TerrorisminFocus

Monday, July 31, 2006

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன் -இந்துத்துவத்துக்கு விளக்குப் பிடித்த திருமகன்

**********

இந்த கட்டுரையின் பின்னூட்டங்களை(Comments) மிக முக்கியமாக படிக்கவும்.

*********

தேவரின் காலடி மண்ணை எடுத்துக் கும்பிடும் கோடானு கோடி பாசாங்குவாதிகளின் காதில், தேவர் பற்றிய அவ்வளவாய் சொல்லப்படாத விசயங்களைப் போட்டு வைப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

முதலில் காமராஜர் குறித்து, முத்துராமலிங்கத் தேவர் உதிர்த்த பொன்முத்துக்களைப் பார்ப்போமா?

1957 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், காஞ்சிபுரத்தில் பேசிய பேச்சு:- "இற்றைக்கு முதல் மந்திரி என்று சொல்கிற நபர் எல்லாம், அற்றைக்கு நாங்கள் ஏவின வேலையை கேட்டுக் கொண்டிருந்தவர்", என்று ஆணவம் நிரம்பக் கூறினார்.

இதே விசயத்தை, சங்கரன்கோவிலில் இருந்து தேனி வரை எல்லா ஊர்க் கூட்டங்களிலும், முதல்வரை, மரியாதை சிறிதும் இன்றி 'நபர்' என்றோ, காமராஜன் என்றோ, காமராஜ் நாடான் என்றோ தாழ்த்தியே பேசி வந்தார். எல்லா மேடைகளிலும் ஒரு கதை சொல்வார், காமராஜர் குறித்து. அது என்ன கதை?பசும்பொன் உ.முத்துராமலிங்கமே கூறட்டும் கேட்போம்.

"இதே காமராஜ் இற்றைக்கு முதல் மந்திரியாக இருக்கலாம். ஆனால் இதே நபர் பழைய காலத்தில் ஒரு ஓட்டராக இருக்கக்கூட யோக்யதை இல்லாமல் இருந்த தொண்டர். அற்றைக்கு சொத்திருந்தவர்களுக்குத்தான் ஓட்டுரிமை. இவருக்கு சொத்து கிடையாது. ஒரே ஒரு வீடு இருந்தது. அதுவும் அவர் தாயார் பெயரில் இருந்தது. அந்த வீட்டை இவர் பேருக்கு மாற்றித் தரும்படி நான் கேட்டபோது, இவருக்கு ஒரு தங்கை உண்டு. இவருடைய தாயார், "வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. அதை நல்ல இடத்தில் கை பிடித்துக் கொடுக்க வேண்டும். ஆகையால் நான் இந்த வீட்டைப் பையன் பேருக்கு மாற்ற முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.
(இதே கூற்றை "அவன் வேலை வெட்டி இல்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்து விட்டு பிறகு என்ன செய்கிறது?" என்று காமராஜரின் அன்னை சொன்னதாக சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

அதன் பிறகு நான் என்ன செய்ய வேண்டியிருந்தது என்றால், ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதற்குக் கட்ட வேண்டிய முனிசிபாலிடி வரியைச் செலுத்தி, தகர வில்லையை வாங்கி, அதனுடைய கழுத்தில் கட்டி,அந்த ரசீதை காமராஜ் கையில் கொடுத்து,ஓட்டர் ஆக்கியவன் அடியேன். இந்த நிலைமையிலிருந்த சாதாரணத் தொண்டர்களை எல்லாம் மனிதத் தன்மைக்குக் (!!!) கொண்டு வந்தவன் அடியேன்."(21/2/57 காஞ்சிபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்)

சாதாரணமான தொண்டனாக இருந்த காமராஜை, மனிதத்தன்மை உள்ள மனிதராக இவர் ஆக்கினாராம். என்னதோர் ஆணவப் பேச்சு பாருங்கள்.

அதே கூட்டத்தில் காமராஜரை, காமராஜன் என்றுதான் சொல்லியிருக்கிறார். அப்போதைய காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் காமராஜர். அவர் தலைமையை, முத்துராமலிங்கத் தேவர் மதிப்பிடும் தரம் எப்படி இருந்தது பாருங்கள்.

"இன்றைக்கு மாகாணக் கமிட்டியில் எவனெவனோ வந்து விட்டான்.இற்றைக்கு காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு 'நாமினேஷன்' போடுகிறவன் கேட்கிறான். "திலகர், காந்தி மகன் தானே" என்று.இப்படிப்பட்ட அறிவாளிகள் வந்து விட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சபையில் காமராஜின் புண்ணியத்தால்."

கல்வியைப் பரவலாக்கிப் பணியாற்றிய காமராஜரினை, ராஜாஜியுடன், தேவர் ஒப்பிட்டதைப் பார்ப்போம். "அவர் மிதவாதியாக (ராஜாஜி) இருந்தாலும், காமராஜ் போல தற்குறி அல்ல. பழங்காலத்தில் எம்.ஏ. எல்.டி., பி.ஏ. எல்.டி. பட்டம் பெற்றவர்கள் ஆண்டார்கள். இற்றைக்கி எம்.ஏ.,பி.ஏ. இல்லாது வெறும் எல்.டி.க்கள், அதாவது 'லெப்ட் தம்ப்' இடது கைப்பெருவிரல் பிரட்டுகிறவர்கள் ஸ்தானம் பெற்றிருக்கிற காலம்."

காமராஜ், வறுமையின் காரணமாய்ப் பள்ளிப்படிப்பைத் தாண்டவில்லை, என்பதனை நாடறியும். இதனால் என்ன குறைந்தது, அவரின் திறமைக்கு? தேவர், இதனைக் கூட கேவலமாகப் பேசித் தன் பெருந்தன்மையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார். (இதனைச் சொன்ன தேவரோ, எஸ்.எஸ்.எல்.சி.யே தாண்டவில்லை என்பது இன்னும் சிறப்பு).

குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்து தமிழர்கள் கல்வியில் மண்ணள்ளிப்போட சூதறிஞர் ராஜாஜி முனைந்தபோது, காங்கிரசுக்குள்ளேயே எதிர்ப்பு வலுத்து, குல்லுகப் பட்டர், பதவி விலகி, காமராஜர் முதல்வரானார். அச்சூழலை விவரிக்க வந்த தேவர் சொல்கிறார், காஞ்சி தேர்தல் பிரச்சாரத்தில் - "பிளாக் மார்க்கெட்காரர்களுக்கு புரோக்கராக நின்ற காமராஜர் பிரதம மந்திரியாகிறார்." (அப்போது, மாகாண முதல்வர்களை, பிரீமியர்-பிரதமர் என்று சொல்வது வழக்கம்)

காமராஜரை ஆதரித்த காங்கிரஸ் தலைவர்களிடம் தேவர் சொன்ன கருத்து "உங்களுக்கு அவர் பிரதமராகத் தோன்றலாம். எனக்கு அவருடைய பழைய மார்க்கெட் வேல்யூ தெரியும். ஒழுக்கத்தின் பெயரால், அறிவால்,தியாகத்தால் பதவிக்கு வருகிறவர்களைத்தான் நான் மதிக்க முடியும். சந்தர்ப்பத்தின் பெயரால் முன்னுக்கு வருகிறவர்களை நீங்கள் மதிப்பதாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?".

சற்றே யோசித்துப் பார்ப்பின் தேவர் குறிப்பிட்ட மார்க்கெட் வேல்யூ என்பது, ஜாதிப் படிநிலைதான் என்பது தெள்ளெனப் புரியும்.

முதல்வராகும் முன் ஆசீர்வாதம் வாங்க வந்த காமராஜரிடம் இவர் சொல்கிறார் "நீ பிரதமர் ஆவதன் மூலம் காங்கிரஸ் கெடும். நீ மாகாணக் கமிட்டித் தலைவனாக (தலைவராக அல்ல-அழுத்தம் எம்முடையது) இருந்து கொண்டு யாரேனும் நல்லவரைப் பிரதமராக்கி, உன்னுடைய அதிகாரத்தைச் செலுத்து. உனக்கு வர வேண்டிய லாபம் வரும்".

அதே காஞ்சிக் கூட்டத்திலே, தேவர், காமராஜர் மீது ஓர் அபாண்டப் பழியைப் போட்டார். அது என்ன பழி? "பழைய காலத்தில் காங்கிரஸ் காரன் போட்டது கள்ள ஓட்டு. இப்போது காமராஜ், கள்ள நோட்டு அச்சடிக்கிற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார்", " ஏற்கெனவே விருதுநகர் நாடார் ஒருவர் நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டை அள்ளிக் கொண்டு,திருவெற்றியூருக்கு வந்திருந்தபோது கைது செய்யப்பட்டார். இப்பேர்ப்பட்ட யோக்யதை அற்ற காமராஜ் கும்பலைத் தேர்ந்தெடுப்பது உங்களுக்கு நல்லதல்ல".

காமராஜர், சாகும்போது அவர் வீட்டில் நூற்றிச் சொச்சம் ரூபாய் மட்டுமே இருந்தது என்பதை நாம் அறிவோம். நேர்மையாய், எளிமையாய் வாழ்ந்த அத்தலைவரினைத் தரம் தாழ்த்தி, இவ்வாறு பழி போட்டு, காஞ்சியில் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் கள்ளநோட்டுப் பேர்வழி என்று புழுதிவாரித் தூற்றியவர், தேவர்.

கம்பம் தேர்தல் கூட்டத்திலே, 24 பிப்ரவரி, 1957ல் மீண்டும் அதே பழியைப் பின்வருமாறு சொல்கிறார்."இன்று கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் ஆட்சி இந்த நாட்டிலே நடைபெறுகிறது" "என் மீது கேஸ் போட்டால் இந்தக் கள்ள நோட்டு அடிக்கும் நாடாரின் அயோக்கியத்தனத்தைச் சாட்சி மூலம் நிரூபிக்க ரிக்கார்டு இருக்கிறது".

இக்கூட்டத்திலே, காமராஜரின் படிப்பறிவை மறுபடியும் கொச்சைப்படுத்தி "எம்.ஏ. படித்தவர்கள் ஆண்ட நாட்டிலே எல்.டி. பதவிக்கு வந்து விட்டார்கள். இந்த அளவுக்கு மானம் கெட்டு வந்திருக்கிறது. இப்படி மானம் கெட்டு இருக்கிற காரணத்தினாலேயே இந்த நாட்டிலே காரியங்கள் மிகத் தாழ்ந்த நிலைமைக்கு வந்திருக்கிறது."
(இதே காலகட்டத்தில் மதுரை தமுக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் தேவருக்கு, குறும்பாய் ஒருவர் துண்டுச்சீட்டில் "நாடார், நாட்டை ஆள்வார்" என்று எழுதிக் கொடுத்து இருக்கிறார். தேவரய்யா டென்ஷனாகி விட்டார் "நாடார், பனையை ஆள்வார், தென்னையை ஆள்வார், நாட்டை ஆளமுடியாது" என்று பச்சையாய் சாதிவெறி கக்கினாராம். தூத்துக்குடி அருகில் உள்ள குருக்குச்சாலையில் நடந்த தேர்தல் கூட்டத்தில், உரை முழுவதும் காமராஜரை 'சாணாப் பயலே' என்று திட்டியே பேசியிருக்கிறார்.)

இதே கம்பம் கூட்டத்திலே, காமராஜரைக் கொச்சைப்படுத்தி ஒரு சம்பவத்தை, தேவர் சொல்லி இருக்கிறார்.

"வெளிநாட்டிலிருந்து சென்னைக்கு வந்தவர்களுக்கு, முனிசிபல் கவுன்சிலர்கள் வரவேற்புக் கொடுத்தார்கள். அந்த வரவேற்பில், காமராஜூம் கலந்து கொண்டார். யார் இந்த நாட்டு முதல் மந்திரி என்பதைத் தெரிந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்காரர்கள் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். அறிவாலோ, பேசும் திறத்தாலோ, அல்லது நடையுடை பாவனையாலோ பார்த்துத் தெரிந்து கொள்ள முடியவில்லை. உடனே ஒரு வெள்ளைக்காரன், "சென்னையின் முதல் மந்திரி யார்?" என்று கேட்டார். இந்த நாடார் சும்மா இருந்தால் செக்கரட்டரி சொல்லியிருப்பான் அல்லது தமிழிலே பேசியிருந்தால் தேச அவமானம் என்று நினைத்திருப்பான். தன் அறிவைக் காட்டத் தெரியாத ஒருவர், இந்த நாட்டு முதல் மந்திரியாக இருக்கிற இந்த அலங்கோலத்தினால் நாடு அவலட்சணமாகக் கேவல நிலை அடைந்தது. தமிழ்நாடு தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அன்று அவமானப்பட்டது."
(இதே சம்பவத்தை இன்னும் விரிவாக்கி "அந்தக் கேள்விக்கு தமிழிலேயே பதிலளித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல், அவருக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அறியாமையை எடுத்துக் காட்டுமளவில் "I is the Chief" என்று சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஆள் முதன்மந்திரியாக இருக்கிறான் (இருக்கிறார் அல்ல- அழுத்தம் எமது) என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்" என சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 25 பிப்ரவரி 1957ல் தேவர் கூறியுள்ளார்)

ஈயத்தைப் பார்த்து இளித்த பித்தளையின் கதை இது. காமராசர், சுய சாதி வெறியுடன் ஆட்சி செய்கிறார் என்று, இந்த சாதி ஒழிப்புப் போராளி, அதே சங்கரன் கோவில் கூட்டத்திலே சொல்கிறார் "சர்க்கார் உத்தியோகங்களை அவருடைய ஆட்களுக்கே கொடுத்து வருகிறார். பிளாக் மார்க்கெட்டு வியாபாரத்தையும் அவருடைய ஆட்களே செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார் இந்த காமராஜர். தமிழ்நாட்டின் நிர்வாகத் தரம் குறைந்து போய் விட்டது."

மார்ச் 1, 1957 இல் சிறீ வில்லிபுத்தூர் தேர்தல் கூட்டத்திலே, மக்களுக்கு தேவரய்யா நாகரீகமாக ஒரு அழைப்பு விடுக்கிறார் - "அரசியல் சரித்திரத்திலே இப்படி மானம் கெட்டவன் பிரதம மந்திரியாக இருந்தது கிடையாது. விருது நகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிற. பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினே. இனிமேலும் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் இந்த நாடார் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது."

இம்மானுவேல் சேகரன் கொலைச் சதி வழக்கில் இருந்தில் தப்பிய தேவர், 1962 இல் மதுரையில் நடந்த தேர்தல் கூட்டத்தில் கூட, முதல்வர் காமராஜருக்கு ஆதியிலே சோறு போட்டது நானாக்கும் என்கிற ரேஞ்சுக்கு அல்பத்தனத்தைக் காட்டி இருக்கிறார் "நம்மால் உணவு கொடுத்து, உடை கொடுத்து, உறைவிடங் கொடுத்து வளர்க்கப்பட்ட புண்ணியவான்களாலேயே கொலைக் குற்றம் சாட்டப்பட்டேன்" என்றார்.

காமராஜரின் மதிய உணவுத் திட்டம், பல தரப்பு ஏழைக் குழந்தைகளையும் கல்விச்சாலை நோக்கி வர ஊக்கப்படுத்தியது என்பதை முந்தைய இரண்டு, மூன்று தலைமுறை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 1962லே அந்த மதிய உணவுத் திட்டத்தை தேவர் மதிப்பிடும் லட்சணம் இதுதான் "மதிய உணவுத் திட்டம் என்பதன் பெயரால், பிள்ளைகளின் படிப்பு பாழாக்கப்படுகிறது. உபாத்தியாயர்கள் மதிய உணவுத் திட்டத்திற்கு அரிசிப் பிச்சை எடுக்கப் போக நேர்வதால், பிள்ளைகள் படிப்பு நாசமாகி தேசத்தின் எதிர்காலம் அறிவுச் சூன்யத்துக்குத் தயாராகிறது."

******************
இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்:

1957 முதுகுளத்தூர் கலவரமும், அதனைத் தொடர்ந்து அரசின் முயற்சியினால் கூட்டப்பட்ட சமாதானக் கூட்டமும், அதற்கடுத்து மிகப்பெரிய சாதி வெறிப் படுகொலைகளை ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டாக்கியது.

இந்தக் கூட்டத்தில், 'இம்மானுவேல் சேகரனும், தானும் சமமாக நாற்காலியில் உட்காருவதா?' எனும் உணர்வில், தேவர் உட்காராமல் நின்று கொண்டிருந்தார். (சட்ட சபையில் பி எஸ் சந்தானம் பேசியதில் இருந்து) சமாதானக் கூட்டத்தில் தலித்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனும், தேவர்களின் தலைவரான முத்துராமலிங்கமும் ஓர் சமாதான அறிக்கையில் கையெழுத்துப் போட்டு அதை மக்களுக்கு 'அமைதி திரும்பிட'வேண்டுகோளாக வைக்கலாம் என கலெக்டர் முன்கை எடுத்தார். இம்மானுவேல் சேகரன் ஒத்துக் கொண்டு கைஎழுத்திட முன் வந்தபோது, இம்மானுவேலை, தமக்கு இணையான தலைவராகவோ, தலித்களின் தலைவராகவோ தம்மால் ஏற்க முடியாது என்று சொன்னார் தேவர்.

"என் அளவு நீ பெரிய ஆளாக, பெரிய தலைவனாக ஆகி விட்டாயா? உன்னோடு சேர்ந்து நானும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட வேண்டுமா?" எனச் சொல்லி, தேவர் கையெழுத்திட மறுத்துவிட்டு, வெளியே வந்து தாறுமாறாக தம் தொண்டர்களிடம் பேசிடவே, அடுத்தபடியாக இம்மானுவேல் சேகரன் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்க போலீசார், கீழத்தூவல் ஊருக்குள் நுழைந்தபோது, போலீசாருக்கும், அங்கிருந்த மறவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு, போலீசின் துப்பாக்கிப்பிரயோகத்தில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உடனே எதிர்க்கட்சிகள் காமராஜ் ஆட்சி மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தன.

அத்தீர்மான விவாதத்தின்போது, அமைச்சர் பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கையில் தேவர் அவர்கள் இம்மானுவேலைக் குறித்து என்ன பேசினார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அது - "(சமாதான) மகாநாட்டிலிருந்து வெளியே வரும்போது சிறீ முத்துராமலிங்கத்தேவர், இம்மானுவேல் போன்ற பள்ளன் கூட எதிர்த்துப் பேசும்படியாக விட்டு விட்டீர்களே! என்று தம் ஆதரவாளர்களைக் கடிந்து கொண்டார்". கடிந்து பேசிய அக்கோபமே, இம்மானுவேலை வெட்டிப் போட்டது.

அதனை அடுத்து மூண்ட கலவரத்தின்போது கொண்டலாதி எனும் ஊரில் தலித் மக்கள் குடிநீர் கோரும் கிணற்றில் மண்ணெண்ணெய்யும், மனித மலமும் கொட்டப்பட்டன. தேவமார்கள் தன் சாதி மக்களை அடையாளம் கண்டு கொள்ள மஞ்சள் வேட்டி அணிந்து கொண்டு வேல் கம்புடன் போருக்கு செல்வது போன்று கும்பலாய் சென்று தலித்களின் வீடுகளையும், வைக்கோல் போர்களையும் கொழுத்தினர். 8 ஊர்களில் பெண்களைக் கற்பழித்தனர். பல ஊர்களில் தலித் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக விடப்பட்டனர்.

இது சமயம், தேவர், மதுரை கோரிப்பாளையத்தில் தற்போது அவரின் சிலை அமைந்திருக்கும் இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை விளக்கிய அரசுக் குறிப்பு (நாள் 28/09/1957) கூறுவதாவது:- "ராமநாதபுரம் கலெக்டர் முதுகுளத்தூரில் 10.09.1957 அன்று கூட்டிய அமைதி மாநாட்டில் முத்துராமலிங்கத்தேவரும் கலந்து கொண்டார். ஹரிஜனங்கள் சார்பில் அந்த மாநாட்டில் பேசிய இம்மானுவேல் என்பவரது தலைமை குறித்து அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கேள்வி எழுப்பினார். அந்த மாநாட்டில் தமக்கு இணையான அளவில் ஓர் ஹரிஜன் முன்வரிசைக்கு வந்து பேசியது தம்மை அவமதித்ததாகும் என்று அவர் (முத்துராமலிங்கத் தேவர்) கருதினார். இம்மானுவேல் அந்த அளவுக்கு முக்கியத்துவம் அடையுமாறு நீங்கள் ஏன் அனுமதித்தீர்கள்? என்றும், தமக்கு நேர்ந்த இந்த பகிரங்க அவமானம் குறித்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் முத்துராமலிங்கத் தேவர் மாநாட்டிலிருந்து வெளியே வந்த பிறகு, தமது சீடர்களைக் கேட்டார். அதற்கு அடுத்த தினமே, முத்துராமலிங்கத் தேவரின் சீடர்கள் அடங்கிய ஒரு கும்பல் இம்மானுவேலை மறைந்திருந்து தாக்கிக் கொலை செய்தது. "முத்துராமலிங்கத் தேவருக்குச் சவால் விடுவதற்கு உனக்கு என்ன தைரியம்? என்று கொலையாளிகளில் ஒருவர் இம்மானுவேலை வெட்டியபோது கேட்டார்."
(தலித்களுக்குத் தாம்தான் தலைவர் என்றும், தானே பல தலித்களுக்கு உதவி செய்திருப்பதாகவும், இம்மானுவேலை அவர்களின் தலைவராகத் தன்னால் ஏற்க இயலாதென்றும் தேவர், அக்கூட்டத்தில் கூறி இருந்தார். சாதி இந்து மனதில் ஆண்டாண்டு காலமாய் வேரோடிய சாதி வெறிதான் தலித்தின் தலைமைத்துவத்தை ஏற்க மறுக்கிறது. இதே போன்று தான், வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கரை, தீண்டப்படாதவர்களின் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாதென்று காந்தி வாதிட்டார். சென்ற சட்டசபைத் தேர்தலில், திமுகவின் சாதி இந்துக்கள், கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரைத் தோற்கடித்தனர்.)

இம்மானுவேல் கொலை வழக்கில் பெருமாள் பீட்டர் என்பவரது சாட்சியம் மிகவும் முக்கியமானது. அப்போது 88 வயதை எட்டியிருந்த பேரையூரைச் சேர்ந்த அவரின் சரித்திரம் சில ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசில் வெளிவந்துள்ளது.

நீதிமன்ற விசாரணையில் பீட்டர், தேவருக்கு எதிராக சாட்சி சொன்னார் "ஒரு ஹரிஜன இளைஞர் நம்மை எதிர்த்துப் பேச விட்டு விட்டீர்களே! நீங்கள் மறவர்களா? என்று தமது ஆதரவாளர்களிடம் முத்துராமலிங்கத் தேவர் கூறியதை நான் கேட்டேன்" என்றார் அவர்.

கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டில் 5 மறவர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, காமராஜர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது. அத்தீர்மானத்தின் மீதான விவாதம், தேவரின் பல பரிமாணங்களை சட்டசபைக் குறிப்பேடுகளில் பதிய வைத்துள்ளது. இனி, சட்டமன்றக் குறிப்பேடுகள் பேசட்டும்.
உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் 26 அக்டோ பர் 1957 அன்று தாக்கல் செய்த அறிக்கையில் இருந்து:
"..The Government received petitions alleging several cases of lawlessness as a result of the inflamatory speeches by Sri.Muthuramalinga Thevar, inciting his followers to harass Nadars and Harijans...."

கலவரத்தை நிறுத்திட கூட்டப்பட்ட சமாதான மாநாடு பற்றி அந்த அறிக்கை பின்வருமாறு சொன்னது:
"Recognized leaders of the different communities were invited to attend this Conference. It is on record, Sir, that Sri Muthuramalinga Thevar who attended the Conference questioned the leadership of one Sri Emmanuel, Leader of the Local Depressed Classes League, who was representing the Harijans, Sri Thevar is reported to have asked Emmanuel whether he could pose as a Leader of the same stature as Sri Thevar, and whether his assurances on behalf of the Harijans were worth having."

"It is also learnt, Sir, that while coming out of the Conference, Sri Muthuramalinga Thevar chided his followers for allowing even Pallans like Emmanuel to talk back to him. The very next day, Sri Emmanuel was brutally murdered at Paramakudi."

முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஜாதிக் கலகத்தை விதைக்க வெறியூட்டும் பேச்சை எங்கெல்லாம் தேவர் பேசினார் என்பதை அவ்வறிக்கை பட்டியலிட்டது - இவ்வாறு: "On 16th September 1957 addressing a public meeting at Vadakkampatti, Sri Thevar refered to the communal strife raging in Mudukulathur and Paramakudi areas. Obviously the reference was to the incidents which had occured at Arunkulam, Keelathooval, Veerambal, Ilanjambur, Irulandipatti and Sandakottai between 10th and 16th September 1957".

கீழத்தூவலில் இம்மானுவேலைக் கொன்ற கொலையாளிகளைப் பிடிக்கப்போன போலீசாருடன் மோதிய மறவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைப் பற்றி விசாரிக்க அனுப்பப்பட்ட எஸ்.வெங்கடேஸ்வரன் I.C.S. முன்பு ஆஜராக வந்த மக்களை மிரட்டும் வகையில் தேவர், தனது காரினை விசாரணை நடந்த இடத்துக்கெதிரில் நிறுத்தி வைத்து அந்தக் காரிலே அவர் இருந்த செயலையும் பக்தவச்சலத்தின் அறிக்கை அம்மணமாக்கியது.

"In connection with the enquiry by Sri. S. Venkateswaran I.C.S. into the Police firing at keelathooval village through Sri Thevar had orally announced that he and his party would not take part in the enquiry, he seated himself in a car at the entrance of the building where the enquiry was held. This had the effect of preventing witness coming forward to tender evidence which might clash with Sri. Thevar's contentions."

திமுக உறுப்பினர் டாக்டர் சத்தியவாணிமுத்து அம்மையாரின் பேச்சில், 1937 தேர்தலில், ஜஸ்டிஸ் கட்சி வேட்பாளரான ராமநாதபுரம் அரசரை எதிர்த்து நின்றபோது தனக்கு வாக்களிக்காத ஹரிஜனங்களுக்கு அவர் (தேவர்) செய்த பயங்கரக் கொடுமைகள் குறித்தும், அதற்காக அவர் மீது மதுரை அடிஷனல் மேஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்த விசாரணையும் வெளிப்பட்டது. டெபுடி தாசில்தார் சிதம்பரம் முதலியாரின் கால் வெட்டப்பட்டதும், சப்-மாஜிஸ்திரேட் ஒருவர் கொல்லப்பட்டதும் தேவரின் தூண்டுதலால் நடந்தது என்பதும் சட்டமன்ற விவாதத்தின்போது வெளியானது.

திமுக எம் எல் ஏ அண்ணாதுரை பேசும்போது 'முத்துராமலிங்கத் தேவர் 1933ஆம் வருஷத்திலிருந்தே பாண்டிய மண்டலத்தில் சாதித் துவேஷம் வளர்க்கக் கூடிய வகையில் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டார்.

முதுகுளத்தூர் கலவரத்தில் ஆதிக்க சாதி வெறி தேவர்களிடம், வெட்டுப்பட்டு சாகும்போது கூட தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் அளவிற்கு சாதி வெறி உச்சத்திற்குப் போய் இருந்தது. கலவரத்தில் வெட்டுப்பட்டு சாகப்போகும் சமயத்தில் முத்துராமன் சேர்வை என்ற மறவரிடம் மரண வாக்குமூலம் பெறப்பட்டது. ஒரு மனிதன் சாகும்போது சொல்லும் வார்த்தைகள் பொதுவாக உண்மையாக இருக்கும் என்பது உலகத்தாரிடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. முத்துராமன் சேர்வையின் மரண வாக்குமூலத்தை அன்றைய உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் வெளியிட்டார் " நான் ஒரு அரிஜன். அரிஜன வீட்டை நானே கொளுத்தினேன்". அந்த நபர் செத்த பிறகு, பிணத்தை வாங்க வந்தவர்களோ மறவர்கள். இவ்வாறெல்லாம் சாகும்போது கூட ஒருவன், தலித்களை சிக்கலில் மாட்டி விட்டு சாகும் படி, சாதி வெறியேற்றிவிடும் அளவிற்கு அவர்களின் அன்றைய தலைவர் இருந்தார்.

முதுகுளத்தூர் கலவரம் ஆரம்பமாகும் முன்,முத்துராமலிங்கத் தேவர், தன் சாதி மக்களிடம், "தேவர்கள் தேவர் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டுமென்றும்","நாடார் கடைகளைப் புறக்கணிக்க வேண்டுமென்றும்" கூறி இருந்தார். இப் பேச்சு, ராம.கோபாலன் வெறியேற்றிவிடும் "இந்துக்கள், இந்துக் கடைகளில் மட்டுமே சரக்கு வாங்க வேண்டும்" எனும் பேச்சுடன் மிகச் சரியாகப் பொருந்துகிறது.

**********************
கேப்பை, நெய், கேனைப்பயல்கள் மற்றும் தேவர்:

இரண்டாம் உலகப் போரில் மர்மமான முறையில் மாண்டுபோன நேதாஜியை, 'அவர் சாகவில்லை, மறைவாய் வாழ்கிறார்' என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வதந்தி ஒன்று மக்களிடையே பரவி இருந்தது. அதனை ஊதி ஊதிப் பெருக்கி விட்டவர்களில் தேவரும் ஒருவர். தாம், 1950 இல் கொரியப் போரின்போது கொரியா சென்றிருந்ததாகவும் அப்போது நேதாஜியை சந்தித்ததாகவும் கூறிவந்தார். வட தென் கொரியப் போரில் நேதாஜி பங்கெடுத்ததாகவும், தேவரும் அப்போரில் ராணுவப் பயிற்சி எடுத்ததாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருடைய பேச்சுக்கள் பல இடங்களில், எதைச் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள் எனும் அதீத நம்பிக்கையால் வெளிப்பட்டிருக்கும்.

உதாரணமாக ஒரு கூட்டத்தில் தேவர் "வரும் அக்டோ பர் 28 அன்று யாம் செந்திலாண்டவருடன் சேவற்கொடியேற்றி, வேல் கைப்பிடித்து, மயிலாசனத்தில் வானத்தில் தரிசனம் கொடுப்போம். அப்பொழுது, சென்னை செண்ட் ஜார்ஜ் கோட்டையில் குண்டு வீசி, காமராஜரைக் கைது செய்வோம். பின்னர், டில்லி செங்கோட்டையில் குண்டு வீசி, நேருவைக் கைது செய்வோம்" என்று பேசியதையும்,

"இதோ 50 லட்சம் பேர் கொண்ட படையுடன் நேதாஜி வருகிறார்" என்றும், "திபெத்தில் நேதாஜி நுழைந்து விட்டார்" என்றும்,
"நேபாளில் சுதந்திர சேனை", "சிங்கியங்கில் நேதாஜி" என்றெல்லாம் அளந்து வந்ததையும் என்.ஆர்.தியாக ராஜன் எனும் எம் எல் ஏ சட்டசபையில் பேசி இருக்கிறார்.

"மடியில் அணு குண்டு(??) வைத்திருப்பதாகவும்", "மூன்றாம் உலக யுத்தத்தை முதுகுளத்தூரில் ஆரம்பிப்பேன்(!!!)" என்றும் மேடையில் முழங்கிய தேவரின் பல சவடால்கள் விநோதமாய் இருக்கும்.

"மாக்னெட் நோஸ் (காந்தக் கருவி) ஒன்றை வைத்து சமுத்திரத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் பனிக்கட்டி ஆக்கி விட முடியும், அதனால் கப்பல்கள் எல்லாம் அங்கங்கே ஸ்தம்பித்துப் போய்விடும் , இதன் மூலம் இங்கிலாந்து அமெரிக்கா சீனா ஆகிய நாடுகளை எல்லாம் நாம் பிடித்து விடலாம்" என்றும் சொன்ன தேவர், இப்படியாப்பட்ட மாக்னெட் நோசை, தன் மடியில் கட்டி வைத்திருப்பதாகவும் சொன்னதுதான் விசேசம்.

இம்மாபெரும் தலைவர், பல முறை மக்களால் பயம் கலந்த பக்தியுடன் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், தொகுதி மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்யப்படுவதை எதிர்த்தவாறுதான் இருந்து வந்துள்ளார்.

காமராஜரின் காலகட்டத்தில் பட்டி தொட்டி எல்லாம் பள்ளிக்கூடங்கள் பெருகியபோது "பள்ளிக்கூடம் எல்லாம் வந்தா எல்லா சாதிப்பயலுகளும் படித்து விட்டு, டவுனுக்குப் போயி இங்கிலீஷ் படித்து விட்டு, நம் ஜாதி ஆட்களுக்கு மரியாதை தராமல் இருப்பார்கள்" என யூகித்து, பள்ளிகள் வருவதை எதிர்த்து வந்தார்.

சட்ட மன்ற உறுப்பினர் சிதம்பர பாரதியின் சட்டமன்ற உரை "அங்கே ரோடு வசதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யலாம் என்று கூறினால், "இல்லை. ரோடு வேண்டாம். ரோடு வந்தால் ரொம்ப ஆபத்து. நாங்கள் ஏதாவது கோபத்தில் சண்டையிட்டு அடித்துக் கொள்வோம். உடனே போலீசில் புகார் கொடுக்க மாட்டோ ம். பிறகு 4,5 நாட்கள் ஆனவுடன், நாங்களே பஞ்சாயத்து பண்ணிக் கொள்வோம். ஆகவே ரோடு வந்தால் ரொம்ப ஆபத்தாகிவிடும்" என்று தேவரின் ஆதரவாளர்கள் சொல்லியதிலிருந்தே, அவர் தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணியின் யோக்யதை தெரிந்திருக்கும்.

*****************
இந்துத்துவத்திற்க்கு விளக்கு பிடித்த கதை:

தேவரின் பல கருத்துக்கள், இந்து மதவெறிக் கட்சியினரின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன.
"அரசியலுக்கு வரும்போது 'அரசியல் வேறு மதம் வேறு. இரண்டையும் சேர்த்துக் குழப்புகிறார்கள்' என்ற பேச்சு நடைபெறுகிறது. அரசியல் இல்லாமல் மதமில்லை. மதமில்லாமல் அரசியல் இல்லை. மதம் இல்லாத தேசம், வேரில்லாத மரம் போல. எந்தக் காற்றிலும் விழுந்து விடும்" என்றும் "இங்கே மதமும், அரசியலும் சேரக் கூடாதென்று சொல்லி இங்கிலீஷை காலேஜில் சொல்லிக் கொடுத்துக் கெடுத்தான்" என்றும் 1957 காஞ்சிபுரம் கூட்டத்தில் கூறி இருக்கிறார்.

"சுதந்திரம் வாங்கிய பிற்பாடு நாட்டில் ஏற்பட்ட நிலைமை என்ன? பாகிஸ்தானிலே மாட்டிக் கொண்ட 1 1/2 கோடி மக்களின் கதி என்ன ஆயிற்று? அவர்கள் நடுச்சந்தியிலே நிறுத்தப்பட்டார்களே? சொத்தை இழந்து, வாழ்க்கை நிலைமை இழந்து, மனைவி மக்களை இழந்து அலறித் துடித்தார்களே? அதற்காக இங்கே இருக்கும் முஸ்லீம்களைப் பாகிஸ்தான் ஓடு என்று ஆச்சாரியார் கோஷ்டி (சூதறிஞர் ராஜாஜி-அழுத்தம் எமது)யால் விரட்ட முடிந்ததா? அல்லது அவர்களைத்தான் நீங்கள் "பாகிஸ்தான் பிரஜை போ" என்று சொல்ல முடிந்ததா?" என்று பால் தாக்கரே, அத்வானி போன்ற பாசிஸ்ட்கள் போன்று தேவர், சட்டசபையில் 1952 ஜூலை 3 ல் பேசி இருக்கிறார்.

கோல்வால்கர், இந்து மகாசபைத்தலைவர் மதுரைக்கு வந்தபோது அவருக்கு பணமுடிப்புக் கொடுத்து சிறப்பு செய்ய ஏற்பாட்டை செய்தவர், முத்துராமலிங்கத் தேவர் ஆவார். அதற்காக அவர் சொன்ன காரணம்-"ஹிந்து மதத்தின் விரோதி மகாத்மா காந்தி. ஆதலால் தான் நான் கோல்வால்கர் அவர்களுக்குப் பண முடிப்புக் கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைந்தேன்."

காங்கிரசு உறுப்பினர் சுவாமி சகஜானந்தாவின் பேச்சில் வீராம்பல் ஊரில் நடந்த இரட்டைக் கொலைக்கான (கொல்லப்பட்டவர்கள் தலித்கள்) வேறொரு காரணம் வெளிப்பட்டது."வீராம்பலில் எப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடந்திருக்கின்றன? அங்கே இரண்டு ஹரிஜனப் பையன்கள், தாங்கள் முஸ்லீம் மதத்தில் சேர வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவர்களுடைய பிரசிடெண்டையும் செக்ரெட்டரியையும் கொலை செய்து விட்டார்கள்".

****************
சட்டசபை உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன் (1957-62ல் உறுப்பினர்) முதுகுளத்தூர் பிராந்தியத்தில் பயணம் செய்தபோது, மறவர் குலப் பெண்கள், அவரிடம் கேட்ட கேள்வி "ஹரிஜனங்கள் முக்குலத்தாரைப் பெண் கேட்க வந்தார்களாமே? பெண் கேட்க வருவதற்கு அத்தனை துணிச்சலா?" என்பதாய் இருந்தது. இது அப்போதைய கலவரத்தில் பொது மக்களிடையே பரப்பப்பட்ட வதந்திகளில் முக்கியமான ஒன்று. அச்சம்பவத்திற்கு இது வரை ஆதாரம் ஏதும் கிடைக்காதபோதும், ஜாதி இந்து மக்கள் அவ்வதந்தியை இன்னமும் எளிதில் நம்பி உணர்ச்சி வசப்பட்டு, சாதிக் கலவரத்திற்கு தயாராகி விடுகின்றனர்.

அப்படி என்ன வதந்தி அது?
தேவரும், இம்மானுவேல் சேகரும், சமாதானக் கூட்டத்திற்கு வந்தபோது, இம்மானுவே, தேவர் முன்னால் சிகெரெட் பிடித்தபிடி, கால்மேல் கால் போட்டபடி சரி சமமாய் அமர்ந்தாராம். உடனே தேவரய்யாவுக்கு ஜிவ்வென்று கோபம் ஏறி "..க்காளி.. இவனுக எல்லாம் நம்ம கூட சரி சமமா வந்திட்டானுங்க.." என்றாராம். இது இம்மானுவேல் காதில் விழுந்ததும், அவரது ஆதரவாளர்களுடன் பழம்,பூவுடன் சென்று தலித் பையன் ஒருவருக்கு, தேவர் வீட்டுப் பெண்ணைக் கேட்டனராம். காரணம், தேவரே, இம்மானுவேலிடம், மைத்துனனிடம் பேசிடக்கூடிய வசைச்சொல்லான '..க்காளி' என்பதனைப் பேசினாரே என்பதாம்.

கலவரத்தில் எண்ணெய் வார்க்க இந்த வதந்தி பயன்பட்டது.

இதே வதந்தி, சிற்சில மாறுபாடுகளுடன், 1989ல் போடி நாயக்கனூர் பகுதியில் ஜான் பாண்டியனை மையமாக வைத்துப் பரப்பப்பட்டு, கலவரத்தை விசிறி விட்டது.
****************
சமீப காலகட்டங்களில் தேர்தல் கமிஷன் பல கெடுபிடிகளைப் போட்டு, பிரச்சாரத்தை இரவு பத்து மணியுடன் நிறுத்திடச் சொல்லியதும், சில கட்சி வேட்பாளர்கள், பத்து மணிக்கு மேல் பேசுவதை நிறுத்தி விட்டு வெறுமனே கைகளைக் கூப்பி வணங்குவதுடன் சென்று விடுகின்றனர். இதெல்லாம் ஏதோ புதுமை என்று எண்ணி இருக்கையில், 1952 தேர்தலுக்கு முன்பிருந்தே தேவர் இவ்வாறுதான் செய்திருக்கிறார். ஆனால் தேவரைப் பேச விடாமல் தடுத்தது தேர்தல் கமிஷன் அல்ல. அரசாங்கம். இவர் வாய் திறந்து பேசினாலே சாதி மோதல்தான் உருவானது. எனவே அரசு இவருக்கு வாய்ப்பூட்டு போட்டது.
ஆனால் தேவர், 1957 முதுகுளத்தூர் கலவரத்தின்போதும், 'மவுனமாகக் கைகூப்பும் முறையை' கலவரத்தை தூண்டிவிட பயன்படுத்தினார். அறிக்கை ஏதின்றி வெறுமனே தேவரின் கைகூப்பிய முழுப்படம் ஒன்றை 'தினமணி' என்றெல்லாம் விளம்பரமாய்ப் பிரசுரித்ததோ, அன்றெல்லாம், கலவரம் உக்கிரம் பெற்றுள்ளது.

இங்கு எண்ணற்ற ஆதாரங்களை தேவரின் சாதி வெறிப்போக்கிற்கான சான்றாகக் காட்டினாலும் தேவர் அபிமானிகள், 'தேவர் தனக்கு சொந்தமாய் இருந்த எக்கச்சக்கமான ஏக்கர் நிலங்களை தலித்களுக்கு எழுதிக் கொடுத்தவர்' என்று சொல்வது வழக்கமே. அவ்வாறு தேவர் நிலம் தந்தமைக்கு இருந்த உள்நோக்கத்தை அன்றைய அமைச்சர்கள் பக்தவச்சலமும், சி.சுப்பிரமணியமும் சட்டசபையில் போட்டு உடைத்துள்ளனர் 'தனக்கு விசுவாசமாய் வாலாட்டும் ஓர் அடியாள் படையை தேவர் இவ்வாறுதான் உருவாக்கினார்' என்று.

*************************
ஆதார நூல்கள்
1) தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி
2) பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும் - தொகுப்பு கே.ஜீவபாரதி
3) பசும்பொன் தேவரின் கட்டுரைகள் - தொகுப்பு கே.ஜீவபாரதி
4) சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் - தொகுப்பு கே.ஜீவபாரதி
5) பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்- தொகுப்பு கே.ஜீவபாரதி
6) சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு - தொகுப்பு கே.ஜீவபாரதி
*************************

கற்பக விநாயகம்
vellaram@yahoo.com

Wednesday, July 26, 2006

உலக பயங்கரவாதி - இஸ்ரேல்

எனது மெயிலுக்கு பார்வேர்டு செய்யப்பட்ட ஒரு கடிதத்திலிருந்து பின்வரும் படங்களை இங்கு பதிக்கிறேன்.
(படங்கள் கோடூரமானவை இளகிய மனம் படைத்தவர்களும் இந்த படங்களை பார்த்து தங்களது தார்மீக ஆவேசத்தை வளர்த்துக் கொள்ளவும்).
படங்களுக்கு கீழே அதிகபட்ச உள்குத்துகள் கேரண்டி செய்யப்பட்ட ஒரு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.

************************
CNN நமக்கு காட்டாதது

Photobucket - Video and Image Hosting

Photobucket - Video and Image Hosting
திங்கள்கிழமை, ஜுலை 17: கிர்யட் ஸ்மொனா
இஸ்ரேலியச் சிறுமிகள் லெபனானில் மக்கள் வாழும் பகுதிகளில் வீசப்பட்ட ராக்கேட் செல்களில் தங்களது செய்திகளை எழுதுகிறார்கள்.
Photobucket - Video and Image Hosting

அதே நாளில், அந்த சிறுமிகள் எழுதிய செய்திகளை படத்தில் சிதறுண்டு கிடக்கும் குழந்தை பெற்றுக் கொண்டது.
********************

இஸ்ரேலை மேற்கு நாடுகள் ஆதரிக்கின்றன....
Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
இதற்க்காகவா?..

Photobucket - Video and Image Hosting
*************************
பியுரட்டில் எஞ்சி நிற்பவை...

Photobucket - Video and Image HostingPhotobucket - Video and Image HostingPhotobucket - Video and Image HostingPhotobucket - Video and Image HostingPhotobucket - Video and Image HostingPhotobucket - Video and Image Hosting

1940-ல் இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீன பகுதி மொத்த மக்கள் தொகையில் 30% யூதர்களின் மக்கள் தொகை. இது 1922-ல் 11% மட்டுமே. அதாவது 18 வருடங்களில் இரண்டு மடங்குக்கும் அதிகமான வளர்ச்சி.

முஸ்லீம்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக இருந்தும் கூட அவர்கள் பின்பற்றும் மதம் வேற்று மதம் என்பதை காரணமாக கொண்டே அவர்களின் மக்கள் தொகை பெருகுவதாகக் கூறி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் கூட்டம். இஸ்ரேலியர்களின் இந்த அபரிமிதமான திணிக்கப்பட்ட மக்கள் தொகை பெருக்கத்தைக் கண்டு பீதியடைந்து தாக்குதல்கள் நடத்திய அரேபியர்களின் நியாயத்தை உணருவதற்க்கு வாய்ப்பில்லை. அதற்க்கு அடிப்படை மனித பண்புகள் சில தேவைப்படுகிறது.

இன்றைய இஸ்ரேல் நிலபரப்பு பற்றிய யூத மத வெறியும், மூடத்தனமான நம்பிக்கையும்தான் இந்த உலகப் பிரச்சனைக்கு மிக மிக அடிப்படைக் காரணமாகும். அதாவது இஸ்ரேல் யூத மதத்தின் புனித பூமி என்ற சென்டிமென்ட். அதன் காரணமாக அங்கு வலிய குடியேறிய யூதர்கள். இந்த சென்டிமென்டின் விலை இன்றளவும் செத்து சிதறி விழும் பிணங்கள். இந்த மூடத்தனத்துக்கு செயல் வடிவம் கொடுக்க உந்துதலாக இருந்த வரலாற்று சூழல் அன்றைய ஐரோப்பாவின் அரசியல் நிலைமைகள்(anti semitism etc).

அதாவது இங்குள்ள சில புனித பிம்பங்களும், அறிவு ஜீவிக்களும் இஸ்லாம் மதம் மூடத்தனமானது என்று குற்றம்சாட்டுவார்களே, இஸ்ரேலை பாராட்டிக் கொண்டு. ஆனால் யூத மதத்தின் மூடத்தனம்தான் இன்று உலக தீவிரவாதத்திற்க்கு ஒரு முக்கியமான ஊற்று மூலமாக உள்ளது. மூடத்தனத்தில் மதங்களிடையே போட்டி வைத்தால் இந்து மதம் முதல் இடமும், யூத மதம் இரண்டாம் இடமும் பிடிக்கும்.

மதம் என்பது மடத்தனம்தான். அது அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிதான். மக்களை தார்மீக ரீதியாக சுரண்டுவதற்க்கு நியாயம் கற்பிப்பதுதான் மதம். அது இஸ்ரேல் விசய்த்திலும் அவ்வாறே உள்ளது.

இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனின் பிரதமாரான சர்ச்சில் இந்த யூத மத வெறியின் பாத தாங்கியாக இருந்தான். பாலஸ்தீனர்களைப் பற்றி அந்த பன்றியின் ஒரு பிரபலாமான வாசகம் (சிலருக்கு பன்றி என்ற வார்த்தை பிரயோகம் பிடிப்பதில்லை. வார்த்தைகளில் வன்மக் வைத்தால் பிடிக்காத அவர்கள் கருத்துகளில் வன்முறை வைப்பவர்களுடன் அலாவலாவ முடிவது எனக்கு வியப்பைத் தரவில்லை):

சர்ச்சில் என்ற பன்றி பின்வருமாறு சொல்லியது:
"ஒரு நாய், குப்பைத் தோட்டியில் நெடு நாட்கள் தங்கியிருக்கிறது என்பதற்க்காக அந்த குப்பை தொட்டிக்கு அது உரிமை கொண்டாட முடியுமா?"

ஆக இஸ்ரேல் பிரச்சனையும் அதன் உடன் விளைவான அரபு தேசங்களில் இஸ்லாம் தீவிரவாதத்தின் life lineனும் சர்ச்சிலின் அந்த திமிர் பிடித்த வார்த்தைகளில் பொதிந்துள்ளது.

இன்றைக்கு காசா ஸ்டிரிப் எனப்படும் பகுதியும், மேற்குக் கரை எனப்படும் பகுதியும் சேர்த்து ஒரு சிறு பகுதிதான் பாலஸ்தீனர்களின் பகுதி. நாய்களுக்கு குப்பைத் தொட்டியில் இந்தள்வுக்கு இடம் கொடுத்ததே அதிகம் என்று சில மக்கள் நல, இந்திய தாயின் மீது அதீத பற்று கொண்ட அறிவு ஜீவிகள் மனதிற்க்குள் கூறுவது கேட்க்கிறது.(இந்தியத் தாயை MNC-க்கள் ரேப் செய்வதற்க்கு 'மாமா' வேலை செய்வதை developement என்றும் இவர்கள் கூறுகிறார்கள். பாசமுள்ள மகன்கள்).

அந்த தேசபக்தர்கள் இஸ்ரெல் வழியில் இந்தியாவும் பாகிஸ்தானில் குண்டு போட வேண்டும் என்று அமேரிக்கா, இஸ்ரேல், கன்டா போன்ற தங்கள்து தந்தையர் நாடுகளில் மாடு பிடிக்கும் போட்டிகள், ராணுவ உடை பெண்கள், சந்தைக்கு தேவையான தத்துவங்கள் போன்றவற்றை ரசித்துக் கொண்டு கூக்குரலிடுகிறார்கள். அவ்வப்பொழுது 'ஜெய் ஹிந்து' என்று சரியாக செரிக்காதவன் காற்றுப் பிரிப்பது போல் அருவெறுக்கும் குரலில் கூவுகிறார்கள். ஏதோ அனுமதி கொடுத்தால் இன்றே பாகிஸ்தானுக்கு தற்கொலைப் படையாக சென்று தங்களது உயிரை தியாகம் செய்து விடுவது போல் அறச் சீற்றம் காட்டுகிறார்கள். வேளி தாண்டி விடுவேன் வேளி தாண்டி விடுவேன் என்று 'வக்ரா' வாக ஜூ காட்டுகிறார்கள். இவர்கள் கோமாளிகள்தான் ஆனால் சிறிது ஆபத்தானா கோமாளிகள்.

இஸ்ரேல் பிரச்சனைக்கு தீர்வு. இஸ்ரேல் உழைக்கும் மக்கள் தங்கள் கண்ணை மறைத்திருக்கும் யூத மத தேசிய வெறியிலிருந்து வெளிவந்து தங்களையும், அரபு பகுதியையும் களமாக வைத்து ஏகாதிபத்தியங்கள் நடத்தும் அரசியல் விளையாட்டுக்களை அம்பலப்படுத்தி பாலஸ்தீனர்களின், அரபு தேசங்களின் நியயாமான இருப்பை ஏற்றுக்கொண்டு, தங்களது சொந்த நாட்டின் சுரண்டல்களையும் எதிர்த்து போராடாத வரை பிரச்சனை தீராது. பாலஸ்தீனர்கள் தங்களது விடுதலை கோரிக்கையை முன்வைத்து மத, இன மயக்கங்களுக்கு அப்பாற்ப்பட்டு போராடதவரை பிரச்சனை தீராது.

மொத்தத்தில் இந்த பிரச்சனையின் தீர்வு ஏகாதிபத்தியங்களின் அழிவில்தான் சாத்தியம் அதுவரை ரத்த பலி தொடரும் என்பதுதான் நிதர்சனம். முட்டாள்த்தனமான ராணுவ சாகச வழியின் முடிவு இதுதான் என்பதை அதி புத்திசாலி அறிவுஜீவிகளுக்கு அல்ல, மாறாக என்னைப் போன்ற அரைகுறைகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.


பாலஸ்தீன பிரச்சனை பற்றி மேலதிகமான விவரங்கள்:

1922இல் சர்ச்சிலால் தாயாரிக்கப்பட்ட வெள்ளை அறீக்கை கூறுகிறது:
"'During the last two or three generations the Jews have recreated in Palestine a community, now numbering 80,000உ it is essential that it should know that it is in Palestine as of right and not on the sufferance. That is the reason why it is necessary that the existence of a Jewish National Home in Palestine should be internationally guaranteed, and that it should be formally recognized to rest upon ancient historic connection.'"

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலியர்கள் இருப்பது உரிமையின் அடிப்படையில் மாறாக அவர்கள் படும் கஸ்டங்களின் காரணமாக இல்லை(வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்கள் போல அல்ல என்று அர்த்தம் கொள்ளலாம்) என்று எவ்வளவு திமிராக அந்த அறிக்கை கூறுகிறது. அதே திமிரோடு சமீபத்தில் சிலர் இஸ்ரேலை ஆதரித்து தொடர் பதிவுகள் இட்டனர்.

அந்த வெள்ளை அறீக்கையின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்க்காக யூதர்கள் அதிக அளவில் பாலஸ்தினத்துக்கு குடியேற வேண்டும் என்று வெள்ளை அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டது. இது எந்த அளவுக்கு 'தேவ அடியார்கள்'த் தனமான செயல் என்பதை படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம். (அய்யாக்கள், என்னை மன்னிக்கவும். எனது கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால்தான் அந்த 'தேவ' வார்த்தை).

அதாவது ஒரு குறிப்பிட்ட தேச எல்லைக்குட்ப்பட்ட நிலப்பரப்பில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் மக்களை(பாலஸ்தினர்கள்), வரலாற்றுப் பூர்வமாக அந்த இடத்திற்க்கு உரிமை கொண்டாடிக் கொண்டு வேறு நாடுகளில் அதிகாரத்தில் இருந்து கொண்டு வாழ்க்கை நடத்தும் ஒரு கூட்டம்(யுதர்கள்) ஒரு 50 60 வருடங்களில் அந்த புதிய இடத்தில் குடியேறி அவர்களிடமிருந்து(அரபியர்கள்) பிடுங்கி தனி நாடு உருவாக்குவதற்க்கு வசதியாக நிலங்களை வாங்கிப் போடுவது, தனது இன மக்களை பல தேசங்களிலிருந்தும் குடியேறச் செய்வது போன்ற தந்திரங்களை செய்வது என்பது எந்த அளவு மூடத்தனமானது, அபாயமானது என்பதற்க்கு இஸ்ரேல் ஒரு உதாரணமாக உள்ளது.

மூடத்தனமானது - அல்ப மத, இன வெறிக்காக இப்படி இடம் பெயர்ந்த ஒரே கூட்டம் இந்த யூதர்கள்தான்.

தந்திரமானது - பார்ப்பன தந்திரத்துக்கு இணையாக இதை அவர்கள் சாதித்த விதம்.

இப்படி தந்திரமாக நுழைந்ததை லீகலாக(legal) சரி என்று வாதட நம்மூர் பார்ப்பன அடிவருடிகள் தொடர் கட்டுரைகள் எழுதுவது.....சுத்த மானங்கெட்ட பிழைப்பு. (தந்திரம் என்பதே நியாயமில்லாத ஒரு விசயத்தை லீகலாக்கும் முயற்சியை குறிக்கும் சொல்தான்).

Monday, July 24, 2006

அனானிக்கு ஒரு பதில் - அதிகார ருசி, புரட்சி, கம்யுனிசம்

விஜயகாந்த் பற்றிய ஒரு முந்தைய பதிவில் ஒரு அனானி கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். அதற்க்கு நான் பின்னூட்டமிட தீர்மானித்திருந்த பகுதியே நல்ல விவாதத்துக்குரியதாக இருந்ததால் அதை தனி பதிவாக இடுகிறேன்.

***************
//திராவிட கட்சிகளும் புரட்சியின் விளைவாக வந்ததுதானே.எல்லா புரட்சிகளும் அதிகார ருசி கண்டபின் வழக்கம் போலசுரண்டல் கட்சிகளாக மாறிவிடும். அல்லது அப்படி மாற்றிவிடுவார்கள்.//
அனானி,

திராவிட கட்சிகள் புரட்சி செய்ததாக நீங்கள் சொல்லும் தகவல் புதிதாக உள்ளது.

அவை தங்களது வரலாற்றுக் கடமையை ஓரளவு(அதாவது ஒரு 10% அளவு என்று வைத்துக் கொள்ளலாமா?) நிறைவேற்றீனார்கள். தமிழக முதலாளித்துவ வளர்ச்சியில் அவர்களது ஆட்சி ஒரு முக்கிய காரணம். ஆனால் புரட்சியெல்லாம் ஒன்றும் செய்து விடவில்லை.

சுரண்டல் பொருளாதாரத்தை அடித்து நொறுக்கும் தத்துவ பலமில்லாத எந்த ஒரு அமைப்பாலும் அடித்தட்டு மக்களுக்கு நெடு நாட்களுக்கு சேவை செய்ய முடியாது.

அது பெண்ணியம், தலித்தியம், சாதியம் என்று எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் சுரண்டலுக்கு மருந்து தரும் தத்துவம் இல்லையெனில் நீங்கள் வருத்தப்பட்டது போல் சீரழியும்.

அப்படிப்பட்ட தத்துவத்தை நடைமுறையில் கொண்ட புரட்சிகர அமைப்போ ஆளும் வர்க்கத்தின் சதிகளிலிருந்து தப்பிக்கும் வகையில் மிக் கவனமாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ஒரு தத்துவம் கம்யூனிசம்தான். அப்படிப்பட்ட ஒரு புரட்சிகர அமைப்பு, அந்த தத்துவத்தை நடைமுறையில் கொண்டுள்ள அமைப்பு. அந்த கம்யுனிஸ்டு புரட்சிகர அமைப்புகளும் தொடர்ச்சியான ஏகாதிபத்திய சதிகளுக்கு பலியாகி செழுமையான அமைப்பு அனுபவங்களைப் பெற்றுள்ளனர். எந்த வகையிலும் லெனின் காலத்து அமைப்பைவிட பல மடங்கு இன்றைய அமைப்புகள்(அனுபவங்களை சரியாக உள்வாங்கிக் கொண்ட கம்யுனிஸ்டு அமைப்புகள்) பலம் பொருந்தியதே.
இத்தகைய தத்துவ பலம் பொருந்திய ஒரு அமைப்பு பிற்போக்கு சக்திகள் தலைமையை, ஸ்டிரிங்கை கைப்பற்ற அனுமதிக்காது.

புரட்சி என்பது சமூக மாற்றம், அதாவது பொருளாதார 'உற்பத்தி முறையில்' மாற்றம், 'அதற்க்கு ஏற்ற அரசு' என்ற மாற்றம். அது இதுவரை இந்தியாவில் நடைபெறவில்லை(இப்பொழுது இருக்கும் அரசுகள் கூட பிரிட்டிஸ்கால ஏகாதிபத்திய சேவையை தொடர்கின்றன).

அப்புறம் பாட்டளிகள் நடத்தும் புரட்சியின் சிறப்பு அம்சமே சுரண்டல் சமூகத்துக்கு முடிவுகட்டுவதுதான் (வரலாற்றில் வேறு எந்த புரட்சியும் செய்யாதது). இன்னொரு சிறப்பு அம்சம் 'தங்களது கோரிக்கைகளுக்காக' உழைக்கும் மக்கள் போராடும் ஒரே புரட்சி இது தான். மற்ற புரட்சிகள் எல்லாம் அந்த காலகட்டத்தின் வியாபாரிகளின் கோரிக்கைகளுக்கானதுதான். இந்த பகுதி பலருக்கு புரிய வாய்ப்பில்லை. பின்னொரு விரிவான பதிவில் இதை விளக்குகிறேன்.

எனவே, தங்களது கவலையை விட்டுத் தள்ளுங்கள். இப்படி ஒரு முற்று முதலான மாற்றத்தை உள்ளடக்கிய, மனித சமூக வரலாற்றிலேயே ஒரு அடுத்தக் கட்ட மேல் நிலை சமூகத்துக்கான ஒரு புரட்சியாக இருப்பதானால் இந்த பாட்டாளீ வர்க்க புரட்சி மிக மிக கடினமான கட்டங்களை கடந்தே நடக்கும்.

தொடர்ச்சியான தோல்விகள், ஒவ்வொரு தோல்வியிலும் கைவரப்பெறும் "ஒரு படியேற்ற" வெற்றி என்று அது பூரணமடையும். ஆனால் புரட்சி ஒன்றை யாராலும் தடுக்க முடியாது. அதைத் தடுக்கக் கூடிய ஒரே விசயம் ஒட்டு மொத்த மனித சமூகத்தின் அழிவு.

அந்த அழிவுக்கான சாத்தியக்கூறு இன்றைய பொருளாதார உற்பத்தி முறையின் அராஜக தன்மையை நாம் எந்த அளவு நீட்டித்து நிலை பெறச் செய்கிறோமோ அந்த அளவு அதிகமாகிறது.

ஆக கடைசியில் நமக்கு இருக்கிற சாய்ஸ் ரொம்பத் தெளிவாக உள்ளது:
# ஒரு சமூக மாற்றத்துக்கான பங்களிப்புகளைச் செய்வது.
அல்லது
# மனித குல அழிவின் கடைசி நிமிடம் வரை அனுபவித்து ஒட்டு மொத்தமாக சாவது(இடையிலும் சாகலாம்).

இது பற்றிய மேலதிகமான புரிதல்களுக்கு பின்வரும் எனது முந்தைய பதிவுகளை படிக்கலாம்:

Sunday, July 23, 2006

கழிசடைத் தளபதி விஜயகாந்தும், புரட்சிக்காரன் ரமணாவும்

ரமணா படத்தில் வரும் ஒரு காட்சி:
ரமணா சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். அவரைப் பற்றி கேள்விப்படும் மக்கள் அவரைப் புகழ்ந்து பேசுவதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கும். ஒரு காட்சியில் ஆட்டோ க்காரர் ஒருவர் பின்வருமாறு கூறுவார், " நான் நாத்திகன்தான் ஆனால் ரமணா சாரோட படம் கிடைத்தால் அவரை கடவுளாக வைத்து கும்பிடுவேன்", என்று.

இதை குறிப்பிட்டு ரமணாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர், மக்களுக்காக பல சேவைகள் செய்த நீங்கள் உங்களது படத்தையும் வெளியிடலாமே என்று கேட்பார். அதற்க்கு புரட்சிக்காரர்(??) ரமணா சொல்வார், "அய்யா, இந்த சட்டையை நெய்த நெசவாளி யார் என்று தெரியுமா உங்களுக்கு?, நாம் சாப்பிடுகிறோமே அந்த அரிசியை விளைவித்த விவசாயி யார் என்று தெரியுமா?" இப்படி சில எடுத்துக்காட்டுகளைக்(வழக்கம் போல புள்ளிவிவர பாணியில்) கூறிவிட்டு கடைசியில் இவர்கள் எல்லாம் தங்களது கடமையை செய்துவிட்டு எதுவும் விளம்பரம் தேடாதபோது நான் மட்டும் என் கடமையை செய்ததற்க்கு ஏன் விளம்பரம் தேட வேண்டும் என்று கேட்டிருப்பார்.

மிக மிக நியயாமான நேர்மையான ஒரு புரட்சிக்காரனுடைய பதில் இதுவாகத்தான் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதை சொல்லுவதற்க்கு விஜயகாந்திற்க்கோ அல்லது ரமணாவிற்க்கோ அருகதை துளிக்கூட கிடையாது.

ரமணாவைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. அது முடிந்துபோன கதை. ஆனால் விஜயகாந்த்? அது நமது மக்களைப் பிடித்த சனி. அது எதிர்கால தலைவலி.

சரி நடைமுறைக்கு வருவோம், ரமணா வெற்றியடைந்தது அந்த படத்தின் டிக்கெட் விற்பனையிலும் கூட ஊழல், முறைக்கேடு புகுந்து விளையாடியிருக்கலாம். விஜயகாந்தின் பாக்கெட் நிரம்பியது. தேர்தல் வந்தது. இப்பொழுது நிழல் ரமணா ஒரு M.L.A.

சமீபத்தில் வட மாவட்டங்களிலொன்றில் ஒரு இடத்திற்க்கு ஏதோ பிரச்சனைக்காக ஆறுதல் சொல்லவோ அல்லது நிவாரணம் கொடுப்பதற்க்கோ நமது கழிசடைத் தளபதி/இன்னாள் M.L.A செல்கிறார். அவரைக் காண பெரும் மக்கள் கூட்டம் கூடுகிறது.

தேர்தல் சமயமாவது மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் வோட்டு சீட்டுக்கள் முண்டியடிப்பதாக ஒரு மயக்கம் தோன்றும். தேர்தலோ கண்ணுக்கெட்டிய தொலைவில் எங்கும் இல்லை. ஆக, மக்கள் கூட்டத்தை பார்த்து மயங்க தற்பொழுது ஒரு முகாந்திரமும் இல்லாத நிலை. இந்த கழிசடைத் தளபதியோ மக்கள் மத்தியில் நெருக்கமாக சிக்குண்டு எரிச்சலுற்றிருந்த வேலை. அப்பொழுது அவரது அருகிலிருந்த ஒரு பாதிக்கப்பட்டவர் தனது பிரச்சனைகளை கூறி திரும்ப திரும்ப விண்ணப்பமிட்டுக் கொண்டே இருந்திருக்கிறர். கடுப்பான நமது தளபதி "போலேர்" என்று விட்டார் ஒரு அறை.

பொறிபறக்க வெடித்து கிளம்பினார் அடிவாங்கியர். விஜயகாந்தை அடிக்க அல்ல, மாறாக திருப்பி அடிக்கும் திரணியற்ற முடியாத மற்ற தொண்டரடி பொடிகளை அடித்து தனது கோபத்தை தீர்த்துக் கொள்ள. அவர் சுற்றியிருந்தவர்களை சும்மா சுழற்றி சுழற்றி அடித்தார். சினிமாக்களில் கதாநாயகன் அடிவாங்கினாலும், வில்லன் அடிவாங்கினாலும் வேடிக்கைப் பார்த்துப் பழக்கப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டம் அங்கு தானே அடிவாங்கியும்கூட திருப்பி அடிக்காமல் வேடிக்கை பார்த்தது. அந்த இடமே சிறிது நேரத்திற்க்கு அமளி துமளியாகிவிட்டது. காமெராக்கள் 'க்ளிக்கின', விடியோக்கள் படம் பிடித்தன. அன்றைய செய்திகளில் இந்த சம்பவம் அனைவராலும் விரும்பிப் பார்க்கப்பட்டது.

அடித்த தளபதி ஒரு கீறலும் இன்றி வீட்டுக்கு திரும்பினார். அடிவாங்கிய பாதிக்கப்பட்டவரும் திரும்பினார், அடிவாங்கியவரிடம் அடிவாங்கியவர்களும் திரும்பிச் சென்றனர், கெமாரக்கள் மட்டும் திரும்பவில்லை. அவை அந்த காட்சியை சளைக்காமல் ஒளிபரப்பின. அது தொலைக்காட்சி சேனல்களுக்கு மற்றொருமொரு ரேட்டிங்கை உயர்த்தும் சம்பவம். மக்களுக்கோ ஒரு மாலை வேளை காபி, மிச்சருக்குள் அடங்கும் அளவே கிசுகிசுக்கப்பட வேண்டிய ஒரு பரபரப்பு சம்பவம். சுயமரியாதை பற்றி இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட எந்த இடத்திலும் பேசப்படவில்லை.

கும்பகோணம் 94 குழந்தைகளின் சாவுக்கும், சுனாமி, வெள்ள நிவாரண படுகொலைக்களுக்குமே கூட வெறுமனே துக்க அஞ்சலி சுவரொட்டிகள் அடித்து தனது சமூக உணர்வு அரிப்பை சொறிந்து விட்டுக் கொண்ட சாலச்சிறந்த பண்ப்பாட்டு பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ்ச் சமூகம் இந்த அல்ப சம்பவத்துக்கு சலசலத்துக் கிளம்பும் என்ற எதிர்பார்ப்பின் விளைவு அல்ல இந்த கட்டுரை.

மாறாக இப்படி ஒரு சமூகம் சீரழிந்து வெறுமனே 'அமைதிப் பூங்கா' சர்டிபிகேட்டுக்கு சுயமரியாதையை அடகுவைத்துள்ளதே அந்த நிலையை நாமும் ஒரு சினிமா பார்வையாளனைப் போல் பார்த்துக் கொண்டிருப்பதா அல்லது இந்த சமூகத்தின் முகத்தில் அறைந்து அதன் மயக்கத்தைப் போக்குவதா என்று கேள்வி எழுப்பும் உத்வேகமே இந்த கட்டுரையின் நோக்கம்.

இந்த தளபதி தனது கட்சி ஆரம்பித்த புதிதிலேயே இப்படி மேடையில் வைத்து ஒருவரை அடித்த பெருமை உண்டு. இவ்வளவுதான் மக்கள் மீதான இவர்களின் அன்பு, சகிப்புத்தன்மை. இவ்வளவுதான் இவர்களின் அரசியல்.
கடமையை செய்தவனுக்கே விளம்பரம் தேவையில்லை என்று வியாக்கியானம் பேசியது ரமணா என்ற நிழல். அந்த நிழலின் நிழல் கடமையை செய்ததை அல்ல மாறாக களாவானித்தனம் செய்ததையே விளம்பரப்படுத்தி ஒரு மக்கள் சக்தியாக உருவெடுத்துள்ளது.

இந்த கருப்பு எம்ஜிஆர் சாதி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு சொல்லுகிறார். அதாவது யாரும் தன்னை தாழ்த்தப்பட்டவர், தீண்டத்தாகாதவர் என்று எண்ணிக் கொள்ள வேண்டாமாம். அவர்கள்(தலித்துகள்) தங்களை உயர்ந்தவர்களாக நினைத்தாலே போதுமாம், சாதிப் பிரச்சனை தீர்ந்துவிடுமாம். இவரை திண்ணியத்துக்கு கூட்டிச் சென்று சிறிது மலம் திங்கச் சொல்லி பிறகு அவரது தீர்வு பலன் கொடுக்கிறதா என்று கேட்டுப் பார்க்கலாம்.

லஞ்சம் கொடுப்பதற்க்கு எதிராக இவர் சமீபத்தில் ரமணா படத்தில் வருவது போலவே ஒரு குரூப்பை உருவாக்கியிருக்கிறார் என்று சமீபத்தில் சிலர் வலைப்பதிவில் எழுதி ஏதோ சமுக மாற்றத்துக்கான ஆரம்பம் அதுதான் என்பது போல் பரஸ்பரம் சிலாகித்துக் கொண்டனர். ஆனால் இவர்கள் மிக வசதியாக மறந்த விசயம் இந்த கழிசடைத் தளபதியே வரியேய்ப்புகள்(கருப்புப் பணம்) செய்து வருமானத்தை பெருக்குபவர்தான். ஒரு வேளை 'கருப்பு' என்பதால் விஜயகாந்திற்க்கு பிடிக்கிறதோ என்னவோ.

கடந்த ஜெயலலிதா ஆட்சி, கருணாநிதி ஆட்சிகளில் மக்கள் மேலே ஏவிவிடப்பட்ட பல்வேறு அடக்குமுறைகளின் போது எந்த ஒரு கண்டனத்தையும் அவர் தெரிவித்ததில்லை. மக்களை விடுங்கள் அவரது சொந்த துறையில் சில காலம் முன்பு தொடர் தற்கொலைகள் நிகழ்ந்த பொழுது இந்த கழிசடையின் தார்மீக ஆவேசம் எங்கே சென்றது என்று தெரியவில்லை.

மாஞ்சோலை தேயிலை தோட்டப் பிரச்சனை, பல சாதி வெறி தாக்குதல்களுக்கு இவர் எந்த கருத்தையும் இது வரை வெளியிட்டதில்லை, இதுவரை. இவர் ஒரு காவி வெறியர் என்பதும் இவரது படங்களை பார்த்தால் தெரியவரும்.

பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தாழ்த்தப்பட்டோர் தன்னிச்சையாக பஞ்சாயத்துத் தேர்தலில் வேட்பு மனுகூட தாக்கல் செய்ய முடியவில்லை. இதைப் பற்றி பேச வக்கில்லாத இந்த கழிசடை-இந்து மத வேறியன், தனது படங்களில் "இந்தியாவில் ஒரு முஸ்லீம் ஜனநாதிபதியாக முடிகிறது, கவர்னராக முடிகிறது, etc etc..பாகிஸ்தானில் ஓரு இந்து, வார்டு பிரதி நிதியாக முடிவதில்லையே ஏன்? ஏன்?" என்று R.S.S குரலில் பேசுகிறான்.

குஜராத படுகொலைகளை உலகமே கண்டித்தது ஆனால் இந்த கழிசடை, அந்த படுகொலை பற்றி அப்பொழுது தனக்கு சரிவர தகவல் கிடைக்கவில்லை அதனால்தான் குரல் எழுப்பவில்லை என்று இப்பொழுது பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து R.S.S-யை பற்றி கருத்து சொல்லுவதில் இருந்து நழுவுகிறது.

அவர் சொன்னதிலேயே சாலச் சிறந்த கருத்து பின்வருமாறு:"ஆட்சியை பிடிக்கிறதுக்காகத்தான் இந்த அரசியல்வாதிங்க (காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள்) பா.ஜ.காவை மதவாதக் கட்சிங்கறாங்க. தங்களை மதவாத கட்சின்னு அவங்க சொல்லியிருக்காங்களானு எனக்கு தெரியாது". இப்படிக் கூறி மதவெறிக் கட்சிக்கு மதசார்பற்ற நல்லிணக்க முத்திரை குத்தினார் தளபதி. இவர் இந்தி திணிப்பை ஆதரிப்பவரும் கூட. ஆனால் சொல்லிக் கொள்வது என்னவோ தமில், தமிலன் என்றுதான். சத்யராஜ் தனது படத்தில் இதை சரியாகத்தான் கிண்டலடித்துள்ளார்(மகாநடிகன் படம்) .

விஜயகாந்த் என்ற கழிசடை ஒரு சக்தியாக உருவாகியிருப்பதற்க்கான அடிப்படை இந்த சமூகத்தில் உள்ளது. இந்த சமூகத்தின் சினிமா கவர்ச்சியும், மறுகாலனியாதிக்க பொருளாதார சீர்திருத்தங்களால் அவதியுறும் மக்களின் - மாற்று அரசியல் அமைப்புக்கான ஏக்கமும் சேர்ந்து அவரை ஒரு மாற்று சக்தியாக மக்கள் நம்புவதற்க்கு ஒரு காரணம் என்றால். ஏகாதிபத்திய தாக்குதலுக்காலான இந்தியாவின் அரைக்காலனிய, அரை நிலபிரபுத்துவ சமூக அமைப்பின் இயல்பு அதன் தீர்மானகரமான சக்தியாக உதிரிப்பாட்டாளி வர்க்கத்தை/அதற்குரிய பண்பாட்டையே அதிகப்படியாக உருவாக்குகிறது. அந்த வர்க்கத்தின் வாழ் நிலை விஜயகாந்தின் கவர்ச்சி, வாய்சவடால் அரசியலுக்கு அவர்களை(உதிரிபாட்டாளி) மயக்க்கி பழியாக்குகிறது. பழியாடுகளின் எண்ணிக்கை விஜயகாந்துக்கு அங்கீகராத்தை வழங்குகிறது.

இந்த உலகத்தின் எந்த ஒரு வளர்ச்சிப் போக்குக்கும் மூலாதாரமாக எதிர்மறை கூறுகளின் முரன்பாடுகளிடையேயான இயக்கம் காரணமாக இருக்கிறது என்ற இயங்கியல் தத்துவம் உண்மையெனில். ஒரு கழிசடை பிரதிநிதி சமூக சக்தியாக வளர ஏதுவான அதே சமூக பொருளாதார அடித்தளம் அதன் எதிர்மறை கூறான புரட்சிகர சக்திகள் வளரவும் காரணமாகிறது.

ஆக, இங்கு எதிர்காலம் சமூக மாற்றத்திற்க்கா அல்லது கழிசடை தளபதிக்கா என்பதை சமூக மாற்றத்தில் ஆர்வம் கொண்டவர்கள், ஜனநாயக சக்திகள்தான் முடிவு செய்ய வேண்டும். அது அவர்கள் யாருடன் அணி சேர்கிறார்கள் என்பதை பொறுத்து உள்ளது. இந்த சமூகத்தில் கழிசடைத்தனத்திற்க்கும் மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கும் எதிர்மறைக்கூறான புரட்சிகர சக்தி எது என்பதை அடையாளம் கண்டு அதனுடன் ஐக்கியப்பட்டு அதை வலுப்படுத்த வேண்டியது அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளின் (குறிப்பாக நடுத்தர வர்க்க அறிவு ஜீவிக்கள்) வரலாற்று கடமையாக உள்ளது.

(இந்த கட்டுரையின் சில் பகுதிகள் புதிய ஜனநாயகம் ஆகஸ்டு மாத இதழில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது)

Friday, July 14, 2006

கேடு கெட்ட இந்தியா... யானை கட்டியா போரடித்தோம்?


Photobucket - Video and Image Hosting

தனது நிலத்தில் தானே எருதாக - ஏர் கலப்பையை முதுகில் பூட்டி உழும் ஒரு விவசாய குடும்பம்.
குட்டக் குட்டக் குனிய கற்றுக் கொடுத்த நமது பாரம்பரிய வர்னாசிரம் பண்பாட்டை ஆளூம் வர்க்கம் தூக்கிப் பிடிக்கும் மர்மம் இதோ இங்கே தெரிகிறது.

நாம் அஹிம்சா விரும்பிகளாம்....சொல்லுவது யார்? மூன்று வேலையும் மூக்குப் பிடிக்க உண்ணும் புண்ணிய ஆத்மாக்கள்.(இதில் எந்த தனிமனித தாக்குதலோ அல்லது உள்குத்தோ இல்லை. இது பொதுவான தத்துவ விமர்சனம்).

அடிமையாய் வாழ பழக்கப்பட்டவன், உரிமை என்பதை பற்றி எந்த அறிமுகமும் இல்லாதவன், ஜனநாயகத்தை அவனுக்காக ஓட்டுப் பொறுக்கும் ஆத்மாக்களின் வாய்களிலும், வசவுகளிலுமே அறிந்தவன் - எப்படி தனக்கான உரிமைகளை கேட்டு போராடுவான்? அவன் அஹிம்சாவின் வன்முறையை தனது பிறப்பால் ஏற்றுக் கொண்டவன்.

அவனை பீடித்திருக்கும் அத்தனை பழமைவாத தத்துவ, பித்துவ பண்பாட்டு மாயைகளையும் அதன் மூல வேர்களையும் அடித்து நொறுக்க வேண்டும்.

அதுதான் அவனை, எமது மக்களை, இந்த நாட்டின் முதுகெலும்பாய் கூனிக் குறுகி வாழ்கை நடத்தும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை விழிப்புறச் செய்யத் தேவையான முதல் நடவடிக்கையாக உள்ளது.

இந்த விவசாயிக்கு சலுகைகளை அல்ல தனக்கான நியயமான கோரிக்கைகளைக்க்கூட எழுப்பத் தெரியவில்லை.

தொடர்ச்சியாக நிலத்தால் வஞ்சிக்கப்பட்ட அந்த விவசாயிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது:
"இந்த வருடமும் சரியாக விளையாது என்று தெரிந்த பின்னும் ஏன் பயிர் செய்கிறேர்கள்?"

அதற்க்கு அவர் சொன்ன பதில்:
"நாங்கள் கடவுள் குழந்தைகள் எங்களை அவர் கைவிட மாட்டார்".

இது மத வெறி பன்றிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விசயம்தான்.

எமக்கும் கூட ஒருவகையில் இது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனெனில் இந்த நம்பிக்கை இல்லையெனில் அவர் தற்கொலை செய்திருப்பார்.

இதை அவரே சொல்கிறார்:
"வேறு யாராகவும் இருந்தால் இன்னேரம் தற்கொலை செய்திருப்பார்கள்".

இன்னொரு வகையில் மகிழ்ச்சி. அவரது தத்துவ மயக்கத்தை போக்கினால் அவரது எதிரிகளின் முதுகில் ஏர்கலப்பையை கட்டி உழுவ செய்வதற்க்கு ஒரு உயிர் அங்கே காத்திருக்கிறது என்பது.

இந்த செய்தி, நேபாளத்தில் எனது சகோதரன் இதே நடவடிக்கையை மேற்கொண்ட போழுது இங்கே குய்யோ முறையோ என்று கூவிய மதவெறி பன்றிகளுக்கு உறுதியாக மகிழ்ச்சியளிக்கும் விசயமல்ல.

பிறப்பால் வர்னாசிரம பிரிவை/ஏற்றத்தாழ்வை மறைமுகமாக/நேரடியாக வரவேற்பவர்கள் அந்த பெரியவரின் - தனது தொழிலின் மீதான காதலை பாருங்கள். நிலத்தை விற்று பான்மசால கடை வைப்பதற்க்கு தனது மகனை அனுமதிக்கவில்லை அவர். மாறாக இப்பொழுது நிலத்தை தனது முதுகில் பிணைத்துள்ளார். சுயமரியாதையுள்ள மனிதர்.

நகரங்களுக்கு சென்று வேலை செய்யவும் அவர் தாயாராயில்லை.

வெறும் பழைமைவாத கருத்துக்களால் கட்டுண்ட சுயமரியாதையின் அவலம் இது. புரட்சிகர சுயமரியாதைதான் இன்றைய தேவை. விடுதலையின் திறவுகோல் அதுதான்.

இதை ஐந்திலக்க எச்சில் சோற்றுப் பருக்கையுண்ணும் சுய நல, தனிமனித சிந்தனை வெறிபிடித்த, நுகர்வுகலாச்சார ரோகம் பாதித்த யுப்பி வர்க்கம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

அமெரிக்க ஊழியனின் வேலையிழப்பில் தனது சந்தோசத்தை உத்திரவாத படுத்திக் கொண்டு. சொந்த சகோதரர்களுக்கிடையிலேயே(அமேரிக்க, இந்திய தொழிலாளர்கள்) போட்டியை உருவாக்கி தனது லாபத்தை மட்டும் உத்திரவாதப்படுத்தியுள்ள பன்னாட்டு பன்றிகளையே-அஸீம், நாரயணமூர்த்தி- கடவுளாக கருதும் யுப்பி வர்க்கம் சிந்திக்க வேண்டும்.

இது யுப்பி வர்க்க நலன் சாராத பொது நலமல்ல...
சமூக அக்கறையற்ற அவனது(யுப்பியின்) நலனும் மேலதிகமாக பின்னிப் பிணைந்துள்ள ஒரு விசயம் இது.

கிராமப் புறத்தில் வேலையிழந்து நகரங்களை நோக்கிப் படையெடுக்கும் எதிர்கால உதிரிப் பாட்டாளியும், நகர சேரிகளிலேயே வளர்ந்த இன்றைய உதிரிப் பாட்டாளியும் தான் இந்த சமூகம் மிக மிக அதிகமாக உற்பத்தி செய்யும் சந்தைப் பொருள்.

கேட்க நாதியற்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட இந்த வர்க்கம் சமூகம் தன்மேல் திணித்த வன்முறையை திருப்பி செலுத்துவான். அதுவும், தன்னை பண்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டவனுடைய வன்முறையைப் பற்றி நான் விவரிக்க விரும்பவில்லை.
இவனது இலகுவான இலக்கு யார்? அவனது அருகிலேயே அவனைவிட சிறிது அதிகமான சுகவாழ்வு வாழும் நடுத்தர வர்க்கம்தான்.
வருத்தப்படா வாலிபர் சங்கங்களா? அல்லது வர்க்க ஸ்தாபனங்களா? என்பதை முடிவு செய்ய நிர்பந்திக்கும் தருணங்களாய அவை இருக்கும்

ஒவ்வொரு வினையும் அதற்க்கு சம்மான எதிர்வினைகளை கொண்டது.
கேடு கெட்ட இந்தியா - யானை கட்டியா போரடித்தோம்?
****************

Wednesday, July 12, 2006

பார்ப்பனிய எதிர்ப்பும், பலவித தத்துவ மயக்கங்களும்

பாலச்சந்தர் கணேசனின் பின்னூட்டத்தை பாடித்த பிறகு குழலியின் மீதான விமர்சனத்தை திரும்பப்பெறுவது என்று முடிவு செய்து விட்டேன்.

அதற்க்கு இரண்டு காரணங்கள்:
1) விடாது கறுப்பின் பார்ப்பன/பார்ப்பினிய எதிர்ப்பு என்ற விசயம் பூடகமாக உள்ளதால் குழலி அதை வேறு விதமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவரது கண்டனமும் அந்த அளவில்தான் உள்ளது.

2) குழலி மேல்சாதி வெறி எதிர்ப்பில் நல்ல பல கட்டுரைகள் எழுதியுள்ளார் எனவே அவரது இந்த கண்டனத்தை சந்தேகப்படுவது தவறு.

இந்தக் காரணங்களை முன்னிட்டு குழலியின் மீதான விமர்சனங்களை திரும்பப்பெறும் அதே நேரத்தில் அவரிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.
பாலசந்தர் கணேசனுக்கு நன்றி!

ஆனால் உஷாவின் மீதான விமர்சனம் தொடர்கிறது. அவரது அந்த பதிவு ஒரு தலைப்பட்சமானது என்ற அடிப்படையில்.
*******************
சமீபத்தில் குழலி மற்றும் உஷா என்ற இரு வலைப்பதிவர்கள் விடாது கருப்பு என்ற ஒரு பதிவரின் கட்டுரை ஒன்றை அடிப்படையாக வைத்து தமிழ்மண நிர்வாக வழிமுறைகளில் மாற்றம் கோர/கட்டுபாடுகளை அதிகப்படுத்த விழையும் பதிவுகளை இட்டிருந்தார்கள்.
அவர்களுக்கான எதிர்வினை

//இந்து vs முஸ்லிம்
இந்து vs கிருத்துவர்
ஆரியர் vs திராவிடர்
திராவிட எதிர்ப்பாளர் vs திராவிடர்
ஆத்திகர் vs நாத்திகர்
இந்துத்வியாதிகள் vs முஸ்லிம்,கிருத்துவர்,திராவிடர்,கம்யூனிஸ்டுகள்//

மேலே உள்ள முரன்பாடுகளை உஷாவின் அந்த குறிப்பிட்ட பதிவில் ஒரு அன்பர் பின்னூட்டியிருந்தார்.

வலைப்பூ உலகில் மேலே குறிப்பிட்ட முரன்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

பார்ப்பனர் என்று சாதிரீதியான அடையாளத்தை சுமக்க விரும்புபவருக்குத்தான் விடாது கறுப்பின் விமர்சனங்கள் உறுத்த வேண்டும். அதாவது பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வரலாறு, பண்பாடு இவற்றின் அவமானத்தின் அடையாளம்தான் பார்ப்பனியம், அப்படிப்பட்ட சாதி அடையாளத்தை விட்டொழிக்காதவரின் மன உணர்வுகளுக்கு ஏன் மரியாதை கொடுக்கிறீர்கள்?

இதே நேரத்தில் நியாயமாக மரியாதை கொடுக்க வேண்டிய மன உணர்வுகளுக்கு நீங்கள் இது போல் வெகுண்டு எழுந்து தங்களது தார்மீக ஆவேசத்தை என்றைக்காவது வெளிப்படுத்தியிருக்கிறீர்களா?

முஸ்லீம்கள் மீது இந்த வலைப்பூ உலகில் வளைத்து வளைத்து இன்றுவரை அவதூறு கிளப்பினார்களே அப்போழுது என்ன பூ பறிக்க போயிருந்தீர்களா? அல்லது தங்களது மனமும் இந்து/பார்ப்பன மன உணர்வின் குண்டு சட்டிக்குள்தான் ஓடுகிறதா?

ஒரு வன்னியரை, ஒரு தேவரை, ஒரு கவுண்டனை, ஒரு செட்டியாரை விமர்சனம் செய்து எழுதினால் எதிர் வினைகள் வருமா?

பார்ப்பன் சாதியின் பண்பாட்டு அடக்குமுறைகள் உண்மையில்லையா? அல்லது அந்த உண்மைகளை சொன்னால் எதிர்வினை வருவது உண்மையில்லையா? அல்லது பெரும்பான்மை மக்களிடம் எந்த வகையிலும் ஐய்க்கியம் ஆகமலேயே இந்து மத பிரச்சனைகளுக்கு மட்டும் நயவஞ்சகமாக அந்த் மக்களின் பெயரில் அவதூறு கிளப்புவது உண்மையில்லையா?

தமிழ்மணம் மீதான பார்ப்பனியம் என்ற அடிப்படையிலான விமர்சனங்களை ஒரு பக்குவப்பட்ட குழுவாக தமிழ்மணம் எதிர்கொள்ளுவார்கள் என்றுதான் நான் கருதுகிறேன். அந்த குழுவுக்கு சாதி சார்பு இல்லையெனில் சாதியின் அழிவு அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விசயம் எனில். அந்த சாதி அழிவில் பார்ப்பன சாதியும்(கருத்து/தத்துவம்) இருக்கும்.

அப்படிப் பட்ட சூழலில் விடாது கருப்பின் விமர்சனங்கள், நாமெல்லோரும் அழிய விரும்பும் அந்த சாதியை, தாங்கும் மனிதர்களுக்கு மட்டுமே வருத்தும் கொடுக்க வேண்டும்.

விடாது கருப்பின் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு.

விடாது கருப்பு தமிழ்மணத்தையே நேரடியாக இவ்வாறு பார்ப்பன சாதியுடன் அடையாளப்படுத்தி விமர்சனம் செய்திருந்தால் உண்மையென்ன என்பதைப் பொறுத்து அம்பலப்பட்டு அசிங்கப்படப் போவது யார்?

ஒன்று தமிழ்மணம் அல்லது விடாது கருப்பு... சரிதானே..

உஷாவின் பதிவுகளை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த பதிவின் நோக்கம் ஒரு தலை பட்சமானது. வலைப்பூ ஜனநாயகத்துக்கு ஆப்பு வைக்க விழையும் ஒரு நேர்மையற்ற முயற்சி.

தகுதியில்லாத எதுவும் மக்கள் சபையில் தனிமைப்பட்டுப் போகும். அதுவும் இந்திய சமூகத்தின் சலுகைப் பெற்ற வர்க்கமாகிய ஒரளவு அறிவு வளர்ச்சி கொண்டவர்களின் வலைப்பூ உலகில் தரமில்லாத நேர்மையில்லாத தகுதியில்லாத விசயங்கள் தனிமைப்பட்டுப் போகும் என்பதை நம்புங்கள். எழுதும் நீங்கள் மட்டும் அறிவு ஜீவிகள் அல்ல.

இது விடாது கருப்பு, அசுரன், குழலி, உஷா என அனைவருக்கும் பொருந்தும்.

அப்படி ஆட்டம் போடும் ஆத்மாக்களை போதுமான அளவு அம்பலபடுத்தி எழுதினாலே போதும் அல்லது கண்டு கொள்ளாமல் விட்டால் போதும் அவர்களின் ஆட்டம் குறைந்து விடும் பிறகு அவர்களின் தனிமையே தகுந்த தண்டனை கொடுக்கும்.

அய்யா!....வலைப்பூ உலகில் வலம் வருபவர்கள் முட்டாள்களில்லை. குறைந்த பட்சம்(முழுமையாக இல்லாவிட்டாலும்) நல்ல விசயங்களை அவர்களால் தரம்பிரித்து பார்க்க முடியும் என்பதில் சிறிது நம்பிக்கை வையுங்கள்.
********************

குழலி,

சாதி வேண்டாம் என்று சொல்லுபவர்கள்(நீங்கள் சாதியின் அழிவில் விருப்பம் கொண்டவர் என்று assume செய்து கொள்கிறேன்) குறிப்பிட்ட சாதியை கேவலமாக திட்டுவதை கண்டிப்பது ஏன்?

இதை வைத்து உடனே தாழ்த்தப்பட்ட சாதியை திட்டுவதை நீங்கள் கண்டிக்க மாட்டீர்களோ என்று திரிபுவாதிகள் கேள்வி கேட்க்கக் கூடும். அய்யா தாழ்த்தப்பட்டவன் தனது சாதியை பெருமையாக பறைசாற்றுவதில்லை. ஒரு சாதியின் மீதான விமர்சனம் எந்த நோக்கத்தில் வருகிறது என்பதுதான் அந்த விமர்சனத்தை மதிப்பிட தேவைப்படும் விசயம்.

கருப்புவின் பண்படாத விமர்சனங்கள் பார்ப்பன சாதிப் பெருமையை target செய்துதான் வருகின்றன.

அது அந்த சாதியை தாங்குபவர்கள் கவலை. அப்படிப்பட்டவர்களின் கவலைக்கு மரியாதை கொடுத்து குழலியின் பதிவின் முதல் வரிகளில் கண்டனம் வேறு..அய்யோ.. அய்யோ...

விடாது கருப்பே தனது பதிவில் சாதி கடந்து பிறப்பால் பார்ப்பனர்களான ஆனால் அவரது பார்வையில் சக மனிதர்களானவர்களனவர்களைப் பற்றி நல்ல விதமாக கூறியுள்ளார்.
ஆக அவரது target சாதி வெறியர்கள்தானேயொழிய பிறப்பால் பார்ப்பனர் என்று சாதி சான்றிதழில் பதியப் பெற்றவர்கள் அல்ல என்று தெரிகிறது.

விடாது கருப்பின் உள்மன புரிதலை என்னால் துள்ளியமாக சொல்ல முடியாது. ஆனால் அவரின் எழுத்துக்களில் இருந்து புரிய வரும் விசயம் இதுதான்.

குழலி மற்றும் உஷா அவர்கள் தங்களது கண்டனத்தை திருப்பப் பெற வேண்டும் அல்லது அவர்களை மேல் சாதி வெறியர்கள் என்றுதான் அடையாளம் காண வேண்டியிருக்கும். அப்படி ஒரு துரதிருஷ்டமான சூழல் ஏற்ப்படும் எனில் நான் மிகவும் வருத்தமுறுகிறேன்.

நன்றி,
அசுரன்.

Tuesday, July 11, 2006

அழிவில் லாபமும், லாபத்தால் அழிவும் - பாகம் II

இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம்!

இந்த கட்டுரையின் முதல்பாகம்: இயற்கையின் அழிவில் இன்பம் காண்போம் - பாகம் 1

"தனிச் சொத்துடைமை நம்மை முட்டாள்களாகவும் ஒரு தரப்பானவர்களாகவும் செய்து விட்டபடியால், ஒரு பொருள் நம்மிடம் இருந்தால்தான் அது நம்முடையதாகிறது" என்றார் கார்ல் மார்க்ஸ். பொதுச் சொத்துகளையும் இயற்கையையும் வீணாக்கும் பொறுப்பற்ற தன்மை மக்களிடம் நிலவுகிறதென்றால் அதற்கு முழு முதற்காரணம் முதாலாளித்துவம் அவர்களிடம் தோற்றுவித்திருக்கும் சிந்தனையும் பண்பாடும்தான்.


முதலாளித்துவத்தால் இன்னமும் தின்று செரிக்கப்படாமல் மக்களிடம் எஞ்சியிருக்கும் மரபுகளும், விழுமியங்களும், பாட்டாளி வர்க்கத்திற்கேயுரிய பொதுமை நாட்டமும்தான் "நமக்கு சொந்தமில்லாததையும் நம்முடையதாகக் கருதும்" பண்பாட்டை மக்களிடம் நிலவச் செய்திருக்கின்றன.

முதலாளித்துவமோ தனக்குச் சொந்தமில்லாத எந்தப் பொதுச் சொத்தையும் நாசமாக்குகிறது. பாலாறும், ஒரத்துப்பாளையம் அணையும், கங்கை, யமுனையும் சில எடுத்துக்காட்டுகள். முதலாளிகள் இயற்கையை நேசிக்குமாறு செய்யும்பொருட்டு இயற்கை வளங்களை ஹார்டினின் அறிவுரைப்படி தனியார்மயமாக்கி விடலாம்தான். ஆனால் அவற்றைச் சூறையாடுவதன் வாயிலாகத்தான் முதலாளித்துவம் தன்னுடைய நேசத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது.


ஆயிரம் ஆண்டுகளாய் சேமிக்கப்பட்ட பிளாச்சிமடாவின் நிலத்தடி நீர் வளத்தை இரண்டே ஆண்டுகளில் கொக்கோ கோலா ஏன் உறிஞ்சித் தீர்க்க வேண்டும்? பல லட்சம் ஆண்டுகளாய் சூரியனின் வெப்பத்தால் உருவாகிச் சேமிக்கப்பட்டிருக்கும் நிலக்கரியையும், எண்ணெய் வளத்தையும் சில பத்தாண்டுகளிலேயே சுரண்டி எடுத்து விட்டு "சூரிய ஒளியிலிருந்தே மின்சாரம்", "புதுப்பிக்கப்படக் கூடிய எரிபொருள்", "காற்றிலிருந்து மின்சாரம்", "கடல் நீரிலிருந்து குடிநீர்" என்று எதற்காகத் தவிக்க வேண்டும்?


பிளாச்சிமடாவின் நிலத்தடி நீரையும் வளைகுடாவின் எண்ணெயக் கிணறுகளையும் வற்றச் செய்தவர்கள் ஏழைகளால் பெற்றுப் போடப்பட்ட மக்கள் கூட்டமல்ல. யாரிடம் இயற்கை வளங்களை ஒப்படைக்க வேண்டுமென ஹார்டின் சொல்கிறாரோ, அந்தப் பணக்கார வர்க்கத்தின் கார் தாகமும், பெப்சி தாகமும்தான் ஏனைய மக்களைத் தாகத்தில் தள்ளியிருக்கிறது.


இந்த பணக்கார வர்க்கத்தின் தாகமும் இயல்பான தேவையிலிருந்து எழுந்ததல்ல இதுவும் விளம்பரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட தாகம் மூலதனத்தின் தாகத்தை, முதலாளி வர்க்கத்தின் லாப வேட்கையைத் தணிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட தாகம்.


"இந்தத் தாகம் ரொம்பப் பெரிசு". அதனால்தான் பல ஆயிரம் விவசாயிகள், சில நூற்றாண்டுகளாய் விவசாயம் செய்தும் அழியாத நிலத்தடி நீர்வளத்தை, ஒரே ஒரு கம்பெனி இரண்டே ஆண்டுகளில் அழித்து விட்டது.


நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் என்ற ஒப்பந்தத்தின் வரம்புக்குள் நின்று பத்தாண்டுகளுக்கு உற்பத்தியை விரிவாக்காமல் ஒரே அளவில் வைத்திருப்பதற்கு கோக் நிறுவனம் ஒரு விவசாயி அல்ல தாமிரவருணியிலிருந்து நாளொன்றுக்கு எவ்வளவு தண்ணீர் எடுக்க வேண்டுமென்பது ஒப்பந்தக் காகிதத்தால் தீர்மாணிக்கப்படுவதில்லை. அது அட்லாண்டாவில் உள்ள கோக்கின் தலைமையகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. "தண்ணீருக்குப் பதிலாக கோக்" என்பதைத் தனது முழக்கமாக வைத்துள்ள கம்பெனியின் தாகம் தாமிரவருணி ஆற்றையே பாட்டிலில் அடைத்தாலும் அடங்கப் போவதில்லை.

இயற்கையை ஓம்பும் விதத்திலோ, இயற்கை தன்னைப் புனரமைத்துக் கொள்ளூம் வேகத்தைக் கணக்கில் கொண்டோ முதலாளித்துவ சுரண்டலின் வேகம் தீர்மானிக்கப்படுவதில்லை. இலாபம் மட்டுமே அதன் உந்து சக்தி. எனவே இயற்கை வளங்களையும் மனித வளத்தையும் சுரண்டுவதில் முதலாளித்துவம் காட்டும் வரைமுறையற்ற வெறி என்பது அதன் இயல்பான பண்பு.


குடகு மலையின் காடுகளை அழித்து பல்லாயிரம் ஏக்கர் காப்பித் தோட்டம்! மழை பொய்த்தது, காவிரி வறண்டது, விவசாய்ம் அழிந்தது, திக்கற்றவர்களாக திருப்பூருக்கு ஒடிவரும் விவசாயிகளை 12 மணிநேரம், 15 மணிநேரம் என்று வேலை வாங்கி அவர்களையும் 40 வயதுக்குள் முடமாக்கி, மனிதக் கழிவுகளாக்கி வெளியேற்றுகிறது முதலாளித்துவம்.

"ஒவ்வொரு அழிவிலும், ஒவ்வொரு துயரத்திலும் தனக்கான சந்தையைக் கண்டுபிடிக்கிறது முதலாளித்துவம், மேற்பரப்பு நீரை அழித்துவிட்டு நிலத்தரி நீர்வேட்டைக்கு பம்பு செட்டு வியாபாரம் ஒருபுறத்தில் குடிநீரைக் கழிவுநீராக்கும் ஆலைகள் மறுபுறம் கடல்நீரைக் குடிநீராக்கும் எந்திரங்கள்!"

இயற்கையின் ஆதாரப் பொருளான தண்ணீரை நஞ்சாக்குவதைப் போலவே, இயற்கையின் அதிஉன்னதப் படைப்பான மனிதனையும் அது நஞ்சாக்குகிறது. மண்ணுக்கும் மனிதனுக்கும், நீர் வளத்துக்கும், மனிதவளத்துக்குமிடையே முதலாளித்துவம் பாராபட்சம் காட்டுவதில்லை. பொரி பொரியாய்த் தெறித்து ஈரப்பசை ஒட்ட மறுக்கும் பாலாற்றின் படுகைக்கும், சொறியும் சிரங்கும் வந்து தோல் வறண்டு போன அந்தப் பகுதி மக்களின் தோலுக்கும் என்ன வேறுபாடு? ஒரத்தப்பாளையம் கழிவுநீருக்கும் சிறுமி செல்வராணியின் கொப்புளங்களிலிருந்து வழியும் சீழுக்கும் என்ன வேறுபாடு?

"சமூகத்தைப் போலவே இயற்கை சம்பந்தமாகவும் கூட இக்காலத்தில்(முதலாளித்துவ) உற்பத்தி முறை உடனடியான விளைவுகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. பிறகு இந்த நோக்கத்தின் பால் திசைமுகம் திரும்பியுள்ள செயல்களின் எதிர்கால விளைவுகள்.....பெரும்பாலும் நேர் முரணானவையாக மாறிவிடுகின்றன."


"உற்பத்தி செய்த, அல்லது விலைக்கு வாங்கப்பட்ட சரக்கை வழக்கமான பேராசைப்பட்ட லாபத்துடன் விற்றவுடன் அவன்(முதலாளி) திருப்தியுறுகிறான். அதன் பிறகு அந்தச் சரக்கிற்கோ அதை வாங்குபவர்களுக்கோ என்ன நேர்கிறது என்பதைப் பற்றி அவன் கவலை கொள்பவனாக இல்லை" என்றார் எங்கெல்ஸ்.


முதலாளித்துவத்தின் அருந்தவப் புதல்வனான ப.சிதம்பரம் எங்கெல்சின் கூற்றைப் பொய்பித்துக் காட்டிவிட்டார். சிகரெட் தயாரிக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனமான ஐ.டி.சி. நடத்திய வரி ஏய்ப்பை "மன்னித்து" 350 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தார். புற்று நோய்க்கான மருந்தின் விலையை 100இலிருந்து 1000 ரூபாயாக உயர்த்திக் கொள்ளூம் ஏகபோக உரிமையை நோவார்ட்டிஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு நீதிமன்றத்தில் பெற்றுக் கொடுத்ததன் மூலம், சிகரெட் புகைப்பவர்களூக்கு என்ன நேர்கிறது என்பது குறித்தும் தான் "கவலை" கொண்டிருப்பதை அவர் நிரூபித்துக் காட்டினார்.


ஒவ்வொரு அழிவிலும், ஒவ்வொரு துயரத்திலும் தனக்கான சந்தையைக் கண்டுபிடிக்கிறது முதலாளித்துவம். மேற்பரப்பு நீரை அழித்துவிட்டு நிலத்தடி நீர் வேட்டைக்கு பம்பு செட்டு வியாபாரம் நிலத்தடி நீரை அழித்து முடித்தவுடனே கடின நீரை நன்னீராக்கும் கருவிகளின் விற்பனை ஒருபுறத்தில் குடிநீரைக் கழிவுநீராக்கும் ஆலைகள் மறுபுறம் கடல்நீரைக் குடிநீராக்கும் எந்திரங்கள்!


"இயற்கையை ஆளும் விதிகளைக் கண்டு பிடிப்பதென்பது நுகர்வுப் பொருள் அல்லது உற்பத்திச் சாதனம் என்ற முறையில் மனிதனுடைய தேவைகளுக்கு அதனைக் கீழ்ப்படுத்துகின்ற சூழ்ச்சியாகவே தோன்றுகிறது" என முதலாளித்துவத்தின் கையில் அகப்பட்ட இயற்கையின் அவலநிலையையும், அறிவியலின் தரத்தையும் விமரிசித்தார் மார்க்ஸ்.


இயற்கையின் மீதான் தனது வினைகள் எத்தகைய எதிர் வினைகளைத் தோற்றுவிக்கக் கூடும் என்பது குறித்து முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை. "ஆறு வற்றினால் நிலத்தடி நீர், அதுவும் வற்றினால் பனிப்பாறைகளை உருக்கு, கடல்நீரைக் குடிநீராக்கு..." என்று வெட்டுக்கிளியைப் போல இயற்கையைச் சூறையாடியபடியே செல்கிறது. ஒவ்வொரு அழிவும், ஒவ்வொரு மாற்றமும் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற தூரப்பார்வை அதற்குக் கிடையாது.


"மனிதகுலம் உயிர்வாழ்வதன் நோக்கம் உற்பத்தி உற்பத்தியின் நோக்கம் லாபம்" என்ற கிட்டப்பார்வைதான் முதலாளித்துவத்தை வழிநடத்துகிறது. இயற்கையை அழிக்கும்போதும், மாற்றியமைக்கும் போதும் அது மனிதனின் மீது என்ன விளைவுகளாத் தோற்றுவிக்கும் என்பதைப் பற்றியும் முதலாளித்துவம் கவலைப்படுவதில்லை.


இயற்கையின் அதியுன்னதப் படைப்பான மனிதன் உயிரியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் நாசமாக்கப்படுகிறான். கார்கள் வெளியிடும் புகையைச் சுவாசிப்பதன் விளைவாக மட்டும் மனிதனின் உடலில் ஈயத்தின் அளவு 100 மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது ஒரு ஆய்வு. "ஒரு நுகர் பொருள் தோற்றுவிக்கும் நோயைக் குணப்படுத்த இன்னொரு நுகர்பொருள்" என்று மனிதனின் உடலையே தனது லாப வேட்டைக்கான சுரங்கமாக மாற்றுகிறது முதாலளித்துவம். முதலாளித்துவ போட்டியும் நெருக்கடியும் வேலை இழப்பும் பதட்டமும் நிச்சயமற்ற வாழ்க்கையும் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை சின்னாபின்னமாக்கி மனநோயாளிகளைப் பெருக்குகிறது.


பல லட்சும் ஆண்டுகளாய் நிலத்திடியில் சேமிக்கப்பட்ட எரிபொருட்களைச் சூறையாடும் அந்த லாபவெறி, மனிதன் எனும் இயற்கையின் அற்புதப் படைப்பையும் ஊனப்படுத்தி சிதைக்கிறது. "இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு மனிதர்களைக் கொல்ல வேண்டும்" என்று பேராசிரியர் ஹார்டினைச் சொல்ல வைப்பது இயற்கையின் பால் அவர் கொண்ட காதல் அல்ல அது லாபத்தின் மீதான் காதல். இயற்கையின் சிறந்த படைப்பாகக் கூட மனித உயிர்களை மதிப்பிடவிடாமல் அவருடைய கண்ணை மறைக்கின்ற லாபவெறி!


முதலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரை இயற்கையைப் போலவே மனிதனும் ஒரு உற்பத்திச் சாதனம் இயற்கை வளத்தைப் போலவே மனித உழைப்பும் ஒரு விற்பனைச் சரக்கு. தேய்ந்த போன் உற்பத்திச் சாதனங்களைத் தூக்கியெறிவதைப் போல, விற்க முடியாமல் தேங்கிப் போன தானியங்களைக் கடலில் கொட்டுவதுபோல, தேவைப்படாத மனிதர்களையும் ஹார்டின் அழிக்க விரும்புகிறார். எனவே அவர்களை உபரி உற்பத்தி பொருட்களாக கருதுகிறார்.


யார் எந்தப் பொருளை எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய பன்னாட்டு முதலாளிகளை அழைத்து ஆணை பிறப்பிக்க முடியாத ஹார்டின். யார் எவ்வளவு பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக மக்களூக்கு ஆணையிடுகிறார். "பொருளுற்பத்தியைக் கட்டுபடுத்த முடியாது, அதற்கேற்ப மனித உற்பத்தியைக் கட்டுப்படுத்திக் கொள்ளூங்கள்! முதலாளிகளின் லாபம் சேர்க்கும் "மனித உணர்ச்சி"யை கட்டுபடுத்த முடியாது அதற்குப் பொருத்தமாக உங்கள் புலனுணர்ச்சியைக் கட்டுபடுத்திக் கொள்ளுங்கள்!" என்று மக்களை, குறிப்பாக ஏழை மக்களை எச்சரிக்கிறார் ஹார்டின்.



அராஜகம் என்பது முதலாளித்துவத்தின் பிறப்பியல்பு. சமூகமே உற்பத்தியில் ஈடுபடுவது, ஒரு சிலர் மட்டும் அதை நுகர்வது ஒரு நிறுவனத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி, மொத்த உற்பத்தியில் அராஜகம் - என்பது முதலாளித்துவத்தின் முரண்பாடுகள். தானே தோற்றுவிக்கும் இந்த முரண்பாட்டிலிருந்து தான் விடுபடுவதற்காக போர்கள், பட்டினிக் கொலைகள் மூலம் முதலாளித்துவம் மனிதனைச் சூறையாடுகிறது, இயற்கையையும் சூறையாடுகிறது.


தன்னளவில் ஒத்திசைவு கொண்டதாக இயங்கும் இயற்கையை ஒத்திசைவு அற்ற மனித சமூகம் எதிர்கொண்டு நிற்க இயலாது. "தனது உற்பத்தி சக்திகளை ஒரே திட்டத்தின் அடிப்படையில் ஒன்றோடொன்று இணக்கமாகச் சேர்ந்து கொள்வதைச் சாத்தியமாக்குகின்ற சமூகம் மட்டும்தான்" இயற்கையுடனான உறவைச் சரியான முறையில் பேண முடியும்.


இயற்கை பதிலடி கொடுக்கிறது. பெருமழையாக, வறட்சியாக, பனிப்பொழிவாக, சூறைக்காற்றாக..., உடனுக்குடனோ, சற்றுத்தாமதித்தோ பதிலடி கொடுக்கிறது. ""இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழிவாங்குகிறது'' என்று குறிப்பிட்டார் எங்கெல்ஸ்.

தன்னளவில் ஒத்திசைவு கொண்டதாக இயங்கும் இயற்கையை ஒத்திசைவு அற்ற மனித சமூகம் எதிர்கொண்டு நிற்க இயலாது. "தனது உற்பத்தி சக்திகளை ஒரே திட்டத்தின் அடிப்படையில் ஒன்றோடொன்று இணக்கமாகச் சேர்ந்து கொள்வதைச் சாத்தியமாக்குகின்ற சமூகம் மட்டும்தான்' இயற்கையுடனான உறவைச் சரியான முறையில் பேண முடியும்.

இயற்கையைத் தனது உடலாகவும், உழைப்பைத் தனது சாரமாகவும் கருதுகின்ற பொதுவுடைமைச் சமூகத்தில் மட்டுமே இயற்கையுடனான முரண்பாட்டை மனிதகுலம் சரியாகக் கையாள முடியும். தனிச் சொத்துடைமையை மனிதனின் இயல்புணரயூச்சியாக அங்கீகரிக்கும் சமூகம், இயற்கையை அழிப்பதற்கு முன், தன்னுடைய சொந்த அழிவை, தானே விரைவுபடுத்திக் கொள்ளும்.

*****

உலகமயமாக்கம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்கத்தின் உள்ளடக்கம் முதலாளித்துவம். வேறொரு வகை முதலாளித்துவச் சித்தாந்தத்தால் இதனை முறியடிக்க முடியாது. மனித குலமும் உயிரினச் சூழலும் பிழைத்திருக்க வேண்டுமாயின் முதலாளித்துவம் அழிந்தாக வேண்டும்.

""பொதுச்சொத்தின் அழிவா, தனியார்மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்'' என்கிறார் பேராசிரியர் ஹார்டின். ""இரண்டும் ஒன்றுதான்'' என்ற பதிலே இத்தகைய அற்பர்களுக்குப் போதுமானது.

எனினும் ஹார்டினையொத்த முதலாளித்துவ அற்பமதியினரின் வாதங்களை முன் ஊகித்துத் தனது மூலதனத்தில் விடையளித்திருக்கிறார் மாமேதை கார்ல் மார்க்ஸ்:


"ஒரு மனிதன் பிறிதொரு மனிதனைத் தனது தனிச்சொத்தாக வைத்திருந்ததென்பது எங்ஙனம் (இன்று) அபத்தமானதாக ஆகிவிட்டதோ, அதேபோல, ஒரு உயர்ந்த சமூக பொருளாதார அமைப்பின் பார்வையில், தனிப்பட்ட சிலர் (இன்று) இந்தப் புவியில் கொண்டிருக்கும் தனிச் சொத்துடைமை என்பதும் (நாளை) அபத்தமானதாகவே கருதப்படும். ஒரு முழுச் சமூகமோ, ஒரு தேசமோ, அல்லது சமகாலத்தில் நிலவும் எல்லாச் சமூகங்களும் இணைந்தால்கூட யாரும் இந்தப் பூமியின் உடைமையாளர்களாகிவிட முடியாது. அவர்கள் இந்தப் பூமியில் (வாழப்)பெற்றிருக்கிறார்கள், பயனடைகிறார்கள் அவ்வளவுதான். "ஒரு நல்ல குடும்பத் தலைவன் செய்வதைப் போல', தனக்குப் பின்னர் வரும் தலைமுறைகளுக்கு இந்தப் பூமியை மேலும் சிறப்பான நிலையில் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டும்.'

kUijad;

Gjpa fyhr;rhuk;- nrg;lk;gH 2005

********************

புதிய கலாச்சாரம் - செப்டம்பர் 2005 இதழில், மருதையன் எழுதி பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இங்கு இரண்டு பகுதிகளாக பதிக்கப்படும். மேலே காண்பது இரண்டாம் பகுதி.

இந்தக் கட்டுரைக்கு தொடர்புடைய இன்னொரு சிறு கட்டுரை:

Monday, July 03, 2006

இயற்கையின் அழிவில் இன்பம் காண்போம் - பாகம் 1

இயற்கையை உறிஞ்சும் ஏகாதிபத்தியம்!

ஆறு, கடல், காடு, மலைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கக் கோரும் உலக முதலாளி வர்க்கத்தின் கரங்களில் வேதப்புத்தகமாகவும் நீதிநூலாகவும் பயன்பட்டு வருகிறது ஒரு கட்டுரை. "பொதுச் சொத்தின் அவலம்" (The Tragedy of the commons) என்ற அந்தக் கட்டுரையை எழுதியவர் காரட் ஹார்டின் என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்.

1968 டிசம்பரில் 'சயின்ஸ்' என்ற அமெரிக்க இதழில் வெளியான அந்தக் கட்டுரை மாபெரும் அறிவியல் ஆய்வாக முதலாளிவர்க்கத்தால் கொண்டாடப்படுகிறது. இதுவரை 600 பதிப்புகள் வெளியாகியுமிருக்கிறது.


ஹார்டின் முன்வைக்கும் "அறிவியல் பூர்வமான" ஆய்வின் முடிவுகளை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கூறலாம்:


"இந்த உலகின் வளங்கள் வரம்புக்குட்பட்டவை. எனவே அவற்றை நுகரும் மக்கத்தொகையும் வரம்புக்குட்பட்டதாகவே இருக்க முடியும். ஆனால் ஏழைகள்தான் வகைதொகையின்றி பெற்றுத் தள்ளுகிறார்கள். வேண்டுகோள்களால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. இதற்குரிய "தண்டனை" வழங்கப்பட வேண்டும். பொறுப்பற்ற பெற்றோர்களின் பிள்ளைகள் பட்டினி கிடந்து சாகவேண்டியுதுதான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.


பொதுச் சொத்து என ஒன்று இருப்பதனால் தான் இப்படி உருவாகும் கூட்டம் அதனை நாசமாக்குகிறது. எனவே பொதுச் சொத்துக்களை, ஆறு, கடல், காடு போன்றன தனியாருக்கு விற்றுவிடலாம் அல்லது அவற்றைப் பயன்படுத்தும் உரிமை குறிப்பிட்ட அளவு சொத்துள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்ற நிலையை உருவாக்க அவற்றை ஏலம் விடலாம். பொதுச்சொத்தின் அழிவா தனியார்மயமா என்பதை நாம் உடனே முடிவு செய்தாக வேண்டும்" என்று கூறுகிறார் ஹார்டின்.


கார்ல் மார்க்ஸ் தன்னுடைய மூலதனத்தில் ஏளனம் செய்து ஒதுக்கிய மால்தஸ் பாதிரியின் மக்கள் தொகைக் கோட்பாடுதான் ஹார்டின் முன் வைக்கும் "அறிவியல்" ஆய்வின் வழிகாட்டி எனினும் இதனை "இன்னொரு அமெரிக்கக் குப்பை" என்று நாம் புறந்தள்ளி விடவும் முடியாது. இந்தக் "குப்பை" தான் இன்று உலகவங்கியின் பைபிள். உலக வங்கியின் ஆணைக்கிணங்க மகாராட்டிர அரசு கொண்டு வந்துள்ள "நீர்வள ஒழுங்குமுறைச் சட்டம்" என்பதே "ஹார்டின் சட்டம்" தான்.

"தனது சொத்தாக இல்லாத எதையும் ஒரு மனிதன் பாதுகாக்கமாட்டான். இது மனித இயல்பு எனவே இயற்கை வளங்களைத் தனிச் சொத்தாக்குவது ஒன்றுதான் அவற்றைப் பாதுகாப்பதற்குகந்த அறிவியல் பூர்வமான வழி" என்கிறார்கள் பன்னாட்டு முதலாளிகள்"

"மாநிலத்தின் நீர்வளங்கள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் அதிகாரத்தை முதலாளிகள் அதிகாரிகள் வல்லுனர்கள் அடங்கிய மூவர் குழுவிடம் ஒப்படைப்பது ஏக்கர் ஒன்றுக்கு ஆண்டுக்கு பாசன வரி ரூ. 8000. இரண்ரு பிள்ளைகளுக்கு மேல் பெற்ற விவசாயிகளுக்கு ரூ. 12000" என்ற விதிமுறைகளின் பொருள் வேறேன்ன?


"எனக்குப் பிள்ளையில்லை நிலமும் இல்லை. அரசாங்கம் எனக்கு நிலம் தரப்போகிறதா?" என்று மகாராட்டிர அரசை நோக்கிக் கேள்வி எழுப்பினார் ஒரு விவசாயி. உடைமைகள் ஏதுமற்ற இந்தப் பாமர விவசாயியின் கேள்வி உலக முதலாளி வர்க்கத்தின் நோக்கத்தை அம்பலமாக்குகிறது. நீர்வளத்தைப் பாதுகாப்பதோ இயற்கை வளங்களைக் காப்பாற்றுவதோ உலக முதலாளிகளின் நோக்கமல்ல அவற்றைத் தங்களது தனிச் சொத்தாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது வேட்கை.


"உங்களுக்கு வேலை கொடுப்பதற்க்காகத்தான் நான் ஆலை தொடங்குகிறேன்" என்று தொழிலாளியிடம் கூறும் இந்தப் பரோபகாரிகள் "இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டு"த்தான் அதனைத் தாங்கள் சொத்தாக மாற்றிக் கொள்ள விரும்புவதாக நம்மிடம் சொல்கிறார்கள்.


"இது பேராசை அல்ல இயற்கையைப் பாதுகாப்பதற்க்கு இதுதான் அறிவியல்பூர்வமான வழி" என்றும் நமக்கு விளக்கமும் சொல்கிறார்கள்.


"தனக்கு சொந்தமில்லாத எதையும் ஒரு மனிதன் பாதுகாக்க மாட்டான் ஏனென்றால் தனிச் சொத்தைச் சேர்ப்பதுதான் மனிதனின் இயல்புணர்ச்சி. எனவே பொதுச் சொத்தான இயற்கையைத் தனிச் சொத்தாக்குவதொன்றுதான் இயற்கையைப் பாதுகாப்பதற்கான வழி" என்பதே முதலாளி வர்க்க அறிவுத்துறையினரும் பன்னாட்டு நிறுவனங்களும் முன் வைக்கும் வாதங்கள்.


சொத்து சேர்ப்பது மனிதனின் இயல்புணர்ச்சி! பொதுச் சொத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்கு முதலாளித்துவம் முன்வைக்கும் "அறிவியல் பூர்வமான" இந்தக் காரணத்தைத்தன் பொதுவுடமைக் கொள்கையை எதிர்ப்பதற்க்கும் முதாலாளித்துவம் பயன்படுத்தி வருகிறது. கம்யூனிசத்தை எதிர்ப்பதற்குப் பயன்பட்ட இந்தக் காரணம் இன்று தேசியத்தை எதிர்ப்பதற்கும் உலகின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் முதலாளித்துவ சர்வதேசியத்தை நியாயப்படுத்தவும் ஏகாதிபத்தியங்களால் பயன்படுத்தப் படுகிறது.


பொதுச் சொத்தைச் சூறையாடத் தூண்டும் இதே "இயல்புணர்ச்சி"தான் கோடிக்கணக்கான சிறு உடைமையாளர்களின் தனிச் சொத்தைச் சூறையாடுமாறும் பன்னாட்டு முதலாளிகளைத் தூண்டுகிறது.


எனவே, முதலாளித்துவச் சொத்துடைமையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, அதன் சமூக வீரோதத் தன்மையை அம்பலப்படுத்தாத வரை, இயற்கையையே உடைமையாக்கிக் கொள்ள எத்தனிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சதியை நாம் முறியடிக்கவியலாது.


எனவேதான், தண்ணீர் முதல் கடல், காடு, மலை, உயிரணுக்கள், விதைகள் ஈறான அனைத்தையும் தனியார்மயமாக்கும் ஏகாதிபத்திய வெறித்தனத்தை இன்று கம்யூனிஸ்டுகள் மட்டுமின்றி கம்யூனிஸ்டு அல்லாத பலரும் எதிர்த்துப் போராடுமாறு தள்ளப்படுகிறார்கள்.


ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற அடிப்படையில் இத்தகைய போராட்டங்கள் வரவேற்க்கப்பட வேண்டியவையெனினும் இவர்கள் முன்வைக்கும் மாற்றுகள் பலவீனமானவை, முரன்பாடானவை. முதலாளித்துவ சொத்துடமையை இவர்கள் ஏற்றுக் கொள்வதால் தற்போதிருக்கும் நிலையை தக்க வைப்பது, சிறு தொழில் மற்றும் சிறு உடைமைகளைப் பாதுகாப்பது, மரபுரிமைகளைக் காப்பது என்ற பல கோணங்களிலேயே இந்த மாற்றுகள் முன்வைக்கப்படுகின்றன.


சூழலியம், புவி ஜனநாயகம், மையப்படுத்துதல் எதிர்ப்பு, மரபுக்குத் திரும்புதல் போன்றவை எவையும் முதலாளித்துவத்தைப் தகர்ப்பது பற்றிப் பேசுவதில்லை. "சொத்து சேர்ப்பது மனிதனின் இயல்பு" என்று கூறும் முதலாளித்துவத்தை இவர்கள் யாரும் சித்தாந்த ரீதியில் கேள்விக்குள்ளாக்குவதில்லை. மாறாக, வெவ்வேறு விகிதங்களில் அந்தக் கருத்துடன் உடன்படுகிறார்கள்.


ஆனால், "சொத்துரிமை மனிதனின் பிரிக்கவொண்ணாத உரிமை" என்பதை ஏற்றுக் கொண்டுவிட்டால் சொத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் உரிமை, அதாவது அடுத்தவன் சொத்தை அபகரிக்கும் உரிமையும் மேற்படி பிரிக்கவொண்ணாத உரிமையின் அங்கமாகி விடுகிறது.


எனவே, முதலாளித்துவச் சொத்துடமையைக் கேள்விக்குள்ளாக்காதவரை, அதன் சமூக விரோதத் தன்மையை அம்பலப்படுத்தாத வரை, இயற்கையையே உடைமையாக்கிக் கொள்ள எத்தனிக்கும் இந்த ஏகாதிபத்தியச் சதியை நாம் முறியடிக்கவியலாது.

*************


அனைவரும் அறிந்த ஒரு உதாரணத்திலிருந்து தொடங்குவோம். நகராட்சிக் குழாயில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. குடம் நிறைந்து தண்ணீர் சாலையில் ஓடுகிறது. ஒரு வழிபோக்கர் குழாயை மூடிவிட்டுச் செல்கிறார். அவர் அந்த குழாயின் உரிமையாளர் அல்ல.


விளைந்த பயிரை மாடு மேய்ந்து கொண்டிருக்கிறது. அந்த வழியே செல்லும் விவசாயி அதனை விரட்டிவிட்டுச் செல்கிறார் அவர் அந்த நிலத்தின் உடைமையாளரல்ல.


தண்ணீரின் பயன் மதிப்பையும் தானியத்தின் பயன் மதிப்பையும் அவர்கள் உணர்ந்திருப்பத்ன் வெளிப்பாடுதான் அவர்களது நடவடிக்கைகள். ஒழுகும் குழாயைக் காணும் ஹார்டினும் பதறுகிறார். சுமார் எத்தனை லிட்டர் தண்ணீர் வீணாகியிருக்கும் என்று மதிப்பிட்டு அதனை 12 ரூபாயால் பெருக்கிப் பார்க்கிறார். தண்ணீருக்கு முதலாளித்துவம் நிர்ணயித்திருக்கும் சந்தை மதிப்பின்படி சுமார் 1200 ரூபாய் தண்ணீர் வீணாகியிருக்கிறது. "தனியாமயம்தான் இதற்குத் தீர்வு" என்று உடனே குரல் கொடுக்கிறார்.


மண்ணுக்கும் மனிதனுக்கும், நீர் வளத்துக்கும், மனிதவளத்துக்குமிடையே முதலாளித்துவம் பாராபட்சம் காட்டுவதில்லை. பொரி பொரியாய்த் தெறித்து ஈரப்பசை ஒட்ட மறுக்கும் பாலாற்றின் படுகைக்கும், சொறியும் சிரங்கும் வந்து தோல் வறண்ரு போன அந்தப் பகுதி மக்களின் தோலுக்கும் என்ன வேறுபாடு? ஒரத்தப்பாளையம் கழிவுநீருக்கும் சிறுமி செல்வராணியின் கொப்புளங்களிலிருந்து வழியும் சீழுக்கும் என்ன வேறுபாடு?

வழிப்போக்கனின் பார்வையில் அங்கே வீணாகிக் கொண்டிருந்தது பயன் மதிப்புமிக்க தண்ணீர். எனவேதான் அவர் குழாயை மூடுகிறார். ஹார்டினின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் குழாயை மூடுவதில்லை.


ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரை குடத்தில் நிரம்பியிருக்கும் தண்ணீருக்கும் வழிந்து தெருவில் ஓடும் தண்ணீருக்கும் வேறூபாடு இல்லை. ஏனென்றால் அது விலைமதிப்பு நிர்ணயிக்கப்படாத நகராட்சித் தண்ணீர், இலவசக் குடிநீர். சரக்காக மாற்றப்படும் வாய்ப்பில்லாத தண்ணீர், குடத்தில் நிரம்பினாலும் தெருவில் ஓடினாலும் அது அவர்களைப் பொருத்தவரை வீணானதுதான்.


மனிதன் உள்ளிட்ட இயற்கை அனைத்தையுமே முதலாளித்துவம் பண்டமாகவும், உற்பத்திச் சாதனமாகவுமே பார்க்கிறது. எனவே அத்தகைய பண்டம், தான் மட்டும் நுகரக் கூடியதாகவோ, தான் மட்டுமே சுரண்டக்கூடியதாகவோ, தன்னால் விற்கப்படக் கூடியதாகவோ இல்லாதவரையில் எந்த ஒரு பொருளின் பயன் மதிப்பையும் அது பொருட்படுத்துவதில்லை.

தொடரும்..............

kUijad;

Gjpa fyhr;rhuk;- nrg;lk;gH 2005

********************

புதிய கலாச்சாரம் - செப்டம்பர் 2005 இதழில், மருதையன் எழுதி பிரசுரிக்கப்பட்ட கட்டுரை இங்கு இரண்டு பகுதிகளாக பதிக்கப்படும். மேலே காண்பது முதல் பகுதி.

Related Posts with Thumbnails