TerrorisminFocus

Showing posts with label சிபிஎம். Show all posts
Showing posts with label சிபிஎம். Show all posts

Tuesday, December 06, 2011

அகண்ட பாரதம் பேசும் ஆர் எஸ் எஸ் சொறிநாய்கள் முல்லைப் பெரியாறு என்றால் மூடிக் கொண்டு போவதேன்?


யப்பனை தரிசிக்கச் சென்ற தமிழக பக்தர்கள் கேரளாவில் தாக்கப்பட்டுள்ளார்கள். தாக்கியவர்களை தண்டிக்க ஐயப்பன் அவதாரம் எடுத்து வரவேண்டாம், குறைந்த பட்சம் இந்துக்களுக்கு, இந்து ராஜ்யம் காண அகண்ட பாரதம் பேசும் ஆர் எஸ் எஸ் அடிமடையர்களாவது குரல் கொடுத்திருக்க வேண்டாமா?கொடுக்கவில்லையே? ஏன்? இவர்களின் அகண்ட பாரதத்தில் தமிழர்களுக்கு இடமில்லையா? அல்லது கேரளாவில் தமிழர்களை தாக்கியதே ஆர் எஸ் எஸ் கோமாண்டிகள் என்பதால் வாயை மூடிக் கொண்டார்களா?

‘இந்து’ பக்தர்களை தாக்கியவர்களை எதிர்க்க வக்கற்ற இந்த சொறிநாய்கள் பாபர் மசூதி இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டு என்று ஆர்பாட்டம் செய்து கைதாகியுள்ளனர். ‘இந்து’ தமிழ் பக்தர்களின் வழிபடும் உரிமையை தடுத்ததை எதிர்க்க வக்கற்றவர்கள் சிரிரங்கம் பார்ப்பனர்களின் வர்ணாஸ்ரம் கொழுப்பேறிய கோயில் உலா சடங்கிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுகின்றனர். ஆக, ஆர் எஸ் எஸ்ன் அகண்ட பாரத கோமனத்தின் அடிமடி ஓட்டையிலே கேரள முல்லை பெரியாறு கிழிந்து தொங்குகிறது அதை மூடி மறைக்கக் கூட முயற்சி செய்யாமல் மதவெறி, சாதி வெறி பேசி வளம் வருகிறார்கள் சொறிநாய்கள்.

இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டியுள்ளது. கேரளாவில் வாழும் தமிழர்களையோ அல்லது தமிழகத்தில் வாழும் கேரள மக்களையோ யாரும் தாக்கவில்லை. சாதாரண மக்கள் பல்வேறு சமூக நடவடிக்கைகளின் ஊடாக மொழி, இன, மத பேதமின்றி இயல்பாக பழகியே வருகிறார்கள். இவற்றை உடைத்து ஒரு மோதல் நடக்க வேண்டுமென்றால் அது அமைப்பு வழிப்பட்ட முறையினால் மட்டும்தான் நடக்க இயலும். அப்படித்தான் குஜராத்-ஒரிஸ்ஸா-மும்பை இனவெறி தாக்குதல்களாகட்டும், அல்லது காங்கிரசு நடத்திய பஞ்சாப் படுகொலைகளாகட்டும் நடந்துள்ளன.

அத்தகைய அமைப்புகளாக அங்கு மொழி வெறி கிளப்பி சதி வேலைகள் செய்வதில் முன்னணியில் இருப்பவர்கள் ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும், காங்கிரசும். இவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சி பி எம்மு மொழி வெறி கிளப்பி வருகிறது. தமக்கு வோட்டுப் பொறுக்க வசதியான கேரளாவில் மொழி வெறி கிளப்பி தமிழர்களை தாக்கும் இக்கட்சிகள், இங்கு தமிழர்களின் நலன் என்று ராமர் கோயிலையும், கூடங்குளம் அணு உலையையும் முன்னிறுத்தி ஏய்க்கின்றனர்.

மதவெறியும், சாதிவெறியும், மொழி வெறியும் தான் ஆர் எஸ் எஸ் போன்ற இக்கட்சிகளின் மூலமந்திரம். மக்களை பிரித்து ஏய்க்க இது போல தகிடு தத்தம் செய்யும் தேசிய கட்சிகளையும், மத வெறி பயங்கரவாதிகளையும் ஆப்படித்து அடித்து விரட்டினால் மட்டும்தான் முல்லை பெரியாறு விசயத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியும். அதை செய்ய முதுகெலும்புள்ளவர்கள் அணி திரள வேண்டியுள்ளது.

அசுரன்

முல்லைப் பெரியாறு: காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்களை முறியடிப்போம்!

முல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ!

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று கேரள அரசு வழக்கறிஞர் அறிக்கை

Mullai Periyaru – Environmental impact of Dams and Kerals’s PR Machine

Thursday, July 15, 2010

ஏரியா பிரிக்க அடித்துக் கொள்ளும் சிபிஎம் குண்டர் படை!!

'CPM = Corporate Party of Murderers'



நன்றி டைம்ஸ் ஆப் இந்தியா

நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட விடியோ படத்தில் மேற்கு வங்க சிபிஎம், திரிணாமூல் காங்கிரஸ் கு(தொ)ண்டர்கள் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு சகிதம் மோதிக் கொண்டது காட்சிப்படுத்தப்பட்டது. ராஜாக்கள் தங்களுக்குள் ஏரியா பிரிக்க சண்டையிடுவது போல மேற்கு வங்கத்தில் சிபிஎம் ரவுடிப் படை தமது ஏரியாக்களை மீட்டுக் கொள்வதற்கு ராணுவ முற்றுகை போல சண்டையிடுகிறார்கள்.

ஏற்கனவே லால்கர், நந்திகிராம் பகுதிகளில் சிபிஎம் ரவுடிப் படைகளின் இத்தகைய தாக்குதல்கள் நடந்துள்ளது குறித்தும் அவற்றில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்தும் முன்பு அம்பலமான போதெல்லாம் யோக்கியன் வேசம் போட்டனர் சிபிஎம் அல்லக்கைகள். இன்றோ விடியோ ஆதாரமாகவே இவை வெளிவந்துள்ளன. மேற்கு வங்கத்தில் சிபிஎம்யை எதிர்க்க வேண்டுமெனில் ஆயுதம் தாங்க வேண்டும் என்பதே நிதர்சனமாக உள்ளது தெரிய வருகிறது. இதுதான் முற்போக்கு சிபிஎம் மேற்கு வங்கத்தில் செய்த சாதனையாகும். இன்னொரு சாதனை ஆப்பிரிக்காவின் மிக வறிய 26 நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிக தொகையில் வறுமையில் வாடும் மக்களைக் கொண்ட 8 மாநிலங்களின் ஒன்றாக மேற்கு வங்கம் தகுதி பெற்றது ஆகும்.

வாழ்க போலி ஜனநாயகம், வாழ்க போலி கம்யூனிசம், வளர்க பிழைப்புவாதம்

அசுரன்

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM!!

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

விழுப்புரத்தில் விவிமு தோழர்களை வெட்டிப் படுகொலை செய்த பாசிச CPM

உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வதற்கு அரிவாள்! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு பூட்டை உடைப்பதற்குச் சுத்தியல்!

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல், CPMன் தோல்வி, ரவுடியிசம், உத்தபுரம்


கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!!!


லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

Monday, July 12, 2010

கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!!!

டைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். யார் இந்த கோவிந்சாமி? திருப்பூர் சி பி எம் கட்சியின் எம் எல் ஏதான் இந்த கோவிந்சாமி. பின்னலாடை நிறுவனத்தின் முதலாளி என்பது உபதொழில்.

எதற்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்? இதுக்கு முன்ன திருப்பூர் முதலாளிகளுக்கு தொழிலாளர் நலச் சட்டக் கெடுபிடிகளிலிருந்து சலுகை வாங்கித் தருவதாக சொல்லி அவர்களிடம் வசூல் வேட்டை நடத்தி மாட்டிக்கொண்டதால் அவர் நீக்கப்பட்டாரா? இல்லை. திமுகவிற்கு பாராட்டு விழா நடத்த முற்பட்ட குற்றத்திற்காகவே நீக்கப்பட்டுள்ளார்.

அப்போ இதுவரை அவர் திருப்பூர் முதலாளிகளுக்கு கோவணம் கட்டியதற்கு? தோழரே சி பி எம் ஒரு கம்யூனிஸ்டு கட்சியல்ல என்று சி பி எம்முக்கே தெரியும் என்பதால் முதலாளிகளுக்கு கோவணம் கட்டிய குற்றத்திற்கெல்லாம் கட்சியிலிருந்து நீக்க மாட்டோம். அப்படி நீக்குவதாயிருந்தால் செத்துப் போன ஜோதிபாசுவிலிருந்து இன்றைய கரத் வரைக்கும் மொத்த கட்சியையும் நீக்க வேண்டியிருக்கும், எனவே, எங்களது எதிர்கட்சிக்கு கோவணம் கட்டினால் மட்டுமே நீக்குவோம் என்று ஒரு மனசாட்சியின் குரல் கேட்கிறது….. எங்கேயோ கேட்ட குரல்….

சிபிஎம்-ன் பரிணாம வளர்ச்சி - படங்கள் நன்றி கலகம்:








திமுக அரசுக்குப் பாராட்டு விழா-சிபிஎம்மிலிருந்து கோவிந்தசாமி எம்.எல்.ஏ நீக்கம்

ஓவர் டூ திருப்பூர் கோவிந்சாமி:

சி.பி.எம்: புரோக்கர்களின் புகலிடம்
புதிய ஜனநாயகம் 2008

சி.பி.எம். கட்சியின் திருப்பூர் எம்.எல்.ஏ.வான கோவிந்தசாமி, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளி. திருப்பூரில் முதலாளிகள் வசிக்கும் அமர்ஜோதி கார்டன் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் கட்டியுள்ள கோடீசுவரர். ""பாட்டாளிகளின் தோழர்'' என்று இவரை சி.பி.எம். கட்சியினர் சித்தரித்தாலும், கோடீசுவர கோவிந்தசாமியின் வர்க்கப் பாசம் எப்போதுமே முதலாளிகள் பக்கம்தான்.


எட்டு மணி நேரத்துக்கு மேல் ஒரு தொழிலாளியை வேலை வாங்கக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், திருப்பூரில் இச்சட்டமெல்லாம் செல்லுபடியாகாது. இச்சட்ட விரோதக் கொத்தடிமைத்தனத்தைத் தடுப்பது என்ற பெயரில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது தொழிற்கூடங்களில் திடீர் சோதனை நடத்திப் பீதியூட்டுவதும், உரிய "கவனிப்பு'க்குப் பின் இச்சட்டவிரோதச் செயலைக் கண்டும் காணாமல் இருப்பதும் இங்கு வாடிக்கையாக நடக்கிறது.


தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் "தொல்லை'யிலிருந்து முதலாளிகள் நிரந்தரமாக விடுபட, தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அன்பரசனிடம் பேசுவதாகவும், அமைச்சருக்கு ஒவ்வொரு கம்பெனியும் ஒரு லட்ச ரூபாய் வீதம் கொடுக்குமாறும் சி.பி.எம். எல்.எல்.ஏ. கோவிந்தசாமி திருப்பூர் பனியன் கம்பெனிமுதலாளிகளிடம் பேரம் பேசி வசூல் வேட்டை நடத்தியுள்ளார். முதலாளிகளில் சிலரை அழைத்துக் கொண்டு அமைச்சரிடமும் பேசியுள்ளார். அதன் பின்னரும் அதிகாரிகளின் ரெய்டுகளும் "தொல்லை'களும் தொடரவே, முதலாளிகள் இதுபற்றி தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரித்தபோது, வசூலித்த பணம் அமைச்சருக்குப் போய்ச் சேரவில்லை என்பதையும், கோவிந்தசாமியே அதை அமுக்கி விட்டதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே சி.பி.எம். கட்சித் தலைமையிடம் புகார் செய்தனர்.


கட்சித் தலைமை இதுபற்றி விசாரித்ததில், கோவிந்தசாமியின் புரோக்கர் வேலையும் கையாடலும் நிரூபணமானதால், வேறு வழியின்றி சி.பி.எம். கட்சியின் சட்டமன்றப் பேரவைத் தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கிவிட்டு, திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரான பாலபாரதியை அப்பதவிக்கு நியமித்துள்ளது. சி.பி.எம். கட்சியின் மாநிலக் குழுவிலிருந்தும் கோவிந்தசாமி நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணத்தை கட்சி அணிகளிடமும் மக்களிடமும் விளக்காமல், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் கோவிந்தசாமி இப்பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சி.பி.எம். கட்சித் தலைமை பூசி மெழுகுகிறது.


இதுதவிர, கைத்தறி விற்பனைக்காக அரசு தரும் ஊக்கத் தொகையில் சுமார் 40 கோடிக்கு மேல் பொய்க்கணக்கு எழுதி தமிழக அமைச்சர் ராஜா சுருட்டியதாகவும், இதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து மாநில அரசிடம் கேள்வி எழுப்ப, தனக்குச் சாதகமான தணிக்கையாளரை நியமிக்குமாறு முதல்வர் கருணாநிதியிடம் பேசுமாறு அமைச்சர் ராஜா, கோவிந்தசாமியைத் தூது அனுப்பியதாகவும், இந்த புரோக்கர் வேலைக்காக கோவிந்தசாமிக்கு உரிய கமிஷன் தரப்பட்டதாகவும் செய்திகள் மெதுவாகக் கசிந்துள்ளன.


திருப்பூரில் கொத்தடிமைகளாக உழலும் தொழிலாளிகளின் அவலத்தைப் போக்க இந்த எம்.எல்.ஏ. அமைச்சரிடம் பேசவில்லை. எட்டுமணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கும் முதலாளிகளின் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராகப் போராடவுமில்லை. மாறாக, தனது வர்க்கப் பாசத்தோடு முதலாளிகளின் கோரிக்கைகளுக்காக ""ரேட்'' வைத்து பேரம் பேச்சுவார்த்தை நடத்துகிறார் இந்த "காம்ரேடு'.


திருப்பூர் எம்.எல்.ஏ.வின் யோக்கியதை இப்படியிருக்க, கோவையில் நில மோசடி செய்து அம்பலப்பட்டு வழக்கு மன்றத்துக்கு நடந்து கொண்டிருக்கிறார் சி.பி.எம். கட்சியின் கவுன்சிலரான பத்மனாபன். இவர் நிலங்களை வாங்கி அவற்றை வீட்டுமனைகளாக்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வரும் லட்சாதிபதி. கோவை வடக்கு மண்டலத் தலைவராக உள்ள இவர், மூன்று முறை கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முக்கியப் புள்ளி.


கோவை அருகே காளப்பட்டியிலுள்ள மருதாசலம் என்பவரது நிலத்தை வீட்டுமனைகளாக்கி விற்றுத் தருவதாகக் கூறி, தன் பெயருக்கு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொண்டு, சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்டி தன் பெயரிலும் தனது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரிலும் கிரய சாசனம் செய்து கொண்டு, மனைகளைப் பல லட்சங்களுக்கு விற்று மருதாசலத்தை மோசடி செய்துள்ளார் பத்மனாமன். இதற்கெதிராக மருதாசலம் வழக்குத் தொடுக்க, பத்மனாபன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் வழக்கு மன்றத்துக்கு நடந்து கொண்டிருக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிக்காரரே இப்படி மோசடியில் ஈடுபட்டதைக் கண்டு கோவை நகர மக்களே காறி உமிழ்கின்றனர். ஆனாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது, சி.பி.எம். கட்சித் தலைமை.


சி.பி.எம். கட்சிக்குள் இன்னும் ஏராளமான கோவிந்தசாமிகளும் பத்மனாபன்களும் தலைவர்களாகவும், பிரமுகர்களாகவும் உள்ளனர். இத்தகையோர் மீது பாரதூரமாக நடவடிக்கை எடுத்தால் கட்சியே கலகலத்துப் போய் விடும் என்று கட்சித் தலைமை அஞ்சுகிறது. எனவேதான், குறிப்பிட்ட வரம்புக்கு மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் கட்சித் தலைமை தடுமாறுகிறது.


மே.வங்கம் சிங்கூர் நந்திகிராமத்தில் மக்கள் மீதே பயங்கரவாத வெறியாட்டம்; சமூக விரோதிகளே கட்சியின் பிரமுகர்கள்; முதலாளிகளும் ஊழல் பெருச்சாளிகளுமே உள்ளூர் தலைவர்கள் என்று சீரழிவில் புதிய பரிமாணத்தை எட்டி மே.வங்க சி.பி.எம். கட்சி "புரட்சி' செய்து கொண்டிருக்கிறது. அதையும் விஞ்சும் வகையில் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது, தமிழக சி.பி.எம். கட்சி.

· தனபால்

அசுரன்

மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத்சிங்கும்!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

கம்முனுஸ்டு மிஸ்டர் மீட்டிங்கு, ஈழப் பிரச்சினைக்கு தீர்வு சொல்றாருடோய்…. !!!

லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!

நண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்!!!

Sunday, January 24, 2010

தோழர் சந்திப்பு என்ற செல்வபெருமாளுக்கு அஞ்சலி

தோழர் சந்திப்பு என்ற செல்வபெருமாள் அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். கான்சருடன் போராடிக் கொண்டுதான் வலைப்பூக்களில் அவர் செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்பது அவரது ஈடுப்பாட்டைக் காட்டுகிறது.

சமீப வருடங்களில் அவர் எழுதுவதை குறைத்துக் கொண்டதை இயல்பாக ஒரு பதிவரின் பதிவு வாழ்கையில் ஏற்படும் பின்னடைவை போன்ற ஒன்று என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவரது பின்னடைவுக்குப் பின்னால் அவரது உடல்நலக் குறைவு இருக்கும் என்பதையோ, அது குறித்த அவரது புலம்பல்களின் சிறு சலனத்தை கூட தனது எழுத்துக்களில் அவர் காட்டியதில்லை என்பதையோ நினைத்துப் பார்க்கும் பொழுது அவரது இழப்பின் வருத்தம் அதிகரிக்கிறது.

இது போன்ற தோழர்களின் விடா முயற்சியும், ஈடுபாடும், சமூக உணர்வும், தியாகங்களும் நந்திகிராம்களையும், சிங்கூர்களையும், கிரீன் ஹண்டுகளையும் நியாயப்படுத்த பயன்படுத்தும் சிபிஎம் கட்சியின் மோசடியை முறியடிக்கும் கடமையை இன்னும் விரிவாகச் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கிறது.

அவர் ஏற்றுக் கொண்டு நடந்த பாதை தவறானது என்றாலும் அதன் இலக்காக ஒரு கம்யுனிச சமூகம் அமைக்கின்ற கனவையே கருவாக்கிச் சுமந்தார். இதில் அவர் பின்வாங்கியதில்லை. இதுவே எம்மை அவருடன் இணைத்த புள்ளி.
வலைப்பூக்களில் நான் எழுத வந்த ஆரம்ப காலங்களில் எம்மை அங்கீகரித்த மிக சொற்பமான சிலரில் அவர் ஒருவர். அவ்வாறு அவர் அங்கீகரித்த இடத்திலும் எம்மை இந்தப் புள்ளி இணைத்தது.

அவருடன் பல்வேறு விவாதங்கள், மிகக் கடுமையான கருத்து முரன்பாடுகள் கடந்த சில வருடங்களில் நிகழ்ந்துள்ளன. இவை ஒவ்வொன்றிலும் அவர் ஆக எதிர்திசையிலேயேதான் பிராயணித்துச் சென்றார். கடைசிக் கட்டங்களில் நிகழ்ந்த விவாதங்களில் முற்றிலும் கோட்பாடற்ற எதிர்வினைகளை செய்யும் நிலைக்கும் சென்றார்.

ஆனால், இவையனைத்துமே அவர் சார்ந்த கட்சி அவரை பயன்படுத்திக் கொண்டு அவரது கனவுகளை சுரண்டுவது குறித்த கோபத்தையே என்னிடம் ஏற்படுத்தின. தாம் சார்ந்துள்ள கட்சிக்கு நேர்மையாக அந்தக் கட்சியின் கருத்துக்களை - அவை மோசடியானவை என்றாலும் - நிலைநிறுத்தும் ஒரே உத்வேகம் மட்டுமே அவருக்கு துணை நிற்க அவர் எம்முடன் தனியாகப் போராடியுள்ளார். இதுதான் அவர் மீதான மதிப்பை அதிகரிக்கச் செய்தது. இதுதான் ஒருவர் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம். இத்தகைய போராட்டத்தை அவர், தான் சார்ந்த கட்சிக்குள் நடத்தியிருந்தால்? இத்தகைய கேள்விகளை கேள்வியாகவே தவிக்க விட்டுச் சென்று விட்டார் தோழர் சந்திப்பு.

தோழர் செல்வபெருமாளுக்கு எனது அஞ்சலி

அசுரன்

Related Posts with Thumbnails