TerrorisminFocus

Showing posts with label போலி ஜனநாயகம். Show all posts
Showing posts with label போலி ஜனநாயகம். Show all posts

Saturday, November 13, 2010

பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வை!!

மியான்மார்ல ராணுவ ஆட்சியாம். என்ன கொடுமை பாருங்க 15 வருசமா ஆங்சான் சூகியி என்ற தலைவரை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனராம். இப்போதான் ரிலீசே செஞ்சிருக்காங்க. ராணுவ ஆட்சின்னா எப்படி இருக்கும்? நம்ம மாதிரி 'ஜனநாயாக' நாட்டுல இருக்குறவங்களுக்கு அந்த கஸ்டம் புரியாதுதான். இப்படியும் பலர் பெருமிதத்துடன் பேசிக் கொள்கிறார்கள்.

அது சரி. ஆங்சான் சூகியியாவது தற்போது விடுதலை செய்யப்பட்டு விட்டார். ஆனால் கடந்த 10 வருடங்களாக இந்தியாவில் நடக்கும் ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராடி உண்ணாவிரதம் இருந்து வருகிறார் ஐரோம் சர்மிளா. அவரை கைது செய்து 10 வருடங்களாகின்றன. அவருக்கு என்று விடுதலை? 60 வருட ஜனநாயகம் சர்மிளாவுக்கு தராததை, மியான்மார் ராணுவ ஆட்சி ஆங்சான் சூகியிக்கி தந்திருக்கு என்று சொல்லலாமா?

ஐரோம் சர்மிளா




இந்திய ராணுவம் - ஊர் மேயும் மைனர் பொறுக்கிகள்


ஜம்மு-காஷ்மீரிலும், மணிப்பூரில் 1961லிருந்தும், பெரும்பாலான வடகிழக்குப் பகுதிகளில் 1972லிருந்து ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடுங்கோலாட்சிதான் நடக்கிறது. அரசே ஒத்துக் கொண்ட படி இதுவரை 20,000 பேருக்கும் மேல் காணாமல் போயுள்ளனர் மணிப்பூரில். தேச சேவை செய்வதாகக் கதை விட்டுக் கொண்டு தேக சேவை செய்யும் ராணுவப் பொறுக்கிகள் மீதுள்ள 458 வழக்குகளை விசாரிக்கக் கோரியுள்ளது ஜம்மு காஷ்மீர் அரசு. இன்று இத்தகைய ராணுவ ஆட்சி தண்டகாரன்யா, மத்திய இந்தியா, மேற்கு வங்கம் என விரிவாகி வருகிறது. நிலைமை இப்படியிருக்கு ஈயம் பித்தளையைப் பார்த்து பல்லிளித்த கதையாக இந்திய ஜனநாயகம், மியான்மார் ராணுவநாயகம் என்று வெத்துப் பெருமை பேசி இளித்துக் கொண்டழைகிறார்கள் சிலர்.

நாடாளுமன்றத்தில் படுத்துபுரளும் ஒரு எம். பி.



பன்றித் தொழுவத்தில் படுத்துப் புரளும் சில பன்றிகள் (பன்னினும் சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரிஎம்.பி.னும் சொல்லலாம்)

பன்னியக் குளிப்பாட்டி அதுக்கு குதிரை என்று பெயர் வைத்தால் அது #$%டேஸ்@#@ திங்காமல் இருந்துவிடப் போகிறதா என்ன? பன்றித் தொழுவத்துக்கு செண்ட் அடிச்சி நாடாளுமன்றமென்று பேர் வைத்தால் அது மியான்மார் ராணுவ ஆட்சியிலிருந்து இந்திய போலி ஜனநாயகத்தை வித்தியாசப்படுத்திவிடுமா என்ன?

அசுரன்

Related:

Irom And Her Sisters


Murder In Plain Sight

Irom And The Iron In India’s Soul

Sunday, August 29, 2010

இவனுங்க அப்பனுங்க எல்லாம் குதிருக்குள்ளே இல்லையாம், அவனுங்களே சொல்றானுங்க!!!

குதிரு 1:
"நான் ஒன்னும் அமெரிக்காவுக்காக வேலை செய்யல... புலீஸ் நம்புங்க.." - மன்மோகன்சிங்

I'm not working for US, PM tells opposition
Aug 26, 2010, 04.06am IST

அவரே சொல்லிட்டாரு அதனால 'உண்மையாத்தான்' இருக்கும் என்று கட்டாயம் எல்லாரும் நம்பிருங்க.

(ஒபமா அய்யா, இப்படி சொல்லித்தான்யா மெயின்டெய்ன் பன்னிட்டுருக்கேன்!!)


குதிரு 2:

வடிவேலு: எனக்கு கோவம் வராது....

அடிக்கிறவன்: வந்தா?

வடிவேலு: அதான் வராதுன்னு சொல்றேன்ல அப்புறம் ஏன்யா அத எதிர்பாக்குறீங்க....

மூத்திர சந்தில் அடிவாங்கி அலும்பு விடும் வடிவேலு கேரக்டர் பேசும் பிரபல வசனம்தான் மேலே உள்ளது. இதே போல பிரதமர் மன்மோகன்சிங்கும் சமீபத்தில் தான் வாங்கிய அடிமேல் அடிகளுக்குப் பிறகு அலும்பினார்.. பிறகு பம்மினார்...

அலும்பல்:
உயிரிழப்பு ஏற்படுத்தாத முறைகளைக் கொண்டு போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் - 'அலும்பு' மன்மோகன்

பம்மல்:
இந்தியாவை போலிஸ்காரங்களை வைச்சி மேய்க்கிறது வரவர சிரமமாப் போய்க்கினேக்கீது - 'வடிவேலு' மன்மோகன்சிங்

காஷ்மீர், வடகிழக்கு, தண்டகாரன்யா போராட்டங்கள், நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகள் கிளர்ச்சி என திசை திக்கில்லாமல் வகை தொகையாக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ள மன்மோகன், உதிர்த்த முத்துக்கள்தான் மேலே உள்ளவை. ஆனாலும், ரொம்ப நல்லவன்யா.....

(பிம்பிலிக்கி பிலாப்பி... மாமா பிஸ்கோத்து....)


குதிரு 3:
"காவி பயங்கரவாதம்னு இல்லாததையும், பொல்லாததையும் சொல்லக் கூடாது, திரும்பத் திரும்பச் சொன்னா... வலிக்குது அழுதுறுவேன்" - பாஜக மற்றும் காங்கிரசில் உள்ள ஆர் எஸ் எஸ் அல்லக்கைகள் புலம்பல்.

(காவி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த உறுப்பினன் ஒருவன்)

(இந்து பயங்கரவாதி இந்திரேஸ் குமார் - ஆர் எஸ் எஸ் தலைவன்)


ஆர் எஸ் எஸ்ல அப்ரண்டிஸா இருந்து குண்டு வைக்கிறது, நாட்டைக் கூட்டிக் கொடுப்பது போன்ற தேசத் துரோக வேலைகளை கத்துக்கிட்டு பிறகு குண்டு வைத்து மாட்டிக் கொண்டுள்ளனர் காவி ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள். இதக் குறிப்பிட்டு பா. சிதம்பரம் இந்தியாவில் காவி பயங்கரவாதம்னு ஒரு புது போக்கு(??) உருவாகியுள்ளதுன்னு சொன்னதுக்குத்தான் இப்படி அழுது மூக்கு வடிச்சிருக்கு காவி கும்பல்.


குதிரு 4:

"விலைவாசி குறைந்து கொண்டே இருப்பது இனி தொடரும், வருட இறுதியில் பணவீக்கம் 6%த்தை அடைந்துவிடும்" - மாண்டேக் சிங் அலுவாலியா.

இத்த இவர் சொன்னது ஜூலை மாசம் (அதுக்கு முந்தின மாசம், அதுக்கும் முந்தின மாசம்னு எல்லா மாசமும் இந்த டேப்ரிக்கார்டரத்தான் அவரு ஓடவிடுவாரு).

இப்படி விலைவாசி ஒரேயடியாக 'குறைந்ததால்' சல்லிசாக கிடைத்த முட்டை, தக்காளிகளை மொத்தமாக அள்ளிக் கொண்டு போய் மாண்டேக் சிங் அலுவாலியாவிற்கு அபிசேஹம் செய்து மகிழ்ந்துள்ளனர் மேற்கு வங்க மாணவர்கள். சிங்கும் சந்தோசமாக ஏற்றுக் கொண்டார் என்று கேள்வி??

அப்புறம் மக்களே.. நாம எப்போ இதே மாதிரி விலைவாசியைக் கொண்டாடப் போறோம்?

(போட்டோவப் பாத்தா சந்தோசமா இருக்குற மாதிரி தெரியலயே...)


(இங்க வைச்சிதாங்க மூச்சுத் திணறத் திணற முட்டையெறிஞ்சாங்க... அவ்....)



குதிரு 5:

(இதோ போட்டோலக் கீதே இதுதாம்பா உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்)

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இந்தியா அப்படின்னு சொல்றதே அப்பன் குதிருக்குள்ள இல்லனு சொல்ற மாதிரிதான் இருக்கும். அதையும் தூக்கி சாப்புடுற மாதிரி ஒன்னு நடந்துருக்கு.

'எங்க வோட்டு மெசின் ரொம்ப ஸ்டிராங்க், முடிஞ்சா யார்னாலும் அத உடைக்க ட்ரை பன்னலாம்னு' போன தேர்தல் முடிஞ்ச உடனே எலக்சன் கமிசன் ஒரு சவால் விட்டது. சரி அதையுந்தான் பாப்போமேனு ஹரி என்ற ஒருவர் வோட்டு மெசின கொடுங்கன்னு கேட்டாக்க, எலக்சன் கமிசன் கொடுக்க மறுத்துடுச்சி. அவர் அங்க இங்க ஆளப் பிடிச்சு ஒரு மெசின எப்படியோ 'ரெடி' பன்னி அத உடைச்சிட்டார். அத்தோட இல்லாம "அய்யா உங்க ஜனநாயகத்த தூக்கி நிறுத்துற வோட்டு மிசினு பூட்டகேசுங்கோ, டுபாக்கூருங்கோ" அப்படின்னு பப்ளிக்கா அறிவிச்சுட்டார். வோட்டு மெசின் டூபாக்கூருனு ஏற்கனவே தெரிஞ்சனாலதான் சவால் விட்டுட்டு அமைதியா கிடந்தது எலக்சன் கமிஷன். இப்போ இந்த 'ஜனநாயக' உண்மையை ஹரி அம்படுத்தினாலும் படுத்தினார், அவரை ஏழரை நாட்டு சனிகளில் ஒன்றான போலீசு பீடை பிடித்துக் கொண்டு படுத்துகிறது. அது மட்டுமா அடுத்ததா நீதிமன்ற பீடையும் பிடித்துக் கொண்டு அவரை சிறைக்கு அனுப்பி வைத்துள்ளது. இது 'ஜனநாயகத்தை' பாதுகாக்க எடுக்கப்பட்ட 'ஜனநாயகமான' நடவடிக்கையாம். பின்ன? எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு நான் சொல்லுவேன், அது வேற. அதுவே இன்னொருத்தன் வந்து உங்கப்பன் அந்தக் குதிருக்குள்ள இல்லனு 'நாட்டக்' காட்டிக் கொடுத்தான்னா... ங்..கொய்யால சும்மா விட்டுறுவோமா?

நாங்கலே ரொம்ப நாளா இதத்தான் ஜனநாயகம்னு சொல்லி இவிங்கள நம்ப வைச்சுக்கிட்டு இருக்கோம் திடீர்னு வந்து இப்படி அம்பலப்படுத்தினா பிடிச்சு ராடு அடிச்சுர மாட்டோம்? ஜனநாயகம்னா சும்மாவா?

நடுவால சிரிச்சுகினே போஸ் கொடுக்குறாரே, அவருதாம்பா இந்திய ஜனநாயகத்தின் அந்த 'அபாயகரமான' எதிரி!!


அசுரன்

Saturday, May 16, 2009

இந்த தேர்தலில் மக்கள் யாருக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்கள்?

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்பார்த்தபடியே முடிவடைந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் அனேகமாக தெளிவாக தெரிந்துவிட்டது. காங்கிரசு கூட்டணி பல இடங்களில் முன்னணி பெற்று உள்ளது. தமிழகத்தில் திமுக-காங்கிரசு ஓபன் கூட்டணி, தேமுதிக-காங்கிரசு பினாமி கூட்டணி வெற்றி பெற்றுள்ளன. எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாகவே அடிதடி-அதிரடி-சரவெடி அழகிரி அண்ணே, லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். வீரத் தளபதி கந்துவட்டி மைனர் ஜே. கே. ரித்தீஷ் 60,000 வோட்டு வித்தியாசத்தில் வெற்றி. செலவழித்த தொகைக்கு ஏற்ப வோட்டு வித்தியாசம். ஈழப் பெருச்சாளி வைகோ மண்ணை கவ்வி விட்டார். பாமகவுக்கு கோமணத்துணி கூட மிஞ்சவில்லை.

தமிழகத்தில் நவரசங்களும் கலந்தோடுகிறது. குறிப்பாக, ஈழத்திற்கு பலி வாங்கும் வகையில் பாடம் கற்பிக்க தேர்தல் களத்தில் இறங்கி குருதி சிந்திய தோழர்களும், உணர்வாளர்களும் பேரதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். ஈழத்து குருதியில் கை நனைத்து வோட்டுப் பொறுக்க களம் இறங்கிய சூத்திரதாரி தா.பாண்டியன் கட்சியும், இரட்டை இலையும், பிற போலித் தமிழ்த் தேசிய வியாதிகளும் வாயடைத்துப் போயுள்ளனர். மக்களுக்கு உணர்வு மங்கிவிட்டது, மக்கள் காசு வாங்கிக் கொண்டு வோட்டு போட்டு விட்டனர் என்று பல்வேறு புலம்பல்கள்.

ஆனால், இவையெல்லாவற்றையும் விட பேருண்மை ஒன்று உள்ளது. அது இந்த தேர்தலில் மக்கள் கற்றுக் கொடுத்துள்ள பாடம். யாருக்கு? தேர்தலின் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்ய முடியும் என்று ஊரை ஏமாற்றி வந்தவர்கள், தானும் ஏமாந்து மக்களையும் ஏமாற்ற முயன்றவர்கள் இவர்களுக்குத்தான் பாடம் கற்பித்துள்ளனர் மக்கள். ஈழம், தொழில் மந்தம், பொருளாதார கொள்கையின் தோல்வி, விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, மின்வெட்டு இவற்றை மீறி காங்கிரசு போன தடவையை விட அதிக இடங்களில் வெற்றி பெறுள்ளது. எனில், இவை குறித்து மக்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தமா? இவையெல்லாம் மக்களின் ஜீவாதார பிரச்சினைகள் இல்லை என்று அர்த்தமா? இல்லை, மாறாக, தேர்தல் முடிவுகள் இந்த பிரச்சினைகளின் மீது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதுதான் அர்த்தம்.

எந்த அயோக்கியன் வந்தாலும் இதைத்தான் செய்யப் போகிறான் எனும் போது, மாற்று வழி எதுவும் புலப்படவில்லை எனும் போது, யார் அதிக பணம் கொடுக்கிறானோ, யார் நம்ம சாதிக்காரனோ, யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு வோட்டு போட்டு விட்டு போய்விடுவோம் என்பதைத்தான் மக்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். ஈழத்து ரத்தத்திற்கு பதில் சொல்லும் தேர்தல் இது என்று தேர்தலில் போராடிய பெதிக தோழர்களே, உணர்வாளர்களே இதோ இதுதான் உங்களுக்கான பாடம். மக்களுக்கு இந்த தேர்தலின் மீது அப்படி எந்தவொரு மயக்கமும் இல்லை. இந்த தேர்தல் ஜனநாயகத்தின் மோசடி முகத்தை மக்கள் நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களது பிரச்சினை எல்லாம் மாற்று அரசியல் ஒன்று வலுவாக, நம்பிக்கையூட்டும் வகையில் இல்லாததுதான்.

தோழர்களே, உண்மையான தீர்வை நோக்கித்தான் நமது பயணம் எனில் மக்கள் மத்தியில் மாற்று அரசியலுக்கான நம்பிக்கையை விதைப்போம். இல்லையேல் அதுவரை மக்கள் நமது சந்தர்ப்பவாத தேர்தல் நம்பிக்கைகளில் பகடை உருட்டவே செய்வார்கள். உணர்வு மங்கி போயுள்ளது மக்களுக்கல்ல தோழர்களே, நமக்குத்தான். விலை போனது மக்கள் அல்ல தோழர்களே, நாம்தான் சரியான அரசியல் மீது நம்பிக்கையின்றி விலை போய் விட்டோம். தமிழகத்தின் தலைவிதியை இப்படியெல்லாம் மாற்றிவிட முடியாது தோழர்களே. இதோ மக்கள் இந்த தேர்தலில் செவிட்டில் அறைந்தது போல நமக்கு இந்த உண்மையையே உணர்த்தியுள்ளனர்.

அசுரன்

தமிழ்சசி எழுதிய ஒரு கட்டுரையில் ப்ரோக்னோஸ்டிக்சேஜ் என்ற தோழர் இட்டுள்ள ஒரு பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தோழர் ப்ரோக்னோஸ்டிக்சேஜ்க்கு நன்றிகள்.


கோடீசுவர வேட்பாளர்கள்! கோவணத் துணியோடு மக்கள்!!

Tuesday, January 22, 2008

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியுமா எது உள்ளே எது வெளியே என்று?

நீதி நிலைநாட்டப்பட்டுவிட்டது. காலம் கடந்தால்தான் என்ன? குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது அல்லவா? குஜராத் 2002 இனப் படுகொலையின் போது தனது குடும்பத்தவர் 14 பேரை கண்முன்னால் பறி கொடுத்து, பாலியல் பலாத்காரத்திற்குள்ளான பில்கிஸ் என்ற இஸ்லாமிய பெண்மணி, இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்க்கு முந்தைய நாள், நீதி நிலைநாட்டப்படும் என்று தான் நம்புவதாகவும், இந்திய நீதித் துறையின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

இதோ அவரது நம்பிக்கை வெற்றி பெற்றுவிட்டது அல்லவா? 7 பேர் விடுவிக்கப்பட்டால்தான் என்ன? 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டது அல்லவா? ஆறு வருடங்கள் தாமதமான தீர்ப்பாயிருந்தால்தான் என்ன? குற்றவாளிகள் சிறை அனுப்பப்படுவது உறுதியாகிவிட்டது அல்லவா? இனி அவர்களின் வாழ்க்கை கம்பிகளுக்கு பின்னால்தான்.

ஆயினும் சிறைச்சாலைக் கம்பிகளுக்கு தெரியவா போகிறது எது உள்ளே எது வெளியே என்று? 'கம்பிகளுக்கு பின்' என்ற சொற்றொடரில் 'பின்' என்பது கம்பிக்கு எந்த பக்கம் வருகிறது என்பதை யார் தீர்மாணிக்கிறார்கள்? எது தீர்மாணிக்கிறது? எப்படி தீர்மாணிக்கப்படுகிறது?

குஜராத் இனப் படுகொலையில் போது தமது சொந்த வீடுகளை விட்டும் கிராமங்களை விட்டும் விரட்டப்பட்ட லட்சக்கணக்கான முஸ்லீம்கள் இன்றும் தமது வீடுகளுக்கு திரும்ப இயலாமல் நிவாரண முகாம்களில் கைதிகளாகத்தான் வைக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியின் யூத கொட்டடிகள் திறந்த வெளிக் கூடங்கள்தான். ஆயினும் அவை சிறைச்சாலையே. அது போன்றதுதான் குஜராத்தின் நிவாரண முகாம்கள். கம்பிகளோ சுவர்களோ இல்லாத மாய சிறைச்சாலை. சிறைச்சாலையைவிட கோடூரமானதொரு வெளி உலகம் இருக்கின்ற பொழுது சிறைச்சாலையே தேவலாம் என்று பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர் தங்கியதில் வியப்பொன்றுமில்லை. அப்படி தங்கிய அப்பாவி கைதிகளில் ஒருவர்தான் பில்கிஸ்.

தீர்ப்பு வழங்கப்படும் முன்பே தண்டனை கொடுக்கப்பட்டது. குற்றமிழைத்தவர்களுக்கு அல்ல. குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு. நிவாரண முகாம் என்ற சிறைக்கூடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையாக தரப்பட்டது. தண்டனையிலிருந்து சட்டம் தரும் பாதுகாப்பு கவசத்தில் குற்றவாளிகளும், குற்றமயமாக்கப்பட்ட சமூகம் தரும் வன்முறையிலிருந்து பாதுகாத்துகொள்ள பாதிக்கப்பட்டவர்கள் சிறைச்சாலையிலுமாக இருக்கின்றது அங்கு நிலைமைகள். பார்க்கின்றவர்களுக்கு எது சிறை எது வெளியே என்ற தேவையற்ற குழப்பம் வரவேண்டாம் என்று சிறைச்சாலை கம்பிகள் அந்த சமூகத்தின் மனங்களில் பதிக்கப்பட்டுவிட்டன. அவை வெறும் கண்களுக்கு தெரியாது.

சபர்கந்த கிராமத்திலுள்ள நிவாரண முகாமில்தான் தற்போது வாழ்ந்து வருகிறார் பில்கிஸ் சரியாகச் சொன்னால் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சிறைக் கூடத்தின் பாதுகாப்புக்கு சிறப்பு அதிரடிப் படை ஒன்று போடப்பட்டுள்ளது. அவர்களின் அன்புக் குரியவர்களில் 33 பேர் கோடூரமாக கொல்லப்பட்ட சர்தார்பூர் பகுதியிலுள்ள சைய்க் மொஹல்லா பகுதிக்குள் அவர்களால் நுழையக் கூட முடியாது. சிறையில் இருப்பவர்கள் வெளியே வருவதே சிரமம் இதில் அவர்களுக்கு கோடூரம் இழைக்கப்பட்ட பகுதியை பார்ப்பதாவது? இதே போல 70 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கில் முக்கிய குற்றவாளிகள் தண்டனையிலிருந்து மட்டுமல்ல குற்றப்பத்திரிகையிலிருந்தே கூட தப்பித்து சென்று விட்டனர். 27 பேர் கொல்லப்பட்ட ஆனந்த் மாவட்டத்தில் 41 குற்றவாளிகள் முன்பினையில் வெளியே வந்தனர். சிறைக்கு வெளியே இருந்தாலும், உள்ளே இருந்தாலும் யாருக்கும் எதுவும் பெரிதாக மாறிவிடப் போவதில்லை. ஏனேனில் சிறைக்கு உள்ளே வெளியே என்பதை தீர்மானிப்பது சிறைக் கம்பியல்லவே?

கடந்த ஆறு வருடங்களாக பயத்தில் வாழ்ந்து வருவதாக கூறுகிறார் பில்கிஸ். இன்னும் பெரும்பாலனவர்கள் மனதிலிருக்கும் வெறுப்பிலிருந்து தனது குழந்தைகளை காப்பதற்க்கு முயற்சி செய்ததாக சொல்கிறார். குஜராத் அரசே நடத்திய இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட பிற பெண்களுக்கு கட்டாயம் நியாயம் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஆயினும் அவரால் தனது சொந்த கிராமத்திற்க்கு திரும்ப முடியாது. தனக்கெதிரான வெறுப்பு மறைய வேண்டும், அமைதியானதொரு வாழ்வை வாழ வேண்டும் என்ற நிறைவேற இயலா ஏக்கத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறார். ஆனால் மக்களின் மனங்களில் விதைக்கப்பட்ட சிறைக்கம்பிகள் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டதை பில்கிஸ் உணர்ந்தது போல தெரியவில்லை. தனது வழக்கில் தீர்ப்புகள் ஆறு வருடங்கள் தாமதாமாக அல்ல மாறாக அடுத்த நிமிடமே 2002 மார்சிலேயே கொடுக்கப்பட்டுவிட்டதை அவர் உணரவில்லை இன்னும். அதனால்தான் இந்த ஏக்கம், எதிர்பார்ப்பு.

இந்த தீர்ப்பிற்க்கு பிறகு குற்றவாளிகளீன் சொந்த ஊரில் பதட்டம் நிலவுவதாக செய்திகள் கூறுகின்றன. பெரும்பான்மை இந்துக்கள் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டதில் கோபமுற்றுள்ளதாக செய்திகள் சொல்கின்றன. சிறைச்சாலை கம்பிகள் இன்னும் வலுவாக கட்டபடுகின்றன. பில்கிஸ் ஒரு நிரந்தரமான சிறைச்சாலையில் இருப்பதை உறுதிப்படுத்துவதைத்தான் இந்த தீர்ப்பு மேலதிகமாக செய்துள்ளது.

தீர்ப்பு குறித்து அத்தனை பார்ப்பன ஊடகங்களும் தலைமேல் வைத்து கொண்டாடுகின்றன. பிறகு இந்தியா மதச்சார்பற்ற நாடல்லவா? இஸ்லாமியர்களுக்கு நீதி வழங்கப்படுகிறது அல்லவா? தெஹல்கா விடீயோக்கள் வெளிவந்த போது இதே ஊடகங்கள் கள்ள மௌனம் சாதித்ததும். இல்லாத நீதி ஏதோ வழங்கப்பட்டுவிட்டதாக தற்போது பரபரப்பு ஊட்டுவதும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இவை பொது கருத்தில் வினையாற்ற ஏதுவாக அவர்கள் செய்யும் திட்டமிட்ட செயல் தந்திரம்.

பார்ப்பனிய பாசிசம் ஆட்சி செய்யும் இந்த போலி ஜனநாயகத்தில் சிறைச்சாலையும் அரசு இயந்திரத்தின் ஒரு பகுதிதான் என்ற உண்மை புரிந்தால் ஆளும் வர்க்கத்திற்க்கு கொடுக்கப்படும் தண்டனைகளின் தராதரம் நமக்கு புரிந்து விடும். ஒடுக்கப்படும் மக்களோ நிரந்தர சிறைக் கூடத்தில் இருக்கும் அவலம் புரிந்து விடும். இந்தியா என்னும் இந்த திறந்த வெளி சிறைக்கூடத்திலிருந்து அன்று விடுதலை கீதங்கள் முழங்கத் துவங்கிவிடும்.

அசுரன்

Wednesday, May 16, 2007

நாலாவது தூண்களும், நாறும் போலி ஜனநாயகமும்!!

நாலாவது தூண்

தினத் தந்தி தலைப்புச் செய்தி:
பிறந்தார் பேரன்;
தாத்தா ஆனார் ரஜினிகாந்த்!

தலைப்புச் செய்தியே இப்படி என்றால்,
உள்ளே என்ன இருக்கும்?

சிறப்புச் செய்தி:
அதிசயம்,
ஆனால் உண்மை!

பிறந்தார் பேரன்;
தாத்தா ஆனார் ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
லதா ரஜினிகாந்த் பாட்டி ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
தனுஷ் அப்பா ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
ஐஸ்வர்யா தனுஷ் அம்மா ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
ஐஸ்வர்யாவின் தங்கை சித்தி ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
தனுஷின் அண்ணன் பெரியப்பா ஆனார்!

உங்களால் நம்ப முடிகிறதா,
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
கஸ்தூரி ராஜா கூட தாத்தா ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
கஸ்தூரி ராஜா பொண்டாட்டி கூட பாட்டி ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
கஸ்தூரி ராஜாவின் ஒன்று விட்ட சித்தப்பா....

பிற முக்கியமில்லாத செய்திகள்:
டெங்கு காய்ச்சல் பரவுகிறது! அரசு மெத்தனம்!
கடன் தொல்லையால் விஷம் குடித்த விவசாயி சாவு!
--இன்னும் சில இது போன்ற சில வழக்கமான,
ஆச்சரியப்பட வேண்டாத செய்திகள்--------

வாங்கிப் படியுங்கள் தினத் தந்தி!
வாழ்க இந்தியா!
வளர்க நாலாவது தூண்!

நன்றி அரசு பால்ராஜ்

Related Posts with Thumbnails