TerrorisminFocus

Friday, November 27, 2009

டபுள் டிப் பொருளாதார வீழ்ச்சி - கும்மாங்குத்து பொருளாதார வீழ்ச்சியும், துபய் கடன் அபாயமும்!!!

பொருளாதார மந்தம் முடிஞ்சிருச்சி என்று இந்த மாதம் ஆரம்பத்தில் ஆராவாரமாக அறிவித்தனர். கடந்த பல மாதங்களாக இப்படி ஒவ்வொரு மாதமும் அறிவிப்பது என்பது ஒரு சடங்காகவே ஆகிவிட்டது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த முறை இவ்வாறு அறிவிக்கப்பட்டதற்கு பொருத்தமாக இந்தியா போன்ற தெற்காசிய சந்தைகளில் அன்னிய நிறுவன முதலீடுகள்(FII) குவியத் துவங்கின. ஐ எம் எப்ன் நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் இந்தியா, இலங்கை, மொரிசியஸ் நாடுகள் வாங்கிய தங்கமும், சீனா போன்றவை வெளிச் சந்தையில் வாங்கிக் குவித்த தங்கத்தின் மூலமும் இன்னும் அதிகமான டாலர் சந்தையில் புலங்கத் துவங்கியது.

ஆனால், இவை நடந்து கொண்டிருக்கும் போதே மேற்கு நாடுகளில் என்றும் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்க வங்கிகள் சட சடவென ஒவ்வொன்றாக திவாலாகிக் கொண்டுள்ளன. இன்னிலையில் வந்தது ஒரு முக்கிய அபாய சங்கு. டபுள் டிப் பொருளாதார மந்தமாக இது விரிவடைகிறது என்பது போலான செய்திகள் வெளி வரத்துவங்கின.

டபுள் டிப் பொருளாதார மந்தம் அல்லது கும்மாங்குத்து அல்லது தெளிய வைத்து அடிக்கும் பொருளாதார மந்தம் என்பது - ஒரு பொருளாதார மந்தம் ஏற்பட்டு பிறகு அதிலிருந்து மீள்வது போல பிலிம் காட்டி விட்டு மீண்டும் மந்தத்தில் மீளாத் துயில் கொள்வது ஆகும்.

இத்தகைய நிலையில் அமெரிக்க ரிசர்வ் வங்கி உள்ளிட்டவை வழங்கி வரும் ஜீரோ வட்டி கடன் தொகையை தெற்காசிய சந்தைகளில் அன்னிய நிறுவன முதலீடாக போட்டு வைத்தால் நல்ல லாபம் அடிக்கலாம் என்ற அடிப்படையில்தான் கடந்த வாரங்களில் FII இந்தியா போன்ற நாடுகளில் குவிந்தது. இப்போது அதற்கும் ஆப்பு வைப்பது போல துபாய் கடன் விசவலை விரிந்துள்ளது.

துபாயின் பெருமைமிகு அரசு முதலீட்டு நிறுவனம் துபாய் உலகம்('துபாய் வேர்ல்ட'தாம்பா அப்படி மொழிபெயர்த்திருக்கேன்). இந்த நிறுவனம் வாங்கியுள்ள 60 பில்லியன் டாலர் கடனுக்கு செலுத்த வேண்டிய தொகைகளை மே மாதத்திற்குப் பிறகு வாங்கிக் கொள்ளுங்களேன், பீலீஸ் என்று கடன் கொடுத்தவர்களிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மீண்டும் அத்தனை பேர் மண்டையிலும் சந்தேகப் பேய் உட்கார்ந்து கொண்டது. இன்னும் வீழ்ச்சி முடியவில்லை, எவனெவன் எங்கேங்கே எப்படியெப்படி மாட்டிக் கொண்டுள்ளான் என்று தெரியவில்லை, எனவே கையில் உள்ள பணத்தை எச்சரிக்கையா வெளிய விடு என்ற சந்தைச் சந்தேகம் பிடித்து ஆட்டத் தொடங்கிவிட்டது. நிதி வறட்சி மீண்டும் தலை தூக்குகிறது.

வரலாறு காணாத அளவுக்கு, வரைமுறையின்றி ஊக்கத் தொகைகளை மத்திய வங்கிகள் சந்தையில் புகுத்திய பிறகும், வட்டி விகிதங்களை சகட்டு மேனிக்கு குறைத்த பிறகும், தொடர்ந்து திவாலான நிறுவனங்களை அரசுகள் தோள் கொடுத்து தாங்கி பிடித்த பிறகும், பல்வேறு சலுகைகள் கொடுத்து வாயில் ஊட்டி விடாத குறையாக போஷாக்கு செலுத்திய பிறகும், பட்ஜெட் பற்றாக்குறைகள் விண்ணை எட்டிய பிறகும் மீண்டும் முதலாளித்துவ கிழட்டு குடிகாரனின் மீளா போதை மயக்கத்தை தட்டி எழுப்ப இயலவில்லையே என்று முதலாளித்துவ நிறுவனங்களின் பொருளாதார நிபுனர்கள் புலம்புகிறார்கள்.

துபாய் நிகழ்வு என்பது பரந்துபட்ட சிக்கலின் ஒரு துளி என்று சொல்கிறார்கள் முதலாளித்துவ நிபுனர்கள்.

உண்மையில், இது முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பிரச்சினை, இது தீர்க்க முடியாத சுய முரன்பாட்டுச் சிக்கல் என்பதைத்தான் வேறு வார்த்தைகளின் மூலம் இப்படி ஒத்துக் கொள்கிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள்.

கிழடு தட்டிப் போன பிறகும், நிதி மூலதன போதை தலைக்கேற தறிகெட்டு ஓடி முடங்கி போய்க் கிடக்கிறது முதலாளித்துவ கட்டமைப்பு. இந்த கிழட்டு குடிகாரனுக்கு நிரந்தரச் சங்கு ஊதுவதன் மூலம் பரந்துபட்ட மக்களை பேரழிவிலிருந்து காக்கும் கடமை ஒன்று மட்டும்தான் நாம் இப்போது செய்ய வேண்டிய வேலையாக உள்ளது. ஏனேனில், நீண்ட நெடிய பொருளாதார மந்தங்கள் உலகப் போர்களையே உலகுக்கு பரிசாக அளித்துள்ளன.

இது மனிதாபிமானமுள்ளவர்களாக தங்களை அறிவித்துக் கொண்டுள்ளவர்களின் மனசாட்சிக்கு விடப்பட்டுள்ள சவால் ஆகும்.

அசுரன்


Thursday, November 26, 2009

எல்லை தாண்டிய பயங்கரவாதம்!!

வர்கள் வண்டிகளில் வந்து இறங்கினார்கள். துப்பாக்கிகளை இயக்கி சட சடவென சுட்டுத் தள்ளினார்கள். சிதறி ஓடிய மக்களில் 12 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

அவர்கள் படகுகளில் வந்தனர். துப்பாக்கிகளை இயக்கி சட சடவென சுட்டுத் தள்ளினார்கள். சிதறிய ஓடிய மக்கள் கொல்லப்பட்டனர்.

மேலே சொல்லப்பட்ட இரண்டு சம்பவங்களில் ஒன்று நடந்தது ஒரிஸ்ஸாவின் கலிங்கா நகர். ஒரிஸ்ஸாவின் இரும்பு கனிம வளம் நிறைந்த நிலங்களை போஸ்கோ என்ற பன்னாட்டு இரும்பு உருக்கு ஆலைக்கு கொடுப்பதை எதிர்த்துப் போராடிய கலிங்கா நகர் மக்கள் மீது காக்கி சீருடை அணிந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சுடு ஆகும்.

இரண்டாவது சம்பவம் நவம்பர் 26 மும்பை ரயில் நிலையத்தில் பல வண்ண ஆடைகள் அணிந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சுடு ஆகும்.

தற்போது, 11/26 இந்தியாவின் ஊடக-அரசியல் திருவிழாக்களில் ஒன்றாக மாறிவிட்டதை சில வாரங்களாகப் பார்க்கிறோம்.
நவம்பர் 26 ன் போது அந்த பக்கமாக குப்பை பெருக்கிக் கொண்டிருந்தவர் முதற்கொண்டு பேட்டியெடுத்து போட்டு அமளி கிளப்பிக் கொண்டிருந்தனர் ஆர்.எஸ்.எஸின் பினாமி தொலைக்காட்சியான NDTVயினர்.

'மக்கள் பாதுகாப்பாக இல்லை'
'மும்பை மக்கள் கோபத்தில் உள்ளனர்'

இப்படி மக்களுக்கே தெரியாதவற்றையெல்லாம் கண்டுபிடித்து சுய அரிப்பை தீர்த்துக் கொண்டிருந்தார்கள். நவ 26 அன்று, மும்பை ரயில் நிலையத்தில் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை ஒரு சடங்கு போல காட்டி முகம் திருப்பிக் கொண்டன இந்த ஊடகங்கள். ஆனால், இதே நேரத்தில் தமது வர்க்கத்தினர் கொல்லப்பட்ட தாஜ் ஹோட்டலைத்தான் முழுவதும் தொலைக்காட்சியில் ஒலி ஒளி பரப்பினர். மக்களும் சரி, மும்பை ரயில் நிலையமும் சரி நவம்பர் 26க்கு அடுத்த நாட்களிலேயே சகஜ நிலைக்கு திரும்பி விட்டிருந்தனர் எனும் போது, இன்றைக்கு ஒரு வருடம் கழித்து அந்த உணர்வு என்னவாக இருக்கும் என்று புரிந்து கொள்ள இயலும்.

ஆனால், இதே நேரத்தில் காக்கி உடை பயங்கரவாதிகளையும், அவர்களை ஏவிவிட்ட கதர், காவி, சிவப்பு ஆடை அரசியல்வாதி-பயங்கரவாதிகளையும், அவர்களை பின்னால் இருந்து ஆட்டுவிக்கும் எல்லை கடந்த பயங்கரவாத பன்னாட்டு கம்பனிகளையும் எதிர்த்து இன்று வரை கலிங்காநகர், நந்திகிராம், லால்கர் என மக்கள் போராடி வருகிறார்கள். அது குறித்து இந்த ஊடகங்கள் வாய் திறந்து பேசுவதில்லை.

பொய்யான உணர்வுகளை ஊதிப் பெருக்கி உண்மை என நிறுவுவதும், அன்றாட வழமையாகிப் போன ஒடுக்குமுறைகளை இல்லாதவொன்றாக சித்தரிக்க எண்ணி மறைப்பதும்தான் உலகமய காலகட்டத்தின் ஊடக தர்மமாகிப்(வியாபாரம், சுய அரசியல்) போனது.

நவம்பர் 26ன் நாய'கரா'க, பா. சிதம்பரத்தை நடுநாய'கமா'க நிறுத்தி(உட்கார) வைத்து சில மேட்டுக்குடி அறிவுஜீவிகள் 'இந்தியா அண்டர் அட்டாக்' என்ற பொய்யான வருவித்துக் கொண்ட உணர்வுடன் கேள்விகளை விளாசிக் கொண்டிருந்தனர் NDTVயில். அது பார்ப்பதற்கு மூல வியாதி வந்தவனின் முக்கிய அவஸ்தைகளை எனது மனத்திரையில் விரித்தது.

என்னவொரு பதைபதைப்பு, ஆக்ரோசம்? சல்வாஜூடம் என்ற கூலிப் படையின் மூலம் ஒரு மாநிலமே எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின் தாக்குதல் இலக்காகி பல நூறு பேர்களின் உயிரையும், பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வையும், இந்தியாவின் எதிர்காலத்தையும் கபளீகரம் செய்து வருவது குறித்து இந்த ஆவேசமும், ஆக்ரோசமும் இவர்களுக்கு வருவதில்லையே?

இதைத்தான், இந்தியாவின் இதயத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது என்ற தனது கட்டுரையிலும் அருந்ததிராய் எழுதியிருந்தார். (The Heart Of India Is Under Attack, By Arundhati Roy - 31 October, 2009, Guardian.co.uk.) இந்தியா அண்டர் அட்டாக் என்பதை விடுங்கள், இந்தியாவின் இதயமே அட்டாக் ஆகி உள்ளதே என்ன செய்யப் போகிறீர்கள் என்று எவனும் கேள்வி கேட்கவில்லை.

நவ 26 எனது உணர்ச்சிகளை முடக்கிப் போட்டதாக சொல்கிறார் தெண்டுல்கர். இன்றைய நிலவரப்படி இந்தியாவின் தலை சிறந்த தேச பக்தராக முன்னிறுத்தப்படுபவர் இவர்தான். ஆயினும் இவரால் மும்பை தாக்குதல்களுக்கு மட்டும்தான் இவ்வாறு முடங்கியிருக்க முடிந்தது. இந்தியாவின் பிற பகுதிகளில் - சட்டீஸ்கர், கர்நாடகா, மஹாராட்டிரா, மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா, பீஹார் - பன்னாட்டு நிறுவனங்கள் கனிம வளங்களுக்காகவும், தமது கொழுத்த லாப வேட்டைக்காகவும் நடத்தி வரும் அரசு பயங்கரவாத தாக்குதல்கள் இவர்களை பாதிக்கவில்லை. பாதிக்கப் போவதுமில்லை.


நவம்பர் 26 தாக்குதலின் போது கூட தெளிவாக தாஜ் ஹோட்டலை கட்டியழுதவர்கள், இன்றுவரை அழுது கொண்டிருப்பவர்கள்தான் இவர்கள். அவர்கள் யார் என்பதில் அவர்கள் வெகு தெளிவாக உள்ளனர்.

அப்படியென்றால் நாம் யார்? எது தேச பக்தி? எது எல்லை தாண்டிய பயங்கரவாதம்? எனது இந்தியா எது? எந்த இந்தியா யாரால் தாக்கப்படுகிறது? இந்த கேள்விகளில் அடங்கியுள்ளது யார் நான் என்பதற்கான பதில்கள். விடை தெரியும் போது மிகப் பெரும் உள்நாட்டு அபாயமாக நீங்களே சித்தரிக்கப்படும் அபாயமும் நிகழலாம்.

அசுரன்

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 1)


மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 2)

Wednesday, November 11, 2009

சுகாதாரத்துறை தனியார்மயம் - தாய்மையை கருவறுக்கும் அவலம்

னியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் முதலில் கேட்க்கப்படும் கேள்வி மருத்துவக் காப்பீடு இருக்கிறதா என்பதுதான். ஆம் என்று சொன்னால் ஆபத்து அங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று பொருள். நமக்கு தேவையோ இல்லையோ எதையாவது அறுத்துக் கட்டி, எக்ஸ்ட்ரா பணம் சேர்த்து காப்பீட்டின் மூலம் கறந்துவிடுவார்கள் தனியார் மருத்துவமனைகள்.

இந்த அவலம் எந்தளவுக்குச் சென்றுள்ளது என்றால், அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்களுக்கு அவர்களின் கருப்பை வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இப்படி வெட்டி எடுப்பது தேவையே இல்லை என்ற போதிலும் பண வெறி பிடித்தழையும் தனியார் மருத்துவமனைகள் இவ்வாறு செய்து வருவது வெளி வந்துள்ளது.

ஒரு பக்கம் தரகு பன்னாட்டு முதலாளிகளுக்கு வருடா வருடம் வரி தள்ளுபடியாக மட்டும் பல லட்சம் கோடிகளில் கொடுத்துள்ள அரசு, இன்னொரு பக்கம் அடிப்படை வசதிகளை தனியார்மயப்படுத்தி வருகிறது. இவ்வாறு மிகப் பெரிய அளவில் தனியார்மயமான ஒரு துறைதான் மருத்துவத் துறை. ஏற்கனவே, ஏழை எளிய மக்களிடம் மதுரை, சென்னை, கோவை நகரங்களில் கிட்னி திருடப்பட்டது போன வருடம் வெளிவந்தது. இந்த வருடம் தாய்மை திருடப்படுகிறது.

மக்களின் வரிப்பணத்தில் தரகு பன்னாட்டு முதலாளிகளுக்கு அள்ளி வழங்கும் அரசு. மக்களுக்கு அத்தியாவசியமான சுகாதரத்துறையிலும் அவர்களை கை விட்டு அனாதரவாக அலைய விடுகிறது. தனியார் மருத்துவமனைகள் ஒன்றுதான் ஒரே கதி என்ற நிலைக்கு தள்ளியுள்ளது. இதனை வைத்து தனியார் மருத்துவ கம்பெனி பிசினஸ் சக்கை போடு போடுகிறது. மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் மருத்துவத்துறை ஏற்கனவே இந்தியாவில் மிக அதிகப்படியாகவே தனியார்மயப்படுத்தப்பட்டுள்ளது. அதில் மிச்ச சொச்சம் இருக்கும் தொழில் நேர்மை, மருத்துவரின் புனிதம் போன்ற பழைய உலகத்து அடையாளங்கள் சுத்தமாக வழித்தெடுக்கப்பட்டு உலகமய கொள்கைகளுக்கு ஏற்ப மருத்துவத்துறையும் முதலாளித்துவ லாப வெறிக்கு இரையாகி வருகிறது. மெரினா பீச்சில் கிரிக்கெட் விளையாண்டால் மண்டை உடையும், அமைதி கெடும் எனவே தடை செய்தது சரி என்று பேசிய மிக நல்லவர்கள் எல்லாம் இது போன்ற பிரச்சினைகளைப் பற்றி பேசும் போது காணாமல் போய் விடுகிறார்கள்.

நாட்டை வல்லரசாக்குகிறோம் என்ற பெயரில் தனியார்மயம், தாராளமயம், உலகமய கொள்கைகள் மூலம் இந்த நாடு கருவறுக்கப்படுவதன் அம்சங்களாகத்தான் இவை நடைபெறுகின்றன. இத்தகைய தனியார்மயமும், லாப வெறியும், போட்டியும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால் நாளைய உலகம் சுடுகாட்டில்தான் வசிக்கும்.


Surgeries under govt insurance plan in question
Publication: The Times Of India - Chennai; Date: Nov 10, 2009; Section: Front Page; Page: 1
Hysterectomy On Many Women Was ‘Needless’

Pushpa Narayan | TNN

Chennai: At 25, it was a surgery Meena Kumari least expected. She had complaints of an irregular menstrual cycle last year. A city-based private hospital then diagnosed a small fibroid as the problem and removed her uterus. Covered as she was by the government employees’ health insurance scheme, the hospital sent a Rs 40,000 bill to the insurance company.

Sounds routine, but her surgery has now been termed “needless” by an expert panel of doctors from the insurance company running the scheme. What’s more, an ongoing audit by doctors working for Star Health and Allied Insurance has revealed that Meena’s case resembled a sizeable number of hysterectomies done under the scheme in the last one year — they were unwarranted and left many young women unfit to conceive.

The findings suggest medical ethics violations and an excessive tendency to use elaborate procedures on patients, presumably to inflate bills. “Many young women need not have gone through the surgery. Many of them needed just medicines to regularise their periods. They had no family history of cancer or any problem with their reproductive system,” said V Jagannathan, chairman, Star Health, who has recently been holding marathon meetings against such practices.

The insurance scheme covers 12 lakh government employees and their dependents. Since its launch in late 2008, 16,000 women have undergone hysterectomies or overectomies for removal of uterus or ovaries. According to the data, 30% of the surgeries were suspect, and of these, at least 540 women were in the age group of 25-35 — and more than 100 in the 20-30 age group. As a result of the surgery, many of those under 30 may have hit menopause early, apart from losing all chances of bearing a child.

Under The Knife

At least 540 women in 25-35 age group have had their uterus or ovaries removed

Case sheets of patients show that for fibroids as small as 1.4cm, uterus and ovaries have been removed

Around 30% of such surgeries have been termed needless by doctors employed by insurance firms

Tamil Nadu health secretary VK Subburaj said the state health department was yet to get any formal complaint Hospitals warned on unwanted surgeries

Chennai: An audit by doctors working for Star Health and Allied Insurance has revealed that tendency to use elaborate procedures on patients to inflate bills is commonplace.

“One patient told us how she had agreed to the surgery only because she was told the fibroid could turn cancerous,” Star Health chairman Jaganathan said.

Parallel audits on other insurance schemes show that uterus removal for women below 30 years was very low. “We have 1.5 lakh women under the age of 35 covered under the company’s own general health insurance scheme. Of this, just seven women below the age of 35 have had their uteruses removed,” Jagannathan said.

Case sheets of patients billed to Star show that for fibroids as small as 1.4cm, many patients in the government scheme had had their uterus and ovaries removed. Reacting to the findings, fertility expert Dr Priya Selvaraj said: “As far as possible, we ensure that a woman retains her reproductive organs.”

Health secretary VK Subburaj said the health department was yet to get any formal complaints. “If any hospital is found violating rules we will initiate criminal action,” he said. Recently, the insurance company removed two private hospitals in Nagercoil and Kanyakumari for charging extra from beneficiaries of the Kalaignar health insurance scheme.

There are also false claims by some hospitals. A patient who underwent cataract surgery was found not to have an intra-ocular lens implanted as mentioned in the bill.

Finance secretary G Gnanadesikan said state employees had benefited much from the scheme. “We paid premium of Rs 120 crore for 12 lakh employees, who get Rs 2 lakh cover for two years. At the end of the first year, we have received claims for more than Rs 125 crore.”


அசுரன்

தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.கவின் கருணையா? நரித்தனமா?

அமெரிக்கா - மருத்துவ காப்பீட்டின் அவலங்கள்!

தரகு முதலாளிகளுக்கு மானியம் தொழிலாளிகளுக்கு திருவோடு

திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !

உலக வங்கி உத்தரவு : தனியார்மயமாக்கும் ஆரம்ப சுகாதார மையங்கள்

மருந்துப் பரிசோதனை: சோதனைச்சாலை எலிகளாக மாற்றப்படும் ஏழைகள்

சிறுநீரகக் கொள்ளை :வெட்கங்கெட்ட இந்திய அரசு

தாய்மையை விலை பேசும் உலகமயம்

தாய்மை விற்பனைக்கு

Wednesday, November 04, 2009

மீள் பிரசுரம்: வந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா?

மறுபதிப்பு: ஆகஸ்டு 2006ல் பதிப்பிக்கப்பட்ட இந்தக் கட்டுரை காலப்பொருத்தம் கருதி மீண்டும் மறுபதிப்பு செய்யப்படுகிறது. விமர்சனங்கள், விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன. தோழி லிவிங் ஸ்மைல் அந்தக் குறிப்பிட்ட பதிவில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சில தேவையற்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

இந்தக் கட்டுரையை மீண்டும் வெளியிடும் தேவை என்ன? சமீபத்தில் ஒரு முஸ்லீம் அமைப்பு வந்தே மாதரத்தை முஸ்லீம்கள் பாடக் கூடாது என்று தடை விதித்துள்ளது. இது போல மத அமைப்புகள் மக்களின் சமூக வாழ்வில் தலையிடுவதும், முடிவெடுப்பதும் அராஜகமானது என்பதும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், இதை விட முக்கியமாக இந்தப் பிரச்சினையை வழக்கம் போல தனது மத வெறி பிரச்சாரத்திற்கு ஆர் எஸ் எஸ், பாஜக பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை எதிர்த்து பிரச்சாரம் செய்வதே முக்கியமானது என்று கருதுகிறேன். முஸ்லீம்கள் மட்டுமல்ல, மக்கள் மீது காதல் கொண்டவர்கள் யாருமே இந்த கேடு கெட்ட பாடலை பாட மாட்டோம் என்று சொல்வதுதான் நியாயமானது என்பதை உரக்கச் சொல்ல வேண்டியுள்ளது. அந்த அடிப்படையிலேயே இந்த கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

மேலும், சமீப காலங்களில் வலையுலகில் முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் குரல் வலுவிழந்து வருவதும், தீடிரென மேல்தட்டுக்கு உயர்ந்துள்ள நடுத்தர வர்க்கத்தின் அரைகுறை நாட்டுப்பற்று இந்துத்துவத்தின் குரலாக ஒலிப்பதும் அதிகரித்துள்ளது. இதனை முன்னிட்டு குறிப்பான பிரச்சினைகளில் முற்போக்கு கருத்துக்களை பரவலாக எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்தும் வகையிலும் இந்தக் கட்டுரை மீள் பிரசுரம் செய்யப்படுகிறது.

தோழமையுடன்,
அசுரன்

##############################

வந்தே ஏமாத்துறோம் - ஒரு தேச பக்தி பாடலா?

"எனக்கு அவன் கொடுத்த செக் திரும்பி வந்திடுச்சுண்ணே."


"விளக்கமா சொல்லு"


"அண்ணே.. அவனுக்கு நான் பத்தாயிரம் பணம் கொடுத்திருந்தனா.. அதை அவன்கிட்ட திருப்பிக் கேட்டப்போ அவன் ஒரு செக் கொடுத்திருந்தான்னே.. அது பேங்கில திரும்பி வந்துடுச்சு.. என்னன்னு கேட்டு பணத்த வாங்கித்தாங்க!"


"நீ எப்போ அவனுக்கு..பணம் கொடுத்தே?"

"அவன் பொண்டாட்டி ஓடிப்போவதுக்கு முன்னாடி?"

"என்னது அவன் பொண்டாட்டி ஓடிப்போயிட்டாளா? யார் கூட? அந்த நெட்டையா ஒருத்தன் ஊடகீட வந்துகிட்டு இருந்தானே அவனோடயா? ஏம்பா ஏன் என்கிட்டே சொல்லல இத?"

"அண்ணே! விசயம் அது இல்லண்ணே! செக்கப் பத்திக் கேளுங்க!"

"கொஞ்சம் சும்மா இருப்பா நீ! எவ்வளாவு நாளாப்பா அவன்கூட ஒன் பொண்டாட்டி பழக்கம்? எங்க ஓடிப் போனாங்க?"

********



இந்த மாதிரி உரையாடலை காமெடி என சினிமாவில் ரசித்திருப்பீர்கள்.. நிஜத்திலும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது இந்தியாவில் காங்கிரசு, பிஜேபி எனும் ஆளும் வர்க்கக்கட்சியின் வடிவில்.

வந்தே ஏமாத்தறோம் பஜனையின் பிண்ணனி:

நாட்டின் சுரங்கங்கள், விமான ஓடுதளங்கள், நிலையங்கள், ஆறு, நிலத்தடி நீர் என ஒன்றும் பாக்கி இல்லாமல் அன்னியனுக்குக் காட்டிக் கொடுத்தாயிற்று.. சுயசார்புக்கொள்கையை அணுசக்தித்துறையில் கைகழுவி அமெரிக்காவிடம் சரணாகதி ஆன விசயம் மக்களிடம் அம்பலமாகி நிற்கும் வேளையில் 'வந்தேமாதரம் பஜனை'யைக் கையில் எடுத்துள்ளனர் இரு கயவாளிகளும்.

தேசபக்தி என்பது வெறும் பஜனைப்பாட்டு அல்ல. அது கோடானுகோடி உழைக்கும் இந்திய மக்களின் நலனுக்காக சிந்திப்பதாகும். இவர்களின் நலனை அன்னியனிடம் அடகு வைத்த விசயம் அம்பலமாகும்போது அதிலிருந்து மக்களை திசை திருப்பும் உத்தியாகவே இவர்கள் செய்து வரும் வாதம் உள்ளது. (செக்கு திரும்பி வந்த விசயத்தை விட்டு விட்டு பொண்டாட்டி ஓடிப்போனது பற்றிப் பேச ஆரம்பிக்கும் காமெடியை நினைவுகொள்க).

இவர்கள் இப்படி வந்தே மாதரம் பற்றிய சர்ச்சையை நடத்திக்கொண்டிருக்கையிலேயே ஓசையில்லாமல் கோக்கோகோலா கம்பெனிக்காரனுக்கு 'நற்சான்றிதழ்' தரும் மாமா வேலையை அமெரிக்க அடிமை மன்மோகன்சிங்கின் கூலிப்படை செய்து விட்டது.

இதே தாசானுதாசன், கொஞ்ச நாளுக்கு முந்தி, 'ராவின் அரசில் இருந்த அமெரிக்க உளவாளி யார்?" என்பதை முன்னாள் ஜஸ்வந்த் சிங்கிடம் லாவணி பாடிக்கொண்டிருந்தார். அமெரிக்க உளவாளியே பிரதமராக இருப்பதும், அவர், உளவாளி பற்றிப் பேசுவதும்தான் காலக்கொடுமை.

மருத்துவம், கல்வி, குடிநீர் எல்லாமே தேசத்து மக்களுக்குக் கிடைக்கவிடாமல் தனியார்மயமாக்கப்பட்டு அம்மக்களின் நலன்கள் காவு கொள்ளப்பட்டு வரும் சூழலில் இந்த மாமாக்கள் (காங்கிரசு, பாஜக) 'தேசபக்தி' பற்றிப் பினாத்துகிறார்களே? அன்னிய நிறுவனமான சோனி, பத்தாண்டுகளுக்கு முன் 'வண்ட்ட்ட்ட்டேஏ மாத்த்தரம்' என்று மலச்சிக்கல் வந்தவன் முக்குகிற மாதிரி ஏ ஆர் ரகுமானை வைத்துப் பாடச்சொல்லி காசு சம்பாதித்ததே! அப்போது அன்னியக்கம்பெனி எப்படி எங்களோட 'தேசபக்தி' வியாபாரத்துல தலையிடலாம்னு குறைந்தபட்சம் 'தேசிய முதலாளிகள்' மாதிரியாவது கண்டித்தார்களா இந்த இந்துவியாதிகள் என்றால் அதெல்லாம் இல்லை.
சரி.. இவர்கள் சொல்லிவரும் வந்தே மாதரத்தின் லட்சணத்தைத்தான் பார்த்து விடுவோமே!

வந்தே ஏமாத்துறோம்! எப்படி?
"மொகலாயர் ஆட்சிக்குப் பிறகு வங்காளத்தை ஆண்ட முசுலீம் நவாபுகள், ஜமீன்தார்கள் ஆட்சியில் பார்ப்பன மேல்சாதியினர் தங்கள் ஆதிக்கத்தை இழந்து தவித்தனர். எனவே நவாபுகளை முறியடித்த ஆங்கிலேயர்களை அவர்கள் நெஞ்சார வாழ்த்தி வரவேற்றனர்.

இந்தச் சூழ்நிலையை வைத்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி எனும் பார்ப்பனர் 'ஆனந்த மடம்' எனும் புதினத்தை எழுதினார். முசுலீம் அரசர்களை எதிர்த்து இந்துச் சாமியார்கள் போராடுவதைக் கூறும் இக்கதையில்தான் 'வந்தே மாதரம்' (தாய்க்கு வணக்கம்) என்ற பாடல் வருகிறது. காளி, சரஸ்வதி, லட்சுமி என்று தாயை விளிக்கும் 'வந்தே மாதரம்' இப்படித்தான் தோன்றியது.

"நம்முடைய நவாபின் ராஜ்ய பரிபாலனத்தைப் பாரும். மதம் போய் விட்டது; சமூகம் போய் விட்டது; மானம் போய்விட்டது;குலம் போய்விட்டது; இப்போது பிராணனும் போய்க்கொண்டிருக்கிறது.." இது 'ஆனந்தமடம்' நாவலில் வரும் ஓர் உரையாடல். இதில் யாருடைய மதம்-சமூகம்-மானம்-குலம்-பிராணன் போய்விட்டதென்பதைத் தெள்ளெனவே உணரமுடியும்.

அதனால்தான் முசுலீம் அரசர்களிடமிருந்து வங்கத்து மாதாவை விடுதலை செய்த 'ஆங்கிலப் பிதாவை' அன்றைய வங்கத்துப் பார்ப்பன மேல் சாதியினர் மனதார வாழ்த்தினர். வந்தேமாதரத்தின் தோற்றத்திலேயே நாட்டுப்பற்றுக்கு இடமில்லை!


காலப்போக்கில் வங்கத்து வந்தே மாதரம் ஆங்கிலப் பிதாவை எதிர்க்கும் பாரத மாதாவாக மறுபிறவி எடுத்தது. இந்த பாரத மாதா பஜனையை விடுதலைப் போராட்டத்தில் திணித்தது காங்கிரசு கும்பலின் கைங்கர்யமாகும். இந்திய அளவில் இந்து மதமும், பாரத மாதாவும் உருவாக்கப்பட்டு வந்த நிகழ்ச்சிப் போக்கும், காங்கிரசின் பார்ப்பன மேல்சாதித் தலைவர்களும் அவர்களின் பார்ப்பனீய இந்துத்துவக் கருத்தும் 'வந்தே மாதரத்தை'ப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருந்தன.


கோவில்களில் அம்மணமாக நிற்கும் பெண் கடவுள்களை மாதிரியாகக் கொண்டு, அந்தப் பெண் உருவங்களுக்கு பார்ப்பன, உயர்சாதி மாமிகளின் பாணியில் சேலை கட்டி "இதுதான் லட்சுமி,சரஸ்வதி,பார்வதி" என்று வரைந்து தள்ளினார் திருவாங்கூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஓவியர் ரவி வர்மா. இப்படியே 'மாதா'க்களை உருவாக்கிய மன்னர் பரம்பரைதான் கடைசி வரை வெள்ளையனின் விசுவாச அடிமையாக இருந்தது. முதுகில் நாலு கை முளைத்த லட்சுமிதான் பாரத மாதா; இந்தப் பெண் தெய்வத்தை வருணிக்கும் பாடல்தான் 'விடுதலை கீதம்' என்று சொன்னால் அது பிற மதத்தினரை வெறுப்படையச் செய்யாதா?

பிற மதத்தினரை விடுங்கள், மக்கள் மீது மீளாக் காதல் கொண்ட எந்த ஒரு சுயமரியாதை உள்ள தேச பக்தருக்கும் இந்த பிற்போக்கு போக்கிரி பாடலை தேச பக்தி பாடல் என்றால் கொலை வெறி வரத்தான் செய்யும்.

மத வெறி அரசியலும், மாற்று அரசியலும்:


இப்படித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து மதத்தின் பெயரால் முசுலீம் மக்களைத் தனிமைப்படுத்தும் போக்கைக் காங்கிரசுக் கும்பல் ஆரம்பித்து வைத்தது.


இப்போது பிஜேபி அர்ஜூன் சிங்கை நெளிய வைக்கவும் தனது இந்துவியாதி அரசியல் ஆயுதத்தை கூர்மைப் படுத்தவும் இந்த பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டுள்ளது.

ஏகாதிபத்திய அடிமைகளான பிஜேபியும், காங்கிரசும் நாட்டின் மூல வளங்களையும், நாட்டின் இறையாண்மையையும் டாலர் தேவதையின் முன் சமர்ப்பித்து விடுவதில் போட்டாபோட்டி போடுகின்றன. போராடும் உழைக்கும் இந்திய மக்கள் மீது , ஹூண்டாய் காரனின் எச்சில் காசுக்காக அடக்குமுறையையும், உரிமைப்போர் நடத்தும் மக்கள் மீது தாமிரபரணியில் கோக் கொடுக்கும் எலும்புத்துண்டுக்காக அரசு எந்திரத்தை ஏவி விடுவதிலும் இந்த இரண்டு கூட்டுக்களவாணிகளும் கள்ள மவுனமே சாதித்தன.


இது இன்று நேற்றல்ல. நூறாண்டுகளாக நடந்து வரும் துரோக வரலாறுதான். மக்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராய் எப்போதெல்லாம் போராடினரோ அப்போதெல்லாம், காங்கிரசு மக்களை அன்னியனுக்குக் காட்டிக்கொடுத்தே வந்துள்ளது. (புன்னபுரா, சவுரிசவுரா, தெலங்கானா உழவர் எழுச்சிகள், பகத்சிங்கின் புரட்சிப்படை ஆகியவற்றுக்கு எதிராக இருந்தமை).

பாஜகவின் மூல வேரான இந்துமகாசபையும் ஆர் எஸ் எஸ் ம், மற்ற இந்துவியாதிகளும் இதே மாமா வேலையைத்தான்(விளக்கு பிடித்தல்) 1947க்கு முன்னரும், பின்னரும் செய்தனர் (வெள்ளையனே வெளியேறு, தல்வார் புரட்சி ஆகியவற்றிற்கெதிராக வேலை செய்தமை). இன்றும் தொடர்கின்றனர்.


ஒட்டுண்ணிகளை அழிக்கும் வீரிய மருந்து - உழைக்கும் வர்க்கம்:


வந்தே மாதரம் பாடி நம்மை ஏமாற்றும் அரசியல் ஒட்டுண்ணிகளும், அவர்களின் எச்சில் பொறுக்கி அல்லக்கைகளும் நம்மைப் பார்த்து 'வந்தே ஏமாத்துறோம்' எனச்சொல்வது கேட்கிறது.


இந்த தேசத்தின் நலன்களையோ, தேசத்தின் செல்வங்களையோ, உழைப்பாளர்களையோ மதிக்காமல், அவற்றுக்கெல்லாம் எதிரானவர்களாய் நடந்து கொண்டு, வெறுமனே 'வந்தே மாதரம்' போன்ற பஜனைகளை தூக்கிப்பிடித்துக்கொண்டு 'போலி தேசப்பற்று' பேசி அதற்கென 'நாய்ச்சண்டை இடுவது' எவ்வாறு சாத்தியமாகின்றது?


மக்களிடம் நாம் உண்மையான அரசியலை - அதாவது ஏகாதிபத்தியத்தை, அதற்கு நக்கிப்பிழைக்கும் காங்கிரசு, பாஜக கூட்டத்தை - பற்றி பேசத்தொடங்க வேண்டும். அவர்களின், இந்த அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்த வேண்டும்.


பிளாக்ஸ்பாட்டுகளில் நுழைந்து அங்குள்ள பல போலி தேசிய கூமுட்டைகளை உடைக்க வேண்டும்.

கற்பக விநாயகம்
vellaram@yahoo.com

Monday, October 26, 2009

கவிதையைப் படிக்கும் முன்….

கவிதையைப் படிக்கும் முன்….

காலனி(ணி)க் கவிதை
""
ஆனால்,
நீ என்னோடு வரும்போழுது,
உன் பிஞ்சுப் பாதங்களால்
மேலத்தெருவில் அழுத்தமாய்
பாதம் பதித்து நடக்க வேண்டும்.

உன் காலணிகளின் அடியிலிருந்து எழும் இசை
அந்தத் தெருவில் குடிகொண்டிருக்கும்
ஜாதியத்தின் செவிகளை
துளைத்தெடுக்க வேண்டும்.

செய்வாயா என் செல்ல மகளே!
""


"இப்பொ யாருங்க சாதி பாக்குறாங்க? " வினயமாகக் கேட்டார் ஆனந்த பவனில் காபி குடித்துக் கொண்டிருந்த ஆறுமுகப் பாண்டியன். தினமலர் செய்தி ஏட்டில் முக்குலத்தோர் மணமாலையில் மணமகன் தேடி விளம்பரம் கொடுத்திருந்த செய்தித் தாளை அருகில் வைத்துக் கொண்டே.

"ஏதாவது சிறுசா நடந்துடக் கூடாது, உடனே தலித்து தலித்துன்னு கூப்பாடு போட்டு ஊரக் கூட்டிருவாங்க. வேலையத்த பயளுக.", அமைதி விரும்பியாக அறவுரை வழங்கினார் 'Veg ஒன்லி' விளம்பரம் கொடுத்து வீடு வாடகைக்கு விடும் பக்கத்து வீட்டு பரசுராமன்.

"அதெல்லாம் அந்தக் காலம், இப்போ வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வைச்சி மேல் சாதிக்காரன கொடுமப்படுத்துறாங்க" சமூக நீதி போதனை செய்தார், பேராசிரியர் திருவேல்முருகன், தனக்குப் பின்னால் ஒட்டியிருந்த கீழ் வெண்மணி நினைவுநாள் சுவரொட்டியையும், கடையில் தொங்க விடப்பட்டிருந்த வாரப் பத்திரிகையில் தெரிந்த கயர்லாஞ்சி தீர்ப்பையும் தனது தொந்தியால் மறைத்துக் கொண்டே..

"அவா அவா வேலய அவா அவா செஞ்சா லோகத்துல என்ன பிரச்சினை வந்துடப் போறது?" பாதாளச் சாக்கடையில் இறங்கி கழிவு அகற்றியவருக்கு 10 ரூபாய் அருளிக் கொண்டே நவீன வர்ணாஸ்ரமத்தை அழுத்தம் திருத்தமாக கேட்டார் ஹரிராமன், பக்கத்தில் தொலைக்காட்சிப் பெட்டி பல்லிளித்துக் கொண்டிருந்தது - "அனைவரும் அர்ச்சகர் ஆவதற்கு நீதிமன்றத் தடை கோரும் வழக்கு விசாரணைக்கு வந்தது."

"தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் அவனோட அடையாளங்களை பெருமையா காட்டிக் கொள்வதை யார் தடுத்தாங்க?" நெத்தியில் கண்ணைக் கூசுச் செய்யும் அளவு நாமம் போட்டுக் கொண்டே நியாயம் பேசினார் வெங்கடராம நாயக்கர், மாட்டுக் கறி தின்ற ஹரியான தலித்துக்களின் தோலுரித்துக் கொன்ற ஆர் எஸ் எஸ் இந்து பயங்கரவாதிகளும் நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டுதான் நியாயப்படுத்தினர் என்பது, கண்ணில் நிழலாடியது.

தடித்த, சொரனையற்ற சாதியக் காதுகளுக்கு எவ்வளவு அருகில் சென்று காலனி(ணி)ச் சத்தங்கள் ஒலிக்க முடியுமோ அவ்வளவு அருகில் சென்று ஒலிக்கட்டும், அப்பொழுதாவது சாதிய வண்ணம் பூசிய இந்த ஆபாசங்களையே நியாயம், நீதி என்று பேசுபவர்களின் செவிட்டுத் தனம் கிழிகிறதா என்று பார்க்கலாம்.

தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான வன்கொடுமைகளை தினமும் தொகுத்து வழங்கும் ஒரு தளம்.


காலனிச் சத்தங்கள்

என் செல்ல மகளே!
நீ பிறந்ததில் எனக்கு
மிக்க மகிழ்ச்சி.

உன் தாத்தாவிற்குத்தான்
என் மீது கொஞ்சம் வருத்தம்.
குலசாமி பெயர் விடுத்து,
மரித்தவர்களின் ஊர்ப்பெயரை
உனக்கு சூட்டியதற்காக…
முடிந்தவரை விளக்கிவிட்டு
பிடிவாதமாய்,
வெண்மணி என்றே உனக்கு
பெயரிட்டு விட்டேன்.
என்னைப் பொறுத்தவரை அவர்கள்
மரிக்கவில்லை.

நகரவாழ்வின் விழுமியங்களோடு
சங்கமித்து நிறைய வருடங்கள்
உருண்டோடிவிட்டன.
அதன் தொடர்ச்சியாய் – இப்பொழுது
நீயும் வந்துவிட்டாய்…

கடந்துவந்த தூரங்களின்
நீளத்தை என்றாவது ஒருநாள்- நீ
கேட்டறிய வேண்டும் என்பதே
என் ஆவல்.

ஏனெனில்,
தழும்புகளற்ற காயங்கள்
என்னிடம் நிறைய உண்டு.
அதை உன்னோடு பகிர்ந்து கொள்ளும் போது
உனக்குள் ஒரு பண்புமாற்றம்
நிகழலாம் என்பது என் நம்பிக்கை.

முரண்களின் மூட்டையாக
இருக்கும் இந்த சமூக அமைப்பின்
சிக்கல்களை
அறுத்தெறிவதற்கான ஆயுதமாக…
அந்த நம்பிக்கை
உனக்குள்ளும் ஊடுருவலாம்.

அழகிய ஓவிய வேலைப்பாடுகளடங்கிய
பீங்கான் குவளைகளில்,
நீயும் நானும்- இப்பொழுது
தேநீர் அருந்திகொண்டிருக்கிறோம்,
இவை நாம் எட்டிய
குறைந்தபட்ச வாழ்க்கை.

இது நடந்தது கூட
உடனடி நிகழ்வல்ல,
ஒரு நெடிய போராட்டத்தின்
விளைவு.

பனை மரத்து ஓலைகள்,
செரட்டைகள்,
அலுமினிய கிண்ணங்கள்…
இவைகள்தான்
உனது முன்னோர்களின்
தேநீர் குவளைகள்

அதாவது,
‘நாகரிக’ சமூகத்தை
தலைகுனியச் செய்திடும்
இருண்ட கணங்கள்.

“மனிதர்களை ‘மனிதர்’
நாயினும் கேவலமாய்
நடத்த முடியுமா அப்பா?”
என்று நீ கேட்கலாம்.

ஆம்,
இப்பொழுதும் இந்த வன்கொடுமைகள்
தொடர்கிறது…
புதிய வடிவங்களில்.
நீ எதிர்கொள்ளும்போது
இன்னும் நவீனப்பட்டிருக்கலாம்.

ஆனாலும்,
உன் கல்விக்கூடத்தில்
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்,
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்,
………………………………’ என்று,
நாடே புனித திருவுருவாய்
இருப்பதுபோல்
வெற்று வார்த்தைகளை
உன்னுள் இட்டு நிரப்புவார்கள்

அப்பொழுது
உண்மையையும், பொய்யையும்,
உரசி பார்த்துக்கொள்ள
நம் பகிர்தல் உனக்கு பயன்படலாம்.

என் செல்ல மகளே!
நீ நடைபயில கற்றுக்கொண்ட
தருணங்கள் – உண்மையில்
அழகானவை, அற்புதமானவை.

எல்லா அப்பாக்களையும் போல்
அந்நிமிடங்களை மிகுந்த
ரசனையோடு விழுங்கியுள்ளேன்.

இருக்கட்டும்.
கடைவீதிக்கு சென்ற போதுதான்
உன் அம்மாவின் செல்ல கத்தல்
ஞாபகத்திற்கு வந்தது.

“குழந்தை இருக்கும் வீட்டில்
பொம்மைகளைவிட -
புத்தகங்கள்தான் அதிகமாய் உள்ளது,
அவள் எவற்றோடுதான் விளையாடுவாள்?”

உனக்கான பொம்மைகள்
விளையாட்டு பொருட்கள்,
நிறைய வண்ணங்கள்
கொஞ்சம் தூரிகைகள்…

எல்லாம் வாங்கிவிட்டேன்
குறிப்பாக,
நீ விரும்பி கேட்ட
அழுத்தி நடந்தால்
இசை எழுப்பக்கூடிய காலணிகளையும்
கவனமாய் வாங்கிக் கொண்டேன்.

அடுத்த வாரம்
அநேகமாய் நாம் ஊருக்கு
செல்ல நேரிடும்.

அப்பொழுது மேலத்தெரு வழியாகத்தான்
தாத்தா வீட்டிற்கு செல்வோம்.

அந்த வழியாக,
உன் கொல்லுத் தாத்தா,
தாத்தா…, ஏன் நானும் கூட
செருப்பை கையில் தூக்கியபடிதான்
கடந்து சென்றுள்ளோம்

ஆனால்,
நீ என்னோடு வரும்போழுது,
உன் பிஞ்சுப் பாதங்களால்
மேலத்தெருவில் அழுத்தமாய்
பாதம் பதித்து நடக்க வேண்டும்.

உன் காலணிகளின் அடியிலிருந்து எழும் இசை
அந்தத் தெருவில் குடிகொண்டிருக்கும்
ஜாதியத்தின் செவிகளை
துளைத்தெடுக்க வேண்டும்.

செய்வாயா என் செல்ல மகளே!

நீ நடைபயில கற்றுக்கொண்ட
தருணங்களை விட,
அப்போதைய நிமிடங்கள் இன்னும்
அழகானதாய், அற்புதமானதாய் இருக்கும்.

- முகிலன்

Monday, August 17, 2009

கரண்டு இல்ல, பேனு சுத்தல அதனால வேல செய்யலை...

ரண்டு சப்ளை இல்லை, அதனால மின்விசிறி வேலை செய்யவில்லை. இதன் காரணமாக எனது வேலைகளை முடிக்க முடியவில்லை. ஒழுங்கு மரியாதையாக தங்கு தடையற்ற மின்சாரம், ஜெனரேட்டர் வசதிகளை செய்து கொடுத்து விட்டு பிறகு வேலைகளை முடிப்பது குறித்து என்னிடம் பேசு. வேக்காட்டுல உக்காந்துக்கிட்டு வேலய செய்ய சொன்னா எப்படி செய்யிறது?

இந்த மாதிரி எக்கத்தாளம் பிடிச்சு பேசுனா என்ன நடக்கும்? பொடதிலேயே அடிச்சு வெளியெ தொரத்திருவாங்க. இந்த மாதிரி அல்பத்தனமான கோரிக்கைகளை விடுங்கள். நியாயமான உரிமைகளுக்காக தொழிலாளர்களும், மக்களும் போராடினாலே கூட நீதிமன்றம் குறுக்கே பாய்ந்து குய்யோ முறையோ என்று அறிவுரை வழங்கி தண்டிக்கும்.

அப்படியாப்பட்ட நீநீநீநீநீதி மன்றத்தின் மாமாமாமாட்சிமை தாங்கிய நீதிபதிகள்தான் மேற்சொன்ன முதல் பத்தி அரை வேக்காட்டு காரணத்தை முன் வைத்து வழக்குகள் நிலுவையில் இருப்பதை நியாயப்படுத்துகிறார்கள். புச்சா எதுவும் சிக்கலையே கிசு கிசு பேசன்னு யோசிச்சு கொஞ்ச நா முன்ன மன்னுமோகன் சிங் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்து கருத்துச் சொல்லியிருந்தார். இவற்றை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதுக்குத்தான் இப்படி சாமியிடிருக்கானுங்க நீதிபதிகள். அதுவும் கொஞ்சம் நஞ்சமில்ல 21 ஐகோர்ட் நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டில் ஒன்னு கூடி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

ஒரே வேக்காடா இருந்தாங்கண்டி வேல நடக்கிலன்னு சொல்வதை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம் என்றால் கூட நிலுவையில் இருக்கும் வழக்குகளையும், அவற்றை வருடக் கணக்கில் இழுத்தடிக்கும் 'வாய்தா'பதிகளின் டிமிக்கிகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. குறைந்த பட்சம் வேக்காட்டின் காரணமாக வழக்குகள் தீர்க்கப்படாமல் போய்விட்டன என்பதற்கு ஆதாரம், புள்ளிவிவரம் கூட வழங்காமல் மிகத் திமிராக ஆணையிடுகிறார்கள் நீதிபதிகள். இவிங்க சொல்றத பாத்தா 24 மணி நேரமும் கோர்ட்டுல கரண்டு இல்லங்கற மாதிரி இருக்கு. இவர்கள் வேக்காட்டில் வாடுவதாக காரணம் கூறி இழுத்தடித்துள்ள லட்சக்கணக்கான வழக்குகளில் சிக்கிக் கொண்டு சிறைக் கொட்டடிகளிலும், நீதிமன்ற வளாகங்களிலும் கொசுக்கடியிலும், வேக்காட்டிலும் வாழ்க்கையை இழுந்து வருகிறார்கள் ஆயிரக்கணக்கான அப்பாவிகள்.

ஆனா இதே நீதிபதிகள்தான் தமது உச்சானிக் குடுமியை சுருட்டி வைத்துக் கொண்டு, இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாதிகளின் வழக்குகளை ஞாயிற்றுக்கிழமை கூட கடைய திறந்து வைத்து விரைவாக முடித்து வைத்துள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

டேய்.. என்னப்பாத்தாடா கேள்வி கேக்குற மவனே ஒழுங்கா எனக்கு முதுகு சொறிஞ்சு விடுடா அப்புறம் வேல நடக்கிறத பத்தி பேசுன்னு சொல்லி ஆண்டைத்தனத்துடன் தாண்டவம் ஆடியுள்ளனர் நீதிபதிகள். அத்தோட சேந்து இதுதான் சாக்குன்னு சில பல சலுகைகளையும் கோரியுள்ளனர்.

ஏண்டா வேல நடக்கலன்னு கேட்டா காக்கா கத்துச்சு, குயில் கூவுச்சி, மூக்குல வேர்வைன்னு கதய விட்டுப்புட்டு அத்தோட சேர்ந்து மேற்கொண்டு சில பல சலுகைகளையும் கேக்கற மொள்ளமாறித்தனம் இருக்கே... அடேங்கப்பா... சும்மாவா சொன்னாய்ங்க.... ஒலகத்திலேயே பெரிய ஜனநாயகம் இந்தியா... இந்தியா... இந்தியான்னு....

ஜோய்ங் லந்து....(ஜெய் ஹிந்த தாம்பா அப்படி சொன்னேன்)

""Do you expect a trial court judge to achieve the case disposal target when he has to sit all day under a fan that stands still and a court room that is packed with litigants creating an unworkable condition ""

""As the state governments have been citing funds crunch to extend additional financial assistance to the subordinate judiciary, the CJs again suggested that financial autonomy be given to the HCs. ""


அசுரன்

Thursday, June 18, 2009

லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!

லால்கார், மேற்கு வங்கத்தில் உள்ள பழங்குடியினர் பகுதியாகும். இங்கு தற்போது ஈழம் அளவுக்கு இல்லாவிடிலும் அதனை ஒத்ததொரு கோடூரமானதொரு தாக்குதலை இந்திய அரசும் அதன் அல்லக்கையான CPM அரசும் மேற்கொண்டு வருகின்றன. துணை ராணுவப் படை உதவியுடன் அங்கு மக்கள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களின் போராட்டத்தை முறியடிப்பதுடன், இந்த போராட்டத்தை வழி நடத்தும் மாவோயிஸ்டு புரட்சியாளர்களை ஒழித்து கட்டவும் வேலைகள் நடந்து வருகின்றன.

""Sources say the forces want to minimize casualties and will thus move slowly.""


மேலேயுள்ள வார்த்தைகளின் அர்த்தம் அங்கு போராடிக் கொண்டிருக்கும் மக்களை கொன்றொழிக்கும் முடிவில் அரசு படைகள் இறங்கி விட்டன என்பதே ஆகும். இதற்கு தோதாக ஊடகங்களும் தமது வார்த்தைப் பிரயோகங்களை மாற்றிக் கொண்டுள்ளன. சில நாள் முன்பு வரை பழங்குடியின மக்கள் அரசுக்கு எதிராக போராடுவதாக எழுதி வந்த ஊடகங்கள் திடீரென்று நேற்று முதல் மாவோயிஸ்டு அராஜகம் என்று எழுதத் துவங்கியுள்ளன. ஆனால், உண்மையில் அங்கு உள்ள பழங்குடியின மக்கள் தமது வாழ்வாதார உரிமையை பறிக்கும் பன்னாட்டு-தரகு கம்பேனிகளுக்கும், அவர்களின் அல்லக்கையான CPMக்கும் எதிராக மக்கள் கமிட்டி அமைத்து போராடி வருகிறார்கள். இவர்களுக்கான அரசியல் தலைமையைத்தான் மாவோயிஸ்டுகள் வழங்கி வருகிறார்கள்.


தரகு கம்பேனியான ஜிண்டால், இரும்பு எஃகு ஆலை அமைக்க ஏதுவாக காடுகளை அழித்து, அங்குள்ள பழங்குடி மக்களை விரட்டி விட்டு 5000 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவ CPM-போலி கம்யூனிஸ்டு பாசிஸ்டுகள் ஏற்பாடுகள் செய்து வருவதை எதிர்த்தே மக்கள் அங்கு போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் கடந்த ஆறேழு மாதமாகவே நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை சிதைக்க போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும், நந்திகிராம பாணி CPM குண்டர் படை தாக்குதல்களையும் தொடர்ந்து ஏவி வருகிறது CPM-போலி கம்யுனிஸ்டு பாசிஸ்டு கட்சி. இதற்கு உள்ளூர் CPM காலிகளின் காட்டிக் கொடுப்பு வேறு உதவியுள்ளது.

இன்னிலையில், போலீசின் அடக்குமுறைக்கு எதிராக 600மேலான கிராமத் தலைவர்களை ஒன்று கூட்டி 'போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி''யைக் கட்டியமைத்தனர் மாவோயிஸ்டுகள். இதனைத் தொடர்ந்துதான் CPM குண்டர் படை தாக்குதல்கள் நடந்தன. சமூக பாசிஸ்டுகளாகச் சீரழிந்துவிட்ட சி.பி.எம். ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகள் சதிகளைப் புரிந்து கொண்ட பழங்குடியின மக்கள், தாங்கள் கட்டியமைத்துள்ள ''போலீசு அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் கமிட்டி'' (கஇஅகஅ) முடிவின்படி, ஏப்ரல் 6ஆம் தேதியன்று கொல்கத்தா நகரில் ஆர்ப்பாட்ட பேரணியையும் பொதுக்கூட்டத்தையும் நடத்தினர். பல்வேறு மனித உரிமை ஜனநாயக உரிமைக்கான அமைப்புகளும், எழுத்தாளர்கள் பத்திரிக்கைகள் கலைஞர்கள் உள்ளிட்ட அறிவுத் துறையினரும் பங்கேற்ற இந்தப் பேரணியும் பொதுக்கூட்டமும், லால்கார் பகுதியை இன்னுமொரு நந்திகிராமமாக இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கத் துடிக்கும் போலி கம்யூனிச ஆட்சியாளர்களை மக்களிடம் திரைகிழித்துக் காட்டுவதாக அமைந்தது.

மறுகாலனியாதிக்கச் சூழலில், மக்களின் அடிப்படை வாழ்வாதரங்களை பறிக்கும் உலகமயத் திட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் எல்லாம் சீரழிக்கப்பட்டுள்ளன. ஆனால், நக்சல்பாரி புரட்சியாளர்களின் போராட்டம் மட்டுமே வெற்றி பெற்று வருகிறது. அப்படிப்பட்டதொரு போராட்டம்தான் லால்கார் போராட்டம் இதனை சிதைத்து அழித்தொழிக்க மத்திய காங்கிரசும், மாநில CPM-பாசிஸ்டுகளும், இதர பெரு ஊடகங்களும் களமிறங்கியுள்ளனர். இதனை படித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு போர் உக்கிரம் பெற்றிருக்கும்.

லால்கார் குறித்து மேலதிக தகவல்களுக்கு பின்வரும் புதிய ஜனநாயகம் கட்டுரையை படிக்கலாம்.

பின்னூட்டத்தில் தெரியப்படுத்தி சுட்டிகள் கொடுத்த தோழர் பூச்சாண்டிக்கு நன்றி

சந்தால் பழங்குடியின மக்களின் எழுச்சி: மண்டியிட்டது, சி.பி.எம்.


போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

அசுரன்


Tribals on warpath in Lalgarh; say can work better than govt


Tribals stop paramilitary from entering Lalgarh, reinforcement rushed


Security forces begin ops to free Lalgarh from Maoists

Saturday, May 16, 2009

இந்த தேர்தலில் மக்கள் யாருக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்கள்?

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்பார்த்தபடியே முடிவடைந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் அனேகமாக தெளிவாக தெரிந்துவிட்டது. காங்கிரசு கூட்டணி பல இடங்களில் முன்னணி பெற்று உள்ளது. தமிழகத்தில் திமுக-காங்கிரசு ஓபன் கூட்டணி, தேமுதிக-காங்கிரசு பினாமி கூட்டணி வெற்றி பெற்றுள்ளன. எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாகவே அடிதடி-அதிரடி-சரவெடி அழகிரி அண்ணே, லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். வீரத் தளபதி கந்துவட்டி மைனர் ஜே. கே. ரித்தீஷ் 60,000 வோட்டு வித்தியாசத்தில் வெற்றி. செலவழித்த தொகைக்கு ஏற்ப வோட்டு வித்தியாசம். ஈழப் பெருச்சாளி வைகோ மண்ணை கவ்வி விட்டார். பாமகவுக்கு கோமணத்துணி கூட மிஞ்சவில்லை.

தமிழகத்தில் நவரசங்களும் கலந்தோடுகிறது. குறிப்பாக, ஈழத்திற்கு பலி வாங்கும் வகையில் பாடம் கற்பிக்க தேர்தல் களத்தில் இறங்கி குருதி சிந்திய தோழர்களும், உணர்வாளர்களும் பேரதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். ஈழத்து குருதியில் கை நனைத்து வோட்டுப் பொறுக்க களம் இறங்கிய சூத்திரதாரி தா.பாண்டியன் கட்சியும், இரட்டை இலையும், பிற போலித் தமிழ்த் தேசிய வியாதிகளும் வாயடைத்துப் போயுள்ளனர். மக்களுக்கு உணர்வு மங்கிவிட்டது, மக்கள் காசு வாங்கிக் கொண்டு வோட்டு போட்டு விட்டனர் என்று பல்வேறு புலம்பல்கள்.

ஆனால், இவையெல்லாவற்றையும் விட பேருண்மை ஒன்று உள்ளது. அது இந்த தேர்தலில் மக்கள் கற்றுக் கொடுத்துள்ள பாடம். யாருக்கு? தேர்தலின் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு ஏதோ ஒரு வகையில் பங்களிப்பு செய்ய முடியும் என்று ஊரை ஏமாற்றி வந்தவர்கள், தானும் ஏமாந்து மக்களையும் ஏமாற்ற முயன்றவர்கள் இவர்களுக்குத்தான் பாடம் கற்பித்துள்ளனர் மக்கள். ஈழம், தொழில் மந்தம், பொருளாதார கொள்கையின் தோல்வி, விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு, வேலையின்மை, மின்வெட்டு இவற்றை மீறி காங்கிரசு போன தடவையை விட அதிக இடங்களில் வெற்றி பெறுள்ளது. எனில், இவை குறித்து மக்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தமா? இவையெல்லாம் மக்களின் ஜீவாதார பிரச்சினைகள் இல்லை என்று அர்த்தமா? இல்லை, மாறாக, தேர்தல் முடிவுகள் இந்த பிரச்சினைகளின் மீது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என்பதுதான் அர்த்தம்.

எந்த அயோக்கியன் வந்தாலும் இதைத்தான் செய்யப் போகிறான் எனும் போது, மாற்று வழி எதுவும் புலப்படவில்லை எனும் போது, யார் அதிக பணம் கொடுக்கிறானோ, யார் நம்ம சாதிக்காரனோ, யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கு வோட்டு போட்டு விட்டு போய்விடுவோம் என்பதைத்தான் மக்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். ஈழத்து ரத்தத்திற்கு பதில் சொல்லும் தேர்தல் இது என்று தேர்தலில் போராடிய பெதிக தோழர்களே, உணர்வாளர்களே இதோ இதுதான் உங்களுக்கான பாடம். மக்களுக்கு இந்த தேர்தலின் மீது அப்படி எந்தவொரு மயக்கமும் இல்லை. இந்த தேர்தல் ஜனநாயகத்தின் மோசடி முகத்தை மக்கள் நன்கு உணர்ந்தே இருக்கிறார்கள். அவர்களது பிரச்சினை எல்லாம் மாற்று அரசியல் ஒன்று வலுவாக, நம்பிக்கையூட்டும் வகையில் இல்லாததுதான்.

தோழர்களே, உண்மையான தீர்வை நோக்கித்தான் நமது பயணம் எனில் மக்கள் மத்தியில் மாற்று அரசியலுக்கான நம்பிக்கையை விதைப்போம். இல்லையேல் அதுவரை மக்கள் நமது சந்தர்ப்பவாத தேர்தல் நம்பிக்கைகளில் பகடை உருட்டவே செய்வார்கள். உணர்வு மங்கி போயுள்ளது மக்களுக்கல்ல தோழர்களே, நமக்குத்தான். விலை போனது மக்கள் அல்ல தோழர்களே, நாம்தான் சரியான அரசியல் மீது நம்பிக்கையின்றி விலை போய் விட்டோம். தமிழகத்தின் தலைவிதியை இப்படியெல்லாம் மாற்றிவிட முடியாது தோழர்களே. இதோ மக்கள் இந்த தேர்தலில் செவிட்டில் அறைந்தது போல நமக்கு இந்த உண்மையையே உணர்த்தியுள்ளனர்.

அசுரன்

தமிழ்சசி எழுதிய ஒரு கட்டுரையில் ப்ரோக்னோஸ்டிக்சேஜ் என்ற தோழர் இட்டுள்ள ஒரு பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தோழர் ப்ரோக்னோஸ்டிக்சேஜ்க்கு நன்றிகள்.


கோடீசுவர வேட்பாளர்கள்! கோவணத் துணியோடு மக்கள்!!

Thursday, May 14, 2009

கம்யுனிஸ்டுகளா இவர்கள்? கம்முனாட்டிகள், மலம் உருட்டும் வண்டுகள்!!!

கொஞ்ச காலம் முன்னாடி மதவாதம்தான் நாட்டின் பெரிய எதிரின்னு சொல்லிக் கொண்டு காங்கிரசுக்கு சிரத்தையாகக் கோமணம் கட்டிக் கொண்டிருந்தனர் CPM காம்ரேடுகள். காங்கிரசு கோமனம் குத்திய உள் குத்து வலி தாங்காமல் ஒரு கட்டத்தில் 'காங்கிரசு இந்தியாவை கூட்டிக் கொடுப்பதுதான்' நாட்டின் முதன்மை அபாயம்ன்னு சொல்லிக் கொண்டு வெளியே வந்தனர். ஆனால், இந்த காலகட்டம் முழுவதும் கேரளாவிலும், மே.வாவிலும் இவர்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கூட்டிக் கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள் என்பது வேறு விசயம்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற புனிதப் ப(கு)சு சோம்நாத் சாட்டர்ஜி CPMலிருந்து வெளியேறினார். இன்னிலையில் தேர்தல் வந்தது.

உடனே கொஞ்சம் கொஞ்சமாக காம்ரேடுகளின் பஞ்ச் டயலாக்குகள் உருமாறத் துவங்கின. முதல் கட்டமாக மதச்சார்பற்ற அரசு அமைப்போம் என்ற முழக்கத்தை முன்னுக்குக் கொண்டு வந்தனர்.

அத்துடன் சேர்ந்து ஜெயலலிதா எனும் இந்துத்துவ பாசிஸ்டை மதச்சார்பற்ற ராணியாக உருவகப்படுத்தினார்கள். இதன் அடுத்த கட்டமாக, மதச் சார்பற்ற அரசு அமைக்க எதையும் செய்வோம் என்றார் கரத். அடுத்த கொஞ்ச நாளிலேயே காங்கிரசுடன் கூட்டணி குறித்து மே 16க்கு அப்புறம் முடிவு செய்வோம் என்றார்.

"காங்கிரசு ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல" என்று புத்ததேவு குத்துதேவாக மாறி ஒரு ஓரத்தில் பஞ்ச் ஒன்றை குத்தி வைத்தார். இவர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும் ரெண்டு செண்டர் குத்து குத்தி இடதுசாரிகளுடன் நாங்கள் குத்தாட்டம் போடத் தயார் என்றார்.

உடனே பாரளுமன்ற கோவனம் சோம்நாத் சாட்டர்ஜி தான் சாகும் போது ஒரு சாதாரண CPM தொண்டனாக சாக விரும்புவதாகக் கூறி செண்டிமெண்டு குத்து அடித்தார்.


இவையணைத்தும் தெளிவாக CPMன் காங்கிரசு நோக்கிய சவாரியை சுட்டிக்காட்டின.


இப்படி எல்லாம் கூடி வந்த வேளையில், சனியன் திடீரென்று யெச்சூரி நேற்று பின்வருமாறு கருத்துக் கூறினார்: "காங்கிரசு அரசுக்கு நாங்கள் ஆதரவு குத்தாட்டம் போட மாட்டோம்", "கரத் சொன்னது அவரது சொந்த கருத்து" என்றார் யெச்சு ஊறி.

இதை பார்க்கும் பொழுது ஏதோ CPM தனது கொள்கையில் விலகுவதும் பிறகு மீண்டும் சரியான பாதைக்கு வந்து விட்டதும் போன்று யாருக்காவது தோன்றினால் அவரை நினைத்து பரிதாபப்படத்தான் வேண்டியுள்ளது.

எப்பொழுதுமே சந்தர்ப்பவாதத்தின் எல்லா நிலைகளையும் ஆதரித்து தனது கட்சி அணிகளை மாற்றி மாற்றி பேச விடும் மொள்ளமாறித்தனத்தை CPM வெகு காலமாக செய்து வருகிறது. கம்யுனிசம் குறித்து கரத் கதறினால், முதலாளித்துவம் குறித்து ஜோதிபாசு உளறுவார்.

வட கிழக்கில் பாஜகவுடன் CPM மாநிலத் தலைமை கள்ளத் தேர்தல்க் கூட்டு சேர்ந்தால், இந்திய தலைமையோ அந்த அணிகள் எமது நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்பதுடன் முடித்துக் கொள்வார்.

நந்திகிராம் குறித்து ஒருவர் பிளிறினால், மம்தா குறித்து ஒருவர் பிதற்றுவார். ஸ்டைரைக் தப்பு என்பார் புத்ததேவு, ஸ்ட்ரைக் எங்கள் மயிர் மூச்சு என்பார் கரத். அமெரிக்க பூட்ஸை மோந்து பார்க்க ஒருத்தர், நக்கி பார்க்க ஒருத்தர், அதை அம்பலப்படுத்த ஒருத்தர்.

முதலாளித்துவம் ஒழிகன்னு ஒரு காம்ரேடு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, இன்றைய பொருளாதாரச் சரிவிலிருந்து முதலாளித்துவத்தை காப்பாற்றும் ஐ.நா ஆலோசனை குழுவில் ஒரு காம்ரேடு பஜனை செய்து கொண்டிருப்பார்.

தாழ்த்தப்பட்டவருக்கு நெஞ்சு விடைக்க குரல் மட்டும் கொடுக்க ஒருவர், ஆதிக்க சாதிகளுடன் நெஞ்சாரத் தழுவி கூடிக் குலாவ பலர்.

இப்படி எல்லா கருத்துக்களையும் சொல்லி வைப்பதன் மூலம் எல்லா வோட்டுக்களையும் பொறுக்கலாம் என்ற மக்கள் ஜனநாயக செயல் தந்திரம்தான் CPMனுடையது.

இதுகள் காமெரெடுகள் அல்ல, கன்றாவிகள். இவர்கள் கம்யுனிஸ்டுகள் அல்ல கம்னாட்டிகள். மொத்தத்தில் இந்த அருவெறுக்கத்தக்க சமூக கிருமிகளின் அழிவில்தான் விடுதலைக்கான புதிய முழக்கங்கள் தமது புத்துணர்வை பேண முடியும். இல்லையேல், இந்த கம்முனாட்டிகள் கழிக்கும் மலத்தில் பிரண்டு எழுந்து மீள்வதிலேயே பல நேர்மையான அணிகளின் காலம் கடந்துவிடும்.


அசுரன்

Monday, May 04, 2009

பெரியார் சிலை உடைத்த திமுகவினர் - ங்கொய்யால இது திராவிட லுக்குப்பா!!!

சென்னையில் பெரியார் திகவினர் கனிசமான அளவு இருக்கும் இடங்களில் ஒன்று ராயப்பேட்டை. இந்த தேர்தலுக்குள் ராஜபக்சேவுக்கு சங்கு ஊத முடிகிறதோ இல்லையோ ஆனால் அம்மா ஆட்சியை தமிழகத்தில் மலரவிட்டு தமிழர்களுக்கு அந்த சங்கை ஊதியே தீருவோம் என்று பெதிக தோழர்கள் சூறாவளியாக வேலை செய்யும் இடங்களில் ஒன்று ராயப்பேட்டை. பெரியார் திகவினரின் இந்த நடவடிக்கைகளிலுள்ள அபத்தம், அறிவிழிந்த நிலை குறித்து அடுத்த பதிவில் பார்க்கும் முன்பாக, லக்கிலுக் போன்ற சுயமரியாதை சிங்கங்களின் கட்சியான திமுக ராயப்பேட்டையில் செய்துள்ள புரட்சி குறித்து எனது காதுகளுக்கு வந்தவற்றை அறிவார்ந்த வலையுலக சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ராயப்பேட்டை பகுதியில் ஒரு கோயிலுக்குப் பின்புறமாகவே பெரியதொரு பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதனையொட்டியே பெரியார் படிப்பகமும் உள்ளது. கோயிலை ஒட்டியே 'கடவுளை நம்புபவன் அயோக்கியன்' முதலான கடவுள் மறுப்பு பெரியார் முழக்கங்கள் எழுதப்பட்டிருப்பது சிறப்பு. அதனை படித்துக் கொண்டே கோயிலை பக்தன் வலம் வரும் அவனது புதிய பகுத்தறிவோ அதனினும் சிறப்பு. இந்த ஒரு தெருவில் மட்டும் அருகருகே இரண்டு திமுக வாக்கு சேகரிப்பு சாவடிகளை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். இரண்டுக்கும் நடுவே பெதிகவினரின் படிப்பகம்.

இந்த பகுதியில் சமீபத்தில் அதிமுகவினரை வைத்து பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர் பெதிக தோழர்கள். இன்னிலையில்தான் அந்த சம்பவம் நடந்தது. சில நாட்களுக்கு முன்பாக திமுகவினர் அங்கிருந்த பெரியார் சிலையின் கையை உடைத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து நடந்த பெதிகவின் சாலை மறியல் போராட்டத்தில் திட்டமிட்டு கல்லெறிந்து கலவரமாக உருமாற்றி, போலீசாரின் லத்தியால் பெதிக தோழர்களையும் பதம் பார்த்து சந்தோசமுற்றனர் உடன்பிறப்புக்கள்.

மக்களுக்காக கடந்த பல பத்து வருடங்களில் ஒரு மசிரு போராட்டம் கூட நடத்தியேயிராமலேயே சில பல எம்.பி., எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருக்கும் காங்கிரஸு கட்சியும், தமது உள் கம்பேனி தகாராறுகளுக்காகவே பல போராட்டங்கள் நடத்தி மக்களின் இழவை கொட்டும் திமுகவும் இணைந்து நடத்தியுள்ள இந்த பெரியாரிச சிலை உடைப்பு வைபவம் சுயமரியாதையுள்ள கண்களைத் திறக்கும். நக்கிப் பிழைக்கும் லுக்குகளுக்கோ கண் திறப்புத் தேவையில்லை.

அதிகார மையத்தில் சமரசம் செய்து கொண்டே பார்ப்பனியத்தை புடுங்கிவிடுவோம் என்று கிளம்பியவர்கள் அனைவருக்கும் என்ன நிகழ்ந்ததோ அதுவே திமுகவுக்கும் நிகழ்ந்துவிட்டது. ஆனாலும், இன்னும் பெரியார் முகமூடி போட்டுக் கொண்டு பார்ப்பனிய இந்திய அரசு அதிகாரத்தை நக்கிப் பிழைத்து, சமரசம் செய்து விடுதலை பெற்று விடலாம் என்று உலாவுபவர்களின் எண்ணிக்கை மாத்திரம் குறைந்த பாடாய்க் காணோம்.

நேற்று பெரியார் சிலை உடைத்தனர் ஆர்.எஸ்.எஸ் சொறிநாய்கள். தட்டிக் கெட்ட புரட்சிகர அமைப்புகளை மண்டையிலேயே தட்டி ஒடுக்கினார் மஞ்சள் துண்டு தா(த்)தா. பெரியாரிசத்தின் ஹோல்சேல் உரிமையாளர்களான தலைவர்களோ நாகரிகமாக போராட வேண்டினர். பெரியாரிய தொண்டர்களும், புரட்சிகர அமைப்புகளும் மட்டுமே அன்று களத்தில் நின்றனர். இன்று பெரியாரியத்தின் வழிவந்த கட்சியே பெரியார் சிலை உடைத்துள்ளது. பெரியாரியத்தின் ஹோல்சேல் உரிமையாளர்களோ பாப்பாத்திக்கு பாத பூசை செய்கிறார்கள். மண்டையுடைந்ததோ மீண்டும் பெரியாரிய தொண்டர்களுக்குத்தான்.

இந்த போராட்டமும் கூட வெற்று வோட்டு அரசியல் சண்டையாகவே பெதிகவால் முன்னெடுக்கப்படுவது இன்னுமொரு அவலம். விமர்சனம்-சுயவிமர்சனமற்ற, மலட்டு பிழைப்புவாதம் இப்படித்தான் வரலாற்றில் நகைப்புகிடமாக முடியும்.

பெரியாரின் நோக்கங்களுக்கு நேர்மையாக இருப்பவர்கள், அந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல சரியான அரசியல் வழி எதுவென்று சீர்தூக்கி பார்த்து செயல்பட வேண்டிய நேரமிது.

அசுரன்

தொடர்புள்ள பதிவுகள்:

பெரியார் திராவிடர் கழகம் – வெங்காயத் தோலை உரிக்கும் வீணர்கள்!!!

பு.ஜ.மீதான பெரியார் தி.க.வின் விமர்சனம்: முரண்பாடுகளின் மூட்டை

விசுவநாத் பிரதாப் சிங் : காக்கை குயிலாகாது!

பெரியார் சிலை - மானமிகு கலைஞரும், மான்புமிகு ஆசிரியரும்!!

தோட்டத்தில் மேயப்போன சுயமரியாதை சிங்கங்கள்

கொள்கையில் தடுமாறுகின்றோமா தோழர்களே!

Friday, May 01, 2009

பெரியார் திராவிடர் கழகம் – வெங்காயத் தோலை உரிக்கும் வீணர்கள்!!!

பெரியார் திக இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வருகிறது. பார்ப்பனியத்தை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு திகவிலிருந்து வெளியேறி தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இப்பொழுது அதே பார்ப்பனியத்துக்கு பாத சேவை செய்கிறது. இவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்த்துக் களத்தில் உறுதியுடன் போராடி வரும் ம க இ க அமைப்பின் பார்ப்பனிய எதிர்ப்பை சந்தேகிப்பதாக காழ்ப்புணர்ச்சியுடன் எழுதி வருகிறார்கள். பெரியார் திக அமைப்பு ஆரம்பித்த பொழுதே அவ்வமைப்பின் அரசியலை மார்க்சிய-லெனினிய ஒளியில் பரிசீலனை செய்து புதிய ஜனநாயகம் (1996) இதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பதை பெரியார் திக தற்போது நிரூபித்து வருகிறது. காலப் பொருத்தம் கருதி அந்தக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்கிறோம்.

அசுரன்

________________________________________________________________

பெரியார் திராவிடர் கழகம் – வெங்காயத் தோலை உரிக்கும் வீர(ண)ர்கள்
(புதியஜனநாயகம் செப்டம்பர் 1996)

கடந்த தேர்தலில் யாரை ஆதரிப்பது என வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்தில் விவாதம் எழுந்தது. இது பற்றி முடிவு செய்ய தி.க. மத்திய நிர்வாகக் குழு 13.04.96-ல் திருச்சியில் கூட்டப்பட்டது. அதற்கு முன்பாக தென்சென்னை இளைஞரணித் தலைவர் மு.பாலகுரு அவர்கள் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த பொதுச் செயலர் கி.வீரமணிக்கு ‘பார்ப்பன ‘ஜெ’க்கு ஓட்டுப் போடக் கூடாது என அறிவிக்கும்படி’ காரணங்களைத் தொகுத்து 6.4.96-ல் தொலைவரி (ஃபேக்ஸ்) மூலம் தகவல் தந்துள்ளார்.

தி.க. மத்திய நிர்வாகக் குழுவில் அதிமுகவை ஆதரிக்கக் கூடாது எனப் பெரும்பான்மை கருத்து வந்தும், திராவிடர் இயக்கங்களான தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., என்ற 3 கட்சிகளில் எதற்கும் ஓட்டுப் போடலாம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதைக் கண்டித்து பாலகுரு மீண்டும் வீரமணிக்கு 18.4.96-ல் தொலைவரி மூலம் அறிக்கை அனுப்புகிறார். 23.4.96-ல் தென்சென்னை தி.க. இளைஞரணி கூட்டத்தை பெரியார் திடலில் கூட்டியுள்ளார். தி.க. துணைப் பொதுச் செயலர் சாமிதுரை தலைமையிலும், தலைமை நிலைய செயலர்கள் கலி பூங்குன்றன், ஆனூர் ஜெகதீசன் முன்னிலையிலும் கூடிய இக்கூட்டத்தில் கொள்கை விளக்கம் கேட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து பாலகுரு கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு விளக்கம் கேட்டு 26.4.96-ல் பாலகுரு தலைமை நிலையச் செயலர்களுக்கு கடிதம் எழுதினார்.

திரும்ப 28.4.96-ல் தென்சென்னை தி.க.இளைஞரணி செயலாளர் து.கலைச்செல்வன் பெரியார்திடலில் இளைஞரணி கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் தி.க. மாநிலச் செயலாளர் ஒரத்தநாடு குணசேகரனின் செயலைக் கண்டித்தும், பாலகுருவை நீக்கியதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், பார்ப்பன எதிர்ப்பைக் கைவிட்டதாகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

ஒரத்தநாடு குணசேகரனிடம் அமெரிக்காவிலிருந்த வீரமணி நேரடியாகத் தொடர்புகொண்டு அதிமுகவிற்கு ஓட்டுப் போட வேண்டும் என்பது தனது முடிவு எனக் கூறியதாகவும், அதைத் தமிழகம் முழுவதும் உள்ள தி.க. தோழர்களிடம் கூறும்படி ஆணையிட்டதாகவும் 25.4.96-ல் சென்னைக்குத் தகவல் கிடைக்கவே அதைக் கண்டித்து தீர்மானம் போட்டனர். வந்திருந்த 160 உறுப்பினர்களும் இவற்றை ஆதரித்து கையெழுத்திட்டிருந்தனர்.

அதன்பின் சுமார் 200 இளைஞரணி உறுப்பினர்கள் தி.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன்பின் விடுதலை இராசேந்திரன் உட்பட பலரும் தி.க.விலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் வீரமணி தலைமையின் கீழ் அணிந்திருந்த கருப்புச்சட்டை பார்ப்பன மயமாகிவிட்டது என அறிவித்து, அதைக் கழற்றி விட்டு தந்தை பெரியாரின் இலட்சிய கருஞ்சட்டை அணியும் போராட்டம் ஒன்றை 25.6.96-ல் சென்னை அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலை முன்பு நடத்தினர்.

இதுவரை தி.க.விலிருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட பலரும் கொள்கை ரீதியாகப் போராடாததாகவும், தாங்கள் மட்டுமே பெரியாரின் கொள்கையை நிலைநாட்டப் போராடி அதனால் சந்தர்ப்பவாத, பிழைப்புவாத வீரமணியால் வெளியேற்றப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இவர்கள், தலைமை நிலையச் செயலராக இருந்த ஆனூர் ஜெகதீசனை தங்கள் பக்கம் வென்றெடுத்துள்ளனர். இவரைத் தலைவராகக் கொண்டு 30.7.96-ல் ‘பெரியார் திராவிடர் கழகம்’ என தனியே அமைப்பு கட்டி தொடக்க விழா நடத்தியுள்ளனர்.

சாராம்சமாக இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் கீழ்க்கண்டவைதான்:

1. கடந்த 5 ஆண்டுகளில் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை படிப்படியாக மழுங்கடிக்கப்பட்டே வந்து, தேர்தலுக்கு முன்பு அது பகிரங்கமாக்கப்பட்டு விட்டது. பார்ப்பன ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி மீண்டும் தமிழகத்தில் உருவாவதற்கு ஓட்டளிக்கலாம் என்று தி.க. மத்தியக் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி, கொள்கை துரோகத்தை அதிகாரப் பூர்வமாகப் பிரகடனப்படுத்தி விட்டது.
2. பெரியார் கொள்கைக்கு எதிரான பார்ப்பனிய போக்குகள்-இயக்கத் தலைமையில் படிப்படியாக மேலோங்கி வளர்ந்தது. பெரியார் நூல்களை வெளியிடுவதும் நின்று போய், பெரியார் நடத்திய இதழ்கள் பாதுகாக்கப்படாமல், அழியும் நிலை உருவாகிவிட்டது. இலட்சியத்துக்கான இயக்கம், தனிமனிதருக்கான கட்சியாக மாறும் போக்குகள் அதிகரித்துக் கொண்டே போய் கொள்கைகளும் அணுகுமுறைகளும், தடுமாற்றத்துக்கு உள்ளாகிக் கொண்டே வந்தன. கடைசியில் இலட்சியத்துக்கு எதிரான போக்குகளே தலை தூக்கி விட்டன.
3. கல்வி நிறுவனங்கள், வங்கி, சீட்டுக் கம்பெனி என பல நிறுவனங்களைத் தொடங்கி, வீரமணி ஒரு நல்ல வியாபாரியாகிவிட்டார்.
இவை ஏதோ புதியது, கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவானது என்பதைப் போன்று கூறுகின்றனர். இந்தப் போக்குகள் தி.க.வில் உள்ளன என்பதைப் பற்றி எமது புதிய ஜனநாயகம் இதழ்களிலும், அதற்கு முன்பே எமது தோழமை இதழான புதிய கலாச்சாரத்தில் 80-ம் ஆண்டுகளிலும் விமர்சனங்களாக முன் வைத்தமைதான்.

அப்போதெல்லாம் இந்த நபர்கள் நம்மை வெறித்தனமாக எதிர்த்து ‘பார்ப்பனத் தலைமை’ என மூச்சுக்கு மூச்சு முத்திரை குத்தினர். தனது குறைகள், பலவீனங்களைச் சுட்டிக் காட்டுபவர்கள் மீது பார்ப்பன முத்திரை குத்துவது அல்லது இனத் துரோகி என பட்டங்கட்டி, பிரச்சினையிலிருந்து நழுவிக் கொள்வது என்ற இந்தப் போக்குகள் பெரியார் காலம் தொட்டே தி.க.வில் நடைமுறையாக உள்ளவைதான்.

வீரமணி கும்பல் 5 லட்ச ரூபாய் நன்கொடை பெற்றுக் கொண்டு பார்ப்பன ‘ஜெ’க்கு பாதபூஜை செய்ய ஆரம்பித்தது. மக்களே காறித்துப்பிய அரசியல் கழிசடை பார்ப்பன ‘ஜெ’க்கு ‘சமூக நீதி காத்த வீராங்கனை’ என்று பட்டம் சூட்டி மகிழ்ந்தார், வீரமணி. ‘ஜெயலலிதா ஆட்சிக்கு ஆபத்து வந்தால் தற்கொலைப் படையாக மாறுவோம்’ என வீரமுழக்கமிட்டார். பெரியார் விருது வழங்க ஆலோசனை தந்து, முதல் விருதை தானே பெற்று அகமகிழ்ந்தார். அந்தப் புகழ் மயக்கத்தில் ‘வாழ்நாள் முழுதும் துரோகம் செய்யமாட்டேன்’ என உறுதிகொடுத்தார்.

அப்போதெல்லாம் இந்த பெரியார் தி.க.வினர் இந்த இழிநிலைகளை எதிர்த்துப் போராடவில்லை. இப்போதும் இச்செயல்களைக் கண்டிக்கவில்லை.மாறாக சரியானவை என்றே அறிக்கைகளில் கூறுகின்றனர். ‘வாழ்நாள் முழுதும் துரோகம் செய்யமாட்டேன்’ என்று கூறியதை மட்டுமே சுட்டிக் காட்டுகிறார்கள். இதன் அர்த்தம் என்ன? ஆட்சியிலிருக்கும் வரை பாதபூஜை செய்வது சரி என்பதுதானே? இல்லை என்றால் இவ்வளவு மோசமான சந்தர்ப்பவாதத்தை சகித்துக் கொண்டு கழகத்திற்குள் இத்தனை நாட்களும் பிழைப்பு நடத்தியிருப்பார்களா?

இதற்கு ஒரு சப்பைக் கட்டாக, ‘இது ஒரு அணுகுமுறைதான், கொள்கை அல்ல’ என்று தலைமை விளக்கியதாம். தனியே பயிற்சி வகுப்புகள் நடத்தியதாம். இவர்களும் ஏற்றுக் கொண்டார்களாம். பார்ப்பன ஜெ தலைமையிலான ஆட்சியை சமுதாய நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வதில் இவர்களுக்கு இன்றைக்கும் முழு உடன்பாடு இருக்கிறது என்று பிரகடனப்படுத்தியுள்ளனர். ஆனால் தேர்தலில் பார்ப்பன ஜெயாவே முதலமைச்சராக வரவேண்டும் என தி.க. அதிகாரப் பூர்வமாக முடிவெடுத்தது மட்டுமே கொள்கைக்கு எதிரானதாம்.

எப்படி இருக்கிறது பாருங்கள்? “பார்ப்பனராகப் பிறந்த அனைவருமே நம்பிக்கைத் துரோகம் செய்து விடுவார்கள். அடுத்துக் கெடுக்கும் நரித்தனமும்சூழ்ச்சியும் அவர்களது ரத்தத்திலேயே ஊறியவை. இதற்கு விதிவிலக்கே கிடையாது” என்று கூறிக்கொண்டே, அந்தப் பார்ப்பன ஜெ. ஆட்சியை சமுதாய நலனுக்குப் பயன்படுத்திக் கொள்வார்களாம். இது எப்படி என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

“பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி” என்று பெரியார் கூறியுள்ளார். அப்படிப்பட்ட கொடூரமானவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர்களையே சமுதாய நலனுக்கும் பயன்படுத்துவார்களாம்! எவ்வளவு சுயமுரண்பாடு. கேட்டால் இது அணுகுமுறை, கொள்கையல்ல என சித்தாந்த விளக்கம் வேறு.

பகுத்தறிவாளர்களை விடுங்கள். ஒரு சராசரி மனிதர் என்ன எதிர்பார்ப்பார்? மனித சமூகத்திற்கே கொடிய நச்சு போன்ற பார்ப்பனியத்தை எதிர்ப்பவர்கள் (நமக்கு இதிலே எவ்விதக் கருத்து வேறுபாடுமில்லை) அப்படிப்பட்ட பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனர் ஆட்சிக்கு வந்தால் அவர்களை ஆட்சியிலிருந்து விரட்டப் போராடுவார்கள் என்றுதானே எதிர்பார்ப்பார்.

பார்ப்பன சங்கம் ‘நம்மவா ஆட்சி’ என அகமகிழ்ந்த ‘ஜெ’ ஆட்சியை, சங்கராச்சாரிகள் ஆதரிக்கும் ‘ஜெ’ ஆட்சியை வீரமணி கும்பல் ஆதரித்து பாதபூஜை செய்தது.

மாறாக, புதிய ஜனநாயகமும், ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் பார்ப்பன-பாசிச ஜெ ஆட்சியின் மக்கள் விரோதப் போக்குகளை எதிர்த்து சமரசமின்றிப் போராடின. எண்ணற்ற வழக்குகள், சிறைக் கொட்டடிக் கொடுமைகள், உச்சகட்டமாக அத்தோழர்கள் மீது தடாவும், தேசியப் பாதுகாப்புச்சட்டமும் பாய்ந்தன.

ஆனால் இந்த சமரசமற்ற போராட்டத்தை இழிவுபடுத்துவது போல, “புதிய ஜனநாயகத் தலைமையிலுள்ளவர்கள் பார்ப்பனர்கள். இதுதான் மிக அபாயகரமானது” என தமது ‘விடுதலை’யில் பொய்களையும்,அவதூறுகளையும் எழுதியது, பிழைப்புவாத வீரமணி கும்பல். பார்ப்பனர்களைப் போன்றே ம.க.இ.க.வின் கருவறை நுழைவுப் போராட்டத்தை வன்முறைப் போராட்டம் என எதிர்த்தது. அவற்றுக்கெல்லாம் துணை நின்று நம் மீது அவதூறுச் சேற்றை வாரியிறைத்தவர்கள்தான் இந்த விடுதலை ராசேந்திரன் உட்பட பெரியார் தி.க.வினர் அனைவருமே.

இந்த அவதூறுகளுக்குப் பதிலாக கடந்த 1994 மார்ச் 15 இதழ் முதல் 1994 அக்டோபர் 1 இதழ் முடிய பு.ஜ.வின் எட்டு இதழ்களில் 31 பக்கங்களில் வீரமணியின் துரோகங்களையும், சந்தர்ப்பவாதம்-பிழைப்புவாதங்களையும் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தி எழுதினோம். “வீரமணி இன்று செய்துவரும் துரோகங்களுக்கு அடிப்படை ‘பெரியாரிய’த்திலும் அதை உருவாக்கிய பெரியாரிடமுமே இருந்திருக்கிறது. பெரியாரிடத்தில் இருந்த “குறைபாடு”களை அங்கீகரித்து, நிராகரிக்காத எவரும் வீரமணி கும்பலின் துரோகத்தனங்களை முற்றாக அம்பலப்படுத்தவோ, முறியடிக்கவோ முடியாது; அப்படிச் செய்யாதவர் எவரும் தாமும் துரோகத்தனத்துக்குப் பலியாவது தவிர்க்க முடியாதது. அப்படிச் செய்வது “பெரியாரிய”த்துக்கும் பெரியாருக்கும் எதிரானதும் அல்ல” என்று எழுதினோம்.

“கொள்கையில் தடம் புரளாதவர்” என்று கூறப்படும் பெரியார், ஆட்சியில் இருப்பவர்களை ஆதரிப்பதற்காக எதையும் செய்யக் கூடியவராக இருந்தார். தனக்கு உடன்பாடற்றவைகளை எல்லாம் பார்ப்பன முத்திரை குத்துபவராக இருந்தார் என்பதற்கு இரண்டு சான்றுகளைப் பாருங்கள்” என பு.ஜ.வில் எழுதி ஆதாரங்களைக் குறிப்பிட்டிருந்தோம்.

1. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.
2. கருணாநிதி ஆட்சியில் குடமுருட்டி பாலத்தில் மீன்பிடிக்க வைத்த குண்டு தன்னைக் கொல்ல நக்சல்பாரிகள் வைத்தது என கருணாநிதி புளுகினார். அதை அப்படியே ஏற்று நக்சல்பாரி புரட்சியாளர்களை பார்ப்பன அமைப்புகளோடு சேர்த்து முத்திரை குத்தி அவதூறு செய்தார் பெரியார்.
இதே வழியில்தான் தனது ‘பார்ப்பன ஜெ’ ஆதரவு, அடிவருடி வேலைகளை சுட்டிக் காட்டி விமர்சிக்கும் புதிய ஜனநாயகத் தலைமையை பார்ப்பனத் தலைமை என முத்திரை குத்தி பொய்களை எழுதி அவதூறு செய்தனர் தி.க.வினர். உடனிருந்தனர் பெரியார் தி.க.விலுள்ளவர்கள்.

வீரமணி கும்பலுடன், அதிமுகவை ஆதரிக்கக் கூடாது என தென்சென்னை இளைஞரணி தி.க. போராடியபோது, கழகப் பொருளாளர் குப்புசாமியும், துணைப் பொதுச் செயலாளர் சாமிதுரையும்’பெரியாரே பார்ப்பனர்களை, பார்ப்பனத் தலைமையை ஆதரித்தார்’ என ஆதாரங்களை முன்வைத்தனராம். அது பொய்ப் பிரச்சாரம் என பெரியார் தி.க.வினர் எழுதுகின்றனர்.

ஆனால் இதே வீரமணி கும்பலும் விடுதலை இராசேந்திரனும் பு.ஜ.வில் பெரியார் பார்ப்பனர்களை ஆதரித்தார் என வரலாற்று உண்மைகளை ஆதாரத்துடன் முன்வைத்தபோது , நம் மீது ஆத்திரத்துடன் பாய்ந்து அவதூறு செய்தனர். ஆனால் இன்றைக்கு வீரமணி கும்பல் தனது ‘பார்ப்பன ஜெ’ ஆதரவுக்காக நாம் முன்வைத்த வாதங்களை வைத்து, தன்னை நியாயப்படுத்தி உள்ளது.

இந்த உண்மைகளை தி.க.வே முன்வைத்தமைக்கு வேண்டுமானால் நாம் இந்த பெரியார் தி.க.வினருக்கு நன்றி கூறலாம். ஆனால் பெரியார் தி.க.வினர் ‘பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போன’தாக இந்த விசயத்திற்கு ஆத்திரப்பட்டால் தவறு.

நடந்த வரலாற்று உண்மைகள் பொய்யாகி விடுமா? அல்லது அவற்றை இருட்டடிப்பு செய்து பெரியார் எவ்வித விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர் எனப் புனிதப்படுத்தி விடமுடியுமா? மாறாக யாராக இருந்தாலும் அவர்களிடமுள்ள சரி,தவறுகளைப் பகுத்தாராய்ந்து, தவறுகளை நிராகரித்து, சரியானவற்றை உயர்த்திப் பிடித்து அவற்றை நடைமுறைப்படுத்தப் போராட வேண்டும். இதுதான் சரியான அணுகுமுறையாகும்.

அதேநேரம் எதிரிகள் கூறும் அவதூறுகளை நாம் உண்மை என எடுத்துக் கொண்டு வாதப் பிரதிவாதங்கள் நடத்திக் கொண்டிருக்க முடியாது.

“பெரியார் அடிக்கடி ஒன்றைக்கூறுவார். “நான் ஈ.வெ.ராமசாமி சொல்கிறேன் என்பதற்காக நீங்கள் எதையும் ஒப்புக் கொள்ள வேண்டியதில்லை. உங்கள் சொந்த புத்தியைக் கொண்டு நன்றாக யோசித்துப் பாருங்கள். உங்கள் சொந்த புத்திக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே எது ஒன்றையும் ஒப்புக் கொள்ளுங்கள்” என்பார் பெரியார். காரல் மார்க்சிடம் அந்தப் பண்பு இருந்தது. “எல்லாவற்றையும் சந்தேகியுங்கள்; விமர்சனப் பார்வையோடு பாருங்கள்” என்றார்” (புஜ 1 அக். ’94 இதழ் – பக் 23)

ஆனால் இன்றைக்கோ இந்த ‘பகுத்தறிவு சிங்கங்கள்’ நாம் விமர்சனம் வைக்கும்போது பாய்ந்து குதறி பார்ப்பனத் தலைமை என முத்திரை குத்துவதும், அதே நேரம் நாம் விமர்சனமாக முன்வைத்தவைகளையே தமது சந்தர்ப்பவாத, பிழைப்புவாத நடவடிக்கைகளுக்கு எடுத்து முன்வைப்பதுமாக செயல்பட்டு வருகின்றனர்.

கொள்கையிலிருந்து விலகுவதாகப் பிரிந்து தனியே பெரியார் திராவிடர் கழகம் கண்டுள்ளவர்கள் இந்த சந்தர்ப்பவாத, பிழைப்புவாத வீரமணி கும்பலிடமிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டதாக இல்லை.

1. கடந்த ஐந்து ஆண்டுகாலமாக ‘பார்ப்பன ஜெ’க்கு பாத பூஜை செய்ததை எந்தக் கட்டத்திலும் எதிர்க்கவில்லை. ‘பார்ப்பன ஜெ. முதல்வரான பிறகு, அந்த ஆட்சியை சமுதாய நலனுக்கு (தமது பிழைப்புவாதத்திற்கு) பயன்படுத்திக் கொள்வதில் இப்போதும் முழு உடன்பாடு உண்டு” என்றுதான் இன்றைக்கும் ‘கொள்கை’ முழக்கமிட்டுள்ளனர்.
2. பெரியாரிடமுள்ள குறை-நிறைகளைப் பரிசீலித்து குறைகளை விமர்சித்து நிராகரித்து நிறைகளை ஏற்றுக் கொள்ளும் அணுகுமுறை இவர்களிடமும் இல்லை என்பதையே தமது வெளியீட்டில் வெளிப்படுத்துகின்றனர். அதாவது பெரியார் அவரே முன்வைத்த பார்ப்பன எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு எதிராக பார்ப்பன ஆதரவு நிலைப்பாடு எடுத்த வரலாற்று உண்மைகளை கண்மூடித்தனமாக மறுக்கின்றனர். இது தற்போது வீரமணி எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு எடுத்துச் செல்லவே உதவும்.
3. எதிர்க்கருத்து வரும்போது, பார்ப்பன முத்திரை குத்தி திசை திருப்புவது, அல்லது விமர்சனத்திலுள்ள விசயத்திலிருந்து நழுவிச் செல்வது என்ற கலையில் தேர்ந்த விடுதலை ராசேந்திரன் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
4. அ.இ.அ.தி.மு.க. நிச்சயமாகத் தோற்கும், திமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நிலையில் ஆட்சியமைக்கப் போகும் கட்சியை ஆதரிக்காமல், தோற்கும் கட்சியை ஆதரிக்கும் வீரமணி என்றுதான் குற்றச்சாட்டுகளில் ஒன்றாகக் கூறியுள்ளனர். மாறாக தப்பித் தவறி ‘ஜெ’ வெற்றி பெற்றிருந்தால் இந்தப் ‘பெரியார் தி.க.’ தோன்றியே இருக்காது என்பதுதான் உண்மை.

ஏனெனில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர்தான் கழகம் உருவாக்குவது என முடிவெடுத்துள்ளனர்.

தமிழினத்திற்கும், தமிழகத்திற்கும் துரோகங்கள் செய்த ‘பார்ப்பன ஜெ.’ ஆட்சிக்கு பாதபூஜை செய்வதற்கு துணை நின்ற இவர்கள் இன்றைக்கும் கூட அதற்கு வருத்தம் தெரிவிக்காததோடு, அது சரி என்று கூறுவதிலிருந்தே இவர்களின் சந்தர்ப்பவாதப் பிழைப்புவாதப் போக்கை நாம் இனம் காண முடியும்.

சோமு
(புதியஜனநாயகம் செப்டம்பர் 1996)

Monday, February 09, 2009

கம்முனுஸ்டு மிஸ்டர் மீட்டிங்கு, ஈழப் பிரச்சினைக்கு தீர்வு சொல்றாருடோய்…. !!!

CPM பாசிஸ்டு கட்சியின் இணைய பிரசங்கியான சந்திப்பு வேறு வழியின்றி மார்க்ஸியத்தின் ஒளியில் விசயங்களை பரிசீலிக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார். ஆயினும் அப்படி ஒரு ஆய்வு முறை பயிற்சியின் மூலமே ஒருவருக்கு கைவரும் என்பதும், 'போலச் செய்தல்' என்பது இங்கு சாத்தியமில்லை என்பதும் அவரது கட்டுரையை படிக்கும் போது புலப்படுகிறது. குறிப்பாக முதலாளித்துவ சிந்தனை முறைக்கு பழகிய CPM கும்பல்களால் இயங்கியல் ரீதியில் சிந்தித்து கருத்துக்களை வெளிப்படுத்துவது என்பது இயலவே இயலாத காரியமாகிவிட்டது. பரிதாபம்தான். எனினும், அவரது முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

நிற்க, ஈழம் பிரச்சினையில் புரட்சிகர அமைப்புகளை இலக்காக வைத்தே கட்டுரை எழுதியுள்ளார் திருவாளர் சந்திப்பு. நல்லது ஆனால் பிரச்சினை என்னவென்றால் புரட்சிகர அமைப்புகளின் நிலைப்பாடென்று அவரே ஒன்றை கற்பனை செய்து கொண்டு பேசுகிறார். இது நகைப்பிற்குரியது. அடுத்தவர் மண்டையில் உட்காந்து கொண்டு சிந்திக்கும் இவரது தோழர் கோமாளி வுடுதலையை இவர் ஞாபகப்படுத்துகிறார்.

சந்திப்பு சொன்னது:
""தமிழகத்தில் உள்ள பல இனவாத நக்சலிச அமைப்புகள் உட்பட பலரும் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ""

'சுயநிர்ணய உரிமை' என்ற சொல்பதத்தின் மார்க்ஸிய அர்த்தத்தை முதலில் சந்திப்பு புரிந்து கொண்டாரா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். மார்க்ஸியத்திலிருந்து மேற்கோள் காட்டி அவர் விவாதிக்கும் ஒரு பிரச்சினை தனது நாட்டு எல்லைகளை கடந்து உள்ள ஒரு அந்நிய பிரதேசம் பற்றியது என்பதை சுத்தமாக மறைத்து விடுகிறார் அவர். இன்னொரு நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைக்கு அடுத்த நாட்டு கம்யுனிஸ்டு கட்சி தனது அரசியல் ஆதரவை மட்டுமே நல்க முடியும், தீர்வுகளை அல்ல என்பதை காமரேடு சந்திப்புக்கும், அவர் சார்ந்த CPM பாசிஸ்டுகளுக்கு ஞாபகப்படுத்த கடமைப் பட்டுள்ளேன்.

மேலும் இந்த விசயத்தில் ம க இ கவினுடைய நிலைப்பாடு என்பது ஒன்றிணைந்த இலங்கை என்பதையே விரும்புகிறது. ஆனால் அதனை முடிவெடுக்கும் தகுதி அந்த மக்களுக்கே சொந்தம். CPMமோ அல்லது இந்திய அரசோ அல்லது இலங்கை அரசோ அல்லது புலிகளோ கூட இதில் முடிவெடுக்க உரிமையற்றவர்கள்.

ஒரு முதலாளித்துவ அரசில், ஏகாதிபத்திய சூழலில் ஒரு பகுதி மக்களின் தேசிய விடுதலைக்கான போராட்டத்திற்கு வேற்று நாட்டு கம்யுனிஸ்டு கட்சி தீர்வுகளை அல்ல மாறாக தனது ஆதரவைத்தான் நல்க முடியும். இப்படி நாடு விட்டு நாடு தாண்டி தீர்வுகளை நல்கும் நாட்டாமைத்தனம் அதிகாரத்துவ இயங்கியலின் ஒரு பதம் எனில் அதன் இன்னொரு எதிர்ப்பதம் 'சரண்டர்'த்தனம்.

ஒன்றுபட்ட போலி கம்யுனிஸ்டு கட்சியாக இவர்கள் இருந்த பொழுது இந்தியாவுக்கான தீர்வைத் தேடி ஸ்டாலினிடம் சென்று 'சரண்டர்' ஆகி அதனை அவர் கண்டித்து உங்களது நாட்டுக்கு ஏற்ப மார்க்ஸியத்தை நடைமுறைப்படுத்துவதை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்று கூறிய கதையின் இன்றைய மறுஎதிர் ஒளிபரப்புதான் CPM கட்சி சிரிலங்கா பிரச்சினைக்கு தீர்ப்பு சொல்லும் தற்போதைய கதை. என்றைக்குமே ஒவ்வொரு நாட்டு பாட்டாளி வர்க்கமும் அந்தந்த நாட்டு பிரச்சினைக்கான தீர்வுகளை அவர்களே பருண்மையாக கண்டுணர்வதுதான் சாத்தியம். அப்படியில்லாத ஒரு தீர்வு கருத்துமுதல்வாத திரிபே ஆகும்.

இதையெல்லாம் விட மிக முக்கியமானது ஒரு நாட்டில் நடக்கும் தேசிய விடுதலை போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் அதன் பக்கத்து நாட்டு கம்யுனிஸ்டு கட்சியானது அந்த தேசிய விடுதலை போராட்டத்தின் எதிரியாகிய ஏகாதிபத்தியத்தையும், அது சர்வதேச எதிரி என்பதையும், அது ஒடுக்கும் தேசிய இனத்தின் எதிரி என்பதையும் அம்பலப்படுத்தியே அரசியல் செய்ய வேண்டும். மாறாக ஏகாதிபத்தியத்திற்கு புனித முகமூடி போடும் வேலையை செய்யக் கூடாது. இந்த அம்சத்தில் ஈழப் பிரச்சினையில் பிராந்திய ஆதிக்க சக்தியான இந்தியாவின் ஆக்கிரமிப்பு நோக்கங்களை அம்பலப்படுத்துவம், அதன் பின்னே இருந்து கொண்டு சுரண்டும் இந்திய தரகு முதலாளிகளை அம்பலப்படுத்துவதுமே சரியான அரசியலாகும்.

இந்திய மக்களின் வரிப் பணத்தில் ஈழத்தை இந்திய தரகு முதலாளிகள் சுரண்டுவதை எதிர்ப்போம், ஈழ சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்போம் என்ற அடிப்படையிலான அரசியல் முழக்கங்கள்தான் இந்திய, சிங்கள, ஈழத் தமிழர்களை, மற்றும் சர்வதேசிய உழைக்கும் மக்களை ஈழத்திற்கு ஆதரவாக திரட்டும் சரியான அரசியல் வழியாக இருக்க முடியும். ஆனால் CPM கும்பலோ இந்தியாவின் இந்த அரசியல் பொருளாதார நோக்கங்களை பற்றி பேசவே காணோம். இதுதான் இவர்களின் மார்க்ஸியம்.

சொந்த நாட்டிலேயே கூட முதலாளித்துவ அரசின் கீழ் செயல்படும் பொழுது அது அரை காலனிய நாடாக இருக்கும் பட்சத்தில் பரந்துபட்ட மக்களுடன் ஐக்கியப்பட்டு ஆளும் வர்க்கத்தை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு ஏதுவாக அந்த நாட்டின் தேசிய இன உணர்வுக்கு முதலில் அங்கீகாரம் வழங்குவதும். அதனுடாக அவர்களுடன் ஐக்கியப்பட்டு செயல்படுவதின் மூலம் அதனை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்திற்கு வளர்ப்பதும் தேவைப்படுகிறது. இதன் அர்த்தம் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவு என்று ஒருவன் கூறிக் கொண்டால் அவனை மார்க்ஸியவாதி என்று சொல்லுவதற்கு ஒரு அடிப்படையும் இல்லை. ஏனேனில் வைத்தால் முடி சிரைத்தால் மொட்டை என்பதும் இயக்கமறுப்பியல் வகைப்பட்ட சிந்தனைதான். எதையுமே அதன் வளர்ச்சி போக்கில் வைத்து புரிந்து கொள்வதும், பரிசீலிப்பதுமே இயக்கவியல் சிந்தனை முறை.

தேசிய இன பிரச்சினையில் சமரசமின்றி சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதைத்தான் மார்க்ஸியம் வலியுறுத்துகிறது. சந்திப்பு மேற்கோள் காட்டும் குறிப்பிட்ட பகுதியில், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தேசிய இனம் பிரிந்து செல்ல விரும்பும் போது அது பாட்டாளி வர்க்க நலனுக்கு ஊறாக இருக்கின்ற பட்சத்தில் அனுமதிக்க முடியாது என்ற ஒரு விலக்கு விதியே சொல்லப்பட்டுள்ளது. ஒரு எ-காவுக்கு ஜெர்மனியுடனான ஒரு யுத்த தருணத்தில் ஒரு தேசியம் பிரிந்து செல்ல விரும்புகின்ற பட்சத்தில் அதனை அனுமதிப்பது முடியாது. ஆனால் இதனையே பொது விவரிப்பாக கூறும் சந்திப்பு சுயநிர்ணய உரிமை என்பதையே பிரிந்து செல்வது என்பதாக இன்னும் குறுக்கி சிதைக்கிறார். அதாவது விவாகரத்து உரிமையையே விவாகரத்தாக கருதி அவதூற்றும் பிற்போக்குவாதிகள் போல.

மார்க்ஸியத்தை பருண்மையாக அமுல்படுத்தியதிலிருந்து பல்வேறு நாடுகள் பெற்ற அனுபவங்களில் விதி விலக்கான விசயங்களை மட்டுமே முன்னிறுத்தி தனது திரிபுவாதத்தை நியாயப்படுத்த பயன்படுத்தும் CPM கும்பல் எப்பொழுதும் போலவே இப்பொழுதும் அதையே செய்துள்ளது ஆச்சர்யமான விசயமல்ல. பாராளுமன்றம், ரகசிய கட்சி, ஆயுத புரட்சி, வெகு ஜன அமைப்பு, புதிய ஜனநாயக கோட்பாடு போன்றவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள விதி விலக்கான விசயங்களையே பொது மார்க்ஸியமாக CPM பாசிஸ்டுகள் திரிப்பது முன்பு பலமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தேசியம் குறித்த திரிபும் சேர்கிறது.

சிரிலங்கா பிரச்சினையில் மட்டும்தான் இவர்களது நிலைப்பாடு இது என்றால் அப்படியில்லை. காஷ்மீர் முதல் எல்லா இடங்களிலும் இந்திய ஆளும் வர்க்கங்களின் நிலைப்பாடிற்கு சிங்கி அடிப்பதுதான் இவர்களின் மார்க்ஸியமாக உள்ளது. தரையில் ஊன்றி நடக்கச் சொல்லி நமக்கு அறிவுறுத்தும் இவர்கள் முதலில் இந்திய ஆளும் வர்க்கத்தின் தோள் பட்டையில் உட்கார்ந்து மக்களை காட்டிக் கொடுப்பதை விட்டொழித்து கீழே இறங்கி வரட்டும்.

அசுரன்

சி.பி.எம்.(மோடியிஸ்ட்) கும்பலின் கழிப்பறைக் காகிதம் - தீக்கதிர்!.... மற்றும் ’கோயபல்ஸ்’ செல்வப்பெருமாள்!!... (ஏகலைவனின் அருமையானதொரு கட்டுரை)

சுயநிர்ணயத்தை மறுக்கும் போலி (சி.பி.எம் சந்திப்பு) கம்யூனிஸ்டுகளின் கழுதை அரசியல்

CPM கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட ஈழ நிலைப்பாடும், டவுசர் கழண்ட சந்திப்பும்!!

யுத்தத்தின் பின், தமிழ்மக்கள் பேரினவாத அரசுக்கு தம் எதிர்ப்பை காட்டுவார்களா?

இந்திய அரசே ஈழத்தில் தலையிடாதே!! CPM பாசிஸ்டே கோயபல்ஸ்தனத்தை நிறுத்து!!

ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

Thursday, February 05, 2009

CPM கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட ஈழ நிலைப்பாடும், டவுசர் கழண்ட சந்திப்பும்!!

ங்கிலத்தில் உள்ளவை ஜெவிபியின் பினாமி கட்சியான CPM கோயபல்ஸ் பீரோவின் அறிக்கை.

////The government of India should seek the assistance of the United Nations to ensure the safety of the Tamil civilian population in the northern province.////

இலங்கையில் இந்தியா நேரடியாக தலையிடுவது அம்பலமாகியுள்ள இந்த சூழலில், CPMன் குலக்கொழுந்துகளான சந்திப்பு, விடுதலை போன்ற கோயபல்ஸுகளுக்கு ஒரு சவால் விடுகிறேன். இந்தியா ராணுவ வீரர்களும் அதிகாரிகளும் ஈழத்தில் யுத்தத்தில் தலையிட்டு வருவது குறித்து உங்களது கருத்து என்ன? அதனை ஆதரிக்கிறீர்களா? ஏனேனில் இந்தியா தலையிடவில்லை எனில் பாகிஸ்தான், அமெரிக்கா ஆதரிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளீர்கள் அதனால்தான் கேட்கிறேன்.


//Sri Lankan government immediately take up the provision of genuine autonomy for the Tamil-speaking areas within a united Sri Lanka as promised during the visit of the External Affairs Minister to Colombo.//

சிங்கள அரசு தமிழர்களுக்கு உரிமை கொடுக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுப்பதும், ஒப்பந்தங்கள் இடுவதும் இது முதல் முறையா? வரலாற்றில் இது போல பலமுறை நடந்துள்ள பொழுது எந்த அடிப்படையில் சிங்கள அரசை CPM நம்புகிறது? ஒருவேளை ஹிந்து ராமின் நண்பர்கள்தான் சிங்கள இனவெறி அரசு என்ற அடிப்படையிலா?

மொத்தத்தில் என்னதான் சொல்ல வருகிறீர்கள்? நாங்கதான் உள்ளூர் ஆளுங்க. நீங்கதான் அகில இந்திய கட்சியாயிற்றே ஏன் பாலஸ்தீன பிரச்சினைக்கு அகில இந்திய அளவில் துடித்த உங்களால் ஈழப் பிரச்சினைக்கு உள்ளூர் அளவில் கூட துடிக்க முடிவதில்லை?

எப்படி புலிகளை எதிர்ப்பதையே ஈழ எதிர்ப்பாக புலி ஆதரவாளர்கள் முத்திரை குத்துகிறார்களோ அதே போல ஈழ ஆதரவையே புலி ஆதரவாக முத்திரை குத்தும் சிங்கள வெறி அரசுக்கும், இந்திய அரசுக்கும், சோ, ஹிந்து ராம், ஜெயலலிதா, சுசுவாமி வகையாறாக்களுக்கும், CPM பாசிஸ்டுகளுக்கும் என்ன வேறுபாடு?

வேறுபாடு இல்லை என்பதுதான் எமது கருத்து. சந்திப்பு போன்ற கூலிக்கு மாரடிப்பவர்கள் தம்மளவில் இந்த உண்மையை ஒத்துக் கொண்டால் எமது வேலை மிச்சம்.

ஜேவிபி இனவெறி கட்சியுடன் உங்களது கள்ள சிநேகிதம் தொடர்வதின் விளைவுதானா இது? அல்லது ஜெவிபியின் பினாமி கட்சியா CPM?

மக்களை சர்வதேச அளவில் அணி திரட்டி அந்தந்த நாடுகளில் உள்ள ஜனநாயக சக்திகளின் துணையுடன் அந்தந்த அரசுகளை ஈழ பிரச்சினையில் அழுத்தம் கொடுக்க கோரி போராடுவது என்பதும், இந்தியாவில் இந்திய அரசு ஈழத்தில் தலையிடுவதை எதிர்த்து மக்களை, ஜனநாயக சக்திகளை திரட்டி போராடுவது என்பதும் ம க இ கவின் நிலைப்பாடு இதற்கு பதிலாக ஜோசியக்காரன் போல ஐநாவை நம்பு, பிராந்திய மேலாதிக்க இந்தியாவை நம்பு, ராஜபக்சேவை நம்பு என்று கதை விட்டுக் கொண்டு சிங்கள இனவெறிக்கு, இந்திய தரகு முதலாளிக்கு முதுகு சொறியும் CPM கட்சி ஜெவிபியின் பினாமி என்பதில் என்ன தவறு உள்ளது என்று சந்திப்பு தெளிவுப்படுத்துவது நலம்பயக்கும்.

நாங்க மக்களை நம்பு என்கிறோம் CPM வழக்கம் போல ஆளும் வர்க்கத்தையும், அரசையும் நம்பு என்கிறார்கள். இதுதான் கம்முனிசமாம். போங்கடா....

அசுரன்

யுத்தத்தின் பின், தமிழ்மக்கள் பேரினவாத அரசுக்கு தம் எதிர்ப்பை காட்டுவார்களா?


இந்திய அரசே ஈழத்தில் தலையிடாதே!! CPM பாசிஸ்டே கோயபல்ஸ்தனத்தை நிறுத்து!!


ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!

Tuesday, February 03, 2009

இந்திய அரசே ஈழத்தில் தலையிடாதே!! CPM பாசிஸ்டே கோயபல்ஸ்தனத்தை நிறுத்து!!

ழத்தில் தமிழர்களை ஒழிக்க நேரடியாக தனது ராணுவத்தினரை இந்தியா அனுப்பியுள்ளது சமீபத்திய சம்பவங்களில் அம்பலமானது. இந்திய அதிகாரிகள் காயமடைந்தது, செத்து ஒழிந்தது உள்ளிட்ட செய்திகள் மற்றும் அணை கட்டு உடைந்த சம்பவத்தில் கணிசமான அளவு இந்திய ராணுவத்தினர் செத்து சின்னா பின்னமானது போன்ற செய்திகள் மற்றும் இது போன்ற தொடர் செய்திகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

விசயம் இப்படியிருக்கு CPM பாசிஸ்டுகளின் இணைய பிரசங்கி சந்திப்பு தனது தளத்தில் படு கேவலமான கருத்தை இட்டுள்ளார்:

""
இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும். எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மிக அதிகமான அளவில் வெறியூட்டக்கூடிய முறையில் மிகைப்படுத்தப்படுவதும் நடைபெறுகிறது.
""" (நன்றி: ஏகலைவன்)

ஈழத்தில் சிங்கள இன வெறி அரசு மக்களை கொன்று குவித்து வருவது குறித்து பல்வேறு சர்வதேச நிறுவனங்களும், நார்வோ போன்ற நாடுகளும் கூட சமீபத்தில் தமது கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில் இந்த இணைய கோயபல்ஸ் CPM சந்திப்பு வாய் கூசாமல் பேசுகிறார். கேட்டால் இலங்கையின் இறையாண்மை போய்விடுமாம். போடாங்.....

அப்படிப்பாத்தா குஜாராத் கலவரம் பற்றி பேசினால் குஜராத்தின் இறையாண்மை போய்விடும். இதே போல பாலஸ்தீனம், ஈராக் என்று எல்லா இறையாண்மைகளை பற்றியும் CPM தனது வாய், ஆசன வாய் உள்ளிட்டவற்றை மூடிக் கொண்டால் நமது வேலையாவது மிச்சமாகும்.

மிகைப்படுத்தப்பட்ட செய்தியாம். எது 150 டாங்கிகள் சென்றதா அல்லது இந்தியா அங்கு நேரடியாக தனது ராணுவத்தினரையும், ஆயுதங்களையும், ராணுவ அதிகாரிகளையும் அனுப்பி யுத்தம் செய்து வருவதா? அல்லது இதோ இன்று 48 மணி நேர கெடு என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக மிச்ச மீதியுள்ள தமிழர்களையும் கொன்றொழிக்கும் வெறியுடன் எறிகணைகளை பொழிந்து வருவதா? எது மிகைப்படுத்தப்பட்ட செய்தி. மிகைப்படுத்தப்பட்ட விசயம் என்று ஒன்று இருந்தால் அது இனிமேலும் உங்களை போலி கம்யுனிஸ்டு என்று அழைப்பதுதான். ஏனேனில் போலியாக கூட இருக்கும் அடிப்படையின்றி பாசிஸ்டின் குரலில் அப்பட்டமாக, வெட்கமின்றி பேசும் ஒருவனை, கட்சியை போலி கம்யுனிஸ்டு என்று அழைப்பதுதான் மிகைப்படுத்தப்பட்டது.

இந்த கும்பல் இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சர்யமான விசயமல்ல. ஈழத்தின் அவலத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி நிலையை உருவாக்கும் வகையில் முத்துகுமார் தன்னை எரியூட்டி தனது எழுத்தை ஒளியூட்டிய தருணத்தில் அதற்கு மறுநாள் இவர்கள் நாடகம் நடத்தி களிப்புற்றுக் கொண்டிருந்தனர். அந்த வக்கிர நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து பகன்ற மாமாமனிதர் ஹிந்து ராம். CPMமும், சிங்கள இன வெறி கட்சி ஜேவிபியும், இந்து ராமும் இணையும் புள்ளி இதுதான். மக்களுக்கு பாசிசம். இந்த இந்து ராம்தான் ஈழம் என்ற வார்த்தையைக் கூட தனது பத்திரிகையில் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக தமிழீழ என்று ஆரம்பிக்கும் அமைப்புகளின் பெயரை சிங்கள தமிழ் என்று எழுதும் வக்கிர புத்திக்காரன். இவந்தான் சிங்கள இன வெறி அரசின் இந்திய கைக்கூலி அல்லது ஆசனவாய். இலங்கையில் கழியாமல் அஜீரமானதை இங்கு முடை நாற்றமெடுக்க நசுக்குபவன்.

CPM கும்பல் கொள்கை முரன்பாடின்றி பன்னாட்டு தரகு முதலாளிகளுக்கு காவடி தூக்கி வருகின்றனர். எனவேதான் தமது மாநிலத்தில் நந்திகிராமில் பன்னாட்டு தரகு முதலாளிகளுக்காக மக்களை சுட்டு பொசுக்குவதை செய்த இவர்களால், இந்திய தரகு முதலாளிகளுக்காக இலங்கை எனும் ஒரு நாட்டில் ஒரு இனத்தையே அழித்தொழிக்கும் யுத்தத்தை ஆதரிக்க முடிகிறது. கேட்டால் இறையாண்மை, ஜனநாயகம், சட்டம் என்று நல்லவன் போல பேசவும் முடிகிறது. மக்களின் மீது குண்டுகளும், துப்பாக்கிகளூம் பாயும் போது உனது சட்டமும், ஜனநாயகமும், இறையாண்மையும் எங்கே நக்கிக் கொண்டிருந்தது என்று நியாயமாக நாம் கேட்க வேண்டும். ஆனால் அப்படி கேட்க்கும் அளவு CPM கும்பல் தகுதியானவர்கள் அல்ல.

இந்திய முதலாளிகளின் தெற்காசிய கனவுகளுக்கு ஈழத்தை சுடுகாடாக்காதே! இந்திய அரசே இலங்கையில் தலையிடுவதை நிறுத்திக் கொள்!! CPM கும்பலே உனது மோசடித்தனத்தை மூட்டை கட்டி வைத்துக் கொள்!!!

அசுரன்

மாவீரன் முத்துக்குமாரின் தியாகம் - உணர்வாளர்களின் எழுச்சியும், துரோகிகளின் இகழ்ச்சியும்!...

ஈழம்: இந்தியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு தமிழ‌கத்தில் பிரச்சாரம்

ஒரு இந்தியனாக, சிங்களர்கள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்!!

பாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள்

சர்வதேசியத்தை கைவிட்டா ஈழப்போராட்டத்தை அணுக வேண்டும்!?

ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் - நமது கடமை என்ன?

Monday, February 02, 2009

சிதம்பரம் கோயில் இனி தீட்சிதருக்கு சொந்தமல்ல! நந்தனை எரித்த அவமானம் ஒழிக்கப்படும்!!

சிதம்பரம் கோயிலில் தமிழில் பாட முற்பட்ட சிவனடியார் ஆறுமுகச்சாமியை பார்ப்பன ரவுடிகளான தீட்சிதர்கள் அடித்ததும், அதனைத் தொடர்ந்து மகஇகவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு கழகம் பல தொடர் போராட்டங்களை பிற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நடத்தி தமிழில் பாடும் உரிமையை வென்றதும் அனைவரும் அறிந்ததே. இதனையொட்டி நடந்த வெற்றி விழா கூட்டத்தின் போது நந்தனை எரித்ததன் அடையாளமான அந்த ஆயிரம் வருட அவமானச் சுவரை இடித்து நொறுக்குவதே லட்சியம் என்று சூளுரைக்கப்பட்டது.

அப்படிப்பட்டதொரு லட்சியத்தை நோக்கிய நடவடிக்கையின் முதல் கட்டமாக சிதம்பரம் கோயில், தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல என்பதை நிறுவி அதனை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதற்காக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதில் அரசாங்கத்துடன் மனித உரிமை பாதுகாப்பு கழகமும் ஒரு அங்கத்தினராக இணைந்து தீட்சிதர்களுக்கு எதிராக வழக்காடினர். அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளிவந்துள்ளது.

தீர்ப்பின் படி கோயில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமாக வேண்டும். மேலும், ஒரு வாரத்தில் கோயில் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிகிறது. இது சாதரணமான தீர்ப்பு அல்ல. தீட்சிதர்களை எதிர்த்து வரலாறு நெடுகிலும் நடத்தப்பட்ட போராட்டங்களை அவர்கள் ஒழித்துக் கட்டியுள்ளனர். கடந்த 60 வருடங்களில் பல சட்டப் பூர்வ முயற்சிகளையும் அவர்கள் முறியடித்துள்ளனர். சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களின் அடாவடித்தனம் என்பது யாராலும் கேள்வி கேட்க முடியாத ஒரு சர்வ வல்லமை படைத்த ஒன்றாகவே நம்பப்பட்டது. தீட்சிதர்களை எதிர்த்து கடந்த காலங்களில் நடந்த நிகழ்வுகள் கவனிக்கும் ஒருவருக்கு மலைப்பே ஏற்படும். அப்படிப்பட்டதொரு வெல்ல முடியாத சக்தியாக கருதப்பட்ட தீட்சிதர்களை அவர்களது கோயிலேயே முறியடித்ததுதான் தமிழில் பாடும் உரிமைக்கான அந்த முதல் போராட்டம்.

இதோ இப்போது அதன் அடுத்த கட்டமான இரண்டாவது போராட்டமும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இது முழு வெற்றியல்ல. இதனை அடுத்த கட்டமாக சட்டரீதியாக எதிர் கொள்ள தீட்சிதர்கள் தயராகலாம். அதுவும் முறியடிக்கப்பட வேண்டும் என்பதும் நந்தனை எரித்து கொன்றதன் அவமானச் சின்னமான அந்த சுவர் உடைத்தெறியப்பட வேண்டும் என்பதுமே நமது அவா. இது குறித்து பின்னூட்டத்தில் தகவல் தெரிவித்த முகம் தெரியாத அன்பருக்கு நன்றிகள்.

அசுரன்

சிதம்பரம் நடராஜனை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் தீட்சிதர்களை காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுபோக வேண்டும்

தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரைஓயாது எமது சமர்!

தில்லையில் வீழ்ந்தது பார்ப்பனிய ஆதிக்கம்! ம.க.இ.க போராட்டம் வெற்றி!!

Friday, January 30, 2009

உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய், நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!!

தோழர் முத்துக்குமார் தன்னை எரித்து தமிழகத்தின் உண்ர்வை எழுப்பியுள்ளார். சரியான அரசியல் தலைமை இன்றி தடுமாறிய அவல தமிழகத்திற்கு சரியான அரசியல் திசை வழி காட்டும் ஒளி விளக்காக தன்னை எரித்து மாண்டு போனான் முத்துக்குமாரன்.

இந்த தீயின் வெம்மையில் ஈழத் தமிழரின் விடுதலைக்கு ஒரு புதிய அத்தியாயம் திறக்கப் பட வேண்டும். துரோகிகள் பொசுக்கப்பட வேண்டும். இந்திய தரகு முதலாளிகளுக்கு சாமரம் வீசி ஈழத்தில் எறிகணைகளை மழை போல் பொழியும் இந்திய மேலாதிக்க கனவுகள் பொசுக்கப்பட வேண்டும்.

முத்துக்குமார் இட்ட தீ தமிழ் சிந்தனை வெளி எங்கும் பற்றி படர்ந்து அரசியல் களத்தை சுற்றி சூழ்ந்து எரிக்கும் இந்த வேளையில், அவர் குறித்து வந்த பதிவுகள், பின்னூட்டங்களில் தெரித்த கருத்து முத்துக்களை இங்கு இடுவது நாம் அவரது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உரமாக அமையும் என்று நம்புகிறேன்.

முத்துகுமாரின் இறுதி அறிக்கை!

ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் - நமது கடமை என்ன?

ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!

கொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட…!

***************




""
த‌ற்கொலைகள் செய்துகொள்வது கோழைத்தனமான முடிவா ?
தற்போது சிலர் இதைப் போன்று முனகிக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே தற்கொலைகள் அனைத்தும் கோழைத்தனமானவை அல்ல.அவை அனைத்தும் சமூகத்திற்கெதிரான விமர்சன‌ங்கள்.
ஒருவ‌ன் உயிரை இழக்க முன் வருவது அவ்வளவு சாதாரன காரியமா என்ன? அதிலும் ஒரு அர‌சியல் பிரச்சனைக்காக உயிரை இழக்க முன் வருவது சாதாரண செயல் அல்ல‌ அது ஒரு வீரச்செயலாகும்.முத்துக்குமார் தீக்குளித்து இறந்து போயிருப்பது என்பது கோழைப்பயல் சோதாராமன் காலத்திலிருந்தே நம்பியவரை முதுகில் குத்தி,குத்தியே பழக்கப்பட்ட‌ இந்திய பயங்கரவாத கும்பலுக்கு எதிரான ஒரு கலகமாகும்.
""
superlinks

*************


""முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கவில்லை. உணர்வுப்பூர்வமாக சிந்தித்து, தனது மரணம் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் எழுச்சியை கற்பனை செய்து, அது நிச்சயம் நிறைவேறும் என்ற கனவுடன் தன்னைப் பொசுக்கியிருக்கிறார். மரணத்துக்கு முந்தைய சில மணித்துளிகளுக்கு முன்னால் கூட மருத்துவர்களிடமும், போலீசிடமும் தனது அரசியல் கோரிக்கைகளை நிதானமாக பேசியிருக்கிறார்.""
வினவு
*************

""ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ. ""
வினவு
*************


""
இந்த சமூக அமைப்பின் அநீதிகளை எதிர்த்துப் போராடும் போராளிகளோ தமது உயிரை முன்னறிந்து இழப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். ஒடுக்குமுறைகளைக் கண்டு குமுறும் உள்ளம் தனது உயிரை துச்சமென மதித்து துறப்பதற்கு மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறது. தனிப்பட்ட வாழக்கைப் பிரச்சினைகளுக்காகவும், சமூகக் காரணங்களுக்காகவும் தற்கொலை செய்வதில் பாரிய வேறுபாடு இருக்கிறது. அதே சமயம் இரண்டுமே தன்னுயிரை வதைக்கும் சமூகக் கொடுமைகளை இறப்பதன் மூலம் தண்டிக்க நினைக்கிறது.
""
வினவு
*************

purachi, மேல் ஜனவரி 30th, 2009 இல் 15:29 சொன்னார்:

//முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கவில்லை. உணர்வுப்பூர்வமாக சிந்தித்து, தனது மரணம் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் எழுச்சியை கற்பனை செய்து, அது நிச்சயம் நிறைவேறும் என்ற கனவுடன் தன்னைப் பொசுக்கியிருக்கிறார்.//

விசயம் இப்படியிருக்க எப்பொழுதும் போலவே நல்லவர்கள் சிலர் முத்துகுமாரை மூடனாகவும், உணர்ச்சிவசப்பட்டவராகவும், மூர்க்கனாகவும் சித்திரிக்க முயல்கிறார்கள்.

தனது பிரேதத்தையே ஒரு குறியீடாக பயன்படுத்தி ஈழ விடுதலை போருக்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க சொன்ன, அந்த போராட்டத்திற்கு இந்திய சிறைக்கூடத்தில் வாடும் பிற தேசிய இனங்களின் ஆதரவை கோரிய ஒரு சீரிய சிந்தனை கொண்ட இளைஞனை இந்தளவுக்கு அவர்கள் கொச்சை படுத்துவது மன வேதனையளிக்கிறது.

பகத்சிங்கை மூடன் என்று சொன்ன அன்றைய இந்திய பெருந்தலைவர்கள் போலவே இன்றும் உள்ளனர்.

*************


வினவு, மேல் ஜனவரி 29th, 2009 இல் 23:50 சொன்னார்:

மேலதிக தகவல்
உயிருக்கு போராடிய அவரை சிகிக்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது மருத்துவர்களிடம் பேசிய முத்துக்குமரன், தீக்குளித்த தன்னை யாரும் காப்பாற்றி விடக்கூடாது என்பதற்காக, பெட்ரோல் கேனில் பெரிய அளிவில் ஓட்டை போட்டு, மண்ணென்ணெய்யை தன் மீது ஊற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.

இப்படி புத்திசாலித்தனமாக இருக்கும் ஏன் தீக்குளித்தாய் என்று மருத்துவர்கள் கேட்டதற்கு, என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன் என முத்துக்குமரன் தெரிவித்தார்.

மேலும் பேசிய முத்துக்குமரன், எங்கள் ஊரில் போருக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் அதிகம். உலக அமைதிக்காக போராடுபவர்கள் அதிகப் பேர் இருக்கிறார்கள். ‘கொள்கை நல்லூர்’ என்றே எங்கள் ஊரை சொல்லுவார்கள் என்றார். அந்த ஊரில் பிறந்த நான் ஈழத்தமிழர்களுக்காக உயிர் விடுவதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன் என்றார்.

இன்று காலை முத்துக்குமரன் தூத்துக்குடியில் இருக்கும், தனது தந்தை குமரேசனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது குடும்பத்தாரின் நலம் பற்றி விசாரித்த முத்துக்குமரன், தீக்குளிக்கும் சம்பவம் பற்றி தனது தந்தையிடம் எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.

26 வயதான முத்துக்குமரன், இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் எங்கு கூட்டம் நடந்தாலும், தவறாமல் கலந்து கொள்வார். பத்திரிக்கையில் தட்டச்சு பணியில் இருந்தாலும், தமிழ் உணர்வுள்ளவர் என்றும், ஈழத்தமிழர்களைப் பற்றி அன்றாடம் வேதனையுடன் பேசி வந்தவர் என்றும் முத்துக்குமரனுடைய நண்பர்கள் தெரிவித்தனர்.

செய்தி: நக்கீரன்

*************


""இந்தப் போராட்டத்தினூடாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கையையும் விவரிக்கும் அந்தக் கடிதத்தை படிக்கும்போது நம் நெஞ்சம் பதைக்கிறது.""
வினவு
*************


""
வெள்ளைக்கார வேசிம‌க‌ன் பெத்தெடுத்த‌ ‌காங்கிர‌சு கும்ப‌ல் அவ்வ‌ப்போது மிர‌ட்ட‌ல் விட்டு வ‌ருகிற‌து.த‌மிழ் பிஞ்சுக‌ள் தாயிட‌ம் குடித்த‌ பால் எல்லாம் தெருக்க‌ளில் இர‌த்த‌மாக‌ ஓடி உறைகிற‌து.இன்றைக்கு ம‌ட்டும் ஈழ‌த்தில் முன்னூறு உயிர்க‌ளை பிடுங்கி எடுத்திருக்கிற‌து சிங்கள இந்திய‌ பாஸிச‌ம்.அவ‌னுக்கு கூட்டிக்கொடுத்து இந்த இன‌ப்ப‌டுகொலையை மிருக‌த்தினுடைய‌ மூர்க்க‌த்த‌ன‌மான‌ வேக‌த்துட‌ன்‌ ந‌ட‌த்திக்கொண்டிருக்கும் இந்திய‌ ப‌ய‌ங்க‌ராவாதிக‌ளை இங்கே [தமிழகத்தில்] எவ‌னும் ச‌ட்டைக்காலரை பிடித்து கேட்பதில்லை,எம்மக்களின் ப‌டுகொலைக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌டா நாயே என்று செவுள்களில் அறைந்து கேட்ப‌தில்லை
""
superlinks
*************

""த‌ன்னுடைய‌ ஓட்டுப்பொறுக்கி ப‌த‌விக‌ளை விட்டுவிட்டு இவ‌ர்க‌ள் ஈழ‌த்த‌மிழ‌னுக்காக‌ போராட முன் வ‌ர‌மாட்டார்க‌ள்.அப்ப‌டி வந்தால் என்ன‌ ந‌ட‌க்கும் என்பதும் இவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றாகத் தெரியும். ""
superlinks
*************

""அவரது கடிதம் ஈழமக்களைக் காப்பாற்ற முடியாமல் இருக்கும் சிக்கலை எல்லாக் கோணங்களிலும் விவரிக்கிறது. துரோகம் செய்யும் இந்தியாவைக் கண்டித்தும், அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் சர்வதேச சமூகத்தை கேள்வி கேட்டும், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களை போர்க்குணமிக்க போராட்டத்தை துவங்குமாறு கோரியும், இந்தப் போராட்டத்தினூடாக நல்ல தலைவர்கள் உருவாவார்கள் என்ற நம்பிக்கையையும் விவரிக்கும் அந்தக் கடிதத்தை படிக்கும்போது நம் நெஞ்சம் பதைக்கிறது.""
வினவு
*************


""தீக்காயங்களால் கருகியிருக்கும் தனதுஉடலை புதைக்காமல் அதை ஒரு அரசியல் குறியீடாக்கி போராடுமாறு மாணவர்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்.""
வினவு
*************

""விடுதலைப் போராட்டம் என்பது தேதி குறிப்பிட்டுத் தொடங்குவதல்ல, தேதி குறிப்பிட்டு நிறைவுசெய்யப்படுவதுமல்ல என்றும், தங்களது போராட்டமும் தொடருமென அறிவித்தார். ஆம், கிளிநொச்சி வீழ்ந்தாலும், முல்லைத்தீவு வீழ்ந்தாலும், ஏன், பிரபாகரனுக்குப் பிறகும்கூட அங்குள்ள மக்களின் உரிமைப்போராட்டம் என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்குமென்ற உறுதியான நம்பிக்கையுடன் அங்கிருந்து கிளம்பினேன்.""
அங்கூ.... அங்கூ...
*************


""இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்.மருதையன் அவர்களின் உணர்ச்சிகரமான பேச்சிலிருந்து நான் புரிந்துகொண்ட செய்திகள்:
இந்திய அரசு வர்த்தகரீதியாக இலங்கை அரசை ஆதரிக்கும் நிலைப்பாட்டைப் போட்டுடைத்தார். தமிழக அரசியல்கட்சிகளால் பரவலாகப் பேசப்படும், தவறான வழிகாட்டுதலால்தான் மன்மோகன்சிங் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற கருத்து தவறென்பதை எடுத்துரைத்தார்.""
அங்கூ.... அங்கூ...
*************


""சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புக்கான போரில் சுடுவதற்கென்றே இந்திய பீரங்கிகள் தமிழகம் வழியே அனுப்பப்பட்ட மண்ணில் எந்த ஆயுதமின்றி தனது உயிரை அழித்து ஒரு மாபெரும் ஆயுதத்தை தமிழக மக்களுக்கு வழங்கியிருக்கிறான் ஒரு வீரன். ""
வினவு
*************

purachi, மேல் ஜனவரி 30th, 2009 இல் 12:36 சொன்னார்:
//இன்று சென்னையில் எமது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இந்தப் போராட்டச் செய்திகளையும், படங்களையும் வரும் நாட்களில் வெளியிடுகிறோம்.//

வாழ்த்துக்கள். தன்னையே எரிபொருளாக்கி முத்துகுமரன் இட்ட தீ துரோகிகளையும், சிங்கள பாசிசத்தையும், இந்திய மேலாதிக்கத்தையும் சுட்டெரித்து சாம்பாலாக்கும் வரை கொழுந்து விட்டு எரியட்டும். மக்களின் செயலூக்கத்தை இது கட்டவிழ்த்துவிடட்டும்.

*************


""முத்துக்குமார் எனும் போராளியின் உடலைக் கருக்கிய தீயின் நாக்குகள் சுரணையற்றிருக்கும் மனங்களை சுட்டுப்பொசுக்கி திருத்தட்டும்.""
வினவு
*************

முத்து said...கருத்து;

இன்று முத்துகுமரன் என்னும் விதை விதைக்கபட்டு இருக்கிறது .விரைவில் அது ஆலமரமாய் வளர்ந்து உங்களை வேரறுக்கும்

*************


யாழ் - ஈச‌ன், மேல் ஜனவரி 29th, 2009 இல் 18:46 சொன்னார்:

தொப்புள் கொடி உறவு என்பதன் அர்த்தம் இதுதானா ?

உணர்வற்ற தமிழகமே என்று ஒருமுறை தெரியாமல் திட்டிவிட்டேன்.

ஐயனே, என்னை மன்னித்துவிடு.

*************


""முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில்..

‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுகள்’ என்று சொல்லியிருக்கிறார்.

அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் பிடிவாதமாக உள்ளனர். அவர்கள் மேலும், முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதை பொறுத்தவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அரசியல் வாதிகள் தலையிடாதீர்கள் என்று சொல்லிவருகின்றனர்.

""

நங்கூரம்
*************

Voice on Wings said...கருத்து;

ஒரு சேர வரலாறு, இலக்கியம் எல்லாம் படைத்து விட்டுச் சென்று விட்டார் இந்த வீரச் சகோதரர். இது போன்ற ஒரு தெளிவான ஆவணத்தை இது வரை தமிழில் வாசித்ததில்லை. அவருக்கு எனது வீர வணக்கங்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது அஞ்சலிகள்.

பலரும் குறிப்பிட்டது போல், இது பல மொழிகளில் (முடிந்தால் இந்தியிலும்) மொழிபெயர்க்கப்பட்டு பரவலாகச் சென்றடைய வேண்டும். எல்லா முக்கிய தேசிய / பிராந்திய அரசியல் கட்சித் தலைமைகள், தொலைக்காட்சிகள், அச்சு ஊடகங்கள் ஆகிய எல்லாருக்கும் அனுப்பப் பட வேண்டும்.

*************


""ஆம் மரத்துப்போயிருக்கும் தமிழுலகில் ஒரு இளைஞன் ஈழத்திற்காக தன்னுயிரைப் பலிதானம் செய்திருக்கிறான். அவனுக்கு அஞ்சலி செலுத்த விரும்புகிறவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?""
வினவு
*************


""சிங்கள அரசுக்கும், இந்திய மேலாதிக்க அரசுக்கும் எதிரான பிரச்சாரத்தையும் போராட்டத்தையும் மக்கள் மத்தியில் முடுக்கி விடுவதுதான் நமது பணி. முடங்க வேண்டிய நிர்ப்பந்தம் சந்தரப்பவாதிகளுக்கும் ஓட்டுக் கட்சி பிழைப்புவாதிகளுக்குமதான் இருக்கிறது. இது நாம் செயல்பட வேண்டிய தருணம். சிங்கள இனவெறி அரசுக்கும், அதனுடன் கைகோர்த்து நிற்கும் இந்திய அரசுக்கும் எதிரான பிரச்சாரத்தையும் போராட்டங்களையும் நாம் தீவிரமாக நடத்த வேண்டும். எமது அமைப்புக்கள் தமிழகமெங்கும் மக்களி மத்தியில் விரிவான பிரச்சாரத்தை எடுத்துச் செல்வதோடு ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகின்றன.""
வினவு
*************

Related Posts with Thumbnails