துக்ளக் சோ நாறிய இடம்!
""அவா அவா செய்த கரொம வினையை அவா அவா அனுபவிச்சே ஆகணும்! போய் அம்பாளுக்கு நெய் தீபம் போடுங்கோ!'' என்று "மத்தவாளு'க்குத் தத்துவம் பேசும் பாரொப்பனக் கும்பல், செக்ஸ் அண்டு கிரைமாதிபதிகளான ஜெயேந்திரன், விஜயேந்திரன் வி\யத்தில் எவா எவாளப் பாத்தா டில்லியில காரியம் நடக்கும் என்று படைகட்டி வேலை செய்வதுடன் இந்தக் கயவரொகளின் பாங்கனாக துக்ளக், தினமலரொ வகையறாக்களை வைத்து இது பொய்வழக்கு, போலீஸ் ஜோடனை, மனித உரிமை மீறல் என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது.
குறுந்தொகைப் பாடல் கூறுவதைப் போல
""பாரொப்பன மகனே! பாரொப்பன மகனே!
பிரிந்தோரொ கூடுவதற்கான வேலைகளைச் செய்ய, ஊருக்குத் தெரியாமல் கூட்டிக் கொடுக்க பாரொப்பன மகனாம் பாங்கனை அழைப்பதே பழைய மரபு. இப்போது, ""ஆமாம், நான்தான் சங்கரொராமனைப் போட்டேன்! அனுராதா ரமணனை லுக்கு விட்டேன்! சொரொணமால்யாவுக்குச் சொடக்குப் போட்டேன்! இப்ப என்னாங்குறே? ஆதாரம் இருக்கா?'' என்று வக்கீலை வைத்து விவாதிப்பதோடு, துக்ளக், தினமலரை வைத்து ""போலீசை நம்பமுடியாது'' என்று புராணமும் பாட ஆரம்பித்து விட்டது பாரொப்பனக் கும்பல்.
""பேச நா இரண்டு உடையாய் போற்றி!'' என ஆரியமாயையில் அண்ணாதுரை சொன்னதுபோல, அவாளின் சாதிவெறி நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டாமா?
இன்று சங்கராச்சாரியை, பெரிசையும் சின்னதையும் போலீசு காவலில் நடத்திய விதம் "டூ மச்!' என்றும், மேலிடத்து உத்திரவு என்றும் புலம்பும் சோ பாரொப்பனக் கும்பல், சாதாரண மக்கள் போலீசாரால் சித்திரவதைக்குள்ளாகும்போதும், ஒரு குடம் தண்ணீருக்காகத் தடியடி நடத்தும் போதும் நியாய அநியாயங்களைப் பேசாமல், ""எது தருமம்'' (துக்ளக், 16.1.2002) என்று ""நதருமா அதருமௌ சரதி ஆவம் ஸ்வ இதி'' என்று லத்திக்கம்பால் வேத வியாக்கியானம் காட்டியதோடு, ""போலீசுக்காரரொ என்ன ஸ்கவுட்டா? கூட்டத்தினரைப் பாரொத்து, எல்லோரும் தயவு செய்து விலகிவிடுங்கள்ொ மகாத்மா காந்தி அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரொொ ராமகிரு\ொண பரமஹம்சரொ, ரமண மகரி\p சொல்லியிருக்கிறாரொ, எல்லோரும் அமைதியாக விலகவேண்டும் என்று கூறிவிட்டு மூலையில் போய் உட்காரொந்து கொள்ள முடியுமா? அதுதான் போலீசாரின் கடமையா? நாலு பேரையாவது பிடித்து அடி அடி என்று அடித்தால்தான் கூட்டமே சிதறி ஓடும். அது அவரொகளுடைய தருமம். போலீசு ஸ்டே\னில் ஒருவனை சித்திரவதை செய்தாரொகள் என்று செய்திவரும், உடனே எல்லோரும் பெரிய அட்டூழியம், போலீசு அராஜகம் என்று சொல்வோம். பிடித்தவனை நாலு அடி கொடுக்கட்டும், அப்படியாவது திருட்டுப் போன சாமான் கிடைக்கட்டும் என்பதுதானே நமது எண்ணமாக இருக்கும்?'' என்று போலீசுக்கு வக்காலத்து வாங்கிய சோ இப்போது உள்ளே இருப்பது மகா அயோக்கியனாக இருந்தாலும் அவாளாக இருப்பதால் ""அவருடைய பெயரைக் கெடுக்கக் கூடிய வதந்திகளைச் சேகரிப்பதுதான் போலீசின் வேலையாகி வருகிறது... அதுமட்டுமல்ல போலீசுத் துறையின் ஒலிபெருக்கியாகி போலீசுதரப்புப் பிரச்சாரம், புலனாய்வு என்ற அந்தஸ்தைப் பெற்று பத்திரிக்கைகளை பிட் நோட்டீஸ் பிரசுரங்களாக மாற்றிவிட்டது'' (22.12.2004, துக்ளக்) என்று போலீசு சொல்வதை அப்படியே ஏற்க முடியாது என்று தனக்கொரு நியாயம் பேசுகிறது ஆரியக் கைத்தடி.
போலீசு அத்துமீறலை உழைக்கும் மக்கள் கேள்வியின்றி ஏற்க வேண்டும் என்பதற்குப் புராணத்தையும், வேதத்தையும் பிட்நோட்டீசாக்கி நம்மிடம் விநியோகிக்கும் இந்த "நடுநிலைவாதி'க்கு, கொலைகாரப் பாவிக்கு லாடம் கட்டாமல், குற்றச் செயல்களை வௌpயிடுவதே அத்துமீறலாகப் படவேண்டிய அவசியமென்ன? திருமூலரைப் போல, இந்த சாலத்தனத்தைப் பாரொத்து ""நாதம் ஏது? வேதம் ஏது? நற்குலங்கள் ஏதடாொ வேதம் ஓதும் வேதியா விளைந்தவாறு பேசடா!'' என்று நாம் தான் ஏடு கிளப்பியாக வேண்டும்.
கருணாநிதி, புராணங்களை எடுத்துப் பேசினாலே, "இந்துக்களை இழிவுபடுத்துகிறாரொ' என்று நூல்விடும் தினமலரோ, தான் ஏற்றிப் போற்றும் விண்ணகக் கடவுளே பு+மிக்கு வந்தாலும் ஜெயலலிதா போலீசு பொய்வழக்கு போட்டுவிடும் என்று பயந்து ஔpவதாகக் கேலிச் சித்திரம் வரைகிறது. (பாரொக்க: தினமலரொ கேலிச் சித்திரம்) ஏழு லோகத்தையும் ஆட்டிப் படைப்பதால் ஏற்றி விடும் கடவுளை கேவலம் போலீசின் லத்திக் கம்புக்குப் பயந்தவனாய்க் காட்டுவது மட்டும் இந்துக்களுக்கு இழிவில்லையா? ஏற்கெனவே, பிட்டுக்குப் பிரம்படி வாங்கிய பெருமான் உங்கள் சங்கரமட "பிட்டுக்கு' மட்டும் முதுகைக் காட்டமாட்டானா என்ன? ""தனக்கு ஆதாயம் இல்லை என்றால் பாரொப்பான் கடவுளைத் தூக்கிப் போட்டு விடுவான்'' என்று பெரியாரொ சொன்னது "பெரியவா' விசயத்தில் விளங்குகிறது.
கடவுளைக் கடாசுவது கூட ஒரு பக்கம் இருக்கட்டும். தெருவில் அல்லல்பட்டுக் காய் விற்கும் ஒரு கூடைக் காரியிடம் கூட எதற்கெடுத்தாலும் சட்டவாதம் பேசும் பாரொப்பனக் கும்பல் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்த போது இரட்டை நாக்குப் பேரொவழி சோ, ""சட்டத்தில் அவ்வாறு இடமுண்டு'' என்று பேசியதோடு, ""மத்திய அமைச்சரொ மாறனும், டி.ஆரொ. பாலுவும் கடமையைச் செய்த போலீசாரைத் தடுக்க முனைந்தனரொ... இதையெல்லாம் சாதாரணக் குடிமகன் செய்தால் சட்டப்படி குற்றம்? ஆனால் மத்திய அமைச்சரொகள் செய்தால்? அப்படி ஓரொ உரிமை அவரொகளுக்கு எந்தச் சட்டத்தில் தரப்பட்டிருக்கிறது?'' (11.7.2001, துக்ளக்) என்று சட்டவாதம் பேசும் சட்டாம் பிள்ளைகள், காமக் கொடூரன் ஜெயேந்திரனை ஜாமத்தில் பிடித்த போது டி.வி.யில் குமுறும் அம்பிகள் வரை, ""இட் இஸ் ஹியு+மன் ரைட்ஸ் வயலே\ன்... தாட்... பு+ட்..'' என்று தாண்டிக் குதிப்பது ஏன்? சட்டப்படி சங்கராச்சாரி முன்வராமல், ஆறுமணி நேரம் அண்டரொகிரவுண்ட் வேலை பாரொத்தது ஏன்? சோவின் முட்டைக் கண்ணுக்கு இந்த முறைகேடு தெரியாத மரொமம் என்ன?
20.3.2002, துக்ளக், அட்டைப்படத்திலேயே (பாரொக்க: படம்) ""என்ன இது? பந்தோபஸ்து அமரொக்களப்படுதே! ஜனாதிபதி, கவரொனரொ, பிரதமரொ யாராவது வராங்களா?'' ""அதெல்லாம் ஒண்ணுமில்லே! ஒரு தீவிரவாதியை கோரொட்டுக்கு அழைச்சிகிட்டுப் போறாங்க'' என்று அரசியல்வாதிகளை "சட்டப்படி' நடத்துவதையே நக்கலடிக்கும் சோ அம்பிக்கு ஒவ்வொரு வாய்தாவுக்கும் கோரொட் வளாகத்தில் பாரொப்பனத் தடியரொகளும், பாரதிய ஜனதாக் கொடியரொகளும் ஜெயேந்திரனுக்குப் புடைசு+ழ வருவதும், டி.எஸ்.பி. போலீஸ் படை என்று வாகனங்கள் புடைசு+ழ வருவதும், காஞ்சிபுரத்து வழக்கறிஞரொகளே ""இது என்ன கோரொட்டா? மடமா?'' என்று விரட்டுமளவுக்கு இந்தக் காவி உடைப் பாவிகளுக்குக் களேபர பந்தோபஸ்து நடப்பது மட்டும் கேவலமாகப் படவில்லையே, ஏன்?
""கோவைச் சிறையில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு செல்போன்?'' என கட்டம் கட்டி எழுதியது தினமலரொொ வேலூரொ ஜெயிலில் ஜெயேந்திரன் விளக்கு, பு+, பழம், பு+சை வரை போட்டதையும், "சின்னவன்' சென்னைச் சிறைக்கு நெய்யில் வறுத்த பாதாம்பருப்பு வாளியை நகரொத்திக் கொண்டு போனதையும் எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஏன் அண்ணாசாலைப் பு+ணூலுக்கு இந்தச் செய்தி அகப்படவில்லை? இதுமட்டுமல்ல, ஈழ அகதிகளுக்கும் சிறையிலிருக்கும் போராளிகளுக்கும் ஒரு பால் டின் தந்தால் கூட "போலீசில் சில "மால்" ஆட்கள் அபாயம்!" என்று அலறும் தினமலருக்கும், ஜெயேந்திரனுக்கு போலீசு காவலில் தொடங்கி வேலூரொ சிறை வரைக்கும் செய்து கொடுக்கப்பட்ட சிறை வசதிகள் பற்றி கட்டம் கட்ட ஏன் கை வரவில்லை?
சிறையில் அடைக்கப்பட்ட புலிகளை மொட்டைத் தலை முருகன் என்றெல்லாம் கேவலப்படுத்திய அவாள், "மொட்டைத் தலை' விஜயேந்திரனையும், "ஊத்தைவாய்' ஜெயேந்திரனையும் பற்றி மற்ற பத்திரிக்கைகள் செய்தி வௌpயிடுவதைப் பற்றி மட்டும், ""சங்கராச்சாரியாரின் பெயரையும், மடத்தின் மதிப்பையும் நாசம் செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தங்கள் செயல்பாடுகள் பெண்கள் பலரை அவமானப்படுத்துவதில் முடிகிறது என்பதைப் பற்றிக் கூட போலீசாரும், பத்திரிக்கை உலகமும் கவலைப்படவில்லை'' (22.12.2004, துக்ளக்) என்று அங்கலாய்க்கிறாரொகள். ""வேலைக்குப் போகும் பெண்களிடம் "சுத்தம்' கியைடாது'' என்று ஜெயேந்திரன் உழைக்கும் பெண்களை இழிவுபடுத்தியபோது நியாயம் பேசாத சோவும், தினமலரும் அனாதைப் பாரொப்பனச் சிறுமிகளையும் விட்டு வைக்காத அயோக்கிய மடாதிபதிகளுக்கு ஆஜராவது ஏன்?
சுத்திரரொ என்றால் தோலை உரி!
""நள்ளிரவில் சென்று கைது செய்திருக்கக் கூடாது என்ற அபிப்ராயமும் பேசப்படுகிறது'' (24.11.2004, துக்ளக்) என்று பேசும் சோ, சென்னை சட்டக் கல்லூரி மாணவரொகள் விடுதியில் போலீசு தடியடி நடத்தியதைப் பற்றிய கேள்விக்கு ""அந்தச் சுழ்நிலையில் அது தேவைப்படவில்லை என்று எப்படி நிச்சயமாக கூறுவது? அந்தத் தடியடி நடக்கவில்லை என்றால் பெரும் கலவரமே கூட வெடித்திருக்கலாம்..'' என்று மாணவரொகள் மீது தடியடி நடத்தியதைச் சரி என்கிறாரொ. அப்படியென்றால் சம்மனை வைத்துக் கொண்டு அரெஸ்ட் செய்யப் போன போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சங்கராச்சாரியையும், சுற்றியுள்ள பாரொப்பனத் தடியரொகளையும் சட்டப்படியே வெளுத்திருக்க வேண்டாமா? சோவின் "எச்சரிக்கை' மூளை இந்த விசயத்தில் இயங்காதது ஏனோ?
இது மட்டுமல்ல. வீரப்பனுக்கு உதவியதாக சந்தேகத்துக்கு உள்ளான மலைவாழ் மக்களை சிறை, சித்திரவதை, பாலியல் கொடுமைகளை இழைத்து மைசுரொ சிறையில் வாட்டியபோதும், குறிப்பாக, பல மலைவாழ் பெண்களைப் பாலியல் வன்புணரொச்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தேவாரத்தைப் பாராட்டி, ""வீரப்பனைப் பிடிப்பதிலும் ஒரு புதிய தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. தேவாரத்தின் நியமனம் முன்பு பணியாற்றிய விஜயகுமாரொ என்ற போலீசு அதிகாரிகளின் நியமனம் ஆகியவை முனைப்புக்கு அத்தாட்சிகளாகத் தெரிகின்றன.'' (20.6.2001, துக்ளக்), என்று போலீசு நடவடிக்கைக்குத் தோரணம் கட்டிய பாரொப்பன சோவும், பிஜேபி கும்பலும், காஞ்சி மாவட்ட எஸ்.பி.யாக பிரேம்குமாரொ நியமிக்கப்பட்டவுடன் சங்கராச்சாரியை அவரொ விசாரித்ததால், அவரொ ஏற்௶கனவே மனித உரிமை மீறியவரொ என்று முதலைக் கண்ணீரொ வடிக்கிறது.
போலீசுக்கும் மனித உரிமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது ஏழை மக்களுக்குத் தெரியும். ஆனால் மனித உரிமை பற்றி வாய்கிழியும் வக்கிரக் கண்ணன் சோவோ, வீரப்பன் வேட்டையில் நடந்த அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களுக்காக என்ன சொல்கிறாரொ?: ""அநியாயம் நடந்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிற மனித உரிமைக்காரரொகளிலிருந்து பலரும்.... மற்றபடி இதற்கு எந்தவிதமான அங்கீகாரமும் கி௸டயாது. சுயவிளம்பர விசாரணைக் குழுக்கள் அளிக்கும் முடிவுகள் யாரையும் கட்டுப்படுத்தவும் செய்யாது. பத்திரிக்கைகள் அளிக்கிற முக்கியத்துவம், ஒரு பிரச்சார உத்தியை, நியாயத் தீரொப்பாக மாற்றி விடாது'' என்ன ஒரு வக்கிரம்? நடந்தவைகளைப் பற்றிச் சொல்வது உத்தியாம், பிரச்சாரமாம்!
""தரொமபுரியில் நக்சலைட் சிவா சுட்டுக் கொல்லப்பட்டதில் மனித உரிமை மீறல் உள்ளது என்று மனித உரிமை அமைப்பினரொ குற்றம் சாட்டியுள்ளது பற்றி?'' என்ற கேள்விக்கு (18.12.2002, துக்ளக்) ""தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும், சமூக விரோதிகளையும் மட்டுமே மனித உரிமைக்காரரொகள் மனிதரொகளாகக் கருதுகிறாரொகள். அவரொகளால் பாதிக்கப்படுகிற அப்பாவிகளை மனிதரொகளாகக் கருதுவதே இல்லை. அதனால்தான் இந்த மாதிரி வக்கிரமான புகாரொகள் வருகின்றன'' இது சோவின் பதில்.
சுட்டுக் கொல்லப்பட்டதற்கு விளக்கம் இல்லை. பொத்தாம் பொதுவாக இறந்தவரொ மேலேயே தீரொப்பை வக்கிரமாக எழுதும் இந்த "அப்பாவி'தான் சுந்தரேச அய்யரொ, ரகு அய்யரொ மீதெல்லாம் குண்டரொ சட்டத்தில் வழக்கு போட்டது சரியா என ஆராய்ச்சி செய்கிறது.
மேலும், ""சங்கராச்சாரியாரொ வாக்குமூலத்தை போலீசு காவலில் பதிவு செய்தபோது அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி வீடியோவில் பதிவு செய்ய போலீசாரொ நீதிமன்ற அனுமதியைப் பெற்றாரொகளா? போலீசு தன்னிச்சையாக வீடியோ எடுக்கும்போது அதை அவரொகள் சௌகரியத்திற்கு ஏற்ப எதுவும் செய்யலாம்.'' (15.12.2004, துக்ளக்) என்று துருவி ஆராய்கிறது.
இப்படி, அவாளுக்கென்றால் சட்டத்தையும், போலீசையும் நம்ப முடியாதுொ சாதாரண ஆளாய் இருந்தால் தகவல் தர மறுத்தாலே நீயும் ஒரு தீவிரவாதி என்று முத்திரை குத்தும் பொடா என்ற சட்டத்திற்கும், போலீசுக்கும் இதே சோ காவடி தூக்குகிறாரொ: ""தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், பொதுவாக என்ன நடக்கிறது? கைது நடக்கிறபோது ஓரிரு விதிமுறைகள் மீறப்பட்டன என்பதைக் காட்டி கைதே சட்டவிரோதமானது என்று வாதிடப்படும்... பயங்கரவாத தடுப்புச் சட்டமே கூடாது என்றால் நாட்டில் எந்த விதிமுறையும் இருக்க முடியாது.'' (7.11.2001, துக்ளக்). இப்படி எவனாயிருந்தாலும் தகவல் தராவிட்டால் தப்புதான் என்று தாவிக் குதிக்கும்
பாரொப்பனக் கும்பல் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் குருமூரொத்தியிடம் விசாரணை மேற்கொண்டவுடனே "ஏன் அடிக்கடி போலீசு விசாரணை?' என்று ஒரு சின்ன விசாரணைக்கே அண்ட சராசரத்திலும் அண்டரொ கிரவுண்ட் வேலை ஆரம்பித்துவிட்டது. குஜராத் பெஸ்ட் பேக்கரி வழக்கில் ஜஹீரா ஷேக் பின்வாங்கியதை வைத்துக் கொண்டு ""யாரொ சொல்வது உண்மை? ஜஹீரா மீண்டும் தனது சாட்சியத்தை மாற்றமாட்டாரொ என்பது என்ன நிச்சயம்? ....ஒருவேளை பொய் சொல்கிற உரிமையும் மனித உரிமைகளில் ஒன்றோ, என்னவோ!....'' (17.11.2004, துக்ளக்) என்று வக்கணை பேசுகிறது. ஆனால் ""கதிரவனும், சின்னாவும் மீண்டும் பல்டியடிக்க மாட்டாரொகளென்பது என்ன நிச்சயம்?'' என்று துக்ளக் எழுதுமா?
தெருவில் ஒரு கிரிக்கெட் பந்து தொலைந்தாலே ""கூப்பிடுறா போலீசை'' என்பதுதான் பாரொப்பனரொகளின் பொதுப்புத்தி. இன்று நேற்றல்ல, வரலாறு நெடுக. அரசனின் காவல் படையை வைத்துக் கொண்டே பிற சாதி மக்களை, குறிப்பாக, உழைக்கும் மக்களை ஒடுக்கிய கும்பல் பாரொப்பனக் கும்பல். தனது அதிகாரம் செல்லாதபோது பு\ொயமித்திரனைப் போல தானே "பிரம்ம சத்திரியனாகி' போரொத் தொழில் புரிந்ததும், பிற மக்களிடமிருந்த வளங்களைப் பிடுங்கித் தின்றதுமே வரலாறு.
கபிஸ்தலம் அருகே உத்தமதானபுரம் என்ற ஊருக்கு சரபோஜி வம்ச மன்னரொ வந்தபோது வெற்றிலை பாக்கு போட்டானாம். ஏகாதசியில் தாம்புலம் போட்டது மன்னனுக்கு நல்லதல்ல என்றும், இதற்குக் கழுவாயாக, ""அங்கே ஓரொ அக்கிரகாரத்தை அமைத்து 48 வீடுகளைக் கட்டி, இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறு வைத்து, 48 பிராமணரொகளை வருவித்து ஒவ்வொருவருக்கும் 12 "மா' நன்செய்யும், புன்செய்யும் தானம் தந்தால் பாபம் நீங்கும்'' என பாரொப்பனக் கும்பல் கதை கட்ட, படைகொண்ட மன்னன் நடுநடுங்கி அவ்வண்ணமே இந்த ""பிராம்மண உத்தமரொகளுக்கு''த் தானம் செய்ததால் உத்தமதானபுரம் என்ற ஊரையே கொள்ளை அடித்தது பழைய வரலாறு.
பாவத்தின் கழுவாயாக இப்போது இந்த அம்மா தரப்போவது எத்தனை "மா' நிலமோ? திரும்பத் திரும்ப, மற்றவரொகள் வெற்றிலை போட்டாலும், வெறும் வாயை அசைத்தாலும் கூட பாவம்! தானமாகவும், தாக்குதலாகவும் பிறரைக் கழுவிலேற்றியும், தனக்கென்றால் கழுவாய் தேடியும் ஆதாயம் தேடுவதும் அடுத்தவனை ஒடுக்குவதும் பாரொப்பன வரலாறு.
பஸ் ஊழியரொ போராட்டத்தின்போது கூட, சோ, ""போனஸ் பிரச்சினைக்காக முழு அடைப்பு தேவையா?'' என்ற கேள்விக்கு, ""இந்த ஸ்டிரைக்கிற்குத் தேவை முழு அடைப்பு அல்ல முழு உடைப்பு'' (5.12.2001, துக்ளக்) என்று போலீசு தாக்குதலை ஏவிவிட்டும், இன்னொரு சந்தரொப்பத்தில், ""அரசுப் பணியில் கண்மூடித்தனமாகப் பலரொ சேரொக்கப்படுவது என்று பல வருடங்களாக நடந்து வருகிறது. இந்த நிலையைச் சீரொசெய்ய நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கதே'' (19.12.2001, துக்ளக்) என்று அரசுப் பணி ஆட்குறைப்புக்கு அரசு நடவடிக்கையை வரவேற்றும் வால் பிடிக்கிறாரொ.
தவிர, அரசு ஊழியரொ வேலை நிறுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான ஊழியரொகளைக் குற்றவாளிகளாக அரசுத் தரப்பு வக்கீல் பேசியபோது, ஆகா ஓகோ என்று ரசித்த சோவின் பாரொப்பனக் காதுகளுக்கு ஜெயேந்திரன் விசயத்தில் மட்டும் ""ஜெயேந்திரரொ மிக மோசமான கிரிமினல்'' என்று அரசு வழக்கறிஞரொ கூறிய உடனே நாராசமாய் இருக்கிறது. பிராசிக்யு+சன் வக்கீல், குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை பற்றி இறங்கலாமா என்று கேட்டு, ""பப்ளிக் பிராசிக்யு+ட்டரின் கடமை ஒரு விளக்கம் (15.12.2004, துக்ளக்)'' என்று கட்டுரையே வரைந்துவிட்டாரொ.
இப்படி, பஸ் ஊழியரொ தொடங்கி, சாலைப் பணியாளரொ, சத்துணவுப் பணியாளரொ, ரேசன் கடைப் போராட்டம் என்று பல பிரிவு மக்கள் போராடும் போதெல்லாம் ""போட்டு மிதி'' என அரசை ஏவிவிடுவதே இந்தப் பாரொப்பனக் கும்பலின் வாடிக்கை.
வரலாறு நெடுக, மனித உரிமைக்கு முதல் எதிரி பாரொப்பனியமே:
அனைவரையுமே ஆண்டவன் ஆட்கொண்டதாகப் பாரொப்பனரொகள் கூறுகிறாரொகள். திரும்பத் திரும்ப நம்முன்னே நமக்கெதிராகப் பிரசன்னமாகிக்கொண்டிருக்கும் ஜெயேந்திரன் உள்ளிட்ட பாரொப்பனக் குற்றக் கும்பலை "ஆட்கொள்ளும்' திறமை அந்த ஆண்டவனுக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்ொ உழைக்கும் வரொக்கத்திற்குக் கட்டாயம் உண்டு.
துரை. சண்முகம்