ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொருவன் கன்னத்தை காட்டிக் கொடு - புதிய புரா
இந்த புறா இல்ல புறா.... வெள்ளையா இருக்கும். கக்கா போறது கூட வெள்ளையாவே கழியும்.... ஆங்.... நம்ம மாமா(நோ டபுள் மீனிங் ப்ளீஸ்) நேருகூட கையில வைச்சி சின்ன குழந்தைகள ஏமாத்துவாறே... அதே புறாதான். சமீபத்துல ஒரு புறாவ பத்தின கட்டுரைகள் சிலது படிச்சேன். உடனே மண்டக்குள்ளாற முதல்ல ஓடுனது மேல சொன்ன விசயங்கதான்.
அது வேற ஒன்னுமில்ல, சுயமரியாதை செம்மல் கீக்கீக்கீக்கீ வீரமணி அய்யா புறாவ வைச்சி ஏதோ செய்யிறாருன்னு படிச்சேன். எதோ பெரியார் புராவாம். கிரகத்துக்கு RSS அயோக்கிய பய புள்ளகளும் ஏதோ கோல்வால்கர் புரா அப்படின்னு புறா வளக்குறாங்கன்னு படிச்சவுடனே ரொம்ப குழப்பமாயிருச்சி. என்னாடாது தீடீர்னு புறாவுக்கு வந்த கேடு, ரெண்டு அயோக்கிய தறுதலைகளும் புறாவ வைச்சி ஏதோ முழு மூச்சா பன்றாய்ங்களே, உறுதியா நாட்டுக்கு நல்லது செய்யிற மாதிரி இருக்காதே அப்படின்னு.
RSSக்காரன விடுங்க அது பன்னி வாய் வச்ச வைக்கப்படப்பு மாதிரி எப்போதுமே புளுத்து நாறும், நம்ம வீரமணி அய்யா ஒழுங்கத்தான பொழப்ப ஓட்டிக்கிட்டு இருந்தாரு. ஏதோ அவருக்கு தெரிஞ்ச அளவுல திருகு வேலகள் பாத்துக்கிட்டு கண்ண மண்ண உறுத்தாமத்தான் அலஞ்சிக்கிட்டு இருந்தாரு. அப்பப்போ கொஞ்சம் கையறிப்பா இருந்தனா 'சுயமுன்னேற்றம்', 'கூட்டி கெடுத்தும்'.. சீ... 'கொடுத்தும் பிழைப்பது எப்படி?' அப்படிங்கற மாதிரி 'யு கென் வின்' பாணி கட்டுரைகள் எழுதிக்கிட்டிருந்தார். இலமர காய்மறயாத்தான் புண்ணாக்கு பாண்டி வேலைகள பாத்துக்கிட்டிருந்தாரு. ஆனா தீடீர்னு புறாவ வைச்சி என்ன பிசினஸ் கெட்ட கிரகத்த செய்றாங்கன்னு தெரியலயேன்னு ஒரே மண்ட குடைச்சல். ஏதுவும் புறாவுக் கூட்டிக் கொடுக்கிறாய்ங்களான்னு விபரீதமா நினைச்சி மனசு கெடந்து அடிச்சுக்கிது. சரி இத கண்டுபிடிச்சே தீர்ரதுன்னு எல்லாந் தெரிஞ்ச ஏகாம்பரத்துக்கிட்ட கேட்டேன்.
அவன் வழக்கம் போல சம்பந்தமில்லாம கரடி விட்டைப் போட்டது, யானை முட்டைப் போட்டதுன்னு வாய்க்கு வந்தத அடிச்சு விட்டான். இவிங்கிட்ட எதுவும் தேறாதுன்னு நாமளா எங்கனா தேடி தெரிஞ்சுக்க வேண்டியதுதான்னும் முடிவு பன்னிட்டேன்.
சரி விளையாட்டை விடுவோம், விசயத்துக்கு வருவோம்.
சமீபத்தில வடகர்நாடகாவிலும், மஹாராஸ்டிராவிலும் இன்னும் பல பகுதிகளிலும் கரும்பு விளைவித்த விவசாயிகள் அதனை வாங்க ஆளில்லாமல், உற்பத்திச் செலவுக்கு ஈடான விலை கொடுக்க ஆளில்லாமல் கரும்புகள் விறகுகளாய் மாறுவதை காணச் சகியமால் தற்கொலை செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக விதர்பா பகுதி விவசாயிகளிடம் கரும்பு விளைவிக்கச் சொல்லி போன வருடம் கோரிக்கை விடுத்தார் மஹாராஸ்டிர முதலமைச்சர். அவரது சொல்லைக் கேட்டு கரும்பு விளைவித்த விவசாயிகள் அதனை வாங்க ஆளில்லாமல் தற்கொலை செய்து வருகின்றனர். தாங்கள் விளைவித்த கரும்பு காய்ந்து விறகாய் மாறிய பிறகு அதனை தீ வைத்து கொளுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று கொளுத்தி வருகின்றனர்.
இதற்க்கு காரணமாக இந்த வருடம் வேறு எந்த வருடத்தையும் விட மிக மிக அதிகமாக கரும்பு விளைந்து விட்டது என்று ஒரு சொத்தை வாதத்தை வைக்கிறார்கள். அதிகமாய் என்றால்? தன்னிறைவை ஈடுக்கட்டுவதை மீறிய அளவு கரும்பு விளைந்து விட்டதா? அல்லது சர்க்கரை இந்தியாவில் எல்லாருக்கும் தேவையான அளவு கிடைத்துக் கொண்டிருக்கிறதா? இல்லையே?
உண்மையில் இந்தியாவின் தன்னிறைவை நிறைவு செய்யும் அளவு கரும்பு உற்பத்தி செய்வது என்றால் இதை விட அதிகப்படியாகவே உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும். ஒரு பக்கம் கரும்பு குறைந்த பட்ச விலை கொடுத்து வாங்கவும் ஆளில்லை ஆனால் சந்தையில் மட்டும் சர்க்கரை விலை குறையக் காணோம்.
இதே நிலைமைதான் பிற தானிய வகையாறாக்களிலும். கரும்பு முதல் இன்னபிற அத்தியாவசிய விளை பொருள்கள் எல்லாம் இந்தியாவின் தன்னிறைவை ஈடு செய்யும் அளவு உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதற்க்கு எடுத்துக்காட்டு கோதுமையை நாம் இறக்குமதி செய்த அவலம். ஆனால் அரசோ இவற்றின் விளைச்சல் அளவை அதிகப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதோடல்லாமல் விளைவித்த பொருட்களையும் அழிய விட்டு பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அழிவு தக்காளியில் தொடங்கி, பருத்தியில் வீரியமாகி, விவசாயியின் தற்கொலை வரை நீடிக்கிறது
சும்மாவா சொன்னார் மார்க்ஸ், உற்பத்தி சக்திகளின்(உழைப்பில் ஈடுபடும் மனிதனின் அனுபவ அறிவு, உற்பத்திக்கு உதவும் பொருட்கள், உற்பத்தியாகும் பொருட்கள்) முன்னேற்றத்துக்கேற்ப உற்பத்தி முறையில்(நிலபிரபுத்துவ பாணி உற்பத்தி, சிதறிய உற்பத்தி, முதலாளித்துவ உற்பத்தி) மாறாவிடில், உற்பத்தி சக்திகளின் அழிவு ஏற்ப்படும் என்று.
இப்படி அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகமாக இருப்பினும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளவற்றை விநியோகம் செய்யவும் ஆளில்லை, உற்பத்தியை பெருக்கி எல்லாருக்கும் அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க செய்யவும் ஆளில்லை. ஆனால் எந்த தறுதலைக்கும் உயிராதாரமான விசயமாயில்லாத மூங்கில் பயிர் வளர்க்க சொல்லி இந்த அரசும், NGO உளவாளிகளும் இந்திய விவசாயத்தின் முகத்தை மாற்றி வருகின்றனர்.
ஒரு சின்ன ஒப்பீட்டைப் பார்ப்போம். சர்க்கரைத் தேவைக்காக கரும்பு பயிர் செய்யும் இந்தியாவில் கரும்பு விவசாயம் செய்தவன் நாண்டு கொண்டு சாகும் நிலைதான் உள்ளது. ஆனால், ஒருவேளை இதே கரும்பை ஏகாதிபத்திய தரகு நிறுவனங்களுக்கு தேவையான ஏதோவொன்றை தாயாரிக்கும் விசயமாக இங்கு தயாரித்தால் நாண்டு கொண்டு சாகும் நிலையிருக்குமா?
இந்திய விவசாயிக்கு இருக்காது அன்பர்களே! ஆனால் இந்தியர்கள் என்ற வகையில் நாண்டு கொள்ள வேண்டிய நிலை நம்மெல்லோருக்கும் ஏற்ப்படும். இதோ இந்திய கரும்பு விவசாயத்தை பயோடீசல் தயாரிக்க பயன்படுத்தும் திட்டம் விரைவில் அமலாக இருக்கிறது. கரும்பு விவசாயம் நமது தேவைக்கு என்று இருந்த வரை ஆதரிக்க ஆளின்றி அழிந்த கதை போய் ஏகாதிபத்தியத்தின் தேவைக்கு என்று மாறிய பிறகு கொடுக்கப்படும் அதி அற்புத உபச்சாரத்தை நம் பார்க்க இருக்கிறோம்.
இதைத்தான் மறுகாலனியாதிக்கம் என்கிறோம். இந்திய வளங்களை நமது தேவைக்காக அன்றி ஏகாதிபத்தியங்களின் சந்தை தேவைக்காக சுரண்டும் இந்த அப்பட்டமான கொள்ளையைத்தான் மறுகாலனியாதிக்கம் என்கிறோம்.
நேற்று பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் அவனது சாயப் பட்டறைகளுக்கு தேவையான அவுரி செடி பயிரிடச் சொன்னான். பல்லாயிரம் வருடங்கள் பண்படுத்தப்பட்ட மண்ணும், நீரும், நிலமும் நாசமாகும் என்பதை உணர்ந்த விவசாயி உயிரை விட்டானே ஒழிய அவுரி பயிரிட ஒப்புக் கொள்ளவில்லை. அவன் தன்மானமுள்ளவன்.
இன்று நெல் பயிரிட்ட இடங்களிலெல்லாம் அவனது செண்ட் தொழிற்சாலைகளுக்கான பூ பயிரிடச் சொல்லி அரசும், NGO வும் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்திய மக்களின் தேவைக்கான விவசாய உற்பத்தி அனைத்தும் திட்டமிட்ட அழித்தொழிக்கப்பட்டு அதன் விளைவாய் விரக்தியில் இருப்பவனிடம் சென்று ஏகாதிபத்தியத்திற்க்கு விவசாயம் செய் என்று பிரச்சாரம் செய்யும் படு கேவலமான கைக்கூலிகளாக அரசும், NGOக்களும் செயலபட்டு வருகிறார்கள். பூ பயிரிட தேவைப்படும் தண்ணீரின் அளவு குறித்து ஒரு தோழர் என்னுடன் உரையாடும் போது விளக்கினார். கேட்க்க மலைக்க இருந்தது. ஒருவேளை இந்த அதீத சுரண்டலில் தண்ணீர் வற்றிப் போனால்? அவனுக்கென்ன வந்தது. இந்தியா இல்லாவிட்டால் ஒரு இலங்கை. அவனது பூ தேவையை உலகம் முழுவதும் இடம் தேடி கண்டுபிடித்து பூர்த்தி செய்து கொள்வான். நமது உணவு தேவை?
இதோ கரும்பு பயிர்களெல்லாம் அமெரிக்க கார்களில் கரியாகப் போகிறது. இதோ கண்முன்னே கோதுமை இறக்குமதி செய்கிறோம். நமது தேசம் இயறகை வளமில்லாத பாலைவனம் இல்லையா அதனால்தான் கோதுமையை, உணவை இறக்குமதி செய்கிறோம்.
இதோ கட்டாமணக்கு பயிரிடுகிறோம். கட்டாமணக்கு தட்டுப்பாட்டால்தான் உபியிலும், ஒரிஸ்ஸாவிலும் பட்டினி சாவுகள் நிகழந்தனவல்லவா? அதனால்தான்.
இதோ பெரியார் புரா சொல்கிறார் 'அன்பர்களே மூங்கில் பயிரிடுங்கள்' என்று. பெரியாரை அவமானப்படுத்த இதைவிட வேறு சிறந்த வழியிருக்குமா தெரியவில்லை. தன்மானமின்றி கூட்டிக் கொடுக்கும் தரகு வேலைக்கு பெரியார் புரா என்று பெயர். இவர்களும் கூட கோல்வால்கர் புரா என்றே பெயர் வைத்திருக்கலாம். கூட்டிக் கொடுக்கும் தொழிலுக்கேற்ற பொருத்தமான பெயராகவாவது இருந்திருக்கும்.
முப்போகம் நெல் விளைந்த தஞ்சை மண். ஆனை கட்டி போரடித்த மண். சோழ வள நாடு சோறுடைத்து என்று பண்டைய இலக்கியங்களிலெல்லாம் பாடல் பெற்ற பாரம்பரிய விவசாய பூமி. வெள்ளையன் ஆட்சியில் கூட இந்தளவு ஒவ்வொரு முக்குச் சந்தும் அவனது சுரண்டலுக்கு ஆளாகியிருக்குமா தெரியவில்லை ஆனால் மறுகாலனியின் ஆட்சியில் தஞ்சையிலும் கை வைத்து விட்டனர் ஏகாதிபத்தியங்கள். நெல் விளைந்த பூமி இனி மூங்கில் விளைவித்து கப்பலில் ஏற்றுமதி செய்யும்.
சாலையின் இருமறுங்கில் பயிர்கள் பரந்து விரிந்து எங்கே வாகனங்களின் சக்கரங்களை தொட்டு விடுமோ என்று பரிதவிப்பை ஏற்படுத்தும் அடர்ந்த பச்சை, தொடுவானம் வரை நீண்டு கிடக்கும் வயல் வெளிகள். சிறு குழந்தையின் வெற்றுடம்பில் இயற்கை அன்னை முத்தமிட்ட தடங்களோ என்று வியப்பை ஏற்படுத்தும் வெள்ளி மடைகள். அதிகாலையின் இளம்குளிரில் நீராவி மேக மூட்டமாய் குவிந்து பயிர்களின் மீது போர்வை போர்த்தியிருக்கும் அழகு. சோம்பல் முறித்து அந்த பயிர்கள் சூரியனின் அன்பு அரவனைப்பில் உருகி பனி நீரை சொறியும் அற்புதம். இவையெல்லாம் காப்பிய கனவுகளாய் மாறும் காலம் வெகு தூரமில்லை. மூங்கில் பயிரிடும் தஞ்சை எப்படியிருக்கும்? சென்னை உயிரியல் பூங்காவில் மூங்கில் காடுகளைப் பார்த்ததில்லை நீங்கள்? சென்னைவாசிகள் தஞ்சையின் அழகை சென்னையிலேயே ரசிக்கலாம்.
அஸ்ஸாம் தேயிலையின் நிறம் என்னவென்றே கூட தெரியாத இந்தியர்கள்தானே நாம். லாபம்... ஆம் லாபம் வருமென்றால் மூங்கில் பயிரிட வேண்டியதுதானே. பிழைப்புவாதம் பேசும் டாலர் கண்மணிகளே உங்கள் வீட்டுப் பெண்களை கொஞ்சம் கூட்டிக் கொடுங்களேன் சில எச்சில் டாலர்களை உங்கள் மணம் குளிரும் அளவு மலையாய் அள்ளி குவிக்கிறேன். செய்வீர்களா அடிவருடிகளே?
எதிர்காலத்தை விற்று நிகழ்காலத்தை கரியாக்கும் இந்த கேட்டிற்க்கு பெயர் திறமையாம், லாபமாம்.
இப்படி ஏகாதிபத்தியத்திற்க்கு இந்தியாவை கூட்டிக் கொடுக்கும் வேலையில்தான் இந்த எதிர்பாராத கூட்டணி ஏற்ப்பட்டுள்ளது. RSS, திராவிடர் கழகம் கூட்டணி. ஜார்ஜ் புஷ் செப் 11யை ஒட்டி சொன்னான் "ஒன்று நீங்கள் எங்கள் பக்கம் அல்லது பயங்கரவாதிகளின் பக்கம்" என்று. இதோ மறுகாலனியாதிக்கம் செவுளில் அறைந்து இதே கேள்வியை கேட்கிறது ஒவ்வொருவரையும். வீரமணியும் கூட அறை வாங்கியிருப்பார் உடனே சுயமரியாதை பொங்க முடிவெடுத்திருப்பார்: "பெருந்தகையீரே! ஏகாதிபத்தியமே! நாங்கள் உங்கள் பக்கம்" என்று. அவர் செயல் வீரர். தந்து விசுவாசத்தை நிரூபித்தும் காட்டுகிறார்
செவுளில் அறை வாங்குபவர் அவர் மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் நித்தம் வாங்குகிறோம். நாம் எந்த பக்கம் என்பதை உறுதியாக நாம் வாங்கும் அறை முடிவு செய்வதில்லை. அது ஒவ்வொருவரின் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விசயம். நீங்கள் அறை வாங்கினீர்களா? நீங்கள் எந்த பக்கம்? உங்களுக்கு சுயமரியாதை உள்ளதா?
அசுரன்
Related Articles:
நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!
இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் துறையும்
பத்ரியின் கிராமப் பொருளாதாரக் கட்டுரை - ஒரு உட்டோஅடிமை நாடும், போலி சுதந்திரமும்
இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்
அவனுடைய உமியும் - நம்முடைய நெல்லும்!
India Inc Stinks-SEZ ல் செக்ஸ் அனுமதி உண்டா?

