TerrorisminFocus

Wednesday, July 18, 2007

சுஜாதா என்ற சில்லறை பொறுக்கி!

ண்டை முழுக்க அறிவு பொங்கி காது வழியாக வழிந்து பாரத் எலெக்றானிக்ஸ் நிறுவனத்தின் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இந்திய நிறுவனமான அதை இண்டெல் போன்ற ஜூஜூபி கம்பெனிகளுடன் மோத விட்ட ரங்கராஜன் எனும் திருநாமத்தை (அது யூ வா ஒய்யா என்பது ஆய்வுக்குரியது) உடைய சுஜாதா எனும் மாபெரும் புத்திசாலி சிவாஜி படத்தில் எழுதி இருக்கும் வஜனம்:

ரஜினிகாந்த்திற்க்கு எதிர் பாத்திரமான வில்லன் ஆதி ஸ்டைலாக ரஜினியை
நோக்கி சொல்கிறார் "டேய்! நான் ஆதி..ய்ய்ய்ய்" என்று. உடனே உடனிருக்கும் நடிகர் விவேக்கோ "போடா..." என அடுத்து வாயைத் திறக்கும் முன் ரஜினி அவரின் வாயைப் பொத்தி விடுகிறார்.

உடனே "போடா கபோதின்னு சொல்ல வந்தேன்ப்பா" என்கிறார் விவேக்.

*********************

சுஜாதா எனும் சிரீரங்கம் ரங்கராஜன் எனும் விஞ்ஞானியைப் பாராட்டுவோம் வாரீர்!!வயசாயிருச்சின்னா புத்தி மங்கிப் போயிரும் என்று சொல்வார்கள். அது போன்று சொல்வது தவறு என்று சுஜாதா நிரூபிக்கிறார். வயசான பிற்பாடுதான் இவர் புத்தி மழுங்கி இப்படி எழுதுகிறார் என்று யாரேனும் எண்ணினால் அதை பொய்யென்று சொல்லி நாங்கெல்லாம் எழுதத் துவங்கிய காலத்தில் இருந்தே வக்கிரமாக எழுதிவருகிறோம் என்கிறார். அதுவும் குறிப்பாக வெகு சனங்களின் பொதுப் புத்தியில் இருக்கும் கசடுகளை ஊக்குவித்து வியாபாரம் செய்பவர்களில் இது போன்ற கழிசடைகள் வெகு திறமையானவர்களாக இருக்கிறார்கள். ஆணாதிக்கம் என்பது இயல்பாக நமது ஒவ்வொரு நடவடிக்கைகளிலும், சொற்களிலும் வெளிபடுகிறது. இன்றைக்கு பெண்களின் சம உரிமை குறித்து பேசும் யுகத்தில் இருக்கும் நாம் ஆணாதிக்க வக்கிரங்களை நமது நடைமுறையிலிருந்து நீக்குவதே சரியாக இருக்கும். அல்லது குறைந்த பட்சம் பொதுவில் நிலவுகின்ற ஆணாதிக்க
வக்கிரங்களை ஊக்குவிப்பதோ அல்லது அது நியாயமானது, அதுதான் பொதுவாக நிலவும் பண்பாடு என்று சொல்வதோ போன்ற சீர்குலைவு நடவடிக்கைகளாவது நிறுத்திக் கொள்வதே சரி.

சுஜாதாவோ தமது கல்லாவை நிரப்பிக் கொள்வதற்க்கு பொதுப் புத்தியில் படிந்த இந்த பலஹீனங்களை பயன்படுத்திக் கொள்கிறார். இவரின் கழிசடைத்தனம் கொஞ்சம் நாகரிகமான கழிசடைத்தனமாக இருப்பது இன்னும் வீரியமான சமூக விரோத சக்தியாக இவரை மாற்றி விடுகிறது. வாரமலர் கிசு கிசு போன்ற படித்த நடுத்தர வர்க்கம் அருவெறுப்போடு ஒதுக்கும் தரத்திலில்லாமல் கொஞ்சம் உயர்ந்த ப்ளேபாய் தரத்தில் எழுதுவதற்க்காக மட்டுமே இவர் போன்றவர்களுக்கு இலக்கிய வாசிப்பனுபவங்கள் உதவுகின்றன. இது தவிர்த்து சில மேட்டுக் குடி தடித்தனங்களை நியாயப்படுத்தும் தர்க்கங்களையும் வெகு நைச்சியாக தமது
எழுத்தின் ஊடாக வாசகனின் மூளைக்குள் செலுத்தும் திறமைக்காகவும் இவர்களின் இலக்கிய வாசிப்பனுபவம் கை கொடுக்கிறது.


இவர் பெண்களை இழிவுபடுத்தி எழுதுவதற்கு இவரது கணேஷ் வசந்த்
கதாபாத்திரங்களே சாட்சி. தண்ணீர் கொட்டிய சேலையுடன் கண்ணீர் சிந்தி
விம்மி விம்மி விசனப்படும் அபலை பெண்ணை எப்படி ரசிப்பது என்று இவரது வசந்த் நமக்கு சொல்லித் தருகிறார். இது ஒரு சாம்பிள் மட்டுமே. படிக்கும் வாசகனுக்குள் ஜேம்ஸ்பாண்டுகளும், ஆங்கிலப் பட டேம்செல் இன்
டிஸ்டெரஸ் (Damsel in Distress) எபெகக்டும் தமிழ் மொழியிலேயே கிடைத்து
விடுகிறது. இழிவான சிந்தனைவயப்பட்டோமே என்ற குற்றவுணர்வுக்கு ஆட்படும் தேவையும் இல்லாமல் இவரது எழுத்து நடை செய்து விடுகிறது.

இவரது வக்கிரத்திற்க்கு கீழே இன்னொரு சான்று உள்ளது படித்து பாருங்கள்:

விக்ரம் படம் வெளிவருவதற்கு முன் அதைக் குமுதம் இதழில் தொடராக
எழுதிவந்தார் சுஜாதா. அதில் கணேஷ் இன்னொரு பெண்ணிடம் பேசும் வசனம்.

"ஆணும் பெண்ணும் சமமெல்லாம் கிடையாது. நாங்களெல்லாம் நின்னுக்கிட்டே சுவரில் மூத்திரம் அடிப்போம்"

இந்த மூத்திர வசனத்திற்கு சுஜாதாவிற்கு எந்த இடத்தில் டைனமட் வைப்பது என்று பெண்கள்தான் முடிவுசெய்யவேண்டும் என்று கோபப்பட்டு எழுதுகிறார் சுகுணா திவாகர் என்ற எழுத்தாளர். இங்கு உண்மையிலேயே வக்கிரமாக எழுதிய சுஜாதாவின் எழுத்து படித்த மேல்தட்டு ஆட்களால் புகழ்ப்படுவதும் அதிலிருந்த வக்கிரத்தை கடுமையாக விமர்சித்து எழுதிய சுகுணா திவாகரின் எழுத்து சீ... இப்படி மோசமாக எழுதுறானே என்று தூற்றப்படுவதற்கும் அடிப்படையாக இருக்கும் உளவியல் என்னவென்பதை அவரவரே பரீசீலித்துக் கொள்ளட்டும். எனக்கென்னவோ சுகுணா திவாகர் இன்னும் மோசமாக திட்டி எழுதியிருந்தால் கூட சரியே என்று படுகிறது.

இவரது பிற சேவைகள் என்ன என்று பார்த்தால் பாய்ஸ் படம் இவரது
வக்கிரங்கள் எல்லாவற்றையும் தொகுத்து கொடுத்த படமாக நிற்கிறது. அந்த
படத்தில் பொடா சட்டம் பற்றி எழுதி கிழித்திருப்பார் சுஜாதா. அதான் அவர்
அதிமேதாவியாயிற்றே என்று ரசிக சிஸ்ய கோடிகளும் புழங்காகிதப்பட்டிருப்பார்கள். இதே சுஜாதா நக்கீரன் கோபால் பொடா
சட்டத்தில் கைது செய்யப்பட்ட பொழுது அதனை எதிர்த்து பத்திரிகையாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது பொடா குறித்து நேக்கு எதுவும் தெரியாது என்று கூறி பேச மறுத்த பொழுது அவரது அறிவுப்புலமை தொலைந்து போன இடம் தெரியவில்லை. அது அறிவு நாணயமற்றவர்களின் காரியப் பூர்வமான கள்ளமௌனம் ஆகும்.

இது தவிர்த்து அதே பாய்ஸ் படத்தில் விபச்சாரியுடன் சல்லாபம் செய்யும்
காட்சியில் வரும் வசனங்கள், பெண்ணின் மார்புகளை பெரிதாக்கும் வித்தைகளை சொல்லும் வசனங்கள் என்று கிளை பரப்பி சென்றது அவரது வக்கிரம். ரொம்ப சோசியலாக பழகுகிறார்களாம் இன்றைய மாணவர்கள். நமக்கு தெரிந்து பள்ளி கல்லூரிகளில் பழகும் மாணவ மாணவிகள் எல்லாம் பொதுவாக பேசி கலந்து கொள்வதுதான் நடக்கிறதே அன்றி இவர் சொல்வது போல எப்போ பார்த்தாலும் செக்ஸ் சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டுமே பகிர்ந்து கொண்டிருப்பதில்லை. ஆயினும் அது போன்ற அடி மனது குறு குறுப்புகளை குற்றவுணர்வின்றி செயல்படுத்த தார்மீக பலம் கொடுக்கும் வேலையை தனது எழுத்து சேவையின் மூலம் செய்கிறார். இயல்பான பால் கடந்த நட்புணர்வு என்று ஏதேனும் இருந்தால் கூட அதனை இயல்பற்றதாக மாற்றி இழிவுபடுத்த தேவையான கருத்தியல் களைகளை விதைக்கும் வேலையை இவரது எழுத்துக்கள் உறுதிப்படுத்துகீறது. இதில் Easy Money வேறு. இந்த இழவைத்தான் அறிவு ஜீவித்தனம் என்று சொல்கிறார்கள் பல நடுத்தர வர்க்க வாசகர்கள்.

இவரது அறிவுஜீவித்தனத்தின் இன்னொரு முக்கிய அம்சம் அடிக்கடி புரியாத
ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்பு வார்த்தைகளை போட்டு எழுதும் இவரது பாணி. இதில் மயங்கித்தான் நடுத்தர வர்க்க வாசகர்கள் இவரைப் போன்ற
அரைகுறைகளின் வார்த்தைகளிலிருந்து தமது உலக அறிவை வளர்த்துக் கொள்ள முயல்கீறார்கள். இப்படி ஒரு பகுத்தறிவற்ற அறியாமையின்பாற்ப்பட்ட வாசகன் - எழுத்தாளன் உறவினுடைய ஆபத்தின் ஒரு அம்சம்தான் அவரது சமூக விரோத, ஆணாதிக்கம் உள்ளிட்ட பிற வக்கிரமான எழுத்துகள் வாசகனிடம் ஏற்படுத்தும் விளைவு.

சரி வேறு என்ன விளைவுகள் உள்ளன? அவரை அரைகுறை என்று விமர்சனம் செய்யும் போது அவரது அரைகுறை புலமை வாசகனிடம் கொண்டு செல்லும் தவறான வரலாற்று, அறிவியல் விசயங்களை முன்னிட்டே அவ்வாறு விமர்சிக்கிறோம். ஏனேனில் வெகு சன பத்திரிக்கைகள் இவர் சொல்லும் அரைகுறைகளுக்கு வலுவான மறுப்புகள் அதே வெகு சன பத்திரிக்கைகளில் பிரசூரமாவதில்லை. இவரது அரைகுறை அறிவின் விளைவுக்கு ஒரு எடுத்துக்காட்டு சமீபத்தில் மரபணு ஆராய்ச்சி என்பது ஆரியர்கள் என்ற கருத்தாக்கத்தை இல்லையென்றாக்கிவிட்டது என்று ஆனந்த விகடனில் எழுதிய புரளி ஆகும்.

உண்மை என்னவெனில் ஆரியர் என்ற இனக் குழு இந்தியாவிற்குள் வந்ததில் வரலாற்று, தொல்லியல் ஆய்வாளர்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு எல்லாம் ஆரியருக்கு முன்பு
இங்கிருந்த நாகரிகம் திராவிட நாகரிகமா என்பதிலும், அந்த நாகரிகத்தை
ஆரியர்கள் அழித்தனரா அல்லது அந்த நாகரிகத்துடன் கலந்து ஒன்றாகினரா
என்பதிலுமே கருத்து வேறுபாடு. அதாவது அவர்களின் கருத்து வேறுபாடு
எல்லாம் திராவிடம் குறித்த விசயங்களில்தானேயொழிய ஆரியர் குறித்த
விசயத்தில் அல்ல.

அப்படியிருக்கையில் பொதுவாக மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த விசயங்களை வெளிக் கொணர செய்யப்பட்ட ஆய்வுகளை இது போன்றவர்கள் தமது சொந்த அரசியல் தேவைக்காக திரித்து பயன்படுத்தும் பொழுதுதான் இந்த வாசக- எழுத்தாளன் உறவின் அபாயம் மிக பெரிதாக உருவெடுக்கீறது.

இது போல அறிவியலை திரித்து வரலாற்றை சிதைத்து அரசியல் செய்யும்
அமைப்புகள் எதுவென்று பார்த்தால் இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளும்,
அதன் ஆதரவாளர்களுமே இதனை செய்கின்றனர். அப்படியென்றால் சுஜாதா ஒரு இந்துத்துவ ஆதராவாளரா என்று கேள்வி எழுப்பினால் பதில் ஆம் என்றே கிடைக்கிறது. அது மட்டுமல்ல அவரது இந்துத்துவா ஆதரவிற்கு பின்னணியில் அவரது சொந்த சாதி பெருமை நிற்பதும் சாதாரண வாசகனால் சீரணிக்க இயலாத பேருண்மையாக நிற்க்கிறது.

இவர் பார்ப்பன சாதி சங்க மாநாட்டில் கலந்து கொண்டு பார்ப்பனர்கள் தமது
உரிமைக்காக போராட வேண்டும் என்று ஆனந்த விகடன் பத்திரிக்கையிலேயே வெளிப்படையாக தனது சாதி வெறியை எழுதினார். பார்ப்பனர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு நாம் சாதிரீதியாக அணி திரள வேண்டும் என்று சாதி சங்க தலைவனைப் போல பேசினார் இந்த எழுத்தாளர். இவர்தான் தமிழகத்து நடுத்தர வர்க்க வாசகர்களுக்கு ஆதர்சமான எழுத்தாளர்.

இவரது சாதி வெறி இன்னும் வக்கிரமாக வெளிப்பட்டது அயோத்தி மடம் என்ற பெயரில் பார்ப்பன சாதியினர் தமிழகத்தில் மிகக் கோடுரமாக ஒடுக்கப்படுவதாக எழுதிய கதை. இந்த கதையை போஸ்டமார்ட்டம் செய்து அதில் உள்ள இவரது சாதி கொழுப்பெடுத்த புரளிகளை அம்பலப்படுத்தி பலரும் விமர்சித்தனர். அவையெல்லாம் சம்பந்தப்பட்ட வெகு சன பத்திரிக்கையில் வரவில்லை.

இதுதான் சுஜாதா - தனது சொந்த வியாபாரத் தேவைக்காக பொது மக்களின்
பலஹீனங்களை ஹைடெக்காக எழுதி சுரண்டுவதுடன் அல்லாமல், தனது சொந்த அரசியலுக்காக பொய்களையும், புரளிகளையும் கூட கடை பரப்புகிறவாராக இருக்கிறார்.

இவரது ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன், நிறவெறியும், சாதி வெறியும்
சேர்ந்தால் என்னவாக வெளிப்படும்?

சொந்த சாதிவெறிக் கொழுப்பெடுத்த சுஜாதா தனது இனவெறியை 'சிவாஜி'
படத்தில் சாலமன் பாப்பையா எனும் பட்டிமன்ற வியாபாரி மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். கன்னங்கரேல் எனும் நிறம் பூசிய தனது இரண்டு பெண்களிடமும் ரஜினியை 'பழகிப்பாருங்கள்' எனச் சொல்லும் தந்தையாக வருகிறார் சாலமன் பாப்பையா. இப்பெண்களின் கறுப்பைக் கண்டு ஓடிவிடுகிறார் ரஜினி. தமிழர்களின் இயல்பான நிறமான கறுப்பை நிற ரீதியில் இழிவுபடுத்தி இருக்கும் சுஜாதா இப்பெண்களுக்கு வைத்திருக்கும் பெயரோ அங்கவை, சங்கவை. பாரியின் மகளிர் பெயரைச் சூடிய இவரின் புத்திக்குள் இருப்பது என்ன? தமிழைப் பழி தீர்க்கும் புத்திதானே!

தமிழுக்கும், பெண் குலத்துக்கும் இவ்வாறு இலக்கியத் தொண்டு செய்து
கொண்டிருக்கும் - இரண்டு முறை இதய வலிப்புக்கு ஆட்பட்டிருக்கும் சுஜாதா எனும் எழுத்தாளரை எல்லாரும் பாராட்டி விட வேண்டும் எனும் ஆர்வத்தில்
நாம் உள்ளோம்.

செருப்போ விளக்குமாறோ ... அன்பர்களே அது உங்கள் சாய்ஸ்...

பாராட்டத் திரள வேண்டிய முகவரி:

சுஜாதா என்ற ரங்கராஜன்,
#10 ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை,
2, முதல் தளம், மயிலாப்பூர்,
சென்னை - 4மின்னஞ்சலில் திட்டுவோர்கள் வசதிக்காக:

writersujatha@hotmail.com

பாராட்ட இயலாதவர்கள் என்ன செய்யலாம்?

இந்த எலக்கிய யாவாரியின் பெருமையை தமிழ் நாடெங்கும் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு கவிப்பேரரசருக்கு தங்கள் பாராட்டை அனுப்பலாம்.

கவிப்பேரரசர் பெயர்: மனுஷ்யபுத்திரன்

முகவரி: uyirmmai@gmail.com

உயிர்மை,
11/29 சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம்
சென்னை 18
Phone(044) 2499 3448
Mobile: (0) 98402 71561

கட்டுரைக்கான கரு பின்னூட்டத்தில் புல்டோசர்எதிர்வினைகளுக்கு ஒரு நல்ல எதிர்வினை:
சுஜாதாவிற்கு செருப்படி தேவையா? http/paalveli.blogspot.com/2007/07/blog-post_22.html

புரட்சி எங்கே எப்போ எப்படி நடக்கும்னு சொல்லமுடியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு வந்துறும்

ன்று விளையாட்டு விளையாட என்னை கூப்பிட்டிருந்தார் லக்கிலுக். அவரது அன்பு வேண்டுகோளை ஏற்று இதோ ஒன்று போட்டுவிட்டேன். ஏற்கனவே தோழி வித்யாவிற்க்கு வியர்டு பதிவும், நண்பர்கள் We The People மற்றும் குட்டி பிசாசுவிற்கு எட்டு போடவும் நான் கடன் பட்டுள்ளேன். அவற்றை போட சிறிது சிந்தனையை செலுத்த வேண்டியிருக்கிறது. மாறாக ஒன்று போட லக்கிலுக் கேட்டிருந்த கேள்வி சமீபத்தில்தான் மயிர் பிளக்க விவாதம் செய்த ஒரு தலைப்பு என்பதால் சுலபமாக ஒரு ஐந்து நிமிடத்தில் பதிவதற்க்கான வாய்ப்புள்ளதாக அமைந்துவிட்டது. வித்யாவும், We the peopleவும், குட்டி பிசாசும் என்னை பொறுத்துக் கொண்டு கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும். மேலும் ஒன்று போடுவது 24 மணி நேரத்தில் பதிய வேண்டுமாம் என்ற புதிய தந்திரமான ஒரு விதிமுறையை சேர்த்து சதி செய்து விட்டார்கள் அதனை ஆரம்பித்தவர்கள் (அவிங்கள்ளாம் நல்லாவேஎ.எ...எ... இருப்பாய்ங்க....)


லக்கி என்னிடம் கேட்டிருந்த கேள்வி:

தமிழ் சமுதாயத்திற்குள் புரட்சி எப்போது, எந்த வழியில் மலரும்?

மிழ் சமுதாயத்துக்கு என்று தனியாக புரட்சி சாத்தியமில்லை. ஏனேனில் தமிழ் சமுதாயம் இந்தியா என்ற நிலபரப்புடன் பிரிக்க இயலாத அளவு ஒன்று பட்டு உள்ளது. ஒரு வேளை தேசிய இன ரீதியான தனி தேசிய புரட்சி குறித்துதான் நீங்கள் பேசுகிறீர்கள் எனில் அது குறித்து சில அடிப்படை பிரச்சனைகளை விவரிப்பது சரி என்று கருதுகிறேன். வரலாற்று ரீதியாக சில நூறு வருடங்கள் இந்தியாவுடன் வணிகம், கலாச்சாரம், அரசியல், பண்பாடு என்று பின்னி பிணைந்துள்ள ஒரு நிலப்பரப்பை தனியாக துண்டித்து புரட்சி செய்வது என்பது சாத்தியமில்லாத விசயம். அதுவும் மத்திய அரசு என்பது மிக மிக வலுவானதாக இருக்கின்ற ஒரு நாட்டில் தேசிய புரட்சி என்பது சாத்தியமில்லாதது. இவையெல்லாவற்றையும் விட உலக மேலாதிக்க ஏகாதிபத்திய கனவின் ஒரு அங்கமாகவே இன்றைக்கு பல்வேறு நாடுகளின் பிரச்சனைகள் உள்ளன. இப்படி சொல்வதன் அர்த்தம் அந்த பிரச்சனைகளின் வரலாற்று ரீதியான அம்சங்களை புறக்கணிப்பது என்றல்ல. மாறாக, அந்த வரலாற்று தொடர்ச்சியை தனக்கு சாதகமான அரசியல் பொருளாதார முன்னெடுப்புகளுக்கு ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்துகின்றன என்பதை சுட்டவும் இந்த யாதர்த்த நிலையிலிருந்து தற்போதைய பிரச்சனைகளை பரிசீலிப்பது என்பதை சுட்டவும் இதை சொல்கிறேன்.

ஒருவேளை தமிழகத்திற்க்கு மட்டும் புரட்சி எனில் யாருக்கெதிராக புரட்சி? யாருடைய ஆதிக்கத்திலிருந்து விடுபட புரட்சி செய்வது? சந்தேகமில்லாமல் தமிழ் தேசியத்தின் மீது அதன் உரிமைகள் மீது ஆதிக்கம் உள்ளது. ஆனால் இந்த ஆதிக்கம் என்பது இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக்கூடமாக வைத்து சுரண்டும் ஏகாதிபத்திய - பார்ப்பனிய சுரண்டலின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. இந்தியாவில் சுரண்டும் தேசிய இனம் என்று ஏதேனும் துலக்கமாக உள்ளதா? உண்மையில் தேசியம் என்ற பெயரில் செயல்படும் எல்லாவித அடக்குமுறைகளும் நிலபிரபுத்துவமாகவே இருப்பதுதான் இந்தியா போன்ற நாடுகளின் சிறப்பியல்பு.

அப்படியெனில் நிலபிரபுத்துவத்துக்கு எதிராக போராடுவது சரியா அல்லது நிலபிரபுத்துவம் தேசிய வேடம் அணிந்து வருகிறது என்பதால் அதனை தேசியம் என்றே வரையறுத்து போராடுவது சரியா? எந்த தேசியத்திற்க்கு எதிராக போராடுவது? யாரை நட்பு சக்தியாக வரையறுப்பீர்கள். தமிழகத்தில் உள்ள தேவர் தமிழ தேசியர், கள்ளர் தமிழ் தேசியர், கவுண்டர் தமிழ் தேசியர் போன்ற பிரிவுகளை எப்படி சரி செய்வது? இவையெல்லாம் மற்ற பிரிவுகளைப் போல சமரச்ம் செய்து கொள்ளக் கூடியதாக இருக்கும் சமூக பிரிவுகளா? இல்லையே? உண்மையில் தேசியம் என்பதைவிட இது போன்ற சாதிய பிரிவுகள்தானே முரன்பட்டு மோதிக் கொள்கின்றன. தேசியம் என்ற பெயரில் செய்யப்படும் பெரும்பாலான முரன்பாடுகள் கூட இந்த நிலபிரபுத்துவ சாதிய தேவைக்கான செயல்பாடாக இருக்கின்றனவே? பிறகு எப்படி இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தேசியம் என்ற one of the பிரச்சனையில் சுருக்கி அதற்க்கு விடிவு கிடைத்தாலே மற்ற எல்லாவற்றிற்க்கும் விடிவு கிடைத்துவிடும் என்று நம்புவது?

இதையெல்லாம் விட முக்கிய விசயமாக இருப்பது மக்களின் சமூக பொருளாதார கோரிக்கையிலிருந்துதான் புரட்சியின் தன்மை என்னவென்பது பரிணமிக்கிறது. தமிழகத்தில் தேசிய உரிமை என்பது மக்களின் சமூக பொருளாதார கோரிக்கையாக இல்லை என்பதுதான் நிதர்சனம். ஏனேனில் இங்கு நிலவும் பல்வேறு முரன்பாடுகள் உண்மையில் சாதிய முரன்பாடுகளாகவும், ஏகாதிபத்திய பொருளாதார சுரண்டலின் நலனுக்கான முரன்பாடாகவுமே இருக்கிறது. எனவே மக்களின் கோரிக்கையும் இவற்றை முறியடிக்க ஏதுவானது எதுவோ அது குறித்தனதாகவே இருக்கிறது.

ஒரு வேளை தமிழ் தேசியம் என்ற ஒரு தீவு உருவாக்கப்பட்டு அது அதிகாரப்பூர்வமாக விடுதலை பிரதேசமாக அறிவிக்கப்படுகின்ற பட்சத்தில், அதுவும் அந்த புரட்சி என்பது தேசிய விடுதலை புரட்சி என்று அடையாளப்படுத்தப்படும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள பிற தேசியங்களை தூண்டிவிட்டு பார்ப்பினியமும், ஏகாதிபத்தியமும் அந்த விடுதலை பிரதேசத்தை சுலபமாக நிர்மூலமாக்கி விடும். இந்திய புரட்சி என்பதே உலக ஜனநாயக சக்திகளின், அண்டை நாடுகளின் ஜனநாயக சக்திகளின் ஆதரவின்றி சாத்தியமில்லை எனும் போது தேசியம் என்ற பெயரில் நடத்தப்படும் தமிழ் தேசிய புரட்சி என்பது அண்டை மாநிலங்களின் பெருவாரி மக்களை பகைத்துக் கொண்டு நிலைபெறுவது சாத்தியமே இல்லாத விசயம். ஆக இந்தியாவிற்க்கு எப்பொழுது புரட்சி நடக்கிறதோ அன்றுதான் தமிழ் சமுதாயத்திற்க்கும் நடக்கும்.

இதற்க்கு சித்தாந்த வழிப்பட்ட விளக்கம் ஒன்றும் கொடுக்கலாம். ஆனால் நண்பர்களுக்கு அதை விளக்குவது என்பது மிக மிக விரிவான ஒரு கட்டுரையாக மாறிவிடும். அந்தளவுக்குதான் எனது மொழி வல்லன்மை நிலை உள்ளது. ஏற்கனவே செந்தழல் ரவி இங்கு பேசுகின்ற பல விசயங்கள் புரிவதில்லை என்று குறைபடுகின்ற பொழுது ஓரளவு பொது புத்தியில் பதிந்த விசயங்களைக் கொண்டே பிரச்சனைகளை விளக்குவதுதான் சரியாக இருக்கும்.(அப்பயம் கூட ஒன்னும் பிரியல என்று நண்பர்கள் சொல்லுவது காதில் விழுகிறது).

இங்கு ஒரு முக்கியமான விசயம், சோவியத ரஸ்யா உள்ளிட்ட மேற்கு நாடுகளிலோ அல்லது பிற முதலாளித்துவ நாடுகளிலோ நடந்தது போல ஒரிரு நாட்களில் பேரெழுச்சியாக புரட்சி இந்தியா போன்ற நாடுகளில் நடைபெறாது. மாறாக இங்கு நடைபெறும் புரட்சி நீண்ட கால மக்கள் யுத்த பாதை என்கிற வருடக்கணக்கிலான புரட்சி ஆகும். ஏனேனில் இந்தியா ஏற்றத்தாழ்வான ஒரு நாடாக இருக்கிறது. மைய அரசு என்பது நகரங்களில் மட்டும்தான் அதிகாரம் செலுத்துகிறது. கிராமங்களில் நிலபிரபுத்துவ சாதியமே அதிகாரம் செலுத்துகிறது. எனவே நீண்ட கால மக்கள் யுத்த பாதை என்கிற புரட்சி வடிவமே இங்கு சாத்தியம்.

தலைப்பை ஓவராக நோண்ட முயன்றால பதில் கிடைக்காது. அது சும்மா ஒரு கவர்ச்சிக்காக வைத்தது.

****************
நான் அடுத்து கேள்வி கேட்க்க விரும்புகிறவர் மிதக்கும் வெளி

"அமைப்பு ரீதியாக சமூக மாற்றத்திற்க்காக செயல்படுவதில் மிதக்கும் வெளிக்கு உள்ள சிக்கல் என்ன?"

அசுரன்

Tuesday, July 17, 2007

ஆண்ட சாதிகளும், இடஓதுக்கீட்டின் உள் அரசியலும்

டஒதுக்கீடு குறித்து குழலி பல்வேறு வாதங்களை வைத்துள்ளார். அவற்றிற்கெல்லாம் மையமாக இருக்கும் ஒரேயொரு அம்சம் கீழே உள்ளதுதான். அதனை மட்டும் உடைத்து வாதிட்டால் போதும் என்று கருதுவதால் இந்த பதிவு.

அது தவிர்த்து இந்த கீழ் கண்ட குழலியின் புரிதலை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்ட பிற வாதங்களை முந்தைய அசுரன் கட்டுரையின் பின்னூட்டங்களில் தோழர்களும், நண்பர்களும் உடைத்துள்ளனர். அந்த பின்னூட்டங்களின் அடிப்படையிலான வாதங்களும் இந்த கட்டுரையில் முன்னெடுக்கப்படும்.//பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு ஆண்ட சாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ம க இ க தோழர்கள், சற்று யோசித்து பார்க்க வேண்டும், இடஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் சொல்வது இந்த ஆண்ட சாதிகள் எத்தனை சதவீத இடங்களை பிடித்துள்ளனர், பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர்களும் சுரண்டுபவர்கள் என்றால் பார்ப்பனர்களும் இவர்களும் இணையாகவோ அல்லது ஓரளவிற்காவது நிரம்பியிருக்க வேண்டுமே, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு முன் இவர்கள் நிரம்ப வில்லையே ஏன்?//

இது குழலி சொன்னது,

நாங்க சொல்வது இங்கு பார்ப்பன்ர்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளதை ஏன் தாழ்த்தப்பட்டவர்களுடனும், பிற பிற்படுத்தப்பட்டவர்களுடனும் ஒப்பிட்டு எழுதவில்லை என்பதுதான்.

ஏனெனில் பாப்பனரின் மேலாதிக்கம் குறித்த விசயத்தில் எமக்கு, உங்களுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அதாவது மேற்சொன்ன விசயத்தில் எமக்கும் உங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை.

மாறாக, பிற்படுத்தப்பட்டவர் இடஓதுக்கீட்டில் ஒரு சில ஆதிக்க சாதியினர் மட்டும் பயன்பெறுவதும் அந்த சாதியினர் எல்லாம் தமது சாதி வெறி ஆதிக்கத்தை வலுப்படுத்தி வருவதும் குறித்தே எமக்கும் உங்களுக்கு கருத்து வேறுபாடு.

இத்துடன் நாளும் வலுப் பெற்று வரும் சாதி உணர்வுக்கு எதிராகவும். அதன் பாற்ப்பட்ட வன்முறைக்கெதிராகவும் என்ன நடைமுறை தந்திரம் வைத்துள்ளீர்கள் என்பதை கேள்வி கேட்க்கிறோம். குறிப்பாக ஆதிக்க சாதியினரை கண்டுகொள்ளாமல் அவர்களை இடஓதுக்கீட்டுக்காக மட்டும் அணி திரட்டும் போக்கு எங்கு கொண்டு விட்டுள்ளது என்பதை சாதி சங்கங்களின் வலிமை பறை சாற்றுகிறது. பெரியார் திக சாதி வெறிக்கெதிராக பிரச்சாரம் செய்தால், திக ன்னு சொல்ற இடஓதுக்கீடை மட்டும் பேசு ஏன் ரெட்ட டம்ளர பத்தி பேசுற என்று கவுண்ட சாதி வெறியர்கள் அடிக்க வெரும் திமிர்த்தனத்துக்கு குழலி உள்ளிட்டவர்களின் பதில் என்ன என்று கேட்க்கிறோம்.

இந்த காரணத்தினாலேயே மேலேயுள்ள உங்களது ஒப்பீடு எந்த வகையிலும் எமது குற்றச்சாட்டிற்க்கான பதிலாக இல்லை.

இங்கு பார்ப்பன்ரையும் பிற்ப்படுத்தப்பட்டவர் பட்டியலில் உள்ள ஆதிக்க சாதியினரையும் ஒப்பிட்ட குழலி அதே கையோடு பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் உள்ள ஒடுக்கப்ப்ட்ட சாதியினருடன் ஆதிக்க சாதியினரை ஒப்பிட்டால் இந்த வகை இடஓதுக்கீட்டின் மோசடி தெரிய வரும். அதாவது ஆதிக்க சாதியினர், உண்மையிலேயே ஒடுக்குமுறைக்காளான பிற பிற்படுத்தப்பட்ட சாதியினரின் இடஓதூக்கீட்டை தின்று வருவது தெரியவரும். அத்துடன் இல்லாமல் சாதி வெறியுடன் துடுக்குத்தனம் செய்து வருவதும் தெரியவரும்.

பிறபடுத்தப்பட்டோர் குறித்த வரையறையை, பட்டியலை மாற்றியமைக்க கோரும் மகஇகவின் வாதம் இங்குதான் நிலை கொண்டுள்ளது.

இதுதான் நாம் வாதிடும் மையமான விசயமாக உள்ளது.

மேலே சொன்ன விசயத்தை கவனத்தில் கொண்டுதான் பிற்படுத்தப்பட்டோர் இடஓதுக்கீட்டை பெருவாரியாக விழுங்கி வரும் ஆதிக்க சாதியினரை தனியாக பிரித்தோ அல்லது உள் ஒதுக்கீடு கொடுத்து பிற ஒடுக்கப்ப்ட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடஓதுக்கீட்டின் பலன் போய்ச் சேர வழி வகுக்க வேண்டும் என்பதுதான் மகஇக கோரிக்கை.

இந்த விசய்த்தில் ஏன் உங்களிடமிருந்து பதில் இல்லை.

இந்த உள் ஒதுக்கீடு செய்வதில் அல்லது ஒதுக்கீடு செய்யாமல் சமூக புறக்கணிப்பு செய்வதில் என்ன சிக்கல் வந்து விடப் போகிறது?

இந்த விசயத்தை வலியுறுத்தியே யாரோ ஒரு தோழர் BC1, BC2 என்று உட்பிரிவு ஒதுக்க வேண்டும் என்ற ஒரு பரிந்துரை செய்திருந்தார். இது நல்ல யோசனையாகத்தான் படுகிறது.

இத்துடன் சேர்ந்து சாதி மறுப்பு திருமணம் செய்தவருக்கு இடஓதுக்கீட்டில் முன்னுரிமை, தனி ஒதுக்கீடும் செய்வது.

ஆதிக்க சாதி வெறியர்கள் ஆட்டம் போடும் இடங்களில் ஒட்டு மொத்தமாக இடஓதுக்கீட்டை ஆதிக்க சாதிகளுக்கு ரத்து செய்வது. அங்கு நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் ஆதிக்க சாதி வெறியர்கள் புறக்கணிக்கப்படுவது. அதாவது ஒட்டு மொத்தமாக ஆதிக்க சாதியினர் ஆட்டப் போடும் இடங்களில் அவர்களை சமூக புறக்கணீப்பு செய்ய ஜனநாயக சக்திகளையும், பொது மக்களையும் அணி திரட்டுவது. அந்த பகுதிகளில் ஆதிக்க சாதிகளின் இடஓதுக்கீட்டு பங்கை பிற பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒதுக்குவது உள்ளிட்ட செயல்பாடுகள்.

இந்த வேலைகளை செய்வதில் என்ன சிக்கல் வந்து விடப் போகிறது?

இதைச் சொன்னால் மறைமுகப் பார்ப்னியம் என்று அவதூறு சொல்லும் பொழுது நமக்கு சந்தேகம் வருகிறது, சமூக நீதி பேசும் இவர்கள்தான் உண்மையான மனு நிதியின் காவலர்களாம பார்ப்னர்களோ என்று.

இது சந்தேகம்தான். எதுவும் ஊர்ஜிதப் படுத்தி சொல்லவில்லை. நண்பர்கள் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.

இது தவிர்த்து இடஓதுக்கீடு என்பது ஒரு சீர்திருத்தம் தானேயொழிய சர்வரோக நிவாரணி அல்ல என்பதும். அந்த காரணத்தினாலேயே அதை நடைமுறைபடுத்துவது இருக்கின்ற சமூக பொருளாதார பிரச்சனைகளை வேறு வடிவங்களுக்கு பரிணமிக்க்ச் செய்யும் இயல்புடையது என்பதையும் நாம் குற்றச்சாட்டாக வைக்கிறோம். இப்படி சொல்வதின் அர்த்தம் இடஓதுக்கீட்டை எதிர்ப்பது அல்ல. மாறாக இடஓதுக்கீடு என்ற சீர்திருத்தத்துடன் ஒடுக்கப்பட்டவர்கள் திருப்திப் பட்டு நின்று விடக் கூடாது என்பதை அவர்களுக்கு புரிய வைத்து, நிரந்தர தீர்வு நோக்கி மக்களை அரசியல்படுத்தும் தேவைக்காகவே இப்படி சொல்கிறோம். இங்கு நடப்பதோ இடஓதுக்கீடு ஒன்றே எல்லா சாதிய, சமுக பொருளாதார சிக்கல்களையும் தீர்த்துவிடும் என்ற மயக்கத்தின் பாற்ப்பட்ட பிரச்சாரமே. இந்த அம்சம் குறித்தும் விவாதம் செய்யலாம்.

அசுரன்இந்த அம்சத்தில் சிந்தனையை தூண்டும் சில பின்னூட்டங்கள்(முந்தைய கட்டுரையிலிருந்து):


//உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டடீரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது.//

குழலி, இது தான் மோசடியென்பது. பார்ப்பனரல்லாத "தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோ ரும்" என்று சொல்வதன் மூலம் தலித், பழங்குடி, பிற்பட்டோ ர் எனப்படுவோர் அனைவரையும் ஒரே தட்டில் நிற்க வைக்க முடியாது. இங்கே பிற்பட்டோ ர் என்று வகைப் படுத்தப்பட்டுள்ள எல்லோரையும் ம.க.இ.க ஆண்ட பரம்பரையென்று சொல்லி நிராகரிக்கவில்லை. அவர்களுக்குள்ளும் சேவைச் சாதிகளாய் இருக்கும் குயவர், தச்சர், குரும்பர், வெள்ளாளர்களில் ஒரு சில வகையினரை இடஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்றே சொல்கிறார்கள். அதாவது இடஒதுக்கீடு அதன் முழுமையான பலன் யாருக்குச் செல்ல வேண்டுமோ அவர்களுக்கே செல்ல வேண்டும் என்பதே ம.க.இ.க நிலை.

இதில் உங்கள் மோசடி எங்கே வருகிறது? "பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டோ ர்" என்கிற வகையின் கீழ் ஆதிக்க சாதிகளான தேவர், மறவர், செட்டியார், வெள்ளாலக் கவுண்டர்கள், முதலியார்கள், நாயுடுக்கள், நாயக்கர்கள்.. இப்படி பண்ணெடுங்காலமாக பார்ப்பனியத்தின் செயல் வீரர்களாய் இருந்தவர்களையெல்லாம் ஒரே பட்டியலில் அடைப்பது என்பது எப்படி சரியானதாகும்? 1987 - 88 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படியே நாட்டில் உள்ள 77 சதவீத முற்பட்ட பிற்பட்ட சாதியினர் 83% நிலத்துக்கு உடைமையாளர்களாய் இருப்பது வெளிப்பட்டுள்ளது ( இதில் பார்ப்பனர்கள் உள்ளடங்கவில்லை )

இதற்கு நீங்கள் முன்னே வைத்த வாதம் என்ன?

//பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு ஆண்ட சாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ம க இ க தோழர்கள், சற்று யோசித்து பார்க்க வேண்டும், இடஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் சொல்வது இந்த ஆண்ட சாதிகள் எத்தனை சதவீத இடங்களை பிடித்துள்ளனர், பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர்களும் சுரண்டுபவர்கள் என்றால் பார்ப்பனர்களும் இவர்களும் இணையாகவோ அல்லது ஓரளவிற்காவது நிரம்பியிருக்க வேண்டுமே, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு முன் இவர்கள் நிரம்ப வில்லையே ஏன்?//

அரசுப் பணிகளில் அமரவோ, டாக்டர் போன்ற சேவைத் தொழிலில் இறங்க வேண்டிய கட்டாயமோ இந்தச் சாதிகளுக்கு 1800களின் பிற்பகுதி வரையில் எழவில்லை என்பது தான் உண்மை. கவுண்டர் தேவர் போன்ற சாதிகளெல்லாம் வரலாற்று ரீதியில் நிலவுடைமையாளர்களாவே இருந்து வந்துள்ளனர் ( பெருமளவிலோ, குறைந்தளவிலோ ).. இவர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. அப்படி இவர்களை ஒடுக்கியிருந்தால் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இந்த சாதியினர் பார்ப்பனர்களை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள். சமூகத்தில் பார்ப்பனர்கள் மேலே ஏறினார்கள் என்றால் அப்படி அவர்கள் மேலேயே உட்கார்ந்திருப்பதற்கான தேவை இவர்களுக்கும் இருந்தது. இவர்களுக்கும் கீழே அடக்கி ஒடுக்கப்பட்டு கடுமையாக சுரண்டப்பட்டு, நிலத்தின் மேல் ஆதிக்கம் இல்லாதிருந்த சாதிகளிடம் "பார் எனக்கு மேலே அவன் உனக்கு மேலே நான்" என்று நியாயப்படுத்துவதற்கு தேவையாய் இருந்தது.

அரசு வடிவம் மாறி ஆங்கிலக் கல்வியுள்ளவர்களுக்கு ( மாண்டேகு- சிம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் இரட்டை ஆட்சிமுறை ) அரசுப் பணி என்றும் அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் கிடைக்க ஆரம்பித்த புள்ளியில் தான் இவர்களுக்கும் அரசுப்பணியின் அவசியம் ஏற்பட்டது. அது நிராகரிக்கப்பட்டவனின் உரிமைக் குரல் அல்ல - மாறாக இது வரையில் இருந்த ஆதிக்கத்தை நிலை நிறுத்தியாக வேண்டியதன் கட்டாயத்தில் எழுந்ததே. உங்கள் மூலமான நீதிக் கட்சியின் நிறுவனர்கள் பழைய ஜமீந்தாரிகள், மன்னர்கள் என்பது நினைவிருக்கட்டும் ( பொப்பிலி மகாராஜா போல ).. இவர்கள் ஆரம்பத்திலேயே பெரியார் போல பகுத்தறிவு இயக்கம் நடத்தவோ பார்ப்பனிய எதிர்ப்பிலோ ஈடுபட்டிருக்கவில்லை.. மாறாக பார்ப்பனியத்தின் அத்துனை கூறுகளையும் உட்செறித்து மேலே வந்து விட முடியுமா என்கிற முயற்சியில் தான் ஈடுபட ஆரம்பித்தனர். ..

மேலும் நீங்கள் கேட்பது போல இடஒதுக்கீட்டுக்கு முன் இவர்கள் நிறம்பவில்லையே ஏன்? என்கிற கேள்வியே அப்போது எழவில்லை. இடஒதுக்கீடு அமுலான ஆரம்ப காலத்திலேயே அதன் பலன்களை அதிகம் சுருட்டிக் கொண்டதும் ( தமிழக அளவில் உதாரணம் தர முடியும் ) இந்த "பிற்படுத்தப் பட்டோ ர்" என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்ட ஆண்டைகள் தான்.

இவர்கள் அதிகாரத்திற்கு வந்த பின் 1927ம் ஆண்டே வகுப்புவாரி உரிமை என்னும் அரசானையின் படி தமக்கான உரிமையை நிலை நாட்டிக் கொண்டனர்.. இடஒதுக்கீடு அமுலான முதல் (20 ஆண்டுகளில் ஆண்டைகளும் நிலவுடைமையாளர்களும் தமது ஆதிக்கத்தை அரசு மட்டத்திலும் உறுதிப்படுத்திக் கொண்டனர். அதற்கு முன் - குறிப்பாக மாண்டேகு - சிம்ஸ்போர்ட் சீர்த்திருத்தங்களுக்கு முன் - இட ஒதுக்கீட்டுக்கான தேவை சாதி இந்துக்களுக்கு எழவே இல்லை.. ஏனெனில் அவர்கள் நிதர்சனத்தில் ஆதிக்க சாதிகளாகத் தான் இருந்தனர்.


இப்போது மீண்டும் உங்கள் பதிவுக்கு வந்தால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் - தமிழகத்தில் எல்லோருமே தங்களை ஆண்ட சாதிகள் என்று தான் பெருமையடித்துக் கொள்கிறார்கள் என்கிறீர்கள். இது பார்ப்பனியம் தோற்றுவித்த காரணிகளில் ஒன்று தான். எல்லோரும் தங்களை ஆண்ட சாதி என்று சொல்லிக் கொண்டாலும் - நடைமுறையில் யார் நிலவுடைமையாளர்கள், ஆதிக்க சாதிகள் என்பதைக் கொண்டு தான் முடிவெடுக்க முடியும். இந்த வாதத்தை நீங்கள் விரிவாக்கிச் சென்றால் - தெற்கே திராவிடர்கள் வருவதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு ஆண்ட
சாதி என்பது இப்போது மலைவாழ் மக்கள் என்று அறியப்படுபவர்கள் தான் எனவே ம.க.இ.க மலைவாழ் மக்களுக்கும் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லுமா என்று கேணத்தனமாகக் கேள்வி கேட்கும் அளவிற்கும் போகலாம்... ஆனால் துரதிர்ஷ்டவசமாக ம.க.இ.கவின் நிலை அதுவல்ல.. நாம் அறிந்த வரலாற்றிலும், நிதர்சனத்திலும் எவர் ஆதிக்க சாதியாய் இருக்கிறார்கள் என்பதைத் தான் கணக்கில் எடுக்கச் சொல்கிறார்கள். எனவே நீங்கள் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது மட்டுமல்ல முட்டாள்தனமானதும் கூட.

பல்லவன் குடிசையில் பன்றி மேயுது என்கிற பம்மாத்து இல்லாமல் நேரடியாகச் சொல்லுங்கள் - வன்னியர்கள் அடிமைச் சாதி தானா? அடிமைச்சாதியென்றால் "வன்னிய குல சத்திரியர்" என்கிற வெட்டிப் பெருமை மட்டும் எதற்கு? அப்படி வெட்டிப் பெருமையடிப்பதற்காக ராமதாஸ் போன்றவர்களை நீங்கள் கண்டிக்க தயாரா?

இல்லை வன்னியர்கள் குடிசையில் பன்றி மேய்வது உண்மையானால் அதற்கும் சக்கிளியன் சேரியில் பன்னி மேய்வதற்கும் ஒரே காரணம் தானா? அதாவது பார்ப்பனியம் தானா? தீண்டாமையால் கொடுமைப் படுத்தப்பட்ட சாதி தான் வன்னிய சாதியா?

வன்னியர்களையும் காட்டு நாயக்கர்களையும் ( அவர்கள் தங்களை ஆண்ட சாதி என்று கருதிக் கொள்வதால் ) ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது என்பது முழு முட்டாள் தனம்.

***************

ஆண்ட பரம்பரைகள்னு போகிற போக்கில் சொல்லி ரகசியமாய் மகிழ்ந்து கொள்ளும் அறியாமையில் கிடக்கும் ஜனங்களை நோக்கிக் கூறப்பட்டதல்ல 'ஆண்ட பரம்பரையா! அடிமைப்பரம்பரையா?" என்பது.

நாங்கள் மூவேந்தரின் வாரிசுகள் என்றும், பல்லவனின் பரம்பரை என்றும் மேடை போட்டு முழங்கி முக்குலத்தோரின், வன்னியரின் உணர்வுகளை முறுக்கேற்றி, அவர்களின் போலி கவுரவத்தை வளர்த்தெடுத்து, பிற சாதியினரை (வேறு யாரை தலித்துகளைத்தான்) தங்களுக்கு அடிபணிந்து போகச்சொல்லி மிரட்டும் 'ஆண்ட பரம்பரை'ப் பொறுக்கிகளுக்குத்தான்...இட ஒதுக்கீட்டை ரத்து செய்யச் சொல்லுகிறோம்.

பொன்.பரமகுருவில் இருந்து மலைச்சாமி வரை எத்தனையோ பேர்கள் இட ஒதுக்கீட்டால் படித்து முன்னேறினார்கள்தான். அவர்கள் தங்கள் பணிக்காலத்தில் செய்தது என்ன? தங்கள் சாதிக்காரனாகப் பார்த்து போலீசுதுறையில் ரொப்பிக்கொண்டார்கள். ஓய்வு பெற்றவுடன் ஓடிச்சென்று தேவர்பேரவை போன்ற சாதித்தீ மூட்டும் அமைப்பில் ஒட்டிக்கொண்டார்கள் என்பதில் இருந்தே இவர்களின் அரசுப்பணியின் லட்சணத்தை நல்லாவே யூகிக்கலாம். யூகம் என்ன எல்லாமே நெசந்தான். 70% பேர் போலீசுக்காரங்களா இருப்பது..ஆண்ட பரம்பரை 'தேவர்'தான். தேவர் சாதிப்போலீசின் மிருகத்தனத்தை ஒவ்வொரு தலித் - தலித் அல்லாதோரின் மோதல்களிலும் பார்க்க முடியும்.. சமீபத்தில்--கடந்த 10 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டில் வந்த தேவர் சாதி போலீசுக்கும்பல் கொடியங்குளத்திலும் தாமிரபரணிக்கரையிலும் போட்ட வெறியாட்டம்...2 வயது சிறுவன் விக்னேசைக்கூட விட்டு வைக்கவில்லை.
.......
பறையர் பையனைக்காதலித்த குற்றத்துக்காக கண்ணகி-முருகேசனைக்கொன்ற சாதி வெறியர்களைக் காப்பாற்ற உள்வேலை செய்பவனோ, இட ஒதுக்கீட்டில் படித்து கலெக்டராக இருந்தவன்..இவன் திருநெல்வேலிக்கு கலெக்டராக இருக்கும்போதுதான் 17 தலித்கள் போலீசால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அன்று போலீசின் அத்துமீறலை ஆரம்பித்து வைத்து வன்கொடுமை சாதி வெறியந்தான் அந்த கலெக்டர்.. இவர்களுக்கு இட ஒதுக்கீட்டை தரக்கூடாது என்கிறோம்.

பிற்பட்டோ ர் பட்டியலுக்குள் ஆதிக்க சாதிகள் எல்லாம் உட்கார்ந்து கொண்டு உண்மையிலே பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடமில்லாமல் ஆக்குகிறார்கள் என்பதற்கு புள்ளிவிவரங்களைத்தேடி எல்லாம் செல்ல வேண்டாம்.

தென் மாவட்டக்கல்லூரிகள் எங்கும் நடக்கும் மாணவர் மன்றத் தேர்தல்களே இதற்கு சான்று. BC பட்டியலில் 80 சதவீத இடங்களை நாடார்களோ நாயுடுகளோ (அதாவது வடுகன் என்பவர்கள்) ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச் சங்கமே மாணவர்கள் மத்தியில் அமைத்து சாதி வெறி உண்டாக்கி தேர்தலில் நிற்கின்றனர். MBC ஒதுக்கீட்டில் பெருமிடங்களை தேவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச்சங்கம் கட்டி, உணவு விடுதிகளில் தலித் மாணாக்கரை 'ஓசிச்சோறு' என்றும், தலித் மாணவிகளை பாலியல்ரீதியாகக் கொச்சைப்படுத்திப்பேசி வக்கிரமாய் நடந்து கொள்வதும், சேவைத் தொழில் செய்யும் சாதியில் இருந்து வரும் ஒன்றிரண்டு மாணவர்களிடம் 'எனக்கு சிரைத்து விடு' என்றோ 'என் செருப்பைத் தைடா' என்றோ சாதித்திமிரோடு நடந்து கொண்டு வருவது வெளிப்படையான விசயம்.

அக்கல்லூரிகளில் உட்கார்ந்திருக்கும் ஆசிரியர்களும் தங்களைஆதிக்க சாதி சங்கங்களுக்குள் இணைத்துக் கொண்டு அதே சாதி மாணவர்களைக் கொம்பு சீவி விடுகின்றனர்.. இதை எல்லாம் சொல்லி இந்தக் கேடு கெட்ட சாதிவெறியன் களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்.. பிற்பட்டோ ர் பட்டியலை சீர் செய் என்றால்...மறைமுகப் பார்ப்பனீயம் என்கிறார்கள்..

ஆதிக்க சாதிகள் என நாம் சொல்லிடும் நாயுடு,கவுண்டர்,தேவர்,நாடார்,வன்னியர் எனப்படும் சாதியினரிடம் நூற்றுக்கணக்கிலும்,ஆயிரக்கணக்கிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்லூரிகளும் குவிந்து கிடக்கின்றன. அங்கு இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றதாக வரலாறு உண்டா? எப்படி நாடார் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பியூனில் இருந்து தலைமை ஆசிரியர் வரை நாடார்களாகவே இருக்க முடிகிறது? நாயுடு கல்லூரியும் அப்படித்தான்..கவுண்டன் கல்லூரியும் அப்படித்தான். ஆனால் பட்டியலில் இருக்கும் பல நூறு சாதிகளால் ஒரு நர்சரி பள்ளி ஆரம்பிக்கக் கூட தெம்பு கிடையாது என்பதுதான் உண்மை. எங்காவது வண்ணார் சங்கப் பள்ளியையோ மருத்துவ சாதி சங்க கலைக்கல்லூரியையோ காட்ட முடியுமா?

இதே மாதிரி எண்ணற்ற உதாரணங்கள் தமிழகம் எங்கும் பெருத்துக் கிடக்கும்போது சமூக நீதிப் புடுங்கிகள் இதற்கு எதிராக என்ன புடுங்கினார்கள்?

கல்லூரிக்கு அடுத்து வேலை செய்யும் இடங்களைப் பார்த்தால் பொதுத்துறை நிறுவனங்களுக்குள் ஆதிக்க சாதிக்கும்பல்தான் வேலை வாய்ப்பில் பெரும் இடங்களைப் பிடித்துக் கொண்டு சாதி ரீதியாய் தொழிற்சங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்கம் என்றால் ஏதோ தொழிலிடப் பிரச்சினைகளுக்காகப் போராடும் அமைப்பு என்றெல்லாம் எண்ண வேண்டாம். யார் யார் வீட்டில் கல்யாண வயசில் பொண்ணு இருக்கு? என்பதை விசாரித்து தங்களுக்குள் திருமணம் மூலம் மேலும் சாதியாய் இறுகிக்கொள்ளவும், மறக்காமல் ஆண்டுதோறும் தங்கள் குலதெய்வத்தின் விழா எடுக்கவும்தான் இச்சங்கங்கள்.. திருச்சி பெல்லில் பார்க்கலாம்..பெல்-சேனைத்தலைவர் சங்கம்..பெல்-வன்னியர் சங்கம்..லொட்டு லொசுக்கு எல்லாம்.

விப்ரோ டெக்னாலஜியில் பார்ப்பனர் சங்கம் கட்டி இருக்கிறார்கள்.. சவுராஸ்டிரா சங்கம் வைத்திருக்கிறார்கள்.. நவீன தொழில்நுட்பவாதிகள் இல்லையா? மெயிலிங் லிஸ்ட்டில் - ஈ-சாதிச்சங்கமாய் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு சங்கமாய்த் திரண்டு சாதியைக் காப்பாற்றும்/ சாதி வன்முறையை (கல்லூரி அளவிலேயே) வளர்க்கும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். அல்லது BC ஐ இரண்டாகப்பிரித்து இந்த மாதிரி ஆதிக்க சாதிகளை BC1ல் வைத்து 3 சதவீதம் அவர்களுக்கும்... இதர 200 BCகளை 27% கொடுத்து BC 2லிலும் வைப்பதுதான் உண்மையான சமூக நீதி.

சமூகநீதிப் புடுங்கிகள் என்றைக்காவது சாதிமறுப்புத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கோரி இருக்கிறார்களா? சாதி ஒழிப்புதானே - சமூக நீதியாகும்! சாதி ஒழிப்பை சாதிமறுப்பு திருமணம் தானே சாதிக்கும்!

சாதி மறுப்புத் திருமணம் மூலம் பிறந்தவர்களுக்கு பெயரளவில் இருந்த சிறு வீத ஒதுக்கீட்டையும் 'சமூக நீதியை' காத்த வீராங்கனை ஒழித்துக்கட்டியது.. ஆனாலும் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த 'சமத்துவப் பெரியாரும்' இதைக் கண்டு கொள்ளவே இல்லை.

***********

சாதி ஒழிப்பைத் தவிர்த்து விட்டு, இட ஒதுக்கீட்டில் மட்டும் அழுத்தம் கொடுக்கும் திராவிட,தமிழ்தேசிய,வன்னியவிய,தேவர்வெறியியக் கட்சி/குழுக்களால் ஏற்பட்ட சமூகவியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ள சில சான்றுகள்.

1) திண்ணியம் ஊரில் சக்கிலியர் வாயில் மலத்தைத் திணித்த சாதிவெறியர்களில் ஒருவர் - அரசுப்பணியில்-ஆசிரியராகப் பணியாற்றியவர். பெயர் என்ன தெரியுமா? குடியரசு.

2) சமதாக் கட்சியின் தமிழ் நாடு பிரிவுக்கு ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார். பெயர் குடியரசுத் தேவர். (1929இலேயே வாலை நறுக்கிய இயக்கப்பின்னணி கொண்ட பெயருடையவருக்கு வால் முளைக்கிறது)

3) பெரியார் திராவிடர் கழகத்தினர் பழனி ஒன்றியத்தில் கவுண்டர் சாதிவெறியர்கள் நிறைந்த பகுதியில் 'தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பயணம்' மேற்கொண்டிருந்தபோது 'இரட்டைக்குவளைகள் முறை பற்றி'கண்டித்துப் பேசி வந்தனர். ஆத்திரமுற்ற கவுண்ட சாதி வெறியர்கள் பெ.தி.க. தொண்டர்களைத் தாக்க முயன்றனர். அப்போது அவர்கள் சொன்னது "தி.க.ங்கிற..சாமியப் பத்திப் பேசு..இட ஒதுக்கீடு பத்திப் பேசு..ஆனால் ரெட்டக்கிளாஸ் அது இதுன்ன..கொளுத்திப்புடுவோம்.."****************


ராமதாசின் குடும்பத்தில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணங்கள் எத்தனை?

ஆனைமுத்துவின் கட்சி ஏன் வன்னியர் சங்கம் மாதிரியே இருக்குது?

தமிழரசனின் தனித்தமிழ் நாடு படை ஏன் வன்னியர் படையாக மட்டுமே இருக்குது?

தமிழ் தேசியம் என்பது வன்னியர் தேசியமா?

ஆண்ட பரம்பரன்னு சொல்லுர ராமதாசு ரிலயன்சு போன்ற சேட்டுகிட்ட போய் நாய் மாதிரி வாலாட்டுறப்ப ஆண்ட பரம்பரையின் குலப்பெரும கெட்டுடாதா?

இதற்கெல்லாம் குழலி எனும் ஆண்டபரம்பரைகள் பதில் சொல்ல வேண்டும்..

*************

கம்யுனிஸ பூச்சாண்டி சொல்வதை பார்த்தால் படித்தவன் எல்லாம் சாதி வெறயில்லாம இருப்பதாக இருக்க வேண்டும். அப்ப்டி இல்லை என்பதைத்தான் கனேசு, அன்பரசன், குரல்கள், புல்டோ சர் உள்ளிட்டவர்களின் எ-கா சொல்கிறது. இன்னும் சொன்னால் கல்வி நிலையங்க்ளில் சாதி ரீதியாக திரண்டு பிற சாதியினரை இழிவுபடுத்தும் போக்கு உங்களது வாதத்திற்க்கு முரனாகவே இருக்கிறது.

கல்வியறிவினால் சாதி ஒழியும் என்பதே ஒரு அப்பட்டமான மோசடி.

எப்படி பொருளாதார விடுதலை மட்டுமே சாதியை ஒழித்துவிடும் என்று கம்யுனிஸ்டுகள் சொன்னது அடிப்படையற்றதோ அதே போல வெறுமே பண்பாட்டு சீர்திருத்தங்களால் மட்டும் சாதி ஒழிந்து விடும் என்பதும் அடிப்படையற்றதே.

தத்துவம், பொருளாதாரம், அரசியல் என்று மூன்று முனைகளிலும் சம்ரசமற்ற போராட்டமே சாதியை ஒழிக்கும்.

இடஓதுக்கீட்டை சர்வரோக நிவாரணியாக காட்டும் உங்களது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தையே படித்தவன் முதல் பலரும் தமது சாதி வெறியை விடாமல் இருப்பதும், இன்றைக்கு திராவிட அரசியலுக்கு உரிமை கொண்டாடும் பாமக உள்ளிட்டவர்கள் சாதி ரீதியாக அணி திரண்டு உரிமை பெறுங்கள் என்று அப்பட்டமாக பிழைப்புவாதம் பெசுவதும், குஜ்ஜார் பிரச்சனைகளும் காட்டுகின்றன. இடஓதுக்கீடு ஒரு சீர்த்திருத்தம் என்பதை புரிந்து கொள்ளாத நண்பர்கள் அதனது யாதர்த்த விளைவுகளை கண் கொண்டு நோக்கும் வலுவின்றி இருப்பது பரிதாபமே.

****************

Gopalan Ramasubbu said...

இது சட்டநாதன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருக்கும் ஒரு பத்தி(Page-188),

[http://books.rediff.com/bookshop/bkproductdisplay.jsp?PLAIN-SPEAKING-by-A-N-SATTANATHAN&prrfnbr=60109970&multiple=true&frompg=_]

"There are two tendencies which have become noticeable.Reservationhas helped the backward classes for nearly six decades from the 1920's to the 1980s-practically three generations.The benefit of reservation has gone mostly to the top few castes amongst the backward,and to an increasing layer of upper crust in each caste.The filtration process has not been through or uniform.This is not surprising,and is to some extent unavoidable.It would be a step in the larger interest of society and of the backward classes themselves,if a check is applied to both tendencies.There has been thinking on these lines among administrators;but the opposition of vested interest has been too strong to carry out the necessary pruning.But sooner or later,the removal of the two kinds of upper crust will become un-avoidable;otherwise we will be encouraging the caste to form a class system within caste system-not an altogether desirable trend in a democratic and sicialitic society"

***********

முருகேசன் கண்ணகியை எரித்துக்கொன்ற வன்னிய சாதி வெறியர்களைக் காப்பாற்றத் துடிக்கும் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவரும் இட ஒதுக்கீட்டில்தானே படித்து முன்னேறி வந்திருக்கிறார்? இப்பேர்ப்பட்ட சாதி வெறி நாய்களுக்கு இட ஒதுக்கீட்டை இரத்து செய்யச் சொல்வதுதானே சரியாகும்?

கண்டதேவியில் தேர் இழுக்கப்படாது..வன்னியன் தெருவழியே பறையன்பிணம் வரப்பிடாது...கட்டினால் வன்னியகுல சத்திரியகுலத்திலேதான் செவப்பா அழகா கட்டுவோம் (இருப்பது இங்கிலாந்தில்) எனும் சாதி வெறியுடனும், பஞ்சாயத்து தலைவரா தலித் வந்தா ஆத்தாவுக்கு ஆகாது...ரெட்டை டம்ளர் டீ க்கடை... எல்லாவும் செஞ்சுப்புட்டு இட ஒதுக்கீடு வேணும்...நாங்கள்ளாம் மிகவும் பிற்பட்டவங்க என்பதும், சாதிக்கூட்டங்களிலே போய் நாங்க பல்லவர்களின் வழித்தோன்றல்...பாண்டிய மன்னர்கள்தான் எங்களோட 56 வது கொடிவழி பாட்டனாரு...ன்னு மீசையை முறுக்கறதும்... ஆண்ட பரம்பரைதானடா...உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு...

என்னக் கேட்டால், எவன் சாதி மறுப்பு திருமணம் செய்கிறானோ, ஆதிக்க சாதி சங்கத்திலே ஒட்டாம இருக்கிறானோ அவனுக்க மட்டுமே இட ஒதுக்கீடு தரணும்...ம.க.இ.க.வும் இதத்தான் சொல்லுதுன்னு நினய்க்கேன்.

அது கிடக்கட்டும்... பெரியாரின் கொள்கையில் இட ஒதுக்கீட மட்டுமே முன்னிறுத்தி வரும் ராமதாசும், ஆனமுத்துவும் ஏன் சாதி ஒழிப்பு பத்தி பேச மாட்டக்காக?
***************

Related Articles:

புரளி பேசும் போலி தமிழ தேசியவாதிகள்

இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு : மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின்: சமரசம்!

Thursday, July 12, 2007

ராமதாஸும், கருணாநிதியும் பிணங்களிலும் புரட்சி செய்வர்!

ந்திய தேசிய பார்ப்னியத்தின் பலத்தில் வன்முறை செலுத்தும் கருணாநிதி என்கிற தரகு தாத்தாவும், ராமதாஸ் என்கிற தரகு மாமாவும் புலிகளுக்கு ஆதரவாக என்ன்விதமான நடவடிக்கை எடுக்கீறார்கள்?

ஒன்றும் கிடையாது.

சரி தனி தமிழ் தேசியத்திற்க்கான என்ன விதமான நடவடிக்கை எடுக்கிறார்கள். ஒன்றும் கிடையாது.

சரி தமிழ் தேசியத்தை வடக்கு தெற்கு என்று பிரிக்க கோரிக்கை வைத்த ராமதாஸின் அரசியல் தந்திரம் என்ன வகையீனம்? ஒருவேளை வன்னிய தேசம் என்று புதிதாக எதையும் வரலாற்றில் நுழைக்கும் எண்ணம் உள்ளதோ?

அன்புமணி Alias துன்பமணி உள்ளிட்டவர்கள் மத்தியில் உட்கார்ந்து கொண்டு குழலி எதிர்க்கும் அதே இந்திய தேசியத்தை வலுப்படுத்துவதுடன் அல்லாமல் தனித் தமிழீழத்தின் இருப்பை கேள்விக் குள்ளாக்கும் சிங்கள் இன வெறி அரசிற்க்கு ஆயுத உதவி செய்வதையும் வலுப்படுத்துகிறார்கள்.

கூரை ஏறி கோழி பிடிக்க இயலாத இவர்கள்தான் கோபுரம் ஏறி வைகுண்டத்தை அடைவதற்க்கு வழி சொல்கிறார்களாம்.

சரி நண்பர்களே உங்களிடம் ஒரேயொரு கேள்வி கேட்க்கிறோம், உங்கள் பாணியிலேயே.

நீங்கள் குறிப்பிடும் 'தனித் தமிழ் தேசியம்', 'இந்திய பார்ப்ப்னிய தேசிய எதிர்ப்பு' இவற்றிற்கு எதிராக பல்லக்கு தூக்கும் ராமதாஸ், கருணாநிதி முதலான துரோகிகளை துரோகிகள் என்று ஒத்துக் கொள்வீர்களா?

ஆம், இல்லை என்று ஒரு வரியில் பதில் சொல்லுங்கள் சுயமரியாதை (அப்படி ஒன்று இருந்தால்) சிங்கங்களே :-))

அப்புறம் பிளிறுங்கள் நச்சென்று வேளங்களாய் - கொட்டையை நசுக்கி விட்டோம் என்று.

வெறுமே தனித் தேசியம் எனது லட்சியம் என்று சொல்லிக் கொண்டு, இந்திய பார்ப்ப்னியம் நிச்சயம் என்பதை நடைமுறையில் கொண்டு, சொல்லுக்கும் செயலுக்கும் வெறுபாடுடன் துரோகம் செய்வதை சமரசம் அல்லது சாணக்கியத்தனம் என்று நண்பர்கள் சொல்லுவார்கள்.

இவர்களின் தனித் தமிழீழம் கடைசியில் ஈழத்தை ஏகாதிபத்தியங்களுக்கு திறந்து விடுவதில் கொண்டு போய் விட்டுள்ளதே அந்த மர்மம் குறித்தும் அலாதியான மௌனம் சாதிப்பார்கள் அட்டை கத்தி சூரர்கள்.

ஒருவேளை அமெரிக்க தேசியம் இவர்களின் கொள்ளுத் தாத்தா வழி உறவோ?

என்னவோ போங்க... சுயமாரியாதை, நேர்மை, கள்ள மௌனம் இவையெல்லாம் பிறரிடம் இருக்கும் பார்ப்ப்னியத்தை எதிர்ர்கும் போது மட்டும்தான் ஞாபகத்துக்கு வந்து விமர்சிப்பர் போலும், தம்மிடமே ஒளிந்து கொண்டு வேலையை காட்டும் பார்ப்னியத்தை சுட்டிக் காட்டினால் நண்பர்களின் அகராதியிலிருந்து மேற்சொன்ன வார்த்தைகள் ஓடி ஒளிந்து கொள்கின்றன.

அசுரன்


Related Article:

ம.க.இ.கவின் நிலைப்பாடு என்பது சர்வாதேசியமே

மக்கள் தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய கருணா என்ற பாசிச கூலிக்கும்பல் அல்ல

"புரளி பேசும் போலி தமிழ தேசியவாதிகள்"

Wednesday, July 11, 2007

புரளி பேசும் போலி தமிழ தேசியவாதிகள்

குழலி அவர்கள் மக இகவின் இடஓதுக்கீடு நிலைப்பாடு குறித்து எதுவுமே எழுதாமல் வெறுமனே அது பார்ப்ப்னிய நிலைப்பாடு என்று மட்டும் எழுதி சென்றுள்ளார். என்ன நிலைப்பாடு என்று முதலில் எழுதட்டும் அவர். இடஓதுக்கீடு விசயத்தில் மக இகவின் நிலைப்பாட்டை ஒட்டி நான் இட்ட சில பல துணுக்கு கட்டுரைகள். ஒரு விரிவான ஆங்கில கட்டுரை இவற்றையெல்லாம் ஆதரித்தவர்கள்தான் இதே குழலி உள்ளிட்டவர்கள். அப்பொழுது அதிலிருந்த பார்ப்ப்னிய கருத்து அவர்களுக்கு தெரியாமல் போன மர்மம் என்ன? இப்பொழுதும் கூட அந்த கட்டுரைகளை அவர்களால் மறுக்க இயலாது. அந்த கட்டுரைகளுக்கான சுட்டி இங்கே உள்ளது. அதை படித்து விட்டு குழலி உள்ளிட்டவர்கள் எந்தளவுக்கு அரைகுறையாக உள்வாங்கி வாதிடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். சரி மகஇகவின் நிலைப்பாடு என்ன என்று சொல்லி அது எப்படி பார்ப்ப்னியம் என்று சொல்லியிருக்கலாம் குழலி. அதை செய்ய இயலவில்லை என்பது பரிதாபத்திற்க்குரிய விசயமே.

மேலும் வர்க்க பிரிவு குறித்து மகஇகவின் நிலைப்பாடு என்பதாக முதலாளி தொழிலாளி என்ற இரண்டை மட்டும் அங்கீகரிப்பதாக இன்னொரு அரைகுறை வாதம் வைத்துள்ளார். அசுரன் முதல் பல்வேறு மகஇக ஆதரவு தளங்களில் வந்துள்ள கட்டுரைகளை படித்தாலே இந்திய சூழலில் வர்க்க பிரிவினை என்பது தொழிலாளி, முதலாளி என்ற பிரிவுக்ளை கடந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். அதுவும் மிக மிக முக்கியமாக இந்த இரண்டு பிரிவும் சிறுபான்மை என்பதை பல இடங்களில் எழுதியுள்ளோம். ஆயினும் குழலி தனது தேவைக்காக தனக்கு புரிந்த ஏதோவொன்றை மகஇகவின் நிலைப்பாடு என்று முன்வைத்து வாதாடுகிறார். அவருக்கு ஒரேயொரு கோரிக்கை மட்டுமே வைக்க விரும்புகிறேன். ஒரு விசயத்தை விமர்சனம் செய்ய முற்ப்படும் போது வெறும் உணர்வுத் தளத்திலிருந்து அனுகாமல் அதனை முழுமையாக உள்வாங்கி பின்பு பரிசீலிக்க முயற்சிக்கவும்.

மேலும் இடஓதுக்கீடு விசயத்தில் வெறுமே ஒடுக்குமுறை செய்பவர்கள் எல்லாருக்கும் இடஓதுக்கீடு கொடுக்கப்படக்கூடாது என்பதாக மகஇக வின் நிலைப்பாட்டை சொல்லி, பிறகு அதை வைத்து தலித்துக்களில் சில பிரிவினருக்கும் இடஓதுக்கீடு கொடுக்கப்படக் கூடாது என்று ம க இக வின் நிலைப்பாடு வந்தடையும் என்று கற்பனையாக வாதம் வைக்கிறார். அவரிடம் மீண்டும் ஒரேயொரு கோரிக்கைதான் மகஇகவின் நிலைப்பாடு எனன்வென்பதை புரிந்து கொண்டு பேசுங்கள் அல்லது புரளி கிளப்பாமல் அமைதியாக இருங்கள். இடஓதுக்கீடு விசயத்தில் மகஇகவின் நிலைப்பாடை இவர்கள் திரிக்கும் இடம் ஒன்றேயொன்றுதான் அதனை இப்பொழுது வெளியிட்டு எதிர்வினை புரிபவர்களுக்கு சகாயம் செய்ய விரும்பவில்லை. அவர்களே கண்டுபிடிக்க இயலுமா என்று பார்க்கட்டும். அல்லது இன்னும் ஒரிரு வாரங்கள் பொறுத்திருந்தால் இதே அசுரனில் கட்டுரை வரும்.

இந்திய தேசியத்தை ஆதரிப்பதாக இன்னுமொரு ஜல்லி. இன்றைய இந்தியா என்பது தேசிய இனங்களில் சிறைக்கூடம் என்று சொன்ன ஸ்டாலின் வழி வந்தவர்கள் நாங்கள். இந்திய தேசியம் எனப்து பார்ப்ப்னியமே என்றும், இந்தி என்பது சம்ஸ்கிருத்தத்திற்க்கு பதிலியான தேசிய ஒடுக்குமுறை ஆயுதமே என்பதுமே மகஇகவின் நிலைப்பாடு. இந்தியா என்பது அனைத்து தேசிய இனங்களும் ஒற்றுமையுடன் இணைந்த ஒரு நாடாக இருப்பதையே குழலி உள்ளிட்ட யாருமே விரும்புகிறார்கள். ஆனால் யாதர்த்தத்தில் அப்படியில்லாமல் இந்தியா என்பது ஒடுக்குமுறை சிறைக்கூடமாக இருப்பதாலேயே இன்றைய இந்திய கட்டமைப்பை எதிர்க்கிறோம். இதில் எமக்குள் வேறுபாடு இல்லை. ஆனால் இதனை சரி செய்வதாக முன் வைக்கப்படும் தீர்வில் தான் வேறுபாடு உள்ளது. அதாவது ஒவ்வொரு இந்திய தேசிய இனமும் தனியாக தனக்கான விடுதலைக்காக போராட வேண்டும் என்று பேசுகீறார்கள். இது ஏற்கனவே இந்தியாவை மேலிருந்து சுரண்டும் பார்ப்ப்னியத்தையும், ஏகாதிபத்தியத்தையும் வலுப்படுத்தும் ஒரு தீர்வே ஆகும். ஏனேனில் நமது எதிரி இந்தியாவில் உள்ள உழைக்கும் மக்கள் எல்லாரையும் ஜாதி, மதம், இனம், மொழி(தேசியம்) என்ற பெயரில் பிரித்து வைக்கும் கருத்துக்களுக்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பதோடல்லாமல், பிற்போக்கு, கழிசடைத்தன, பிழைப்புவாத கருத்துக்களை ஆழ ஊன்றும் ஊடக பலத்துடன் இந்திய மக்களை தனக்கான ஒன்றிணைக்கும் மாற்று பண்பாட்டு கலாச்சார பலத்துடனும் இருக்கிறான். இந்தியாவில் ஏதாவதொரு இடத்தில் தேசிய இனக் கோரிக்கையை முன் வைத்து போராடி மக்கள் பலத்தை வென்றெடுக்க முடிந்துள்ளதா என்று ஒரு எ-கா கொடுக்கச் சொல்லுங்கள் குழலியை. அல்லது அப்படி போராடியவர்கள் எல்லாரும் தரகு வர்க்கமாக திரிந்த மர்மம் குறித்து கருத்துச் சொல்ல சொல்லுங்கள் குழலியை.

பிரிட்டிஸ் அதிகாரி ஒருவன் தன் மனைவியிடம் இந்திய பிரிவினையை ஒட்டி சொன்னானம் - "ஒரு வெற்றிகரமான ஆளும் வர்க்கம் என்பது மக்களை எப்படி ஒன்றிணைப்பதில் என்பதில் அல்ல மாறாக எப்படி பிரிப்பது என்பதில் நிபுனத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்' என்று. இவர்களின் தனித் தேசிய தீர்வு என்பது அப்படிப் பட்டதே. மாறாக பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தேசிய கூட்டு சர்வாதிகாரத்தை தீர்வாக முன் வைக்கிறது மகஇக. இதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தை தேசிய இன ரீதியாக பிரித்து ஒன்றுடன் ஒன்று மோத விடுவதை தவிர்க்கிறது. இங்கு மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இந்தியா போன்ற நாடுகளில் தேசிய இனக் கோரிக்கையை முன் வைத்து செய்யப்படும் எந்த போராட்டமும் வெற்றி பெறாது. ஏனேனில் தேசின இன உணர்வு என்பதே ஜனநாயகத்தின் சுவை அறிந்த சமூகத்தின் உணர்வு ஆகும். அப்படி ஒரு வரலாற்று கட்டத்தில் இந்தியா இல்லை. இன்றைக்கு கர்நாடகாவில் தேசிய இன வெறி என்பது நிலபிரபுத்துவ சக்திகள் தங்களின் கீழே ஜனநாயகமின்றி திரண்டுள்ள மக்களை ஆட்டு மந்தை கூட்டமாக பயனபடுத்தவே உபயோகிக்கிறதே அன்றி அது எந்த வகையிலும் தேசிய இனத்தின் வெற்றிக்காக அல்ல. இதனை கன்னட மொழி கலாச்சாரம், பண்பாட்டின் சிதைவிலிருந்தே புரிந்து கொள்ளலாம். மாறாக ஓப்பீட்டளவில் இந்தியாவிலேயே தேசிய முதலாளித்துவம் வளர்ந்துள்ள தமிழகத்தில்தான் தேசிய இன உணர்வு ஓரளவு வீரியமாக உள்ளது. இதனாலேயே பிற எந்த இந்திய மொழிகளையும் விட தமிழ் தனது தனித்துவத்தை பேணுவதில் ஒரு படி முன்னே இருக்கும் வாய்ப்பை பெற்றது.

அப்புறம் தமிழீழம் குறித்து கள்ள மௌனம் சாதிப்பதாக ஒரு ஜல்லி. ராமதாஸை விமர்சனம் செய்ததில் குழலி இந்தளவுக்கு கோபம் கொண்டவராய மாறிவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. தமிழீழத்தை பொறுத்தவரை விடுதலைப் புலிகளும் சரி, லங்காவின் தேசிய வெறி கும்பலும் சரி மக்களை பிரித்து ஏகாதிபத்திய சேவை செய்வதில் மட்டும் ஒன்றிணைந்துள்ளனர் என்பதை பல முறை எழுதியுள்ளது புதிய ஜனநாயகம் பத்திரிக்கை. விடுதலைப் புலிகளின் சுய அழிவுப் பாதையை பல முறை நட்பு ரீதியாக விமர்சித்துள்ளது புஜ பத்திரிக்கை. இந்திய தேசியம் துணை வல்லரசாக இங்கு செயல்பட்டு இலங்கையில் தனது அரசு நிறுவனங்களை சுரண்ட விடுவதற்க்கும், பன்னாட்டு, தரகு முதலாளிகள் இலங்கையின் வளங்களை சுரண்டுவத்ற்க்கும் புலிகளும் சரி, இலங்கை தேசிய வெறி கும்பலும் சரி எந்தவொரு இடைஞ்சலும் செய்வதில்லை. இதனாலேயே இந்த இரண்டு பேரும் ஏகாதிபத்தியங்களால ஊட்டி வளர்க்கப்படுகிறார்கள். புலிகள் வேண்டுமானால் தமது ஆட்சிப் பிரதேசத்தில் ஏகாதிபத்தியங்களீன் விருப்பத்திற்க்கு ஆபத்து விளைவிகக் முயலட்டும் பிறகு தெரியும் சேதி.

தமிழ் மொழி குறித்து, அதன் மீதான தாக்குதல் குறித்தும், தமிழர்களின் மீது தாக்குதல் நடக்கும் போது எல்லாம் வெகு விமரிசையாகவே எழுதியுள்ளது புஜ. குறிப்பாக தமிழர்களின் அமைதியில் தீ வைத்து கொளுத்து என்று மும்பையில் தமிழர்கள் சிவசேனா கும்பலால் தாக்கப்பட்ட போது உணர்ச்சி பொங்க எழுதியவர்கள்தான் மக இகவினர்(தமிழகம் அமைதிப் பூஙக் என்று பெயரெடுத்திருந்த அவமானத்தை குத்தி காட்டி).

இன்று தேசியம் குறித்து பேசும் இவர்கள் எல்லாருமே ராஜீவ் காந்தி ஈழ படுகொலைகளுக்காக பலி வாஙக்ப்பட்ட போது இந்திய தேசியத்தின் பாத தாங்கிகளாக மாறி பதுங்கிக் கொண்டார்கள். அப்பொழுதும் கூட ஈழத் தமிழர்களின் உரிமைக்காக மாநாடு நடத்தியது மகஇகதான். இத்தனைக்கும் ராஜீவ் கொலையில் மகஇக தொடர்பு படுத்தப்பட்டு அதன் சில தோழர்கள் சிறையில் இருந்து, அடக்குமுறைக்கு ஆளாகியது. இத்தனை நடந்த பிற்பாடும் உடனடியாக ஈழத் தமிழர்களின் உரிமைக்காக தைரியமாக, சுயமரியாதையுடன் மாநாடு நடத்தியது ம க இக. அப்படி ஒரு மாநாடு நடத்த அரங்கத்தை வாடகைக்கு கேட்ட பொழுது பயந்து கொண்டு தர மறுத்த சுயமரியாதை சிங்கம் வேறு யாருமல்ல நண்பர்களே அது கி. வீரமணீ அவர்கள் தான்.

இன்று இந்திய தேசியத்தை ஆதரிப்பதாக குற்றம் சாட்டப்படும் மக்இக தான் இந்தியா தேசியத்தின் ஒவ்வொரு ஒடுக்குமுறையின் மீதும் கருனையின்றி எதிர்வினை தொடுத்துள்ளது. எந்தவொரு இழப்புக்கும் அஞ்சாமல் செயப்பட்டுள்ளது. கடி நாய்கள் என்று பெயர் வாங்கிய மகஇக வினர்தான் எம்ர்ஜென்ஸி சமயத்திலும் சரி, ராஜிவ் பலிவாங்கப்பட்ட போதும் சரி தைரியமாக உரக்க ஈழத் தமிழர்களின் குரலையும், தேசிய உரிமையின் குரலையும் ஒலித்தனர். ஆனால் இன்று தேசியம் என்று ஜல்லியடித்த அத்தனை பேரும் இந்திய பார்ப்ப்னிய தேசியத்தின் அதிரடி தாக்குதலின் போது பதுங்கி ஒளிந்து கொண்டனர். வீரமணி உள்ளிட்டவர்கள் எமர்ஜென்ஸியை ஆதரித்து அறிக்கை விட்டனர். இதுதான் இவர்களின் அரசியல் நடைமுறை. இவரக்ள் நம்மை குற்றம் சொல்வது அதுவும் எதுவுமே புரிந்து கொள்ளாமல் அரைகுறை அறிவுடன் ஜல்லியடிப்பது ப்டு வக்கிரமானதாக இருக்கீறது.

இதே தமிழ்மணத்தில் திராவிட கருத்தாக்கத்தை மறுத்து வஜ்ரா என்பவன் எழுதிய பொழுது அதனை எதிர்த்து வாதிட்டவர்கள் யார் என்பதை கொஞ்சம் பிரட்டி பார்க்கட்டும் நண்பர் குழலி. ஆதாரம் வேண்டுபவர்கள் நண்பர் முத்து தமிழினியின் தளத்தில் எனது கருத்துக்களை பதிய வைத்து அதை அவரும் பாராட்டி எழுதியதை படித்துக் கொள்ளலாம்.

பார்ப்ப்னியத்தை எதிர்க்கும் கட்சிகள் என்று இவர் யாரை சொல்கிறார் என்றால் ராமதாஸ், திக, திமுக போன்றவற்றை. உண்மையில் பார்ப்ப்னியத்தை எதிர்க்கும் கட்சிகளுடன் மகஇக இணைந்து போராடி வருகிறது. பெரியார் திக முதல் சிதம்ப்ரம் ஆறுமுக சாமி வரை. நேற்றைய விடுதலை சிறுத்தைகள் முதல் தமிழ் தேசிய தோழர்கள் வரை பல அமைப்புகள் சமரசமின்றி பார்ப்ப்னியத்தை எதிர்த்த போதெல்லாம் துணை நின்று போராடியவர்கள் மகஇகவினர்தான்.

அல்பவாதம் என்பது மிடில் கிளாஸின் இயல்பு எனில் அதனை மிக வலுவாக தாக்கி கலாச்சார பிரச்சாரம் செய்யும் அமைப்பு மகஇகதான். மற்றபடி நக்சல்பாரி இயக்கங்கள் குறித்த வரலாறை தெளிவாக படிக்க குழலியை பரிந்துரைக்கிறேன். மார்க்ஸியம் குறித்தும் சித்தாந்த திரிபு குறித்தும், இடது வலது சந்தர்ப்பவாதம் குறித்தும் அவர் தனது அறிவை வளர்த்துக் கொண்டு விமர்சன்ம் செய்தால் எதிர்வினை எழுப்ப எமக்கு வசதியாக இருக்கும். அதை விடுத்து தனது அறிவு புலமை மீது வாசகர்கள் நம்பிக்கை வைத்து தமது ஆதரமற்ற கருத்துக்களை நம்ப வேண்டும் என்ற அடிபப்டையில் எழுதினால் அது வாரமலரில் வரும் கிசு கிசுவைவிட எந்த வகையிலும் உயர்ந்த தரமன்று.

தோழர்கள் கோபப்பட்டு தொலை பேசி செய்ததாக புரளி சொல்லும் குழலி அதற்க்கான ஆதரத்தை வைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறேன். அதை செய்யும் நேர்மையிருந்தால் பேசட்டும்.

ஒட்டு மொத்தமாக ராமதாஸை விம்ரசனம் செய்ததை நேர்மையாக எதிர் கொள்ளும் நெஞ்சுரம் இன்றி இப்படி புரளிகளின் பின்னால் ஒளிந்து கொள்ளும் அவல நிலைக்கு குழலி தள்ளப்பட்டுள்ளது வருத்தம் தரும் விசயமே.

அசுரன்


இடஓதுக்கீடு முதல் தேசிய இன உரிமைகள், தமிழீழம் வரை இவர்கள் எம்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை தர்க்க ரீதியாகவும் தரவு ரீதியாகவும் பல முறை அம்பலப்படுத்தி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. அவற்றுக்கு இதுவரை பதில் சொல்ல இயலாத தரகு வர்க்க அரசியல்வாதிகளின் ரசிகர்கள் வெறுமே ஒரு சில புரளிகளையே மீண்டும் மீண்டும் கடை பரப்புகிறார்கள். தமிழ் சர்க்கிள் தளத்தில் இது குறித்து சிறப்பான இரண்டு கட்டுரைகள வெளியாகியுள்ளன.

இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?

பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு : மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின்: சமரசம்!

Monday, July 09, 2007

இந்திய பயங்கரவாதம் ஒரு அறிமுகம் - பாசிசத்துடனான வரலாற்று தொடர்பு

யங்கரவாதம் தளத்தில் பார்ப்பனிய பயங்கரவாதம் தனக்கான அமைப்பு வடிவங்களையும், தேசிய வெறி பிரச்சார உத்திகளையும், சித்தாந்த அடிப்படைகளையும் பாசிசத்தை உருவாக்கிய முசோலினியிடமிருந்து கற்றுக் கொண்டதையும், முசோலினிக்கும் RSS பயங்கரவாத இயக்கத்திற்க்கும் இருந்த உறவுகளையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் கட்டுரை. படித்து கருத்துக்களை விட்டுச் செல்லுங்கள். நண்பர்களூக்கு அறிமுகப்படுத்துங்கள்.

Introduction to the Indian Terrorists - The Historic Facist Link

அசுரன்

Friday, July 06, 2007

விவசாயத்தின் பேரழிவும் - உயிர்ம எரிபொருளும்!

மாற்றுப் பயிர்-மாற்று எரிபொருள்:
ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் ஏகாதிபத்திய சதி!


காட்டாமணக்கு - சாலையோரங்களில் கேட்பாரின்றி வளரும் புதர்செடி. கிராமங்களில் இதனை வேலியாக நட்டு வைப்பதுண்டு. அதன் நச்சுத் தன்மையை ஆடு-மாடுகள் கூட அறிந்திருப்பதால். இச்செடியை முகர்ந்து கூட பார்க்காமல் விலகிச் சென்று விடும். அப்பேர்ப்பட்ட நச்சுச் செடியான காட்டாமணக்கைப் பயிரிட்டு பணம் சம்பாதியுங்கள் என்று ஆட்சியாளர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறையை சவூதி அரேபியாவாக மாற்றிக் காட்டப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர், நெல் பயிரிடுவதை விட்டு மாற்றுப் பயிர் முறைக்கு மாறச் சொல்லி விவசாயிகளுக்கு உபதேசிக்கிறார். 2004-ஆம் ஆண்டிலேயே தஞ்சை மாவட்டத்தில் மக்காச்சோளமும், காட்டாமணக்கும் பயிரிட்டு விவசாயத்தை முன்னேற்றத் திட்டம் தீட்டினார் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன், கட்டாமணக்கும் மக்காச் சோளமும் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய சிறப்பு விவசாய மண்டலங்களை நிறுவ வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்றி விடுவதில் ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்களே; ஒருவேளை நாட்டு மக்களாகிய நாம்தான் இன்னமும் பத்தாம்பசலித்தனமாக இருக்கிறோமோ என்று எண்ணிக் கொண்டோ ம். அது ஒருபுறமிருக்கட்டும். ஆட்சியாளர்களும் வேளாண் விஞ்ஞாணிகளும் எதற்காக காட்டாமணக்கைப் பயிரிடச் சொல்கிறார்கள்? காட்டாமணக்கு பயிரிட்டால் ஏழை விவசாயி எப்படி குபேரனாக முடியும்?

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாம் ஆயிலையும், காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சோயா எண்ணெய், புங்கை எண்ணெய் முதலானவற்றை டீசலில் 5% வரை கலந்து எரிபொருளாகப் பயன்படுத்தலாம். இதனை "பயோ டீசல்" என்கின்றனர். இதுதவிர பெற்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களில் எத்தனால் எனப்படும் எரிசாராயத்தைக் கலந்து பயன்படுத்துகின்றனர். எரிசாராயத்தை உருவாக்க கரும்பு, மக்காச்சோளம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாற்று வகை எரிபொருட்கள் தாவரங்களிலிருந்து உருவாக்கப்படுவதால் இவற்றை "உயிர்ம - எரிபொருட்கள்" (Bio-Fuel) என்கின்றனர்.

இத்தகைய உயிரம எரிபொருட்களுக்கும் பயோ டீசலுக்குமான தேவை உலகெங்கும் அதிகரித்துள்ளது. தீடிரென இதற்கான தேவை அதிகரிக்கக் காரணம் என்ன?

ஆண்டுதோறும் பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. வரைமுறையின்றி நிலக்கரி, பெட் ரோலியப் பொருட்களை எரித்து வருதால்; அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் விளைவாக உலகம் மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே போகிறது. இதன் விளைவாக, வடதுருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள நிரந்தரப் பனிப் பாளங்கள் உருகத் தொடங்கி கடலை நோக்கி வேகமாக ஓடுகின்றன. இதனால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து பல சிறிய தீவுகள் கடலில் மூழ்கி அழிந்து போகும்; வளிமண்டல வெப்பநிலை உயர்வால் வறட்சியும் வெள்ளமும் அடுத்தடுத்து நிகழும்; காடுகள் பற்றியெரியும்; வளிமண்டலம் எங்கும் புகைமயமாகும்; பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முதல் மனிதன் வரை அழிய நேரிடும்.

இப்பேரழிவைத் தடுக்க. பெட் ரோல் - டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அல்லது அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் அளவையாவது மட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச் சூழல்வாதிகள் எச்சரித்து வருகின்றனர். புவி வெப்பநிலை அதிகரிப்புக்கும் சுற்றுச் சூழல் நஞ்சாகி பேரழிவின் விளிம்பில் உலகம் தத்தளித்துக் கொண்டிருப்பதற்க்கும் ஏகாதிபத்தியங்களின் இலாபவெறி கொண்ட உற்பத்தி முறையும் போர் வெறியுமே முதன்மையான காரணம். சுற்றுச் சூழலால் நஞ்சாகிப் பேரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ள உலகை சீரமைக்க, ஏகாதிபத்திய நலனுக்கேற்ப ஏழை நாடுகளில் காடு வளர்ப்புத் திட்டங்களை செயப்படுத்திய ஏகாதிபத்தியங்கள், நச்சுத் சூழலிருந்து உலகைக் காப்பதில் தாங்கள் அக்கறை கொண்டிருப்பது போல் நாடகமாடின. இப்போது, பயோ டீசல் மற்றும் உயிர்ம எரிபொருட்களைக் கொண்டு, கரிம வாயுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கிளம்பியுள்ளன.

அமெரிக்க அதிபர் புஷ் தனது 2007 - ஆம் ஆண்டின் அரசுக் கொள்கை உரையில், எரிபொருளுக்காக் பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கும் நிலையை மாற்ற, "பத்துக்கு 20" என்ற திட்டத்தை குறிப்பிட்டார். அதாவது 2010-ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா 20% வரை தனது பெட் ரோலிய பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேந்தும் என்றார். இதற்காக, உயிர்ம எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியமும் 2007 மார்ச்சில் நடந்த மாநாட்டில், போக்குவரத்துத் துறையில் உயிர்ம எரிபொருள் பயன்பாட்டை 2020-க்குள் 10% அளவுக்கு உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் பின்னணியில்தான், "சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்; புவி வெம்பலைத் தணிப்போம்; உயிர்ம எரிபொருளைப் பயன்படுத்துவோம்; காட்டாமணக்கைப் பயிரிடுவோம்" என்ற கூச்சல் ஆரவாரமாக எழுப்பப்படுகிறது.

புவி வெம்பலைத் தணித்து சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான நல்ல திட்டம் போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் மிகப் பெரிய ஏகாதிபத்திய சதி அரங்கேறி வருகிறது. இத்தகைய மாற்றுப் பயிர் - மாற்று எரிபொருள் திட்டம் ஏகாதிபத்தியங்களின் அன்புக் கட்டளைப்படி உலகின் பல ஏழை நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் அனுபவம் என்ன?

மெக்சிகோ நாட்டில், அமெரிக்காவின் எரிசாராயத் தேவைக்காக இனிப்புச் சோளப் பயிரின் சாகுபடி பரப்பு அதிகரித்ததால், வெள்ளைச் சோளம் உற்பத்தி குறைந்தது. வெள்ளைச் சோளத்திலிருந்துதான் மெக்சிக மக்களின் அன்றாட உணவாகிய "டார்ட்டில்லாஸ்"-இன் விலையை 37%-க்கும் உயர்த்தி விட்டது. அடிப்படை உணவின் தட்டுப்பாடு - விலையேற்றத்தால் மெக்சிகோ உழைக்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தென்னமெரிக்காவிலுள்ள பிரெசில் நாட்டில் அமெரிக்க தேவைக்காக விளைநிலங்களில் கரும்பும் இனிப்புச்சோளமும் பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது. அவற்றின் விளைபரப்பை அதிகரிக்க, ஏறத்தாழ 9 கோடி ஏக்கர் அளவுக்கு மழைக்காடுகளான அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இன்னும் 15 கோடி ஏக்கர் காடுகளை அழிக்க அந்நாட்டின் 'முற்போக்கு' அரசு தீர்மானித்துள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரித்ததும், தட்டுப்பாடு காரணமாக 2006--இல் பிரேசில் நாட்டில் சர்க்கரை விலை இரண்டு மடங்கு அதிகரித்தது.

பாமாயில் எனப்படும் பனை எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் டீசலுடன் கலந்து எரிப்பதால் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் எண்ணெய்ப் பனை சாகுபடிக்காக காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தியாகும் பாமாயில் 40%-க்கு மேல் எரிபொருளுக்காக ஏற்றுமதி செய்யப்படுவதால், சமையலுக்கான பாமாயில் தட்டுப்பாடு காரணமாக விலையேறிவிட்டது.

பிரேசிலில் இறைச்சி தொழிலுக்கு உறுதுணையாகப் பயிரிடப்பட்டு வந்த சோயாபீன்ஸ், இன்று மாற்று எரிபொருளாக (எண்ணெயாக) மாற்றப்படுவதால், அந்நாட்டின் ஒட்டுமொத்த சோயா சாகுபடியே அமெரிக்காவுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக பிரேசிலுல் பன்றி மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் பெரும் நெருக்கடியில் சிக்கி வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆடு-மாடுகளின் மேய்ச்சலுக்கான நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சோயா பண்ணைகளாக மாற்றப்பட்டு விட்டதால் ஏழை-நடுத்தர விவசாயிகள் ஆடு-மாடுகளைக் கூட வளர்க்க முடியாமால் தத்தளிக்கின்றனர். "நேற்று வரை சோயா எங்களுக்கு வாழ்வளித்த பயிர்; இன்று அது எங்கள் வாழ்வைப் பறிக்க வந்துள்ள கொலைகாரப் பயிர்" என்று குமுறுகிறார்கள் பிரெசில் விவசாயிகள்.

இந்த உண்மைகள் ஒருபுறமிருக்க, உலகின் பல ஏழை நாடுகளின் உணவுத் தட்டுப்பாடும் பட்டினிச் சாவுகளுக்கான பேராபாயம் இந்த மாற்றுப் பயிர் - மாற்று எரிபொருள் திட்டத்தால் உருவாகியுள்ளது. உலகெங்கிலுமுள்ள நிலங்களில் ஏறத்தாழ 40% பரப்பளவுக்கு பாரம்பரிய விவசாயம் நடந்து வருகிறது. இந்த விளைநிலங்களிலிருந்துதான் மாற்று எரிபொருள் - மாற்றுப் பயிருக்கான நிலத்தை ஒதுக்க முடியும். அமெரிக்காவின் கனவுத் திட்டமான "பத்துக்கு 20" திட்டத்தில் பாதியளவுக்கு நிறைவேற்ற, அதாவது அந்நாடு 10% அளவுக்கு மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டுமானால், உலகெங்கிலுமுள்ள விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள், உணவு தானிய உற்பத்தியைக் கைவிட்டாக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பட்டினி கிடக்க வேண்டும்.

ஒரு கார் டாங்கில் ஊற்றப்படும் எரிசாராயத்தை உருவாக்கத் தேவையான உணவு தானியத்தைக் (சோளம்) கொண்டு ஒரு வருடத்துக்கு ஒரு மனிதனின் பசியைப் போக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பல கோடி டன் உணவு தானியங்கள் கார்களில் ஊற்றப்படும் எரிசாராயமாக மாறும் என்றால், எஞ்சியிருக்கும் உணவு தானியங்களுக்காக உலகெங்குமுள்ள ஏழை மக்கள் அடித்துக் கொள்ளும் அபாய நிலை உருவாகும். எனவேதான், மார்ச் 2007-இல் அமெரிக்க அதிபர் புஷ் மாற்று எரிபொருள் குறித்த "பத்துக்கு 20" திட்டத்தை அறிவித்தவுடனேயே அமெரிக்க எதிர்ப்பாளரான கியுபா நாட்டின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ "இத்திட்டத்தின் மூலம் மனித இனப் படுகொலைகளை அமெரிக்கா உலகமயமாக்கியுள்ளது" என்று சாடினார்.

உயிர்ம எரிபொருளுக்கு தரப்படும் முக்கியத்துவத்தின் பின்னணியில் இன்று ஏழை நாடுகளின் உணவுப் பாதுகாப்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வசதி படைத்தவர்களின் சொகுசுக் கார்கள் சாலைகளில் சறுக்கிக் கொண்டு ஓடுவதற்க்காகவும், ஏகாதிபத்திய நாடுகளின் எரிபொருள் தாகம் தீர்வதற்காகவும், ஏழை நாடுகள் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் ஒழித்துக் கட்டும் இந்த ஏகாதிபத்திய சதிக்கு மைய - மாநில அரசுகள் விசுவாசமாகச் சேவை செய்து வருகின்றன.

தமிழக அரசு 2004-ஆம் ஆண்டிலேயே கரும்பாலைகளில் வடிக்கப்படும் சாராயத்தின் அளவைக் கூட்டிக் கொள்ளவும், புதிதாக வடிப்பாலைகள் நிறுவி எத்தனால் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. பயோ டீசல் உற்பத்திக்கு 5% வரிவிலக்கு அளித்துள்ளது. ஆந்திர அரசு, அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காட்டாமணக்கு மற்றும் காட்டாமணக்கு வகையைச் சேர்ந்த "ஜெட்ரோபா" முதலானவற்றைப் பயிரிட பல சலுகைகளை அறிவித்துள்ளது. பல வங்கிகள் இம்மாற்று எரிபொருள் உற்பத்திக்குக் கடன் வழங்குகின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பெரியார் புரா, ஆர். எஸ். எஸ் புரா முதலான பெருந்தொண்டு நிறுவனங்களும் உயிர்ம எரிபொருள் திட்டங்களை விவசாயப் பகுதிகளில் செயல்படுத்தி வருகின்றன.

சுற்றுச் சூழலைக் காப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள உயிர்ம எரிபொருட்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுமா? இது குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் இதற்க்கு நேரெதிரான முடிவுகளையே வெளியிட்டுள்ளன.

எரிசாராயம் கலந்த பெட் ரோல் வெளியிடும் கரிம வாயுக்களின் பருமம் ஓப்பீட்டளிவில் குறைவு என்பது உண்மைதான். ஆனால் எரிசாராயத்துக்காக வளர்க்கப்படும் கரும்பு, இனிப்புச் சோளம் ஆகியவற்றுக்கு இடப்படும் பூச்சி மருந்துகள் - உரங்கள்; கருமபை ஆலையில் அரைத்து சாராயம் வடிக்கும் வரை எரிபொருள்கள் வெளியேற்றும் கரிம வாயுக்கள்; எரிசாராயத்தை விற்பனை நிலையம் வரை கொண்டு செல்லும் வாகனங்கள் வெளியேற்றும் புகை என ஒட்டு மொத்த கரிம வாயுக்களின் பருமத்தை கணக்கிட்டால் எல்லா கழுதையும் ஒன்றுதான்.
மேலும், மாற்றுப் பயிர் சாகுபடியானது சுற்றுச் சூழலைக் காப்பதற்கு மாறாக, பல நாடுகளில் சுற்றுச் சூழலையே நஞ்சாக்கி விட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தென்னமெரிக்காவில், அமெரிக்காவின் எரிபொருள் பசிக்காக தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதால், பூமி வெம்பம் மேலும் தீவிரமாகி விட்டது. அங்குள்ள ஆண்டேஸ் மலைத் தொடரின் பனி சூழ்ந்த சிகரங்கள் உருகத் தொடங்கி விட்டன. இந்தோனேஷியா முழுவதும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காக எண்ணெய்ப்பனையும் காட்டாமணக்கும் காடுகளை அழித்து பயிரிடப்பட்டுள்ளதா, சுற்றுச் சூழல் சீர்கேட்டில் அந்நாடு உலகின் மூன்றாவது இடத்தை எட்டிவிட்டது.

மாற்று எரிபொருளுக்காக காடுகள் அழிக்கப்படாமலிருந்தால், அந்தக் காடுகளே சுற்றுச் சூழலைக் காப்பதில் மாற்று எரிபொருளை விட முன்னணியில் இருந்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உயிர்ம எரிபொருளை உற்பத்தி செய்யப் பயிரிடப்படும் மாற்றுப் பயிர்களின் அமோக விளைச்சலுக்காகக் கொட்டப்படும் உரமும் பூச்சிக் கொல்லிகளும் பெட் ரோலியப் பொருட்கள்தான். பெட் ரோலியப் பயன்பாட்டைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு நிலத்தையும் நீரையும் அதே பெட் ரோலியப் பொருட்களால் நஞ்சாக்குவது எப்பேர்ப்பட்ட புத்திசாலித்தனம்! மேலும், ஏகாதிபத்தியங்களின் எரிபொருள் தாகத்திற்க்காக காட்டாமணக்கு, ஜெட் ரோபா, சோயா, சோளம் என ஒற்றைப் பயிர் முறைக்கு நிலம் மாற்றப்பட்டால் நிலம் மலடாகிப் போகாதா?

பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, மராமத்துப் பணிகளை அறவே புறக்கணித்து, தனது வணிகத் தேவைக்காக பருத்தி, அவுரி முதலானவற்றைக் கட்டாயமாகப் பயிரிட வைத்து பெரும் உணவுப் பஞ்சத்தை விளைவித்து நமது முன்னோர்களைக் காவு கொண்டது அன்றைய காலனியாதிக்கம். இன்று தனியார்மயம் - தாராளமயத் தாக்குதலால் விவசாயத்தைத் திவாலாக்கி ஏகாதிபத்திய தேவைக்காக காட்டாமணக்கையும் இனிப்புச் சோளத்தையும் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்றி, உணவுக்காக நிரந்தரமாகக் கையேந்தும் நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டுள்ளது மறுகாலனியாதிக்கம். அன்று, கட்டபொம்மன் கோட்டையை இடித்த வெள்ளைக்காரன் அந்த இடத்தில் எள்ளையும், ஆமணக்கையும் விதைத்தான். இன்று, உணவுக்கான விவசாயத்தை ஒழித்து கள்ளியையும் காட்டாமணக்கையும் விதைக்கின்றன அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். மாற்று எரிபொருள் எனும் வஞ்சக வலை விரித்து ஆதிக்கம் செய்யும் கிளம்பியுள்ள ஏகாதிபத்திய சதியை அம்பலப்படுத்தி முறியடிப்பதும், விவசாயிகளை ஓரணியில் திரட்டிப் போராடுவதுமே புரட்சிகர - ஜனநாயக சக்திகளின் இன்றைய அவசரக் கடைமையாகியுள்ளது.

இரணியன்

புதிய ஜனநாயகம் (ஜூலை 2007)


**
இப்படியாப்பட்ட ஏகாதிபத்திய சேவை செய்ய இந்திய விவசாயத்தை கூட்டிக் கொடுப்பவர்களில் ஒருவர்தான் சுயமரியாதைச் செம்மல், சமூக நீதி காத்த வீராங்கனையின் அன்பு நண்பர் கி. வீரமணி அவர்கள். இந்த வேலையை செய்பவர்களை என்ன பெயர் கொண்டு அழைப்பார்கள் என்பதை அசுரனில் வந்த முந்தைய கட்டுரைகள் செவ்வனே உரைக்கின்றன.


Related Posts:

மாமாவுக்கு சோப்பு போடும் அடிவருடி - வீரமணி தொடர்கிறார்

தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை

ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொருவன் கன்னத்தை காட்டிக் கொடு - புதிய புரா

வீர'Money' - சுயமரியாதை பிரச்சாரமா? மாமா வேலை விபச்சாரமா?

ஏகாதிபத்தியக் கைக்கூலிகளான NGOகளையும் & பெரியார் புராவையும் அம்பலப்படுத்தும் நூல்கள் & கட்டுரைகள்

மாமா வேலை பார்க்கும் வீரமணியும், அதற்கு எடுபிடி வேலை பார்க்கும் லும்பன்களும்


Related Posts with Thumbnails