TerrorisminFocus

Wednesday, July 14, 2010

இது துரோகத்தின் விளை நிலம்!








துரோகம் 1:
கயர்லாஞ்சி (2006 செப்) என்ற பெயர் பலருக்கு மறந்திருக்கும். ஞாபகம் இல்லாதோர் இந்த சுட்டியில் படித்துக் கொள்ளவும்.

கயர்வாஞ்சி தாழ்த்தப்பட்டோர் படுகொலை : சாதிவெறியர்களின் வக்கிரம்-கொடூரம்!

கயர்லாஞ்சி சாதிவெறிப் படுகொலை இந்தியாவைவே உலுக்கியது. ஏனென்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய மாதக்கணக்கிலான வீரம் செறிந்த போராட்டத்தின் காரணமாக இந்தியா குலுங்கியது. பத்திரிகைகள் இந்தப் படுகொலையை போராட்டங்கள் வீரியமாக மாறிய ஒரு மாதம் முழுவதும் வெளியிடமால் ரகசியமாகவே வைத்திருந்தன. ஆனந்த் தெல்தும்பெடே அவர்கள் இந்தப் படுகொலையை ஒட்டி உலகமய அரசியல் சாதியத்தை எத்தகைய பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என்று விரிவானதொரு ஆய்வுக் கட்டுரையையும் எழுதினார். உலகமயம் அடிப்படையில் உழைக்கும் மக்களை ஒடுக்குகிறது என்ற வகையில் தாழ்த்தப்பட்டவர்களும் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதே அதன் சாரம். கயரலாஞ்சி காட்டும் பேருண்மைகள் - உலகமயம் - தலித்தியம் - தலித் விடுதலை

இந்தப் படுகொலை வழக்கை கையிலெடுத்த சிபிஐ வழக்கம் போல தனது துரோகத்தை அரங்கேற்றத் துவங்கியது. சிபிஐ கேட்டுக் கொண்டதன் பேரில் பிப்ரவரி 2007ல் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 46 பேரில் 35 பேர் விடுவிக்கப்பட்டனர்.

செப் 2008ல் குற்றம்ச்சாட்டப்பட்ட 11பேரில் 6 பேருக்கு மரண தண்டனையும், இருவருக்கு ஆயுள் தண்டனையும் மூவரை விடுவித்தும் தீர்ப்பானது.

ஆனால் தண்டனைக்கான காரணங்களாக சாதிவெறி வன்கொடுமையோ, பெண் மீதான பாலியல் அத்துமீறலோ, திட்டம்மிட்ட படுகொலை முயற்சி என்பதோ சொல்லப்படவில்லை. அதாவது மொத்தத்தில் கயர்லாஞ்சி படுகொலை ஒரு படுகொலை மட்டுமே. அதில் சாதியோ, பெண்ணடிமைத்தனமோ இல்லை இல்லை இல்லைவேயில்லை என்பதே செப் 2008 தீர்ப்பின் சாரம்.

கயாலாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும்

இவ்வாறாக, வழக்கு அடுத்தக்க்கட்ட நீர்த்துப் போதலுக்குச் சென்றது. சாதிவெறிப் படுகொலை வெறும் 'கொலை வழக்காக' மாறியது. மேல் முறையீடு செய்யப்பட்ட இந்த நீர்த்துப் போன வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நடந்துவந்தது. இதோ இன்று அந்தக் 'கொலை வழக்கில்' தீர்ப்பு வந்துள்ளது. ஆறு சாதி வெறியர்களுக்கும் வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுவிட்டது.

இதே போலத்தான் கிருத்துவர்கள் மீது ஒரிஸ்ஸாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி வந்த பஜ்ரங் தள் இந்து பயங்கரவாதி தாராசிங்ன் மீதான வழக்கும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளது. போபால் வழக்கு பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

துரோகம் 2, 3.. என்று பட்டியலிட கீழ் வெண்மணியிலிருந்து, போபால் வரை பெரிய பட்டியலே உள்ளது.

இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாம். உலகின் மிகப் பெரிய துரோகிகளின் நாடு என்று பெயர் மாற்றுங்கள் அதுவே பொருத்தமாக இருக்கும்.

அசுரன்

தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைகளின் தொகுப்பு

நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!

காவிக் கறை படிந்த தீர்ப்புகள்

பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியுமா எது உள்ளே எது வெளியே என்று?


சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்... அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரைக்காய்கள்

Monday, July 12, 2010

கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!!!

டைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். யார் இந்த கோவிந்சாமி? திருப்பூர் சி பி எம் கட்சியின் எம் எல் ஏதான் இந்த கோவிந்சாமி. பின்னலாடை நிறுவனத்தின் முதலாளி என்பது உபதொழில்.

எதற்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்? இதுக்கு முன்ன திருப்பூர் முதலாளிகளுக்கு தொழிலாளர் நலச் சட்டக் கெடுபிடிகளிலிருந்து சலுகை வாங்கித் தருவதாக சொல்லி அவர்களிடம் வசூல் வேட்டை நடத்தி மாட்டிக்கொண்டதால் அவர் நீக்கப்பட்டாரா? இல்லை. திமுகவிற்கு பாராட்டு விழா நடத்த முற்பட்ட குற்றத்திற்காகவே நீக்கப்பட்டுள்ளார்.

அப்போ இதுவரை அவர் திருப்பூர் முதலாளிகளுக்கு கோவணம் கட்டியதற்கு? தோழரே சி பி எம் ஒரு கம்யூனிஸ்டு கட்சியல்ல என்று சி பி எம்முக்கே தெரியும் என்பதால் முதலாளிகளுக்கு கோவணம் கட்டிய குற்றத்திற்கெல்லாம் கட்சியிலிருந்து நீக்க மாட்டோம். அப்படி நீக்குவதாயிருந்தால் செத்துப் போன ஜோதிபாசுவிலிருந்து இன்றைய கரத் வரைக்கும் மொத்த கட்சியையும் நீக்க வேண்டியிருக்கும், எனவே, எங்களது எதிர்கட்சிக்கு கோவணம் கட்டினால் மட்டுமே நீக்குவோம் என்று ஒரு மனசாட்சியின் குரல் கேட்கிறது….. எங்கேயோ கேட்ட குரல்….

சிபிஎம்-ன் பரிணாம வளர்ச்சி - படங்கள் நன்றி கலகம்:








திமுக அரசுக்குப் பாராட்டு விழா-சிபிஎம்மிலிருந்து கோவிந்தசாமி எம்.எல்.ஏ நீக்கம்

ஓவர் டூ திருப்பூர் கோவிந்சாமி:

சி.பி.எம்: புரோக்கர்களின் புகலிடம்
புதிய ஜனநாயகம் 2008

சி.பி.எம். கட்சியின் திருப்பூர் எம்.எல்.ஏ.வான கோவிந்தசாமி, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளி. திருப்பூரில் முதலாளிகள் வசிக்கும் அமர்ஜோதி கார்டன் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் கட்டியுள்ள கோடீசுவரர். ""பாட்டாளிகளின் தோழர்'' என்று இவரை சி.பி.எம். கட்சியினர் சித்தரித்தாலும், கோடீசுவர கோவிந்தசாமியின் வர்க்கப் பாசம் எப்போதுமே முதலாளிகள் பக்கம்தான்.


எட்டு மணி நேரத்துக்கு மேல் ஒரு தொழிலாளியை வேலை வாங்கக் கூடாது என்று சட்டம் இருந்தாலும், திருப்பூரில் இச்சட்டமெல்லாம் செல்லுபடியாகாது. இச்சட்ட விரோதக் கொத்தடிமைத்தனத்தைத் தடுப்பது என்ற பெயரில், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அவ்வப்போது தொழிற்கூடங்களில் திடீர் சோதனை நடத்திப் பீதியூட்டுவதும், உரிய "கவனிப்பு'க்குப் பின் இச்சட்டவிரோதச் செயலைக் கண்டும் காணாமல் இருப்பதும் இங்கு வாடிக்கையாக நடக்கிறது.


தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் "தொல்லை'யிலிருந்து முதலாளிகள் நிரந்தரமாக விடுபட, தொழிலாளர் நலத்துறை அமைச்சரான அன்பரசனிடம் பேசுவதாகவும், அமைச்சருக்கு ஒவ்வொரு கம்பெனியும் ஒரு லட்ச ரூபாய் வீதம் கொடுக்குமாறும் சி.பி.எம். எல்.எல்.ஏ. கோவிந்தசாமி திருப்பூர் பனியன் கம்பெனிமுதலாளிகளிடம் பேரம் பேசி வசூல் வேட்டை நடத்தியுள்ளார். முதலாளிகளில் சிலரை அழைத்துக் கொண்டு அமைச்சரிடமும் பேசியுள்ளார். அதன் பின்னரும் அதிகாரிகளின் ரெய்டுகளும் "தொல்லை'களும் தொடரவே, முதலாளிகள் இதுபற்றி தி.மு.க. பிரமுகர்களிடம் விசாரித்தபோது, வசூலித்த பணம் அமைச்சருக்குப் போய்ச் சேரவில்லை என்பதையும், கோவிந்தசாமியே அதை அமுக்கி விட்டதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனே சி.பி.எம். கட்சித் தலைமையிடம் புகார் செய்தனர்.


கட்சித் தலைமை இதுபற்றி விசாரித்ததில், கோவிந்தசாமியின் புரோக்கர் வேலையும் கையாடலும் நிரூபணமானதால், வேறு வழியின்றி சி.பி.எம். கட்சியின் சட்டமன்றப் பேரவைத் தலைவர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கிவிட்டு, திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரான பாலபாரதியை அப்பதவிக்கு நியமித்துள்ளது. சி.பி.எம். கட்சியின் மாநிலக் குழுவிலிருந்தும் கோவிந்தசாமி நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணத்தை கட்சி அணிகளிடமும் மக்களிடமும் விளக்காமல், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் கோவிந்தசாமி இப்பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சி.பி.எம். கட்சித் தலைமை பூசி மெழுகுகிறது.


இதுதவிர, கைத்தறி விற்பனைக்காக அரசு தரும் ஊக்கத் தொகையில் சுமார் 40 கோடிக்கு மேல் பொய்க்கணக்கு எழுதி தமிழக அமைச்சர் ராஜா சுருட்டியதாகவும், இதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து மாநில அரசிடம் கேள்வி எழுப்ப, தனக்குச் சாதகமான தணிக்கையாளரை நியமிக்குமாறு முதல்வர் கருணாநிதியிடம் பேசுமாறு அமைச்சர் ராஜா, கோவிந்தசாமியைத் தூது அனுப்பியதாகவும், இந்த புரோக்கர் வேலைக்காக கோவிந்தசாமிக்கு உரிய கமிஷன் தரப்பட்டதாகவும் செய்திகள் மெதுவாகக் கசிந்துள்ளன.


திருப்பூரில் கொத்தடிமைகளாக உழலும் தொழிலாளிகளின் அவலத்தைப் போக்க இந்த எம்.எல்.ஏ. அமைச்சரிடம் பேசவில்லை. எட்டுமணி நேரத்துக்கு மேல் வேலை வாங்கும் முதலாளிகளின் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராகப் போராடவுமில்லை. மாறாக, தனது வர்க்கப் பாசத்தோடு முதலாளிகளின் கோரிக்கைகளுக்காக ""ரேட்'' வைத்து பேரம் பேச்சுவார்த்தை நடத்துகிறார் இந்த "காம்ரேடு'.


திருப்பூர் எம்.எல்.ஏ.வின் யோக்கியதை இப்படியிருக்க, கோவையில் நில மோசடி செய்து அம்பலப்பட்டு வழக்கு மன்றத்துக்கு நடந்து கொண்டிருக்கிறார் சி.பி.எம். கட்சியின் கவுன்சிலரான பத்மனாபன். இவர் நிலங்களை வாங்கி அவற்றை வீட்டுமனைகளாக்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வரும் லட்சாதிபதி. கோவை வடக்கு மண்டலத் தலைவராக உள்ள இவர், மூன்று முறை கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முக்கியப் புள்ளி.


கோவை அருகே காளப்பட்டியிலுள்ள மருதாசலம் என்பவரது நிலத்தை வீட்டுமனைகளாக்கி விற்றுத் தருவதாகக் கூறி, தன் பெயருக்கு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொண்டு, சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்டி தன் பெயரிலும் தனது மனைவி மற்றும் உறவினர்கள் பெயரிலும் கிரய சாசனம் செய்து கொண்டு, மனைகளைப் பல லட்சங்களுக்கு விற்று மருதாசலத்தை மோசடி செய்துள்ளார் பத்மனாமன். இதற்கெதிராக மருதாசலம் வழக்குத் தொடுக்க, பத்மனாபன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் வழக்கு மன்றத்துக்கு நடந்து கொண்டிருக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிக்காரரே இப்படி மோசடியில் ஈடுபட்டதைக் கண்டு கோவை நகர மக்களே காறி உமிழ்கின்றனர். ஆனாலும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது, சி.பி.எம். கட்சித் தலைமை.


சி.பி.எம். கட்சிக்குள் இன்னும் ஏராளமான கோவிந்தசாமிகளும் பத்மனாபன்களும் தலைவர்களாகவும், பிரமுகர்களாகவும் உள்ளனர். இத்தகையோர் மீது பாரதூரமாக நடவடிக்கை எடுத்தால் கட்சியே கலகலத்துப் போய் விடும் என்று கட்சித் தலைமை அஞ்சுகிறது. எனவேதான், குறிப்பிட்ட வரம்புக்கு மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் கட்சித் தலைமை தடுமாறுகிறது.


மே.வங்கம் சிங்கூர் நந்திகிராமத்தில் மக்கள் மீதே பயங்கரவாத வெறியாட்டம்; சமூக விரோதிகளே கட்சியின் பிரமுகர்கள்; முதலாளிகளும் ஊழல் பெருச்சாளிகளுமே உள்ளூர் தலைவர்கள் என்று சீரழிவில் புதிய பரிமாணத்தை எட்டி மே.வங்க சி.பி.எம். கட்சி "புரட்சி' செய்து கொண்டிருக்கிறது. அதையும் விஞ்சும் வகையில் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது, தமிழக சி.பி.எம். கட்சி.

· தனபால்

அசுரன்

மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத்சிங்கும்!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

கம்முனுஸ்டு மிஸ்டர் மீட்டிங்கு, ஈழப் பிரச்சினைக்கு தீர்வு சொல்றாருடோய்…. !!!

லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!

நண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்!!!

மகளிர் சுய உதவிக் குழுக்களா? கந்துவட்டி புரோக்கர்களா?






வீட்டு வேலை செய்யும் அக்கா ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவரது குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, குழந்தைகளின் படிப்பு என பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தேன். கடுமையாக உழைக்கும் அந்தப் பெண் எனக்குத் தெரிந்து காலையில் 7 மணிக்கு அவரை அந்தப் பகுதியில் பார்த்தால் இரவு பத்து பத்தரை வரை கூட அங்குதான் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பார். மூன்று/நான்கு வீடுகளில் வேலை செய்யும் அந்தப் பெண் மாதம் 3000திலிருந்து 4000ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அவரது சம்பத்தியத்தை நம்பியே அவரது குடும்பம் உள்ளது. இதில்தான் படிப்புச் செலவு, வீட்டு வாடகை, மருத்துவச் செலவு என அனைத்தையும் செய்து கொள்கிறார்கள்.



இவர்களின் அன்றாடச் செலவுகளுக்கும், தீடீர்ச் செலவுகளுக்கும் இவர்களது சம்பாத்தியம் போதுவதில்லை. வங்கிகளோ இவர்களுக்கு கடன் கொடுப்பது இல்லை. இவர்களின் ஒரே புகலிடமாக சமீப காலம் வரை இருந்து வந்தது ஏலச் சீட்டுக்கள் எனப்படும் சிட்பண்ட்ஸ். அதற்கும் இப்போது ஏகப்பட்ட போடி என்று ஆகிவிட்டது. இன்னிலையில் இது போன்ற எளிய உழைக்கும் மக்களின் உடனடித் தேவைகளுக்கு கடன் கொடுத்து அவர்களது உழைப்பை வட்டியின் மூலம் சுரண்டுவதற்கு என்றே உலக வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் சுய உதவிக் குழுக்கள். இது தவிர்த்து கிராம சந்தையை அபகரிக்கும் திட்டங்கள், மகளிர் சுய உதவிக் குழு மூலம் அமைப்பாக உள்ள பெண்களை அந்தப் பகுதி தொழிலாளர்களுக்கு எதிராக திருப்பி விடுவது (ஓசூர் டி வி எஸ்) உள்ளிட்ட உலக வங்கியின் பல்வேறு பயன் நோக்குகளை மகளிர் சுய உதவிக் குழு கொண்டுள்ளது.

இதன் மூலம் கடன் பெறுவது இவர்களுக்கு கிடைக்கும் எளிய வடிவிலான கடனாக உள்ளது. ஆனால் வட்டியோ கந்துவட்டியை மிஞ்சுகிறது. அந்த அக்கா சொன்ன கணக்குப்படி 10,000 ரூபாய்க்கு ஒன்றரை வருடம் வாரத் தவணை முறையில், வாரம் ஒன்றுக்கு 250 ரூபாய் கட்டுகிறார்கள். அதாவது வட்டியும் அசலும் சேர்த்து ஒரு மாதத்திற்கு 1000 ரூபாய்(4*250). ஒரு வருடத்திற்கு 12000 ரூபாய். ஆஹ, ஒன்றரை வருடத்திற்கு 18000 ரூபாய் வட்டியும் அசலுமாகக் கட்டுகிறார் அந்த உழைக்கும் பெண். இந்தப் பகுதியில் மட்டும் பத்துக் கணக்கில் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. அவற்றின் ஒரே தொழில் வட்டிக்கு விடுவது மட்டுமே. ஆரம்பத்தில் உழைக்கும் பெண்களின் தொழில் முனைவுக்கான ஒரு அமைப்பு என்று சொல்லப்பட்டது இன்று அவர்களின் குருதி குடிக்கும் வடிவமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளது.

10,000 ரூபாய் என்பது இந்த பதிவைப் படிக்கும் பலருக்கு வெகு சொற்பமான ஒரு தொகை. ஆனால் இந்தத் தொகையை அந்தப் பெண் ஒன்றரை வருடங்கள் உழைத்து, 8000 ரூபாய் வட்டி கட்டி அடைக்கிறார். இதுதான் இந்திய உழைக்கும் மக்களின் நிலை. சப் பிரைம் கடன்கள் மூலம் அமெரிக்க ஏழை மக்களை அதிக வட்டிக்குச் சுரண்டின நிதி மூலதன நிறுவனங்கள். இங்கு, இந்திய உழைக்கும் பெண்களை சுரண்டுவதற்காகத்தான் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பின்னிருந்து கொண்டு தமது வட்டித் தொழிலை நடத்துகின்றன பெரிய பெரிய வங்கிகளும், நிதி நிறுவனங்களும்.

இந்தியா பழி வாங்கும்*!! வட்டியும் முதலுமாக...

*(இந்தியா பழி வாங்கும் - துரை. சண்முகம் கவிதை ஒன்றின் தலைப்பு மற்றும் மையக் கருத்து)

அசுரன்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் : பலனடைந்தது யார் பன்னாட்டு நிறுவனங்களா? அடித்தட்டுப் பெண்களா?



நுண்கடன் மிகப்பெரும் கொள்ளை


நுண்கடன் - நுண்தொழில் : ஏழைகளைக் கொள்ளையிடும் ஏகாதிபத்திய சதி!

இந்திய அரசியலின் இழிநிலை: ஆ.விகடனில் தோழர் மருதையன் !

பெருந்தொழில் நிறுவனங்களின் 'சமூகப் பொறுப்புணர்வு" ஓநாய்களின் திடீர் கரிசனை

வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள் இரையாகும் கிராமப் பொருளாதாரம்

பெரியார் புரா : தி.க.வீரமணியின் ஏகாதிபத்திய சேவை

தேர்தல் கூட்டணிகள்:சிகரத்தைத் தொடும் பொறுக்கி அரசியல்

Saturday, July 10, 2010

சிபிஐயிடம் மாட்டிக் கொண்டனர் இந்து பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்ன் முக்கியத் தலைவர்கள்!




ஜ்மீர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்து பயங்கரவாதி தேவேந்திர குப்தா சிபிஐ அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். அதன்படி, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆர் எஸ் எஸ் முன்னணித் தலைவர்களான அசோக் வார்செனே மற்றும் அசோக் பெரே ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து லக்னோ சித்தாப்பூர் பகுதிகளில் தங்க வசதி செய்து கொடுத்துள்ளனர். இது குறித்து சின் என் என் ஐபிஎன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இங்கே.




(பயங்கரவாதிகளின் அணிவகுப்பு)

ஏற்கனவே, தேவேந்தர் குப்தா தீவிரமான ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் சாந்தி தாரிவால் தெரிவித்திருந்தார். ஏதோ தனது அணிகள்தான் உணர்ச்சிவசப்பட்டு குண்டு வைத்துவிட்டார்கள் விடுங்கள் என்பது போல கதை விட்டு வந்த ஆர் எஸ் எஸ் பயங்கரவாத கும்பல் இப்போது தனது முன்னணி தலைவர்களே மாட்டிக் கொண்டுள்ளது பற்றி வாயை மூடி மௌனம் காக்கிறார்கள்.

இதே அஜ்மீர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தவுடன் அரசு சொன்னது என்ன தெரியுமா? முஸ்லீம் பயங்கரவாதிகளே காரணம் என்று சொன்னது. Ajmer blast trail leads to Hurriyat


(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாதிகள்)

ஏற்கனவே, 2009ல் தீபாவளிக்கு முந்தைய நாள் கோவாவில் இந்துக்கள் கூடும் இடத்தில் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகள் இருவர் குண்டு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது அது தவறுதலாக வெடித்து கொல்லப்பட்ட சம்பவத்தை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவும். கடந்த சில வருடங்கள் முஸ்லீம்கள் மீது பலி போடும் வகையில் வேசமிட்டுக் கொண்டு ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகள் நடத்திய பல்வேறு குண்டு வெடிப்புகள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன. அவற்றில் இதுவும் ஒன்று. ஆனாலும், ஆர் எஸ் எஸ் ஒரு கலாச்சார அமைப்புதான் என்று இன்னமும் சில நல்லவர்கள் சொல்லி வருகிறார்கள். இந்துவோ அல்லது வேறு எதுவோ மத அடிப்படைவாத பயங்கராவாதிகள் யாராயிருந்தாலும் நிராகரிக்கப்பட வேண்டும், சமூகப் புறக்கணிப்பு செய்யப்பட வேண்டும்.

அசுரன்

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

வெடித்த குண்டுகள் ! புதையுண்ட உண்மைகள் !!


ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!

Wednesday, July 07, 2010

கௌரதைக்கு கொலை செய்வது மற்றும் அதைத் தடுப்பதற்கொரு குன்சான திட்டம்!



கௌரதைக்கு கொலை செய்வது என்றால் என்ன? சாதி மீறி திருமணம் செய்து கொள்ளும் காதலர்களை, சாதி வெறி பிடித்தவர்கள் தமது கௌரவத்தை காக்கும் பொருட்டு 'வேறு வழியின்றி' கொடூரமாக கொல்வதற்குப் பெயர்தான் கௌரவக் கொலைகள்(honor killing). 'வேறு வழியின்றி' செய்யப்படும் இப்படிப்பட்ட கொலைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வரப் போகிறார்களாம் (அடக் காலக் கொடுமையே... இதுக்கெல்லாம தண்டன?).




'கௌரவக் கொலைகள்' இப்படித்தான் உச்ச நீதிமன்றத்திலிருந்து, ஊடகங்கள் வரை அனைத்தும் எழுதுகின்றன (கரெக்டாத்தான் சொல்றாய்ங்க...). இவர்கள் அத்தனை பேரும் ஒரு விசயத்தை மிகத் தெளிவாக பேசுகிறார்கள். இது போல கொலை செய்வதுதான் தவறு, மற்றபடி சாதி வெறிப்பிடிப்புடன் இருப்பது என்பது கௌரவமான ஒரு பண்பாடு என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறார்கள் (நல்ல விசயந்தான..). சமீபத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றில் கூட தனது சகோதரி சாதி மீறி திருமணம் செய்து கொண்டதற்காக கொலை செய்த சகோதரன் குடும்ப கௌரவத்திற்க்காகவே வேறு வழியின்றி அவ்வாறு செய்தான் என்று அவனை மறைமுகமாக பாராட்டியது இதற்கு ஒரு உதாரணம் (சரியான தீர்ப்புய்யா...).





ஆகவே மக்களே, அரசும், 'ஜனநாயகத்தின்' இன்னொரு தூணான ஊடகங்களும், மக்களின் கடைசிப் புகலிடமாம்(??) நீதிமன்றங்களும் அறிவித்துள்ளபடி சாதி வெறியை பறை சாற்றி நீங்களும் ஒரு 'கௌரவ'மான குடிமகன் என்ற தகுதியை பெருமையுடன் அறிவிக்க வேண்டும். மேலும், உங்களது 'கௌரவ'த்தின் அடையாளமான சாதி வெறியை கொலை செய்வது போன்ற கொடூரமான நடவடிக்கைகள் மூலம் அல்லாமல், நாசூக்கான பல்வேறு வழிமுறைகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் (கொஞ்சம் கஷ்டம்தான் பழகிக்கிறோம்...).


(தப்பா எடுத்துக்காதீங்க.. பூனூல் கசங்கிறக் கூடாதுன்னு எந்திரிச்சி நிக்குறாரு...)

ஒரு வேளை உங்களிடம் வெளிப்படுத்தத் தகுதியான அளவிற்கு சாதி வெறி இல்லை என்றாலோ, அல்லது நீங்கள் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்ற வகையில் சாதிப் பெருமை என்று எதையும் சொல்லிக் கொள்ள இயலாத துரதிருஷ்டசாலி 'அகௌரவ'க் குடிமகனாகவோ இருப்பின், அதுதான் உங்களது தலைவிதி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், 'கௌரவ' சாதி வெறியர்களின் சாதிப் பெருமைகளுக்கு தலை வணங்கி அவற்றை மதித்து நடக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் 'கௌரவக்' கொலைகளையும் நாம் தடுத்து விடலாம் அல்லவா? மேலும் 'கௌரவக்' கொலைகளை சாதி வெறிக் கொலைகள் என்று சொல்பவர்களையும், சாதி வெறிப் பண்பாடுகளை தட்டிக் கேட்பவர்களையும் களையெடுக்கும் சட்டங்களையும் கொண்டு வர வேண்டும் (இது மாதிரி உருப்படியான ஐடியாவக் கொடுக்கிறத விட்டுப்பிட்டு சட்டம் போடுறாய்ங்களாம்...)

படங்கள் நன்றி: திங்கள் சத்யா

'அகௌரவ'க் குடிமகன் அசுரன்

Related Links
தலித் வன்கொடுமைகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

மொசக்குட்டிகளும், கழுதைபுலிகளும் - சந்துத்துவத்தின் கதை

Thursday, July 01, 2010

அஹிம்சை என்றால் துரோகம்!!

ந்தியப் பிரிவினையின் போது லட்சக்கணக்கில் மக்கள் பலி கொடுக்கப்பட்டனர்.

காரணம் பிரிட்டிஸ்க்காரனின் பிரித்தாளும் சூழ்ச்சி. ஆனால் இதே பிரிட்டிஸ்க்காரனை எதிர்த்து பிரிவினை படுகொலைக்கு சில மாதங்கள் முன்புதான் மக்கள் சாதி, மத வேறுபாடுகளை களைந்து ஒன்று திரண்டு போராடினர். காரணம் விடுதலை உணர்வு.

அந்த போராட்டத்திற்கு அச்சாரம் போட்டது மும்பை மாலுமிகள் கலகம். இந்தப் போராட்டத்தை காட்டிக் கொடுத்து கருவறுத்த 'தேசப் பிதா' காந்தியின் காங்கிரசு மற்றும் காந்தி.

தல்வார் புரட்சி எனப்படும் இந்தப் போராட்டத்தில் ஒருவேளை பிரிட்டிஷை எதிர்த்து சில ஆயிரம் பேர் செத்திருந்தாலும் அது சுதந்திரத்திலேயே முடிந்திருக்கும். மக்களின் ஒற்றுமை நிலை பெற்றிருந்திருக்கும். வரலாற்றை 'ஒருவேளை' என்று கற்பனை செய்வது ஒரு அபத்தம் எனினும் சில எளிய புரிதல்களுக்கு இது போல பார்ப்பதில் தவறில்லை.

ஆனால், சில நல்லவர்கள் சொல்கிறார்கள். கத்தியின்றி ரத்தமின்றி சுதந்திரம் கிடைத்தது என்று. யாருடைய கத்தியின்றி? யாருடைய ரத்தமின்றி?

பிரிட்டிஷ்க்காரனின் கத்தியின்றி, பிரிட்டிஷ்க்காரனின் ரத்தமின்றி என்பதைத்தான் நல்லவர்கள் அஹிம்சை என்கிறார்கள். அதாவது பிரிட்டிஷ்க்காரனுக்கு ஹிம்சை(இம்சை) செய்யாத ஒன்றைத்தான் இவர்கள் அஹிம்சை என்று சொல்கிறார்கள்.

அப்போ பிரிவினையின் போது செத்து போன லட்சக்கணக்கானவர்கள்? அவர்கள் அடைந்த இம்சை? அது சாதரண மக்கள்தானே, அந்த உயிர்களுக்கு என்ன மதிப்பு இருந்துவிடப் போகிறது?

இதையெல்லாம் கூட்டிக் கழிச்சுப் பாத்தாக்க அஹிம்சை என்றால் துரோகம் என்று புரிந்து கொள்ள முடிகிறது. நல்லது மஹா ஜனங்களே துரோகத்தையும், துரோகியையும் தூக்கி வைத்து கொண்டாட இயலாது. மன்னிக்கவும்.

அசுரன்

காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு : பு.ம.இ.மு

அசுரன்: காந்தி நல்லவரா? கெட்டவரா?

'ஹே ராம்' விமர்சனமும், காந்தி வாங்கிக் கொடுத்த தந்திரமும்

அஹிம்ஸை - ஒரு அபாயகரமான அதி பயங்கர வன்முறையே!

அன்னைக்கே சொன்னாய்ங்க!!!

#1)
""
..எண்ணிலடங்காத அநீதிகளுக்கு எதிராகப் போராடும் எதிர்ப்பு இயக்கத்தை, அத்தகைய அநீதிகளைத் திணிக்கும் அரசோடு ஒப்பிடுவது அபத்தமானது.

வன்முறையற்ற எதிர்ப்பின் ஒவ்வொரு முயற்சிக்கும் இந்த அரசு முகத்திலறைந்தாற்போலக் கதவை மூடியிருக்கிறது. மக்கள் ஆயுதம் ஏந்தும்போது எல்லாவிதமான, வன்முறைகளும் இருக்கத்தான் செய்யும். புரட்சிகரமானது, உதிரித்தனமானது, கடைந்தெடுத்த கிரிமினல்தனமானது என எல்லா வன்முறைகளும் வரத்தான் செய்யும். தானே உருவாக்கிய இத்தகைய பயங்கரமான சூழலுக்கு இந்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
""

""
But to equate a resistance movement fighting against enormous injustice with the government which enforces that injustice is absurd. The government has slammed the door in the face of every attempt at non-violent resistance. When people take to arms, there is going to be all kinds of violence — revolutionary, lumpen and outright criminal. The government is responsible for the monstrous situations it creates.
""


#2)
""
நம்மிடையே பேராசையும், நுகர்வு வெறியும் கருக்கொண்ட ஒரு நடுத்தர வர்க்கம் வளர்ந்து வருகிறது. தொழில் வளம் மிக்க மேற்கத்திய நாடுகளைப் போல வளங்களைக் கொள்ளையிடவும், அடிமைப்படுத்திக் கொள்ளவும் நம்மிடம் காலனி நாடுகள் இல்லை. எனவே, நாம் நம்மையே அடிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். நமது உறுப்புக்களையே நாம் தின்னத் தொடங்கி விட்டோம். பலவீனமான மக்களிடமிருந்து நிலம், நீர், வளங்களைப் பறித்துக் கொள்வதன் மூலம் மட்டுமே, அடங்கக் கூடிய இந்தப் பேராசை வெறியே தேசிய உணர்வாகவும் நல்லொழுக்கமாகவும் சித்தரிக்கப்படுகிறது.
"'
""
We have a growing middle class, reared on a diet of radical consumerism and aggressive greed. Unlike industrialising Western countries, which had colonies from which to plunder resources and generate slave labour to feed this process, we have to colonise ourselves, our own nether parts. We’ve begun to eat our own limbs. The greed that is being generated (and marketed as a value interchangeable with nationalism) can only be sated by grabbing land, water and resources from the vulnerable.
""'

#3)
""
சுதந்திர இந்தியாவில் தொடுக்கப்பட்ட பிரிவினைவாதப் போர்களிலேயே பெரு வெற்றியடைந்த ஒரு போரை இதோ நாம் நம் கண் முன்னால் காண்கிறோம். ஆம், நம் நாட்டின் மேட்டுக்குடி வர்க்கங்களும் நடுத்தர வர்க்கங்களும் ஏனைய இந்திய மக்களிடமிருந்து பிரிந்து தனி நாடாகவே ஆகிவிட்டனர் ............. இப்பொழுது இந்தப் புதிய வல்லரசின் மேன்மை தங்கிய பிரஜைகளுக்கு, தங்களது பிரம்மாண்ட விளையாட்டுப் பொருட்களான கார்கள், வெடிகுண்டுகள், கண்ணி வெடிகளை மென்மேலும் உற்பத்தி செய்வதற்கு நிலமும் தேவைப்படுகிறது. எனவே இது ஒரு முழுநிறை யுத்தம். இரண்டு தரப்பினரும் தத்தம் ஆயுதங்களைத் தெரிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
""

""
What we’re witnessing is the most successful secessionist struggle ever waged in independent India — the secession of the middle and upper classes from the rest of the country. It’s a vertical secession, not a lateral one. They’re fighting for the right to merge with the world’s elite somewhere up there in the stratosphere. They’ve managed to commandeer the resources, the coal, the minerals, the bauxite, the water and electricity. Now they want the land to make more cars, more bombs, more mines — supertoys for the new supercitizens of the new superpower. So it’s outright war, and people on both sides are choosing their weapons.
""


#4)
""
இந்த நிகழ்ச்சிப் போக்கை எதிர்த்துப் போராட விரும்புவோர் இதுநாள் வரை, தர்ணாக்களையும், சத்தியாக்கிரகங்களையும், நீதிமன்றங்களையும், நேச சக்திகள் என்று அவர்கள் கருதிக் கொண்டிருந்த ஊடகங்களையும்தான் தங்கள் ஆயுதங்கள் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றோ துப்பாக்கிகளை நாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வன்முறை வளருமா? ஆம், வளரத்தான் செய்யும். மக்கள் நலனையும் முன்னேற்றத்தையும் அளவிடுவதற்கு "தேசிய வளர்ச்சி விகிதத்தையும்' பங்குச் சந்தைக் குறியீட்டு எண்களையும் அளவுகோல்களாக அரசு பயன்படுத்தும் வரை இந்த வன்முறையும் அதிகரிக்கத்தான் செய்யும். நான் இந்த அறிகுறிகளை எவ்வாறு காண்கிறேன்? அதுதான் கண் எதிரே கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறதே.
""

""
Those who want to resist this process have, until now, reached for dharnas, hunger strikes, satyagraha, the courts and what they thought was friendly media. But now more and more are reaching for guns. Will the violence grow? If the ‘growth rate’ and the Sensex are going to be the only barometers the government uses to measure progress and the well-being of people, then of course it will. How do I read the signs? It isn’t hard to read sky-writing. What it says up there, in big letters, is this: the shit has hit the fan, folks.
""

அவ்வளவுதாம்பா....

அசுரன்

இது ஒரு முழுநிறை யுத்தம்!

'It’s outright war and both sides are choosing their weapons'

பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்!

இந்தியாவின் இதயத்தின் மீதான போர் ! – அருந்ததி ராய்

நக்சல்களுக்கு எதிராக இராணுவத்தை களமிறக்குவது பேரழிவை உண்டாக்கும்

தில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்!

ஐந்திலக்க சம்பளத்தில் எச்சில் பருக்கை!

பத்திரிகையாளர்களை தாக்கும் சி ஆர் பி எப் பொறுக்கிகள் மற்றும் பல செய்தி துணுக்ஸ்!!

Related Posts with Thumbnails