TerrorisminFocus

Tuesday, January 30, 2007

IT தொழிலாளியும் - ஆளவந்தானும் - நம்ம பாமரனும்!

ய்யா, இங்கன எழுதிறுக்கறத நாஞ் சொல்லைய்யா... நம்ம பாமரன் அண்ணாச்சி சொல்றாப்புல. இதுதான் IT துறையின் பொதுவான நிலைமைன்னு(அதாவது கடும் வேலையும், களி வெறியாட்டமும்) நான் நினைக்கலைய்யா. ஆனா இது மிகப் பெரும்பான்மையா அதுவும் குறிப்பா நம்ம BPO கொத்தடிமைக இப்படித்தான் லோல் படுறாங்கய்யா.நம்ம பாமரன் - குறிப்பா இத சென்னையில நடந்த சில பல ரெய்டுகள், அதையடுத்து IT தொழிலாளர்களின் பிரதிநிதிகளும், அவர்களை சுரண்டுபவர்களின் பிரதிநிதிகளும் இரவு நேர வாழ்க்கைக்கு, கேளிக்கைக்கு ஆதரவாக கோரிக்கை வைத்த தருணத்தை மனதில் கொண்டு - எழுதியது எனத் தெரிகிறது. IT தொழிலாளி இந்த கோரிக்கை வைக்கிறதுல அவனோட உழைப்பின் களைப்பை போக்கும் தேவை தெரிகிறது. ஆனா அவனோட முதலாளி இந்த கோரிக்கை வைக்கிறதுல எங்க அவன் ஆக்கப்பூர்வமா வேற வகையில தன்னோட ஓய்வ செலவழிச்சு விளிப்படைஞ்சிறுவானோ அப்படிங்கற பயம் தெரியுது.

எது எப்படியாகினும், இது பிற எந்த துறையைச் சேர்ந்தவர்களை விடவும் IT மக்களுக்கு பொருந்தும் என்பதால் இங்க பதியுறேன். காட்டுத்தனமா முட்டி மண்டைய உடைசிக்க எல்லாரையும் கூப்பிடுறேன் சாமி..... வந்து ஜல்லிக்கட்ட பழைய ரத்த களறியோட ஆரம்பிங்க.... (நம்ம பெசல் காளை 'நாடோடி'க்கு சிறப்பு அழைப்பு வைக்க கடைமைப்பட்டுள்ளேன்).

எப்பா..... பெசல்(Special) IT ஜல்லிக்கட்டு விழா ஆர்கனைஸர் அசுரன கொஞ்சம் பாத்து முட்டுங்கபா.... போன தடவ வாங்குன அடியே கொஞ்சம் அதிகந்தான்.

சமீபத்துல ஒரு மெயில் வந்தது சாமி... அதுல கார்ல போற ஒருத்தன் மேல கல்ல விட்டு எறிவான் ஒரு சின்னப் பயபுள்ள. கார நிப்பாட்டி இன்னாடா இப்படி கார கண்டம் ஆக்கிட்டயேடான்னு கேட்டதுக்கு அப்பால அந்த பொடிப்பயபுள்ளயோட சொல்லுவான், அவனோட ஊனமான தங்கச்சிக்கு உதவி செய்றதுக்காக இவன கல்ல விட்டு அடிச்சி நிப்பாட்டுனேன்னு. கட்சில கதையொட மாரல்னு இன்னா சொல்வாங்கன்னா,

நீ வாழ்க்கைல இத்த மாதிரிதான் வேக போயினுக்கிற...

எத்த பத்தியும் கண்டுஹாம போயினுக்கிற....

உம் பொழப்ப மட்டும் பாத்துனே போயினுக்கிறா... (அத்து கூட சோக்கயில்லா... கொஞ்சம் செக்காயிகினுதான் கீது)

ஆனா... அப்பாலக்கூடி எவனாச்சும் உம் மண்டயில கல்லலா அடிச்சு நிப்பாட்டும் போது இத்த நீ ஃபீல் பன்னக் கூடாது. இத்ததான் பாமரனும் சொல்றாரு. அவ்வள்வுதாம்பா....

ஸ்டார்ட் மூசிக்....

அசுரன்


Related Article:

#1 அன்பான தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களே!

தமிழ் மக்கள் இசை விழா - நிகழ்ச்சிநிரல்

தமிழ் மக்கள் இசை விழா
- பதினான்காம் ஆண்டு

___________________________________________________________________________ மறுகாலனிய, பார்ப்பனியப் பண்பாட்டுப்படையெடுப்பிற்கெதிரான போர் முழக்கம்.
___________________________________________________________________


பிப்ரவரி 24, 2007 சனிக்கிழமை
_________________________
தஞ்சை-திருவள்ளுவர் திடல்
__________________
காலை : கருத்தரங்கம்
_______________________
மாலை : கலை நிகழ்ச்சிகள்
____________________
காலனியாதிக்க எதிர்ப்பு மரபு !
மறுகாலனியாக்கம் எதிர்த்து முழங்கு !அன்பார்ந்த உழைக்கும் மக்களே,


ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிரான சுதந்திரப் போர், தென்னகத்தில்தான் முதன்முதலில் மூண்டெழுந்தது. திப்பு, மருது, கட்டபொம்மன், ஊமைத்துரை, சுந்தரலிங்கம், தீரன் சின்னமலை, தூந்தாஜி வாக் என எண்ணற்ற வீரர்கள் இந்த விடுதலைப் போரில் உயிர் துறந்திருக்கின்றனர்.


இது மன்னர்களும் படைவீரர்களும் மட்டும் நடத்திய போர்அல்ல; ஆயிரக்கணக்கான மக்களும் விவசாயிகளும்பங்கு கொண்ட மாபெரும் மக்கள் போர். 1800-01 ஆண்டுகளில் தென்னிந்தியா முழுவதும் நடைபெற்ற இந்தப்போர்தான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்.


ஆனால் பெருமை மிக்க இந்த விடுதலைப் போராட்ட மரபு இந்திய வரலாற்றில் புறக்கணிக்கப் பட்டிருக்கிறது. 1806 வேலூர் சிப்பாய் புரட்சி என்பது இந்த முதல்சுதந்திரப் போரின் வீரமிக்க முடிவுரை.


அந்த வீரம் செறிந்த வேலூர் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு.


வட இந்தியா முழுவதும் காட்டுத்தீ போலப் பற்றிப்படர்ந்து ஆங்கிலேய அரசையே அலறவைத்த 1857சுதந்திர போருக்கு இது 150ஆம் ஆண்டு.


வ.உ.சி யின் 'சுதேசிக் கப்பல் கம்பெனி' துவங்கப்பட்டதற்கு இது நூற்றாண்டு.


விடுதலைப் போரின் விடிவெள்ளி, பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டு.


நேரடிக் காலனியாதிக்கத்தைக் காட்டிலும் கொடிய மறுகாலனியாதிக்கம் இன்று நம் நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சூழலில், அன்றைய விடுதலைப் போரின் வீரமரபை இந்த இசைவிழாவில் நினைவு கூர்கிறோம். தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சிறுவணிகர்கள் போன்ற எல்லாத் தரப்பு மக்களையும் இந்த விழாவில் பங்கேற்க அழைக்கிறோம்.


****************
தங்கள் நன்கொடைகளை அனுப்பி இசை விழாவினை சிறப்பிக்கலாம்.
****************


காசோலைகளாக அனுப்பவும்.

Name: paanumathi srinivaasan
Bank : State Bank of India
Bank Code No : 1852
Account No : 10098061432அனுப்ப வேண்டிய முகவரி:

இரா.சீனிவாசன்,
எண் - 4, 5-வது தெரு,
ஜெகந்னாதபுரம்,
சேத்துப்பட்டு,சென்னை- 600 031


***
மேல் விவரங்களுக்கு புத்தகப்பிரியன் வலைப்பூவை அனுகவும்.


நன்றி புத்தகப் பிரியன்,

அசுரன்


****************************************************
தோழர் சபாபதி சரவணனின் சிறப்பு அழைப்பு:
****************************************************

வலையுலக தோழர்களில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறீர்கள் என்பதை இங்கோ அல்லது எனக்கு தனிமடலிலோ (wewakeananda@yahoo.com) தெரியப்படுத்தினால் மகிழ்ச்சி. எல்லோரும் சந்தித்து மகிழ ஆவல்.
ஒரு முக்கிய குறிப்பு: எல்லா ஆண்டு போலவும் இவ்வாண்டும் 10 ரூபாய் மாட்டுக் கறிச் சாப்பாடு விழா அரங்கத்தில் கிடைக்கும். என்னைப் போல் சில்லி பீப் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.தமிழ் மக்கள் இசை விழா - நிகழ்ச்சிநிரல்

Wednesday, January 17, 2007

பொங்கலும், இந்துத்துவ வெறியர்களும்!!

பதிவில் நான் சொல்ல வந்த விசயம் கூர்மையாக இல்லையென்று படித்த பலரும் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததால் சில பகுதிகளை சேர்த்துள்ளேன்.

எந்த ஒரு மதத்தை மிக நேர்த்தியாக கடைபிடிப்பவருக்கும் அதன் சம்பிரதாயங்களை மீறுவதில் சிக்கல் உள்ளது. இதில் புகுந்துதான் இந்து/பார்ப்ப்னிய மத வெறியர்கள் பொங்கல் பண்டிகை விசயத்தில் மத வெறி அரசியல் செய்கிறார்கள்.

அவர்கள் இந்து மதத்தவர்கள் கிருத்துவ பண்டிகை கொண்டாட முடியும் போது ஏன் இஸ்லாம் மதத்தவரால் இந்து பண்டிகை கொண்டாட முடிவதில்லை என்பதை சொல்லி மத வெறி தூண்டுகிறார்கள்.

நான் இங்கு மதத்தின் அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடுவது, பண்பாட்டு நடவடிக்கைகளை வரம்பிட்டுக் கொள்வதை பற்றி எதுவும் பேசப் போவதில்லை. அதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு.

ஆனால், இந்த அம்சத்தை ஏதோ இந்து பார்ப்ப்னியம் மதம் ஆக ஜனநாயகமானது என்ற பொய்யின் பலத்தில் மாற்று மதத்தை கடைபிடிப்பவர் மீது வெறுப்பை உமிழ பயன்படுத்தி மக்களை பிளவு படுத்தும் பட்சத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்க ,முடியாது.
கிருத்துவ மத பண்டிகையை கொண்டாட முடிந்த ஒரு பார்ப்பனரால், தலித் வீட்டு திருமணச் சடங்கையோ அல்லது தலித் விழாக்களையோ கொண்டாட முடியாது ஏன்?

ஏனேனில், கிருத்துவ பண்டிகை கொண்டாடுவதில் இவரது சம்பிரதாயத்துக்கு எந்த குந்தகமும் இல்லை. ஆனால் தலித் விழாவை கொண்டாடுவதில் இவரது ச்ம்பிரதாயத்துக்கு குந்தகம் வருகிறது. இதே விசயம் இந்து பண்டிகை கொண்டாடுவதில் இஸ்லாமியர் தனது சம்பிரதாயத்தை மீற வேண்டிய விசயம் இடிக்கிறது. ஆக இந்த உண்மையை வசதியாக மறைத்து விட்டுத்தான் சாணியடிக்கிறார்கள் ஜாடாயு கோஸ்டிகள்.

இந்தியாவில் இஸ்லாம், கிருத்துவம் தவிர்த்த அனைத்து வழிபாட்டு முறைகளும் சாதி அடிப்படையில் உள்ளது, மத அடிப்படையில் இல்லை. அதனால்தான் சாதி அடிப்படையில் சம்பிரதாயங்களை மீறுவதில் இந்து/பார்ப்ப்னியத்துக்க் சிக்கல். மத அடிப்படையில் சம்பிரதாயங்களை மீறுவதில் இஸ்லாம் கிருத்துவத்துக்கு சிக்கல்.

இதில் இஸ்லாமியர் விசயத்தை மட்டும் பேசி மத வெறியை அவர்கள் கிளப்புவதையே நான், செந்தழல் ரவி, யெஸ். பாலபாரதி உள்ளிட்ட பலரும் கண்டித்தார்கள். அம்பலப்படுத்துவது என்றால் எல்லா மதங்களிலும் உள்ள இந்த சகிப்புத்தன்மையற்ற நிலையை அம்பலப்படுத்துவதுதான் சிறப்பாக இருக்க முடியும்.

இதை சுட்டிக் காட்டவே பார்ப்ப்னிய மதத்திலும் சம்பிரதாயங்களை மீறுவதில் மிக மோசமான ஆகக் கேடான சகிப்புத் தன்மையற்ற நிலை நிலவுவதை முன்னிறுத்தி கேள்வி எழுப்பினோம்.
அவ்வளவுதான் விசயம்...
**********************
பொங்கல் பண்டிகை இந்து பண்டிகையா இல்லையா என்பதை நான் இங்கு விவாதிக்க போவதில்லை. அதை எல்லாரும் கொண்டாட வேண்டுமா இல்லையா என்பதையும் நான் இங்கு விவாதிக்க போவதில்லை.

ஆனால், இதை சாக்கிட்டு மத வெறி பிரச்சாரம் செய்யும் சில போலி தேசப் பற்றளார்களை நான் கேள்வி கேட்க்க வேண்டியுள்ளது.

இவர்கள் ஏற்கனவே இந்த பதிவில் இருமுறை கேட்ட கேள்விகளுக்கு (#1, #2) பதில் சொல்லும் நேர்மையின்றி தொடர்ந்து தமது மத வெறி பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். முதுகெலும்பை கழட்டி வைத்துவிட்டால் இப்படியெல்லாம் மான ரோசமின்றி செயல்படுவது சுலபமே.

பொங்கல் இந்து பண்டிகைதான் ஆயினும் அது இந்திய பண்டிகை எனவே இஸ்லாமியரும் கூட தமது மத நம்பிக்கைக்கு விரோதமாக இருப்பினும் கூட அதனை கொண்டாட வேண்டும் என்று அரைக்கூவும் புண்ணிய ஆத்மாக்களே...


இதன் ஊடாக இந்திய மரபுகள் எல்லாம் இந்து மரபு என்ற பொய்யையும், இஸ்லாமியர் அந்த மரபுகளுக்கு எதிரான தேசத் துரோகி என்ற கருத்தையும் உணர்வு தளத்தில் பதியும் நயவஞ்சகர்களே...Questions:

இதே போல தமிழகத்தில் கொண்டாடப்படும் நாட்டார் வழிபாட்டு கிடா வெட்டு சடங்குகளில் பங்கேற்று மாமிசம் சாப்பிட பார்ப்பன பண்பாட்டு மத நம்பிக்கைகளை விட்டொழித்து வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


அது கூட வேண்டாம் பொங்கலுக்கு மறு நாள் கறிநாள் கொண்டாடுவோமே அதை எல்லா இந்துக்களும் கொண்டாட இந்த புண்ணியாத்மாக்கள் இதே போல கோரிக்கை வைக்க வேண்டும்.

கோழிக் கறி குருமாவை மூக்க முட்ட வெட்டி கோழிகளுக்கு ஆத்மா சாந்தி கிடைக்க வழிவகை செய்ய உதவிட இந்த நன்னாளாம் கறி நாளை எல்லா இந்து மதத்துக்காரர்களும் - குறுகிய பார்ப்ப்னிய மத கண்ணோட்டத்தை களைந்து அகண்ட 'இந்து'யா பண்பாட்டின் படி கொண்டாட அவர்கள் அரைக் கூவ வேண்டும்.

செய்வார்களா? பண்டிகைக்கு வருவார்களா? குறைந்தது இந்த கேள்விகளுக்காவது பதில் சொல்வார்களா?

இந்த ரெட்டை நாக்குக்காரர்களை எதைக் கொண்டு அடிப்பது? பிய்ந்த செருப்பு?....

சே.... சே.... அது உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த செருப்பின் உழைப்பை அசிங்கப்படுத்துவதாகும்.

அசுரன்

Related Articles:

#1) இந்து/பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்!!!

#2) இந்து/பார்ப்பினிய மதம்-பிரியானி-கறிவேப்பிலை

Tuesday, January 16, 2007

சுஜாதா கதையும், அவலச் சுவை அரசியலும்

சுஜாதா கதை குறித்து தமிழ்மணத்தில் விவாதம் நடந்தேறி வருகிறது.

முதல் விசயம் சுஜாதா தனது சாதி வெறியை மிக அப்பட்டமாக்வே ஆனந்த விகடனில் பிராமன சங்க விழாவுக்கு பிற்பாடு அறிவித்தார். இந்த கதையும் கூட பெரியார் சிலை விவகாரத்தை ஒட்டி வருகிறது என்ற அம்சத்தில் மிகத் தெளிவாக பார்ப்ப்னியம் அவலச் சுவை நிரம்ப தன்னை வெளிக்காட்டி ஆதிக்கத்தை நிலைநாட்ட எத்தனிக்கிறது என்பதாக்த்தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது.

சிலர் இந்த கதையில் சாதி வெறி இல்லை என்று உண்ர்வதாக தெரிகிறது. அவர்களுக்கு இந்த கதையின் அரசியலை சொல்லுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அதற்க்கு முன்பு பார்ப்பன சங்க விழாவில் இதே சுஜாதா பார்ப்பன சாதி கஸ்டப்படுவதாகவும் அது ஒற்றுமையுடன் தனது உரிமைக்காக போராட வேண்டும் என்றும் கூறியதை மனதில் கொள்க. இந்த கதை அந்த கோரிக்கைக்கு அவர் நியாயமாக நடந்து கொள்வதை குறிக்கிறது.

இந்த கதையைப் பொறுத்த வரை, பார்ப்பன சாதி வெறியை பெரியார் சிலை உடைப்பு எதிர்வினை சம்பவங்களின் மூலம் புனிதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் சுஜாதா. இதன் மூலம் ஏற்கனவே சமூகத்தில் நடுத்தர வர்க்கத்திடம் நிலவும் பார்ப்னிய பண்பாடு உயர்ந்தது என்ற மனநிலையை தனது அரசியலுக்கு சாதகமாக அறுவடை செய்வது. இதற்க்கு ஏற்கனவே பார்ப்ப்ன சாதி மிக கஸ்டப்படுகிறது என்ற ஒரு கருத்தை ஊடகங்கள் மூலம் பெருக்கிக் காட்டியுள்ள பொதுக் கருத்தை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.

இவை எப்படி கதையில் வருகிறது? பாலபாரதி தளத்தில் எதிர்வினை செய்தவர்களில் பெரும்பாலோரின் கருத்துக்களிலிருந்து இந்த கதையை போஸ்ட்மார்டம் செய்தால்தான் விசயங்களை புரிய வைக்க முடியும் என்று கருதுகிறேன்.

#1) வயதான அந்த பார்ப்பன தாத்தா ஒரு காலத்தில் அதிகாரத்தில் இருந்து இன்று வலிமையிழந்ததாக பார்ப்னியத்தை காட்ட பயன்படும் உருவகம். இது பார்ப்ப்னியத்தின் இன்றைய அரசியல் ஆயுதமாகிய அவலச் சுவைக்கு ஏற்ற பாத்திரப் படைப்பு. சுஜாதா முதிர்ந்த எழுத்தாளர்தான்.

#2) கலைச்செல்வி பாத்திரம் ஆதிக்கத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியைக் காட்டுகிறது. இதுவும் பார்ப்ப்னிய அரசியல் நிலைப்பாடுதான். அதாவது தாழ்த்தப்பட்டவர்களை ஒரு பக்கம் சுரண்டினாலும் இன்னொரு பக்கம் நல்ல வசதியுடனும் உள்ளனர் பிற்ப்படுத்தபட்டவர்கள் என்ற பார்ப்ப்னிய அரசியல். ஆக, நல்ல நிலையில் உள்ள பிற்ப்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் இங்கு பார்ப்ப்னியத்துக்கு கை கொடுக்கிறார். பார்ப்ப்னியமும் வேறு வழியின்றி அவருடன் சேர்கிறது. இதுதான் மேசேஜ். இதைத்தான் இங்கு தமிழ்மணத்தில் நேரடியாக சொல்லி விவாதம் செய்ய வழியின்றி வெறுத்து போயுள்ளனர் பலர். அவர்கள் இந்த கதையை பயன்படுத்தலாம்.

#3) பெரியார் சிலை உடைப்பு அரசியலை இந்த இந்துத்துவ நிலைப்பாட்டுக்கு வலுக் கொடுக்கும் உணர்வுத்தளமாக பயன்படுத்திக் கொண்டு நடுத்தர வர்க்கத்தின் மனதை அள்ளிக் கொள்ள முயன்றுள்ளார். கதையில் 'அடி வாங்க முடியல' என்ற வரிகள்தான் அவர் சொல்ல வரும் மிக முக்கியமான அரசியல் மெசேஜ். பெரியார் சிலை உடைப்பு சம்பவங்களின் டிராமாட்டிக்கலான உணர்வு நிலையை, பார்ப்ப்னியம் ஏதோ இங்கு திரும்ப திரும்ப அடிவாங்கி கொண்டிருப்பதாக அர்த்தம் வரும் வகையில் காட்டுகிறார். உண்மை என்னவெனில் பார்ப்ப்னியம் தமிழகத்தில் பெரிதாக ஒன்றும் அடிவாங்கி விடவில்லை. தமிழில் பூசை செய்யக் கூட போலிசிடம் அடிவாங்கி ஓட வேண்டிய நிலைதான் உள்ளது. இந்த உண்மையை அந்த பெரிய்வரின் வயதான தோற்றம் மறைக்கிறது.

#4) பார்ப்ப்னிய சடங்குகளை அந்த பெரியவர் அமெரிக்காவில் செய்ய விரும்புவதும். அதற்க்கு இங்கு அடிவாங்க முடியவில்லை என்று சொல்லுவதை. அமெரிக்காவில் அதற்க்கு மரியாதை இருக்கு இங்கு முடியல..... நம்ம காலம் முடிஞ்சிருச்சு என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இன்னும் சிறப்பாக சொன்னால் கலி முத்திடிச்சு.... என்று கொள்ளலாம்.

கதையிலேயே ஒழிந்துள்ள உண்மைகள் என்னவாக உள்ளது:
இந்த கதை IT துறையில் ஏற்ப்பட்டுள்ள வளர்ச்சியை ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சியாக கருதும் நடுத்தர வர்க்க மனோபாவத்தையே தனக்கும் பயன்படுத்திக் கொள்கிறது. அப்படியெனில் அந்த துறையில் இந்த பார்ப்பினியத்தின் நிலை என்ன என்று பார்ப்போம். இந்த விசயத்தை கொஞ்சம் கதைக்கு வெளியே போய் பார்த்து விட்டு கதைக்குள் மீண்டும் வந்தால் கதைக்குள்ளேயே சுஜாதா மறைத்துள்ள் விசயங்கள் தெரிய்வரும்
இன்று IT துறை சார்ந்தவை மட்டுமே வேலை வாய்ப்பை தருகின்றன். இங்கு இடஓதுக்கீடு என்பது செல்லாகாசாகி விட்டதை கவனிக்கவும். இந்த IT துறையிலும் தமிழர்களைத் தவிர்த்து இந்தியாவின் மீதி எல்லா பகுதியை சேர்ந்தவர்களிடத்திலும் பார்ப்ப்னிய/உயர் சாதியைச் சேர்ந்தவர்களே அதிகமாக வேலையில் உள்ளனர்.

IT துறையில் இந்த சாதவீத கணக்கு 5% கம்மியாக கிராமப்புறம்(கிராமப்புறத்திலிருந்து பார்ப்ப்பனர்கள் வெளியேறி பல பத்து வருடங்கள் ஆகிவிட்டது).

3% சதவீதத்திற்க்கும் கம்மியாக தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளனர். உயர்சாதியைச் சேர்ந்தவர்கள்தான் மிகப் பெரும்பான்மையாக உள்ளனர் IT துறையில் உள்ளனர்.
இன்னும் சொன்னால் வட இந்தியா என்று நாம் பார்க்கும் எல்லாமே வட இந்திய உயர் சாதிதான். உண்மையான வட இந்தியா தென் இந்தியாவைப் போல பல மடங்கு பின் தங்கித்தான் உள்ளது.

இந்த விகிதாச்சாரம் தமிழகத்தை சேர்ந்தவ்ர்களிடம் மாறுபடும். காரணம் இங்கு ஒப்பீட்டளவில் சமூக நீதி நடைமுறைப்படுத்தப்பட்டதும், நகர்மயமாக்கம் அல்லது முதலாளீத்துவ உற்பத்தி முறையின் பரந்துபட்ட வளர்ச்சியும்(50 கிமி ஒரு தொழில் நகரம்) இருப்பதும். இதனாலேயே தமிழகத்திலிருந்து இந்த சாதிப் பிரிவு பிரதிநிதித்துவம் மங்கலாகவே உள்ளது. ஆயினும் இதன் அர்த்தம் ஆதிக்க சாதிகள் ஆதிக்கத்தில் இல்லை என்பதல்ல. மாறாக அது மற்ற பகுதிகளை விட இங்கு கம்மி என்பதே ஆகும்.

சுஜாதா உருவகப்படுத்தும் பார்ப்பன சாதியின் அவலத்தில் வசதியாக அதே பார்ப்னிய சாதியின் பிரதிநிதியாக அய்யர் பாஷை பேசிண்டிருக்கும் அம்பி கிரிஷ் மறைக்கப்படுகிறான். இங்கு பார்ப்பினியம் அவலத்தில் அல்ல மாறாக ஆதிக்கத்தில் உள்ளது என்ற உண்மை மறைக்கப்படுகிறது.

ஆக, பார்ப்பினியம் ஒரு ஆதிக்க தத்துவமாக நிலைத்திருப்பது மறைக்கப்படுகிறது. கதையில் பூணுல் தாயாரிக்கும் வர்ணனை அந்த பண்பாட்டிற்க்கு புனித பிம்பம கட்டுகிறது.
அவன் ஒரு ஆண் என்பதும், இது ஒரு ஆணாதிக்க சமுதாயம் என்பதும் மறைக்கப்படுகிறது. அவன் கலைச் செல்வியிடம் கூட்டிண்டு போவேன் என்று அதட்டலாக சொல்லுமிடம் அமுக்கியே வாசிக்கப்படுகிறது. கலைச் செல்வியின் செவிப்பறையில் விழுந்து அவளை அமைதிப்படுத்தும் அந்த ஆணாதிக்க வரிகள், படிப்பவரின் செவிகளில் விழுவில்லை. அது சுஜாதா கையாண்ட திறமையான வடிவமைப்பு.

இதே கிரிஷ் அந்த பெண்ணை அதட்டி சந்திக்க விடாமலும் செய்யலாம். அந்தப் பெண்ணை கோவி. கண்ணன் தளத்தில் உள்ள கதை போல விவாகரத்தும் செய்யலாம். ஆனால், எங்குமே அந்த பெண்ணிற்க்கும் அப்பா அம்மா உண்டே என்ற விசயம் வரக் காணோம். ஏனேனில் இது ஆணாதிக்க சமுதாயம், அதுவும் ஒரு பார்ப்பனிய ஆணாதிக்கத்த சமூகம்.

1) வளர்ந்து வரும் ஒரே துறையிலும் 'அவாள்' ஆதிக்கம்தான் உள்ளது என்ற விசயம், என்ற உண்மை,
2) பார்ப்ப்னியம் தனக்கான பண்பாட்டு தளத்தை ஏற்கனவே உள்ள புனித பிம்ப கருத்தின் மூலம் வலுப்படுத்தி வருவதை - மிகத் திறமையாக மறைக்கிறது இந்தக் கதை.

சாதி வெறி கிரிஷ்ன் குடும்பத்திற்க்கு இல்லை என்று காட்ட, 'ஏற்பாடு செய்த திருமணம் தடை பட்ட'தால் கோபம் என்ற சப்பைக் கட்டு.

பார்ப்பன் சாதி வெறியை நேரடியாகவே பார்க்க வாய்ப்புள்ள சுஜாதா, தான் பார்த்தேயிராத 'பெட்ரோல் குண்டு போட்ட'வர்களைப் பற்றி வர்ணிக்கிறார். ரௌடிகளை கொண்டு போலி விசாரனை செய்வதை சொல்லும் சுஜாதா அது உண்மையா இல்லையா என்ற பரிசீலனைக்குக் கூட அவசியமில்லாமல் செய்து பார்ப்ப்னிய எதிர்ப்பாளர்களின் மீது சாணியடிக்கிறார். சுஜாதா எதைச் சொல்கிறார், எதை மறைக்கிறார் என்று காட்டுவதன் மூலம் அந்த கதையின் அரசியலை இங்கு முன்னிறுத்துகிறேன்.

இது தவிர்த்து சுஜாதா ஏன் இதே போன்று பல்வேறூ அரசியல் பிரச்சனைகளுக்கு கதை எழுதியதில்லை என்று கேள்வி எழுகிறது.
ஹோண்டா தொழிலாளர் அடிவாங்கியது, குஜராத் கலவரம், சிதம்பரம் கோயில் பிரச்சனை, கருவறை நுழைவு மறுப்பது, சங்கராச்சாரி, தமிழிசை இப்படி எண்ணற்ற விசயங்களில் தூண்டப்படாத சுஜாதாவின் கலை மனது, அயோத்தி மண்டபம் மண்டையொடைப்பில் தூண்டப்பட்டது எனில் அவரது ஆழ்மன அரசியல் என்ன என்ற கேள்வி எழுகிறது.
அவர் வெற்மனே கனேஷ் வசந்த என்று எழுதிக் கொண்டிருந்தால் நாமும் இதை வலுவாக கேட்க்கப் போவதில்லை. ஆனால் சில சம்பவங்களில் மட்டும அரசியல் செய்வது என்று அவர் எழுத்த் தொடங்கினால், அவரது செலக்டிவ் அம்னீசியாவுக்கு காரணாமான சார்பு நிலையை நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

ஏனேனில் இது பார்ப்பினியம் அவலச் சுவையுடன் மிகக் கேவலமான தந்திரோபாயங்களுடன் தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள போராடும் காலம்.

அசுரன்
Related Article:

Tuesday, January 09, 2007

சாதி வெறியும் - பார்ப்பினியமும்!!

பார்ப்பன இந்துக் கோயில்கள்:
தீண்டாமை மையங்கள்!

ஒவ்வொரு 'இந்து'க் கோயிலுமே, சாதிப் பாகுபாடு நிலவுவதைப் பறை சாற்றும் மையங்களாகத் தான் இருந்து வருகின்றன. ஒரிசா மாநிலம் - கேந்திரபுரா மாவட்டத்திலுள்ள கேரேதகடா கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோ ர் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டம், இந்த உண்மையை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது.

இந்தக் கிராமத்தில் உள்ள ஜகந்நாதர் ஆலயத்தினுள் தாழ்த்தப்பட்டோ ர் சென்று இறைவனை வழிபடுவதைத் தடை செய்யும் தீண்டாமைக் கொடுமை, கடந்த 300 ஆண்டுகளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் சுற்றுப்புறச் சுவரில் போடப்பட்டிருக்கும் ஒன்பது துளைகளின் வழியாகப் பார்த்துதான் இறைவனை வழிபட வேண்டிய கட்டாயத்தில் தாழ்த்தப்பட்டோர் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஓராண்டுக்கு முன்பு - நவ, 2005-இல் நான்கு தாழ்த்தப்பட்ட பெண்கள் இத்தீண்டாமையை மீறி கோவிலுக்குள் நுழைந்ததால், அப்பெண்கள் மேல்சாதி வெறியர்களால் அவமானப்படுத்தப்பட்டுத் துரத்தப்பட்டனர். இத்தாக்குதலையடுத்து, அம்பேத்கர் - லோகியா விசார் மன்ச் என்ற அமைப்பு ஜகந்நாதர் கோயிலில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைக்கு எதிராக ஒரிசா உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து, ஆலய நுழைவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு பெற்றது.

இத்தீர்ப்பு வழக்கம் போலவே ஒரு கண்துடைப்பு நாடகமாக அதிகார வர்க்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அக்கிராமத்தைச் சேர்ந்த நான்கு தாழ்த்தப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த டிச. 14 அன்று அவர்களைப் பாதுகாப்போடு கோவிலுக்குள் அழைத்துச் சென்று, இப்பிரச்சனைக்கு மங்களம் பாடியது, அதிகார வர்க்கம். எனினும், யாருமே எதிர்பாராத வண்ணம், அக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் கோவிலுக்குள் நுழைந்து, தங்களின் உரிமையை நிலைநாட்டினர்.

இந்தக் கலகத்தால் ஆடிப் போன பார்ப்பன பூசாரிகள், உடனடியாக ஆலயத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர். மேல்சாதி வெறியர்கள் சாதிக் கூட்டம் போட்டு, தீண்டாமையை இன்னும் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும் எனத் தீர்மானம் போட்டனர். ஜகந்நாதர் கோவில் தீட்டுப்பட்டு விட்டதால், சிறப்பு பூஜை செய்து, ஆலயத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றது பார்ப்பன கும்பல். தாழ்த்தப்பட்டோரின் ஆலய நுழைவை எதிர்க்கும் முகமாக சுற்று வட்டார கிராமக் கோவில்களில் பூசைகள் நிறுத்தப்பட்டன. மேலும், உண்ணாவிரதம், ஊர்வலம் என நடத்தி, மேல்சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைப் பீதியில் ஆழ்த்தினர்.

இப்படி வெளிப்படையாகவே தீண்டாமையைக் கக்கிய மேல்சாதி வெறியர்கள் அனைவரையுமே, வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்க வேண்டும். ஆனால், அரசோ ஆதிக்க சாதி வெறியர்களைக் காப்பாற்றும் முகமாகச் சமாதானக் கூட்டம் போட்டது. இக்கூட்டத்தில், தாழ்த்தப்பட்டோ ர் இக்கோவிலுக்குள் நுழைவதை இனி தடை செய்ய மாட்டோம் என மேல்சாதி வெறியர்கள் ஒத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சமாதானக் கூட்டத்தின் இந்த முடிவு ஒரு நாள் கூத்தா, இல்லையான என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.

கேரேதகடா சம்பவம் விதிவிலக்கானதல்ல; நீதிமன்றம்த் தீர்ப்புக்கு பிறகும் கூட, கண்டதேவி கோவில் தேரின் வடத்தை தொடுவதற்க்கு தாழ்த்தப்பட்டோ ரை, மேல்சாதி வெறியர்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். கர்நாடகாவில் உள்ள பதனவாலு கிராமத் தாழ்த்தப்பட்டோ ர் ஆலயம் நுழையும் உரிமை கேட்டுப் போராடியதால், மேல்சாதி வெறியர்களால் தாக்கப்பட்டு, மூன்று பேர் கொல்லப்பட்டனர். இவை வெளியுலகுக்குத் தெரிந்த சம்பவங்கள். கிராமங்களுக்குள்ளேயே புதையுண்டு போனவை எத்தனையோ?

"உனக்குக் கடவுள், மதம் வேண்டும் என்றால் உன்னை இழிவுபடுத்தும் இந்து மதத்தில் இருக்காதே" என்றார் பெரியார். அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்த மதத்தைத் தழுவினார். தங்களை ஒதுக்கி வைக்கும் பார்ப்பன சநாதன 'இந்து' மதத்தை, தாழ்த்தப்பட்டோர் புறக்கணிப்பதை தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களுள் ஒன்றாகப் பயன்படுத்த முடியும். இப்புறக்கணிப்பை, மத உரிமை இழப்பாகப் பார்க்க முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு தீண்டாமைத் தாக்குதலும், "இந்து" என்பது ஒரு மதமல்ல. அது ஒரு சாதிப் படிநிலை அமைப்பு என்பதைத்தான் திரும்ப திரும்ப எடுத்துக்காட்டுகிறது!


அசுரன்

நன்றி:
புதிய ஜனநாயகம் - ஜனவரி 2007

Monday, January 08, 2007

பெரியார் சிலை - மானமிகு கலைஞரும், மான்புமிகு ஆசிரியரும்!!

பெரியார் சிலை உடைப்பு:

மண்டைச் சுரப்பை உலகு தொழும்!
மானமிழ்ந்தால் மதவெறியில் தமிழகமும் விழும்!

டிசம்பர் 6, பாபர் மசுதி இடிக்கப்பட்ட கருப்பு நாளன்று சீறீரங்கம் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பன இந்து மதவெறியர்களின் திட்டம். "டிசம்பர் 6 இந்தியாவின் அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள்! இந்துக்களின் வெற்றித்திருநாள்!" என்று அறிவிக்கும் சுவரொட்டிகள் முன்னெப்போதும் இல்லாத அளவு திருச்சியைச் சுற்றிலும் ஒட்டப்பட்டிருந்தன. இது ஒரு வகையில் சிலை இடிப்புக்கு எதிரிகள் வழங்கிய முன்னறிவிப்பு.

1973-இலேயே சிறீரங்கம் நகர மன்றம், பெரியார் சிலைக்காக 144 சதுர அடி நிலத்தை ஒதுக்கிக் கொடுத்து, அந்த இடம் பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ள போதிலும், 33 ஆண்டுகளாக அங்கே சிலை நிறுவப்படவில்லை. இந்த 33 ஆண்டுகளில் பெரியாரின் பெயரில் டஜன் கணக்கிலான நிறுவனங்கள் பல நூறு ஏக்கர் பரப்பில் தமிழகமெங்கும் எழும்பியிருக்கின்றன. ஆனால், இந்த 144 சதுர அடியில் பெரியார் சிலை மட்டும் எழும்பவில்லை. இந்தத் தாமதத்திற்கு பகுத்தறிவு சார்ந்த விளக்கம் எதுவும் நமக்குப் புலப்படவில்லை.

ஆனால், சிலை எழும்பவிருக்கிறது என்று தெரிந்ததும் பார்ப்பன கும்பல் ஒரு கணமும் தாமதிக்கவில்லை. நவம்பர் 28-ஆம் தேதியன்று, திருவரங்கத்தின் புனிதம் காப்போர் கூட்டமைப்பு என்ற பெயரில் பார்ப்பன இந்து மதவெறி அமைப்புகள் ஒன்றீணைந்தன, டிசம்பர் 5-ஆம் தேதியன்று கோவையில் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்த இந்து ஆசார்ய சபாவின் தலைவர் தயானந்த சரஸ்வதி, "பெரியார் சிலைக்கு ஸ்ரீரங்கம் பாதுகாப்பான இடம் அல்ல" என்று பகிரங்கமாக மிரட்டினார். டிசம்பர் 6-ஆம் தேதி பின்னரவில் கோவையிலிருந்து அனுப்பப்பட்ட இந்துமதவெறிக் காலிகள் பெரியார் சிலை உடைத்தனர்.

இதற்குப்பின அங்கே நடைபெற்ற சம்பவங்கள், பெரியாருக்கு எதிரிகள் செய்த அவமதிப்பைக் காட்டிலும் கொடிய அவமதிப்பாக இருந்தன. சிலை உடைப்பு பற்றீய செய்தி கேள்விப்பட்டு, திருச்சி நகரத்திலிருந்து மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்களும் புரட்சிகர மாணவர் இளைஞர் அணித் தோழர்களும் சிறீரங்கத்திற்கு வந்து சேர்ந்த போது சிறீரங்கம் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தது. விபத்து நடந்த இடத்தைப் போல ஒரு கூட்டம் பெரியார் சிலையைச் சுற்றி நின்று கொண்டிருக்க, கருப்புச் சட்டைத் தொண்டர்கள் நடந்ததை விளக்கிக் கொண்டிருந்தார்கள். மகிழ்ச்சியை மறைத்துக் கொண்டு முகத்தில் அதிர்ச்சியைத் தேக்கியவாறு நின்று கொண்டிருந்த பார்ப்பனர்களும் கேதம் கேட்க வந்த இந்தக் கூட்டத்தில் அடக்கம்.

இந்த மானக்கேட்டைக் காணப் பொறுக்காத ம.க.இ.க தோழர்கள், தி.க. தொண்டர்களைக் கடிந்து கொண்ட பிறகுதான் சாலை மறீயல் தொடங்கியது. கடைகள் அடைக்கப்பட்டன. சாலை மறீயலைத் திமிர்த்தனமாக மீற முயன்ற சில தனியார் பேருந்துகள் நொறுக்கப்பட்டன. "ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி அமைப்புகளைத் தடைசெய்! சிலை உடைப்பைத் தூண்டிய அதன் தலைவர்களைக் கைது செய்!" என்று முழங்கியபடி ம.க.இ.க. மாவட்டச் செயலர் தோழர் இராமதாசு தலைமையில் கோயில் ராஜகோபுரத்திலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. தி.க. தி.மு.க. அணிகளும் பொதுமக்களும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர்.

போராட்டம் பரவத் தொடங்குகிறது என்று அறிந்தவுடனே தி.மு.க., தி.க. கரை வேட்டிகள் களத்தில் இறங்கினார்கள். "நடப்பது நம்ம ஆட்சி. சிலை உடைத்தவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். இந்த சிலை இல்லாவிட்டால் வேறு சிலை. எல்லாவற்றையும் கலைஞர் பார்த்துக் கொள்வார்" என்று சொல்லி, கருஞ்சட்டைத் தொண்டர்களை கலைத்துவிட்டார்கள். மானக்கேடான சகஜநிலைக்கு மீண்டும் திரும்பியது.

எனினும், பெரியார் சிலையை திருட்டுத்தனமாக உடைத்த பார்ப்பன மதவெறியர்களுக்கான பதிலடி அன்று மாலையே பகிரங்கமாகக் கொடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.-இன் தேசிய நாயகனான இராமனின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, செருப்பால அடித்தபடியே, சிறீரங்கம் பேருந்து நிலையத்திலிருந்து பெரியார் சிலையை நோக்கி ஊர்வலமாக முழக்கமிட்டு வந்தார்கள் ம.க.இ.க., பு.மா.இ.மு. தோழர்கள். பெரியார் பற்றாளர்கள் பலர் தாமகவே ஊர்வலத்தில் இணைந்து கொண்டனர். இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் நின்று இந்தக் காட்சியைத் தரிசித்தனர். பரவசமடைந்த ஒரு முதிய தி.க. தொண்டர் தம் கால் செருப்பைக் கழற்றி அடித்து இராமபிரானுக்கு அஞ்சலி செலுத்தினார்.

வருணாசிரமத்தில் பாதுகாவலனான இராமனின் படத்தை, சேதமடைந்த பெரியாரின் சிலையின் காலடியிலேயே தீ வைத்துக் கொளுத்தினார்கள் தோழர்கள். படத்தை பிடுங்க முயன்ற போலீசை நெருங்கவிடாமல் தடுத்தார்கள் தி.க. இளைஞர்கள். தோழர்களைக் கைது செய்தவுடனே விடுதலை செய்யக் கோரி விண்ணதிர முழங்கினர்கள். பிரச்சினை பெரிதாகிவிடும் என்று உணர்ந்த கொண்ட போலீசு தோழர்களை அன்றிரவே விடுவித்தது.

"உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றிம்மா, நீங்களாவது மானத்தக் காப்பத்தீனீங்க" என்று பெண் தோழர்களிடம் நா தழுதழுக்க நன்றீ கூறினார், ஒரு முதிய தி.க. தொண்டர். திராவிடர் கழகத்தின் மாநில நிர்வாகியோ, "தயவு செய்து இதற்கு மேலும் எதையாவது செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி விடாதீர்கள்" என்று தோழர்களைக் கைகூப்பிக் கேட்டுக் கொண்டார். சொரணையுள்ளவர்களால் இந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்க முடியாதென்பதால் போராட்டம் தொடர்ந்தது. மாநிலமெங்கும் கண்டனச் சுவரொட்டிகள் அன்றிரவே ஒட்டப்பட்டன.

மறுநாள் ஓசூரில் பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தின் எதிரில் இராமனின் படத்தை தீக்கிரையாக்கினார்கள் பு.ஜ.தொ.மு. தோழர்கள். நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்து நிற்க, நகரின் மையப்பகுதியில் நடைபெற்றது இந்த போராட்டம். போராட்டம் முடிந்து அரைமணி நேரத்துக்குப் பின், பா.ஜ.கவின் மாநிலப் பொருளாளார் நரேந்திரன் தலைமையிலான 20 பேர் கொண்ட கும்பல், அந்த வழியே தன் மனைவி குழந்தையுடன் சென்று கொண்டிருந்த பு.ஜ.தொ.மு. வின் செயலர் தோழர் பரசுராமனை சுற்றி வளைத்துக் கொண்டது. "இவனைக் கொலைச் செஞ்சாத்தாண்டா நாம் நிம்மதியா இருக்க முடியும்" என்று கூச்சலிட்டுக் கொண்டே அவரை உருட்டுக் கட்டைகளால் தாக்கியது. ஆர்.எஸ்.எஸ். பேடிகள் நடத்திய இந்தக் கோழைத்தனமான தாக்குதலைத்தான் "இந்துக்களின் கோபம்" என்று பொய்யாகச் சித்தரித்தன சில நாளேடுகள்.மான்புமிகு மானமிகுக்கள் என்ன செய்தார்கள்?

மண்டை பிளந்து மயங்கி விழுந்த பரசுராமனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. ஒரு மணி நேரத்திற்குள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் கூறவே, ஆம்புலன்சில் தருமபுரிக்கு அவரை கொண்டு செல்ல முயன்றபோது வழிமறித்து அனைவரையும் கைது செய்தது போலீசு. இரவு முழுவதும் தோழர் பரசுராமனையும் அவரது மனைவியையும் ஆம்புலன்சிலேயே பூட்டி வைத்தது. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தார், சதி செய்தார் என்று பல பிரிவுகளில் பொய் வழக்கு பதிவு செய்து, விடிந்ததும் சேலம் சிறைக்குக் கொண்டு சென்றனர். கடும் போராட்டத்துக்குப் பின்னர்தான் சேலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அங்கேயும் கால்களில் விலங்கு மாட்டி வைத்தனர். கொலைவெறித் தாக்குதல் நடத்திய பா.ஜ.கவினர் கைது செய்யப்படவில்லை என்பதுடன், பரசுராமனைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறை வைக்கப் போவதாக அறிவித்திருக்கின்றார், மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் தேன்மொழி.

இதேபோல, சிவகங்கையில் சிலை உடைப்புக்கு எதிராகக் கண்டனச் சுவரொட்டி ஒட்டியதற்க்காகத் தோழர் எழில் மாறன், சுவரொட்டியை அச்சிட்ட அச்சக உரிமையாளர், வழக்குரைஞர் ஆகியோர் மீது வகுப்பு மோதலைத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருச்சியில் கணடனச் சுவரொட்டி ஒட்டிய இளம் தோழர் கார்க்கி ஒரு வாரம் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

பெரம்பலூர், சங்கராபுரம், ஈரோடு போன்ற பல இடங்களில் பூணூல் அறுப்பு, சாமி சிலை உடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்க்காகப் பெரியார் தி.க.வைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை அயோத்தியா மண்டபத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக பெரியார் தி.க.வினர் மீது பொய் வழக்கு போடப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் பெரியார் சிலை உடைப்பை எதிர்த்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக சிறையில் இருப்பவர்கள் ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர்களும் பெரியார் தி.க. தோழர்களும் மட்டுமே.

16.12.06 அன்று சிறீரங்கத்தில் வெண்கலத்தினாலான பெரியார் சிலை திறக்கப்பட்டு விட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய தி.க. பொதுச்செயலாளர் வீரமணி, எதிர்த்துப் போராடிக் கைது செய்யப்பட்ட தோழர்களை விடுவிக்க வேண்டுமென வாய்தவறிக் கூடப் பேசவில்லை. கலைஞர் ஆட்சியை காப்பாற்றும் விதத்தில் போராட்டம் ஏதும் செய்யாமல் அமைதி காத்த தொண்டர்களுக்கு மட்டும் நன்றி கூறினார்.

பெரியார் சிலை உடைப்பின் நோக்கம் என்ன? கலைஞர் அரசுக்கு களங்கம் கற்பிப்பதும், நெருக்கடி கொடுப்பதும்தான் இந்த சிலை உடைப்பின் நோக்கமாம். வீரமணி, திருமா போன்றோரின் கண்டுபிடிப்பு இது. சிலையை உடைத்தால் கட்டுப்பாடில்லாத பெரியார் தொண்டர்கள் பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களாம். இதைக் காட்டி நம்மாளின் ஆட்சியைக் கலைத்து விடலாம் என்று திட்டம் போட்டுத்தான் அவாள் சிலையை உடைத்தார்களாம்.

கேட்பதற்கே கேவலமாக இருக்கும் இந்த விளக்கத்தைச் சொல்வதற்கு தி.க., தி.மு.க.வினர் கூச்சப்படவில்லை. 2000 மூஸ்லீம்களின் ஈரக்குலையறுத்த மோடியின் ஆட்சியே கலையவில்லையே, கேவலம் பத்தாம் நம்பர் நூலை அறுத்தால் ஆட்சி கவிழ்ந்துவிடுமா என்று கேள்வி அவர்களுடைய பகுத்தறிவுக்கு எட்டவில்லை போலும்!

இவர்களுடைய விளக்கத்தின்படி நம்மாளின் ஆட்சியைக் காப்பாற்ற வேண்டுமானால், அவாளின் பூணூலையும், இராமனையும் காப்பாற்றியாக வேண்டும். அதற்கு கருப்புச் சட்டைகளைத்தான் காவலுக்கு நிறுத்த வேண்டும். கிட்டத்தட்ட அதுதான் நடந்தது. பூணூல் அறுப்பும் இராமன் எரிப்பும் நடக்கத் தொடங்கிய பின்னர்தான் தேசியப் பாதுகாப்பு சட்டம் பற்றிப் பேச ஆரம்பித்தார் டி.ஜி.பி. பெரியார் சிலை உடைப்புக்கு சதி திட்டம் தீட்டித் தூண்டிவிட்ட தயானந்த சரஸ்வதி மீது வழக்கு இல்லை. ஓசூர் தோழர் பரசுராமன் மீது 120 ஏ சதி வழக்கு. பாபர் மசூதி இடிப்பைக் கொண்டாடி சுவரொட்டி ஒட்டிய ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மீது வழக்கு இல்லை. பெரியார் சிலை உடைப்பைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய சிவகங்கை தோழர் மீது வகுப்பு மோதலைத் தூண்டியதாக வழக்கு!

"பெரியார் ஆட்சி"யின் நடவடிக்கையைப் பார்ப்பன கும்பலின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு பாருங்கள்! "பெரியார் சிலையைச் சட்டப் பூர்வமான முறையில்தான் அகற்றியிருக்க வேண்டும். சட்டவிரோதமான முறையில் உடைத்திருக்கக் கூடாது" என்று பாபர் மசூதி இடிப்புக்கு அத்வானி வருத்தம் தெரிவித்த அதே தோரனையில், பார்ப்பனக் கும்பலைச் சேர்ந்த அனைவரும் சொல்லி வைத்தாற் போல அறிக்கை விட்டனர்.

பாபர் மசுதி இடித்தபின். "சர்ச்சைக்குரிய இடம்" என்று அதற்கு ஆர்.எஸ்.எஸ். பெயர் மாற்றம் செய்ததைப் போல, "சர்ச்சைக்குரிய பெரியார் சிலை" என்று எழுதத் தொடங்கியது தினமலர். பெரியார் சிலைக்கு இரும்புக் கூண்டு போடச் சொன்னார் இராம. கோபாலன். "இராமன் எரிப்பையும் பூணூல் அறுப்பையும் தூண்டுவதே கருணாநிதிதான்" என்று மிரட்டினார் எச்.ராஜா, வைகுந்த ஏகாதசிக்கு சிறீரங்கம் வரும் பக்தர்கள் பெரியார் மீது கல்லெறிந்து காறித் துப்புமாறு தலைமறைவாய் இருந்தபடியே அறிக்கை விட்டார் அர்ஜூன் சம்பத. "சிலை உடைப்பைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்துவிடும்" என்று கவலை தெரிவித்தார் கார்ப்பரேட் பார்ப்பான் ரவிசங்கர்ஜி. "பெரியார் சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்" என்று கூறி வெளிப்படையாகவே களம் இறங்கினார் ஜெயலலிதா. திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை, தூத்துக்குடியில் தார்பூச்சு, பட எரிப்பு... என ஆங்காங்கே இந்து வெறியர்கள் மேலேறித் தாக்கினர்.

பெரியாரின் தொண்டர்கள் என்று கூறிக் கொள்வோர் என்ன செய்தார்கள்? "இனி பொறுப்பதற்கில்லை; நெருப்புடன் விளையாடாதே" என்று 2 நாள்கள் கழித்து அறிக்கை விட்டார் வை.கோ. இதேநிலை தொடர்ந்தால் நாடு தழுவிய போராட்டம் என்று 3 நாள் கழித்து அறிக்கை விட்டார் திருமா. பூணூல் அறுப்பு, இராமன் எரிப்பு போன்ற நடவடிக்கைகளைப் பற்றி பெரிதும் கவலைப்பட்ட 'மார்க்ஸிஸ்டு' கட்சி கவனத்துடன் செயல்படுமாறு காவல்துறையைக் கேட்டுக் கொண்டது. "இந்து பாசிச அமைப்புகள் தலைதூக்குகின்றன. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று பயமுறுத்தியது வலது கம்யுனிஸ்டுகளின் கலை இலக்கியப் பெருமன்றம். இதுதான் பெரியார் பிறந்த மண்ணின் யோக்கியதை! பெரியாரிஸ்டுகள் எனப்படுவோர் சோளக்கொல்லைப் பொம்மைகளாக இருக்கும்போது, பெரியார் வெண்கலத்தில் உருக்கி வார்த்து என்ன பயன்?


சுயமரியாதைச் சுடர்களே கவனியுங்கள்!!

சிலையை உடைத்ததன் மூலம் பெரியாரை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பைத் தங்கத்தட்டில் வைத்து வழங்கினார்கள் இந்து மதவெறியர்கள். உடைக்கப்பட்ட பெரியாரின் தலையை தமிழகம் முழுவதும் ஒரு வெடிகுண்டைப் போல ஏந்தி சென்றிருக்கலாம். தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து மறைந்த அந்தக் கிழவனை, இன்னொரு முறை மக்கள் மத்தியில் பிரச்சாரம் பயணம் அழைத்துச் சென்றிருக்கலாம். "மண்டைச் சுரப்பை உலகு தொழும்" என்றூ பாவேந்தர் பாடினாரே, அந்த தலையிலிருந்து தோன்றிய சிந்தனையை இளம் தலைமுறையினர் மத்தியில் தீயைப் போலப் பற்ற வைத்திருக்கலாம். சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை எதிர்ப்பு எனப் பன்முகம் காட்டிய அந்தத் தலையை பார்ப்பன மதவெறிக்கெதிரான விடுதலையின் வித்தாய் தமிழகமெங்கும் விதைத்திருக்கலாம்.

பேசாத கல்லையும், களிமண்ணையும் வைத்து அரசியல் நடத்தும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு, பகுத்தறிவுக் கல்லைப் பேச வைத்துக் காட்டியிருக்கலாம். இரும்புக் கூண்டுக்குள் பதுங்க வேண்டியவர் பெரியார் அல்லர். இராம. கோபாலன்தான் என்பதை அந்தப் பார்ப்பனக் கும்பல்பட்டுத் தெரிந்து கொள்ளுமாறு விட்டிருக்கலாம். சிறீரங்கம் கோயிலென்ன, எல்லாக் கோயில் வாசல்களுலும் சாதியையும் மடமையையும் வழிமறிக்கும் தடையரணாகப் பெரியாரின் சிலையை நிறுவியிருக்கலாம்.

இவையணைத்தும் கொள்கை உறுதி கொண்டவர்களின் செயல்முறை. ஆட்சியைக் காத்துக் கொள்ளவும் அதன் உதவியுடன் சிலையைக் காப்பாற்றிக் கொள்ளவும் சிந்திப்பவர்கள், கான்கீரிட்... வெண்கலம்.... இரும்பு என்றூ உலோகத்தை உறுதிப்படுத்தும் திசையில்தான் சிந்திக்க முடியும். இறுதியில் அது இரும்புக் கூண்டில் தான் போய் முடியும்.

டிசம்பர் 7-ஆம் தேதியன்று பெரியார் சிலையைப் பாதுகாக்கத் தவறிய பரிதாபத்துக்குரிய 4 போலீசுக்காரர்களைக் கடமை தவறீய குற்றத்துக்காகத் தற்காலிக நீக்கம் செய்திருக்கிறது தமிழக அரசு. தங்கள் கடமையிலிருந்து தவறிய பெரியார் தொண்டர்கள் எனப்படுவோருக்கு யார் தண்டனை விதிப்பது?

இதோ, தண்டனை எதிர் கொள்வதற்குத் தன்னந்தனியாக அங்கே அமர்ந்திருக்கிறார் பெரியார். அவரது சிலையை சட்டபூர்வமாகவே அகற்றுவதற்கான வழக்கைத் தக்க தருணத்தில் விசாரனைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது. பக்தர்கள் என்ற போர்வையில் கும்பலோடு கும்பலாகச் சேர்ந்து சிலையின் மீது கல்லெறிய தக்க தருணத்திற்காகத் காத்திருக்கிறார்கள் பார்ப்பன இந்து வெறியர்கள். சுயமரியாதை இயக்கத்தின் துவக்கக் காலத்தில் தன்னந்தனியாக சாதி, மத எதிர்ப்பு பிரச்சாரம் செய்து கல்லடியும், சொல்லடியும் வாங்கி, மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தமிழகத்தில் உருவாக்கி நிலைநிறுத்திய பின்னரும், அந்தோ, பெரியார் இன்றும் தனியாகத்தான் அமர்ந்து கொண்டிருக்கிறார். சிறீரங்கம் கோயிலுக்கு எதிரே அரங்கநாதனுக்கு சவால் விட்டபடி!

சூரியன்

புதிய ஜனநாயகம் ஜனவரி 2007அறுப்பதும் எரிப்பதும்தான் வன்முறையா?

"ஆத்திகர்கள் திரளும் கோயில் வாசலில் ஒரு நாத்திகரின் சிலையை வைக்கலாமா?" - இது பெரியார் சிலைக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்.இன் முக்கியமான வாதம். ஆத்திகர்கள் திரளும் இடத்தில் நாத்திகம் பேசக் கூடாது என்று கூறுவது கருத்துரிமையை மறுக்கும் பாசிசம். "குடி குடியைக் கெடுக்கும்" என்று சாரயக் கடை வாசலில் எழுதி வைக்காமல், சர்பத் கடை வாசலிலா எழுதிப் போட முடியும்? ஆத்திகர்கள் கூடுமிடத்தில் நாத்திகப் பிரச்சாரம் செய்வதுதான் பொருத்தமானது. சிறீரங்கம் கோயிலைச் சுற்றி பிராந்திக் கடைகளும், ஆபாசப் பத்திர்க்கைகளும், நீலப்பட வியாபாரமும் நடக்கிறதே, அவையெல்லாம் ஆத்திகப் பிரச்சார நடவடிக்கைகளா என்ன?

மேலும், பெரும்பான்மை என்பதனாலேயே ஒரு கருத்து நியாயமாகிவிடாது. பாப்பாபட்டியில் "தலித்துக்கள் ஊராட்சித் தலைவராகக் கூடாது" என்று தடுத்தவர்கள் கூடப் பெரும்பான்மை பலத்தைக் காட்டித்தான் தங்கள் சாதிவெறியை நியாயப்படுத்தினார்கள். "பெரும்பான்மை இந்துக்கள் வாழும் இடத்தில் சர்ச், மசூதி கட்டக்கூடாது" என்ற ஆர்.எஸ்.எஸ்.இன் வாதத்திற்க்கும், "பெரியார் சிலை கூடாது" என்பதற்க்கும் அடிப்படையில் எவ்வித வேறுபாடும் இல்லை. இது ஆத்திக வேடம் போடும் பார்ப்பன மதவெறி, இறை நம்பிக்கை உள்ள பெரும்பான்மை தமிழக மக்கள், பிள்ளையாரையும், பெருச்சாளியையும் காட்டிக் கட்சி நடத்தும் பா.ஜ.க.வை நிராகரித்திருக்கும் போது, தன்னைப் பெரும்பான்மையின் பிரதிநிதியாகக் கூறிக் கொள்வதற்க்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

"தமிழ் வழிபாடு கூடாது, பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகக் கூடாது" என்று பெரும்பான்மை மக்களை அவமதிக்கும் இந்து முன்னணிக் கும்பல், பெரும்பான்மை ஆத்திகர்களுக்காகக் கவலைப்படுவது போல நடிக்கீறது. ஆனால், பெரும்பான்மையான சூத்திர-பஞ்சம சாதி மக்களைக் கோயிலுக்குள் விட மறுத்த இந்த பார்ப்பன, சாதிவெறியர்களை எதிர்த்துக் கோயில் நுழைவு உரிமைக்காகப் போராடியவர் பெரியார். அவர் சிலையை எல்லாக் கோயில் வாசல்களிலும் வைக்க வேண்டும். அதுதான் பொருத்தம்.

"சர்ச் வாசலில் பெரியார் சிலை வைப்பதுதானே!" என்கிறார் இராம. கோபாலன். ஆசையிருந்தால் அவரே வைக்கட்டும். பெரியார் சிலைக்கு கீழே இந்துக் கடவுள் இல்லை என்றா எழுதியிருக்கிறது? எந்த கடவுளும் இல்லை என்றுதானே சொன்னார் பெரியார். எனவே, எந்த கடவுளும் இல்லாத ஒரு தூணையோ துரும்பையோ இராம. கோபாலன் காட்டட்டும் அங்கே சிலை வைத்து விடுவோம்.

"பெரியார் சிலையை உடைத்தால் அதற்காக இராமபிரானின் படத்தை ஏன் கொளுத்துகிறார்கள்? அதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?" என்று கேட்கிறார் இராம.கோபாலன். இராமன் எல்லா இந்துக்களுக்குமான கடவுளல்ல. பார்ப்பன உயர் வருணத்தினரின் சாதிச்சங்க தலைவன். இதற்கு ஆதாரம் வால்மீகி இராமயணம், வருணதருமத்தை நிலைநாட்டும் இராமராச்சியத்தை நடத்தியதற்காகத்தான் அவன் கொண்டாடப்படுகிறான். மேலும், இராமன்ஜி என்பவர் அத்வானிஜி, வாஜ்பாயிஜி ஆகியோரைக் காட்டிலும் மூத்தவர். எல்லாத் தேர்தல்களிலும் தாமரைச் சின்னத்துக்கு ஓட்டு வேட்டையாடும் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர். இராமன் தேசிய நாயகன் என்பதால் முஸ்லீம்களும் அவனை வணங்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்.இன் நிலைப்பாடு. எனவே, அவர்கள் கூற்றுப்படியே இராமன் இந்துக் கடவுள் அல்ல என்று ஆகிறது. பெரியாரின் சிலையை அவாள் உடைக்கும்போது, அவாளுடைய கட்சித் தலைவரின் படத்தை செருப்பால் அடித்துக் கொளுத்துவதுதான் பொருத்தமான எதிர்ப்பு நடவடிக்கையாக இருக்க முடியும். இராமனைக் கடவுளாகக் கருதும் பக்தர்கள் ஒருவேளை மனம் வருந்தினால், சாதியைப் பாதுகாக்கும் இந்தக் கடவுளைக் கைவிட்டு விடுமாறு அவர்களுக்கு நாம் புத்தி சொல்லலாம். புத்தி வந்தால் பக்தி தானே போய்விடும்.

"பூணூலை அறுப்பது தனிநபரின் உரிமையையும் மத உரிமையையும் மீறும் வன்முறை" என்று அலறுகிறது பாரதிய ஜனதாக் கும்பல். அறுப்பதும் எரிப்பதும் எதிர் வன்முறைதான். பூணூல் அணீவதுதான் முதல் வன்முறை. பூணூல் என்பது அவரவர் விருப்பப்படி அணியும் கலர் சட்டையோ, அல்லது ஒரு மதத்தினர் அனைவரும் அணியும் சிலுவை போன்ற சின்னமோ அல்ல. பூணூல் - பெரியாரின் மொழியில் சொன்னால், ஒரு தெருவில் ஒரேயொரு வீட்டுக் கதவில் "இது பத்தினி வீடு" என்று எழுதிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பான நரித்தனம். பெயருக்குப் பின்னால் இருந்த சாதிவாலை நறுக்கியவர் பெரியார். அய்யர், அய்யங்கார் என்ற பட்டங்களை ஃபாஷனுக்காகத் துறந்தவர்கள், பூணூலையும் துறந்துவிட்டால் அவர்களை நாகரிகப்படுத்தும் வேலை மிச்சம்!

Wednesday, January 03, 2007

இந்து/பார்ப்பினிய மதம்-பிரியானி-கறிவேப்பிலை

திரு. நீலகண்டன் மிகவும் திறமையாக நாட்டார் தெய்வங்களுக்கு பிற மதங்களால் வரும் ஆபத்து குறித்து இடது சாரிகள் பேசுவதில்லையே என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

எல்லா இடங்களிலுமே இந்த மூன்று மதங்களும் மக்கள் விரோத வேலையைச் செய்கின்றன என்பதையும், அவை மூன்றுமே எதாவது காரணத்தை கூறீ சுதந்திர வழிபாட்டு முறையை உடைய நாட்டார் தெய்வங்களையும் அது சார்ந்த மக்களையும் முழங்க முற்படுகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறோம்.

இதில் குறிப்பாக பார்ப்ப்னியம் தனது சொந்த நலனுக்காக நாட்டார் வழிபாட்டு நலனுக்கு சேர்த்து அழுவது போல நடிக்கும் பொழுது அதை அம்பலப்படுத்தும் தேவை ஏற்ப்படுகிறது. அதுதான் அவருக்கு பிரச்சனை. அதாவது அவரது மதத்தை நாம் அம்பலப்படுத்துவது. எனது முந்தைய கட்டுரையில் கூட எல்லா மதங்களுமே மக்கள் விரோதமானவை என்றே எழுதியுள்ளேன்.

ஏன் இதே இந்துத்துவ மத வெறியர்களுக்கு நாட்டார் வழிபாட்டு தெய்வங்கள் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்டு அதன் பாரம்பரியம் அழிக்கப்படுவது ஆக்கிரமிப்பாக தெரிவதில்லை? ஏனேனில் மற்ற மதங்களைப் போலவே இந்து/பார்ப்பினிய மதமும் தனது மத வெறி பிரியானிக்கு இந்த சுதந்திர மக்கள் கூட்டத்தை கறிவேப்பிலையாக பயன்படுத்த முற்ப்படுகிறது. தனக்கு கிடைத்த கறிவேப்பிலை பிறருக்கு கிடைக்கக் கூடாது என்பதுதான் இந்த மத வெறிய்ர்களின் ஆற்றாமை.

நாங்கள் கறிவேப்பிலையாக உபயோகப்படுத்துவதை மறுத்து அதை எதிர்த்து பேசினால். அவன் உபயோகப்படுத்துகிறான் , இவன் உபயோகப்படுத்துகிறான் என்று ஒரு உடலுறவு தொழிலாளியிடம் பேசுவது போல பேசுகிறார்கள்.

நாட்டார் வழிபாட்டு தெய்வங்களுக்கு ஆபத்து என்று பார்த்தால் அதில் இந்து/பார்ப்ப்னியம் நட்புடன் செய்யும் துரோகமே மிகப் பெரிய ஆபத்தாக உள்ளது.
இதற்க்கு பலியான தெய்வங்களை, தனது அழகை இழந்து, மக்களிடமிருந்து பிரிந்து - பூணுல் போட்ட அய்யரிடம் சரணடைந்த, சமஸ்கிருத மயமாக்கப்பட்ட இந்த நாட்டார் தெய்வங்களை பரவலாக காண முடியும்.
அந்த தெய்வங்கள் அவமானமுற்று கோயில் கருவறைக்கும் முடங்கி, மூச்சு முட்ட திணறும் சத்தம் எல்லாருக்கும் கேட்ப்பதில்லை.

குழந்தைகளின் பாதம் படா அந்த தெய்வங்களின் திரு மேனி ஆவாலின் வேர்வைப் பட்டு கூனிக் குருகுகின்றன. காக்கை, குருவி, முதல் இரட்டைக் கால் நாலு கால் பிராணிகள், மனிதர்கள் அனைவரிடமும் பழ்கி அந்த மக்களின் உடை கலாச்சாரத்தை தனதாக கொண்டு வலம் வரும் இந்த தெய்வங்களை இந்து/பார்ப்ப்னிய வெறிய்ர்கள் அவமானப்படுத்தியதை விடவா வேறு யாரும் செய்து விடப் போகிறார்கள்?

இந்து/பார்ப்ப்னிய மதம் எல்லாரையும் ஏற்றுக் கொள்ளும் ஆனால் ஒரேயொரு நிபந்தனை, அது தனது வர்ணாஸ்ரம பசிக்கு இரையாகி வயிற்றில் செட்டிலாகத் தயாராக வேண்டும் எனப்துதான்.
அந்த மதங்களாவது நேர்மையாக் உன்னோட முந்தைய கடவுளை விட்டு விட்டு இங்கே வா என்கிறார்கள். இவர்களோ உன்னோட முந்தைய தெய்வத்தையும் பார்ப்பன் சேவை செய்யும் அடிமை நிலைக்கு தாழ்த்தி என்னுடன் ஐக்கியமாகு என்கிறார்கள்.
இது வரை திருப்பதி சாமியோ அல்லது ராமனோ அல்லது கிருஷ்ணனோ நாட்டார் வழிபாட்டு மரியாதைகளை ஏற்றுக் கொண்டதாக பார்த்ததில்லை. பார்ப்ப்னிய பண்பாடு ஏதோ ஆக சிறந்தது என்ற கருத்தை வைத்து மத அரசியல் செய்கிறார்கள். ஏற்கனவே பல ஆயிரம் வருடம் நிலை பெற்ற இந்த ஒரு கருத்தை இவர்கள் வசதியாக உட்கார்ந்து கொண்டு இன்று அறுவடை செய்கிறார்கள். அதனால்தான் அந்த பார்ப்ப்னியம் சார்ந்த பண்பாடு மிக உயர்ந்தது புனிதமானது என்ற போலி பிம்பத்தை உடைக்க முட்படுபவர்களை இவாள் ருத்ரதாண்டவமாடி இடை மறிக்கிறார்கள்.
இதன் மூலம் தெய்வங்களையும், அதன் பண்பாடுகளையும், அது சார்ந்த மக்கள் கூட்டத்தையும் உறிஞ்சுகிறார்கள்.

சில கேள்விகள்:
ஏன் இந்து/பார்ப்பினிய மதத்திற்க்குள் நுழைக்கப்படும் நாட்டார் தெய்வங்கள் பார்ப்ப்னிய மயமாக்கப்படுகின்றன?
எந்த வகையில் நாட்டார் வழிபாட்டு முறை இழிவானது?
எந்த வகையில் பார்ப்ப்னிய வழிபாட்டு முறை உயர்வானது?
இப்படி மாறுவது எந்த வகையில் சம்பந்தப்பட்ட மக்கள் கூட்டத்தின் குறைந்த பட்ச பிரச்சனைகள் எதாவதிற்க்கு தீர்வு சொல்கிறதா? ஏதாவது பிரச்சனை... எதுவாகிலும் பரவாயில்லை.

இந்த கேள்விகளுக்காவது பதில் சொல்லும் நெஞ்சுறுதி உண்டா மத வெறியர்களுக்கு?

இவர்களின் ஒரே ஆயுதம்/பலம் ஆயிரம் வருட ஆதிக்கம் உருவாக்கியுள்ள கருத்து- அதாவது பார்ப்ப்னிய பண்பாடு உயர்வானது/புனிதமானது என்பதுதான்.
**********
நாட்டார் மரபைப் பின்பற்றும் இக்கோவில்களில் தற்போது தீவிரமாக ஆரியமயமாக்கல் நடந்து வருகின்றன. அதன் முறைகளைக் கீழ்க்கண்டவாறு அ.கா.பெருமாள் பட்டியலிடுகிறார்.

1) ஆகம நெறிப்படி கோவிலைக் கட்டுதல்.

2) பலி, சாமியாட்டம், சடங்குகள் போன்ற கூறுகளுடைய நாட்டார் கலைகள் நிறுத்தப்படல்

3) வழிபாடு, விழாக்களில் வைதீக முறை பின்பற்றப்படல்; வட மொழி மந்திரம் ஓதப்படல்

4) துணைத் தெய்வங்களாக நவக்கிரகங்கள், விநாயகர், சுப்பிரமணியர் போன்ற பெருநெறித் தெய்வ உருவங்களை ஆகம முறைப்படி நிறுவுதல்; கருவறைத் தெய்வ உருவத்தைப் பெருநெறித் தெய்வமாக்கல்

5) கோவில் தொடர்பான பிரயோகங்கள் கூட வைதீக மரபில் கூறப்படல் (அபிஷேகம், நைவேத்தியம், கும்பாபிஷேகம், ஸ்ரீபலி, உற்சவ விக்ரகம், கர்ப்பக் கிரகம் முதலியன)

6) கோவிலின் பூசை செய்பவரைப் பிராமணராக நியமித்தல்

7) கோவிலின் முக்கிய தெய்வத்தின் பழைய கதை மறைக்கப்பட்டு, புராணங்களுடன் தெய்வம் தொடர்பான வரலாறு இணைக்கப்படல்

8) சமயப் பிரச்சாரக் கூட்டங்கள், பட்டி மன்றம், வழக்காடு மன்றம், கருநாடக இசைக் கச்சேரி நடத்தல்

9) பெண்களை ஒரே இடத்தில் கூட்டுவதற்குரிய திருவிளக்கு பூசை முதலியவற்றை நடத்தல் (இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத்/ஹிந்து முன்னணி முதலிய அமைப்புகள் துணை நிற்கின்றன)

10) முக்கிய தெய்வத்தை கர்மா, மாயா போன்ற தத்துவார்த்தங்களுடன் இணைத்துப் பேசுதல்.

****
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய நோக்கமே அ.கா. பெருமாள் பட்டியலிட்டுள்ள வழிமுறைகளின்படி செயல்பட்டு, சிறு தெய்வங்களை இந்து மதத்துள் கரைத்து, ஒற்றைப் பண்பாட்டை ஏற்படுத்துவதுதான். ஆயினும், இச்செயல்கள் மூலம் சைவ,வைணவக் கோவில்களுக்கும், நாட்டார் தெய்வக் கோவில்களுக்கும் இடையிலான வேறுபாட்டை முழுமையாக நீக்க முடியவில்லை. இரண்டு வழிபாட்டு முறைகளையும் இணைப்பதற்குத் தடையாக சாமியாடலும், உயிர்ப்பலியும், சாராயமும் உள்ளன.

அண்மைக்காலத்தில், சிறு தெய்வங்களின் கோவில்களில் விநாயகர் சிலை / சிவலிங்கம் நிறுவி, அதனையே சாக்காக வைத்துப் பலியிடலைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். மக்களும் சளைத்தவர்கள் அல்லர். துணி ஒன்றால் விநாயகர் சிலையை மூடி விட்டு அவர்களின் சாமிக்குக் கெடா வெட்டிக் கொண்டனர். சில ஊர்களில் இந்தத் தடங்கலைச் சரி செய்ய, நிறுவப்பட்ட விநாயகர் சிலையைப் பெயர்த்து கோவிலுக்கு வெளியே நிறுவி விட்டு, வழக்கம் போல் கெடா வெட்டை நடத்த ஆரம்பித்து விட்டனர்.

ஆர் எஸ் எஸ் விரும்பிப் போற்றும் வட மொழி சார்ந்த பிராமணீயப் பண்பாட்டுக்கு எதிராய் நாட்டார் தெய்வங்கள் இருப்பதும், பெரும்பான்மை மக்களின் வழிபாடாக அவை இருப்பதும் இடஞ்சலாய் இருக்கின்றது. எனவேதான், இக்கோவில்களில் பூசை செய்து வந்த அ-பிராமணப் பூசாரிகளுக்கு சமஸ்கிருத மந்திரம் கற்றுக் கொடுப்பதும், தந்திரமாக சைவப் படையலுக்கு அச்சாமிகளை மாற்றுவதும் நடக்கத் தொடங்கி உள்ளது.

இது நிச்சயமாகப் பண்பாட்டுப் படையெடுப்புதான். இத் தாக்குதலை நாட்டார் தெய்வங்கள் சமாளிக்குமா ? அல்லது இவர்கள் விரும்பும் ஒற்றை அடையாளத்துள் கரைந்து போகுமா ? என்பதைக் காலம் தான் முடிவு செய்யும்.
*************

ஊரில் உள்ள சில பொறுக்கிக் கூட்டங்களிடையே உள்ள போட்டிக்கும் பொறாமைக்கும், இந்த மத வெறிய்ர்களிடையே உள்ள போட்டி பொறாமைக்கும் என்ன வித்தியாசம்?

இவர்களின் கூச்சலில் தொலைந்து போவது என்னமோ எல்லா மதத்தை சேர்ந்த உழைக்கும் மக்களின் உயிராதார பிரச்சனைக்கான குரல்தான்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி இந்த இருபது வருடங்களிலேயே சில ஆயிரம் உயிர்களை ஒன்றுக்கும் இல்லாமல் பலியிட்டுள்ளனர். இவர்களால்(மத வெறியர்களால்) இது வரை ஏதேனும் உபயோகமாக நடந்துள்ளதா என்றால் ஒன்றும் கிடையாது.

இந்த மக்கள் விரோதிகளை இனம், மதம் அடையாளங்களைத் தாண்டி நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் சுயநல வெறியை புரிந்து கொள்ள வேண்டும். இவர்களை முற்றாக நிராகரித்து தனிமைப்படுத்துவதன் மூலம் இவர்களின் குரல் இவர்களுக்கே கேட்க்க முடியாத நிலையை அடையச் செய்ய வேண்டும்.

கலாச்சாரமும், பண்பாடும் அழிவது யாரால் என்ற கேள்விக்கு இது வரை எமக்கு பதில் சொல்ல வக்கற்ற இந்த கயவர்கள் மீண்டும் கோயபல்ஸின் செயல்முறையையே பயன்படுத்துகிறார்கள்.
நேர்மையற்ற கயவர்களின்/கழிசடைகளின் கடைசிப் புகலிடம் மத அடிப்படைவாதம்!!!

அசுரன்
Related Article:

Related Posts with Thumbnails