TerrorisminFocus

Showing posts with label மார்க்ஸ். Show all posts
Showing posts with label மார்க்ஸ். Show all posts

Monday, February 25, 2008

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

CPM போன்ற போலி கம்யுனிஸ்டுகள் மக்களை மொத்தமாக புறக்கணித்துவிட்டு கேரளாவில் பில்லி சூனியம் வைத்து உள்கட்சி எதிரிகளை ஒழிப்பதிலும் மேவாவில் டாடா சலீம் கும்பலுடன் சேர்ந்து சொந்த மக்களை சுட்டு சாகடிப்பதிலும் கைதேர்ந்த பாசிஸ்டுகளாகிவிட்டனர்.(முக்கிய மேட்டர படிக்க விரும்புகிறவர்கள் இங்கிருந்து ஒரு நாலஞ்சு பத்தி கீழே போயி நேரா லெனின், மார்க்ஸ் இவிங்களோட உரையாடுங்க - இடையில நானும் வருவேன்).

பாசிஸ்டுகளுக்கு மார்க்ஸியத்தை திரிப்பது ஒன்றும் பெரிய பிரம்ம வித்தையல்ல. அப்படி ஒரு திரிப்புதான் கார்ப்போரேட் பார்ட்டி ஆப் டாடாயிஸ்டு அதாவது CPM கட்சியின் இணைய பிரசங்கியினுடைய சமீபத்திய பதிவ. அது பிரபாத் பட் நாயக்னு ஒருத்தர் எழுதுனதாம். அதப்பத்தி நமக்கு கவலையில்ல. ஆனா இதுக்கு முன்ன நடந்த எந்தவொரு விவாதத்திலும் நமது எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லாத சந்திப்பு ஏதோ அவரது கட்சி எல்லா விவாதங்களுக்கும் பாய்ந்து வந்து பதில் சொல்வது போல போலி ஆவேசம் காட்டியுள்ளதுதான் மகா காமெடியாக இருக்கிறது. அவருக்கு தெரிஞ்சதெல்லாம் மக இக காட்டுக்குள்ள உக்காந்து கட்சி நடத்துறாங்ககிறதும், அவர எதிக்குறவங்க எல்லாம் நக்ஸலைட்டுகள் என்பதுமான டேப்ரிக்காடர் மேட்டர்தான். அவருக்கு ஒரே ஒரு ப்ளாஷ்பேக் ஒட்டினால் நன்றாக இருக்கும் என்று படுகிறது. அந்த சாம்பிளுக்கு இங்க போயி பார்க்கலாம்: கம்யூனிஸ்டுகளின் (CPI-M) பிரச்னை

அரசும் புரட்சியும் புத்தகத்தில் இது போன்ற சமூக ஜனநாயக தேசிய வெறியர்கள் (அதாவது பாசிஸ்டுகள்) மார்க்ஸியத்தை திரிப்பது குறித்து லெனின் வெகு விமரிசையாகவே அம்பலப்படுத்தியுள்ளார். அவரது ஒவ்வொரு வரிகளும் இன்றைக்கும் வெகு பொருத்தமாக இருக்கின்றன. என்ன செய்ய ஒரு வரலாற்று கட்டத்தில் ஒரே விதமான கதாபாத்திரங்கள்தான் மேடையில் நடமாட வேண்டியிருப்பது வரலாற்றின் கட்டளை. லெனின் காலத்தில் அலைந்த அதே, அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால், அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிகளாகிய சந்தர்ப்பவாதிகள் செய்தது போலவே இன்றைய CPM உள்ளிட்ட புல்லுருவி பாசிஸ்டுகளும் செயல்படுகிறார்கள். என்ன ஒரே வித்தியாசம் CPM போன்ற பாசிஸ்டுகள் அன்றைய சமூக தேசிய வெறியர்கள் செய்த அளவுக்கூட மார்க்ஸியத்தை மேற்கோள் காட்டுவதில்லை அவ்வளவுதான். இனி லெனின் என்ன சொல்கிறார் என்று பார்ப்பதற்க்கு முன்பு கார்ப்போரேட் கட்சியின் இணைய பிரசங்கியினுடைய தளத்தில் வந்துள்ள கட்டுரையில் சில வரிகளை பார்த்து விடலாம்.

//ஆனால் சோசலிசத்தை அடைய ஒரு சமூகப் புரட்சி தேவை. அப்புரட்சி தனியுடமையாக உள்ள உற்பத்திக்கருவிகளை சமூக உடைமையாக்கும். //

அதென்ன பொல்லாத சமூக புரட்சி? நந்திகிராமிலும், கேரளாவிலும் செய்து வருவதா? ஏன் கேட்கிறேன் என்றால் தனியுடைமையை (உற்பத்தி கருவிகளில்) அழிப்பது என்பதன் பொருள் நந்திகிராம் மக்களின் தனியுடைமையை அழித்து அதை டாடா சலிம் உள்ளிட்டவர்களின் உடைமையாக்குவது என்று போலிட் பிரோவில் முடிவெடுத்து சொன்னால் அதை சந்திப்பு இங்கு பிரசூரிக்கும் அபாயம் உள்ளது(அபாயம் என்ன அபாயம் அல்ரெடி அதெல்லாம் செஞ்சி முடிச்சி அந்த இடத்துல புல்லே முளைச்சிருச்சி - பார்க்க சந்திப்பின் பழைய பதிவுகள்).

மார்க்ஸ் கம்யுனிஸ்டு கட்சி அறிக்கையிலேயே தெளிவாக சொல்கிறார் - சிறு உடைமையாளர்களின் சொத்துடைமையை அழிப்பதா கம்யுனீஸ்டு புரட்சியின் நோக்கம்? இல்லை அதை ஏற்கனவே முதலாளித்துவம் செய்து வருகிறது என்று(மாறாக சொத்துடைமையின் சமூக தன்மையை மாற்றுவதுதான் கம்யுனிஸ்டுகளின் நோக்கம்). ஆக இங்கு கார்போரேட் பார்ட்டி ஆப்பு டாடாயிஸ்டு கட்சி கம்யுனிஸ்டு கட்சியாக செயல்படுகிறதா அல்லது முற்றிய முதலாளித்துவம் AKA பாசிசம் ஆக செயல்படுகிறதா என்பதை படிப்பவர்களின் புரிதலுக்கே வீட்டு விடுகிறேன். ஏனெனில் அவரது கட்சி சிறு உடைமையாளர்களீன் சொத்தை அழித்து டாடா சலீம் சமூகத்தின் சொத்தாக மாற்றி வருகிறார்கள் அதனால்தான்.

இந்த வரிக்கு பிறகு அவர் கொடுத்துள்ளதெல்லாம் ப்லப்பல்ப்லப்லல்லா.....தான். அவற்றை சுருக்கமாக தொகுத்து கட்சி கொள்கை என்று ஒரு லிஸ்டு கொடுத்துள்ளார்.

//உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்க வேண்டும்.
மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.
வர்க்க சேர்க்கையை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
வர்க்க உணர்வை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
பாட்டாளி வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
//

இதில் ஒன்றில் கூட மேவாவுல் சரி, கேரளாவும் சரி மற்றெந்த மாநிலங்களையுவிட பின்தங்கி தவழ்ந்து கொண்டுதான் உள்ளன. வர்க்கச் சேர்க்கையை வலுப்படுத்துவது என்கிற அம்சத்தில் மட்டும் அவர்கள் சிறிது முன்னேறிச் சென்றுள்ளனர். அவை மூறையே, மேவாவில் டாடாயிஸ்டுகளுடன், சலீம்களுடன் கூட்டணீ வைத்து மக்கள் ஜனநாயகத்தை ஒடுக்கியதும். கேரளாவில், மேவாவில் பார்ப்ப்னியத்துடனும், மூடநம்பிக்கை பில்லி சூனியத்துடனும் ஒட்டி உறவாடி வருவதுமே ஆகும். நல்ல வர்க்க கூட்டணி. சரிதான். வேற மாதிரி நடந்திருந்தாதான் ஆச்சரியம்.


//சூழ்நிலை மைகளின் முழு பரிமாணத்தையும் கணக்கில் கொண்டு சரியான வழி முறையை தீர்மானிப்பது,
முதலாளிகளுக்கிடையேயான போட்டியை பயன்படுத்திக்கொண்டு அவர்களின் அதீத கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுக்காமல் முதலீடுகளை செய்ய வைப்பது.
தனியார் மூலதனத்திற்கு இணையாகவும், அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும், அரசு முதலீட்டைப் பயன்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். //

இந்த அம்சத்திலும் கூட பாசிஸ்டு கட்சியினர் சிறிது முன்னேறியுள்ளனர். அதாவது முதலாளிகளின் போட்டியை பயன்படுத்தி அவர்களின் அதீத கோரிக்கைகளுக்கு விட்டுக் கொடுக்காமல் முதலீடுகளை செய்ய வைப்பது என்கிற அம்சத்தில் சிங்கூர் விளை நிலங்களை அடி மாட்டு விலைக்கு புரொக்கரிங் செய்து கொடுத்ததும் அப்படி குறைந்த விலைக்கு வாங்க வசதியாக அரசாங்கமே டாடாவுக்கு கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் நஸ்டத்தில் கடன் கொடுத்ததும் நிகழ்ந்துள்ளது. இங்கு யாருடைய அதீத கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்பதற்க்கு நந்திகிராம் சாட்சியாக உள்ளது. யாருடைய மூலதனம் யாருடைய பாக்கெட்டு போனது என்பதற்க்கு சிங்கூர் உதாரணமாக இருக்கிறது.

சரி உண்மையில் லெனின் இந்த பாசிஸ்டுகள் குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்:

அதாவது அரசும் புரட்சியும் (அத்தியாயம் 1, 4வது தலைப்பு - அரசு "உலர்ந்து உதிர்வதும்" பலாத்கார புரட்சியும்)

"கருத்து வளத்தில் சிறந்து விளங்கும் ஏங்கெல்ஸின் இந்த வாக்குவாதத்தில் ஒரேயொரு விவரம் மட்டும்தான் நவீன கால சோசலிஸ்டு கட்சிகளுடைய சோசலிச சிந்தனையில் இடம் பெறுகிறதெனெ திடமாய் கூறலாம்............ அரசு ஒழிக்கப்பட வேண்டும் என்னும் அராஜக கோட்பாட்டுக்கு மாறாக மார்க்ஸின் கருத்துப்படி அரசு உலர்ந்து உதிர்ந்துவிடும் என்கிற ஒரேயொரு விவரம் மட்டும்தான் ஏற்கப்பட்டுள்ளது. மார்க்ஸியத்தை இந்த அளவுக்கு வெட்டி குறுக்குவது என்பது மார்க்ஸியத்தை சந்தர்ப்பவாதமாக சிறுமைப்படுத்துவதே அன்றி வேறல்ல".

இப்படி நான் சொல்லல சாமி. சாட்சாச் லெனின் என்ற நக்ஸலைட்டுதான் இப்படி சொல்லிறுக்காறு. இங்க நம்ம பிரபாத் கூட அதே சந்தர்ப்பவாத திரிபு வேலையத்தான் செய்யுறாரு(அரசு உலர்ந்து உதிரும் என்பதை மட்டும் வைத்து தனது வாதத்தை கட்டியமைத்துள்ளார்).

அப்படியெனில் உலர்ந்து உதிருவது என்கிற இடத்தை பேசும் போது ஏங்கெல்ஸ் அராஜகவாதிகள் தவிர்த்து வேறு யாரை சந்தர்ப்பவாதிகள் என்று அம்பலப்படுத்துகிறார்? அது வேறு யாருமல்ல சாட்சாத் நம்ம பாசிஸ்டு கட்சியான CPM கும்பலைத்தான் அவர் அம்பலப்படுத்துகிறார்:

"சுதந்திர மக்கள் அரசு என்னும் தொடர் எந்த அளவுக்கு மதிக்கத்தக்கது என்பதையும் - கிளர்ச்சியை முன்னிட்டு சில நேரங்களில் எந்த அளவுக்கு அதன் பிரயோகம் நியாயமென்பதையும், முடிவில் விஞ்ஞான வழியில் அது எவ்வளவு குறைபாடானதென்பதையும் - அராஜகவாதிகளுடைய கோரிக்கையாக சொல்லப்படும்....." - ஏங்கெல்ஸ் (அதே புத்தகம் அதே பகுதி).

இங்கு பாசிஸ்டு CPM கட்சியினர் அராஜகவாதி குறித்த பகுதிகளை மட்டுமே பேசுவர். ஏங்கெல்ஸ் சுதந்திர மக்கள் அரசு என்று குறிப்பிட்டுள்ளது குறித்து எதுவுமே சொல்லமாட்டார்கள் கள்ள மௌனம் சாதிப்பர். ஏனேனில் அங்கு சுதந்திர மக்கள் அரசு என்று குறிப்பிடுவது முதலாளித்துவ அரசில் பங்கெடுப்பதைத்தான். அதையே சோசலிசத்துக்கான பாதையாக கொள்வதைத்தான் ஏங்கெல்ஸ் குத்திக் காட்டுகிறார். இந்த அம்சத்தில் லெனின் கீழே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

"சுதந்திர மக்கள் அரசு என்பது 1870-80 ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளது வேலை திட்டத்தில் குறிக்கப்பட்ட கோரிக்கையாய் அமைந்து அவர்களிடையே பெருவழக்கமாகிவிட்ட முழக்கமாயிருந்தது(note: இங்கு CPMயை ஒப்பிட்டு கொள்ளவும்). இந்த முழக்கம் ஜனநாயகம் என்னும் கருத்தோட்டத்தை ஆடம்பரமான அற்பவாத பாணியில் சித்தரிக்கிறதென்பதைத் தவிர வேறு அரசியல் உள்ளடக்கம் சிறுதும் இல்லாததே ஆகும். சட்ட முறையில் அனுமதிக்கப்பட்ட வழியில் சூசகமாய் அது ஜனநாயக குடியரசை குறித்தவரை "சிறிது காலத்துக்கு' அதைக் கையாளுவதில் நியாயமுண்டு என்பதை ஏங்கெல்ஸ் ஏற்றுக் கொண்டார். ஆனால் அது சந்தர்ப்பவாத முழக்கமே ஆகும். ஏனேனில் அது முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு மெருகூட்டி மினுக்கச் செய்வதுடன் நின்றுவிடுவதில்லை. பொதுவாய் அரசு குறித்த சோசலிச விமர்சனத்தைப் புரிந்துக் கொள்ளத் தவறிவிடுகிறது."

இங்கு வெகு தெளிவாக CPM கட்சியினரின் துரோக நடத்தையை லெனின் தோலுரித்துக் காட்டுகிறார். ஒரு உண்மையான ஜனநாயக குடியரசாய இருக்கின்ற பட்சத்தில்தான் லெனின் அதில் சிறிது காலத்துக்கு அதுவும் கிளர்ச்சியை முன்னிட்டு(ஏங்கெல்ஸ் மேற்கோள்) பங்கெடுக்கலாம் என்கிறார். ஆனால் இந்தியாவிலோ குறைந்த பட்ச ஜனநாயக அரசு கூட இல்லை. இதையே சோசலிசத்துக்கான பாதை என்று சொல்லி உழைக்கும் மக்களை ஏமாற்றுவதுடன் இந்திய பிற்போக்கு அதிகாரவர்க்க தரகு அரசை மெருகூட்டி மினுக்க செய்யும் வேலையை தமது வாழ்நாள் கடைமையாக சோம்நாத் சாட்டர்சியும் இன்ன பிற CPM பாசிஸ்டுகளும் ஏற்றுள்ளனர்.

லெனின் மேலும் கூறுகிறார்:
"ஆனால் மிகவும் ஜனநாயகமான முதலாளித்துவ குடியரசிலுங்கூட கூலியடைமையிலேதான் மக்கள் உழல வேண்டியிருக்கிறதென்பதை மறக்க நமக்கு உரிமையில்லை".

நாம் மறப்பதில்லை. ஏனேனில் அவர் சொல்கின்ற 'நாம்' லிஸ்டில் நாங்கள் இருக்கின்றோம். மேவாவில் ஸ்டைரைக் செய்யக் கூடாது என்று சொன்ன CPM யாருடைய லிஸ்டில் சேரும் என்பதை படிப்பவர்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

முதலாளித்துவ அரசை உள்ளிருந்தே அப்படியே மாற்றி சோசலிச புரட்சி கொண்டு வந்துவிட முடியுமா? இப்படித்தான் CPM சொல்கிறது ஏதோ புதிய விசயம் போல. மாறாக ஏங்கெல்ஸ் உள்ளிட்ட மார்க்ஸிய ஆசான்கள் வெகு தெளிவாக சோசலிச அரசுக்கு முந்தைய அரசு பலாத்காரத்தால் தூக்கியெறியப்பட வேண்டும் ஏனேனில் அவையெல்லாம் இதற்க்கு முந்தைய புரட்சிகளினால் மேலும் மேலும் வலுவாக்கப்பட்டு வந்த அதிகாரத்துவ அரசுகள் எனவே அவை தூக்கியெறியப்பட்டு அதன் அதிகாரத்துவ அம்சங்கள் நீக்கப்பட்ட முற்றிலும் 'உலர்ந்து உதிரும்' தன்மை கொண்ட சோசலிச அரசு அமைக்கப்பட வேண்டும் என்கிறார்.

திரிபுவாதிகள் ஏற்கனவே மார்க்ஸ் ஏங்கெல்சை திரித்தது போதும் இனிமேலும் அதை அனுமதிக்க முடியாது என்று லெனின் இந்த விசயத்தை மிக தெளிவாக சொல்லிவிடுகிறார்:

"பலாத்கார புரட்சி இல்லாமல் முதலாளித்துவ அரசு பாட்டாளி வர்க்க அரசாய் மாற முடியாது. பாட்டாளி வர்க்க அரசு, அதாவது பொதுவில் அரசெனப்படுவது "உலர்ந்து உதிரும்" நிகழ்ச்சிப் போக்கின் மூலமாகவே அன்றி வேறு எவ்வழியிலும் அகற்றப்பட முடியாத".

மேலும் லெனின் சொல்கிறார்:
"பலாத்கார புரட்சியைப் போற்றும் இந்த புகழ்மாலையை எங்கெல்ஸ் 1878க்கும் 1894க்கும் இடையில் - அதாவது அவர் இறக்கும் தருணம் வரையில் - ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிகளின் கவனதுக்கு ஒயாது கொண்டு வந்த வண்ணமிருந்தார். இதனையும் அரசு 'உலர்ந்து உதிரும்' தத்துவத்தையும் இணைத்து ஒருமித்த ஒரே தத்துவமாக்குவது எப்படி?

வழக்கமாய் கதம்பத் தேர்வுவாத வழியில் முதலில் ஒன்றும் பிற்பாடு மற்றொன்றுமாய்த் தான் தோன்றித்தனமாய் கொள்கை கோட்பாடின்றி அல்லது குதர்க்கவாத முறையில் தேர்வு செய்யப்பட்டு இவை இரண்டும் இணைக்கப்படுகின்றன
."

இங்கே வெகு குறிப்பாக அரசு உலர்ந்து உதிர்வது குறித்தான தத்துவமும், பலாத்கார புரட்சி குறித்த தத்துவம் ஒன்றையொன்று இயங்கியல் ரீதியாக சார்ந்தே உள்ளன என்பதையும் அவை கால வரிசைப்படி அதாவது காலையில் பல் தேய்த்தவுடன் சாப்பிடுவது (தேவைப்பட்டால் பல் தேய்க்கமாலேயே சாப்பிடலாம் தோழர்) என்பது போன்று தேர்வுவாத முறையிலான விசயமல்ல என்பதைத்தான் வலியுறுத்துகிறார் லெனின். இந்த வேலையை அதாவது தேர்வுவாத முறையை கை கொண்டிருப்பது பாசிஸ்டு CPM கும்பல்தான்.

"சந்தர்ப்பவாத முறையில் மார்க்ஸியத்தை புரட்டிப் பொய்யாக்குவதில், இயக்கவியலுக்குப் பதிலாய்த் தேர்வுவாதத்தைக் கைகொள்வதுதான் மக்களை ஏமாற்ற மிகவும் எளிய வழி. இது பிரமையான போலி மனநிறைவு அளிக்கிறது" - லெனின

மேலேயுள்ள இந்த வரிகள் சந்திப்பு போன்ற பாவபட்ட பலியாடுகளுக்கு(கறுப்பு ஆடு என்று நான் சொல்லவில்லை).

குறிப்பாக இந்த கட்டுரையில் உடனடியாக சோசலிச புரட்சி செய்ய வேண்டிய அவசியமில்லை என்று மார்க்ஸிய பெருந்தகை பிரபாத் சொல்லியுள்ளார் அதை சந்திப்பு வழிமொழிந்துள்ளார். இவர்கள் எல்லாம் தயவு செய்து லெனினிசத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லிவிடலாம். ஏனேனில் மாவொயிஸம் என்கிற சொல் பதத்தை எந்த அம்சத்தில் இவர்கள் விமர்சிக்கிறார்களோ அதே அம்சத்தில் லெனினிசத்தில் இவர்கள் செய்யும் திரிபு உள்ளது. (இவர்கள் அந்த தத்துவத்தை விமர்சிக்கவில்லை என்பதை இங்கு குறிப்பிட்டு விடுகிறேன். திரிபுவாதிகள் சொன்னதை விட்டு சுரையை பிடுங்குவதில் சூரர்கள். எனவேதான் மாவொயிசம் என்று பெயர் வைத்ததில் உள்ள நொல்லை நொட்டைகளை ஆய்வு செய்பவர்கள் அந்த தத்துவம் குறித்து எந்த பதிலும் சொல்வதில்லை).

லெனின் ருஸ்ய புரட்சியை சோசலிச உலக புரட்சியின் இணைப்பு என்கிறார். அதாவது அவரது வரையறைப்படி ஏகாதிபத்தியம் அல்லது முதலாளித்துவம் அல்லது சொத்துடமை சமூகத்தின் இறுதி மூச்சுக்கு பயணிக்கும், புரட்சிகளின் காலகட்டம் ருஸ்ய புரட்சியிலிருந்து ஆரம்பித்து விட்டது என்பதுதான். அதாவது இந்த வரலாற்று காலகட்டம் என்பது சோசலிச புரட்சிகளின் கட்டம் என்பதுதான். அதாவது அல்ரெடி புரட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் விசயம். லெனினிசம் என்பதின் அர்த்தம் இதுதான். லெனினிசத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்பவர்கள் சோசலிச புரட்சி இப்போ தேவையில்லை என்பது விந்தையானதல்ல ஏனேனில் சொல்வது பாசிஸ்டு திரிபுவாதிகள் அல்லவா(இங்கு இந்தியா போன்ற ஜனநாயக புரட்சி நடைபெறாதா நாடுகளில் சோசலிச புரட்சியின் தன்மை என்னவாக இருக்கும் என்பது குறித்து எதுவும் பேசப்படவில்லை).

தேர்தல் குறித்து ஏங்கெல்ஸ்:(அரசும் புரட்சியும் - அத்தியாயம் 1, 3. அரசு-ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சுரண்டுவதற்கான கருவி)

"அனைத்து மக்களின் வாக்குரிமை, "தொழிலாளி வர்க்கத்தினுடைய முதிர்ச்சியின் அளவுகோலாகும். தற்கால அரசில் அது இதற்க்கு மேல் எதுவாகவும் இருக்காது. இருக்கவும் முடியாது""


தேர்தல் குறித்து லெனின்:(மேலேயுள்ள வரிக்கு அடுத்த வரிகளில்)

"நம்முடைய சோசலிஸ்டு புரட்சியாளர் கட்சியினரையும் மென்ஸிவிக்குகளையும் போன்ற குட்டி முதலாளீத்துவ ஜனநாயகவாதிகளும், இவர்களுடைய உடன் பிறந்த சகோதரர்களான மேற்கு ஐரோப்பிய சமூக-தேசிய வெறியர்கள், சந்தர்ப்பவாதிகள் அனைவரும் அனைத்து மக்களின் வாக்குரிமையிடமிருந்து இதற்க்கு மேற்பட்ட ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். 'இன்றைய அரசில்' அனைத்து மக்களின் வாக்குரிமை உழைப்பாளி மக்களில் பெரும்பாலானோரின் சித்தத்தை மெய்யாகவே புலப்படுத்திக் காட்ட வல்லது, இந்த சித்தம் நிறைவேற வழி செய்ய வல்லது என்ற பொய்க் கருத்தை இவர்கள் கொண்டுள்ளனர்; மக்களுக்கும் இதனை ஊட்டி வருகின்றனர"

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும் என்பது போல மார்க்ஸியத்தை வெட்டி குறுக்கி சிதைத்து கடைசியில் பாசிஸ்டுகளாக நிற்கும் CPM தான் மக்களுக்கு அடிமைத்தனத்தை மேலே லெனின் சொன்னது போல ஊட்டி வளர்த்து வருகின்றனர். ஆயினும் அவர்கள் கொள்கை புத்தகத்தில் சொல்லியுள்ளது போல புரட்சிதான்(அவர்களது மக்கள் சனநாயக புரட்சி) வருகிற பாட்ட காணோம்.

சரி இதையெல்லாம் விட சூப்பராக இந்த துரோகிகளை பாசிஸ்டுகளை அம்பலப்படுத்த சில விசயங்களை சொல்லிச் சென்றுள்ளனர் நமது மார்க்ஸிய ஆசான்கள்.

"பலாத்கார புரட்சி பற்றிய திட்டவட்டமான இதே கருத்தோட்டத்தை முறையாய் வெகுஜனங்களின் மனதில் ஆழப் பதியச் செய்வது அவசியமென்பது மார்க்ஸ், ஏங்கெல்ஸின் போதனை அனைத்தின் ஆணி வேர் போன்றதாகும். இவர்களுடைய போதனைக்குத் தற்போது நடப்பிலுள்ள சமூக-தேசியவெறிப் போக்கும் காவுத்ஸ்கிவாதப் போக்கும் இழைத்துவரும் துரோகமானது, இந்த போக்குகள் இத்தகைய பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் கைவிட்டுவிட்டதில் மிகவும் எடுப்பாய் வெளிப்படுகிறது".-லெனின் (அதே புத்தகம், அத்தியாயம் 1, 4. அரசு உலர்ந்து உதிர்வது...)

அய்யா அதிமேதாவிகளே, மார்க்ஸியத்தின் ஆணி வேருன்னு ஒன்ன சொல்லிறுக்குறாரே அவர நக்ஸ்ல்பாரின்னு CPM கும்பல் முத்திரை குத்தும் என்பதை உறுதியாகச் சொல்லலாம். அதை அவர் செய்யும் முன்பாகவே நாஙக செய்ய விரும்புகிறோம். லெனின் சொன்ன மாதிரி பிரச்சாரம், கிளர்ச்சியை கைவிட்ட துரோகிகள் யாருங்கறத காமரேடு சந்திப்பின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

அம்புட்டுதாம்பா.....


அசுரன்

Friday, April 27, 2007

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள்!

மார்க்ஸின் காலனிய பார்வை குறித்த பொய்:

நீலகண்டன் மார்க்ஸின் காலனிய பார்வை என்று எதைச் சொல்கிறார்? "இந்தியாவின் துன்பங்கள் பார்ப்பனர்களால வெகு காலத்துக்கு முன்பே கிருத்து பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது என்று மார்க்ஸ் சொல்வதைத்தான் இவர் மார்க்ஸினுடைய காலனிய பார்வை என்கிறார். நீலகண்டனின் வர்க்க பாசம் வேலை செய்கிறது. இதே கருத்தை முன் வைத்த சாருவாகர்கள், பௌத்தர்களை எந்த காலனிய பார்வை ஆட் கொண்டது என்ற கேள்விகளுக்கெல்லாம் இவரிடமிருந்து பதில் வராது.

மார்க்ஸ் இந்தியாவின் வளங்களையும், படையெடுப்பு வரலாறையும், புவியியல் கூறுகளையும் இத்தாலியுடன் ஒப்பிடுகிறார். இந்தியாவின் துன்பங்களை அயர்லாந்துடன் ஒப்பிடுகிறார்.

இந்தியாவில் பிரிட்டிஸ் அரசாட்சி ஏற்படுத்தியிருந்த மிகக் கொடூரமான விளைவுகளை மிகச் சரியாக சொல்கிறார் மார்க்ஸ். இன்றும் அதன் விளைவுகளை வெகு எடுப்பாக நாம் பார்க்கிறோம். இதே வார்த்தைகளை இந்தியாவின் விடுதலையில் விருப்பம் கொண்டவர்களும் கூறுகிறார்கள். முரன் நகையாக இதே வார்த்தைகளை இந்துத்துவக்காரர்களும் கூட சொல்கிறார்கள். எனவே இந்துத்துவக்காரர்கள் எல்லாம் காலனிய பார்வையுடையவர்கள் என்று நீலகண்டன் சொல்வார் என்று எதிர்ப்பார்த்தால் தவறிழைக்கிறீர்கள்.
"பேச நா இரண்டுடையா போற்றி!".

இது தவிர்த்து செமி பார்பேரியன், செமி சிவிலைஸ்டு என்று இந்திய சமூகத்தை மார்க்ஸ் குறிப்பிடும் இடத்தில் அதன் காரணம் என்னவென்று ஒப்பிட்டு பார்க்க வேண்டும்(context). அதை விடுத்து அகண்ட பாரத கனவு காணும் கற்பனாவாதிகளின் பண்டைய பெருமைகள் பற்றிய ஊதிப் பெருக்க வைக்கப்பட்ட பொய்களின் அடிப்படையில் இந்த வார்த்தைகளை நோக்கினால் மார்க்ஸை காலனிய பார்வை கொண்டவர் என்பது போல அரைகுறை வியாக்கியானம் செய்யும் முட்டாள்தனத்தில் வந்து முடியும். மார்க்ஸ் இருந்ததோ ஐரோப்பிய நாகரிகம் தழைத்தோங்கிய ஒரு சூழல், தொழில் புரட்சி, பெரும் தொழில்சாலைகள், பாரளுமன்றம், பகுதி அளவில் ஆட்சி செய்த நிலபிரபுக்களின் ஆதிக்கம் முற்றிலும் ஒழிந்து போய் மையப்படுத்தப்பட்ட, முழு கட்டுப்பாட்டை நாடெங்கும் செலுத்தும் அரசு வடிவம். அதே நேரத்தில் இந்தியாவின் நிலை என்ன? குழந்தை திருமணம், சதி, சாதி, தீண்டாமை, பல்வேறு மூடநம்பிக்கைகளின் உறைவிடமாய், கிராம நிர்வாகம் எனும் சிதறிய உற்பத்தி முறையில், பாளையக்காரர்கள் போன்ற பகுதி அளவிலானவர்களின் செல்வாக்கு மண்டலங்களாக சிதறிய சமூகம், நிலபிரபுத்துவத்துக்கேயுரிய பிற்போக்குத்தனங்களுடன் இருந்தது. மார்க்ஸினுடைய கண்டனம் அனைத்தும் ஐரோப்பாவிற்க்கு பல்லாயிரம் வருடம் முன்பே நாகரிகம் தழைத்தோங்கி இருந்து பிறகு அழுகிய நிலையில் நெடிய காலத்திற்க்கு நிலவி, அந்த இடைப்பட்ட நேரத்தில் ஐரோப்பா முந்திக் கொண்டு சென்றதை முன்னிட்டே. இதன் அர்த்தம் முதலாளித்துவ ஐரோப்பா பிற்போக்கானது இல்லை என்ற அர்த்தத்தில் அல்ல. மாறாக நிலபிரபுத்துவ பிற்போக்குதனங்கள் எந்த வகையில் பார்த்தாலும் முதலாளித்துவ பிற்போக்குதனத்தைவிட கேவலமானது என்ற அர்த்ததிலேயே வருகின்றன. ஏனேனில் ஐரோப்பாவையும் மிகக் கடுமையாக விமர்சிக்கிறார் மார்க்ஸ்.

இவையநநத்துமே பிரிட்டிஸ்க்காரர்கள் இந்திய சமூக பொருளாதார அமைப்பில் திரும்ப சரி செய்ய முடியாத அளவு ஏற்படுத்திய பாதிப்புகள், ஆசிய சொத்துடமை வடிவத்தின் சாதக பாதக அம்சங்கள் போன்றவை குறித்து கூறிய பிற்பாடே சொல்கிறார் மார்க்ஸ். ஆயினும் மார்க்ஸியத்தை ஏகாதிபத்தியவாதிகளின் நூல்களின் மூலம் மட்டுமே அதுவும் மேற்கோள்கள் மற்றும் அரைப் பொய்களின் மூலம் மட்டுமே அறிய துணிந்த நீலகண்டன் சுலபமாக ஒரு வரியில் மார்க்ஸின் பார்வை காலனிய பார்வை என்று சொல்வது அவரது மேம்போக்கான வாசிப்பு முறையையே காட்டுகிறது. சொந்த கருத்தோட்டங்களிலேயே சுயமுரன்பாட்டுக்கு இட்டுச் செல்லும் முடிவுகளுக்கு வருவதற்க்காக பார்ப்ப்னியம் என்றுமே வெட்க்கப் படுவதில்லை. அதனை நீங்கள் அம்பலப்படுத்தி எவ்வளவு கேவலப்படுத்தினாலும் மீண்டும் அதே சுயமுரன்பாட்டு முட்டாள் கருத்துக்களை சொல்வார்கள். ஏனேனில் கோயபல்ஸின் வழிமுறைகளில் நம்பிக்கைக் கொண்டவர்கள் இவர்கள்.
"பொய்களே என்றும் பகர்வர் போற்றி!"

கடுமையான உழைப்பை செலுத்தும், மோன நிலையிலிருக்கும்(எந்த ஒரு புரட்சியோ, போராட்டமோ, கிளர்ச்சியோ இன்றி) இருக்கும் எண்ணிலடங்கா இந்திய கிராம அமைப்புகள் பிரிட்டிசாரால் சிரழிக்கப்பட்டு. சிதறடிக்கப்பட்டு துன்ப பெருங்கடலில் வீசப்படுவதை நாம் கண்ணுற வேண்டியுள்ளதாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இந்திய காட்டன் குறித்தும், இந்தியாவின் கைவினை பொருட்களின் தரம் குறித்தும் அவற்றை அழிக்கும் பிரிட்டிஸார் குறித்தும் குறிப்பிடுகிறார் மார்க்ஸ். இந்தியா பிரிட்டிஸாரின் ஆட்சியில் தனது புரதான காலாச்சாரத்தை இழந்து வருவதை குறிப்பிடுகிறார். மேலும் புதிய முயற்சிகள் இல்லாத மாற்றம் என்பதே இல்லையோ என்பது போல மிக மிக மிக மெதுவான சமூக மாற்றத்தை/சமூக வீழ்ச்சியை உள்ளடக்கிய, இயல்பாக வளர வேண்டிய சமூகத்தை சாதி, அடிமை முறை என்று மடைதிருப்பி மாற்றமேயில்லாத இயற்கை தலைவிதியின் பாற்ப்பட்ட சமூக வளர்ச்சியைக் கொண்டு அதன் விளைவாகவே மிகவும் புரதானமான பண்டைய இயற்கை வழிபாட்டு முறையை வழக்கத்தில் கொண்டு - மனிதன் எனும் இயற்கையின் சுதந்திர படைப்பை அனுமன் எனும் குரங்கின் கால்களிலும், பசு எனும் மாட்டின் கால்களிலும் விழ வைக்கும் அழுகி வரும் ஆசிய சொத்துடமை வடிவமாகிய கிரா சுய தேவை பூர்த்தி செய்யும் பொருளாதார அமைப்பை கடிந்து சொல்கிறார். இவையனைத்துமே ஐரோப்பாவின் தொழிற்புரட்சி அங்கு ஏற்படுத்திய மாற்றங்களுக்கு மாறாக அழகானதாக தோற்றம் தரும் ஆசியாவின் கிராம சொத்துடைமை வடிவம் இங்கு மாற்றங்களை மிக மிக மெதுவாக ஏற்படுத்துவது கண்டு ஏற்பட்ட ஆற்றாமையின் வெளிப்பாடுகளேயாகும்.

இந்தியாவின் மோன நிலையை கடுமையாக கண்டன குரலெழுப்பி கண்டிக்கும் மார்க்ஸ் அதே நேரத்தில் இந்தியாவை மோன நிலையிலிருந்து தட்டியெழுப்பும் சமூக புரட்சியை முதல் முறையாக செய்யும் ஐரோப்பா அதை செயல்படுத்தும் விதம் குறித்தும் தமது கடும் கண்டனக் குரலை எழுப்புகிறார். துரதிருஷ்டவசமாக அல்ல மாறாக வேண்டுமென்றே நீலகண்டன் படித்த புத்தகங்களில் இந்திய சமூகம் குறித்து மார்க்ஸ் எழுப்பும் கண்டனக் குரல்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை கண்ணுற்ற நீலகண்டன் தனது குடுமி அவிழ ஆவேசம் கொண்டு மார்க்ஸின் பார்வை காலனிய கருத்தோட்டம் என்று முடிவுக்கு வருகிறார். "வாழ்க அவர் அரைகுறை ஆய்வு முயற்சிகள்". பிரிட்டன் குறித்த மார்க்ஸீன் கண்டனப் பார்வையையும் கணக்கில் கொண்டால் ஒட்டு மொத்தமாக சுரண்டலுக்கெதிரான மார்க்ஸின் தார்மீக கோபத்தையே அது காட்டுகிறது. சுரண்டல்க்காரர்கள் மார்க்ஸை நிந்தனை செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

உண்மையில் இவற்றை காலனியப் பார்வை என்று கூறுவதில் இந்துத்துவத்தின் வெளியே சொல்லமுடியாத பெருங்கனவு குறித்த ஏக்கப் பெருமூச்சுதான் வெளிப்படுகிறது. ஏன் வெளியே சொல்லமுடியாதது என்பதை பார்ப்ப்னிய பயங்கரவதிகள்தான் சொல்ல வேண்டும் ஏனெனில் நாம் பல முறை கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லவில்லையெனில் வெளியே சொல்லமுடியாத ஏதோ ஒன்றுதான் நமது கேள்விகளுக்கு பதிலாக இருக்கும் என்று நாம் அனுமானிக்க வேண்டிய நிர்பந்தத்திற்க்கு தள்ளப்படுகிறோம். ஒரு வேளை உழைக்கும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகிய நாங்கள் சூத்திரர்கள் ஆகையால் அவற்றை எம்மிடம் பகர்வது இந்து தரமத்திற்க்கு விரோதமானதோ?
"காதிலே காய்ச்சிய ஈயமே போற்றி!"



கலை கலைக்காக - கூத்தாடும் நீலகண்டனின் அவதூறு:

அடிமுட்டாள் ஒருவன் நீலகண்டனின் பதிவில் கூறினான், "மார்க்ஸியனாக ஒரு விஞ்ஞானி இருந்தால் அவன் முட்டாளாகத்தான் இருக்க முடியும்" என்று. மார்க்ஸியத்துக்கு ஆதரவாக வந்தார் இந்த உலகின் ஆகத் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீன். இந்த அடிமுட்டாள், ஐன்ஸ்டீனையும்
கூட அடி முட்டாள் என்று சொல்லும் அபாயம் உள்ளது. அது அவர்கள் உட்கொண்ட இந்துத்துவ பயங்கரவாத போதைப் பொருளின் விளைவு.

இந்த அல்பைகள் தாங்கள் மூழ்கி குளிக்கின்ற சாக்கடை குட்டையையே இந்த உலகம் என்று கருதி அந்த குட்டையின் விளிம்பிலிருந்தே தமது உலக கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். என்ன செய்ய இந்த அல்பவாதிகளின் பார்வையில் ஐன்ஸ்டீனும் அடி முட்டாள்தான். இந்த அல்பவாதம் வெறும் தனிமனித குணாம்ச சம்பந்தப்பட்ட விசயமல்ல. இது ஒரு அரசியல் பண்பாடு. இதன் அரசியல் ஆளும் வர்க்க சேவகம் செய்வது. எனவேதான் இந்த அல்பவாதம் கலை முதலான அனைத்து விதமான அரசு வடிவங்களிலும் தனது இருப்பைக் காட்டுகிறது.

கலை கலைக்குத்தான் என்று சாமியாடும் கும்பல் அவ்வாறு சொல்வதில் ஆதாயம் இல்லாமல் சொல்லவில்லை. மக்களின் பிரச்சனைகளை பேச விடாமல் கலைஞர்களை ஊழல் மயப்படுத்தி போதையூட்டி தனது கருத்துக்களை பேச வைக்க தார்மீக பலம் கொடுப்பதோடல்லாமல், கலைக்கு புனித வட்டம் கட்டி அதனை உழைக்கும் மக்களிடமிருந்து தள்ளி வைக்கும் மனு நிதிக்கும் ஆதரவாக இருப்பதாலேயே 'கலை கலைக்குத்தான்' என்ற இந்த கருத்தாக்கத்தை ஆதரிக்கிறார்கள் இவர்கள்.

கலை இலக்கியமல்லவா? வெறும் தார்மீக பலம் பலன் கொடுக்குமா? அழகியல் வேண்டாமா? இதோ அடிமுட்டாள்கள் தங்களது குட்டையில் மிதக்கும் குப்பைகளையும், துகள்களையும் நுன்னோக்கி கொண்டு 200 பக்கங்களுக்கு விவரிப்பு செய்து எழுதும் அழகை பாருங்கள். இதை ஆழ்மன ஆய்வு, உள்மன அனுபவம் என்றும் சொல்வார்கள்.

இதே போன்று அல்பைத்தனமாக ஆராய்ச்சி செய்தவர்கள் இந்தியாவுக்கு புதிதல்ல, வரலாற்றில் ஒரு அல்பை இருட்டில் தொங்குவது கயிறா அல்லது பாம்பா என்று ஆராய்ச்சி செய்தது. அந்த அல்பையின் பெயர் ஆதி சங்கரன், அந்த அல்பவாத தோற்ற விளைவு மாயாவாதம். இன்றைக்கு உலகமயச் சூழலில் அல்பவாதிகளுக்கா பஞ்சம்? இப்படித்தான் ஒரு அல்பவாதி தான் புழங்கும் ஒரு குட்டையை அகழ்வாராய்ச்சி செய்து அனைத்து குப்பைகளையும் ஆகப் பெரிதான நுன்னோக்கி கொண்டு பார்த்த பிற்பாடு கூறியது, "இந்த உலகில் எல்லா விசயங்களுமே ஆய்வு செய்து ஆழமாக செல்ல செல்ல அபத்தமாக இருக்கிறது". அந்த அல்பவாதியின் பெயர் ஜெயமோகன். குப்பைகளை நுன்னோக்கி கொண்டு அல்ல வெறும் கண்களில் பார்த்தாலே அபத்தம் என்று சொல்லிவிடலாம். ஆனால் அப்படி சுலபமாக செய்தால் கலை அரிப்பை சொரிந்து கொள்ள முடியாதே? இவர்களின் 'சுய சொறிதல்'அனுபவத்திற்க்கு கலை இலக்கிய நுன்னோக்கியும், 200 பக்கமும் தேவைப்படுகிறது.

அல்பவாதியின் உலகம் தனது சேற்றுக் குட்டையின் அடி ஆழத்தில் ஆரம்பித்து விளிம்பில் முடிந்து விடுகிறது. சிலருக்கு இது தலைகீழாகவும் நடக்கிறது. ஐன்ஸ்டீனை அடி முட்டாள் என்று அர்த்தம் வர வியாக்கியானம் செய்த அல்பையும், மார்க்ஸியத்தை ஏகாதிபத்திய அவதூறுகளின் துணை கொண்டு ஆய்வு செய்ய முயன்ற அல்பையும் கூட இதே ரகம்தான். இந்த அல்பைகள் கலை கலைக்காகத்தான் என்று கதறுவதில் உள்ள அடிப்படை இயங்கியல் இதுதான். ஒரு அல்பவாதியின் நாவலை தமது கடைகளில் விற்க்கும் விசயத்துக்கும் இதுவே அடிப்படை.

கலை கலைக்காகத்தான் என்று கலைஞர்களை ஏதோ சமூகத்திற்க்கு சம்பந்தமில்லாதவர்களாக மாற்றும் கருத்து முதல் வாத கோஸ்டிகளை பாரதிதாசனின் இந்த பாடலை கேட்ட பின்பு மதிப்பிடுங்கள். "எல்லாம் எமக்கு தெரியும், ஆழ்ந்து ஆராய்ச்சி செய்தால் எதிலும் ஒன்றும் இருப்பதில்லை. அபத்தமே மிஞ்சுகிறது", என்று சுயதிருப்தியில் சலிப்புடன் சொல்லும் கலைஞர்களையே எல்லாம் தெரிந்த வித்தகர்கள் என்றும், அறிவாளிகள் என்றும் சிலர் கருதி வரும் போது, கவிஞரும் எழுதுகிறார், எதைப் பற்றி? இதோ படியுங்கள்.

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
'என்னை எழு'தென்று சொன்னதுவான்!
ஓடையுந் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!
ஓவியந் தீட்டுக, என்றுரைக்கும்!

காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்!
ஆடும் மயில்நிகர்ப் பெண்களெல்லாம் உயிர்
அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!
அன்பினைச் சித்திரம் செய்க,என்றார்!

சோலைக் குளிர்தரு தென்றல்வரும், பசுந்
தோகை மயில்வரும் அன்னம்வரும்,
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்
மாணிக்கப் பரிதி காட்சிதரும்

'வேலைச் சுமந்திடும் வீரரின் தோள்உயர்
வெற்பென்று சொல்லி வரைக' எனும்
கோலங்கள் யாவும் மலைமலையாய் வந்து
கூவின என்னை! - இவற்றிடையே,
கூவின என்னை! - இவற்றிடையே,

இன்னலிலே, தமிழ் நாட்டினி லேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்.
அன்னதோர் காட்சி -ரக்கமுண் டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!
ஆவியில் வந்து கலந்ததுவே!

'இன்பத் தமிழ்க்கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
துன்பங்கள் நீங்கும், சுகம்வரும், நெஞ்சினில்
தூய்மை யுண்டாகிடும், வீரம் வரும்.'



02 Eadeduthen.mp3 (If you have problem listening click here)



இதோ ரஸ்ய பாட்டாளி வர்க்க புரட்சியின் அதிர்வலை உலகெங்கும் எதிரொலித்தது போல இங்கு தமிழ்நாட்டிலும் பேரலைகளை உருவாக்கியது. கலை இலக்கியங்கள் யாவும் மக்களைப் பேசத் துவங்கின. பாரதிதாசன் என்ன விதிவிலக்க என்ன? 'கலை மக்களுக்காக' என்று உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்காக பாடுகிறார். கேளுங்கள்.....

காடு களைந்தோம் - நல்ல
கழனி திருத்தியும் உழவு புரிந்தும்
நாடுகள் செய்தோம் - அங்கு
நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம்
வீடுகள் கண்டோ ம் - அங்கு
வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம்
பாடுகள் பட்டோ ம் - புவி
பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.
மலையைப் பிளந்தோம் - புவி
வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம்
அலைகடல் மீதில் - பல்
லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம்
பலதொல் லையுற்றோம் - யாம்
பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம்
உலையில் இரும்பை - யாம்
உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந் தந்தோம்.

ஆடைகள் நெய்தோம் - பெரும்
ஆற்றை வளைத்துநெல் நாற்றுக்கள் நட்டோ ம்;
கூடை கலங்கள் - முதல்
கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம்
கோடையைக் காக்க - யாம்
குடையளித் தோம்நல்ல நடையன்கள் செய்தோம்
தேடிய பண்டம் - இந்தச்
செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.
வாழ்வுக் கொவ்வாத - இந்த
வையத்தில் இந்நிலை எய்தப் புரிந்தோம்
ஆழ்கடல் காடு - மலை
அத்தனை யிற்பல சத்தை யெடுத்தோம்.
ஈழை அசுத்தம் - குப்பை
இலைஎன்ன வேஎங்கள் தலையிற் சுமந்தோம்.
சூழக் கிடந்தோம் - புவித்
தொழிலாள ராம்எங்கள் நிலைமையைக் கேளீர்.
கந்தை யணிந்தோம் - இரு
கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்.
மொந்தையிற் கூழைப் - பலர்
மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம்
சந்தையில் மாடாய் - யாம்
சந்ததம் தங்கிட வீடுமில் லாமல்
சிந்தை மெலிந்தோம் - எங்கள்
சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?
மதத்தவன் தலைவீர்! - இந்த
மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே!
குதர்க்கம் விளைத்தே - பெருங்
கொள்ளை யடித்திட்ட கோடி சுரர்காள்!
வதக்கிப் பிழிந்தே - சொத்தை
வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே!
நிதியின் பெருக்கம் - விளை
நிலமுற்றும் உங்கள் வசம்பண்ணி விட்டீர்!
செப்புதல் கேட்பீர்! - இந்தச்
செகத்தொழி லாளர்கள் மிகப்பலர் ஆதலின்,
கப்பல் களாக - இனித்
தொழும்பர்க ளாக மதித்திட வேண்டாம்!
இப்பொழு தேநீர் - பொது
இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை
ஒப்ப டைப்பீரே - எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே
ஒப்படைப்பீரே!

06 Kaadu Kalaintho...


தாம் குதித்து மூழ்கும் குட்டையையே இந்த பரந்த பிரபஞ்சமாக கருதி அந்த குட்டையின் ஆழத்தில் அபத்தமே உள்ளது என்று தனது குட்டையிலிருந்தே உலகை வியாக்கியானம் செய்யும் அல்பவாதிகளையும், அவர்களின் அல்லக்கைகளையும் கூட கவிஞர் தட்டியெழுப்புகிறார்.

கேளுங்கள் அல்பவாதிகளே!!
கெட்டி தட்டிய சுயதிருப்தியெனும் மேல் ஓடுகளை உடைத்து மண்டைச் சுரப்பை வெள்ளமென புரளச் செய்யுங்கள். பாருங்கள் இந்த பிருமாண்டமான மனித சமூகத்தின் யத்தனங்களை.... அவற்றில் இல்லாதா அழகியலா உங்களது ஆழ்மன குட்டையில் கிடைத்து விடும்.


அசுரன்


பாடல்கள்: பாரடா உனது மானிடப் பரப்பை - பாரதிதாசன் பாடல்கள், மகஇக வெளியீடு.

பாடல் ஒலிப் பேழைகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
இரா. சீனிவாசன், No 18, முல்லை நகர் வணிக வளாகம், இரண்டாவது நிழற்சாலை, அசோக் நகர், சென்னை - 83

தொலைபேசி: 23718706

Related Posts with Thumbnails