வசந்தத்தின் வலை முழக்கம் - புதிய வலைப்பூ!
அறிமுகம் புதிய வலைப்பூ. மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உள்ளீட்ட தோழமை அமைப்புகளின் வெளியீடுகள், கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள், வெளியீடுகள், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் போன்றவற்றை கொண்டதாக இந்த தளம் இருக்கும் என்று அதன் அறிமுக பகுதி தெரிவிக்கிறது.
திப்பு என்ற தோழர் தனது சொந்த ஆர்வத்தில் ஆரம்பித்திருப்பதாக வலைப்பூவின் அறிமுகப் பகுதியில் குறிப்பிட்டுள்ளார். புரட்சிகர அரசியலை இணையத்தில் எடுத்துச் செல்ல பெரும் பங்களிப்பு செய்யும் வகையில் இந்த தளம் இயங்கும் என்று வாழ்த்துகிறேன். தோழர் திப்புவின் முயற்சிக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.
ஸ்பிரிங் தண்டர் என்ற பெயரில் இந்த தளம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. வசந்தத்தின் இடிமுழக்கம் என்பது 1960 களின் இறுதியில் மேற்கு வங்கத்தில் கிளர்ந்தெழுந்து இன்று வரை இந்திய ஆளூம் வர்க்கங்களின் அடி வயிற்றில் புளி கரைத்துக் கொண்டிருக்கும் நக்சல்பாரி எழுச்சியை குறிக்க சீன கம்யுனிஸ்டு கட்சி உபயோகப்படுத்திய உருவகம். இதோ வசந்தத்தின் இடிமுழக்கம் இன்னுமொரு உறுமலுடன் இந்த வலைத்தளத்தில் காணக் கிடக்கிறது. வசந்தத்தின் இசையை அனுபவித்து புரட்சிகர புத்துணர்வும், அறிவு செழுமையும் பெற வாருங்கள்.
தற்பொழுது PALA(மகஇக)வினுடைய இந்துத்துவம் குறித்த ஆங்கில கட்டுரையும், உலக சமூக மாமன்றத்தை அம்பலப்படுத்தி இந்த அமைப்புகள் மும்பையில் நடத்திய இணை மாநாட்டையொட்டி வெளியிட்ட கட்டுரைகளின் தொகுப்பும் வலையேற்றப்பட்டுள்ளது. தற்கால அரசியல் சூழலை புரிந்து கொள்ள பெரும் உதவிகரமாக இந்த தளம் இருக்கும் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான கட்டுரைகள் வரும் என்று நம்புகிறேன்.
"A single spark can start a prairie fire!"
தளம் குறித்து செய்தி வெளியிட்ட தோழர் அரசு பால்ராஜ்க்கு நன்றிகள்.
இந்த வலைப்பூ கட்டுரை குறித்த BlogBharti - Sanatan Dharma in a new bottle
புதிய தளம்: ஸ்பிரிங் தண்டர்
அசுரன்

