TerrorisminFocus

Thursday, June 29, 2006

இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்

சேவை வரி பற்றி மிகவும் வருத்தப்பட்டு sreegopi என்பவர் ஒரு பதிவு சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அவர் இதுபோல் பல்வேறு விவசாயிகள் பிரச்சனைகளை பற்றி தொடர்ந்து பதிவுகள் எழுதிவருகிறார். நல்ல ஆத்மா. விவசாயிகள் பிரச்சனை நமது நாட்டின் அனைத்து விசயங்களுடனும் பின்னி பினைந்து உள்ள ஒரு விசயம். ஆனால் எல்லோரும் அதை தனிப்பட்ட ஒரு பிரச்சனையாக இருப்பதுபோல் பேசுகிறார்கள். நமது நாட்டின் பொருளாதார கொள்கைக்கும், காலனி ஆதிக்க வரலாறுக்கும் இதில் மிகப் பெரிய பங்கு இருப்பதைப் பற்றி யாரும் பேசக்காணும். இதில் உச்ச கட்டம் விவசாயிகள் பிரச்சனை என்ற பெயரில் ஒருவர் யாரோ இன்னொரு அரைவேக்காட்டை திருப்திப் படுத்த வங்கிகள் பிரச்சனையைப் பற்றி எழுதினார்.
இந்த சூழ்நிலையில் sreegopi - யினுடைய கட்டுரையை கண்டேன். என்னுடைய ஆதாங்கத்தையும் கொட்டியுள்ளேன்.
+++++++++++++++++++++++++++++++++++

நண்பர் Sreegopi
,

இந்த அரசே தனது உண்மையான முகத்தை காட்டும் இடத்தை நோக்கி வெகு வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் customs வரியை குறைத்துக் குறைத்து முழுமையாக அதை எடுத்துவிடுவதும்(இறக்குமதிக்கு வசதியாக). மறுபக்கம் சேவைவரியை உயர்த்தி உயர்த்தி இந்தியாவில் service tax regime கொண்டு வருவதும் தான் நமது மானமிகு, மக்கள் துரோக, ஏகாதிபத்திய சேவை(இதற்கு சேவை வரி கிடையாது, வரும்படி உண்டு), மறுகாலனியாதிக்க ஏஜெண்டுகளின் திட்டம்.

இதைத் தனது வாயாலேயே சொல்லியுள்ளார் வேதாந்த கம்பெனி போர்டு ஆப்ஃ டைரக்டர்ஸ் மெம்பரும், என்ரான் டுபாக்கூர் கம்பெனிக்கு, அரசை தோல்வியுரச் செய்ய சட்ட ஆலோசனை கொடுத்தவருமான இந்நாள் நிதிஅமைச்சர் திரு. ப. சிதம்பரம். அவரது திட்டப்படி ஒரு வருடத்துக்கு ஒரு சதவீதம் உயர்த்துவதாக உத்தேசம். ஆனால் இந்த வருடம் 2% உயர்த்தியுள்ளார்கள்.

சேவைத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கு அடுத்ததாகத் தயாராக இருப்பவை வக்கீல், டாக்டர் ஆகியன.

இது போக வருமான வரியை மாதச் சம்பளக்காரர்களிடமிருந்து பிடுங்க அனைத்து வழிவகைகளையும் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். HRA, Insurance போன்ற வரி விலக்குகளை எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவைப்பட்டால் IT வலைதளத்தில் verify செய்து கொள்ளவும்.

VAT, பெட்ரோல், டீசல் வரிகள் போன்று ரொம்ப சிக்கலில்லாமல் நேரடியாக நம்மிடமிருந்து பிடுங்கும் இன்னுமொரு திட்டம் இந்த சேவை வரி.

இவை எல்லாமே அவர்கள் உலக வங்கி, உலக வர்த்தக கழகத்திற்கு வாக்கு கொடுத்தது போலவே செய்து வருகிறார்கள். இதில் leftகள் தடுப்பதாக வருத்தம் வேறு. உண்மைதான், அந்த வோட்டுக் கம்யூனிஸ்டுகளின் முகமூடி இல்லையெனில் நமது அமேரிக்காவை நக்கி பிழைக்கும் சாலச்சிறந்த ஜனநாயகத்தின் கோடூர முகம் மக்களுக்கு எப்பொழுதோ தெரிந்திருக்கும். இந்த வகையில் செல்வன் இந்திய ஜனநாயகத்தில் வோட்டுக் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை மிகச் சிறப்பாகப் புரிந்தது போல் தெரிகிறது. போலிகள் எல்லை மீறும் போது மட்டும் சிறிது சீறுவார்.

இப்படிப் பிடுங்கிய பணத்தில் அவன்(MNC) நோகாமல் நொங்கு தின்பதற்கு பிரகாசமான விளக்குகளைப் பிடிக்க infrastructure developement வேறு(infrastructure for whom என்ற RUPE -ன் வலையில் படிக்கவும்). அதுவும் பற்றாது என்று NALCO போன்ற உலகின் சிறந்த கம்பெனிகளை விற்று மாமா வேலை பண்ண இந்த அரசு தயாராகிவருகிறது. இடஓதுக்கீடு பற்றி வாய் கிழியப் பேசிய அறிஞர் நாராயணமூர்த்தி பெரிய நகரங்களைத்தாண்டி தனது கம்பெனியைத் தொடங்க வேண்டுமெனில் சலுகை(அவர் வர்க்கத்திற்கு மட்டும் இடஒதுக்கீடு) கேட்கிறார். இது பரவாயில்லை, இவர்கள் இந்தியாவில் கம்பெனி தொடங்கப் பல சலுகைகள்(ஒரு பிரயோசனமும் இல்லை என்றாலும்). தண்ணீர் பத்து வருடங்களுக்கு free, குறைந்த விலையில் மின்சாரம், refined resourceஆக, அப்படியே தின்பதற்குத் தயாராக(ready made) தனது சொந்த துட்டை செலவழித்து தயாரான IT தொழிலாளர்கள், முக்கியமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம், no labour Law, வரிச் சலுகைகள், மக்களை அடகுவைத்து வாங்கிய கடனில் இவர்களுக்கு infrastructure.

ஆனால் இந்திய சந்தையை ஆண்டு வந்த சிறு தேசிய முதலாளிகளை திட்டமிட்டு ஒழித்து விட்டார்கள்(கர்நாடகாவில் கடந்த 8 வருடங்களில் 80,000 சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன). கடந்த பத்து வருடங்களில் IT துறையால் கிடைத்த நேரடியாக, மறைமுகமாகக் கிடைத்த வேலை வாய்ப்பு 5 லட்சம் சொச்சம். ஆனால் இதே நேரத்தில் சிறு தொழிற்சாலைகளின் அழிவால் வெளியேறிவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்திற்கும் அதிகம். இவர்கள் இன்று reserve பட்டாளமாக, contract laboureஆக. இதை வளங்களின் வறுமை என்று சொல்லுவதா. இது போக விவசாயிகளை நிலத்தை விட்டு விரட்டும் திட்டமாக விவசாய வேலை வாய்ப்பை உடைத்ததில் வேலை இழந்தவர்கள் வேறு. அந்தக் கூட்டம் அவர்களது(வோட்டு கட்சிகளின்) விளக்கு பிடிக்கும்(Infrastructure developement) வேலைக்கு குறைந்த கூலிக்கு நகரத்தில் குவியும் உழைப்பு வளம், இப்படி சங்கிலித் தொடராக இவர்களின் உலகமயமாக்கம் நாட்டை சுற்றி சூறையாடி இவர்களுக்கு கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது.

கூரையை பிய்துக்கொண்டு கொட்டியதில் என்ன நடந்தது என்பதை நமது தி ஹிந்து sub editor சாய்நாத் கூறுகிறார்:

""Well, good news for someone, anyway. The collective net worth of 311 Indian billionaires is now Rs.3.64 trillion. This is up 71 per cent from last year, when it was a paltry Rs.2.13 trillion. The tribe has also grown. It now includes 133 new entrants who just months ago were merely millionaires. The daily newspaper that tracks this elite club (Business Standard, November 9, 2005) puts it simply: "India's billionaires have never had it so good."

Some hundreds of millions might never have had it so bad either. So just before we pop the corks on those bottles, have a look at the news from the nation's farm households. There are millions of those, not 311. The average monthly per capita expenditure (MPCE) of farm households across India was Rs.503 in 2003. That is just about Rs.75 above the rural poverty line. And it is an average across regions and classes and income groups. So even this dismal figure hides huge inequities. ""


இதில் ஏற்கனவே ஒத்துக் கொண்டது போல் SEZ(Special Economic Zone) க்கு அடுத்து, SIR(SIR தானா என்று சரியாக ஞாபகம் இல்லை. SIP ஆகவும் இருக்கலாம்) என்ற கல்வி தனியார்மயம், உலகமயத்துக்கான திட்டம் வர இருக்கிறது. இதில் இடஓதுக்கீடாவது மண்ணாவது. 100% காந்தி தாத்தாவிற்குத்தான் இடஒதுக்கீடு(அதுவரை இந்திய கரன்சி, டாலராக மாறவில்லை என்றால்).

இன்னும் capital convertibility act வேறு உள்ளது,

இதுவரை அமல்படுத்திய, தண்ணீர் தனியார்மய திட்டங்கள், கிராம வளங்களை கொள்ளையிட அடிக்கல் நட்டிய கிராம சுய தேவை பூர்த்தி செய்யும் திட்டங்கள், Patents Rights, விதை நெல் சீர்திருத்தச் சட்டம்(விதைகள் மீதான பாரம்பரியமான விவசாயிகளின் உரிமையைப் பறிக்கும் திட்டம்), நாட்டைக் காட்டிக் கொடுத்த ராணுவ ஒப்பந்தங்கள், retail business FDI, real estate FDI, உணவுப் பொருள், விவசாய இடுபொருள் சில்லரை-மொத்த விற்பனையில் FDI, பல்வேறு இறக்குமதி சலுகைகள், இன்னும் பல இவை எதுவும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டது இல்லை(இவற்றில் வெகு சில கையெழுத்திடப்பட்டு பிறகு விவாதிக்கப்பட்டன என்பது பாரளுமன்றம் ரப்பர் stamp என்பதை நிருபிக்கிறது).

'white man's burden' என்ற உணர்வுக்கு அன்று சொறிந்து விட்டு இந்திய விடுதலையை மறுத்த கூட்டங்கள் தான் technology, developement என்று பல வார்த்தைகளைப் போட்டு இன்றும் சொறிந்து கொடுக்கிறார்கள். 'புல்லுக்கும் பாயும் நீர்' என்று ஒரு பழமொழி உள்ளதே அதுதான். மூலதனத்தின் போக்கில் சிறிது வசதியான பகுதியில் சிக்கி கொண்ட சில்லுகள்தான் இவர்கள். தங்களையும் சுரண்டக்கொடுத்து, தானும் சுரண்டி - உண்டி பெருப்பவர்கள் இந்த கூட்டம். இத்தகைய உற்பத்தி உறவில் இருப்பதாலேயே இவர்களும் இதே தானும் அடிமை, இன்னொருவனையும் அடிமைப்படுத்து என்று சொல்லும் இந்து சனாதன தர்மத்திற்கும் ஆதரவாகப் பெரும்பாலும் உள்ளனர்.

அன்றைய இந்தியாவிற்கும், இன்றைய இந்தியாவிற்கும் 6 வித்தியாசம் சொல்லுங்கள் பார்ப்போம்.

மராமத்து பணிகளைக் கைவிட்டு விவசாய பஞ்சத்தால் கொன்றது அன்றையகாலனியாதிக்கம். மிஞ்சியவர்களை ஸ்ரீலங்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்களாக அனுப்பியது(டைட்டானிக் போல இப்படி சென்ற ஒரு கப்பல் விபத்துக்குள்ளாகி ஆயிரக்கணக்கில் இறந்தார்கள்), மேலும் அப்படி கிடைத்த அத்துக் கூலி ஆட்களுக்கு ஒரு வேளை கஞ்சி கொடுத்து கட்டியதுதான் சென்னை பங்கிங்காங் கால்வாய். இப்படி அன்று நாடு கடந்து அகதிகளை விரட்டியது காலனியாதிக்கம். இன்று மனித வளத்தின் மகிமையை உணர்ந்து அப்படி கொல்லாமல் அந்த reserve வளத்தை பெரு நகரங்களில் நவீன நாடோடிகளாக அகதிகளாக குறைந்த கூலிக்கு ஒட்ட சுரண்டுகிறது இன்றைய காலனியாதிக்கம் என்பதை தவிர்த்து வேறு வித்தியாசம் தெரியவில்லை.

இப்படி சேம நல அரசு என்ற சோவியத் ரஷ்யா கால ஜிகினா முகமூடி இனிமேல் தேவையில்லை என்பதை உணர்ந்து தனது அப்பட்டமான காலனி ஆதிக்க சேவையை நியாயப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ள இந்த அரசு, தன்னை முற்றிலுமாக இலக்கணப் பூர்வமான ஓர் அரசு செய்ய வேண்டிய வேலைகளை மட்டும் செய்யும் நிலையை நோக்கி வெகு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது இங்கு சட்டம், போலிசு, நீதிமன்றம், வரி வசூல் மட்டுமே பார்க்கப்படும் என்கிறது அரசு. அந்த அரசுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்காமல் சீக்கிரம் அனுப்பி வைப்பதுதான் நீங்கள்(Sreegopi) மேற்சோன்ன பிரச்சனைக்கும் சேர்த்து தீர்வு கொடுக்கும். அதாவது மக்கள் இங்கு 'அரசுக்கு ஈமக்கிரியை' செய்யப்படும் என்ற போர்டு தொங்கவிட்டு வியாபாரம் செய்தால்தான் அடுத்த சந்ததிக்கு ஏதாவது விட்டு செல்ல முடியும்.


sreegopi,

விவசாயத் துறையை(not only Agri) முற்றிலுமாக MNC -க்களுக்கு தேவையான கச்சா பொருள்களுக்கான விளைநிலமாக மாற்றுவதுதான் அவர்களது திட்டம். நமது பாரம்பரிய, மரபு விவசாய உற்பத்திப் பொருட்களை அன்று ஆங்கிலேயன் அவுரி பயிர் செய்யச் சொல்லி அழிக்க முற்பட்டான். இன்று அவனைவிட வேகமாக பன்னாட்டு முதலாளிகள் பூ, மூலிகை, கற்றாழை போன்றவற்றை, அவனுக்கு தேவையானவற்றை பயிர்விக்கும் விதமாக மொத்த விவசாய உற்பத்தி முறையையும் கள்ளத்தனமாக கார்பொரேட் மயமாக்கி வருகிறான். அதாவது விவசாயியை முதலாளி ஆக்காமல், அவனை அத்துக் கூலிக்கு அரைப்பாட்டாளியாக நகரங்களுக்கும், கிராமத்திற்கும் அலைக்கழித்து அவனை நிலத்திலிருந்து பிடுங்கி இந்திய விவசாயத்தை கார்போரேட் மயமாக்கும் முயற்சி நடந்து வருகிறது. தரிசு நில மேம்பாட்டு திட்டம் எல்லாம் அப்படித்தான். சமீபத்திய உணவு தானிய இறக்குமதி பற்றிய தகவல் சேகரித்து வருகிறேன். இதுவும் கூட WTO-ல் ஒத்துக்கொண்டபடி உணவு தானிய, விவசாய விளை பொருள், விவசாய இடுபொருள் மொத்த உற்பத்தி, விற்பனை, சில்லறை விற்பனையில் MNC-க்களுக்கு சந்தையை clear பன்னிவிடும் வேலையோ என்று ஒரு சந்தேகம் வருகிறது.

நமது நாட்டுக்கு தேவையான விவசாய பொருட்களை பாதுகாக்க ஒருங்கிணைந்த கூட்டுறவு அமைப்புகளை கட்டாமல், குளிர்பதன பாதுகாப்பு கிட்டங்கிகளை நாடு முழுவதும் கட்டாமல், விவசாயிகளுக்கு நாட்டுக்கு தேவையான விளை பொருட்களை நவீன முறையில் பயிர் செய்வதற்கு பயிற்றுவிக்காமல், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலத்திலிறங்கா புண்ணியாத்மாக்களிடமிருந்து நிலங்களை பிடுங்கி பிரித்துக் கொடுத்து கூட்டுறவு பண்ணை கட்டாமல் இந்திய விவசாயம் அடிமை சேவகம் செய்வதை தடுக்க முடியாது(இன்னும் முழுமையாக அடிமை சேவகம் இல்லை. ஆனால் அவனது திட்டம் அதுதான்). கண்ட கம்முனாட்டியும் சென்ட் போடுவதற்கு இங்கு பூ- விளைவித்து பாதுகாக்க ஓசூரில் கிட்டங்கி கட்ட அடிக்கல் நாட்டியுள்ள தங்க தலைவலி ஜெயலலிதா, நான் மேற்சொன்ன விசயங்களில் ஏதாவது ஒன்றை செய்திருக்கலாம். செய்ய முடியாது. அல்லது அம்மாவுக்கு இலவசமாக மக்கள் காதில் பூ வைக்கும் திட்டமிருந்து அதற்காக அந்த கிட்டங்கி கட்டப்படுகிறா? மின்சாரம் ஏன் இலவசமாக கொடுக்க முடியாது என்ற கேட்ட பொழுது, "உலக வங்கி தரக்கூடாதுன்னு சொல்லுது' என்ற அரசியல் அனுபவமின்றி T. பொன்னையன் போட்டுக் உடைத்தாரே, இன்னுமா விளங்கவில்லை.

இல்லை.. தேர்ந்தெடுத்த தேவடியாக்கள் நாடாளுமன்றத்தில் முந்தானை விரிக்க சண்டை இட்டுக்கொண்டிருக்கும் பொழுது, சம்பந்தமில்லா உலகவங்கியும், WTO -வும், அமெரிக்க embassy யும் நமது அரசியல் தலைமைப்பாத்திரத்தை அபகரித்துள்ளதைத்தான் உலகின் பெரிய ஜனநாயகம் என்று கூறுகிறீர்களா? அடிமைத்தளை, காலனியாதிக்கம், வீரம், தியாகம், சுயமரியாதை போன்ற வார்த்தைகள் 1947 - க்கு பிறகு அகராதிகளிலிருந்து இன்னும் நீக்கப்படவில்லை.

சுயமரியாதை என்பது பல பேருக்கு பார்ப்பன எதிர்ப்பில் மட்டுமே கிளர்ந்தெழுகிறது. அது அப்படியல்ல. அது எல்லா வித அடக்குமுறைக்கு எதிராகவும் கிளர்ந்தெழவேண்டும்.

இடஒதுக்கீட்டின் வயது சில ஆயிரம் வருடங்கள்

தினகரனில் ஜுன் 9 ஆம் தேதி பிரசுரமான வே. மதிமாறனின் ஒரு கட்டுரை இமேஜ் வடிவில் கீழே தரப்பட்டுள்ளது.

அசுரன்.
Photobucket - Video and Image Hosting

Wednesday, June 28, 2006

ஆ(ற்)று வெள்ளத்தில் அசுரன்

அடாது எழுதும் தோழர் விடாது கறுப்பின் அன்பு அழைப்பினை ஏற்று, எனக்கு பிடித்த ஆறுகளை வழங்கி இருக்கிறேன்.

பிடித்த உணவு வகைகள்

1) வெந்தயக் களி

2) கூட்டாஞ்சோறு, கருவாட்டுக் குழம்பு

3) பழைய சோறும், சுண்டவைத்த பழைய குழம்பும்

4) வத்தக்குழம்பு

5) தேங்காய் பாலும், வெள்ளை அப்பமும்

6) மாட்டுக் கறி


படித்த நினைவில் நிற்க்கும் புத்தகங்கள்

1. சோளகர் தொட்டி

2. கன்னி நிலம்

3. தாய்

4. வீரம் விளைந்தது

5. மார்க்ஸ் முதல் மாவோ வரை

6. அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சில எளிய மனிதர்கள்


என்னைச் செதுக்கியவர்கள்

1) பகத்சிங்

2) ஸ்டாலின்

3) லெனின்

4) மாவோ

5) செ-குவேரா

6) அம்மா, அப்பா, பெரியப்பா


பார்த்து பாதிப்படைந்த/ரசித்த படங்கள்

1) Brave heart

2) Final Solution

3) தண்ணீர் தண்ணீர்

4) Seven Samurai

5) Golden Era - சார்லி சாப்ளின்

6) பாரதிராஜா/பாக்யராஜ் இவர்களின் ஆரம்பகால படங்கள்


பிடித்த காமெடி நடிகர்கள்

1) சுனாபானா

2) கைப்புள்ள

3) வீரபாகு

4) டி. ராஜேந்தர்

5) கோமாளி அப்துல்கலாம்

6) வாஜ்பேயி


மிகக் கடுமையாக வெறுக்கும் மக்கள் விரோதிகள்

1) சிரிராமன்

2) இந்திரன்

3) கிறுக்கினன்...ஸாரி... கிருட்டினன்

4) அத்வானி

5) மன்மோகன் சிங்/P.C.

6) ஊத்தைவாயன் காமக்கேடி பீடையாதிபதி சங்கராச்சாரி


அடிக்கடி கேட்கும் பாடல்கள்

1) இளையராஜாவின் இன்னிசைகள்

2) சில பழைய தமிழ் பாடல்கள்

3) சில பழைய புதிய இந்தி பாடல்கள்

4) சிம்பொனி மெட்டுக்கள்

5) நாட்டுப்புற பாடல்கள்

6) மக்கள் பிரச்சனைகளை பற்றிய பாடல்கள்


நேரம் போவது தெரியாமல் மேயும் இடங்கள்

1) தமிழரங்கம்

2) மா சிவகுமார்

3) தருமி

4) சந்திப்பு

5) குமரிமைந்தன்

6) விடாது கறுப்பு


விடாது கறுப்பு படித்து சிரிக்கும் பதிவுகளே எனக்கும் சிரிப்பை மூட்டுகின்றன

1) வஜ்ராயுதன்

2) ஐயராமன்

3) டோன்டு

4) முகமூடி

5) மாயவரத்தான்

6) இவர்களினுடைய மான் காராத்தே வல்லுனர்களான பிற அல்லக்கைகளும், விசிலடிச்சான் குஞ்சுகளும்.


நான் அழைக்க விரும்பும் பதிவாளர்கள்

1) அடி-அதிரடி

2) மங்கை

3) மிதக்கும் வெளி

4) பூ வாசம் - Hari

5) மா சிவகுமார்

6) சந்திப்பு

என்னை அழைத்த விடாதுகறுப்புவிற்க்கு நன்றி!!

Friday, June 16, 2006

பார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை

பாரதி பஜனையில் மயங்கும் மக்கள்


1) ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் இருந்த பாரதியின் கோழைத்தனத்திற்கும், அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்த பாரதியின் நேர்மையற்ற செயலுக்கும், பழியை தமிழ்சமுதாயத்தின் மீது போடுவதென்றால், ஒரு வாரம் முன்பு வரை அம்மாவின் அராஜக ஆட்சியைக் கடும் சொற்களால் வசை பாடி விட்டு, அதே அம்மாவினை அன்புச் சகோதரியாய்க் காண முடிந்த வைகோவின் செயலுக்கும் தமிழ் சமுதாயம் மீது பழிபோட்டு விடலாம். எமெர்ஜென்சியில் தனது மகனைப் பின்னி எடுத்த இந்திராவிடமே நிலையான ஆட்சிக்கு லட்சியக் கூட்டு சேர்ந்த கருணாநிதியும் தமிழ் சமுதாயம் மீதே பழி போடலாம். பதினேழு தொழிலாளர்களைத் தாமிரபரணியில் அடித்துச் சாகடித்த செயல் நிகழ்ந்த இரண்டே ஆண்டுகளில் தமிழினத் தலைவரோடு கூட்டு சேர்ந்த டாக்டர் கிருஷ்ணசாமியும் பழியை, தமிழ்சமுதாயத்தின் மீதே போடலாம்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் அன்னிய ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு மாண்ட மாவீரன் கட்டபொம்மனைப் பாராட்டி எழுதாத பாரதியின் நெஞ்சுரம், நாட்டைக் கூட்டிக் கொடுத்து ஜமீனாகி அன்னியனுக்கு சேவை செய்த எட்டப்ப பூபதிக்குத் தூக்குக் கவி எழுதியதையும், தமிழ் சமூகம் மீதே பழிபோட்டால் தீர்ந்தது கணக்கு.

தமிழ் மக்களால் பெரிதும் அறியப்படாமல் மறைந்து போன பாஸ்கரதாஸ், விஸ்வநாததாஸ் போன்ற நாடகமேதைகள் போலீசின் தடையை மீறியும் "டயர் மடையன்" போன்ற பாடல்களால் ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பாடினார்களே, அவர்களும் இந்தத் தமிழ்சமுதாயத்தில்தான் உதித்தார்கள். நாட்டார் பாடல்களிலும், கொலைச்சிந்துக்களிலும் இடம் பிடித்த ஜெனரல் டயரின் கொடுஞ்செயலை குஜிலிப் புத்தகம் எழுதும் லோக்கல் எழுத்தாளர்கள் கூட எழுதத் துணிந்தபோது, நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி அன்னிபெசண்ட் வழியிலே சென்று வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்க்க மட்டும் பாரதிக்கு துணிச்சல் வந்ததே அங்கிருக்கிறது சாதிப்பற்று.

அதே தமிழ்ச் சமுதாயத்தைத் தன்னகத்தே கொண்ட பாரத சமுதாயம்தான், கொடியவன் டயரைப் பழிதீர்க்க, வீரன் உத்தம்சிங்கை உற்பத்தி செய்தது.

"மாட்சிமை தாங்கிய" கவர்னர்பெருமானின் காலடிக்கு சமர்ப்பித்த கருணை மனுக்களில் ஒன்றில் கூட "தான் பிறந்த பார்ப்பனக் குல மேன்மைக்கு" சிறை வாழ்வு ஒத்து வராது எனச் சுய சாதிப் பெருமை பேசிய பாரதி வாழ்ந்த அதே மண்ணில்தான் புரட்சிக்காரன் பகத்சிங்கும் பிறந்தான். அவனின் தந்தை, தன் மகனை மன்னிக்கும்படி கடிதம் எழுத நேர்ந்தபோது, அந்தத் தந்தையைக் கடிந்து வேதனையுடன் கடும்சொற்களால் அவ்வீரன் அர்ச்சித்துக் கடிதம் எழுதியதும் இந்த மண்ணில்தான்.

பாரதியார், ஏதோ ஒரு முறை தவறுதலாக மன்னிப்புக் கேட்டு விட்டாரென்றில்லை. பலமுறை பிரிட்டிஷ் அரசுக்கு விண்ணப்பம் போட்டு மண்டியிட்டவராகத்தான் அவர் இருந்திருக்கிறார்.

கடலூர் சிறையில் இருந்தபடி எழுதிய 1918ஆம் வருசத்து மன்னிப்புக் கடிதத்துக்கு முன்னர் 1912,1913,1914 ஆகிய வருடங்களில் தொடர்ந்து பிரிட்டிஷார், தம்மிடம் இரக்கம் காட்ட வேண்டும் எனக் கெஞ்சியபடி புதுவையில் இருந்து தொடர்ந்து கடிதங்களைப் பாரதி எழுதி இருக்கிறார்.

மன்னிப்புக் கடிதங்கள் எழுதிக் கொண்ட அதே 1914ஆம் ஆண்டு பாரதியார் ஒரு பாட்டும் எழுதி இருக்கிறார்.

அப்பாட்டு
"அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே....இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும் ....உச்சி மீது வானிடிந்து வீழுகின்றபோதிலும் அச்சமில்லை. அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்பதாகும்.

இந்த வீரம் கொப்பளிக்கும் பாட்டைக் கேட்டு தேசப்பற்றுள்ள மக்கள் புல்லரித்துக் கொண்டு இருக்கும்போதே நம்ம 'சத்திய ஆவேசம்' கொண்ட கவிஞரோ, நம்ம எதிரிக்கு பேனாவால் முதுகு சொரிந்து கொண்டிருந்தாரே.

8/4/1914 இல் இங்கிலாந்து தொழிற்கட்சித் தலைவர் இராம்சே மக்டொனால்டுக்கு எழுதிய கடிதத்தில், தம்மை ஆஷ் கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தித் தண்டித்து விடுவார்களோ எனும் பயத்தில், 'நான் புதுவை செல்வதற்கு முன்பே வாஞ்சி வந்துள்ளார். என்னை அவர் சந்திக்கவில்லை' என்று எழுதினார்.

1912இல் சென்னை கவர்னராயிருந்த கார்மிக்கேலுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி இறைஞ்சியுள்ளார்.

பின்னர் கவர்னரான பெண்ட்லாண்டு பிரபுவுக்கும் தன்னிலையை விளக்கி மற்றும் ஒரு கெஞ்சல் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதன் பின்னர் 1916 இல் சுதேசமித்திரனில் இன்னும் கீழே போய், 'ஆங்கிலேயர்கள் இந்நாட்டை விட்டுப் போக வேண்டாம்' என்றிடும் அளவிற்குப் போய்விட்டார், சூரப்புலி.

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாய் சொல்லலாம். பிரிட்டிஷாருக்கு எழுதிக்கொடுத்த வாக்குறுதியை அச்சு பிசகாமல் காப்பாற்றியுள்ளார். தனது அரசியல் குருவான திலகர் இறந்ததற்குக் கூட இரங்கல் எழுதாமல்தான் இருந்துள்ளார். ஆனால் அதே ஆண்டில் இறந்த ஓவியர் ரவிவர்மாவுக்கும், இசைக்கலைஞர் சுப்புராம தீட்சிதருக்கும் தலா ஒரு இரங்கல் வீதம் எழுதியுள்ளார்.

2) நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலே "தவறாக வேதம் ஓதுபவனைவிட, ஒழுங்காய்ச் சிரைப்பவனே மேல் என்று கூறடா தம்பி" என்று எழுதியதில்தான் 'இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தில்லி பார்ப்பன மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் தெருப் பெருக்கித் தம் எதிர்ப்பை வெளியிட்ட சாதித்திமிருக்கான' விதை இருக்கிறது.

3) தன் தந்தை வறுமைப்பட்டதை எழுதும்போது கூட, பார்ப்பனக் குலம் கெட்டு அழியும் கலியுகம் ஆதலால் தம் தந்தை வேர்வை சிந்த உழைக்க நேர்ந்ததாகச் செப்பும் பாரதியிடம் வெளிப்பட்டது சாதி உணர்வில்லாமல் வேறென்ன? மனு தர்மத்தின்படி வேர்வை சிந்த உழைப்பது பார்ப்பன தர்மம் இல்லை என்ற கோபம்தானே பாரதியிடம் வெளிப்பட்டது?

4) நாலு வருணங்கள் சிதைவதை மிகவும் மனம் நொந்து 'நாலு குலங்கள் அமைத்தான் - அதை நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்' எனப் பாடியது சாதி ஆதரவுக் குரல் ஆகாதா?

5) "குலத்தளவே ஆகுமாம் குணம்" என்றும் "அம்பட்டன் பிள்ளை தானாகவே சிரைக்கக் கற்றுக் கொள்கிறது. சாதி இப்போது இருக்கும் நிலையில் அதை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்றும் பாரதி சொல்லிக் கொண்டிருந்த காலத்துக்குச் சற்றே முன்புதான், அவர் ஊரான எட்டையபுரத்திற்கு கூப்பிடு தொலைவில், நாடார்கள் மேல்நிலையாக்கம் நோக்கிப் போவதைப் பொறுக்காமல், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தாத்தாவான வெள்ளைச் சாமித் தேவர் தலைமையில் சிவகாசியை எரித்து, நூற்றுக்கணக்கில் மனிதர்களை வெட்டித் தள்ளியது ஒரு சாதி வெறிக் கும்பல். சாதியை ஒழிக்காமல் இந்த வெறிச்செயல்களை எல்லாம் நிறுத்த முடியாதென்பது தெள்ளத் தெளிவாய்த் தெரியும்போதே, சாதிக்களைக்கு நீரூற்றி வளர்க்கும் விதமாய் பாரதி எழுதியதை எப்படிச் சகித்துக் கொள்வது?

6) பார்ப்பனரல்லாதார் இயக்கம் சென்னையில் கூட்டம் நடத்தியபோது "சென்னைப் பட்டிணத்தில், நாயர் கட்சிக் கூட்டம் ஒன்றில் பறையரை விட்டு இரண்டு மூன்று பார்ப்பனரை அடிக்கும்படித் தூண்டியதாகப் பத்திரிக்கையில் வாசித்தோம்", "என்னடா இது! ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள், பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படிச் செய்யும் வரை சென்னைப் பட்டிணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!" எனக் கோபமாகக் கேட்டதில் ஓருண்மை அவர் மூலமாகவே அம்பலமாகின்றது. 'ஹிந்து மதத்தின் பஹிரங்க விரோதிகள்' என்று பாரதி முசுலீமையோ, கிறித்துவரையோ, அல்லது நாத்திகர்களையோ சொல்லவில்லை.கடவுள் பக்தி கொண்டிருந்த டி.எம்.நாயரையும், தியாகராயச் செட்டியாரையும், நடேச முதலியாரையும்தான்.இவர்கள் பார்ப்பனரல்லாதாருக்காக உழைத்தால் அது ஹிந்து விரோதம் என்றால், ஹிந்து மதம் என்பதே பார்ப்பனர்கள் மட்டும்தான் என்று பாரதி கருதி இருப்பது தெரிய வருகிறது. தாம் தனிப்பட்ட வகுப்பினர்தான் என்பதை "வேதியராயினும், வேற்றுக் குலத்தவராயினும்" எனப் பிரித்துத்தான் அவரால் எழுத முடிந்திருக்கின்றது.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும், பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தையும் ஒவ்வொரு பிராமண சபையிலும் போய் தாக்கிப் பேசி விட்டு வந்ததெல்லாம் சாதி ஒழிப்புப் போர்த் தந்திரமா?

இல்லை. அதுதான் பச்சைப் பார்ப்பனீயம்.

1906ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் இருந்து சட்டசபைக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டிய தேர்தலில், தேசிகாச்சாரி எனும் பார்ப்பனர் ஒருவரின் விடாப் பிடிவாதத்திற்காக, டாக்டர் டி.எம்.நாயர் விட்டுக் கொடுத்த செயலை "பெருந்தன்மை" எனப் புகழ்ந்த பாரதி 1916லே அதே நாயரை "டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகள்" என்று சாடியுள்ளார். இவ்வேறுபாட்டின் காரணம், 1906இல் பார்ப்பனருக்காக விட்டுக்கொடுத்த காங்கிரசுக் கார நாயர் 1916, இவர்களின் ஆதிக்கம் பொறுக்க இயலாது பிராமணரல்லாதார் இயக்கம் கண்டதே.

தன் சாதி நலன் ஒன்றே குறியாய் இருந்ததால் கோபம் கொண்டு நாயரைத் தேசத் துரோகி என்று திட்டிய பாரதி, தேச விடுதலைக்காக வெடிமருந்து சேகரித்துக் கொண்டிருந்தாராக்கும் என நாம் நினைத்தால் நம்மைக் கேணையராக்கிட 1916லேயே "மற்றபடி ஆங்கிலேயர் சாம்ராஜ்யத்தை விட்டு விலக வேண்டுமென்ற யோசனை எங்களுக்கில்லை" என்று எழுதி வைத்து இருக்கிறார். இந்தப்படிக்கு எழுதும் பாரதி எந்த விதத்தில் நாயரைத் தேசத்துரோகி என்கிறார்? பாரதிக்கு 'அக்கிரகாரம் மட்டுமே தேசம்' என்ற இக்கினியூண்டு குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது ரொம்பப் பிடிக்குமாக்கும்.

வெள்ளையர் ஆதிக்கத்தைக் கண்டு கோபம் கொள்ளாது, பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைக் கண்டதும் "ஒன்றோடொன்று சம்பந்தம், பந்தி போஜனம் செய்து வழக்கப்படுத்தாத வகுப்புகள் இந்துக்களுக்குள்ளே நெடுங்காலமாய் இருந்து வருகின்றன. இவற்றுள் பிராமணர் ஒரு வகுப்பினர். இங்ஙனம் வகுப்புகளாகப் பிரிந்திருத்தல் குற்றமாயின் அக்குற்றம் பிராமணரை மட்டுமே சார்ந்ததாகாது" எனத் தன் சுய சாதிக்கு ஒரு பாதுகாப்பு வளையம் தந்திட்டவர்தானே பாரதி? 'நாங்க மட்டும் குற்றவாளிக இல்ல. எல்லோரும்தான். அதிலே பிராமணாள் பத்தோட பதினொன்னுதானே' எனச் சப்பைக்கட்டுக் கட்ட ஒருவனுக்கு எது மனத்துணிவைத் தருகிறது?

7) "சாதியொழிப்பும் சாதி மறுப்பும் ஒரு சாதி தனக்கு மேலாக உள்ள சாதியுடன் சம்பந்தம் கொள்வது மட்டுமல்ல, தனக்குக் கீழுள்ள சாதியோடும் உறவாடுவதுதான்" என்கிறார் ம.ம. இது, பாரதிக்கும் பொருந்தும் தானே!. சாதிகள் இல்லையடி என்ற நபர், தனக்குக் கீழாக உள்ள சாதியினரான நாராயணப்பிள்ளையிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளாது ஏன் சீறினார்? சொல்லுக்கும் செயலுக்கும் இடையில்தான் எத்தனை தூரம்!

எவ்வளவுதான் தனது சுயசாதிக்காக உழைத்தாலும் சூதறிஞர் ராஜாஜி, தன் மகளை, பனியா காந்தியின் மகனுக்கு மணம் முடித்திருக்கிறார். ராஜாஜியின் இச்செயலைவிடப் பாரதியின் செயல் தாழ்வானதுதான்.

8) சாதி வெறி பாரதியிடம் மட்டும் இல்லை. ம.ம.விடமும் இருக்கிறது என்பதை, கடையம் நாராயணப்பிள்ளையைப் பற்றி அவர் எழுதிய "ஈனப் பிறவி", "கொழுப்பு" எனும் வார்த்தைகளே உறுதிப்படுத்துகின்றன.

பார்ப்பனர் மனைவியிடம் நாராயணப்பிள்ளை உறவு வைத்திருந்ததை மலர்மன்னன் "கொழுப்பு" என்கிறார். பார்ப்பனரின் மனைவியிடம் தகாத செயல் செய்வது 'கொழுப்பு' என்றால், இன்றைக்கு வேலை பார்ர்க்கும் இடங்களில் நடப்பவற்றுக்கு, சிறு பட்டறைத் தொழிலாளிகளிடம், அச்சுக் கோர்க்கும் தொழிலாளிகளிடம் முயற்சி நடந்தால் அதற்கு என்ன பெயர் வைக்கலாம்? - இது மலர்மன்னனுக்கு புரியும்.

"பாரதிதாசன், பாரதியை 'அய்யர்' என்று மரியாதையுடன் (!) அழைத்தார்" என ஒரு நபர் குறிப்பிடுகிறார் என்பதில் இருந்தே, 'அய்யர்' என்ற பதத்திற்கு ம.ம. தரும் மரியாதையும், உயர்வும் எத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

9) சூத்திரர்கள், பிராமணப்பெண்ணைப் புணர்வதைத் தடைசெய்யும் மனு, சூத்திரப் பெண்களைப் பெண்டாள, பிராமணருக்கு அனுமதி தந்திருப்பதன் மறுவார்ப்புத்தான் இவை. உடனே மலர்மன்னன், பெங்களூரில் தான் தோசை சாப்பிடுவதே தலித் காலனியில்தான் என்றும், காலனியில் முந்தா நாள் வைத்த மீன் குழம்பை அகப்பையோடு சாப்பிடுவேன் என்றும் பாவண்ணனை சாட்சிக்கு அழைப்பார். இதெல்லாம் ஒருவித முன்னேற்பாடுதான். பெங்களூரில் நடந்த சுந்தரராமசாமியின் இரங்கல் கூட்டத்தில், 'எங்கள் வீட்டில் சு.ரா. தோசை சாப்பிட்டார்' எனச் சொல்லி எழுத்தாளர்கள் தேம்பித் தேம்பி அழுதது, பின்னாளில் என்ன நடக்கக்கூடும் என்பதை எனக்குத் தெரிவிக்கிறது. பாரதி கடையத்தில் நடந்து கொண்டதை ஒருவர் நியாயப்படுத்தினால், அவர் நிச்சயமாய் சாதி உணர்வைக் கடந்தவரில்லை என்பதை உறுதிப்படுத்தலாம்.

10) 'ஈனப் பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங்கிருப்பவர்' எனத் தலித் மக்களை 'ஈனர்'களாய்ப் பார்த்தவர்தானே பாரதி? வேறொரு இடத்திலே 'வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் ஆரியர் புலையருக் கடிமைகளாயினர்' எனப் பாரதி பாடியிருப்பதை சாதித்திமிர் என்றில்லாமல் எவ்வாறு பார்ப்பது?

11) பாரதியின் சாதிவெறியை அம்பலப்படுத்திடும் போதெல்லாம், பாரதி ரசிகர் மன்றத்தினர் வழக்கமாய் "அவர் தனது சுய சாதியையே பலமாக எதிர்த்தவர்" என்று கோரஸ் பாடுவது வழக்கம்.

இதற்கு மதிமாறன் "பாரதியின் பார்ப்பன எதிர்ப்பு, தீவிரமான அல்லது உண்மையான ஒன்றாக இருந்தால், பார்ப்பன உணர்வில் ஊறிய நடேச அய்யர், ரங்கசாமி அய்யங்கார், திருமலை ஆச்சாரியார், பார்த்தசாரதி அய்யங்கார், சர் சி.பி.ராமசாமி அய்யர் போன்ற பணக்காரர்கள் பாரதிக்கு வேலை வாய்ப்பு தந்ததும், இக்கட்டான நேரங்களில், குறிப்பாகப் பாண்டிச்சேரிக்குத் தலைமறைவாகப் போனதற்கு உதவி செய்ததும், கைதான பிறகு சிறையிலிருந்து ஜாமீனில் எடுத்ததும், மீண்டும் வேலை வாய்ப்புத் தந்தது எதனால்? பாரதியைச் சிறை மீட்ட குழு: மணி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர், சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார் மற்றும் அன்னிபெசண்ட்" எனக் கேட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மவுனம் காக்கிறார்கள்.

12) சாதி வெறி மட்டும் அல்ல, இந்து மதவெறியும் அந்தக் கவிஞனைப் பாடாய்ப் படுத்தி இருக்க வேண்டும். இல்லையென்றால் "இந்தியா என்பது இந்துக்கள் நாடு. அதாவது வேத பூமி அல்லது வேதபுரம். இங்கு எந்த மதத்தினர் வாழ்ந்தாலும் இந்த உணர்வோடுதான் வாழ வேண்டும். இல்லை வேத புத்திரர்களின் உணர்வைப் புரிந்து கொண்டாவது வாழ வேண்டும்" என்று ஆர் எஸ் எஸ் தலைவர் சுதர்சன் சொல்ல வேண்டியதை ஏன் பாரதி சொல்ல வேண்டும்?

முஸ்லிம்களை "வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்" என்றும், அவர்களின் செயல்களாக "ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருந்தரைப் பசுக்களை ஒழித்தலும்" என்று அவர் விசம் கக்கி வைத்திருப்பதால்தான் சோ ராமசாமியில் இருந்து மலர்மன்னன் வரை அனைத்து இந்துத்துவக் குழுக்களும் அவருக்குப் பல்லக்கு தூக்குகின்றன.

சிவாஜி கூறியதாகப் பாரதி அளந்து விடும்போது கூட குரானை இழிவுபடுத்திட "வேத உபநிடத மெய்நூல்களெல்லாம் போய் பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே" என்று பாடி வைத்து, குரானை 'பேதை' நூல் என்று சொல்லியவர்தான்.

13) திருவல்லிக்கேணி வீதி ஒன்றில் கிறித்துவப் பள்ளிக் கூடத்தில் இருந்து வெளி வந்த இரு பிராமணச் சிறுமியர் பேசியதைக் காது கொடுத்த பாரதி, உடனே பேனா தூக்கி எழுதத் தொடங்குகிறார். "அச்சிறுமிகள் 'ஆண்டவன்' என்றும் 'ஏசுநாதன்' என்றும் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. அடக் கடவுளே! இதைக் கேட்கவா இத்தனைக் காலமும் மாதர்களுக்குக் கல்வி வேண்டும் எனக் கூச்சலிட்டோ ம்!" என்று ராமகோபாலன்ஜி ரேஞ்சுக்கு வருத்தப்படுகிறாரே பாரதி அங்கிருக்கிறது மதத் துவேஷம். வேறொரு கட்டுரையில் "மிஷனரி பள்ளிக்கு மக்களை அனுப்பும் தந்தைமாரைப் புத்திரத்துரோகிகள்" என்று அன்பாய்க் கடிந்து கொள்கிறார்.

முன்னூறு பேர், இந்து சமயத்தில் இருந்து கிறிஸ்தவம் போனபோது "சென்னைத் தலைமைப் பாதிரி எல்லூரில் ஆணும் பெண்ணும், குழந்தைகளுமாக ஏறக்குறைய முன்னூறு பேரைக் கிறிஸ்துவ மதத்தில் சேர்த்துக் கொண்டார் என்று தெரிகின்றது. இந்த விஷயம் நமது நாட்டில் பல இடங்களில் அடிக்கடி நடந்து வருகிறது. இது ஹிந்து மதத்தில் அபிமானமுடையவர்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை விளைவிக்கத் தக்கது.." என்று மதத் துவேஷியாகிறார், பாரதியார்.

துவேஷத்துக்கு ஓர் எல்லையில்லையா? மன்னிக்கணும், இந்தக் கேள்வி பாரதியைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி.

பாரதியார் சொன்ன/எழுதிய/பாடிய அத்தனையும் எவ்வகையான நபர்களை உருவாக்கியது என்பதற்கு சான்றாக சில ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பேட்டி ஒன்றைச் சொல்லலாம்.

கேள்வி:- "இந்து மதக் கொள்கையில் ஈடுபாடு கொள்ள, உங்களை ஈர்த்தது எது?"

பதில்:- "பள்ளிக்கூடத்திலே படிக்கும்போது, பாரதியார் கவிதைகளில் எனக்கு ஈடுபாடு அதிகம். அவரோட தேசியப்பாடல்களை மனப்பாடமாகப் பாடுவேன். அப்போ இந்து மதக் கூட்டம் ஒன்று கேட்டேன். ஏற்கெனவே பாரதி பாடல்களைப் படித்திருந்ததால், இந்து மதக் கூட்டம் என்னைச் சுலபமாகக் கவர்ந்தது"

மேற்கண்ட பதிலைச் சொன்னவர், இந்து முன்னணியின் ராம கோபாலன்.

14) மலர்மன்னனின் பார்வையில் 'பெரியார் ஒருவர் உண்டென்றால் அது பாரதியார்தானாம்'. பெரியார் எனும் பட்டத்தை ஈவேராவிற்கு வழங்கியவர்களே மகளிர்தான். அதனால் மகளிர் சம்பந்தப்பட்ட ஒரு உதாரணத்துடன் மலர்மன்னனின் பெரியாரையும், தமிழர்களின் பெரியாரையும் ஒப்பிடலாம். கள்ளுக்கடை மறியலை நிறுத்திவைக்கலாமே எனக் காந்தியிடம் கேட்டபோது அவர் சொன்னது "அது என் கையில் இல்லை. ஈரோட்டிலே இவ்விசயத்தில் தீவிரமாய் இருக்கும் கண்ணம்மா மற்றும் நாகம்மை ஆகிய இரு பெண்களின் கைகளில்தான் அது உள்ளது" என்றார். கண்ணம்மா, பெரியாரின் தங்கை. நாகம்மை, பெரியாரின் மனைவி. பெரியார், பெண் விடுதலையை வெறும் பேச்சோடு நிறுத்திடாமல், தம் குடும்பத்துப் பெண்டிரையும் ஆண்களோடு சமமாய் பொதுவாழ்வில் ஈடுபாடு காட்டிடத் துணையாய் நின்றார்.

ஆனால் பாரதியோ, கடையம் ஊரில் இருந்த கடைசிக் காலத்தில், அவ்வூருக்குப் பக்கத்தில் இருக்கும் மலையிலுள்ள சாமியாரைப் பார்ப்பதற்கு அவரின் 14 வயது மகள், தங்கம்மா வர மறுத்ததற்காக பொது இடமென்றும் பாராமல் செவிட்டில் அறைந்து தன் ஆண் தன்மையை வெளிப்படுத்தியவர்தான் பாரதிப் பெரியார்.

இதே பெரியார்(?)தான் பாஞ்சாலி சபதத்தில் பாண்டவர்களைத் திட்ட 'பெட்டைப் புலம்பல்' என்றும், சிவாஜி தன் சைனியத்துக்கு ஆற்றிய வீரவுரைப் பாட்டில் "ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும் வீணில் இங்கிருந்து" என்றும், "பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்" என்றும், 1910 பிப்ரவரியில் கர்மயோகியில் உடன்கட்டை ஏறிய பெண்களைப் புகழ்ந்தும் எழுதியவர்.

பெண் விடுதலை, வேதங்களில் புராணங்களில் பெண்களின் நிலை என்றெல்லாம் விரல்நுனியில் தகவல்களை வைத்துப் பாட்டினில் பாடிய பாரதிக்கு, 1912இலே மிகுந்த இடர்ப்பாடுகளுக்கிடையே மருத்துவப் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமியைப் பற்றி ஒரு வரிகூட ஏன் எழுதிப் போற்றிடத் தோன்றவில்லை? எனக் கேட்டால் பாரதி அன்பர்கள் என்ன சொல்லிப் பூசி மெழுகுவரோ தெரியவில்லை. என்ன காரணமாய் இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான வருடங்கள் கல்வி மறுக்கப்பட்ட குலத்தில் முத்து லெட்சுமி பிறந்ததா?
'சிறந்த பெண்மணி' எனப் பாரதி யாருக்கு சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் தெரியுமா?"(தலித்கள்) முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளை இப்பிறவியில் அனுபவிக்கிறார்கள். அது மட்டுமின்றி, உயர்சாதிப் பிள்ளைகளுடன் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகள் பொது கல்வி நிலையங்களில் கலந்து இருப்பதற்கு உரிய தகுதியை அவர்கள் பல தலைமுறைகளுக்குப் பின்னரே பெற முடியும்" என்று வக்கிரமாய் எழுதிய அன்னிபெசண்ட் தான் அவர்.

15) 'வாழ்க நீ எம்மான்' எனக் காந்திக்கும் ஒரு பாட்டு. பாட்டுக்கு மட்டும் குறைச்சல் இல்லை. ஆனால் அவர் அறிவித்த 'ஒத்துழையாமை' தன் சாதியினர் அனுபவித்து வந்த எலும்புத்துண்டு பதவிகளுக்கு உலை வைக்கும் வேளையில் 'அத்தகைய ஒத்துழையாமையெல்லாம்' வேலைக்கு ஆகாது என எழுதிக் காந்திக்குத் துரோகம் செய்யும் பாரதியார் பெரியாரா? அல்லது ஒத்துழையாமையின்படி கோர்ட், கச்சேரிகளைப் புறக்கணித்ததால் 1919லேயே தனக்கு வர வேண்டிய ரூபாய் அய்ம்பதாயிரத்தை இழந்து நின்ற ஈவேரா, பெரியாரா?

16) சாதியை மறைத்து வைக்கிறேன் என்று தலித்துக்குப் பூணூல் போடும் அபத்தமான சிறுபிள்ளை விளையாட்டை நிகழ்த்திய பாரதி, பெரியாரா?சாதியைக் கட்டிக் காக்கும் மனுதர்மத்தைக் கொளுத்திய ஈரோட்டார், பெரியாரா?

17) சாதியை விட்டுப் பெண் தர மறுத்துப் பிரச்சினை பண்ணி, சென்னைக்கு ஓடி வந்து ஒளிந்த பாரதி, பெரியாரா?

சாதியினைக் காப்பாற்றி வரும் சக்தியே அகமண முறையில்தான் அடங்கி இருக்கிறது என்பதால், சாதி ஒழிப்புத் திருமணத்தை ஆயிரக்கணக்கில் நடத்தி வைத்ததன் மூலம், இன்றும் பல்லாயிரம் சாதி மறுப்பாளர்களை உருவாக்கி வைத்த ஈவேரா, பெரியாரா?

தமிழனுக்கு தன்மானத்தைப் போதித்த தந்தை பெரியார்தான், தமிழர்களான எமக்குப் பெரியார் ஆவார். எங்கள் தலைமுறைக்குக் கல்வியை வழங்கிட இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த வெண்தாடிக் காரர்தான் எங்களுக்குப் பெரியார்.
வேண்டுமானால், மலர்மன்னன் போன்ற மூன்று சதவீத இந்துத்துவ ஆட்கள், பாரதியைப் பெரியார் என்று கட்டிக் கொண்டு அழகு பார்க்கட்டும். யாரும் வருந்தப் போவதில்லை.

பாரதியார் சிறந்த பாவலர். இனிமையான பாடல்களைச் செய்தவர் என்பதில் அய்யமில்லை. அவர் குறிப்பிட்டுக் கடிந்த 'இரும்பினால் செய்யப்பட்ட காதுகளின்' சொந்தக் காரர்களான தியாகராயர் பஜனைக் கோஷ்டியில், பாரதி விரும்பியபடியே தமிழ்ப் பாடல்களைப் பாடிட, திருவையாறு தியாகராயர் ஆராதனையிலோ, பாரதிக்கு கடலூர் சிறையில் இருந்து எந்த முறையில் தெண்டனிட்டு கருணை மனு எழுத வேண்டும் எனக் கற்றுக் கொடுத்த ஆங்கிலேயப் பேரரசின் மாசு மருவற்ற விசுவாசி சர் சி.பி.ராமசாமி அய்யர் நிறுவிய மியூசிக் அக்கடமியிலோ மலர்மன்னன் போன்றவர்கள் முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் பாரதியின் இந்த ஆசையைக் கூட இவர்கள் கோரியதில்லை. அதனைச் செய்யக் கூட திருவையாற்றுக்கு மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர்தான் வந்து போலீசிடம் மண்டை உடைபட வேண்டியிருக்கிறது.

'நீங்கள் சொல்லியது உண்மையென்றால் ஏன் பாரதி தேசியக்கவியாகவும், விடுதலைப் போராளியாகவும் போற்றப்படுகிறார்?' என்ற உங்களின் கேள்விக்குப் பதிலை அம்பேத்கர் தந்திருக்கிறார்.

"திறமையுள்ள ஒரு தீண்டத்தகாதவரின் கண்ணியத்தையும் உயர்வையும் குறைத்துக் காட்டுவதற்கென ஒரு திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஓர் இந்து தலைவன், மிகப்பெரும் இந்தியத் தலைவராகப் போற்றப்படுவார். அவர் ஒரு பார்ப்பனராக இருந்தாலும், யாரும் அவரை பார்ப்பனர்களின் தலைவன் என்று குறிப்பிடுவதில்லை. ஆனால், ஒரு தலைவன் தீண்டத்தகாதவராக இருந்தால், அவரின் சாதி பற்றி குறிப்பிட்டு-அவர் தீண்டத்தகாத மக்களின் தலைவராக விவரிக்கப்படுவார்.

ஓர் இந்து டாக்டர், மிகப்பெரும் இந்திய டாக்டராக சித்தரிக்கப்படுவார். அவர் ஓர் அய்யங்காராக இருப்பினும், எவரும் அவரை ஓர் அய்யங்கார் என்று கூற மாட்டார்கள். ஆனால் அதே டாக்டர் ஒரு தீண்டத்தகாதவராக இருப்பார் எனில், அவர் ஒரு தீண்டத்தகாதவர் என்று அடையாளம் காட்டப்படுவார். ஓர் இந்து பாடகர், பெரிய இந்துப் பாடகராகப் போற்றப்படுவார். ஆனால், அதே பாடகர் ஒரு தீண்டத்தகாதவராக இருக்கும் பட்சத்தில், அவர் ஒரு தீண்டத்தகாத பாடகராக விளம்பரப்படுத்தப்படுவார்."

18) பின்னிணைப்பு:
கடலூரில் இருந்து பாரதி எழுதிய புரட்சிகர கடிதம்:-

om sakthi
----------
District Jail, Cuddalore,
28 November-1918.

To,His Excellency Lord Pentland,
Governor,
Fort St.George,Madras.

The Humble petition of C.Subramania Bharathi,

May it please your excellency,
It is more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicherry to Tirunelveli which is my native district. After many loyal assurances on my part as your excellency may well remember, the Dy.I.G.(C.I.D.) was send by your Excellency's Government a few months back, to interview me at Pondicherry. The D.I.G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned, purely as a war measure, in any two districts of the Madras Presidency during the period of the war. I could not consent to that proposal, because, having absolutely renounced politics, I could see no reason why any restraint should be placed on my movements even while the war lasted. Subsequent to that also, I have addressed several petitions to your Excellency clearing away all possible doubts about my position.

Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be no difficulty whatsoever in the way of my setting in British India as a peaceful citizen. Contrary to my expectations, however I have been detained and placed in the Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length but which are altogether disagreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.
I once again assure your Excellency that I have renounced every form of politics, I shall ever be loyal to the British Government and law abiding.

I therefore, beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.

I beg to remain
Your Excellency's
most obedient Servant
C.Subramania Bharathi.

************************************
சான்றாதார நூல்கள்:
1) பாரதி பக்தர்களின் கள்ள மவுனம் - மருதையன், வே.மதிமாறன்
2) திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன்
3) 'பாரதி'ய ஜனதா பார்ட்டி - வே.மதிமாறன்
4) வே.மதிமாறனின் 'பாரதி'ய ஜனதா பார்ட்டி -விமர்சனமும் - விளக்கமும்
**************************************
=====xxx==== =====xxx==== =====xxx====

நன்றி, கற்பக விநாயகம்!
*****
திண்ணையில் வந்த மலர்மன்னனுடைய பாரதியார் பற்றிய ஒரு கட்டுரைக்கு எதிர்வினையாக கற்பக விநாயகம் எழுதி திண்ணையில் இந்த வாரம் வந்த கட்டுரையை முழுமையாக இங்கு மறு பிரசுரம் பண்ணச் சொல்லி என்னை கற்பக விநாயகம் கேட்டுக் கொண்டார். இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில், இந்து மத வெறி பாசிச சூழலில் பாரதி பற்றிய ஆக்கப் பூரவமான ஒரு மறு மதிப்பீடிற்க்கு இந்த கட்டுரை பங்களிப்பு செய்யும் என்ற நம்பிக்கையில் அதை பிரசுரிக்கிறேன்.
அவரைத் தொடர்புகொள்ள: vellaram@yahoo.com
*****

Sunday, June 11, 2006

மாப்ளா கலகமும், மலர்மன்னனும்

மாப்பிள்ளைமார் கலகமும், மாவாட்டும் ம.ம.-வும் (இந்துத்துவத்தின் இடியாப்பச் சிக்கல்)
திண்ணையில் ஏற்கெனவே கற்பக விநாயகத்திடம் வாங்கிய குட்டுகள் போதாது என்று, மீண்டும் மீண்டும் இந்துத்துவ எருமைச் சாணங்களை (Bullshit) போட்டுத் தாக்க முனைகிறார் மலர்மன்னன்(ம.ம.). இந்த முறை(யும்) அது அவருக்கே bounce ஆகி வந்துவிட்டது.

இதுதான் அவரது கட்டுரைக்கான இணையத்தொடுப்பு:

கட்டுரையின் தலைப்பு: நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும் மாப்பிள்ளைமார் கலகம் பற்றி.

மாப்பிள்ளைமார் கலகம் பற்றி இடது சாரி வர்க்கப் போராட்டக் கண்ணோட்டமும், வலது சாரி மத வெறிக் கலவரக் கண்ணோட்டமும் நிலவுகிறது. வலது சாரிக் கூற்றைப் பொருத்த வரை சிற்சில அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்ததாகக் கூறப்படும்(கூறப்படும்) சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டோ , அல்லது சில நேரங்களில் ஏதாவது பேர் தெரியாத பத்திரிகைகளில் வந்த தகவல்களின் அடிப்படையிலோதான் உள்ளது.(எ-கா: Rijiv Srinivasan's articles on Moplah - இந்த கட்டுரைகளுக்கான அவருடைய justification பகுதி காமெடி என்றாலும் அவை இந்துத்துவ வாதிகளின் இரட்டை நாக்கை அம்பலப்படுத்தும் விதமாக உள்ளது) .

அதனால்தான் கடைசிவரை காந்தி அப்போராட்டத்தை மத வெறி என்ற அடிப்படையில் கண்டிக்கவில்லை. தனது கட்டுரை தொகுப்புகளிலும் அதையே அவர் கூறுகிறார். 1940-களில் கூட அதை சுயராஜியத்திற்கான போராட்டம் என்றுதான் கூறுகிறார்.

காந்தி முரண்பட்ட மனிதர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் என்றும் பொய் சொன்னதில்லை என்பதிலும் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. எத்தனையோ மக்கள் போராட்டங்களை, அவை வன்முறைப் பாதையை மேற்கொண்டதால் கடுமையாகக் கண்டித்துள்ளார். காந்தி அந்தக் காலகட்டத்தில் என்ன கூறுகிறார்:
"But many letters have since been received by me, some from well-known friends telling one that I was responsible even for the alleged Moplah atrocities,"

அதாவது 'alleged Moplah atrocities'.

சிலர் சொல்லுவது போல் முஸ்லீம், இந்து பகையின் மூலவேர் மாப்பிள்ளைமார் கலகம் என்பதும் நம்பும்படியாக இல்லை. ஏனெனில் அதற்கு முன்பே Divide and Rule தந்திரத்தின் பிரகாரம் இந்து முஸ்லீம் ஒற்றுமையை பிளவுபடுத்த British அரசு வேலைகள் செய்யத் தொடங்கிவிட்டது.

இவை எல்லாவற்றுக்கும் முன்பே மலபார் பகுதியில் நடந்த பல போர்களில் மாப்ளா முஸ்லீம்கள் தங்களது வீரம் செறிந்த பங்களிப்பை செய்துள்ளனர். இப்படிப் பல காலமாக மாப்ளா முஸ்லீம்கள் அந்த பகுதியில் இருந்து வரும் வேலையில் மலர்மன்னன் 1921 - மாப்ளா கலகத்தின் போது தான் முஸ்லீம் மத மாற்றம் ஏற்பட்டு நாயர், நம்பூதிரிகளின் எண்ணிக்கை குறைந்ததாகக் கதை விடுகிறார்.

மாப்ளா விவசாய, உழைக்கும் மக்களின் கலை இலக்கிய பங்களிப்பும் கேரள வரலாற்றில் மிக முக்கியத்துவமிக்கதாக இருக்கிறது. மாப்ளா நாட்டுப்புற பாரம்பரியக் கலைகள் அவற்றின் சாரமாக உள்ள வீரத்திற்கும், காதல் ரசத்திற்கும் பெயர் பெற்றவை.

இப்படி செழுமையான வரலாற்றுப் பின்னணியில் நிகழ்ந்த ஒரு கலகத்தை, அதுவும் அந்த கலகம் ஒரு நான்கு ஐந்து தலைமுறைகளாக அந்த பகுதியில் தொடர் கொந்தளிப்பில் இருந்து, கிலாபத் இயக்கத்தின் கடைசி கட்டத்தில் வீரியம் அடைந்த ஒன்றை தனது இந்துத்துவப் பசிக்கு இரையாக்கப் பார்க்கிறார்.

ஒரு விசயத்தை அது நடந்த சூழல், அந்த சூழல் கடந்து வந்த பல்வேறு வரலாற்று கட்டங்கள், அதில் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரிவினரின் சமூக, பொருளாதாரப் பின்னணிகள், அந்த சம்பவத்துடன் தொடர்புடைய அவர்களின் நலன்கள் என்று அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இந்துத்துவ வெறியர்களுக்குத்தான் மத வெறி போதை ஏற்ற ஏதாவது ஒரு துணுக்கு துக்கடா பெட்டிச் செய்தி போதுமே. காமாலைக் கண் பார்வையோடு சாயமடிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதை கேட்டு நம்புவதற்க்கு ஒரு கூட்டம் காத்திருக்கிறது என்றால் அது நம் புத்தகங்களில் வரலாறு என்ற பெயரில் ஒன்றை போதிக்கிறார்களே அதனால் ஏற்ப்பட்ட விளைவு.

முதலில் மாலாபார் கலகத்தின் உண்மையான பின்ணனி என்ன என்று பார்த்து விட்டு, பின்பு அதைப் பற்றி மலர்மன்னன் தன்க்கு ஆதாரமாகக் கூட்டி வந்த கோஷ்டிகளின் லட்சணம் என்ன என்று பார்த்து விடலாம்.
மலாபார் கலகம் - தெளிவுரை:
இந்த எழுச்சி குறிப்பாக 1836 தொடங்கி தனது முழு வீச்சில் 1921 வெடிக்கிறது. ஆனால் 1836க்கு முன்பு இருந்தே அந்தப் பகுதி, தொடர் பிரிட்டிஷ் எதிர்ப்பு கொந்தளிப்பு பகுதியாக இருந்து வந்துள்ளது. அதனால்தான் 1800-ஜுலை மாதத்தில் மலபார் பகுதியை பம்பாய் மாகாணத்திலிருந்து சென்னை மாகாணத்திற்கு மாற்றினார்கள். தெற்குப் பகுதியில் இருந்த மாப்ளா விவசாயிகள் உன்னிமுத்தா, அட்டான் குருக்கள், மற்றும் செம்பான் போக்கர் இவர்களின் தலைமையின் கீழ் கிளர்ச்சி செய்தார்கள். இந்த தெற்கு பகுதி மலபார் மக்களுடன் வடக்கு பகுதி கிளர்ச்சிக்காரர்கள் ஆயுதமும், வேறு பல உதவிகளும் செய்து ஒத்துழைக்கிறார்கள். விவசாயிகளின் பொருளாதாரக் கஷ்டங்களுக்குக் காரணமான பிரிட்டிஷ் கம்பெனி நிர்வாகத்துக்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் வரிவிதிப்பு முறைகளால் பாதிக்கப்பட்ட நிலப்பிரபுக்களும் ஆதரவாக உள்ளனர்.

ஆரம்ப காலங்களில் பிரதானமாக நாயர்களும் விவசாயிகளும் இணைந்து பிரிட்டிஷாரை விரட்டி விடுவது என்ற நோக்கில் நடத்தப்பட்டவை தான் இந்தக் கிளர்ச்சிகள். அவற்றின் நோக்கம் பொருளாதர மாற்றமோ, புரட்சியோ அல்ல. மாறாக பிரிட்டிஷாரின் வரிவிதிப்பு முறைக்கு முன்பு இருந்த பழைய நிலப்பிரபுத்துவத்தை மீண்டும் நிலை நாட்டும் நோக்கம்தான் காரணமாக இருந்தது. அதனாலேயே ஆரம்பத்தில் விசுவாசம், சாதிக்கட்டுப்பாடுகள் போன்றவை இந்த கிளர்ச்சிகளுக்கான கலாச்சார ஊற்றுக்கண்ணாக இருந்தன. பிரிட்டிஷ் அதிகாரத்துக்கு எதிரான இந்த கலகம் மெதுவாக வர்க்க போராட்ட வடிவத்தை மேற்கொள்ளத் துவங்கியது. 1800 லிருந்து 1836க்கு உள்ளேயே மாப்ளா விவசாயிகள் தங்களது கலகத்தை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மட்டுமின்றி தங்களை ஆண்டாண்டு காலமாக அடிமைப் படுத்தி வைத்திருந்த நாயர், நம்பூதிரி நிலப்பிரபுக்கள், பெருவிவசாயிகள் பக்கமும் திரும்பியது. அதாவது தங்களது அரசியல் அதிகாரத்துவ தலைமைக்கு எதிராகவும் விவசாயிகள் போராடத் தொடங்கினர். நிலபிரபுக்கள் மீதான மாப்ளா விவசாயிகளின் தாக்குதலை 'Social Banditry' என்று E.J. Mobsbawm என்பவர் கூறுகிறார்.

(இந்த மேற்சொன்ன விவரங்கள்: Report of the Malabar Committee on the Cotiote Rebellion, (Tamilnadu Archives))

வயநாட்டில் ராணுவ அடக்குமுறைக்கு உள்ளாகி அந்த கலகம் நசுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் வெல்லஸ்லி பிரபு மலாபாருக்கு வந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான போர்த் தந்திரங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார்.

ஏற்கெனவே மேலே சொன்னதுபோல் அந்த இயக்கம் ஆரம்ப்பத்தில் ஒரு பிற்போக்குத்தனமான இயக்கமாக இருந்து குறுகிய காலத்தில் வர்க்க போராட்ட வடிவை பெற்றது. ஆனால் அந்த இயக்கத்தின் ஆரம்பத்தில் ஆளுமை செலுத்திய பிற்போக்குத்தனங்களிலிருந்து அது முழுமையாக விடுபடவில்லை. அதனால் சில இடங்களில் மத அடிப்படையில் தாக்குதல்கள் நடந்தன. ஆனால் அந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள்(முஸ்லிம்கள்தான்) தண்டனைக்கு உள்ளானார்கள்(மரண தண்டனையும் கொடுக்கப்பட்டது).

இவை சில விதிவிலக்கான சம்பவங்கள் என்பதையும், அங்கு ஒரு கம்யுனிஸ்ட் கட்சி போன்ற வர்க்க உணர்வு பெற்ற ஒரு உயர்ந்த அமைப்பின் கீழ் விவசாயிகள் திரளவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் ஆய்வு செய்ய நம்ம மலர்மன்னன் கோஷ்டிகளுக்கு என்றைக்குமே விருப்பம் கிடையாது. தீர்ப்பை எழுதிவிட்டு பஞ்சாயத்து செய்வதுதானே இவர்களின் மரபு(மனு தர்மம்).

இக்கலகம் பற்றிய அன்றைய பிரிட்டிஷாரின் மாவட்ட கெசட்டியர் என்ன கூறுகிறது:
"A gigantic popular upheaval the like of which has not been seen in Kerala before or since".

'1921' என்ற பெயரில் மாப்ளா கலகத்தைப் பற்றி மம்முட்டி நடித்த ஒரு மலையாளப் படமும் எடுக்கப்பட்டுள்ளது.
மலாபார் கலகத்தைப் பற்றிய ஒரு பார்வை (மேற்சொன்ன விசயங்களை உறுதிப்படுத்தும் வரலாற்று ஆதாரங்கள்):
* மலபார் மாவட்டங்களில் ஜன்மி (janmi) என்றழைக்கப்பட்ட ஜமீன்தார்களிடம்தான் விளை நிலங்கள் பெரும்பாலான அளவில் இருந்தன. 1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அங்கிருந்த 511 ஜன்மிகளில் (ஜமீன்தார்கள்) 12 பேர் மட்டுமே மாப்ளா முஸ்லிம்கள். ஏனையோர் உயர்சாதி இந்துக்களான நம்பூதிரிப் பார்ப்பனரும், நாயர்களுமே. மலபாரில் 19ஆம் நூற்றாண்டில் சாதி ஒடுக்கு முறை உச்சகட்டத்தில் இருந்ததால் தாழ்நிலையில் இருந்த இந்துக்களான தீயர்கள், செருமர்கள் மற்றும் முக்குவர் ஆகியோர் பெருமளவில் முஸ்லிம்களாக மாறி விட்டனர்.

ஜன்மிகள், இருவேறு வகை குத்தகை முறைகளில் விவசாயிகளுக்கு விளைச்சல் நிலங்களைக் குத்தகைக்கு விட்டிருந்தனர். அவை 1) காணம் (kanam) எனப்பட்ட 12 ஆண்டுகள் வரை ஒருவரே தொடர்ந்து பயிர் செய்தல் 2) வெறும்பட்டம் எனப்பட்ட குறுகிய கால வரம்புக்குள் சாகுபடிக்கு விட்டுப் பின் சம்சாரியை வெளியேற்றுதல்.

* தென்னை,பலா, பாக்கு ஆகிய பணப்பயிர் மகசூல், நெல் மகசூல் ஆகியவற்றில் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே பயிரிடும் விவசாயிக்கு சொந்தமாகும். மீதம் உள்ள இரண்டு பாகங்களை ஜன்மிக்களும், பிரிட்டிஷ்-கிழக்கிந்தியக் கம்பெனியும் எடுத்துக் கொள்ளும்.

* மலபார் மாவட்ட நிர்வாகத்தின் ஆவணங்கள் குறிப்பிடும் 19ஆம் நூற்றாண்டு உழவர் நிலை மிகவும் பரிதாபமானது.1813ஆம் ஆண்டு, மலபார் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகாவில், அரசால் விதிக்கப்பட்ட அதீத நிலவரியை மாப்ளா விவசாயிகளால் கட்ட வழியில்லாததால், அந்தத் தாலுகாவி஢ல் மட்டும் 203 குத்தகை விவசாயிகளின் சொத்துக்கள் அரசால் ஏலம் விடப்பட்டுள்ளன.

* 1813லிருந்து 1821 வரை உள்ள காலகட்டத்தில் வரி கட்ட முடியாமல் விற்கப்பட்ட நெல் சாகுபடியாகும் நன்செய் வயல்களின் எண்ணிக்கை மட்டும் மலபார் மாவட்டங்களில் 1225 ஆகும்.

* கஷ்டப்பட்டு உழைத்த விவசாயிகளின் உழைப்பை பிரிட்டிஷாரும், உள்நாட்டு நம்பூதிரி ஜன்மிகளும் வகைதொகை இன்றிச் சுரண்டினர். திப்பு சுல்தானிடமிருந்து, மைசூர் போர்களின்போது மலபார் பகுதி பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட பிறகு விளைச்சல் நிலங்களோ, விளைச்சலோ அதிகரித்திடாதபோதிலும் கூட திப்புவின் அரசைக் காட்டிலும் கூடுதலாக வரி வசூலிக்கப்பட்டது. 1821ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருவாய்த்துறை ரூ94,749 ஐயும், அதே நிலங்களில் இருந்து 1900 ஆம் ஆண்டில் 77சதவீதம் கூடுதலாக பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் இருந்த சென்னை மாகாண வருவாய்த்துறை ரூ 1,353,890 ஐயும் மலபார் பகுதியில் வசூலித்தது என்பதில் இருந்து எந்த அளவுக்கு அவ்விவசாயிகள் ஒட்ட உறிஞ்சப்பட்டனர் என்பது புலனாகும். கொடுமையான இவ்வரிவிதிப்பு விவசாயிகளின் நிலைமையை மேலும் மோசமாக்கி வந்தது.

* கம்பெனி ஆட்சியில் உழுபவர்கள் விளைச்சலில் 33% (மூன்றில் ஒன்று) அனுபவித்தனர். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்-கம்பெனி ஆட்சி மாறி பிரிட்டிஷ் இந்திய அரசின் ஆட்சி வந்த பின் இன்னும் மோசமானது. இப்போது உழவருக்கு கிடைத்த அறுவடையின் பங்கோ 12 சதவீதம் மட்டுமே. இந்தச் சரிவும் உழவர் கலகத்துக்கு வலுவான காரணியாய் அமைந்தது.

* மலபாரில் 1862க்கும் 1880க்கும் இடைப்பட்ட காலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தில் இருந்து துரத்தப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 91,720 ஆகும். ஒவ்வொரு வருசமும் 20 குத்தகை விவசாயிகளில் ஒருவர் ஜமீன்தார்களால் விளைநிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார். சாகுபடியில் ஈடுபட்ட இவ்வுழவர்களுக்கு, முறையான ரசீதோ அல்லது பத்திரமோ தரப்படாததால், நீதிமன்றத்தில் படிப்பறிவற்ற இவர்களின் குரல் எடுபடவில்லை.

* லோகன் எனும் பிரிட்டிஷ் அதிகாரி 1881ல் மலபார் விவசாயிகளிடம் நிகழ்த்திய நேர்காணலின்படி 7994 குத்தகையாளர்களில் 4401 பேர் கடனாளிகளாய் ஆகி விட்டனர். அவர்கள் 12 முதல் 36 சதவீதம் வரை வட்டியுடன் கட்ட வேண்டிய கடன் தொகை மட்டும் ரூ 17 லட்சம் என்பதும் தெரிய வந்தது.

* 14,அக்டோபர் 1880 ல் அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள், நாயர்கள், தீயர்கள் கூட்டாக சேர்ந்து மனு ஒன்றை அனுப்பினர். அம்மனுவில் மலபார் ஜமீன்களின் சுரண்டலும், அதனால் நசுங்கிக் கொண்டிருக்கும் ஏழைக் குடியானவர்களின் பரிதாப நிலைமையும் விவரிக்கப்பட்டிருந்தன. அச்சுரண்டலைக் கட்டுப்படுத்திடவும் ஜமீன்களின் அராஜகத்தைத் தடுத்திடவும் மாட்சிமை தாங்கிய மன்னரின் தயவையும் நாடி இருந்தனர் அவர்கள். உடனே சில விசாரணைக்கமிசன்களும் அதன் பின்னர் 1887ல் மலபார் குத்தகைதாரர் மேம்பாட்டுச் சட்டமும் இயற்றப்பட்டது. (இச்சட்டம் 1920களில் நிறைவேற்றப்பட்ட மலபார் குடிவாரச் சட்டத்தில் இருந்து வேறுபட்டது. அச்சட்டம், மலபாரில் இருந்த நம்பூதிரிகள் அவர்களின் வைப்பாட்டிகளுக்கும், வைப்பாட்டிகளின் பிள்ளைகளுக்கும் குடிவார உரிமை தரக் கொண்டுவர உதவியது.)

இக்குத்தகைதாரர் மேம்பாட்டுச் சட்டத்தை, நம்பூதிரி ஜமீன்கள், கழிவறைக் காகிதமாகவே மதித்தனர். இச்சட்டம் வரும் முன்னர், குத்தகை நிலத்தில் உரிமை பறிக்கப்பட்ட உழவர்களின் எண்ணிக்கை 2039 ஆக இருந்தது. (1862 ஆம் வருடக் கணக்கு). சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகோ, துரத்தப்பட்ட உழவர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் மேலாகி 4620 ஐத் தொட்டது. (இது 1892 ஆம் ஆண்டுக் கணக்கு). இதிலிருந்தே இச்சட்டத்தை நம்பூதிரிகள் எந்தளவு நடைமுறையில் மதித்தனர் என்பது தெளிவாகும். நட்ட ஈடு ஏதும் தராமல் 1890ல் 77 சதவீதம் பேரையும்,1891ல் 76 சதவீதம் பேரையும், 1892ல் 75% பேரையும் குத்தகை உரிமையில் இருந்து விரட்டினர், ஜமீன்கள். சில இடங்களில் விதி விலக்காகத் தரப்பட்ட நட்ட ஈடோ சராசரியாக ரூபாய் 169 ஆக மட்டுமே இருந்தது. (இது 1890 -92 ஆம் வருசக் கணக்கு. இதே காலகட்டத்தின் பண மதிப்பைத் தெரிந்து கொள்ள பின்வரும் தகவல் உதவலாம். 800 சதுர அடி கொண்ட ஒரு குடிசை வீடு அக்காலகட்டத்தில்-1885ல்- ரூபாய் 100க்கு அடமானம் வைக்கப்பட்டது, திருநெல்வேலி மாவட்டம் ஒன்றில்). இத்தொகை, கந்து வட்டிக்காரனுக்குத் தரக்கூடப் போதவில்லை என்பது வெளிப்படை.

* இவ்வாறு பலவழிகளிலும் சுரண்டலுக்கு ஆளான மாப்ளா விவசாயி, தம்மை நேரடியாகச் சுரண்டி வந்த ஜன்மிகளை அழித்து ஒழித்திட முயன்றனர். அம்மோதல்களில் அடையப்போகும் சாவை 'வீரச் சாவாகவும்', அவ்வாறு அநியாயவான்களை அழித்து விட்டு மாண்டு போனால் சொர்க்கம் உறுதி என்றும் மாப்ளா முஸ்லிம் விவசாயிகள் நம்பினர். அவ்வாறு முடிவு செய்து மோதலுக்குக் கிளம்பும் முன் தன்னைச் சார்ந்துள்ள மனைவியை 'மணவிலக்கம்' செய்துவிட்டு, யாரைக் கொல்லப்போகிறோம் என்பதையும் பகிரங்கமாக அறிவித்து விட்டுக் கிளம்பிய செயலை பிரிட்டிஷ் ஆவணங்கள் 'நேர்ச்சை' சடங்குடன் ஒப்பிடுகின்றன. நிலப்பிரபுவை அவனுடைய வீட்டுக்குள்ளோ அல்லது கொல்வதற்குத் தோதானதொரு இடத்திலோ நேருக்கு நேர் பொருதி அழித்தனர். காரியத்தை முடித்த பின்னர் போலீசுக்குப் பயந்து ஓடிய சம்பவங்கள் ரொம்ப சொற்பமே. எல்லா இடங்களிலும் அநேகமாய் போலீசின் துப்பாக்கிக் குண்டில்தான் வீரச் சாவை அடைந்தனர் அந்த ஏழை விவசாயிகள்.

* மலபார் உழவர் எழுச்சியை அவர்கள், 1837 ஏப்ரல் 15ஆம் நாள் எரநாடு தாலுகாவிலுள்ள செங்கர அம்சம் ஜமீன்தாராய் இருந்த ஒரு நம்பூதிரிப் பார்ப்பனரைக் கொன்றதில் ஆரம்பித்து வைத்தனர். பின்னர் கிட்டத்தட்ட நாலு தலைமுறைகளாய் அது தொடர்ந்தது.

1885ல் செம்பரச்சேரியிலும், 1894, 1898 ஆகிய இரு ஆண்டுகளில் பந்திக்காடிலும், 1896ல் வாண்டூரிலும் பெரிய அளவில் கலகங்கள் நடந்தன.
இக்கலகங்களில் போலீசால் கொல்லப்பட்ட விவசாயிகள், 'வீரத் தியாகிகள்' ஆகி, வெகுஜனங்களிடையே ஆதர்ச நாயகர்களாய்ப் புகழ் பெற்றனர். அவர்களைப் புகழும் பல நாட்டார் கதைப் பாடல்கள் இன்னும் காற்றில் கலந்து நிறைந்துள்ளன.

* நிலப்பிரபுக்கள் தாக்கப்படுவது 1837 முதல் அதிகரித்த வண்ணம் இருக்கவே, அப்பிரபுக்களின் நலன் காத்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, தாக்கிய விவசாயிகளின் கிராமத்திற்கு ஒட்டு மொத்தமாய் தண்ட வரி விதித்தது. தனிப்பட்ட உபயோகத்திற்காக உழவர்கள் வைத்திருந்த வெட்டுக்கத்தியைத் தடை செய்தது. (அத்தடை இன்னமும் தொடர்கிறது - அதாவது 30 செண்டி மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட கத்திக்கு லைசென்சு வாங்க வேண்டும்-கம்பெனி ஆட்சி மாறி,பிரிட்டிஷ் இந்திய அரசு வந்து, பின்னர் டில்லியை மையம் கொண்ட ஏகாதிபத்திய அடிவருடி ஆட்சி வந்தும், சென்னை மாகாணம், தமிழ்நாடாக மாறியும், ஆளும் வர்க்க நலன் காக்கும் 'வெட்டுக்கத்தி'த் தடை இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது) அந்தத் தடையையும் இன்னபிற ஒழுங்கு நடவடிக்கையையும் செய்ய 1854ல் சென்னை மாகாண அரசு (அதாவது கிழக்கிந்தியக் கம்பெனி) 'மாப்ளா போர்க்கத்திச் சட்டம்' ஒன்றை இயற்றியது. இச்சட்டம் கடுமையாக அமுலுக்கு வந்ததும் மாப்ளாக்களின் கோபம், கம்பெனியார் மீது திரும்பியது. அப்போது மலபார் பகுதியில் ஜில்லா மாஜிஸ்திரேட்டாகப் பணிபுரிந்த H.V.கனோல்லி 1855 ஆம் ஆண்டில் மாப்ளாக்களால் கொல்லப்பட்டார்.

* சாகுபடி நிலத்திலிருந்து துரத்தப்பட்ட 19 மாப்ளாக்கள், குளத்தூர் எனுமிடத்தில் ஆகஸ்ட் 1851ல், சுரண்டலில் திளைத்துக் கொழுத்த இந்து நிலப்பிரபுக்கள் நால்வரைக் கொன்றனர். இந்துக்கள் பெருமளவில் செறிவாய் வசிக்கும் பகுதியில் நுழைந்த இவர்கள் முதலில்அங்கிருந்த 'கொட்டுப்பரம்பத்து கோமு மேனனை'யும், குளத்தூர் வாரியரை இறுதியிலும் அழித்தொழித்தனர். அவர்கள் அழிந்த பிறகு முதற்காரியமாய் அவர்களிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும், வரவு செலவுப் புத்தகங்களையும் தீயிட்டுப் பொசுக்கினர். அந்நால்வரின் குடும்பத்தினர் எவருக்கும் சிறு அளவில் கூட காயம் ஏற்படுத்தவில்லை. குளத்தூர் வாரியர் அழிக்கப்படும் முன் அவரின் குழந்தைகளையும், மற்ற உறவினரையும் அவ்வீட்டை விட்டு வெளியேறச் செய்து விட்டே வந்த காரியத்தை முடித்தனர்.

1921லே அது மிகவும் பெரிய அளவில் பிரிட்டிஷ் அரசையே ஆட்டிப் போடும் அளவிற்குப் பெரிதானது. மலபாருள் பிரிட்டிஷ் ராணுவம் நுழைந்து அதன் ராட்சச பலத்தினால், ரத்தச் சகதியுள் அந்த ஏழை விவசாயிகளைச் சுட்டுப் பொசுக்கும் வரை அந்த நாலு தலைமுறைக் கோபம் தீயாய்ப் படர்ந்து வந்தது. 1837லில் ஆரம்பித்த எழுச்சித் தீ, தான்தோன்றித்தனமாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் தனி நபர்களைக் கொல்வதும், உடன்விளைவாய் அரசு அடக்குமுறைக்குப் பலியாவதும் தொடர்ந்தது. ஆனால் 20, ஆகஸ்ட் 1921ல் திரூரங்காடியை மையமாகக் கொண்டெழுந்த அப்புயலில், உழவர்களின் கோபத்தை முறைப்படுத்தி அவர்களுக்கு தலைமை தாங்கிட மத குருமார்கள் முன்வந்தனர். அப்போது அது 'கிலாபத்' இயக்கத்தின் விளைவாக ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் ஏந்தி இருந்தது. அன்றைய சூழலில் காந்தியின் 'தேசிய' இயக்கம், கோழிக்கோட்டின் புறநகர் எல்லையைக் கூடத் தாண்டிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. எனவே காங்கிரசுக் கமிட்டியால் அத்தனை தெளிவாய் நடந்ததை உணர வாய்ப்பே இல்லை.

* வரியம்குன்னத்து குன்ஹாமது ஹாஜி, காலத்திங்ஙள் முகம்மது, சித்திகோயா தங்ஙள் மற்றும் இம்பிச்சிக்கோயா தங்ஙள் ஆகியோர், நிலப்பிரபுக்களிடம் இருந்து விடுவிக்கப்பட்ட சுதந்திர சுயராஜ்ஜியத்திற்கு தலைமை ஏற்று, கட்டுப்பாடான சுய நிர்வாகத்தை ஏற்படுத்தினர். பிரிட்டிசாரிடம் இருந்து நாட்டை மீட்டு, மக்கள் அரசை நிர்மாணம் செய்ய அழைப்பு வ்஢டுத்தனர்.

*காவல் துறைக்கு ஆள் எடுத்தனர். குற்றவியல் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. வருடாந்திர வரி நிர்ணயம் செய்யப்பட்டது. சாகுபடியாளர்களே, ஜமீன் நிலங்களை அனுபவித்து, அறுவடை செய்ய உரிமை வழங்கப்பட்டது. மலபார் மக்களுக்கு தனியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்து,முஸ்லிம் பாரபட்சம் இல்லாத ஒரு அரசு ஸ்தாபிக்கப்பட்டது.

*1921 எழுச்சியில் சில இடங்களில் நடந்த அத்து மீறல்களும், கொள்ளைச் சம்பவமும் விசாரிக்கப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. அப்பாவி மக்களிடம் முறைகேடாக நடந்தவர்கள், பொது வீதிகளில் வைத்து உதைக்கப்பட்டனர். கொள்ளைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குன்ஹம்மது ஹாஜி, எரநாடு தாலுகாவிற்கு நேரில் சென்று, இந்துக்களுக்கு எதிரான அத்துமீறல்களை விசாரித்தார். அப்போது சாத்தன்கோடு எனும் ஊரைச் சேர்ந்த C.கோபால பணிக்கர் என்பவர் எழுதிய ஆவணத்தில் இருந்து:

"வரியம்குன்னத்து குன்ஹம்மது ஹாஜி, மாப்ளாக்களிடம், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் தன் முன் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். குஞ்சாலி என்பவனைத் தவிர மற்றவர்கள், தாம் கொள்ளையிட்ட பொருட்களை ஹாஜி முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர். குஞ்சாலி மட்டும், தாம் கொள்ளையடிக்கவில்லை எனப் பிடிவாதம் செய்தான். அவனுக்கு 125 கசையடிகள் கொடுக்கப்பட்டதும், உள்ளதை ஒத்துக் கொண்டு பொருட்களைத் திருப்பித் தந்தான். அவை மாரத்து நம்பூதிரியிடமும்,காவுக்கள் நம்பூதிரியிடமும் காட்டப்பட்டு, அவை அவர்களுக்கு உரியவைதானா என்பதும் விசாரிக்கப்பட்டுத் திருப்பித் தரப்பட்டன. குன்ஹம்மது ஹாஜி, இந்துக்களுக்குப் பாதகமாய் ஏதும் செய்திடவில்லை"

* சென்னை உயர்நீதி மன்றத்தில் 1921 கலகத்தினை அடுத்து நடந்த 100 குற்றவியல் வழக்குகளில், 14 வழக்குகள் இந்து விவசாயிகளுக்கு எதிராக நடந்தன. அவர்கள் செய்த குற்றமாக, இந்து ஜமீன்தார்களைத் தாக்குவதில் இறங்கியதும், அந்த ஜமீன்தார்களின் வீடுகளைக் கைப்பற்றியதும் அரசால் வழக்கில் சொல்லப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இக்கலகத்தின்போது ஜமீன் / பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகவும், மாப்ளாக்களுக்குத் துரோகம் செய்தும் இருந்த நபர்கள் கலகக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அல்லது கடும் தண்டனைக்கு உள்ளாயினர். அவ்வாறு தண்டிக்கப்பட்ட / கொல்லப்பட்ட மக்களில் முஸ்லிம்கள் பின்வருமாறு.

1) கான் பஹதூர் ஷேக் குட்டி (ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர்)
2)இத்தூரு ஹாஜி (புகழ் பெற்ற அலோபதி மருத்துவர்)
3)அட்டன்
4)இஸ்மாயில்
5)கம்முண்ணி ஹாஜி
6)மம்மூ
7)குன்ஹம்மூ ஷேக்
8)கயிசேரி மொயிதீன்
9)காக்கப்ப வீரன் ஹாஜி
10) காரேத்து குன்ஹிகோயா

இவர்களைத் தவிர துரோகம் / காட்டிக்கொடுத்தல் ஆகிய குற்றங்களுக்காக செம்பரச்சேரி தங்ஙள், இந்துக்கள் 38 பேருக்கு மரண தண்டனை விதித்தார்.
(மேற்கண்ட ஆதாரங்களைக் கொண்டுள்ள நூல் "Peasant Protests and Revolts in Malabar" Edited by K.N.Panikkar - people's publishing House)

இவ்வெழுச்சியை மத துவேசமாகப் பார்க்கும் மாலைக்கண் பார்வைக்கு மேற்சொன்ன புள்ளிவிவரமே அருமருந்தாகட்டும்.

* ஒரு வரலாற்றை வெறும் துணுக்குகளாக மட்டும் பார்த்துவிட முடியாது (கருத்துக்கு "பி.ஏ.கிருஷ்ணனுக்கு" நன்றி). 40 வருசத்துக்கு முன்னாடி, சினிமா என்றால் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு முதியவர் சினிமா தியேட்டருக்குப் போனாராம். அப்போது தியேட்டரில் ஜெமினி நிறுவனம் தயாரித்த படம் ஓடிக்கொண்டிருந்ததாம். படம் ஆரம்பிக்கும்போது இரு சிறுவர்களின் சிலை, குழல் ஊதும் காட்சி வந்திருக்கிறது. பெரியவர் உடனே நல்ல தூக்கம் போட்டு விட்டாராம். படம் முடியும்போது எழுப்பி விட்டார்களாம், பக்கத்தில் இருந்தவர்கள். படம் முடியும்போதும் அதே குழல் ஊதும் காட்சி வந்திருக்கிறது. வீட்டில் மனைவியிடம் "ரெண்டு சின்னப்பயலுவ கோவணம் கட்டிக்கிட்டு குழல் ஊதறதப் போயி படம் எடுக்கானுவ.இதப் போயியும் நம்மாளுக பாத்துட்டு வருது. காலக் கொடுமை" எனச் சொன்னாராம். ம.ம.வும் மலபார் எழுச்சியை இப்படித்தான் பார்த்து இருக்கிறார்.
+++++++++++++++++++
சாட்சிகளின் தராதரம்:
அன்னி பெசன்ட் அம்மையார் Theosophical society-ல் தன்னை இணைத்துக் கொண்ட காலம் முதல் கொண்டு பார்ப்பனப் பண்பாட்டுக்கு ஒத்து ஊதுகின்ற வேலையை, திலகருடன் சேர்ந்து மிகச் சிறப்பாக செய்கிறார். அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது 'இந்துத்துவ மறுமலர்ச்சி' என்ற குண்டுச் சட்டிக்குள் ஓடிய குதிரைதான். இந்த கருத்தாக்கத்தை முதல் உலகப்போரை ஒட்டிய அவரது பல்வேறு கட்டுரைகளில் காணலாம். பிரிட்டிஷ் வெள்ளை-இன பண்பாட்டு மாயையிலிருந்து இந்தியா துயிலெழ வேண்டிய நேரம் இதுதான் என்று அழைக்கிறார்(அது நல்ல விசயம்தான் ஆனால் அதற்கு மாற்றாக அவர்கள் வைக்கும் கலாச்சாரம் இன்னொரு வெள்ளையாக இருந்ததுதான் பிரச்சனை).
அன்னி பெசன்ட் அம்மையார் தனது home rule இயக்கத்துக்காகவும், சமூக சீர்த்திருத்த கருத்துக்களுக்காகவும் பிரபலமானவர். அந்த இரண்டு பிரபலமான விசயங்களுக்கு பின்புலமாக இருந்த இயங்கியல் என்ன என்று பார்ப்போம்.
1904-ல் பண்டித ராமாபாய் அம்மையார் அன்னி பெசன்ட் பற்றி என்ன கூறுகிறார்:
"Sometimes it looks as if the world is going backwards, when one hears an English woman like Mrs. Besant declaring that Hindu widows should never marry again."
இந்த அன்னி பெசன்ட்தான் ஐரோப்பாவில் பெண்ணுரிமைகளுக்காக முன்னோடியாக நின்று போரடினார். அன்னி பெசன்டின் இந்த முரண்பட்ட நிலையை அவரைப் பற்றிய பின்வரும் சில கருத்துக்கள் விளக்கும்:
Nethercot wrote, she knew "how to wear sandals in India and shoes in the rest of the world."In Sri Lanka, the Buddhist ideologue Anagarika Dharmapala also noticed this difference and said that while Besant was preaching "gentleness and obedience" to Indians, she supported the militant suffragettes in England".
இந்தியாவுக்கு அன்னிபெசன்ட் homerule இயக்கம் கண்ட லட்சணம் இதுதான். அதாவது 'preaching "gentleness and obedience" to Indians'. அதே நேரத்தில் இங்கிலாந்துக்கு அவர் கூறுவது தீவிர போரட்ட நடவடிக்கைகள்.
மேலும் அவர்களிடையே homerule இயக்கத்தை 'பெரும் மக்கள்' இயக்கமாக நடத்துவதா அல்லது பிரிட்டிஷ் அரசிடம் சலுகைகள் பெற்று ஓட்டு சீட்டு அரசியல் நடத்துவதா என்று குழப்பம் வேறு இருந்தது.
அன்னி பெசன்ட் தனது homerule இயக்கத்தில் பெண்களின் விடுதலைக்கு ஒரு குரல் கொடுக்கக் கூட தயாராயில்லை. இதே நேரத்தில் இங்கிலாந்து சென்று அம்மையார் என்ன கூறுகிறார்:
"the only live movement in the world today is the Women's Movement".
ஆக அந்த அம்மையாரின் கண்களுக்கு homerule இயக்கம்(movement) கணக்கிலேயே வரவில்லை. அதனால்தான் முகமூடி என்கிறோம்.
home rule இயக்கம் என்பது பொருளாதார பிரச்சனை என்பதலிருந்து பிரதானமாக 'cultural rejuvenation'- கலாச்சார மறுமலர்ச்சி என்ற அன்னி பெசன்டின் agenda வுக்கு சென்றதுதான் அது மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மலரவில்லை.
அன்னி பெசன்டே அந்த இயக்கம் மதச் சாயம் பூசத் தொடங்கிவிட்டதை கூறுகிறார்:
"Home Rule has become so intertwined with Religion, by the prayers offered up in the great Southern Temples, -- sacred places of pilgrimage - and spreading from them to village temples, and also by its being preached up and down the country by Sadhus and Sanyasins."
இந்தியாவைப் பொறுத்தவரை அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு இப்படி இந்துத்துவ ஓட்டுக்குள் ஒடுங்கிய நத்தையாகிப் போனதில் யாருக்கு லாபம் இருந்ததோ இல்லையோ பிரிட்டிஷ் அரசுக்கு நல்ல லாபம். ஏற்கெனவே ஒரு நல்ல முகமூடி தேடி அலைந்தவர்களுக்கு காங்கிரசு முகமூடி பிடித்து தரும் ஏஜன்ட் ஆக மிகச் சிறப்பாக வேலை செய்த வந்த நிலையில். அப்படி கிடைத்த ஒரு சிறப்பான முகமூடிதான் அன்னி பெசன்ட்(அதற்கு அப்புறம் ever shining முகமூடியாக பாவம் காந்தி சிக்கிக்கொண்டார்).
அவரது மக்கள் விரோத பார்ப்பன பண்பாட்டு அடிப்படையை, அவரது உழைக்கும் வர்க்கம், ஏழைகள் பற்றிய இழிவான கண்ணோட்டத்தை அவரது 'Indian Review' - February 1909 பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை தெளிவுபடுத்துகிறது. இக்கட்டுரையின் பகுதிகள் "காந்தியும், காங்கிரசும் தீண்டத்தகாதவர்களுக்கு செய்தது என்ன? " என்ற அம்பேத்கரின் புத்தகத்தில் வெளிவந்துள்ளன.
அன்னி பெசன்டுக்கு நிலையான ஒரு சித்தம் கிடையாது. இவரது வாழ்க்கையைப் பார்த்தால் அது தெரியவரும். ஒரு 14 வயது சிறுவனைப் பார்த்து அவர்தான் கடவுளின் பிரதிபிம்பம் என்றவர்தான் இந்த அம்மையார். காந்தி ஒரு சக்தியாக வளர்ந்து வரும் நிலை(காந்திக்கும் இவருக்கும் இடையிலான சண்டை ஒரு கிளைக்கதை), இவரது homerule இயக்கம் மறைந்து வரும் நிலை, நிலையற்ற, தெளிவற்ற முன்னுக்கு பின் முரணான இவரது சிந்தனை, இவரது இந்துத்துவ அடையாளம் இவையெல்லாவற்றையும் சேர்த்துதான் இவரது வார்த்தைகளை எடை போட வேண்டியுள்ளது.
ஆக இதுதான் அன்னி பெசன்ட். அவரது எந்த ஒரு நடவடிக்கையும் அந்த வட்டத்தை தாண்டி வந்ததேயில்லை. இந்த பின்னணியில்தான் அவரது மாப்ளா கலகத்தைப் பற்றிய கூற்றை நாம் ஆராய வேண்டியுள்ளது. காங்கிரசு பிரமுகர் மாதவன் நாயர் எப்படிப் பட்டவர். அவர் homerule இயக்கத்தின் தீவிர விசுவாசி. ஆக அவரையும் அன்னி பெசன்டையும் தனித் தனியாக உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுய அவசியம் இல்லை.
அவர் மற்றும் மாதவன் நாயரினுடைய அறிக்கைகளில் உள்ள மத வெறி தாக்குதல் என்று கருதக்கூடிய சம்பவங்கள் ஒரு சில ஆதாரமில்லா கூற்றுகளின் அடிப்படையில் தான் உள்ளன. அப்படிப் பட்ட குற்றச்சாட்டுகளை யார் வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் அவை உண்மையா என்று ஆராயப்படும் போது குற்றச்சாட்டுகளை வைத்தவர்களின் யோக்கியதையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
மக்கள் விரோதமாக செயல்படுவது என்றால் மதம், இனம் என அனைத்து வேறுபாடுகளையெல்லாம் களைந்து பாசிச சக்திகள் ஒன்றுபடும் என்பதற்க்கு இந்த வரலாற்று சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

Related Posts with Thumbnails