TerrorisminFocus

Showing posts with label வேதம். Show all posts
Showing posts with label வேதம். Show all posts

Friday, March 09, 2007

வேதத்தின் சாறு இது - ஊரேல்லாம் நாறுது!!

வேதத்தின் சாறு நீக்கமற எங்கும் நிரம்பியிருப்பதாக ஜடாயு(வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள்) அவர்கள் கூறியுள்ளார். அதற்க்கு உதாரணமாக அன்னை பிதா முதலான சில நற்கருத்துக்கள் சமூகத்தில் உலாவுவதை எடுத்துக்காட்டுகளாக சொல்லியுள்ளார். வேதம் முதலான பார்ப்ப்னிய குப்பைகளை நாம் ஒதுக்குகிறோம் எனில் அதன் காரணம் அவற்றில் வலியுறுத்தப்படும் நால் வர்ண கோட்பாடும் அடிப்படையற்ற கற்பனாவாதங்களுமேயாகும். மற்றபடி அந்த பெரும் குப்பையில் அன்றைய சமூகத்தின் நல் வழக்கங்களின் பிரதிபலிப்பு எதுவும் இல்லை என்ற அர்த்தத்தில் கிடையாது. அப்படியில்லாமல் இருக்கவும் முடியாது. அது போன்ற சில விசயங்களை குறிப்பிட்டே வேதங்களில் ஏதோ ஆக உயர்வாக விசயங்கள் உள்ளது என்று புனித பிம்பம் கட்ட முயல்கிறார்.

வேதத்தின் சாறு நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது என்பதற்க்கு நானும் உதாரணம் தர முடியும், சாதி வெறியன் பசும்பொன் தேவர் தனது பொறுக்கிப் ப்டை துணை கொண்டு இமானுவேல் என்ற தலித் தலைவரை கொன்றான். அதையொட்டி சாதிக் கலவரமும் நடந்தது. இன்னிலையில் ஒரு பார்ப்பன இன்ஸ்பெக்டர் தேவர் சாதியினர் இருந்த ஊருக்கு சென்று அங்கிருந்த சில கலவரக்காரர்களை போலிஸிடம் ஒப்படைகக் ஊர் பெரியவரிடம் கேட்டார். அவர்களும் ஒப்படைத்து விட்டு பின்வருமாறு சொன்னார்கள்,

"அய்யா, நீங்க அய்யமாரு, உஙக் சொல்ல நான் இன்னைக்கி கேட்டாத்தான், நாளப்பின்ன அவன் கீழ்சாதிக்காரன் என் சொல்ல கேப்பான். இத அவன்கிட்டேயும் சொல்லி மருவாதையா நடந்துக்க சொல்லுங்க" என்றார்கள் தேவர் சாதி ஊர் பெரிசுகள்.

இதுவும் வேதத்தின் சாறுதான் எங்கிருந்தது வந்தது?

இன்னொரு உதாரணம், கருவறை நுழைவு குறித்து புதிய கலாச்சாரம் பத்திரிக்கை கருத்துக் கணிப்பு நடத்தியது. அந்த கருத்துக் கணிப்பில் ஆதிக்க சாதி முதல் தாழ்த்தப்பட்ட சாதி வரை அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல, "என்ன இருந்தாலும் பிற சாதிக்காரன் கருவறைக்குள்ளாற போகலாமா? அது எப்படி புனிதமாகும்" என்று தனது சொந்த பிறப்பையே தாழ்வாக, இகழ்வாக கருதி பதில் சொன்னார்கள். இந்த அடிமைப் புத்தி எங்கிருந்து வந்தது?

இப்படி ஆயிரம் உதாரணம் அடுக்கலாம். எனக்கு மீண்டும் ஒரு சில கேள்விகள்தான் வருகின்றன. வேதம் முதலான குப்பைகளில் சாதாரண உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு என்ன பதில் உள்ளது?

வேதம் என்ற தத்துவம் பிறந்த இந்தியா சோழர் காலத்தின் முடிவிலிருந்து ஆங்கிலேயன் வரும் வரை ஒரு மந்த நிலையிலேயே இருந்த மர்மம் என்ன? பெரிதாக எதுவும் தத்துவ முயற்சிகளோ, விஞ்ஞான முயற்சிகளோ இந்த காலகட்டத்தில் இல்லையே ஏன்?

இதன் அர்த்தத்தை உங்களைப் போலவே 1+1=2 என்று பொருத்திப் பார்த்து வேதம்தான் இந்தியாவின் மோன நிலைக்குக் காராணம். எனவே அதே போன்றதொரு முட்டாள்தனத்தை மீண்டும் செய்யக் கூடாது என்று முடிவு செய்யலாமா?

வர்ணாஸ்ரம குப்பை எந்த வகையில் மிகச் சிறந்த சமூக அமைப்பு?

அது ஏன் சாதியாக திரிந்தது? எவ்வாறு இனிமேல் சாதியாக திரியாது?

சாதி ஒழிய வேதத்தில் என்ன திட்டம் உள்ளது? அல்லது இந்த இந்துத்துவ மத வெறியர்களின் சாதி ஒழிப்பு திட்டம் என்ன?

இவர்களின் அர்த்தத்தில் சாதி என்றால என்ன? அது பொருளாதார அம்சத்தில் நிலை பெற்றுள்ளது குறித்து வேதம் என்ன சொல்கிறது?

தலித் ஹத்தி பற்றி பேசும் இவர்கள் அதனை நிவர்த்தி செய்ய் என்னவிதமான பரிகாரம் சொல்கிறார்கள்? ம்ஹூம் எதுவும் கிடையாது. நரபலி நாய் மோடி ஆட்சி செய்யும் இந்துத்துவ குஜராத்தில்தான் ஒரு இந்துத்துவ வெறியன், பஜ்ரங்தள்-ன் உறுப்பினன். இவனுடைய வேலை சாதி மீறி, மதம் மீறி காதல் திருமணம் செய்த பெண்களை பிரித்து கடத்தி வருவதுதான்.நரோடா பாட்டியா எனும் குஜராத்தின் ரத்த வெள்ள கொலைக் களத்தின் கதாநாயகன் இவந்தான். இவனைப் பற்றிய கட்டுரை Frontline-ல் வந்தது(Dec 16-29, 2006 - A serial kidnapper and his `mission'). இந்துத்துவம் ஆட்சி நடத்தும் குஜராத்தில் இஸ்லாமியரிடம் காட்டிய வீரத்தில் கோடி கோடியில் ஒரு துளியை சாதிக்கு எதிராக இந்த பன்றிகள் காட்டவில்லையே? மர்மம் என்ன? ஒரு மர்மமும் கிடையாது. பார்ப்பனியம் வர்க்க, வரண இடையே ஏற்ப்பட்டுள்ள வேறுபாட்டை சரி கட்டும் விதமாக, மேல்நிலையாக்கமடைந்த பிற் சாதியினரையும் உள்ளிழுக்கும் ஜனநாயக காலகட்டம் இது. எனவே சாதியில்லை என்று சும்மா பேச்சுக்கு மட்டும் சொல்லும். செயலில் ஒரு துரும்பு கூட கிடையாது.

கேள்விகளை நாமும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறோம் மானமுள்ள(?) இவர்கள் பதில் சொல்லத்தான் வழியின்றி தவிக்கிறார்காள்.

பதில் இந்த முறையாவது சொல்வார்களா?

வாய்ப்பு நெம்ப கம்மி

சரி வேதம் குறித்து நாம் ஒரு சின்ன பார்வை பார்ப்போம். தத்துவத்தில் இரு பெரும் பிரிவுகளே உள்ளன. அவை பொருள்முதல்வாதம், சிந்தனைமுதல்வாதம் எனபன. பொருள்முதல் வாதம் என்பது பொருளே இந்த உலகில் என்றென்றைக்கும் இருந்து வருகீறது. உயிரினங்கள் தோன்றீய பிற்ப்பாடே சிந்தனை தோன்றியது என்று சொல்லுவது. சிந்தனை முதல் வாதம் என்பது பொருட்களுக்கு முன்பே சிந்தனை(கடவுள், ஜீவாத்மா, ப்ரமாத்மா) உண்டு என்பதாகும்.

சாதாரண இன்றைய இந்தியனின் கடவுள் பக்தி என்பது அடிப்படையில் அவனது பொருள் நாட்டம் குறித்த கோரிக்கைதானேயன்றி, சொர்க்கம் நரகம், பரமாத்மா என்பனவற்றின் பொருள் புரிந்த பக்தி அல்ல. இது சாராம்சத்தில் பொருள்முதல்வாத அடிப்படை கொண்டதுதான். ஏனேனில் கடவுள் பக்தி என்பதே வாழ்க்கை சிக்கல்களை கண்டு பயந்து, ஏதாவது பெரிய சக்தியின் மீது நம்பிக்கை வைத்தால்தான் மனது நிம்மதியடையும் என்று மனிதன் அடைக்கலம் அடையும் அளவே இந்த பக்தி உள்ளது. அதனால் சிந்தனைமுதல் வாதம் என்ற அம்சம் உணர்வு அடிப்படையில் கிடையாது. இந்துத்துவ வெறியோ அலல்து வேறு மத வெறியோ பிடிக்காத உங்கள் நண்பர்களிடம் அவரின் கடவுள் பக்தி குறித்துக் கேட்டால் இந்த கருத்துத்தான் வரும். 'மாப்ளே கடவுள் இருக்கா இல்லையான்னு எனக்கு தெரிஞ்சுக்க விருப்பமில்லடா. ஆனா, ஏதாவது ஒன்னுமேல் நம்பிக்கை வைச்சு பாரத்த போட்டாத்தான் மனசு நிம்மதியா இருக்கு.' என்பார்கள். சிலர் இதைக் கூட சொல்ல வெட்க்கப்பட்டு தனது அம்மா கும்பிடச் சொன்னாள் என்று பலியை அவர்கள் மீதும் போடுவார்கள்.

வெகு சொற்பமானவர்களே இதைத் தாண்டி ஆன்மா, இறப்புக்கு பிந்தைய வாழ்க்கை குறித்து தேடி இந்த சிந்தனமுதல்வாத தத்துவ பித்துக்களில் போய் சரணாகதி அடைகிறார்கள். அவர்களிலும் மிகப் பெரும்பான்மையினர் உண்டு கொழுத்து வயிறு அஜீரணக் கோளாறால தவிப்பவர்கள் அல்லது இன்றைய சூழலில் பார்ப்ப்ன மேலாதிக்கம் ஆட்டம் கண்டது கண்டு வயிறெரிபவர்கள் அல்லது பிற அரசியல், ஆதிக்க தேவைக்காக செயல்படுபவர்கள் ஆவர்.

வேதம் என்பது ஒரே வரலாற்று காலகட்டத்திற்க்கான கருத்துக்களை கொண்டது அல்ல. ரிக் வேதத்தின் 10 புத்தகங்களை எடுத்துக் கொண்டால் கடைசி இரண்டு புத்தக்ங்கள் காலத்தால் 500 வருடங்களுக்கும் மேல் பின்னால் வருகின்றன(அதாவது எட்டாவது புத்தகத்திலிருந்து). அதனால் இந்த முழு காலகட்டத்திலும் நிகழ்ந்த அனைத்து சமூக மாற்றங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும் கருத்து, தத்துவங்களை ரிக் வேதம் கொண்டுள்ளன.

புரதான பொதுவுடமை சமுதாயம் எனும் காட்டுமிராண்டி பண்பின் எச்சங்களை கொண்ட ஆரிய சமூகத்தில் வாய் வழியாக சொல்லப்பட்டு வந்ததே வேதங்கள். இந்த வேதங்களில் உணவு வேண்டி, எதிரியை நாசமாக்குவது, எதிரியை நாசமாக்கிய தலைவனை கடவுளாக கொண்டாடி என்ற அடிப்படையிலேயே பாடல்கள் ஆரம்பத்தில் இருந்திருக்கின்றன. இந்த கோரிக்கைகளை வேண்டி செய்யும் சடங்குகள் குறித்தே அவை வருகின்றன. இதனைத்தான் கர்ம காண்டம் என்கிறார்கள். இதனை(கர்ம காண்டத்தை) வலியுறுத்துவதுதான் மீமாம்சம் எனும் வேதாந்த எதிர்ப்பு தத்துவம்.

பிறகு சிந்து சமவெளி நாகரித்துடன் ஏற்ப்பட கலப்புக்கு பிறகு அரசு, தனியான ஆயுதப் படை, உழைக்கும் மக்கள் எனும் தனிப் பிரிவு, அடிமைகள், பூசாரிகள் என்று சமூகம் வர்க்க பிரிவினை கொண்டதாகிறது. வர்க்க பிரிவினைகள்தான் மனிதனை தனது பிறப்பு குறித்து சிந்திக்க தூண்டுகிறது. ஏனேனில் அவன் சக மனிதனை(தனது சொந்த இனக் குழுவிலுள்ள ஒருவனையே) அடக்கி ஆள வேண்டியுள்ளது அல்லது அடங்கி போக வேண்டியுள்ளது. இதற்க்கு முந்தைய பிறப்பின் மீதோ அல்லது அவனை அவ்வாறு பிறக்க வைத்த கடவுள் மீதோ பலி போட்டுத்தான் தார்மீக கட்டுப்பாட்டை நிலை நிறுத்த வேண்டியுள்ளது (அட சக்கிலியானா பொறக்கனும்னு ஆண்டவ்ன் தலைல எழுதிருகான். நாம அந்த கடமையைத்தான் சாமி செய்யனும்).

இதுவே முதல் முறையாக எதிரியைக் கொல்வது, உணவு உள்ளிட்ட பொருள்முதல்வாத சிந்தனையிலிருந்து மாறுபட்டு, பிறப்பு, இறப்பு, ஆன்மா முதலான சிந்தனாமுதல்வாத கருத்துக்கள் குறித்து சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்ப்படுத்திய சமூக பொருளாதார சூழ்நிலையாகும். இதே காலகட்டத்தில்தான் வேதங்கள் எழுத்து வடிவம் மேற்கொள்கிறது. எனவே முந்தைய சமூகத்தின் கர்ம காண்ட அம்சங்களுடன் ஆன்மா குறித்த ஆய்வுகளின் ஆரம்ப கூறுகளை உடைய பாடல்களும் ரிக் வேதத்தில் இடம்பெறூகின்றன.

இது வளர்ச்சியுற்று, வர்க்க பிரிவினைகள் முற்றும் பொழுது பல்வேறு தத்துவ குழ்ப்பங்கள் ஏற்ப்படுகின்றன. வர்க்க முரன்பாடுகளை மயக்குமுறச் செய்ய ஏதுவாக ஆன்மா குறித்த தத்துவம் இன்னும் ஆழமான தத்துவ வியாக்கியானங்களைக் கொண்டதாக இருந்தால்தான் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியும் என்ற நிலை. அதுவே யோக கண்டம் எனப்படும் வேதாந்தம். இதே காலகட்டத்தில்தான் இந்த வரக்க பிரிவினையின் வீச்சுக்கேற்றாற் போன்று பல்வேறு தத்துவங்கள் பிறக்கின்றன. வேதத்தை கண்மூடித்தனமாக பின்பற்றும், வேத சொற்களின் அர்த்தம் கால காலத்திற்க்கும் ஒரே அர்த்தமே தரும் என்று சொல்லும் மீமாம்சம், பார்ப்பனர்களை எதிர்த்த, கடவுளை மறுத்த சுத்தமான அஞ்ஞான பொருள்முதல்வாதமாகிய சாருவாகம், வேத மறுப்பு பௌத்தம், சமணம், பொருளூமுதல்வாத அடிப்படை கொண்ட சாங்கியம் (பிறகு இதன் 24 தாதுக்களில் 25 ஆக ஒன்றை சேர்த்து அந்த புருஷ்னுக்கு சக்தி கொடுத்து ஆன்மீகவாதமாக திரித்துவிட்டார்கள் என்பதிருக்க), இது தவிர்த்து இன்னும் சில தத்துவங்கள் உருவாகின்றன.

ஆக, இப்படி சமூக வளர்ச்சிப் போக்கின் அடிப்படையில்தான், சமூகத்தின் பொருளாதார தேவையின் அழுத்தம் மனதில் ஏற்ப்படுத்தும் விளைவுதான் தத்துவ வளர்ச்சிக்கு அடிபப்டையாக இருக்கீறது. இந்த வரலாற்று பார்வையில்லாத முட்டாள் பயல்கள்தான் வேத்த்தில் எல்லாம் உள்ளது என்று அதில் உள்ள கால முரன்பாடுடன்களுடன் கூடிய பல்வேறூ கருத்துக்களை சொல்லி புனித பிம்பம் கட்ட முயல்கிறார்கள்.

அதன் நடைமுறைப் பய்ன்பாடு குறித்துக் கேட்டால் வாய் மூடி செல்கிறார்கள்.

இவர்களின் முட்டாள்தனத்திற்க்கு ஒரு உதாரணம், நவீன தொழிற்நுட்பத்தின் உதவியால் பல அடுக்கு மாடிகளை கட்டிக் கொண்டிருக்கும் பொழுது, பழைய உற்பத்தி முறையின் துனையால் ராமர் கோயிலை வருடக் கணக்கில் கட்டிக் கொண்டிருக்கிறார்களே அது ஒன்று போதும். புனிதம் என்பதால் ஆயிரம் வருட பழைய பன்றிச் சாணத்தை ஊறுகாயாக தொட்டுக் கொள்ள முடியாது.

அசுரன்

Related Article:

Related Posts with Thumbnails