.

செய்திரசம்

Related Articles:

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!" href="http://newscap.wordpress.com/2008/02/04/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-rss-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/" rel=bookmark>தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!
குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்
ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!" href="http://newscap.wordpress.com/2008/01/30/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-rss-%e0%ae%86/" rel=bookmark>ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!
“கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்:நவீன மனுநீதி!”
“கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை”
இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …
பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

Monday, January 21, 2008

நடுத்தர வர்க்க யுப்பிகளுக்கு ஆப்பு அடித்த ஸ்டாக் மார்க்கெட்!!!

நடுத்தர வர்க்க யுப்பிகளுக்கு ஆப்பு அடித்த ஸ்டாக் மார்க்கெட் - 6 நாளில் $300 bn!!

பங்கு சந்தை கடந்த ஆண்டு முழுவதும் போலியாக உப்பி பெருக்க வைக்கப்பட்டது. உண்மையான பொருள் உற்பத்திக்கான மூலதனமாக இல்லாமல் வெறும் சூதாட்டத்திற்க்கான மூலதனமாக அன்னிய மூலதனம் இந்திய சந்தைக்குள் வந்து விளையாடியது. இந்த விசயத்தை குறிப்பாக அமெரிக்க வீட்டு கடன் பிரச்சினையைத் தொடர்ந்த உலக நிதி மூலதன பிரச்சினைகளை கணக்கில் கொண்டு பார்க்க வேண்டியுள்ளது.

ஆனால் இந்த ஊதிப் பெருக்க வைக்கப் பட்ட பப்பிள் பொருளாதாரம் இதோ கடந்த சில வாரங்களாக உடைந்து கொண்டே வருகிறது. சமீபத்திய பொருளாதார உப்பலைத் தொடர்ந்து அதில் தமது சேமிப்புகளை முதலீடு செய்த நடுத்தர வர்க்க யுப்பிகள் இப்பொழுது அதன் நஸ்டத்தின் பலனை மட்டும் அனுபவிக்க காத்திருக்கிறார்கள். மேலும் விரிவான பங்கு சந்தை சரிவு பற்றிய தகவல்:

Investors lose over $300 bn in six days

*****************

$300 bn in Six days - Stock Market bubble bursts in to the purses of Middile Class Yuppies!!

Last year saw waves of huge influx of foreign funds, which accounted not for material movement, in to Indian Stock market. Because of which Indian comprador capitalist found a windfall at their hands. This highly speculative bubble economy, a true synonym of gambling, really caused more trouble to the common people. Right from the job losses and national economy break down due to currency appreciation to the price rise aka inflation rate.

Though the entire scenario should be perceived as part of the world fund crisis, a byproduct of Housing loan crisis in USA, the middle class yuppies encouraged by the quick money they earned from the bull driven economy invested their money in to the stock market to stack more quick bugs in to their account. But alas… the drama is over. Now the Capital crisis has bitten the middle class yuppie’s purses.

It is worth considering the fact that last week saw a huge influx of local capital in to stock market to maintain the stock market floating high.

For more on the fall of Indian Stock market:
Investors lose over $300 bn in six days


நன்றி: Not Just News

Related Article

அமெரிக்க குமிழிப் பொருளாதாரம், மிதக்கும் சூக்குமம்

Related Posts with Thumbnails