TerrorisminFocus

Showing posts with label அன்பழகன். Show all posts
Showing posts with label அன்பழகன். Show all posts

Thursday, May 15, 2008

அன்பழகன் வைத்த செக்கும், கருணாநிதி திருப்பிக் கொடுத்த ஆப்பும், மற்றும் கொளுகைப் போராளி சுப.வீ.யும்

2008 மே 11 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் காரைக்குடி ராம.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

காரைக்குடி ராம.சுப்பையா, ஆத்திகர்களின் அசைக்கமுடியாத கோட்டையாகவும், பார்ப்பன அடிமைகளின் கூடாரமாகவும் திகழ்ந்த காரைக்குடியைச் சுற்றியுள்ள செட்டிநாட்டுப் பகுதியில் 1930களின் தொடக்கம் முதல் சுயமரியாதை இயக்கத்தையும், சுயமரியாதை சமதர்மக் கட்சியையும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் கட்டி அமைத்தவர். பல இன்னல்களுக்கு மத்தியில் பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தை செட்டிநாட்டில் வேரூன்றச் செய்த சுப்பையா 1949 வரை பெரியார் இயக்கத்திலும், 1949 முதல் 1997இல் அவர் இறக்கும் வரை திமுகவிலும் செயல்பட்டவர். கட்சியை தனது சொந்த நலனுக்காக பயன்படுத்தாத சுப்பையாவின் போராட்டக்களன்களாக 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் 1953இல் திமுக நடத்திய கல்லக்குடி போராட்டத்தையும் சொல்ல முடியும்.

அவரின் நூற்றாண்டு விழாவை அவர் சார்ந்த திமுகவும், அவரின் வாரிசுகளும் இணைந்து நடத்தினர். அவரின் வாரிசுகளில் இருவர் சற்றே பிரபலமாய் இருப்பவர்கள். மூத்தவர் எஸ்பி.முத்துராமன் என்ற 'மாபெரும்' மசாலா சினிமா இயக்குநர். இளையவர், 80,90களில் தமிழ்த்தேசியம், பெரியாரியம், ஈழ ஆதரவு, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்றெல்லாம் பேசியும் எழுதியும் வந்த சுப.வீரபாண்டியன்.

விழாவில் வீரபாண்டியன் (அதுதாங்க சுப.வீ) இதுவரை தனக்கு சூட்டி இருந்த அறிவாளி, கொள்கைக்காரர், போராளி போன்ற கனமான போர்வைகள், மேலாடைகள், உள்ளாடைகள் அனைத்தையும் உதறிவிட்டு, 'எரிக்கப்போகும் சூரியனே', 'ஓய்வறியா உதய சூரியனே' என்று கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கும் இன்னொரு தொண்டரடிப்பொடியாக மாறிப்போனார். அநேகமாக அந்த விழாவை அவரின் தந்தைக்கு நூற்றாண்டு விழாக் கூட்டமாகவும், அவருடைய அரசியலுக்கு அஞ்சலிக்கூட்டமாகவும் நாம் கருதிக்கொள்ளலாம். வீணாய்ப்போன வலம்புரிஜானின் இடத்தைப் பிடிக்க எப்படி எல்லாம் பல்லிளிக்க வேண்டியிருக்கிறது!

ஏற்கனவே நாறிப்போயிருந்த கோடம்பாக்கத்தில் மேலும் பல பன்னிச்சாணிகளைக் கொட்டிய மாதிரி ரஜினி,கமல் கழிசடைகளை வைத்து சினிமா எனும் பேரில் பல குப்பைகளை எடுத்து தள்ளியவர் இந்த முத்துராமன். அவர் இந்த மேடையில் ஒரு சுவாரசியமான விசயம் சொன்னார். அவர் 10ஆம் வகுப்புப் படிக்கும்போது ஒருமுறை திமுக பேச்சாளர் ஒருவர் வராததால், அவருடைய அப்பாவின் வேண்டுகோளின்படி கூட்டத்தில் பேசப்போனாராம். அதே கூட்டத்தில் பேசி முடித்த க.அன்பழகன், கூட்டம் முடிந்ததும் 'யார் நீ?' எனக்கேட்டிருக்கிறார். முத்துராமன், 'ராம.சுப்பையாவின் மகன்' என்றதும் 'இதுதான் கடைசி..முதலில் படிச்சு முடிக்கிறதப் பாரு' என்று அன்பழகன் சொன்னாராம்.

எஸ்.பி.முத்துராமன், ஒழுங்காய் அன்பழகன் சொன்னதைக் கடைப்பிடித்துப் படித்திருந்திருக்கலாம். நாமும் பல கழிசடை குப்பைகளை பார்த்து கஸ்டப்பட்டிருக்க வேண்டியதிலிருந்து தப்பித்திருக்கலாம். சகலகலாவல்லவன்,முரட்டுக்காளை... உயர்ந்த உள்ளம், நல்லவனுக்கு நல்லவன்...... அடத் தூ....

வாழ்த்துரை வழங்க வந்த ராம.வீரப்பன் (முருகன் கை வேல் எடுத்த ஆர்.எம்.வீ. அண்ணே தான்), தன்னை ராம.சுப்பையாதான் அரசியலுக்கு அழைத்துவந்ததாகச் சொன்னார். பின்னர் இருவரும் வேறுவேறு பாதைகளில் அரசியல் பயணம் மேற்கொண்டதாகச் சொன்னது நம்மை வியப்பில் ஆழ்த்தியது. ஆர் எம் வீ 40களுக்குப் பிறகு அரசியலில் என்ன செய்துவிட்டார் என்று வேறு பாதையில் பயணித்ததாக கூறுகிறார்? எம்.ஜி.ஆருக்கு மேனேஜராகவும், எம்.ஜி.ஆரின் பல கள்ளத்தனமான வெளியில் சொல்லக்கூச்சப்படும் செயல்களுக்கு எடுபிடியாகவும் (மாமா) வேலை பார்த்ததை எல்லாம் அரசியல்பணி என்று சொல்லமுடியாது. எதனை சொல்வது? பெரியாரின் கைப்பிடித்து வளர்ந்த வீரப்பன், எம்.ஜி.ஆரிடம் அமைச்சராகி சங்கராச்சாரியின் பல்லக்கை சுமந்த மாட்டு வண்டியை மாட்டிற்குப் பதிலாக இழுத்து வந்தகதையையா? முருகனுக்கே மொட்டை போட்டு வைர வேலை எங்கப்பா? எங்க வீரப்பா? என்று மக்கள் கேட்டதையா? என்னமோ போங்க.

ஆர்.எம்.வீ. சொன்னார் 'அண்ணன் சுப்பையாவின் கடைசிக்காலங்களில் அவ்வப்போது அவரை சந்திப்பதுண்டு','ஏன் வீரபாண்டியன் தம்பி எதிர்ப்பா இருக்குதுன்னு தெரியலை என்பார். அவர் இப்ப இருந்திருந்தால் வீரபாண்டியனின் இன்றைய நிலைப்பாட்டைக்கண்டு மகிழ்ந்திருப்பார்' என்றார். இதைச் சொல்வதன் மூலம் ராம.சுப்பையாவுக்கு தேசிய இன, பெரியாரிய, தமிழ்த் தேசிய அரசியல் எதுவும் தெரியாது என்பதையும்(அதாவது வீராபண்டியன் ஏன் இந்த அடிப்படைகளில் கருணாநிதியை எதிர்த்தார் என்பது பற்றிய புரிதல் ராம. சுப்பையாவுக்கு இல்லை என்பதையும்) வீரபாண்டியன் தற்போது கடைசியில் கலைஞரின் நாய்க்குட்டியாகி எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டவர் என்பதையும் சொல்லாமல் சொன்னார்.

Photobucket Link

அன்பழகன் பேசும்போது உள்குத்து ஒன்றை வைத்து விட்டு அமர்ந்தார். "கலைஞர் ஒருவர்தான் ராம.சுப்பையா அவர்களை அண்ணன் என்று அழைப்பார். நாங்கள் அவரை 'தோழர்' என்றுதான் கூப்பிடுவோம். சுயமரியாதை இயக்கம் அப்படித்தான் பழக்கி இருந்தது. பெரியாரையே தோழர்.ராமசாமி என்றுதான் அழைப்பார்கள்" என்று குறிப்பிட்டார். இப்பேச்சின் சாரம் என்ன என்பதை அடிமட்ட கலைஞர் உடன்பிறப்பு புரிந்து கொள்ள மாட்டான். ஆயினும் தலைவர்மட்டத்தில் உடனடியாக உணர்ந்து கொள்வர்.

"யோவ்..கருணாநிதி..உம்மைவிட 15 வயசு மூத்தவரான ராம.சுப்பையாவையே தோழர்னுதான் அழைத்தோம். நீரோ என்னை விட 2 வயது இளையவர். உம் பெயரைக்கூட சொல்லிடாமல் 'தமிழினத் தலைவர்'னு அழைக்கணுமா?" - இதுதான் அன்பழகன் சொல்லாமல் சொன்ன விசயம்..

கருணாநிதி எப்பேர்ப்பட்ட ஆசாமி! அன்பழகன் வைத்த செக்குக்கு ஆப்புக் கொடுக்க வேண்டாமா? எப்படி இதைச் சமாளிப்பார் என்று பார்த்தோம்..

Photobucket Link

"கல்லக்குடி போராட்டத்தில் எங்களில் 30 பேர்களை முதலில் அரியலூர் சப்-ஜெயிலில் அடைத்தார்கள். ஏழெட்டுப் பேர்களை ஒரே செல்லில் அடைத்தார்கள். உள்ளே கடுமையான துர்நாற்றம். இரவு நல்ல காற்றை சுவாசிக்க மூக்கை கம்பிக்கு வெளியே நீட்டியபடி நின்று கொண்டிருந்தேன். இரவு வெகு நேரமான பின்னரும் நின்று கொண்டிருந்தேன். அப்போது அண்ணன் ராம.சுப்பையா , கால்கள் வலிக்குமே என்று என்கால்களைப் பிடித்து அமுக்கி விட்டுக் கொண்டிருந்தார். அவர் வயதென்ன? என் வயதென்ன? இதெல்லாம் அவர் செய்தது எதனால்? அதன் பெயர்தான் தொண்டு" என்று கருணாநிதி பேசினார்.

அதாவது,
"யோவ்..பெருசு..என்னமோ..அவரையே தோழர்னு சொல்லுவியா? ஒன் தோழரே என் காலைப்பிடிச்சுக்கிட்டு தொண்டு செஞ்சவர் பாத்துக்கோ..உன் மனசில அந்த மாதிரில்லாம் 'தோழர் கருணாநிதி..அடேய் கருணாநிதி'ன்னுல்லாம் கூப்பிடனும்னு வேற நினப்பிருக்கா? காலைப்பிடிப்பதுதான் தொண்டனுக்கு அழகு..பாத்துக்கோ"...இதுதான் கருணாநிதி சொல்லாமல் சொன்ன பதில்..

அன்பழகனுக்கு ஆப்படித்தாயிற்றா?

கூட்டம் முடிந்த பிறகு இதனைத் தோழர்கள் குறிப்பிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தனர். தோழர் ஒருவர் சொன்னார்.."கூட்டம் முடிந்து வீட்டுக்குப் போய் துணைவியாரிடம் அன்பழகன் சொல்வார் 'கருணாநிதிக்கு நல்லா செக்கு வச்சிட்டேன்'. அந்த அம்மா கேட்க்கும் 'அப்புறம்..என்னங்க ஆச்சு'. அன்பழகன் உடனே சொல்வார் 'பாவி மனுசன்..நம்மை நல்லா மூக்க உரிச்சிட்டான்..'. பதிலுக்கு அந்த அம்மா, 'அதான் 40 வருசமா இதுதான நடக்குது... என்னமோ புதுசா இன்னைக்குதான் நடக்கிற மாதிரி..போய்த் தூங்கும்வே,.ம்பாங்க"

விழாவை ஒட்டி ராம.சுப்பையா மலர் எனும் பெயரில் அவரின் குடும்ப போட்டோ ஆல்பம் ஒன்றை வெளியிட்டார்கள்..

ரூ100 கொடுத்து வாங்கிப் படித்துப் பார்த்த பின்னர்தான் தெரிந்தது.. சுயமரியாதையில் சாதிஒழிப்பு என்ற ஒன்றை ராம.சுப்பையா குடும்பம் கடைப்பிடிக்கவே இல்லை என்பது.... ஒரு வேளை "செட்டியார் சுயமரியாதையோ" என்னமோ?

நன்றி பின்னூட்டத்தில்
---வில்லாளன்----

Related Posts with Thumbnails