TerrorisminFocus

Monday, October 28, 2013

மோடி குண்டு நாடு முழுதும் வெடிக்கும் விரைவில்

தீபாவளி நெருங்குது, மோடி போகும் இடமெல்லாம் குண்டு வெடிப்புகளும், முஸ்லீம்கள் மீது இனப்படுகொலை தாக்குதல்களும் தொடர்கின்றன. எனவே மக்களே எச்சரிக்கையா இருங்க. தீபாவளியை ஒட்டிய நாட்களில் கவனமாக சுற்றுப் புறங்களை அவதனியுங்கள். ஆர் எஸ் எஸ் பயங்கரவாத காலிகள் குண்டு வைக்கும் திட்டங்களுடன் அழைந்து கொண்டிருக்கும் வாய்ப்பு மிக அதிகமுள்ளது.இது யூகமல்ல, இதுதான் வரலாறு. 2009ல் கோவாவில் தீபாவளிக்கு முந்தின நாள் நராகசுரனை வதம் செய்யும் விழாவிற்கு  'இந்து'துக்கள் ஒன்று கூடும் இடம் ஒன்றில் குண்டு வெடித்தது. குண்டு வைக்க முயன்ற இருவர் செத்தொழிந்தனர். அவர்கள் யாரென்று பார்த்தால் சந்தனா சன்ஸ்தா என்ற ஆர் எஸ் எஸ்ன் கள்ளக் குழந்தை அமைப்பைச் சேர்ந்தவர்கள். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து 30 கிமீ தொலைவில் சன்கோலே எனும் இடத்தில் இரண்டு குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. மேலும் ஐந்து இடங்களில் நராகசுரன் வத விழாவின் போது குண்டு வைக்கும் திட்டங்களும் தெரியவந்தன. இவை  'இந்து'க்கள் மீது தொடர் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்ததை அம்பலப்படுத்தின. கோவாவிலும், மஹாராஸ்டிராவிலும் விநாயகர் சதுர்த்தி விழா நாட்களின் போது மேற்படி குண்டு வெடிப்புக்கான பயிற்சிகளிலும், சோதனைகளிலும் ஆர் எஸ் எஸ் கும்பல் ஈடுபட்டிருந்ததும் அம்பலமானது. இச்சதிச் செயல்கள் அனைத்தும் அப்போது வரவிருந்த தேர்தலில் பாஜகவிற்கு வாக்கு வங்கி உருவாக்கும் விதமாக திட்டமிடப்பட்டிருந்தன.இது ஒரு சம்பவம் மட்டுமே. ஆர் எஸ் எஸ் கும்பல் கோட்சே டெக்னிக்கை பயன்படுத்தி நாடுமுழுவதும் நிகழ்த்தியுள்ள குண்டு வெடிப்புகள் எத்தனை? இதுவரை அம்பலமான சிலவற்றை பார்த்தால் புரியும் வெளிவராத எத்தனை குண்டு வெடிப்புகளை இவர்கள் செய்திருப்பார்கள் என்று. அபினவ் பாரத் என்ற பெயரில் சம்சௌதா ரயிலில் இந்து பயங்கரவாதிகள் வைத்த குண்டில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதே கும்பல் மலேகான், அஜ்மீர் முதல் பல இடங்களில் முன்பு நடந்த 10க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டு வெடிப்புகள் அனைத்திற்கும் முஸ்லீம்களே முன்பு கைது செய்யப்பட்டிருந்தனர். 2006 நாண்டட் குண்டு வெடிப்பில் தவறுதலாக குண்டு வைக்கும் போதே வெடித்ததில் ஆர் எஸ் எஸ் பஜ்ரங்தள்ளின் அடியாட்கள் கொல்லப்பட்டனர். இது உண்மைகளை வெளிக் கொண்டு வந்தது. மேலும் இந்த கும்பல் முஸ்லீம் குல்லாக்களை போட்டுக் கொண்டு பலியை முஸ்லீம்கள் மீது போட்டுவிடும் திட்டங்களுடன் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதும் வெளிவந்தன.

இதே கால கட்டங்களில் கேரளா, தமிழகத்தின் தென்காசி, கோவை பகுதிகளில் குண்டு வெடிப்புகள், கடத்தல் நாடகங்கள், ஆயுத திருட்டுக்கள் (காவல்துறை உடந்தையுடன்)  நடத்தி பலியை முஸ்லீம்கள் மீது போட்ட திருட்டுத்தனங்கள் அம்பலமாகின. 2008ல் கேரளா கண்ணூர் மாவட்டத்தில் குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இரு ஆர் எஸ் எஸ் சொறிநாய்கள் கொல்லப்பட்டனர். இதே போல ராஜஸ்தான், மஹாராஸ்டிராவிலும் குண்டு தயாரிக்கும் முயற்சிகளில் சுயம் சேவக்குகள் 'தியாகிகளாகி' நாட்டை காத்த நல்ல விசயங்கள் நடந்தன. ஏற்கனவே, 2002ல் போபால் ரயில் நிலைய குண்டு வைப்பு முயற்சி, அதற்கு பிறகு நடந்த வெற்றிகரமான இன்னொரு குண்டு வெடிப்பு, இவை ஆர் எஸ் எஸ், பஜ்ரங்தள் இவர்களின் கூட்டு முயற்சிகளை வெளிக் கொண்டு வந்திருந்தன. செப்டம்பர் 2006ல் சங்கர் செல்கே என்பவனிடம் இருந்து 195கிலோ ராணுவ பயன்பாட்டுக்கான உயர்தர வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இவனது தொலைபேசி உரையாடல்கள் மேற்படி இந்து பயங்கரவாதிகளின் நாடு தழுவிய குண்டு வெடிப்புக்கான தயாரிப்புகளை அம்பலப்படுத்தியது. ஹைதராபாத, அஜ்மீர், நாண்டட், டெல்லி, பாட்னா, போபால், தென்காசி, கண்ணூர் என நாடு முழுவதுமான விரிவான தொடர்புகளுடன் இந்து பயங்கரவாதிகளில் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளது இப்படியாக வெளிவந்தன. அஜ்மீர் குண்டு வெடிப்பில் முதலில் முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு பிற்பாடு நாண்டடில் மாட்டிக் கொண்ட ஆர் எஸ் எஸ் கும்பலை விசாரித்த பொழுது, அஜ்மீரில் குண்டு வைத்த சதியில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆர் எஸ் எஸ் முன்னணித் தலைவர்களான அசோக் வார்செனே மற்றும் அசோக் பெரே ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து லக்னோ சித்தாப்பூர் பகுதிகளில் தங்க வசதி செய்து கொடுத்துள்ளது வெளிவந்தது.

(பயங்கரவாதிகளின் அணிவகுப்பு)

1993க்கு முன்பு இந்தியாவில் குண்டு வெடிப்புகள் என்றால் தேசிய இயக்கங்களின் குண்டு வெடிப்புகள்தான். பாபர் மசூதி இடிப்பு மற்றும் மும்பை முஸ்லீம்கள் மீது நடந்த படுகொலை இனவெறி தாக்குதல்கள்தான் இஸ்லாம் பயங்கரவாத குண்டு வெடிப்புகளும், சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்பாடுகளும் இங்கு காலூன்ற அடித்தளம் அமைத்தன. 1998லிருந்தே ஆர் எஸ் எஸ் குண்டு வெடிப்புகளின் காலம் ஆரம்பித்துவிட்டது. 1993லிருந்து இன்று வரையான குண்டு வெடிப்புகளை கணக்கிட்டால் பாதிக்கு பாதி ஆர் எஸ் எஸ் கும்பலினுடையதாக நேரடியாக மாட்டிக் கொண்டுள்ளனர்.

(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாதிகள்)

 (நடுவுல இந்திரெசு, இடது கை பக்கம் புரோகிட், வலது கோடி இண்டர்நேசனல் டெரரிஸ்ட் தோகாடியா)

ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியின் விடியோ ஒளிப்பதிவுகள் 2010ல் வெளிவந்தன. அந்த ஒளி-ஒலிப்பேழைகளில் ஒன்றில் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்ற இந்துச் சாமியார், இந்திய இராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாகப் பணியாற்றிக் கொண்டே மாலேகான் குண்டு வெடிப்பை நடத்தியவரான புரோகித், ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர ஆதரவாளரும் பா.ஜ.க.-வின் முன்னாள் கிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எல்.சர்மா ஆகிய மூவரும் முசுலீம்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவது பற்றி விவாதிக்கின்றனர்.  மற்றொரு ஒலிப்பேழையில், தயானந்த பாண்டேயும், ஆர்.பி. சிங் என்ற மருத்துவரும் துணை அரசுத் தலைவர் ஹமித் அன்சாரியைக் கொல்லும் திட்டம் பற்றி விவாதிக்கின்றனர்.

அத்தொலைக்காட்சி ஒலிபரப்பிய இன்னொரு ஒலிப்பேழையில், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காலஞ்சென்ற ஆர்.எஸ்.எஸ். ஊழியர் சுனில் ஜோஷி என்பவன், ஆர்.எஸ்.எஸ்.-இன் சியச் செயல் கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமாரிடம் அக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கியுள்ளான். யார் இந்த இந்த்ரேசு? ஆர் எஸ் எஸ்ன் மத்திய கமிட்டி உறுப்பினன். அதாவது இவந்தான் ஆர் எஸ் எஸ் ஆர் எஸ் எஸ்தான் இவன். இவையெல்லாம் வெளிப்படையாக ஆர் எஸ் எஸை தேசத் துரோக பயங்கரவாத அமைப்பாக தடை செய்து ஒடுக்க போதுமான ஆதாரங்களே ஆயினும் காங்கிரசு என்பது ஆர் எஸ் எஸ்ன் இன்னொரு முகம்தானே? அம்பேத்கர் வார்த்தையிலோ அல்லது 1930களின் காங்கிரசு காரியக் கமிட்டியின் வார்த்தைகளிலோ சொல்வதென்றால் 'இந்து மஹாசாபை வெளிப்படையாகச் செய்வதையே காங்கிரசு பூசி மெழுகிச் செய்கிறது'. எனும் போது காங்கிரசு எப்படி ஆர் எஸ் எஸை ஒடுக்கும்?

இப்போது வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து கோவை, நெல்லை, திண்டுக்கல், திருச்சி என பல பகுதிகளிலும் தம்மீது தாமே பெட்ரோல் குண்டு வீசிக் கொண்டும், கடத்தல் நாடகங்கள் நடத்தியும் கலவரச் சூழலை உருவாக்குகின்றனர் ஆர் எஸ் எஸ் கருங்காலி மாமாக்கள். இவற்றின் மூலம் மோடியின் தயவில் நாட்டைக் கூட்டிக் கொடுக்கும் திருப்பணியைச் செய்ய திட்டமிட்டுள்ளனர். லோக்கல் அல்லக்கைகளே பெட்ரோல் குண்டு ஆள் கடத்தல் ரேஞ்சுக்கு திட்டமிடும் போது இந்த கொள்ளைக் கூட்ட பாஸ் மோடி எப்படியெல்லாம் திட்டமிடுவான்? குஜராத்து முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலைகளை நடத்திய மோடியின் தளபதி, நீதிமன்ற வழக்கில் கிரிமினல், சதி செயல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவன் சர்மா. இவன் தான் மத்திய பிரதேச தேர்தல் பணிகளுக்கு பொறுப்பு. நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே தனது தேர்தல் பணிகளில் முதன்மையானதான இனப்படுகொலை சதியை அரங்கேற்றினான் இவன். முசரபாத்நகரில் இந்து ஜாட் சாதி பெண்ணை முஸ்லீம்கள் பலாத்காரம் செய்துவிட்டதாக புரளி கிளப்பி, பாகிஸ்தானில் நடந்த ஒரு சம்பவத்தின் விடியோவை இங்கு நடந்ததாக பரப்பி கலவரம் செய்தனர். இப்போது பாட்னாவில் குண்டுகள்.

மோடி மீது  குண்டு வைத்தால் மோடி மீதுதானே வெடிக்கனும் அது என்ன கரெக்டா அவனை பாக்க வந்தவங்க மேல வெடிச்சிருக்கு? க்ரூட் பாம்ப் அல்லது நாட்டு வெடிகுண்டு எனப்படும் வகையிலான குண்டுகள் ஆர் எஸ் எஸ் கும்பலின் குற்றச் செயல்பாட்டு முறையை சார்ந்தது ஆகும். இதற்கு முன்பு தேர்தலை ஒட்டி பெங்களூரில் கிரிகெட் மைதானத்தில் நடந்த குண்டு வெடிப்பும் தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து ஒரே நாளில் போலீசு குண்டுகளை கைப்பற்றியதும், அதனைத் தொடர்ந்து குஜராத்திலும் இதே போல 16 இடங்களில் ஒரே நாளில் போலீசு குண்டுகள் கைப்பற்றியதும் நடந்தது. இவ்வரும் சாதனை பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே நடந்தன/நடக்கும். குண்டு வைத்தவன் குண்டை வெடிக்க வைக்காமல் இடத்தை மட்டும் போலிசுக்கு சொல்லிவிட்டானா அல்லது குண்டு வைத்தவனுக்கு தெரியாதா அதை எங்கிருந்து எடுப்பது என்ற சூத்திரமா?

(இளம் இந்து பயங்கரவாதி, பயிற்சியின் போது)


(நாட்டைக் கெடுக்கும் தேசத் துரோகிகளின் கொடி இதுதான்)


கலவரங்கள், குண்டு வெடிப்புகள் பாஜகவின் அரசியல் முன்னேற்றதிற்கு அஸ்திவாரக் கற்கள். ஒற்றை இலக்க வெற்றிப் புள்ளிகளில் இருந்து ஒரே தாவலில் நாட்டை ஆளும் மாமா பதவிக்கு வருவதற்காக 1990களுக்கு பிறகான இந்தியாவை குண்டுகளின் இந்தியாவாக்கிய பெருமை இந்து ராஷ்டிர பயங்கரவாதிகளையேச் சாரும். இப்போதும் இதுதான் நடந்து வருகிறது. இந்த பொறுக்கி கும்பலைத்தான் முன்னேற்றத்திற்கான வழியாக நம்புகின்றனர் சிலர். இனி மோடி குண்டுகள் நாடு முழுவதும் வெடிக்கும் அப்போதும் அந்தச் சிலர் சொல்வர் நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடி ஜெகஜோதியா முன்னேறிட்டு இருக்கு என்று.

அசுரன்

The Rise Of Hindutva Terrorism 

காவி பயங்கரவாதம்

குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!

 

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

 

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

 

 ஹெட்லைன்ஸ் டுடேவின் விடியோ ஆதாரங்கள்

 

அவுட்லுக் இந்தியாவின் பட்டியல்

 

Indresh of RSS and Purohit of Abhinav Bharat: common agenda

 

 மாட்டிக் கொண்ட திருடனும், சந்தைக் கடை ரவுடியும் - ஒரு ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதியின் கதை!!

 

Friday, October 25, 2013

மறுபதிப்பு: எங்கள் தோழர் ஸ்டாலின்!!


ஸ்டாலின்: இருண்ட காலங்களின் மீது ஒளி பாய்ச்சி விரட்டி அடிக்கும் வெப்பச் சூரியன்!!


முதல் பதிவு:

தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!

சோவியத் யூனியன் உலகின் முதல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வெற்றிகரமாக சோசலிசத்தை சாதிக்க முடியும் என்று நிரூபித்த நாடு. அதே நாடுதான் முதலாளித்துவத்தின் தோல்விக்கும் உதாரணமாக இன்று நின்று கொண்டிருக்கிறது. அது 1920களை ஒட்டிய கறுப்பு வெள்ளை காலகட்டம், உலக ஏகாதிபத்திய நாடுகள் முதல் உலகப் போர் முடிந்து ஒரு பத்தாண்டுகளிலேயே மீண்டும் ஒரு உலக யுத்தம் செய்வதற்க்கான தாயாரிப்புகளில் தீவிரமாக இருக்கின்றன. இந்த முறை அரசியல் களம் சிகப்பு நிறமாக இருந்தது ஒரு முக்கிய வித்தியாசம்.


துரோகிகளை உருவாக்கிய புதிய புரட்டல்வாதம் உருவான அந்த நெருக்கடி மிகுந்த வரலாற்று காலகட்டம் குறித்து ஜார்ஜ் தாம்சனின் 'மார்க்ஸ் முதல் மாவோ வரை' புத்தகத்திலிருந்து:

"சோவியத் அரசு வலுவடைய அடைய, ஏகாதிபத்திய அரசுகளிடையே உள்ள முரன்பாடுகளும் மேலும் கடுமையாகின. முதல் சோசலிச அரசுக்கு எதிரான தமது பகைமையில் அவை ஒன்றுபட்டன. அதன் வளர்ந்து வரும் வலிமையின் முன்னால் அவை பிளவுபட்டன. இப்பிளவு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளூம் வர்க்கத்துக்குள் பிரதிபலித்தது. பிரிட்டனில் சேம்பர்லினால் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட பெரும்பான்மையாக இருந்த பிரிவு சோவியத் யூனியனைத் தாக்குமாறு ஹிட்லரை ஊக்குவித்தது. ஹிட்லர் சோசலிசத்தை அழிப்பதுடன் இந்த நிகழ்ச்சிப் போக்கில் தன்னையும் பலவீனப்படுத்திக் கொள்வான் என்றும், அதனால் பிரிட்டன் ஐரோப்பாவின் மிகப்பலம் பொருந்திய அரசாக உருவாகும் என்றும் இப்பிரிவு நம்பிக்கை கொண்டிருந்தது.

பிரிட்டனிடமும், பிரான்சிடமும் ஸ்டாலின் பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை முன்வைத்தார். இது ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் போர் தடுக்கப்பட்டிருக்கும். அது ஏற்றுக் கொள்ளப்படப் போவதில்லை என்பது தெளிவாகியதும், அவர் ஹிட்லருடன் ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார்.""மேற்கில் தனது நிலையை வலுப்படுத்திக் கொண்ட ஹிட்லர் இப்போது கிழக்கில் தாக்குதல் தொடுக்கத் தாயாராக இருந்தான். பிரிட்டனின் ஆதரவைப் பெற ஒரு முயற்சி செய்தான்; ஆனால் சர்ச்சில் பிரிட்டிசு மக்களின் ஆதரவுடன் பிரிட்டனை சோவியத் யூனியன் பக்கம் நிறுத்தி தன் பதிலை வழங்கினார். இதன் பொருள் பிரிட்டிசு ஆளூம் வர்க்கம் தனது குறிக்கோளைக் கைவிட்டு விட்டது என்பதல்ல, அதன் நடைமுறைத் தந்திரம் மட்டுமே மாறியது. சர்ச்சிலின் நோக்கம் என்னவென்றால், ஜெர்மனியைத் தோற்கடிக்க சோவியத் யூனியனுக்கு இயலும் வகையில் ஆதரவு தருவது; இதன் மூலம் சோவியத் யூனியன் தனது சக்தி அனைத்தையும் செலவிடும்; அதன் பிறகு பிரிட்டன் உண்மையான வெற்றியாளனாகி விரும் என்பதுதான். மீண்டும் ஒரு முறை அவர்கள் தவறாகக் கணக்கிட்டு விட்டார்கள். சோவியத் மக்கள் அளவிட முடியாத இழப்புகளை அனுபவித்தனர். ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் இறந்தனர்; இரண்டரைக் கோடி மக்கள் வீடிழந்தனர். இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் பலன்களைக் காட்டிலும் அதிகமான பொருள்வகைச் சேதம் ஏற்பட்டது; ஆயினும் அவர்கள் வெற்றி பெற்றனர். முதல் சோசலிச அரசு பாசிசத்திலிருந்து உலகைக் காப்பாற்றியது."நீலகண்டன் என்பவர் தனது பொய்யுரைகளின் தொடர்ச்சியாக சமீபத்தில் இன்னுமொரு பொய்யை எழுதியிருந்தார். அதாவது ஹிட்லருடன் ஸ்டாலின் ஒப்பந்தம் செய்து கொண்டு ஏதோ பெரிய துரோகம் செய்தது போல அதில் சித்தரித்திருந்தார். இவர்கள் அரைப் பொய்யர்கள் என்று சொன்னதன் அர்த்தம் இதுதான். அதாவது உண்மையில் ஸ்டாலின் பிரிட்டிஸ், பிரான்சிடம் ஒப்பந்தம் போட கோரிக்கை வைத்த பொழுது அவர்கள் மறுக்கவும் வேறு வழியின்றி ஹிட்லருடன் ஒப்பந்தம் போட்டதன் மூலம் ஒரு வருடம் போருக்கான தயாரிப்புக்கு அவகாசம் கிடைப்பதை உறுதிப் படுத்திக் கொண்டார். இந்த உண்மையின் கடைசிப் பாதியை மட்டும் வைத்து பொய்யுரைகளை எழுதும் இது போன்ற ஜென்மங்களை எந்த லிஸ்டில் சேர்க்க? மேலும் அவரது அந்த கட்டுரையில் ஸ்டாலின்தான் உண்மையில் ஹிட்லரை வளர்த்தார் என்று குறிப்பிடுகிறார். உண்மையில் நெருக்கடியை தவிர்க்க ஒரு வருட அவகாச காலகட்டத்தில் ஹிட்லருடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி சில அரசியல் பொருளாதார நடவடிக்கைகளை ஹிடலரின் ஜெர்மனியுடன் செய்து கொண்டதை மட்டும் சுட்டிக்காட்டி இவ்வாறு அவதூறு கிளப்புகிறார் பொய்கண்டன்.இதில் குறிப்பாக ஒரு விசயம் கவனிக்க வேண்டியுள்ளது,பிரிட்டனோ அல்லது அமெரிக்காவோ அல்ல மாறாக சோவியத் யூனியன் தான் போரினால் அதிகம் இழப்படைந்த நாடு. ஆனால் சில நூறு வருடம் உலகம் முழுவதும் சுரண்டிக் கொழுத்த பிரிட்டன் இரண்டாம் உலகப் போரின் நிறைவில் தனது பொருளாதாரத்தை புனரமைத்துக் கொள்ள அமெரிக்காவின் உதவியை நாடியது. அதன் ஒரு பகுதியாகத்தான் பிரிட்டிஸ் காலனிய நாடுகளின் விடுதலை உள்ளது. ஆனால் முதல் உலகப் போர் முதல் தொடர்ந்து பல கடும் நெருக்கடிகளை சந்தித்து வந்த சோவியத் ரஸ்யா இரண்டாம் உலகப் போரின் பெரும் இழப்புகளுக்குப் பிறகும் கூட தனித்து நின்று வல்லரசாக மீண்டது, எந்த நாட்டையும் சுரண்டாமல். இந்த சாதனையைத்தான் நீலகண்டன் போன்ற பொய்யர்கள் அவதூறு புளுதி கிளப்பி மறைக்க முற்படுகிறார்கள். தெருப் புழுதியால் சூரியனை மறைக்க இயலுமா?ஸ்டாலின் குறித்து அவதூறு பேசும் எந்த நாயும் இந்த அதிசயம் குறித்தும், ஸ்டாலின் மீது மக்கள் வைத்திருந்த பெரு மதிப்பு குறித்தும், மக்களை இயக்கி சாதனைகள் பலச் செய்ய செய்த உணர்வு நிலை என்ன என்பது குறித்தும் எதுவும் சொல்வதில்லை. நழுவி ஓடிவிடுகிறார்கள்.ஸ்டாலின் குறித்தான அவதூறுகளை அங்கு விஜயம் செய்து பல இந்திய தலைவர்களும் மறுத்துள்ளனர். ஆயினும் பொய்யிலே பிறந்த இவர்கள் தமது புரளிகளை தொடர்ந்து பிரச்சாரம் செய்வதில் மட்டும் கொஞ்சம் கூட சளைக்கவில்லை.சரி இங்கு சுருக்கமாக ரஸ்யாவில் கடும் நெருக்கடியான சூழலில் வர்க்கப் போராட்டம் கைவிடப்பட்ட சூழல் எது என்பதையும். அது எப்படி எதிர் வர்க்கங்களின் கையில் அதிகாரத்தை ஒப்படைத்தது என்பதனையும் பார்ப்போம்.ஸ்டாலினின் இரு தடுமாற்றங்கள் - தொடர் புரட்சி:

இரண்டாம் உலகப் போரில் வெளிநாட்டு எதிரிகளை வெற்றிகரமான செயல் தந்திரத்தின் மூலம் முறியடித்த ஸ்டாலின் உள்நாட்டு எதிரிகளை அவ்வாறூ முறியடிப்பதில் தோல்வியுற்றார். இது குறித்து ஒரு சின்ன சித்திரம்.


1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஸ்டாலின் கீழ்காணும் தொலை நோக்குமிக்க எச்சரிக்கையை விடுத்தார்:

"நாம் வளர்ச்சியடைந்த நாடுகளில் இருந்து ஐம்பது அல்லது ஒரு நூற்றாண்டு பின் தங்கியுள்ளோம். இந்த இடைவெளியை நாம் பத்தாண்டுகளில் நிரப்ப வேண்டும். ஒன்று நாம் இதைச் செய்தாக வேண்டும் அல்லது நாம் வீழ்ந்தாக வேண்டும். "இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனியில் நாஜிக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றனர். அவர்கள் சோவியத்துடனான இறுதி மோதலுக்கான தயாரிப்புகளைச் செய்கிறார்கள். இந்த நெருக்கடியான பின்னணியில்தான் சோவியத் ரஸ்யாவில் எதிர் வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தை ஸ்டாலின் எடுத்துச் சென்ற விதம் குறித்து நாம் மதிப்பீடு செய்ய வேண்டும்.


1933 இல் முதல் ஐந்தாண்டு திட்டம் முழுமை பெற்றது. 1937-ல் இரண்டாம் ஐந்தாண்டு திட்டம் முழுமை பெற்றது. இவையணைத்தும் பல இன்னல்களையும், அனுபவக் குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்ப்பட்ட இழப்புகளுடன் வெற்றியை அடைந்தன. இதற்க்கு காரணம் சாதாரண மக்கள் காட்டிய துணிச்சல் மிக்க வேலைப்பாணியே.

முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் ஸ்டாலின் அறிவிக்கிறார்:


"சோவியத் அரசு அதிகாரத்தின் வளர்ச்சி, செத்துக் கொண்டிருக்கும் வர்க்கங்களின் கடைசி எச்சங்களின் எதிர்ப்பை ஆழப்படுத்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவ்வர்க்கங்கள் செத்துக் கொண்டிருப்பதாலும் அவர்களது நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாலுமே, அவர்கள் தாக்குதலின் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு கூர்மையான வடிவத்துக்குப் போய்க் கொண்டே இருப்பார்கள்.."இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் நடுவில் மேற்சொன்னதை உறுதிப்படுத்தி எதிரிகளுக்கு எதிரான வர்க்க போராட்டத்தின் தேவையை உறுதிப்படுத்துகிறார் ஸ்டாலின்.


இந்நிலையில் 1936-ல் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது அனைவருக்கும் சம உரிமை வழங்கியது. அதாவது இரண்டாம் ஐந்தாண்டு திட்ட முடிவில் அவர் முந்தைய சமூகத்தின் எச்சங்கள் என்று கூறி சோவியத் மக்களை எச்சரிக்கை செய்ததையே மறந்துவிட்டு, எதிரிகள் இருப்பதையே கவனத்தில் கொள்ளாமல் எல்லாருக்கும் சம உரிமை கொடுக்கும் சட்டத் திருத்தத்தை கொண்டு வருகிறார். இதன் மூலம் தான் கொடுத்த எச்சரிக்கைக்கு மாறாக அவரே நடந்து கொள்கிறார். அதாவது முந்தைய சமூகத்தின் எச்சமாகிய முதாளித்துவ ஆட்களுக்கு சம உரிமை கொடுக்கிறார். இதன் அர்த்தம் வர்க்க போரட்டத்தை கைவிடுவது என்பதுதான். இதன் அர்த்தம் எதிரிகளுக்கும் சம உரிமை கொடுப்பது என்பதாகும். இதன் அர்த்தம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடுவது என்பதாகும்.


இதன் விளைவாக கட்சிக்குள் அத்தனை பிற்போக்குவாதிகளும் ஊடுருவுகிறார்கள். இதனை விரைவிலேயே உணர்ந்து ஸ்டாலின் இதற்க்கெதிராக விழிப்புடன் இருக்குமாறு 1937-ல் எச்சரிக்கிறார். சோவியத்தின் அழிவுக்கு உள்ளிருந்து வேலை செய்பவர்கள் தனித்து நிற்ப்பதில்லை. இவர்களுக்கு எல்லைக்கு வெளியே உள்ள சோவியத்தின் பகைவர்கள் உதவுகிறார்கள் என்று எச்சரிக்கிறார்.


ஒரு யுத்த அபாயத்தை எதிர்கொண்ட நிலை, உள்நாட்டு சதிக்கெதிரான நெருக்கடி இவையணைத்தும் சேர்த்து சோவியத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் ஏற்ப்படுத்திய அழுத்ததின் விளைவுதான் ஸ்டாலினின் இந்த முதல் தடுமாற்றத்துக்கு காரணமாக அமைகிறது. இதே நேரத்தில் கட்சி முதல் பல இடங்களில் ஊடுருவிய எதிரிகளை உணர்கிறார் ஸ்டாலின். அதனை எதிர்கொள்வதற்க்கு அவர் கையாண்ட அதிகாரத்துவமான முறை இரண்டாவது தடுமாற்றமாக இருக்கிறது. இதன் விளைவாக ஏற்கனவே எதிரிகள் ஊடுருவியிருந்த போலிஸ் துறையின் கையில் எதிரிகளை ஒழிக்கும் பொறுப்பை ஒப்படைக்கப்படுகிறது. விளைவு எதிரிகள் உண்மையில் சோவியத்தின் நண்பர்களை ஒழிக்கிறார்கள்.


எங்கே தவறு நிகழ்கிறது?

1935 வரை லெனினியத்தின் பாதையில் நடை போட்ட ஸ்டாலின் ஏகாதிபத்தியங்கள் சுற்றி வளைத்து ஏற்படுத்திய அழுத்தத்தின் விளைவால் தடுமாறுகிறார். இந்த விசயத்தில் சோவியத் ரஸ்ய பாட்டாளி வர்க்கம் செய்யத் தவறிய விசயம் மக்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே முந்தைய சமூகம் உருவாக்கிய இடைவேளியை குறைக்கும் முயற்சிகளில் போதிய கவனம் செலுத்தாமை ஆகும். இதனை நிறைவேற்றும் பண்பாட்டு புரட்சிக்கான அறைக்கூவலை லெனின் தனது கடைசிக் கட்டுரைகளில் ஒன்றில் எழுப்புகிறார். இதனை ஸ்டாலினும் கூட மீண்டும் வலியுறுத்துகிறார். ஆனால் பண்பாட்டு புரட்சிக்கான தேவை உணரப்பட்டதோடு நின்று விட்டது. ரஸ்ய பாட்டாளி வர்க்கம் சந்தித்த கடும் இன்னல்கள் அதனை அந்த திசையில் தொடர்ந்து பயணித்து பண்பாட்டு புரட்சியை செய்வதிலிருந்து திசை திருப்பி விட்டது. ஸ்டாலினின் முதல் தவறுக்குப் பிறகு அவர் பிரச்சனையை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை களத்தில் இறக்கியிருந்தால் அதிகார வர்க்கத்தின் எதிர் புரட்சி நடவடிக்கைகள் மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கும்.ஆனால் ஸ்டாலின் தவறு செய்வதற்கு வரலாறு அவருக்கு கொடுத்த வாய்ப்புகளுடன் ஒப்பிடும் போது தனது முதல் தவறை திருத்ததுவதற்க்கு வரலாறு அவருக்கு கொடுத்திருந்த வாய்ப்புகளின் அளவு வெகு சொற்பமே.


ஸ்டாலின் மக்களை அணி திரட்டி எதிர் புரட்சியாளர்களை வெல்வது என்பது நடக்க இயலாதது அல்ல. ஏனேனில் மக்களுக்கு அரசுக்கும் இடையே உள்ள இடைவெளியை இல்லாமல் செய்வதில் பெரிய அளவில் வெற்றி பெற்ற மாவோ இந்த முறையில் மக்களை அணி திரட்டிதான் சீனாவில் அழிவு வேலை செய்ய முற்ப்பட்ட எதிர் புரட்சி கும்பல்களை முறியடித்தார்.இவை காட்டுவது என்னவென்றால், பாட்டாளி வர்க்கம் புரட்சி செய்து ஆட்சிக்கு வந்தவுடன் புரட்சி நிறைவு பெறுவதில்லை என்பதைத்தான். மாறாக இன்னும் கோடூரமானதொரு உயரந்த வடிவத்திலான புரட்சிக்கு பாட்டாளி வரக்கம் தன்னை தாயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது என்பதைத்தான். வர்க்கங்கள் இந்த உலகில் இருக்கும் வரை ஒவ்வொரு வர்க்கத்தின் கருத்தும் ஏதோ ஒரு வகையில் கட்சியின் உள்ளே நிலவுவதை தவிர்க்க முடியாது. எனவே அவற்றுக்கு எதிரான போராட்டம் என்பதும் தவிர்க்க முடியாது. இது சோசலிச சமூகத்தை கம்யுனிச சமூகமாக வளர்த்தெடுக்கும் கால முழுவதிற்க்கும் பொருந்தும். இதனைத்தான் லெனினியமும் வலியுறுத்துகிறது. அதாவது தொடர் புரட்சி.இதில் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தில் இருக்கிறதா இல்லையா என்ற வித்தியாசம் எதிரிகளுக்கெதிரான வன்முறையின் வடிவத்தையும், அரசுக்கும் மக்களுக்கு இடையிலான உறவை இயல்பானதாக மாற்றும் போராட்டத்தின் வடிவத்தையும் மாற்றுமே தவிர்த்து, வன்முறையையும், போராட்டத்தையும் முற்றிலும் விட்டொழித்து விடுவதில்லை. இன்னும் சொன்னால் அவற்றை இன்னும் மோசமானதாக்குகிறது. உண்மையில் புரட்சிக்கு பின்புதான் பாட்டாளி வர்க்கம் மிக நெருக்கடியான நிலையை சந்திக்கிறது.


இந்த காலகட்டத்தில் மக்களை அரசு நிர்வாகத்தில் பங்கு கொள்வது குறித்து அவர்களிடம் நிலவும் தேவையற்ற தயக்கம், அச்சம் இவற்றை களையச் செய்யும் வகையிலான பண்பாட்டு புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது உயிராதாரமான ஒரு விசயமாக உள்ளது. குறுகிய காலத்தில் எதிர்புரட்சி கும்பலை முறியடித்த அதே வேளையில் இரு தடுமாற்றங்கள் மூலம் அவர்களை வேறு வடிவங்களில் நிலைபெறச் செய்த இந்த அம்சத்தில்தான் தோழர் ஸ்டாலின் மீது நாம் விமர்சனம் வைக்கிறோம். நாமும் பாடம் கற்றுக் கொள்கிறோம்.ஸ்டாலின் எமது அதி உன்னத தோழர்:


ரஸ்யாவின் மீது அனைத்து ஏகாதிபத்தியங்களும் சுற்றி வளைத்து உள்நாட்டு சதிகளையும், எல்லையில் ஆக்கிரமிப்பு போர்களையும் செலுத்தியதும், இரண்டாம் உலகப் போர் நெருக்கடியையும், ரஸ்யாவில் ஏற்பட்ட பஞ்சத்தை ஒட்டிய பிரச்சனைகளையும் மனதில் கொண்டே ஸ்டாலினின் அந்த தவறுகளை அனுகுகிறோம்(மாபெரும் சதி). அதனால்தான் அவர் எமது பெருமைமிகு கம்யுனிச தலைவர்களில் ஒருவராக எம்மிடம் ந்஢லவுகிறார். இதனை குறிப்பிட்டுதான் ஜார்ஜ் தாம்சன் தனது "மார்க்ஸ் முதல் மாவோ வரை" புத்தகத்தில் சொல்கிறார்:


"இருபதைந்து ஆண்டுகளுக்கு பிறகு அவரது தலைமையின் கீழ் அதிகாரங்கள் மங்கிக் கொண்டிருந்திருக்கக் கூடும். வரலாற்றில் வேறு எந்த ராஜதந்திரியும் இத்தகைய ஒரு சுமையை இத்தனை காலம் சுமந்ததில்லை."


எமது தோழர் ஸ்டாலின் இன்றும் சுமக்கிறார். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியதற்க்கு அவரது எதிரிகளால் அவரை முதுகில் குத்திதான் பழி வாங்க முடிந்தது. அதுவும் அவர் இறந்த பிற்ப்பாடு. அவர் எதில் வேண்டுமென்றாலும் தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் ரஸ்ய உழைக்கும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதில் அவர் தோல்வியடையவில்லை. குறுகிய காலத்தில் சோசலிசத்தை அவர் எந்தளவுக்கு வலிமையாக கட்டியமைத்திருந்தார் என்றால் அதனை அவர்கள் உடைத்து சிதைப்பதற்க்கு 40 வருடங்கள் தேவைப்படும் அளவுக்கு. இதோ அவரது இந்த சாதனைக்கு நிரூபனமாக இன்று ரஸ்யா மக்களின் ஆதர்ச நாயகராக ஸ்டாலின் நிற்கிறார். ரஸ்ய மக்களின் வெல்லற்கரிய மன உறுதியின் அடையாளமாக ஸ்டாலின் இன்று நினைவு கூறப்படுகிறார். மாறாக, ஸ்டாலின் கால வன்முறை என்று போலி வருத்தத்தை வெளிப்படுத்தும் கும்பலோ, அவரது சிலையை உடைத்து அவமானப்படுத்திய கருங்காலி கும்பலோ நாட்டை கூட்டிக் கொடுப்பதில் வெகு சிரத்தையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் தொழிலாளி வர்க்கத்தின் உத்வேகத்திற்க்கான அடையாளமாக உலகம் முழுவதும் எதிரொலிக்கிறார்.


'தோழர் ஸ்டாலின்' - அவர் எதிரிகள் மீது செலுத்திய வன்முறை எமக்கு பெருமையளிப்பதே ஆகும். அதற்க்கு நாங்கள் உரிமை கொண்டாடுகிறோம். மக்கள் விரோதிகள்தான் அவரைக் கண்டு பயப்பட வேண்டும். நாங்கள் அவரை நெஞ்சார தழுவி நன்றி சொல்வோம், "இது வரை உலகில் எங்குமே நடந்திராத, உழைக்கும் வர்க்கம் மண்ணுலகில் சொர்க்கம் படைக்கும் என்ற வார்த்தையை நிருபித்துக் காட்டியமைக்காகவும், அதற்க்கு விலையாக பெரும் பழிகளையும், அவமானங்களையும் இன்று வரை சுமந்து கொண்டிருப்பதற்க்காகவும்'.

அசுரன்
தொடர்புடைய சுட்டிகள்:ஸ்டாலின் அவதூறுகள் - அமெரிக்க உளவாளிகளா அல்லது நிரூபர்களா?

Wednesday, October 16, 2013

அன்பான வாக்காள வடிவேலு பெருமக்களே....

எங்கூருல நான் பத்தாங்கிளாஸ கடேசி பரிட்ச்சேல மட்டும் பாஸாகி பிரமோசன் ஆன காலத்திலேயே பாராளுமன்றம், நீதிமன்றம்னு பஹுல் விட்டுட்டு திரிஞ்சவர்தான் அஸ்வின். இவருக்கு எங்கள விட ஒரு வயசுதான் அதிகம் (இப்ப வரைக்கும் அப்படித்தான்னா பாத்துக்கோங்களேன்) ஆனாப் பாருங்க சின்ன வயசுல இருந்தே ரொம்ப கருத்தாப் பேசுவாப்புல. ரொம்ப நா கழிச்சி போன வாரம் அவர பாத்தேன். இப்பயும் அதே கருத்தாப் பேசும் சுபாவம் மட்டும் மாறவில்லை.


பொதுவான நல விசாரிப்புகளுக்குப் பிறகு, இந்தியா இப்ப இருக்குற நிலமய நினைச்சி உச்சுக் கொட்டி பேசத் துவங்கினார். சமூக அக்கறையுடன் பேசுகிறார் கவனிப்போம் என்று கேட்கத் துவங்கினேன். எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில் தீர்வு என்று கடைசியாக ஒன்றைச் சொன்னார் பாருங்கள், நான் அப்படியே ஷாக்காயிட்டேன். அவர் சொன்ன தீர்வு இதுதான், இந்தியாவுல எங்கும் ஊழல், எதிலும் ஊழல், உலகத்துல இருக்குற அத்தன பேரும் இங்க வந்து ஆட்டையப் போடுறானுங்க அதுக்கு அரசாங்கமும் துணை போகுது. இதுக்கெல்லாம் காரணம்... மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸு அரசாங்கம் எனவே இந்தியாவ தூக்கி அப்படியே அலேக்கா மோடி கையில கொடுத்துட்டா நாடு இன்னைக்கோ நாளைக்கோ வல்லரசாயிடும் என்றார். இதச் சொன்னா என்ன பைத்தியக்காரன்னு சொல்றாய்ங்க என்று வடிவேலு போல அவர் பினிசிங் டச் வைக்காத ஒன்றுதான் குறை. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு பாத்திரம் விளக்குவது போல என் தரப்பை விளக்கினேன்.இவர் மட்டுமல்ல இந்தியாவின் நடுத்தர வர்க்கப் படித்த கும்பலில் ஒரு பகுதியினர் இப்படியான வாக்காள வடிவேலுகளாகவே தீர்வு சொல்லித் திரிகிறார்கள். அடிப்படை பொது அறிவு கூட இல்லாமல் கூட்டத்தோடு கோவிந்தா சொல்லும் மந்தை மனோபாவம் மேலோங்கிய நிலையில்தான் இத்தகையோர் இருக்கின்றனர். சில சுலபமான விவரங்களை பரிசீலித்தாலே தீர்வு என்ற பெயரிலான இத்தகைய அடி முட்டாள்தனங்கள் புரிபடும்.

முதல் விசயம்,  இந்தியத் தேர்தல் முறை விகிதாசார அடிப்படையிலானது அல்ல, பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றவர் ஆட்சிக்கு வருகின்ற முறையிலான அமைப்பு அல்ல என்பதையெல்லாம் விட்டு விடுவோம். இவர்கள் வோட்டு போட்டு தேர்ந்தெடுப்பது மோடியையா? இல்லை குறைந்த பட்சம் பாஜகவையா? அல்லது இவர்கள் வோட்டு போட்டு நிராகரிப்பது காங்கிரசையா/மன்மோகனையா? இரண்டும் இல்லை என்பதே உண்மை. அவரவர் தொகுதியில் நிற்கும் அல்லக்கை நொல்லக்கை கிரிமினல் வேட்பாளர்களில் ஏதோ ஒரு பொறுக்கியைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். அமெரிக்கா போல நேரடியாக நாட்டின் தலைவரை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறை இங்கிருந்தாலாவது யோசிக்கலாம். அதுதான் இங்கு கிடையாதே அதனால்தான் தேர்தலில் போட்டியே போடாத மன்மோகன் பிரதமராக முடிந்தது. நிலமை இப்படியிருக்க மக்கள் வோட்டு போடாம விட்டாத்தான் நாட்டுக்கு எதோ கெட்டது நடந்துடும் என்று நம்புகிறார்கள். அதனால் இருப்பதில் பெஸ்ட் பொறுக்கி யாருன்னு தேர்ந்தெடுத்து போறோம். அது இப்போதைக்கு மோடி என்பது வடிவேலுகளின் கருத்து.


இரண்டாவது விசயம். காங்கிரசுக்கு மாற்று என இவர்கள் முன் வைக்கும் பாஜக எப்படியாப்பட்டது? அவர்கள் ஆட்சி செய்த முந்தைய காலத்திலும், அவர்கள் தற்போது ஆட்சி செய்த மாநிலங்களிலும், இப்போது எதிர்கட்சியாக நாடாளுமன்றத்தை நாறடித்து வரும் நிலையிலும், காங்கிரசுக்கு போட்டியாக ஊழல்கள், கிரிமினல் வேலைகள் என்று பட்டையை கிளப்பி வருகிறார்கள். ஈயம் பித்தளையைப் பார்த்து இழித்த கதைதான் இது. மோடி மட்டும்தான் நல்லவன் என்று பாஜகவே சொல்கிறது. வாக்காள வடிவேலுகளுக்கும் இது புரிந்துதான் உள்ளது. மோடி நல்லவன் என்றே வைத்துக் கொள்வோம், தனிமனிதனால் நாட்டை நிர்வாகிக்க முடியுமா? ஒரு வேளை பாஜக நினைத்தால் மோடியை தூக்கியெறிந்து விட்டு இன்னொரு கேடியை பிரதமராக்க முடியுமே? அந்த மேற்படி கேடி தேர்தலில் போட்டி கூட இட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதானே இந்திய 'ஜனநாயகம்'  சொல்கிறது.

மூன்றாவது விசயம். மோடியே பெரும் கிரிமினல், ஊழல் பேர்வழியாக குஜராத்தை ஆட்சி செய்து வருவதும். பன்னாட்டு கம்பனிகளுக்கு பல லட்சம் கோடி குஜராத்து வளங்களை முறைக்கேடான முறைகளில் தாரை வார்த்துள்ளதும், ஐநா அவார்டு கொடுத்தாய்ங்க, எங்கூரு பஸ்ஸாடண்டு சும்மா ஏரோப்ளேன் இறங்குற ரேஞ்சுல இருக்கும், உலக வங்கியிலேயே கோடிக்கணக்குல டேபாசிட் பன்னிருக்கோம், பிரிட்டிஸ் தூதுவரே எங்கள ரொம்ப்பப நல்லவன்ன்ன்னு சொல்லிட்டாரு, ஜப்பானுல ஜாக்கிசானு கூப்பிட்டாஹ, அமெரிக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்பிட்டாஹ  என்பதாக வகை தொகையில்ல்லாம இவர்கள் கொடுத்த பில்டப்புகள் அனைத்தும் பச்சை பொய்கள் என்பதும் தொடர்ச்சியாக அம்பலமாகி வருகின்றன. காங்கிரசு அரசை மக்கள் வெறுத்து ஒதுக்க காரணமாக அமைந்த அதே சி ஏ ஜியின் அறிக்கைகள்தான் மோடியின் ஊழல்களையும் பட்டியலிடுகின்றன. ஆஹ இவன் ஆட்சிக்கு வந்தாலும் காட்சிகள் மாறப் போவதில்லை. என்ன, இவன் கொஞ்சம் மசாலா ஜாஸ்தி போட்டு படம் காட்டுவான். அவ்வளவுதான் வித்தியாசம்.ஆனாப் பாருங்க வாக்காள வடிவேலுகள் ஒரு தடவ முடிவெடுத்துட்டா அத பிற்பாடு அவிங்களே நினைச்சாலும் மாத்திக்க மாட்டாய்ங்க. ஒரு அஞ்சு பத்து வருசம் பிஞ்ச செருப்பாலேயே அடி வாங்கின பிறகுதான் முடிவ மாத்திக்குவாய்ங்க. அதுவும் பிஞ்ச செருப்பு தூள் தூளாகிப் போயிருச்சி இதுக்கு மேல அடி வாங்க நினைச்சாலும் அது அந்த செருப்புக்கு ஆகாத காரியம் என்ற நிலையின் காரணமாகவே வேறு செருப்பைத் தேடும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மேற்கொள்வார்கள்.ஏன்னா, நாங்க கருத்தாப் பேசுவது  மட்டுமல்ல, கருத்தா அடியும் வாங்கவோம்.


ஆஹவே அன்பான வாக்காள வடிவேலு பெருமக்களே, உங்கள் பொன்னான வாக்குகளை இந்த முறையும் மறக்காமல் பிஞ்ச செருப்புக்கே குத்தி இன்னும் ஏழேழு ஜென்மங்களுக்கும் செருப்படி வாங்கி சாபல்யம் அடைவீர்.

அசுரன்
 

இதச் சொன்னா என்ன பைத்தியக்காரன்னு சொல்றாய்ங்க...தொடர்புடைய பதிவுகள்:

Mr. NaMo NaNo

சு.சாமி, சோ ராமசாமி – இரட்டை புரோக்கர்களின் ஒத்த சிந்தனை!


நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே !

மோடியை எதிர்க்கும் சென்னை பொதுக்கூட்டம் – ஆதரவு தாரீர் !

இவனுங்க அப்பனுங்க எல்லாம் குதிருக்குள்ளே இல்லையாம், அவனுங்களே சொல்றானுங்க!!!

இந்தியாவில் இந்துவுக்கு நீதியில்லை என்று சொல்லும் சொறிநாய்களின் கவனித்திற்கு

இந்தியாவுல இந்துவுக்கு நீதி இல்லையாம். உண்மைதான் இதோ 1997ல் ரண்வீர் சேனா எனும் ஆதிக்க சாதி பயங்கரவாத குண்டர் படை 58 தலித்துக்களை தீயிட்டு எரித்துக் கொன்றனர். பிஹார் ஜெகன்னாபாத மாவட்டத்தைச் சேர்ந்த லஷ்மண்பூரில்தான் இக்கொடூரம் நிகழ்ந்தது. கொல்லப்பட்டவர்களில் 27 பெண்கள், 10 சிறுவர்கள், ஒரு கர்ப்பிணிப் பெண் அடங்குவர்.

இந்த வழக்கில் கீழ் கோர்ட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாதிவெறி பயங்கரவாத குற்றவாளிகள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்துள்ளது பாட்னா தலைமை நீதிமன்றம். இந்த சாதிவெறியர்களுக்கு ஆதரவு பாஜக எனும் இந்துக்களின் காவலன்.

கோத்ரா ரயில எறிச்சுட்டான்னு ஊரையே கொழுத்துன பன்னிங்க இந்த படுகொலைகளுக்கு எத்த எரிச்சானுங்க? இல்ல இங்கே வக்கனையாப் பேசித் திரியும் சாக்கடையில் உளலும் பிராணிகளை ஒத்த காவிகள் இந்த படுகொலைகள் கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்?  செத்த உயிர்கள் தலித் என்பதாலா? அப்புறம் என்ன மசித்துக்கு மதம் மாறினானு ஊர கூட்டி ஒப்பாரி வைக்கிற?

ஆஹ, இந்த கும்பல் இந்து என்று கூட்டம் சேர்ப்பது சிறுபான்மை ஆதிக்க சாதி கும்பலின் சுரண்டலுக்கான சதிதானேயன்றி, வேறொன்றுமில்லை. அப்படியில்லயென்றால் கொல்லப்பட்ட 58 பேருக்காக இந்த நாட்டையே காவி கும்பல் கொளுத்தியிருக்க வேண்டுமே? மாறாக கொன்ற பயங்கரவாதிகளுடன் ஒட்டி உறவாடி அலைவது ஏன்?

சிறுபான்மை இந்துவுக்கு பெரும்பான்மைக்கான உரிமை  வேண்டும் என்று கோரும் காவி கும்பலே பதில் சொல்.

அசுரன்

Wednesday, October 09, 2013

பல் இல்லாத பாம்பை அடிப்பியா, இல்ல பாம்பாட்டியை அடிப்பியா?

ஆதார் அட்டை (அது அட்டையா எண்ணா என்பதையே குழப்பி விடுகிறார்கள் வேண்டுமென்றே) சட்டவிரோதமானது என்பதையும், அது கட்டயமாக்கப்படுவதை எதிர்த்தும் தொடுக்கப்பட்ட வழக்கில் ஆதார் அட்டை கட்டாயமல்ல என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

உளவுத் துறை தலைவன் நீல்கேனி

வழக்கு விவரங்கள் வினவில் உள்ளன. சுருக்கமாக உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் மத்திய அரசின் பாதி உண்மை, பாதி பொய் கலந்த பிரச்சாரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான சட்ட அங்கீகாரமும் இல்லாமல் நந்தன் நீல்கேனி மூலம் ஒரு நிறுவனத்தை உருவாக்கி, 122 கோடி மக்களுக்கு அடையாள அட்டை வழங்குகிறேன் என பிரச்சாரம் செய்து இதற்காக சுமார்ரூ. 50,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை.

ஆதார் என்பது 12 டிஜிட் அடையாள எண் தான். இதனால் எந்த அட்டையையும் வழங்க மாட்டோம் என்ற உண்மையை கூட மக்களுக்கு அரசாங்கம் சொல்லவில்லை. ’ஆதார்’ ஒரு அடையாள அட்டை என பிரச்சாரம் செய்து, மானியம், கேஸ் சிலிண்டர் அது இருந்தால் தான் கிடைக்கும் என மக்களை அச்சுறுத்தி இத்திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. மக்களை உளவு பார்க்க மட்டுமே ஆதார் அடையாளம் பயன்படும்.

சரி  இதில் பாம்பும், பல்லும் எங்கே வந்தது. உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்தான் மேற்படி பல்லில்லாத பாம்பு. உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கிவிடவில்லை. மாறாக ஆரம்ப கட்ட விவரங்களின் அடிப்படையில் ஆதார் அட்டை சட்ட விரோதமானது, அரசியலமைப்புச் சட்டங்களுக்கு எதிரானது என்பது உறுதிப்பட்ட நிலையில் அதனை மக்களுக்கு கட்டாயமாக்கக் கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதற்கே அரசு தைய தக்க என்று குதியாட்டம் போட்டு நீதிமன்றத்தை மிரட்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் ஆதார் அட்டை உத்திரவை ரத்து செய்யக் கோரியும், குற்றப் பிண்ணனி கொண்டவர்கள் தேர்தலில் பங்கெடுப்பது, 49 O வை  ஒரு பட்டனாக வோட்டுப் பெட்டியில் இணைப்பது  உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றிய உச்சநீதிமன்ற உத்திரவை ரத்து செய்யக் கோரியும் மத்திய அரசு மனு கொடுத்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்றம் அநாவசியமாக அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுவதாக அரசால் சுட்டிக் காட்டப்பட்டது. இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை என்பதுதான் அரசின் கருத்து. மேலும், மேற்படி விவகாரங்களில் உச்சநீதிமன்றத்தின் எந்த முடிவையும் குப்பை கூடையில் வீசும் வகையில் சட்டம் இயற்றவதற்கான வேலைகள் அமைச்சரவையில் நடந்துவருவதும் விவாதிக்கப்பட்டது. இதனை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முரன்நகையாக இப்படி குறிப்பிட்டனர் "You have the ordinance route also. If you have a law this case becomes irrelevant.' அதாவது, 'சட்டம் போட்டுட்டா நீதிமன்ற வழக்கு ஒன்னுமில்லா போயிரும் இல்லையா' என்று கேட்டுள்ளனர்.

இப்படியாக பாம்புக்கு பல் இல்லை என்பதை ஒரு வழியாக ஒத்துக் கொண்டார்கள். அணு ஒப்பந்தம் தவறு என்று நீதிமன்ற படியேறினால், அது வெளியுறவு கொள்கை முடிவு அதில் நாடாளுமன்றத்திற்கே அதிகாரமில்லை பிறகல்லவா உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் என்றனர். இப்போ ஆதார் எண், தேர்தல் சீர்திருத்தம் பற்றிய வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு அரசின் கொள்கை முடிவுகளிலே தலையிடுவதற்கு அதிகாரமில்லை என்கின்றனர். இப்படியெல்லாம் நீட்டி முழக்க வேண்டாம் என்றுதான் நேரடியாக எங்களுக்கு பல் இல்லை என்று அறிவித்து விட்டனர் நீதிபதிகள்.

பல்லில்லாதா பாம்பு


ஆனாப் பாருங்க நம்ம ஜனங்க சரியா பழக்கப்படுத்தினா இந்த பாம்பு கொத்தி கொன்றும்னு இன்னும் நம்பிட்டு திரியுதுங்க. இந்த பாம்பு புஸ் புஸ் என்று கார்போரேசன் குழாய் மாதிரி சவுண்டு மட்டும்தான் விடும் எனும் போது பாம்பை நொந்து என்ன பயன்? பாம்பாட்டியை அல்லவா நொங்கெடுக்க வேண்டும்?

அசுரன்


ஆதார் அட்டை கட்டாயமல்ல – உச்சநீதி மன்றம்

ஆதார்: விலை போகும் உங்கள் தகவல்கள்!

ஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

ரேசன் கடை ஒழிப்பே நேரடிப் பணப் பட்டுவாடா திட்டம் !

உங்களைப் பற்றிய விவரங்கள் விற்பனைக்கு கிடைக்கும் !

டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி?

Saturday, October 05, 2013

மேநாட்டுக்கார பக்தனானலும் என்னாட்டுக்காரனென அருளிய மீனாட்சி!!

அது ஒரு ஆன்மிகச் சொற்பொழிவு. பேசிக் கொண்டிருந்த பெரியவர் ஒரு கதை சொல்லிக் கொண்டிருந்தார். கண்கண்ட தெய்வம் மதுரை மீனாட்சி தனது பக்தனுக்கு அருள் பாலித்து காப்பாற்றுவதற்கு எழுந்தருளிய கதை அது. கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் உணர்ச்சி மேவிட உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தது. கதை இதுதான், கதையல்ல நிஜமாகத்தான் இருக்கும்.

ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் வெள்ளைக்கார துரை ஒருவன் மீனாட்சி மீது மிக பக்தியாக இருந்திருக்கிறான். மீனாட்சியை தரிசிக்க ஆவல் இருந்த போதும் கோயில் உள்ளே எல்லாம் செல்வதில்லையாம்(என்ன காரணம்... ம்...) வெளியவே இருந்து பார்த்துக் கொள்வானாம். இப்படியாக நாட்கள் கழிந்தன. ஒருநாள் அவன் மொட்டை மாடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்(இரவுதான்). திடீரென்று பெருமழை. இடியும் மின்னலுமாக அடித்து நொறுக்குகிறது. இவனோ அசந்து தூங்குகிறான். அப்போது அங்கே தோன்றிய அன்னை மீனாட்சி அவனை தட்டியெழுப்பி, அப்பனே என்னுடன் வா என்று அழைத்துச் செல்கிறாள். இவனும் அன்னையின் தரிசனம் கிடைத்த பெரூவகையில் பின்னாலே சென்று விடுகிறான். கோயில் வாசல் வரை கூட்டிச் சென்றவள் அங்கேயே மறைந்து விடுகிறாள் (கோயிலுக்குள் ஏன் கூட்டிச் செல்லவில்லை? என்ன காரணம்.. ம்...). இவனும் சரி பார்த்த வரை பரவசம் என்று கலெக்டர் மாளிகைக்கு திரும்பி வருகிறான். வந்து பார்த்தால் வேலைக்காரர்களெல்லாம் மாளிகை வெளியே பெரும் பரபரப்புடன் நின்று கொண்டிருக்கிறார்கள். காரணம் கலெக்டர் படுத்திருந்த இடத்தில் இடி இறங்கி முற்றிலும் பொசுங்கிப் போயிருந்தது. இப்படியாக கடை கோடி பக்தனுக்கு மட்டுமல்ல கடல் கடந்த பரதேசி பக்தனுக்கு அருள் பாலிக்கும் தெய்வம் அன்னை மீனாட்சி என்று கூறி உரையை தொடர்ந்து கொண்டிருந்தார் பெரியவர்.

நமக்கு மண்டையில் எக்கச்சக்கசக்கசக்க கேள்விகள். மொத கேள்வி பிரிட்டிஸ்கார நாய்க்கு சேவை செய்வதில் எப்படி ஆர் எஸ் எஸ்ம், ஆண்டாளும்... ஸாரி மீனாட்சி அன்னையும் ஒரே விதமாக சிந்தித்து செயல்பட்டனர் என்பது வியப்பளித்தது. மதுரை மீனாட்சி கோயில் உயிர் வாழ்வதே அங்குள்ள மக்களின் உழைப்பால்தான் எனும் போது அதை சுரண்டி கூறு கெடுக்கும் ஆங்கிலேயெ கலெக்டர் ஒருவனை பாதுகாப்பது என்பது அந்த மக்களுக்கு செய்யும் துரோகம் ஆயிற்றே?

நெண்டாவது கேள்வியாக தோன்றியது, வெள்ளைக்காரன் வெள்ளைக்காரந்தான் அவன் ஆய் போனாலும் அது ஒரு தனி அழகுதான் என்று ரசித்து மயங்கும் மனோபாவம் பாவம் தெய்வத்தையும் விட்டு வைக்கவில்லையே என்று தோன்றியது. இங்கே அவனவன் மொட்டைகளையும், கொட்டைகளையும், ஏன் பட்டைகளையும் கூட போட்டுக் கொண்டு தெய்வமே கதி என்று கிடக்க அவனுக்கெல்லாம் ஒரு சின்ன பிட்டு சீனு கூட காட்டாத மீனாட்சி, அந்த பரதேசி (அட பரதேசின்னாக்க வெளிநாட்டுக்காரன்னு அர்த்தமுங்க. ஆர் எஸ் எஸ் காரண்ட கேளுங்க அவனுக்குத்தான் இந்தி தெரியுமே) வெள்ளைக்காரன் மனுசுல ரோசிச்சதுக்கே எக்ஸ்ட்ரா எபெக்ட் கொடுத்து காப்பத்திருக்கு இந்த அம்மா. அப்போ இங்கன கெடந்து உருகுனெவனெல்லாம் லூசுப்பயலுவன்னு நான் சொல்லலீங்கோ அந்த அம்மா சொல்லுது இல்லைன்னாக்க அந்த சொற்பொழிவை ஆத்து ஆத்து என்று ஆத்திய பெரியவர் சொல்றாருங்கோ.

மூனாவது நெம்ப முக்கியமான கேள்விங்கோ, கோயிலுக்குள்ளார வெள்ளையன் ஏன் போகலன்னு(போக முடியலன்னு) நான் ஆராய்ச்சி செஞ்சா ஒரு சாதிய மட்டும் திட்டுறீங்கன்னு கோபப்படுறாய்ங்க. அந்த கேள்விக்கு சரியான இன்னொரு பதில் ஒன்னு இருக்குங்கோ அதையே கேள்வியக் கேட்டாக்க இந்த கேள்விக்கு பதில் கிடைச்சிரும் (ரொம்ப குழப்பமா இருக்குல்ல?). அதாவது பாரத தேசம், பாரினிலே  ஒரு ஆன்மிக ஊற்று, அது மனித வாழ்வை கடைத்தேற்ற நமக்கு காட்டிய தெய்வங்களை உளமார தொழுது வேண்டியவர்களில் ஒரு சாதியைச் சேர்ந்தவர் தவிர மீதி எல்லாருமே நெருப்புக்கும், இன்னபிற விசயங்களுக்கும் இரையாகி முக்தி அடைந்துள்ளனரே அந்த மர்மம் என்ன? உளமார தொழுத நந்தனார் கடைசி வரை சிவனை பார்க்கவே இயலவில்லை. அவரால முடியலப்பா அப்படித்தான் சொல்லோனும். இல்லைன்னாக்க ஒரு சாதிய திட்டுறாய்னு கடுப்பேத்துவாய்ங்க் லார்டுங்க. சிவனை பார்த்தே தீருவேன்னு போய் நின்னவர நெருப்புத்தான் தீண்டுச்சி (அதுவாவது தீண்டுச்சே). முக்தி இப்படித்தான் அவருக்கு கிடைத்தது. அதே போல அந்த வெள்ளைக்காரனுக்கும் மின்னல் மூலம் முக்தி கிடைக்கச் செய்திருக்கலாமே? வை திஸ் பார்சியாலிட்டி, இது வெள்ளைக்காரனுக்கு மட்டுமில்லை, மேலே ஏற்கனவே சொன்னது போல அந்த குறிப்பிட்ட சாதிக்காரங்களுக்கும் கூட இகலோக வாழ்க்கைக்கான அதிகபட்ச உத்திரவாதத்துடன் தான் முக்தி கிடைக்குது. மத்தவனுக்கு மொத்த உயிர பறிச்சுத்தான் முக்தி கிடைக்குது. அப்போ அந்த ஸ்பெசல் குவாலிபிகேசன் அந்த குறிப்பிட்ட சாதி அது இல்லைனா சாதியே இல்லாத மேட்டுக்குடி வெளிநாட்டுக்காரன் அப்படித்தானே?

இந்த கேள்விக்கு யாராவது ஆன்மிக அறிஞர்கள் பதில் சொன்னால் 'ரொம்ப வசதியா' இருக்கும். சொல்வாய்ங்களா?

அசுரன்

மோடி வந்தால் ஊழல் குறைவதும், பன்னி விட்டையும்!!

மோடி வந்தால் ஊழல் ஒழியுமாம். இவனும், அம்பானி, அதானி கும்பலும் குஜராத்து வளங்களை மொட்டையடிக்க போட்டுக் கொண்ட ஒப்பந்தங்கள் ஊழல்கள் எல்லாம் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா வெளிய வருது. ஒன்னு மட்டும் புரியல, சாப்பிடற உணவு இங்க ரொம்ப கேவலமா இருக்கு, அங்க கொஞ்சம் பரவால்ல அதனால் அங்க சாப்புடுறேன்னு சொல்றவன ஒன்னும் செய்ய முடியாது. சாப்பிட்டேயாக வேண்டும் எனும் போது இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் சாப்பிடுறதுக்கு கை நிறைய பிரெஸ் கழுத விட்டையை மன்மோகன் தந்தாரு 9 வருசமா தின்னானுங்க. இப்போ, கழுத விட்ட டேஸ்ட இதுக்கு மேல தாங்க முடியாது அதனால மோடியோட பன்னி விட்டய சாப்பிட போறோம்னு சொல்லிட்டு சில பேரு கிளம்புறானுக.


அசுரன்

Thursday, October 03, 2013

ராமனைப் பற்றி விவேகானந்தர் என்ன சொல்கிறார்?

ராமனைப் பற்றி விவேகானந்தர் என்ன சொல்றார்? "காடுகளிலிருந்த மக்கள் யாரென்பது ராமருக்கும் அவரைச் சார்ந்த ஆரியர்களுக்கும் தெரியாது. அழகில்லாதவர்களைக் குரங்குகள் என்று அழைத்தார்கள். அவர்களிலே மிகுந்த பலமும், தைரியமும், செல்வாக்கும் உடையவர்களை 'அரக்கர்கள்' என்று அழைத்தார்கள். தென் இந்தியாவில் வசித்த மக்களே இப்பெயர்களால் அழைக்கப்பட்டார்கள்". (சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் எனும் நூல் - இராமன் தேசிய நாயகனா தேசிய வில்லனா? புதிய கலாச்சாரம் வெளியீடு)

ஆக இன்றும் கூட பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் குரங்கு வம்சத்தாரும், அரக்க வம்சத்தாரும் தம்மை இழிவு செய்த ராமனின் வம்சத்தாருக்கு கடப்பாரை தூக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆக்கங்கெட்ட கூவைகளுக்கு குரங்குன்னு பேரு வைச்சி அத அவமானப்படுத்தியிருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து.

அசுரன்

Rama.... Rama....

Related Posts with Thumbnails