TerrorisminFocus

Tuesday, June 03, 2008

பாஜக - தேச வெறி நெருப்பில் நேபாள மீன் சுட்டு சாப்பிடும் திட்டம் ரெடி!!!

ர்நாடக வெற்றியை தொடரந்து மத்தியில் ஆட்சி அமைக்கும் நோக்கத்துடன் காய் நகர்த்த துவங்கியுள்ளது பாஜக. தனது வெளிநாட்டு கொள்கை அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது பாஜக. அதனையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நேபாளம் குறித்து சொன்னவைதான் கீழே உள்ள பத்திரிகை செய்தி.

கொழுப்பெடுத்த பாரதிய ஜனதாவின் கருத்துக்களை நோக்குங்கள். ஏற்கனவே காக்கி அரைடவுசர்கள் நேபாளத்தில் மன்னராட்சியை காப்பாற்ற பகிர பிரயத்தனம் செய்து மண்ணை கவ்வியுள்ளனர். தமது நேரடி முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில். நியாயவான்கள் போல வேசம் கட்டிக் கொண்டு புரளி பேசி வருகின்றனர் தற்போது. வழக்கம் போல தனது புரளி பிரச்சாரங்களை மெது மெதுவாக செய்து பிறகு தாக்குதல் தொடுக்கும் அதே தந்திரத்தை கைகொள்ள தொடங்கியுள்ளது இந்த பயங்கரவாத கட்சி.

இனி எதிர்காலத்தில் குட்டியூண்டு நாடு நேபாளம் இந்தியாவில் நடக்கும் பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு பயங்கரவாதிகளை தயாரிக்கும் நாடு, எல்லை தாண்டிய பயங்கரவாதிகளை உருவாக்கும் நாடு என்று பிரச்சாரம் செய்யப்படும். இந்திய தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் எல்லா அட்டுழியங்களும் வழக்கம் போல செய்யப்படும்.

இந்த சின்ன செய்தியில்தான் எத்தனை பொய்களை சொல்கிறது பாஜக...(சிகப்பு எழுத்தில் உள்ளவற்றை கவனிக்கவும்).

மாவொயிஸ்டுகள் பயமுறுத்தியே இத்தனை வோட்டு வாங்கியதாக பொய் சொல்கீறார்கள் இவர்கள். இதே குற்றச்சாட்டை மன்னர் ஆதரவு கும்பல் (வேற யாரு RSS நாய்கள்தான்) வைத்த போது. முன்னாள் அமெரிக்க அதிபர் கார்ட்டர் உள்ளிட்டோ ர் மாவொயிஸ்டுகள்தான் பிற கட்சியினாரால் மிரட்டி தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர் என்பதை குறிப்பிட்டதுடன் இந்த தேர்தல் மிக ஜனநாயகமான முறையில் நடந்துள்ளது என்று பாராட்டுகிறார்கள்.

//The elections were given a clean chit by international observer missions, including the United Nations, the European Union and the Carter Centre. All these bodies praised Nepal's Election Commission -- assisted by the United Nations Mission in Nepal (UNMIN) -- for smoothly executing the elections across the country. //

இதுவும் சர்வதேச சமூகம் இந்த தேர்தல் குறித்து சொன்னதுதான். இந்த தேர்தல் வாக்கு எடுப்பு திறந்த வெளியில் நடந்ததால் மொள்ளமாறித்தனம், கள்ளவோட்டு போன்றவை செய்ய வசதியில்லாமல் போய்விட்டது. விசயம் இப்படியிருக்க வழக்கம் போல பொய்களை நம்பியே அரசியல் செய்யும் பயங்கரவாத அமைப்பான கா(லி)வி கும்பல் இதிலும் பொய் சொல்கிறது.

மூன்றில் ஒரு பங்கு ஓட்டுதான் மாவோயிஸ்டுகள் வாங்கியுள்ளனர் எனவே மாவோயிஸ்டுகள் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பாஜக மிரட்டுகிறது. அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட்டு நாட்டாமைத்தனம் செய்வது அநாகரிகமானது என்ற அடிப்படை நாகரிகம் இவர்களுக்கு ஆதரவான ஒரு வெறியன் ஆட்சி செய்தால் மட்டுமே இவர்களுக்கு ஞாபகம் வரும் போலும். இதே நேபாளத்தில் இந்நேரம் அந்த மன்னன் ஆட்சி செய்து அயோக்கியத்தனமாகா ஏதேனும் செய்திருந்தால் இவர்கள் அது அடுத்த நாட்டு விவகாரம் என்று கள்ளமௌனம் சாதித்திருந்திருப்பர். மக்களின் ஆதரவே இன்றி இதுவரை ஆட்சி செய்த மன்னருக்கு பாஜக வெறியர்கள் காவடி தூக்கிய பொழுது இந்த வோட்டு Sharing விசயம், people's Mandate போன்ற விசயங்கள் மறைந்த இடம் தெரியவில்லை. அதை விடுங்கள், இவர்கள் தற்போதைய கர்நாடக தேர்தலில் கூட காங்கிரசை விட கம்மியாகத்தான் வோட்டு வாங்கியுள்ளனர் (பாஜக 33.9, காங்கிரஸ் 34.6). ரொம்ப நன்னூல் எனில் ஆட்சியமைக்காமல் வெளியே செல்ல வேண்டியதுதானே காக்கி அரைடவுசர் பயங்கரவாதிகள்? மாறாக வந்த மறு நிமிடத்திலிருந்தே தமது வெறித்தனங்களை அரங்கேற்றி வருகின்றனர். தமிழ் சினிமா ஷூட்டிங் செய்தவர்கள் தாக்கப்பட்டதிலிருந்து, ஹொகேனாக்கல் பிரச்சினையில் திமிர்த்தனம் செய்வது வரை.

செக்குலர் என்றால் சனாதன தர்மமாம். எங்கே சனாதன தர்மம் என்றால் சாதி வெறி தத்துவம் என்று சாணியடிப்பார்களோ என்று பயந்து போய் 'தி ஹிந்து' தனது சொந்த முயற்சியில் பிராக்கெட்டில் ஹிந்துயிசம் என்று விளக்கம் வேறு கொடுக்கிறது. சனாதன தர்மம் அதாவது ஹிந்துயிசம்தான் செக்கூலரானதாம்? எப்படி என்பதற்க்கு ஆதாரமாக பாபர் மசூதி இடிப்பிலிருந்து, சிதம்பரம் கோயில் பிரச்சினை, நீதிமன்ற தீர்ப்புகள், சேது சமுத்திரம் பிரச்சினைம், கோமாதாவுக்கு புண்ணாக்கு வரை பலவும் ஆதாரங்களாக உள்ளன. செக்கூலர் என்பதற்க்கு இவர்களது அகராதியில் வழக்கம் போல ஒரு தலைகீழ் அர்த்தம் வைத்திருப்பார்கள்.

செக்குலர் என்கிற வார்த்தையை பயன்படுத்துவது நெகடிவாம், மாறாக ஹிந்துயிசம் என்று பார்ப்ப்னியத்தை கடைபிடிப்பது மட்டும்தான் உண்மையான செக்கூலரிசமாம். ஏற்கனவே இந்தியாவில் பெயரில் செக்கூலரிசம் என்று போட்டுக் கொண்டு நடைமுறையில் பார்ப்பனியத்தை கடைபிடிப்பதையே இவர்கள் போலி செக்கூலரிசம் என்று சொல்லும் பொழுது, நடைமுறையிலும் பார்ப்பனியத்தை கடைபிடிக்காமல் போகும் அபாயம உள்ள இடங்களை எந்தளவுக்கு வெறுப்பார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவர்கள் கணக்கில் உலகில் நேபாளம் மட்டுமே இது வரை செக்கூலராக இருந்த நாடு. அந்த ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. கொள்ளையடிப்பதையே உழைப்பு என்றும், ஏமாற்றி பிழைப்பதையே திறமை என்றும் கூறும் இந்த ஏகாதிபத்திய ஏவல் நாய்கள் பார்ப்பினியத்தையே செக்கூலரிசம் என்று சொல்வது ஒன்றும் வித்தியாசமானது அல்ல.

ஒரு ஆதிக்க வெறி தத்துவம் செக்கூலராக எப்படி இருக்க முடியும் என்பதை காக்கி அரைடவுசர்களின் இணைய கோமானாண்டிகள் இதே பதிவில் நமக்கு விளக்கினால் சிறப்பாக இருக்கும். நமக்கும் அவிங்கள அடிச்சு டவுசர லைவா(Live) கழட்டி ரொம்ப நாள் ஆயிருச்சி... வருவார்களா?

அசுரன்

Nepal as a secular state, a negative development: BJP
Neena Vyas
NEW DELHI: The declaration of Nepal as a secular state is a “negative development,” but the end of monarchy in what was till recently the world’s only Hindu kingdom is the result of the “wishes of the people,” says the Bharatiya Janata Party.

Releasing the party’s seven-page foreign policy resolution here on Monday, the former External Affairs Minister, Jaswant Singh, clarified its views in response to questions.

Clearly, the BJP did not think that the recent election gave the Communist Party of Nepal(Maoists) any mandate, although it expressed its “satisfaction” with the poll. It said the CPN(M) needed to be restrained in its conduct and utterances “as they had only about a third of the popular vote, and that too, obtained through intimidation.”

As for abolition of monarchy, Mr. Singh said, “It is for the people of Nepal to decide not to have a monarchy.”Was the BJP happy about Nepal becoming a secular state? He said: “As an Indian and a believer in ‘sanatan dharma’ [Hinduism], I feel diminished. … There are four ‘dhams’ [pilgrimage centres] in India and the fifth, Pashupati Nath, is in Nepal. There is nothing more secular than ‘sanatan dharma’. … This is a negative development [in Nepal].”

Related Article:
நோபளம் : இதுவன்றோ ஜனநாயகத் தேர்தல்!

5 பின்னூட்டங்கள்:

said...

//நமக்கும் அவிங்கள அடிச்சு டவுசர லைவா(Live) கழட்டி ரொம்ப நாள் ஆயிருச்சி... வருவார்களா?//

இப்படி பயமுறுத்தினால் இணைய கோமணான்டிகள் வருவார்களா?

said...

தோழர்,

இந்த டவுசர் பாண்டிகளின் நெலம இப்படி சீப்பட்டுப்போயிருக்க வேண்டாம்.. அல்வான்னு நெனச்சி பீயத் தின்னவங்கதையாப் போச்சி அவங்க நெலம.

கருநாடகத்துக்காக ஆனந்தக்கண்ணீர் வுடலாம்னு பாத்தா இப்படி நேபாளம் ரத்தக்கண்ணீர் வர வச்சிடுச்சே..

போற போக்குல இவங்க அடுத்த தேர்தல்ல ஒரு வேளை ஜெயிக்கவும் வாய்ப்பிருக்கு - அது நிச்சயம் நடக்கனும். அப்பத்தான் இவன்கள் அதிகாரத்திலிருக்கும் போதே ஆப்பு வாங்கிய ஞானேந்திரன் நிலையை பூரணமாக புரிந்து கொள்ள முடியும்.

said...

நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் பாஜக திரும்ப ஆட்சிக்கு வருவது உறுதி. மறுகால்னிய பொருளாதார திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் மக்கள் வெறுப்படைந்துள்ளதால் பாஜகவும், பிற கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்வது என்பதே நடக்கும். இதன் போக்கில் பாஜக வலுவான ஏகாதிபத்திய ஏஜெண்டாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வலுவாகிவிடும்.

பாஜக கர்நாடகாவுல ஆட்சிக்கு வந்து ஹோகேனாக்கல்ல ஆப்பு செருகப் போறத உறுதி படுத்திருக்கு... இங்க இருக்குற டோ ண்டு உள்ளிட்வர்கள் தலமையிலான கோமாண்டிகள் என்ன சொல்வார்கள். (ஒரு பதிவு போடலாமே டோ ண்டு சோர்... 'ஹொகேனாக்கல் தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லும் பாஜக - மனம் மகிழச் செய்கிறது' என்ற தலைப்பில்...)

அசுரன்

said...

தோழர் அசுரன்,

பார்ப்பன கோமனாண்டிகள் இங்கே வந்து ஒருபோதும் விவாதிக்கப் போவதில்லை தோழர்.

அரவிந்தன் நீலகண்டன் முதல் அல்பை ஜெயராமன் மாமா வரை அனைவரும் சங்கமித்து எழுதத்தான் 'தமிழ்மணி' என்கிற தளம் இருக்குதே. இங்க வந்து அம்மனமா நிக்கிறதவிட அங்கேயே இருப்பதுதான் இவனுகளுக்குக் கொஞ்சம் பாதுகாப்பா இருக்குது.

போதாக்குறைக்கு, நம்ம சி.பி.எம். சோதா சந்திப்பு வேற இருக்குறான். மகஇகவை அவதூறு செய்ய எவன் வந்தாலும் அவனுக்கு அங்க அடைக்கலம் நிச்சயமாகக் கிடைக்கும். வருபவன் கம்யூனிச விரோதியா இருக்கலாம், மார்க்சிய எதிரியா இருக்கலாம் ஏன் சிபிஎம்மின் எதிரியாகக் கூட இருக்கலாம், ஆனால் அவன் மகஇகவைத் திட்ட முன்வந்தால் போதும், அதற்கு சந்திப்பே முன்னின்று கதை, திரைக்கதை, வசனமெல்லாம் பக்காவாக எழுதித்தந்து தமது தளத்திலேயே பதிப்ப்பிப்பார்.

நம்முடைய பதில்களைப் பதிப்பிக்காமல் இருட்டடிப்புச் செய்யும் சந்திப்பு, மேற்கண்ட அம்பிகளின் அனானி பின்னூட்டங்களை தவறாமல் பதிப்பிக்கிறார்.

பார்ப்பன, அமெரிக்க ஏகாதிபத்திய அடிமைகளான, டாலர், தோடு, தொங்கட்டான் சென்வன்களுக்கு பார்ட்டைம் வேலைபார்த்துக் கொண்டே, சிபிஎம்முக்கு புல்டைம் வேலை செய்கிறார் இந்தச் சந்திப்பு என்கிற செல்வப் பெருமாள். இரண்டு இடங்களிலும் இவருக்கு அளிக்கப்பட்டுள்ள வேலை ஒன்றுதான்.

நாயக் குளுப்பாட்டி நடு வூட்டுல வச்சாலும் அது வாலச் சொழட்டிக்கிட்டு போய்ச் செருகிற இடம் வேற எந்த இடமாயிருக்க முடியும்?!


தோழமையுடன்,

ஏகலைவன்.

said...

Monday, June 9, 2008
சனாதான தேசத் துரோகிகள்
காவிக் கூட்டமும் சனாதான துர்நாற்றமும் பிரிக்க முடியாத ஒன்று மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார்கள் காவித் தலைவர்கள். சமீபத்தில் டெல்லியில் நடந்து முடிந்த பா.ஜ.க வின் தேசிய செயற்குழு ( ஜெய்ப்பூரில் நடப்பதாக இருந்த அந்த செயற்குழுக் கூட்டம், குஜ்ஜர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிப்பதாக வாக்குறுதியளித்து ராஜஸ்தானத்தின் முதலமைச்சரான முன்னாள் இளவரசி வசுந்தரா ராஜே அம்மையார் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் அல்வா கொடுத்தையடுத்து குஜ்ஜர் இனத்தவர் போராட்டத்தில் இறங்கிய காரணத்தினால் டெல்லிக்கு மாற்றப்பட்டது தனிக்கதை) கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஜஸ்வந்த் சிங், நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் வெற்றிப் பெற்றிருப்பது குறித்த தனது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டார்.

நேபாளத் தேர்தலும், தேர்தல் முடிவுகளும் அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம். மேலும் சர்வதேசக் குழுக்களின் கண்காணிப்புடன் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைப்பெற்றதை பத்திரிக்கைச் செய்திகள் உறுதிச் செய்கின்றன. இத்தேர்தலில் மாவோயிஸ்டுகள் 220 இடங்களில் வெற்றிப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்கள். இந்திய அரசாங்கமே நேபாள தேர்தல் முடிவுகள் குறித்து அதிருப்தி தெரிவிப்பது அநாகரீகமானது. இந்நிலையில் இந்தியாவில் அதிகாரத்தில் இல்லாத பா.ஜ.க என்கிற அமைப்பு அதிருப்தி தெரிவித்திருப்பது அருவருக்க தக்கது. 250 ஆண்டுகளாக நேபாளத்தில் நடைப்பெற்று வந்த மன்னராட்சி முடிவிற்கு வந்து மக்களாட்சி மலர்ந்திருப்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய எந்த ஒரு அமைப்பிற்கும் அதிருப்தி அளிக்கக் கூடிய நிகழ்வு அல்ல. ஆனால் காவிக் கூட்டத்திற்கு சனாதானத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை ஜனநாயகத்தின் மீது கிடையாதே.
http://uraiyurkaran.blogspot.com/2008/06/blog-post_09.html
"சனாதான தேசத் துரோகிகள்"

சில ஆண்டுகளுக்கு முன் காத்மாண்டுவில் நடைபெற்ற இந்து அமைப்புகளின் மாநாட்டில் உரையாற்றிய விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் " நமது இந்து சாம்ராட்டை (நேபாள மன்னர் கியாநேந்திரா) காப்பது உலகில் உள்ள 90 கோடி இந்துக்களிள் கடமை, இந்து மதத்தை காப்பதற்காகவே கடவுள் அவரை படைத்திருக்கிறார்" என்று முழங்கினார். மேலும் உலக இந்துக்கள் அனைவரும் நேபாள மன்னர் தலைமையில் நியூயார்க் நகரில் ஒன்றுக் கூடி உலகிற்கு இந்து மதத்தின் பலத்தைக் காட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தார் (இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜனவரி 23, 2004).

இதே கருத்தை ஒரு இந்திய முஸ்லிம் தலைவர் சவுதி அரசர் அப்துல்லாவைப் பற்றிக் கூறியிருந்தாலோ அல்லது ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ பற்றிக் கூறியிருந்தாலோ என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இப்படி வெளிப்படையாக அந்நிய நாட்டு மன்னனுக்கு பல்லாக்கு தூக்கும் இவர்கள் சிறுபான்மையின மக்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளை " அவர்கள் வாழ்வது மட்டும்தான் இந்தியாவில், ஆனால் அவர்களது விசுவாசம் வேறு இடத்தில் இருக்கிறது" என்று தேசபக்தியின் மொத்தக் குத்தகைதாரர்கள் போல முழங்குவதுதான் நகைமுரண்.
Posted by உறையூர்காரன் at 8:38 AM

Related Posts with Thumbnails