TerrorisminFocus

Tuesday, February 26, 2008

தமிழச்சியை விமர்சிக்க புகுந்த ஆணிய தற்குறிகள்

மிழச்சி பெண்ணியம் என்ற பெயரில் எழுதி வருவம் விசயங்களில் எனக்கு ஒப்புதல் இல்லை. அவர் மீது எனக்கு கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன. ஆயினும் இங்கு புனித பிம்பம் வேசம் கட்டிக் கொண்டு அவரது தளத்தை நீக்க வேண்டும் என்று கலாச்சார காவலர்களாக அவதாரமெடுத்துள்ளவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசத்தின் மீது ஏதோ அதீத அருவெறுப்பு கொண்டவர்கள் போல நடிக்கும் இந்த கயவர்கள் முடிந்தால் தமது வீடுகளிலும், சாலைகளிலும், வெகுசன ஊடகங்களிலும் இருக்கும் ஆபாசத்தை எதிர்த்து அட்டை கத்தி சுழற்றட்டும். ஏன் அவ்வளவு கஸ்டம்? இங்கே இணையத்தில் கிளு கிளுப்பாக, இரட்டை அர்த்தங்களில் எழுதி பெண்ணுடலை விற்று தமது வலைப்பூ கட்டுரைகளை சூடாக்கியவர்களுக்கு எதிராக தமது அட்டை கத்திகளை சுழற்றி விட்டு பிறகு தமிழச்சியை பார்த்து பேசட்டும்.

இந்த விசயம் வேறு எந்த சில்லரை பிரச்சினைகள் போலவும் சிற்சில சலசலப்புக்கு பிறகு அமுங்கிவிடும் என்றே தலையிட விரும்பமின்றி இருந்தேன். ஆயினும் இந்த பிரச்சினை மேலதிகமாக தமிழச்சி ஒரு பெண் என்ற அடிப்படையில் அவரை மையப்படுத்தி வக்கிரமாக தனிமைப்படுத்தும் எல்லையை அடைந்துவிட்ட நிலையில் இதனை பார்த்துக் கொண்டு இருக்க இயலாது என்பதால இந்த பதிவு.

தமிழச்சி பதிவுகள் ஆபாசம் என்பது எனது கருத்தல்ல. அவை ஆபாசமல்ல என்பதை அறிவிக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் விவாதம் செய்ய வரலாம். அவை பிரச்சினைகளை பேசாமல் வெறும் பரபரப்பு சமாசாரமாக தீர்ந்து போகிற அம்சத்தில்தான் அவர் மீது எனது விமர்சனங்கள் என்பதை குறிப்பிட்டு விடுகிறேன். ஒருவேளை தமிழச்சி தமிழ்மணத்திலிருந்து யோனி என்கிற வார்த்தை பிரயோகத்திற்க்காக நீக்கப்படுவார் எனில் எனது பதிவுகளில் தலைப்புகள் எல்லாவற்றிலும் இனிமேல் யோனி உள்ளிட்ட பெண்ணிய உடல் சார்ந்த வார்த்தைகளை இடம் பெறச் செய்வதன் மூலம் போராட தலைப்பட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழ்மணத்தில் ஆபாசம் சார்ந்த விசயங்களை தடுக்கும் கொள்கைகளை தமிழச்சிக்கு பயன்படுத்தும் அதே சட்ட வரம்புகளின் அடிப்படையில் எல்லார் மீதும் பயன்படுத்த தமிழ்மண சமூகத்தை நிர்பந்திக்கவும் தயாராக இருக்கிறேன். தமிழ்மணத்தில் முன்பொருமுறை தமிழச்சி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே கடுமையான கண்டனத்துக்குரியது எனும் போதும் அது சூழ்நிலை கருதி எடுக்கப்பட்ட ஒரு தன்மையான நடவடிக்கை என்ற அளவில் சமரசமாக இருந்து கொள்ளலாம். ஆனால் இது தொடர்வதை பார்த்துக் கொண்டிருக்க இயலாது.

தமிழ்மணம் இந்த விசயங்களை அதன் சரியான அம்சத்தில் உள்வாங்கி பரிசீலிக்கும் என்று நம்புகிறேன். அல்லது இன்னும் சிறப்பாக இந்த அம்சத்தில் அது தலையிடாமல் இதனை விட முக்கிய வேலைகள் இருந்தால் அதில் உருப்படியாக நேரம் செலவழிக்கலாம் என்று கருதுகிறேன். இதில் எனது தெளிவான முந்தைய நிலைப்பாடுகளையே வைக்கிறேன். தமிழ்மணம் எனும் சுதந்திர வெளியின் சட்டங்கள் இங்கு உலாவும் தனிப்பட்ட ஒவ்வொருவராலும் தீர்மாணிக்கப்பட வேண்டும். தமிழ்மண வாசகர்களின் கையில் கலாச்சார காவலர் உரிமை இருக்கட்டும் என்கிற எனது ஆரம்ப கால நிலைப்பாட்டை இங்கு மீண்டும் நினைவுறுத்துகிறேன்.

அசுரன

Monday, February 25, 2008

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

CPM போன்ற போலி கம்யுனிஸ்டுகள் மக்களை மொத்தமாக புறக்கணித்துவிட்டு கேரளாவில் பில்லி சூனியம் வைத்து உள்கட்சி எதிரிகளை ஒழிப்பதிலும் மேவாவில் டாடா சலீம் கும்பலுடன் சேர்ந்து சொந்த மக்களை சுட்டு சாகடிப்பதிலும் கைதேர்ந்த பாசிஸ்டுகளாகிவிட்டனர்.(முக்கிய மேட்டர படிக்க விரும்புகிறவர்கள் இங்கிருந்து ஒரு நாலஞ்சு பத்தி கீழே போயி நேரா லெனின், மார்க்ஸ் இவிங்களோட உரையாடுங்க - இடையில நானும் வருவேன்).

பாசிஸ்டுகளுக்கு மார்க்ஸியத்தை திரிப்பது ஒன்றும் பெரிய பிரம்ம வித்தையல்ல. அப்படி ஒரு திரிப்புதான் கார்ப்போரேட் பார்ட்டி ஆப் டாடாயிஸ்டு அதாவது CPM கட்சியின் இணைய பிரசங்கியினுடைய சமீபத்திய பதிவ. அது பிரபாத் பட் நாயக்னு ஒருத்தர் எழுதுனதாம். அதப்பத்தி நமக்கு கவலையில்ல. ஆனா இதுக்கு முன்ன நடந்த எந்தவொரு விவாதத்திலும் நமது எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லாத சந்திப்பு ஏதோ அவரது கட்சி எல்லா விவாதங்களுக்கும் பாய்ந்து வந்து பதில் சொல்வது போல போலி ஆவேசம் காட்டியுள்ளதுதான் மகா காமெடியாக இருக்கிறது. அவருக்கு தெரிஞ்சதெல்லாம் மக இக காட்டுக்குள்ள உக்காந்து கட்சி நடத்துறாங்ககிறதும், அவர எதிக்குறவங்க எல்லாம் நக்ஸலைட்டுகள் என்பதுமான டேப்ரிக்காடர் மேட்டர்தான். அவருக்கு ஒரே ஒரு ப்ளாஷ்பேக் ஒட்டினால் நன்றாக இருக்கும் என்று படுகிறது. அந்த சாம்பிளுக்கு இங்க போயி பார்க்கலாம்: கம்யூனிஸ்டுகளின் (CPI-M) பிரச்னை

அரசும் புரட்சியும் புத்தகத்தில் இது போன்ற சமூக ஜனநாயக தேசிய வெறியர்கள் (அதாவது பாசிஸ்டுகள்) மார்க்ஸியத்தை திரிப்பது குறித்து லெனின் வெகு விமரிசையாகவே அம்பலப்படுத்தியுள்ளார். அவரது ஒவ்வொரு வரிகளும் இன்றைக்கும் வெகு பொருத்தமாக இருக்கின்றன. என்ன செய்ய ஒரு வரலாற்று கட்டத்தில் ஒரே விதமான கதாபாத்திரங்கள்தான் மேடையில் நடமாட வேண்டியிருப்பது வரலாற்றின் கட்டளை. லெனின் காலத்தில் அலைந்த அதே, அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிகளாகிய சந்தர்ப்பவாதிகள் செய்தது போலவே இன்றைய CPM உள்ளிட்ட புல்லுருவி பாசிஸ்டுகளும் செயல்படுகிறார்கள். என்ன ஒரே வித்தியாசம் CPM போன்ற பாசிஸ்டுகள் அன்றைய சமூக தேசிய வெறியர்கள் செய்த அளவுக்கூட மார்க்ஸியத்தை மேற்கோள் காட்டுவதில்லை அவ்வளவுதான். இனி லெனின் என்ன சொல்கிறார் என்று பார்ப்பதற்க்கு முன்பு கார்ப்போரேட் கட்சியின் இணைய பிரசங்கியினுடைய தளத்தில் வந்துள்ள கட்டுரையில் சில வரிகளை பார்த்து விடலாம்.

//ஆனால் சோசலிசத்தை அடைய ஒரு சமூகப் புரட்சி தேவை. அப்புரட்சி தனியுடமையாக உள்ள உற்பத்திக்கருவிகளை சமூக உடைமையாக்கும். //

அதென்ன பொல்லாத சமூக புரட்சி? நந்திகிராமிலும், கேரளாவிலும் செய்து வருவதா? ஏன் கேட்கிறேன் என்றால் தனியுடைமையை (உற்பத்தி கருவிகளில்) அழிப்பது என்பதன் பொருள் நந்திகிராம் மக்களின் தனியுடைமையை அழித்து அதை டாடா சலிம் உள்ளிட்டவர்களின் உடைமையாக்குவது என்று போலிட் பிரோவில் முடிவெடுத்து சொன்னால் அதை சந்திப்பு இங்கு பிரசூரிக்கும் அபாயம் உள்ளது(அபாயம் என்ன அபாயம் அல்ரெடி அதெல்லாம் செஞ்சி முடிச்சி அந்த இடத்துல புல்லே முளைச்சிருச்சி - பார்க்க சந்திப்பின் பழைய பதிவுகள்).

மார்க்ஸ் கம்யுனிஸ்டு கட்சி அறிக்கையிலேயே தெளிவாக சொல்கிறார் - சிறு உடைமையாளர்களின் சொத்துடைமையை அழிப்பதா கம்யுனீஸ்டு புரட்சியின் நோக்கம்? இல்லை அதை ஏற்கனவே முதலாளித்துவம் செய்து வருகிறது என்று(மாறாக சொத்துடைமையின் சமூக தன்மையை மாற்றுவதுதான் கம்யுனிஸ்டுகளின் நோக்கம்). ஆக இங்கு கார்போரேட் பார்ட்டி ஆப்பு டாடாயிஸ்டு கட்சி கம்யுனிஸ்டு கட்சியாக செயல்படுகிறதா அல்லது முற்றிய முதலாளித்துவம் AKA பாசிசம் ஆக செயல்படுகிறதா என்பதை படிப்பவர்களின் புரிதலுக்கே வீட்டு விடுகிறேன். ஏனெனில் அவரது கட்சி சிறு உடைமையாளர்களீன் சொத்தை அழித்து டாடா சலீம் சமூகத்தின் சொத்தாக மாற்றி வருகிறார்கள் அதனால்தான்.

இந்த வரிக்கு பிறகு அவர் கொடுத்துள்ளதெல்லாம் ப்லப்பல்ப்லப்லல்லா.....தான். அவற்றை சுருக்கமாக தொகுத்து கட்சி கொள்கை என்று ஒரு லிஸ்டு கொடுத்துள்ளார்.

//உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்க வேண்டும்.
மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.
வர்க்க சேர்க்கையை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
வர்க்க உணர்வை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
பாட்டாளி வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
//

இதில் ஒன்றில் கூட மேவாவுல் சரி, கேரளாவும் சரி மற்றெந்த மாநிலங்களையுவிட பின்தங்கி தவழ்ந்து கொண்டுதான் உள்ளன. வர்க்கச் சேர்க்கையை வலுப்படுத்துவது என்கிற அம்சத்தில் மட்டும் அவர்கள் சிறிது முன்னேறிச் சென்றுள்ளனர். அவை மூறையே, மேவாவில் டாடாயிஸ்டுகளுடன், சலீம்களுடன் கூட்டணீ வைத்து மக்கள் ஜனநாயகத்தை ஒடுக்கியதும். கேரளாவில், மேவாவில் பார்ப்ப்னியத்துடனும், மூடநம்பிக்கை பில்லி சூனியத்துடனும் ஒட்டி உறவாடி வருவதுமே ஆகும். நல்ல வர்க்க கூட்டணி. சரிதான். வேற மாதிரி நடந்திருந்தாதான் ஆச்சரியம்.


//சூழ்நிலை மைகளின் முழு பரிமாணத்தையும் கணக்கில் கொண்டு சரியான வழி முறையை தீர்மானிப்பது,
முதலாளிகளுக்கிடையேயான போட்டியை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் அதீத கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுக்காமல் முதலீடுகளை செய்ய வைப்பது.
தனியார் மூலதனத்திற்கு இணையாகவும், அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அரசு முதலீட்டைப் பயன்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். //

இந்த அம்சத்திலும் கூட பாசிஸ்டு கட்சியினர் சிறிது முன்னேறியுள்ளனர். அதாவது முதலாளிகளின் போட்டியை பயன்படுத்தி அவர்களின் அதீத கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுக்காமல் முதலீடுகளை செய்ய வைப்பது என்கிற அம்சத்தில் சிங்கூர் விளை நிலங்களை அடி மாட்டு விலைக்கு புரொக்கரிங் செய்து கொடுத்ததும் அப்படி குறைந்த விலைக்கு வாங்க வசதியாக அரசாங்கமே டாடாவுக்கு கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் நஸ்டத்தில் கடன் கொடுத்ததும் நிகழ்ந்துள்ளது. இங்கு யாருடைய அதீத கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்பதற்க்கு நந்திகிராம் சாட்சியாக உள்ளது. யாருடைய மூலதனம் யாருடைய பாக்கெட்டு போனது என்பதற்க்கு சிங்கூர் உதாரணமாக இருக்கிறது.

சரி உண்மையில் லெனின் இந்த பாசிஸ்டுகள் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:

அதாவது அரசும் புரட்சியும் (அத்தியாயம் 1, 4வது தலைப்பு - அரசு "உலர்ந்து உதிர்வதும்" பலாத்கார புரட்சியும்)

"கருத்து வளத்தில் சிறந்து விளங்கும் ஏங்கெல்ஸின் இந்த வாக்குவாதத்தில் ஒரேயொரு விவரம் மட்டும்தான் நவீன கால சோசலிஸ்டு கட்சிகளுடைய சோசலிச சிந்தனையில் இடம் பெறுகிறதெனெ திடமாய் கூறலாம்............ அரசு ஒழிக்கப்பட வேண்டும் என்னும் அராஜக கோட்பாட்டுக்கு மாறாக மார்க்ஸின் கருத்துப்படி அரசு உலர்ந்து உதிர்ந்துவிடும் என்கிற ஒரேயொரு விவரம் மட்டும்தான் ஏற்கப்பட்டுள்ளது. மார்க்ஸியத்தை இந்த அளவுக்கு வெட்டி குறுக்குவது என்பது மார்க்ஸியத்தை சந்தர்ப்பவாதமாக சிறுமைப்படுத்துவதே அன்றி வேறல்ல".

இப்படி நான் சொல்லல சாமி. சாட்சாச் லெனின் என்ற நக்ஸலைட்டுதான் இப்படி சொல்லிறுக்காறு. இங்க நம்ம பிரபாத் கூட அதே சந்தர்ப்பவாத திரிபு வேலையத்தான் செய்யுறாரு(அரசு உலர்ந்து உதிரும் என்பதை மட்டும் வைத்து தனது வாதத்தை கட்டியமைத்துள்ளார்).

அப்படியெனில் உலர்ந்து உதிருவது என்கிற இடத்தை பேசும் போது ஏங்கெல்ஸ் அராஜகவாதிகள் தவிர்த்து வேறு யாரை சந்தர்ப்பவாதிகள் என்று அம்பலப்படுத்துகிறார்? அது வேறு யாருமல்ல சாட்சாத் நம்ம பாசிஸ்டு கட்சியான CPM கும்பலைத்தான் அவர் அம்பலப்படுத்துகிறார்:

"சுதந்திர மக்கள் அரசு என்னும் தொடர் எந்த அளவுக்கு மதிக்கத்தக்கது என்பதையும் - கிளர்ச்சியை முன்னிட்டு சில நேரங்களில் எந்த அளவுக்கு அதன் பிரயோகம் நியாயமென்பதையும், முடிவில் விஞ்ஞான வழியில் அது எவ்வளவு குறைபாடானதென்பதையும் - அராஜகவாதிகளுடைய கோரிக்கையாக சொல்லப்படும்....." - ஏங்கெல்ஸ் (அதே புத்தகம் அதே பகுதி).

இங்கு பாசிஸ்டு CPM கட்சியினர் அராஜகவாதி குறித்த பகுதிகளை மட்டுமே பேசுவர். ஏங்கெல்ஸ் சுதந்திர மக்கள் அரசு என்று குறிப்பிட்டுள்ளது குறித்து எதுவுமே சொல்லமாட்டார்கள் கள்ள மௌனம் சாதிப்பர். ஏனேனில் அங்கு சுதந்திர மக்கள் அரசு என்று குறிப்பிடுவது முதலாளித்துவ அரசில் பங்கெடுப்பதைத்தான். அதையே சோசலிசத்துக்கான பாதையாக கொள்வதைத்தான் ஏங்கெல்ஸ் குத்திக் காட்டுகிறார். இந்த அம்சத்தில் லெனின் கீழே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

"சுதந்திர மக்கள் அரசு என்பது 1870-80 ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளது வேலை திட்டத்தில் குறிக்கப்பட்ட கோரிக்கையாய் அமைந்து அவர்களிடையே பெருவழக்கமாகிவிட்ட முழக்கமாயிருந்தது(note: இங்கு CPMயை ஒப்பிட்டு கொள்ளவும்). இந்த முழக்கம் ஜனநாயகம் என்னும் கருத்தோட்டத்தை ஆடம்பரமான அற்பவாத பாணியில் சித்தரிக்கிறதென்பதைத் தவிர வேறு அரசியல் உள்ளடக்கம் சிறுதும் இல்லாததே ஆகும். சட்ட முறையில் அனுமதிக்கப்பட்ட வழியில் சூசகமாய் அது ஜனநாயக குடியரசை குறித்தவரை "சிறிது காலத்துக்கு' அதைக் கையாளுவதில் நியாயமுண்டு என்பதை ஏங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார். ஆனால் அது சந்தர்ப்பவாத முழக்கமே ஆகும். ஏனேனில் அது முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு மெருகூட்டி மினுக்கச் செய்வதுடன் நின்றுவிடுவதில்லை. பொதுவாய் அரசு குறித்த சோசலிச விமர்சனத்தைப் புரிந்துக் கொள்ளத் தவறிவிடுகிறது."

இங்கு வெகு தெளிவாக CPM கட்சியினரின் துரோக நடத்தையை லெனின் தோலுரித்துக் காட்டுகிறார். ஒரு உண்மையான ஜனநாயக குடியரசாய இருக்கின்ற பட்சத்தில்தான் லெனின் அதில் சிறிது காலத்துக்கு அதுவும் கிளர்ச்சியை முன்னிட்டு(ஏங்கெல்ஸ் மேற்கோள்) பங்கெடுக்கலாம் என்கிறார். ஆனால் இந்தியாவிலோ குறைந்த பட்ச ஜனநாயக அரசு கூட இல்லை. இதையே சோசலிசத்துக்கான பாதை என்று சொல்லி உழைக்கும் மக்களை ஏமாற்றுவதுடன் இந்திய பிற்போக்கு அதிகாரவர்க்க தரகு அரசை மெருகூட்டி மினுக்க செய்யும் வேலையை தமது வாழ்நாள் கடைமையாக சோம்நாத் சாட்டர்சியும் இன்ன பிற CPM பாசிஸ்டுகளும் ஏற்றுள்ளனர்.

லெனின் மேலும் கூறுகிறார்:
"ஆனால் மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவ குடியரசிலுங்கூட கூலியடைமையிலேதான் மக்கள் உழல வேண்டியிருக்கிறதென்பதை மறக்க நமக்கு உரிமையில்லை".

நாம் மறப்பதில்லை. ஏனேனில் அவர் சொல்கின்ற 'நாம்' லிஸ்டில் நாங்கள் இருக்கின்றோம். மேவாவில் ஸ்டைரைக் செய்யக் கூடாது என்று சொன்ன CPM யாருடைய லிஸ்டில் சேரும் என்பதை படிப்பவர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

முதலாளித்துவ அரசை உள்ளிருந்தே அப்படியே மாற்றி சோசலிச புரட்சி கொண்டு வந்துவிட முடியுமா? இப்படித்தான் CPM சொல்கிறது ஏதோ புதிய விசயம் போல. மாறாக ஏங்கெல்ஸ் உள்ளிட்ட மார்க்ஸிய ஆசான்கள் வெகு தெளிவாக சோசலிச அரசுக்கு முந்தைய அரசு பலாத்காரத்தால் தூக்கியெறியப்பட வேண்டும் ஏனேனில் அவையெல்லாம் இதற்க்கு முந்தைய புரட்சிகளினால் மேலும் மேலும் வலுவாக்கப்பட்டு வந்த அதிகாரத்துவ அரசுகள் எனவே அவை தூக்கியெறியப்பட்டு அதன் அதிகாரத்துவ அம்சங்கள் நீக்கப்பட்ட முற்றிலும் 'உலர்ந்து உதிரும்' தன்மை கொண்ட சோசலிச அரசு அமைக்கப்பட வேண்டும் என்கிறார்.

திரிபுவாதிகள் ஏற்கனவே மார்க்ஸ் ஏங்கெல்சை திரித்தது போதும் இனிமேலும் அதை அனுமதிக்க முடியாது என்று லெனின் இந்த விசயத்தை மிக தெளிவாக சொல்லிவிடுகிறார்:

"பலாத்கார புரட்சி இல்லாமல் முதலாளித்துவ அரசு பாட்டாளி வர்க்க அரசாய் மாற முடியாது. பாட்டாளி வர்க்க அரசு, அதாவது பொதுவில் அரசெனப்படுவது "உலர்ந்து உதிரும்" நிகழ்ச்சிப் போக்கின் மூலமாகவே அன்றி வேறு எவ்வழியிலும் அகற்றப்பட முடியாத".

மேலும் லெனின் சொல்கிறார்:
"பலாத்கார புரட்சியைப் போற்றும் இந்த புகழ்மாலையை எங்கெல்ஸ் 1878க்கும் 1894க்கும் இடையில் - அதாவது அவர் இறக்கும் தருணம் வரையில் - ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளின் கவனதுக்கு ஒயாது கொண்டு வந்த வண்ணமிருந்தார். இதனையும் அரசு 'உலர்ந்து உதிரும்' தத்துவத்தையும் இணைத்து ஒருமித்த ஒரே தத்துவமாக்குவது எப்படி?

வழக்கமாய் கதம்பத் தேர்வுவாத வழியில் முதலில் ஒன்றும் பிற்பாடு மற்றொன்றுமாய்த் தான் தோன்றித்தனமாய் கொள்கை கோட்பாடின்றி அல்லது குதர்க்கவாத முறையில் தேர்வு செய்யப்பட்டு இவை இரண்டும் இணைக்கப்படுகின்றன
."

இங்கே வெகு குறிப்பாக அரசு உலர்ந்து உதிர்வது குறித்தான தத்துவமும், பலாத்கார புரட்சி குறித்த தத்துவம் ஒன்றையொன்று இயங்கியல் ரீதியாக சார்ந்தே உள்ளன என்பதையும் அவை கால வரிசைப்படி அதாவது காலையில் பல் தேய்த்தவுடன் சாப்பிடுவது (தேவைப்பட்டால் பல் தேய்க்கமாலேயே சாப்பிடலாம் தோழர்) என்பது போன்று தேர்வுவாத முறையிலான விசயமல்ல என்பதைத்தான் வலியுறுத்துகிறார் லெனின். இந்த வேலையை அதாவது தேர்வுவாத முறையை கை கொண்டிருப்பது பாசிஸ்டு CPM கும்பல்தான்.

"சந்தர்ப்பவாத முறையில் மார்க்ஸியத்தை புரட்டிப் பொய்யாக்குவதில், இயக்கவியலுக்குப் பதிலாய்த் தேர்வுவாதத்தைக் கைகொள்வதுதான் மக்களை ஏமாற்ற மிகவும் எளிய வழி. இது பிரமையான போலி மனநிறைவு அளிக்கிறது" - லெனின

மேலேயுள்ள இந்த வரிகள் சந்திப்பு போன்ற பாவபட்ட பலியாடுகளுக்கு(கறுப்பு ஆடு என்று நான் சொல்லவில்லை).

குறிப்பாக இந்த கட்டுரையில் உடனடியாக சோசலிச புரட்சி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று மார்க்ஸிய பெருந்தகை பிரபாத் சொல்லியுள்ளார் அதை சந்திப்பு வழிமொழிந்துள்ளார். இவர்கள் எல்லாம் தயவு செய்து லெனினிசத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லிவிடலாம். ஏனேனில் மாவொயிஸம் என்கிற சொல் பதத்தை எந்த அம்சத்தில் இவர்கள் விமர்சிக்கிறார்களோ அதே அம்சத்தில் லெனினிசத்தில் இவர்கள் செய்யும் திரிபு உள்ளது. (இவர்கள் அந்த தத்துவத்தை விமர்சிக்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டு விடுகிறேன். திரிபுவாதிகள் சொன்னதை விட்டு சுரையை பிடுங்குவதில் சூரர்கள். எனவேதான் மாவொயிசம் என்று பெயர் வைத்ததில் உள்ள நொல்லை நொட்டைகளை ஆய்வு செய்பவர்கள் அந்த தத்துவம் குறித்து எந்த பதிலும் சொல்வதில்லை).

லெனின் ருஸ்ய புரட்சியை சோசலிச உலக புரட்சியின் இணைப்பு என்கிறார். அதாவது அவரது வரையறைப்படி ஏகாதிபத்தியம் அல்லது முதலாளித்துவம் அல்லது சொத்துடமை சமூகத்தின் இறுதி மூச்சுக்கு பயணிக்கும், புரட்சிகளின் காலகட்டம் ருஸ்ய புரட்சியிலிருந்து ஆரம்பித்து விட்டது என்பதுதான். அதாவது இந்த வரலாற்று காலகட்டம் என்பது சோசலிச புரட்சிகளின் கட்டம் என்பதுதான். அதாவது அல்ரெடி புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் விசயம். லெனினிசம் என்பதின் அர்த்தம் இதுதான். லெனினிசத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்பவர்கள் சோசலிச புரட்சி இப்போ தேவையில்லை என்பது விந்தையானதல்ல ஏனேனில் சொல்வது பாசிஸ்டு திரிபுவாதிகள் அல்லவா(இங்கு இந்தியா போன்ற ஜனநாயக புரட்சி நடைபெறாதா நாடுகளில் சோசலிச புரட்சியின் தன்மை என்னவாக இருக்கும் என்பது குறித்து எதுவும் பேசப்படவில்லை).

தேர்தல் குறித்து ஏங்கெல்ஸ்:(அரசும் புரட்சியும் - அத்தியாயம் 1, 3. அரசு-ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சுரண்டுவதற்கான கருவி)

"அனைத்து மக்களின் வாக்குரிமை, "தொழிலாளி வர்க்கத்தினுடைய முதிர்ச்சியின் அளவுகோலாகும். தற்கால அரசில் அது இதற்க்கு மேல் எதுவாகவும் இருக்காது. இருக்கவும் முடியாது""


தேர்தல் குறித்து லெனின்:(மேலேயுள்ள வரிக்கு அடுத்த வரிகளில்)

"நம்முடைய சோசலிஸ்டு புரட்சியாளர் கட்சியினரையும் மென்ஸிவிக்குகளையும் போன்ற குட்டி முதலாளீத்துவ ஜனநாயகவாதிகளும், இவர்களுடைய உடன் பிறந்த சகோதரர்களான மேற்கு ஐரோப்பிய சமூக-தேசிய வெறியர்கள், சந்தர்ப்பவாதிகள் அனைவரும் அனைத்து மக்களின் வாக்குரிமையிடமிருந்து இதற்க்கு மேற்பட்ட ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். 'இன்றைய அரசில்' அனைத்து மக்களின் வாக்குரிமை உழைப்பாளி மக்களில் பெரும்பாலானோரின் சித்தத்தை மெய்யாகவே புலப்படுத்திக் காட்ட வல்லது, இந்த சித்தம் நிறைவேற வழி செய்ய வல்லது என்ற பொய்க் கருத்தை இவர்கள் கொண்டுள்ளனர்; மக்களுக்கும் இதனை ஊட்டி வருகின்றனர"

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும் என்பது போல மார்க்ஸியத்தை வெட்டி குறுக்கி சிதைத்து கடைசியில் பாசிஸ்டுகளாக நிற்கும் CPM தான் மக்களுக்கு அடிமைத்தனத்தை மேலே லெனின் சொன்னது போல ஊட்டி வளர்த்து வருகின்றனர். ஆயினும் அவர்கள் கொள்கை புத்தகத்தில் சொல்லியுள்ளது போல புரட்சிதான்(அவர்களது மக்கள் சனநாயக புரட்சி) வருகிற பாட்ட காணோம்.

சரி இதையெல்லாம் விட சூப்பராக இந்த துரோகிகளை பாசிஸ்டுகளை அம்பலப்படுத்த சில விசயங்களை சொல்லிச் சென்றுள்ளனர் நமது மார்க்ஸிய ஆசான்கள்.

"பலாத்கார புரட்சி பற்றிய திட்டவட்டமான இதே கருத்தோட்டத்தை முறையாய் வெகுஜனங்களின் மனதில் ஆழப் பதியச் செய்வது அவசியமென்பது மார்க்ஸ், ஏங்கெல்ஸின் போதனை அனைத்தின் ஆணி வேர் போன்றதாகும். இவர்களுடைய போதனைக்குத் தற்போது நடப்பிலுள்ள சமூக-தேசியவெறிப் போக்கும் காவுத்ஸ்கிவாதப் போக்கும் இழைத்துவரும் துரோகமானது, இந்த போக்குகள் இத்தகைய பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் கைவிட்டுவிட்டதில் மிகவும் எடுப்பாய் வெளிப்படுகிறது".-லெனின் (அதே புத்தகம், அத்தியாயம் 1, 4. அரசு உலர்ந்து உதிர்வது...)

அய்யா அதிமேதாவிகளே, மார்க்ஸியத்தின் ஆணி வேருன்னு ஒன்ன சொல்லிறுக்குறாரே அவர நக்ஸ்ல்பாரின்னு CPM கும்பல் முத்திரை குத்தும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். அதை அவர் செய்யும் முன்பாகவே நாஙக செய்ய விரும்புகிறோம். லெனின் சொன்ன மாதிரி பிரச்சாரம், கிளர்ச்சியை கைவிட்ட துரோகிகள் யாருங்கறத காமரேடு சந்திப்பின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

அம்புட்டுதாம்பா.....


அசுரன்

Friday, February 22, 2008

நேபாளம் ஜனநாயக குடியரசாவதை தடுக்க BJP சதி!!!

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் வழிநடத்திய பத்து வருட ஆயுத போராட்டத்தின் உச்ச கட்டமாக பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் மன்னராட்சியை தூக்கியெறியும் போராட்டம் வெற்றியடைந்தது. இதனை அடுத்த தமது ஆயுதங்களை பெட்டகத்தில் வைத்து பூட்டிவிட்டு தமது ராணுவத்தை கலைத்து ஜனநாயக குடியரசில் இணைய சம்மதித்தது மாவோயிஸ்டு கட்சி. இன்னிலையில் தேர்தல் நடந்தேறாமல் தொடரந்து தள்ளி வைக்கப்படுவதும், நேபாளத்தில் எல்லைப் பகுதிகளில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தேவையின்றி துப்பாக்கி சூடு நடத்தி பீதி கிளப்புவதும், RSS பயங்கரவாத கும்பல் தனது கூலி பட்டாளத்தை எல்லை தாண்டி அனுப்பி குழப்பம் விளைவிப்பதும் நடந்து வருகிறது என்று மாவோயிஸ்டுகள் குற்றம் சாட்டுகிறார்கள். நேபாளத்தில் ஒரு ஜனநாயக குடியரசு வரவிடாமல் இந்திய ஆளும் வர்க்கங்களும், பார்ப்பனிய பயஙகரவாதிகளான RSS குண்டர்களும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் சதி செய்து வருகிறார்கள் என்றும் பிற்போக்கு மக்கள் விரோத இந்து அரசை மன்னரின் தலைமையில் மீண்டும் அமைப்பதுதான் இவர்களின் நோக்கம் என்றும் மாவோயிஸ்டு தலைவர் கஜுரேல் சென்னையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள நடந்த மாலை நேர பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

அகண்ட பாரத கனவுகளுடன் வெறி கொண்டு அலையும் பயஙகரவாதிகளான BJP-RSS சங்க பரிவார குண்டர் படை தனது அகண்ட பாரத்தத்தில் ஒரு பகுதியான நேபாளம் இந்து நாடாக இல்லாமல் மதச் சார்பற்ற குடியரசக மலர்வதை பார்த்துக் கொண்டு சும்மயிருக்காது என்பது யாவரும் அறிந்ததே. மேலும் தீண்டாமை, சாதி ஒடுக்குமுறை உள்ளிட்ட பார்ப்பினிய அடக்குமூறைகளுக்கு சமாதி கட்டிய மாவோயிஸ்டு புரட்சியை அவர்கள் சாகடிக்கவே நினைப்பார்கள் என்பதிலும் யாருக்கும் சந்தேகமிருக்காது.

இதன் ஒரு அம்சமாகத்தான் இந்தியா வந்த மாவொயிஸ்டு தலைவர் கஜுரேலின் கருத்தரங்கத்திற்க்கு தடை விதித்தது தமிழக அரசு. அடுத்த நாட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை மரியாதை கூட கொடுக்க வக்கில்லாத இந்த அரசுதான் மோடிக்கு மட்டும் ஜனநாயகம் பேசும். இதன் மூலம் இவர்கள் யாருக்கு மஞ்சள் துண்டு தூக்குகிறார்கள் என்பதை சிறப்பாகவே வெளிச்சமிட்டு காட்டுகீறார்கள்.

செய்திரசம்


Nepal party accuses BJP of trying to sabotage polls

Posted online: Tuesday , February 19, 2008 at 03:00:11
Updated: Tuesday , February 19, 2008 at 03:19:11

Chennai, February 18: The Communist Party of Nepal (Maoist) on Tuesday charged the Sangh Parivar outfits in India as well as the US with trying to "sabotage" the April elections to the Constituent Assembly of that country. "Elections have been postponed thrice... The US and the BJP and its sister organisations such as VHP and RSS in India do not want the elections to be held for their own vested interests," top-rung Maoist leader and party's central committee member C P Gajurel alleged. While the US wanted to make Nepal a base with an aim to control India and China, the Sangh Parivar wanted Nepal to remain a Hindu nation, he told reporters in Chennai. Gajurel had come to the city to attend a meeting of an Indo-Nepalese forum. He also charged the "Hindu fundamentalists" with creating violence in some parts of the country, especially those close to Bihar and Uttar Pradesh in order to sabotage the polls. "We, by the electoral process, want to make Nepal a people's republic and abolish the 240-year-long monarchy. But elections have been already postponed thrice and if they are not held on April 10, we would initiate a mass movement in the country," he said. However, he ruled out any armed struggle, which the Maoists had resorted to while opposing the monarchy earlier, saying "the arms were locked in the containers while the cadre confined to cantonments". "Years of people's war (armed struggle) resulted in a mass movement, paving way for people's rule. Those who are supporting the monarchy, including some Generals in the Royal Nepalese Army, do not want elections to be held as that will put an end to feudalism in Nepal," Gajurel said. Responding to a query, Gajurel said there was "no clear evidence" on the direct hand of the government of India in "attempts" to sabotage the elections. Further, "we have taken up with India, the efforts of the fundamentalists, and some provocative firing by the CRPF on the Indo-Nepalese border," Gajurel, who had been once lodged in a Chennai prison, said. On the Maoist movement in India, Gajurel said the Nepali Maoists were ideologically similar to the former, but desisted from "making suggestions to them". The Maoist leader also called for support from the people of India, the European Union (EU) and other global powers for the successful conduct of the elections in April.

Related Article:

BJP, US active to thwart poll

Police denies Maoist meeting in city hall

இன்வ்itation for a Hall meeting - A Red Star in the Sky of Nepal!!!
RAW’s new strategy for Nepal
இந்திய உளவு துறை நேபாளத்தில் குழப்பம் விளைவிக்க சதி
நேபாள் தெராய் பகுதியில் கிளர்ச்சி செய்பவர்களுக்கு இந்திய உளவுத் துறை ஆதரவு நேபாள காங்கிரஸ் தலைவர் கொய்ராலா வருத்தம்

Monday, February 18, 2008

எல்லாரும் கட்டாயம் கலந்துக்கனும், இது நம்ம விழா, ஆமா சொல்லிபுட்டேன்!!!!

கருத்தரங்கம்

எல்லாரும் கட்டாயம் கலந்துக்கனும், இது நம்ம விழா, ஆமா சொல்லிபுட்டேன்!!!!
பிப்ரவரி 19, 2008 செவ்வாய், மாலை 4 மணி
பத்மா ராம் மகால் (ராம் தியேட்டர்)
83, N.S.K சாலை,கோடம்பாக்கம்,சென்னை- 24
இந்திய நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்
தலைமை :
சு.ப.தங்கராசு
பொதுச்செயலாளர்,
பு.ஜ.தொ.மு,
அனைத்திந்திய செயற்குழு உறுப்பினர்,
இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்
உரையாற்றுவோர்:.
நீண்ட பயணம் சுந்தரம்
மாநிலச் செயலாளர் இ.பொ.க (மா.லெ)..
தமிழேந்தி
மார்க்சிய - பெரியாரிய பொதுவுடமைக் கட்சி,..
இல.கோவிந்தசாமி
செயலாளர் இ.பொ.க (மா.லெ) செங்கொடி..
சங்கர சுப்புவழக்குரைஞர்,
மாநிலத்தலைவர்,
இந்திய மக்கள் வழக்குரைஞர்கள் சங்கம்...
சாந்திர பகதூர்
மத்தியக் குழு உறுப்பினர்,
நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு,..
இந்தியா.
ஏ.எஸ். குமார்
மாநில துனைத்தலைவர்,A.I.C.C.T.U..
த.வெள்ளையன்
தலைவர்,
தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை...
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்,
தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி...
தொல்.திருமாவளவன்
பொதுச் செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...
தியாகு
பொதுச் செலாளர்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்...
சுப.வீரபாண்டியன்
பொதுச்செயலாளர்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை...
மருதையன்
பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்...
சிறப்புரை:
பவன் பட்டேல்
செயலாளர்,
இந்திய - நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம்.
லட்சுமண் பந்த்
செயலாளர்,
நேபாள மக்கள் உரிமைப் பாதுகாப்புக் குழு,
இந்தியா.
சி.பி.கஜீரேல்
மத்தியக் குழு உறுப்பினர்,
நேபாள பொதுவுடமைக் கட்சி, (மாவோயிஸ்ட்)
நன்றியுரை:
வ.கார்த்திகேயன்
செயலாளர்,
புரட்சிகர - மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.
தொடர்புக்கு:
அ.முகுந்தன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை - 24
அழைக்க - 94448 34519


வீர முழக்கமிடும் சொறிநாயும், கிழிந்து தொங்கும் ஜனநாயக கோமணமும்!!!!

"சூரியன யார் சுட்டது?
சூரியன யாரும் சுட முடியாது சார்.... சூரிய வெப்பம்தான் நம்மள சுடும்.... "
இது பிரபலமான கவுண்டமணி பட டயலாக்.

இதே மாதிரி "சூரியன கண்டு நாய் குரைத்த மாதிரி" அப்படின்னும் ஒரு பேமஸான டயலாக்/சொலவடை மக்களிடையே வெகு காலமாக புழக்கத்தில் உள்ளதுதான்.

சமீப காலங்களில் பார்ப்பனியவாதிகளும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் ஜனநாயக முகமூடி போட்டுக் கொண்டு முற்போக்காளர்களை மோதவிட்டு ரத்தம் குடிக்க செய்த சதிகளும், கிருத்துவ, இஸ்லாமிய பதிவர்களை மோதவிடுவதற்க்காக முகமூடி போட்டுக் கொண்டு வேலை செய்ததும் அனானிகள் முன்னேற்ற கழகத்தாலும், தோழர் நண்பர் சம்பூகனாலும் அம்பலப்படுத்தப்பட்டன. குறிப்பாக தோழர் சம்பூகனின் அறநெறியின் பாற்பட்ட ஆக்ரோசமான வாதங்கள் தமிழ்மணி என்ற பெயரில் ஒளிந்திருந்த - தமிழ்மணத்தில் மார்க்கெட் இழந்த ஏகாதிபத்திய அடிவருடி கும்பல்/பார்ப்ப்னிய கும்பல் கூட்டணியை அம்பலப்படுத்தியது.

இன்னிலையில் இவர்களது ஒரேயொரு வாதமான ஜனநாயகம் என்பதை அவர்கள் உண்மையில் எந்த அர்த்தத்தில் சொல்கீறார்கள் என்பதையும், இன்றைக்கு ஜனநாயகம் என்று முன்னிறுத்தப்படும் மக்கள் விரோத அமைப்பின் அருகதையையும் விளக்கி அசுரனில் கட்டுரை இடும் எண்ணம் இருந்து வந்தது. அந்த தேவையை இல்லாதொழிக்கும் வகையில் ஆக்ரோசமான வெகு சில வரிகளில் சூரியனை பார்த்து குரைத்த ஒரு நாய்க்கு பதிலளிக்கும் முகமாக தோழர் சூரியன் ஜனநாயகம் என்று மக்கள் விரோத அடிவருடி குமபல் எதை சொல்கிறது என்பதனை குறிப்பிட்டுள்ளார். அந்த வரிகள் கீழே.....
__________________________________________________
நாய் இப்படி குரைத்தது:
ஜனநாயகவாதிகளே கம்யூனிச சர்வாதிகாரத்தை கொண்டு வரத்திட்டம் போடும் இந்த பயங்கரவாத கும்பலை முறியடிப்போம் இந்த்திய ஜனநாயகத்தை கட்டிக்காப்போம்.

சூரியன் இப்படி சுட்டது:
வீர முழக்கம் போடும் சொறி நாயே!!!!!!

எது உன் ஜனநாயகம், "மகாராஷ்ட்ராவில் 17,000 விவசாயிகளை கொன்று" ,

அம்பானியை 1 நொடிக்கு 40 லட்ச‌ம் சம்பாரிக்க வைத்தியே அதுவா ?

எது உன் ஜனநாயகம், "3000 முஸ்லிம் மக்கள் படுகொலையை நாங்கள் ரானா ப்ரதாப் சிங் போல் ருசித்து செய்தோம்" என்று சொன்ன RSS, BJP, BAJRANG DAL ஆகிய இந்து மத வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்",

தன் சுய நிர்ணய உரிமைக்காக போராடும் காஷ்மிர் மக்களை பயஙகரவாதி என்கிறாயே
அதுவா ?

பதில் சொல் !

ஏன் இந்த பய பீதி!

உன் இந்து என்ற "தேவிடியா மகன்" பட்டத்தை நாங்கள் தூக்கி எரிந்து விட்டு மனிதனாக வாழ முற்பட்டால் பயங்கரவாதி !

நீ பீ அள்ளச் சொல்லி ஆனையிட கை நீட்டும் போது , தாழ்த்தப்படவன் கையை மடக்கி மேல் எழுந்தால் அவன் தீவிரவாதி !

அங்கே பார்ப்பனியம் என்ற‌ பேயை எம் உழைக்கும் மக்கள் அடித்து விரட்டுகின்றனர் !

அங்கே மன்னன் என்ற சொறி நாயை எம் உழைக்கும் மக்கள் அடித்து விரட்டுகின்றனர் !

இதெல்லாம் அம்பானிக்கும், அமெரிக்காவுக்கும் மாமா வேலை பார்க்கும் உனக்கு புரியாது !!!!!!!!!!!!!!!

__________________________________________________

Related Articles:
மக்கள் மன்றத்தின் மீது அரசு ...
இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும் ...
விவசாயத்தின் பேரழிவும் - உயிர்ம ...
ஒரு மன்னன் மனிதனான கதை
அடிமை நாடும், போலி சுதந்திரமும்
அனானிக்கு ஒரு பதில் - அதிகார ருசி, புரட்சி, கம்யுன...
கேடு கெட்ட இந்தியா... யானை கட்டியா போரடித்தோம்?
விவசாயியும், SEZயும், அடிவருடிகளும்
மறுகாலனியாதிக்கமும், மாவீரன் பகத்சிங்கும்
இந்தியாவின் ஜனநாயகமும் - விவசாயமும், சிறு தொழில் த...
சோசலிச சமூகம் ஏன்? - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
தேசத் துரோக அடிவருடிகளும், சுதந்திர வர்த்தகமும் - ...
நவீன கிழக்கிந்திய கம்பேனிகள் - SEZ!
சோசலிசமும் - பார்ப்பினியத்தின் பொய்யுரைகளும்!
தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!
ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!
மாவோ - மானுட விடுதலையின் நம்பிக்கை ஒளி!!
நாலாவது தூண்களும், நாறும் போலி ஜனநாயகமும்!!
மக்கள் மீது மலம் கழிக்கும் நாட்டை 'பீ' காடாக்குவோம...

பங்கு சந்தைக்கு ஆப்படித்தது யார் என்று கண்டுபிடித்துவிட்டார்கள் - பாசக துப்பியெறியும் படை!!!

ப்பா.. கட்சீல பங்கு சந்தை குப்புறக்கா கவுந்தடிச்சு கிடக்குறதுக்கு யாரு காரணம்னு கண்டுபிடிச்சுட்டானுங்களாம். யாராரோ காரணம்னு நியுஸ்கேப்பிலும், செய்தி விமர்சனத்திலும், அசுரனிலும், இன்னபிற பங்கு சந்தை பதிவுகளிலும் கரடி உட்டுனுறந்தாங்க ஆனா அதெல்லாம் சும்மா கில்மான்னு சமீபத்துல கண்டுபிடிச்சுட்டாங்க.

தென்காசில குண்டு வைச்சிட்டு முஸ்லீம் மேல பலிய போட்டது, கோவையில் அப்பாவிகள குண்டு வைச்சிருந்தானு உள்ள பிடிச்சு போட்டதுன்னு சின்ன லெவல்ல கண்ணாமூச்சி விளையாடிண்டு(டிண்டு.. டிண்டு) இருக்குது லோக்கல் பாஜக. நாங்க மட்டும் என்ன சும்மா நொல்லக்கையா நாங்களும் அடிச்சு ஆடுவோம்னு அகில இந்திய பாஜக பங்கு சந்தைய ஆராய்ச்சி செஞ்சி அது குப்புறடிக்கா கிடக்குறதுக்கு காரணம் பயங்கரவாதிகள்தான்னு குன்சா ஒரு புது கரடி ஒட்டுறுக்கு.

நாம் இந்த கரடிய ஒத்துக்கிறோம். ஆமாம் பங்கு சந்தை கவுந்தடிச்சி கிடக்குறதுக்கு காரணம் அமெரிக்க பயங்கரவாதிகள்தான். அப்படியே இந்த உண்மையை சொன்ன பாஜக தலைமை(யை) துப்பியெறியும் நிபுனர் ராசுநாத் சிங்குக்கு ஒரு விண்ணப்பமும் வைக்க விரும்புகிறோம். 'இந்து'யாவுல கடந்த 10 வருடத்தில் 1.5 லட்சம் 'இந்து'யா விவசாயிங்க தற்கொலை செஞ்சினுக்கிறாங்க. கடந்த வருடம் மட்டும் 17,000 பேர். இவிங்கள தற்கொலை செய்றதுக்கு தூண்டிய, மிரட்டிய எல்லை தாண்டிய பயஙகரவாதி யாருன்னு ராசுநாத் சங்கு மற்றும் சொங்கி பரிவார கும்பல் தலீவர்களான ஒத்துவானி, வாசுபேயி , போடி போன்றோர் ஆய்வு செய்து உண்மைய மக்களுக்கு சொன்னா சேமமா இருக்கும்.

துப்பியெறியும் கும்பல் தலைவன் - துப்பியெறியும் நிபுனர் ராசுநாத் சிங்கு

இதே தலைமை(யை) துப்பியெறியும் கும்பல் பங்கு சந்தையை கண்டமேனிக்கு நாறடிப்பவர்களுக்கு சிவியர் பணிஸ்மெண்டு கொடுக்கனும்னு சொல்லிறுக்கானுங்க. அதுப்படி பார்த்தா ரிலையன்ஸ் அம்பானியும் அவரோட குஜராத் கவுண்டர் பார்ட்டுங்களான (கவுண்ட சாதியில்லீங்கோ... இது இங்கீலிசு கவுண்டர்) சக பங்கு சந்தை புரோக்கனுங்களுக்கும் தான் சிவியர் பணிஸ்மெண்டு கொடுக்கனும் என்று தெரியவருகிறது.

எனக்கு தெரிஞ்சு இதுக்கு முன்ன ஒரு பயங்கரவாதி பங்கு சந்தையை உண்டு இல்லனு பன்னான். அவன் பேரு ஹர்ஸத் மெத்தா அவன் முஸ்லீம் இல்ல, சீக்கியன் இல்ல, கிருத்தவன் இல்ல, தலித்தும் இல்ல. அவன மாதிரி ஆளுங்களத்தான் துப்பியெறியும் கும்பல் சொல்லதான்னு தெரியல.

Terrorists manipulating stock markets: BJP
NEW DELHI: Viewing the recent fluctuations in the sensex with concern, BJP suspects that some anti-national elements, including terrorists, may be manipulating the stock markets and wants a probe to ascertain the antecedents of investors.

Party President Rajnath Singh said his concern stems from the fact that up to 40 per cent of investments in the stock markets were by the Foreign Institutional Investors (FIIs) through PN (Participatory Notes) system.

"What kind of money, whose money, what colour is it? There is no information," Singh said in an interview while referring to the recent crash in the stock market leading to losses worth crores of rupees to small investors.

"This has been happening for several years. There should be some system to identify whose money is being invested," he said, favouring a "tough law" to monitor these investments.

His views echo the apprehensions expressed by National Security Advisor M K Narayanan about a year ago that terrorists might be pumping money with a design to manipulate the stock markets.

Senior BJP leader L K Advani had also last week noted that there can be no place for "manipulation, malpractices and misuse" of the system by any of the players of the capital market and demanded that offenders must be punished.

செய்திரசம்

Related Articles:

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!" href="http://newscap.wordpress.com/2008/02/04/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-rss-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/" rel=bookmark>தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!
குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்
ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!" href="http://newscap.wordpress.com/2008/01/30/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-rss-%e0%ae%86/" rel=bookmark>ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!
“கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்:நவீன மனுநீதி!”
“கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை”
இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …
பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

Tuesday, February 12, 2008

கோவை குண்டு வெடிப்பு சதி ஒரு பொய்யான நாடகம் - இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி!!!


News From: Newscap
கோவையில் 2006ஆம் வருடம் ஜூலை மாதத்தில் மனித நீதி பாசறை என்ற அமைப்பைச் சேர்ந்த மூன்று முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பைப் வெடிகுண்டுகள், மதவெறி துண்டு பிரசூரங்கள் போலீசால் கைப்பற்றப்பட்டன. இப்படி செய்தி வந்திருந்தது பத்திரிகைகளில். முதல் பக்கத்தில் வந்து பரபரப்பு கிளப்பியது இந்த செய்தி. தமுமுக இந்த வழக்கை CB-CID போலிசார் விசாரிக்க வேண்டும் என்று கோரியதை ஒட்டி வழக்கு CB-CIDயிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதோ இன்று ஒன்றரை வருடங்கள் கழித்து அந்த வழக்கு சுத்தமான பொய் வழக்கு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மதானி பத்து வருடங்களுக்கு மேலாக கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கோடூரமான சிறைவாசம் அனுபவித்து சித்திரவதைப் பட்டுள்ளார். ஆயினும் அவர் மீதான குற்றம் கடைசியில் நிரூபிக்கப்படவில்லை. ஆயினும் நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய மறுத்துவிட்டது. ""இவர்கள் மீது அரசால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், இவர்கள் மீது வேறு குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரம் உள்ளதாக'' "கண்டுபிடித்து' தீர்ப்பளித்தது நீதிமன்றம். இது தவிர்த்து நெல்லை மற்றும் கோவையைச் சேர்ந்த பல அப்பாவிகள் இந்த வழக்கில் சம்பந்தமில்லாமல் இணைக்கப்பட்டுள்ளது தெரிந்த செய்திதான். நல்ல நீதி.... பார்ப்பான் ஆளும் நாட்டில் நீதி பாழும் கிணற்றில் செத்து மிதக்க மட்டுமே முடியும்.

முஸ்லீம்கள் குறித்த பயங்கரவாத செய்திகள் கிடைத்தால் அதை முதல் பக்கத்தில் போட்டு பொய்யான தகவல்களை சேர்த்து பரபரப்பூட்டும் பத்திரிகைகள் எதுவும் அவை பொய் என்று நீருப்பிக்கப்பட்டு வரும் செய்திகளை தமது பத்திரிகைகளில் போடுவதில்லை அல்லது கண்ணுக்கு தெரியாத ஏதாவதொரு இடத்தில் போடுகின்றன. ஏனேனில் பத்திரிகைகளும் பார்ப்பனிய பயங்கரவாதத்தின் ஊதுகுழல்களாகத்தான் உள்ளன. இதோ இந்த செய்தியும் கூட பத்தோடு பதினொன்றாக மூலையில் போடப்பட்டிருந்தது.

இந்த செய்தி வரும் இதே நேரத்தில் கர்நாடகாவில் ஹூப்லி பகுதியில் இரு முஸ்லீம் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ஏதோ மிகப் பெரிய சதி வலைப் பின்னலின் சூத்திரதாரிகள் என்று தினம் ஒரு செய்தி பத்திரிகைகளில் எழுதப்படுகிறது. RSS மற்றும் இந்த பார்ப்பினிய அரசின் முந்தைய கால வரலாற்றை பார்க்குமிடத்து இந்த செய்திகளின் நம்பகத்தன்மையை நாம் சந்தேகத்துடன்தான் பார்க்க வேண்டியுள்ளது. ஏனேனில் கர்நாடக போலிசு குறிப்பாக வட கர்நாடக போலிசு RSS கும்பலுடன் இணைந்து பொய் பிரச்சாரம் செய்வதும் கலவரம் செய்வதும் விரிவாக அம்பலமான விசயமாகவே இருக்கிறது.

ஏற்கனவே தென்காசியில் குண்டு வைத்து முஸ்லீம்கள் மீது பழி போட்டு மக்களை பிளவு படுத்த எண்ணியவர்கள்தான் இந்த மக்கள் விரோத பயங்கரவாதிகள். மாஹாராட்டிரம் நாண்டடில் குண்டு தயாரிக்கும் போது மாட்டிக் கொண்டவர்கள்தான் இந்த கும்பல். இன்னும் சொன்னால் பல பகுதிகளிலிருந்தும் RSS கும்பல் குண்டு தயாரிக்கும் போது வெடித்து அந்த சம்பவங்கள் சிலிண்டர் வெடித்த சம்பவங்களாக திரிக்கப்பட்டது குறித்து பல செய்திகள் வருகின்றன. தென்காசி செய்தி எந்தவொரு பத்திரிகையிலும் வரவில்லை. நாண்டட் சம்பவமோ சுத்தமாக எங்குமே வரவில்லை(வெகு சொற்பமான ஏடுகளில் தவிர்த்து).

RSS கும்பல் இப்படி அப்பட்டமான ஆயுத மோதல் தயாரிப்பு மற்றும் மக்களை பிளவு படுத்தும் சதி திட்டங்களில் ஈடுப்பட்டுள்ளது பல முறை அம்பலப்பட்டிருந்தாலும், இந்த பயங்கரவாத அமைப்புகள் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. நிரபாராதிகளும், அப்பாவி உழைக்கும் மக்களையும் மட்டுமே தண்டிக்கும் இந்த அரசு உறுப்புகள் என்று காட்டியதன் மூலம் அரசு என்பது ஆளூம் வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவி என்ற கம்யுனிஸ்டு புரட்சியாளர்களின் கருத்து நிதர்சனாமாகியுள்ளது.

செய்தி ஆதாரம்: இமெயில் கோவையன்

செய்திவிமர்சனம்

The News:

Blast plot charge on five Kovai men found false

Saturday February 9 2008 08:52 IST

COIMBATORE: The Special Investigation Team of the CB-CID that probed the arrest of five Muslim men on July 22, 2006, on charges of plotting a series of bomb blasts in the city, has termed the charges as ‘false’.

The ‘findings’ of the SIT were placed before a Judicial Magistrate here recently and the court had reportedly accepted the findings.

Police had arrested Haroon Basha of Itteri, Kurichi Pirivu in Podanur here, his brother Malik Basha, Ravi alias Thippu Sulthan, Athikur Rehman and Shamsudeen and seized incriminating documents and also a pipe bomb from them.

They were alleged to be members of an organisation called MNP and that since they wanted to take revenge for the atrocities committed on Muslims, they decided to create terror.

Podanur police had registered the case and arrested them. The case was subsequently handed over to the SIT, CB-CID.

The findings submitted in the court by R Balan, Addl SP, SIT, CB-CID, Chennai, states: “The FIR in the Podanur police station under the Explosives Act, 1908 and seizure mahazars are fabricated and false.

“The statements of witnesses recorded by me conclusively confirm this and I am treating this case as ‘false.’ The witnessess collected during investigation exclusive of the police officials lend assurance to the fact that absolutely a false case has been registered and a false recovery of explosives was effected,” the report said.

The investigation done by the SIT is fully corroborated by the aggrieved persons and among them Athikur Rehman was subjected to narco test at a forensic lab at Madivala, Karnataka, and the report of polygraph confirms the theory of initiation of a false case.

Thanks: Indian Express

முதல் பக்கத்தில் பிரசூரிக்கப்பட்டுள்ள செய்தி: நன்றி 'தி ஹிந்து'2006 ஜுலை 23-ல் வந்துள்ள செய்தி: நன்றி 'தி ஹிந்து'

Five held in Coimbatore, explosive materials seized

V.S. Palaniappan

`Conspiracy to bomb hospital and other places foiled,' explosive materials seized

Coimbatore: The Coimbatore city police on Saturday arrested five persons and recovered materials and components meant for assembling improvised explosive devices (IEDs).

Commissioner Karan Singha told reporters that the police had, in the last fortnight, stepped up surveillance on a couple of suspects. With inputs pointing the finger at a group trying to assemble bombs and plant them on Saturday, the police conducted a pre-dawn swoop at three different locations.

First, the police searched a house at Kurichipirivu in the Podanur police limits, arrested brothers Haroon Basha and Malik Basha, and seized components for assembling an IED. Later, they searched a house in the Ganapathy area from where Tippu Sultan and Athikur Rehman were arrested.

Some documents and explosive materials were seized. The operation ended with the arrest of K. Samsudeen of Ramanathapuram, suspected to be a co-conspirator.

The recovered explosive materials are suspected to be a potassium chlorate mixture (weighing close to 400 gm), glass pieces, iron balls, small iron pipes, two batteries, a country bomb and an electric detonator. These could be used to make low-intensity bombs. The idea was to create a fear psychosis by unleashing terror.

Bid to blast hospital


A map with eight places marked was also recovered. Going by the markings, police suspect that the accused had plans to plant explosives in the Coimbatore Medical College Hospital and a few other places. The seized documents include photographs, names and details of a route map of the houses of activists of Hindu outfits, and their daily walking routine.

Special teams led by Deputy Commissioners K. Shanmugavel and P.C. Thenmozhi and Assistant Commissioner V. Rathinasabapathy, conducted the operations.

Mr. Singha lauded the officers and their teams for the ``meticulously planned successful operation.''


Related Articles:

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

"கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்:நவீன மனுநீதி!"

"கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை"

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

Tuesday, February 05, 2008

TCS - ரண்டு வருசத்துக்கு கம்மியா அனுபவமுள்ளவர்கள் Lay off துவங்கியது!!

TCS lay Off people having less than 2+ expereice with one month notice!!
Thanks: Newscap

Today TCS has sent an officiall mail individually to those who have less than 2 years of experience. The mail asked them to resign from TCS. They have been given one month notice period. It seems the initial head count comes around 2500 people. The reason stated is - Q3 target is not acheived.

Though people have worked as they use to work on any other quarters, it is because of Stock market gambling and USA subprime crisis TCS failed in reaching its targets. To mention it more clearly, it is not even a loss to TCS. It is just the lack of their profit that drives innocent employees out.

Incridible India???... No guys it is actually Insolent India.

Source: Net Pals

Newscap

Related Article:

IBM fires Freshers!!!

Monday, February 04, 2008

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

நன்றி: செய்திரசம்

Photobucket

Photobucket நன்றி: நன்றி: தினமலர்

தென்காசியில் RSS பார்ப்பனிய இந்துத்துவ வெறியர்கள் மக்களை பிளவுபடுத்தி எல்லா அயோக்கியத் தனங்களையும் செய்து வருவது அனைவரும் அறிந்த செய்திதான். சமீபத்தில் நில உரிமை பிரச்சினை என்ற தனிப்பட்ட பிரச்சினையை மத பிரச்சினையாக திசை திருப்பி கலவரம் செய்து சில உயிர்கள் சிவலோக பதவியடைய உதவி செய்தவர்களும் இந்த கும்பல்தான்.

இன்னிலையில் அந்த பகுதியில் தமது செல்வாக்கை மேலும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக RSS அலுவலகத்தில் தாங்களே குண்டு வைத்துக் கொண்டு இஸ்லாமியர் மீது பலி போடும் தனது பாரம்பரிய தந்திரத்தை இங்கும் செய்து அம்பலப்பட்டு போயுள்ளது RSS பார்ப்பன இந்துத்துவ வெறி கும்பல்.

இது போன்ற நடைமுறை இவர்களுக்கு புதிதானதொன்றும் இல்லை. ஏற்கனவே நாண்டடில் குண்டு தயாரிக்கும் போது வெடித்து அம்பலப்பட்டு போனவர்கள்தான் இவர்கள். அந்த சம்பவத்தில் இறந்தவன் தவிர்த்து மாட்டிக் கொண்ட வெறியர்கள் முஸ்லீம் மசுதி குண்டு வெடிப்புகள், நாக்பூர் RSS அலுவலக குண்டு வெடிப்புகளில் தொடர்பு கொண்டிருந்தது வெளிவந்தது.

இதே கும்பல் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து பயிற்சி செய்வதும் இவற்றை தமது ஊர்வலங்களில் உபயோகப்படுத்துவதும் எல்லா பத்திரிகைகளிலும் வந்து அம்பலமானதுதான். குஜராத்தில் ராக்கேட் லாஞ்சர்கள் உபயோகித்தது குறித்து பாஜக கட்சி MLA வே வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

காந்தியை கொன்ற கோட்சே தனது கொள்கையை வெளிப்படையாக அறிவிக்கும் நேர்மையின்றி கோழைத்தனமாக, ஒரு பன்றியைப் போல முஸ்லீமின் பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டு இந்திய முஸ்லீம்களை கொன்றொழிக்க நினைத்தவனின் வாரிசுகள் வெறு விதமாக செயல்பட்டிருந்தால்தான் ஆச்சரியம்.

Photobucket

Photobucket

Photobucket

குண்டு வைத்தவனின் வாக்குமூலம்:

"இந்துக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது குண்டு வீசினால் ஆதரவு கூடும் என்பதால் செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார் சஞ்சீவ் குமார்."

குண்டு வெடித்தவுடன் இஸ்லாமிய பயங்கரவாதிகளை கைது செய் என்று ஏற்கனவே திட்டமிட்டபடி இந்துத்துவ வெறியுடன் பேசிய RSS குரங்கு படையின் தலைவன்.

"திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக வழக்கம் போல் அரசு செயல்பட்டு வருவதால் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெளிப்படையாக வன்முறை பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது.

தொடர்ந்து ஹிந்துக்கள் மீதும், ஹிந்து இயக்கத் தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை தடுத்து நிறுத்தாமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தென்காசியில் கடந்த வருடம் ஹிந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியன் அவரது வீட்டு முன்பே படுகொலை செய்யப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவரது சகோதரர்கள் கொல்லப்பட்டனர். தற்போது மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது வெடிகுண்டு வீசித் தாக்கியுள்ளனர். இவைகள் அனைத்திற்கும் ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தைரியமாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தின் மீது தாக்குதல் தடத்தியவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இஸ்லாமிய பயங்கர வாதிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்."

இவன் கணக்குபடியே குண்டு வைச்சவனை கைது செஞ்சாச்சி. ஆனா இந்த கும்பல் இப்போ கைது செஞ்சது தப்புன்னு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.


Related Articles:

குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்

ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

Related Posts with Thumbnails